உங்கள் தைாியத்தை விட்டுவிடாதீா்கள் | Listen to the elders | கிறிஸ்தவ ஒரு குட்டிகதை | bible Short Story in tamil | Jesus Sam
Jesus Sam9/05/2024 06:00:00 PM
0
ஒரு குட்டிக்கதை
ஒரு பணக்காரனுக்கு மிகவும் அழகான மகள் ஒருத்தி இருந்தாள்!
வளர்ந்தவுடன் அவளுக்கு திருமணம் செய்துவைக்க முடிவெடுத்து ஊரில் உள்ள தகுதியான இளைஞர்களுக்கு ஒரு போட்டி வைப்பதாகவும்,
அதில் வெற்றி பெறும் இளைஞனுக்கு தன் மகளை மணமுடித்து வைப்பதாகவும் அறிவிக்கிறான்!
போட்டி நாள் அன்று, ஊரிலுள்ள வலுவான, திறமையான, புத்திசாலியான இளைஞர்கள் எல்லோரும் கூடுகிறார்கள். சிலர், கையில் பேப்பரும் பேனாவுமாய்,.. சிலர், கையில் கத்தியுடன், சிலர் வீச்சரிவாளுடன், சிலர் துப்பாக்கியுடன்... இப்படியாக!
அவர்களை, தன் மிகப்பெரிய நீச்சல் குளத்துக்கு அழைத்துப் போகிறான்.
"இந்த நீச்சல் குளத்தில், இந்த முனையிலிருந்து, எதிர் முனைக்கு முதலில் யாரால் நீந்தி கடக்க முடிகிறதோ, அவனுக்கு என் மகளை திருமணம் செய்து தருவேன்!"
அவன் சொல்லி முடித்த வினாடியே, கடகடவென அனைவரும் நீச்சலுக்கு தயாராக, வேகமாக உடைகளை கழற்ற ஆரம்பித்த பொழுது...
"அது மட்டுமில்லை... கூடவே ஒரு 15 மில்லியன் டாலர்கள் பணமும், ஒரு தனி பங்களாவும் கூட தருவேன்.. அப்பொழுதுதானே, என் அருமை மகள் தன் மணவாழ்வை சுகமாக ஆரம்பிக்க முடியும்!"
"சரி... உங்கள் எல்லோருக்கும் நல்வாழ்த்துகள்! என் மருமகனை, நான் நீச்சல் குளத்தின் மறு கரையில் சந்திக்கிறேன்" என்றவாறு, அங்கிருந்து நடக்க ஆரம்பித்தான்!
சொல்லி முடித்தவுடன்... மொத்த இளைஞர்களும், இன்னமும் வேகமாக தண்ணீரில் இறங்க முற்பட்ட பொழுது... அந்தப் பணக்காரனின் ஹெலிகாப்டர், அந்த நீச்சல் குளத்துக்கு நேர் மேலே பறந்து வந்து,
டஜன் கணக்கில் முதலைகளை, அந்தக் குளத்தில் இறக்கிவிட்டுச் சென்றது!
அவ்வளவுதான்! அத்தனை பேரும், மரண பயத்தில் உடனே பின்வாங்கி ஏமாற்றத்துடன் மீண்டும் தங்கள் உடைகளை மாட்டிக்கொள்ள ஆரம்பித்தனர்!
"இதென்ன பைத்தியக்காரத் தனமாக இருக்கிறது? யாரால் இது முடியும்? பார்க்கலாம்! எவன் இதில் ஜெயிக்கிறான் னு?" “நிச்சயமா எவனாலும், முடியாது!” என்று சத்தமாய் பேச ஆரம்பித்தனர்!
அப்பொழுது,…
திடீரென்று, ஒருவன் குளத்தில் குதிக்கும் சத்தம்!
அத்தனை பெரும் மூச்சுக்கூட விட மறந்து,.. உச்சபட்ச அதிசயத்தில், அவனையே, கண்ணிமைக்காமல் கவனிக்க ஆரம்பித்தனர்!
அந்த இளைஞன்,.. மிகவும் லாவகமாக, அத்தனை முதலைகளிலுமிருந்து விலகி விலகி, வேகமாய் நீந்தி,
அடுத்த கரையில் விருட்டென ஏறி,
வெடவெடவென நின்றான்!
பணக்காரனால், தன் கண்களை நம்பமுடியவில்லை!
"பிரமாதம்.! நான் தர்றதா சொன்ன விஷயங்களுக்கும் மேல,.. உனக்கு என்ன வேணுமோ கேளு!
நான் தர்றேன்! எதுவாக இருந்தாலும்!"
அந்த இளைஞனோ, இன்னமும் நடுக்கத்திலிருந்து மீளவில்லை!
வாய் தந்தியடித்தது, மிரட்சியில்!
கண்கள் அரண்டு போய் இருந்தது!
பின், ஒருவித வெறியுடன்...
"அதெல்லாம் இருக்கட்டும்... என்னை, இந்த குளத்தில் தள்ளிவிட்டவனை மட்டும், யாருன்னு எனக்கு காட்டுங்கள்!!!
நீதி-1 :
முதலைகள் இருக்கும் நீரில் தள்ளிவிடப்படும் வரை... உன் திறமை என்னவென்று,
உனக்கே தெரியாது! (அந்த ரப்பர் முதலைகள் போன்றே, பிரச்சினைகளும் போலிதான்,.. என்பதும் புரியவரும்!!!)
நீதி-2 :
உன்னை, முதலைகளுக்கு காவு குடுக்க நினைத்தவர்கள்...
உண்மையில், உன் உள்ளிருந்த திறமையை வெளிக்கொண்டுவந்து, உன் கனவு எதிர்காலத்தை அடைய உதவியவர்களே! (நன்றி காட்டாவிட்டாலும், வன்மம் வேண்டாமே!)
நீதி-3 :
சிலநேரம், மிகவும் மோசமான தருணங்களை கடக்கும்பொழுதுதான்,
நம் உள்ளிருக்கும் நிஜத் திறமை வெளிப்படும்!
நீதி-4 :
சிலருக்கு,.. இம்மாதிரி, அசாத்திய பிரச்சினைகளில் வலுக்கட்டாயமாக தள்ளப்படும்பொழுது மட்டுமே, அவர்களால் வாழ்வின் உயர் இலக்கை அடைய முடிகிறது! (சில தொலைநோக்குப் பெற்றோருக்கு, இந்த சூட்சுமம் தெரியும்! பெற்றோரை நம்புங்கள்!)
ஓர் குட்டிக் கதை
உங்கள் தைாியத்தை விட்டுவிடாதீா்கள்
முன் ஒரு காலத்தில் சாந்தவர்மா என்ற அரசன் திருவஞ்சூர் என்ற சிறிய நாட்டை ஆண்டு கொண்டிருந்தான். சாந்தவர்மா மிகவும் நல்லவன். நீதிக்குக் கட்டுப்பட்டவன். அநியாயம் செய்பவர் யாராக இருந்தாலும் அவனைக் கொன்று விடுவான். மக்களுக்கு நல்ல ஆட்சி அளிக்க வேண்டும், நாட்டு மக்கள் பயமின்றி சுபீட்சமாக வாழவேண்டும். அதுதான் அவனது லட்சியம்.
அந்த லட்சியத்துக்காக உயிர் கொடுக்கவும் தயங்க மாட்டான். அம்மன்னனை மக்கள் மிகவும் அன்புடன் நேசித்தனர். அமைதியாக இருந்த மக்களுக்குத் திடீரென சோதனை ஏற்பட்டது.
திருவஞ்சூர் நாட்டில் ஒரு மந்திரி இருந்தான். அவன் பெயர் கேளுத்தம்பி. கேளுத்தம்பி மிகவும் கொடியவனாக இருந்தான். அவன் அரசனுக்குத் தெரியாமல் மக்களிடம் கொள்ளையடித்து வந்தான். இந்த சமாச்சாரம் தெரிந்த போது நாட்டின் பொருளாதாரம் சீர்குலைந்துவிட்டது. ஒருநாள் மந்திரி கேளுத்தம்பியை அழைத்து அரசன் ஆத்திரப்பட்டான். "என் நாட்டைச் சீரழியச் செய்துவிட்டாய். இனிமேல் இது நடக்காது. நான் கடுமையான நடவடிக்கை எடுக்கப்போகிறேன்," என்று கூறிக்கொண்டு எழுந்தான் அரசன். ஆனால் கொடியவனான மந்திரி ஏற்கனவே சேனாதிபதி போன்ற பொறுப்புள்ள அதிகாரிகளைக் கைக்குள் போட்டுக்கொண்டான். அரசன் எழுந்தவுடன் மந்திரி அரசன் மீது பாய்ந்து சண்டை போட்டான்.
அரசனும் கடுமையாகச் சண்டையிட்டும் பலனில்லை. மந்திரியும் சேனாதிபதியும் சேர்ந்து அரசனைக் கொன்று விடுவதற்காக முயன்றபோது அரசன் சாமர்த்தியமாக அங்கிருந்து தப்பி ஓடினான். அரசனுடன் விசுவாசமுள்ள பத்துப் படை வீரர்களும் நாட்டைவிட்டுத் தப்பி ஓடினர்.அரசன் போனதும் மந்திரி கேளுத்தம்பி அரசன் ஆன செய்தி கேட்டு மக்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
இனிமேல் அவன் தங்களைக் கொடுமைப்படுத்துவானோ என்று நினைத்து மக்கள் பயந்து நடுங்கினர். மக்கள் பயந்ததைப் போல் கொடுங்கோல் ஆட்சி மக்களைத் துன்புறுத்தியது.இளைஞர்களும் பெண்களும் புதிய ஆட்சிக்குப் பயந்து வீடுகளில் இருந்து வெளியே தலை காட்டவே பயந்தனர். நாட்டை விட்டுத் தப்பி ஓடிய சாந்தவர்மாவும் பத்து வீரர்களும் காட்டுக்குள் புகுந்தனர். வெகுதூரம் நடந்ததால் அனைவரும் சோர்வடைந்தனர். பசி அவர்களை வாட்டியது. பசியால் துவண்டு போன அவர்களால் தொடர்ந்து நடக்க முடியவில்லை. இரவு வந்தது பசியும் தாகமும் அவர்களைத் தாக்கியதால் இரவில் நடக்க முடியாமல் அனைவரும் மரத்தடியில் படுத்துக் கொண்டனர்.
சோர்வடைந்த அனைவரும் சீக்கிரம் தூங்கிவிட்டனர். காலையில் சூரிய ஒளி
முகத்தில பட்டுச் சூடேறியபோது அனைவரும் தூக்கத்தில் இருந்து விழித்துக் கொண்டனர். அப்போது சற்றுத் தொலைவில் பெரிய அரண்மனை போன்ற வீடு ஒன்று தெரிந்தது. அதைக் கண்ட அனைவருக்கும் மகிழ்ச்சி ஏற்பட்டது. அந்த வீட்டிற்குச் சென்றால் சாப்பிடுவதற்கு ஏதாவது கிடைத்துவிடும் என்ற ஆவலில் அவர்கள் அந்த வீட்டை நோக்கி நடந்தனர்.அது ஒரு செல்வந்தரின் அரண்மனை. அரசனும். வீரர்களும் அந்த வீட்டுக்குச் சென்று வாசலில் காத்திருந்தனர்.
அப்போது ஒருவன் வெளியே வந்தான். அவனைப் பார்த்த அரசன் “சாப்பிட்டுப் பல நாட்கள் ஆகிவிட்டது. எனவே சாப்பிட ஏதாவது கொடுங்கள்" என்று கேட்டுக் கொண்டான். அதைக் கேட்ட அவன் அனைவரையும் பார்த்துவிட்டு வீட்டுக்குள் சென்று விட்டான். சற்று நேரத்தில் கொடுவாள் மீசையுடன் கம்பீரமாகக் காட்சியளித்த ஒருவன் வெளியே வந்தான்.அவன் முகத்தில் கருணை என்ற குணம் மருந்துக்குக் கூட இல்லை.
அவன் அரசன் மற்றும் வீரர்களைக் கண்டு மெளனமாக "உம் என்ன வேண்டும்?” என்று கேட்டுவிட்டு பக்கத்தில் இருந்த நாற்காலியில் கம்பீரமாக உட்கார்ந்தான். "ஐயா; நாங்கள் வெகு தொலைவில் இருந்து வருகிறோம் ஆகாரம் ஏதாகிலும் கொடுத்தீர்களானால் நன்றியுடையவர்கள் ஆக இருப்போம்". பல நாட்கள் சாப்பிடவில்லை. எனவே ஏதாவது சாப்பிடக் கொடுங்கள் என்றான் அரசன்.
அதைக் கேட்ட வீட்டுக்காரன் பலமாகச் சிரித்தான். “யோவ் இது என்ன தர்மசத்திரமா வர்றவங்களுக்குத் எல்லாம் தண்டச் சாப்பாடு போடுவதற்கு?” என்று அரசனும் மற்றவர்களும் அதிர்ச்சி அடைந்தனர். "ஐயா பசியால் வாடுபவர்களுக்கு உணவு அளிப்பது ஆண்டவனுக்குச் செய்யும் பணி அல்லவா?.
எங்களைப் பசி வாட்டுகிறது, ஏதாவது கொஞ்சம் சாப்பாடு கொடுங்கள்” என்று கெஞ்சினான் அரசன். அதைக்கேட்ட மீசைக்காரன் மீண்டும் பலமாகச் சிரித்தான். "இத பாருங்க உங்களுக்கு எல்லாம் சாப்பாடு போடுமளவுக்கு எனக்கு வசதி இல்லை. எனவே அதோ அந்த வீட்டுக்குப் போங்க. அந்த வீட்டில் பெரிய பணக்காரர்கள்தான் இருக்கிறார்கள். அங்கு சென்றால் சாப்பிட்டுவிட்டு அங்கேயே தங்கிவிடலாம்" என்று யோசனை கூறினான் அவன். அதைக் கேட்ட அரசனும் படை வீரர்களும் அந்த வீட்டை நோக்கி விரைந்தனர்.
அந்த வீட்டுக்குச் சென்ற அரசன் அந்த வீட்டை நோட்டமிட்டான். அந்த வீட்டைப் பார்த்தால் பணக்காரர்களின் வீடாகத் தெரியவில்லை. ஆனால் ஒரு காலத்தில், பணக்காரர்களாக வாழ்ந்த குடும்பம்தான் என்று முடிவு செய்தான். வீட்டு வாசலுக்கு சென்ற அரசன். "இங்கே யாரும் இல்லையா?” என்று கேட்டான். சற்று நேரத்தில் இளைஞன் ஒருவன் வெளியே வந்தான். வீட்டுக்கு வெளியே சிலர் நின்றிருப்பதைக் கண்டு திடுக்கிட்டான். “என்ன வேண்டும்?, நீங்கள் எல்லோரும் யார்?” என்று கேட்டான் அந்த இளைஞன்.
அரசன் நடந்ததைக் கூறித் தங்களுக்கு உணவு வழங்கும்படி கேட்டுக் கொண்டான். அத்துடன் தங்களை இங்கே அனுப்பி வைத்தவர் பக்கத்து வீட்டுக்காரர்தான். என்றும் கூறினான். அதைக் கேட்ட இளைஞன் அந்த வீட்டைப் பார்த்தான். தான் ஏழையாகி விட்டதால் தன்னைக் கிண்டல் செய்வதற்காகதான் தன் வீட்டுக்கு அனுப்பி வைத்து இருக்கிறான். பசியாக வந்தவர்களுக்கு உணவு போட வேண்டுமே என்று நினைத்துக் கவலைப்பட்டான்.
அதற்குக் காரணம் அவர்களுக்கு உணவு வழங்குவதற்கு அவனிடம் எதுவுமில்லை. அவனும் அவன் தாயாரும் பட்டினியாக இருந்த போதுதான் அரசனும் படை வீரர்களும் வந்திருக்கிறார்கள். "நீங்கள் சாப்பிட்டு வெகு நாட்கள் ஆகிவிட்டதால்,சற்று நேரத்தில் உணவு வழங்குகிறேன். அதுவரை! பொறுமையாக இருங்கள்," என்று கூறிவிட்டு உள்ளே சென்றுவிட்டான் இளைஞன்.
இளைஞன் தங்களுக்கு உணவு வழங்கச் சம்மதித்துவிட்டதைக் கண்டு அனைவரும் மகிழ்ச்சி அடைந்தனர். வீட்டுக்குள் சென்ற இளைஞனிடம், "மகனே நீ என்ன இப்படியா மடத்தனமாகப் பேசுவது. பதினோரு பேருக்குச் சாப்பாடு போட இங்கே வசதி உண்டா? இன்று நாம் கூடப் பட்டினியாக இருப்பது உனக்குத் தெரியாதா?"என்று தாயார் கேட்டாள்.
"அம்மா! அப்பாவைக் கொன்று நமது சொத்துக்களை அபகரித்த பக்கத்து வீட்டு நீலகண்டான் இருக்கிறானே. அவன்தான் இவர்களை அனுப்பி வைத்து இருக்கிறான். நமது ஏழ்மையை அவன் இப்படி கிண்டல் செய்து இருக்கிறான்” என்று கண்கலங்க கூறினான் இளைஞன். "மகனே நாம் இவர்களுக்கு எப்படி சாப்பாடு போடுவது?" என்று வியப்புடன் கேட்டாள் தாயார்.
“அம்மா என்னிடம் அப்பாவின் தங்கச் சங்கிலி இருக்கிறதே. அதை விற்று அந்தப் பணத்தில் உணவு போடுவோம், இது நமது மானப்பிரச்சினை மட்டுமல்ல. பல நாட்கள் பசியால் துவண்டு போனவர்களுக்கு உணவு அளித்தால் ஆண்டவன் நம்மைக் கட்டாயம் காப்பாற்றுவார்" என்றான் அவன்.
அவன் வெளியே சென்று அரசனிடம் "ஐயா சற்று நேரம் உட்காருங்கள். நான் உடனே வருகிறேன். உங்கள் பசியைப் போக்குவதுதான் என் லட்சியம்" என்று கூறிவிட்டு அங்கிருந்து சென்றுவிட்டான். அப்போது அரசனும் மற்றவர்களும் மரத்தடி நிழலில் படுத்து ஓய்வு எடுத்தனர்.
இளைஞனும் தாயாரும் தடல்புடலாகச் சமையல் செய்து முடித்தனர். பிறகு தூங்கிக் கொண்டிருந்தவர்களை எழுப்பி சாப்பிடும்படி சொன்னார்கள். அனைவரும் மகிழ்ச்சியுடன் சாப்பிட்டார்கள். “ஆகா அருமையான சாப்பாடு" என்று அரசனும் மற்றவர்களும் பாராட்டினர். அதைக் கேட்ட தாயாரும்,இளைஞனும் மகிழ்ச்சி அடைந்தனர். அனைவரும் சாப்பிட்ட பின் எழுந்தனர்.
"தம்பி உனக்கு நாங்கள் எப்படி நன்றி சொல்வது என்று தெரியவில்லை? நீங்கள் சாப்பாடு போடாமல் இருந்திருந்தால் இந்நேரம் பசியால் செத்து இருப்போம். எனவே உங்களுக்குப் பாிசளிக்க என்னிடம் இந்த வாளைத் தவிர ஒன்றும் இல்லை, என்று கூறி தன்னிடமிருந்த வாளை இளைஞனுக்குப் பரிசாக வழங்கினான் அரசன். “இந்த வாளை வைத்துக் கொண்டு நான் என்ன செய்வது?” என்று கேட்டான் இளைஞன். "இந்தவீட்டைப் பார்த்தால் ஒரு காலத்தில் நீங்கள் செல்வந்தர்கள் ஆக இருந்தீர்கள் என்பது எனக்குத் தெரிகிறது. எனவே நீங்கள் இழந்த செல்வங்களை இந்த வாளை வைத்துக் கொண்டு திரும்பப் பெறலாமே! என்றான் அரசன். அப்போது தான் இளைஞனுக்குத் தன் தந்தையைக் கொன்று சொத்துக்களைப் பறித்த பக்கத்து வீட்டு நீலகண்டன் பற்றிய நினைவு வந்தது. "நான் ஒருவன் மட்டும் இந்த வாளுடன் சென்றால் எப்படி இழந்த செல்வத்தை திரும்பப் பெற முடியும்?" என்று கேட்டான் இளைஞன்.
அதைக்கேட்ட அரசன், “இளைஞனே உங்களுடன் நானும் என் பத்துப் படை வீரர்களும் வருகிறோம். என்று, கூறினான். இளைஞனுக்குத் தெம்பு வந்தது. அவன் தாயாரைப் பார்த்தான், அவள் பார்வை மகனுக்குத் தைரியம் கொடுத்தது. இளைஞர் பக்கத்து வீட்டு நீலகண்டன் என்ற துரோகியைப் பார்த்தான். அவன் வீட்டு வாசலில் கம்பீரமாக உட்கார்ந்து இருந்தான். ஒரு காலத்தில் இளைஞனின் தந்தையிடம் கையாள் ஆக இருந்த நீலகண்டன் சூழ்ச்சி செய்து சொத்துக்களை முழுவதும் அபகரித்தான்.
நீலகண்டன் தன் சொத்துக்களை அபகரித்து விட்டானே என்று கவலைப்பட்டார் இளைஞனின் தந்தை. ஒருநாள் இதைப்பற்றி நீலகண்டனிடம் கேட்டார் தந்தை. அதைக் கேட்டதால் நீலகண்டனுக்குக் கோபம் வந்தது.அவன் வாளை உருவி இளைஞனின் தந்தையைக் கொன்று விட்டான். பிறகு இளைஞனையும் அவன் தாயாரையும் அரண்மனை போன்ற வீட்டிலிருந்து விரட்டி அடித்தான். இந்த நிகழ்ச்சி அனைத்தும் இளைஞன் மனதில் திரைப்படம் போல்காட்சியளித்தது. அரசன் பரிசளித்த வாளைப் பலமாகப் பிடித்தான். அப்போது அவனுக்குத் தைரியம் வந்தது. தான் வீரன்தான் என்ற உணர்வு அவனுக்கு ஏற்பட்டது. அவன் வாளுடன் நீலகண்டன் வீட்டை நோக்கி ஓடினான். தைக் கண்டு திடுக்கிட்டுப் போனான் நீலகண்டன். "சின்னப் பையனுக்கு இவ்வளவு திமிரா? இவனையும் இவன் தந்தையைப் போல மேல் உலகத்துக்கு அனுப்ப வேண்டும்!" என்று கத்திக் கொண்டே இளைஞன் மீது பாய்ந்து தாக்கினான். இளைஞன் அரசன் பரிசளித்த வாளால் நீலகண்டனுடன் கடுமையாக மோதினான். அப்போது வேறு பல அடியாட்களும் ஆயுதங்களுடன் அங்கே வந்து சண்டையில் கலந்து கொண்டனர்.
அதுவரை அமைதியாக நின்றுகொண்டிருந்த அரசனும், படைவீரர்களும் களத்தில் குதித்தனர். சண்டை மூண்டது.சிறிது நேரத்தில் நீலகண்டன் இளைஞனால் கொல்லப்பட்டான்.மற்ற அடியாட்களும் கொல்லப்பட்டனர். இளைஞன் வெற்றி பெற்றுவிட்டான். அவன் தந்தையின் சொத்துக்களை மீட்டான். அரசனுக்கு மற்ற படை வீரர்களுக்கும் நன்றி சொன்னான். பிறகு அவனும் தாயாரும் பழையபடி சீரும் சிறப்புமாக வாழத் தொடங்கினர். தாங்களும் தங்கள் வீரர்களும் எங்களுடன் தங்கி விடுங்கள் என்று அரசனிடம் கூறினான். “மகனே எனக்கு இன்னும் பல வேலைகள் உண்டு. நான் இழந்த என்னுடைய திருவாஞ்சூர் நாட்டைத் திரும்பப் பெறவேண்டும். உன்தந்தையை ஒரு கயவன் விரட்டியதுபோல் என்னை என் மந்திரி விரட்டினான். அவன் நாட்டு மக்களைக் கொள்ளை அடித்துக் கொண்டிருக்கிறான். அவனை விரட்டி மக்களைக் காப்பாற்றுவது என் கடமை.
எனவே உன் வேண்டுதலைக் கேட்டு இங்கே தங்க முடியவில்லை” என்று வருத்தத்துடன் கூறினான் அரசன். "மன்னா உங்கள் லட்சியம் நிறைவேற நானும் உதவுகிறேன். என்னையும் தங்களுடன் அழைத்துச் செல்லுங்கள்," என்றான் இளைஞன்.
"வீரனான நீ இதுவரை கோழையாக இருந்துவிட்டாய். ஆனால் இன்று நீ வீரனாகி விட்டாய். எனவே உன்னை அழைத்துச் செல்வதில் எனக்கு மகிழ்ச்சிதான்” என்றான் அரசன்.
"கோழையாக இருந்த என்னை வீரனாக்கிய பெருமை தங்களைச் சாரும், தாங்கள் விருந்துக்கு வரவில்லை என்றால் நான் இன்னும் கோழையாக இருந்து வறுமையில் வாடிக்கொண்டு இருந்திருப்பேன். எனவே நீங்கள் அளித்த வீரம் உங்களுக்கே பயன்படட்டும்" என்றான் இளைஞன்.
அவன் தாயாரிடம் விடை பெற்று அரசனுடன் புறப்பட்டான்.
திருவாஞ்சூர் நாட்டுக்கு இளைஞன் மற்றும் படை வீரர்களுடன் சென்ற அரசன் தன் நண்பரின் வீட்டில் ரகசியமாகத் தங்கினான். "நண்பனே நாட்டு நிலவரம் எப்படி இருக்கிறது?" என்று ஆவலுடன் கேட்டான் அரசன். "நிலமை படுமோசம், மக்கள் அனைவரும் மந்திரி கேளுத் தம்பியால் மிகவும் துன்பப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள்!”என்று வருத்தத்துடன் கூறினான். அதைக்கேட்ட அரசன் சற்று நேரம் மௌனமாக இருந்துவிட்டான். "நான் என் நாட்டை உடனே பிடித்துவிட வேண்டும். அதற்காக நம்மீது விசுவாசம் உள்ள படை வீரர்களைத் திரட்ட வேண்டும்."என்றான் அரசன். “அப்படியே செய்கிறேன். நான் இப்போதே யாருக்கும் சந்தேகம் ஏற்படுத்தாமல் அரண்மனைக்குச் செல்கிறேன்," என்றான் நண்பன்.
அவன் அரண்மனைக்குச் சென்று தன் நண்பன் ஒருவனை அழைத்து ரகசியமாகப் பேசினான். அரசன் வந்துவிட்டதை அறிந்து அனைவரும் மகிழ்ச்சி அடைந்தனர். அரசன் மீது விசுவாசம் வைத்துள்ள அனைத்துப் படை வீரர்களும் அரசனுக்காக உயிர் விடவும் தயாராகி விட்டனர். எல்லா ஏற்பாடுகளும் முடித்துவிட்டபின் அரசன் தன் படை வீரர்களையும் இளைஞனையும் அருகில் அழைத்து "நாம் போருக்குப் புறப்படும் நேரம் ஆகிவிட்டது.எனவே உடனே புறப்படுங்கள். யாரும் மந்திரியின் படைபலம் கண்டு அஞ்சக் கூடாது" என்றான். அனைவரும் புறப்பட்டுவிட்டனர்.
மந்திரி எதிர்பாராத வேளையில் படை வீரர்களும் வீராவேசமாகப் போரிட்டனர். பெரும்பான்மையான படைவீர்கள் அரசனுக்காகப் போராடத் தொடங்கினர். மந்திரியும் சேனாதிபதியும், கடுமையாகப் போரிட்டும் பலனில்லை. பலமணி நேரம் தொடர்ந்த சண்டையில் மந்திரியும் சேனாதிபதியும் உயிரிழந்தனர். அதைக் கண்டு வீரர்கள் அனைவரும் மகிழ்ச்சி அடைந்தனர். அரசன் சாந்தவர்மா தான் இழந்த
அரச பதவியை மீண்டும் பெற்றான். இளைஞன் அரசனுடன் நின்று வீராவேசமாகப் போரிட்டுப் பல எதிரிகளை வெட்டி வீழ்த்தினான்.
இளைஞனின் வீரம் கண்டு அரசனே ஆச்சரியப்பட்டான்.போர் முடிந்தது. நாட்டு மக்கள் மகிழ்ச்சியில் துள்ளினர். அரசன் இளைஞனை அழைத்து “இளைஞனே உன் வீரம் கண்டு நான் மகிழ்ச்சி அடைந்தேன். இவ்வளவு திறமைசாலியான நீ சாதாரணக் குடி மகனாக இருக்கலாமா? எனவே இன்று முதல் நீதான் என் மந்திரி. உன்னுடைய அரிய சேவை இந்த நாட்டு மக்களுக்குப் பயன்படட்டும்” என்றான். அதைக் கேட்ட இளைஞன் இருகரம் கூப்பி அரசனை வணங்கினான்..
என் அன்புக்குாியவா்களே,
நமக்குத் தெரியாமல் பல திறமைகள் நம்மிடம் உறங்கிக் கிடப்பதுண்டு. அதைப் பிறர் சுட்டிக் காட்டிய பிறகுதான் நாம் உணருகிறோம். உணர்ந்த பிறகு நமது திறமைகளை மேலும் சீரடையச் செய்வது நமது கடமை ஆகும்.
To get daily message in whats app contact +917904957814
அவா்களுக்கு ராட்சதனாகிய கோலியாத்தோடு போாிட முடியவில்லை. அவன் ஒரு பெரிய ராட்சதன்.
தாவீது என்ற ஏதேச்சையாய் இராணுவத்தில் பணியாற்றிய தன் சகோதரா்களை காண வந்த போது அவன் கோலியாத்தின் கொக்காிப்பைக் கேட்டான். அவனுக்குள் பயம் வரவில்லை.
அதற்கு பதிலாக அவனுக்குள் இருந்த பக்திவைராக்கியத்தின் அபிஷேகம் அவனுக்குள் கிாியை செய்தது. தன் கையில் பட்டயம் இல்லாதிருந்தும் தன் ஆடு மேய்க்கும் போது வைத்திருக்கும் கவணையும் கூழாங்கல்லையும் எடுத்துகொண்டு கவணில் கல்லை வைத்து அவன் மேல் எறிந்த போது அவன் நெற்றியில் பட்டு பதிந்துபோய் கீழே விழுந்தான்.
அவ்ளோ பொிய ராட்சதன் கோலியாத்தை வீழ்த்த ஒரு சிறிய கூழாங்கல்லே போதும். அவன் கீழே விழுந்த போது அந்த ராட்சதனின் பட்டயத்தையே எடுத்து அவனைக் கொன்றுபோட்டான். எனவே அரசன் மீண்டும் அரசவையில் அமர்ந்து ஆட்சிபண்ணினது போலவே நீங்கள் எதையெல்லாம் இழந்து போனீா்களோ அவைகளையெல்லாம் கட்டாயம் பெற்றுக் கொள்வீா்கள். உங்களுக்குள் இருக்கும் ஆவியானவா் உங்களுக்கு சகலவிதத்திலும் உதவிசெய்வாா் என்பது நிச்சயம் !!
நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள் !!!
ஓர் குட்டிக் கதை
மூத்தோா் சொல்லைக் கேள்
புதுத்தெரு என்றொரு கிராமம், சின்னதுரை ஆடு மேய்ப்பவர், வழக்கமாக ஒரு புல்வெளியில் ஆடுகள் மேய்ந்துகொண்டிருந்தன.
சின்னதுரைக்கு புல்லாங்குழல் வாசிப்பது என்றால் அவ்வளவு பிரியம், ஆடுகள் மேயத்தவாறு மரத்தடியில் உட்கார்ந்து கண் மூடி, புல்லாங்குழல் வாசிக்க ஆரம்பித்தான்.
அந்த புல்வெளியைச்சுற்றி முள்வேலி போடப்பட்டிருந்தது. வேலியின் அருகே ஓர் ஆட்டுக்குட்டி மேய்ந்து கொண்டிருந் தது. வேலியின் மறுபுறம் ஒரு ஓநாய் ஒன்று வேட்டைக்கு காத்திருந்தது. ஓநாய் ஆட்டுக்குட்டியை பார்த்ததும், எதையோ பார்ப்பது போல பாசாங்கு செய்தது.
அதைப் பாா்த்த ஒர் ஆட்டுக்குட்டி, சற்று ஆச்சாியமாக பார்த்தது, ஓநாயை முதல் முறையாக பாா்த்ததினால் அதன் நோக்கம் ஆட்டுக்குட்டிக்கு தெரியாமல் போனது. “உனக்கு என்னவேண்டும்?” என்று பாசமாக கேட்டது. ஓநாயோ “நண்பா, நண்பா… நீ பார்க்க ரொம்ப அழகா இருக்கீங்க, இங்கே இளம் புல் எங்கே கிடைக்கும் என்று கேட்டது, இளம்புல் என்றால் எனக்கு ரொம்பப் பிரியம்.
அதைத் தின்று, தண்ணீர் குடித்தால் எவ்வளவு நன்றாக இருக்கும் தெரியுமா?! உங்களுக்கெல்லாம் அந்த யோகம் கிடைத்திருக்கிறது! எனக்கு அது கிடைக்கவில்லை” என்றது பாவமாக. “ஓ...! அப்படியா! நீ புல் சாப்பிடுவாயா? நீ மாமிசத்தைத்தான் சாப்பிடுவாய் என்று என் அம்மாவும் அப்பாவும் சொன்னார் களே?” என்று ஆச்சாியத்துடன் கேட்டது ஆட்டுக் குட்டி. “சேச்சே…அதெல்லாம் சுத்தப் பொய்!” என்றது ஓநாய்.
ஓ அப்படியா “சரி அங்கேயேஇருங்கள். நான் வெளியே வந்து, மலையின் அந்தப் பக்கம் இளம்புல் இருக்குமிடத்தைக் காட்டுகிறேன். நாம் இரண்டு பேரும் போய் ஜாலியா அதைச் சாப்பிட்டுவிட்டு, நண்பர்களாக சுற்றலாம்!” என்று சொல்லிவிட்டு ஆட்டுக்குட்டி வேலி இடுக்கின் வழியாக நுழைந்து, ஓநாயின் பக்கம் போயிற்று. ஓநாயின் திட்டம் தொியாமலும், ஆடு சிநேகத்துடன் சென்றது, ஓநாயின் பக்கம் சென்றதும் அது சட்டென அதன் காலை பிடித்து கொண்டது.
ஆடு சத்தமாக கத்த தொடங்கியது, சின்னதுரையும்ஆடு போடுகிற சத்தம் வந்த இடத்தை நோக்கி ஓடினான். ஓநாய் அதற்குள் ஆட்டுக்குட்டியின் கழுத்தை பிடிக்கும் நேரத்தில் அவா்கள் ஓநாயை அடித்து விரட்டிவிட்டாா்கள். அந்த ஆட்டுக் குட்டிக்குத் தானாகத் தொியவில்லை. அனுபவம் நிறைந்த அம்மா, அப்பா பேச்சை கேட்டிருந்தால்,
இந்த மாதிரி ஆபத்தில் மாட்டி கொள்ளாமல் இருந்திருக்கலாம், மதிப்பு வாய்ந்த தன் உயிரை காப்பாற்றிய சின்னதுரைக்கும் பெற்றோர்க்கும் நன்றியோடு நடந்து கொண்டது அந்த ஆட்டுக்குட்டி.
என் அன்புக்குாியவா்களே..
பொியோர் சொல்லையும், பெற்றோர் சொல்லையும் கேட்க வேண்டும். கேட்கா விட்டால் உயிருக்கு கூட ஆபத்தாகி விடும்.
பைபிள் சொல்கிறது
கொலோசெயர் 3: 20
பிள்ளைகளே, உங்களைப் பெற்றாருக்கு எல்லாக் காரிய த்திலேயும் கீழ்ப்படியுங் கள். இது கா்த்த ருக்குப் பிரியமானது
ஓநாயை போன்ற மனிதர்கள் கள்ளதீா்க்கத் தாிசிகள், உங்களுக்குள்ளே வருவாா்கள்.என்று அப்போஸ்தல நடபடிக ளில் பவுல் சொல்கிறாா்.
அப்போஸ்தலர் 20: 29
நான் போனபின்பு மந்தையைத் தப்ப விடாத கொடிதான ஓநாய்கள் உங்களுக் குள்ளயே வருவாா்கள்
இயேசு சொன்னாா்,
மத்தேயு 7: 15
கள்ளத் தீர்க்கதரிசிகளுக்கு எச்சரிக்கை யாயிருங்கள், அவர்கள் ஆட்டுத்தோலைப் போர்த்துக்கொண்டு உங்களிடத்தில் வரு வாா்கள், உள்ளத்திலோ அவர்கள் பட்சிக்கிற ஓநாய்கள்
To get daily story in whats app contact +917904957814
எனவே உங்கள் கிறிஸ்தவ ஜீவியத்தை பாதுகாத்துக்கொள்ள கிறிஸ்துவுக்குள் ளேயும், நல்ல ஆவிக்குாிய சபையிலேயும் ஐக்கியமாயிருங்கள். கூலிக்கு வேலை செய்கிறவனைப் போல பணத்துக்காக ஊழியம் செய்கிறவா்கள். ஆடுகளை பாராமாிக்கவோ, போஷிக்க வோ மாட்டார்கள். குறிப்பாக பட்சிக்கிற ஓநாய்களைப் போலிருக்கிற மோசமான மனுஷா்களின் உபதேசத்திற்கு விலக்கி பாதுகாக்கமாட்டார்கள்.
எனவே உங்களை பாதுகாத்துக் கொள்ள ஆவியானவாின் நடத்துதலின்படியும் நல்ல போதகாின் ஐக்கியத்திற்குள்ளும் இருந்து உங்களை பாதுகாத்துக் கொள்ளுங்கள்.
நீங்கள் ஆசீா்வதிக்கப்பட்டவா்கள் !!!
ஓர் குட்டிக் கதை
ஏமி காா்மைக்கேல்
அயர்லாந்து தேசத்திலே கடற்கரை ஓரத்தில் ஒரு அழகான வீடு. அந்த வீட்டில் மூத்த பிள்ளையாகப் பிறந்தாள் ஏமி. அவளுடன் பிறந்தவர்கள் ஏழு பேர். குட்டிப்பிள்ளைகள் எல்லோரும் அடிக்கடி கடற்கரைக்கு சென்று விளையாடுவார்கள்.
பிள்ளைகள் சூப்பரா நீச்சலும் அடிப்பாங்க. உனக்கு நீச்சல் தெரியுமா? லீவுநாளில் நல்லா குளித்து என்ஜாய் பண்ணு. ஆனால் அதில் ஆபத்தும் இருக்கும். So, ரொம்ப கவனமா (Carefulஆ) இருக்கணும் சாியா. சரி ஏமி அக்கா
கதைக்கு வருவோம். ஏமி பயங்கர வெள்ளை.
அவளோட கண் என்ன கலர் தெரியுமா? பிரவுன். ஆனால் அவளோட அம்மா, கூட பிறந்தவங்க எல்லோரோட கண்ணும் ப்ளூ கலரில் இருந்திச்சு.
ஏமி அம்மாகிட்ட, “எனக்கு மட்டும் ஏன் பிரவுன் கலர் கண்?” என்று கேட்டாள். “இயேசப்பா உன்னை விசேஷமா படைச்சிருக்காங்க. இது ஏன் என்று இப்பத் தெரியாது. ஆனால் ஒரு நாள் அது உனக்குப் புாியும்” என்றார்கள். ஏமிக்கோ பிரவுன் கருவிழி பிடிக்கவில்லை. ஒருநாள் இரவு படுக்கும்போது இப்படி ஜெபம் பண்ணினாள். “இயேசப்பா நான் நாளைக்கு காலையிலே எழுந்திருக்கும்போது என் கண் ப்ளூவா மாறிடணும்னு” உறுதியாக ஜெபித்துவிட்டு படுத்தாள். காலையில் எழும்பினவுடன் ஏமி கண்ணாடி முன்னாடி போய் நின்று கண்களை அகல விரித்து பார்த்தாள்.
சோகத்தில் முகம் சுருங்கியது. அழுதுகொண்டே அம்மாவிடம் போய் சொன்னாள். அம்மா சொன்னாங்க, “தேவன் எதை நமக்கு செய்தாலும் அது நன்மை யாகத்தான் இருக்கும். பிரவுன் கண்ணும் நன்மைக்குத்தான்” என்று ஆறுதல் படுத்தினாங்க.
வருஷங்கள் கடந்தன. ஏமி இந்தியாவிலுள்ள பெண்பிள்ளைகளுக்கு நிகழும் கொடுமை களைக் குறித்துக் கேள்விப்பட்டாள். நம் நாட்டின் மீது பாரம் கொண்டு, நம் நாட்டிற்கே சேவை செய்யும்படி வந்தாள். இந்தியாவிற்கு வந்து இறங்கியதும் அவளுக்கு ஒரு பெரிய ஆச்சரியம். இந்தியர்களின் கண்கள் அவளுடைய கண்ணைப்போலவே இருந்தது.
“ஓ, நான் தாயின் வயிற்றில் இருக்கும்போதே ஆண்டவர் என்னை இந்தியாவில் ஊழியம் செய்யும்படி முன்குறித்ததால் எனக்கு இந்தியரைப் போலவே கண்களைத் தந்துள்ளார்” என தேவனைத் துதித்தாள்.
என் அன்புக்குாியவா்களே,
கர்த்தர் தெரிந்து கொண்டவர்களின் செயல் களும், அவர்களது சகல விஷயங்களும் எங்கே கா்த்தா் உபயோகிக்க விரும்புகிறாரோ அதற்கேற்றார் போல் காணப்படும். கர்த்தர் சவுலை ராஜாவாக தெரிந்து கொண்ட பொழுது நடந்த அடையாளங்கள்.
கர்த்தருடைய ஆவி உன்மேல் இறங்குவார். நீ அவர்களோடே கூடத் தீர்க்கதரிசனம் சொல்லி, வேறு மனுஷனாவாய். இந்த அடையாளங்கள் உனக்கு நேரிடும்போது, சமயத்துக்கு ஏற்றபடி நீ செய். தேவன் உன்னோடே இருக்கிறார்.
சவுல் ராஜாவான பின்பு ஜனங்கள் நடுவே வந்து நின்றபோது,
எல்லா ஜனங்களும் அவன் தோளுக்குக் கீழாயிருக்கத்தக்க உயரமுள்ளவனாயிருந்தான்.
அப்பொழுது சாமுவேல் எல்லா ஜனங்களையும் நோக்கி: கர்த்தர் தெரிந்து கொண்டவனைப் பாருங்கள். சமஸ்த ஜனங்களுக்குள்ளும் அவனுக்குச் சமானமானவன் இல்லை என்றான். அப்பொழுது ஜனங்கள் எல்லாரும் ஆர்ப்பரித்து: ராஜா வாழ்க என்றார்கள். (1 சாமுவேல் 10: 6-24)
இன்றும் உங்களைப் பார்த்து கர்த்தர் சொல்கிறார்.. கர்த்தர் எதற்காக என்னை அழைத்திருக்கிறாரோ. அதற்குரிய சகல அடையாளங்களை உங்கள் பேச்சில் உங்கள் சாரத்தில் உங்கள் நடைமுறை பழக்கவழக்கங்களில் ஏற்படுத்துவார்.
Ithu pola daily message whats app venum endral contact +918148663456
ஏமி அம்மையார் நம் நாட்டில் வந்து சேவை செய்தது அயர்லாந்து தேசத்தில் சிறுமியாயிருந்த போதே அவ்விதமான அடையாளங்கள் காணப்பட்டது. அதைப்போலவே, உங்கள் எதிர்காலத்தின் திட்டத்திற்காகவே உங்களை அழைத்தவர் நீங்கள் அறிந்து கொள்ளும்படியான அடையாளங்களை உங்களில் ஏற்படுத்துவார்.
ஏசாயா 43: 1
பயப்படாதே;… உன்னைப் பேர்சொல்லி அழைத்தேன்; நீ என்னுடையவன்.
தேவன் சகலத்தையும் நன்மையாகவே செய்வார். இப்போது உங்களுக்கு இருக்கும் நிலைமை எப்படி இருந்தாலும் அதை மகிழ்வாய் ஏற்றுக்கொள்ளுங்கள். உங்களை உண்டாக்கின ஆண்டவர் உங்களைக் குறித்து பெரிய நோக்கம் வைத்துள்ளார்.எல்லாம் நன்மையாகவே முடியும்.
நீங்கள் ஆசீா்வதிக்கப்பட்டவர்கள்
ஓர் குட்டிக் கதை
நீ நீயாக இரு
ஒரு தொழிலாளிக்கு கல் உடைப்பது தொழில். இருபத்தைந்து வருடங்களுக்கும் மேலாக ஒரே வேலையை செய்து வருகிறான். அதிகமான சம்பளம்; வீட்டில் மனைவி, குழந்தைகள், வயதான பெற்றோர், பிக்கல், பிடுங்கல், வறுமை எதுவுமே இல்லை. நிம்மதியும் சந்தோஷமாய் இருக்கிறான்.
ஒருகால கட்டத்தில் அவன் அயர்ந்து போனான். அவனுக்குத் தன் மீதும், தான் வாழும் வாழ்க்கை மீதும் வெறுப்பு வந்தது. இப்படியே தான் வாழ்க்கை கழிந்துவிடுமா என தேவையே இல்லாத ஒரு வெறுமை அவனைப் பிடித்து ஆட்டியது.
அவனுக்கு சில பாடங்களை சொல்லிக் கொடுக்க தேவன் நினைத்தாா். அதன்படி. ஒருநாள் வழக்கம்போல அவன் வேலைக்குப் போய்க்கொண்டிருந்தான். தோளில் தொங்கிக்கொண்டிருந்த பையில் கல்லை உடைக்கும் ஆயுதங்கள் கனத்துக்கிடந்தன. அவன் இதயத்தைப் போலவே! கூவிக் கூவி மீன்களையும் முட்டைகளையும் விற்றுக்கொண்டுபோன தெரு வியாபாரிகள்... வானில் எழுந்து வெயிலை உடலில் வெப்பமாக இறக்கிக்கொண்டிருந்த சூரியன்.. கிளைவிட்டு கிளைதாவிப் போய்க் கொண்டு இருந்த குரங்குகள்... சாலையின் குறுக்கும் நெடுக்குமாக ஓடி விளையாடிய சிறுவர்கள்... எதுவும் அவனுக்கு உறைக்கவில்லை. நடந்துகொண்டே இருந்தான். அது வழக்கமாக அவன் நடக்கும் பாதைதான்.
ஓர் இடத்தில் அவனை அறியாமல் அவன் பார்வை திரும்பியது. அது ஒரு வணிகரின் வீடு. அன்றைக்கு என்னவோ அந்த வீட்டை அப்போதுதான் புதிதாகப் பார்ப்பதுபோல அவனுக்கு இருந்தது. அந்த வணிகர், பல வெளிநாடுகளுக்குச் சென்று வியாபாரம் செய்பவர். செல்வம் அவர் வீட்டு வெளிக்கதவில் இருந்து, வீட்டுக்கூரை வரை தன் செழிப்பைப் பதித்திருந்தது.
பார்த்தாலே பிரமிக்கவைக்கும் பிரமாண்ட மாளிகை. ஏவலுக்கு ஓடி வரும் பணியாட்கள். அவரைப் பார்க்க சதா காத்திருக்கும் ஊர்ப் பெரிய மனிதர்கள், செல்வந்தர்கள். இன்றைக்கும் அவரைப் பார்ப்பதற்காக ஒரு கூட்டம் காத்திருந்தது. அவன் பெருமூச்சுவிட்டான்.
`சே! நானும் இவரைப்போல் ஒரு வணிகராக இருந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும்!’ என்று நினைத்தான். அவ்வளவுதான். அந்த மாயாஜாலம் நிகழ்ந்தது. அவன் மிகப் பெரும் வணிகனாக உறுமாறிவிட்டான். செல்வம், செழிப்பு, வேலையாட்கள் எதற்கும் குறைவு இல்லை.
ஆனால், முக்கியமான ஒன்று அவனிடம் இப்போது இல்லை. அது, நிம்மதி. அவனைவிட வசதி குறைந்தவர்களின் பொறாமையையும் பகைமை யையும் அவன் சம்பாதிக்கவேண்டி இருந்தது. ஒருநாள் அவன் மாளிகை மாடத்தில் இருந்து தெருவையே பார்த்துக்கொண்டிருந்தான். சாலையில் அரவம். இவன் என்னவென்று எட்டிப் பார்த்தான். மணியோசையும் எக்காளமும் முழங்க ஓர் ஊர்வலம். முன்னும் பின்னும் ஊழியர்கள், பாதுகாப்புக்குக் காவலர்கள், நடுவில் ஒரு பல்லக்கில் ஒய்யாரமாக அமர்ந்தபடி அரசின் உயர் அதிகாரி ஒருவர் போய்க்கொண்டிருந்தார். சாலையில் இருந்தவர்கள் ஊர்வலத்துக்கு மரியாதையோடு வழிவிட்டு ஒதுங்கி நின்றார்கள். அந்த அதிகாரியை எல்லோரும் சிரம் தாழ்த்தி வணங்கினார்கள்... ஏழை, செல்வந்தன், வணிகன், எல்லோரும். இதைப் பார்த்த அவன் பெருமூச்சுவிட்டான்.
`நானும் இவரைப்போல ஓர் உயர் அதிகாரியாக இருந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும்!’ என நினைத்தான். அவ்வளவுதான். அந்த அற்புதம் நடந்தது. அவன் ஓர் உயர்அதிகாரி ஆகிவிட்டான். போகிற இடத்தில் எல்லாம் அவனுக்கு மரியாதை கிடைத்தது. பாதுகாவலுக்கு ஆள் படை. ஆனாலும் அவனுக்கு இன்னமும் திருப்தி இல்லை. ஒருநாள் பல்லக்கில் அடுத்த ஊருக்குப் போய்விட்டுத் திரும்பிக் கொண்டு இருந்தான். அது வெயில் காலம். சுட்டெரித்தது அனல். போதாக்குறைக்கு காற்று வேறு. பல்லக்குத் தூக்கிகள் வேகமாகப் பல்லக்கைத் தூக்கிக்கொண்டு போய்க் கொண்டிருந்தாலும்,...
அவனால் உள்ளே அமர முடியவில்லை. வெப்பம் தாங்காமல் தலையை வெளியே நீட்டி அன்னாந்து பார்த்தான். வானில் தெரிந்த சூரியன் இவனைப் பார்த்து சிரிப்பதுபோல் இருந்தது. `நான் மட்டும் சூரியனாக இருந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும்!’ என நினைத்தான். அவ்வளவுதான். இப்போதும் அதிசயம் நிகழ்ந்தது. அவன் சூரியனாக உருமாறிவிட்டான். வானில் சுதந்திரமாக வலம் வந்தான்.
கிழக்கேஉதித்து, மேற்கில் மறையும் வரை உலகை உயரே இருந்து பார்ப்பது ஆனந்தமாகத்தான் இருந்தது. ஆனால்..? தகிக்கும் இவனுடைய வெப்பத்தில் சிக்கியவர்கள் இவனைக் கண்டபடி திட்டினார்கள். விவசாயிகள் சாபம் கொடுத்தார்கள். பகலில் வேலை பார்த்த தொழிலாளர்கள் கரித்துக்கொட்டினார்கள். இவனுக்கும் பூமிக்கும் இடையே சில நேரங்களில் கருமேகங்கள் திரண்டன. அவை, இவனுடைய வெப்பத்தை பூமிக்கு அனுப்பாமல் தடுத்தன. `அட... இந்தக் கருமேகங்களுக்கு இவ்வளவு சக்தியா? நானும் கருமேகமாக மாறினால் எவ்வளவு நன்றாக இருக்கும்!’ என நினைத்தான் அவன்.
இப்போது அவன் கருமேகமாக உருமாறியிருந்தான். இஷ்டப்பட்டால் மென்மையான மழையைப் பொழிவான். கொஞ்சம் கடுப்பேறியது என்றால் மழையைப் பொழிந்து தள்ளி, கிராமங்களையும் வயல்வெளிகளையும் வெள்ளக்காடாக மாற்றுவான். இவனைப் பார்த்து மனிதர்கள் அச்சப்படுவது இவனுக்கு பிடித்தமான பொழுதுபோக்காக இருந்தது. ஆனாலும், இவனுக்குள் ஓர் உணர்வு. இவனை யாரோ பிடித்து தள்ளுவது போன்ற உணர்வு. அது யார் என்பதையும் அவன் தெரிந்து கொண்- டான். அது, காற்று! `இந்தக் காற்றுக்கு என்னையே பிடித்துத் தள்ளும் அளவுக்கு சக்தியா? நான் ஒரு காற்றாக மாறினால் எவ்வளவு நன்றாக இருக்கும்!’ நினைத்தான். காற்றாகவே மாறிப் போனான்.
காற்றா அவன்? தென்றலாகவும் வீசுவான்; நினைத்தால் சூறாவளியாகவும் மாறுவான். அவனுக்கென்னவோ சூறாவளியாக இருப்பதுதான் பிடித்திருந்தது. வீட்டுக் கூரைகளைப் பிய்த்து எறிவது; மரங்களைச் சாய்பது, ஆடுகளையும் மாடுகளை யும்... ஏன் மனிதர்களையுமே நடு நடுங்க வைப்பது அவனுக்கு தினசரி பொழுதுபோக்காக ஆனது. அவன் மாபெரும் சக்தி படைத்தவனாகத் தன்னை எண்ணி இறுமாப்பு அடைந்தான். காற்றாக அவன் அலைந்து கொண்டிருந்தபோது ஓர் இடத்தில் அதைக் கண்டான். மலை, சற்று உயரமான மலை. பெரும் சூறாவளியாக மாறி அதை நோக்கிப் போனான். அவனால், அதை ஒன்றும் செய்ய முடியவில்லை. வலுவையெல்லாம் கூட்டி மோதிப் பார்த்தும்... ம்ஹூம்... அதை துளிகூட அசைக்க முடியவில்லை.
`என்னைவிட வலுவானதா இந்த மலை? நான் இப்படி ஒரு மலையாக மாறினால் எப்படி இருக்கும்!’ அவன் நினைத்தான். மலையாக மாறினான். உயர்ந்து நிற்பது அவனுக்குப் பிடித்திருந்தது. தன்னைவிட வலுவானது உலகில் வேறு எதுவும் இல்லை என்கிறே நினைப்பே மகிழ்ச்சியாக இருந்தது. அப்போது அவனின் கால்களுக்குக் கீழே ஏதோ குடைச்சல். `டொக்... டொக்... டொக்...’ என சத்தம். யாரோ அவன் கால் விரலைக் குத்திக் கிழிக்கிறார்கள்; துளையிடுகிறார்கள்... இன்னும் கொஞ்ச நேரத்தில் அவனுடைய ஒரு விரலைக்கூட வெட்டி எடுத்தாலும் எடுத்து விடலாம்.
அவன் பயத்தோடு யார் என்று குனிந்து பார்த்தான். கல் உடைக்கும் தொழிலாளியின் கை ஒன்று ஓர் உளியை மலை அடிவாரத்தில் பதித்து, ஓங்கி ஓங்கி சுத்தியலால் வெட்டிக் கொண்டிருந்தது. அசைக்க முடியாத மலையையே ஒருவன் உடைக் கிறானென்றால் அவன் சக்தி படைத்தவன் தான் நான் அவனாக மாறவேண்டும் என்றான். அவ்வளவுதான் பழையபடி கல்லை உடைக்கிற தொழிலாளியானான். அவன் கனவு கண்டு கலவரமாய் திருதிருவென்று விழித்தான். கனவு அவனுக்கு சில உண்மையை உணர்த்தியது.
என் அன்புக்குாியவா்களே,
இந்தச் சம்பவங்கள்அனைத்தும் அவனுடைய கனவில் நிகழ்ந்திருந்தாலும் அவனுக்கு மட்டுமல்ல நம் அனைவருக்குமே உண்மையை உணா்த்தவே தேவன் இந்த அதிசய கனவைத் தந்தாா்.
நீநீயாகஇரு’ என்பதை உணர்த்தவே தான். நம் ஊரில் இதைத்தான் `இருக்கிறதை விட்டுட்டு பறக்கிறதுக்கு ஆசைப்படாதே!’ என்கிறார்கள். ஒவ்வொரு மனிதப் பிறவியுமே மகத்தானது. அதை சீரும் சிறப்புமாக, நேர்மையாக வாழ்ந்து கழிப்பதே நம் கடமை! தேவனுடைய சித்தத்தின்படி வாழ பழக வேண்டும். கண்களில் பாா்ப்பதெல்லாம் ஆகிவிட வேண்டும் என்று நினைப்பதும் அதற்கான முயற்ச்சியெடுப்பதும் வாழ்க்கையில் சறுக்கலை உண்டு பண்ணும்.
எந்த வேலையில் தேவன் உங்களை வைத்தாரோ அதில் முன்னேற்றமடைய யோசியுங்கள். புகழ்ச்சியிலும் கீா்த்தியிலும் உங்களை வைப்பாா்.அதைவிட்டு புகழின் உச்சியிலிருக்கிற இருக்கிற இன்னொருவரைப் போல ஆக வேண்டும் என முயற்ச்சி எடுப்பீா்களென்றால் அவரைப் போலுள்ள திட்டம் உங்கள் மேல் இல்லாததால் அதில் படு தோல்வியடைவீா்கள். உங்களுக்கு தேவன் வேலையோ பிஸ்னஸோ எது கொடுத்துள்ளாா் என அறிந்து செயல்படுங் கள். இவனெல்லாம் பிஸ்னஸ் பண்ணி இலாபத் தின் மேல் லாபததை சம்பாதிக்கிறான் என்னால முடியாதா என்றதை உங்களுக்கு வேண்டாம்.
ஏனென்றால் வாழ்வின் திட்டம் உங்களுக்கு வேலைதான் என்றால் அதில் யோசித்து அதில் மேன்மையடைய தேவன் உதவி செய்வார். தேவன் ஒவ்வொருவருக்கும் என்னென்ன திட்டங்கள் வைததிருக்கிறாரோ அதில் தான் நீங்கள் இருக்க வேண்டும்.
ஊழியத்தில் கூட அநேகா் சபை ஊழியத்தைத் தூக்கியெறிந்து விட்டு சுவிசேஷ ஊழியராக சபைசபுையாக தேவன் சபை ஊழியத்திற்காகக் கொடுத்த வரங்களை வைத்து கொண்டு போவாா்கள். டிவியில் கூட வருவார்கள். கொஞ்ச நாள் புகழும் பணமும் வந்ததுபோல் இருக்கும்.
ஆனால் சுவிசேஷ அழைப்பு இல்லாததால் சபை ஊழியத்திறழகுாிய வரமும் பேச்சு சாதுாியமும் இல்லாமற் போய்விடும். அரைச்ச மாவை அரைப்பது போல் மாமசத்திலேயே வசனத்தை பிரசங்கிப்பதால் எங்கேயும் எடுபடாது. ஒருவரும் கூப்பிடவும் மாட்டார்கள். தானாக போய் அவமானப்பட்டு தான் வருவார்கள்.
சபை ஊழியமும் அவர்களைவிட்டு போயிருக்கும். அவர்கள் போஷிக்கப்படுவதற்குக் கூட வழியில்லாமல் போய்விடும். எந்த ஊழியம் இருக்கிறதோ அந்த தேவ அழைப்பபில் நீங்கள் நிலைத்திருந்தால் உலகத்தில் வாழும் 120 வருஷமும் ஊழியம் புகழின் உச்சியில் தேவன் ஆசீா்வாதத்தோடு உங்களை நடத்துவாா்
இக்கதை சொல்வதை போல தேவன் உங்கள் மேல் வைத்த திட்டமும், அழைப்பும் இருப்பதால் கவுரவம் பாா்க்காமல் மீண்டும் எந்த ஊழியமானாலும், வேலையாயிருந்தாலும் எந்த அழைப்பு உள்ளதோ அந்த அழைப்புள்ள காாியத்திற்கு வாருங்கள்.
To get daily message In What's App contact +917904957814
நீங்கள் வந்ததற்காக தேவன் சந்தோஷப்பட்டு உங்களுக்குப் புது பெலன், புதுயுக்தி திறமை அதற்குரிய ஞானம், அறிவு ஆகியவற்றை தருவாா். அதை தேவனோடு கூட சந்தோஷமாய் நிறைவேற்றுவீா்கள்.
பைபிள் சொல்கிறது
ரோமர் 11: 29
தேவனுடைய கிருபைவரங்களும், அவர்களை அழைத்த அழைப்பும் மாறாதவைகளே.
எபேசியர் 4: 1
கர்த்தர்நிமித்தம் கட்டுண்டவனாகிய நான் உங்களுக்குச் சொல்லுகிற புத்தி யென்ன வெனில், நீங்கள் அழைக்கப்பட்ட அழைப்புக்குப் பாத்திரவான்களாய் நடந்துகொள்ளுங்கள்....
2 தெசலோனிக்கேயர் 1: 12
நம்முடைய தேவன் உங்களைத் தமது அழைப்புக்குப் பாத்திரராக்கவும், தமது தயையுள்ள சித்தம் முழுவதையும் விசுவாசத்தின் கிரியையையும் பலமாய் உங்களிடத்தில் நிறைவேற்றவும் வேண்டுமென்று, எப்பொழுதும் உங்களுக்காக வேண்டிக் கொள்ளுகிறோம்.
Thanks for using my website. Post your comments on this