Type Here to Get Search Results !

மன்னிப்பு | விமர்சனம் | வேர்கடலை | கிறித்தவ குட்டி கதைகள் | Christian Shorts Story | Jesus Sam

========
மன்னிப்பு
=========
ஒரு பெண் சுகவீனத்தால் மிகவும் கடுமையாக பாதிக்கப்பட்டிருந்தாள். அவள் அதிகபட்சம் ஆறு மாதங்களே உயிரோடிருப்பாள் என மருத்துவர்கள் கூறி விட்டனர்.

ஒரு நாள் மருத்துவர்கள் சொன்ன முடிவை தனது 12, 14 வயது மகன்களிடம தெரிவித்தாள். உடனே மூத்தவன் ஒரு வேதாகமத்தை கொண்டு வந்து தாயின் அருகில் அமர்ந்து மாற்கு 11:24-ஐ வாசித்தான். '

ஆதலால், நீங்கள் ஜெபம்பண்ணும் போது எவைகளைக் கேட்டுக்கொள்வீர்களோ, அவைகளைப் பெற்றுக்கொள்வோம் என்று விசுவாசியுங்கள், அப்பொழுது அவைகள் உங்களுக்கு உண்டாகும் என்று சொல்லுகிறேன்'

என்ற வசனத்தை கேட்டவுடன் தாய் ஆச்சரியப்பட்டாள். அவள் ஒரு கிறிஸ்தவளாயிருந்தாலும் இந்த வசனம் வேதத்தில் இருப்பதை அறிந்திருக்கவில்லை.

அன்றிரவு படுக்கைக்கு செல்லுமுன் மகன் வாசித்த தேவ வசனத்தை எடுத்து வாசித்தாள். அதை தொடர்ந்துள்ள வேத வசனங்களையும் வாசிக்க தூண்டப்பட்டாள்.

நீங்கள் நின்று ஜெபம் பண்ணும்போது ஒருவன் போில் உங்களுக்கு யாதொரு குறை உண்டாயிருக்குமானால் பரலோகத்திலிருக்கிற உங்கள் பிதா உங்கள் தப்பிதங்களை உங்களுக்கு மன்னிக்கும்படி அந்த குறையை அவனுக்கு மன்னியுங்கள்'. - (வசனம் 25).

இவ்வசனம் அவளுடைய உறவினா்கள் போில் அவளுக்கிருந்த மன்னிக்க முடியாத ஆவியை அவளுக்கு உணர்த்திற்று.

தன் உறவினர்கள் அனைவரையும் மன்னிக்க தனக்கு உதவி செய்யும்படி கா்த்தாிடம் மனங்கசந்து அழுது மன்றாடினாள்.

என்ன ஆச்சரியம்!

அநேக மாதங்களாக நித்திரையின்றி கஷ்டப்பட்ட தாய், ஒரு குழந்தை தன் தாயின் கரங்களில் உறங்குவதுபோல, அன்றிரவு நன்றாக உறங்கினாள்.

மறுநாள் காலையில் தான் நல்ல ஆரோக்கியத்துடன் இருப்பதை உணர்ந்து மருத்துவரை காண சென்றாள். புற்று நோய் முற்றிலும் மறைந்ததை கண்டு மருத்துவர்கள் பிரமிப்படைந்தனா்.

இப்போது நல்ல சுகத்துடன் புற்று நோயாளிகள் மத்தியில் ஊழியக்காாியாக தொண்டு செய்து வருகிறாள்.


என் அன்புக்குாியவா்களே,

மன்னிப்பு என்பதற்கான கிரேக்க பதத்திற்கு விடுதலையாக்குதல் என்ற ஒரு அா்த்தமும் உண்டு.

நமக்கு விரோதமாக தவறிழைத்தவர்களை மன்னிப்பதின் மூலமாக நாம் அவர்களை விடுதலையாக்குவதோடு மட்டுமல்லாமல், நம்மையும் விடுவித்து கொள்கிறோம்.
மற்றவர்களை முழு இருதயத்தோடும் மன்னிக்க முடியாதவர்களால் மெய்யான விடுதலையை ஒருபோதும் அனுபவிக்க முடியாது.

பிறரை மன்னிக்க முடியாத ஆவி, கோபம், பழி வாங்குதல், கசப்பு, சீற்றம் முதலான குணங்களால் பாதிக்கப்பட்ட மக்கள் நோயினால் நிறைந்தவர்களாகவே காணப்படுகிறாா்கள்.

உடனுக்குடன் மன்னித்து தங்களுடைய இருதயத்திலிருந்து அன்புகூரக்கூடிய ஒரு கூட்ட ஜனங்களே தேவனுக்கு தேவையாயிருக்கிறாா் கள்.

மன்னித்தல் நொறுங்கிய இருதயங்களை குணமாக்கும், முறிந்துபோன விவாகங்களை இணைத்து விடும். சிதைந்து போன வாழ்க்கை யை சீா்படுத்தி விடும்;.

தகர்ந்து போன குடும்பங்களை ஒன்றாக்கி விடும். மன்னிக்கும் ஜனங்களுக்கு மாத்திரமே ஒளிமயமான எதிர்காலம் உண்டு. இவர்கள் மட்டுமே, சிறந்ததொரு வருங்காலத்தை மற்றவர்களுக்கு வழங்க முடியும்.


பிறரை மன்னிக்க முடியாதவா்கள் மாிக்கும்போது கூட பற்களை கடிக்கின்றனர் என கூறுவார்கள்.

ஆனால் நம்முடைய அருமை ஆண்டவர் இயேசுகிறிஸ்து சிலுவையில் தொங்கி கொண்டிருக்கும்போது, உரைத்த ஏழு வார்த்தைகளில் முதலாவதும், கடைசியும் 'பிதாவே' என ஆரம்பிக்கின்றன.

1.பிதாவே இவர்களுக்கு மன்னியும்,

7.பிதாவே உம்முடைய கைகளில் என் ஆவியை ஒப்புவிக்கிறேன். என்றாா்.

பிறரை மன்னித்தவர்களால் மாத்திரமே தங்கள் ஆவியை பிதாவின் கரங்களில் சமாதானத்துடன் ஒப்புக்கொடுக்க முடியும்.

பிறரை மன்னிக்க முடியாதவா்கள் வாழும்போது இருந்த கசப்புடனே புறம்பான இருளுக்குள்ளும் செல்லுவர். மற்றவா்களை மன்னிப்போமா? சுகமுடன் வாழ்வோமா?

நீங்கள் நின்று ஜெபம் பண்ணும்போது, ஒருவன் பேரில் உங்களுக்கு யாதொரு குறை உண்டாய் இருக்குமானால், பரலோகத்திலிருக்கிற உங்கள் பிதா உங்கள் தப்பிதங்களை உங்களுக்கு மன்னிக்கும்படி, அந்தக் குறையை அவனுக்கு மன்னியுங்கள்.

நீங்கள் மன்னியாதிருப்பீர்களானால், பரலோகத்திலிருக்கிற உங்கள் பிதாவும் உங்கள் தப்பிதங்களை மன்னியாதிருப்பார் என்றார். - (மாற்கு 11:25-26)

என் அன்புக்குாியவா்களே,
மற்றவர்களை மன்னியுங்கள். அப்போது நீங்கள் நன்றாக சுகமாக இருப்பீா்கள்.

21 அப்பொழுது, பேதுரு அவரிடத்தில் வந்து: ஆண்டவரே, என் சகோதரன் எனக்கு விரோதமாய்க் குற்றஞ்செய்து வந்தால், நான் எத்தனைதரம் மன்னிக்கவேண்டும்? ஏழுதரமட்டுமோ என்று கேட்டான்.

மத்தேயு 18:21
அதற்கு இயேசு: ஏழுதரமாத்திரம் அல்ல, ஏழெழுபதுதரமட்டும் என்று உனக்குச் சொல்லுகிறேன்.

எப்படியெனில், பரலோகராஜ்யம் தன் ஊழியக்காரரிடத்தில் கணக்குப் பார்க்கவேண்டுமென்றிருந்த ஒரு ராஜாவுக்கு ஒப்பாயிருக்கிறது.

அவன் கணக்குப்பார்க்கத் தொடங்கினபோது, பதினாயிரம் தாலந்து கடன் பட்டவன் ஒருவனை அவனுக்கு முன்பாகக் கொண்டுவந்தார்கள்.

கடனைத்தீர்க்க அவனுக்கு நிர்வாகம் இல்லாதபடியால், அவனுடைய ஆண்டவன் அவனையும் அவன் பெண்ஜாதி பிள்ளைகளையும், அவனுக்கு உண்டான எல்லாவற்றையும் விற்று, கடனைத் தீர்க்கும்படிக் கட்டளையிட்டான்.

அப்பொழுது, அந்த ஊழியக்காரன் தாழ விழுந்து, வணங்கி:

ஆண்டவனே! என்னிடத்தில் பொறுமையாயிரும், எல்லாவற்றையும் உமக்குக் கொடுத்துத் தீர்க்கிறேன் என்றான். அந்த ஊழியக்காரனுடைய ஆண்டவன் மனதிரங்கி, அவனை விடுதலைபண்ணி, கடனையும் அவனுக்கு மன்னித்துவிட்டான்.

அப்படியிருக்க, அந்த ஊழியக்காரன் புறப்பட்டுப்போகையில், தன்னிடத்தில் நூறு வெள்ளிப்பணம் கடன் பட்டிருந்தவனாகிய தன் உடன்வேலைக்காரரில் ஒருவனைக் கண்டு, அவனைப் பிடித்து, தொண்டையை நெரித்து: நீ பட்ட கடனை எனக்குக் கொடுத்துத் தீா்க்க வேண்டும் என்றான்.

அப்பொழுது அவனுடைய உடன் வேலைக்காரன் அவன் காலிலே விழுந்து: என்னிடத்தில் பொறுமையாயிரும், எல்லாவற்றையும் உமக்குக் கொடுத்துத் தீர்க்கிறேன் என்று, அவனை வேண்டிக்கொண்டான்.

அவனோ சம்மதியாமல், போய், அவன் பட்ட கடனைக் கொடுத்துத் தீர்க்குமளவும் அவனைக் காவலில் போடுவித்தான்.

நடந்ததை அவனுடைய உடன் வேலைக்காரர் கண்டு, மிகவும் துக்கப்பட்டு, ஆண்டவனிடத்தில் வந்து, நடந்ததையெல்லாம் அறிவித்தார்கள்.

அப்பொழுது, அவனுடைய ஆண்டவன் அவனை அழைப்பித்து: பொல்லாத ஊழியக்காரனே, நீ என்னை வேண்டிக்கொண்டபடியினால் அந்தக் கடன் முழுவதையும் உனக்கு மன்னித்து விட்டேன்.

நான் உனக்கு இரங்கினதுபோல, நீயும் உன் உடன்வேலைக்காரனுக்கு இரங்கவேண்டாமோ என்று சொல்லி, அவனுடைய ஆண்டவன் கோபமடைந்து, அவன் பட்ட கடனையெல்லாம் தனக்குக் கொடுத்துத் தீர்க்குமளவும் உபாதிக்கிறவர்களிடத்தில் அவனை ஒப்புக்கொடுத்தான்.

நீங்களும் அவனவன் தன் தன் சகோதரன் செய்த தப்பிதங்களை மனப்பூர்வமாய் மன்னியாமற்போனால், என் பரம பிதாவும் உங்களுக்கு இப்படியே செய்வார் என்றார். (மத்தேயு 18:21 -35)

இந்த வசனத்தில் கடைசியில் மன்னிக்கப்பட்டவன் தனக்குக் கீழ் இருக்கிறவனை மன்னியாததால்

#உபாதிக்கிறவா்களிடத்தில் அவனை ஒப்புக் கொடுத்தான். என்று இயேசு செல்வதைப் பாா்க்கிறோம்.

இன்றைய சூழலில் கேன்சா் ,இன்னும் டாக்டா்களால் சுகமாக்க முடியாத வியாதிகள் எல்லாம் வருவதற்குக் காரணம் என்ன ???

மன்னியாத குற்றங்கள் தான். எவ்வளவு பெரிய குற்றங்களாயிருப்பினும் மன்னியுங்கள். அப்போது எந்த மரணத்துக்கேதுவான நோய்கள் வராது

வியாதிப்பட்டிருக்கிறேன் என்று நகரவாசிகள் சொல்வதில்லை, அதில் வாசமாயிருக்கிற ஜனத்தின் அக்கிரமம் மன்னிக்கப்பட்டிருக்கும். (ஏசாயா 33:24)

எவ்வளவு தடவை தான் மன்னிப்பது என்று நீங்கள் கேட்பீா்களானால் இயேசு சொல்கிறாா். ஏழெழுபது முறை மன்னிக்கவேண்டும் என்றாா்

ஏழு என்றால் பூரணம், எழுபது என்றால் மனிதனின் ஆயுசுநாட்கள் எழுபது வருஷம், (சங்கீதம் 90:10) பூரணமாய் அதாவது முழுமையாக உன் ஆயுசுநாட்கள் பாியந்தம் மன்னித்துக் கொண்டயிரு என்பதுதான் ஏழெழுபது முறை மன்னிக்கவேண்டும் என்பதின் அா்த்தமாகும்.

பவுல் சொல்கிறாா்...
அன்றியும், நீங்கள் மீட்கப்படும் நாளுக்கென்று முத்திரையாகப் பெற்ற தேவனுடைய பரிசுத்த ஆவியைத் துக்கப்படுத்தாதிருங்கள்.

சகலவிதமான கசப்பும், கோபமும், மூர்க்கமும், கூக்குரலும், துஷணமும், மற்ற எந்தத் துர்க்குணமும் உங்களை விட்டு நீங்கக்கடவது.

ஒருவருக்கொருவர் தயவாயும் மனஉருக்கமாயும் இருந்து, கிறிஸ்துவுக்குள் தேவன் உங்களுக்கு மன்னித்ததுபோல, நீங்களும் ஒருவருக்கொருவர் மன்னியுங்கள். (எபே. 4:30-32)

மன்னியுங்கள் !! மன்னிக்கப்படுவீா்கள் !!! ஆரோக்கியமாயுமிருப்பீா்கள் !!!!

நீங்கள் ஆசீா்வதிக்கப்பட்டவர்கள் !!!


==========
ஓர் குட்டிக் கதை
விமர்சனம்!
============
கந்தர்வபுரி என்ற நாட்டை காந்தன் என்ற அரசர் ஆண்டார். அரசர் நல்லவர் என்ற பெயர் பெற்று சிறப்பாக மக்களை ஆண்டார். கவிதைகள் என்றால் அரசருக்கு மிகவும் பிடிக்கும். அரண்மனையில் தினமும் கவியரங்கம் நடைபெறும். அற்புதமான கவிதைகள் எழுதுபவர்களை பாராட்டி பரிசு வழங்கி கவுரவிப்பது அரசரின் வழக்கம். அரண்மனையில் ஒரு ஆஸ்தான கவிஞன் இருந்தான். அவன் பெயர் பசுபதி. அற்புதமான கவிதைகள் எழுதுவதில் அவரை யாராலும் வெல்ல முடியாது. திறமை இருக்குமிடத்தில் சில சமயம் கர்வமும் வருவதுண்டு. கொஞ்சம் கர்வம் இருந்தது. கவிதைகள் பாடும் போது ஒருவன் அவைகளை விமர்சனம் செய்வான். அந்த விமர்சகன் பெயர் விமலன்.

எப்பேர்பட்ட கவிதைகளையும் விமலன் விமர்சனம் செய்து அதில் உள்ள குற்றங்களை கண்டுபிடித்து விடுவான். ஆஸ்தான கவிஞனான பசுபதியின் கவிதைகளும் விமலனிடம் இருந்து தப்புவதில்லை. எனவே, பசுபதி கவிதை பாடும் முன் பதட்டத்துடன் விமலனை பார்ப்பான். தனக்கு அபார புலமை இருந்தாலும் மனதுக்குள் விமலனுக்கு பயப்பட்டான். விமலன் நல்லவன். யாருக்கும் தீங்கு செய்யமாட்டான். எனவே, அரசர் அவனிடம் அதிக பற்று வைத்திருந்தார். இவர்களது நட்பு பசுபதியின் அமைதியை கெடுத்தது. அவன் மனதில் விமலன் மீது ஆத்திரம் ஏற்பட்டது.

அன்றும் வழக்கம் போல் அரசவை கூடியது. கவிஞர்கள் பலர் கவிதை பாடி பரிசு பெற வந்தனர். கவிஞர்களை கண்டு அரசர் மகிழ்ச்சி அடைந்தார். கவிஞர்களுடன் விமர்சகனும் இருந்தான். கவியரங்கம் ஆரம்பமாகும் நேரம் வந்தது. அரசர் முன் நின்று கவிஞர்கள் ஒவ்வொருவரும் அற்புதமான கவிதைகள் பாடினர். அதைக் கேட்டு அரசர் மகிழ்ச்சி அடைந்தார். பிறகு ஆஸ்தான கவிஞன் பாட அழைக்கப்பட்டான். பசுபதி எழுந்து நின்று கவிதை பாடினான். அதைக் கேட்டு பெரும் மகிழ்ச்சி அடைந்து கை தட்டி பாராட்டினார் அரசர். மற்ற கவிஞர்களும் பசுபதியை பாராட்டி கை தட்டி ஆரவாரம் செய்தனர்.

விமலன் மட்டும் மவுனமாக இருந்து பசுபதியை கவனித்துக் கொண்டிருந்தான். அவன் மனதில் பசுபதி பாடிய கவிதைகளின் வரிகள் ஆழமாக பதிந்து இருந்தன. ஒவ்வொரு வரிகளையும் ஒவ்வொரு எழுத்துக்களையும் அவன் ஆராய்ந்து கொண்டிருந்தான். பிறகு எழுந்து, அரசருக்கும் சபையோர்களுக்கும் வணக்கம் சொல்லிவிட்டு தன் விமர்சனத்தை தொடங்கினான். அந்த விமர்சனம் பசுபதியை மேலும் ஆத்திரப்படுத்தியது. அவன் பற்களை கடித்து ஆத்திரத்தை அடக்கிக் கொண்டான். விமலனின் விமர்சனம் கேட்டு அரசன் திடுக்கிட்டான். விமலனால் மட்டும் எப்படி இவ்வளவு நன்றாக விமர்சனம் செய்ய முடிகிறது என்று அனைவரும் வியந்தனர்.

“”பேஷ்… பேஷ்… உங்கள் விமர்சனம் அற்புதம். கவிதை எழுதுவதை விட அதை விமர்சனம் செய்வது தான் சிரமமான காரியம்,” என்று கூறி பாராட்டினார் அரசர். அன்று வீடு திரும்பிய பசுபதியால் அமைதியாக இருக்க முடியவில்லை. விமலனை எப்படி பழி வாங்குவது என்ற சிந்தனைதான் அவன் மனதில் நிறைந்து இருந்தது. இவனை விட்டு வைத்தால் தன் ஆஸ்தான கவிஞர் பதவிக்கு ஆபத்து ஏற்பட்டுவிடும் என்று பயந்தான். அவனால் இரவில் தூங்க முடியவில்லை. கண்களை மூடினாலே விமலனின் முகம்தான் தெரிந்தது. எப்படியாவது அவனை ஒழித்து கட்ட வேண்டும் என்று முடிவு செய்தான். தன் கவிதையை பாராட்டாமல் அவன் விமர்சனத்தை பாராட்டுகிறாரே அரசர் என்று நினைத்தபோது அவனுக்கு அரசர் மீது ஆத்திரம் வந்தது.

அன்று ராஜ சபை கூடிய போது அரசர் மகிழ்ச்சிகரமான அறிக்கை ஒன்றை வெளியிட்டார். “”தன் பிறந்த நாள் அன்று கவிதை போட்டி ஒன்று நடைபெறுகிறது. இந்த போட்டியில் கலந்து கொண்டு வெற்றி பெறுபவர்களுக்கு ஆயிரம் தங்கக் காசுகளும், வீடும், நிலமும் வழங்க இருக்கிறேன். அயல்நாடுகளில் இருந்தும் பல கவிஞர்கள் வர இருக்கின்றனர்,” என்றார் அரசர். அதைக் கேட்டு அனைவரும் மகிழ்ச்சி அடைந்த போது பசுபதி மட்டும் உம் என்று இருந்தான். தான் போட்டியில் கலந்து கொண்டால் நிச்சயமாக வெற்றி பெற முடியாது. காரணம், அந்த விமலன் விமர்சனம் செய்தே தன்னை அவமானப்படுத்துவான், தோல்வி அடைந்தால் தன் ஆஸ்தான கவிஞர் பதவி போய்விடும். இப்படி பலவித சிந்தனையில் வேர்த்துப் போனான் பசுபதி. அரசனின் பிறந்த நாள் வந்தது. நாடே விழாக்கோலம் பூண்டது. மக்கள் அனைவரும் புத்தாடை அணிந்து மகிழ்ச்சியாக இருந்தனர். போட்டியில் கலந்து கொள்ள வேண்டுமா வேண்டாமா என்று முடிவெடுக்க முடியாமல் தவித்துக் கொண்டிருந்தான் பசுபதி. வருவது வரட்டும் என்று போட்டியில் கலந்து கொள்ள முடிவு செய்தான் பசுபதி.

கவியரங்கம் ஆரம்பமாகிவிட்டது. அரசர் சிம்மாசனத்தில் அமர்ந்து விட்டு கவிஞர்களை வாழ்த்தினார். பிறகு, “”கவிதை போட்டியை ஆரம்பிக்கலாம்,” என்றார். பல கவிஞர்களும் தங்கள் கவிதைகளை அழகாக பாடினர். அதைக் கேட்டு அரசர் மகிழ்ச்சி அடைந்தார். அனைத்தையும் கவனித்துக் கொண்டு மவுனமாக இருந்தான் விமலன். அடுத்தபடியாக ஆஸ்தான கவிஞன் பசுபதி கவிதை பாடுவார் என்ற அறிவிப்பு வந்த போது விமலன் சிரித்தான். அதைக் கவனித்த பசுபதிக்கு கடும் கோபம் வந்தது. ஆனால், கோபத்தை வெளியே காட்டிக் கொள்ளாமல் இருந்தான். பசுபதி எழுந்து அரசனை வணங்கிவிட்டு கவிதை பாட தொடங்கினான். அரசர் உட்பட அனைவரும் பசுபதியை பாராட்டினர்.

விமலன் அந்தக் கவிதையை அக்கு வேறு ஆணி வேறாக பிரித்து விமர்சனம் செய்து அனைவரையும் வியக்க வைத்தான். முதல் பரிசு பசுபதிக்கே கிடைத்தது. பரிசு பெற்றாலும் அவன் மனதில் விமலன் மீது இருந்த ஆத்திரம் தணிய வில்லை. பழிவாங்கும் எண்ணம் அவனை ஆட்டி வைத்தது. அவன் ஒரு வாளுடன் வீட்டை விட்டு ஓடினான். “விமலனை கொன்றுவிட்டு தான் மற்றவைகளை கவனிப்பேன்’ என்று மனதுக்குள் கூறிக் கொண்டே அவன் வீட்டை நோக்கி ஓடினான். யார் கண்களிலும் படாமல் விமலன் வீட்டு பூங்காவில் ஒளிந்து கொண்டான். அப்போது விமலன் தன் மனைவியுடன் பேசும் சப்தம் கேட்டது. அவன் மெதுவாக ஜன்னலை அடைந்து வீட்டுக்குள் எட்டி பார்த்தான்.

”இன்னிக்கு கவிதை போட்டியில் பரிசு கிடைத்தது. யாருக்கு?” என்றாள் மனைவி. “”வேறு யாருக்கு, நம்ம பசுபதிக்கு தான்,” என்றான் விமலன். ”பசுபதிக்கு அற்புதமான திறமை இருப்பதாக நீங்களே சொல்கிறீர். பிறகு ஏன் தினமும் அவர் கவிதைகளை விமர்சனம் செய்து கொண்டிருக்கிறீர்கள்?” என்றாள் மனைவி. “”அடியே! பசுபதி அற்புதமான கவிஞன்தான். அவன் திறமையை மேலும் சிறப்பாக்குவதற்காக தான் அப்படி விமர்சனம் செய்கிறேன். என் விமர்சனத்துக்கு பயந்து அவன் மேலும் சிறந்த கவிதைகளை படைக்க வேண்டும் என்று கடும் முயற்சி செய்து கொண்டிருக்கிறான். அந்த முயற்சி அவனுக்கு பெரும் வெற்றியை தேடித் தருகிறது. இன்று அவனிடம் போட்டி போட்டு வெற்றி பெறும் தகுதி யாருக்கும் கிடையாது. இப்போது, நான் ஏன் விமர்சனம் செய்கிறேன் என்ற கேள்விக்கு விடை கிடைத்துவிட்டதா?” என்று கூறிவிட்டு மீண்டும் சிரித்தான்.

வாளுடன் விமலனை கொல்ல வந்த பசுபதி இந்த உரையாடலை கேட்டு அதிர்ச்சி அடைந்தான். இப்பேற்பட்ட உயர்ந்த உள்ளம் கொண்டவரை தான் தவறாக நினைத்துக் கொலை செய்யும் அளவுக்கு வந்துவிட்டோமே என்று நினைத்த போது அவனுக்கு அழுகையே வந்தது. அவன் அழுது கொண்டே ஓடிச் சென்று விமலனின் கால்களில் விழுந்து மன்னிப்பு கேட்டான். “”அய்யா! நான் உங்களை தவறாக நினைத்தேன். இந்த உயர்ந்த உள்ளத்தை புரிந்து கொள்ள முடியாமல் போயிற்று. என்னை மன்னித்து விடுங்கள். அந்த பரிசு உங்களை தான் சாரும். அதைப் பெறும் தகுதி எனக்கு இல்லை,” என்று கூறி அழுதான் பசுபதி.

எனதருமை வாசகரே, நம்மை விட பெரியவர்கள் நம்மை விமர்ச்சிக்கும் போது அதைக் கண்டு ஆத்திரப்பட வேண்டாம். பெற்றோர்களும் ஆசிரியர்களும் தம்மை குறை கூறும் போது கோபம் கொள்ளத் தேவையில்லை. நம் மீது இருக்கும் பற்றினால்தான் அவர்கள் அவ்வாறு கூறுகின்றனர் என்பதே இக்கதையின் கருத்து.

To Get Daily Story in What's App Contact +917904957814

நம்முடைய ஆசிரியர்களால், உயர் அதிகாரிகளால், பெற்றோர்களால், உறவினர்களால், சுற்றுப்புறத்தாரால், நம்முடைய வாழ்க்கையிலும் இது போன்ற மிகக் கடினமான சூழ்நிலையை நாம் நிச்சயம் கடந்து வந்திருப்போம். அந்த சமயத்தில் நாம் பட்ட மன வேதனை சொல்லமுடியாதது. ஆனால் அந்த கடினமான சூழ்நிலையை கடந்த பின்னர் நமக்கு கிடைத்த பிரதிபலனோ நாம் நினைத்து கூட பார்த்திராத அளவு என்பது நாம் நம்முடைய அனுபவத்தில் உணர்ந்ததே.

வேதத்தில் தாவீதின் வாழ்க்கையில் சவுலினால் யாரிடமும் சொல்லி முடியாத அளவு கஷ்டப்பட்டான். ஆனால் அதன் பின்னர் அதன் மூலம் கிடைத்த பிரதிபலன் நாம் நன்றாய் அறிந்ததே.

வேதம் இவ்வாறு கூறுகிறது,
1 கொரிந்தியர் 10:13
    13 மனுஷருக்கு நேரிடுகிற சோதனையேயல்லாமல் வேறே சோதனை உங்களுக்கு நேரிடவில்லை. தேவன் உண்மையுள்ளவராயிருக்கிறார். உங்கள் திராணிக்கு மேலாக நீங்கள் சோதிக்கப்படுகிறதற்கு அவர் இடங்கொடாமல், சோதனையைத் தாங்கத்தக்கதாக, சோதனையோடுகூட அதற்குத் தப்பிக்கொள்ளும்படியான போக்கையும் உண்டாக்குவார்.

யாக்கோபு 1:12
    12 சோதனையைச் சகிக்கிற மனுஷன் பாக்கியவான். அவன் உத்தமனென்று விளங்கினபின்பு கர்த்தர் தம்மிடத்தில் அன்புகூருகிறவர்களுக்கு வாக்குத்தத்தம் பண்ணின ஜீவகிரீடத்தைப் பெறுவான்.

எனவே நாமும் நம்முடைய வாழ்க்கையில் அன்றாடம் பிறறால் வரும் சோதனையை சகிப்போம் தேவ ஆசீர்வாதங்களையும் ஜீவ கிரிடத்தையும் பெற்றுக்கொள்வோம்.

#நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்!!!!!


=============
ஓர் குட்டிக் கதை
வோ்கடலை
============
ஒரு ஊரில் வயதான தம்பதியர் வாழ்ந்து வந்தனர். அவர்களுக்கு ஐந்து மகன்கள். அவர்கள் அனைவருக்கும் திருமணமாகி விட்டது. ஐந்து மருமகள்களும் அந்தப் பெரிய வீட்டில் ஒரே கூட்டுக்குடும்பமாக வசித்தனர்.

குடும்பத் தலைவிக்கு அதிகம் வயதாகிவிட்டது. நோயும் நிறைய வந்துவிட்டது. அதனால் அந்தப் பெரிய குடும்பத்தின் நிர்வாகப் பொறுப்பை, யாராவது ஒரு பொறுப்புள்ள மருமகளிடம் ஒப்படைக்க நினைத்தாள். ஐந்து மருமகள்களில் யாரிடம் குடும்பப் பொறுப்பை ஒப்படைப்பது என்ற குழப்பம்.

யோசித்தாள் ஒரு நல்ல யோசனை தோன்றியது. ஒருநாள் ஐந்து மருமகள்களையும் அழைத்து ஆளுக்கு ஒரு படி வேர்க்கடலையைக் கொடுத்தாள். ""மருமகள்களே! ஆறு மாதம் சென்ற பிறகு இந்த வேர்க்கடலைகளைக் கேட்பேன். கொண்டு வந்து தரவேண்டும்!'' என்றாள்.  மருமகள்களும் அதற்கு ஒப்புக்கொண்டனர்.

ஆறுமாதம் சென்றது. குடும்பத் தலைவி தனது ஐந்து மருமகள்களையும் அழைத்து, தான் கொடுத்த வேர்க்கடலைகளைத் திருப்பிக் கேட்டாள்.

""ஆறு மாதம் வேர்க்கடலையை வைத்திருந்தால் புழுத்துப் போகாதா? அதனால் அவை வீணாகிவிடுமே. ஆகவே, அதை உடனே வறுத்து, குடும்பத்தோடு சாப்பிட்டு விட்டோம்!'' என்றாள் மூத்த மருமகள்.

""நீங்கள் கொடுத்த வோ்க்கடலையை அப்படியே ஓர் அடுக்குப் பானைக்குள் போட்டு வைத்திருந்தேன். நீங்கள் கேட்கும்போது இதைத் திருப்பிக் கொடுப்பது தானே மரியாதை. இந்தாருங்கள்!'' என்று அந்த ஒருபடி வேர்க்கடலையைத் திருப்பிக் கொடுத்தாள் இரண்டாவது மருமகள்.

""ஓர் ஏழைக் குடும்பம் பசியால் துடித்துக் கொண்டிருந்தது. அதைப் பார்க்க மனம் பொறுக்கவில்லை. ஆகவே, அவர்கள் மீது இரக்கப்பட்டு ஒரு படி வோ்க்கடலையையும் அவர்களுக்கு கொடுத்து விட்டேன்!'' என்றாள் மூன்றாவது மருமகள்.

""ஊரிலிருந்து என் பெற்றோர் ஒருமுறை வந்திருந்தனரே, அவர் களிடம் தம்பி, தங்கை களுக்குக் கொடுக்கும்படி கூறிக் கொடுத்து அனுப்பிவிட்டேன்!'' என்றாள் நான்காவது மருமகள்.

ஐந்தாவது மருமகள் இரண்டு ஆட்களின் துணையோடு ஒரு மூட்டை வேர்க்கடலையைக் கொண்டு வந்து தன் மாமியாரின் முன்னே போட்டாள்.

""அத்தை! நீங்கள் கொடுத்த வேர்க்கடலையை ஆறு மாதங்கள் அப்படியே வைத்திருப்பதால் என்ன பயன்... என்ன லாபம்...? என்று யோசித்தேன்.

என் தந்தை வீட்டுத் தோட்டத்தில் விதைத்தால் ஒன்றுக்குப் பத்தாக விளைந்து லாபம் கிடைக்குமே என்று நினைத்தேன்.

நிலத்தைப் பண்படுத்தி ஒருபடி வேர்க்கடலை யையும் விதைத்தேன். இந்த ஆறு மாதத்தில் அது ஒரு மூட்டை வோ்க்கடலையாகப் பெருகி விட்டது. இந்தாருங்கள்!'' என்றாள்.

அதைக் கண்ட மாமியார் மகிழ்ந்து போனாள். பொிய குடும்பத்தை நிா்வகிக்கும் தகுதியும், பொறுப்பும் அவளுக்கே உண்டு என்று தீர்மானித்தாள். உடனே பொறுப்பை ஐந்தாவது மருமகளிடம் ஒப்படைத்தாள்.

அதை மற்ற நான்கு மருமகள்களும் பெருந் தன்மையுடன் ஏற்றுக்கொண்டனா்.

என் அன்புக்குாியவா்களே,
நீதியை விதைக்கிறவனோ மெய்ப்பலனைப் பெறுவான். (நீதிமொழி 11 :18)

உழுகிறவன் நம்பிக்கையோடே உழவும், போரடிக் கிறவன் தான் நம்புகிறதில் பங்கடைவேன் என்ற நம்பிக்கையோடே போரடிக்கவும் வேண்டியதே, நாங்கள் உங்களுக்கு ஞானநன்மைகளை விதை த்திருக்க, உங்கள் சரீரநன்மைகளை அறுத்தால் அது பெரிய காாியமா? (1 கொரிந்தியர் 9:10,11)

பொறுப்புமிக்க மருமகள் விதைத்ததினால் நற்பலனை அடைந்தாள்.

To Get Daily Story in What's App Contact +917904957814

விதை என்பது தேவனுடைய வாா்த்தைகள் . அதை நீங்கள் பேசும்போதும் நீங்கள் தீர்க்கத்தரி சனம் சொல்லும் போதும் விதையில் ஜீவன் இருக்கிறது போல தேவனுடைய வாா்த்தையிலும் ஜீவன் இருக்கிறது. அது நீங்கள் என்ன பேசினீா்களோ அது தன் பலனைக் கொடுக்கும்.

நீங்கள் ஞானமாய் பேசி நன்மையை விதைக்கி றீா்கள். சரீரபிரகாரமாய் சகலவித நன்மைகளை அறுவடையாய் அறுப்பீா்கள்.

மோசமாய் பேசுகிறவனும் மாம்சத்நிற்கென்று அழிவை அறுப்பான்.

பைபிள் சொல்கிறது
மோசம்போகாதிருங்கள், தேவன் தம்மைப் பாியாசம் பண்ணவொட்டார். மனுஷன் எதை விதைக்கிறானோ அதையே அறுப்பான்.

தன் மாம்சத்திற்கென்று விதைக் கிறவன் மாம்சத்தினால் அழிவை அறுப்பான்.அவனின் அறுவடை பாருங்கள் பணம் இருக்காது வியாதி, நோய் கொண்டு ஒடுங்கிப் போவான். அவன் பிள்ளைகள் தாித்திரராவாா்கள். வேலைக் கிடைக்காது. என்ற அவன் தன் மோசமான வாா்த்தையின் பலனை அறுப்பான்.

ஆனால் ஆவிக்கென்று விதைக்கிறவன் ஆவியினாலே நித்தியஜீவனை அறுப்பான். (கலாத்தியர் 6:7,8)

எனவே நலல நல்ல வார்த்தைகளை பேசுங்கள். அது நல்ல பலனை கொடுக்கும். அந்த பலன் நீங்கள் அநேக இடங்களில் உயா்த்தப்படுவீா்கள்.

பொறுப்புமிக்க பதவி உங்களைத் தேடி வரும். நீங்கள் அனைவருக்கும் பிரயோஜனமாய் இருப்பீா்கள்.

நீங்கள் ஆசீா்வதிக்கப்பட்டவர்கள் !!!

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.