=======
QUOTES
========
கிறிஸ்து நமக்குள்
வாசம்செய்ய ஆரம்பிக்கும்போது
சரீரம்
ஆலயமாகிறது
இருதயம்
தேவ சந்நிதியாகிறது
இசை
கீர்த்தனையாகிறது
உதடுகள்
பலிபீடமாகிறது
இல்லம்
குட்டி பரலோகமாகிறது
நினைவு
சுகந்தமாகிறது
வாழ்க்கை
வசந்தமாகிறது.
========
By Bro Durai Dainel
To Get Daily Quotes Contact +917904957814
=======
QUOTES
========
உங்களுக்கு நண்பர்களை விட எதிரிகளே அதிகம் இருக்கிறார்களா?
நீங்கள் நன்றாக பழகியும் உங்களோடு பலர் விரோதம் பாராட்டுகிறார்களா?
எல்லா காரியங்களிலும் உங்களை ஒதுக்கி வைக்கிறார்களா?
சம்பந்தமே இல்லாமல் உங்கள் மேல் வள்வள்ளென்று விழுகிறார்களா?
உங்கள் மீது வீண்பழி போட்டு உங்கள் பெயரை கெடுக்கிறார்களா?
கவலையே வேண்டாம்
சந்தோஷமா இருங்க
ஏன்னா நீங்கதான்
உண்மையான கிறிஸ்தவன்
நான் சொல்லலைங்க
வேதம் அப்படி சொல்லுது
லூக்கா 6:22 ஐ வாசிங்க.
============
By Bro Durai Dainel
To Get Daily Quotes Contact +917904957814
=======
QUOTES
========
தலைமுறைகள் கடந்து போக போக ஆண்கள் மற்றும் பெண்களின் ஆடைகளின் அளவும் குறைந்துகொண்டே போகிறது. இது பிசாசின் தந்திரம்.
நிர்வாணத்தை நோக்கி நகர்த்துதல் பிசாசின் குணம்.
உடுத்துவித்து அழகு பார்ப்பது தேவனின் குணம்.
ஏதேனிலேயே ஆதாம் ஏவாளின் நிர்வாணத்தை மூட விலங்கின் தோலினால் ஆன உடையை நெய்துகொடுத்தாரே நம் பரம தையல்காரர்.
நம் சரீர ஆடையை மட்டுமல்ல
நம் ஆவிக்குரிய ஆடையையும் தயார் செய்து கொடுப்பவர் அவர்.
அவர் சிலுவையில் சம்பாதித்து வைத்த நீதியின் வஸ்திரமல்லவா நம் ஆத்துமாவை இன்று அலங்கரிக்கிறது.
அந்த பரிசுத்த வஸ்திரம் மாத்திரம் இல்லாவிட்டால் நம் ஆத்துமாவின் அலங்கோலத்தை எந்த வார்த்தைகளால் வர்ணிப்பது?.
நன்றி தெய்வமே.
By Bro Durai Dainel
To Get Daily Quotes Contact +917904957814
=======
QUOTES
========
சிறு நதியொன்று
சிற்றோடையாக துவங்குகிறது
பின்பு ஒவ்வொரு கிளைநதியாய்
சேர்த்துக்கொண்டு
பெரு நதியாகிறது
பின்பு
சமுத்திரத்தோடு சங்கமமாகிறது
சமுத்திரத்தோடு சேருகிற வரைக்கும்தான்
அதற்கு பேர் நதி
சமுத்திரத்தில் சங்கமித்துவிட்டால்
அதன் பெயரும் சமுத்திரம்தான்
சேர்ந்தபின்னே
நதியெது சமுத்திரமெது என்று
பிரித்துப் பார்க்க முடியாது
அதே போல்தான்
விசுவாசி-தேவன் உறவும்
தேவ பிரசன்னத்தில் சங்கமமாகிவிட்டால்
அவன் இதயமும் தேவ இதயமும்
ஒன்றாகிவிடுகிறது
அந்த அன்பு இணைப்பில்
அவன் உள்ள நதியும்
பரம சமுத்திரத்தில்
பரிசுத்த நதியும்
பரவச நீரூற்றுமாய்
மாறிவிடுகிறது.
அவன் கால்கள் மட்டுமே
பூமி வசம்
அவன் இருதயமும் ஆத்துமாவும்
வான வசம்
அதாவது
வானவரின் வசம்.
By Bro Durai Dainel
To Get Daily Quotes In What's App Contact +917904957814
=======
QUOTES
======
கிட்டத்தட்ட நாற்பது இலட்சம் இஸ்ரவேலர்கள்
செங்கடலுக்கு முன் நின்றார்கள்
சமுத்திரத்துக்கு முன்னால்
ஒரு குட்டி கடல் நின்றதுபோல் இருந்தது
அந்த அற்புத காட்சி
ஆண்கள் பெண்கள்
குழந்தைகள் முதியோர் என
பெருங்கடலாய் ஆர்ப்பரித்து நின்ற
அவர்களின் மனமோ
திராவக கடல்போல்
கொதித்துக்கொண்டிருந்தது
எதிரே நின்றான்
அவர்களின் ஒப்பற்ற தலைவன்
மோசே
அவர்கள் கண்கள்
நாலாபுறமும் சுழன்றன
எதிரே செங்கடல்
பின்னே எகிப்தியரின் மகா பெரிய இராணுவ சேனை
இடப்புறமும் வலப்புறமும்
பெரிய மலைக்குன்றுகள்
நான்கு திசைகளிலும் அடைப்பு
ஒருபக்கமும் ஒரு அடியும் எடுத்து வைக்க முடியாது
கிட்டத்தட்ட அவர்களின் வாழ்க்கை
முடிவுக்கு வந்துவிட்டதென
எண்ணி எண்ணி
அழுது புலம்பி
தங்கள் தலைவன் மோசேயை
திட்டி தீர்த்தார்கள்
மோசே
கொஞ்சமும் கலங்கவில்லை
அவன் கையிலிருந்த
கோலை நீட்டினான்
அவ்வளவுதான்
உலகின் மாபெரும்
அந்த அதிசயம் நடந்தது
கடல் இரண்டாக பிளந்தது
இருபக்கமும் தண்ணீரே
சுவர்களாக எழும்பி நின்றது
நடுவிலே உண்டான பாதையிலே
இஸ்ரவேலர்கள் நடந்து சென்றார்கள்
இஸ்ரவேல் ஜனம் கடந்து முடித்தபின்
எகிப்திய இராணுவம்
கடக்க முயன்றபோது
கடல் மூடியது
அந்த மகா பெரிய இராணுவம்
மண்ணுக்குள் புதைந்து
சமாதியானது
கிழக்கு
மேற்கு
வடக்கு
தெற்கு என
நான்கு திசைகளும்
அடைபட்டாலும்
நமக்கு ஒரு திசை உண்டு
ஆம் அது
மேல் திசை
மேலான திசை
வான திசை
வானவரின் திசை
சீரிய திசை
சீயோனின் திசை
அங்கிருந்துதான்
நமக்கு ஜெயம் வரும்
செங்கடல்
கருங்கடல் என எந்த கடல்
நம் எதிரில் வந்தாலும்
பயமில்லை
ஏனெனில்
கருணைக்கடலாம்
கர்த்தாவின் கிருபை
எப்போதும் நமக்கு துணை.
==============
By Bro Durai Dainel
To Get Daily Quotes Contact 917904957814
=======
QUOTES
========
ஆய கலைகள்
அறுபத்தி நான்கு என்றனர்
நம் தேசத்து முன்னோர்
அறுபத்தி நான்கோ
அறுநூற்று நான்கோ
எதுவானாலும்
இருந்துவிட்டு போகட்டும்
நமக்கு பிரதான தேவை
ஒரே கலைதான்
எந்த கலை கற்றாலும்
இந்த கலை போல் வராது
இந்த கலை இல்லையென்றால்
கிறிஸ்தவ ஜீவியமே
கானல் நீராகிவிடும்
அப்படியென்ன கலை அது
என்கிறீர்களா
ஜெபக் கலை
ஆம்
ஜெபக்கலையே
ஜெயக்கலை
அது இல்லாவிடில்
ஜெயமில்லை
ஐந்து வகை ஊழியத்திற்கும்
அடிப்படை ஊழியம்
ஜெப ஊழியமே
எப்பாடுபட்டாவது
ஜெபக்கலையை கற்றுக்கொள்
இல்லாவிட்டால்
மோட்ச பாக்கியம் உத்தரவாதமில்லை.
By Bro Durai Dainel
To Get Daily Quotes In What's App Contact +917904957814
=======
QUOTES
========
நம் முன்னோர்கள்
ரொம்ப அறிவாளிகள்
ஆகையால்தான்
மனைவிக்கு வாழ்க்கைத்துணை என்று
ஞானமாய் பெயர் வைத்தார்கள்.
மற்ற எல்லா உறவுகளும்
ஒரு கட்டத்தில் கைவிட்டாலும்
அல்லது ஒதுங்கிவிட்டாலும்
மனைவி என்ற அற்புத உறவு மட்டுமே
இன்பத்திலும் துன்பத்திலும்
கூடவே வரும்.
ஆகையால்தான்
அவளுக்கு பெயர் வாழ்க்கைத் துணை.
மனைவி என்ற உறவின்
உன்னதம் புரிந்தோர்
ஒரு காலத்தும் அவளை
கண்ணீர் விட வைப்பதே இல்லை.
By Bro Durai Dainel
To Get Daily Quotes Contact +917904957814
=======
QUOTES
========
தேவன் அன்புள்ளவர்தான்
ஆனால் இன்னொரு பக்கம்
அவர் நீதி உள்ளவர்
தேவன் கிருபை உள்ளவர்தான்
ஆனால் இன்னொரு பக்கம்
அவர் நியாயம் நிறைந்தவர்
தேவன் இரக்கம் நிறைந்தவர்தான்
ஆனால் இன்னொரு பக்கம்
அவர் பட்சிக்கிற அக்கினி
தேவனுடைய
இந்த சமநிலை பிராமணத்தை
முழுவதும் புரிந்துகொள்ளாததால்தான்
இடறிபோகின்றனர் பலர்
அவர் அன்பு
பாவ அன்பு அல்ல
பரிசுத்த அன்பு
அதாவது
நாம் என்ன செய்தாலும்
தொடர்ந்து நேசிக்கும்
சில முட்டாள் உறவுகளை போல அல்ல அவர்
பரிசுத்தம் தொடரும் வரைதான்
அவரது பாசமும் தொடரும்
அப்படியானால் பாவியும்
பாவம் செய்யும் பரிசுத்தவானும்
கடைந்தேறுவது எப்படி
அதற்காகத்தான்
கிறிஸ்துவின் இரத்தம்
நமக்கு இலவசமாக கொடுக்கப்பட்டது
கிறிஸ்துவின் இரத்தம் மூலமாகவே
தேவ கிருபாசனத்தை
நாம் கிட்டிச் சேர முடியும்
தேவனை
நாம் நினைக்கிறபடி அல்ல
வேதாகமம் வெளிப்படுத்துகிறபடி
புரிந்துகொள்ள வேண்டும்
அப்போதுதான்
தவறான உபதேசங்களுக்கு
தப்பிக்க முடியும்.
By Bro Durai Dainel
To Get Daily Quotes Contact +917904957814
=======
QUOTES
========
ஒவ்வொரு எழுத்தும்
ஒவ்வொரு பொன்
ஒவ்வொரு வசனமும்
ஒவ்வொரு முத்து
ஒவ்வொரு அதிகாரமும்
ஒவ்வொரு மாணிக்கம்
ஒவ்வொரு புத்தகமும்
ஒவ்வொரு வைர மாலை
ஒவ்வொரு பக்கமும்
ஒவ்வொரு ஆபரணம்
மொத்தத்தில்
முழு வேதமும்
ஒரு பொக்கிஷ சாலை.
By Bro Durai Dainel
To Get Daily Quotes Contact +917904957814
=======
QUOTES
========
எண்ணிக்கையில் அல்ல
தரத்தில் பெருத்ததே
சிறந்த சபை.
கிறிஸ்து பூமியில் வாழ்ந்தபோது
அவர் சபையில்
பனிரெண்டு பேரே இருந்தனர்.
ஆனால் அவர்கள்தான்
உலகத்தையே கலக்கினர்
இன்றும் கலக்குகின்றனர்.
ஒன் மேன் ஆர்மி நடத்த
சபை ஒன்றும் அலுவலகம் அல்ல
அது போர்ப் பாசறை
அங்கே குழு வெற்றியே பிரதானம்.
சீஷர்களை உருவாக்குவதும்
சீஷர்களை உருவாக்கும் சீஷர்களை
கண்டுபிடித்து பயிற்றுவிப்பதுமே
சபையின் பிரதான பணி
அப்படிப்பட்ட சபைக்கே
நரகம் நடுங்கும்
பாதாளம் பயப்படும்.
By Bro Durai Dainel
To Get Daily Quotes Contact +917904957814
Thanks for using my website. Post your comments on this