=======
Quotes
=======
மூளையை வைத்து அல்ல
இதயத்தை வைத்து செய்யப்படும்
தெய்வீக தொழில்
ஜெபம்
கொள்முதல் செய்யும் இடம்
பரலோகம்
விற்பனை செய்யும் இடம்
மனுஷரின் இதயங்கள்
இங்கே
வாங்கப்படும் மூலப்பொருளும்
விற்கப்படும் மூலப்பொருளும்
அன்பு ஒன்றுதான்
அந்த மூலப்பொருள் மூலம்
தயாரிக்கப்படும் பொருட்கள்
சமாதானம், பொறுமை,
தயவு, நற்குணம், இச்சையடக்கம், விசுவாசம்
போன்றவைகளாகும்.
இங்கே லாபம்
நித்திய ஜீவன்
நஷ்டம்
ஒன்றுமில்லை.
By Bro Durai Dainel
To Get Daily Quotes Contact +917904957814
=======
Quotes
=======
ஒரு அருமையான பிரசங்கத்தையும் கேட்க முடிகிறது
ஒரு இச்சையான திரைப்படத்தையும் ரசிக்க முடிகிறது என்றால்
ஒரு மணி நேரம் ஜெபிக்கவும் முடிகிறது
ஒரு மணிநேரம் வெட்டிஅரட்டையும் அடிக்கமுடிகிறது என்றால்
ஒரு அதிகாரம் வேதம் வாசிக்கவும் முடிகிறது
ஒன்பது பக்கம் வீண்கதை படிக்கவும் முடிகிறது என்றால்
உன் இருதயம் சரியில்லை என்று அர்த்தம்
நீ இரட்டை வேடதாரி என்று அர்த்தம்
நீ மாய்மாலக்காரன் என்று அர்த்தம்
ஒரே கர்த்தர்
ஒரே புத்தகம்
ஒரே நம்பிக்கை
ஒரே விசுவாசம்
ஒரே ஆவி
ஒரே மனம்
இதுவே நம் கொள்கை
இதுவே நம் இலட்சியம்
இதுவே நம் வாழ்க்கை.
By Bro Durai Dainel
To Get Daily Quotes Contact +917904957814
=======
Quotes
=======
கற்புக்கு
ஒரு சக்தி இருக்கிறது
கற்புள்ள ஒரு பெண்
கண்ணியமாகவே உடுத்துவாள்
அவளைக் கண்டால்
கிளர்ச்சி உண்டாகாது
மனதில் பரிசுத்தம் தோன்றும்
அவளைக் கண்டவுடன்
ஆடவரின் கைகள்
தானாகவே உயர்ந்து
மரியாதை அளிக்கும்
ஏழ்மையில் இருந்தாலும்
அவள் பரிசுத்த மகாராணி
வறுமையில் இருந்தாலும்
அவள் பரலோகத்தின் இளவரசி
கல்வி
செல்வம்
தைரியம்
இவைகளை விட பெரியது
அவளது கற்பு
நற்குணங்களின் மகுடம்
தூய கற்பு
அத்தகைய கற்புக்கரசியை
மணவாட்டியாய் பெற்றவனே
உலகின் பெரும் செல்வந்தன்.
By Bro Durai Dainel
To Get Daily Quotes in what's app Contact +917904957814
=======
Quotes
=======
சோதனை பாவமல்ல
சோதனைக்கு இணங்குவதுதான் பாவம்
குறிப்பாக
பாலியல் சோதனைக்கு
தப்பி ஓடுவதே
பிழைக்கும் வழி
எதிர்த்து நின்றால்
வீழ்வது நிச்சயம்
தவறாக தோன்றும்
சோதனை சூழ்நிலையில்
யெஸ் சொல்வதை விட
நோ சொல்வதே உத்தமம்
தொடர்ச்சியான வெற்றிக்கு
தொடர்ச்சியான ஜெபம் தேவை
சோதனையை ஜெயிக்கிற மனிதன்
தேவனுக்கு பிரியமானவன்
ஜீவ கிரீடத்தையும் பெறுவான்.
By Bro Durai Dainel
To Get Daily Quotes contact +917904957814
=======
Quotes
=======
நேரம்
ஒரு சிறந்த முதலீடு
சிலர்
பணத்துக்காகவும்
சிலர்
புகழுக்காகவும்
சிலர்
சிற்றின்பங்களுக்காகவும்
அதை முதலீடு செய்கிறார்கள்
ஆனால்
உலகிலேயே சிறந்த நேர முதலீடு
கிறிஸ்துவை தேடுவதில்
செலவழிக்கும் நேரங்கள்தாம்.
கிறிஸ்துவுக்காக கொடுக்கப்படும்
நம் நேரம்
செலவல்ல
பெரும் முதலீடு
அதன் உண்மையான பலன்
நியாயத்தீர்ப்பின் நாளன்று தெரியும்.
By Bro Durai Dainel
To Get Daily Quotes Contact +917904957814
=======
Quotes
=======
பாடுகள் இல்லாத
மனிதன் இல்லை
பிரச்சினைகள் இல்லாத
வீடு இல்லை
துன்பங்கள் இல்லாத
தெருக்கள் இல்லை
துயரங்கள் இல்லாத
ஊர்கள் இல்லை
கண்ணீர் இல்லாத
தேசம் இல்லை
கவலை இல்லாத
பூமி இல்லை
பிரச்சினைகளும் பாடுகளும் இல்லாத வாழ்க்கை
ஒரு கோழையையே உருவாக்கும்
துன்பங்கள் துயரங்கள் இல்லாத சூழ்நிலை
ஒரு திறமையற்றவனையே உருவாக்கும்
கொந்தளிக்கிற கடல்தான்
சிறந்த கப்பலை உருவாக்கும்
சதுரமான முட்டையும்
சங்கடமில்லாத வாழ்வும்
சாத்தியமற்றவை.
By Bro Durai Dainel
To Get Daily Quotes Contact +917904957814
=======
Quotes
=======
சீடன்: 'அன்பு'க்கும் 'இச்சை'க்கும் என்ன வித்தியாசம் குருவே?
குரு: இச்சை என்பது சுயநலமானது. அது ஒரு பொருளை அல்லது நபரை அனுபவிக்கும் வரையே நீடிக்கும். ஆசை தீர்ந்தவுடன் அதை அல்லது அந்த நபரை வெறுக்கும் அல்லது ஒதுக்கும்.
அன்பு என்பது பொதுநலம் கொண்டது. அது அப்பொருளை அல்லது நபரை கடைசிவரை எந்த நிபந்தனையுமில்லாமல், எந்த எதிர்பார்ப்புமில்லாமல் நேசிக்கும். இரு இதயங்களும் ஒன்றாகி ஒன்று கண்ணீர் சிந்துமானால் மற்றொன்று தானாகவே அழும். சாகும் வரை கவனித்து கவனித்து மாயும்.
இச்சை தற்காலிகம்
அன்பு நிரந்தரம்
இச்சை குப்பை
அன்பு மாணிக்கம்.
By Bro Durai Dainel
To Get Daily Quotes in what's App Contact +917904957814
=======
Quotes
=======
தேவன்
கன்மலையை
முதல் முறை
அடிக்கச் சொன்னார்
மோசே
தேவன் சொன்னபடியே செய்தார்
விளைவு
சுமார் நாற்பது இலட்சம் மக்களின்
தாகம் தீர்க்குமளவு
தண்ணீர் புறப்பட்டு வந்தது
இரண்டாம் முறை
கன்மலையை பார்த்து
பேச சொன்னார்
மோசே
இம்முறை கீழ்ப்படியாமல்
கன்மலையை அடித்து விட்டார்
காரணம் ஜனங்களின்
நெருக்குதலும் கூக்குரலும் முறுமுறுத்தலும்
இந்த ஒரேயொரு கீழ்ப்படியாமைக்காக
அந்த மாபெரும் தேவ மனிதனை
அந்த மகா பெரிய தீர்க்கதரிசியை
கானானுக்குள்
போகக்கூடாது என்று
தடை விதித்து விட்டார் தேவன்
நாற்பது வருட ஏக்கம்
வெறும் கானல் நீராகிப் போனது மோசேக்கு
அவன் இருதயம்
வெடித்தே போயிருக்கும்
அவன் கண்ணீர் நதியில்
வனாந்தரமே நனைந்திருக்கும்
ஆனாலும் தேவ கட்டளையை
சிரம் தாழ்ந்து ஏற்றுக்கொண்டான்
கன்மலை
ஒரு முறைதான்
அடிக்கப்பட வேண்டும்
இரண்டாம் முறையோ
மூன்றாம் முறையோ
அதோடு பேசத்தான் வேண்டும்
அடிக்கக் கூடாது
கன்மலை
கிறிஸ்துவுக்கு உருவகம்
அவர்
கல்வாரியில் ஒரு முறை
அடிக்கப்பட்டு விட்டார்
நாம் திரும்பவும் அவரை
சிலுவையில் அடிக்கக்கூடாது
அவரோடு பேச மட்டுமே வேண்டும்
இரண்டாம் முறையோ
மூன்றாம் முறையோ
அல்லது பலமுறையோ
அவரை நாம் சிலுவையில் அறைந்துகொண்டே இருந்தால்
பரம கானானுக்குள்
பிரவேசிக்கவே முடியாது.
By Bro Durai Dainel
To Get Daily Quotes in what's App Contact +917904957814
=======
Quotes
=======
பாவமும் ஒரு நோய்தான்
அதாவது
ஆத்துமாவை பற்றி பிடிக்கும்
தொற்று நோய்
எப்படி சரீர வியாதி
சரீரத்தை அழிக்கிறதோ
அப்படியே பாவமும்
ஆத்துமாவை அரிக்கிறது
சரீரத்தில் குஷ்டம் வந்தால்
அலட்சியமாய் இருப்போமா
ஆனால்
ஆத்துமாவில் தோன்றும் குஷ்டமான
இந்த பாவத்தை மட்டும்
நாம் கண்டுகொள்வதில்லை
பெரிதாய் அலட்டிக்கொள்வதுமில்லை
அது நாட்கள் செல்லச் செல்ல
ஆத்துமாவை அரிக்கிறது மெல்ல மெல்ல
கடைசியில்
நோய் முற்றி
ஆத்துமா சாகிறது
அதாவது
பாதாளம் சென்றடைகிறது
சரீர நோய்க்கு
எவ்வளவு முக்கியத்துவம் கொடுக்கிறோமோ
அதைவிட நூறு மடங்கு முக்கியத்துவம்
ஆத்தும நோயான பாவத்துக்கும்
கொடுக்கவேண்டும்
இல்லையெனில்
ஆத்தும அழிவு நிச்சயம்
எச்சரிக்கையாயிருப்போம்.
By Bro Durai Dainel
To Get Daily Quotes Contact +917904957814
=======
Quotes
=======
சிலர் நினைப்பது போல
ஒரு பெரிய கருத்த இருள் நிறைந்த
அழுக்கான மனிதனைப் போல் வரமாட்டான் சாத்தான்
மோசடி வித்தையில்
அவன் மாஸ்டர் டிகிரி வாங்கியவன்
அவன் அழகான ஒரு தேவதையைப் போல வருவான்
அழகு கொழிக்க கொழிக்க
மணம் ததும்ப ததும்ப
மனம் கவரும் விதத்தில் வருவான்
கெட்டவனாக அல்ல
சில சமயங்களில்
நல்லவனைப் போலக் கூட வருவான்
கூர்மையுள்ள ஆவிக்குரிய மூக்கு இருந்தால்தான்
அவன் வாசனையை கண்டுபிடிக்க முடியும்
இல்லாவிட்டால்
அதோ கதிதான்.
By Bro Durai Dainel
To Get Daily Quotes Contact +918148663456
Thanks for using my website. Post your comments on this