===============================
உங்களை அழுத்தும் பாரங்களை தள்ளி விடுங்கள்
===============================
காலையில் எழும்பும் போதே ஒருவித கவலையோடு எழும்புகிறீர்களா? நாள் முழுவதும் ஒருவிதமான பாரம் உங்களை அழுத்திக்கொண்டே இருக்கிறதா? ஒரு மணல் மூட்டையை மனதில் சுமப்பது போல் உணர்வோடு வாழ்க்கை முழுவதும் வாழ்கிறீர்களா?
ஆண்டவருடைய பிள்ளைகளுக்கு தேவன் தரும் ஆசீர்வாதங்களில் முக்கியமானது சமாதானம் அல்லது நிம்மதி. வருத்தப்பட்டு பாரம் சுமக்கிறவர்களே! நீங்கள் எல்லாரும் என்னிடத்தில் வாருங்கள்; நான் உங்களுக்கு இளைப்பாறுதல் தருவேன் என்று கர்த்தர் நம்மை நோக்கி விடுத்த அழைப்பை ஏற்றுதான் நாம் ஒவ்வொருவரும் ஆண்டவராகிய இயேசுவினிடத்தில் வந்திருக்கிறோம்.
ஆனால் அந்த இளைப்பாறுதலின் அனுபவம் அல்லது மன அமைதி அநேக நாட்களில் நம் உள்ளத்திலிருந்து பறிபோகின்றது. மன அமைதி இல்லாதபோது, நாம் எதிர்மறையான எண்ணங்களுக்கு இடம் கொடுக்கின்றோம். பின்னர் எதிர்மறையான, தீமையான செயல்கள் நம்மிடத்திலிருந்து உண்டாகின்றது. எனவே மன அமைதியில்லாத நிலை ஆபத்தானது.
தீர்வு என்ன?
எபிரெயர் 12:1 மேகம் போன்ற இத்தனை திரளான சாட்சிகள் நம்மை சூழ்ந்து கொண்டிருக்க, *பாரமான யாவற்றையும்… தள்ளி விட்டு…
எபிரெயர் 12:1 மேகம் போன்ற இத்தனை திரளான சாட்சிகள் நம்மை சூழ்ந்து கொண்டிருக்க, *பாரமான யாவற்றையும்… தள்ளி விட்டு…
நம் உள்ளத்தை பாரப்படுத்துகின்ற யாவற்றையும் தள்ளி விடும்படி எபிரெயர் ஆக்கியோன் அழைப்பு விடுக்கிறார். உள்ளத்தில் இருக்கிற பாரத்தை எப்படி தள்ளிவிடுவது?
நம்மை பாரப்படுத்துகிறவர்களை தள்ளிவிடச் சொன்னால் உடனே தள்ளிவிட்டு விடுவோம். தினமும் நாலு பேரை கூட தள்ளிவிட்டுக் கொண்டே இருக்க வேண்டிய சூழ்நிலை ஏற்படலாம். அநேகர் தங்களை பாரப்படுத்தும் யாரையும் உடனே தீர்த்துக் கட்டிவிட வேண்டும் என்று நினைப்பார்கள். ஆனால் கர்த்தர் அதை செய்யும் படி நம்மை கேட்கவில்லை. காரணம்,
நம்மை பாரப்படுத்தும் மனிதர்களோடு மோதும் போது, அது நம்முடைய பாரத்தை மேலும் அதிகமாக்குமே தவிர குறைக்காது.
ஆனால் நாம் மேகம் போல நம்மை சுற்றியிருக்கிற விசுவாச வீரர்களின் வாழ்க்கை சாட்சிகளை தியானிக்கும் போது, நம் மனதின் பாரம் தானான நம்மை விட்டு வெளியேறும். நம்முடைய கஷ்டத்தையே யோசித்துக் கொண்டிருந்தால் பாரம் அதிகமாகிக் கொண்டே போகும். வேதத்தின் விசுவாச வீரர்களின் வாழ்க்கையை ஆராய்ந்து படிக்க ஆரம்பியுங்கள். பாரம் விலகும், விசுவாசம் பிறக்கும். எழுந்து பிரகாசிப்பீர்கள்.
வேதத்தில் உள்ள விசுவாச வீரர்களின் வாழ்க்கையை ஆராய்ந்து பாருங்கள் (Character Study). அவர்கள் கடந்து போன வாழ்க்கையின் பாதைகளையும், அவர்கள் வெற்றியின் ரகசியங்களையும் தியானியுங்கள். எந்தெந்த சூழ்நிலையில் அவர்கள் எப்படி நடந்து கொண்டார்கள், கர்த்தர் அவர்களோடு எப்படி இடைபட்டார் என்பதை கவனியுங்கள். அவைகளை குறிப்பெடுத்து உங்கள் வாழ்விலும் அப்பியாசியுங்கள். நீங்கள் சோர்விலிருந்து எழும்பி, வானில் பறப்பீர்கள்.
வேதத்தின் விசுவாச வீரர்கள் மட்டுமல்ல, நம்மை சுற்றிலும் உள்ள அநேக பரிசுத்தவான்களின் வாழ்க்கையையும் நாம் கவனிக்க வேண்டும். காலம் சென்ற அண்ணன் பேட்ரிக் ஜாஷ்வா அவர்கள் வாழ்க்கையில் இருந்து நான் கற்றுக் கொண்ட மிகப்பெரிய காரியம். அவர்களின் முழங்கால் ஜெபம். தள்ளாத வயதிலும், எத்தனை களைப்பிலும் நேர் முழங்கால் நின்று ஜெபித்ததே அவர்களின் வெற்றி வாழ்க்கைக்கு ஒரு முக்கியமான காரணம். உங்களை விட மிக சாதாரணமான, பரிதாபமான சூழ்நிலையில் இருந்த அநேக பரிசுத்தவான்கள் கர்த்தருக்காய் எழுந்து பிரகாசித்திருக்கிறார்கள். அவர்கள் தங்களுக்கு நடப்பவைகளை குறித்து கவலைப்பட்டுக் கொண்டே இருந்திருந்தால், யாருக்கும் பிரயோஜனமில்லாமல் அழிந்திருப்பார்கள். ஆனால் தங்கள் பாரங்களை தள்ளிவிட்டு, கிறிஸ்துவை நோக்கி ஓடினதாலே அவர்கள் தங்கள் வாழ்வில் வெற்றி பெற்றார்கள்.
பாரத்தை சுமந்து கொண்டே வாழ்க்கையை கடத்த போகிறீர்களா? அல்லது அதை தள்ளிவிட்டு நிம்மதியாய் கர்த்தருக்காய் ஓடப் போகிறீர்களா?
கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக!
சகோ. ஆல்வின் ஜான்சன்
+91 97 9000 2006
+91 97 9000 2006
===============================
நாம் மறந்தாலும்... அவர் மறப்பதில்லை
===============================
யாக்கோபு தன் செல்லக் குமாரன் யோசேப்பு 17 வயதாய் இருக்கும் போது, அவனை இழந்து விட்டான். யோசேப்பின் சகோதரர்கள் அவனை எகிப்திற்கு விற்றுவிட்டு, தங்கள் தகப்பன் யாக்கோபிடம் அவன் மிருகத்தால் கொல்லப்பட்டதாக பொய் சொன்னார்கள். யாக்கோபு தான் மிகவும் நேசித்த தன் மகன் யோசேப்பு மரித்துவிட்டான் என்று அழுது புலம்பி துக்கத்தோடு தன் வாழ்க்கையை கழித்துக் கொண்டிருந்தான். வருடங்கள் உருண்டோடின... ஒன்றல்ல இரண்டல்ல 22 வருடங்கள். 22 வருடம் கழித்து யாக்கோபு தன் பிள்ளைகள் வாயிலாக ஒரு செய்தியை கேள்விப்படுகின்றான். அது என்ன? ஆதியாகமம் 45:26: "யோசேப்பு உயிரோடிருக்கிறான், அவன் எகிப்துதேசத்துக்கெல்லாம் அதிபதியாயிருக்கிறான் என்று அவனுக்கு அறிவித்தார்கள்." இதை கேட்ட யாக்கோபிற்கு நம்ப முடியவில்லை. வசனம் சொல்கின்றது,. "அவன் இருதயம் மூர்ச்சை அடைந்தது; அவன் அவர்களை நம்பவில்லை."
பின்னர் யாக்கோபு, எகிப்திற்கு சென்று யோசேப்பை பார்த்தான். யோசேப்பை மட்டுமல்ல அவன் பிள்ளைகளையும் பார்த்தான். அப்போது யாக்கோபு சொல்லும் வார்த்தைகள் தான் இவைகள்: "இஸ்ரவேல் (யாக்கோபு) யோசேப்பை நோக்கி: உன் முகத்தைக் காண்பேன் என்று நான் நினைக்கவில்லை; ஆனாலும், இதோ, உன் சந்ததியையும் காணும்படி தேவன் எனக்கு அருள் செய்தார் என்றான்." (ஆதியாகமம் 48:11)
பல நேரங்களில் நாம் முடிந்தது என்று நினைக்கும் காரியங்கள் தேவனுடைய பார்வையில் தொடர்ந்து கொண்டுதான் இருக்கின்றது. அந்த 22 வருடங்களாக எது முடிந்தது என்று நினைத்து யாக்கோபு கலங்கிக் கொண்டிருந்தானோ, அது தேவனுடைய பார்வையில் முடியவில்லை என கர்த்தர் அவனுக்கு வெளிப்படுத்தினார்.
இது போன்ற சம்பவங்கள் அநேகம் வேதத்திலுண்டு:
சாராள் இனி தனக்கு பிள்ளை பிறக்காது என்று முடிவு செய்து தன் நம்பிக்கையை கைவிட்ட நேரத்தில் கர்த்தர் அவளிடம் வந்து நீ ஒரு குமாரனை பெறுவாய் என்றார்
சகரியா எலிசபெத் இனி தங்களுக்கு ஒன்றும் நடக்காது என்று தங்களையே ஆறுதல் படுத்தியிருந்த வேளையில் யோவான் ஸ்நானகனை கர்த்தர் கொடுத்தார்.
சாராள் இனி தனக்கு பிள்ளை பிறக்காது என்று முடிவு செய்து தன் நம்பிக்கையை கைவிட்ட நேரத்தில் கர்த்தர் அவளிடம் வந்து நீ ஒரு குமாரனை பெறுவாய் என்றார்
சகரியா எலிசபெத் இனி தங்களுக்கு ஒன்றும் நடக்காது என்று தங்களையே ஆறுதல் படுத்தியிருந்த வேளையில் யோவான் ஸ்நானகனை கர்த்தர் கொடுத்தார்.
இஸ்ரவேல் ஜனங்கள் சிறையிருப்பில் சோர்ந்து போயிருந்த வேளையில் கர்த்தர் அவர்கள் சிறையிருப்பை திருப்பினார்.
நமக்கு கர்த்தர் கொடுத்த வார்த்தையை நாம் மறந்தாலும் தேவன் ஒரு போதும் மறக்க மாட்டார். எல்லாம் முடிந்ததென்று நாம் முயற்சிகளை கைவிட்டாலும், நாம் ஜெபிப்பதை நிறுத்தி விட்டாலும் கூட, நம் தேவன் தான் செயலாற்றுவதை நிறுத்துவதில்லை. நம்முடைய கண்களுக்கு மறைவாய் கர்த்தர் நமக்காய் எப்போதும் செயலாற்றிக் கொண்டுதான் இருக்கின்றார். ஒரு நாள் நம் கண்கள் அதிசயிக்கும் வண்ணம் மாபெரும் காரியத்தை கர்த்தர் நம் கண்களுக்கு முன் கொண்டு வந்து நிறுத்துவார்.
யாக்கோபு யோசேப்பையே பார்ப்பான் என்று அவன் எண்ணவில்லை, ஆனால் கர்த்தர் யோசேப்பு எகிப்தின் தலைவனாயிருப்பதையும், யோசேப்பு பிள்ளைகளை பெற்று மகிழ்ச்சியாய் இருப்பதையும், யோசேப்பு தன் குடும்பம் முழுவதையும் போஷிக்கும் அளவிற்கு வல்லமை படைத்தவனாய் இருப்பதையும் பார்க்கும் படி யாக்கோபிற்கு கிருபை பாராட்டினார்.
இன்று கர்த்தர் உங்களுக்கு கொடுத்த வார்த்தைகளை மீண்டும் உங்கள் நினைவுக்கு கொண்டு வாருங்கள். அதை நமக்கு கொடுத்த தேவன் அதனை செய்ய வல்லவர். நமக்காக நம் பின்னால் செயலாற்றிக் கொண்டிருக்கின்றார். நாம் எதிர்பார்ப்பதற்கும் மேலான பெரிய காரியங்களை நாம் காண்போம்.
கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக!
சகோ. ஆல்வின் ஜான்சன்
+91 97 9000 2006
ஆனால், எவ்வளவு முயற்சி செய்தாலும் தவளையால் வெளியேற முடியாது. ஏன் என்றால், தவளை வெப்பத்துக்கு ஏற்ப தன் உடலை மாற்றி கொண்டே வந்ததால் அது வலுவிழந்து போய் இருக்கும். சிறிது நேரத்தில் அந்த தவளை இறந்து விடும்.
+91 97 9000 2006
==========================
இனிமையான விஷம்
===========================
ஒரு தவளையை பிடித்து தண்ணீரில் போட்டு கொதிக்க வையுங்கள். தண்ணீரின் வெப்பம் அதிகரிக்கும் போது, தவளை தன் உடலை அந்த வெப்ப நிலைக்கு ஏற்ப மாற்றி கொண்டே வரும். வெப்பம் ஏற ஏற தவளையும் அந்த வெப்பநிலைக்கு ஏற்ப தன் உடலை அந்த வெப்பத்துக்கு ஏற்ப மாற்றி கொள்ளும். தண்ணீர் கொதிநிலையை அடையும் போது, வெப்பத்தை தாங்க முடியாமல் தவளை பாத்திரத்தில் இருந்து வெளியே குதிக்க முயற்சி செய்யும்.ஆனால், எவ்வளவு முயற்சி செய்தாலும் தவளையால் வெளியேற முடியாது. ஏன் என்றால், தவளை வெப்பத்துக்கு ஏற்ப தன் உடலை மாற்றி கொண்டே வந்ததால் அது வலுவிழந்து போய் இருக்கும். சிறிது நேரத்தில் அந்த தவளை இறந்து விடும்.
இந்த தகவலை நான் இணையத்தில் வாசித்தேன். இந்த சம்பவத்தில் தவளையை கொன்றது எது?
கொதிக்கும் தண்ணீர் தான் தவளையை கொன்றது என்று நீங்கள் நினைக்கின்றீர்கள் அல்லவா?
இல்லவே இல்லை! “ஆபத்திற்கு தப்பித்து வெளியேற வேண்டும் என்று முதலிலேயே சரியான முடிவெடுக்காத அந்த தவளையின் தவறு தான் அதை கொன்றது"
இல்லவே இல்லை! “ஆபத்திற்கு தப்பித்து வெளியேற வேண்டும் என்று முதலிலேயே சரியான முடிவெடுக்காத அந்த தவளையின் தவறு தான் அதை கொன்றது"
இதுதான் பாவத்திற்கு தன் வாழ்க்கையில் இடம் கொடுக்கும் ஒவ்வொருவருக்கும் நேரிடுகின்றது. வேதத்தில் சிம்சோன் என்ற ஒரு மனிதன் இருந்தான். அவன் பராக்கிரமசாலி. ஆனால் பாவத்திற்கு அவன் வாழ்க்கையில் இடம் கொடுத்தான். பாவம் அவனை கொஞ்ச கொஞ்சமாய் சாகடித்துக் கொண்டிப்பதை அறியாமல், வேசியின் மடியில் படுத்துக்கிடந்தான்.
ஒரு நாள் ஆபத்து வந்தது. “கர்த்தர் தன்னைவிட்டு விலகினதை அறியாமல், எப்போதும்போல உதறிப்போட்டு வெளியே போவேன் என்றான்.” (நியாயாதிபதிகள் 16:20) ஆனால் அவனால் எழும்ப முடியவில்லை. அவன் தன் பலத்தை முற்றிலும் இழந்திருந்தான். அவனை எதிரிகள் பிடித்து, அவன் கண்களை பிடுங்கி, மாவரைக்க வைத்தார்கள். ராஜா போல இருந்த அவன், பிச்சைக்காரன் போல மாறினான்.
பாவம் ஒரு இனிமையான விஷம். இன்று இனிமையாய் தோன்றும் சில பாவங்களுக்கு உங்கள் வாழ்க்கையில் இடம் கொடுத்து, அனுசரித்துப் போய்க் கொண்டிருக்கும் தேவ பிள்ளையே, கவனமாயிருங்கள். உங்கள் வாழ்க்கையில் இடம் பிடித்திருக்கும் அந்த பாவம் உங்களை கொஞ்ச கொஞ்சமாய் கொன்று கொண்டிருக்கின்றது. நீங்கள் உங்கள் பலனை இழந்து கொண்டிருக்கின்றீர்கள். அது உங்களை முற்றிலும் அழிக்கும் போது, உங்களால் தப்பித்து வெளியே எழும்பி வர முடியாமல் போய்விடும். ஆபாச படங்கள், தவறான நட்புகள், கள்ள தொடர்புகள், போதை பழக்கங்கள், செல்போன் அடிமைத்தனம் போன்றவைகள் முதலில் ஆபத்தில்லாதவைகள் போலத்தான் தெரியும். எப்படி இருக்கிறதென்று பார்ப்போமே என்று நீங்கள் அவைகளை அனுபவிக்கத் துவங்குவீர்கள்.
பின்னர் நீங்கள் அவைகளை விட நினைத்தாலும்... இன்று ஒரு நாள் மட்டும்... இன்று ஒரு நாள் மட்டும்... என்று அவைகள் தொடர்ந்து கொண்டே வரும். ஆனாலும் அவைகளை எளிதில் விட்டுவிட்டு வெளியேறிவிடலாம் என்று நீங்கள் நம்பிக் கொண்டிருப்பீர்கள். ஆனால் அவைகள் உங்களை ஆபத்தில் கொண்டுபோய் விடும் வரை உங்களால் எழும்பவே முடியாது.
சகோதரனே, சகோதரியே உங்களை கொன்று கொண்டிருப்பது எது? உங்களை அழித்துக் கொண்டிருக்கின்ற அந்த குறிப்பிட்ட பாவத்திலிருந்து விடுதலையாக்க இயேசு உங்களை அழைக்கின்றார்.
“நமக்குப் பாவமில்லையென்போமானால் நம்மை நாமே வஞ்சிக்கிறவர்களாயிருப்போம், சத்தியம் நமக்குள் இராது. நம்முடைய பாவங்களை நாம் அறிக்கையிட்டால், பாவங்களை நமக்கு மன்னித்து எல்லா அநியாயத்தையும் நீக்கி நம்மைச் சுத்திகரிப்பதற்கு அவர் உண்மையும் நீதியும் உள்ளவராயிருக்கிறார்.” (1 யோவான் 1:8-9)
“இயேசுகிறிஸ்துவின் இரத்தம் சகல பாவங்களையும் நீக்கி, நம்மைச் சுத்திகரிக்கும்.” (1 யோவான் 1:7)
பலமிழந்து அழிவதற்குள் சீக்கிரமாய் வெளியே வாருங்கள். இல்லாவிடில் அந்த தவளையைப் போல கொதிநீராம் பாவத்தில் பரிதாபமாய் அழிவீர்கள்.
கர்த்தர் உங்களை உணர்த்துவாராக!
சகோ. ஆல்வின் ஜான்சன்
+91 97 9000 2006
பலமிழந்து அழிவதற்குள் சீக்கிரமாய் வெளியே வாருங்கள். இல்லாவிடில் அந்த தவளையைப் போல கொதிநீராம் பாவத்தில் பரிதாபமாய் அழிவீர்கள்.
கர்த்தர் உங்களை உணர்த்துவாராக!
சகோ. ஆல்வின் ஜான்சன்
+91 97 9000 2006
===============================
உண்மையான இராட்சஷன்
===============================
கோலியாத் ஒரு 9 அடி 6 இன்ஞ்ச் உயரமுள்ள ஒரு இராட்சஷ மனிதன். அவன் தலையில் போட்டிருக்கும் ஹெல்மெட் 14 கிலோ எடையுள்ளதாம். அவன் தரித்திருக்கும் மார்க்கவசம் (சட்டை) 57 கிலோ எடையுள்ளதாம். அவன் கொண்டு வந்திருக்கும் ஈட்டி மட்டும் 17 கிலோ. இன்னும் அவன் தரித்திருக்கும் பல ஆயுதங்களை சேர்த்து, சுமார் 123 கிலோ எடையுள்ள கவசங்களை அணிந்து வந்திருக்கின்றானென்றால் அவன் எத்தனை பலமுள்ளவனாயிருப்பான்?இவனை எதிர்த்து யுத்தம் பண்ண இவனுக்கு எதிரே ஒருவன் நிற்கின்றான். அவன் தாவீது. அவன் எளிய உருவம் கொண்ட ஒரு அழகிய வாலிபன். இதற்கு முன்னே எந்த யுத்தத்தையும் சந்தித்திராத ஒரு அனுபவமில்லாத மனிதன். எந்த ஆயுதங்களையும் தூக்கி கூட பழகியிருக்கவில்லை. ஆனால் துணிவுடன் அந்த யுத்த வீரனை எதிர்த்து யுத்தம் பண்ண களம் இறங்கி விட்டான்.
கோலியாத் சுற்றிப்பார்த்து: தாவீதைக் கண்டு, அவன் இளைஞனும் சவுந்தரிய ரூபமான சிவந்த மேனியுள்ளவனுமாயிருந்தபடியினால், அவனை அசட்டை பண்ணினான் (1 சாமுவேல் 17:42) என்று வேதம் கூறுகின்றது.
வெளிப்புறத் தோற்றத்தை வைத்து தாவீது அசட்டை பண்ணப்பட்டான். உலகம் கோலியாத்தை இராட்சஷனாகவும், தாவீதை சாதாரண மனிதனாகவும் பார்த்தது. ஆனால் உள்ளுக்குள் தாவீதுக்கு ஒரு பலம் இருக்கின்றது என்பதை எவரும் அறியவில்லை. தாவீதுக்குள் இயற்கைக்கு அப்பாற்பட்ட பேராற்றல், சக்தி ஒன்று இருக்கின்றது. அது ஒரு கோலியாத் அல்ல, ஆயிரம் கோலியாத் வந்தாலும் அடித்து வீழ்த்தும் சக்தி. அதுதான் கர்த்தர் கொடுத்திருக்கும் அபிஷேகத்தின் பலம்.
அன்று உண்மையான இராட்சஷன் தாவீது தான். அந்த அசூர பலத்தினால் அன்று கோலியாத்தை இமைப்பொழுதில் வீழ்த்தி விட்டான். அனைவருக்கும் ஆச்சர்யம். ஏதோ, தாவீது தற்செயலாய், அதிஷ்டவசமாய் கோலியாத்தை வீழ்த்தி விட்டான் என நினைத்தார்கள். ஆனால் இது எப்போதாவது நடக்கும் அதிஷ்டம் அல்ல. அவன் மீது எப்பொழுதும் இருக்கும் அபிஷேகம் என்பதை பின்னர்தான் அறிந்து கொண்டார்கள்.
இதை வாசித்துக் கொண்டிருக்கும் நீங்களும் உங்கள் வாழ்வில், உங்கள் வெளிப்புற தோற்றத்திற்கும், உங்கள் திறனுக்கும் சம்பந்தமில்லாத, கோலியாத் போன்ற சவால்களை சந்தித்துக் கொண்டிருக்கலாம். அனுதினமும் அந்த சவால்கள், போராட்டங்களை எண்ணி பயந்து கொண்டிருக்கலாம். இன்று உங்களுக்குள் உள்ள உள்ளான பலமான அபிஷேகத்தின் வல்லமையை நம்பி உணருங்கள்.
நீங்கள் சந்திக்கும் சவால்களை விட கோடி மடங்கு வல்லமை உங்களுக்குள் இருக்கின்றது. இதை உணர்ந்தபடியினால் தான் தாவீது அன்று கோலியாத் முன் தைரியமாய் சவால் விட்டான். அவன் ஒன்றும் விளையாட்டுத்தனமாய் பேசிக் கொண்டிருக்கவில்லை. அவனுக்குள் இருந்த சக்தியின் மகத்துவத்தை அவன் அறிந்திருந்தான்.
தங்களுக்குள் உள்ள அபிஷேகத்தின் பலத்தை உணராத தேவ பிள்ளைகள் இன்று சர்க்கஸ் சிங்கம் போல அடிமைப்பட்டுக்கிடக்கின்றார்கள். தங்கள் பிரச்சனைகளுக்கு முன் மன்டியிட்டுக் கிடக்கின்றார்கள். ஊழியத்தில் தோல்வி, தொழில் வியாபாரத்தில் தோல்வி, தனிப்பட்ட வாழ்வில் தோல்வி, குடும்ப வாழ்வில் தோல்வி என எல்லாவற்றிலும் முடங்கி கிடக்கின்றார்கள்.
உங்கள் உண்மையான பலம் கர்த்தர் உங்களுக்குள் வைத்திருக்கும் அபிஷேகத்தில் உள்ளது. உங்களை இந்த உலகம் அற்பமாய் எண்ணலாம். ஆனால் நீங்கள் தான் உண்மையான பலசாலிகள், இராட்சஷர்கள். கோடி அணுகுண்டிற்கான சக்தி உங்களுக்குள் இருக்கின்றது. தைரியமாய் எழுந்து போராடுங்கள். நீங்கள் நிச்சயம் வெற்றி பெருவீர்கள்.
கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பார்!
சகோ. ஆல்வின் ஜான்சன்
+91 97 9000 2006
+91 97 9000 2006
===============================
இயேசு உண்மையில் வருவாரா?
===============================
“இயேசு சீக்கிரம் வருகிறார்!” இரண்டாயிரம் வருடங்களாக சொல்லப்படுகின்ற வார்த்தைதான் இது! ஆனால் இயேசு இது வரை வரவில்லை. எனவே இயேசுவை அறியாத அநேகர் இதனை பரியாசம் செய்கின்றார்கள். கிறிஸ்தவர்களிலும் கூட அநேகருக்கு இப்போது சந்தேகம் வந்து விட்டது. வருகையைப்பற்றி தீர்க்கமாய் பிரசங்கித்த அநேகர் மரித்து பரலோகம் போய்விட்டார்கள். ஆனால் இயேசுதான் இன்னும் வரவில்லை!இதை வாசிக்கும் உங்களுக்கு கூட, இயேசு நிச்சயம் வருவாரா? என்ற கேள்வி இருக்கலாம்.
இயேசு நிச்சயமாய் வருவார்!
உயிர்த்தெழுந்த இயேசு எடுத்துக் கொள்ளப்பட்ட போது சீஷர்கள் திகைத்துப் போய் வானத்தையே பார்த்துக் கொண்டிருந்தார்கள். அந்நேரத்தில் தூதர்கள், “கலிலேயராகிய மனுஷரே, நீங்கள் ஏன் வானத்தை அண்ணாந்துபார்த்து நிற்கிறீர்கள்? உங்களிடத்தினின்று வானத்துக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட இந்த இயேசுவானவர் எப்படி உங்கள் கண்களுக்கு முன்பாக வானத்துக்கு எழுந்தருளிப்போனாரோ அப்படியே மறுபடியும் வருவார் என்றார்கள். (அப்போஸ்தலர் 1:11)
உயிர்த்தெழுந்த இயேசு எடுத்துக் கொள்ளப்பட்ட போது சீஷர்கள் திகைத்துப் போய் வானத்தையே பார்த்துக் கொண்டிருந்தார்கள். அந்நேரத்தில் தூதர்கள், “கலிலேயராகிய மனுஷரே, நீங்கள் ஏன் வானத்தை அண்ணாந்துபார்த்து நிற்கிறீர்கள்? உங்களிடத்தினின்று வானத்துக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட இந்த இயேசுவானவர் எப்படி உங்கள் கண்களுக்கு முன்பாக வானத்துக்கு எழுந்தருளிப்போனாரோ அப்படியே மறுபடியும் வருவார் என்றார்கள். (அப்போஸ்தலர் 1:11)
கர்த்தருடைய வார்த்தை ஒருமுறை சொல்லப்பட்டால் கூட, அது என்றாகிலும் ஒரு நாள் நிச்சயம் நிறைவேறும்! ஆதாம் பாவத்தில் விழுந்த போது, ஸ்திரீயின் வித்தினால் சாத்தானின் தலையை நசுக்குவேன் என்று வாக்குப் பண்ணினார். கிட்டத்தட்ட 4000 வருடங்கள் கழித்து அது நிறைவேறியது.
ஏசாயா தீர்க்கதரிசனத்தில் இம்மானுவேல் பிறப்பார் என்று வாக்குப்பண்ணினார். சுமார் 700 ஆண்டுகளுக்கு பின் அது நிறைவேறியது.
பரிசுத்த ஆவியை அனுப்புவேன் என்று வாக்குப்பண்ணிய தேவன் 50 நாட்களில் அனுப்பிவிட்டார்.
ஏசாயா தீர்க்கதரிசனத்தில் இம்மானுவேல் பிறப்பார் என்று வாக்குப்பண்ணினார். சுமார் 700 ஆண்டுகளுக்கு பின் அது நிறைவேறியது.
பரிசுத்த ஆவியை அனுப்புவேன் என்று வாக்குப்பண்ணிய தேவன் 50 நாட்களில் அனுப்பிவிட்டார்.
ஆனால் திரும்ப வருவேன் என்று வாக்குப்பண்ணிய தேவன் வருவதற்கு காலமெடுக்கின்றது. எப்போது வருவார்? இப்படிப்பட்ட கேள்விக்குத்தான் அப்போஸ்தலர் 1:7 பதிலளிக்கின்றது, “பிதாவானவர் தம்முடைய ஆதீனத்திலே வைத்திருக்கிற காலங்களையும் வேளைகளையும் அறிகிறது உங்களுக்கு அடுத்ததல்ல.”
தாமதிக்கின்றார் என்று சிலர் எண்ணுகின்றார்கள். *ஆனால் தாமதம் என்று ஒரு காரியமே தேவனின் அகராதியில் இல்லை. எல்லாவற்றையும் சரியான நேரத்தில் சரியாய் செய்கின்றவர். அவர் சர்வ வல்லமையுள்ள தேவன்!
நம் வேலை என்ன?
ஆயத்தமாயிருப்பதே நம் வேலை! மரித்தவர்கள் தேவ சமுகத்திற்கு சென்றுவிட்டார்கள். அவர்களை குறித்து கவலையில்லை. ஆனால் உயிரோடிருக்கும் நாம் என்ன செய்கின்றோம்?
இரவிலே திருடன் வருகிறவிதமாய்க் கர்த்தருடைய நாள் வருமென்று நீங்களே நன்றாய் அறிந்திருக்கிறீர்கள் என்று பவுல் அப்போஸ்தலன் சொல்வதை கவனியுங்கள். (1 தெசலோனிக்கேயர் 5:2)
இந்த உலகத்தின் இச்சைகளுக்கு அடிமைப்பட்டவர்கள், இயேசுவின் வருகையைக்குறித்து சிந்திக்கமாட்டார்கள். இந்த உலகத்தின் ஆஸ்தி, செல்வம், சுகபோகம், சிற்றின்பம் இவைகளில் சிக்கியிருப்பவர்களுக்கு இந்த உலகத்தைவிட்டு செல்வதென்பது கஷ்டமான காரியம். இங்கேயே காலாகாலமாய் வாழ்ந்து அனுபவிக்க வேண்டும் என்று எண்ணுவார்கள். இயேசுவின் வருகையையோ அல்லது தங்களின் மரணத்தையோ அவர்களால் யோசித்துக் கூட பார்க்க முடியாது!
எனவேதான் இயேசு சொல்கின்றார், “உங்கள் இருதயங்கள் பெருந்திண்டியினாலும் வெறியினாலும் லவுகீக கவலைகளினாலும் பாரமடையாதபடிக்கும், நீங்கள் நினையாத நேரத்தில் அந்த நாள் உங்கள்மேல் வராதபடிக்கும் எச்சரிக்கையாயிருங்கள்.” (லூக்கா 21:34)
இயேசு வரும் போது கைவிடப்படாதபடி எச்சரிக்கையாயிருங்கள்! இதை நான் சொல்லவில்லை இயேசுவே சொல்லியிருக்கின்றார்.
இன்று இயேசுவின் வருகையிருக்குமானால், அதில் எடுத்துக் கொள்ளப்பட நீங்கள் ஆயத்தமா?
உங்களை நீங்களே ஆராய்ந்து பாருங்கள்! இல்லாவிட்டால் பிற்பாடு வருத்தப்படுவீர்கள்!
கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக!
சகோ. ஆல்வின் ஜான்சன்
+91 97 9000 2006
சகோ. ஆல்வின் ஜான்சன்
+91 97 9000 2006
Thanks for using my website. Post your comments on this