யார் யாரோ? | அது ஏனோ மனிதனின் மாற்றம்
ஒரு குட்டி message!
Dear friends,
கடவுள் தந்த இந்த *சமாதானத்தின் நாளுக்காக* நன்றி சொல்லுங்க!!!
*யார் யாரோ?*
பள்ளிப்படிப்பு முடித்தவுடன் நமக்கு சொல்லிக் கொடுத்த ஆசிரியர் யாரோ!
கல்லூரி படிப்பு முடிந்தவுடன் நம்முடன் பழகிய நண்பர்கள் யாரோ!?
நல்ல வேலை கிடைத்து சம்பாதிக்க ஆரம்பித்தவுடன் நம்முடைய தந்தை யாரோ!?😰 திருமணம் முடிந்து புது மனைவி வந்தவுடன் நம்மை பெற்ற தாய் யாரோ!?😰
நம்முடைய உடம்பில் அழகும், ஆரோக்கியமும், இளமையும் போன பின்பு நம் உடல் யாரோ!?😰 கடைசி வரையில் நம்முடன் வருவது யார் யாரோ!?😰 நம் உடலை விட்டு நாம் உயிர் பிரிந்த பின்பு நமக்கே நாம் யாரோ? 😰 😲🤔 ஆனால் தாயின் கருவிலே நாம் உருவாவதற்கு முன்னமே நம்மை நன்றாய் அறிந்த நம்மை படைத்த கடவுள் இந்த பூமியை விட்டு நாம் பிரியும் வரை அவர் நம்மை கைவிடுவதுமில்லை, ஒரு நாளும் நம்மை விட்டு விலகுவதும் இல்லை, ❤️அதாவது மலைகள் விலகினாலும், பர்வதங்கள் நிலைபெயர்ந்தாலும், அவருடைய கிருபை நம்மை விட்டு ஒரு நாளும் விலகாமலும், அவருடைய சமாதானம் நிலைபெயராமலும் இருக்கும் 👍❤️ நம்மை யார் மறந்தாலும் ஒருநாளும் நம்மை படைத்த அன்பான கடவுள் நம்மை மறப்பதில்லை ❤️🙏
For the mountains may depart, and the hills be removed; but my lovingkindness shall not depart from thee, neither shall my covenant of peace be removed, saith our God that hath mercy on thee. ❤️🙏
Dennis. HJM
9884122369
-x-x-x-x-x-x-x-x-x-xx-x-x-x-x-x
ஒரு குட்டி message!
Dear friends,
கடவுள் தந்த இந்த *நன்மையான நாளுக்காக* நன்றி சொல்லுங்க!!!
அது ஏனோ!!!
சொர்க்கத்திற்கு செல்ல வேண்டும் என்றால் இலவசமாக செல்லலாம் பணம் தேவையில்லை!🤔 நரகத்திற்கு செல்வதற்கு தான் அதிக பணம் செலவழிக்க வேண்டியதாய் இருக்கிறது 😲😲🤔 அதாவது அன்பு காட்ட, நீதி நியாயம் செய்ய, நம்மை படைத்த கடவுளை நினைக்க, உண்மையைப் பேச, மன்னிக்க, நம்முடைய இருதயத்தை சுத்தமாக வைத்துக் கொள்ள, எளிமையாய் தாழ்மையாய் வாழ, விட்டுக் கொடுக்க, எல்லோரையும் நேசிக்க எந்த பணமும், பொருளும் தேவையில்லை 👏👏😄 அதுவே தவறு செய்ய, அநியாயம் அக்கிரமம் செய்ய, பாவம் செய்ய, கெட்ட வழிகளில் செல்ல, ஒரு மனிதனை அழிக்க, சுகபோகமாய் வாழ, எல்லாவற்றையும் அனுபவிக்க, கெட்ட மனிதர்களுடன் துணை போக, மனம் போல வாழ நிறைய செலவாகும் இதற்கு நிறைய பணம் தேவை, 😲🤔 இப்படி இருக்கும் போதிலும் நாம் வாழும் இந்த உலகத்தில் நீதி, நியாயம், நன்மை செய்து வாழ்வது மிகவும் கடினமாகவும், 😲அநியாயம் அக்கிரமும் பாவம் செய்வது மிகவும் சுலபமாகவும் மாறிவிட்டது, 😲 நல்ல வழி இடுக்கமாகவும், அழிந்து போகும் வழி விசாலமாகவும் மாறிவிட்டது,🤔 அதாவது
இடுக்கமான வாசல்வழியாய் உட்பிரவேசியுங்கள், கேட்டுக்குப் போகிற வாசல் விரிவும், வழி விசாலமுமாயிருக்கிறது, 😰அதின் வழியாய்ப் பிரவேசிக்கிறவர்கள் *அநேகர்* . 🤔
நல்ல வழி, ஜீவனுக்குப் போகிற வாசல் இடுக்கமும்,வழி நெருக்கமுமாயிருக்கிறது, அதைக் கண்டுபிடிக்கிறவர்கள் *சிலர்* . 😰Yes friends *அது ஏனோ!!!* மக்கள் பணத்தையும்,, நேரத்தையும் செலவழித்து அழிந்து போவதையும்,நரகத்திற்கு போவதையுமே அதிகமாக விரும்புகிறார்கள்,
Enter ye in by the narrow gate: for wide is the gate, and broad is the way, that leadeth to destruction, and many are they that enter in thereby. For narrow is the gate, and straitened the way, that leadeth unto life, and few are they that find it.
Dennis. HJM
9884122369
-x-x-x-x-x-x-x-x-x-xx-x-x-x-x-x
ஒரு குட்டி message!
Dear friends
கடவுள் தந்த இந்த *புதிய நாளுக்காக* நன்றி ❤️🙏சொல்லுங்க!!!
நாம் ஒவ்வொருவரும் பிறக்கும்போதே நமக்கு மரணமும் நிச்சயிக்கப்படுகிறது, 🤔மரணத்தை யாரும் வெல்ல முடியாது, இந்த உலகத்தை விட்டு ஒரு நாள் எல்லோரும் போயே ஆக வேண்டும், 🤔ஒருவர் மரணித்த பின்பு நாம் புரண்டு புரண்டு அழுவதாலும், வேதனை படுவதாலும், சாப்பிடாமல் இருப்பதினாலும் ஒரு பயனும் இல்லை, 🤔அதாவது
இந்த உலகத்தில் உறவுகள், நாம் நேசிக்கிறவர்கள் உயிரோடிருக்கையில், பிழைக்கும் படிக்குக் கடவுள் எனக்கு இரங்குவாரோ, எப்படியோ, யாருக்குத் தெரியும் என்று உபவாசித்து அழுத தீர்த்து விடுங்கள், 🙏ஏனென்றால் உறவுகள் மரித்த பின்பு அழுது புலம்பி கவலைப்பட்டு, நாம் உபவாசிக்க வேண்டியது என்ன?🤔 இனி நாம் அவர்களை திரும்பிவரப்பண்ணக் கூடுமொ?🤔 நாம் அவர்களிடத்திற்கு போவோமே தவிர, அல்லாமல், அவர்கள் நம்மிடத்திற்கு திரும்பி வரப்போகிறது இல்லை🤔 Yes friends அன்பான உறவுகள் இருக்கும் போது அவர்களுக்காக அன்பை செலுத்தி, நேரத்தை ஒதுக்கி, அக்கறையோடு அவர்களைப் பார்த்துக் கொள்ளுங்கள் அவர்களுக்காக அழுது புலம்பி விடுங்கள், மரித்த பின்பு நீங்கள் அவர்களுக்காக செய்யும் எந்த ஒரு காரியமும் பயனற்றதே!!! 😲🤔🙏
Think🤔 “While the lovable relation was still alive, I fasted and wept; for I thought, ‘Who knows, the God may be gracious to me and the loved one may live.’ But now he is dead; why should I [continue to] fast? Can I bring him back again? I will go to him [when I die], but he will not return to me.” So friends When there are dear relations, give them love, spare time, care for them, cry and mourn for them, after they die, nothing you do for them is worthless🤔😲🙏
Dennis. HJM
9884122369
-x-x-x-x-x-x-x-x-x-xx-x-x-x-x-x
ஒரு குட்டி message!*
Dear friends,
உங்கள் அனைவருக்கும் இனிய *சுதந்திர தின நாள் நல்வாழ்த்துக்கள்*
நாம் நள்ளிரவில் சுதந்திரம் பெற்றதினால் என்னவோ, இன்னும் ஏழைகளுக்கு, நடுத்தர மக்களுக்கு மட்டும் *விடியவே இல்லை* 😰😰 ஒன்று மட்டும் தெரிந்து கொள்ளுங்கள், 🤔நமக்கு விடியல் வரவில்லை என்றால் நாம் தான் விழித்துக் கொள்ள வேண்டும், 👍ஒரு காலத்தில், நம் நாட்டில் எத்தனையோ ஜாதி மதங்கள் இருந்தாலும் ஒற்றுமையாய் வாழ்ந்தோம்,❤️ நம் நாட்டில் எத்தனையோ மொழி வேற்றுமை இருந்தாலும் அண்ணன் தம்பியாய் பழகினோம், ❤️என்னதான் வறுமையில் இருந்தாலும் நம் நாடு இருக்கிறது என்ற தைரியத்தில் வாழ்ந்தோம்,❤️ என்னதான் வேறு வேறு கலாச்சாரங்கள் இருந்தாலும் ஒருவரை ஒருவர் மதித்தோம், ❤️மனிதநேயம் போற்றினோம்,❤️ ஆனால் இப்பொழுதோ பணக்காரர்கள் இன்னும் மிகப்பெரிய பணக்காரர்களாகவும், 😰ஏழைகள் இன்னும் அதிக ஏழ்மையிலும் போய்க்கொண்டு இருக்கிறார்கள், 😰நாட்டின் சொத்துக்களை விற்று, விலைவாசிகளை மலை போல் உயர்த்தி, ஆசை வார்த்தைகளை சொல்லி மக்களை ஏமாற்றி, போதைப் பொருட்களில் மனிதர்களை அடிமையாக்கி, மூடநம்பிக்கைகளை வளர்த்து, மதம் ஜாதி என்ற பேய்களை கொண்டு மனிதர்களை மிருகமாக்கி, நாட்டையே நாசம் ஆக்கிக் கொண்டிருக்கிறார்கள், 😰நண்பா விழித்துக் கொள், 🙏நாம் விழித்துக் கொள்ளவில்லை என்றால் அந்த ஆண்டவனே வந்தாலும் நம்மை காப்பாற்ற முடியாது😰😰, நாம் செய்யும் தவறை நாம் தான் அனுபவிக்க வேண்டும் 😰 அதாவது நீதிமான்கள் ஆளும்போதோ ஜனங்கள் மகிழுவார்கள்; 😄துன்மார்க்கர் ஆளும்போதோ ஜனங்கள் தவிப்பார்கள். 😰😰
தயவுசெய்து அரசியல் கட்சிகளுக்காக வேலை செய்யும் நண்பர்களே நீ வாழ பிறரை கெடுக்காதே!!!😰🙏 பாவத்தின் சம்பளம் நிச்சயம் மரணம் 🙏
Happy Independence Day!! 🇮🇳To all 💐💐When the righteous rule, the people rejoice😄; When the wicked rule, the people suffer😰
Dennis. HJM
9884122369
-x-x-x-x-x-x-x-x-x-xx-x-x-x-x-x
ஒரு குட்டி message!*
Dear friends,
கடவுள் தந்த *அருமையான இந்த நாளுக்காக* நன்றி சொல்லுங்க!🙏❤️
*மனிதனின் மாற்றம்!!!*
ஒரு மகனின் மாற்றத்தை அவன் கல்யாணத்திற்கு பிறகு காணலாம்,🤔
மகளின் மாற்றத்தை அவளின் வாலிபத்தில் காணலாம், 🤔மனைவியின் மாற்றத்தை கணவனின் வறுமையில் காணலாம்,🤔
நண்பனின் மாற்றத்தை நம்முடைய ஆபத்து காலத்தில் காணலாம்,🤔
சகோதரரின் மாற்றத்தை சண்டையில் காணலாம்,🤔 சகோதரியின் மாற்றத்தை சொத்து பிரிக்கும் பொழுது காணலாம்,🤔
பிள்ளைகளின் மாற்றத்தை நம்முடைய முதுமையில் காணலாம், 🤔 சொந்தம் பந்தத்தின் மாற்றத்தை நம்முடைய வறுமையில் காணலாம், 🤔yes friends ஒவ்வொரு மனுஷனும் தன்னுடைய சூழ்நிலைக்கு ஏற்ப, மனநிலைக்கு ஏற்ப, சந்தர்ப்பத்திற்கு ஏற்ப மாறிக்கொண்டே தான் இருப்பான்,😰 அதனால் யாரையும் ஒரு அளவுக்கு மேலாக நம்பி விடாதீர்கள், நம்பிக்கை வைத்து விடாதீர்கள், 🙏எதையும் அளவை மீறி எதிர்பார்த்து விடாதீர்கள் 🙏அதாவது மனுஷனை நம்புவதைப்பார்க்கிலும், நம்மைப் படைத்த கடவுள் பேரில் பற்றுதலாயிருப்பதே நலம்.🙏❤️ பிரபுக்களை நம்புவதைப்பார்க்கிலும், அன்பான கடவுள் பேரில் பற்றுதலாயிருப்பதே நலம். 🙏❤️
It is better to take refuge in God Than to put confidence in man. It is better to take refuge in lovable God Than to put confidence in princes. 🙏❤️
Dennis. HJM
9884122369
Thanks for using my website. Post your comments on this