==========================
ஸ்டர்கள் இருவர் பேசிக்கொள்கிறார்கள்
=========================
(1️⃣)
ப்ரெய்ஸ் த லார்ட் பாஸ்டர் வின்சென்ட்.
ப்ரெய்ஸ் த லார்ட் பாஸ்டர் டேவிட். கொஞ்சநாளா உங்கள வெளியில அதிகமா பாக்கமுடியறதில்லயே?
வேதத்தோட அதிக நேரம் செலவிடறேன் பாஸ்டர்.
அப்படியென்ன வெளியில வரமுடியாத அளவுக்கு வேத ஆராய்ச்சி பாஸ்டர்?
சபை, ஊழியம், ஊழிய அழைப்பு, உபதேசம் இவைகளபத்தி வேதம் என்னதான் சொல்லுதுன்னு ஆராய்ஞ்சிகிட்டிருக்கேன் பாஸ்டர்.
உங்க ஆராய்ச்சிப்படி என்ன முடிவுக்கு வந்திருக்கீங்க?
நாம செஞ்சிகிட்டிருக்கிறது உண்மையிலேயே ஊழியந்தானாங்கிற சந்தேகம் அதிகமாயிகிட்டிருக்கு பாஸ்டர்.
நாம செய்யற ஊழியம் சரிதானான்னு சந்தேகப்படற அளவுக்கு என்னத்த புதுசா கண்டுபிடிச்சீங்க பாஸ்டர்?
அப்போஸ்தலர் 2:43ல
"எல்லாருக்கும் பயமுண்டாயிற்று. அப்போஸ்தலர்களாலே அநேக அற்புதங்களும் அடையாளங்களும் செய்யப்பட்டது" இன்னு இருக்கு.
இருக்குதுதான்.
அப்போஸ்தலர் 6:8ல "ஸ்தேவான் விசுவாசத்தினாலும் வல்லமையினாலும் நிறைந்தவனாய் ஜனங்களுக்குள்ளே பெரிய அற்புதங்களையும் அடையாளங்களையும் செய்தான்" இன்னு இருக்கு. அப்போஸ்தலர் 8:6,7ல "பிலிப்பு செய்த அதிசயங்களை ஜனங்கள் கேள்விப்பட்டுக் கண்டு, அவனால் சொல்லப்பட்டவைகளை ஒருமனப்பட்டுக் கவனித்தார்கள்.
அநேகரிலிருந்து அசுத்தஆவிகள் மிகுந்த சத்தத்தோடே கூப்பிட்டு அவர்களை விட்டுப் புறப்பட்டது. அநேகந் திமிர்வாதக்காரரும் சப்பாணிகளும் குணமாக்கப்பட்டார்கள்" இன்னு இருக்கு பாஸ்டர்.
அதுவும் இருக்குதுதான், அதுல உங்களுக்கு என்ன பிரச்சன பாஸ்டர்?
ஸ்தேவானும் பிலிப்புவும் யாருங்க?
அப்போஸ்தலர் 6:1-6ல, அவங்க எருசலேம் சபையில பந்திவிசாரனை செய்யற வேலையை கவனிச்ச விசுவாசிகளா இருந்ததா பாக்குறோம் பாஸ்டர்.
அன்னைக்கு பந்திவிசாரணை செய்யற விசுவாசிங்க அப்போஸ்தலருக்கு இணையா அற்பத அடையாளங்கள செஞ்சதுபோல, இன்னைக்கு நம்ம சபையில இருக்குற ஒரு விசுவாசி நமக்கு இணையா அற்புத அடையாளங்கள செஞ்சா, "welldone தொடர்ந்து நல்லா செய்யுங்க" இன்னு நாம விட்டுடுவோமா பாஸ்டர்?
எனக்கு இன்னா கேள்வினா, ஆதிசபை விசுவாசிகள் செஞ்ச அளவுக்காவது இன்னைக்கு ஊழியருங்க அற்புத அடையாளம் செய்யறமாங்கறதுதான் பாஸ்டர்.
அட இன்னைக்கு நாம செய்யற அளவுக்கே விசுவாசிகள் அற்புத அடையாளம் செய்யட்டும் பாஸ்டர். அத நாம அனுமதிப்போமா?
நாம செய்யறது உண்மையிலேயே வேதத்தின்படியான ஊழியம்னா அனுமதிச்சிதான் ஆகனும் பாஸ்டர்.
இன்னிக்கு நம்மல்ல அநேகர் ஏன் நமக்கு இணையா ஜெபம்பண்ணவோ, பேய் ஓட்டவோ, வியாதியஸ்தருக்காய் ஜெபிக்கவோ விசுவாசிகள அனுமதிக்கிறதில்ல?
விசுவாசிங்கள நமக்கு இணையா அற்புதம் செய்ய அனுமதிச்சா, சபையில தேவையில்லாத சில கொழப்பம் வரும்ன்னு பலர் அச்சப்படறோம் பாஸ்டர்.
என்னமாதிரியான கொழப்பம் வரும் பாஸ்டர்?
அற்புதம் செய்யும் விசுவாசிகள சபையார் நமக்கு இணையா பாப்பாங்க, அவங்கக்கிட்டயும் ஜெபிச்சிக்கப்போவாங்க, அற்புதம் செய்யும் விசுவிசிகளும் தங்கள நமக்கு இணையா நெனச்சிக்குவாங்க, அப்பறம் ஊழியத்தப் பங்குபோட்டுக்க வருவாங்க. இல்லனா சபையிலிருந்து சிலர கௌப்பிக்கிட்டு போய் நமக்கு எதுத்தமாதிரியே கொட்டாபோட்டு சபை நடத்துவாங்கங்கிற அச்சம் இருக்கத்தானே செய்யுது பாஸ்டர்.
ஆதிசபை ஊழியருங்க இந்தமாதிரி அச்சப்பட்டு, விசுவாசிகள அற்புதம் செய்யாதபடிக்கு தடுத்ததுண்டா பாஸ்டர்?
தடுத்ததா தெரியில பாஸ்டர்.
இன்னிக்கு நமக்கோ, நம்ம குடும்பத்தாருக்கோ இணையான கிருபை உள்ளவங்கள நம்மாள சகிச்சிக்கமுடியலியே பாஸ்டர்?
உண்மதான் பாஸ்டர், துணிகமகரமான ஆவி, கீழ்ப்படியாமையின் ஆவி, ஔியின் தூதன் ஆவி, அந்திகிறிஸ்துவின் ஆவின்னெல்லாம் அவங்களப்பத்தி கெளப்பிவிட்டு, சபையாரவிட்டு அவங்கள தனிமபடுத்தி, அவங்க கிருபவரங்கள அணச்சிப்போட்டுட்றோம். இல்லனா சபையவிட்டு அவங்களே வெளியேறக்கூடிய அளவுககு மறைமுகமா நெருக்கடிய உண்டாக்குறோம் பாஸ்டர்!
இந்தமாதிரி ஊழியத்தச் செஞ்ச ஒரு ஊழியர ஆதிசபையில பாக்கமுடியுமா பாஸ்டர்?
ஆதிசபை ஊழியர் விசுவாசிகளுக்கு சுதந்திரம் கொடுத்தமாதிரி இன்னிக்கு நாம கொடுத்தோம்னா, சபை நம்ம கன்ட்ரோல்லயும், நம்ம குடும்பதாரோட கன்ட்ரோல்லயும் இருக்காதில்ல பாஸ்டர்?
சபை நம்ம கன்ட்ரோல்லயும், நம்ம குடும்பதாரோட கன்ட்ரோல்லயும் இருக்கிறமாதிரி பாத்துக்கிறதுக்குப் பேருதான் சபை ஊழியமா பாஸ்டர்?
விசுவாசிகள நம்ம கன்ட்ரோல்ல வச்சிகிட்டாதானே சபையை ஒழுங்கும் கிரமமுமா நடத்தமுடியும் பாஸ்டர்?
ஊழியருங்க விசுவாசிகள தங்ளுக்கு இணையா அற்புத அடையாளங்கள செய்யவிட்ட ஆதிசபைகள்ல அப்படியென்ன ஒழுங்கு கெட்டுடிச்சி பாஸ்டர்?
அப்படி ஒன்னும் கெட்டமாதிரி தெரியில பாஸ்டர்.
கிருபைபெற்ற விசுவாசிகளால சபை ஒழுங்கு பாதிக்கப்பட்டிருந்தா, ரோமர் 12:6-8ல பாக்கறபடி, "நமக்கு அருளப்பட்ட கிருபையின் படியே நாம் வெவ்வேறான வரங்களுள்ளவர்களானபடியினாலே, நம்மில் தீர்க்கதரிசனஞ்சொல்லுகிற வரத்தையுடையவன் விசுவாசப்பிரமாணத்துக்கேற்றதாகச் சொல்லக்கடவன். ஊழியஞ்செய்கிறவன் ஊழியத்திலும், போதிக்கிறவன் போதிக்கிறதிலும், புத்திசொல்லுகிறவன் புத்திசொல்லுகிறதிலும் தரித்திருக்கக்கடவன், பகிர்ந்துகொடுக்கிறவன் வஞ்சனையில்லாமல் கொடுக்கக்கடவன், முதலாளியானவன் ஜாக்கிரதையாயிருக்கக்கடவன், இரக்கஞ்செய்கிறவன் உற்சாகத்துடனே செய்யக்கடவன்" இன்னு ரோமாபுரி சபை விசுவாசிகள பவுல் உற்சாகப்படுத்தியிருப்பாரா? 1 கொரிந்தியர் 14:1ல பாக்கறபடி, "அன்பை நாடுங்கள். ஞானவரங்களையும் விரும்புங்கள். விஷேசமாய்த் தீர்க்கதரிசனவரத்தை விரும்புங்கள்" இன்னும்; 14:12ல பாக்கறபடி,
"நீங்களும் ஆவிக்குரிய வரங்களை நாடுகிறவர்களானபடியால், சபைக்குப் பக்திவிருத்தி உண்டாகத்தக்கதாக அவைகளில் தேறும்படி நாடுங்கள்" இன்னும்; 14:31ல பாக்கறபடி, "எல்லாரும் கற்கிறதற்கும் எல்லாரும் தேறுகிறதற்கும், நீங்கள் அனைவரும் ஒவ்வொருவராகத் தீர்க்கதரிசனஞ்சொல்லலாம்" இன்னும் கொரிந்நு சபையாருக்கு அவர் வழிகாட்டியிருப்பாரா?
1 பேதுரு 4:10,11லகூட, "அவனவன் பெற்ற வரத்தின்படியே நீங்கள் தேவனுடைய பற்பல கிருபையுள்ள ஈவுகளைப் பகிர்ந்துகொடுக்கும் நல்ல உக்கிராணக்காரர்போல, ஒருவருக்கொருவர் உதவிசெய்யுங்கள். ஒருவன் போதித்தால் தேவனுடைய வாக்கியங்களின்படி போதிக்கக்கடவன். ஒருவன் உதவிசெய்தால் தேவன் தந்தருளும் பெலத்தின்படி செய்யக்கடவன். எல்லாவற்றிலேயும் இயேசுகிறிஸ்துமூலமாய்த் தேவன் மகிமைப்படும்படியே செய்வீர்களாக" இன்னு பேதுருவும் விசுவாசிகள உற்சாகப்படுத்தியிருக்காரு பாஸ்டர்!
இத்தன தெரிஞ்சிம் ஏன் நாம அப்படி செய்யறதில்ல பாஸ்டர்?
சில ஊழியருக்கு உண்மையிலேயே இதெல்லாம் தெரியாது பாஸ்டர். தெரிந்த சிலர் விசுவாசிகள அவங்க கிருபை வரங்களின்படி செயல்பட விட்டதால சபையில பல கொழப்பங்கள சந்திச்சிருக்காங்க பாஸ்டர்.
இயேசுகிறிஸ்துமூலமாய்த் தேவன் மகிமைப்படும்படி தங்கள் வரங்களப் பயன்படுத்த என்னிக்காவது நாம பேதுருவப்போல விசுவாசிகளுக்கு போதிச்சிருக்கறமா பாஸ்டர்?
வரங்களப்பத்தியே விசுவாசிகளுக்கு போதிக்காத நாம, வரங்கள பயன்படுத்தரதப்பத்தி எப்படி போதிப்போம் பாஸ்டர்?
ரோமர் 8:6-8ல சொல்லப்பட்டிருக்கிற கிருபையின் வரங்களைப்பத்தியும், 1கொரிந்தியர் 12:8-10ல சொல்லப்பட்டிருக்கிற ஆவியின் வரங்களப்பத்தியும் இதுவரைக்கும் முழுசா விசுவாசிகளுக்கு போதிச்சி, அவைகளப் பெற்று, சபைக்கு உள்ளேயும் வெளியேயும் தேவனுக்கு மகிமையா பயன்படுத்தும்படி நாம அவங்கள உற்சாகப்படுத்தியிருக்கிறமா பாஸ்டர்?
நமக்கே முழுசா தெரியாத விஷயங்கள நாம் எப்படி விசுவாசிங்களுக்கு போதிக்கமுயும்? நாம செய்யாதக் காரியங்களையெல்லாம் செய்யும்படி அவங்கள நாம எப்படி உற்சாகப்படுத்தமுடியும் பாஸ்டர்?
வரங்களபத்தி தெரிஞ்சவங்களும், சில வரங்களைப் பெற்ற ஊழியருங்கக்கூட,
"வரங்களால சபையில கொழப்பம் உண்டாகுங்கிங்கறதினாலேயே வரங்களப்பத்தி நாங்க போதிக்கிறதில்ல" இன்னு சொல்றாங்களே பாஸ்டர்?
அவங்க சொல்றதிலயும் உண்மை இருக்கத்தானே செய்யுது பாஸ்டர்.
அப்போஸ்தலருக்கு இணையா அற்புத அடையாளம் செஞ்ச ஸ்தேவானாலும் பிலிப்புவாலும் எருசலேம் சபையில ஏதாவது கொழப்பம் உண்டாச்சா பாஸ்டர்?
உண்டானமாதிரி தெரியலியே பாஸ்டர்.
ஏன் அவங்களால சபையில கொழப்பம் உண்டாகல தெரியுமா?
வேத ஆராய்ச்சியாளர் நீங்களே அத சொல்லிடுங்க.
அப்போஸ்தலர் 6:3, அவங்க பரிசுத்தஆவியும் ஞானமும் நிறைந்து, நற்சாட்சி பெற்றவங்களா இருந்ததா சொல்லுது பாஸ்டர்.
அப்படிப்பட்டவங்களால சபையில கொழப்பம் வராதா பாஸ்டர்?
அப்படிப்பட்டவங்க ஊழியருக்கு மேலாக தங்கள உயர்த்தமாட்டாங்க, எதிராகவும் செயல்படமாட்டாங்க, தங்கள மறச்சி தங்கள் வரங்கள தேவமகிமைக்காக மட்டுமே பயன்படுத்துவாங்க, அவங்களுக்கு ஊழிய அழைப்பு உண்டானாலும் ஊழியக்காரரின் ஆலோசனையோடும் ஆசீர்வாதத்தோடும் புறப்பட்டுப்போவாங்க. அவங்களால
சபையில எந்தக் கொழப்பமும் வராது பாஸ்டர்.
அப்படியா பாஸ்டர்?
பரிசுத்தஆவியும் ஞானமும் நிறைந்து, நற்சாட்சி பெற்ற விசுவாசிகளுக்கா நாம இன்னிக்கு சபையில பொறுப்பு கொடுக்கிறோம்?
பரிசுத்தஆவி பெற்ற பலருக்கு
ஞானமும் நற்சாட்சியும் இல்ல, பரிசுத்தஆவியும் ஞானமும் உள்ள பலருக்கு நற்சாட்சியில்ல, பரிசுத்தஆவியும் நற்சாட்சியும் உள்ள பலருக்கு ஞானமில்ல. இவங்களவச்சி என்னபண்றது பாஸ்டர்?
இவங்கள வச்சி ஒன்னும் பண்ணவேண்டியதில்ல பாஸ்டர். பரிசுத்தஆவியும் ஞானமும் நிறைந்து, நற்சாட்சி பெற்றவங்கள மட்டும் சபையில, ஊழியத்துல செயல்பட அனுமதிச்சா போதும்! நம்ம மனைவி, நம்ம பிள்ளைங்க, அண்ணன் தம்பி, மாமன் மச்சான், மறுமகன் மறுமகள், சொந்தக்காரன், ஊர்க்காரன், ஜாதிக்காரன், சபையில பணக்காரன், ரொம்ப படிச்சவன், தசமபாகம் தவறாம கொடுக்கிறவன்னு மட்டும் பாத்து, பரிசுத்தஆவியை பெற்றிருந்தும் ஞானமும் நற்சாட்சியும் இல்லாதவங்ககளுக்கு சபையில பொறுப்புக் கொடுக்கிறதுதான் எல்லா கொழப்பங்களுக்கும் காரணம் பாஸ்டர்.
பரிசுத்தஆவியும் ஞானமும் நற்சாட்சியும் இல்லாதவங்களுக்கு பொறுப்பு கொடுக்கிறதுதான் சபையில கொழப்பம் உண்டாகக் காரணங்கறது புரியுது பாஸ்டர்?
ஆனா, பரிசுத்தஆவியும் ஞானமும் நற்சாட்சியும் உள்ள விசுவாசிகளுக்கு நாம எங்கபோறது?
நாம நடத்தற சபையில இந்தமாதிரி ஆட்களே இல்லனா என்ன அர்த்தம் பாஸ்டர்?
என்ன அர்த்தம்?
நமக்கே அந்தத் தகுதி இல்லன்னுதானே அர்த்தம் பாஸ்டர்? சட்டியில இருந்தாத்தானே அகப்பையில வரும்? நம்மகிட்ட இல்லாத கேரக்ட்டர் விசுவாசிங்ககிட்ட எப்படியிருக்கும் பாஸ்டர்?
நீங்க கேக்கறதும் நியாயமாத்தான் இருக்கு பாஸ்டர். நம்மள்ல பலபேரோட நெலமயும் அதுதானே?
நாமளும் தேறற்தில்ல, நாம நடத்தற மக்களயும் தேறவிடறதில்ல! இதுக்குப்பேருதான் ஊழியமா பாஸ்டர்? கொலோசெயர் 1:28,29ல, "எந்த மனுஷனையும் கிறிஸ்து இயேசுவுக்குள் தேறினவனாக நிறத்தும்படிக்கு, அவரையே நாங்கள் அறிவித்து, எந்த மனுஷனுக்கும் புத்திசொல்லி, எந்த மனுஷனுக்கும் எல்லா ஞானத்தோடும் உபதேசம்பண்ணுகிறோம். அதற்காக நான் எனக்குள்ளே வல்லமையாய்க் கிரியை நடப்பிக்கிற அவருடைய பலத்தின்படி போராடிப் பிரயாசப்படுகிறேன்" இன்னு பவுல் சொல்றமாதிரி, நம்மால உண்மையா சொல்முடியுமா பாஸ்டர்?
சொல்லமுடியாதுன்னாலும் சொல்லிகிட்டுத்தானே இருக்கிறோம் பாஸ்டர்.
எபிரேயர் 5:12ல,
"காலத்தைப் பார்த்தால், போதகராயிருக்கவேண்டிய உங்களுக்கு தேவனுடைய வாக்கியங்களின் மூல உபதேசங்களை மறுபடியும் உபதேசிக்கவேண்டியதாயிருக்கிறது; நீங்கள் பலமான ஆகாரத்தையல்ல, பாலை உண்ணத்தக்கவர்களானீர்கள்" இன்னு ஒரு ஊழியக்காரர், ஆவிக்குரிய முதிர்ச்சியில்லாத விசுவாசிகளைப்பத்தி வேதனப்பட்றமாதிரி, எப்போவாவது நாம வேதனப்பட்டிருக்கிறோமா?
நாமதான் விசுவாசிகள் எப்பவும் கொழந்தைகளாவே இருக்கனும், நாம அவங்களுக்கு பால ஊட்டிக்கிட்டே இருக்கனும்ன்னு விரும்பறமே!
வேதத்தின்படியான ஊழியத்த
நாம இன்னும் முழுசா அறியாததுதான்
இதுக்கு காரணம்ன்னு
எடுத்துக்கலாமா பாஸ்டர்?
வேதத்த கரைச்சிக்குடிச்சிட்டதா, ஊழியத்தில ரொம்ப தேறிட்டதா சொல்லிக்கிற ஊழியருங்கக்கூட விசுவாசிகள, எப்போ பணம் கேட்டாலும் கொடுக்கிற ATM மெஷினுங்களாவும், என்ன சொன்னாலும் சரியா தவறான்னுக்கூட யோசிச்சிப்பாக்காம அப்படியே தலைய ஆட்ற அடிமைகளாகவும், எதை போதித்தாலும் அப்படியே சரியின்று ஏத்துக்கிற கொழந்தைகளாகவும் தானே வச்சிருக்காங்க! அந்நியபாஷையில மட்டும் பேச உற்சாகப்படுத்தறாங்க. அதனால நமக்கு எந்த பாதிப்பும் இல்லன்னு! மத்த வரங்களப்பத்தி இவங்க வாய தொறக்கறதே இல்லயே!
இதுக்கு காரணம் என்னன்னு நெனைக்கிறீங்க பாஸ்டர்?
உண்மைய சொல்லனும்னா விசுவாசிங்க சிந்திக்கவும், வசனத்தின்படி செயல்படவும் ஆரம்பிச்சிட்டா, ஊழியம், சபை நம்ம குடும்பத்தவிட்டு, வேற கைக்கு போய்டுங்கிற பயத்தவிட வேற பெரியக் காரணம் ஒன்னும் இல்ல பாஸ்டர்.
நம்மகிட்டயும், நமக்கு பிறகு நம்ம குடும்பத்துக்கிட்டயும் சபை இருக்கனுங்கறதுக்காக, விசுவாசிங்க நமக்கும் நம்ம குடும்பத்தாரும் இணையாகவோ, மிஞ்சியோ வளந்துராதபடி பாத்துக்கறதுக்குப் பேரு சபை நடத்தறதா? இல்ல நம்ம குடும்ப நிறுவனத்த நடத்தறதா பாஸ்டர்?
கஷ்டப்பட்டு, கண்ணீர்விட்டு, பட்டினிகெடந்து, மொழங்கால தேச்சி, அடிஒதப்பட்டு, நாம வளத்த ஊழியத்த நம்ம குடும்பத்தாருகிட்ட குடுக்காம, யாரோ ஒருத்தங்கிட்ட குடுக்கனுமா பாஸ்டர்?
நம்ம ஜெபத்தினாலும் உழைப்பினாலும் பாடுகளாலும் மட்டுமா ஊழியம் வளந்தது? விசுவாசிகளோட ஜெபம், பணம், பிரயாசங்கள், பாடுகள் அதில இல்லையா? எல்லாத்துக்கும் மேல தேவனுடைய கிருபையும், ஆவியானவருடைய ஒத்தாசையும் தானே நம்ம ஊழியம் வளரக் காரணம்?
நியாயமா பாத்தா நமக்கும் நம்ம குடும்பத்துக்கும் சபையில, ஊழியத்துல இருக்கிற அதே உரிம விசுவாசிகளுக்கும் இருக்குது பாஸ்டர்.
ஒரு வீட்டக் கட்றதுக்கு கூலிக்கு வேலசெஞ்ச இஞ்சினியர், மேஸ்திரி, கொத்தனாருங்க, தாங்க கட்டனதால அந்த வீடு தங்களுக்குத்தான் சொந்தம்ன்னு உரிமை கொண்டாடமுடியுமா?
எப்படி முடியும் பாஸ்டர்? செஞ்ச வேலைக்குத்தான் அவங்க கூலிய வாங்கிகிட்டாங்களே? வேலக்காரன் எப்படி ஓனராகமுடியும்?
தேவனுடைய பண்ணையிலயும் மாளிகையிலயும் நாம் செய்யற வேலைக்கு தேவனிடத்துல கூலிய வாங்கிகிட்டுவர நாம, அவருடைய பண்ணையும் மாளிகையும் நமக்கும் நம்ம குடும்பத்தாருக்கு மட்டும்தான் சொந்தங்கறது எந்தவிதத்துல நியாயம் பாஸ்டர்?
நமக்கே சொந்தமில்லாதத இன்னொருத்தனுக்கு விட்டுக்கொடுக்கமாட்டோம்ன்னு சொல்றதுல லாஜிக்கே இல்ல பாஸ்டர்!
நம்ம உணவு, உடை, உறைவிடம், வாகனவசதி, மருத்துவம், இடம், சபைகூடும் கட்டிடம், பிள்ளைங்க படிப்பு, திருமணம் இவைகளுக்காக தேவனிடத்தில் ஒரு ரூபாக்கூட வாங்காம, தேவக்கிருப, பரிசுத்த ஆவியானவரின் பலம், வல்லமை வரங்கள் இல்லாம, நம்ம சொந்தத் திறமையாலயும், பரம்பர சொத்த வித்தும் நாம ஊழியஞ்செஞ்சி ஆத்துமாக்கள ஆதாயம்பண்ணி, ஆஸ்திகள வாங்கியிருந்தோம்னா, ஊழியம், சபை, ஸ்தாபனம் நமக்கும் நம்ம குடும்பத்துக்கும் மட்டுமே சொந்தம்ன்னு உரிமபாராட்டலாம். தேவகிருபையாலும், சபைக்கு உள்ளேயும் வெளியேயும் இருக்கிற அநேக மக்களின் ஜெபங்களினாலும், தியாகமான காணிக்கைகளினாலும், சரீரப் பிரயாசங்களாலும் வளந்த ஊழியத்த, நம்மால மட்டுமே வளந்ததா சொல்லி, சபையை, ஸ்தாபனத்தை நம்ம குடும்பத்துக்கு மட்டுமே சொந்தமானதுன்னு சொல்ல நமக்கு கொஞ்சங்கூட கூச்சமே இல்லையே பாஸ்டர்?
நம்மலவிட பலமடங்கு உண்மையா, தியாகமா, பாடுபட்டு ஊழியஞ்செஞ்ச ஆதிசபை ஊழியருல ஒருத்தருக்கூட தேவனுடைய சபையை தனது குடும்பச் சொத்தா நெனச்சதில்லயே பாஸ்டர்.
ஆதிசபை ஊழியருங்க செஞ்சதுதான் சரியான ஊழியம்னா, நாம செய்யறது நிச்சயம் சரியான ஊழியமா இருக்க வாய்பில்லைதானே பாஸ்டர்?
ஆதிசபை ஊழியருங்க செஞ்சதுதான் சரியான ஊழியம்னா, நாம செய்யறது நிச்சயம் அட்டூழியமாத்தான் இருக்கனும் பாஸ்டர்!
அதனாலதான் நாம செய்யறது உண்மையாகவே ஊழியந்தானாங்கிற சந்தேகம் எனக்கு வலுக்குது பாஸ்டர்.
நாம ரொம்ப வேதத்த அறிஞ்சிருக்கிறோம், ரொம்ப பர்பெக்டா இருக்கிறோம், தங்கள அப்படியே சத்தியத்தின்படி நடத்தறோம்ன்னு விசுவாசிங்க நெனச்சிக்கிட்டிருக்கிற வரைக்கும் நமக்கு பிரச்சனையில்ல, அவங்க முழிச்சிக்கிட்டா நம்ம நெலம கஷ்டம் பாஸ்டர்!
அவங்க முழிக்கிறதுக்கு முன்ன நாம முழிச்சிகிட்டு, ஆதிசபை ஊழியருங்களப் போல அனைவரையும் அரவனைக்கும், உருவாக்கும் ஊழியத்த செய்யறது நல்லது இல்லயா பாஸ்டர்?
அப்படி ஊழியஞ்செய்யற சில உத்தம ஊழியருங்க இருக்கத்தான் செய்யறாங்க பாஸ்டர்.
ஆமாம் பாஸ்டர், அவங்க வரிசயில நாமளும் இருக்கனும்ன்னு ஆசப்படறேன்!
ஏனோதானோன்னு போய்கிட்டு, இதுதான் ஊழியம்ன்னு நெனச்சிகிட்டிருந்த என்னையும், சரியா சிந்திக்க தூண்டிவிட்டுடீங்களே பாஸ்டர்!
இன்னும் நெறையா இருக்கு, அடுத்தமுற அதப்பத்திப் பேசுவோம் பாஸ்டர்.
நானும் ஊழியத்தப்பத்தி இன்னும் ஆழமா ஆராயப்போரேன் பாஸ்டர்.
கர்த்தர் நிச்சயம் உங்களுக்கு அநேக சத்தியங்கள சரியா சொல்லிகொடுப்பார் பாஸ்டர்!
நல்லது, சந்திப்போம் பாஸ்டர் டேவிட். ப்ரெய்ஸ் த லார்ட்!
- ஊழியர்களின் சிந்தனைக்கு.....
க. காட்சன் வின்சென்ட்
8946050920
=========================
பாஸ்டர் டேவிட் & வின்சென்ட்
==========================
(2️⃣)
ப்ரெய்ஸ் த லார்ட் பாஸ்டர் வின்சென்ட்!
ப்ரெய்ஸ் த லார்ட் பாஸ்டர் டேவிட்!
உங்க வேத ஆராய்ச்சி எப்படி போய்கிட்டிருக்கு?
ஆச்சரியமான சில காரியங்களை அறியமுடிஞ்சது பாஸ்டர்!
எங்க, அதுல ஒன்ன சொல்லுங்க பாப்போம்.
அப்போஸ்தலர் 6: 9,10-ல லிபர்த்தீனர் என்னப்பட்டவர்களின் ஆலயத்தைச் சேர்ந்தவர்களிலும், சிரேனே பட்டணத்தாரிலும், அலெக்சந்திரியா பட்டணத்தாரிலும், சிலிசியா நாட்டாரிலும், ஆசியா தேசத்தாரிலும் சிலர் எழும்பி, ஸ்தேவானுடனே தர்க்கம்பண்ணினார்கள். அவன் பேசின ஞானத்தையும் ஆவியையும் எதிர்த்துநிற்க அவர்களால் கூடாமற்போயிற்றுன்னு இருக்கு பாஸ்டர்.
துல உங்களுக்கு இன்னா ஆச்சரியம்?
பந்திவிசாரணை செய்யற ஒரு விசுவாசி ஒருவரும் எதிர்த்துநிற்க முடியாத அளவுக்கு ஞானமா பேசியிருக்கிறது ஆச்சரியம் இல்லையா?
ஆதிசபையில இதெல்லாம் சர்வ சாதாரணம் பாஸ்டர். ரோமாபுரி சபையார் சகல அறிவினாலும் நிரப்பப்பட்டவர்களாகவும், ஒருவருக்கொருவர் புத்திசொல்ல வல்லவர்களாகவும் இருந்ததா ரோமர் 15:14-ல பாக்கலாமே!
நம்ம சபை விசுவாசிங்களுக்கு சபைக்கு வெளியில இருக்கிறவங்களுக்கும் சரியா சுவிசேஷம் சொல்லவரமாட்டேங்குது. சபைக்கு உள்ள இருக்கிறவங்களுக்கும் சரியா புத்திசொல்ல தெரியமாட்டேங்குதே?
"நூலப்போல சேல, தாயப்போல புள்ள" இன்றது நம்ம ஊரு பழமொழி பாஸ்டர். நம்ம தரம் என்னவோ அந்தத் தரந்தானே விசுவாசிங்கக்கிட்ட வெளிப்படும்?
அப்போ, ஒரு சபை விசுவாசிகள வச்சி அந்த சபை ஊழியக்காரரோட தரத்த கண்டுபுடிச்சிடலாம்ன்னு சொல்றீங்களா?
உன் நண்பன காட்டு, நீ யாருன்னு உனக்கு காட்டறேன்னு ஒரு பொன்மொழி உண்டு. நாம எப்பேர்பட்ட தெறமசாலிங்க, கிருப பெற்றவங்க, வேத அறிவுள்ளவங்கங்கிறத, நாம நடத்தற ஜனங்கள வச்சே மத்தவங்களால கண்டுபுடிச்சிடமுடியும் பாஸ்டர்.
அப்போ ஆதிசபை ஊழியருங்க ரொம்ப தரமானவங்களா இருந்திருக்காங்கன்னு புரியுது இல்லிங்களா?
சரியா பாய்ன்ட்ட புடிச்சிட்டங்க பாஸ்டர்!
விசுவாசி ஸ்தேவான் செஞ்சதா
அப்போஸ்தலர் ஏழாம் அதிகாரத்துல காணப்படற பிரசங்கம்தான் புதிய ஏற்பாட்டுல மனுஷர் செய்த பிரசங்கங்கள்ல நீளமானதா இருக்குது பாஸ்டர்! ஒரு விசுவாசி இவ்வளவு பெரிய பிரசங்கத்தப் பண்றது சாத்தியமா?
ஸ்தேவானப் போலவே எருசலேம் சபையில பந்திவிசாரிப்புக்காரனா இருந்த விசுவாசி பிலிப்புவும் சமாரியாவுக்குப் போய், தேவனுடைய ராஜ்யத்துக்கும் இயேசுகிறிஸ்துவினுடைய நாமத்துக்கும் ஏத்தவைகளக்குறிச்சி பிரசங்கிச்சதபத்தி அப்போஸ்தலர் 8:5,6,12ல சொல்லப்பட்டிருக்கிறத கவனிச்சீங்களா பாஸ்டர்?
கவனிச்சேன், இதெல்லாம் நம்பரமாதிரியே இல்லிங்களே பாஸ்டர்!
அப்போஸ்தலர் 2:43ல அப்போஸ்தலர் செய்ததாகச் சொல்லப்படுகிற அற்புத அடையாளங்களுக்கு சமமான அற்புத அடையாளங்கள, விசுவாசிளான ஸ்தாவானும் பிலிப்புவும் செஞ்சதா அப்போஸ்தலர் 6:8ம்; 8:6,7,13ம் சொல்லுது பாஸ்டர். அப்போஸ்தலருக்கு இணையா அற்புத அடையாளங்கள செய்யற விசுவாசிகளால, அவங்களுக்கு இணையா பிரசங்கம்பண்ணமுடியாதா என்ன?
விசுவாசிகள தங்களுக்கு இணையா அற்புத அடையாளங்கள செய்ய அனுமதிச்சி, தங்களுக்கு இணையா பிரசங்கமும் செய்ய பழக்குவிச்சிருக்காங்கனா, ஆதி அப்போஸ்தலருங்க மனுஷங்களே இல்ல பாஸ்டர்!
நீங்க சொல்றது சரிதான். அவங்க மனுஷங்களே இல்ல, தேவமனுஷங்க பாஸ்டர்!
அப்போ நாம தேவமனுஷங்களா இருக்க வாய்ப்பே இல்லங்கிறீங்களா?
நீங்க ஏன் தீடீர்ன்னு ஏன் அந்த முடிவுக்கு வந்துட்டீங்க பாஸ்டர்?
நமக்கு இணையா விசுவாசிங்க அற்புத அடையாளங்கள செய்யவும் விடறதில்ல, நமக்கு சமமா பிரசங்கம்பண்ண அவங்களப் பழக்குவிக்கறதும் இல்ல. பிறகு நாம எப்படி ஆதி அப்போஸ்தலருங்களப் போல தேவமனுஷங்களா இருக்கமுடியும் பாஸ்டர்?
நீங்கக் கேக்கறதும் நியாயந்தான் பாஸ்டர். வருஷத்துல ஒருமுற 7 வார்த்தைகள பிரிச்சிகொடுத்து,
குட் ப்ரைடே அன்னைக்கு மட்டும் 7 விசுவாசிகள, ஆளுக்கு பத்துநிமிஷம் பேசவைக்கிறதையே பெரிய சாதனையா நெனச்சி பெருமிதம் கொள்ளும் அரியவகை மனுஷரல்வா நாம!
அந்த பத்துநிமிஷத்துல என்ன பேசனும்னு விசுவாசிங்களுக்கு நாமதனே எழுதிகுடுக்கிறோம்! இல்லாட்டி வேறு யாருகிட்டயாவது எழுதி வாங்கி, அத மனப்பாடம்பண்ணி, 7 நிமிஷத்திலேயே ஒப்பிச்சிட்டு, ஓடி ஒக்காந்துகிற அளவுக்கு தெறமசாலிகளா அல்லவா இருக்காங்க நம்ம விசுவாசிங்க!
கர்த்தருடைய மார்க்கத்தில உபதேசிக்கப்பட்டு, ஆவியில அனலுள்ளவனா கர்த்தருக்கு அடுத்தவைகளத் திட்டமாப் போதகம்பண்ணிக்கிட்டுவந்த பழைய ஏற்பாட்டு பண்டிதன் அப்பொல்லோவுக்கே, விசுவாசிகளான ஆக்கில்லா பிரிஸ்கில்லாள் தம்பதிங்க
தேவனுடைய மார்க்கத்த அதிக திட்டமா விவரிச்சிக்காண்பிச்சிருக்கிறத
அப்போஸ்தலர் 18:24-26ல பாத்தீங்களா?
பாத்து அசந்துட்டேன் பாஸ்டர்!
ஆக்கில்லா பிரிஸ்கில்லாள் தம்பதி யாருக்கூட இருந்தாங்க பாஸ்டர்?
பவுலுக்கூட இருந்தாங்க.
பவுலுக்கூட இருந்தவங்க இதக்கூட செய்யலனா எப்படி?
நம்மக்கூட இருக்கிறவங்களுக்கு நமக்கு தெரிஞ்சதெல்லாம் தெரியுமா பாஸ்டர்?
சொல்லிக் கொடுத்தா தெரிப்போகுது. பிரயோஜனமானவைகளிலும்,
தேவனுடைய ஆலோசனையிலும் ஒன்னையும் மறைச்சிவைக்காம, எல்லாத்தையும் தன்னோடு இருக்கிறவங்களுக்கு அறிவிக்கிற பழக்கம் உள்ளவரா பவுல் இருந்ததா அப்போஸ்தலர் 20: 20,26ல பாக்கலாம் பாஸ்டர். அப்படிப்பட்டவருக்கூட இருந்த விசுவாசத் தம்பதிகளான ஆக்கில்லா பிரிஸ்கில்லாள் அவருக்கு இணையான வேதஅறிவு உள்ளவங்களா இருந்தது ஆச்சரியப்படக்கூடிய ஒரு விஷயமே இல்லயே!
ஆதிசபை ஊழியருங்களப்போல சபையார நமக்கு இணையா கிரியை செய்யறவங்களாவும், போதிக்கிறவங்களாவும் வழிநடத்தவேண்டியது நம்ம கடமத்தானே பாஸ்டர்?
அத செய்யறதுக்குத்தானே நம்மல தம்மோட வேலக்காரரா அழச்சி, தேவன் கூலியும் கொடுத்துகிட்டு வர்றாரு. தேவனுடைய கையில கூலிய வாங்கற நாம மனச்சாட்சிபடி சரியா வேலசெய்யவேண்டாமா?
விசுவாசிகள நமக்கு இணயான வேதஅறிவுள்ளவங்களா மாத்த என்னசெய்யலாம் பாஸ்டர்?
2 கொரிந்தியர் 8: 7ல, நம்ம போதிப்புலதான் விசுவாசிங்க அறிவுல வளரமுடியுங்கிற ஒரு இரகசியத்த பவுல் சொல்லியிருக்காரு பாஸ்டர்.
விசுவாசிங்களுக்கு சத்தியத்தை சரியா போதிக்க நாம என்னசெய்யனும் பாஸ்டர்?
"நான் வருமளவும் வாசிக்கிறதிலும் புத்திசொல்லுகிறதிலும் உபதேசிக்கிறதிலும் ஜாக்கிரதையாயிரு" இன்னு
1 தீமோத்தேயு 4:13ல பவுல் தீமோத்தேயுவுக்கு சொல்ற ஆலோசனதான் நமக்கும் பாஸ்டர்.
புத்திசொல்றதிலயும் உபதேசிக்கிறதிலயும் நாம ஜாக்கிரதயாயிருக்கனும்னா, வாசிக்கிறதுல நாம ஜாக்கிரதயா இருக்கவேண்டியது அவசியம் பாஸ்டர்.
நாமதான், "யாரு பேசற செய்தியயும் கேட்கமாட்டோம், யாரு எழுதன புத்தகத்தையும் வாசிக்கமாட்டோம்" இங்கற கொள்கையில உறுதியா இருக்கிறோமே பாஸ்டர்?
யாரு எழுதன புத்தகத்தையும் வாசிக்காவிட்டாலும், பைபிள ஒழுங்கா வாசிச்சாலே போதும் பாஸ்டர். நாம வாசிக்கிற வேதப்பகுதிகளப் புரிஞ்சிக்க சில வௌக்கவுரைகளையும், வார்த்தைகளப் புரிஞ்சிக்க சில வேத அகராதிகளையும் பயன்படுத்திக்கிறது நல்லது. வேதஅறிவ பெருகப்பண்ணக்கூடிய நல்ல ஆவிக்குரிய புத்தகங்கள வாசிக்கிறதும் தப்பில்ல.
"எங்களுக்கு எந்த வௌக்கவுரையோ, வேத அகராதியோ, ஆவிக்குரிய புத்தகமோ அவசியம் இல்ல, ஒரு வேதப்பகுதிய படிச்சிட்டுபோய் நின்னா போதும், ஆவியானவரே எங்களுக்குள்ள இருந்து பேசுவார்" இன்னு சில ஊழியருங்க சொல்றாங்களே பாஸ்டர்?
வாழ்க்க முழுசும் ஒன்னாங்கிளாஸூக்கே பாடம் எடுக்கிற வாத்தியாருக்கு ரண்டாங்கிளாஸ் புக்கு தேவப்படாதில்ல பாஸ்டர்.
விசுவாசிகள எல்.கே.ஜி, யு.கே.ஜி ஸ்டூடண்ட்டாவே வச்சிருக்க ஆசப்படற ஊழியருங்களுக்கு எந்த வேத ஆராய்ச்சி புத்தகங்களும் அவசியமில்ல பாஸ்டர்.
ஆவியானவரே எங்களுக்குள்ள இருந்து பேசறார்ன்னு சொல்ற சிலர் பண்றப் பிரசங்கத்தக் கேட்டா, ஆவியானவருக்கும் அவங்கப் பிரசங்கத்துக்கும் சம்பந்தமே இல்லன்னு தெரியுது பாஸ்டர். செய்தியில உப்புசப்பு ஒன்னுமில்ல!
ஆவியானவரே பேசுவாருன்னு சொல்லிக்கிற பலரு பைபிள ஒழுங்கா படிக்கிறதில்ல பாஸ்டர். கடைமைக்கு ஒரு வேதப்பகுதிய படிச்சிட்டு, அது என்ன சொல்லுதுன்னுக்கூட நிதானிக்காம, ஆவியானவர் பேசுவாருன்னு கௌம்பிடறாங்க. அவங்க எடுக்கிற வசனத்துக்கும் கொடுக்கிற வௌக்கத்துக்கும் சம்பந்தமே இருக்கிறதில்ல! சத்திய ஆவியானவர் இப்படியா பேசுவார்?
யூதருக்கும் புறஜாதியாருக்கும் சாட்சியாக தமது நிமித்தம் அதிபதிகளுக்கும் ராஜாக்களுக்கும் முன்பாக கொண்டுபோய் விசாரிக்கப்பட ஒப்புக்கொடுக்கப்படும்போது: எப்படிப் போசுவோம்ன்னு சீஷர்கள் கவலைப்படவேண்டியதில்லன்னும், அவங்க பேசவேண்டுவது அந்நேரத்துல அவங்களுக்கு அருளப்படும்ன்னும், அவர்களல்ல, பிதாவின் ஆவியானவரே அவங்கள்லருந்து பேசுவார்ன்னும் ஆண்டவர் வாக்குப்பண்ணியிருக்க: எந்தப் பிரச்சனையும் இல்லாம பாதுகாப்பா இருந்தும், நல்லா ஜெபிக்கவும் வேதத்த தியானிக்கவும் நேரம் இருந்தும், நல்ல விளக்கவுரைகளையும், வேத அகராதிகளையும் படிக்க வாய்ப்பிருந்தும், எந்த ரிஸ்க்கும் எடுக்காமப் போய் பிரசங்கப் பீடத்துல நிக்கறவங்கள்ல இருந்து ஆவியானவர் எப்படி பேசமுடியும் பாஸ்டர்?
நாம இப்படியிருந்தா? நம்மலால நடத்தப்படற விசுவாசிங்க எப்படி இருப்பாங்க பாஸ்டர்?
நம்மல மாதிரிதான் நோவாம நோம்பி கும்பிடனும்ன்னு ஆசப்படுவாங்க!
இதுவரைக்கும் எப்படியோ ஊழியஞ்செஞ்சிட்டோம் பாஸ்டர், இனி நாம சரியா தயாராகி, விசுவாசிகளயும் நமக்கு இணையா ஊழியஞ்செய்ய தயார்படுத்தினாதான் தேவனுடைய ராஜ்யத்தின் வேலைய விஸ்தாரமா செய்யமுடியும்!
நான் என்ன நெனைக்கிறேனோ, அதத்தான் நீங்களும் நெனைக்கிறீங்க பாஸ்டர் டேவிட்.
விசுவாசிகளின் ஊழியத்தக்குறிச்ச தரிசனமில்லாதிருக்கிற ஊழியர்கள் நம்மலமாதிரியே தங்கள திருத்திகிட்டு, விசுவாசிகளை ஊழியத்துக்கு உருவாக்கும் பணியை சிறப்பாய் செய்ய ஜெபிப்போம் பாஸ்டர் வின்சென்ட்!
நிச்சயமா, கர்த்தர் கிரியை செய்வார் பாஸ்டர், அடுத்தமுற இன்னும் சில காரியங்கள பேசுவோம்!
ஆகட்டும், தேங்க் யூ பாஸ்டர்!
- ஊழியர்களின் சிந்தனைக்கு.....
க. காட்சன் வின்சென்ட்
8946050920
=========================
பாஸ்டர் டேவிட் & வின்சென்ட்
==============================
(3️⃣)
ப்ரெய்ஸ் த லார்ட் பாஸ்டர் வின்சென்ட்!
ப்ரெய்ஸ் த லார்ட் பாஸ்டர் டேவிட்!
அப்போஸ்தலர் எட்டாம் அதிகாரத்தில என்னை அதிகம் தொட்ட ஒரு காரியத்த உங்களோடு பகிர்ந்துகிட்டுமா?
அதுக்குத்தானே வந்திருக்கிறேன், சொல்லுங்க பாஸ்டர்.
"சிதறிப்போனவர்கள் எங்குந்திரிந்து, சுவிசேஷவசனத்தைப் பிரசங்கித்தார்கள்" இன்னு
அப்போஸ்தலர் 8:4ல சொல்லப்பட்டுள்ளத கவனிச்சிருக்கீங்களா?
கவனிச்சிருக்கேன் பாஸ்டர். அதபத்தி நீங்க என்ன நெனைக்கிறீங்க?
"அக்காலத்திலே எருசலேமிலுள்ள சபைக்கு மிகுந்த துன்பம் உண்டாயிற்று. சவுல் வீடுகள்தோறும் நுழைந்து, புருஷரையும் ஸ்திரிகளையும் இழுத்துக்கொண்டுபோய், காவலில் போடுவித்து, சபையைப் பாழாக்கிக்கொண்டிருந்தான். அப்போஸ்தலர்தவிர, மற்ற யாவரும் யூதேயா சமாரியா தேசங்களில் சிதறப்பட்டுப்போனார்கள்" இன்னு அப்போஸ்தலர் 8:1-3ல சொல்லப்பட்டிருக்கு இல்லயா?
ஆமாம், சொல்லப்பட்டிருக்கு.
அந்த சூழல்லதான், சிதறிப்போனவர்கள் எங்குந்திரிந்து, சுவிசேஷவசனத்தப் பிரசங்கிச்சிருங்காங்க பாஸ்டர்!
இப்ப இருக்கிற கிறிஸ்தவங்க உபத்திரவத்துனால ஊரவிட்டு ஒடவேண்டியிருந்தா ஊரெல்லாம் போய், 'இயேசு உங்கள நேசிக்கிறார்" இன்னு சுவிசேஷமா சொல்லிகிட்டிருப்பாங்க?
"உங்கள நம்பனதுக்கு இப்படி ஊரவுட்டு ஓடவச்சிட்டீங்களே ஆண்டவரே" இன்னு, ரோட்டோரமா குடும்பத்தோட ஒக்காந்து ஒப்பாரியல்லவா வச்சிருப்பாங்க?
அதமட்டுமா செஞ்சிருப்பாங்க? "இயேசுகிட்ட வாங்க, உங்களுக்கு கேஸே இல்ல, சீக்கிரத்துல நீங்க ஓஹோன்னு ஆய்டுவீங்க, உங்கள் நெலம் நல்லா வௌயும், மிருமஜீவன் பெருக்கும், வியாபாரம் பலமடங்கு விருத்தியாகும், உங்க ஒட்டுவீடு பெரிய பங்களாவாகும், உங்க ஊருலேயே நீங்கதான் டாப்பா இருப்பீங்க" இன்னு ஆசக்காட்டி அழைச்சி, இந்த ஊழியக்காரங்க நம்மல மோசம்பண்ணிட்டாங்களே, அவங்க நல்லவே இருக்கமாட்டாங்க" இன்னு நம்மலயும் சபிச்சித்தள்ளிடமாட்டாங்களா?
பல ஆசீர்வாதங்கள வாக்குப்பண்ணி அவங்கள் கூப்ட்டு சபையில ஒக்காரவச்சிருக்கிற நமக்கு இந்த வசவு கன்ஃபார்மா கெடைக்கும் பாஸ்டர்!
"இயேசு உனக்காய் சாபமானதால், நீ ஆசீர்வாதமாக மட்டுமே இருக்கமுடியும்! இயேசு உனக்காக தரித்திரரானபடியால், நீ ஐசுவரியவானாக மட்டுமே இருக்கமுடியும்! இயேசு உன் பாடுகளை ஏற்றுக்கொண்டு, துக்கங்களைச் சுமந்துவிட்டதால், உனக்கு பாடுகளோ துக்கங்களோ கிடையாது" இன்னு வாக்குப்பண்ணி, தங்கள ஏமாத்தன செழிப்பின் உபதேசிகள வெரட்டி வெரட்டி வெளுப்பாங்கங்கிறதுல சந்தேகமே இல்ல பாஸ்டர்?
எருசலேம் சபைக்கு வந்ததுபோல ஒரு உபத்திரவம் இன்னைய சபைகளுக்கு வந்துச்சினா, உலக ஆசீர்வாதப் பிரசங்கிகளின் சாயம் நிச்சயம் வெளுத்துடும் பாஸ்டர்.
ஆதிசபை விசுவாசிகளால எப்படி அவ்வளவு உபத்திரவக் காலத்திலும், ஊரவிட்டு ஓடியும் ஆண்டவர அறிவிக்கமுடிஞ்சிது பாஸ்டர்?
அப்படி சிதறிப்போனவங்கள்ல ஒரு டீம் அந்தியோகியாவுல ஒரு சபையையே ஸ்தாபிச்சத் தகவல் அப்போஸ்தலர் 11:19-21ல இருக்குது பாஸ்டர்?
எல்லாத்தையும் இழந்து ஊருவிட்டு ஊறு, நாடுவிட்டு நாடுன்னு போனவங்களால, தங்களோட உணவு, உடை, உறைவிடம், எதிர்காலம் பத்திக் கவலப்படாம: எப்படி சுவிஷே ஊழியம், சபை ஸ்தாபிதம்ன்னு கவனம் செலுத்தமுடிஞ்சது பாஸ்டர்?
அப்போஸ்தலர் 2:42ல சொல்லப்பட்டிருக்கிறபடி, அவங்க அப்போஸ்தலருடைய உபதேசத்துல உறுதியாய்த் தரிச்சிருந்ததுதான் அதுக்குக் காரணம் பாஸ்டர்.
"விசுவாசிகளெல்லாரும் ஒருமித்திருந்து, சகலத்தையும் பொதுவாய் வைத்து அநுபவித்தார்கள். காணியாட்சிகளையும் ஆஸ்திகளையும் விற்று, ஒவ்வொருவனுக்கும் தேவையானதற்குத்தக்கதாக அவைகளில் எல்லாருக்கும் பகிர்ந்துகொடுத்தார்கள்" இன்னு
அப்போஸ்தலர் 2:44,45ல சொல்லப்பட்டிருக்கே, இதுவும் அப்போஸ்தலரின் உபதேசத்தின் அடிப்படையிலதானா?
நிச்சயமா! "உங்களுக்கு உள்ளவைகளை விற்றுப்பிச்சைகொடுங்கள், பழமையாய்ப்போகாத பணப்பைகளையும் குறையாத பொக்கிஷத்தையும் பரலோகத்திலே உங்களுக்குச் சம்பாதித்துவையுங்கள், அங்கே திருடன் அணுகுகிறதுமில்லை, பூச்சி கெடுக்கிறதுமில்லை" இன்னு லூக்கா 12:33ல ஆண்டவர் தங்களுக்கு சொன்னத, அப்போஸ்தலர் சபையாருக்கும் போதிச்சிருக்காங்க பாஸ்டர்!
"பூமியிலே உங்களுக்குப் பொக்கிஷங்களைச் சேர்த்துவைக்கவேண்டாம், இங்கே பூச்சியும் துருவும் அவைகளைக் கெடுக்கும், இங்கே திருடரும் கன்னமிட்டுத் திருடுவார்கள். பரலோகத்திலே உங்களுக்குப் பொக்கிஷங்களைச் சேர்த்துவையுங்கள், அங்கே பூச்சியாவது துருவாவது கெடுக்கிறதும் இல்லை, அங்கே திருடர் கன்னமிட்டுத் திருடுகிறதும் இல்லை. உங்கள் பொக்கிஷம் எங்கேயிருக்கிறதோ அங்கே உங்கள் இருதயமும் இருக்கும்" இன்னு
மத்தேயு 6:19-21ல ஆண்டவர் தங்களுக்கு போதிச்சத, அவங்க விசுவாசிகளுக்கும் நிசாசயமா சொல்லிக்கொடுத்திருக்கனும்! இல்லாட்டி, அவங்க அப்படி செஞ்சிருக்க வாய்ப்பே இல்ல பாஸ்டர்.
சரியா சொன்னீங்க பாஸ்டர். "நீங்கள் புறப்பட்டுப்போய், சகல ஜாதிகளையும் சீஷராக்கி, பிதா குமாரன் பரிசுத்த ஆவியின் நாமத்திலே அவர்களுக்கு ஞானஸ்நானங்கொடுத்து, நான் உங்களுக்குக் கட்டளையிட்டயாவையும் அவர்கள் கைக்கொள்ளும்படி அவர்களுக்கு உபதேசம்பண்ணுங்கள்" இன்னு
மத்தேயு 28:19,20ல ஆண்டவர் தஙகளுக்கு சொன்னத அப்போஸ்தலர் சரியா செஞ்சிருக்காங்க பாஸ்டர்.
கொஞ்சம் வௌக்கமா சொன்னீங்கனா பரவாயில்ல.
சீஷன்னா யாரு?
தன் குருவை அப்படியேப் பின்பற்றுகிறவன்!
தம்ம பின்பற்றின தமது சீஷர்கள, சகலஜாதிகளையும் தம்மை பின்பற்றும் சீஷர்களாக்க அனுப்பின ஆண்டவர், தமக்கு சீஷராக இருக்க அவங்க என்னவெல்லாம் செய்யனும்ன்னு அவங்களுக்கு கட்டளையிட்டிருந்தாரோ, அதையே அவங்க ஆதாயம்பண்ற மக்களும் செய்யும்படிக்கு அவங்களுக்கு உபதேசம்பண்ண கட்டளையிட்டிருந்தார் இல்லையா?
ஆமாம்!
தாங்கள் ஆண்டவரின் சீடராக இருக்க என்னவெல்லாம் செஞ்சாங்களோ, அதையே செய்யும்படி தாங்கள் ஆதாயம்பண்ணின மக்களுக்கும் அப்போஸ்தலர் போதிச்சிருக்கங்க பாஸ்டர்.
அப்படினா, லூக்கா 9:23ல ஆண்டவர் சொல்லியிருக்கிறபடி: தன்னைத்தான் வெறுத்து, தன் சிலுவையை அநுதினமும் எடுத்துக் கொண்டு, ஆண்டவரைப் பின்பற்றத்தானே அவங்க ஜனங்களுக்கு போதிச்சிருப்பாங்க?
அதுமட்டுமில்ல, லூக்கா 14:26 ஆண்டவர் சொல்லியிருக்கிறபடி:
தன் தகப்பனையும் தாயையும் மனைவியையும் பிள்ளைகளையும் சகோதரரையும் சகோதரிகளையும், தன் ஜீவனையும்விட ஆண்டவர அதிகமா நேசிக்கவும்; லூக்கா 14:33ல ஆண்டவர் சொல்லியிருக்கிறபடி: தனக்கு உண்டான எல்லாவற்றயும்விட ஆண்டவர அதிகமா நேசிக்கவும் போதிச்சிருக்காங்க பாஸ்டர்.
அப்போஸ்தலர் 3:6ல சொல்லப்பட்டிருக்கிறபடி,
"வெள்ளியும் பொன்னும் என்னிடத்திலில்லை" இன்னு சொல்லக்கூடிய அளவுக்கு பணஆசையில்லாம வாழ்ந்த ஊழியக்காரரால நடத்தப்பட்ட ஆதிசபை மக்கள், அவங்களோட ஊழியக்காரங்களாப் போலவே பணம் பொருள் ஆஸ்திமேல நாட்டம் இல்லாதவங்களா த்தானே இருப்பாங்க?
1 கொரிந்தியர் 11:1ல, "நான் கிறிஸ்துவைப் பின்பற்றுகிறதுபோல, நீங்கள் என்னைப் பின்பற்றுகிறவர்களாயிருங்கள்" இன்னு சொல்ற பவுல பின்பற்றனவங்க எப்படி இருந்திருப்பாங்க?
"எனக்கு லாபமாயிருந்தவைகளெவைகளோ அவைகளைக் கிறிஸ்துவுக்காக நஷ்டமென்று எண்ணினேன். அதுமாத்திரமல்ல, என் கர்த்தராகிய கிறிஸ்து இயேசுவை அறிகிற அறிவின் மேன்மைக்காக எல்லாவற்றையும் நஷ்டமென்று எண்ணிக்கொண்டிருக்கிறேன். ...நான் அவரையும் அவருடைய உயிர்த்தெழுதலின் வல்லமையையும், அவருடைய பாடுகளின் ஐக்கியத்தையும் அறிகிறதற்கும், அவருடைய மரணத்திற்கொப்பான மரணத்திற்குள்ளாகி,எப்படியாயினும் நான் மரித்தோரிலிருந்து உயிரோடேழுந்திருப்பதற்குத் தகுதியாயிருக்கும்படிக்கும், அவருக்காக எல்லாவற்றையும் நஷ்டமென்று விட்டேன். குப்பையுமாக எண்ணுகிறேன்" இன்னு பிலிப்பியர் 3:7,8,10,11ல சொல்ற பவுலப்போலத்தான் அவங்களும் இருப்பாங்க.
அதுமட்டுமில்ல, தான் உட்பட எல்லா அப்போஸ்தலரும் ஊழியத்தில்
பல ஆண்டுகள் கடந்தும் பசியுள்ளவர்களும், தாகமுள்ளவர்களும், நிர்வாணிகளும், குட்டுண்டவர்களும், தங்க இடமில்லாதவர்களுமாயிருந்ததாகவும்; தங்கள் கைகளினாலே வேலைசெய்து பாடுபட்டதாகவும்; வையப்பட்டு, ஆசீர்வதித்ததாகவும்; துன்பப்பட்டு, சகித்ததாகவும்;
தூஷிக்கப்பட்டு, வேண்டிக்கொண்டதாகவும்; உலகத்தின் குப்பையைப்போலவும், எல்லாரும் துடைத்துப்போடுகிற அழுக்கைப்போலவும் ஆனதாகவும் 1 கொரிந்தியர் 4:11-13ல பவுல் சொல்றாரு பாஸ்டர்.
இப்படிப்பட்ட ஊழியக்காரங்களால நடத்தப்பட்ட ஆதிசபையார் உபத்திரவங்கள சந்திக்க ஆயத்தமாகவே இருந்திருப்பாங்க இல்லையா?
"நமக்கு உபத்திரவம் வரும்" இன்னு பவுலு தெசலோனிக்கே சபையாருக்கு நேரடியாவே சொல்லிருக்காரு. இத 1 தெசலோனிக்கேயர் 3:4ல பாக்கலாம் பாஸ்டர்.
"நீங்கள் என்னிடத்தில் கண்டதும் எனக்கு உண்டென்று இப்பொழுது கேள்விப்படுகிறதுமான போராட்டமே உங்களுக்கும் உண்டு" இன்னு பிலிப்பி சபையார்கிட்ட பவுலு மொறைக்க மொறைக்க சொல்றாரு! இத பிலிப்பியர் 1:30ல பாக்கலாம் பாஸ்டர்.
எபிரேய கிறிஸ்தவர்கள் உபத்திரவங்களாகிய மிகுந்த போராட்டத்தைச் சகிச்சிருக்காங்க, நிந்தைகளாலும் உபத்திரவங்களாலும் அவங்க வேடிக்கையாக்கப்பட்டதுமல்லாம, அப்படி நடத்தப்பட்டவங்களுக்குப் பங்காளிகளுமாயிருக்காங்க, ஊழியக்காரர்
கட்டப்பட்டிருக்கையில் அவரைக்குறிச்சிப் பரிதபித்ததுமில்லாம, பரலோகத்தில அதிக மேன்மையும் நிலையுள்ளதுமான சுதந்திரம் தங்களுக்கு உண்டுன்னு அறிஞ்சி, தங்கள் ஆஸ்திகளையும் சந்தோஷமாக் கொள்ளையிடக் கொடுத்திருக்காங்க! இத எபிரேயர் 10:32-34ல பாக்கலாம் பாஸ்டர்.
எருசலேம் சபையார் பல நாடுகளுக்கு சிதறிப்போகும்போது, அதிகமா எதையும் எழந்துட்டு போயிருக்க வாய்பில்ல பாஸ்டர்.
அப்போஸ்தலர் 4:34,35ல காண்கிறபடி: நெலங்களையும் வீடுகளையும் வித்து, சபையில இருக்கிற தங்கள் ஏழை சகோதரர்களின் தேவைக்குத்தக்கதாப் பகிர்ந்துகொடுத்திட்ட அவங்களுக்கு எழக்க என்ன இருந்திருக்கும் பாஸ்டர்?
எதையும் இழந்தக் கவலை இல்லாமலேயே அவங்க எருசலேமவிட்டுப் போயிருப்பாங்க இல்லையா?
பலத் தலைமுறைக்கு ஆஸ்திய குவிச்சி வச்சி, உபத்திரவக்காலத்துல எவன்கிட்டயோ எழந்துபோறதுக்கு பதிலா, நம்ம கண்ணுமுன்னால கஷ்டப்படற நம்ம ஆவிக்குரிய சகோதரர்களுக்கு பகரிந்துகொடுத்துட்டு, சந்தோஷமா ஊரவுட்டு வெளியேற்றது எத்தனப் பெரிய ஆசீர்வாதம்! பரலோகத்தில்!!
"நாளைக்காகக் கவலைப்படாதிருங்கள், நாளையத்தினம் தன்னுடையவைகளுக்காகக் கவலைப்படும். அந்தந்த நாளுக்கு அதினதின் பாடுபோதும்" இன்னு ஆண்டவர் சொல்றத உண்மையா நம்பற அவருடைய சீஷர்களால மட்டுமே இதையெல்லாம் செய்யமுடியும் பாஸ்டர்.
எருசலேம் சபையார் இயேசுவின் சீஷராக இருந்ததுனாலத்தான், சிதறிப்போனவங்க எங்குந்திரிஞ்சி, சுவிசேஷவசனத்தப் பிரசங்கிச்சி, சபையை ஸ்தாபிக்க முடிஞ்சிருக்கு பாஸ்டர்!
சரியா சொன்னீங்க பாஸ்டர்!
ஆண்டவர் சகலஜாதிகளையும் தமது சீஷர்களாக்க நம்ம அனுப்பியிருக்க: நம்மல்ல அநேகர், சகலஜாதிகளையும் கோடீஸ்வரர்களாவும், ஐசுவரியவான்களாவும் மாத்தறதுல ரொம்ப மும்முரமா இருக்காங்களே பாஸ்டர்?
இயேசுவின் சீஷர்கள் பிறரை அவருடைய சீஷராகத்தான் மாத்துவாங்க! கோடீஸ்வரர்களும் ஐசுவரியவான்களும் தங்களப்போலத்தான மாத்துவாங்க?
கடைசிகாலத்தின் கடைசிப் பகுதியில இருக்கிற நாம, பூமியில பெரிய செல்வந்தர்களாகவேண்டியதில்லயே பாஸ்டர்.
1 தீமோத்தேயு 6:7,8ல பாக்கறபடி, 1900ஆண்டுகளுக்கு முன்ன இருந்த ஊழியருங்களே,
"உலகத்திலே நாம் ஒன்றும் கொண்டு வந்ததுமில்லை, இதிலிருந்து நாம் ஒன்றும் கொண்டுபோவதுமில்லை என்பது நிச்சயம். உண்ணவும் உடுக்கவும் உண்டாயிருந்தால் அது போதும்" இன்னு இருந்திருப்பாங்கன்னா, ஆண்டவருடைய வருகைக்கு அருகிலிருக்கிற நாம எவ்வளவு ஜாக்கிறதையா இருக்கனும் பாஸ்டர்!
நாம லட்சாதிபதியா ஆகனும்ன்னு ஆசப்பட்டா, விசுவாசிங்க கோடிஸ்வரங்களாக ஆசப்படுவாங்க! நாம் கோடீஸ்வரங்களாக ஆசப்பட்டா, விசுவாசிங்க குபேரர்களாக ஆசப்படுவாங்க இல்லீங்களா?
உண்மதான் பாஸ்டர்!
1 தீமோத்தேயு 6:9-12ல பவுல் சொல்றமாதிரி தேவனுடைய மனுஷங்களாகிய நாம ஐசுவரியவான்களாகவேண்டும்ங்கிற விருப்பத்தையும், பண ஆசையையும்
விட்டோடி, நீதியையும் தேவபக்தியையும் விசுவாசத்தையும் அன்பையும் பொறுமையையும் சாந்தகுணத்தையும் அடையும்படி நாடனும், விசுவாசத்தின் நல்ல போராட்டத்தைப் போராடனும், நித்தியஜீவனைப் பற்றிக்கொள்ளனும், அதுக்காகத்தானே நாம அழைக்கப்பட்டிருக்கிறோம் பாஸ்டர்?
நாம அப்படியிருந்தாத்தான், நாம நடத்தற ஜனங்களும் அப்படியிருப்பாங்க பாஸ்டர்.
எதை எழந்தாலும் ஆண்டவரை எழக்காத, எந்த நெலமையிலயும் எங்குபோனாலும் அவரை அறிவிக்கிற, ஒரு வைராக்கியமான சீஷர்கூட்டமா நம்ம சபையார உருவாக்கனும் பாஸ்டர்!
நிச்சயம், சீஷராக இருப்போம்! சீஷராக்குவோம் பாஸ்டர்!
அடுத்த சந்திப்புல இன்னும் சில காரியங்களப் பேசுவோம் பாஸ்டர்.
அவசியம் பாஸ்டர். சந்திப்போம்!!
ஊழியர்களின் சிந்தனைக்கு
க. காட்சன் வின்சென்ட்
8946050920
======================
பாஸ்டர் டேவிட் & வின்சென்ட்
==========================
(4️⃣)
ப்ரெய்ஸ் த லார்ட் பாஸ்டர் டேவிட்!
ப்ரெய்ஸ் த லார்ட் பாஸ்டர் வின்சென்ட்!
உங்க வேத ஆராய்ச்சில புதுசா ஏதாச்சும் கண்டுபிடிச்சிருக்கீங்களா?
இன்னைய கிறிஸ்தவ உலகத்தின் கண்களுக்கு புலப்படாத ஒரு காரியத்த பரிசுத்த ஆவியானவர் காட்டினார் பாஸ்டர்!
அப்படியா? நமக்கும் அத கொஞ்சம் காட்டுங்க பாஸ்டர்.
ஆதிசபையில விசுவாசிகளே ஞானஸ்நானம் கொடுத்திருக்காங்க பாஸ்டர்!
என்ன சொல்றீங்க? அதுக்கு ச்சான்ஸே இல்ல பாஸ்டர்!
சமாரியாவுல போய் கிறிஸ்துவை பிரசங்கிக்கும்போது பிலிப்பு யாரா இருந்தாரு?
அப்போஸ்தலர் 8:5 'பிலிப்பென்பவன்' இன்னுதான் சொல்லுது.
அப்படினா, அவன் விசுவாசிதானே?
'ஊழியக்காரன்' இன்னு அங்க சொல்லப்படல.
எருசலேம் சபையில பந்திவிசாரணைசெஞ்ச ஏழு விசுவாசிகள்ல அவனும் ஒருத்தனா இருந்தான்னுதானே அப்போஸ்தலர் 6:5,6ல பாக்குறோம்?
ஆமாம் பாஸ்டர்!
அவன்தான் சமாரியாவிலுள்ள ஒரு பட்டணத்திற்குப்போய், அங்குள்ளவர்களுக்குக் கிறிஸ்துவைக் குறித்துப் பிரசங்கித்தான்னு
அப்போஸ்தலர் 8:5 சொல்லுது.
சுவிசேஷம் மட்டுமா சொன்னான்? அதிசயங்களை செய்தான்னும்,
அநேகரிலிருந்து அசுத்தஆவிகள் மிகுந்த சத்தத்தோடே கூப்பிட்டு அவர்களை விட்டுப் புறப்பட்டதுன்னும், அநேகந் திமிர்வாதக்காரரும் சப்பாணிகளும் குணமாக்கப்பட்டார்கள்ன்னும் அப்போஸ்தலர் 8:6,7 சொல்லுதே?
ஆதிசபை விசுவாசிகள் அப்போஸ்தலருக்கு இணையா அற்புத அடையாளங்கள செய்யறதும், பிரசங்கம்பண்ணறதும் நாம ஏற்கனவே அப்போஸ்தலர் 2:43; 6:8-10; 7:1-53; 8:5ல பாத்த விஷயம்தானே?
பாத்துட்டோம் பாஸ்டர்!
அதையும் தாண்டி விசுவாசிங்க ஞானஸ்நானமே கொடுத்திருக்காங்க பாஸ்டர்!
எங்க இருக்குன்னு சொல்லுங்கப் பாப்போம்?
"தேவனுடைய ராஜ்யத்துக்கும் இயேசுகிறிஸ்துவினுடைய நாமத்துக்கும் ஏற்றவைகளைக்குறித்து, பிலிப்பு பிரசங்கித்ததை அவர்கள் விசுவாசித்தபோது, புருஷரும் ஸ்திரீகளும் ஞானஸ்நானம்பெற்றார்கள். அப்பொழுது சீமோனும் விசுவாசித்து ஞானஸ்நானம் பெற்று, பிலிப்பைப் பற்றிக்கொண்டு, அவனால் நடந்த அடையாளங்களையும் பெரிய அற்புதங்களையும் கண்டு பிரமித்தான்" இன்னு அப்போஸ்தலர் 8:12,13ல நீங்க படிச்சதில்லியா?
ஆமாம், படிச்சிருக்கேன்?
தேவனுடைய ராஜ்யத்துக்கும் இயேசுகிறிஸ்துவினுடைய நாமத்துக்கும் ஏற்றவைகளைக்குறித்து, பிலிப்பு பிரசங்கித்ததை அவர்கள் விசுவாசித்தபோது, புருஷரும் ஸ்திரீகளும் ஞானஸ்நானம்பெற்றார்கள்ன்னு இருக்கு இல்லியா?
ஆமாம், இருக்குது.
விசுவாசித்த புருஷருக்கும் ஸ்திரீகளுக்கும் ஞானஸ்நானம் கொடுத்தது யாரா இருக்கும்?
அங்க பிலிப்புவத் தவர ஊழியக்காரங்க யாரும் இருந்தமாதிரி தெரியலியே.
அப்படினா அவங்கள ஆண்டவருக்குள்ள நடத்தன பிலிப்புதானே ஞானஸ்நானமும் கொடுத்திருக்கனும்?
"அப்பொழுது சீமோனும் விசுவாசித்து ஞானஸ்நானம் பெற்று, பிலிப்பைப் பற்றிக்கொண்டு, அவனால் நடந்த அடையாளங்களையும் பெரிய அற்புதங்களையும் கண்டு பிரமித்தான்" இன்னு இருக்கே? அப்ப சமாரியாவின் மிகப்பெரிய மந்திரவாதி சீமோனுக்கும் விசுவாசி பிலிப்புதானே ஞானஸ்நானம் கொடுத்திருக்கிறான்?
இன்னொரு விஷயத்த சொன்னேன்னா நீங்க ஷாக்காயிடுவீங்க!
ஷாக்கடிக்கிற அளவுக்கு அப்படி என்ன கரண்ட் நியூஸ்?
திருச்சபையின் மிகப்பெரிய எதிரியாக இருந்த சவுலுக்கே தேவன் ஒரு விசுவாசியைக் கொண்டுதான் ஞானஸ்நானம் கொடுத்திருக்கிறார் பாஸ்டர்!
இது நம்பறமாதிரியா இருக்குது?
தமஸ்குவிலிருந்த அனனியா யாரு பாஸ்டர்?
"அனனியா என்னும் பேருள்ள ஒரு சீஷன்" இன்னு
அப்போஸ்தலர் 9:10 சொல்லுது.
சீஷன்னா யாரு பாஸ்டர்?
கிறிஸ்தவங்களோட பழைய பெயர்தான்
சீஷர்கள் இன்னு அப்போஸ்தலர் 11:26 சொல்லுது பாஸ்டர்.
அடிப்படையில் ஒவ்வொரு கிறிஸ்தவரும் சீஷர்தானே? அவங்கள்ல இருந்துதானே தேவன் ஐந்துவித ஊழியர்களையும் உதவிக்காரர்களையும் ஏற்படுத்தறார்?
அப்படினா சராசரி சீஷனான அனியா ஒரு விசுவாசியா மட்டுமே இருந்திருக்கனும் பாஸ்டர்!
"வேதப்பிரமாணத்தின்படியே பக்தியுள்ளவனும், அங்கே குடியிருக்கிற சகல யூதராலும் நல்லவனென்று சாட்சிபெற்றவனுமாகிய அனனியா என்னும் ஒருவன்" இன்னு அப்போஸ்தலர் 22:12ல பவுல் சொல்றதிலிருந்தே அவன் ஊழியக்காரன் இல்லன்றது புரியுது இல்லயா?
புரியுது பாஸ்டர். சந்தேகமே இல்ல!
"இப்பொழுது நீ தாமதிக்கிறதென்ன? நீ எழுந்து கர்த்தருடைய நாமத்தைத் தொழுதுகொண்டு, ஞானஸ்நானம்பெற்று, உன் பாவங்கள் போகக் கழுவப்படு" இன்னு அனனியா தான்கிட்ட சொன்னதா
அப்போஸ்தலர் 22:16ல பவுல் சொல்றாரு. அப்படினா அவருக்கு யார் ஞானஸ்நானம் கொடுத்திருக்கக்கூடும்?
அங்க பவுலும் அனனியாவுந்தானே இருந்தாங்க, அப்படினா அனனியாதான் கொடுத்திருக்கனும்!
நிச்சயமா பாஸ்டர்! "அனனியா போய், வீட்டுக்குள் பிரவேசித்து, அவன்மேல் கையை வைத்து; சகோதரனாகிய சவுலே, நீ வந்தவழியிலே உனக்குத் தரிசனமான இயேசுவாகிய கர்த்தர், நீ பார்வையடையும்படிக்கும் பரிசுத்தஆவியினாலே நிரப்பப்படும்படிக்கும் என்னை அனுப்பினார் என்றான். உடனே அவன் கண்களிலிருந்து மீன் செதில்கள் போன்றவைகள் விழுந்தது. அவன் பார்வையடைந்து, எழுந்திருந்து, ஞானஸ்நானம் பெற்றான்" இன்னு
அப்போஸ்தலர் 9:17,18 சொல்றத நல்லா கவனிச்சா, பவுலுக்கு ஞானஸ்நானம் கொடுத்தது அனனியாதான்றது புரியும்!
பவுல் பார்வையடையும்படிக்கும் பரிசுத்தஆவியினாலே நிரப்பப்படும்படிக்கும் அனனியாவை அனுப்பின ஆண்டவர், அவனக் கொண்டுதான் ஞானஸ்நானமும் கொடுத்திருக்கனும் பாஸ்டர்.
ஒரு விசுவாசி ஞானஸ்நானமும் கொடுக்கலாம், பரிசுத்தஆவியின் நிறைவுக்குள்ளும் நடத்தலாங்கறதுக்கு இந்த சம்பவமே போதுமான ஆதாரமா இருக்கு இல்லயா?
என்ன ஆதாரம் இருந்தாலும் நாம என்னைக்கு ஒரு விசுவாசிய ஞானஸ்நானம் கொடுக்கவும், பரிசுத்த ஆவியின் அபிஷேகத்துக்குள்ள மத்தவங்கள நடத்தவும் அனுமதிக்கப்போறோம்?
என்னோட 22 வருஷ ஊழியத்துல ஒரு விசுவாசியும் ஞானஸ்நானம் கொடுத்து நான் பாத்ததே இல்ல பாஸ்டர்.
தாங்களும் ஞானஸ்நானம் கொடுக்கலாம்ங்கிற சத்தியமே தெரியாத விசுவாசிங்க எப்படி கொடுப்பாங்க பாஸ்டர்?
நமக்கே இந்த விஷயம் இத்தனவருஷமா வௌங்கலயே பாஸ்டர்!
பிலிப்புவப் போல தான் ஆதாயம்பண்ணின மக்களுக்கு ஒரு விசுவாசி ஞானஸ்நானம் கொடுத்துட்டா இன்னைக்கு என்ன நடக்கும் பாஸ்டர்?
"உனுக்கு இன்னா இவ்வளவு துணிக்கரம்? நாங்க ஊழியத்துல எதுக்கு இருக்குறோம்? சொல்லி அனுப்பியிருந்தா நாங்க வந்து ஞானஸ்நானம் கொடுத்திருக்கமாட்டோமா? அழைக்கப்பட்ட ஊழியக்காரங்க செய்யவேண்டியக் காரியத்த நீ செஞ்சி, ஊழியக்காரங்கள கனவீனம்பண்ணதுக்கு கர்த்தர் சீக்கிரத்துல உன்ன என்னப்பண்ணப்போறாருன்னு பாரு. ஒழுங்கா மூனுநாளு உபவாசம்போட்டு உன் பாவத்துக்கு மன்னிப்பு கேள்" இன்னு அந்த விசுவாசிய லெப்ட் & ரைட் வாங்கிட்டு, அவரு கொடுத்த ஞானஸ்நானம் செல்லாதுன்னு அறிவிச்சிட்டு, அவரு ஞானஸ்நானம் கொடுத்த ஜனங்களுக்கு நாம மறுபடியும் ஞானஸ்நானம் கொடுப்போம் இல்லையா?
அதுல எந்த சந்தேகமும் இல்ல! சவுலுக்கு ஞானஸ்நானம் கொடுக்க நம்மல விட்டுட்டு, இன்னைக்கி அனனியாவப் போல ஒரு விசுவாசிய ஆண்டவர் பயன்படுத்தினார்னா என்னப் பண்ணுவோம்?
"ஆண்டவரே, அப்போஸ்தலர் நாங்க இருக்க, ஒரு விசுவாசியவச்சி ஞானஸ்நானம் கொடுத்து, எங்க மொகத்துல கரிய பூசிட்டீங்களே? இதுக்கா எங்கள ஊழியத்துக்கு அழச்சீங்க? நாளைக்கு ஞானஸ்நானம் கொடுத்த விசுவாசியோ, அவர்கிட்ட ஞானஸ்நானம் எடுத்தவரோ எங்கள எப்படி மதிப்பாங்க? இப்படி எங்கள அசிங்கப்படுத்தறதுக்கு பதிலா, ஒரு சொட்டு வெஷங்கொடுத்து நீங்க எங்கள கொன்னுருக்கலாம்! எக்காரணம் கொண்டும் இந்த ஞானஸ்நானத்த நாங்க ஏத்துக்கமாட்டோம், மறுபடியும் நாங்க ஒருமுறை ஞானஸ்நானம் கொடுத்தேத் தீருவோம்! விசுவாசிங்க முன்னால எங்க மரியாததான் எங்களுக்கு முக்கியம்!" இன்னு ஆண்டவர்கிட்ட சண்டகட்டுவோம்.
ஹன்ட்ரட் பெர்சன்ட்!
தன்னோடு யோப்பாவுல இருந்து செசரியாவுக்கு வந்திருந்த விசுவாசிகள வச்சித்தான் கொர்நேலியு வீட்டாருக்கும் அவருடைய உறவின்முறையாருக்கும் அவருடைய விசேஷித்த சிநேதிதருக்கும் பேதுரு ஞானஸ்நானம் கொடுத்ததா
அப்போஸ்தலர் 10:23,24,45-48ல இருக்கு பாஸ்டர்!
என்னது, விசுவாசிகள வச்சி, அதுவும் வி.ஐ.பிகளுக்கு ஒரு ஊழியக்காரர் ஞானஸ்நானம் கொடுத்தாரா? எந்த ஒலகத்துல இது அடுக்கும்?
"பேதுருவோடேகூட வந்திருந்த விருத்தசேதனமுள்ள விசுவாசிகள் கேட்கும்போது, பரிசுத்தஆவியின் வரம் புறஜாதிகள்மேலும் பொழிந்தருளப்பட்டதைக்குறித்துப் பிரமித்தார்கள். அப்பொழுது பேதுரு; நம்மைப்போலப் பரிசுத்தஆவியைப் பெற்ற இவர்களும் ஞானஸ்நானம் பெறாதபடிக்கு எவனாகிலும் தண்ணீரை விலக்கலாமா என்று சொல்லி,
கர்த்தருடைய நாமத்தினாலே அவர்களுக்கு ஞானஸ்நானங் கொடுக்கும்படி கட்டளையிட்டான்" இன்னு அப்போஸ்தலர் 10:45-48ல நீங்க வாசிச்சதில்லயா?
வாசிச்சிருக்கேன் பாஸ்டர்.
ஞானஸ்நானங் கொடுக்கும்படி பேதுரு விசுவாசிகளுக்கு கட்டளையிட்டார்னா, கட்டளையிட்டப் பேதுரு ஞானஸ்நானம் கொடுத்திருப்பாரா? இல்ல கட்டளையை பெற்ற விசுவாசிங்க கொடுத்திருப்பாங்களா?
கட்டளையிடப்பட்ட விசுவாசிங்கதான் ஞானஸ்நானம் கொடுத்திருப்பாங்க பாஸ்டர்.
பேதுருகிட்ட இருந்த இந்தப் பெருந்தன்ம நம்மல்ல யாருகிட்டயும் இல்லயே பாஸ்டர்?
நமக்கு பெருந்தன்மை இருந்தாலும் விசுவாசிகளுக்கு தகுதிவேண்டாமா? ஆதிசபை விசுவாசிங்கமாதிரி அற்புதம் செய்யவும், சுவிசேஷத்தப் பிரசங்கிக்கவும், ஆத்துமா ஆதாயம்பண்ணவும், ஞானஸ்நானங்கொடுக்கவும் தகுதியுள்ள ஒரு விசுவாசியாவது நம்ம சபையில இருக்காங்களா பாஸ்டர்?
30, 40 வருஷ ஊழியத்துல ஆதிசபை விசுவாசிமாதிரி ஒரு விசுவாசியக்கூட நம்மால உருவாக்கமுடியலனா என்ன அர்த்தம் பாஸ்டர்?
என்ன அர்த்தம்?
நம்மல்ல ஒருத்தரும் ஆதிசபை ஊழியர் மாதிரி இல்லன்னுதானே அர்த்தம்?
இப்பதான் புரியுது பாஸ்டர்! சோதிக்கப்படவேண்டியது விசுவாசிகளின் தகுதியில்ல, நம்ம தகுதிதான்!
சரியா சொன்னீங்க பாஸ்டர்!
நாமதான் முழுநேர ஊழியம் செய்யற சுவிசேஷகர்கள்கூட ஞானஸ்நானம் கொடுக்கக்கூடாதுன்னு தடபோட்டு வச்சிருக்கறமே?
சுவிசேஷகர்களுக்கு ஞானஸ்நானம் கொடுக்க முழு அதிகாரம் இருக்கு பாஸ்டர்.
அதுக்கு வேதத்துல ஏதாச்சும் ஆதாரம் இருக்கா?
அப்போஸ்தலர் 8:29 ல பாக்கறபடி ஆவியானவர்: "நீ போய், அந்த இரதத்துடனே சேர்ந்துகொள்" இன்னு சொன்னபோதே விசுவாசியா இருந்த பிலிப்பு சுவிசேஷகராகியிருக்கனும்! பிலிப்புதான் கந்தாகே மந்திரியை கிறிஸ்துவுக்குள் நடத்தி ஞானஸ்நானமும் கொடுத்தார்ன்னு அப்போஸ்தலர் 8:27-38 சொல்லுது பாஸ்டர்!
ஆவியானவர் ஒரு நிதிமந்திரிக்கே ஒரு சுவிசேஷகர கொண்டு ஞானஸ்நானம் கொடுத்திருக்கும் போது, நாம சாதாரண ஆட்களுக்குக்கூட ஞானஸ்நானம் கொடுக்க அவங்கள பயன்படுத்திக்காதது அநியாயம் இல்லயா பாஸ்டர்?
நம்ம சபைக்கு வர வி.ஐ.பிகளுக்கு நாமே ஞாஸ்நானம் கொடுக்கிறதில்லயே! ஸ்தாபனத் தலைவரோ, டிஸ்ட்டிரிக் பாஸ்டரோ வந்து ஞானஸ்நானம் கொடுக்க ஆறுமாசம் ஒருவருஷங்கூட காத்திருக்கிறோமே?
"சபை ஒழுங்கு" இன்றப் பேருல, வேதத்துக்கு முரணான சம்பிரதாயங்கள உருவாக்கி வச்சி, அதெல்லாம் சத்தியம் சார்ந்ததுதான்னு சபையார நம்பவச்சி, நமக்கு பின்னால வர ஊழியக்காரங்களுக்கும் தவறான மாதிரியக் காண்பிக்கிறது அக்கிரமம் இல்லயா பாஸ்டர்?
அக்கிரமத்திலும் அக்கிரமம் பாஸ்டர்!
கர்த்தர் நம்ம கண்ண தெறந்திருக்கயில, நாம இனி இந்த அக்கிரமங்களுக்கு உடன்படக்கூடாது பாஸ்டர்!
என்னப் பண்ணலாங்கிறீங்கப் பாஸ்டர்?
தேவனால் பயன்படுத்தப்படுகிற விசுவாசிகளுக்கு ஆதரவா இருப்போம்! அவங்க ஊழியத்த அங்கீகரிப்போம்!ஆதிசபை ஊழியருங்க விசுவாசிகள எந்த அளவுக்கு அனுமதிச்சிருக்காங்களோ, அந்த அளவுக்கு நாமும் அவங்கள சபையில, ஊழியத்துல அனுமதிப்போம்! மத்த அழைப்புள்ளவங்கள நமக்கு சமமா நடத்துவோம்!
மத்த ஊழியக்காரங்க நம்மள 'வேதப்புரட்டர்', 'கள்ளப்போதகர்', 'அந்திகிறிஸ்து' இன்னுலாம் முத்திரக்குத்துவாங்க, பாஸ்டர்ஸ் ஃப்பெல்லோஷிப்ல இருந்தும் வௌக்கப்படலாம்! பரவாயில்லயா?
பரலோகத்துல இருந்து வௌக்கப்படாத அளவுக்கு நாம ஊழியஞ்செய்யறதுதான் முக்கியம் பாஸ்டர்!
உண்மதான் பாஸ்டர்! யாரு என்னவேனுமுன்னாலும் சொல்லட்டும், நாம வேதமாதிரியா ஊழியத்தச் செய்ய முயற்சிப்போம்!
நிச்சயம் பாஸ்டர்! நாம எடுத்துவைக்கற இந்த அடி, வருங்கால ஊழியங்கள்ல நிச்சயம் ஒரு பெரிய மாற்றத்தை உண்டாக்கும்!
கர்த்தர் நம்மை பலப்படுத்துவாராக! பயன்படுத்துவாராக பாஸ்டர்!
ஆமென்! சந்திப்போம் பாஸ்டர்.
நன்றி! மீண்டும் சந்திப்போம்!!
ஊழியர்களின் சிந்தனைக்கு
க. காட்சன் வின்சென்ட்
8946050920
==========================
பாஸ்டர் டேவிட் & வின்சென்ட்
=========================
(5️⃣)
ப்ரெய்ஸ் த லார்ட் பாஸ்டர் வின்சென்ட்!
ப்ரெய்ஸ் த லார்ட் பாஸ்டர் டேவிட்!
இன்னைக்கு ஒரு முக்கியமான விஷயத்த உங்களோட பகிர்ந்துக்கப்போறேன் பாஸ்டர்.
கேக்க ஆவலா இருக்கேன் சொல்லுங்க பாஸ்டர்.
"தேவவசனம் விருத்தியடைந்தது. சீஷருடைய தொகை எருசலேமில் மிகவும் பெருகிற்று. *ஆசாரியர்களில் அநேகரும் விசுவாசத்துக்குக் கீழ்ப்படிந்தார்கள்"* இன்னு அப்போஸ்தலர் 6:7ல இருக்கறத படிச்சிருக்கீங்களா பாஸ்டர்?
படிச்சிருக்கேன் பாஸ்டர்.
ஆசாரியர்கள்ல அநேகர் விசுவாசத்துக்குக் கீழ்ப்படிஞ்சாங்க இல்லயா?
ஆமாம் பாஸ்டர்.
அவங்கள்லாம் கிறிஸ்தவரானப் பெறகும் ஆசாரியராவே இருந்திருப்பாங்களா பாஸ்டர்?
அப்போஸ்தலர் 6:7லியே சொல்லப்படற சீஷர் தொகைக்குள்ளதானே அவங்களும் வந்தாகனும்?
*"ஒரு யூதன் கிறிஸ்தவனானப் பிறகும்கூட தசமபாகம் கொடுக்கனுங்கிறகிற பிரமாணம் அவனுக்கு பொருந்தும்"* இன்னு நாம போதிக்கிறோம் இல்லயா?
ஆமாம், அது சரியான போதனதானே!
அப்படினா, *யூதரான ஒரு ஆசாரியர் கிறிஸ்தவரானப் பெறகும் தசமபாகம் வாங்கனுங்கிற பிரமாணம் அவருக்கும் பொருந்தும்* இல்லயா?
நம்ம உபதேசத்தின்படி பொருந்தியாகனும்!
யூதரான அப்போஸ்தலர்களும் யூதகிறிஸ்தவர்களும் கிறிஸ்தவராகிறதுக்கு முன்ன ஆசாரியருக்கு தசமபாகம் கொடுத்துகிட்டு வந்தவங்கத்தானே?
அதுல என்ன சந்தேகம்?
*கிறிஸ்தவரான யூதருங்க இப்பவும் தசமபாகம் கொடுக்கனும்னா, யூதரான ஆசாரியர் கிறிஸ்தவரானப் பெறகும் தசமபாகம் வாங்கியாகனும்* இல்லயா?
*யூதருங்க கிறிஸ்தவங்களானப்பின்னும் தசமபாகம் கொடுக்கனும்ங்கிற கட்டளைக்கு உட்பட்டிருந்தா, கிறிஸ்தவரான ஆசாரியரும் தசமபாகம் வாங்கற பிரமாணத்தின் கீழதான் இருந்தாகனும்!* அப்படிப்பாத்தா, ஆதி அப்போஸ்தலரும் யூத விசுவாசிகளும் கிறிஸ்தவங்களான ஆசாரியருக்கு தசமபாகம் கொடுக்கிறதுதானே நியாயம்?
கிறிஸ்தவரான ஆசாரியருக்கு அப்போஸ்தலரோ, எருசலேம் சபையிலிருந்த யூதவிசுவாசிகளோ, தசமபாகம் கொடுத்ததா வரலாறு உண்டா?
அப்படி ஒரு தகவலே பைபிள்ல இல்ல. ஒருகாலத்துல அப்போஸ்தலருக்கும் ஆசாரியராயிருந்தவங்க, கிறிஸ்தவரானப் பெறகு அவங்கக் கீழ விசுவாசியாத்தானே இருந்தாங்க. அப்பறம் எப்படி தசமபாகம் வாங்கற பிரமாணம் அவங்களுக்குப் பொருந்தியிருக்கும்?
*அப்படினா, தசமபாகம் கொடுக்கனுங்கிற பிரமாணம் மட்டும் கிறிஸ்தவர்களாயிட்ட யூதவிசுவாசிகளுக்கு எப்படி பொருந்தும்?*
நியாயமா பாத்தா பொருந்தாது பாஸ்டர். ஆனா, *"இவைகளையும் செய்யவேண்டும், அவைகளையும் விடாதிருக்கவேண்டும்"* இன்னு ஆண்டவர் சொல்லியிருக்காரு இல்லயா?
ஆண்டவர் அப்படி யாருகிட்ட சொன்னாரு?
மாயக்காரராகிய வேதபாரகர் பரிசேயர் கிட்டச் சொன்னதா மத்தேயு 23:23ல இருக்கு பாஸ்டர்.
நாம நடத்தர விசுவாசிங்க மாயக்காரராகிய வேதபாரகரும் பரிசேயருமா இருக்காங்களா?
சரி,... தசமபாகம் கொடுக்கிற பிரமாணத்துக்குக் கீழ இருந்த யூதரான வேதபாரகர் பரிசேயரிடம் ஆண்டவர் சொன்னதால, அது அவங்களுக்கு மட்டும்தான் பொருந்தும் இங்கறீங்களா?
கலாத்தியர் 4:5 சொல்றபடி, *ஆண்டவர் அப்போ நியாயப்பிரமாணத்துக்கு கீழானவராக தேவனால் அனுப்பப்பட்டிருந்ததனாலதான், நியாயப்பிரமாணத்துக்கு கீழாக இருந்தவங்களுக்கு: தசமபாகத்தை செலுத்துவதோடு, நீதியையும் இரக்கத்தையும் விசுவாசத்தையும் விட்டுவிடாதிருக்க ஆலோசனை சொல்லியிருக்காரு* பாஸ்டர்.
ஆண்டவர் நமக்கு சொல்லலன்னு எப்படி அவ்வளவு உறுதியா சொல்றீங்க பாஸ்டர்?
*ஆண்டவர் தம்மோட 12 சீஷர்களுக்கு தசமபாகத்தப் பத்தி ஏதாச்சும் போதிச்சதாவோ, தசமபாகம் கொடுக்கனுங்கிற கட்டளைய தம்மோட சபைக்கு கொடுத்ததாவோ வேதத்துல நாம பாக்கமுடியுமா?*
பாத்ததா நெனவில்ல.
*இயேசுவுடன் இருந்த அந்த மூன்றற வருஷத்துல ஒருமுறையாவது சீஷருங்க தசமபாகம் செலுத்தனதா தகவல் உண்டா?*
தகவல் இல்ல!
*ஆதிசபையில ஒரு ஊழியக்காரராவது தசமபாகம் வாங்கினதாவோ, ஒரு விசுவாசியாவது தசமபாகம் கொடுத்ததாவோ வேதத்துல ஆதாரம் இருக்கா பாஸ்டர்?*
ஆதாரம் இல்ல!
*நேரடியாகவோ, இல்ல நிருபங்கள் வழியாகவோ தசமபாகத்தப்பத்தி ஆதிசபை ஊழியருங்க விசுவாசிகளுக்கு உபதேசித்ததா நம்மால காமிக்கமுடியுமா?*
*"அன்றியும், மெல்கிசேதேக்கு ஆபிரகாமுக்கு எதிர்கொண்டுபோனபோது, லேவியானவன் தன் தகப்பனுடைய அரையிலிருந்தபடியால், தசமபாகம் வாங்குகிற அவனும் ஆபிரகாமின் மூலமாய்த் தசமபாகம் கொடுத்தான் என்று சொல்லலாம்"* இன்னு புதிய ஏற்பாட்டுல
எபிரேயர் 7:10ல சொல்லப்பட்டிருக்குதே பாஸ்டர்?
இஸ்ரவேல் ஜனங்க ஆசாரியருக்கு தசமபாகம் கொடுத்ததுப்பத்தி அங்க சொல்லப்படல, *இஸ்ரவேலின் 11 கோத்திரத்தாரிடம் தசமபாகம் வாங்கக் கட்டளைப் பெற்றிருந்த லேவிகோத்திரத்து ஆசாரியரே, ஆபிரகாம் மூலமாக மெல்கிசேதேக்குக்கு தசமபாகம் கொடுத்ததுபத்திதான் அங்க சொல்லப்படுது* பாஸ்டர்!
ஓ,... புதிய ஏற்பாட்டுல இருந்தாலும், இது புதிய ஏற்பாட்டு சபையார் தசமபாகம் கொடுக்கனும்ன்னு பேசலயா?
*லேவிகோத்திரத்து ஆசாரியரிடமே தசமபாகம் பெற்ற லேவிகோத்திரத்தானல்லாத மெல்கிசேதேக்கு அவர்களிலும் எவ்வளவு விசேஷித்தவரோ, அப்படியே மெல்கிசேதேக்கின் முறைமையின்படி பிரதான ஆசாரியரான யூதாகோத்திரத்து இயேசுகிறிஸ்து, லேவிகோத்திரத்து பிரதான ஆசாரியரிலும் பெரியவரா இருக்காருன்னு யூதகிறிஸ்தவங்களுக்கு வௌக்குவதுதான் அந்த வேதப்பகுதியின் நோக்கம்.* மத்தபடி
புதிய ஏற்பாட்டு சபையாரை தசமபாகம் கொடுக்கவைக்கனுங்கிறது அந்த நிரூபத்த எழுதனவரின் நோக்கம் இல்லங்கறத, எபிரேயர் ஏழாம் அதிகாரத்த முழுசும் படிச்சா புரிஞ்சிக்கலாம் பாஸ்டர்.
புதிய ஏற்பாட்டு சபைக்கு தசமபாகம் கொடுக்கனுங்கிற கட்டளை இல்லன்னாலும், மொதமொத தசமபாகம் கொடுத்த ஆபிரகாமின் ஆவிக்குரிய சந்ததியாரான நாம, தசமபாகம் கொடுக்கிறது தப்பு இல்லையே பாஸ்டர்.
*நம்மோட விசுவாசத் தகப்பன் ஆபிரகாமுக்கு தசமபாகம் கொடுக்கும்படி தேவன் கட்டளையிடவுமில்ல, எவரும் அவருக்கு தசமபாகத்தப்பத்தி உபதேசிக்கவும் இல்ல. அவரே உற்சாகமாக மெல்கிசேதேக்குக்கு தசமபாகம் கொடுத்தார். ஆபிரகாம் மெல்கிசேதேக்குக்கு மாசாமாசம் தசமபாகம் கொடுக்கலங்கறது கவனிக்கப்படவேண்டிய விஷயம்* பாஸ்டர்.
தசமபாகம் கொடுக்க விசுவாசிகள கட்டாயப்படுத்தக்கூடாது, அதப்பத்தி போதிக்கவேண்டிய அவசியமும் இல்ல, விசுவாசிகளே ஏவப்பட்டுக் கொடுத்தா வாங்கிக்கலாம் இங்கறீங்க?
*நாம உபதேசிக்காம, பயமுறுத்தாம, விசுவாசிகளா தங்கள் மனசுல நியமிச்சி விசுவாசத்தோட தசமபாகம் கொடுத்தாங்கனா வாங்கிக்கலாம்.* ஆகிலும் ஆதிசபை ஊழியர் பழைய ஏற்பாட்டுல எத எடுத்துக்கிட்டாங்களோ, அதமட்டும் நாம எடுத்துகிட்டாபோதும். அவங்க எத எடுத்துக்கிலியோ அத நாமளும் எடுத்தக்கவேண்டிய அவசியம் இல்ல பாஸ்டர்!
அப்ப, *தசமபாகம் கொடுத்தா வானத்தின் பலகணி தெறக்கப்படும்ன்னும், கொடுக்கலனா சாபம் வரும்ன்னும் விசுவாசிகள நாம பயமுறுத்தக்கூடாது* இல்லீங்களா?
*ஆதிசபை ஊழியர்கள்ல எவராவது அப்படி பயமுறுத்தியிருந்தா நாமளும் பயமுறுத்தலாம்* பாஸ்டர்.
ஒரு ஊழியக்காரர் தசமபாகம் கொடுக்காத விசுவாசிக்கு, அந்தமாசம் திருவிருந்து கொடுக்கிறதில்லன்னு கேள்விப்பட்டேன் பாஸ்டர்!
இப்படி ஒரு உபதேசம் புதிய ஏற்பாட்டு சபைக்கு உண்டா பாஸ்டர்?
கடந்த லாக்டவுன் நேரத்துல நாலுமாசம் வீட்டு வாடகக்கூட கொடுக்கமுடியாம, சாப்பாட்டுக்கே வழியில்லாம, தசமபாகம் கொடுக்கத்தவறிய விதவையான ஒரு ஏழ விசுவாச சகோதரிய: *"கடன் வாங்கியாவது நீ தசமபாகத்தக் கொடுத்தாதான் கர்த்தர் உன்ன ஆசீர்வதிப்பார்"* இன்னு அவங்களோட ஊழியக்காரர் கடிஞ்சிக்கிட்டதா ஒரு செய்தி உலாவந்தது ஞாபகமிருக்கா பாஸ்டர்?
ஞாபகம் இல்லாமலாப் போகும்? *இவ்வளவு இரக்கமில்லாத ஒரு ஊழியக்காரர நாம ஆதிசபையில பாக்கமுடியுமா* பாஸ்டர்?
இதுல இன்னொரு கொடும இன்னான்னா? *"உங்களுக்கு யார் அப்பமும் திராட்சரசமும் தரங்களோ அவங்களுக்குத்தான் நீங்க தசமபாகம் தரவேண்டும், கண்ட இடங்களிலெல்லாம் பலிசெலுத்தக் கூடாது"* இங்கற ஒரு உபதேசம் சபைகளில் பிரசித்தம் இல்லையா?
ஆபிரகாம் தனக்கு அப்பமும் திராட்சரசமும் கொடுத்த மெல்கிசேதேக்குக்கு தசமபாகம் கொடுத்தார் இல்லையா? அதவச்சி இப்படி உபதேசிக்கிறாங்க பாஸ்டர்.
*விசுவாசிங்க பாஸ்டரத் தவர வேற எந்த அழைப்புள்ளவருக்கும் தசமபாகத்த கொடுத்துடக்கூடாதுங்கறதுதானே* இந்த உபதேசத்தின் நோக்கம்?
ஆமாம், நாமளும் பல வருஷமா அப்படித்தானே உபதேசிச்சிக்கிட்டு வர்றோம்?
டெஃபனைட்டா!
தசமபாகம் வாங்கறது ஒரு பேச்சிக்கு சரின்னே வச்சிகிட்டாலும்: எபேசியர் 4:13; அப்போஸ்தலர் .1:26; 11:27; 13:1; 15:2,32-34; 21:8-12ல நாம ஏற்கனவே பாத்தபடி ஐந்துவித அழைப்புள்ளவரும் சபை ஊழியம் செய்யலாங்கறதுனால, அனைத்து அழைப்புள்ளவரும் சபை நடத்தி, தசமபாகம் வாங்கலாம் இல்லையா?
பாஸ்டருங்க சபை நடத்தி தசமபாகம் வாங்கலாம்னா, தேவனால சபைக்கு ஏற்படுத்தப்பட்டிருக்கிற மத்த அழைப்புள்ளவங்களும் சபை நடத்தி தசமபாகம் வாங்கறதுல தப்பில்லையே!
*ஆதிசபையில இருந்த அஞ்சிவிதமான அழைப்புள்ள ஊழியரும் சபையார் தங்களுக்கு தசமபாகம் கொடுக்கனும்ன்னு பேசாதபோது, வாங்காதபோது, நாம மட்டும் பேசறதும் வாங்கறதும் தப்பு இல்லயா பாஸ்டர்?*
வாங்கிப் பழகிட்ட பலருக்கு இது தப்புன்னே தெரியாது பாஸ்டர். தப்புன்னு தெரிஞ்சாலும் பலர் மாத்திக்கமாட்டாங்க!
*தசமபாகம் கொடுக்குறதப்பத்தின பழைய ஏற்பாட்டு வசனங்கள விசுவாசிகளுக்கு கண்டிப்பா போதகிக்கிற நாம, வாங்கறதப்பத்தின வசனங்கள கடபிடிக்கிறதே இல்லயே* பாஸ்டர்?
என்ன சொல்றீங்க?
*எண்ணாகமம் 18:26-28ன்படி, தசமபாகத்த விசுவாசிங்கக்கிட்ட சீனியர் பாஸ்டர் நேரடியாக வாங்கவே கூடாது. அசிஸ்டன்ட் பாஸ்டருங்க விசுவாசிங்கக்கிட்ட தசமபாகத்தை வாங்கி, அவங்க சமமா பிரிச்சிகிட்டு, தங்களுக்கு வர்றதுலருந்து பத்துல ஒருபங்க சீனியர் பாஸ்டருக்குக் கொடுக்கனும்.* சீனியர் பாஸ்டர்கள் விசுவாசிங்கக்கிட்ட நேரடியாக தசமபாகத்த வாங்கி, ஜீனியர் பாஸ்டர்களுக்கு தாங்கள் நெனச்சபடி கொடுக்கிறது, தசமபாகத்த குறித்தப் பிரமாணத்த மீற்றதாகும்!
புதிய ஏற்பாட்டு சபையில தசமபாகம் வாங்கக் கட்டளையே இல்லாதபோது, ஜீனியர் பாஸ்டர், சீனியர் பாஸ்டர், யாரு வாங்கனாலும் வேதத்துக்கு முரணானக் காரியந்தானே பாஸ்டர்?
இதப்பத்தி நாம ரெண்டுபேரு மட்டும்தான் பேசிக்கனும் பாஸ்டர். வெளியில சொன்னம்னா நமக்கு 'வேதப்புரட்டர்', 'கள்ளப்போதகர்', 'திருச்சபைகளின் எதிரி' இன்னெல்லாம் பட்டம் கொடுத்துடுவாங்க பாஸ்டர்!
*"தசமபாகம் இல்லனா ஊழியக்காரங்க எப்படி சாப்டமுடியும்? எப்படி ஊழியம் செய்யமுடியும்? எப்படி சபை வளரும்? எப்படி சுவிசேஷம் அறிவிக்கமுடியும்?"* இன்னு நாமளே ஒருகாலத்துல கேட்டோம் இல்லீங்களா?
*தசமபாகத்தாலத்தான் நாம பொழைக்கிறோம்,ஊழியம் வளருது, சபை வளருதுன்னு நாம நெனச்சம்னா, நாம தேவன்மேல சரியா நம்பிக்க வைக்கலன்னுதானே அர்த்தம்* பாஸ்டர்?
விசுவாசிகள் தசமபாகம் கொடுக்கலனா ஊழியரின் தேவைகள், ஊழியத்தின் தேவைகள் எப்படி சந்திக்கப்படும் பாஸ்டர்?
*ஊழியக்காரங்களத் தாங்கறதப்பத்தின புதிய ஏற்பாட்டு உபதேசங்கள சபையில போதிச்சா, நம்ம தேவைகள், ஊழியத்தேவைகள் நிச்சயம் சந்திக்கப்படும்* பாஸ்டர்.
புதிய ஏற்பாட்டு ஊழியருக்கு கொடுக்கறதப்பத்தி ஆண்டவர் என்ன போதிச்சிருக்காரு பாஸ்டர்?
*நாம புதுசா ஊழியஞ்செய்யப் போற எடங்கள்ல நம்ம ஆதரிக்கிறதுக்கு பாத்திரமான சிலர் இருப்பதா ஆண்டவர் நம்பிக்கயூட்றத* மத்தேயு 10:9-13ல பாக்கலாம் பாஸ்டர்.
அருமை!
*நம்மல ஏத்துகிட்டு ஆதரிக்கிறவங்கள ஆசீர்வதிப்பதா ஆண்டவர் வாக்குப்பண்ணியிருக்கிறத* மத்தேயு 10:40-42ல பாக்கலாம் பாஸ்டர்.
அற்புதம்!
*ஆண்டவரால் ஊழியத்துக்கு அனுப்பப்பட்டு, திரும்பிவந்த அப்போஸ்தலர் தங்களுக்கு ஒன்னும் கொறைவுபடலன்னு கொடுத்த அறிக்கய* லூக்கா 22:35ல பாக்கலாம் பாஸ்டர்.
வொண்டர்ஃபுல்!
பிலிப்பியர் 4:10-12ல பவுல் சொல்றபடி: *சபையார் நமக்கு கொடுத்தாலும் கொடுக்காவிட்டாலும், எந்த நிலைமையிலிருந்தாலும் மனரம்மியமாயிருக்க நாம கத்துக்கனும்; தாழ்ந்திருக்கவும், வாழ்ந்திருக்கவும், எவ்விடத்திலும் எல்லாவற்றிலும் திருப்தியாயிருக்கவும் பட்டினியாயிருக்கவும், பரிபூரணமடையவும் குறைவுபடவும் நாம கிறிஸ்துவால் போதிக்கப்பட்டிருக்கனும்* பாஸ்டர்.
உண்மதான் ஐயா, பிலிப்பியர் 4:12,13ல பவுல் சொல்றபடி: *நம்மைப் பெலப்படுத்துகிற கிறிஸ்துவினாலே தாழ்ந்திருக்கவும், வாழ்ந்திருக்கவும், எவ்விடத்திலும் எல்லாவற்றிலும் திருப்தியாயிருக்கவும் பட்டினியாயிருக்கவும், பரிபூரணமடையவும் குறைவுபடவும் நமக்குப் பெலனுண்டு* இல்லையா?
சரியா சொன்னீங்க ஐயா.
புதிய ஏற்பாட்டு ஊழியருக்குக் கொடுக்கிறதபத்தி
அதி அப்போஸ்தலர் என்ன போதிச்சிருக்காங்க பாஸ்டர்?
*விசுவாசிகளுக்கு ஞானநன்மைகளை விதைத்திருக்கிற தங்களுக்கு, அவர்களுடைய சரீரநன்மைகளை அறுக்க அதிகாரம் உண்டுன்னு* பவுல் சொல்றத 1 கொரிந்தியர் 9:7-12 ல பாக்கலாம் பாஸ்டர்.
அருமை!
ஆசாரிய ஊழியஞ்செய்கிறவர்கள் தேவாலயத்திற்குரியவைகளில் புசிக்கிறதுபோலவும், பலிபீடத்தை அடுத்துப் பணிவிடை செய்கிறவர்களுக்குப் பலிபீடத்திலுள்ளவைகளில் பங்கு உள்ளதுபோலவும்,
*சுவிசேஷத்தை அறிவிக்கிறவர்களுக்குச் சுவிசேஷத்தினாலே பிழைப்பு உண்டாகவேண்டுமென்று கர்த்தர் கட்டளையிட்டிருக்கிறதா* பவுல் சொல்றத 1 கொரிந்தியர் 9:13,14ல பாக்கலாம் பாஸ்டர்.
அற்புதம்!
கொரிந்தியர் 9:12 & 14ல பவுல் சொல்றபடி: *நமக்குள்ள அதிகாரத்தின்படி விசுவாசிகளிடம் நன்மைகளைப் பெறலாம்; அல்லது பெறாமலும் இருக்கலாம்!*
வேற உபதேசம்
ஏதாச்சிம் உண்டா?
*"திருவசனத்தில் உபதேசிக்கப்படுகிறவன் உபதேசிக்கிறவனுக்குச் சகல நன்மைகளிலும் பகிர்ந்து கொடுக்கக்கடவன்"* இன்னு கலாத்தியர் 6:6லயும்; *"நன்றாய் விசாரணைசெய்கிற மூப்பர்களை, விசேஷமாகத் திருவசனத்திலும் உபதேசத்திலும் பிரயாசப்படுகிறவாகளை, இரட்டிப்பான கனத்திற்கு (பணத்திற்குப்) பாத்திரராக எண்ணவேண்டும். போரடிக்கிற மாட்டை வாய்க்கட்டாயாக என்றும், வேலையாள் தன் கூலிக்குப் பாத்திரனாயிருக்கிறான் என்றும், வேதவாக்கியம் சொல்லுகிறதே"* இன்னு 1 தீமோத்தேயு 5:17,18லயும் பவுல் சொல்லியிருக்கிறார் பாஸ்டர்.
புதிய ஏற்பாட்டுல இவ்வளவு உபதேசம் இருக்கா?
*கிரேத்தாத்தீவு சபைகள பார்வையிடவந்த நியாயசாஸ்திரியாகிய சேனாவுக்கும் அப்பொல்லோவுக்கும் ஒரு குறைவுமில்லாதபடிக்கு அவர்களை ஜாக்கிரதையாய் விசாரித்து வழிவிட்டனுப்பும்படி* கிரேத்தாத்தீவு சபைகளின் மேற்பார்வையாளர் தீத்துவுக்கு பவுல் கட்டளையிட்றத தீத்து 3:13ல பாக்கலாம்.
வேற உதாரணங்கள் ஏதாச்சும் உண்டா?
*கொரிந்து சபையை ஸ்தாபிக்க மற்றச் சபைகள்கிட்ட சம்பளத்தப் பெற்றத* பவுல்
2 கொரிந்தியர் 11:8ல பதிவிட்டிருக்கிறதப் பாக்கலாம். *புறஜாதியார் மத்தியில் எந்த ஆதாயமும் இல்லாமல் ஊழியம் செஞ்சிட்டுவந்த சுவிசேஷக் குழுவினருக்கு தேவையான கனத்த செஞ்சி அனுப்பும்படி ஒரு சபையின் மூப்பன் காயுவை அப்போஸ்தலர் யோவான் கேட்டுகிறத* 3 யோவான் 1:5-8ல பாக்கலாம் பாஸ்டர்.
ஊழியருக்குக் கொடுக்கிறதபத்தி இத்தனை உபதேசங்களும் உதாணங்களும் புதிய ஏற்பாட்டில் இருக்க, நம்ம ஆட்கள் புதிய ஏற்பாட்டு சபைக்கு சம்பந்தமில்லாத தசமபாகத்தப்பத்தி பிரதானமாப் போதிக்கிறது ஏன் பாஸ்டர்?
*எத்தன ஆயிரம், லட்சம், கோடி தசமபாகம் நமக்கு வந்தாலும்: அத நாம நம்மோட தனிப்பட்டக் காரியங்களுக்கு பயன்படுத்திக்கலாம். நாம விருப்பப்பட்டா ஊழியத்துக்கும் செலவுபண்ணலாம். தசமபாகத்த எடுத்து கண்டிப்பா சபை மற்றும் ஊழியத் தேவைகளுக்கு செலவழிக்கனும்ன்னு அவசியமில்ல!* ஆனா, காணிக்கைய எப்படி செலவுபண்றங்கிறத விசுவாசிங்க விழிப்பா வாட்ச்பண்ணுவாங்க, கேள்வியும் கேப்பாங்க. *அதனாலத்தான் நாம காணிக்கய தனியா எடுக்குறோம், தசமபாகத்த தனியா வாங்கிக்கிறோம்!*
பல சபைகள்ல ஒரு மாசத்துல வர காணிக்கையவிட தசமபாகம்தானே அதிகம் பாஸ்டர்?
*ஊழியருக்கு வருமானம் அதிகம்! ஊழியத்துக்கு வருமானம் கொஞ்சம்!!*
ஆத்துமாக்கள் கொறைவா இருந்தாலும், ஊழியத்திற்கு தேவையானப் பணம் இல்லாவிட்டாலும், ஊழியமே நடக்காவிட்டாலும், நாம பசையோட இருக்க இதுதானே காரணம் பாஸ்டர்?
சரியா புரிஞ்சிவச்சிருக்கீங்க பாஸ்டர்.
*நம்ம வசதிய பெருக்கிக்க புதிய ஏற்பாட்டு சபைக்கு கட்டளையிடப்படாத தசமபாகத்தபத்தி பிரசங்கித்து, தவறாம தசமபாகத்தவாங்கி, சுகபோகமா வாழறது கொடிய வஞ்சகம் இல்லயா* பாஸ்டர்?
*தசமபாகம் கொடுக்காதவங்க இல்ல, இப்போ தசமபாகம் வாங்கறவங்கதான் தேவனை அதிகமா வஞ்சிக்கிறோம்* பாஸ்டர்!
*"நாங்க தசமபாகத்த ஊழியத்துக்குத்தான் செலவுபண்றோம்"* இன்னு சிலர் சொன்னாலும், இது ஆதிசபை ஊழியருங்க நமக்குக் காட்டின மாதிரியில்ல இல்ல பாஸ்டர்?
*ஆதிசபை ஊழியர்களுடைய மாதிரிய பின்பற்றி ஊழியஞ்செஞ்சா நாம செய்யற ஊழியம் தேவனுக்கானதா இருக்கும்! நம்ம இஷ்டப்படி செய்யற ஊழியம்ன்னா அது நிச்சயம் நமக்கும் நம்ம குடும்பத்துக்கும் செய்யற ஊழியமா மட்டுமே இருக்கும்!*
இனி தேவனுக்காக மட்டுமே ஊழியஞ்செய்ய நம்ம நம்ம அர்ப்பணிப்போம் பாஸ்டர்.
நிச்சயமா ஐயா, கர்த்தர் நம்ம பலப்படுத்துவாராக! மறுபடியும் சந்திப்போம்!!
ஊழியர்களின் சிந்தனைக்கு உடன் ஊழியன்
க. காட்சன் வின்சென்ட்
8946050920
===========================
பாஸ்டர் டேவிட் & வின்சென்ட்
============================
(6️⃣)
ப்ரெய்ஸ் த லார்ட் பாஸ்டர் வின்சென்ட்!
ப்ரெய்ஸ் த லார்ட் பாஸ்டர் டேவிட்!
தீவிரமான ஒரு சிந்தன ரேக உங்க மொகத்துல தெரிதே?
ஆமாம் பாஸ்டர், அப்போஸ்தலர் நடபடிகள்ல கவனிச்ச ஒரு காரியம் என்ன ரொம்ப சிந்திக்கவச்சிடுச்சி பாஸ்டர்.
அப்படி எதை ஆழமா கவனிச்சீங்க பாஸ்டர்?
அப்போஸ்தலர் 2:44,45ல, *"விசுவாசிகளெல்லாரும் ஒருமித்திருந்து, சகலத்தையும் பொதுவாய் வைத்து அநுபவித்தார்கள். காணியாட்சிகளையும் ஆஸ்திகளையும் விற்று, ஒவ்வொருவனுக்கும் தேவையானதற்குத்தக்கதாக அவைகளில் எல்லாருக்கும் பகிர்ந்துகொடுத்தார்கள்"* இன்னு இருக்குது இல்ல, அதப்பத்திதான் யோசிச்சிக்கிட்டிருக்கிறேன் பாஸ்டர்.
அதப்பத்தி என்ன யோசிக்கிறீங்க பாஸ்டர்?
நம்மத் தலைமுறையில, நம்ம சபையிலயோ, வேற எந்த சபையிலயோ விசுவாசிங்க இப்படிச் செஞ்சதப் பாத்திருக்கிறோமா? இல்ல கேள்விப்பட்டுதான் இருக்கிறோமா பாஸ்டர்?
அப்போஸ்தலர் 2:42 சொல்றபடி, *எருசலேம் சபையார் அப்போஸ்தலருடைய உபதேசத்திலயும், அந்நியோந்நியத்திலயும், அப்பம் பிட்கறதலயும், ஜெபம்பண்றதலயும் உறுதியாத் தரிச்சிருந்ததுதான்* அதுக்குக் காரணம் பாஸ்டர்.
நம்ம சபையார்
உபதேசம், அந்நியோந்நியம், அப்பம் பிட்குதல், ஜெபம்பண்ணுதல்ம், இந்த நாலு விஷயத்துல ஒன்னுலயாவது உறுதியா தரிச்சிருக்குறாங்களா பாஸ்டர்?
இந்த நாலு காரியத்துல ஒன்னையாவது சத்தியத்தின்படி அவங்களுக்கு நாம உருபடியா போதிச்சிருக்கறமா பாஸ்டர்?
நீங்கக் கேக்கறதும் நியாயந்தான் பாஸ்டர். நாம என்னைக்காவது *இருக்கிற விசுவாசிகள் இல்லாத விசுவாசிகளுக்கு கொடுத்து உதவனும்ன்னு* சபையில போதிச்சிருக்கறமா?
நமக்கும் நம்ம ஊழியத்துக்கும் கொடுக்கறதப்பத்தி போதிக்கவே நமக்கு நேரம் பத்தலயே பாஸ்டர்!
*"விசுவாசிகளாகிய திரளான கூட்டத்தார் ஒரே இருதயமும் ஒரே மனமுமுள்ளவர்களாயிருந்தார்கள். ஒருவனாகிலும் தனக்குள்ளவைகளில் ஒன்றையும் தன்னுடையதென்று சொல்லவில்லை, சகலமும் அவர்களுக்குப் பொதுவாயிருந்தது"* இன்னு அப்போஸ்தலர் 4:32ல சொல்லப்பட்டிருக்கிறதப் பாத்து நான் அசந்துட்டேன் பாஸ்டர்!
என்ன, கண்ணசந்துட்டீங்களா?
காமடிப்பண்ணாதீங்க பாஸ்டர். *திரளான ஜனம், ஒரே இருதயம்! எதுவும் நமதல்ல, எல்லாருக்கும் உரியது!!* இந்த அனுபவத்த நம்ம சபைகள்ல பாக்கமுடியுதா?
எருசலேம் சபையில 8120 பேருக்குமேல அப்ப இருந்தாங்க. ஆனா அவங்க ஒரே இருதயமுள்ளவங்களா இருந்தாங்க! நம்மகிட்ட இருக்கிற அம்பதுபேருக்கு 5000 இருதயம் இருக்கே பாஸ்டர்? *"என் பணம் பொருள் ஆஸ்தி சபையிலுள்ள எல்லாருக்குமானது"* இன்னு நெனைக்கிற ஒரு ஆளு இங்க ஏது பாஸ்டர்?
இதுக்கெல்லாம் காரணம் யாரு பாஸ்டர்?
வேறயாரு? ஊழியக்காரங்களான நாமதான் பாஸ்டர்! *நம்மோட பணம் பொருள் ஆஸ்தி சபையிலுள்ள எல்லாருக்குமானதுன்னு மொதல்ல நாம நெனைக்கிறமா? போதிக்கவாவது செய்யறமா?*
பொதுவுடமை கொள்கையின் பிறப்பிடம் தேவனுடைய திருச்சபைதானே பாஸ்டர்? *இன்னக்கி கம்யூனிஸ்ட் கட்சிக்காரங்கக்கிட்ட இருக்கிற பொதுவுடமை சிந்தையில கால்பாகமாவது நமக்கும், சபையாருக்கும் இருக்கா?*
அப்போஸ்தலர் 3:6ல பாக்கறபடி
*வெள்ளியையும் பொன்னையும் (பணத்தை) பெருசா நெனைக்காம, இயேசுகிறிஸ்துவ பெருசா நெனைக்கிற பேதுரு போன்ற ஊழியக்காரங்களாலத்தான் சகலத்தையும் பொதுவா வச்சி அநுபவிக்கிறதபத்தி போதிக்கமுடியும், வாழவும் முடியும்* பாஸ்டர்!
1தீமோத்தேயு 6:9,10 சொல்றபடி: *ஐசுவரியவான்களாகனுங்கிற விருப்பமும், பணஆசையும் உள்ளவங்களால பொதுநல சிந்தையோட வாழவோ, போதிக்கவோ முடியாது* இங்கறீங்க?
சந்தேகமே இல்ல!
3120 பேர்களுக்குமேல அங்கத்தினர்களா இருந்த ஒரு திருச்சபையின் *மூத்த ஊழியரா இருந்தும், "வெள்ளியும் பொன்னும் (பணம்) என்னிடத்திலில்லை" இன்னு பேதுரு சொன்னது* இன்னைக்கு அதிசயத்திலும் அதிசயம் இல்லையா பாஸ்டர்?
அப்படி இருந்ததனாலத்தான் *இன்னைக்கு நம்மல்ல எவரும் செய்யமுடியாத அதிசயத்த அவரால செய்யமுடிஞ்சது* பாஸ்டர்.
இதுவும் கவனிக்கப்படவேண்டிய விஷயந்தான் பாஸ்டர்.
எருசலேம் சபையார்ல நிலங்களையும் வீடுகளையும் உடையவங்க அவைகள வித்து, விக்கப்பட்டவைகளின் கிரயத்தக் கொண்டுவந்து எங்க வச்சதா அப்போஸ்தலர் 4:34,35 சொல்லுது பாஸ்டர்?
*"அப்போஸ்தலருடைய பாதத்திலே வைத்தார்கள்"* இன்னு இருக்கு பாஸ்டர்.
ஆதி அப்போஸ்தலர் பணத்துக்கு கொடுத்த மரியாத அவ்வளவுதான்!
நாம பணத்துக்கு நம்ம தலைக்குமேல இல்ல எடங்கொடுக்கிறோம்!
தங்கள் பாதத்திலே வைக்கப்பட்ட நிலம், வீடு இவைகளின் கிரயத்த அப்போஸ்தலர் என்ன பண்ணதா அப்போஸ்தலர் 4:35 சொல்லுது பாஸ்டர்?
*"அவனவனுக்குத் தேவையானதற்குத்தக்கதாய்ப் பகிர்ந்துகொடுக்கப்பட்டது. அவர்களில் ஒருவனுக்கும் ஒன்றும் குறைவாயிருந்ததில்லை"* இன்னு சொல்லுது பாஸ்டர்?
இன்னக்கி விசுவாசிங்க நிலங்களையும் வீடுகளையும் வித்து, விக்கப்பட்டவைகளின் கிரயத்தக் கொண்டுவந்து நம்ம பாதத்துல வச்சா என்ன நடக்கும்?
*அது அப்படியே நம்ம பேருல நிலங்களா, வீடுகளா மாறிடும், நமக்கு ஒன்றும் குறைவாயிருக்காது* பாஸ்டர்!
இதுதான் நமக்கும் ஆதிசபை ஊழியர்களுக்கும் உள்ள வித்தியாசம்!
இன்னுங்கொஞ்சம் புரியறமாதிரி சொல்லுங்க பாஸ்டர்.
ஆதிசபை ஊழியருங்க ஏழ விசுவாசிகளோடக் குறைவுகள எப்படி நெறைவாக்கனாங்க?
இருக்கிற விசுவாசிங்கக்கிட்டருந்து வாங்கி, இல்லாதவங்களுக்கு கொடுத்து நெறைவாக்கனாங்க.
ஏழ விசுவாசிங்க நம்மகிட்ட தங்களோட தேவய சொல்லி, ஜெபிக்கக் கேட்டிருந்தா, நாம என்னபண்ணியிருப்போம்?
*"எவ்வளவு கஷ்டமா இருந்தாலும் தசமபாகத்த தவறாம கரக்டா கொடுத்துட்டீங்கனா, கர்த்தர் உங்கள இடங்கொள்ளாமப்போகுமட்டும் ஆசீர்வதிப்பார்"* இன்னு சொல்லி அனுப்பியிருப்போம் பாஸ்டர்.
இப்ப புரியுதா ஆதிசபை ஊழியருக்கும் நமக்கும் உள்ள வித்தியாசம்?
நல்லா புரியுது பாஸ்டர்! ஒரு சபையில விசுவாசிங்க லோனுக்கு பிடித்தம்போக வரும் சம்பளத்துல இருந்து கொடுக்கிற தசமபாகத்த வாங்காம, முழுசம்பளத்தக் கணக்குபண்ணி அதுலருந்து தசமபாகத்த கண்டிஷனா வாங்கி, அவங்கள ரொம்பக் கொடுமபடுத்தறாரு பாஸ்டர்!
ஆதிசபையில இப்படி ஒரு ஊழியர நம்மாலப் பாக்கமுடியுமா?
*ஆதிசபை ஊழியருங்களப்பத்தி இன்னைய கிறிஸ்தவங்களுக்கு சரியா தெரிஞ்சிட்டா, நம்மளல்லாம் ஊழியக்காரங்களா மதிக்கவேமாட்டாங்க* பாஸ்டர்!
ஆதிசபயபத்தி நம்ம சபை மக்களுக்கு தெரியாதவரைக்கும் நமக்கு பிரச்சனயில்ல பாஸ்டர்.
ஏழை விசுவாசிகளின் திருமணம், படிப்பு, உணவு, உடை, தொழில் இவைகளுக்கு பணக்கார விசுவாசிங்க தங்களோட பங்களிப்ப கொடுக்கனும் இல்லையா பாஸ்டர்?
கொடுக்கனுங்றதவிட, ஊழியக்காரங்க கொடுக்கவைக்கனும் பாஸ்டர்.
*"நன்மைசெய்கிறதில் சோர்ந்துபோகாமல் இருப்போமாக.* நாம் தளர்ந்து போகாதிருந்தால் ஏற்றகாலத்தில் அறுப்போம்.
*ஆகையால்* நமக்குக் கிடைக்கும் சமயத்திற்குத்தக்கதாக, *யாவருக்கும், விசேஷமாக விசுவாச குடும்பத்தார்களுக்கும், நன்மைசெய்யக்கடவோம்"* இன்னு
கலாத்தியர் 6:9,10ல பவுல் போதிச்சதுபோல நாமும் சபையாருக்கு போதிக்கனும் இல்லையா பாஸ்டர்?
கலாத்தியர் 6:6ல, *"திருவசனத்தில் உபதேசிக்கப்படுகிறவன் உபதேசிக்கிறவனுக்குச் சகல நன்மைகளிலும் பகிர்ந்து கொடுக்கக்கடவன்"* இன்னு ஊழியருக்குக் கொடுக்கிறதப்பத்திப் போதிக்கிற பவுல்: கலாத்தியர் 6:10ல *"நமக்குக் கிடைக்கும் சமயத்திற்குத்தக்கதாக, யாவருக்கும், விசேஷமாக விசுவாச குடும்பத்தார்களுக்கும், நன்மைசெய்யக்கடவோம்"* இன்னு மற்றவர்களுக்கும், குறிப்பாக விசுவாச குடும்பத்தாருக்கும் கொடுக்கிறதப்பத்தி போதித்திருக்கிறதுதான், *கொடுக்கறதப்பத்தின சமநிலைபோதகம்* பாஸ்டர்.
*"பரிசுத்தவான்களுடைய (ஊழியர் & விசுவாசிகளுடைய) குறைவில் அவர்களுக்கு உதவிசெய்யுங்கள்"* இன்னு ரோமாபுரி சபைக்கும் பவுல் ஆலோசன கொடுக்கிறத
ரோமர் 12:13ல பாக்கலாம் பாஸ்டர்.
*மக்கெதோனியா நாட்டுச் சபைகள் மிகுந்த உபத்திரவத்தினாலே சோதிக்கப்பட்டு, கொடிய தரித்திரமுடையவர்களாயிருந்தும், பரிபூரண சந்தோஷத்தினாலே, யூதேயாவில் பஞ்சத்தில் பாதிக்கப்பட்ட பரிசுத்தவான்களுக்கு மிகுந்த உதாரத்துவமாய்க் கொடுத்ததை* கொரிந்து சபைக்கு நினைப்பூட்டி, *அவங்களும் உற்சாகமாய் கொடுக்கும்படி பவுல் ஆலோசன கொடுப்பத* 2கொரிந்தியர் 7 & 8ஆம் அதிகாரங்கள்ல பாக்கலாம் பாஸ்டர்.
மக்கதோனிய சபைகள் மிகுந்த உபத்திரவத்தினாலே சோதிக்கப்படுகையில், கொடிய தரித்திரமுடையவர்களாயிருந்தும், தங்கள் பரிபூரண சந்தோஷத்தினாலே மிகுந்த உதாரத்துவமாய்க் கொடுக்கக் காரணம், அவங்களுக்கு பவுல் கொடுத்த உபதேசம்தானே பாஸ்டர்?
அதுல சந்தேகமே இல்ல பாஸ்டர்.
நமக்குன்னு கேட்டா சபையார் கொடுத்துடுவாங்க பாஸ்டர். ஏழ விசுவாசிங்களுக் கொடுக்கசொன்னா கொடுப்பாங்களா?
ஏழ விசுவாசிகளுக்குகொடுக்கும்படி கேக்கவோ, கெஞ்சவோக் கூடாது பாஸ்டர். 1 தீமோத்தேயு 6:17-19ல பவுல், *"இவ்வுலகத்திலே ஜசுவரியமுள்ளவர்கள் .... நன்மைசெய்யவும், நற்கிரியைகளில் ஐசுவரியவான்களாகவும், தாராளமாய்க் கொடுக்கிறவர்களும், உதாரகுணமுள்ளவர்களுமாயிருக்கவும் .... அவர்களுக்குக் கட்டளையிடு"* இன்னு தீமோத்தேயுவுக்கு சொல்லுகிறபடி, ஏழை விசுவாசிகளுக்கு உதவிசெய்ய பணக்கார விசுவாசிகளுக்கு நாம கட்டளையிடனும் பாஸ்டர்.
நமக்கு தசமபாகம் கொடுக்கலனா சாபம் வரும்ன்னு தைரியமா சொல்லி, தவறாம வாங்கிக்கிற நாம; ஏழ விசுவாசிகளுக்கு கொடுக்கக் கட்டளையிட்டு, கொடுக்கவும் வைக்கிறதுதானே நியாயம்?
யாக்கோபு 1:27ல, *"திக்கற்ற பிள்ளைகளும் விதவைகளும் படுகிற உபத்திரவத்திலே அவர்களை விசாரிக்கிறதும்,..... பிதாவாகிய தேவனுக்குமுன்பாக மாசில்லாத சுத்தமான பக்தியாயிருக்கிறது'* இன்னு யாக்கோபு சொல்லுவதுபோல சொல்லவும்; யாக்கோபு 2:15-17ல, *"ஒரு சகோதரனாவது சகோதரியாவது வஸ்திரமில்லாமலும் அநுதின ஆகாரமில்லாமலும் இருக்கும்போது,*
உங்களில் ஒருவன் அவர்களை நோக்கி: நீங்கள் சமாதானத்தோடே போங்கள், குளிர்காய்ந்து பசியாறுங்கள் என்று சொல்லியும், *சரீரத்திற்கு வேண்டியவைகளை அவர்களுக்குக் கொடாவிட்டால் பிரயோஜனமென்ன?"* இன்னு யாக்கோபு கேக்கறதுபோல விசுவாசிகளக் கேக்கவும் நமக்கு தைரியம் வேணும் பாஸ்டர்.
தைரியம் மட்டுமில்ல பாஸ்டர், *நாம நடத்தற ஜனங்கள்மேல நமக்கு உண்மையான அன்பும், அக்கறையும், ஏழை விசுவாசிகளின் தேவைகளக்குறிச்ச பாரமும் அவசியம்* பாஸ்டர்!
உண்மதான் பாஸ்டர். சில காரியங்கள்ல விசுவாசிகள எந்த எல்லைக்கும் போய் திட்ற அளவுக்கு தைரியமுள்ள நமக்கு: ஏழை விசுவாசிகள்மேல உண்மையான அன்பு இல்லாததுதான் அவங்களுக்கு உதவிசெய்ய பணக்கார விசுவாசிகளுக்கு கட்டளையிட முடியாததுக்கு காரணம்!
1 யோவான் 3:16-18ல, *"அவர் தம்முடைய ஜீவனை நமக்காக கொடுத்ததினாலே* அன்பு இன்னதென்று அறிந்திருக்கிறோம். *நாமும் சகோதரருக்காக ஜீவனைக்கொடுக்கக் கடனாளிகளாயிருக்கிறோம்.* ஒருவன் இவ்வுலக ஆஸ்தி உடையவனாயிருந்து, *தன் சகோதரனுக்குக் குறைச்சலுண்டென்று கண்டு, தன் இருதயத்தை அவனுக்கு அடைத்துக்கொண்டால்,* அவனுக்குள் தேவஅன்பு நிலைகொள்ளுகிறதெப்படி? *என் பிள்ளைகளே, வசனத்தினாலும் நாவினாலுமல்ல, கிரியையினாலும் உண்மையினாலும் அன்புகூரக்கடவோம்"* இன்னு அன்பின் அப்போஸ்தலன் கட்டளையிடுகிறார் அல்லவா?
*ஆதிசபை விசுவாசிகளின் இருதயம் நம்ம சபை விசுவாசிகளுக்கும், ஆதிசபை ஊழியர்களின் இருதயம் நமக்கும் உண்டாக* அதிகம் ஜெபிக்கனும் பாஸ்டர்!
*ஏழை விசுவாசப் பிள்ளைகளின் திருமணத்த பணக்கார விசுவாசிங்க சேர்ந்து நடத்திவைக்கனும், ஏழை பிள்ளைகள படிக்கவைக்கனும், கடன்பட்டவங்கள விடுவிக்கனும், உணவு உடைக்காய் சிரமபட்றவங்களுக்கு அவைகள கொடுக்கனும், சொந்தமா ஏதாச்சும் தொழில் செஞ்சி பொழச்சிக்க வழிகாட்டனும். மொத்தத்துல இல்லாதவர்களின் குறைவை இருக்கிறவர்கள் நிறைவாக்கும் ஆதிசபையின் அதிசயம் நம்ம சபைகள்ல நடக்கனும்* பாஸ்டர்!
அவசியம் ஐயா! தேவன் நம்மையும் *நாம் நடத்தும் அவருடைய சபையையும் ஆதிசபையின் அநுபவங்களுக்கு* நிச்சயம்
நடத்துவார்!
மகிழ்ச்சி ஐயா, மறுபடியும் சந்திப்போம்!!
ஊழியர்களின் சிந்தனைக்கு உடன் ஊழியன்
க. காட்சன் வின்சென்ட்
8946050920
Thanks for using my website. Post your comments on this