===========
சங்கீதம் 84 - 88
============
*கர்த்தாவே உமது செவியைச் சாய்த்து, என் விண்ணப்பத்தைக் கேட்டருளும்* என்று தாவீது கர்த்தரிடத்தில் கேட்கிறார்.
*தாவீதின் விண்ணப்பங்கள்*.
1. கர்த்தாவே உமது செவியைச் சாயும்.
2. என் விண்ணப்பத்தைக் கேளும்.
3. என் ஆத்துமாவைக் காத்தருளும்.
4. உமது அடியேனை நீர் இரட்சியும்.
5. ஆண்டவரே எனக்கு இரங்கும்.
6. அடியேனுடைய ஆத்துமாவை மகிழ்ச்சியாக்கும்.
7. என் ஜெபத்திற்கு செவிகொடும்.
8. என் விண்ணப்பங்களின் சத்தத்தைக் கவனியும்
9. உமது வழியை எனக்குப் போதியும்.
10. என் மேல் நோக்கமாயிரும்.
11. என்மேல் கிருபையாயிரும்.
12. உமது வல்லமையை அடியானுக்கு அருளும்.
13. உமது அடியானின் குமாரனை இரட்சியும்.
14. எனக்கு அநுகூலமாக ஒரு அடையாளத்தைக் காண்பித்தருளும்.
★ தாவீதின் இந்த விண்ணப்பத்தின் ஒவ்வொரு வார்த்தைகளையும் கவனியுங்கள்.
*நம்முடைய ஜெபவார்த்தைகளில் தேவன் பிரியமாயிருக்கிறார்*.
*நம்முடைய ஜெப விண்ணப்பங்களை தேவன் தலைசாய்த்துக் கவனித்துக் கேட்டு நமக்கு பதிலளிக்கிறார்*.
★தேவன் தம்மை நோக்கிக் கூப்பிடுகிற யாவர் மேலும் கிருபை அளிக்கிறவரா யிருக்கிறார்.
★எனவே நம்முடைய விண்ணப்பங்களைக் கர்த்தரிடம் மனத்தாழ்மையோடு ஏறெடுத்து ஜெயம் பெறுவோமாக.🧎
*ஆமென்*
✍️ பவானி ஜீஜா தேவராஜ், நாகர்கோவில்.
❎ *அவர்களோ மதிகேட்டுக்குத் திரும்பாதிருப்பார்களாக* ❎
☄️ *“கர்த்தராகிய தேவன் விளம்புவதைக் கேட்பேன்; அவர் தம்முடைய ஜனங்களுக்கும் தம்முடைய பரிசுத்தவான்களுக்கும் சமாதானம் கூறுவார்; அவர்களோ மதிகேட்டுக்குத் திரும்பாதிருப்பார்களாக.”* (சங்கீதம் 85:8).
⚡ சங்கீதம் 85, கர்த்தர் தேசத்திற்கு தயவுசெய்ய வேண்டும் என்பதற்காக ஏறெடுக்கப்பட்ட ஜெபம். தேவனுடனான ஜனங்களுடைய உறவையே சங்கீதக்காரன் முக்கியப்படுத்துகிறான் (சங்கீதம் 85:1-2). கர்த்தர் கோபத்தின் எரிச்சலைவிட்டுத் திரும்பினாரென்று தெரிந்ததால், இப்போது விண்ணப்பம் செய்ய உற்சாகம் உருவாகிறது (சங்கீதம் 85:3-5). *உயிர்ப்பிக்கப்பட வேண்டுமென்று ஏறெடுக்கப்படும் ஜெபம், ஜனங்கள் தேவனில் மகிழ்ந்திருக்கும்படி கிரியை செய்ய வேண்டுமென்பதற்காகவே* (சங்கீதம் 85:6).
⚡ *தமது கிருபையைக் காண்பித்து, தேவனே தமது இரட்சிப்பை அருளிச்செய்கிறார்* (சங்கீதம் 85:7) என்பதை உணர்ந்துகொள்ளும்போது, மெய்யான உயிர்ப்பிக்கப்படல் உண்டாகிறது. உயிர்ப்பிக்கப்பட வேண்டுமென்று ஜெபிக்கும் ஒருவர் தேவனுடைய வார்த்தையின் அதிகாரத்திற்கு அடிபணிய வேண்டும். எனவே, *தேவன் தம்முடைய ஜனங்களுக்கும் தம்முடைய பரிசுத்தவான்களுக்கும் சமாதானம் கூறுவார்* (சங்கீதம் 85:8) என்று சங்கீதக்காரன் நம்பிக்கை கொண்டிருந்தான்.
⚡ ஒரு உண்மையான விசுவாசி மனத்தாழ்மையுடன், கர்த்தராகிய தேவன் தன்னிடம் பேசுவதைக் கேட்க ஆர்வமாக இருக்கிறான். ஏனென்றால், அவர் தம்முடைய ஜனங்களுக்கு சமாதானம் கூறுகிறார். நாம் எவ்வாறு சமாதானம் பெற்றிருக்கிறோம் என்பதை பவுல் விளக்குகிறான். *"நாம் விசுவாசத்தினாலே நீதிமான்களாக்கப்பட்டிருக்கிறபடியால், நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துமூலமாய் தேவனிடத்தில் சமாதானம் பெற்றிருக்கிறோம்."* (ரோமர் 5:1). தேவன் தம்முடைய மக்களுக்கு சமாதானம் கொடுக்க தயாராக இருக்கிறார், ஆனால் அவர்களோ தங்கள் மதிகேடான வழிகளுக்குத் திரும்பாதிருக்க வேண்டும். பேதுருவின் எச்சரிக்கை: *“நாய் தான் கக்கினதைத் தின்னவும், கழுவப்பட்ட பன்றி சேற்றிலே புரளவும் திரும்பினது என்று சொல்லப்பட்ட மெய்யான பழமொழியின்படியே அவர்களுக்குச் சம்பவித்தது.”* (2 பேதுரு 2:22).
⚡ ஒரு மனிதன் பாவத்தை விட்டு விலகும்போது, அவன் சமாதானம் பெறுகிறான். ஆனால், அவன் விட்ட பாவத்தை மீண்டும் செய்தால், அது மூடத்தனம்; அவன் கிருபையை இழக்க நேரிடும். எல்லா பாவங்களும் மதியீனமானவைகள்தான்; குறிப்பாக, பின்மாறுவது என்பது மிகவும் மதியீனம். *பாவத்தை விட்டு விலகிய பிறகு, அதே பாவத்திற்கு மீண்டும் திரும்புவது* அல்லது தேவன் சமாதானத்தை அளித்த பிறகு, விட்ட பாவத்திற்குத் திரும்புவது அப்பட்டமான மூடத்தனம். ஞானியின் வார்த்தைகள்: *"நாயானது தான் கக்கினதைத் தின்னும்படி திரும்புவதுபோல, மூடனும் தன் மூடத்தனத்துக்குத் திரும்புகிறான்."* (நீதிமொழிகள் 26:11).
⚡ அவர்கள் தங்கள் பாவ வழிகளுக்குத் திரும்புவதன் மூலம் *பரிசுத்த ஆவியை* துக்கப்படுத்தினால், *அவர்களுடைய பின்னிலைமை முன்னிலைமையிலும் கேடுள்ளதாயிருக்கும்*. பேதுரு எச்சரிக்கிறான்: *“கர்த்தரும் இரட்சகருமாயிருக்கிற இயேசுகிறிஸ்துவை அறிகிற அறிவினாலே உலகத்தின் அசுத்தங்களுக்குத் தப்பினவர்கள் மறுபடியும் அவைகளில் சிக்கிக்கொண்டு ஜெயிக்கப்பட்டால், அவர்களுடைய பின்னிலைமை முன்னிலைமையிலும் கேடுள்ளதாயிருக்கும்.”* (2 பேதுரு 2:20).
🔹 *உண்மையான மனந்திரும்புதலுடன் நாம் தேவனிடத்திற்கு முழுமனதுடன் திரும்பியிருக்கிறோமா?*
🔹 *நம்முடைய மூடத்தனமான வழிகளுக்கு மீண்டும் திரும்பாமல் கவனமாக இருக்கிறோமா?*
✅ நாம் கற்றுக் கொள்ளும் *பாடங்கள்*:
1️⃣ *உயிர்ப்பிக்கப்பட வேண்டுமென்று ஏறெடுக்கப்படும் ஜெபம், ஜனங்கள் தேவனில் மகிழ்ந்திருக்கும்படி கிரியை செய்ய வேண்டுமென்பதற்காகவே.*
2️⃣ *ஒரு உண்மையான விசுவாசி மனத்தாழ்மையுடன், கர்த்தராகிய தேவன் தன்னிடம் கூறுவதைக் கேட்க ஆர்வமாக இருக்கிறான். ஏனென்றால், அவர் தம்முடைய ஜனங்களுக்கு சமாதானம் கூறுகிறார்.*
3️⃣ *நாம் விசுவாசத்தினாலே நீதிமான்களாக்கப்பட்டிருக்கிறபடியால், நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துமூலமாய் தேவனிடத்தில் சமாதானம் பெற்றிருக்கிறோம்.*
4️⃣ *தேவஜனங்கள் தங்கள் மூடத்தனமான வழிகளுக்குத் மீண்டும் திரும்பாமல், தேவனிடத்திற்கே முழுமனதுடன் திரும்ப வேண்டும்.*
Dr. எஸ். செல்வன்
சென்னை
*சங்கீதம் 84 - 88*
*சீயோனின் மகிமை*
சங்கீதம் 87 ..தேவனுடைய நகரமாகிய எருசலேமின்.. சீயோனின்..கடந்த கால வரலாற்றைக் கூறுவதுடன்.. அதன் எதிர்கால மகிமையையும் நமக்குச் சுட்டிக்காட்டுகிறது.
இஸ்ரவேல் தேசத்தில் எத்தனையோ நகரங்கள் இருந்தாலும், *தேவன்* *எருசலேமைத் தனக்காகத்* *தெரிந்துகொண்டார்*.
அதற்கு அஸ்திபாரமிட்டார்..
அதின்மேல் பிரியங்கொண்டார்..
காரணம் அதைக் குறித்து.. தேவனுக்கு ஒரு நித்திய நோக்கம் இருந்தது.
🕊️இங்குதான் உன்னதமான தேவனுடைய ஆசாரியனாயிருந்த ..சாலேமின் ராஜாவாகிய மெல்கிசேதேக்குவுக்கு..
ஆபிரகாம் தசமபாகம் கொடுத்தான்..
🕊️இங்கிருந்த மோரியா மலையில்.. ஆபிரகாம் தன் குமாரனைப்
பலியிட அழைத்துச் சென்றான்..
🕊️தாவீது..எபூசியரிடமிருந்து இதைக் கைப்பற்றி..தேசத்தின்
தலைநகராக்கினான்..
🕊️தாவீது தேவனுடைய உடன்படிக்கைப்
பெட்டியைக் கொண்டு எருசலேமில் வைத்தான்..
🕊️இங்குதான் சாலொமோன் தேவாலயம் கட்டினான்.
🕊️இயேசு கிறிஸ்து தனது 12வது வயதிலே எருசலேம் தேவாலயத்திற்கு வந்தார்..
🕊️இயேசு கிறிஸ்து இங்குதான் சிலுவையில் மரித்தார். உயிர்த்தெழுந்தார்..
🕊️பரிசுத்த ஆவியானவர் இங்குதான் ஊற்றப்பட்டார்.
🕊️திருச்சபையின் பிறப்பிடம் இதுதான்.
🕊️உலகமெங்கும் சுவிசேஷம்
இங்கிருந்துதான் சென்றது..
நேபுகாத்நேச்சாரின் சொப்பனத்திலே பரலோகத்தின் தேவன் என்றென்றும் அழியாத ராஜ்யத்தை எழும்பப்பண்ணுவார் என்று வெளிப்படுத்தப்பட்டது.
*அந்த ராஜ்ஜியத்தின்* *தலைமையிடமாக*..
*மகாராஜாவின் நகரமாக* ..
*ஒரு நாளிலே இது மாறும்*.
*இயேசுகிறிஸ்து* *இங்கிருந்துதான்*.. *ஆயிரம்* *வருட அரசாட்சியுடன்*.. *நித்திய ஆளுகையையும்* *நிறைவேற்றுவார்*.
(ஏசா .2:2; சகரி. 2: 10-11;
சங் .48 :1- 2).
பழைய ஏற்பாட்டிலே, இஸ்ரவேல் தேசத்தின் மக்கள் மட்டும்.. சீயோனின் மக்களாக கருதப்பட்டனர். ஆனால் இந்த சங்கீதத்தின்( சங்.87: 4 - 6) வசனங்களில்.. எல்லா தேசங்களிலுமுள்ள மக்களும்.. சீயோனில் பிறந்தவர்கள் என்று அழைக்கப்படுவார்கள் என்று கூறப்படுகிறது.
இதற்குக் காரணம்.. இயேசு கிறிஸ்துவின் நற்செய்தி உலகமெங்கும் போய்ச் சேர்ந்து.. ஜனங்கள் இயேசு கிறிஸ்துவைத் தங்கள் சொந்த இரட்சகராக ஏற்றுக் கொள்வதை அது தீர்க்கதரிசனமாக முன்னறிவிக்கிறது.
அப் . 8: 37- 39 ல்,
எத்தியோப்பிய மந்திரி ஒருவன், இயேசு கிறிஸ்துவை ஏற்றுக் கொண்டான் அல்லவா!
இஸ்ரவேல் தேசத்திலிருந்த,
12 கோத்திரத்தாரும்.. தங்கள் வம்ச அட்டவணையை எழுதி வைப்பது கட்டாயப்படுத்தப்பட்டது..
சிறையிருப்பிலிருந்து திரும்பி வந்தவர்கள்..அந்த வம்ச அட்டவணையின்படியே
தொகையிடப்பட்டார்கள்..
மறுபடி பிறந்து, தேவனுடைய பிள்ளைகளானவர்கள், பரம எருசலேமுக்குப் போகிறபோது.. சீயோனின் பிரஜைகளாக அவர்கள் பெயரை.. தேவன் தமது ஜீவபுஸ்தகத்தில் எழுதுவார். அவர்களைத் தொகையிடுவார்..
மனிதரால் புறக்கணிக்கப் பட்டவர்களின் பெயர்கள்..
விபச்சாரத்தில் பிடிக்கப்பட்ட பெண், சமாரியா ஸ்திரீ போன்றவர்களின் பெயர்கள் அங்கே இருக்கும்.
மனிதர்களால் அதிகமாக கனம் பெற்ற வேதபாரகர், பரிசேயர், பெயர்கள் அங்கே இருக்காது.
சீயோனின் மக்ககளுக்கு..
அங்கே ஒரு மகிழ்ச்சியின் ஊற்று உண்டு..அது நித்திய ஜீவனைக் கொடுக்கிற
பரிசுத்த ஆவியின் ஊற்று..
*சீயோனில் பிறக்காதவர்களும்,*
*சீயோனின்* *பிரஜைகளாகுவதற்குக்* *காரணம்..இயேசுகிறிஸ்துவின்*
*கிருபையே*…
*நாமும்,அந்தக் கிருபையின்* *தேவனைப்*
*பற்றிக்கொள்வோம்*..
*அவர் நமக்குள்ளும்*..
*நாம் அவருக்குள்ளும் வாழ*
*இடங்கொடுப்போம்*..
*நம்முடைய பெயர்களும்*
*ஜீவபுஸ்தகத்தில் எழுதப்படும்*..
*ஆட்டுக் குட்டியானவர், ஜீவத்தண்ணீருள்ள நதியருகே நம்மை நடத்துவார்..நித்திய நித்திய காலமாக* *அவரோடு மகிழ்ச்சியாக வாழும்*..*சிலாக்கியம்* *பெறுவோம்*..ஆமென்.🙏
மாலா டேவிட்
🎯தலைப்பு:
இது என் பலவீனம்.
- தாவீது.
சங் 77.10.
🎯தியானம்:
👉இந்த சங்கீதத்தில் தாவீது,
1.தன் பலவீனம் எது❓
2. தன் ஆவி எப்படி ஆராய்ச்சி செய்தது❓
3. தன் பலவீனத்தை எப்படி மேற்கொண்டார்❓
என கூறுகிறார்.
1️⃣இது என் பலவீனம் (77 : 10):
🔸பூர்வ நாட்களையும்
ஆதி காலத்து வருஷங்களையும்
சிந்திப்பது.
🔸இராக்காலத்திலே தன் இருதயத்தோடே சம்பாஷிப்பது.
2️⃣என் ஆவி ஆராய்ச்சி செய்தது (77:6)
👉எப்படி❓
🔸தேவன் இரக்கம் செய்ய மறந்தாரோ❓
🔸அவருடைய கிருபை அற்று போயிற்றோ❓
🔸ஆண்டவர் நித்திய காலமாய் தள்ளிவிடுவாரோ❓
etc.
3️⃣பலவீனத்தை எப்படி மேற்கொண்டார்.❓
🔸கர்த்தருடைய செயல்களை நினைவுகூர்ந்தார்.
🔸பூர்வ காலத்து அதிசயங்களை நினைவுகூர்ந்தார்.
🔸தேவனுடைய கிரியைகளை தியானித்து அவருடைய செயல்களை யோசித்தார்
🎯இதனால் (77:13)
👉நம்முடைய தேவனைப் போல்
"பெரியதேவன்" யார்❓
என்பதை புரிந்து கொண்டு,
👉தன் பலவீனத்தை மேற்கொண்டார்.
🎯சிந்தனைக்கு,
👉இதேபோல் நாமும் நம்,
📍பூர்வ நாட்களையும்
📍இப்போதைய நாட்களையும்
(compare) ஒப்பிட்டு பார்த்து
🔸நம் ஆவி ஆராய்ச்சி செய்வதால்
🔸நாம் பலவீனமடைந்தால்‼️
👉தாவீதைபோல்
🔸தேவனது செயல்களை,
🔸கிரியைகளை
🔸நன்மைகளை
🔸ஈவுகளை etc.
🎈 நினைவுகூர்வோம்
🎈சிந்திப்போம்.
👉அப்போது,
🩸நம் தேவன்,
🩸"பெரிய தேவன்"
என புரிந்துகொள்வோம்
🎈நம் பெலவீனங்களை மேற்கொள்வோம்..
🎯நம்முடைய தேவனைப் போல்
"பெரிய தேவன் யார் "❓
ஆமென்.🙏
*உமக்கு நிகருமில்லை, உம் கிரியைகளுக்கு ஒப்புமில்லை*
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
சங்கீதம் 86: 8. *ஆண்டவரே, தேவர்களுக்குள்ளே உமக்கு நிகருமில்லை, உம்முடைய கிரியைகளுக்கு ஒப்புமில்லை.*
1. ஆம், நம்முடைய தேவனுக்கு நிகரான, ஒப்பான தேவன் ஒருவருமில்லை.
*அவர் நல்லவர், மன்னிக்கிறவர், அவரை நோக்கி கூப்பிடுகிற யாவர் மேலும் கிருபை மிகுந்தவர்*. 86: 5.
*அவர் மகத்துவமுள்ளவர், அதிசயங்களை செய்கிறவர், அவர் ஒருவரே தேவன்*
86: 10.
2. *இந்த தேவன் அன்பாகவே இருக்கிறார். நமக்காக தன் சொந்த குமாரனையே பலியாக ஒப்புக் கொடுத்தவர். இன்றும் உயிரோடிருக்கிறவர். நம்மோடிருக்கிறவர்*
3. ஆம், நம் தேவன் சர்வ வல்லவர், பரிசுத்தர், சேனைகளின் கர்த்தர். *சாலோமோன் வானத்திற்கு நேராய் தன் கரங்களை விரித்து, மேலே வானத்திலும், கீழே பூமியிலும் உமக்கு ஓப்பான தேவன் இல்லை. முழு இருதயத்தோடு உமக்கு முன்பாக நடக்கிறவர்களுக்கு உடன்படிக்கையையும், கிருபையையும் காத்து வருகிறீர். என் தகப்பனாகிய தாவீதுக்கு வாக்கினால் சொன்னதை கரத்தினால் நிறைவேற்றினீர்* என்றார். 1இராஜாக்கள் 8: 23, 24.
4. *ஆகாய மண்டலத்தில் கர்த்தருக்கு நிகரானவர் யார்? பலவான்களின் புத்திரரில் கர்த்தருக்கு ஒப்பானவர் யார் ?* சங்கீதம் 89: 6.
5.*கர்த்தாவே உமக்கு ஒப்பானவர் இல்லை. நீரே பெரியவர். உமது நாமமே வல்லமையில் பெரியது*. எரேமியா 10: 6.
ஆம், இந்த ஒப்பற்ற தேவனை தெய்வமாக கொண்ட நாம் பாக்கியவான்கள். ஆசீர்வதிக்கப்பட்டவர்கள். அவரையே, அவர் வார்த்தைகளையே பற்றி பிடித்து, அண்டி கொள்வோம். அவருக்கு கீழ்ப்படிவோம். ஆமென். அல்லேலூயா.
*Dr.Padmini Seĺvyn*
🙋♂️🙋♀️ படித்து தியானம் செய்யலாம்
*சங்கீதம் 84:3*
*அடைக்கலான் குருவியைப் போல் ஆக விருப்பம்*
*LONGING TO BE LIKE A SPARROW*
📝 சங்கீதம் 84 என்பது தேவனுடைய ஆலயத்தின் மீதுள்ள ஏக்கத்தின் ஜெபம். *சங்கீதக்காரன் கர்த்தருடைய ஆலயத்தின்மேல் ஆழ்ந்த ஏக்கத்தை உண்டாக்கினான்* (வ. 1-4)
🙋♂️ ஒரு பொதுவான குருவி தேவனுடைய ஆலயத்தில் இடம் பெற்றிருப்பதையும் (வ 3a) தகைவிலான் குருவி தன் குஞ்சுகளை வைத்துக்கொள்ள ஒரு கூடு வைத்திருப்பதையும் சங்கீதக்காரர் கவனித்தார்.
📍 *அவைகளை கர்த்தர் ஏற்றுக்கொள்கிறார்*.
🙋♂️ *அடைக்கலான் குருவியும் தகைவிலான் குருவியும் நலிந்ததாகவும் பலவீனமாகவும் இருந்தாலும், அவைகள் கர்த்தருடைய மாளிகையில் ஒரு வீட்டைக் கண்டுபிடித்தன என்று சங்கீதக்காரன் நியாயப்படுத்தினார்*.
📍அவைகள் ஆபத்தில்லாமல் தேவனால் பாதுகாப்பாக இருந்தன.
🙋♂️ சங்கீதக்காரன் வெறுமனே ஒரு சுற்றுலாப் பயணியைப் போல தேவனுடைய வீட்டிற்குச் செல்ல விரும்பவில்லை ( *பெயரளவில் ஆலயத்திற்கு செல்பவர்கள்* ) ; அவர் அங்கு வாழ விரும்புகிறார்; ஜீவனுள்ள தேவனுடைய சந்நிதியில் நேரத்தை செலவிட அவர் ஏங்குகிறார் (வ. 2)
💕 அன்பான திருச்சபையே, அடைக்கலான் குருவி மற்றும் தகைவிலான் குருவி என்பது *நலிந்த, பலவீனமான, சாந்தகுணமுள்ள, தாழ்த்தப்பட்ட மற்றும் அன்பான கவனிப்பு தேவைப்படுகிற அனைவரும்* கர்த்தருடைய வீட்டிற்குள் வருவதன் மூலம் சமாதானம், இளைப்பாறுதல் மற்றும் பாதுகாப்பைப் பெற முடியும் என்பதை நினைவூட்டுகிறது.
அடைக்கலான் குருவி மற்றும் தகைவிலான் குருவியின் காரணி ( *தேவனுடைய பிரசன்னத்தில் வசிப்பது*) நம் இருதயங்களில் மேலோங்கட்டும்.
📍 *தேவனுடைய வீடு என்பது ஏழை, எளியோர் மற்றும் ஆதரவற்றவர்களுக்கு அடைக்கலமாக இருக்க வேண்டும்*.
☝️ *தேவனுடைய வீட்டில் ஒரு இடத்தைக் கண்டுபிடிப்பதற்கான ஒரே நிபந்தனை என்னவென்றால், நாம் விசுவாசத்துடன் அவரிடம் வர வேண்டும்.*
🙋♂️🙋♀️ *தேவனுடைய வீட்டில் வாசமாயிருக்கிறவர்கள் பாக்கியவான்கள்*.
தேவனுக்கே மகிமை 🙌
✍🏽 *மார்க் போஜே*
அருணாச்சல பிரதேசம், இந்தியா 🇮🇳
தமிழாக்கம் ஜஸ்டஸ் ராஜேந்திரன்
Thanks for using my website. Post your comments on this