===========================
2 KINGS : 23 - 25 Bible Study in Tamil & Enlish
===========================
🌈 *Josiah remains a vivid example of a key biblical principle: Outward reform begins with inward renewal. Leaders make an impact the same way an atomic bomb does: They implode, before they explode.*
⛹️♂️ *Application* : IIKi.23: Throughout his 31 years of godly leadership, King Josiah wholeheartedly followed the Lord and devoted himself to leading the people well. His own spiritual passion soon began to influence Judah and eventually brought about public reform. *Even today, Josiah remains a vivid example of a key biblical principle: Outward reform begins with inward renewal. The leader must experience personal change before he or she can implement public change. Leaders make an impact the same way an atomic bomb does: They implode, before they explode.*
⚠️II Ki.23:7-Josiah had the courage to condemn the sodomites. He not only condemned their actions, he put them out of the kingdom. *Unnatural sex is wrong even if the church today condones it. God has said that sodomy will bring down His wrath. It has in the past, and He has not changed. We have changed, but God has not changed. Josiah was a brave man, and he got rid of the sodomites.*
📖II Ki.24:5-6- *The names of father and son are so similar; it is easy to confuse them.*
💡II Ki.24:17-19- Zedekiah was Jehoiachin’s uncle. He did not improve the line of kings. One would think that the captivity would sober him. It did not at all. *Trouble will do one of two things for an individual. It will either soften or harden him. It will either draw him to God or drive him away from God. We can never be the same after we experience trouble and suffering. The sun will soften wax, but the sun will harden clay. It is the same sun that softens one and hardens the other.*
Jaya Pradeep-Kodaikanal.
-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x
*2 இராஜாக்கள் 23 -25*
*தேவனைத்* *துக்கப்படுத்தாதிருப்போம்*..
எருசலேம், பூமி அனைத்திற்கும் மகிமையாக இருந்தது... அதிலிருந்த தேவாலயம்.. தேவன் தம்மை இந்த உலகத்திற்கு வெளிப்படுத்தும் இடமாகவும் இருந்தது.
*ஆனால் ,இப்பொழுது* ... *எருசலேம் முழுமையாகத்* *தீக்கிரையாக்கப்பட்டது*.
*யூதாவிலே,ஒரு ராஜா இல்லை*…
*இராஜாக்களின் வரலாறு.. அங்கே* *நிறைவடைந்தது*..
( 2 இரா. 25 : 9 )
யூதா மக்களுக்கு நடைபெற்ற இந்தக் காரியங்களைப் பார்க்கும்போது..
யெகோவா தேவனால்.. அவர்களைப் பாதுகாக்க முடியவில்லையோ..?
தேவன் பாபிலோனியரால் தோற்கடிக்கப்பட்டு விட்டாரோ என்றே புறஜாதியினர் நினைத்திருப்பார்கள்.
ஆனால், உண்மை அதுவல்ல. இது தேவன் தமது ஜனங்களுக்குக் கொடுத்த நியாயத்தீர்ப்பு..
யூதா ஜனங்கள், ஆபிரகாமின்
சந்ததியினர்..தேவனின் உடன்படிக்கையின்
ஜனங்கள்..
கர்த்தர்,தாவீதோடு உடன்படிக்கை செய்தார்..
( 2 சாமு. 7 : 12 -16 )
அதிலே ஒரு பகுதி நிபந்தனைக்குட்பட்டது..
அது தாவீதும், அவனுடைய சந்ததியாராகிய.. யூதாவின் ராஜாக்கள் அனைவரும்..
என்றென்றும் தேவனுக்கு உண்மையுள்ளவர்களாகவும்..
கீழ்ப்படிதலுள்ளவர்களாகவும் இருந்தால்தான்..
தாவீதின் சிங்காசனத்தில்.. அவர்களை வீற்றிருக்க தேவன் அனுமதிப்பார்.
ஆனால், யூதாவின் ராஜாக்கள் குறிப்பாக மனாசேயும்.. யோசியா ராஜாவுக்குப் பின் ஆட்சி செய்தவர்களும்.. தொடர்ந்து தேவனுக்கு எதிராக.. கலகம் செய்தார்கள்.
தேவன் பொல்லாப்பின் நடுவில் வாசம்பண்ணுபவர் அல்ல..
அதனால், அவர்களைச் சிங்காசனத்திலிருந்து அகற்றச் செய்தார்.
தமது நாமத்தினால் அழைக்கப்பட்ட.. தமது ஆலயத்தை ..அழிக்கும்படிக்கு ஒப்புக்கொடுத்தார்..
அதைவிட்டு விலகிப் போனார்..
ஆனால், தாவீதுடன் செய்த உடன்படிக்கையில்… மற்றொரு பகுதி நிபந்தனையற்றது..
“*தாவீதின் சிங்காசனம்* *என்றென்றும்* *நிலைத்திருக்கும்*..”
*தாவீதின் சந்ததியில் நித்திய* *ராஜாவாகிய மேசியா* *தோன்றுவார்*..
*அவர் ஜனங்களைப்* *பாவத்திலிருந்து விடுவிப்பார்*.
உயிர்த்தெழுந்த இயேசு.. இப்பொழுது பிதாவின் வலது பாரிசத்தில் வீற்றிருக்கிறார்..
அவரது இராஜரீக ஆட்சியில்.. எல்லாரும் மனந்திரும்பவேண்டும்..
இந்தப் பொல்லாத உலகத்தின் வழிகளை விட்டுவிட்டுப் பரிசுத்த ஆவியைப் பெற்றுக்கொள்ளவேண்டும்..
அவருக்குப் பிரியமானவர்களாக வாழவேண்டும்..
இன்று கர்த்தர் நம்மை இராஜரீக ஆசாரியக் கூட்டமாக
தெரிந்துகொண்டிருக்கிறார்..
( 1 பேதுரு 2 : 9 )
*யூதாவின் ராஜாக்களைப்போல*
*அல்லாமல்..*
*நமது நேசத் தகப்பனின்*
*உள்ளத்தைத்* *துக்கப்படுத்தாதபடி*..
*அவருக்குப் பிரியமான* *வழிகளிலே நடப்போம்*..
*அவரையே வாழ்வில் முதன்மைப்*
*படுத்துவோம்*..
*தேவனே உம்முடைய திவ்ய* *சுபாவங்களை ..உம்முடைய*
*சாயலை..எங்களுக்குத் தாரும்*..
*எங்கள் வாழ்வே நற்செய்தியாக*
*மாற எங்களுக்குத் துணை* *செய்யுமென்று ..அனுதினமும்* *நம்மைத் தாழ்த்தி.. தேவனிடம் ஜெபிப்போமா*…?
மாலா டேவிட்
-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x
2 Kings 23-25
*WHAT A GOD WE SERVE* ❗️
*God is a righteous judge* ‼️
💥 The Lord sent against him raiding bands (2 Kings 24:2)
💥 He had filled Jerusalem with innocent blood, which the Lord would not pardon (2 Kings 24:4)
💥 Because of the anger of the Lord this happened in Jerusalem and Judah, that He finally cast them out from His presence (2 Kings 24:20)
💥 Nevertheless the Lord did not turn from the fierceness of His great wrath (2 Kings 23:26)
‼️ *Repent and humble yourself before the Lord in this GRACE period . Time will come when nothing can be done* 😭
🙏 🙏 Be very careful, then, how you live—not as unwise but as wise, making the most of every opportunity, because the days are evil (Eph 5:15,16)
Usha
-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x
☀️ *அவனுடைய சிறைச்சாலை வஸ்திரங்களை மாற்றினான்* ☀️
❇️ *யூதாவின் ராஜாவாகிய யோயாக்கீனுடைய சிறையிருப்பின் முப்பத்தேழாம்; வருஷம் பன்னிரண்டாம் மாதம் இருபத்தேழாந்தேதியிலே, ஏவில்யெரொதாக் என்னும் பாபிலோன் ராஜா, தான் ராஜாவான வருஷத்திலே, யூதாவின் ராஜாவாகிய யோயாக்கீனைச் சிறைச்சாலையிலிருந்து, புறப்படப்பண்ணி, அவன் தலையை உயர்த்தி, அவனோடே அன்பாய்ப் பேசி, அவனுடைய சிங்காசனத்தைத் தன்னோடே பாபிலோனிலிருந்து ராஜாக்களின் சிங்காசனங்களுக்கு உயரமாக வைத்து, அவனுடைய சிறைச்சாலை வஸ்திரங்களை மாற்றினான்; அவன் உயிரோடிருந்த சகல நாளும் நித்தம் தனக்கு முன்பாகப் போஜனம்பண்ணும்படி செய்தான்* (2 இராஜாக்கள் 25:27-29).
⚡ இராஜாக்கள் புத்தகம் (2 இராஜாக்கள்) ஊக்கமளிக்கும் வார்த்தைகளுடன் முடிவடைகிறது, ஏனெனில் *தேவன் எப்போதும் தம்முடைய ஜனங்களுக்கு ஊக்கமளிக்கும் வார்த்தைகளை அருளவே விரும்புகிறார்.* கடிந்துகொள்ளுதல்களும் நியாயத்தீர்ப்புகளும் நிறைந்த புத்தகம் ஒரு சில நம்பிக்கையூட்டும் வார்த்தைகளுடன் முடிவடைகிறது.
⚡ யோயாக்கீன் தன் தகப்பன் செய்தபடியெல்லாம் கர்த்தரின் பார்வைக்குப் பொல்லாப்பானதைச் செய்தான். பாபிலோன் ராஜாவாகிய நேபுகாத்நேச்சார் அவனை எருசலேமிலிருந்து பாபிலோனுக்குச் சிறைபிடித்துக் கொண்டுபோனான். *“யோயாக்கீன் சந்தானமற்றவன், தன் நாட்களில் வாழ்வடையாதவன், அவன் வித்தில் ஒருவனாகிலும் வாழ்வடைந்து, தாவீதின் சிங்காசனத்தில் வீற்றிருந்து யூதாவில் அரசாளப்போகிறதில்லை”* என்று தேவன் ஏற்கனவே அறிவித்திருந்தார் (எரேமியா 22:24-30). இந்த யோயாக்கீனுக்கும் தேவனால் இரக்கம் காட்ட முடிந்ததென்றால், அவரால் நிச்சயமாக இஸ்ரவேலுக்கு இரக்கம் காட்ட முடியும்.
⚡ *ஏவில்மெரொதாக்* என்னும் பாபிலோன் ராஜா, தன் தகப்பனாகிய நேபுகாத்நேச்சாருக்குப்பின் தான் ராஜாவான வருஷத்திலே *யோயாக்கீனைச் சிறைச்சாலையிலிருந்து விடுவித்தான்*. அவனைச் சிறையில் அடைத்த நேபுகாத்நேச்சார் அவனை விடுவிக்க விரும்பவில்லை. 37 ஆண்டுகள் சிறையில் இருந்தான். அவன் எல்லா நம்பிக்கையையும் இழந்தபோது, சிறையிலிருந்து விடுவிக்கப்பட்டான்.
⚡ ஏவில்மெரொதாக் *அவன் தலையை உயர்த்தி, அவனோடே அன்பாய்ப் பேசி, அவனுடைய சிங்காசனத்தைத் தன்னோடே பாபிலோனிலிருந்து ராஜாக்களின் சிங்காசனங்களுக்கு உயரமாக வைத்தான்.* தேவன் ஏவில்மெரொதாக்கை யோயாக்கீனுக்கு நன்மை செய்யவும், தயவு காட்டவும் செய்தார்.
⚡ யோயாக்கீன் *சிறைச்சாலை வஸ்திரங்களை மாற்றினான்.* வேதத்தில், வஸ்திரங்கள் குணநலன்களைக் குறிக்கின்றன. *அழுக்கு வஸ்திரங்கள்* அக்கிரமத்தையும் தீங்கையும் குறிக்கின்றன. *வெள்ளை வஸ்திரங்கள்* நீதியைக் குறிக்கின்றன.
⚡ சகரியாவின் வார்த்தைகள்: “யோசுவாவோவெனில் *அழுக்கு வஸ்திரம்* தரித்தவனாய்த் தூதனுக்கு முன்பாக நின்றிருந்தான். அவர் தமக்கு முன்பாக நிற்கிறவர்களை நோக்கி: இவன்மேல் இருக்கிற *அழுக்கு வஸ்திரங்களைக் களைந்துபோடுங்கள்* என்றார்; பின்பு அவனை நோக்கி: பார் நான் *உன் அக்கிரமத்தை உன்னிலிருந்து நீங்கச்செய்து, உனக்குச் சிறந்த வஸ்திரங்களைத் தரிப்பித்தேன்* என்றார்." (சகரியா 3:3-4).
⚡ யோவானின் வார்த்தைகள்: “அப்பொழுது, மூப்பர்களில் ஒருவன் என்னை நோக்கி: *வெள்ளை அங்கிகளைத்* தரித்திருக்கிற இவர்கள் யார்? எங்கேயிருந்து வந்தார்கள்? என்று கேட்டான். அதற்கு நான்: ஆண்டவனே, அது உமக்கே தெரியும் என்றேன். அப்பொழுது அவன்: இவர்கள் மிகுந்த உபத்திரவத்திலிருந்து வந்தவர்கள்; இவர்கள் *தங்கள் அங்கிகளை ஆட்டுக்குட்டியானவருடைய இரத்தத்திலே தோய்த்து வெளுத்தவர்கள்."* (வெளிப்படுத்தல் 7:13-14).
⚡ சிறைச்சாலை வஸ்திரங்களை மாற்றியதன் மூலம், *யோயாக்கீனின் நிலை* சிறைக் கைதியிலிருந்து ராஜாவின் சிநேகிதனாக மாறியது. *யோயாக்கீனின் பாவங்கள் மன்னிக்கப்பட்டு* அவன் ஏற்றுக்கொள்ளப்பட்டான் என்பதை இது காட்டுகிறது.
⚡ அவன் *ராஜாவோடு சமமாக ஒரே மேஜையில் அமர்ந்து* தனது மீதியான காலம் முழுவதும் உணவு உண்டான். அவனுக்கு ஏன் இப்படிப்பட்ட உயர்வுகள் கொடுக்கப்பட்டன? நிச்சயமாக அவன் *அதற்குத் தகுதியானவன் அல்ல.* இவை அனைத்தும் *தேவனின் இரக்கத்தால்* மட்டுமே சாத்தியமானது. தேவன் ஏவில்மெரொதாக் மூலம் *யோயாக்கீனின் இருண்ட வாழ்க்கையை மலர்ந்த வாழ்க்கையாக மாற்றினார்.*
⚡ நாமும் *தகுதியற்றவர்களாக* இருந்தாலும் *தேவனிடமிருந்து *கிருபையையும் இரக்கத்தையும்* பெறுகிறோம். நாம் உண்மையுள்ளவர்களாக இல்லாவிட்டாலும், தேவன் எப்போதும் உண்மையுள்ளவர். பவுல் எழுதுகிறான்: *"நாம் உண்மை இல்லாதவர்களாக இருந்தாலும், அவர் உண்மை உள்ளவராக இருக்கிறார்; அவர் தம்மைத்தாம் மறுதலிக்கமாட்டார்.”* (2 தீமோத்தேயு 2:13).
⚡ இயேசு *பாவிகளை ஏற்றுக்கொண்டு* அவர்களுக்கு இரட்சிப்பை அருளுகிறார். *அவர் அவர்களை விடுதலையாக்குகிறார்; அவர்களுக்குத் தயவு காட்டுகிறார்; அவர்களுடைய பாவங்களை மன்னிக்கிறார்; அவர்களை என்றென்றும் இரட்சிப்பார்.* ஒரு பாவியின் இருண்ட வாழ்க்கையை மலர்ந்த வாழ்க்கையாக மாற்ற இயேசுவால் மட்டுமே முடியும்.
🔹 *நம்முடைய அழுக்கு வஸ்திரங்களுக்குப் பதிலாக வெள்ளை வஸ்திரங்களை உடுத்தி இயேசு நம்முடைய இருண்ட வாழ்க்கையை மலர்ந்த வாழ்க்கையாக மாற்றியிருக்கிறார் என்று நம்மால் சாட்சி சொல்ல முடியுமா?*
✅ நாம் கற்றுக் கொள்ளும் *பாடங்கள்*:
1️⃣ *தேவன் எப்போதும் தம்முடைய ஜனங்களுக்கு ஊக்கமளிக்கும் வார்த்தைகளை அருளவே விரும்புகிறார்.
2️⃣ *தேவன் இருண்ட வாழ்க்கையை மலர்ந்த வாழ்க்கையாக மாற்றுகிறார்.*
3️⃣ *நாம் உண்மை இல்லாதவர்களாக இருந்தாலும், அவர் எப்போதும் உண்மை உள்ளவராக இருக்கிறார்;*
4️⃣ *இயேசு பாவிகளை விடுதலையாக்குகிறார்; அவர்களுக்குத் தயவு காட்டுகிறார்; அவர்களுடைய பாவங்களை மன்னிக்கிறார்; அவர்களை என்றென்றும் இரட்சிப்பார்.*
Dr. எஸ். செல்வன். சென்னை
-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x
*கர்த்தரிடத்தில் சாய்ந்த முழு இருதயம், முழு ஆத்துமா, முழு பலம்*
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
2 இராஜாக்கள் 23: 25. யோசியா ராஜா *கர்த்தரிடத்துக்கு தன் முழு இருதயத்தோடும், தன் முழு ஆத்துமாவோடும், தன் முழு பலத்தோடும் மோசேயின் நியாயப்பிரமாணத்திற்கு ஏற்றப்படியெல்லாம் செய்ய மனதை சாய்த்தான்*.
*அவனை போலொத்த ராஜா அவனுக்கு முன் இருந்ததுமில்லை. அவனுக்கு பின் எழும்பினதுமில்லை*.
1. ஆம், *மனதை சாய்த்தான்*. எதற்கு ?
தன் முழு இருதயத்தோடும், தன் முழு ஆத்துமாவோடும், முழு பலத்தோடும் நியாயப்பிரமாணத்திற்கு *ஏற்றபடியெல்லாம் செய்ய, அப்படியானால் கீழ்ப்படிய தன் மனதை சாய்த்தான்*. அப்படியானால் இவன் கர்த்தரை எவ்வளவு நேசித்திருப்பான் என்பதை சிந்தித்து பாருங்கள்!
இன்று நம்முடைய கரத்தில் விலையேறப்பெற்ற வேதம், நாம் கீழ்ப்படிவதற்கு கர்த்தருடைய வார்த்தைகள், நீதி, நியாயங்கள் கொடுக்கப்பட்டிருக்கிறதே! இதற்கு நாம் எவ்வளவு முக்கியத்துவம் கொடுக்கிறோம்? *நம் இருதயம் எங்கு சாய்ந்திருக்கிறது? எப்படி சாய்ந்திருக்கிறது?* சிந்திப்போம்.
2. *கர்த்தர் நமக்கு கற்பித்தபடியே நாம் செய்ய வேண்டும். வலது புறம், இடது புறம் சாயாதிருப்பீர்களாக* என்றார். உபாகமம் 5: 32.
3. கர்த்தர் மேல், அவர் வார்த்தைகள் மேல் சாய வேண்டிய நாம் உலகம், மாமிசம், பிசாசின் கிரியைகளின் மேல் சாய்ந்தவர்களாக வாழ்கிறோம். அறிவு பெருத்த கடைசி காலத்தில் நாம் வாழ்கிறோம். *இணையதளம், கைப்பேசி ஆகியவற்றின் மேல் சாய்ந்து வாழ்கிறோம். நம் முழு இருதயம், முழு ஆ த்துமா, முழு பலம் மட்டும் அல்ல, அநேகருடைய முழு நேரமும் கூட* இவற்றில் மூழ்கி காணப்படுகிறோம். கர்த்தருடைய பிள்ளைகள் இவற்றிற்கு எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.
4. இன்று அநேகர், மனிதரை, நண்பர்களை, உறவினர்களை, ஆஸ்தி, ஐசுவரியம், படிப்பு, அந்தஸ்து, தாலந்துகள் ஆகியவைகள் மேல் சாய்ந்து வாழ்கிறோம். *உன் சுய புத்தியின் மேல் சாயாமல் , உன் முழு இருதயத்தோடும் கர்த்தர் மேல் நம்பிக்கையாயிரு.* நீதிமொழிகள் 3: 5.
*எகிப்தாகிய தெரிந்த நாணல் கோலின் மேல், அதாவது உலகத்தின் மேல் நம்பிக்கை வைத்தால், அது உள்ளங்கையில் பட்டு உருவி போம்*. 2 இ ராஜாக்கள் 18: 21.
5. *கடைசி காலத்தில் சத்தியத்திற்கு செவியை விலக்கி, கட்டுகதைகளுக்கு சாய்ந்து போகும் காலம் வரும்*. 2 தீமோத்தேயு 4: 4. ஆம் ,விசுவாசிகள், ஊழியக்காரர்கள் கூட நாம் எதற்கு சாய்ந்திருக்கிறோம் என்பதை ஆராய்ந்து பார்ப்போம்.
6. நாம் ஒருவரை மிகவும் நேசித்தால் தான் அவர் மேல் சாய்ந்து இருக்க முடியும். *யோவான் இயேசுவின் மார்பில் சாய்ந்து இருந்தார். ஏனென்றால் அவர் இயேசுவின் மேல் அன்பாயிருந்தார்.*
நாமும் கூட பாடுகள், போராட்டங்கள், வேதனைகள் நிறைந்த இந்த உலகத்தில் *கர்த்தர் மேல் சாய்ந்து வாழ கற்றுக் கொள்வோம். அவர் இம்மானுவேலாய், எகோவாயீரேயாய் நம்மோடு இருந்து நம்மை நடத்துவார். இளைப்பாறுதலை தருவார்.*
7 . மட்டுமல்ல, கர்த்தருடைய வார்த்தைகளிலே நாம் சாய்ந்து கொள்ள வேண்டும். *விசுவாசத்தினாலே யாக்கோபு தன் மரண காலத்தில் தன் கோலின் முனையிலே , அதாவது கர்த்தருடைய வார்த்தைகளிலே, வாக்குதத்தங்களிலே சாய்ந்து தொழுது கொண்டான்*. எபிரேயர் 11: 21. எவ்வளவு பெரிய பாக்கியம்!
ஆம், *நாமும் கூட இந்த உலக வாழ்க்கையில், மரணம் மட்டும் முழு இருதயத்தோடும், முழு ஆத்துமாவோடும், முழு பலத்தோடும் கர்த்தர் மேல், அவர் வார்த்தைகள் மேல் சாய்ந்து வாழ ஆவியானவர் தாமே நமக்கு உதவி செய்வாராக.* ஆமென். அல்லேலூயா.
*Dr.Padmini Seĺvyn*
-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x
📗 *சிறிய குறிப்பு* 📗
🍂 *யோசியா* 🍂
தற்செயலாக, *கர்த்தருடைய ஆலயத்தில் நியாயப்பிரமாண புத்தகம்* கண்டுபிடிக்கப்பட்டது. முதலில் சம்பிரதி *சாப்பான், ராஜாவுக்கு முன்பாக அதைப் படித்தான்.* யோசியா கர்த்தருடைய வார்த்தைகளைக் கேட்டவுடன் பயந்து, மனந்திரும்பினான். பிறகு யோசியா கர்த்தருடைய ஆலயத்திற்குப் போனான். *அவனோடு யூதாவிலும் எருசலேமிலும் குடியிருந்த பெரியவர்களும் சிறியவர்களும் சென்றார்கள்.* *அனைவரும்* *எல்லோரும் கேட்க* நியாயப்பிரமாண புத்தகத்தின் வார்த்தைகள் வாசிக்கப்பட்டன.
பின்னர் யோசியா கர்த்தரையும் அவருடைய கட்டளைகளையும் பின்பற்றும்படி கர்த்தருக்கு முன்பாக ஒரு உடன்படிக்கை செய்தான். *எல்லாரும்* உடன்படிக்கைக்கு சம்மதம் தெரிவித்தனர் (2 இரா 23:1-3). பின்னர் யோசியாவின் சீர்திருத்த பணிகள் தொடங்கியது. ஒன்றன் பின் ஒன்றாக *அனைத்து* விதமான உருவ வழிபாடுகளும் தேசத்திலிருந்து முற்றிலுமாக ஒழிக்கப்பட்டது.
பரிசுத்த வேதாகமம் இவ்வாறு கூறுகிறது: *கர்த்தரிடத்துக்குத் தன் முழு இருதயத்தோடும் தன் முழு ஆத்துமாவோடும் தன் முழு பலத்தோடும் மோசேயின் நியாயப்பிரமாணத்திற்கு ஏற்றபடியெல்லாம் செய்ய மனதைச் சாய்த்தான்; அவனைப் போலொத்த ராஜா அவனுக்குமுன் இருந்ததுமில்லை, அவனுக்குப்பின் எழும்பினதுமில்லை (2 இரா 23:25).*
யோசியாவின் மனந்திரும்புதல் அரை மனதுடன் இல்லை. இது *முழுமையாக* இருந்தது. யோசியா *முழுமையாக* கர்த்தரிடம் திரும்புவதில் *முன்மாதிரியாக* இருந்தான். நாம் தொடர்ந்து பரிசுத்த வேதாகமத்தை வாசிக்கிறோம். *ஆனால் வேத வசனங்கள் நம் வாழ்க்கையில் கிரியை செய்ய நாம் இடம் கொடுக்கிறோமா?*
_திருமதி ஷீலா ஜெபக்குமார்_ ✍🏼
-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x
🌾 🍞 *Give us today our Daily Bread* 🍞 🌾
*2 Kings 25:27-30 *
Here we read that when Evil-merodach (Awel-Marduk) became the king of Babylon, he released Jehoiachin king of Judah out of prison. He even spoke kindly with him. Not only that he also honoured Jehoiachin over all other kings and gave him privilege to dine with him regularly. Above all he provided his daily needs for rest of his life.
Likewise,
➡️ Our King Jesus Christ has released us from our bondages and set us free. (Ephesians 1:7)
➡️ He has given us privilege of sonship (Ephesians 1:5)
➡️ Even we are seated with Him in heavenly places (Ephesians 2:6)
➡️ He dines with us (Revelation 3:20)
➡️ He meets all Our needs (Spiritual, Physical and Material) according to the riches of His glory in Christ Jesus. (Philippians 4:19)
➡️ Above everything he has also given us the authority to trample on serpents and scorpions, and over all the power of the enemy. (Luke 10:19)
*“And his allowance, a continual one, was given him by the king, every day a portion, for the rest of his life.”* *(2 Kings 25:30 AMPC)*
Hallelujah Amen
Manna
Bahrain 🇧🇭
-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x
❤️🔥THE HEART OF WORSHIP❤️🔥*
*❤️🔥ஆராதிக்கும் இருதயம்❤️🔥*
2 இராஜாக்கள் 23
☄️யூதாவின் ராஜாவாகிய யோசியா விவிலிய வரலாற்றில் மிகவும் நீதியுள்ள மற்றும் செல்வாக்கு மிக்க மன்னர்களில் ஒருவராக நினைவுகூரப்படுகிறார். தேவனுடன் இஸ்ரவேலின் உடன்படிக்கை உறவை அவர் மீட்டமைத்தார்.
1️⃣ *நியாயப்பிரமாணத்தை மீண்டும் கண்டறிதல்*
🔹யோசியாவின் தலைமையின் கீழ், ஆலயத்தில் நியாயப்பிரமாணப் புத்தகம் (உபாகமம் புத்தகம்) மீண்டும் கண்டுபிடிக்கப்பட்டது, இது தேவனுடைய கட்டளைகளிலிருந்து தேசத்தின் விலகலை அங்கீகரித்த ராஜா மீது ஆழமான தாக்கத்தை ஏற்படுத்தியது.
🔹ஜோசியாவின் பதில், நம் வாழ்க்கையை வழிநடத்த தேவனுடைய வார்த்தையின் அடித்தளத்திற்குத் திரும்புவதன் முக்கியத்துவத்தையும், ஆவிக்குறிய வழிகேட்டைச் சரிசெய்யவும் நமக்குக் கற்பிக்கிறது.
2️⃣ *விக்கிரக ஆராதனையை நீக்குதல்*
🔸தேசம் முழுவதும் விக்கிரக ஆராதனையையும் பொய் வணக்கத்தையும் ஒழிக்க யோசியா ராஜா தீவிர பிரச்சாரத்தில் இறங்கினான்.
🔸அவர் பலிபீடங்களை இடித்தார், விக்கிரகங்களை அழித்தார், தேவனுடனான அவர்களின் உறவைத் தடுக்கும் புறமத பழக்கவழக்கங்களிலிருந்து தேசத்தை அகற்றினார்.
🔸பொருட்களாக இருந்தாலும் சரி, ஆரோக்கியமற்ற பழக்கங்களாக இருந்தாலும் சரி, அல்லது தவறான முன்னுரிமைகளாக இருந்தாலும் சரி, நம் சொந்த வாழ்க்கையில் உள்ள விக்கிரகங்களை அடையாளம் கண்டு அகற்ற வேண்டியதன் அவசியத்தை இது நமக்கு நினைவூட்டுகிறது.
3️⃣ *பஸ்கா மீட்டமைப்பு
▪️தேவனுடன் செய்த உடன்படிக்கையில் வேரூன்றிய, தேசிய அடையாள உணர்வை மீண்டும் நிலைநாட்டுவதற்காக, யூத பாரம்பரியத்தின் மைய மற்றும் முக்கிய கொண்டாட்டமான பாஸ்காவை மீண்டும் கடைப்பிடிப்பதை யோசியா மீண்டும் நிலைநாட்டினார்.
▪️நமது ஆவிக்குறியப் பாரம்பரியத்தைப் பாதுகாத்து போற்றுவதன் முக்கியத்துவத்தையும், நம்பிக்கையாளர்களை ஒரு பொதுவான நோக்கத்தில் ஒன்றிணைக்கும் சமூக வழிபாட்டின் சக்தியையும் இது நமக்குக் கற்பிக்கிறது.
4️⃣ *ஆலயத்தை சுத்திகரித்தல்*
🔺யோசியா ஆலயத்தை அனைத்து அசுத்தங்களிலிருந்தும் சுத்திகரித்து, அவர்களின் ஆராதனை உண்மையானது என்பதை உறுதிப்படுத்த, தேவனுடைய சரியான ஆராதனையை மீண்டும் நிலைநாட்டினார்.
🔺தொடர்ந்து நம்மை நாமே பரிசோதித்து, ஆவியிலும் உண்மையிலும் நம் ஆராதனையை வழங்குவதை இது நமக்கு நினைவூட்டுகிறது.
5️⃣ *தேவனுடைய வார்த்தையிலிருந்து வழிகாட்டுதலைத் தேடுதல்*
▫️நடவடிக்கை எடுப்பதற்கு முன், யோசியா தேவனுடைய தீர்க்கதரிசிகளின் வழிகாட்டுதலை நாடினார் மற்றும் தேவனுடைய சித்தத்தைப் பற்றி விசாரித்தார்.
▫️இது ராஜாவின் பணிவையும் தெய்வீக ஞானத்தின் மீது நம்பிக்கையையும் காட்டுகிறது.
▫️இது ஜெபத்தின் மூலம் தேவனுடைய வழிகாட்டுதலைத் தேடுவதன் முக்கியத்துவத்தை நமக்குக் கற்பிக்கிறது மற்றும் அவருடைய வார்த்தையைப் படிப்பதன் மூலம், அவர் நம்முடைய பாதைகளை ஒளிரச் செய்யவும், நம்முடைய செயல்களை வழிநடத்தவும் அனுமதிக்கிறது.
♥️ *வாழ்க்கை பாடங்கள்*
💥யோசியா ராஜாவின் சீர்திருத்தங்கள், ஆராதனையின் இருதயத்தை மீட்டெடுப்பதற்கும் தேவனுடனான மக்களின் நீடித்த உடன்படிக்கை உறவைப் புதுப்பிப்பதற்கும் உறுதியளித்த ஒரு தலைவரின் சக்திவாய்ந்த எடுத்துக்காட்டு.
💥யோசியாவின் சீர்திருத்தங்கள் தொடர்ச்சியான ஆவிக்குறிய புதுப்பித்தலின் அவசியத்தையும் தேவனுடைய கட்டளைகளுடன் நம் வாழ்க்கையை சீரமைப்பதன் முக்கியத்துவத்தையும் நமக்கு நினைவூட்டுகின்றன.
*‼️நாம் நீதியை பின்பற்றுவோம், நம் கர்த்தருக்கு உண்மையாக சேவை செய்வோம்‼️*
பிரின்சஸ் ஹட்சன்
தமிழாக்கம் இன்னிசை செல்வி மும்பை
-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x
2 Kings 23 - 25*
*Stage Set For The Ultimate King*
*2 Kings 25:27* -> _… in the thirty-seventh year of the captivity of *Jehoiachin king of Judah* … that Evil-Merodach king of Babylon … *released Jehoiachin king of Judah from prison*._
Because of their rebellion against God, *Israel was taken captive by Assyria* [2 Ki 17] and *Judah by Babylon* [2 Ki 25].
The *Book of Kings* however, does not end on a note of despair. In 562 BC, a king called *Evil-Merodach* freed King *Jehoiachin* from prison and set him above all the kings from other lands who were also in exile in Babylon [25:27-30; Jer 52:31-34]. *He was the ancestor of Jesus, the ultimate Son of David* [Mt 1:1, 11-12].
We see that not even the Babylonians could stop God’s purpose of bringing the *ultimate King*. Even a king named *_Evil_* could not stop it.
The first readers didn’t know how God’s purposes would work out; only the *Chronicler* [who wrote later] reports *Cyrus’s edict* to *return* and *rebuild* the temple [2 Chr 36:22-23]. Further, they didn’t know what would happen beyond that, when *Jesus* would embody the final words of the Chronicler, going up to Jerusalem Himself [2 Chr 36:23; Mt 20:17-18] in order to bring *salvation*.
This ultimate King would go to the cross and be crucified under a sign reading, *_King of the Jews_* [Mt 27:37]. And in His death Jesus was reconciling to Himself not only Jews but also all the nations who would believe.
- Cherry Cherian, Kochi, India
-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x
☀️ *அவனுடைய சிறைச்சாலை வஸ்திரங்களை மாற்றினான்* ☀️
❇️ *யூதாவின் ராஜாவாகிய யோயாக்கீனுடைய சிறையிருப்பின் முப்பத்தேழாம்; வருஷம் பன்னிரண்டாம் மாதம் இருபத்தேழாந்தேதியிலே, ஏவில்யெரொதாக் என்னும் பாபிலோன் ராஜா, தான் ராஜாவான வருஷத்திலே, யூதாவின் ராஜாவாகிய யோயாக்கீனைச் சிறைச்சாலையிலிருந்து, புறப்படப்பண்ணி, அவன் தலையை உயர்த்தி, அவனோடே அன்பாய்ப் பேசி, அவனுடைய சிங்காசனத்தைத் தன்னோடே பாபிலோனிலிருந்து ராஜாக்களின் சிங்காசனங்களுக்கு உயரமாக வைத்து, அவனுடைய சிறைச்சாலை வஸ்திரங்களை மாற்றினான்; அவன் உயிரோடிருந்த சகல நாளும் நித்தம் தனக்கு முன்பாகப் போஜனம்பண்ணும்படி செய்தான்* (2 இராஜாக்கள் 25:27-29).
⚡ இராஜாக்கள் புத்தகம் (2 இராஜாக்கள்) ஊக்கமளிக்கும் வார்த்தைகளுடன் முடிவடைகிறது, ஏனெனில் *தேவன் எப்போதும் தம்முடைய ஜனங்களுக்கு ஊக்கமளிக்கும் வார்த்தைகளை அருளவே விரும்புகிறார்.* கடிந்துகொள்ளுதல்களும் நியாயத்தீர்ப்புகளும் நிறைந்த புத்தகம் ஒரு சில நம்பிக்கையூட்டும் வார்த்தைகளுடன் முடிவடைகிறது.
⚡ யோயாக்கீன் தன் தகப்பன் செய்தபடியெல்லாம் கர்த்தரின் பார்வைக்குப் பொல்லாப்பானதைச் செய்தான். பாபிலோன் ராஜாவாகிய நேபுகாத்நேச்சார் அவனை எருசலேமிலிருந்து பாபிலோனுக்குச் சிறைபிடித்துக் கொண்டுபோனான். *“யோயாக்கீன் சந்தானமற்றவன், தன் நாட்களில் வாழ்வடையாதவன், அவன் வித்தில் ஒருவனாகிலும் வாழ்வடைந்து, தாவீதின் சிங்காசனத்தில் வீற்றிருந்து யூதாவில் அரசாளப்போகிறதில்லை”* என்று தேவன் ஏற்கனவே அறிவித்திருந்தார் (எரேமியா 22:24-30). இந்த யோயாக்கீனுக்கும் தேவனால் இரக்கம் காட்ட முடிந்ததென்றால், அவரால் நிச்சயமாக இஸ்ரவேலுக்கு இரக்கம் காட்ட முடியும்.
⚡ *ஏவில்மெரொதாக்* என்னும் பாபிலோன் ராஜா, தன் தகப்பனாகிய நேபுகாத்நேச்சாருக்குப்பின் தான் ராஜாவான வருஷத்திலே *யோயாக்கீனைச் சிறைச்சாலையிலிருந்து விடுவித்தான்*. அவனைச் சிறையில் அடைத்த நேபுகாத்நேச்சார் அவனை விடுவிக்க விரும்பவில்லை. 37 ஆண்டுகள் சிறையில் இருந்தான். அவன் எல்லா நம்பிக்கையையும் இழந்தபோது, சிறையிலிருந்து விடுவிக்கப்பட்டான்.
⚡ ஏவில்மெரொதாக் *அவன் தலையை உயர்த்தி, அவனோடே அன்பாய்ப் பேசி, அவனுடைய சிங்காசனத்தைத் தன்னோடே பாபிலோனிலிருந்து ராஜாக்களின் சிங்காசனங்களுக்கு உயரமாக வைத்தான்.* தேவன் ஏவில்மெரொதாக்கை யோயாக்கீனுக்கு நன்மை செய்யவும், தயவு காட்டவும் செய்தார்.
⚡ யோயாக்கீன் *சிறைச்சாலை வஸ்திரங்களை மாற்றினான்.* வேதத்தில், வஸ்திரங்கள் குணநலன்களைக் குறிக்கின்றன. *அழுக்கு வஸ்திரங்கள்* அக்கிரமத்தையும் தீங்கையும் குறிக்கின்றன. *வெள்ளை வஸ்திரங்கள்* நீதியைக் குறிக்கின்றன.
⚡ சகரியாவின் வார்த்தைகள்: “யோசுவாவோவெனில் *அழுக்கு வஸ்திரம்* தரித்தவனாய்த் தூதனுக்கு முன்பாக நின்றிருந்தான். அவர் தமக்கு முன்பாக நிற்கிறவர்களை நோக்கி: இவன்மேல் இருக்கிற *அழுக்கு வஸ்திரங்களைக் களைந்துபோடுங்கள்* என்றார்; பின்பு அவனை நோக்கி: பார் நான் *உன் அக்கிரமத்தை உன்னிலிருந்து நீங்கச்செய்து, உனக்குச் சிறந்த வஸ்திரங்களைத் தரிப்பித்தேன்* என்றார்." (சகரியா 3:3-4).
⚡ யோவானின் வார்த்தைகள்: “அப்பொழுது, மூப்பர்களில் ஒருவன் என்னை நோக்கி: *வெள்ளை அங்கிகளைத்* தரித்திருக்கிற இவர்கள் யார்? எங்கேயிருந்து வந்தார்கள்? என்று கேட்டான். அதற்கு நான்: ஆண்டவனே, அது உமக்கே தெரியும் என்றேன். அப்பொழுது அவன்: இவர்கள் மிகுந்த உபத்திரவத்திலிருந்து வந்தவர்கள்; இவர்கள் *தங்கள் அங்கிகளை ஆட்டுக்குட்டியானவருடைய இரத்தத்திலே தோய்த்து வெளுத்தவர்கள்."* (வெளிப்படுத்தல் 7:13-14).
⚡ சிறைச்சாலை வஸ்திரங்களை மாற்றியதன் மூலம், *யோயாக்கீனின் நிலை* சிறைக் கைதியிலிருந்து ராஜாவின் சிநேகிதனாக மாறியது. *யோயாக்கீனின் பாவங்கள் மன்னிக்கப்பட்டு* அவன் ஏற்றுக்கொள்ளப்பட்டான் என்பதை இது காட்டுகிறது.
⚡ அவன் *ராஜாவோடு சமமாக ஒரே மேஜையில் அமர்ந்து* தனது மீதியான காலம் முழுவதும் உணவு உண்டான். அவனுக்கு ஏன் இப்படிப்பட்ட உயர்வுகள் கொடுக்கப்பட்டன? நிச்சயமாக அவன் *அதற்குத் தகுதியானவன் அல்ல.* இவை அனைத்தும் *தேவனின் இரக்கத்தால்* மட்டுமே சாத்தியமானது. தேவன் ஏவில்மெரொதாக் மூலம் *யோயாக்கீனின் இருண்ட வாழ்க்கையை மலர்ந்த வாழ்க்கையாக மாற்றினார்.*
⚡ நாமும் *தகுதியற்றவர்களாக* இருந்தாலும் *தேவனிடமிருந்து *கிருபையையும் இரக்கத்தையும்* பெறுகிறோம். நாம் உண்மையுள்ளவர்களாக இல்லாவிட்டாலும், தேவன் எப்போதும் உண்மையுள்ளவர். பவுல் எழுதுகிறான்: *"நாம் உண்மை இல்லாதவர்களாக இருந்தாலும், அவர் உண்மை உள்ளவராக இருக்கிறார்; அவர் தம்மைத்தாம் மறுதலிக்கமாட்டார்.”* (2 தீமோத்தேயு 2:13).
⚡ இயேசு *பாவிகளை ஏற்றுக்கொண்டு* அவர்களுக்கு இரட்சிப்பை அருளுகிறார். *அவர் அவர்களை விடுதலையாக்குகிறார்; அவர்களுக்குத் தயவு காட்டுகிறார்; அவர்களுடைய பாவங்களை மன்னிக்கிறார்; அவர்களை என்றென்றும் இரட்சிப்பார்.* ஒரு பாவியின் இருண்ட வாழ்க்கையை மலர்ந்த வாழ்க்கையாக மாற்ற இயேசுவால் மட்டுமே முடியும்.
🔹 *நம்முடைய அழுக்கு வஸ்திரங்களுக்குப் பதிலாக வெள்ளை வஸ்திரங்களை உடுத்தி இயேசு நம்முடைய இருண்ட வாழ்க்கையை மலர்ந்த வாழ்க்கையாக மாற்றியிருக்கிறார் என்று நம்மால் சாட்சி சொல்ல முடியுமா?*
✅ நாம் கற்றுக் கொள்ளும் *பாடங்கள்*:
1️⃣ *தேவன் எப்போதும் தம்முடைய ஜனங்களுக்கு ஊக்கமளிக்கும் வார்த்தைகளை அருளவே விரும்புகிறார்.
2️⃣ *தேவன் இருண்ட வாழ்க்கையை மலர்ந்த வாழ்க்கையாக மாற்றுகிறார்.*
3️⃣ *நாம் உண்மை இல்லாதவர்களாக இருந்தாலும், அவர் எப்போதும் உண்மை உள்ளவராக இருக்கிறார்;*
4️⃣ *இயேசு பாவிகளை விடுதலையாக்குகிறார்; அவர்களுக்குத் தயவு காட்டுகிறார்; அவர்களுடைய பாவங்களை மன்னிக்கிறார்; அவர்களை என்றென்றும் இரட்சிப்பார்.*
Dr. எஸ். செல்வன்.சென்னை
-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x
*2 இராஜாக்கள் 23 - 25*
*யூதாவின் ராஜாவாகிய யோயாக்கீனுடைய சிறையிருப்பின் முப்பத்தேழாம் வருஷம் பன்னிரெண்டாம் மாதம் இருபத்தேழாந்தேதியிலே , ஏவில் மெரொதாத் என்னும் பாபிலோன் ராஜா , தான் ராஜாவான வருஷத்திலே , யூதாவின் ராஜாவாகிய யோயாக்கீனைச் சிறைச்சாலையிலிருந்து புறப்படப்பண்ணி , அவன் தலையை உயர்த்தி , ........ அவன் உயிரோடிருந்த சகல நாளும் , நித்தம் தனக்கு முன்பாகப் போஜனம்பண்ணும்படி செய்தான். அவன் உயிரோடிருந்த நாளெல்லாம் அவனுடைய செலவுக்காக , ராஜாவின் கட்டளையான அநுதினசட்டத்தின்படி , அநுதினமும் கொடுக்கப்பட்டு வந்தது. 2 இரா 25 : 27 - 30*
யூதாவின் ராஜாவாகிய யோயாக்கீமுக்குப் பின்பு , அவருடைய குமாரனாகிய யோயாக்கீன் யூதா தேசத்தின் ராஜாவானார் ; மூன்று மாதமே அரசாண்ட இவர் , நேபுகாத்நேச்சாரின் சேவகரால் சிறைபிடித்துக் கொண்டு செல்லப்பட்டார் ; இவரோடு அவர் தாயையும் , அவரது ஸ்திரீகளையும் , அவரது பிரதானிகளையும் , தேசத்து பராக்கிரமசாலிகளையும் எருசலேமிலிருந்து , பாபிலோனுக்குச் சிறைபிடித்துக்கொண்டு சென்றார்கள்.
அங்கே பாபிலோனில் யோயாக்கீன் என்ற யூதாவின் ராஜா , தனது 55 வது வயதுவரையிலும் , சுமார் 37 வருஷங்களாக சிறையிருப்பில் இருந்தார்.
அதன்பின்பு ஏவில் மெரொதாத் என்னும் பாபிலோன் ராஜாவின் காலத்தில் , இவர் சிறையிருப்பிலிருந்து விடுதலையாக்கப்பட்டு , நித்தமும் பாபிலோன் ராஜாவுக்கு முன்பாக போஜனம் செய்யும்படிக்கு , அவருக்கு சிலாக்கியம் கிடைத்தது ; அதன்பின்பு அவருக்கு பிறந்த குமாரன் தான் சலாத்தியேல் என்பவர் ஆவார் ; அவர் வழியில் வந்தவர்தான் , நமதாண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் வளர்ப்புத் தந்தை யோசேப்பு. ( மத் 1 : 12 )
பிரியமானவர்களே , எத்தனை சக்திகள் இயேசு கிறிஸ்து , யூதாவின் சந்ததியில் தோன்றக்கூடாதபடிக்குத் தடை செய்தாலும் , சதித்திட்டம் தீட்டினாலும் , அத்தனையையும் முறியடிக்க , நம்முடைய ஆண்டவராகியக் கர்த்தராலே ஆகும் ; கர்த்தர் கொடுத்த வாக்குறுதிகள் நிறைவேறவில்லையே ; வயதாகிக்கொண்டே போகிறதே , என்ன செய்வது ? என்று கலங்குகிறீர்களா ? ஏற்ற காலத்தில் கர்த்தர் அதைச் செய்து முடிப்பார் பிரியமானவர்ளே. *தேவனால் ஆகாதக்காரியம் ஒன்று உண்டோ ?* *நிச்சயமாகவே முடிவு உண்டு ; உன் நம்பிக்கை வீண் போகாது . நீதி 23 : 18.* என்று வேதவசனமும் நம்மை உற்சாகப்படுத்துகிறதன்றோ ?
*ஆமென் ! அல்லேலூயா ! !*
Rajam Theogaraj , Palayamkottai .
-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x
BRB (2 இராஜாக்கள் 24)
*இரண்டாம் இராஜாக்களின் புத்தகம் எலியா பரலோகத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டதுடன் தொடங்கி, யூதாவின் மக்கள் பாபிலோனுக்கு அழைத்துச் செல்லப்பட்டதுடன் முடிவடைகிறது. என்ன ஒரு மாறுபாடு!*
அத்தியாயம் 24 இல், புதிய உலக வல்லரசாக மாறிய பாபிலோனால் அசீரியா தோற்கடிக்கப்பட்டது என்று வாசிக்கிறோம். பாபிலோன் இப்போது யூதாவுக்கு எதிராக வந்து எருசலேமை அழித்தது.
மனாசேயின் ஆட்சியின் ஆரம்ப நாட்களில் ஏசாயா தீர்க்கதரிசனம் கூறியதாகவும், யூதாவைக் கடுமையாகக் கண்டனம் செய்ததற்காக அவர் துன்புறுத்தப்பட்டதாகவும், அவர் ஒரு வெற்றுக் மரத்தடிக்குள் சென்று ஒளிந்துக்கொண்டதாகவும் பாரம்பரியம் நமக்குச் சொல்கிறது.
அவர் கண்டுபிடிக்கப்பட்டார்; மனாசே ஏசாயாவின் உடலுடன் சேர்த்து மரத்தடியை இரண்டாக அறுத்தான். எபிரெயர் 11:37ல் மக்கள் "இரண்டாக அறுக்கப்பட்டதைப்" பற்றி நாம் வாசிக்கிறோம்.
இராஜாக்களின் இரண்டாம் புத்தகம், எலியாவை பரலோகத்திற்கு அழைத்துச் செல்வதில் தொடங்கி, யூதாவின் மக்கள் பாபிலோனுக்கு அழைத்துச் செல்லப்படுவதுடன் முடிவடைகிறது. என்ன ஒரு மாறுபாடு!
நாமும் பரலோகத்திற்குச் செல்வதையோ அல்லது பாபிலோனுக்குச் செல்வதையோ தேர்ந்தெடுக்கலாம், இவை அனைத்தும் நாம் யாரைப் பிரியப்படுத்த விரும்புகிறோம் என்பதைப் பொறுத்தது. 2 ராஜாக்களிடமிருந்து நாம் கற்றுக்கொள்ளக்கூடிய சில பாடங்கள் இவை.
ராம்பாபு
தமிழாக்கம் இன்னிசை செல்வி மும்பை
-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x
*ஷாலோம்*🙏
ஆசீர்வதிக்கப்பட்ட மக்களுக்கு ஆசீர்வாதமாக இருப்பதற்காக ஆசீர்வதிக்கப்பட்டேன் 👨👨👧👦
🙋♂️🙋♀️ படித்து தியானம் செய்யலாம்
*2 ராஜாக்கள் 23:25*
*RESPONSIVE EAR AND TEACHABLE HEART*
*பதிலளிக்கக்தக்க செவியும் கற்பிக்கத்தக்க இருதயமும்*
🙋♂️ இளம் வயதிலிருந்தே யோசியா விரும்பத்தக்க பண்புகளான *பதிலளிக்கக்தக்க செவியையும் கற்பிக்கத்தக்க இருதயத்தையும்* வளர்த்துக் கொண்டார்.
📍 மேற்கூறிய குணாதிசயங்கள் யோசியாவை ஒரு சிறந்த ராஜாவாக மாற்றியது. இன்றைய வாசகம் கூறுகிறது, *"கர்த்தரிடத்துக்குத் தன் முழு இருதயத்தோடும் தன் முழு ஆத்துமாவோடும் தன் முழு பலத்தோடும் மோசேயின் நியாயப்பிரமாணத்திற்கு ஏற்றபடியெல்லாம் செய்ய மனதைச் சாய்த்தான். அவனைப் போலொத்த ராஜா அவனுக்கு முன் இருந்ததுமில்லை, அவனுக்குப் பின் எழும்பினதுமில்லை.*" ( 2 இராஜாக்கள் 23:25 )
🙋♂️ *26 வயதில்* யோசியா கர்த்தருடைய ஆலயத்தைப் பழுதுபார்ப்பதற்கு ஒரு தூதுக்குழுவை அனுப்பினார், மேலும் அனைத்துத் தேவைகளையும் உதவிகளையும் செய்திருந்தார் (2 ராஜாக்கள் 22:3-7)
🙋♂️ கர்த்தருடைய ஆலயத்தைப் பழுதுபார்க்கும் வேலை நடந்துகொண்டிருந்தபோது, நியாயப்பிரமாணப் புஸ்தகம் கண்டுபிடிக்கப்பட்டு, அது யோசியா ராஜாவிடம் கொண்டுவரப்பட்டது.
📍 *யோசியா அதின் வார்த்தைகளைக் கேட்டு வருத்தத்தினாலும் மனந்திரும்புதலினாலும் பதிலளித்தார்*.
📍 *யோசியா தீர்க்கதரிசியானவளாகிய உல்தாளிடம் ஒரு குழுவை அனுப்பி தெளிவுபடுத்தினார்*
📍 *யோசியா அதைப் படித்து, அதைப் பின்பற்ற முடிவு செய்தார்*.
🙋♂️ *யோசியா பிரசங்கித்ததை நடைமுறைப்படுத்தினார்*
🔖 அவருடைய இருதயம் தேவனுடைய வார்த்தைக்கு *இளகியது* (2இராஜாக்கள் 22:19)
🔖 பின்பற்ற வேண்டிய உடன்படிக்கையை *புதுப்பித்தார்*.( 2இராஜாக்கள் 23:3 )
🔖 அவர் தனது முன்மாதிரியைப் பின்பற்ற மக்களைத் தூண்ட முடிந்தது (2 இராஜாக்கள் 23: 3b )
🔖 அவர் விக்கிரக வழிபாட்டை *அகற்றினார்*
🔖 அவர் *ஆலய ஆராதனையை* மீட்டெடுத்தார்
🔖 அவர் பஸ்கா ஆசரிப்பை *மீட்டெடுத்தார்*
💕 அன்பான திருச்சபையே, நாம் யோசியாவிடமிருந்து கற்றுக்கொள்வோம்:
🎈 அவர் தனது தந்தை, தாத்தா மற்றும் இஸ்ரவேல் / யூதாவின் மற்ற ராஜாக்களின் முன்மாதிரியைப் பின்பற்றவில்லை. *" தீமை செய்ய திரளான பேர்களைப் பின்பற்றாதிருக்கும் ஒருவராக இருந்தார். "* (யாத்திராகமம் 23:2)
🎈 கர்த்தரை முதலிடத்தில் வைக்க வேண்டும்.
🎈 அவருடைய வார்த்தையை தியானிக்க நமது நேரத்தை ஒதுக்க வேண்டும்.
🎈 கர்த்தருடைய வார்த்தைக்கு இசைவாக மற்றவர்களை உற்சாகப்படுத்தவும் ஊக்குவிக்கவும் வேண்டும்.
தேவனுக்கே மகிமை 🙏
✍🏽 *மார்க் போஜே*
அருணாச்சல பிரதேசம், இந்தியா 🇮🇳
தமிழாக்கம் ஜஸ்டஸ் ராஜேந்திரன்
-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x
கர்த்தரிடத்தில் சாய்ந்த முழு இருதயம், முழு ஆத்துமா, முழு பலம்*
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
2 இராஜாக்கள் 23: 25. யோசியா ராஜா *கர்த்தரிடத்துக்கு தன் முழு இருதயத்தோடும், தன் முழு ஆத்துமாவோடும், தன் முழு பலத்தோடும் மோசேயின் நியாயப்பிரமாணத்திற்கு ஏற்றப்படியெல்லாம் செய்ய மனதை சாய்த்தான்*.
*அவனை போலொத்த ராஜா அவனுக்கு முன் இருந்ததுமில்லை. அவனுக்கு பின் எழும்பினதுமில்லை*.
1. ஆம், *மனதை சாய்த்தான்*. எதற்கு ?
தன் முழு இருதயத்தோடும், தன் முழு ஆத்துமாவோடும், முழு பலத்தோடும் நியாயப்பிரமாணத்திற்கு *ஏற்றபடியெல்லாம் செய்ய, அப்படியானால் கீழ்ப்படிய தன் மனதை சாய்த்தான்*. அப்படியானால் இவன் கர்த்தரை எவ்வளவு நேசித்திருப்பான் என்பதை சிந்தித்து பாருங்கள்!
இன்று நம்முடைய கரத்தில் விலையேறப்பெற்ற வேதம், நாம் கீழ்ப்படிவதற்கு கர்த்தருடைய வார்த்தைகள், நீதி, நியாயங்கள் கொடுக்கப்பட்டிருக்கிறதே! இதற்கு நாம் எவ்வளவு முக்கியத்துவம் கொடுக்கிறோம்? *நம் இருதயம் எங்கு சாய்ந்திருக்கிறது? எப்படி சாய்ந்திருக்கிறது?* சிந்திப்போம்.
2. *கர்த்தர் நமக்கு கற்பித்தபடியே நாம் செய்ய வேண்டும். வலது புறம், இடது புறம் சாயாதிருப்பீர்களாக* என்றார். உபாகமம் 5: 32.
3. கர்த்தர் மேல், அவர் வார்த்தைகள் மேல் சாய வேண்டிய நாம் உலகம், மாமிசம், பிசாசின் கிரியைகளின் மேல் சாய்ந்தவர்களாக வாழ்கிறோம். அறிவு பெருத்த கடைசி காலத்தில் நாம் வாழ்கிறோம். *இணையதளம், கைப்பேசி ஆகியவற்றின் மேல் சாய்ந்து வாழ்கிறோம். நம் முழு இருதயம், முழு ஆ த்துமா, முழு பலம் மட்டும் அல்ல, அநேகருடைய முழு நேரமும் கூட* இவற்றில் மூழ்கி காணப்படுகிறோம். கர்த்தருடைய பிள்ளைகள் இவற்றிற்கு எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.
4. இன்று அநேகர், மனிதரை, நண்பர்களை, உறவினர்களை, ஆஸ்தி, ஐசுவரியம், படிப்பு, அந்தஸ்து, தாலந்துகள் ஆகியவைகள் மேல் சாய்ந்து வாழ்கிறோம். *உன் சுய புத்தியின் மேல் சாயாமல் , உன் முழு இருதயத்தோடும் கர்த்தர் மேல் நம்பிக்கையாயிரு.* நீதிமொழிகள் 3: 5.
*எகிப்தாகிய தெரிந்த நாணல் கோலின் மேல், அதாவது உலகத்தின் மேல் நம்பிக்கை வைத்தால், அது உள்ளங்கையில் பட்டு உருவி போம்*. 2 இ ராஜாக்கள் 18: 21.
5. *கடைசி காலத்தில் சத்தியத்திற்கு செவியை விலக்கி, கட்டுகதைகளுக்கு சாய்ந்து போகும் காலம் வரும்*. 2 தீமோத்தேயு 4: 4. ஆம் ,விசுவாசிகள், ஊழியக்காரர்கள் கூட நாம் எதற்கு சாய்ந்திருக்கிறோம் என்பதை ஆராய்ந்து பார்ப்போம்.
6. நாம் ஒருவரை மிகவும் நேசித்தால் தான் அவர் மேல் சாய்ந்து இருக்க முடியும். *யோவான் இயேசுவின் மார்பில் சாய்ந்து இருந்தார். ஏனென்றால் அவர் இயேசுவின் மேல் அன்பாயிருந்தார்.*
நாமும் கூட பாடுகள், போராட்டங்கள், வேதனைகள் நிறைந்த இந்த உலகத்தில் *கர்த்தர் மேல் சாய்ந்து வாழ கற்றுக் கொள்வோம். அவர் இம்மானுவேலாய், எகோவாயீரேயாய் நம்மோடு இருந்து நம்மை நடத்துவார். இளைப்பாறுதலை தருவார்.*
7 . மட்டுமல்ல, கர்த்தருடைய வார்த்தைகளிலே நாம் சாய்ந்து கொள்ள வேண்டும். *விசுவாசத்தினாலே யாக்கோபு தன் மரண காலத்தில் தன் கோலின் முனையிலே , அதாவது கர்த்தருடைய வார்த்தைகளிலே, வாக்குதத்தங்களிலே சாய்ந்து தொழுது கொண்டான்*. எபிரேயர் 11: 21. எவ்வளவு பெரிய பாக்கியம்!
ஆம், *நாமும் கூட இந்த உலக வாழ்க்கையில், மரணம் மட்டும் முழு இருதயத்தோடும், முழு ஆத்துமாவோடும், முழு பலத்தோடும் கர்த்தர் மேல், அவர் வார்த்தைகள் மேல் சாய்ந்து வாழ ஆவியானவர் தாமே நமக்கு உதவி செய்வாராக.* ஆமென். அல்லேலூயா.
*Dr.Padmini Seĺvyn*
-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x
Mrs.Merin Gnanaraj
Covai
🎯தலைப்பு: கர்த்தருடைய கோபம்
2 இராஜா 24, 25.
🎯இன்றைய வசனம்:
🔸எருசலேமையும் யூதாவையும் கர்த்தர் தம்முடைய சமூகத்தை விட்டு அகற்றி தீருமளவும், அவைகளின் மேலுள்ள அவருடைய கோபத்தினால் இப்படி நடந்தது.
2 இராஜா 24:20.
🎯தியானம்:
♦️கர்த்தருடைய கோபம்
🔸யூதாவின் மேல் கருணையாயிருந்த தேவன் அதை அழிக்க தீர்மானித்தார்
🔸.ஆனால் யோசியாவின் நல்லாட்சி அந்த அழிவை தள்ளி போட்டது.
🔸மக்களோ மனந்திரும்பவில்லை.
🔸அதன் பின் வந்த ராஜாக்களாகிய யோவாசும் யோயாக்கீமும் பொல்லாத வழிகளையே தெரிந்துகொண்டனர்.
🔸மேலும் மனாசேயின் பாவங்களுக்கும் (2 இராஜா 23:26, 27,24:3) தண்டனையாக, யூதாவை தமது சமூகத்தைவிட்டு அகற்றும் படி கட்டளையிட்டார்.
👉இவ்வாறு
🔸கர்த்தர் தாம் தெரிந்துகொண்ட எருசலேமையும் யூதாவையும் வெறுத்தார்.
🔸எருசலேமையும் யூதாவையும் தம்முடைய சமூகத்தைவிட்டு அகற்றி தீருமளவும் கோபமாயிருந்தார்.
🎯சிந்தனைக்கு,
🔸நம்மை நேசித்த ஒருவர் நம்மேல் கோபமாய் மாறுவது என்பது எப்பப்பட்டது என்பதை நம் வாழ்கையில் அனுபவித்திருப்போம்.
🔸ஆனால் தேவ கோபம் நம்மேல் வந்தால்,
🔸நம்மை வெறுத்தால்
🔸 தம் சமூகத்தை விட்டு வெறுத்தால்
📍 நினைக்கவே பயமாக உள்ளதல்லவா.
🔸எனவே நாமும்
🔸அடிக்கடி கடித்து கொள்ளப்பட்டும்
நம் பிடரியை கடினப்படுத்தாதபடி
🩸தேவனுடைய கட்டளைகளுக்கு கீழ்படிந்து நடப்போம்
🩸அவர் அன்பிற்கு பாத்திரவான்களாயிருப்போம்.🙏
ஆமென்🙏
-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x
*_விக்கிரக வழிபாடு செய்கிறவர்களின் மேல் தேவ கோபம் வருகிறது_*
*_2 இராஜாக்கள் : 24_*
❇️ _*மனாசே ராஜா* *எருசலேமில்* குற்றமற்ற இரத்தத்தைச் சிந்தினார், *கர்த்தர்* மன்னிக்க சித்தமில்லாதிருந்தார். (v4)_
❇️ _*மனாசே* தன் தந்தையான *எசேக்கியா ராஜா* கர்த்தருடைய பார்வையில் செம்மையான செயல்கள் செய்வதைப் பார்த்து பலன் பெற்றிருந்தாலும், அவன் *வேண்டுமென்று செய்த தீய செயல்களால்* கர்த்தர் மன்னிக்க சித்தமில்லாதிருந்தார்._
❇️ _*விக்கிரக வழிபாடும், குற்றமற்ற இரத்தம் சிந்துதலும்* *யூதா & மனாசே* க்கு *இரட்டைவேடம்* என்று நிரூபிக்கப்பட்டது_
❇️ _*மனாசே* மற்றும் *சாத்தானின்* தீய உருவகப்படுத்தப்பட்ட ஒப்புமை கீழே கொடுக்கப்பட்டுள்ளது._
❇️ _*சாத்தான்* *இயேசு கிறிஸ்துவின்* குற்றமற்ற இரத்தத்தை சிந்தச் செய்தான், மேலும் *மனாசே எருசலேமில்* குற்றமற்ற இரத்தத்தைத் சிந்தச் செய்தான்.*_
❇️ _*சாத்தான்* மற்றும் *மனாசே* ஆகிய இருவருமே மக்களைக் கர்த்தரின் பார்வைக்கு *பொல்லாப்பானதை* செய்யும்படி செய்தார்கள் (2 இரா. 21:16)_
❇️ _*சாத்தான், மனாசே* இருவரும் *யூதாவை* *விக்கிரக வழிபாட்டிற்கு* வழிநடத்தினர் (2 இராஜா.21:10)_
❇️ _தேவனின் இரண்டு முக்கியமான குணங்கள் *அன்பு* மற்றும் *நீதி*. அவர் பாவிகளை மன்னிக்க முடியும், ஏனெனில் அவர் *அன்பால் உருவகப்படுத்தப்பட்டவர்* மற்றும் அவர் *நீதியின் தேவன்*_ _என்பதால் பாவிகளின் மீது தீர்ப்பை அறிவிக்கிறார்._
❇️ _தேவனின் *அன்பு மற்றும் நீதி* இரண்டும் நம்மை கையாள்வதில் (இணைந்து) செயல்படுகின்றன. *மனந்திரும்பாமல்* *வேண்டுமென்றே* பாவம் செய்யும் போது, கர்த்தர் தம்முடைய *அன்பினால்* *நியாயத்தை* விலையாகக் கொடுத்து மன்னிப்பார் என்று எதிர்பார்க்க முடியாது. *தேவன்* தன் *அன்பை* செலுத்தும் போது, அவருடைய *நியாயத்தையும்* நிலைநாட்ட வேண்டும்._
❇️ _குற்றமற்ற இரத்தத்தை வேண்டுமென்றே சிந்துவது *நீதியின்* அதீத மீறலாகும், *யூதா* மக்களை *விக்கிரக ஆராதனைக்கு* இட்டுச் செல்வது, *கர்த்தர்* மன்னிப்பதைக் கடினமாக்கியது, எனவே அவர் *யூதா* மீது தீர்ப்பை அறிவித்தார்._
❇️ _*ஒரு தேசம் அதன் தலைவரைப் போல மட்டுமே சிறப்பாக இருக்க முடியும்.* ஒரு தலைவர் விக்கிரக வழிபாட்டை ஊக்குவிக்கும் போது அவர் யூதாவின் விஷயத்தில் காணப்படுவது போல் தனது நாட்டின் மீது கர்த்தரின் கோபத்தைக் கொண்டுவருகிறார். எனவே, கர்த்தர் வெறுக்கும் *குற்றமற்ற இரத்தம் சிந்துதல்* மற்றும் *விக்கிரக ஆராதனை* போன்ற பாவங்களுக்கு நேராக மக்களை வழிநடத்தி செல்லாத, நம் நாடுகளில் உள்ள தேவ பயமுள்ள தலைவர்களுக்காக நாம் ஜெபிக்க வேண்டும்._
✅ கற்றறிந்த நுண்ணறிவு:
▪️ _நமது தேவன் அன்பும் நீதியும் உடைய தேவன்_
▪️ _விக்கிரக வழிபாடும், குற்றமற்ற இரத்தம் சிந்துவதையும் தேவன் வெறுக்கிறார்_
தமிழாக்கம் ஜஸ்டஸ் ராஜேந்திரன்
-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x
*🪔சிப்பிக்குள் முத்து🪔*
*2 இராஜா : 23 - 25*
*🔥முத்துச்சிதறல் : 118*
✍️யூதாவின் இராஜாவாகிய யோயாக்கீனுடைய *சிறையிருப்பின் முப்பதேழாம் வருஷம், பன்னிரெண்டாம் மாதம் இருபத்தேழாந்தேதியிலே......*
(2 இராஜா - 25 : 27)
💠💠💠💠
*✍️மேற்கண்ட வசனத்தை எழுதிய வேதாகம எழுத்தாளர் எவ்வளவு துல்லியமாக யோயாக்கீன் அரசனின் சிறையிருப்பு மாற்றபட்ட காலகட்டத்தினை பதிவிட்டுள்ளார் என்பதை காண்கையில் மிக ஆச்சர்யமாக இருக்கிறது.*
இது நமது கண்களுக்கு ஆச்சரியமாக தோன்றுவாதற்கு காரணம்,
எமது பரிசுத்த வேதாகமம் பல *"வரலாற்று நிகழ்வுகளை"* மிக துல்லியமாக எமக்கு அறிய தருவதால் இதனை நாம் முழுமையாக நம்பி, கால கட்டங்களை புரிந்து, உண்மையை அணைத்து கொள்ள எமக்கு உதவி புரிகிறது.
*யார் காலத்தில் என்னவெல்லாம் நிகழ்ந்துள்ளது❓️ அவற்றின் மூலம் ஆண்டவர் எமக்கு கற்றுக்கொடுப்பது என்ன❓️ போன்ற காரியங்களை வேதத்தை ஜெபத்தோடு வாசிக்கையில் புரிய முயற்சித்தால் நலம். கர்த்தர் புரிய வைப்பார்.*
*🪢 இஸ்ரயேல் நாட்டில் அரசர்களும், ஆசாரியர்களும், தீர்க்கதரிசிகளும் "தேவபிரதிநிதிகளாக" கர்த்தரால் ஏற்படுத்தப்பட்டு இருந்தனர்.* பிற்காலத்தில் எழும்ப போகும் திருச்சபைக்கு அடையாளமாக இந்த இஸ்ரயேல் மக்கள் கூட்டத்தினை இறைவன் வழிநடத்தினார். எவரேல்லாம் இந்த *"தேவபிரதிநிதித்துவ பணியினை"* சரியாக ஆற்றவில்லையோ, அவர்கள் அனைவரையும் கர்த்தர் வெவ்வேறு விதங்களில் தண்டித்து, தமது நியாயமான தீர்ப்புகளை ஆற்றியதை நாம் நெடுகவே இந்த 2 இராஜாக்கள் புஸ்தகத்தின் வாயிலாக அறிந்து கொள்ளுகிறோம். அதேவேளை இந்த பொறுப்பில் ஏற்படுத்தப்பட்டிருந்து, ( அதாவது அரசர், ஆசாரியர், இறை வாக்குரைஞர் போன்றோர்) சரியாக செயல்பட்டோர் மூலம் தேசம் அமரிக்கையான வாழ்வினையும், சுபிட்சத்தினையும், எழுப்புதல்களையும் கூட கண்டடைந்ததை நாம் மறந்திடலாகாது. *புதிய ஏற்பாட்டு திருச்சபை வாழ்விற்கும் இது பொருந்தும்.*
🥬🥥🍅🍃🥬🥥🍅🍃
*இதுவரை இராஜாக்களின் நூலில் எந்தவொரு இஸ்ரவேல் அரசனின் வாழ்வும் அவரது ஆட்சி ஆண்டுகளுடன் மட்டும் ஒப்பிடப்பட்டு வந்த நிலையில்....*
*இங்கு ஒரு அரசனின்* (யோயாக்கீனின்) *ஆட்சி ஆண்டு மாறி..... அவனது "சிறையிருப்பின் ஆண்டு" என்னும் புதிய பதம் பயன்படுத்தப்படுகிறது.*
இந்த யோயாக்கீன் அரியணையில் இருந்த காலகட்டம் வெறும் மூன்றே மாதங்கள் தான்.
*( 24 : 8 )*
இப்பொழுது இவரை குறித்து என்ன வாசிக்கிறோம்❓️ யோயாக்கீனின்.... சிறையிருப்பின்.....
*37ம் ஆண்டு...*
*12ம் மாதம்....*
*27ம் தேதியிலே.....*
அப்படியென்றால் முழுமையாக 37 ஆண்டுகள் இவர் பாபிலோனில், உயிரோடு சிறைச்சாலையில் வாடினவர்.
*ஒருவேளை அவர் சிறையிருப்பின் நாட்களில், மெய்யான மனஸ்தாபத்துடன், "மனந்திருந்தி" கர்த்தரை நோக்கி விண்ணப்பித்து இருக்கலாம்.* *கர்த்தர் இவரது சிறையிருப்பை மாற்றினார் என்பது எமக்கு மகிழ்வளிக்கும் ஓர் நிகழ்வு என்று கூட நாம் எடுத்து கொள்ளலாம்.
🌿📌🌿📌🌿📌
*ஏவில் மெரொதாக்* என்னும் பாபிலோனிய மன்னன், தான் அரியணைக்கு தகுதி பெற்று இராஜாவான வருஷத்தில், இந்த யூதாவின் இராஜாவாகிய யோயாக்கீனை சிறைச்சாலையில் இருந்து விடுவித்து, அவரோடு அன்பாக பேசி, அவரை தன்னோடு கூட அரியணைவரை சரிசமமாக உயர்த்தி, அவருடைய சிறைச்சாலை வஸ்திரங்களை மாற்றினார். மட்டுமல்ல, யோயாக்கீன் உயிரோடு இருந்த சகல நாட்களும், நித்தம் தனக்கு முன்பாக போஜனம் பண்ணும்படி செய்தான்.
*அது மட்டுமா❓️* அவர் உயிரோடு இருந்த நாட்களெல்லாம் அவருடைய செலவுக்காக, இராஜாவால்
*( ஏவில் மெரோதாக் இராஜாவால் )* கட்டளையான, அனுதின திட்டத்தின்படி, அனுதினமும் கொடுக்கப்பட்டு வந்தது, என்னும் தகவலோடு இந்த இராஜாக்களின் புஸ்தகம் முடிவுக்கு வருகிறது. *ஹாலேலுயா !*
*✒️மகிமையான எதிர்கால நம்பிக்கை எமக்கு இதன் வாயிலாக ஊட்டப்படுகின்றது.*
\🍀🍧🍀🍧🍀🍧
*பாபிலோனிய கல்வெட்டுகளில் யோயாக்கீன் அரசரும், அவர் பிள்ளைகளும் பாபிலோனிய பண்டக சாலையிலிருந்து ரேஷன்*
( அன்றாட படி அளப்பினை ) *பெற்றதற்கான குறிப்புகள் காணப்படுகின்றனவாம்.*
*ஏவில் மெரோதாக்* யோயாக்கீனை சிறையில் இருந்து வெளிப்பட செய்து, *அவருக்கு பரிவு காண்பித்தார்.*
தன்னை போலவே அவரை நேசித்து, அவரோடு அன்பாக பேசி, தன் நிலைக்கு அவரை சிங்காசனம் வரை உயர்த்தி, உட்கார செய்து, அவரது *"சிறைச்சாலை வஸ்திரங்களை மாற்றியது" ஏன்❓️* என்று, எமக்கு தெரியா விட்டாலும், இதில் அநேகம் பாடங்கள் உள்ளடக்கி உள்ளன.
*🥦யோயாக்கீன் மற்றும் ஏவில் மெரோதாக்🥦*
👇👇👇
*🍉1.*
பாவம் தரும் சிறை பயங்கரமானது. அதனை யோயாக்கீன் அனுபவிக்க நேர்ந்தது.ஆகிலும்,
*🍉2.*
சிறையிருப்பு திருப்ப படும்போது, சிறைச்சாலை வஸ்ததிரங்கள் மாற்றப்படுகிறது. *இனி அவன் சிறை கைதி அல்ல என்பதை, அது எமக்கு உறுதியாக்குகிறது.*
யோசேப்பின் சிறைச்சாலை வஸ்திரங்கள் மாற்றப்பட்டன. வேறு வஸ்திரம் தரிபிக்கப்பட்டன. பதவி உயர்ந்தது *( ஆதி - 41 : 14)* அப்படிப்போலவே இங்கு யோயாக்கீனுக்கு நிகழ்ந்தது.
*🍉3.*
நித்தம் அரசனுக்கு முன் சரிசமானவனாக போஜனம் செய்யும் பாக்கியம், யோயாக்கீனுக்கு கிட்டியது. *மேவிபோசேத்துக்கு அரசன் தாவீதும் இவ்விதமே தயவு பாராட்டினார்.*
(2 சாமு - 9 : 6 - 8 )
*🍉4.*
பாவம் செய்தால் தண்டனை நிச்சயம். ஆகிலும் மனந்திருந்தினால் இரட்சிப்பும்
*( மீட்பும், விடுதலையும் )* சிறையில் இருந்து விடுதலை வாழ்வு என்னும் உயர்நிலையும் நிச்சயம் உண்டு.
*🍉5.*
இனி யோயாக்கீன் நேபுகாத்நேச்சார் கீழ் அல்ல,
*(அவர் தான் மரித்து போனாரே !)* மாறாக,
இவர் இனி
*ஏவில் மெரோதாக்கின் கீழ் இருக்க அழைப்பு பெற்று வாழ்கிறார்.*
*🎀வாழ்க்கை பாடங்கள்🎀*
*🌈1.*
எமது இரட்சகராம் இயேசுவின் பதவி உயர்வின் நிமித்தம், நாம் மனந்திரும்பியப்போது எமது சிறை வஸ்திரங்கள் என்று கருதப்படும் *(பாவ)* வஸ்திரங்கள் களையப்பட்டு, உயர் ஸ்தானமாகிய சிங்காசனத்தில் அவரோடுக்கூட எம்மை உட்கார வைத்துள்ள தேவனுக்கு நன்றி செலுத்துவோம். *(எபேசியர்-2 :6 - 9)*
*🌈2.*
\
அனுதினமும் அவரோடு போஜனம் செய்யும் பாக்கியத்தினை, அவர் எம்மோடு செய்துள்ள புதிய உடன்படிக்கையின் வாயிலாக பெற்றுள்ளோம். நன்றி நிறைந்த உள்ளதோடு அவரில் அன்பு கூர்ந்து வாழ்வோம்.
*( 1 கொரி - 11 : 26 )*
*🍃யோயாக்கீன் அப்படித்தானே ஏவில் மெரோதாக் முன் நடந்திருப்பார்❓️*
சிந்தனை செய்வோம்.
*🍃நாமும் அங்கணமே எமது இரட்சகரும், தேவனுமாகிய இயேசு கிறிஸ்து முன் நன்றி அறிதலோடு வாழ்வோமா❓️/ வாழ்ந்து கொண்டு இருக்கிறோமா❓️* என நம்மை நாமே ஆராய்ந்து பார்த்து கொள்ளுவோம்.
*கர்த்தர் நல்லவர்.* அவர் நம்மை புழுதியில் இருந்து எடுத்து, குப்பையில் இருந்து உயர்த்தியவர் அன்றோ❓️
*( 1 சாமு - 2 : 8)* ஆகையால் எமக்கு அருளப்பட்டுள்ள இரட்சிப்பு, விடுதலை, உயர்வு, அன்றாட போஷிப்பு குறித்து அவருக்கு நன்றியோடு வாழ்வோம்.
கருணை உள்ளதோடு பிறரை நடத்த முயற்சிப்போம்.
அப்பா காலத்தில் கைதியாக்கபட்டவர்...
*(ஓர் வேளை... வேலையாளாக இருக்கலாம்)*
மகன் காலத்திலும் கைதியாக தான்
*(அடிமை போன்று வேலை ஆளாக தான் மகனும் அவரை வைத்து கொள்ள வேண்டும், இல்லை)*
நடத்த பட வேண்டும், இல்லையெனில் அப்பாவை இழிவு படுத்துகிறார் என்று உலகம் பேசலாம்.
அது உலகத்தார் வழக்கம்.
இங்கு பாருங்கள்.... நேபுகாத்நேச்சரின் குமாரன் ஏவில் மெரோதாக் காலத்தில் அவர் அந்த கைதிக்கு விடுதலை வாழ்வு கொடுத்த இரக்கம் மிக்கவராக திகழ்கிறார்.
அப்பா நினைவு வேறு.... மகன் நினைவு இங்கு அப்பாவை காட்டிலும் வேறுபடுகிறது.
தங்கள் விடுதலை வாழ்வுக்காக ஏங்கும் எந்த ஆத்துமாவின் சத்ததுக்கும் இறைவனது செவி திறந்து தான் இருக்கிறது என்பதை இதன் வாயிலாக அறிகிறோம்.
ஏவில் மெரோதாக் அரசன்.... யூத சிறை கைதிகள் விஷயத்தில் அதுவரை செயல்பட்டு வந்த பாபிலோனிய கொள்கைகளை மாற்றி அமைத்து....
*பிற்காலத்தில் யூதர்கள் தாங்கள் சிறைப்பட்டு போன தேசத்தில் இருந்து தங்கள் சுய தேசத்திற்கு திரும்பி செல்ல இறைவனது கருணை ஏவில் மெரோதாக் வாயிலாக வெளிப்பட கர்த்தரின் செயல்பாடு அங்கு உண்டாயிற்று.*
(எஸ்றா - 1 : 1 - 4)
*விடுதலை ஆக்குங்கள் என்கிறார் இயேசு கிறிஸ்து.*
(லூக் - 6 : 37)
*இன்று நாம் விடுதலை பண்ண வேண்டியவர்கள் யார்❓️* என்பதை யோசிப்போம்.
நமக்கும் விடுதலை வாழ்வு கிடைக்கும்.
is. Martha Lazar*
NJC, KodaiRoad
Thanks for using my website. Post your comments on this