Type Here to Get Search Results !

என் மீட்பர் உயிரோடிருக்கையிலே | பாடல் பிறந்த கதை | To God be the Glory | Jesus Sam

============
பாடல் பிறந்த கதை
=============
கீர்த்தனை: என்மீட்பர் உயிரோடிருக்கையிலே
ஆசிரியர்: ஞா. சாமுவேல்
இசை: ஆதிதாளம்
மெட்டு: பியாக்

கீர்த்தனை பாடல் வரி
என் மீட்பர் உயிரோடிருக்கையிலே
எனக்கென்ன குறைவுண்டு? நீ சொல், மனமே

1. என்னுயிர் மீட்கவே தன்னுயிர் கொடுத்தோர்,
என்னோடிருக்கவே எழுந்திருந்தோர்;
விண்ணுல குயர்ந்தோர், உன்னதஞ்சிறந்தோர்,
மித்திரனே சுகபத்திர மருளும்

2. பாவமோ, மரணமோ, நரகமோ, பேயோ
பயந்து நடுங்கிட ஜெயம் சிறந்தோர்
சாபமே தீர்த்தோர் சற்குருநாதன்
சஞ்சலமினியேன் நெஞ்சமே மகிழ்வாய்

3. ஆசி செய்திடுவார், அருள்மிக அளிப்பார்,
அம்பரந் தனிலெனக்காய் ஜெபிப்பார்;
மோசமே மறைப்பார், முன்னமே நடப்பார்;
மோட்சவழி சத்யம் வாசல் உயிரெனும்

4. கவலைகள் தீர்ப்பார், கண்ணீர் துடைப்பார்,
கடைசிமட்டுங் கைவிடா திருப்பார்;
பவமனிப்பளிப்பார், பாக்கியங் கொடுப்பார்,
பரம பதவியினுள் என்றனை எடுப்பார்.


பாடல் பிறந்த கதை
தமிழ்நாட்டில் தஞ்சாவூர் மாவட்டத்தில், கும்பகோணத்திற்கு அருகில் கருப்பூர் என்னும் ஊரில் ஞானாச்சரியம் - பூவம்மாள் தம்பதியினருக்கு 1850 ஆம் ஆண்டு செப்டம்பர் 18 ம் நாள் சாமுவேல் பிறந்தார்.

சாமுவேலின் பாட்டனார் ராமநாதபுரம் சேதுபதி மன்னரிடம் அமைச்சராக இருந்தவர். சாமுவேல் தரங்கம்பாடியில் சீகன்பால்க் ஸ்தாபித்த பாடசாலையில் பயின்றார். இயற்கையாகவே தமிழ் மொழியில் பற்றுருதி கொண்டு செய்யுள் இயற்றும் திறமையையும் வளர்த்துக்கொண்டார்.

1877 ஆம் ஆண்டு அருள்திரு ஆந்துமன் என்னும் மிஷனெரியிடம் லூத்தரன் இறையியல் கல்லூரியில் இறையியல் கற்றார். அப்போது ஆங்கில மொழியிலும் ஜெர்மன் மொழியிலும் புலமை வாய்ந்தவரானார்.

இந்நிலையில் 1878 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 31ஆம் நாள் தரங்கம்பாடி புது எருசலேம் தேவாலயத்தில் லூத்தரன் திருச்சபையின் குருவானவராக அருள்பொழிவு செய்யப்பட்டார்.

தொடர்ந்து 1880 ம் ஆண்டுமுதல் காரைக்கால், மணிக்கிராமம், பொறையார் ஆகிய திருச்சபைகளிலும் குருவானவராக பணியாற்றினார்.

இந்நிலையில் லூத்தரன் இறையியல் கல்லூரியில் இறையியலை கற்பிக்கும் ஆசிரியராகவும் பணிபுரிந்தார். இப்படி இறையியல் கல்லூரியில் முதல் இந்திய குருவாக இருந்து ஆசிரியராக பணிபுரிந்தவர் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

ஞா. சாமுவேல் குருவானவர் கர்நாடக இசையை முறைப்படி கற்றவர். இவர் நாகப்பட்டினம், திருச்சி, மேட்டுப்பட்டி, அன்னமங்கலம், மதுரை, பனம்பள்ளி, புதுக்கோட்டை, கோயம்புத்தூர் ஆகிய இடங்களில் உள்ள ஆலயங்களில் கதாகாலட்சேபம் செய்வதற்காக பல கீர்த்தனை பாடல்களை இயற்றினார்.

நாம் பயன்படுத்தி வரும் கீர்த்தனை புத்தகத்தில் 32 பாடல்களை இயற்றிய பெருமைக்குரியவர் ஆவார். தமிழ் வேதாகமத்தை மொழிபெயர்த்த பெப்ரீசியஸ் போதகரின் பாடல்களைப் போன்றே, சாமுவேல் குருவானவரின் பாடல்களும் பாடுவோரை நெஞ்சுருக வைத்துவிடும் அளவிற்கு இறையியல் கருத்து செரிந்து இருக்கும்.

குருவானவர் சாமுவேல் இயல்பாகவே இசை ஆர்வம் கொண்டவர். இவரது கீர்த்தனைகள் சொற்சுவை, பொருட்சுவை, இலக்கண இலக்கிய நயம், இறையில் வளம் ஆகியவற்றால் கருத்து செரிந்தவையாக இருந்தது.

ஞா.சாமுவேல் குருவானவர், தன்னுடைய வாழ்க்கையில் பல சோதனைகள், வேதனைகள் மற்றும் இழப்புகள் என்று பலவற்றை அனுபவித்தார்.

தொடர்ந்து வந்த துன்பங்களால் வேதனையுற்று, சோர்வு மேலிட, ஒருநாள் மாலை மயங்கும் வேளையில் சென்று கொண்டிருந்தபோது, பாதையில் கிடைத்த ஒரு சிறு காகிதத் துண்டை பார்த்து, அதை கையில் எலடுத்தார். அதில் என் மீட்பர் உயிரோடு இருக்கிறார் (யோபு 19:25) என்ற வேத வசனம் எழுதப்பட்டிருந்தது.

வேத அறிஞராகிய சாமுவேலின் மனக் கண்கள் முன்பு, யோபுவின் வாழ்க்கை திரைப்படம் போல ஓடியது.

யோபு கடந்து வந்த பாதைகளைகளோடு, தான் அனுபவிக்கும் வேதனைகளை ஒப்பிட்டுப் பார்த்தார். அத்தனை பாடுகள் மத்தியிலும் மனம் தளராது, இந்த வசனத்தின் மூலம் சாட்சி பகிர்ந்த விசுவாச வீரன் யோபுவின் சவால், சாமுவேல் குருவானவருக்கு புத்துணர்ச்சியையும், உற்சாகத்தையும், ஆறுதலையும், சமாதானத்தையும், தைரியத்தையும், எதிர்காலத்தை குறித்த நம்பிக்கையையும் கொடுத்தது.

தனது வேதனை புலம்பல்களில் நின்று விட்ட போதிலும், அவருடைய மனம் புதிய உற்சாகத்தால் நிறைந்தது. இவ்வசனம் அவர் உள்ளத்தில் தந்த நம்பிக்கையின் மூலமாக *என் மீட்பர் உயிரோடிருக்கையிலே எனக்கென்ன குறையுண்டு நீ சொல் மனமே* என்ற இனிமையான பாடலாக உருவெடுத்தது. தன் வாழ்க்கையில் சந்தித்த சோர்வுகளை, இப்பாடலை மேற்கொண்டு வெற்றி பெற்றார்.

இறையியல் கருத்து மிகுந்த இப்பாடல் இன்றும் சோர்ந்து போகும் மக்களுக்கு நம்பிக்கையூட்டும், தைரியத்தையும், சமாதானத்தையும், ஆறுதலையும் கொடுக்கிறது. இந்த பாடல் திருச்சபையில் மட்டுமல்லாமல், அடக்க ஆராதனையிலும் பாடப்பட்டு, கவலையோடு இருக்கும் மக்களுக்கு ஆறுதலைக் கொடுக்கிறது.

1921ஆம் ஆண்டு முதல் பெங்களூரில் உள்ள ஐக்கிய இறையியல் கல்லூரியில் பேராசிரியராக ஓய்வுபெறும் வரை பணிபுரிந்தார். பின்னர் சென்னையில் லூத்தரன் இறையியல் கல்லூரியான குருகுலத்திலும் பேராசிரியராக பணியாற்றினார்.

குருவானவர் சாமுவேல் அவர்கள் இறையியல் மாணவர்கள் கற்றுகொள்வதற்காக வேதாகமத்தின் தோற்றம், வேதாகம ஆசிரியர், உட்பொருள்கள் ஆகியவற்றை விளக்கும் *சத்திய வேத பாயிரம்*(Introduction to the Bible) என்ற நூலையும் எழுதினார். மேலும் திருச்சபை சரித்திர மொழிபெயர்ப்பு (History of Christianity), திருச்சபை வருட விபரம் ஆகிய நூல்களும் இவரால் எழுதப்பட்டவை ஆகும்.

1927ஆம் ஆண்டு மே மாதம் 24ஆம் நாள் ஞா.சாமுவேல் குருவானவர் தன்னுடைய எண் 78 ஆம் வயதில் கர்த்தருக்குள் நித்திரையடைந்தார்.

⚛️. ஆங்கிலம் மற்றும் ஜெர்மானியம் போன்ற மொழிகளில் மேல் நாட்டவரால் எழுதப்பட்டு, மேல்நாட்டு இசையுடன் திருச்சபையில் பாடி வந்த பக்தி பாடல்களை தமிழில் மொழிபெயர்த்து, *பாமாலைகள்* என்றும் கர்நாடக இராகம், தாளம் ஆகியவற்றை அடிப்படையாக கொண்டு, தமிழில் இயற்றப்பட்ட பக்தி பாடல்கள் *கீர்த்தனைகள்* என்று அழைக்கப்படுகிறது.

🛐. சங்கீதங்களினாலும், கீர்த்தனைகளினாலும், ஞான பாட்டுகளினாலும் ஒருவருக்கொருவர் போதித்து, புத்தி சொல்லிக்கொண்டு, உங்கள் இருதயத்திலே கர்த்தரை பக்தியுடன் பாடுங்கள் என்ற (எபேசியர் 5:9) வார்த்தையின்படி, நம்முடைய ஆலய ஆராதனைகளில் இந்த பாமாலைகள் மற்றும் கீர்த்தனைகளை அதன் பொருளை உணர்ந்து நாம் பாடும்போது நம்முடைய இதயங்கள் ஒருமுகப்படுத்தப்பட்டு உள்ளம் உருகுகிறது, பக்தி உணர்வு பெருகி ஆழ்ந்த இறை உணர்வு பெறுவதற்கும் துணை செய்கிறது. இந்த பாடல்கள் நம்முடைய ஆவிக்குறிய வாழ்க்கையில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதில் சந்தேகமில்லை.

☸️. கமாலியேல் வேதாகம கல்லூரி, பாமாலைகள் மற்றும் கீர்த்தனைகள் பிறந்த கதைகளை, தமிழ் கிறிஸ்தவர்கள் அறிந்துகொண்டு கிறிஸ்துவின் சேனாதிபதிகளாக செயல்படுவதற்காக வெளியிடுகிறது. மேலும் இந்த கல்லூரி தமிழ் மற்றும் ஆங்கில மொழிகளில் மிஷனெரிகளின் சரித்திரத்தையும், தமிழ் மற்றும் ஆங்கில மொழிகளில் வேதாகம இறையியல் பாடங்களை, சிறந்த வேதபண்டிதர்கள் மூலமாக, தியாகத்தோடு இலவசமாக 2018 ம் ஆண்டிலிருந்து Whatsapp மூலமாக கற்றுகொடுத்து வருகிறோம். இதில் நீங்களும் இணைந்து வேதாகம இறையியல் கல்வியை கற்றுக்கொள்ளலாம்.

✝️. May God bless you and use you for the extensions of His Kingdom. With love and prayers...Rev. D. David Paramanantham, B.Sc, M.A,B.D, Gamaliel Bible College, Mumbai, India🙏😊


===============
The Story behind the Hymn
=============
Hymn: To God be the Glory
Author: Fanny Jane Crosby (1820-1915)
Music: William Howard Doane (1832-1915)

The Hymn: To God be the Glory
1) To God be the glory, great things He hath done;
So loved He the world that He gave us His Son,
Who yielded His life an atonement for sin,
And opened the life gate that all may go in.

Refrain
Praise the Lord, praise the Lord,
Let the earth hear His voice!
Praise the Lord, praise the Lord,
Let the people rejoice!
O come to the Father, through Jesus the Son,
And give Him the glory, great things He hath done.

2) O perfect redemption, the purchase of blood,
To every believer the promise of God;
The vilest offender who truly believes,
That moment from Jesus a pardon receives.

(Refrain)

3). Great things He hath taught us, great things He hath done,
And great our rejoicing through Jesus the Son;
But purer, and higher, and greater will be
Our wonder, our transport, when Jesus we see.

The Story behind the Hymn
Fanny Jane Crosby (1820-1915), the daughter of John and Mercy Crosby, was born in Southeast, Putnam County, N. Y., March 24, 1820. At six weeks old, Crosby caught a cold and developed inflammation of the eyes. Mustard poultices were applied to treat the discharges. This procedure damaged her optic nerves and blinded her. She was totally blind, having lost her sight through a tragic surgical mistake.

Her father died in November 1820 when Fanny was only six months old. So she was raised by her mother and maternal grandmother. When she was eight years old, she moved with her family to Ridgefield, Connecticut, where they stayed for four years.

The women grounded Fanny in Christian principles, helping her memorize long passages from the Bible, and she became an active member of the John Street Methodist Episcopal Church in Manhattan.

Crosby memorized five chapters of the Bible each week from age 10, with the encouragement of her grandmother and later Mrs. Hawley; by age 15, she had memorized the four gospels, the Penteuch, the Book of Proverbs, the Song of Solomon, and many Psalms.

At the age of fifteen, she enrolled in the New York Institution for the Blind, where she obtained a great education. She learned to play the piano, organ, harp, and guitar, and became a good soprano singer. She became a teacher at the school in 1847 and resumed her work until March 1858. She taught English grammar, rhetoric and American history.

Fanny was a wonderful personality; she rose from all odds to make history as a poetess and a prolific writer. Fanny was married on March 5, 1858, to Alex Van Alstyle, who was also blind but a scholar in the same institution in which she was educated.

In 1859, they had a daughter named Frances who died in her sleep soon after birth. Crosby's hymn "Safe in the Arms of Jesus" was inspired by her death. Van and Fanny organized concerts with half the proceeds given to aid the poor, in which she gave recitations of her poems and sang, and he played various instruments.

It was hard to discourage Fanny Crosby. Joy was a characteristic of her life. When English hymn writer Fraces Havergal asked someone about Crosby, she received the reply, “She is a blind lady whose heart can see splendidly in the sunshine of God’s love”. Crosby herself acknowledged, “Darkness may throw a shadow over my outer vision, but there is no cloud that can keep the sunlight of hope from a truthful soul.”

“To God Be the Glory” is well-recognized as a wonderful hymn of praise and adoration of God. Fanny Crosby provided the lyrics while the tune came from William Howard Doane (1832-1915). This hymn was written in 1872 even though it was first published in 1875.

In this hymn, the primary focus of God’s actions is on the redemption of humanity through Jesus Christ. This is a clear message of grace, in contrast to the idea that man must prove his worth before eternal life is granted. The second line of the first stanza, ‘So loved He the world that he gave us his Son,’ echoes John 3:16.

The second stanza, though referring to “the promise of God,” centers on Christ, the “perfect redemption, the purchase of blood.” Crosby most clearly sets forth the conditions for entrance through this gate—faith, and faith alone. In the third stanza, the pronoun “he” is somewhat vague in its reference: Is “he” referring to God or to Jesus? The focus is again on Christ who is “our wonder [and] our transport,” and the one that we long to see in glory.

The third stanza and chorus continues to bring this point of grace home, proclaiming that it is God who has done great things, and the One to whom praise and adoration belong.

The concluding phrase of the refrain contributes to this: ‘O come to the Father through Jesus the Son, and give him the glory, great things he hath done.’ Let us indeed rejoice in our salvation provided so freely by Christ Jesus! The hymn should be the daily testimony of every believer for He has truly done great things for us. To God be the glory!

Ira Sankey probably saw the hymn in Doane’s collection and incorporated it into the first edition of his Sacred Songs and Solos (1875). Dwight Moody and Ira Sankey helped to establish the hymn’s popularity during their revivals in Great Britain in the late 19th century.

Mr. Billy Graham and Mr. Barrows had learned the song during the 1952 revivals they had conducted in Great Britain. Because of the popularity resulting from this Cliff continued to use it in subsequent evangelistic campaigns. Upon returning to the United States, Graham and Barrows introduced the song to an American audience for the first time at their Nashville Crusade, and it became as popular in America as it had been in England.

Because of their influence, the compilers of hymns began including it in new hymnals. It was quickly adopted by many church groups and found its rightful place in the singing of our congregations. Today it is well-recognized as a wonderful hymn of praise and adoration of God.

She praised the Creator and Light of the World for more than 80 years without actually seeing the work of His hands. Fanny Crosby ascribes all credit to God for His work (“great things He hath done”), with no role for man’s efforts in God’s great plan. This is a clear message of grace, in contrast to the idea that man must prove his worth before eternal life is granted.

Fanny was active in speaking engagements and missionary work among America's urban poor almost until she died. Her husband "Van" died on July 18, 1902. Crosby died on February 12, 1915 at the age of 94.

Fanny Crosby has written more than 8000 hymns, songs and poems than anyone else since the beginning of the Christian era. Crosby was known as the "Queen of Gospel Song Writers" and as the "Mother of Modern Congregational Singing in America", with most American hymnals containing her work.

☸️. The apostle Paul wrote of singing psalms, hymns, and spiritual songs, thus recognizing that followers of Jesus can worship God with various musical tastes. These hymns will no doubt have a profound effect on our spiritual lives.

✡️. Dear beloved in Christ, Gamaliel Bible College publishes the stories behind the Hymns to learn and act as Ambassador of Christ. In addition, the college has been teaching the biographies of missionaries in Tamil and English, and theological studies in Tamil and English, through the whatsapp by the best Bible scholars, since 2018 onwards without charging money. In this, you too can learn biblical theology.

🛐. Kindly send this group link to your friends, relatives and the church members. May God bless you and use you for the extensions of His Kingdom. With love and prayers, Rev. D. David Paramanantham, B.Sc, M.A, B.D, Gamaliel Bible College, Mumbai, India

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.