சங்கீதம் 79 - 83
✅ *நீ எனக்குச் செவிகொடுத்தால் நலமாயிருக்கும்* ✅
☄️ *“என் ஜனமே கேள், உனக்குச் சாட்சியிட்டுச் சொல்லுவேன்; இஸ்ரவேலே, நீ எனக்குச் செவிகொடுத்தால் நலமாயிருக்கும்.”* (சங்கீதம் 81:8).
🔸 எக்காளப் பண்டிகை அல்லது கூடாரப் பண்டிகையைக் கொண்டாட தேவஜனங்கள் கூடிவரும்போது அவர்கள் பாடுவதற்காக ஆசாப் 81-ஆம் சங்கீதத்தை இயற்றினான். தேவனைக் கம்பீரமாய்ப் பாடி, அவரைக்குறித்து ஆர்ப்பரித்து அவரைக் கனம்பண்ணும்படி ஆசாப் தேவனுடைய ஜனங்களை அழைத்தான். பாடலுடன் வாத்தியக் கருவிகளின் இசையும் கூட இருக்க வேண்டும். *தேவன் தம் பிள்ளைகளிடமிருந்து இத்தகைய துதியையும் கனத்தையையும் பெற நிச்சயமாகத் தகுதியானவர்.*
🔸 தங்கள் பரிசுத்த பண்டிகை நாட்களில், எகிப்தை விட்டு வெளியேறியபோது தாங்கள் பெற்ற மீட்பைக்குறித்து நினைவுகூரும்படி தேவனுடைய ஜனங்கள் அழைக்கப்பட்டனர். எகிப்திலிருந்து வெளியேறியது இஸ்ரேலின் வரலாற்றில் ஒரு பெரிய நிகழ்வாகும், எனவே, பரிசுத்த பண்டிகை நாட்களைக் கடைப்பிடிப்பதன் மூலம் இதை நினைவுகூருமாறு அவர்கள் அறிவுறுத்தப்பட்டனர். நாம் பாவத்தின் அடிமைத்தனத்தின் கீழ் இருந்தது எகிப்திய அடிமைத்தனத்தை விட மோசமானது. *இஸ்ரவேலர்கள் எகிப்தை விட்டு வெளியேறியபோது பெற்ற மீட்பை விட இயேசுவின் பரிசுத்த இரத்தத்தின் மூலம் நாம் பெற்ற மீட்பு மிகவும் மதிப்பு வாய்ந்தது,* எனவே, இதை நாம் நம் இரட்சகரை சந்திக்கும் வரை தொடர்ந்து நினைவில் கொள்ள வேண்டும்.
🔸 பின்னர் தேவன் ஆசாப் மூலம் தம் ஜனங்களிடம் பேச ஆரம்பித்தார். தேவன் அவர்களை எகிப்திலிருந்து எவ்வாறு விடுவித்தார் என்பதையும், வனாந்தரத்தில் அவர்களை எவ்வாறு சோதித்தார் என்பதையும் விவரித்தார். அவர்கள் கீழ்ப்படியாமையின் நிமித்தம் தேவன் அவர்களைக் கடிந்து கொண்டார். *தம்மால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஜனங்கள் எப்பொழுதும் தமக்குச் செவிகொடுக்கவும், தமக்குக் கீழ்ப்படியவும் வேண்டுமென்று தேவன் விரும்புகிறார்.* தேவன் தம்முடைய பிள்ளைகளிடம் மிகவும் உண்மையுள்ளவராக இருக்கிறார்; ஆனால் நாம் அவருக்கு உண்மையாக இருப்பதில்லை. இதன் விளைவாக *நம்முடைய கீழ்ப்படியாமை, நாம் எதைத் தேர்ந்தெடுக்கிறோமோ அதற்கு நம்மை ஒப்புக்கொடுக்கும்படி அவரைக் கட்டாயப்படுத்தும் என்று தேவன் நம்மை எச்சரிக்கிறார்.*
🔸 தேவன், *"என் ஜனமே, கேள், நான் பேசுவேன்; இஸ்ரவேலே, உனக்கு விரோதமாய்ச் சாட்சியிடுவேன்; நானே தேவன், உன் தேவனாயிருக்கிறேன்."* (சங்கீதம் 50:7) என்று இஸ்ரவேலரை எச்சரித்தார். தேவனுக்குச் செவிகொடுக்க வேண்டாம் என்று நாம் தீர்மானித்தால், நம் இரட்சகராகிய அவரே நம் நியாயாதிபதியாக மாறுவார்.
🔸 யூதாவின் ராஜாவாகிய யோவாஸ், தேவபக்தியுள்ள யோய்தாவின் கட்டுப்பாட்டின் கீழ் இருந்தபோது கர்த்தரைப் பின்பற்றினான். யோய்தாவின் மரணத்திற்குப் பிறகு, யூதாவின் பிரபுக்களின் கட்டுப்பாட்டின் கீழ் வந்தபோது, யோவாசும் யூதாவின் ஜனங்களும் தோப்பு விக்கிரகங்களையும் சிலைகளையும் சேவிக்கத் தொடங்கினர். தீர்க்கதரிசிகள் மூலம் தேவன் அவர்களை எச்சரித்தாலும் அவர்கள் செவிசாய்க்கவில்லை. *அப்பொழுது தேவனுடைய ஆவி ஆசாரியனாகிய யோய்தாவின் குமாரனான சகரியாவின்மேல் இறங்கினதினால், அவன் ஜனத்திற்கு எதிரே நின்று: நீங்கள் கர்த்தருடைய கற்பனைகளை மீறுகிறது என்ன? இதினால் நீங்கள் சித்திபெறமாட்டீர்களென்று தேவன் சொல்லுகிறார்; நீங்கள் கர்த்தரை விட்டுவிட்டதினால் அவர் உங்களைக் கைவிடுவார் என்றான்* (2 நாளாகமம் 24:20). அவர்கள் கர்த்தருக்கு செவிகொடுக்க வேண்டாம் என்று தீர்மானித்தபோது இது நிச்சயமாக ஒரு பெரிய தண்டனையாகவே இருந்தது.
🔸 தம்முடைய ஊழியத்தின் இறுதியில், இயேசு, *"எருசலேமே, எருசலேமே, தீர்க்கதரிசிகளைக் கொலைசெய்து, உன்னிடத்தில் அனுப்பப்பட்டவர்களைக் கல்லெறிகிறவளே! கோழி தன் குஞ்சுகளைத் தன் சிறகுகளின்கீழே கூட்டிச் சேர்த்துக்கொள்ளும்வண்ணமாக நான் எத்தனைதரமோ உன் பிள்ளைகளைக் கூட்டிச்சேர்த்துக்கொள்ள மனதாயிருந்தேன்; உங்களுக்கோ மனதில்லாமற்போயிற்று.”* (மத்தேயு 23:37) என்று அறிவித்தார். தமக்கு எப்போதும் செவிகொடுக்கவும் கீழ்ப்படியவும் வேண்டுமென்று கர்த்தர் தம்முடைய பிள்ளைகளுக்கு அறிவுறுத்துகிறார். *நம்முடைய கீழ்ப்படிதலால் அவர் எதையும் பெறாவிட்டாலும், அவர் நம்மை ஆசீர்வதிக்கவே நாம் கீழ்ப்படிய வேண்டும் என்று தேவன் விரும்புகிறார்.* அவர் எவ்வளவு கிருபையும் இரக்கமுமுள்ள தேவன்!
🔹 *கர்த்தரைப் பிரியப்படுத்தி, இப்போதும் நித்தியத்திலும் அவருடைய ஆசீர்வாதங்களைப் பெறுவதற்காக, கர்த்தர் நம்மிடம் பல்வேறு வழிகளில் பேசுவதை நாம் கவனமாக செவிகொடுத்து, அவற்றிக்குக் கீழ்ப்படிகிறோமா?*
✅ நாம் கற்றுக் கொள்ளும் *பாடங்கள்*:
1️⃣ *இஸ்ரவேலர்கள் எகிப்தை விட்டு வெளியேறியபோது பெற்ற மீட்பை விட இயேசுவின் பரிசுத்த இரத்தத்தின் மூலம் நாம் பெற்ற மீட்பு மிகவும் மதிப்புமிக்கது, இதை நாம் நமது இரட்சகரை சந்திக்கும் வரை தொடர்ந்து நினைவில் கொள்ள வேண்டும்.*
2️⃣ *நம்முடைய கீழ்ப்படியாமை, நாம் எதைத் தேர்ந்தெடுக்கிறோமோ அதற்கு நம்மை ஒப்புக்கொடுக்கும்படி அவரைக் கட்டாயப்படுத்தும் என்று தேவன் நம்மை எச்சரிக்கிறார்.*
3️⃣ *தேவனுக்குச் செவிகொடுக்க வேண்டாம் என்று நாம் தீர்மானித்தால், நம் இரட்சகராகிய அவரே நம் நியாயாதிபதியாக மாறுவார்.*
4️⃣ *நம்முடைய கீழ்ப்படிதலால் அவர் எதையும் பெறாவிட்டாலும், அவர் நம்மை ஆசீர்வதிக்கவே நாம் கீழ்ப்படிய வேண்டும் என்று தேவன் விரும்புகிறார்.*
Dr.எஸ்.செல்வன். சென்னை
சங்கீதம்.83.
☘️☘️☘️☘️
"யுத்தங்கள் அச்சுறுத்தும் போது உதவிக்கான ஜெபம்
☘️☘️☘️☘️☘️☘️☘️☘️☘️
தேசிய நெருக்கடியின் போது ஆசாப் இந்த ஜெபத்தைப் பாடினார்.
எதிரிகள் இஸ்ரவேலுக்கு எதிராக அல்ல, மாறாக யெகோவாவுக்கு எதிராக இருந்தார்கள்.
அவர்கள் கிழக்கிலும் மேற்கிலும், தெற்கிலும், வடக்கிலும் இருந்து வந்து இஸ்ரவேலைச் சுற்றி வரட்டும், கடவுள் ஒருவரே அவர்களை விட வல்லவர்.
இந்த சங்கீதம் கடவுள் அமைதியாக இருக்க மாட்டார் என்ற வேண்டுகோளுடன் தொடங்கியது மற்றும் அவரது புகழும் பெருமையும் பூமியெங்கும் செல்ல வேண்டும் என்ற எண்ணத்துடன் முடிகிறது.
கர்த்தரின் மௌனங்கள் அவருடைய முழக்கங்களால் அசைக்கப்படும்போது, கிருபையின் கடவுள் பூமியின் எல்லாவற்றிலும் உன்னதமானவர் என்பதை மனிதர்கள் அறிந்துகொள்கிறார்கள்.
☘️☘️☘️☘️☘️☘️☘️☘️☘️
மேபி சுந்தர்.சென்னை.இந்தியா.
*சங்கீதம்* *77- 83*
*கர்த்தரைக் கெம்பீரமாய்ப்*
*பாடுவோம்*..
சங்கீதம் 81..கூடாரப்பண்டிகை நாட்களில் பாடப்பட்டிருக்கலாம்
என்று நம்பப்படுகிறது.
காரணம் மாதப் பிறப்பிலும், நியமித்த காலத்திலும், நம்முடைய பண்டிகை நாட்களிலும் எக்காளம் ஊதுங்கள் என்று அதிலே கூறப்பட்டிருக்கிறது..
(சங் .81: 3) (எண்.10 : 10 )
கர்த்தர், இஸ்ரவேலரை எகிப்தின் அடிமைத்தனத்திலிருந்து வெளியே கொண்டு வருவதற்கு முன்பாக அவர்களுக்கு,
பஸ்கா என்ற நியமத்தைக் கொடுத்ததோடு.. அவர்களது அற்புதமான விடுதலையை நினைவுகூரும்படி..அதை
வருடந்தோறும் ஆசரிக்கும்படியும் கட்டளையிட்டார்.
இஸ்ரவேலர் வனாந்தரத்தில் இருந்தபோது.. அவர்கள் எந்தெந்த மாதங்களில்.. எந்தெந்த நாட்களில் சபையாகக் கூடி.. தேவனுக்குப் பலி செலுத்தி.. தேவனைக் கெம்பீரமாய்ப் பாடி ஆர்ப்பரிக்க வேண்டும் என்ற நியமத்தையும் கொடுத்தார்.
அதனடிப்படையில் அவர்கள் 7 பண்டிகைகளை ஆசரிக்க வேண்டும்.
தேவன் இதை இஸ்ரவேல் தேசத்தின் சட்டமாகவே.. அவர்களுக்குக் கொடுத்ததை
லேவி .23ஆம் அதிகாரத்தில் நாம் பார்க்கிறோம்.
தேவன் தமது ஜனங்களை சந்திக்க எப்போதும் ஆயத்தமாயிருக்கிறார்.
ஜனங்கள் ஒன்றாகக் கூட வேண்டும்.. அவர்கள் ஒருமித்து தேவனைத் துதிக்கவேண்டும் என்பதே.. இந்த நியமத்தின் நோக்கமாகும்.
இது இஸ்ரவேலரின் விருப்பமோ ..அவர்கள் தெரிந்து கொள்ளவேண்டிய காரியமோ அல்ல..இது அவர்கள் கட்டாயம் நிறைவேற்ற வேண்டிய கட்டளை.
விசேஷ நாட்களை நியமித்து..தேவனைத் துதிக்கவேண்டும் என்ற இந்த நியமத்தினடிப்படையிலேயே..
ஆவிக்குரிய இஸ்ரவேலராகிய நாமும்..கிறிஸ்துமஸ்..
வருடப்பிறப்பு..உயிர்த்தெழுதல் பண்டிகையுடன்..சேர்ப்பின் பண்டிகை..ஆலயப் பிரதிஷ்டை பண்டிகை போன்ற பண்டிகைகளை ஆசரித்து வருகிறோம்..
நம்முடைய பெலனாகிய தேவனைக் கெம்பீரமாய்ப் பாடி, யாக்கோபின் தேவனைக் குறித்து ஆர்ப்பரியுங்கள் என்று ஆசாப் தேவனைத் துதிக்கும்படி இஸ்ரவேல் ஜனங்களுக்கு அழைப்புக் கொடுப்பதை, இந்த சங்கீதத்தின் ஆரம்பத்திலே நாம் பார்க்கிறோம். (சங் .81 :1)
இன்று ஆலய ஆராதனைகளில் எல்லோரும் கெம்பீரமாய்ப் பாடி ஆர்ப்பரிக்கிறார்களா..?இல்லையல்லவா..
துதித்தல் என்பது.. ஓர் ஆவிக்குரிய செயல்..
தேவன் நமது பெலனாக இருந்தால் மட்டுமே,
நம்மால் ஆனந்தத்தோடு, ஆர்ப்பரிப்போடு, கம்பீரத்தோடு, மகிழ்ச்சியோடு துதிக்க முடியும். துதிப்பதிலே இன்பம் காண முடியும். ஆவிக்குரிய உற்சாகத்தையும் நாம் பெற்றுக்கொள்ள முடியும்.
நான் பாடும் போது என் உதடுகளும்..நீர் மீட்டுக் கொண்ட என் ஆத்துமாவும் கெம்பீரித்து மகிழும் என்று சங்கீதக்காரனைப் போல கூறவும் முடியும். (சங் .71: 23)
நாம் சத்தத்தை உயர்த்திக் கெம்பீரமாய்ப் பாடும்போது.. நாம் மெய்யாகவே தேவனை நேசிக்கிறோம்...
அவர் இஸ்ரவேலரை எகிப்தின் அடிமைத்தனத்திலிருந்து விடுவித்தது போல..
நம்மையும்
பாவத்திலிருந்து மீட்டுக் கொண்டதையும்,
நம்மையும் தம்முடைய பிள்ளைகளாகத் தெரிந்து கொண்டதையும்,
அவர் நன்மையினாலும், கிருபையினாலும் நம்மை முடி சூட்டினதையும்.. நாம் நன்றியோடு நினைவு கூருகிறோம் என்பதையே வெளிப்படுத்துகிறோம்.
*நன்றியறிதலுள்ள இதயம்*
*மௌனமாக இருக்காது*..
*தேவனைக் கெம்பீரமாய்ப்* *பாடித் துதிப்பது*.. *ஒவ்வொரு* *தேவனுடைய பிள்ளைக்கும்* *கொடுக்கப்பட்ட பிரமாணம்*, *அது கட்டளை*. *அது நியாயம்*..
*நாமும் கர்த்தருடைய* *கட்டளைக்குக் கீழ்ப்படிந்து,* *அவரை முழு இருதயத்தோடு* *துதிக்கும்போது*..
*அவர் தமது பரிசுத்த ஆவியினால்* *நம்மை நிரப்புவார்*.
*ஆவிக்குரிய உன்னத* *ஆசீர்வாதங்களினால் நம்மைத்* *திருப்தியாக்குவார்*..
*நம்முடைய வாழ்வு* *ஆசீர்வாதத்துடன்*.
*தேவ சமாதானம் நிறைந்ததாய்*
*மாறும்*...
ஆமென். 🙏
மாலா டேவிட்
உன் வாயை விரிவாய் திற
~~~~~~~~~~~~~~~~
சங்கீதம் 81: 10. *உன் வாயை விரிவாய் திற. நான் அதை நிரப்புவேன்.*
1.ஆம், *நம்முடைய வாய் நம்முடைய சரீரத்தில் கர்த்தர் உருவாக்கின ஒரு அற்புதமான உறுப்பு*. இந்த வாய்க்குள்ளே ஒரு சிறிய நாவு. அதை சுற்றி 32 பற்கள். இந்த வாய் நமக்கு பேச, பாட, துதிக்க, ஆராதிக்க, வசனத்தை பேச, அன்பை வெளிப்படுத்த, பிறர் காயம் கட்ட, வசனத்தை விதைக்க *இவ்வளவு ஞானமாய் இந்த வாயை சிருஷ்டித்து, பேசும் திறனை தந்த தேவாதி தேவனுக்கு நம் வாய்க்காக நன்றி சொல்லுவோம்.*
2. *உன் வாயை விரிவாய் திற.*
நம் வாயை விரிவாய் திறக்க, *நம் வாயின் கட்டுகள் அவிழ்க்கப் பட வேண்டும்.* ஆம், *கழுதையின் வாயை திறந்தவர் நம் வாயையும் திறக்க வேண்டும்.* ஏசாயாவின் உதடுகளை அக்கினி குறடுகளால் தொட்டு, சுத்திகரித்தவர் *நம் வாயையும் பரிசுத்த ஆவியினால் தொட்டு சுத்திகரிக்க வேண்டும். ஆம், நம்முடைய வாய் சுத்திகரிக்கப்பட்டு திறக்கப்பட வேண்டும்.*
ஆனால், இன்று அநேகருடைய வாய் பொய், கோள், கடினமான வார்த்தைகள், பரிகாசம் , வம்பு, இச்சகம், வாக்குவாதம், பெருமை, அவிசுவாசம், பயம், கபடு இவற்றிற்காக விரிவாய் திறந்திருக்கிறது. ஒரு நிமிடத்தில் உலகமெங்கும் சுற்றி வருகிறது. அநேகரை காயப்படுத்துகிறது. *இப்படிப்பட்ட வாய்கள் வசனத்தினாலும், பரிசுத்த ஆவியினாலும் சுத்திகரிக்கப்பட்டு கர்த்தருக்காக விரிவாய் திறக்கப்பட வேண்டும்.*
3. *நான் அதை நிரப்புவேன்*
ஆம், *நம் வாயை விரிவாய் திறக்கும் போது கர்த்தர் நம் வாயை வசனத்தினால், வசனத்தின் ஆழங்களால், புதிய பாடல்களால், சாட்சியினால் நிரப்புவார். நம் வாயின் வார்த்தைகளால் அநேகருடைய காயங்களை கட்ட, சமாதானத்தின் சுவிசேஷத்தை அறிவிக்க கர்த்தர் வார்த்தைகளால் நம்மை நிரப்புவார். பிசாசின் கிரியைகளை அழிக்க வார்த்தைகளால் நம் வாயை நிரப்புவார்.*
ஆம், நம்முடைய வாயை கர்த்தருக்காக திறக்க தீர்மானிப்போம். அவர் வார்த்தைகளை புசிப்போம். அவர் நம் வாயை நிரப்பி நம்மை ஆசீர்வதிப்பார். ஆமென். அல்லேலூயா.
*Dr.Padmini Seĺvyn*
ஆசீர்வதிக்கப்பட்ட மக்களுக்கு ஆசீர்வாதமாக இருப்பதற்காக ஆசீர்வதிக்கப்பட்டேன் 👨👨👧👦
🙋♂️🙋♀️ படித்து தியானம் செய்யலாம்
*சங்கீதம் 82:2-7*
*THE ACCUSATION OF INJUSTICE*
*அநீதியின் குற்றச்சாட்டு*
📝 சங்கீதம் 82 என்பது அநீதியான ஆட்சியாளர்கள் மற்றும் நீதிபதிகள் மீதான தீர்ப்பின் வார்த்தை. " *நீதிபதி*" என்ற பாத்திரத்தில் தேவ சபையிலே தேவன் எழுந்தருளியிருக்கிறார். "தேவர்களின்" நடுவிலே அவர்களை நியாயம் விசாரிப்பதிலிருந்து தொடங்குகிறது.
(வ 1)
1️⃣ ஆட்சியாளர்கள் எவ்வளவு காலம்
✔️ அநீதி செய்பவர்களைக் காப்பார்கள்
✔️ துன்மார்க்கருக்கு சாதகமாக இருப்பார்கள்.
2️⃣ஆட்சியாளர்கள் எவ்வளவு காலம் தங்களை
✔️ *தேவர்கள்*
✔️ *உன்னதமானவரின் மக்கள்* என்று அழைப்பார்கள் / நினைப்பார்கள்.
3️⃣ தங்களை *"தேவர்கள்"* மற்றும் *"உன்னதமானவரின் மக்கள்"* என்று அழைத்த ஆட்சியாளர்கள், தேவனின் நியாயப்பிரமாணத்தை புறக்கணித்துள்ளனர் (ஏசா 11:4; எரே 22:3,16; சங் 72:2,4,12-14 )
📝 தேவன் ஒரு நீதிபதியாக ஆட்சியாளர்களுக்கு :
✅ பலவீனனையும் திக்கற்ற பிள்ளைகளையும் தப்புவிக்க வேண்டும்
✅ ஏழைக்கும் சிறுமைப்பட்டவனுக்கும் நீதி செய்ய வேண்டும்
✅ பலவீனனையும் எளியவனையும் விடுவிக்க வேண்டும்
✅ பலவீனர்களையும் ஏழைகளையும் துன்மார்க்கரின் பிடியிலிருந்து விடுவிக்க வேண்டும் என்று நினைவூட்டுகிறார்.
📝 கர்த்தர் தேசங்களின் அரசாங்கத்தை ராஜாக்கள் மற்றும் நீதிபதிகளின் ( *ஆட்சியாளர்கள்*) கைகளில் ஒப்படைத்துள்ளார், அவர்கள் நீதியுடன் ஆட்சி செய்ய வேண்டும் (ரோமர் 13:1). ஆனால் அவர்களில் பெரும்பாலோர் தங்கள் அதிகாரம் தேவனிடமிருந்து வந்ததை ஒப்புக் கொள்ளவில்லை, இதன் விளைவாக அவர்கள் ஆணவமடைந்து தங்கள் குடிமக்களை சுரண்டுகிறார்கள்.
📍 ஏழைகளைப் பாதுகாக்கவும் நீதியை நிலைநாட்டவும் அவர்கள் தவறியதற்கு அவர்கள் பொறுப்பேற்க வேண்டும்.
📍 ஆண்டவர் இறுதித் தீர்ப்பை அறிவிக்கிறார்: *அவர்கள் மரண தண்டனையுள்ள குற்றவாளிகள்* (வ. 7)
💕 பிரியமான திருச்சபையே, கர்த்தர் இஸ்ரவேலிடமிருந்து எதைக் கோருகிறார், அவர் மனித இனத்திடமிருந்தும் உலக நாடுகளிடமிருந்தும் கேட்கிறார்.
சங்கீதக்காரன் மற்றும் ஆராதிக்கும் மக்களைப் போலவே, ஆட்சியாளர்கள் மீது தேவனுடைய அதிகாரத்தைப் பிரயோகிக்க நாம் ஜெபிக்க வேண்டும்.
தேவனுக்கே மகிமை 🙌
✍🏽 *மார்க் போஜே*
அருணாச்சல பிரதேசம், இந்தியா 🇮🇳
தமிழாக்கம் ஜஸ்டஸ் ராஜேந்திரன்
💫⛓️DIVINE DELIVERANCE⛓️💫*
*💫⛓️தெய்வீக விடுதலை⛓️💫*
[நாள் - 177] சங்கீதம் 79-83:
☄️சங்கீதம் 79-83, நம்பிக்கை, துதி, விடுதலை மற்றும் தேவனின் உண்மைத்துவம் ஆகிய கருப்பொருள்களைக் கையாள்கிறது.
1️⃣ *சங்கீதம் 79: தெய்வீக தலையீட்டிற்கான அழுகை*
🔹சங்கீதம் 79, துன்ப காலங்களில் தேவனின் தலையீட்டிற்காக ஆற்றொண்ணா வேண்டுகோளை சித்தரிக்கிறது.
🔹சங்கீதக்காரன் எருசலேமின் அழிவு மற்றும் ஆலயம் இழிவுபடுத்தப்பட்டதைக் குறித்து புலம்புகிறார், தேவனுடைய இரக்கத்தையும் மறுசீரமைப்பையும் நாடுகிறார்.
🔹பெருஞ்சேதங்களின் தருணங்களில் கூட, உதவிக்காக நாம் கூக்குரலிடுவதைக் தேவன் கேட்கிறார் என்பதை அறிந்து நாம் ஆறுதல் அடையலாம்.
🔹நமது உடைந்த நிலையில் குணமடையவும், மறுசீரமைக்கப்படவும் தேவனுடைய திறனில் நம்பிக்கை வைக்க இது நமக்குக் கற்பிக்கிறது.
2️⃣ *சங்கீதம் 80: மறுசீரமைப்பிற்கான ஒரு பிரார்த்தனை*
🔸சங்கீதம் 80, தம் மக்களின் மேய்ப்பராக தேவன் வகிக்கும் பங்கை வலியுறுத்துகிறது.
🔸சங்கீதக்காரன் தேவனுடைய முகத்தை அவர்கள் மீது பிரகாசிக்கவும், அவர்களின் அதிர்ஷ்டத்தை மீட்டெடுக்கவும், எதிரிகளிடமிருந்து அவர்களைப் பாதுகாக்கவும் மன்றாடுகிறார்.
🔸ஒரு மேய்ப்பன் தன் மந்தையைக் கவனித்து வழிநடத்துவது போல, தேவன் நம்மை வழிநடத்தவும் பாதுகாக்கவும் நம்மை சரியான பாதையில் வழிநடத்தவும் நம் தேவைகளை வழங்கவும் விரும்புகிறார்.
3️⃣ *சங்கீதம் 81: ஆராதனை மற்றும் கீழ்ப்படிதலுக்கான அழைப்பு*
🔺சங்கீதக்காரன் எகிப்திலிருந்து தேவன் விடுவித்ததைப் பற்றி விவரிக்கிறார், மேலும் அவருடைய கட்டளைகளைக் கேட்கவும், கீழ்ப்படியவும், அவருக்கு நன்றி தெரிவிக்கவும் மக்களை அறிவுறுத்துகிறார்.
🔺தேவனுடனான நமது உறவில் கீழ்ப்படிதல் இன்றியமையாத அம்சம் என்பதை உணர்ந்து, நமது வாழ்க்கையை ஆராய்ந்து, நமது செயல்கள் நமது வார்த்தைகளுடன் ஒத்துப்போவதை உறுதிசெய்ய இந்த சங்கீதம் நம்மைத் தூண்டுகிறது.
4️⃣ *சங்கீதம் 82: நீதிக்கான விண்ணப்பம்*
▫️சங்கீதம் 82, உலகின் அநீதியான ஆட்சியாளர்களுக்கும் நீதிபதிகளுக்கும், பலவீனமானவர்களைக் காத்து நீதியை நிலைநாட்டுவதற்கான அவர்களின் பொறுப்பை நினைவூட்டுகிறது. ▫️இந்த அநீதியான அதிகாரிகள் மீது தேவனுடைய தீர்ப்புக்காக சங்கீதக்காரன் அழைப்பு விடுக்கிறார் மேலும் தேவனுடைய இறுதி நீதியில் தனது நம்பிக்கையை புதுப்பிக்கிறார்.
▫️தேவன், இறுதி நியாயாதிபதியாக, ஒடுக்கப்பட்ட அனைவருக்கும் இறுதியில் நீதி வழங்குவார் என்பதையும் இது நமக்கு உறுதியளிக்கிறது.
5️⃣ *சங்கீதம் 83: எதிரிகளிடமிருந்து விடுதலைக்கான பிரார்த்தனை*
◾️சங்கீதம் 83 எதிரிகளிடமிருந்தும் அடக்குமுறையாளர்களிடமிருந்தும் தேவன் விடுவிக்குமாறு உணர்ச்சிபூர்வமான வேண்டுகோள்.
◾️நம்முடைய எதிரிகளை வெல்லும் அவருடைய வல்லமையை நம்பி, இக்கட்டான காலங்களில் நாம் தேவனிடம் திரும்பலாம் என்பதை இந்த சங்கீதம் நமக்கு நினைவூட்டுகிறது.
♥️ *வாழ்க்கை பாடங்கள்*
💥இந்த சங்கீதங்கள் மூலம், துன்ப காலங்களில் தேவனிடம் திரும்பவும், அவருடைய வழிகாட்டுதலை நாடவும், கீழ்ப்படிதலுடன் அவரை வணங்கவும், நீதிக்காக வாதிடவும், அவருடைய விடுதலையில் நம்பிக்கை வைக்கவும் நினைவூட்டப்படுகிறோம்.
*‼️ஆறுதல் மற்றும் நம்பிக்கையின் ஒரே ஆதாரம் இயேசுவே‼️*
பிரின்சஸ் ஹட்சன்
தமிழாக்கம் இன்னிசை செல்வி மும்பை
*….TELL HOW MUCH GOD HAS DONE FOR YOU*(Luke8:39)
*..தேவன் உனக்குச் செய்தவைகளையெல்லாம் அறிவி.*(லூக்கா 8:39)
சுவிசேஷங்களில், இயேசு எப்படி கெனெசரேத்துக்குச் சென்று பிசாசு பிடித்த ஒருவனைக் குணப்படுத்தினார் என்பதை நாம் படிக்கிறோம். அவன் குணமடைந்த பிறகு, தன்னுடன் செல்ல அனுமதிக்குமாறு இயேசுவிடம் கெஞ்சினான். இயேசு அவனுடைய வேண்டுகோளை மறுத்து, *"நீ உன் வீட்டிற்குத் திரும்பி, தேவன் உனக்குச் செய்தவைகளை அறிவி" என்று கூறினார். அந்தப்படி அவன் போய், இயேசு தனக்குச் செய்தவைகளை யெல்லாம் பட்டணத்தில் எங்கும் பிரசித்தப்படுத்தினான்.. தெக்கபோலி பட்டணங்களில் (10 நகரங்கள்) ஆயிரக்கணக்கான மக்கள் இயேசுவைப் பற்றி கேட்கும் வாய்ப்பு கிடைத்தது.
நமது 365 நாட்கள் பைபிள் வாசிப்பு திட்டத்தில் 180 நாட்களை முடிக்க உள்ளோம். பைபிளைப் வாசிக்கவும் படிக்கவும் இந்த திட்டத்தின் ஒரு பகுதியாக நீங்கள் இருப்பதை அறிந்து மகிழ்ச்சி அடைகிறேன். நீங்கள் அதை அனுபவித்து மகிழ்கிறீர்கள் என்றும் கர்த்தர் தம் வார்த்தையிலிருந்து அற்புதமான பாடங்களை உங்களுக்குக் கற்பிக்கிறார் என்றும் நம்புகிறேன்? இது உங்கள் வாழ்க்கையை மாற்றுகிறது மற்றும் இயேசுவில் வளர உங்களுக்கு உதவுகிறது என்று நம்புகிறேன் ?
*பைபிள் வாசிப்பு நிகழ்ச்சி பற்றிய உங்கள் சாட்சியத்தை குழுவில் பகிர்ந்துகொள்ள சில நிமிடங்கள் ஒதுக்குங்கள், இந்த திட்டம் உங்கள் பைபிள் படிப்பிலும், தேவ வார்த்தையை தீவிரமாகவும் முறையாகவும் படிப்பது உங்கள் கிறிஸ்தவ வாழ்க்கையிலும் உங்களுக்கு எவ்வாறு உதவுகிறது என்று எழுதுங்கள். இது மற்றவர்களை ஊக்குவிப்பதன் மூலம் பலர் இந்த திட்டத்தில் சேரவும் ஊக்குவிக்கும்.
தயவு செய்து உங்கள் சாட்சியை எனக்கும் அனுப்புங்கள், அதனால் நான் அதை மேலும் பல குழுக்களுக்கு அனுப்ப முடியும்.
Rev.C.V.Abraham
+977-9813420744.
**இந்த செய்தியை எங்கள் பைபிள் வாசிப்பு திட்டத்தில் உள்ள அனைத்து குழுக்களுக்கும் அனுப்பவும்.*
*🍒சிப்பிக்குள் முத்து🍒*
இன்றைய வேத
வாசிப்பு பகுதி -
*சங் : 79 - 83*
*🌹முத்துச்சிதறல் : 177*
🌷🍂🌲🌷🍂🌲
*நீங்கள் தேவர்கள் என்றும்,*
நீங்கள் எல்லாரும் *உன்னதமானவரின் மக்கள் என்றும்* நான் சொல்லியிருந்தேன். *(82 : 6)*
🌲🌷🍂🌲🌷🍂
*✍️நீதிக்காக ஆண்டவரிடம் ஆசாப் இறைஞ்சும் ஒரு சங்கீதமாக 82 ம் சங்கீதம் அமைந்துள்ளது.* நியாயக்கேடு செய்துக் கொண்டிருந்த அக்கால நீதியரசர்களுக்கு விரோதமாக இறைவனின் நியாயத்தீர்ப்பு அவரது மக்கள் நடுவில் செயலாக்கத்தில் இருப்பதாக அவர் அறிக்கையிடுகிறார். *நியாயத்திலே முகதாட்சனியம் தவறு என்பது இஸ்ரவேலருக்கு கற்றுக்கொடுக்கப்பட்டு இருந்தது.*
(உபா - 16 : 19 :, நீதி - 24 : 23)
*இது ஞானமுள்ளவர்களின் புத்திமதியாம்.* ஆனால் இந்த நியதி மீறப்பட்டபோது, அது முழு தேசத்தின் அஸ்திபாரத்தினை ஆட்டங்காண வைத்துவிட்டதாகவும், அப்படி செய்கின்றோர் அனைவரும் *"அறியாமை, உணராமை, மற்றும் இருளில் நடந்துக் கொண்டு இருப்பதாக"*
கவி பாடுகிறார் ஆசாப்.
*(82:5)*
🦋கர்த்தர் நியமித்திருந்த *நீதியரசர்கள்* அக்காலத்தில் ஒரு *"குட்டி தெய்வம் போல பாவிக்கப்பட்டு,"* மக்களால் பெரிதும் மதிக்கப்பட்டு வந்தனர்.
இவர்கள் ஜனங்களின் இக்கட்டுகளில் அவர்களை விடுவிக்கும் காப்பாளர்களாக / காப்பாற்றும் இரட்சகர்களாக செயல்பட்டோராவர். ஆண்டவர் இவர்கள் வாயிலாக தமது தீர்ப்பிணை வெளியிடுவதாக ஜனங்கள் நம்பி, இவர்களை சார்ந்து நின்றனர்.
*இவர்களது உதவியை தேடி சென்றனர்.* அப்படியே சமூகத்தில் இவர்களுக்கு பெரும் மதிப்பும், மரியாதையும் கனமும் கொடுத்து, இவர்களது தீர்ப்புக்காக காத்தும் இருந்தனர் என்பதை எமது ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து, ஒரு பட்டிணத்தில் வசித்து வந்த,....
*"தேவனுக்கு பயப்படாத, மற்றும் மனுஷரை மதியாத ஒரு நியாயதிபதி"* குறித்த விவரணத்தில் குறிப்பிடுகிறார். *(லூக் - 18: 1 - 8)*
ஆக மொத்தத்தில் *இவர்கள், "தேவர்கள்"*
(கடவுளர்கள் - gods) *என்று போற்றப்பட்டு,* வந்தனர்.
ஆகையால் இவர்களுக்கு விரோதமாக எவரும் தீது பேசுவதில்லை.
🫛🫛🌻🫛🫛
*இஸ்ரவேல் தேசத்தை சுற்றிலும் இருந்த வேற்று தெய்வ வணக்கமுடையோர் கலாச்சாரத்தில் , அதாவது முக்கியமாக *"கானானியர்களின் கலாச்சாரத்தில்,"* ஒரு குலத்தின் தலைவர், அல்லது ஒரு கோத்திரத்தின் தலைவர், அல்லது ஒரு நகர ஆளுநர் போன்றோர், வழி வழியாக வந்த பிற்கால தலைமுறையினரால், *"தேவர்கள்" போல எண்ணப்பட்டு,* தேவனுக்கு நிகராக உயர்த்தப்பட்டு நின்றனர்.
*மரித்து போன இவர்களை "தெய்வம்" என்றும் வழிபாடு செய்து / வழிபட்டு வந்தனர்.*
🔥எமது ஆண்டவரும் இரட்சகருமாகிய இயேசுவும் கூட... *தேவர்கள் என்றும், அதே வேளை உன்னதமானவரின் மக்கள் என்றும் ஆண்டவரின் மக்கள் சொல்லப்பட்டிருந்ததை எடுத்து கையாண்டார்.* யோவான் - 10 : 34 ல் தன்னை கல்லெறிய முற்பட்ட யூத சமய தலைவர்களிடம் இந்த சங்கீதம் 84: 6ஐ கூறி,
*தமது "குமாரத்துவ நிலையை," தாம் அவர்களது மீட்பாளர், இரட்சகர் என்று உரிமை கொண்டாடி, தற்காப்பு செய்தார்.* எல்லா யூத சமய தலைவர்களும் கூட, *"குட்டி கடவுளர்கள் போல"* மக்களால் அங்கீகாரம் பெற்று, உன்னதமானவரின் பிள்ளைகளாக தான் அக்காலத்தில் உலாவினார்கள்.
ஏன் என்றால் அவர்கள்
*(யூத மார்க்கத்தார் அனைவரும்)*
தேவ வசனத்தை பெற்று இருந்தனர். *ஆகையால் அவர்கள் "தேவர்கள்" என்னும் அங்கீகாரத்தை தேவனிடம் இருந்தே பெற்று இருந்தனர்.* ஆனாலும் அவர்களின் செயல்பாடுகள் அனைத்தும் "அநீதியாய் இருந்தது".
ஆகையால் இயேசு அவர்களை, அவர்களது போதனைகளை எதிர்த்து, கண்டனம் செய்ய வேண்டியதாகி விட்டது.
*(மத் - 23 ம் அதிகாரம்).*
🍀🍀🍒🍀🍀
ஆம், தேவ வசனத்தை பெற்றுக் கொண்டுள்ள நாம் அனைவரும் *"உன்னதமானவருக்கு பிள்ளைகளாம்."* நாம் ஆண்டவர் விரும்புகிற பிரகாரம் நீதியும், நியாயமும், நேர்மையுமாக நடந்துக் கொள்ள வேண்டும் என்பதற்காக தான் பரிசுத்த வேதாகமம் எம் கைகளில் தவழுகிறது. இதை நாமும் காத்து நடக்க வேண்டும், பிறரையும் நடக்கும்படி உணர்வூட்டி, உற்சாகமூட்டி, ஒருவருக்கொருவர் உதவியாக இருந்துக் கொள்ள வேண்டும். தேவனுக்கு பயப்படாமலும், மனுஷரை மதியாமலும் இருந்து விடாதபடி, கர்த்தர் எம்மை காப்பாராக ! அப்படி இல்லையெனில் இவ்வுலக மாந்தரை போல நமது நிலையும் உண்டாகி,
*"விழுந்து போவோம்" என்று* நாம் எச்சரிக்க படுகிறோம்.
*(82:7)*
👍உன்னதமானவரின் மக்களாக, கிறிஸ்துவின் நாமம் தரிக்கப்பட்டோர் நடந்துக் கொள்ள கர்த்தர் எதிர்பார்ப்பதால், அவரது எதிர்ப்பார்ப்பெல்லாம் நீதியும், நேர்மையும் எதார்த்தமுமாய் நாம் நடந்து,
*"அவரது பிள்ளைகள்" என்னும் முத்திரை எம்மிடமிருந்து களைய படாமல் வாழ அழைக்கிறார். அவ்விதம் தங்களை ஒப்புக்கொடுத்து வாழும் எவருக்கும் கர்த்தரால் மட்டுமே அக்கிருபை அருளப்பட்டு, வழிநடத்தப்படுவோம்.*
நாம் எல்லோரும் உன்னதமானவரின் பிள்ளைகள் என்றால், அதற்கு ஏற்ற விதமாக நடக்கவும் கடவோம். ஆமென்
*Sis. Martha Lazar✍️*
*NJC, Kodai Road*
Thanks for using my website. Post your comments on this