*வேதபகுதி: 2 கொரி 2:1-17*
*" நற்கந்தம் "*
*" இரட்சிக்கப்படுகிறவர்களுக்குள்ளேயும், கெட்டுப்போகிறவர்களுக்குள்ளேயும் நாங்கள் தேவனுக்குக் கிறிஸ்துவின் நற்கந்தமாயிருக்கிறோம் " - 2 கொரிந்தியர் 2:15*
*தேவனுடைய ஊழியக்காரனாகிய பவுல், தன்னை தேவனுடைய நற்கந்தம் என்று கூறுகிறான். நற்கந்தம் என்றால் நறுமணம் என்ற அர்த்தமாகும். தேவனுடைய ஊழியர்கள் அனைவருமே தேவனுடைய வாசனையாக இருக்கிறார்கள் என்பது எவ்வளவு பெரிய காரியம் பாருங்கள். ஒரு சிலர் ஒரு குறிப்பிட்ட நறுமணத்தை மட்டுமே பயன்படுத்தி கொண்டிருப்பார்கள். அந்த நறுமணம் நம்முடைய நாசியில் ஏறும்போதே, நாம் அவர்களைப் பார்க்காவிட்டாலும், அந்த குறிப்பிட்ட நபர் வருகிறார் என்பதை அறிந்துகொள்ளலாம். அப்படியே, தேவனுடைய ஊழியர்களிடமிருந்து தேவனுடைய வாசனை வீசவேண்டும் என்று பவுல் கூறுகிறார்.*
*இன்றைய தியான பகுதி முழுவதையும் நாம் படித்துப்பார்த்தால் தேவனுடைய நற்கந்தம் என்ன செய்யும் என்பதை அறிந்துகொள்ள முடியும். இரட்சிக்கப்படுகிறவர்களுக்கு ஜீவனுக்கேதுவான வாசனையாகவும் கெட்டுப்போகிறவர்களுக்கு மரணத்தின் வாசனையாகவும் இருக்கும் என்று பவுல் எழுதும்போது, தேவனுடைய ஊழியர்கள் செல்லும் இடங்களில் பெரிய தாக்கம் உண்டாகும் என்பதை நாம் அறிந்துகொள்ளலாம். இரட்சிக்கப்படுகிறதற்கு ஏதுவாயிருப்பவர்கள், தேவனுடைய ஊழியர்களைக் காணும்போது, அவர்களுடைய இருதயம் சந்தோஷப்பட்டு, தேவனுடைய ஊழியர்களுக்காக அவர்கள் தேவனைத் துதிப்பார்கள். ஆனால், கெட்டுப் போகிறவர்கள் அதாவது இரட்சிப்பை விரும்பாதவர்களுக்கு தேவனுடைய ஊழியர்கள் மரணத்தைப் போல காணப்படுகிறார்கள்.*
*பிரியமானவர்களே! தேவனுடைய ஊழியர்கள் நமக்கு எப்படி இருக்கிறார்கள்? ஊழியர்களுடைய வருகையும் அருகாமையும் நமக்கு சந்தோஷத்தைத் தருகிறதா? இல்லாவிட்டால் எரிச்சலைத் தருகிறதா? தேவ ஊழியர்களோடு நமக்கு ஐக்கியம் இல்லாவிட்டால் நம்முடைய நிலை பரிதாபம் என்பதை அறிந்துகொள்ளலாம். எனவே, மனந்திரும்புவோம், தேவ ஊழியர்களோடு ஐக்கியம் கொள்ளுவோம், ஆசீர்வாதமாயிருப்போம்.*
*" உமது பரிமளதைலங்கள் இன்பமான வாசனையுள்ளவைகள் " - உன் 1:3*
----------------------------------------------------------
🤔 *சிந்தனைக்கு* 🤔
*! தேவனுடைய ஊழியர்கள் தேவனுடைய வாசனை !*
*AROMA*
*“For we are to God the pleasing aroma of Christ among those who are being saved and those who are perishing.” - 2 Corin.2:15*
*Paul, the servant of God, says that he is the aroma of God. Aroma means fragrance. See what a great thing it is that all God's servants are the fragrance of God. Some people use only one particular perfume. As soon as that aroma reaches our nostrils, we know that that particular person is coming, even if we don't see them. Paul says that the fragrance of God should come from God's servants.*
*If we read the whole of today's meditation section, we can know what god's aroma will do. When Paul writes that those who are being saved will be the fragrance of life and those who are perishing will be the fragrance of death. We can know that there will be a great impact on the places where God's servants go. When those who have anything to be saved see God's servants, their hearts rejoice and they praise God for God's servants. But God's servants will be seen as death to those who perish, that is, who do not desire salvation.*
*Beloved, How are god's servants to us ? Does the presence and proximity of God’s servants bring us happiness? If not, is it irritating? If we do not have unity with God's servants, we can know that our situation is miserable. So let us repent, let us unite with God's servants, and let us be blessed. Hallelujah!*
*“Pleasing is the fragrance of your perfumes;” - Song of Songs 1:3*
*வேதபகுதி: நீதி 8:1-36*
*" மீறாதபடிக்கு எல்லை "*
*“ சமுத்திர ஜலம் தன் கரையை விட்டு மீறாதபடிக்கு அதற்கு எல்லையைக் கட்டளையிட்டு, பூமியின் அஸ்திபாரங்களை நிலைப்படுத்துகையிலும் " - நீதிமொழிகள் 8:29*
*பூமி, மூன்றில் இரண்டு பங்கு தண்ணீரால் நிரம்பியிருக்கிறது. மூன்றில் ஒரு பங்கில் மட்டும்தான் நிலப்பரப்பு இருக்கிறது. தேவனாகிய கர்த்தர் வானத்தையும் பூமியையும் உண்டாக்கின நாளில் தண்ணீரெல்லாம் ஒரிடத்தில் சேரவும், வெட்டாந்தரை காணப்படவும் கடவது என்று கூற, அப்பொழுது இருந்த எல்லாத் தண்ணீரும் ஒரிடத்தில் சேர்ந்தது. அதற்கு சமுத்திரம் என்று பேரிட்டார். தண்ணீர்களுக்கு நடுவில் அங்காங்கே வெட்டாந்தரை காணப்பட்டது. அதற்கு பூமி என்று பேரிட்டார்.*
*இப்பொழுது நமக்கு ஓரளவுக்குப் புரியும். நாம் வாழும் வெட்டாந்தரையானது தண்ணீர்களுக்கு நடுவில்தான் இருக்கிறது. நம்மைச் சூழ்ந்திருக்கும் தண்ணீர் கொஞ்சம் ஆக்ரோஷமாக ஆர்ப்பரித்து எழும்பினால் போதும், மொத்த நிலப்பரப்பும் காணாமல் போய்விடும். ஆனால் அப்படி நடக்காதபடிக்கு தண்ணீர்களுக்கு எல்லையை நிர்ணயித்து, இதை மிஞ்சி வராதே என்று தேவன் கட்டளையிட்டார். தேவன் குறித்திருக்கும் எல்லையை விட்டு மீறி இதுவரைக்கும் தண்ணீர் வரவில்லை. எனவேதான் நாம் இன்றும் ஜீவனோடிருக்கிறோம்.*
*தேவப்பிள்ளையே ! அவ்வளவு திரளான தண்ணீர்களுக்கு எல்லையைக் குறித்து, அவைகள் மீறி வரமுடியாதபடிக்குச் செய்த தேவன் நம்மைச் சூழ்ந்து நிற்கும் பிரச்சனைகளுக்கும் ஒரு எல்லையை நிர்ணயம் பண்ணமாட்டாரா? பிரச்சனைகள் மீறி வராதபடிக்குக் கட்டளையிடமாட்டாரா? நிச்சயமாய் செய்வார். ஆனால் நாம் தேவனை விசுவாசியாமல் பிரச்சனைகளைக் கண்டு பயப்படுகிறோம். கடற்கரைக்குச் சென்றால் தண்ணீர் நம் அருகில் இருக்கும். ஆனால் அவைகளால் நம்மைத் தொடமுடியாது. அப்படியே பிரச்சனைகளும் நம்முடைய கண்களுக்குத் தெரியும், ஆனால் நம்மை சேதப்படுத்த முடியாது. அந்த அளவுக்கு தேவன் அவைகளுக்கு எல்லையை தீர்மானித்திருக்கிறார். எனவே, அமைதலோடு, சமாதானமாயிருப்போம், சுகமாயிருப்போம். அல்லேலூயா !*
*" நீ பயப்படாதே, நான் உன்னுடனே இருக்கிறேன் " - ஏசாயா 41 : 10*
🤔 *சிந்தனைக்கு* 🤔
*! தேவனுடைய வல்லமை எல்லையில்லா பாதுகாப்பு !*
SET THE BOUNDARY*
*“When he gave the sea its boundary so that the waters would not overstep his command, and when he marked out the foundations of the earth.” - Proverbs 8:29*
*Earth is two-thirds full of water. Only one third of it is land. On the day when the Lord God created the heavens and the earth, all the waters that were there gathered together in one place to say that all the waters were to pass over to be seen. He named it ‘sea’. Here and there in the midst of the waters were found dry ground which He named ‘land’.*
*Now we understand to some extent. The land we live in is in the middle of the waters. The water that surrounds us only needs to rise up a little aggressively, and the entire landscape will disappear. But so that this does not happen, God has set a limit for the waters and commanded them not to exceed this. Water has not yet come beyond the bounds set by God. That is why we are alive today.*
*O child of God! God, who has made it impossible for so many waters to overflow, will not set a limit for the problems that surround us? Won't He order that problems don't arise? Will definitely do. But we do not believe in God and are afraid of problems. If we go to the beach, the water is close to us. But they cannot touch us. Our eyes can see the same problems. But we cannot be harmed. To that extent, God has determined the limit for them. So let us be calm and with peace, let us be at ease. Hallelujah!*
*“So do not fear, for I am with you” - Isaiah 41:10*
*வேதபகுதி: ஏசாயா 40:1-31*
*" நீ சொல்வானேன்? "*
*“ யாக்கோபே, இஸ்ரவேலே; என் வழி கர்த்தருக்கு மறைவாயிற்று என்றும், என் நியாயம் என் தேவனிடத்தில் எட்டாமல் போகிறது என்றும் நீ சொல்வானேன்? " - ஏசாயா 40:27*
*தேவனுடைய பிள்ளைகள் கடினமான சூழ்நிலைகளைக் கடந்து போகும் போது, பல வேளைகளில் அவர்களுடைய இருதயம் வாடிப்போகிறது. நான் படும் பாடுகள், கஷ்டங்கள் அனைத்தையும் தேவன் பார்க்கிறாரா? என்னுடைய நீதியான செயல்கள் தேவனிடத்தில் சேரவில்லையோ என்றெல்லாம் யோசிக்கத் தோன்றுகிறது. என்னுடைய காரியங்கள் நான் செய்யும் நல்ல செயல்கள், ஏழைகளுக்கு உதவுதல், காயப்பட்டோருடைய காயங்களைக் கட்டுதல் போன்ற காரியங்கள் அனைத்தும் தேவனிடம் சேர்ந்திருந்தால் எனக்கு ஏன் இந்த நிலைமை என்றும், என்னுடைய நிலைமை என்றோ மாறியிருக்கும் என்றும் யோசிக்கிறோம்.*
*இப்படிப்பட்ட யோசனைகளுக்கும், வார்த்தைகளுக்கும் தேவனுடைய பதில் என்ன தெரியுமா? என்னுடைய பிள்ளையே, பாடுகளுக்கு மத்தியில் நீ சோர்ந்து போனாய், ஆனால் உன்னை உண்டாக்கிய நான் சோர்ந்து போகவில்லை, இளைப்படையவுமில்லை. இந்தப் பாடுகளுக்கு நடுவில் உன்னைப் பத்திரமாக நடத்த என்னாலே முடியும். உன்னைத் தாங்கிப் பிடிக்க எனக்குப் பெலனுண்டு என்று கூறி, இன்னும் கொஞ்சக் காலத்தில் கழுகைப்போல நீ புது பெலனடைந்து எழும்புவாய் என்று கூறி நம்மை ஆச்சரியப்படுத்துகிறார்.*
*தேவப்பிள்ளையே! நம்முடைய நினைவுகள், பெருமூச்சுகள், நடக்கைகள், நாம் நடந்து வரும் பாதைகள் என எல்லாவற்றையும் தேவன் நன்றாகவே அறிவார். அவருடைய கண்களுக்கு மறைவானவைகள் எதுவும் இல்லை - எரேமியா 23:24. எனவே, தேவனுடைய பிள்ளைகளாகிய நாம் அவருக்குக் காத்திருக்க வேண்டும். அவர் கிரியை செய்யும்வரைக்கும் காத்திருக்க வேண்டும். எல்லாவற்றையும் அறிந்திருக்கும் தேவன் நிச்சயம் நமக்காகக் கிரியை செய்வார். அப்பொழுது நாம் சுகமாய், ஆசீர்வாதமாய் இருப்போம். அல்லேலூயா !*
*" என் தேவனே, உம்மை நம்பியிருக்கிறேன், நான் வெட்கப்பட்டுப்போகாதபடிச்செய்யும் " - சங் 25 : 2*
*! கர்த்தரை நம்புவது ஒருபோதும் நம்மைக் கைவிடாது !*
*WHY DO YOU SAY?*
*“Why do you complain, Jacob? Why do you say, Israel, ‘My way is hidden from the Lord; my cause is disregarded by my God’'? - Isaiah 40:27*
*When God's children go through difficult situations, many times their heart withers. Does God see all my sorrows and hardships? It seems to me that my righteous deeds do not belong to God. If my deeds, the good deeds I do, helping the poor, binding the wounds of the wounded, etc., all belong to God, then we wonder why I have this situation and it would have changed long back.*
*Do you know what God's answer is to such thoughts and words? “My child, you are weary in the midst of your sorrows, but I who made you, is not weary, nor rest. I can hold you safe in the midst of these trials.” He surprises us by saying, “I am strong enough to hold you up and that you will rise again like an eagle in a short time.”*
*God knows our thoughts, our sighs, our steps, the paths we walk. There is nothing hidden from His eyes - Jeremiah 23:24. Therefore, we as God's children must wait for Him. We have to wait till His action. God who knows everything will surely work for us. Then we will be safe and blessed. Hallelujah!*
*“In you, Lord my God, I trust in you; do not let me be put to shame” - Psalm 25:2*
🤔 *For Thought* 🤔
*TRUSTING IN THE LORD WILL NEVER FAIL US.*
Brother J. Daniel
Yesuveh Aatharam Ministries
1/1711, 1st Floor, T.H. Road
Gandhi Nagar, Red Hills,
Chennai – 600 052
Mobile: +919940018988
Email id: jesusthefoundation@gmail.com
Thanks for using my website. Post your comments on this