ஓர் குட்டிக் கதை
தலைப்பு: பக்குவம்
வாங்க ! வாங்க ! வாங்க சார் ! வெங்காயம் கிலோ பதினஞ்சு ரூபாய். தக்காளி கிலோ பத்து ரூபாய், கூவி விற்றுக்கொண்டிருந்தான் தன்னாசி.
தன்னாசியின் குடும்பத்தை சிறு வயது முதலே எங்களுக்கு தெரியும். அந்த சந்தையில் வரிசையாக கூவி விற்றுக் கொண்டிருப்பவர்களில் இவன் குரல் தனியாக தெரியும். நல்ல உச்சரிப்புடன் கூவுவான்.
நான் கூட தன்னாசி நீ ரேடியோ ஸ்டேசனுக்கு வேலைக்கு போயிருந்தியின்னா உன் உச்சரிப்புக்கே வேலைக்கு எடுத்திருப்பாங்க, நகைச்சுவையாக கூறுவேன். அதுக்கெல்லாம் எனக்கு கொடுப்பினை இல்லைம்மா. படிப்பு ஏறலை ! எங்க குடும்பம் எல்லாம் இந்த சந்தையிலே காய்கறி வியாபாரம் பண்ணறவங்க, அதுனால இதுல இழுத்து விட்டுட்டாங்க, எங்க காலமும் இப்படியே ஓடிடுச்சு, சொல்லிக் கொண்டே காய்கறிகளை வாகாய் பொறுக்கி போடுவான்.
இங்க பாரு தன்னாசி இந்த காய் ‘சொத்தை’ மாதிரி இருக்கு, என்றவளிடம் அம்மா உங்களுக்கெல்லாம் அப்படிப்பட்ட காய் போட மாட்டேன் என்பான். அப்ப மத்தவங்களுக்கெல்லாம் போடுவ இல்லையா ? அவனை மடக்கிவிட்ட திருப்தியில் கேள்வி கேட்டால் அம்மா கொஞ்சம் கீழே பாருங்கம்மா என்று காட்டுவான். அவன் காட்டிய இடத்தில் பழையதும், அழுகியதும், ஒரு கூடையில் வைக்கப்பட்டிருந்தது. இதெல்லாம் எங்க போகுது? அடுத்த கேள்வியை வீசினேன். எப்படியும் ஓட்டல் காரனுக்குத்தான் போடுவான் என்று மனதுக்குள் நினைத்துக்கொண்டு..
சாயங்காலம் ஒரு மாட்டுக்காரன் வந்து வாங்கிக்குவான். சும்மாதான் கொடுப்பேன் வாயில்லா ஜீவன்களும் கொஞ்சம் சப்பிடட்டுமே என்று சொல்லிவிட்டு சிரிப்பான். திடீரென்று எங்கள் பேச்சு தடைபட்டது. என்ன தன்னாசி நோட்டும் கையுமாக ஒருவர் வந்து நிற்க, கொஞ்சம் இருங்கம்மா சொல்லி காய்கறிகள் வைத்திருக்கும் கீழ்ப்புறமுள்ள சாக்குப்பைக்குள் கையை விட்டு பணம் எடுத்து எண்ணி வந்தவர் கையில் கொடுத்தான். அவர் எண்ணி அதை நோட்டு புத்தகத்தில் குறித்துக்கொண்டு வரட்டுமா தன்னாசி என்று கிளம்பினார்.
எனக்கு தேவையான காய்கறிகளை பொறுக்கி எடுத்து முடித்து, கொண்டு வந்த பையில் போட்டு எவ்வளவு ஆச்சு? கேட்டேன். சொன்ன தொகையை என் கையில் இருந்த கைப்பையில் இருந்து எடுத்து கொடுத்து விட்டு இது இங்கேயே இருக்கட்டும், நான் உள்ளே போய் கொஞ்சம் பழமெல்லாம் வாங்கிட்டு வந்திடறேன், அவனும் என் காய்கறி கூடையை வாங்கி தன் பக்கத்தில் வைத்துக்கொண்டான்.
நான் சந்தையின் உள்புறம் நடக்க ஆரம்பித்தேன்.
மதியம் தட்டில் இருந்த சாப்பாட்டை எடுத்து வாயில் போடும்போதுதான் கவனித்தேன். கையிலிருந்த வளையலை காணவில்லை. மனது திடுக்கிட்டது. எங்கே போயிருக்கும்? ஒன்னரை பவுன் இருக்கும் எங்கேயும் கழட்டி வைத்தது போல் ஞாபகம் இல்லை. காலையில் வெளியே கிளம்பும் போது கையில் இருந்தது ஞாபகம் இருக்கிறது. அப்படியானால் எங்கே போயிருக்கும் ?
அந்த காய்க்கடையில் காய்கறிகளை பொறுக்கி எடுத்தது ஞாபகம் இருக்கிறது. அப்பொழுது வளையல் கழண்டு விழுந்திருக்கலாமோ? மனதுக்குள் கேள்வி எழ அவசர அவசரமாக வீட்டை பூட்டிக்கொண்டு அந்த வெயிலில் காய்கறிகள் சந்தையை நோக்கி நடக்க ஆரம்பித்தேன்.
தன்னாசி கடை முழுவதும் தேடிப்பார்த்து விட்டு உதட்டை பிதுக்கினான். வீட்டுல நல்லா தேடிப்பார்த்தீங்களாம்மா ? கேட்டவனிடம் பார்த்துட்டேன் தன்னாசி என்று மட்டும் பதில் சொன்னேன்.
உள்ளே சென்று பழக் கடையிலும் தேடிவிட்டு முகம் கறுமையடைய வந்தேன். இன்றைய மதிப்பில் ஐம்பாதியிரம் ரூபாய்க்கு மேல் ஆகும். அவருக்கு தெரிந்தால் வீட்டில் கண்டிப்பாய் சண்டை தான். மனசு அடித்துக்கொள்ள ஆரம்பித்தது. ஒரு வேளை தன்னாசி கடையில் விழுந்திருந்தாலும் விழுந்திருக்குமோ? சுளையாக ஐம்பாதியிரம் மதிப்புள்ள வளையல் கிடைத்தால் யாருக்கு திருப்பி கொடுக்க மனசு வரும்? மனசு விரும்பாவிட்டாலும் அறிவு அவனாகத்தான் இருக்கும் என்று அடம் பிடித்து சொன்னது.
வீட்டில் சொன்னவுடன் எதிர்பார்த்தது போல் அவர் சண்டைக்கு வரவில்லை. எங்கேயாவது கழட்டி வச்சிருப்ப, நல்லா தேடிப்பாரு நிதானமா யோசி, சொல்லிவிட்டு அவர் வேலையை கவனிக்க சென்று விட்டார். எனக்கு தன்னாசி மேல் தான் சந்தேகம் இருப்பதால் மற்றவற்றை யோசிக்க முயற்சிக்கவில்லை.
இரண்டு நாட்கள் கழித்து மீண்டும் சந்தைக்குள் சென்றவள் தன்னாசியை பார்க்கவே வெறுப்பாக இருந்தது. இதற்கும் அவன் என்னம்மா வளையல் கிடைச்சுதா? அக்கறையுடன் கேட்டதற்கு அது எப்படி கிடைக்கும் ? என்று குதர்க்கமாய் எதிர் கேள்வியை போட்டு அவன் கடையை விட்டு விலகி அடுத்த கடையை நோக்கி நடந்தேன். எப்பொழுதும் நாலு வார்த்தை அவனிடம் பேசி விட்டு ஏதேனும் இரண்டு மூன்று காய்கறிகள் வாங்கி விட்டுத்தான் அடுத்த கடையை நோக்கி போவேன். ஆனால் இன்று அவன் கடையில் நிற்கவே என் மனது கேட்கவில்லை. அவன் கவலையுடன் என்னை பார்ப்பது போல் என் உள்ளுணர்வு சொல்லியது.
மறு நாள் காலை எட்டு மணி இருக்கும், கதவு தட்டப்பட்டது. கதவை திறந்த என் கணவர் எதிரில் தன்னாசி நிற்பதை பார்த்ததும் என்ன தன்னாசி இந் நேரத்துக்கு இந்த பக்கம் ? அம்மா ஏதாவது சொல்லியிருந்ததா ? இல்லெங்கய்யா , அம்மா வளையல் என் கடைக்கு வந்த போது காணோம் அப்படீன்னு சொல்லியிருந்தாங்க, என் மேல கூட சந்தேகப்படறமாதிரி இருந்தது.
நான் அப்படிப்பட்டவனெல்லாம் இல்லையா. அவன் சொல்லிக்கொண்டிருந்தது உள்ளிருந்த எனக்கு கேட்டது. என் கணவர் சே..சே.. தன்னாசி என்ன சொல்றே? உன் அப்பா எங்கிட்ட படிச்ச பையன், நீயெல்லாம் என் கண் முன்னாடி வளர்ந்த பையன், அப்படி இருக்கும் போது அப்படியெல்லாம் நினைக்க மாட்டோம். இல்லீங்கய்யா அம்மா எப்பவும் என் கடையில் எதுவும் வாங்கலையின்னா கூட நாலு நல்ல வார்த்தை பேசிட்டு போவாங்க, நேத்து சரியா கூட பேசாம போயிட்டாங்க, அதனாலதான் மனசு கேக்கலை.
கண்களில் கண்ணீர் வர பேசியவனிடம் காவேரி முதல்ல காப்பி போட்டுட்டு வா உள்ளே சொல்லிவிட்டு முதல்ல நீ உட்காரு, அவனை உட்கார வைத்தவர், நான் காப்பி போட்டு கொண்டு வந்ததை அவனிடம் கொடுத்து என்ன காவேரி நம்ம தன்னாசியை சந்தேகப்படறியா ? என்று கேட்டவருக்கு நான் “அப்படியெல்லாம் ஒண்ணுமில்லை” என்னை தப்பா நினைச்சுக்காதே தன்னாசி வளையலை தொலைச்சதுல மனசு கொஞ்சம் வருத்தம் அவ்வளவுதான் அவனை சமாதானப்படுத்தி அனுப்பினோம்.
அன்று ஞாயிற்றுக்கிழமை, வெளியூரில் கல்லூரியில் படித்துக்கொண்டிருக்கும் என் மகனும், மகளும் வந்திருந்தார்கள். அவர்களை வைத்து சமையலறையை கொஞ்சம் சுத்தம் செய்யலாம் என்று கூப்பிட்டேன். என்னம்மா நீ அலுத்துக்கொண்டே வந்த மகள் சமையலறை ஓரத்தில் இருந்த பாத்திரங்களை ஒவ்வொன்றாய் எடுத்து வெளியே வைத்துக்கொண்டிருந்தவள் அம்மா இங்க பாரு என்று எதையோ எடுத்துக்காட்ட அது என் வளையல் !
To Get Daily Story Contact +917904957814
எங்கேடி கிடைச்சுது? கேட்டவளுக்கு பாத்திரங்களுக்கு நடுவுல கிடந்தது என்றாள்.
காய்கறிகளுடன் வெங்காயத்தை கீழே கொட்டும் போது அதற்குள் கழண்டிருந்த வளையல் உருண்டு அந்த பாத்திரங்களின் நடுவில் விழுந்திருக்கலாம் என் முடிவு செய்தவள் என் கணவர் சொன்ன “தேடிப்பாரு” என்ற வார்த்தையை கேட்டு தேடி இருந்தால் பாவம் ஒரு அப்பாவி பையனின் மனதை நோக வைத்திருக்க வேண்டியதில்லையே ?
கிட்டத்தட்ட நாற்பத்தி ஐந்தை நெருங்கிக்கொண்டிருக்கும் எனக்கு வயதுக்கு தகுந்த பக்குவம் வரவில்லையோ ? மனதுக்குள் நினைத்துக் கொண்டு நாளை தன்னாசியிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று முடிவு செய்து கொண்டேன்.
*என் அன்பு வாசகர்களே,*
ஒவ்வொரு மனிதனுக்கும் தன் வயதிற்கேற்ற பக்குவம் வந்தால் மட்டுமே அந்த வயதிற்கு மதிப்பு இல்லாவிட்டால் எந்த மதிப்பும் இல்லை. ஒரு சிலர் தங்கள் இளம்வயதிலேயே பக்குவப்படுகின்றனர் ஒரு சிலரோ எத்தனை வயதானாலும் பக்குவப்படுவதில்லை.
இன்றைய கதையிலும் கூட அந்த பெண்ணின் மனது பக்குவப்படாமல் அந்த காய் கடைக்காரனை சந்தேகப்பட்டதால் எங்கும் தேடிப்பார்க்க மனது இடம் கொடுக்கவில்லை. ஏனெனில் அந்த மனது அவன்தான் எடுத்திருப்பான் என்று உறுதியோடு இருந்தது. ஒரு மனிதன் எதற்கெல்லாம் தன் மனதை பக்குவப்படுத்த வேண்டும் என்பதை வேதம் இவ்வாறு எடுத்துரைக்கிறது,
*10 கர்த்தருடைய வேதத்தை ஆராயவும், அதின்படி செய்யவும், இஸ்ரவேலிலே கட்டளைகளையும் நீதிநியாயங்களையும் உபதேசிக்கவும், எஸ்றா தன் இருதயத்தைப் பக்குவப்படுத்தியிருந்தான்.*
எஸ்றா 7:10
இதை வாசிக்கின்ற எத்தனை பேர் தவறாது வேதத்தை வாசிக்கின்றோம். வேதத்தை வாசிக்க நம் இருதயம் பக்குவப்பட்டிருக்கிறதா???. இன்றைய காலகட்டத்தில் வேதத்தை கையில் எடுப்பதற்கே அநேகருக்கு ஏதோ ஒருவித தயக்கம் இருக்கிறது. இப்படிப்பட்ட சூழ்நிலையில் எப்படி வேதத்தை வாசிப்பதற்கான பக்குவம் வரும்.
வேதத்தை வாசிப்பதற்கான பக்குவம் வந்துவிட்டால் எந்த சூழ்நிலையையும் எதிர்க்கொள்ளும் பக்குவமும் நம் மனதிற்கு கிடைக்கும். அப்படிப்பட்ட மனப்பக்குவத்தை அடைந்துவிட்டால் நம் இருதயம் எதைக்குறித்தும் கலங்காது.
எஸ்றா பக்குவப்பட்டு எருசலேமின் ஆலயத்தை கட்டியது போல நாமும் இந்த உலகத்திற்கேற்ற பக்குவமடைய வேதத்தை அனுதினமும் தியானிப்போம் மற்றவர்களை துக்கப்படுத்தாது ஆசீர்வாதமாய் வாழ்வோம்.
*நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்!!!!*
ஓர் குட்டிக் கதை
யானைப் பாகன்
முத்தையா எனும் யானைப் பாகன் ஒருவன் நல்லம்மா எனும் ஊரில் வாழ்ந்து வந்தான். அவன் யானைக் குட்டி ஒன்றை பல வருடங்களாக எடுத்து வளர்த்து வந்தான். திடீரென்று அந்த யானைக்குடிக்கு பெரும் வயிற்று வலி, என்னென்னமோ செய்து பார்த்தும் அந்த யானைக்கு வயிற்று வலி தீரவேயில்லை.
கடைசியாக கால்நடை வைத்தியன் ஒருவனை அழைத்து வந்து பார்த்தான். வைத்தியன் யானையை சோதித்து விட்டு ,உங்கள் யானையை பெரும் நோய் ஒன்று தாக்கியுள்ளது ,இந்த நோயை தீர்க்க வழியே இல்லை. உங்கள் யானை இன்னும் ஓரிரு மாதத்தில் இறந்து விடும் என்று கூறி வைத்தியம் பார்த்ததற்க்கு கூலியை வாங்கி விட்டு வைத்தியன் சென்று விட்டான். இந்த யானையை நம்பித் தான் நான் பலரிடமும் கடன் பெற்றேன், இது செத்து விட்டால் நான் சாப்பாட்டுக்கு என்ன செய்வேன் என்று அழுது புலம்பினான் முத்தையா.
அப்போது தான் யானைப்பாகன் முத்தையாவிற்க்கு நியாபகம் வந்தது, கந்தன் எனும் ஒருவன் சென்ற வாரம் தனது யானையை பாதி விலைக்கு கேட்டிருந்தது. அப்போது விலை குறைவாக கேட்டதால் முத்தையா தனது யானையை விற்க மறுத்து விட்டான். இனி இந்த யானையை வைத்து எந்த பிரியோஜனமும் இல்லை , இந்த யானையை இனி கந்தன் தலையிலேயே கட்டி விட வேண்டியது தான் என முடிவு செய்தான்.
பிறகு முத்தையா கந்தனுக்கு யானையை பாதி விலைக்கே கொடுத்து விட்டான். ஆனால் உண்மையில் ,அந்த யானைக்கு வைத்தியம் பார்த்தவன் கந்தனின் கூட்டாளி,உண்மையில் அந்த யானைக்கு சாதாரன வயிற்று வலியே ,அந்த யானையை பாதி விலைக்கு வாங்கவே அந்த கந்தனும் வைத்தியனும் இப்படியொரு நாடகத்தை நடத்தினர். யானையை பெற்றுக் கொண்ட கந்தனும் வைத்தியனும் அந்த யானையை அடுத்த நாள் அதீத விலைக்கு விற்க ஏற்பாட செய்திருந்தனர்.
அடுத்த நாள் வந்தது ,கந்தனும் வைத்தியனும் கேட்ட அதீத விலைக்கு அந்த யானையை வாங்க ஒருவன் வந்திருந்தான் ,வந்தவன் யானையை வாங்க முடிவு செய்து விட்டான். கந்தனுக்கும் வைத்தியனுக்கும் ஒரே சந்தோசம் பணம் கிடைக்கப் போகிறது என்று, நேற்றிரவு அந்த யானை என்னத்தை திண்றுதொலைத்ததோ யானை தொப்பென்று கீழே விழ அப்படியே செத்துப்போனது. யானையை வாங்க வந்தவன் யானையை வாங்க மறுத்து விட்டு சென்று விட்டான். கடைசியில் கந்தனுக்கும் வைத்தியனுக்கும் ஏமாற்றமே மிஞ்சியது. பிறகு இருவரும் தாங்கள் செய்த தவறை எண்ணி வருத்தம் கொண்டனர்.
To Get Daily Story In What's App Contact +917904957814
என் அன்பு வாசகர்களே
நாம் பிறரை ஏமாற்ற முயற்சித்தால் நமக்கும் ஏமாற்றமே மிஞ்சும். இன்றைய கதையில் வருவது போல அநேகர் அநேகருடைய பணத்தையும், பொருளையும், சொத்தையும் ஏமாற்றி மிகக்குறைந்த விலைக்கு வாங்கி அதீத லாபம் ஈட்டுகின்றனர்.
வேதாகமத்தில் ஈசாக்கின் குமாரனாகிய யாக்கோபு, தன் சகோதரனாகிய ஏசாவை ஏமாற்றி அவனுக்குரிய ஆசீர்வாதத்தை தன் தகப்பனிடத்திலிருந்து பெற்றுக்கொண்டு சந்தோஷமாய் வாழலாம் என்று நினைத்தனர் அவனும் அவன் தாயும். ஆனால் அவன் நினைத்து போல ஆசீர்வாதத்தை ஏமாற்றி பெற்றுக்கொண்டான். அதன்பிறகு அவனால் சந்தோஷமாய் வாழலாம் முடியவில்லை. தன் மாமன் வீட்டில் பதினான்கு வருடங்கள் சம்பளமில்லாமல் வேலை செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டது.
எப்பேற்பட்ட மனிதனாயினும் தன்னால் பிறர் ஏமாற்றப்பட்டால் அதற்குரிய பிரதிபலனை அந்த மனிதன் அடைந்தே தீரவேண்டும். வேதம் இவ்வாறு சொல்கிறது,
ஏசாயா 40: 10
10 இதோ, கர்த்தராகிய ஆண்டவர் பராக்கிரமசாலியாக வருவார்; அவர் தமது புயத்தில் அரசாளுவார்; இதோ, அவர் அளிக்கும் பலன் அவரோடேகூட வருகிறது; அவர் கொடுக்கும் பிரதிபலன் அவருடைய முகத்துக்கு முன்பாகச் செல்லுகிறது.
நாம் என்ன சொய்கிறோமோ அதற்குரிய பிரதிபலனை தேவன் நியாயத்தீர்ப்பின் நாளில் நிச்சயம் நமக்கு கட்டளையிடுவார் என்பதில் ஐயமில்லை. எனவே நம்மால் இயன்றவரை மற்றவர்களுக்கு நன்மையை மாத்திரம் செய்வோம் அதனால் கிடைக்கக்கூடிய பிரதிபலனை அனுபவிப்போம்.
நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்!!!
ஓர் குட்டிக் கதை
வாக்கு மாறாத பசு
காளிங்கன் என்ற இடையன் பல பசுக்களை பராமரித்து வருகிறான். அவன் ஒரு அதிகாலையில் தன் பசுக்களை அழைத்துத் தனக்குத் தேவையான அளவு மட்டுமே பாலைக் கறந்து கொண்டு மீதியைத் தங்கள் கன்றுகளுக்குத் தர அவற்றை அனுப்பி விடுகிறான். அந்தப்பசுக்களும் தங்கள் கன்றுகளைச் சேர காட்டு வழியே செல்கின்றன.
அவர்கள் சென்ற வழியில் கடும்பசியோடு அற்புதா என்ற புலி இரை நோக்கிக் காத்திருந்தது. பசுக்களைக் கண்ட அற்புதா கடும் சீற்றத்துடனும், கர்ஜனையுடன் பசுக்கூட்டத்தின் நடுவே தாவியது. பசுக்கள் தங்கள் உயிரைக் காத்துக் கொள்ள பெரும் ஓட்டம் எடுத்தன. ஆனால் புண்யகோடி என்ற பசு மட்டும் அந்த புலியிடம் மாட்டிக் கொண்டது. அந்தப் பசியுடம் புண்யகோடியைக் கொன்று தின்னப் புறப்பட்ட புலியிடம் புண்யகோடி மிகுந்த துக்கத்துடன் வேண்டிக் கொண்டது.”
புலியே என் கன்று மிகுந்த பசியுடன் எனக்காகக் காத்துக் கொண்டிருக்கும். நீ எனக்கு சிறிதே சிறிது அவகாசம் கொடுத்தால் நான் அதற்குப் பால் கொடுத்து விட்டு, அனாதையாகப் போகும் என் கன்றை மற்றவர்களிடம் ஒப்படைத்து விட்டு வந்து விடுகிறேன். பிறகு நீ என்னை உண்டு பசியாறுவாயாக”. புலி சொன்னது. “நான் சிறிது காலமாக இரை கிடைக்காமல் கடும்பசியோடு இருக்கிறேன். உன்னை விட்டு விட்டால் நீ தப்பித்து விடுவாய். கண்டிப்பாக திரும்பி வர மாட்டாய். உன்னை விடுவதற்கு நான் என்ன முட்டாளா?”
புண்யகோடி உருக்கமாகச் சொன்னது.”புலியே சத்தியமே என் தாய், தந்தை, நட்பு, உறவு எல்லாமே. அப்படி இருக்கையில் நான் சத்தியம் தவறினால் அந்த இறைவனே என்னை மெச்ச மாட்டான். நான் சத்தியம் செய்து சொல்கிறேன். கண்டிப்பாக என் கன்றுக்குக் கடைசியாகப் பால் கொடுத்து விட்டு வருவேன். என்னை நம்பு” புலிக்கு புண்யகோடியின் உருக்கம் மனதை அசைத்திருக்க வேண்டும். புண்யகோடியைச் செல்ல அனுமதித்தது. புண்யகோடி தன் இருப்பிடத்திற்கு வந்து தன் கன்றிடம் நடந்ததைச் சொல்லி விட்டு சொன்னது. “மகனே கடைசியாக பாலருந்திக் கொள். நான் சீக்கிரம் அந்தப் புலியிடம் செல்ல வேண்டும். வாக்குக் கொடுத்து விட்டு வந்திருக்கிறேன். இனி எக்காலத்திலும் நீ அந்த வழியில் சென்று அந்தப் புலியிடம் மாட்டிக் கொள்ளாதே. எச்சரிக்கையாக இரு” பால் குடித்த கன்று பசுவைப் போக அனுமதிக்கவில்லை. ”தாயே இனி எனக்கு பசித்தால் பால் தர யாரிருக்கிறார்கள்? என்னை யார் பார்த்துக் கொள்வார்கள்? நான் யாருடன் இருப்பேன்? என்னை அனாதையாக விட்டு விட்டுச் சென்று விடாதே. நீ இங்கேயே இருந்து விடு”.
அதை ஏற்றுக் கொள்ளாத புண்யகோடி தன் உறவுப் பசுக்களை எல்லாம் அழைத்து உருக்கத்துடன் வேண்டிக் கொண்டது. “என் குழந்தையைப் பார்த்துக் கொள்ளுங்கள். கொடுமைப்படுத்தி விடாதீர்கள். அதனை அனாதையாக்கி விடாதீர்கள். அதனைக் கருணையோடு நடத்துங்கள்”
அந்தப் பசுக்களும் புண்யகோடியைப் போக வேண்டாமென்றன. அங்கேயே இருந்து விடச் சொல்லி வற்புறுத்தின. புண்யகோடி மறுத்து விட்டது. ”இந்த அற்ப வாழ்க்கைக்காக நான் வாக்கு மாற மாட்டேன். இது என் கர்ம பலன். அதனை அனுபவித்தே நான் ஆக வேண்டும். என் குழந்தையை மட்டும் நன்றாகப் பார்த்துக் கொள்ளுங்கள். எனக்கு அது போதும்” என்று கிளம்பியது. பசுக்களும், புண்யகோடியின் கன்றும் பெரும் துக்கத்துடன் புண்யகோடியை வழியனுப்பி வைத்தன.
புலியிடம் வந்து நின்ற புண்யகோடி சொன்னது. “புலியே நான் சொன்னபடி வந்து விட்டேன். கடும் பசியுடன் இருந்த உன்னைக் காக்க வைத்து நான் உனக்கு தவறிழைத்து விட்டேன். இனி என்னைத் தின்று நீ பசியாறுவாயாக” சொல்லி விட்டு அதன் முன் மண்டியிட்டு புண்யகோடி படுத்துக் கொண்டது. அதனையே பார்த்துக் கொண்டிருந்த புலிக்கு புண்யகோடியின் சத்தியம் தவறாமையும், உயர்வான தன்மையும் என்னவோ செய்தன. அந்தக் கணத்தில் மனமாற்றம் அடைந்த புலி சொன்னது. “உன்னைப் போன்ற ஒரு சத்தியம் தவறாத பசுவைக் கொன்று தின்றால் அந்த இறைவனும் என்னை மன்னிக்கமாட்டான். நீ என் சகோதரியைப் போன்றவள். உன்னைத் தின்று உயிர் வாழ்ந்து நான் என்ன சாதிக்கப்போகிறேன். என்னை மன்னித்து விடு”.
புண்யகோடியைத் தின்று பசியாற விரும்பாமல், பசியையும் தாங்கிக் கொள்ள முடியாமல் அற்புதா என்ற அந்தப்புலி மலையுச்சியில் இருந்து கீழே குதித்துத் தன் உயிரை மாய்த்துக் கொண்டது. புண்யகோடி மீண்டும் தன் இருப்பிடம் திரும்ப அதன் கன்றும், காளிங்கனும், மற்ற பசுக்களும் பெருமகிழ்ச்சி அடைந்தன.
என் அன்பு வாசகர்களே,
பிறருக்கு நாம் ஒரு வாக்குறுதி அளித்தால் அதை நிச்சயம் நிறைவேற்ற வேண்டும் என்பதே இக்கதையின் கருத்து. நாம் பிறருக்கு கொடுக்கும் வாக்கு ஒருவேளை நமக்கு அது விருதாவாய் இருக்கலாம் ஆனால் அந்த வாக்கை கேட்பவர்களுக்கு அது தேவ வாக்கு என்பதை நினைவில் கொள்ள வேண்டும். ஏனெனில் ஒருவேளை நாம் கொடுத்த வாக்கை மறக்கலாம் ஆனால் அதை கேட்பவர்கள் அது நிறைவேறும் வரை ஒருபோதும் அதை மறப்பதில்லை. அதற்காக அனுதினமும் காத்திருப்பார்கள்.
நாமும் அதைப் போலத்தான் தேவன் நமக்கு கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றுவார் என்று அனுதினமும் காத்திருந்து ஜெபிக்கிறோம். அந்த வாக்குத்தத்தம் நிறைவேறுகிற வரை இடைவிடாது அந்த காரியத்திற்காக ஜெபிப்பதைப்போலவே நாம் மற்றவர்களுக்கு கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றுவோம் என்று அவர்களும் மிகுந்த எதிர்பார்ப்புடன் காத்திருப்பார்கள். அவர்கள் எதிர்ப்பார்ப்பு அவமாய் போகும் பட்சத்தில் அவர்கள் எதையும் செய்ய துணிந்து விடுவர்.
வேதாகமத்தில் தன் மாமனாகிய யூதா கொடுத்த வாக்குறுதியை மறந்துபோனதினால் அதை நியாபகப்படுத்த தாமார் செய்த காரியம் (ஆதி 38:6-12) வசனங்களில் தெளிவாக சொல்லப்பட்டிருக்கிறது. தாமார் அந்த வாக்குத்தத்தம் நிறைவேற யாரும் எதிர்பாராத காரியத்தை செய்து அதை நிறைவேற்றிக்கொண்டாள். ஆனால் இயேசுவின் இரத்தத்தால் மீட்கப்பட்ட வர்கள் தேவனுக்கு நியாபகப்படுத்த வேண்டிய அவசியமில்லை. ஏனெனில் வானமும் பூமியும் ஒழிந்து போனாலும் அவர் சொன்ன வாக்கு மாறுவதில்லை என்று வேதம் சொல்கிறது. நாம் செய்ய வேண்டியது ஒன்று மட்டுமே அந்த வாக்குத்தத்தம் நிறைவேற பொறுமையோடு காத்திருக்கு வேண்டும்.
எபிரேயர் 10: 36
நீங்கள் தேவனுடைய சித்தத்தின்படி செய்து, வாக்குத்தத்தம்பண்ணப்பட்டதைப் பெறும்படிக்குப் பொறுமை உங்களுக்கு வேண்டியதாயிருக்கிறது.
அவ்வாறு பொறுமையோடு காத்திருந்து நாம் விரும்பியதை பெற்றுக்கொள்ளும் போது
நீதிமொழிகள் 13: 12
நெடுங்காலமாய்க் காத்திருக்குதல் இருதயத்தை இளைக்கப்பண்ணும்: விரும்பினது வரும்போதோ ஜீவவிருட்சம்போல் இருக்கும்.
எனவே பொறுமையோடு காத்திருப்போம், ஜீவ விருட்சத்தை பெற்றுக் கொள்வோம்.
நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்!!!!
ஓர் குட்டிக் கதை
கடவுளை காட்டுங்க!
நாம் தேவருடைய குருகுலத்தில் பயின்ற மாணவர்களில் சைதன்யனும் ஒருவன். மற்ற மாணவர்களைக் காட்டிலும் மிகவும் புத்திசாலியாக இருந்த சைதன்யனை குருவுக்கு மிகவும் பிடித்திருந்தது. ஆகவே, தனக்குக் தெரிந்த அனைத்தையும் நாமதேவன் சைதன்யனுகுக் கற்றுக் கொடுத்தார். குருகுலத்தில் பல ஆண்டுகள் பயின்ற சைதன்யனுக்கு வயது பதினெட்டு ஆயிற்று.
ஒரு நாள் நாமதேவர் அவனை அழைத்து, "மகனே நீ கற்றுக்கொள்ள வேண்டிய அனைத்தையும் தெரிந்து கொண்டுவிட்டாய். இத்துடன் குருகுலவாசம் உனக்கு போதும். நீ இனி உன் பெற்றோரிடம் சென்று அவர்களுக்குத் தொண்டு செய்வாய். கடவுள் எப்போதும் உனக்குத் துணை இருப்பார்," என்று வாழ்த்தினார்.
தனது குருவை தரையில் விழுந்து வணங்கிய சைதன்யன் அவரிடம் பணிவாக, "குருவே எனக்கு எவ்வளவோ பாடங்கள் கற்றுக் கொடுத்தீர்கள். ஆனால், எந்தக் கடவுளைப் பற்றி இப்பொழுது குறிப்பிட்டீர்களோ அவரை மட்டும் எனக்குக் காட்டவில்லையே! கண்ணால் காண முடியாத கடவுள் எவ்வாறு எனக்குத் துணை இருப்பார்?" என்று வினவினான்.
"சைதன்யா உன்னுடைய சந்தேகத்திற்கு பிறகு ஒரு நாள் விடை அளிக்கிறேன். நீ இப்போது வடக்கு திசையில் உள்ள காட்டின் வழியே சுசந்த நகர் எனும் நகரத்தைத் தாண்டி பவானிபுரத்திற்கு சென்று அங்குள்ள என் சகோதரனை சந்தித்து அவனுடைய சேமலாபங்களை விசாரித்துக் கொண்டு வா?" என்றார்.
"அப்படியே செய்கிறேன் குருவே", என்று பதிலளித்தான் சைதன்யன். குருவின் மனைவி கொடுத்த உணவுப் பொட்டலங்களுடன், மறுநாள் காலையில் கிளம்பினான் சைதன்யன்.
நண்பகல் நேரம் காட்டு வழியில் பாதியைக் கடந்து விட்டான். அப்போது அவனுக்கு மிகவும் தாகம் உண்டாயிற்று. இந்தக் காட்டில் குடிக்கத் தண்ணீர் எங்கே கிடைக்கும் என்று தேடிய அவன் கண்களில் ஒரு வயதான பார்வையற்ற மனிதன் தென்பட்டான். அவன் செடியிலுள்ள இலைகளைக் கைகளால் தடவிப் பார்த்துப் பின் அதை முகர்ந்து பார்த்து சில இலைகளை மட்டும் பையினுள் போட்டுக்கொண்டான். "ஐயா, தாங்கள் எதைத் தேடுகிறீர்கள்?" என்று கேட்டான்.
"நான் இந்தக் காட்டில் வசிப்பவன். நான் மூலிகைகளை சேகரித்து பிறருக்கு வழங்குகிறேன். குருடன் என்பதால், முகர்ந்து பார்த்து மூலிகைகளைக் கண்டுபிடிக்கிறேன்," என்றான். "இப்போது நீங்கள் பறித்துக் கொண்டிருப்பது என்ன மூலிகை?" என்றான்.
"இது பாம்புக் கடிக்கான மூலிகை. இந்த மூலிகையின் சாறை பாம்பு கடித்தவன் வாயில் விட்டால், விஷம் இறங்கிவிடும். நீ காட்டு வழியில் சுற்றுகிறாயே... இந்த மூலிகையை கொஞ்சம் வைத்துக்கொள்," என்று சில இலைகளைக் கொடுத்தான்.
அவற்றை பத்திரமாக வைத்துக்கொண்ட சைதன்யன், "ஐயா, குடிக்க தண்ணீர் கிடைக்குமா?" என்று கேட்டான். "அருகில் ஒரு கிணறு உள்ளது!" என்று கிணறு இருக்கும் இடத்தைக் காட்டினான். அந்தக் கிணற்றை அடைந்து தாகம் தீரத் தண்ணீர் குடித்தபின், ஒரு மரத்தடியில் அமர்ந்து உணவு உண்டுவிட்டு அப்படியே உறங்கிவிட்டான் சைதன்யன். அவன் மீது ஏதோ இடித்துவிட்டு ஓடுவது தெரிந்து திடீரெனக் கண் விழித்த சைதன்யன் கண்களில் வேகமாக ஓடும் ஒரு முயல் தென்பட்டது.
திடீரென மரத்தில் ஏதோ சத்தம் கேட்க, நிமிர்ந்து பார்த்தால் ஒரு பெரிய கிளை ஒடிந்து கீழே விழ இருந்தது. உடனே நகர்ந்து விட தற்செயலாக உயிர் தப்பினான் சைதன்யன். அங்கிருந்து பயணத்தைத் தொடர்ந்த சைதன்யன் இருட்டும் நேரத்தில் சுசாந்த நகரை அடைந்தான். அங்கு பசியால் வாடிய ஒரு பிச்சைக்கார குடும்பத்திற்கு எஞ்சிய உணவுகளை கொடுத்துவிட்டு அன்று இரவு ஒரு சத்திரத்தில் தங்கினான்.
நடு இரவில் ஏதோ சத்தம் கேட்டு திடுக்கிட்டு எழுந்த சைதன்யன் தன் அருகில் உறங்கிக் கொண்டிருந்த மனிதனின் வாயில் நுரைதள்ள முனகிக் கொண்டிருபதைப் பார்த்தான். கொஞ்ச தூரத்தில் ஒரு விஷப்பாம்பு ஓடிக்கொண்டிருப்பதை பார்த்தான். அந்த மனிதனின் அபாய நிலையை உணர்ந்த சைதன்யன் உடனே தன்னிடமிருந்த விஷக்கடி மூலிகைகளை எடுத்து சாறு பிழிந்து அந்த மனிதனின் வாயில் விட்டான். சற்று நேரத்திற்க்கெல்லாம் அவன் சாதாரண நிலையை அடைந்தான்.
அந்த நபர் யாருமல்ல! குடிமக்களின் குறைகளை அறிய மாறுவேடம் பூண்டு இரவில் திரிந்த அந்த நாட்டு மந்திரி. சைதன்யனுக்குத் தன் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்த மந்திரி, "நீ என் உயிரைக் காப்பாற்றினாய். அதற்க்கு செய் நன்றியாக உனக்கு மன்னரிடம் வேலை வங்கித் தருகிறேன்," என்றார்.
"மிகவும் நன்றி ஐயா. ஆனால், நான் முக்கிய அலுவலகமாக பவானிபுரம் சென்று கொண்டிருக்கிறேன். சில தினங்கள் கழித்து உங்களை சந்திக்கிறேன்," என்று கூறி மந்திரியிடமிருந்து விடைப் பெற்றுக்கொண்டான். மறுநாள் காலை பவானிபுரத்தை அடைந்து குருவின் சகோதரரை சந்தித்து சேமலாபங்களை விசாரித்து அறிந்து, பிறகு தன் குருவிடம் திரும்பினான் தான் சென்று வந்த விவரங்களையும், அவரது சகோதரனைப் பற்றியும் விளக்கிக் கூறினான்.
"மகனே, நினைவிருக்கிறதா? கண்ணால் காண முடியாத கடவுள் எங்கே என்று வினவினாய் அல்லவா? அந்த சந்தேகக்திற்கு நான் ஏதும் விளக்கம் கூறாமல் உனக்கு விடை கிடைத்து விட்டது. கடவுளைப் பார்த்து விட்டாய் அல்லவா?" என்றார்.
"நானா! நான் எங்கே கடவுளைப் பார்த்தேன்? பார்க்கவில்லையே!" என்றான் ஆச்சரியத்துடன் சைதன்யன். "மகனே கடவுள் எப்போதும் எல்லா இடங்களிலும் காணப்படுகிறார். ஆனால், ஒரே உருவத்தில் அவர் உனக்குத் தோன்றவில்லை," என்றார்.
"எந்த குருட்டு முதியவர் உனக்கு பாம்பின் விஷக்கடிக்கான மூலிகை தந்தாரோ, அவர் கடவுள். காட்டிலும் கூட கிணற்றின் தேவை ஏற்ப்படும் என்று எண்ணி, யாரோ ஒருவன் கிணறு தோண்டி இருந்தானே, அவனும் கடவுள் தான். உன்னுடைய உயிரைக்காப்பற்றிய முயலும் கடவுள் தான். எந்த மந்திரியை பாம்புக் கடியிலிருந்து நீ பிழைக்க வைத்தாயோ, அவருக்கு நீ கடவுள். இவ்வளவு உருவங்களில் கடவுளைக் கண்ட பிறகுமா கடவுளை நான் காணவில்லை என்று நீ கூறுகிறாய்?" என்றார்.
குருவின் வார்த்தைகளில் இருந்த உண்மையை அறிந்து உணர்ந்ததும் சைதன்யனுக்கு ஞானோதயம் உண்டாயிற்று. தனக்கு ஞானோதயம் உண்டு பண்ணிய குருவை விழுந்து வணங்கி விட்டு, அவரிடமிருந்து விடை பெற்றான். இதற்குப் பிறகு சைதன்யன் தன் பெற்றோரை அழைத்துக்கொண்டு சுசாந்த நகரை அடைந்து மந்திரியை சந்தித்தான். மந்திரியின் உதவியால் அவனுக்கு அரசாங்கத்தில் நல்ல வேலையும் கிடைத்தது.
என் அன்பு வாசகர்களே,
தேவன் தூணிலும், துரும்பிலும் மட்டுமல்ல நாம் அன்றாடம் பேசி பழகுகிற மனிதர்களோடும், நம்மோடும் தான் இருக்கிறார். மற்ற மனிதர்கள் மூலமாகவும் நம்மை போதித்து நடத்துகிறார்.
தேவன் பட்சபாதமுள்ளவரல்ல ஏனெனில் அவர் பரிசுத்தவான்களிடம் மாத்திரமல்ல பாவிகளிடமும் நேரடியாக இடைபடுகிறார். சிறு பிள்ளைகள், வாலிபர், வயோதிபர் என எல்லோரிடமும் தேவன் இருக்கிறார். ஆனால் அவர் நம்மோடு இருப்பதை நாம் தான் உணருவதில்லை அதனால் தான் மற்றவர்களை நாடி தேடி ஓடுகிறோம்.
Ithu pola daily message and prayer requests whats app la vendum endral contact in whats app +917904957814
தேவன் நம்மிடம் நேரடியாக பேச விரும்புகிறார் ஆனால் நாமோ பெரிய பெரிய ஊழியக்காரர்களை நாடி அவர்களிடம் தேவனை குறித்தும், நம்மை குறித்தும் விசாரிக்கிறோம். இக்கதையில் குரு ஒரு மாணவனிடம் மட்டும் அன்பு செலுத்துகிறார் மற்ற மாணவர்களுக்கு குருவின் அன்பு முழுவதும் கிடைக்கவில்லை.
வேதம் இவ்வாறு கூறுகிறது,
உபாகமம் 10: 17
உங்கள் தேவனாகிய கர்த்தர் தேவாதி தேவனும், கர்த்தாதி கர்த்தரும், மகத்துவமும் வல்லமையும் பயங்கரமுமான தேவனுமாயிருக்கிறார், அவர் பட்சபாதம் பண்ணுகிறவரும் அல்ல, பரிதானம் வாங்குகிறவரும் அல்ல.
எனவே பட்சபாதமில்லாத தேவனிடத்தில் நம்மை ஒப்புவிப்போம் நாமும் பட்சபாதமில்லாது வாழ்வோம்.
நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்!!!
ஓர் குட்டிக் கதை
தேவதையாசூனியக்காாிகிழவியா
இரண்டு மன்னர்களுக்குள் சண்டை. தோற்றவனிடம் வென்றவன் சொன்னான். ”நான் கேட்கும் கேள்விக்கு சரியான பதிலைச் சொன்னால் உன் நாடு உனக்கே”.
கேள்வி: ஒரு பெண் தன் ஆழ்மனதில் என்ன நினைக்கிறாள்?
(வென்ற மன்னனின் காதலி அவனிடம் இக்கேள்வியைக் கேட்டு விட்டு விடை சாென்னால் தான் நமக்கு திருமணம் என்று சாெல்லியிருந்தாள்).
தோற்ற மன்னன் பலரிடம் கேட்டான்.விடை கிடைக்கவில்லை.கடைசியாக சிலர் சொன்னதால் .... ஒரு சூனியக்காரக் கிழவியிடம்
சென்று கேட்டான். அவள் சொன்னாள் விடை சொல்கிறேன். அதனால் அவனுக்கு திருமணம் ஆகும்; உனக்கு நாடு கிடைக்கும்.ஆனால் எனக்கு என்ன கிடைக்கும்? அவன் சொன்னான், "என்ன கேட்டாலும் தருகிறேன்” சூனியக்கார கிழவி விடையைச் சொன்னாள், தன் சம்பந்தப்பட்ட முடிவுகளைத் தானே எடுக்க வேண்டும் என்பதே ஒரு பெண்ணின் ஆழ்மனது எண்ணம்”.
இப்பதிலை அவன் ஜெயித்த மன்னனிடம் சொல்ல, அவன் தன் காதலியிடம் சொல்ல, அவர்கள் திருமணம் நடந்தது. இவனுக்கும் நாடு கிடைத்தது. அவன் சூனியக்கார கிழவியிடம் வந்தான். வேண்டியதைக் கேள் என்றான்.
அவள் கேட்டாள். நீ என்னைத் திருமணம் செய்து கொள்ள வேண்டும்” கொடுத்த வாக்கைக் காப்பாற்ற அவன் ஒப்புக் கொண்டான்.
உடனே கிழவி ஒரு அழகிய தேவதையாக மாறிக் காட்சி அளித்தாள். அவள் சொன்னாள், "நாம் வீட்டில் தனியாக இருக்கும் போது நான் கிழவியாக இருந்தால், உன்னுடன் வெளியே வரும்போது தேவதையாக இருப்பேன்; ஆனால் நான் வெளியே உன்னுடன் வரும் பாேது கிழவியாக இருந்தால் வீட்டில் உன்னுடன் அழகிய தேவதையாக இருப்பேன். இதில் எது உன் விருப்பம்?” என்றாள்.
அவன் சற்றும் யோசிக்காமல் சொன்னான். "இது உன் சம்பந்தப்பட்ட விஷயம்; முடிவு நீ தான் எடுக்க வேண்டும்” என்று, அவள் சொன்னாள், முடிவை என்னிடம் விட்டு விட்டதால் நான் எப்போதும் அழகிய தேவதையாக இருக்கத் தீர்மானித்து விட்டேன்.!” என்றாள்.
ஆம்! என் அன்புக்குாியவா்களே,
பெண் அவள் சம்பந்தப்பட்ட முடிவுகளை அவளே எடுக்கும்போது தேவதையாக இருக்கிறாள். முடிவுகள் அவள் மீது திணிக்கப்படும் போது சூனியக்காரக் கிழவியாகி விடுகிறாள். இதை
அனைவரும் புாிந்து செயல்பட்டால் எப்பவும் உங்கள் மனைவி தேவதையாகவே காட்சி தருவாள்.
பைபிள் சொல்கிறது..
நீதிமொழிகள் 14:1
புத்தியுள்ள ஸ்திரீ தன் வீட்டைக் கட்டுகிறாள்
குடும்பத்தைக் கட்டுவதற்கு தேவன் ஒரு புருஷனுக்கு மனைவியைத் தருகிறாா். அதுவும் ஏற்ற துணையாகத் தருகிறார். துணை என்ற வாா்த்தைக்கு ஆங்கிலத்தில் ஹெல்பா் (HELPER) என்ற வார்த்தை சொல்லப்பட்டுள்ளது. புருஷன் ராஜாவானால் மனைவி மந்திாியாக இருக்க வேண்டும்.
குடும்பத்திற்கு ,பணம் சம்பாதிப்பது புருஷன் குடும்பத்தை நடத்துவது, ஆலோசனை செய்வது பணத்தை சேமிப்பது அதை எப்படி செலவு செய்வது, பிள்ளைகளுக்குாிய காாியங்கள், புருஷனுக்குாிய காாியங்கள் நிலம்,வீடு,காா் வாங்குவது, விற்பது, உணவுக்கடுத்த விஷயங்கள்,குடும்பத்தை மேன்மைக்கு கொண்டு வருவது போன்ற அனைத்துக்குமே தேவன் மனைவியை மட்டுமே வைத்துள்ளாா். அவா்கள் தேவதையாகவே உங்கள் குடும்பத்தில் வலம் வருவாா்கள்.
சங்கீதம்128: 3
உன் மனைவி உன் வீட்டோரங்களில் கனிதரும் திராட்சக்கொடியைப்போல் இருப்பாள்,
உன்னதப்பாட்டு 6: 10
உங்கள் மனைவி சந்திரனைப் போல் அழகும்,
சூரியனைப்போல் பிரகாசமும், கொடிகள் பறக்கும் படையைப்போல் கெடியுமுள்ளவளாய், அருணோதயம்போல் உதிப்பாா்கள்.
எனவே உங்கள் மனைவி தேவதையாகவே வைத்துக் கொள்ளுங்கள். உங்கள் மனைவியைத் தவிர வேறு யாரும் தலையிட்டால் அந்த குடும்பம் சிதைந்து கடனிலேயும், இல்லாமையிலேயும், தரித்திரம், வறுமை, கொடுமையிலேயும் தான் காணப்படும். சண்டை, சச்சரவு அடிதடி, இதெல்லாம் கூட நடைபெறும். சாா் நீங்க சொன்னது போல என் மனைவி இல்லையே னு நீங்க சொல்வது என் காதுக்குக்கு கேட்குது சாா். அதுக்கு என் பதில்.. அவுங்க பைபிள் சொல்லிய படி உங்களுக்கு ஏற்ற துணையாக இல்லாம கூட இருக்கலாம்.
To get daily message in whats app and pray for you contact +917904957814
ஆனாலும் நீங்க விரும்பினா தேவன் உங்களுக்கு ஏற்ற துணையாக உங்கள் மனைவியை மாற்றமுடியும் அதற்கென்ன செய்ய வேண்டும் என்பதை உங்கள் போதகாிடம் கேளுங்கள்.
அவா் கிருபையின் உபதேசத்தில் ஊழியம் செய் கிறவராயிருந்தால் வேதத்தின் ஆலோசனை களையும், சிலுவையில் அறையப்பட்ட இயேசுவின் ஆசீா்வாதங்களையும் போதிக்கும் போதே அவா்கள் அதை ஏற்ற கொள்ள செய்து சில நிமிஷங்களிலேயே ஆவியானவரால் ஏற்ற துணையாக மாறி விடுவார்கள். பாரம்பாியமாய் ஊழியம் செய்கிறவராய் இருந்தால் உபவாசம், காணிக்கை, 7வாரம், 12 வாரம் என்று சொல்லி உங்களை அனுப்பி விடுவாா்கள்.
ஆனால் ஆவியானவரால் முடியாத காாியம் ஒன்றுமேயில்லை. உங்கள் மனைவி காத்தருக்குள் இருப்பவா்கள் என்றால் உங்கள் குடும்பம் ஒரு சொா்க்கமே உங்கள் மனைவியிடம் எல்லாவற்றையும் ஒப்படைத்து பாருங்கள்.உங்கள் மனைவி குணசாலியான தேவதையைப் போல போலிருப்பாா்கள்.
அவா்களது வாழ்க்கை முறையை நீதிமொழி 31.10 -29 வரையுள்ள வசனங்களில் வாசித்து அதைப் போலவே உங்கள் குடும்பம் ஆசீாவதிக்கப்படும். என்பது நிச்சயம்!!!
நீங்கள் ஆசீா்வதிக்கப்பட்டவா்கள் !!!
ஓர் குட்டிக் கதை
தேடல்
இவ்வுலகில் வாழ்கின்ற அனைவரும் ஒவ்வொன்றை தேடி செல்கின்றனர். சில பணத்தை தேடி செல்கின்றனர், சிலர் பொருளைத் தேடி செல்கின்றனர் வேறு சிலர் மனம்போன போக்கில் வாழ்கின்றனர். ஆனால் நம் தேவனை மாத்திரம் தேட முடியவில்லை. ஏனெனில் அதற்குரிய நேரம் இருப்பதில்லை. உலக காரியங்களை பார்ப்பதற்கே நேரம் சரியாக இருக்கிறது சிலருக்கோ அதுவும் இல்லை.
எதை தேட வேண்டும்? நாம் தேடுவதால் கிடைக்கும் பலன் என்ன? என்பதை இக்கதையின் மூலம் காண்போம். பழங்குடி மக்கள் வாழும் ஒரு காடு. அங்கிருந்த குடிசையொன்றில் ஒரு மனிதரும் அவரது நான்கு மகன்களும் வாழ்ந்து வந்தனர். மூத்தவன் கூர்ங்கண்ணன். கூரிய பார்வையுடையவன். அடுத்தவன் நற்செவியன். எவ்வளவு சிறிய ஒலியையும் கேட்டு அது எவ்வளவு தொலைவிலிருந்து வருகிறது, யாருடையது என்று கூறிவிடுவான். மூன்றாவது மகன் வல்லவன். புலி, சிங்கம் போன்ற கொடிய விலங்குகளுடனும் சண்டையிட்டு வெல்லக் கூடியவன். நான்காவது மகன் மிகவும் சிறுவன்.
ஒருநாள் காட்டுக்கு வேட்டையாடச் சென்ற தந்தை வீட்டுக்குத் திரும்பவில்லை. பிள்ளைகள் அனைவரும் வருத்தப்பட்டனர். ஆனால் ஒருவருக்காவது தந்தையைத் தேடிச் செல்ல வேண்டும் என்ற எண்ணம் வரவில்லை. தந்தை வந்துவிடுவார் என்று நம்பிப் பேசாமல் இருந்துவிட்டனர். சில நாட்களில் காட்டு மிருகங்களால், தந்தை அடிபட்டு இறந்திருக்கலாம் என்ற முடிவுக்கும் வந்துவிட்டனர்.
கடைக்குட்டி மகன் மட்டும் அப்பா எங்கே? என்று கேட்டு அழுது கொண்டிருந்தான். அப்பாவைப் பார்க்க வேண்டுமென்று தனது சகோதரர்களை நச்சரிக்க ஆரம்பித்தான்.
அவனது தொந்தரவைத் தாங்கமுடியாமல் அண்ணன்மார் மூவரும் தந்தையைத் தேடிப் புறப்பட்டனர். காட்டுக்குள் சென்று கொண்டிருந்தனர். கூர்ங்கண்ணன் சில காலடித் தடங்களைப் பார்த்தான். “”இது நமது தந்தையின் காலடித் தடம். இந்த வழியாகத்தான் அப்பா சென்றிருக்க வேண்டும்” என்றான். மேலே சென்றனர். இப்பொழுது அடர்ந்த அந்தக் காட்டுக்குள்ளிருந்த மெல்லியதாக ஒரு குரல் கேட்பதாக நற்செவியன் கூற, இன்னும் முன்னேறிச் சென்றனர்.
அங்கே புலி ஒன்றுடன் தந்தை சண்டையிட்டுக் கொண்டிருப்பதைப் பார்த்தனர். உடனே மூன்றாவது மகன் வல்லவன் பாய்ந்து, புலியுடன் சண்டையிட்டு அதைக் கொன்று, தந்தையைக் காப்பாற்றினான். அனைவரின் கண்களிலும் ஆனந்தம் பொங்கியது. தந்தையுடன் வீடு திரும்பினர்.
வீட்டுக்கு வந்ததும் கூர்ங்கண்ணன்,”"நான் அப்பாவின் காலடித் தடங்களைக் கண்டதால்தான் அவரை மீட்டுக் கொண்டு வந்தோம்” என்றான். நற்செவியன் கூறினான், “”நான் அப்பாவின் குரலைத் துல்லியமாகக் கேட்டதால்தான் அவரைக் காப்பாற்ற முடிந்தது!”
“”நான் என் உயிரையும் பொருட்படுத்தாமல் அந்தப் புலியுடன் சண்டை செய்யவில்லையென்றால் அப்பாவின் உயிரைக் காப்பாற்றியிருக்க முடியாது!” என்று தோளைத் தட்டிக் கொண்டு கேட்டான் வல்லவன்.
கடைக்குட்டி மகன் சொன்னான், “”அப்பாவைத் தேடுங்கள், தேடுங்கள் என்று நான் உங்களைத் தொந்தரவு செய்திருக்காவிட்டால் நீங்கள் எப்படி அப்பாவைக் கண்டுபிடித்திருப்பீர்கள்” என்று.
உண்மையும் அதுதானே! தேடினால்தானே கண்டடைய முடியும்?
To get daily message in whats app group +918148663456
என் அன்பு வாசகர்களே,
எந்த ஒரு காரியமும் தேடினால் தான் கிடைக்கும் என்பதே இக்கதையின் கருத்து. இக்கதையில் வருவதுபோல் நமக்கு ஒரு ஆசை ஒரு ஏக்கம் இருந்தால் மட்டும் தான் நாம் தேவனை தேடுவோம். இல்லையென்றால் அந்த நேரத்தை வேறு எதுவது ஒரு காரியத்தில் செலவிடுவோம். அப்படி செய்வதால் நாம் தேவனை தேடும் போது அவர் நமக்கு தென்படுவதில்லை.
நமக்கு ஒன்றுமில்லாத சமயத்தில் தேடுவதில் எந்த பயனுமில்லை. எல்லாம் இருக்கின்றன சமயத்தில் தேவனை முழு இருதயத்தோடும் தேடுவது தான் உண்மையான கிறிஸ்தவம் அதை தான் வேதம் இவ்வாறு கூறுகிறது
மத்தேயு 6: 33
முதலாவது தேவனுடைய ராஜ்யத்தையும் அவருடைய நீதியையும் தேடுங்கள், அப்பொழுது இவைகளெல்லாம் உங்களுக்குக்கூடக் கொடுக்கப்படும்.
எனவே நாம் தேவனுடைய ராஜ்யத்தையும் நீதியையும் தேடுவோம் ஆசீர்வாதத்தை கூட பெற்றுக் கொள்வோம்.
லூக்கா 11: 9
மேலும் நான் உங்களுக்குச் சொல்லுகிறதாவது: கேளுங்கள், அப்பொழுது உங்களுக்குக் கொடுக்கப்படும், தேடுங்கள், அப்பொழுது கண்டடைவீர்கள், தட்டுங்கள், அப்பொழுது உங்களுக்குத் திறக்கப்படும்.
நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்!!!!
ஓர் குட்டிக் கதை
===================
கர்த்தருடைய பெரிதான நாமம் மகிமைப்படுவதாக..
அன்பு நண்பா்கள் அனைவருக்கும்,
அன்புடன் இனிய காலை வணக்கம் !! இந்தநாள் உங்களுக்கு நல்ல நாளாய் அமைவதாக!!!
சிந்திக்க வைக்கும் குட்டிக்கதையுடன் உங்களை சந்திப்பதில் மகிழ்ச்சியடைகிறேன்.!!!
யார் பெரியவர்?
நாம் எந்கு சென்றாலும் நம்மை விட்டு விலகாத நிழல் போல் என்றும் எப்போதும் என்றென்றைக்கும் நாம் விலகி சென்றாலும் நம்மை விட்டு விலகாமலும் நம்மை கைவிடாமலும் பாதுகாக்கிறவர் நம் தேவன். நம் நிழல் கூட சில நேரங்களில் நம்மைவிட்டு சென்றுவிடும் ஆனால் நம்மைவிட்டு பிரியாத வரம் அவரே.
இந்த நவீன உலகத்தில் நாம் எங்கு இருக்கிறோம் என்பதை எளிதாக கண்டுபிடித்துவிடலாம். அப்படி அந்த கண்டுபிடிப்புகளுக்கு மறைந்து நம்மால் வாழ முடியும் ஆனால் அவரின் பார்வையில் தான் இருப்போம்.
தேவன் நம்மை எப்படியெல்லாம் கண்காணிக்கிறார் என்பதை இக்கதையின் மூலம் காண்போம்.
அக்பர் சக்ரவர்த்தி தனது அவையிலே அமர்ந்திருந்தார். சபையில் அமர்ந்திருந்த அறிஞர்களை நோக்கி, “”அறிஞர் பெருமக்களே! நான் பெரியவனா, கடவுள் பெரியவரா? என்ற ஐயம் என் மனதில் எழுந்துள்ளது. இந்த வினாவுக்குத் தக்க காரணத்துடன் பதில் சொல்லுங்கள்” என்று கேட்டுக் கொண்டார்.
அக்பரை விட கடவுள் பெரியவர் என்பதை சொல்லவே தேவையில்லை. ஆனால் அரசர் கோபித்துக் கொள்வாரே என எண்ணி மற்றவர்கள் மௌனமாக இருந்தார்கள்.
மதிநுட்பம் வாய்ந்த அறிஞரான பீர்பால் எழுந்து நின்றார்.
“”உமது கருத்து என்ன?” என அக்பர் கேட்டார்.
“”மன்னர் பெருமானே, இந்த விஷயத்தில் சந்தேகத்துக்கு என்ன இடம் இருக்கிறது? கடவுளை விடத் தாங்கள்தான் பெரியவர்?” என்றார் பீர்பால்.
அக்பருக்கு வியப்பாகவும் மகிழ்ச்சியாகவும் இருந்தது.
“”மதியூகி பீர்பாலே, உமது கூற்றைத் தக்க காரணத்துடன் விளக்கும்…” என்றார் அக்பர்.
“”சக்ரவர்த்தி அவர்களே, என்னைத் தங்களுக்குப் பிடிக்கவில்லை என்று வைத்துக் கொள்ளுங்கள். உடனே என்னை நாடு கடத்திவிடத் தங்களால் முடியும்! ஆனால் கடவுளுக்கு என்னைப் பிடிக்காவிட்டாலும் என்னை நாடு கடத்த முடியாது” என்றார் பீர்பால்.
“”எப்படி?” என்று வினவினார் அக்பர்.
“”உங்கள் ஆட்சிக்குள் இருக்கும் பகுதிகள் ஓரளவுக்குத்தான்! அதனால் உங்களுக்குப் பிடிக்காதவரை அடுத்த நாட்டுக்கு விரட்டியடித்து விடலாம். ஆனால் கடவுளுடைய ஆளுகையோ பூமியில் மட்டுமன்றி அண்டசராசரங்களிலும் பரவியிருக்கின்றது. ஆகவே அவர் எவ்வாறு ஒருவனை நாடு கடத்த முடியும்? ஒருவனை கடவுள் எங்கே விரட்டியடித்தாலும் அவன் கடவுளின் ஆளுகைக்கு உட்பட்ட பகுதியில்தானே சுற்றிச் சுற்றி வந்து கொண்டிருக்க முடியும்?” என்று மறுமொழி கூறினார் பீர்பால்.
பீர்பால் தனக்குச் சரியான பாடம் கற்பித்துவிட்டார் என்பதை அக்பர் உணர்ந்தார். இருந்தாலும் பீர்பாலின் கூற்றிலுள்ள உண்மையை உணர்ந்து அவருக்குப் பரிசுகளை அளித்தார்.
To get Daily Story Contact +917904957814
என் அன்பு வாசகர்களே,
நாம் எங்கு சென்றாலும் தேவன் நம்மை கண்காணிக்கிறார் என்பதே இக்கதையின் கருத்து.
வேதத்தில் யோவானை அநேக வழிகளில் கொன்றுபோட நினைத்தும் எல்லாவற்றிலும் இருந்து தேவன் அவனை பாதுகாத்ததினால் அவனை கொலை செய்ய முடியாது என்று எண்ணி அவனை நாடு கடத்தினர். இதுவரை அந்த தீவிற்கு சென்றவர்கள் உயிரோடிருந்ததில்லை அங்கு யாராலும் செல்லவும் முடியாது என பல்வேறு கூற்றுகள் உண்டு.
என்ன இருந்தாலும் இல்லாவிட்டாலும் யார் வந்தாலும் வரவில்லை என்றாலும் தேவன் யோவானை சந்திக்கும் படி தேடி சென்றார். அங்கிருந்துதான் யாராலும் யூகிக்க முடியாத அநேக வெளிப்பாடுகளை தேவன் யோவான் மூலம் வெளிப்படுத்தினார்.
அதுமட்டுமல்லாது தாவீது தேவன் நம்மை எவ்வாறு எங்கெல்லாம் நம்மோடு கூட வருகிறார் என்பதை சங்கீதம் 139:1-10 வசனங்களில் மிக தெளிவாக எடுத்துரைக்கிறார்.
எனவே எனக்கென்று யாருமில்லை என்று வீணாக புலம்புவதை விட்டு எனக்கு என் தேவன் இருக்கிறார். நான் எங்கு சென்றாலும் என்னோடு கூட வர, என்னோடு பேச,என்னை ஆறுதல் தேறுதல் செய்ய தேவன் இருக்கிறார் என்பதை விசுவாசித்து நடப்போம் நாமும் அநேக வெளிப்பாடுகள் காண்போம்.
சங்கீதம் 46:11
11. சேனைகளின் கர்த்தர் நம்மோடிருக்கிறார், யாக்கோபின் தேவன் நமக்கு உயர்ந்த அடைக்கலமானவர். (சேலா.)
நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்!!!!
Thanks for using my website. Post your comments on this