Type Here to Get Search Results !

சார்லஸ் மீட் | Charles Mead | மிஷனெரிகளின் வாழ்க்கை சரிதை | Gospel Pioneers | Jesus Sam

===========
முன்னனோடி மிஷனெரிகளின் வாழ்க்கை சரிதை
சார்லஸ் மீட் (1782-1873)
==========
இங்கிலாந்து தேசத்தில் கிளவ்செஸ்டர் மாநிலத்தில் பிரிஸ்டல் என்னுமிடத்தில் பக்தியாக பெற்றோருக்கு மகனாக 1782 ஆம் ஆண்டு அக்டோபர் 1ஆம் நாள் சார்லஸ் மீட் பிறந்தார்.

இங்கிலாந்து தேசத்தில் Dr. Bogue வாலிபர்கள் மத்தில் மிஷனெரி தரிசனத்தை பகிர்ந்துகொண்டு இருந்தபோது 22 வயது வாலிபனான சார்லஸ் மீட், மிஷனரி பணிக்கு ஆண்டவர் தன்னை அழைப்பது உணர்ந்து டாக்டரிடம் தன்னை ஆண்டவர் இந்தியாவில் ஊழியம் செய்ய அழைப்பது உணர்வதாக கூறினார்.

டாக்டர் போக் சார்லஸை உற்சாகப்படுத்தி காஸ்போர்ட் என்ற இடத்தில் உள்ள வேதாகம கல்லூரியில் சேர்ந்து படிக்க உதவி செய்தார். பயிற்சி முடிந்ததும் 1816 ஆம் ஆண்டில் இங்கிலாந்து திருச்சபையில் குருவானவராக பிரதிஷ்டை செய்யப்பட்டார்.

இந்நிலையில் லண்டன் மிஷனரி சங்கத்தாரால் இந்தியாவில் திருவிதாங்கூர் சமஸ்தானத்திற்கு நற்செய்திபணி செய்ய அனுப்பப்பட்டு, மருத்துவ வசதி இல்லாததாலும், தட்பவெப்பநிலை சரியாக இல்லாததினாலும் சுகவீனம் ஆகி, இங்கிலாந்துக்கு திரும்பும் ரிங்கல் தொபே யின் ஊழியங்களை தொடர்ந்து நடந்த சார்லஸ் மீட் நியமிக்கப்பட்டார். இந்நிலையில் இங்கிலாந்தில் குருவானவர் ஹண்ட் என்பவரின் மகளை திருமணம் செய்து 1816 ஆம் ஆண்டு இந்தியாவில் நற்செய்திபணி செய்ய பயணமானார்.

நான்கு மாத கடல் பயணத்திற்கு பின் சென்னை துறைமுகத்திற்கு வந்த சார்லஸ் மீட் வெயிலின் கொடுமையை தாங்கமுடியாமல் சுகவீனம் ஆனார். ஆகவே சென்னையில் ஒரு ஆண்டு தங்கியிருந்து தமிழ்மொழியை படிப்பதிலும், மிஷனெரிபணி செய்வதிலும் செலவழித்தார். அப்பொழுது அவர்களுக்கு ஒரு ஆண் குழந்தை பிறந்தது.

பின்னர் சுகம் பெற்ற சார்லஸ் மீட் ஐயர் தன் மனைவி மற்றும் குழந்தையோடு 1817 ஆம் ஆண்டு திருவிதாங்கூர் செல்ல சென்னையிலிருந்து கப்பல் ஏறினார். பிரசவத்திற்கு பின் பலவீனமாக இருந்த திருமதி. மீட் பயணத்தில் அதிக வியாதிப்பட்டு பினாங்க் என்ற இடம் சேரும் பொழுது கர்த்தருக்குள் நித்திரையடைந்தார்.

அந்நிய தேசத்தில் மிஷனரிப் பணி செய்ய ஆவலாய் புறப்பட்டு வந்த சார்லஸ் மீட் ஐயருக்கு தாங்கொனா வேதனையாய் இருந்தது. ஆயினும் கிறிஸ்துவுக்குள் ஆறுதல் அடைந்து, கலப்பையில் கை வைத்த பின்பு பின்னிட்டுப் பார்க்காது தன்னை அழைத்தவர் இறுதிவரை நடத்துவார் என்று விசுவாசித்து கைக்குழந்தையுடன் குளச்சல் துறைமுகத்திற்கு கப்பலேறி, தனக்கு குறிக்கப்பட்ட மயிலாடி மிஷனெரி பணி தளத்திற்கு வந்து சேர்ந்தார்.

மயிலாடி பகுதியில் ரிங்கல் தொபே ஐயர் ஏற்படுத்தி இருந்த ஏழு திருச்சபைகளை, வேதமாணிக்கம் உபதேசியார் மிகவும் கண்ணும் கருத்துமாக கட்டிக்காத்து திருச்சபையின் பொறுப்புகளை சார்லஸ் மீட் ஐய்யரிடம் ஒப்படைத்தார்.

இந்தியாவில் தென்கோடியில் இருக்கும் திருவிதாங்கூர் சமஸ்தானத்தில் உயர் ஜாதி மற்றும் தாழ்ந்த ஜாதி என்ற பிரிவினையால் தாழ்த்தப்பட்ட மக்களை தீண்டத்தகாதவர்களாக அடிமைப்படுத்தி வைத்திருந்தார்கள். தாழ்ந்த சாதி மக்களாக கருதப்பட்ட சாணார், சாம்பவர், ஈழவர், சேரமர், குறவர் இனத்தார் பொது கிணறுகளிலும், குளங்களிலும், உயர்சாதியானர் வசிக்கும் தெருக்களிலும், இந்து கோயில்களிலும், செல்வதற்கு தடைவிதிக்கப்பட்டிருந்தது. ஏனெனில் அப்படி செல்வதாக இருந்தால் தீட்டுபட்டுவிடுமாம். இவர்கள் அங்கிருந்த பண்ணையார்களுக்கும் நிலச்சுவான்தாரர்களுக்கும், ஜமீன்தார்களுக்கும் அடிமைகளாகவும், கூலிகளாகவும், வேலை செய்து வந்தார்கள்.

திருவிதாங்கூர் சமஸ்தானத்தில் தாழ்த்தப்பட்ட இனபெண்கள் அதிகம் இழிவுபடுத்தப்பட்டார்கள். அங்கிருந்த பெண்கள் மார்பை மறைக்க இரவிக்கை அணிவதற்கு தடைவிதிக்கப்பட்டிருந்தது. ஆண்கள் இடுப்புக்கு மேலும் முட்டுக்கு கீழும் ஆடை அணிவதற்கு தடைவிதிக்கப்பட்டிருந்தது. தேவைப்பட்டால் வைக்கோல் பிரியை எடுத்து சுற்றிக்கொள்ள வேண்டும்.

திருவிதாங்கூர் சமஸ்தான மக்களுக்கு தலைவரி, தாலி வரி, வலை வரி, செக்கு வரி, ஏணிக்கு வரி, அரிவாளுக்கு வரி, மார்புக்கு வரி, குடுவைக்கு வரி என்று பலவகை வரிகளை செலுத்தும்படி நிர்ப்பந்தப் படுத்தப்பட்டு இருந்தனர். இந்த வரிகளை செலுத்தாவிட்டால் குனிந்து நிற்கச்சொல்லி முதுகின்மேல் பாராங்கல்லை தூக்கிவைத்து வெயிலில் பலமணிநேரம் நிற்க வேண்டியதாயிருக்கும்.

சார்லஸ் மீட் ஐயர், கைக்குழந்தையுடன் ஒவ்வொரு திருச்சபைகளிலும், கிராமங்களிலும் சுவிசேஷ பணியை துவக்கினார். புதிய கிராமங்களில் சுவிசேஷம் அறிவித்து, அங்கு ஆராதனை குழுக்களை ஏற்படுத்தி உபதேசிமார்களை நியமித்தார்.

நாகர்கோவிலில் ரெசிடென்ட் அதிகாரி தங்கும் பங்களாவைவையும், தோட்டத்தையும் மிஷனெரிகள் பணிக்கு என்று இங்கிலாந்து ராணியிடம் தானமாகப் பெற்று, அங்கிருந்து நற்செய்தி பணியையும் கல்விப்பணியையும் செய்துவந்தார்.

நாகர்கோவில் மாவட்ட நீதிமன்றத்தில் கிறிஸ்தவரை நீதிபதியாக நியமித்தால் வழக்குகள் நியாயமாக நடைபெறும் என்று ஆங்கிலேய கர்னல் மன்றோ, சார்லஸ் மீட் ஐயரின் பெயரை இங்கிலாந்து ராணியிடம் பரிந்துரைத்தார். இது நல்லது என்ற கண்ட ராணி, சார்லஸ் மீட் ஐயரை மாவட்ட நீதிபதியாக நியமித்தார்.

சுவிசேஷப் பணியில் மத்தியிலும் நீதிபதியாக பணியாற்றுவது மிகுந்த சிரமமாக இருந்தாலும் கிறிஸ்துவுக்குள் மகிமையாகவும், மிகுந்த ஜெபத்துடனும் வழக்குகளுக்கு தீர்ப்பு கூறி மக்களின் பாராட்டை பெற்றார். அதுவரை கிறிஸ்தவர்களை அற்பமாக எண்ணிய உயர்சாதி இனத்தவர்கள், அதுமுதல் கிறிஸ்து மார்க்கத்திற்கு மதிப்புக் கொடுத்து, தங்கள் கிராமத்தில் வந்து கூட்டங்கள் நடத்த அழைப்பு கொடுத்தார்கள்.

சார்ஸ் மீட் ஐயர் வாரத்தில் ஒருநாள் உபதேசியார்களையும் ஆசிரியர்களையும் அழைத்து, வேதாகமத்தை பற்றியும் அடுத்த வாரம் நடத்தவேண்டிய பள்ளி பாடங்களை பற்றியும் பயிற்சி கொடுத்து இறைபணியையும் கல்விப்பணியையும் ஊக்கப்படுத்தினார். இதனால் சுமார் 3000 ஆத்துமாக்கள் கிறிஸ்து மார்க்கத்தில் புதிதாக இணைந்தார்கள்.

திருவிதாங்கூர் சமஸ்தானத்திற்கு இன்னும் அதிக மிஷனெரிகள் தேவை என்பதை உணர்ந்த சார்லஸ் மீட், 1820 ம் ஆண்டு இங்கிலாந்து சென்று அங்கிருந்த திருச்சபைகளில் இந்திய தேசத்திற்கு மிஷனெரிகள் தேவை என்று அறைகூவல் விடுத்தார். பின்னர் தனது மகனுக்கும் தனக்கு ஆதரவாக இருக்க கணவனை இழந்த ஒரு போதகரின் மகளை திருமணம் செய்து புதிதாக 5 மிஷனெரிகளுடன் கொல்லத்திற்கு வந்து சேர்ந்தார்.

மிஷனெரிகள் கிராமம் கிராமமாய் சென்று சுவிசேஷபணி செய்யவும், ஆராதனை நடத்தவும், உபதேசம் செய்யவும் மிகவும் சிரமப்பட்டார்கள். ஏனெனில பிரயாண வசதிகள் மிக குறைவாகவே இருந்தது. குதிரையிலோ அல்லது மாட்டு வண்டியலோ தான் செல்ல வேண்டும். ஆகவே ஒவ்வொரு சபைகளில் இருந்து நற்செய்திபணியில் ஆர்வமுள்ள மாணவர்களை தேர்ந்தெடுத்து, அவர்களுக்கு கல்வியும் வேத அறிவு புகட்டி உபதேசியார்களாக நியமிக்க வேண்டும் என்று திட்டமிட்டு சார்லஸ் மீட் ஐயர் 1821 இல் நாகர்கோவிலில் வேதாகமக் கல்லூரி ஒன்றை நிறுவினார். இதில் தமிழும் ஆங்கிலமும் வேதாகமும் கற்றுக் கொடுக்கப்பட்டது.

இந்நிலையில் லண்டன் மிஷனெரி சங்கத்தின் மூலம் 1827 இல் நாகர்கோவிலில் 15 சபைகள், 7 உபதேசியார்கள், 1410 விசுவாசிகள், மற்றும் 36 பள்ளிக் கூடங்கள் இருந்தன. அப்படியே நெய்யூர் பகுதியில் 11 சபைகள், 16 உபதேசியார்கள், 1441 விசுவாசிகள், மற்றும் 20 பள்ளிகள் இருந்தன. இந்த பள்ளிகூடங்களே ஏழைமக்களின் அறிவு கண்களை திறந்தது. இவர்கள் பொருளாதாரத்தில் வளருவதற்கு சார்லஸ் மீட் அச்சு கூடங்களையும், தரை ஓடுகள், கூரை ஓடுகள் தயாரிக்கும் தொழிற்சாலைகளையும் ஏற்படுத்தி கொடுத்தார்.

கிறிஸ்துவை ஏற்றுக் கொண்ட தாழ்த்தப்பட்ட மக்கள் ஞாயிற்றுக்கிழமைகளில் ஆலயத்திற்கு செல்வதால் அன்று வேலைக்கு வர மாட்டோம் என்றும், விக்கிரக கோவிலில் வேலைகளுக்கும் வர முடியாது என்றும் கூறினார்கள். மிஷனெரிகளின் மனைவிமார்கள் அங்கிருந்த பெண்களுக்கு தையல் கலையை கற்றுகொடுத்து வேலைவாப்புகளை உறுவாக்கி அவர்களின் பொருளாதாரத்தை உயர்த்தினார்கள். கிறிஸ்தவ பெண்கள் இரவிக்கை தைப்பதை கற்றுக்கொண்டு மாராப்பு அணிந்து ஆலயத்திற்கு சென்றார்கள். இதற்கு காரணம் கிறிஸ்தவ மிஷனெரிகளும், திருச்சபைகளும் மற்றும் பள்ளிக்கூடங்களும்தான் காரணம் என்று பண்ணையார்கள் நினைத்தார்கள்.

ஆகவே உயர்சாதி பூசாரிகளின் தூண்டுதலின் பேரில் வன்முறையாளர்கள் தென்னை ஓலையினால் கட்டப்பட்டிருந்த பள்ளிகூடங்களையும், கிறிஸ்தவ ஆலயங்களையும் தீ வைத்து கொளுத்தினார்கள். கிறிஸ்தவ பெண்களின் மேலாடைகள் கிழித்து அவமானப்படுத்தி, மிஷனரிகளையும், உபதேசியார்களையும், ஆசிரியர்களையும் பொது இடங்களில் வைத்து அடித்து, சித்திரவதை செய்தார்கள். கிறிஸ்தவர்கள் ஆராதனைக்கு வருவதை தடுத்து நிறுத்தி, அவர்களை அடித்து விரட்டி, வேதப் புத்தகங்களை எரித்தார்கள். கிறிஸ்தவர்களின் உடைமைகளை சூரையிட்டும் தீயிலிட்டும் எரித்தார்கள். கிறிஸ்தவர்களுக்கு விரோதமாக பொய்யாக திருட்டு மற்றும் அடிதடி வழக்குகளை புனைந்து சிறையில் அடைத்தார்கள்.

இந்நிலையில் சார்லஸ் மீட் ஐயர் கிறிஸ்தவர்களுக்காக வழக்காடி சிறையிலிருந்தவர்களை விடுவித்தார். இவ்வாறு கிறிஸ்தவர்களுக்கு உதவி செய்து வரும் சார்லஸ் மீட் ஐயரை கொலை செய்ய திட்டம் தீட்டி, ஆயுதமேந்திய 300 பேர் கூடிவந்து வீட்டை நொறுக்கினார்கள். இதை உதயகிரி கோட்டையில் ஆங்கிலேய கேப்டன் சிபால்ட் அறிந்து, உடனே ஒரு படையை அனுப்பி வன்முறை கும்பலை சிதறடிக்க செய்தார்.

ஒருமுறை தாழக்குடி என்னும் கிராமத்தில் இருந்த பண்ணையார், சாணார் இனத்தை சேர்ந்த ஒரு நிறை மாத கர்ப்பிணியையும், ஒரு காளை மாட்டையும் ஏரில் பூட்டி வயலை உழுதிட கட்டளையிட்டார். அவள் இயன்ற அளவு ஏரை இழுத்தாள். முடியாதபோது விழுந்தாள். விழுந்தவள் மீண்டும் எழும்பாமல் மரித்துப்போனாள். இதைக்கண்டு சார்லஸ் மீட் ஐயர் கொதித்துப்போனார். பெண்களின் உரிமைக்காகவும், தோல் சீலை அணிவதற்கு ஆதரவாகவும் போராட்டம் நடத்தினார். இது 1822 ம் ஆண்டும் 1829 ம் ஆண்டும் கலவரமாக வெடித்தது. இதில் ஏராளமான கிறிஸ்தவர்கள் கொல்லப்பட்டார்கள். மிஷனெரிகளின் கடும் போராட்டத்தினால் கீழ்சாதி பெண்களும் மேலாடை அல்லது இரவிக்கை அணியலாம் என்று திருவிதாங்கூர் சமஸ்தானம் சட்டத்தை இயற்றியது.

இந்த உபத்திரவத்திற்கு பிறகு, சார்லஸ் மீட் ஐயர் நெய்யூரில் தங்கியிருந்து மிஷனெரி பணி செய்து வந்தார். நெய்யூரில் 1831 ஆண்டு ஆலயம் கட்டப்பட்டது. அங்கு மாணவர்கள் தங்கி படிப்பதற்கு பள்ளிக்கூடமும் விடுதியும் நிறுவப்பட்டது.

இந்நிலையில் சார்லஸ் மீட் ஐயருடைய 3 குமாரர்கள் 1832, 1836, 1838 ம் ஆண்டுகளில் சீதோஷனநிலை சரீயில்லாத காரணத்தினால் ஒன்றன்பின் ஒன்றாக மரித்தார்கள். இது தாங்கமுடியாத துக்கத்தை கொடுத்தாலும் மிஷனெரிபணியை தொடர்ந்து ஊக்கமாக செய்துவந்தார்.

சார்லஸ் மீட் ஐயரின் வேண்டுகோளுக்கு ஏற்ப லண்டன் மிஷனெரி சங்கம் 1339 ம் ஆண்டு மருத்துவ மிஷனெரி டாக்டர் ராம்சே என்பவரை அனுப்பி வைத்தார்கள். ஆகவே நெய்யூரில் மருத்துவமனை அமைக்கப்பட்டு, வியாதியஸ்தர்களுக்கும் சுவிசேஷம் அறிவிக்கப்பட்டது. இன்னும் அநேக மருத்துவ உதவியாளர்களை உறுவாக்க பயிற்சியும் தொடங்கப்பட்டது. 1840 ஆம் வருடத்தில் 1867 கிறிஸ்தவர்களும், நூறு உபதேசியார்களும், 2703 பள்ளி மாணவர்களும், பதினெட்டு வேதாகம கல்லூரி மாணவர்களும் இருந்தார்கள்.

சார்லஸ் மீட் தனது இறுதி நாட்களில் ஏழை, தாய், தந்தை இழந்த பிள்ளைகளுக்கு அடைக்கலம் கொடுக்கும் அநாதை பள்ளிகளுக்கும், அச்சு கூடங்களுக்கு பொறுப்பாக திருவனந்தபுரத்தில் பணிபுரிந்தார். 1873 ஆம் ஆண்டு, ஜனவரி 13 ம் நாள் சார்லஸ் மீட் தனது 87 ம் வயதில் கர்த்தருக்குள் நித்திரையடைந்தார். இன்று தென் திருவித்தாங்கூர் மிஷனின் தந்தை என்று சார்லஸ் மீட் அழைக்கப்படுகிறார். இவருடைய புகழ்பெற்ற வாசகம்: இந்திய கிறிஸ்தவர்களோடு மரிப்பேன் அல்லது அவர்களோடு உயிரோடு இருப்பேன்.

1818 ஆம் ஆண்டு குளச்சல் துறைமுகத்தில் கையில் குழந்தையுடன் வந்திரங்கிய சார்லஸ் மீட் ஐயர் தமது 35 வருட மிஷனெரிபணி மூலம் ஆயிரக்கணக்கான ஆத்துமாக்களை நாகர்கோவிலில் சம்பாதித்தார். இன்று உலகம் முழுவதிலும் இந்த ஆத்மாக்கள் மிஷனெரிகளாக, சுவிசேஷகர்களாக, போதகர்களாக, வேதாகம பண்டிதர்களாக புறப்பட்டு சென்று கிறிஸ்துவின் வருகைக்கு அநேக ஆத்துமாக்களை ஆதாயம் படுத்தி வருகிறார்கள்.

🛐.இதை வாசிக்கின்ற அன்பு தம்பி மற்றும் தங்கையே இன்று நீ கல்வியிலும், சமுதாய அந்தஸ்திலும் உயர்ந்து இருப்பதற்கு, உனக்காக மற்றும் உன்னுடைய வாழ்க்கை தரத்தை உயர்த்துவதற்காக, நம்முடைய ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் அழைப்பை ஏற்று, தன்னுடைய வாழ்க்கை, குடும்ப உறவுகள், சொத்து சுகங்கள் யாவற்றையும் ஒதுக்கி வைத்துவிட்டு, உன்னுடைய கிராமத்திற்கு வந்து, நற்செய்திபணியையும், சமுதாய நற்பணிகளையும் செய்த பல மிஷனெரிகளை அனுப்பி வைத்த அந்த ஆண்டவருக்கு நீ என்ன செய்ய போகின்றாய்?...நீ வா...நாம் எல்லோரும் சேர்ந்து நம்முடைய தலைமுறையில் இந்திய தேசத்தை ஆண்டவருக்கு சொந்தமாக்குவோம்.

🛐. இந்த மிஷனெரி சரித்திரத்தை வாசிக்கின்ற அன்பு தாய்மார்களே! தகப்பன்மார்களே! உங்கள் பிள்ளைகளை நம்முடைய ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் இராஜ்யத்தை கட்டும் இந்த கனமான ஊழியத்தை செய்ய ஒரு கல்வி மிஷனெரியாக, சமுதாய முன்னேற்ற மிஷனெரியாக, மருத்துவ மிஷனெரியாக, சுவிசேஷ மிஷனெரியாக இயேசு கிறிஸ்துவுக்கு சேவை செய்ய அற்பணிப்பீர்களா? ஊக்கப்படுத்துவீர்களா? தேவ இராஜ்யம் உங்கள் மூலமாய் தேவை நிறைந்த இந்திய தேசத்தில் கட்டப்படுவதாக. ஆமென்.

☸. கிறிஸ்துவவில் அன்பானவர்களே!...இந்த மிஷனெரிகள் சரித்திர குழுவின் இனைப்பை உங்கள் உற்றார், உறவினர்கள், நண்பர்கள் யாவருக்கும் அனுப்பு வைக்கும்போது, அவர்களும் உங்களைப்போல மிஷனெரி தரிசனத்தை பெற்றுக்கொள்வார்கள். நன்றி

🔯. May God Bless You and Use You for the Extensions of His Kingdom. With Love and Prayer...Rev. D. David Paramanantham B.Sc, M.A, B.D, Gamaliel Bible College, Mumbai, India 💐😊🙏


==============
The Gospel Pioneers
Charles Mead (1782-1873)
=================

Charles Mead was born on October 1, 1782, in Bristol, Gloucester, England. When Dr.Bogue, was sharing a missionary vision with teenagers, Charles felt the Lord calling him for missionary work and told the doctor that the Lord was calling him to serve in India.

Dr. Bogue encouraged Charles to study at the Bible College in Cosport, England. After completing his training, he was ordained as a priest in 1816 in the Church of England. In England , he married the daughter of Rev. Hunt and travelled to India in 1816.He was sent by the London Missionary Society to evangelize in the Kingdom of Travancore, India, to continue Rev.Ringeltaube’s ministry, who became ill due to lack of medical facilities and unfavourable weather conditions.

Charles Mead, arrived at the port of Chennai after a four-month voyage.He was received by Rev.Loveless, who was the first England missionary of Madras. At Chennai, Charles wife became ill, so he spent a year in Chennai studying the Tamil language and doing missionary work. Then they had a boy child.

Rev. Charles Mead, his wife and child then sailed from Chennai to Travancore in 1817. Mrs. Mead who was weak after childbirth fell seriously ill on the journey and went to be with the Lord when he arrived in Penang Island (Malaysia).

Rev. Charles Mead, who left eager to serve as a missionary in the foreign land was in utter distress. Comforted in Christ, however, he put his hand on the plough and did not look back, believing that the One who had called him would lead him to the end, sailed with his infant to the port of Colachel and arrived at the Mylaudy missionary work site assigned to him. The seven churches established by Rev.Ringeltaube in the Mylaudy area handed over to Rev.Charles Mead.

In the southern Indian state of Travancore, the lower castes were enslaved as untouchables. The Sanar, Sambavar, Ezhava, Cheram and Kuravar tribes, who were considered to be lower caste people, were forbidden to go to public wells, ponds, streets inhabited by upper castes and Hindu temples. According to the Hindu Manusmriti text, the high caste people felt that they would be tainted after the lower caste people visited it. The lower caste people worked as slaves and labourers for the farmers and landlords there.

In the principality of Travancore, the lower caste women were much despised. They were forbidden to wear dresses to cover their breasts. Men were forbidden to wear clothing below the waist and above the knee. If necessary, take a straw bale and wrap it. The people of Travancore were compelled to pay various taxes such as head tax, thali tax, net tax, moustache tax, ladder tax, sickle tax, breast tax and pottery tax. If you do not pay these taxes, you will have to bend over and stand on your back for many hours in the sun.

Rev.Charles Mead, with the infant, began evangelistic work in every church and village. He preached the gospel in the new villages, formed worship groups there, and appointed catechists. The resident officer in Nagercoil donated the bungalow and garden of the Queen of England for missionary work and from there did evangelistic work and education.

The English Colonel Munro suggested to the Queen of England the name of Rev.Charles Mead that the cases would be fair if a Christian was appointed as a judge in the District Court at Nagercoil. Seeing that this was good, the Queen appointed Rev.Charles Mead as District Judge.

Although it was very difficult to serve as a judge in the midst of evangelistic work, he received the praise of the people by judging cases with glory and great prayer in Christ. The upper castes, who until then had despised Christians, now, invite them to come to their village and hold meetings.

Rev.Mead called the catechists and teachers one day a week and encouraged them in the ministry and education by giving them training on the Bible and the school lessons to be conducted next week. Thus about 3000 souls were newly converted to Christianity. Charles Mead, realizing that the principality of Travancore needed more missionaries, went to England in 1820 and challenged the Indian nation in the churches there. He later married a Tanjore LMS missionary Rev. Hoarst's daughter Johanna to support her son and came to Kollam with 5 new missionaries.

The missionaries went from village to village and found it very difficult to evangelize, worship, and preach. Because travel facilities were very limited. You just have to go by horse or cart. Rev.Charles Mead found a Bible College at Nagercoil in 1821, he selected students interested in evangelism from each congregation and appointed them as educators of the Scriptures. In this Tamil, English and Bible were taught.

In 1827 there were 15 congregations, 7 catechists, 1410 believers, and 36 schools in Nagercoil through the London Missionary Society. There were 11 congregations, 16 catechists, 1441 believers, and 20 schools in the Neyyur area. It was these schools that opened the eyes of the knowledge of the poor. To grow their economy, Charles Mead set up printing press and factories to make floor tiles and roof tiles.

The downtrodden people who accepted Christ said that they would not come to work on sunday as they need to the attend the church will not come to work at the idol hindu temple. The wives of the missionaries taught the women there the art of sewing and created jobs and boosted their economy. Christian women learnt to sew at night and went to church wearing blouse. The high caste peple thought that this was because of Christian missionaries, churches, and schools.

Therefore, at the instigation of high caste priests, the rioters set fire to schools and Christian churches built of coconut straw. They tore the Christian women tops, humiliated, beat and tortured missionaries, preachers, and teachers in public and burnt scriptures. Christians' belongings were looted and set on fire. They were imprisoned on false charges of theft and assault against Christians.

In this situation Rev.Charles Mead advocated for the Christians and released the prisoners. Thus, 300 armed men gathered on 3, January 1829 smashed the house, plotting to assassinate Rev.Charles Mead, who had been helping Christians. Upon learning of this at the Udayagiri fort, English Captain Sebald immediately sent an army to disperse the violent mob.

Once a Zamindar in the village of Thalakudi near Nagercoil locked a pregnant woman and a bull belonging to the Sanar tribe in the plough and ordered them to plough the field. She pulled as much as she could and fell down.The fallen woman died without rising again. Seeing this, Rev.Charles Mead was heart broken.He fought for women's rights and in support of the wearing of blouse.It erupted into riots in Kalkulam, Vilavankodu, Agasthespuram, Renial in 1822 and 1829. Many Christians were killed. Due to the fierce struggle of the missionaries, the principality of Travancore enacted a law that allowed lower caste women to wear blouse.

After this tribulation, Rev. Charles Mead stayed in Neyyur and served as a missionary. A church was built in 1831 in Neyyur. A boarding school and hostel were established for the students. In this situation 3 sons of Charles Mead Iyer died one after the other in 1832, 1836 and 1838 due to inclement weather. On 6, February, 1848, Mrs. Johanna died due lack of medical facilities. Despite this unbearable grief, he continued to encourage missionary work.

At the request of Rev.Charles Mead, the London Missionary Society sent Dr. Ramsay, a medical missionary, in 1839. So a hospital was set up in Neyyur and the gospel was preached to the sick. Training was also started to recruit more medical assistants. In 1840 there were 1867 Christians, one hundred preachers, 2703 school students, and eighteen Bible college students.

Rev.Charles Mead in his last days, worked in Trivandrum in- charge of orphanages and printing houses that sheltered poor, orphaned children. On January 13, 1873, Charles Mead went to be with the Lord at the age of 87. His body was buried on the CMS Church Campus. Today Charles Mead is known as the Father of the South Travancore Mission. His famous quote: I will die with Indian Christians or live with them.

Rev.Charles Mead who arrived at the port of Colachel with his baby child in 1818, earned thousands of souls in Nagercoil through his 35 years of missionary work. All over the world today these souls are living as missionaries, evangelists, pastors, biblical scholars and gaining many souls for the coming of Christ.

🛐.Dear brothers and sisters, today you have received good education, health and better life styles, it is because of many Christian missionaries who sacrificed their life for you in the past. Have you ever thought of the guiding hands behind it? Yes, it is none other than God himself who prepared missionaries and send to your village and gave the burden to uplift your life. In return, what shall you offer to God as thanksgiving? Think about it.

☸. My dear parents will you encourage and dedicate your children to do God's work as educational missionary or medical missionary or Cross Cultural missionary for our Nation?

✝. The Gospel came to India 2000 years back but still we are 2.8% of Indian population. The harvest is plenty but the labourers are few. So come...let's together build the Kingdom of God in our Nation and let's evangelize our Nation in Christ in our Generation.

❇. Dear friends kindly introduce this group link to your friends, relatives and your Church members. May God bless you and use you for the extensions. With love and prayer...Rev. D. David Paramanantham, B.Sc., M.A. B.D. Gamaliel Bible College, Mumbai, India💐🙏😊

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.