ஓர் குட்டிக் கதை
பாகங்களும் பாகங்களும்
=============
ஒரு அரசனுக்கு திடீரென
இரண்டு கண்களும் குருடாகிவிடுகிறது.
அதை குணப்படுத்த மலை உச்சியில் உள்ள சஞ்சீவிமலையில் உள்ள மூலிகையை கொண்டு வந்து பிழிந்தால் தான் முடியும்.
அதற்கு மலையடிவாரத்தில் உள்ள தேவதை வழிகாட்டினால்தான் முடியும். அந்த அரசனுக்கு மூன்று குமாரர்கள்.
அதில் முதலாமவன் கொண்டுவருகிறேன் என கிளம்புகிறான். தேவதை வழிகாட்ட ஒர் நிபந்தனை விதிக்கிறது.
நான் உன்பின்னால் வருவேன். நான் இடது பக்கம் திரும்பு என்றால்
இடது பக்கம் திரும்ப வேண்டும்.
வலது பக்கம் திரும்பு என்றால் வலதுபக்கம் திரும்ப வேண்டும்.
நீ நடப்பதை நிறுத்தக்கூடாது.
நடந்து கொண்டே இருக்கவேண்டும்.
எது நடந்தாலும் பின்னால் திரும்பிக்க பார்க்ககூடாது என்கிறது.
முதாலாமவன் நடந்து செல்ல தேவதை வழிகாட்டிச்சென்றது. திடீரென பின்னால் வரும் தேவதையின் சலங்கை ஒலி கேட்கவில்லை.
என்னாயிற்று என தன்னையறியாமல் முதாலமவன் திரும்பி பார்க்கிறான். நிபந்தனையை மீறிவிட்டான். கற்சிலையாகிவிடுகிறான்.
அடுத்து இரண்டாமவன் கிளம்புகிறான்.
கிட்டதட்ட நிபந்னைகளுக்கு உட்பட்டு பாதிதூரம் வந்துவிடுகிறான். திடீரென சிரிப்பு ஒலி கேட்கிறது. ஆா்வம் மிகுதியால் திரும்பி பாா்த்து அவனும் கற்சிலையாகி விடுகிறான்.
மூன்றாமவன் அடுத்து வருகிறான். இவனுக்கும் இதே நிபந்தனையுடன் தேவதை முன் வருகிறது.
இவனும் பின் வரும் சத்தம் நின்று போனாலும் முன்னே செல்கிறான்.
பின்னால் அலறல் சத்தம். சிரிப்பொலி. இவைகளுக்கெல்லாம் திரும்பாமல் முன்னே செல்கிறான் வெற்றியும் பெற்று மூலிகையும் கை பற்றுகிறான்.
என் அன்புக்குாியவா்களே,
பின்னால் வரும் தேவதைதான் நமது மனம் நிபந்தனையை விதித்துவிட்டு செயல் உறுதி யை தடுக்க .எல்லா முயற்ச்சியையும் செய்யும்.
அதை புறக்கணிப்பதில் தான் நம் வெற்றி அடங்கி உள்ளது.
மனதில் தோன்றும் பாவமான, பாரமான காாியங்களை பேசவும், செய்யவும் மனது மூலம் சாத்தான் சரீரத்தில் செய்ய வைப்பான்.
அதற்கப்புறம் நீங்கள் கற்சிலையாய் மாறி இதுவரை நீங்கள் செய்து வந்த வேலை, படிப்பு ஊழியம் எல்லாவற்றையும் உங்களைக் கொண்டே சாத்தான் தந்திரமாக உங்களை விட்டு நிறுத்தி விடுவான்.
அதாவது உங்களை கற்சிலை என்ற கோபம், வைராக்கியம், முறுமுறுப்பு எல்லாமே உங்கள் மனதில் சாத்தான் தோன்றச் செய்து நீங்கள் செய்துவந்த சகலவற்றையும் நிறுத்திவிடுவான்.
To get daily story contact +917904957814
அதற்கு பின்,
தேவன் உங்கள் மேல் வைத்த திட்டங்களும், தீர்மானங்களும், நோக்கங்களும் வீணாய் போய் விடும். உங்கள் ஆவிக்குாியவாழ்வு, குடும்ப வாழ்வு, எதிர்கால வாழ்வு சூனியமாகிவிடும்.
எனவே
இந்த வினாடியே மனம் திரும்புங்கள். நீங்கள் தவறு செய்திருந்தால் உங்களை திருத்தி கொள்ளுங்கள். மற்றவா்கள் தவறு செய்து இருந்தால் மன்னியுங்கள்.
கிறிஸ்தவ வாழ்வானது ரோஷம் இல்லாத வாழ்க்கையாகும் எது நடந்தாலும் கா்த்தா் பாா்த்துக் கொள்வாா்.என்று நினையுங்கள்.
இன்று மட்டுமல்ல, உலகத்தில் உள்ள வரை,,
பலவிதமான பிரச்சனைகளின் பாரங்கள் உங்களுக்கு வந்தாலும், உங்கள் மனதில், வாயில், செய்கையில் பாவங்கள் வருவதற்கு சாத்தான் முயற்சி செய்தாலும் அதை இயேசுவின் நாமத்தில் தள்ளி விடுங்கள். .
அப்போது பிழைத்துக் கொள்வீா்கள். ,
பைபிள் சொல்கிறது.
பாரமான யாவற்றையும், நம்மைச் சுற்றி நெருக்கிநிற்கிற பாவத்தையும் தள்ளிவிட்டு, விசுவாசத்தைத் துவக்குகிறவரும் முடிக்கிறவருமாயிருக்கிற இயேசுவை நோக்கி, நமக்கு நியமித்திருக்கிற ஓட்டத்தில் பொறுமையோடே ஓடக்கடவோம். - எபி. 12:1
நீங்கள் ஆசீா்வதிக்கப்பட்டவா்கள் !!!
ஓர் குட்டிக் கதை
அன்பு
==========
ஒரு ஊரில் வியாபாரி ஒருவன் வாழ்ந்து வந்தான் அவன் ஒரு சிடுமூஞ்சி ,அடுத்தாருடன் எப்போதும் கோபமாகவே நடந்து கொள்வான் யாருக்கும் எந்த உதவியும் செய்ய மாட்டான் உதவி கேட்டு வருபவர்களுக்கு உதவாமல் அவர்களை அவமானப்படுத்தி அலட்சியமே செய்வான் ,
ஒரு நாள் வியாபாரியின் பக்கத்து வீட்டினுள் திருடன் புகுந்து விட்டான் பக்கத்துவீட்டுக் காரன் எவ்வளவோ கத்தி கூச்சல் எழுப்பியும் வியாபாரி கண்டும் காணாதவாறே இருந்து கொண்டான் அவனின் பணம் அனைத்தும் திருடன் திருடிச் சென்று விட்டான்,
அடுத்த நாள் பக்கத்து வீட்டுக்காரன் வியாபாரியிடம் வந்து நான் அவ்வளவு தூரம் உதவிக்கு கத்தியும் நீ ஏன் வரவில்லை என்று கோபத்துடன் கேட்டான் ,அதற்கு வியாபாரி உதவி செய்வதும் செய்யாமல் போவதும் அது என்னுடைய இஷ்டம் ,என்று கூறி நீ யார் என்னை கேள்வி கேட்க முதலில் நீ என் வீட்டை விட்டு வெளியே போ என்று பக்கத்துவீட்டுக்காரனிடம் வியாபாரி கடுமையாக நடந்து கொண்டான்
வியாபாரியின் நடவடிக்கைகளையெல்லாம் சில நாட்கள் கண்ணோட்டமிட்ட கொள்ளையர்கள்,வியாபாரியின் வீட்டில் கொள்ளையடித்தால் யாரும் உதவிக்கு வர மாட்டர் என்பதை அறிந்து இரவில் வியாபாரியின் வீட்டினுள் புகுந்து விட்டனர்,
கொள்ளையர்களை கண்ட வியாபாரி எவ்வளவோ கத்தியும் ,கூச்சல் எழுப்பியும் ஒருவர் கூட உதவிக்கு வரவில்லை ,திருடர்கள் வியாபாரியை கட்டிப்போட்டுவிட்டு வியாபாரி இது நாள் வரை சம்பாரித்த பணம் ,நகைகள் என அனைத்தையும் கொள்ளையடித்து சென்று விட்டனர்
அப்போது தான் வியாபாரிக்கு உரைத்தது ,செய்த தவறை என்னி வருத்தம் கொண்டான் ,அன்றிலிருந்து வியாபாரி அனைவரிடமும் அன்போடு நடந்து கொண்டான்.
என் அன்பு வாசகர்களே,
இன்றைய காலகட்டத்தில் நடைபெறும் காரியத்தை அப்படியே பிரதிபலிக்கிறது இந்த கதை. ஆம் ஒருவருக்கொருவர் உதவி செய்வது என்பதும் பக்கத்து வீட்டில் யார் வசிக்கிறார் என்றும் தெரியாமல் பல வருடங்கள் வாழ்கின்றனர்.
அடுத்த வீட்டில் வசிப்பவர்களுக்கு ஏதேனும் உதவி தேவைப்படுகிறதா?? என்பதை கூட அறிய விரும்புகிறதில்லை. அதன் விளைவு அவர்களும் அதை அறிய விரும்புகிறதில்லை.
இதே நிலை தான் சபைகளிலும், அருகில் இருந்து ஆராதிக்கும் நபர் யார்?? என்ன செய்கிறார்?? என்ன சூழ்நிலையில் இருக்கிறார்?? என்பதை அறிவதில்லை. ஏனெனில் சபை முடிந்த அடுத்த வினாடியே சபை கலைந்து சென்று விடுகிறது.
தேவனுடைய பிள்ளைகளாகிய நாம் அனைவரும் நம்மை சுற்றி இருப்பவர்களின் தேவைகளை நம்மால் இயன்ற மற்றும் சந்திக்க முற்படுவோம். ஏனெனில் இந்த ஊரடங்கு காலம் ஒருவருக்கொருவர் உதவினால் மட்டுமே தேவ அன்பை நாம் அவர்கள் இருதயத்தில் விதைக்க முடியும்.
To Get Daily Story In What's App Contact +917904957814
வேதம் சொல்கிறது,
*10 அவனவன் பெற்ற வரத்தின்படியே நீங்கள் தேவனுடைய பற்பல கிருபையுள்ள ஈவுகளைப் பகிர்ந்துகொடுக்கும் நல்ல உக்கிராணக்காரர்போல, ஒருவருக்கொருவர் உதவிசெய்யுங்கள்.*
1 பேதுரு 4:10
நமக்கு இருக்கின்ற வரத்தின் படி ஒருவருக்கொருவர் உதவி செய்வோம் தேவ அன்பை உலகெங்கும் விதைப்போம்.
நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்!
ஓர் குட்டிக் கதை
யேகோவாயீரே
==============
ஒரு நாள் குருவை பார்க்க ஒருவன் சென்று இருந்தார்....அவர் பாதம் தொட்டு கும்பிட்டுவிட்டு வணங்கி நின்றான்....
அவனை மேலும் கீழுமாக பார்த்தவர்., ஏதோ எதிர்பார்ப்புடன் வந்திருக்கிறாய் போல என்று முகத்தை பார்த்து கேட்டார்.
அவன் மௌனமாக ஆமாம்.! என தலையாட்டிவிட்டு மெல்ல ஆரம்பித்தான்.
நான் நினைப்பதெல்லாம் நடக்கவேண்டும். இதற்கு என்ன வழி..? என்று ஒரு கேள்வியை கேட்டான்.
குரு புன்முறுவலாக சிரித்துக்கொண்டே.,
அவனை அருகில் அழைத்தார். மெல்ல அவன் தலையை கோதிவிட்டு., கன்னங்களை தட்டிக்கொடுக்க.....
அவனில் முணுக்கென கண்களில் எட்டிப்பார்த்த கண்ணீரை மெதுவாக துடைத்து விட்டு.,
நீ கலங்கக்கூடாது என்று ஆறுதல் படுத்தியவர்., நான் ஒரு கதை சொல்லப் போகிறேன்., பொறுமையாக கேள் என்று மெல்ல ஆரம்பித்தார்.
ஒரு ஊர்ல ஒரு இளவரசன் இருந்தான்.
ஒரு நாள் அவன் காட்டுக்கு வேட்டையாடப் போனான். வழியில் அவன் பரிவாரங்களை விட்டு வழி தவறி போய் விட்டான்.
அவர்களை தேடித் தேடி காட்டுக்குள் ரொம்ப தூரம் போய் விட்டான். ரொம்ப களைப்பு., பசி., தாகம்., கொஞ்சம் பயம் வேறு.
சோர்ந்து போய் ஒரு மரத்தடியில் உட்கர்ந்து விட்டான். அது ஒரு கற்பக மரம். நம் மனத்தில் நினைப்பதை எல்லாம் அப்படியே நிறைவேற்றி வைக்கும் அற்புத சக்தி கொண்டது. ஆனால் அது அந்த இளவரசனுக்குத் தெரியாது.
ரொம்ப தாகமா இருக்கிறதே. கொஞ்சம் தண்ணி கிடைத்தால் நல்லா இருக்குமே என்று நினைத்தான். சற்றே திரும்பி பார்த்தால்., அந்த மரத்தடியில் ஒரு சிறு குழி., அதில் குமிழியிட்டு நல்ல தண்ணீர் பொங்கி வந்து கொண்டு இருந்தது. தாகம் தீர குடித்தான்.
சற்று நேரத்தில் பசி வந்தது. ஏதாவது சாப்பிட கிடைத்தால் நல்லா இருக்குமே என்று நினைத்தான்., அந்த மரத்தில் இருந்து சுவையான சில பழங்கள் விழுந்தன. அவனுக்கிருந்த பசியிலும்., களைப்பிலும் என்ன ஏது என்று நினைக்க நேரமில்லை. அந்த பழங்களை உண்டு பசி ஆறினான்.
பிரயாணக் களைப்பு., உண்ட மயக்கம்., தூக்கம் கண்ணை சொக்கி கொண்டு வந்தது. அடடா இப்ப பஞ்சு மெத்தையோடு ஒரு கட்டில் இருந்தால் எப்படி இருக்கும் என்று நினைத்தான்., உடனே ஒரு கட்டில் வந்தது.
ஏறி படுத்தான். காலெல்லாம் வலிக்கிறது. பிடித்து விட ஒரு அழகான இளம் பெண் இருந்தால் எப்படி இருக்கும் என்று நினைத்தான்.... டங் என்று ஒரு பெண் தோன்றி அவன் காலை மெல்ல வருடி விட்டாள்.
அசந்து தூங்கினான்.
திடீரென்று விழித்துக் கொண்டான்.
என்னடா இது., நாம நினைக்கிறது எல்லாம் நடக்கிறதே., ஒரு வேளை இது ஏதாவது பிசாசோட வேலையா இருக்குமோ... அந்த பிசாசு இங்க வந்துட்டால்..? என்று நினைத்தான். டங் என்று ஒரு பெரிய பிசாசு வந்தது. கற்பக மரம் தான் நினைப்பது எல்லாம் கொடுக்குமே.
ஐயோ., இந்த பிசாசு நம்மை கடித்து தின்று விடுமோ..? என்று நினைத்தான்., அவன் நினைத்த மாதிரியே அவனை கடித்து தின்று விட்டது.
இப்படி நினைப்பது எல்லாம் நடந்து விட்டால் நாம் பிசாசின் வாயில் தான் போய் விழுவோம் என்று சற்று நிறுத்தியவர்.....
பிறகு தொடர்ந்தார்.
நல்ல பெண் என்று தான் நினைத்து திருமணம் செய்து கொள்கிறான். இவள் தான் வேண்டும். இவள் இல்லாவிட்டால் வாழ்கையே இல்லை என்று நினைக்கிறான். திருமணம் முடிந்தவுடன்., ஐயோ., இவளுக்கா ஆசைப்பட்டேன் என்று நொந்து கொள்ளுகிறான்.
ஆசை ஆசையாக வீட்டை வாங்குகிறான்., கட்டுகிறான். அக்கம் பக்கம் தொல்லை., ஏண்டா இங்க வந்தோம் என்று ஆகி விடுகிறது.
பாராட்டி சீராட்டி வளர்த்த பிள்ளைகள் திரும்பிப் பார்க்காமல் போய் விடுகின்றன மனம் கிடந்து கவலையில் உழல்கிறது.
இப்படி வேண்டும் வேண்டும் என்று கேட்டது எல்லாம் பின்னாளில் வேண்டாம் வேண்டாம் என்று மறுதலிக்கும்படி ஆகி விடுகிறது என்று சொல்லிவிட்டு., சற்று நிறுத்தியவர்... நம் தேவனுக்குத் தெரியாதா இவர்தான் நம் பிதா.. அதாவது அப்பா ..
அவர் இருக்கும் போது நமக்கு என்ன வேண்டும் என்று அவனை பார்த்து ஒரு கேள்வியை கேட்டார். அவனுள் ஞானம் பிறந்தது.
என் அன்புக்குாியவா்களே,
தேவனுடைய பிள்ளைகளாயிருக்கிற உங்களு க்கு உங்களின் தேவைகளைச் சந்திக்கும் யேகோவாயீரே என்ற அா்த்தமுடையவராக
(God supplies,God provides) நம் அனைத்துத்தேவை களையும் சந்திக்கிறவராயிருக்கிறாா். என்பதை ஆபிரகாமுடைய வாழ்வில் காண்கிறோம்.
தேவன் ஆபிரகாமைச் சோதித்தார். எப்படியெனில், அவர் அவனை நோக்கி: ஆபிரகாமே : உன் புத்திரனும் உன் ஏகசுதனும் உன் நேசகுமாரனுமாகிய ஈசாக்கை நீ தகனபலியாகப் பலியிடு என்றாா்.
ஆபிரகாம் அதிகாலையில் எழுந்து, தன் கழுதை யின்மேல் சேணங்கட்டி, தன் வேலைக்காரரில் இரண்டுபேரையும் தன் குமாரன் ஈசாக்கையும் கூட்டிக்கொண்டு, தகனபலிக்குக் கட்டைகளையும் பிளந்துகொண்டு, தேவன் தனக்குக் குறித்த இடத்திற்குப் புறப்பட்டுப்போனான்.
ஆதியாகமம் 22:1 -3
ஆபிரகாம் தன்னுடைய பிள்ளையை தேவன் சர்வாங்க தகனபலியிடச் சொல்லும் போது அவன் மனது மிகவும் கலங்கிப் போனது ஆண்டவரின் 100 வயதில் பிள்ளை கொடுத்தாா். ஆனால் இப்போது பலியிட சொல்கிறாரே என்ற கலக்கம் அவன் மனதில் இருந்தது.
அவன் யோசித்துக்கொண்டே இருக்கும்போதே ஈசாக்கினிடத்தில் உன் சந்ததி விளங்கும். 21 :13 என்று தேவன் அவனுக்கு சொன்னது ஞாபகத்தி ற்கு வந்தது
எனவே
சந்ததி விளங்கும் என்றால் ஈசாக்கு உயிரோடு இருந்த ஆக வேண்டும் எனவே ஆண்டவர் பலியிட சொன்னாலும் அந்த சாம்பலிலிருந்து ஈசாக்கை உயிரோடு எழுப்ப வல்லவராய் இருக்கிறார் என்ற ஒரு விசுவாசம் அவனுக்குள் துளிர் விட்டது
எனவே அவன் சந்தோஷமாய் விசுவாசத்தோடு கூட போனான். இடம் வந்தவுடன் அந்த வேலைக் காரா்களைப் பார்த்து ,நானும் பிள்ளையாண்டா னும் அவ்விடம் போய்போய் தொழுது கொண்டு திரும்பி வருவோம் என்று விசுவாசத்துடன் ஆணித்தரமாய் சொன்னான்.
இதைக் குறித்து எபிரேயா்
நிருபத்தின் ஆசிாியா் இவ்விதமாய் எழுதுகிறார்.
விசுவாசத்தினாலே ஆபிரகாம் தான் சோதிக்கப் பட்டபோது, ஈசாக்கைப் பலியாக ஒப்புக் கொடுத் தான்
ஈசாக்கினிடத்தில் உன் சந்ததி விளங்கும் என்று அவனோடே சொல்லப்பட்டிருந்ததே. இப்படிப்பட்ட வாக்குத்தத்தங்களைப் பெற்றவன், மரித்தோாில் இருந்துமெழுப்பத் தேவன் வல்லவராயிருக்கிறா ரென்றெண்ணி, தனக்கு ஒரேபேறானவனையே பலியாகஒப்புக்கொடுத்தான் மரித்தோரிலிருந்து
அவனை பாவனையாகத் திரும்பவும் பெற்றுக் கொண்டான். எபி. 11:17-19
ஈசாக்கு ஆபிரகாமை நோக்கி: என் தகப்பனே இதோ நெருப்பும் கட்டையும் இருக்கிறது தகனபலிக்கு ஆட்டுக்குட்டி எங்கே என்றான்.
அதற்கு ஆபிரகாம்: என் மகனே, தேவன் தமக்குத் தகனபலிக்கான ஆட்டுக்குட்டியைப் பார்த்துக் கொள்வார் என்றான். - ஆதி. 22:7,8
உண்மையாகவே ஆட்டுக்குட்டியை கா்த்தா் ஆயத்தப்படுத்தி இருந்தாா்
இவன் வருவததற்கு முன்பாகவே ஒரு ஆட்டுக் கடாவையும் அவா் அவ்வழியே அனுப்பினார்
அது மலையோரத்தில் வந்தது மலைக்கு மேல் போக வேண்டும் என்ற உநதுதல் உண்டாகி அந்த ஆடு மலையின் மேலேமேய்ந்து கொண்டே போனது
அந்த மலையின் உச்சியில் போன போது ஒரு முள் புதரில் ஏதாவது கிடைக்கும் என்று அது உள்ளே சென்றது. அது சிக்கிக்கொண்டது
இவ்விதமாய் கர்த்தர் அந்த ஆட்டை அங்கேயே ஆபிரகாமுக்காய் அதை ஆயத்தப்படுத்தி இருக்க வைத்திருந்தார்
ஆபிரகாம் தன் மகனை பலிபீடம் கட்டி பலியிட கத்தியை எடுக்கும்போது தேவன் தடுத்தாா். . இப்போது தேவனுக்குபயந்தவன் என்பதை அறிந்து கொண்டேன். என்று தேவன் சொல்லி
ஆபிரகாமை முட்புதாில் சிக்கியிருந்த ஆட்டை ஏறிட்டுப் பாா்ககச் செய்தாா். அந்த ஆட்டை ஈசாக்குக்குப் பதிலாக பலியிட்டான்.
அந்த இடத்திற்கு யேகோவாயீரே என்று பேரிட் டான். இந்த வாா்த்தை கா்த்தருடைய பா்வதத்தில் பாா்த்துக் கொள்ளப்படும் என்றா்த்தமாகும்.
இதிலிருந்து நாம் என்னத் தொிநது கொள்கி றோம். நம் அனைத்துத் தேவைகளையும் தேவனேப் பாா்த்து ஆயத்தப்படுத்தி வைத்து உள்ளாா். எனவே நீங்கள் . மனம் கலங்காதீா்கள்.
இயேசு இவ்வாறாக சொல்கிறார்..
To get dailymeesage and prayer requests +917904957814
நீங்கள் ஜெபம்பண்ணும்போது,அஞ்ஞானிகளைப்போல வீண் வார்த்தை களை அலப்பாதேயுங்கள், அவர்கள், அதிக வசனிப்பினால் தங்கள் ஜெபம் கேட்கப்படுமென்று நினைக்கிறார்கள்.
அவர்களைப்போல நீங்கள் செய்யாதிருங்கள்,
(We are not fatherless people )
உங்கள் பிதாவை நோக்கி நீங்கள் வேண்டிக் கொள்ளுகிறதற்கு முன்னமே உங்களுக்கு இன்னது தேவை என்று அவர் அறிந்திருக்கிறார். - மத்தேயு 6:7,8
என்னத்தை உண்போம், என்னத்தைக் குடிப்போம், என்னத்தை உடுப்போம் என்று, கவலைப்படாதிருங்கள் இவைகளையெல்லாம் அஞ்ஞானிகள் நாடித் தேடுகிறார்கள்,
இவைகளெல்லாம் உங்களுக்கு வேண்டியவை கள் என்று உங்கள் பரமபிதா அறிந்திருக்கிறார்.
மத்தேயு 6:31,32
தேவன் உங்கள் தேவைகள் அனைத்தையும் சந்திக்கும் யேகோவாயீரே - வாய் இருக்கிறாா்.
நீங்கள் ஆசீா்வதிக்கப்பட்டவா்கள் !!!
Thanks for using my website. Post your comments on this