=======
QUOTES
========
நாம் இரட்சிக்கப்பட்ட புதிதில்
எத்தனை அன்பு வைத்திருந்தோம்
நம் கர்த்தரிடத்தில்
நாட்கள் செல்லச் செல்ல
வருடங்கள் கரைய கரைய
ஊழியம் என்பது
வெறும் கடமை ஆகிவிட்டது
ஆராதனை என்பது
வெறும் பொழுதுபோக்கு ஆகிவிட்டது
ஜெபம் என்பது
வெறும் கிளிப்பிள்ளை வார்த்தை
ஆகிவிட்டது
அபிஷேக நிறைவு
ஏதோ சாதாரண அனுபவமாகிவிட்டது
ஆண்டவரே நம்மை அணுக முடியாதபடி
அத்தனை பிசியாகிவிட்டோம்
எல்லாவற்றையும்
ஒதுக்கிவைத்துவிட்டு
நாள் முழுவதும்
ஆண்டவரே கதியென்று
தேவ சமூகத்தில் விழுந்து
தியான வெள்ளத்தில் கரைந்து
ஒரு குழந்தை போல
அந்த ஆதி அன்புக்கு திரும்புவது
எத்தனை அவசியம் இன்று.
(மணவாட்டியின் மெஞ்ஞான புலம்பல்).
By Bro Durai Dainel
To Get Daily Quotes Contact +917904957814
=======
QUOTES
========
உலகில் விலையேறப்பெற்றவைகளெல்லாம்
இலவசமே
காற்று இலவசம்
கடல் இலவசம்
தண்ணீர் இலவசம்
சூரியன் இலவசம்
சந்திரன் இலவசம்
இப்படி சொல்லிக்கொண்டே போகலாம்
இவைகளுக்கு விலை நிர்ணயிக்க முடியாது
இவைகளுக்கு சொந்தக்காரர்
இவைகளை நமக்கு இலவசமாகவே தந்தருளியிருக்கிறார்
எல்லாவற்றுக்கும் மேலாக
தனது சொந்த இரத்தத்தையே
சிலுவையில் நமக்காக
இலவசமாக தந்திருக்கிறார்
இலவசமாய் கிடைப்பதனாலேயே
உலகம் இவற்றை மதிப்பதில்லை
நமக்கோ
அதன் மதிப்பு தெரியும்
மிகப்பெரிய உண்மை என்னவென்றால்
காசுக்கு வாங்கிய பொருள்களால் அல்ல
இலவசமாய் கிடைப்பவற்றாலேயே
நாம் மோட்சக்கரை சேர முடியும்.
By Bro Durai Dainel
To Get Daily Quotes Contact +917904957814
=======
QUOTES
========
ஒவ்வொரு கிறிஸ்தவனின் வாழ்க்கையிலும் நான்கு அம்சங்கள் உள்ளன.
அந்தரங்க வாழ்க்கை
குடும்ப வாழ்க்கை
சபை வாழ்க்கை
உலக வாழ்க்கை.
இந்நான்கிலும் அவன் தன் கடமையை பொறுப்பாக நிறைவேற்ற வேண்டும்; பரிசுத்தத்தை காத்துக்கொள்ள வேண்டும்.
உதாரணமாக அவன் போகும் சபை எத்தனை உத்தமமான, உயர்வான, மகிமையான சபையாக இருந்தாலும் அவன் அந்தரங்க வாழ்க்கை சரியில்லை என்றால் அவன் வாழ்வு தீபம் மங்கிப் போய்த்தான் எரியும். அவனுடைய அந்தரங்க வாழ்க்கை எத்தனை பரிசுத்தமாக இருந்தாலும் அவன் போகிற சபை சரியில்லை என்றால் நாளடைவில் அவனும் மங்கியே போவான். இரண்டும் சரியாக இருக்க வேண்டும்.
அந்தரங்கத்தில் தொடங்கும் பரிசுத்தம் குடும்பத்தில் நுழைந்து சபையால் பராமரிக்கப்பட்டு பின்பு உலக வாழ்க்கையில் சாட்சியாய் ஜொலிக்க வேண்டும்.
அவனே
உன்னத சீடன்
உயர்ந்த விசுவாசி
By Bro Durai Dainel
To Get Daily Quotes Contact +917904957814
=======
QUOTES
========
வேலை செய்தால்
மனிதன் வேலை செய்கிறான்
ஜெபம் செய்தால்
தேவன் வேலை செய்கிறார்
ஊழியம் என்பது
பங்களிப்பு வேலை
அதாவது Partnership Job
ஒரு பக்கம் தேவன்
மறுபக்கம் மனிதன் (ஊழியன்)
கூடவே நம் சக விசுவாசிகள்
One Man Show க்கு
இங்கே இடமில்லை
ஒற்றுமையே பலம்
ஒருங்கிணைப்பே ஜெயம்.
By Bro Durai Dainel
To Get Daily Quotes Contact +917904957814
=======
QUOTES
========
பாவம் பயங்கரமானது
அது
ஆலகால விஷம்
பட்ட இடமெல்லாம் பரவி
செழிப்பை அழிக்கும் திராவகம்
அதன் வலிமை சொல்ல
ஒரு உதாரணம் தருகிறேன்
"இந்த உலகின்
முதல் மனிதனுக்குள்
அது புகுந்தது
தொடர்ந்து பரவியதன் விளைவு
மூன்றாம் மனிதன்
நான்காம் மனிதனை கொன்றான்"
அதாவது
உலகின் மொத்த மக்கள் தொகையே
நான்கு தான்
அதற்குள்
ஓர் கொலை
எத்தனை பயங்கரம்
எத்தனை கொடூரம்
பாவமானது
முதலில்
தனி மனிதனுக்குள் புகுந்து
பின்பு
அவன் குடும்பத்தை அழித்து
பின்பு
சமுதாயத்தை அழித்து
பின்பு தேசத்தையே
அழித்து நிர்மூலமாக்குகிறது
பாவம் பரவாமல்
தடுக்கும் ஒரே வழி
கிறிஸ்துவின் நற்செய்தியை
அறைகூவி அறிவிப்பதுதான்
சுவிசேஷ வழியே
சுபிட்ச வழி.
By Bro Durai Dainel
To Get Daily Quotes Contact +917904957814
=======
QUOTES
========
இது ஒரு மணவாட்டியின் பயணம்
மிக நீண்ட பயணம்
வலி மிகுந்த பயணம்
ஆனாலும் அவள்
ஏன் தொடர்கிறாள்
பரம கானானில் இருக்கும்
சகல வசதிகளுக்காகவா
இல்லை
அங்கே இருக்கும்
பொன் பொருளுக்காகவா
இல்லை
நோயற்ற பேயற்ற
வாழ்வுக்காகவா
இல்லை
கண்ணீர் கவலை இல்லாத
ஜீவனுக்காகவா
இல்லை இல்லை
பிறகு எதற்கு இந்த நெடுந்துயர் பிரயாணம்
மணவாளனை சந்திக்க
மணவாட்டியாய் மாற
காலமெல்லாம் அவர் அன்பில்
கட்டுண்டு மகிழ
அவர் காயங்களையெல்லாம் கண்டு
நெக்குருகி கண்ணீர் சிந்தி
முத்தமிட்டு நன்றி சொல்ல
ஆம் அதுதான் அவளின்
பிரதான நோக்கம்
அவரை தேடினால்
அவருடையது எல்லாம் தன்னால்
பின்னால் ஓடி வராதோ
இதோ
அந்த நெடிதுயர்ந்த சாலையிலே
ஒவ்வொரு அடியாய்
பரவச புன்னகையுடன்
எடுத்து வைத்து
பயணத்தை தொடர்கிறாள்
பாதை முடிவில்
அவள் நேசர்
அவளுக்காக காத்திருக்கிறார்
வெற்றிப் புன்னகையுடன்.
By Bro Durai Dainel
To Get Daily Quotes Contact +917904957814
=======
QUOTES
========
அன்றைய பாலஸ்தீனாவில்
சிலுவை மரணம் என்றாலே
சாப சம்பவம்
ரோமருக்குள்
சிலுவை என்ற வார்த்தையே
அவமானச் சொல்
இன்றோ
அங்கியில் சிலுவை
ஆலயத்தில் சிலுவை
இல்லத்தில் சிலுவை
ஏன்
தாலியில் கூட சிலுவை
காரணம்
இன்று சிலுவை
அந்தஸ்தின் அடையாளம்
பதவியின் பட்டப்பெயர்
செழிப்பின் சின்னம்
மதவெறியின் குறியீடு.
உண்மை என்ன
சிலுவை என்பது
மரத்தில் செய்த கருவியும் அல்ல
உலோகத்தால் உருவாக்கப்பட்ட பொருளும் அல்ல
அது
பாடுகளின் அடையாளம்
தியாகத்தின் உருவகம்
அன்பின் அச்சு
அனுதின சுமை
நினைக்கும்போதெல்லாம்
நெஞ்சுருக வைக்கும்
தியானிக்கும்போதெல்லாம்
கண்ணீர்மல்க வைக்கும்
ஜீவ மருந்து.
வெறும் மரத்தைக்
கட்டிக்கொண்டு அழாதீர்கள்
அந்த மரத்தில் தொங்கியவரை
எண்ணிப் பாருங்கள்
வெறும் உலோகத்தை
தூக்கிக்கொண்டு அலையாதீர்கள்
அந்த உவமைக்கு காரணகர்த்தாவை
போற்றி பாடுங்கள்.
By Bro Durai Dainel
To Get Daily Quotes Contact +917904957814
=======
QUOTES
========
சாலமோன் கட்டின தேவாலயத்தையும், ஏரோது கட்டின தேவாலயத்தையும் அழிக்கப்பட சத்துருக்களின் கையில் தேவன் ஏன் ஒப்புக்கொடுத்தார் தெரியுமா?
தேவனுடைய அனுமதி இல்லாமல் தேவனுடைய தேசத்தையும் (இஸ்ரேல்) தேவனுடைய ஆலயத்தையும் எவனும் தொடக்கூட முடியாது.
பழைய உடன்படிக்கை ஒழிந்தது. புதிய உடன்படிக்கை பிறந்தது. ஆடு. மாடு, பறவைகளை பலியிடும் பழைய வழக்கம் ஒழிந்தது. உதடுகளின் கனிகளாகிய ஸ்தோத்திர பலிகளையிட்டு ஆவியோடும் உண்மையோடும் ஆராதிக்கும் புதிய வழிபாட்டு முறை உண்டாக்கப்பட்டது என்பதை உலக மக்களுக்கும் இஸ்ரவேல் ஜனங்களுக்கும் உணர்த்தும் வண்ணமாகவே எருசலேம் தேவாலயம் இடிபட அல்லது அழிந்துபோக தேவன் அனுமதித்தார்.
இன்னும் எங்களுக்கு பழைய உடன்படிக்கைதான் வேணும் என்று அடம்பிடித்தால்
அதையே கட்டிகிட்டு அழுவுங்க. யார் வேண்டாம்னு சொன்னது.
//யாருக்கோ//.
By Bro Durai Dainel
To Get Daily Quotes Contact +917904957814
=======
QUOTES
========
ஆலயத்திலும் சந்தோஷம் இருக்கிறது
தியேட்டரிலும் சந்தோஷம் இருக்கிறது
சபையிலும் மகிழ்ச்சி இருக்கிறது
டாஸ்மாக்கிலும் மகிழ்ச்சி இருக்கிறது
தேவனுடைய மந்தையிலும் இன்பம் இருக்கிறது
களியாட்டுக் கூடங்களிலும் இன்பம் இருக்கிறது
இரண்டுக்கும் என்ன வித்தியாசம்
அது மண்ணிலிருந்து வருவது
இது விண்ணிலிருந்து வருவது
அது தற்காலிக மகிழ்ச்சி
இது நிரந்தர மகிழ்ச்சி
அது பொய் சந்தோஷம்
இது மெய் சந்தோஷம்
அது தேங்கின குட்டை
இது நித்திய நீரூற்று.
By Bro Durai Dainel
To Get Daily Quotes Contact+917904957814
=======
QUOTES
========
அவர் ஒரு ஐசுவரியவான்
அவரிடம் வந்த
ஒரு பரம ஏழை
உட்கார்ந்துகொள்ள
இடம் கேட்டான்
கொடுத்தார்.
பின்னொரு நாள்
படுத்துறங்க
இடம் கேட்டான்
கொடுத்தார்
பின்னொரு நாள்
தன் பெட்டி வைக்க
இடம் கேட்டான்
கொடுத்தார்
பின்பு வாடகைக்கு
ஒரு அறை கேட்டான்
கொடுத்தார்
பழக்கமும் பாசமும்
ஓவராகி போனதால்
ஒரு நாள்
போதையேற்றி
அவரை ஏமாற்றி
கையெழுத்து வாங்கி
அவரது சொத்துக்களையே
பிடுங்கிக் கொண்டான்
அவரையே வீட்டை விட்டு
துரத்தி விட்டான்.
அவர்
நடுத்தெருவில் நின்றார்.
சாத்தானும் இப்படித்தான்
கொஞ்சம் இடம் கொடுத்தாலும் போதும்
நாளடைவில்
நாமும் தெருவில்
நிற்கவேண்டிய நிலை வந்தே தீரும்.
பிசாசுக்கு
இடம் கொடாதிருங்கள்.
By Bro Durai Dainel
To Get Daily Quotes In What's App Contact +917904957814
Thanks for using my website. Post your comments on this