Type Here to Get Search Results !

நியாயந்தீர்க்க | மிஞ்சின பாரம் | DID NOT REMEMBER | Daniel Bible Study in Tamil | Jesus Sam

வேதபகுதி: 1 நாளா 16:11-36*

*" நியாயந்தீர்க்க "*

*" அப்பொழுது கர்த்தருக்கு முன்பாகக் காட்டுவிருட்சங்களும் கெம்பீரிக்கும்; அவர் பூமியை நியாயந்தீர்க்க வருகிறார் " - 1 நாளாகமம் 16:33*




*நியாயத்தீர்ப்பு என்றால், நியாயத்தைத் தீர்த்து வைத்தல் என்பது அர்த்தமாகும். எது நியாயம், எது அநியாயம் என்று பார்த்து, அவைகளை தீர்த்து வைப்பதாகும். ஆண்டவராகிய இயேசு பூமியை நியாயந்தீர்க்க வரப்போகிறார் என்று இந்தச் செய்தியை உலகுக்கு முதன் முதலாகக் கூறினவர், ஆதாமுக்கு ஏழாந்தலைமுறையான ஏனோக்கு என்பவராவார். இவர் இருக்கும்போது இயேசு பிறக்கவே இல்லை. அப்பொழுதே இயேசுவின் இரண்டாம் வருகையைக் குறித்தும், அவர் பூமியை நியாயந்தீர்ப்பதற்காக வருவார் என்பதையும் மிகத் தெளிவாகக் கூறினார். இவைகளையெல்லாம் பார்க்கும்போது, இயேசுவின் வருகை என்பது நிச்சயம், பூமியை நியாயந்தீர்க்கப் போவது சத்தியம் என்று நாம் அறிந்துகொள்ளலாம்.*




*தேவனுக்கு நியாயத்தீர்ப்பு கொடுக்கும் வேலை இருக்கிறது. இதற்காக அவர் எல்லாவற்றையும் கவனித்துக்கொண்டிருக்கிறார். அவரவர்கள் செய்த காரியங்களின்படி, அவரவர்களை நியாயந்தீர்க்கப் போகிறார். இப்பொழுது நமக்கு ஒரு கேள்வி வரலாம். எது நியாயம் ? எவைகளின் அடிப்படையில் தேவன் நியாயந்தீர்க்கப்போகிறார்? என்ற கேள்விகளுக்கு, கர்த்தருடைய வார்த்தைகளே நியாயம் என்றும், அவருடைய வார்த்தைகளின்படி நியாயந்தீர்க்கப்போகிறார் என்றும் நமக்குப் பதில் கிடைக்கும். இந்த வெளிச்சம் யாருக்குள் இருக்கிறதோ. அவர்கள் பாக்கியவான்கள்.*




*கர்த்தருடைய வசனத்தை அடிப்படையாகக் கொண்டுதான் நியாயத்தீர்ப்பு இருக்கும் என்று நாம் அறியும்போது, நாம் தேவனுடைய வசனங்களின்படி வாழ வேண்டும் என்ற தெளிவு நமக்கு வருகிறது. எனவே, வேத வசனங்களின்படி வாழ்வதற்கு நாம் கவலைப்பட்டு, அவைகளின்படி நடப்பதற்குப் பிரயாசப்பட வேண்டும். வேதவசனங்களின்படி நடப்பதற்குத் தேவையான ஆலோசனைகளையும், பெலனையும் தேவனிடத்திலிருந்து கேட்டுப் பெற்றுக்கொள்ள வேண்டும். அப்பொழுது நியாயத்தீர்ப்பில் நாம் தப்பிக்கொள்ளலாம். தேவனுடைய ராஜ்யத்தில் பங்கடையலாம். அல்லேலூயா !*




*" அவருடைய கற்பனைகளின்படி செய்கிறவர்கள் பாக்கியவான்கள் " - வெளி 22:14*

🤔 *சிந்தனைக்கு* 🤔
*! வசனத்தின்படி வாழ்வு விசனமில்லாத வாழ்வு !*


*TO JUDGE
*“Let the trees of the forest sing, let them sing for joy before the Lord, for he comes to judge the earth.” - 1 Chro.16:33*




*Judgment means to settle judgment. It is to see what is fair and what is unfair and settle them. The Lord Jesus will come to judge the earth. Enoch, the seventh generation from Adam, was the first to tell this message to the world. When he was there, Jesus was never born. It was then that he made it very clear about the second coming of Jesus and that he would come to judge the earth. When we see all these things, we can know that the coming of Jesus is the truth , that he will surely judge the earth*




*God has a job of judging. He is taking care of everything for this. He will judge them according to their deeds. Now we have a question. What is fair? To the questions on the basis of which God is going to judge, we get the answer that God's words are justice and He is going to judge according to His words. Blessed are those in whom this light resides.*




*When we know that judgment will be based on God's word, it becomes clear to us that we must live according to God's word. So we should be anxious to live according to the scriptures and strive to live according to them. We should ask God for the necessary advice and strength to walk according to the scriptures. Then we can escape judgment and share in God's kingdom. Hallelujah!*




*“Blessed are those who wash their robes, that they may have the right to the tree of life and may go through the gates into the city.” - Rev.22:14*

🤔 *For Thought* 🤔

LIFE ACCORDING TO VERSE - LIFE WITHOUT WORRIES.*


*வேதபகுதி: நியாயா 8:1-35*

*" நினையாமலும் "*

*" இஸ்ரவேல் புத்திரர் தங்களைச் சுற்றிலுமிருந்த தங்கள் எல்லாச் சத்துருக்களின் கையினின்றும் தங்களை இரட்சித்த தங்கள் தேவனாகிய கர்த்தரை நினையாமலும் " - நியாயாதிபதிகள் 8:34*




*மறதி என்பது ஒரு மிகப்பெரிய வியாதியாகும். ஆனால் பல வேளைகளில் இது நமக்கு பல நன்மைகளையும், பல வேளைகளில் தீமைகளையும் கொண்டு வருகிறது. நம்மைக் குறித்துத் தவறாக ஒருவர் பேசின வார்த்தைகளை நாம் மறந்து போவோமானால் அது நமக்கு நன்மையாக முடியும். ஒரு வேளை அவர்கள் பேசின வார்த்தைகளையெல்லாம் நாம் மறந்து போகாமல், அவைகளை ஞாபகத்தில் வைத்திருப்போமானால், அவர்கள்மேல் நாம் கசப்பு வைக்கவும், அவர்களை வெறுக்கவும் பண்ணும். அவர்கள் பேசின வார்த்தைகள் அனைத்தும் நம்முடைய ஞாபகத்துக்கு வரும்போது, நம்முடைய சமாதானத்தை அது கெடுத்து, நம்முடைய ஆரோக்கியத்தையும் பாதிக்கும். எனவே, இப்படிப்பட்ட வார்த்தைகளை நாம் மறந்துவிடுவது நமக்கு நல்லது.*




*ஆனால், தேவன் நமக்குச் செய்த நன்மைகள், நம்மை நடத்தி வந்த பாதைகள் இவைகளை நாம் மறந்துபோனால், அது நமக்குப் பிரச்சனைகளையும், ஆபத்துக்களையும் கொண்டு வந்துவிடும். இன்றைய தியான வசனத்தை நாம் கவனிக்கும்போது, இஸ்ரவேல் ஜனங்கள் தேவன் தங்களுக்குச் செய்த காரியங்களை மறந்து போனார்களாம். இதினிமித்தம் அவர்கள் கர்த்தருடைய வழியை விட்டுவிலகி, பொல்லாங்கானவைகளை நடப்பித்து, கடைசியில் தேவ கோபத்தில் விழுந்தார்கள்.*




*பிரியமானவர்களே ! தேவன் செய்த நன்மைகளை நாம் மறந்துபோகும்போது, அவர்மேல் உள்ள அன்பு குறையத் தொடங்குகிறது. அவர்மேல் உள்ள அன்பு குறையும்போது, அவரோடுகூட நேரம் செலவிட முடியாமல், அவருடைய வழியை விட்டு நாம் சீக்கிரத்திலே வெளியே சென்று பாவத்தில் விழ நேரிடுகிறது. தேவப்பிள்ளையே ! நம்முடைய வாழ்க்கையில் தேவன் செய்த காரியங்கள் அனைத்தையும் நாம் மறந்து போகாமல் அவைகளை நினைத்து, நாம் கர்த்தரை ஸ்தோத்தரிப்போம். தொடர்ந்து அவருடைய வழியில் நடப்போம். அப்பொழுது நாம் சுகமாயிருப்போம்.*


*" என் ஆத்துமாவே, கர்த்தரை ஸ்தோத்தரி; அவர் செய்த சகல உபகாரங்களையும் மறவாதே " - சங் 103:2*

🤔 *சிந்தனைக்கு* 🤔
*! கர்த்தரை மறப்பவர்கள் காணாமல் போவார்கள் !*


*DID NOT REMEMBER

*“And did not remember the Lord their God, who had rescued them from the hands of all their enemies on every side.” - Judges 8:34*


*Forgetfulness is a great disease. But at times it brings us many advantages and at other times disadvantages. If we forget the bad words someone has said about us, it can be good for us. If we do not forget all the words they spoke, but remember them, we will be bitter towards them and hate them. When we remember all the words they spoke, it destroys our peace and affects our health. So it is better for us to forget such words.*

*But if we forget the benefits that God has done for us, the paths that He has led us, it will bring us problems and dangers. As we look at today's meditation verse, the people of Israel forgot what God had done for them. Because of this, they turned away from God's way, did evil things, and finally fell into God's wrath.*

*Beloved, when we forget the good things God has done, our love for Him begins to wane. When our love for Him diminishes, we can't even spend time with Him, we leave His way, we quickly go out and fall into sin. Child of God, let us not forget all the things God has done in our lives, let us remember them and praise the Lord. Let us continue to walk in His ways. Then we will be safe. Hallelujah!*

*“Praise the Lord, my soul, and forget not all his benefits” - Psa.103:2*

🤔 *For Thought* 🤔

*THOSE WHO FORGET THE LORD WILL PERISH.*



*வேதபகுதி: எண் 11:1-35*
*" மிஞ்சின பாரம் "*


" இந்த ஜனங்களெல்லாரையும் நான் ஒருவனாய்த் தாங்கக்கூடாது; எனக்கு இது மிஞ்சின பாரமாயிருக்கிறது " - எண்ணாகமம் 11:14*




*தேவனுடைய பரிசுத்தவான்களும் அநேக நேரங்களில் புத்தியீனமாக சில காரியங்களைச் செய்திருக்கிறார்கள். கொஞ்சம் நிதானமாக யோசித்து செயல்பட்டால், நிச்சயமாகவே பல பிரச்சனைகளைத் தவிர்த்திருக்கலாம். ஆசீர்வாதங்களையும் இழந்து போகாமலிருந்திருக்கலாம். தேவனுடைய மனுஷனாகிய எலியா தனக்கு வந்த பிரச்சனையினிமித்தம் "போதும் கர்த்தாவே" என்று கூறினான். அதாவது இதுவரைக்கும் நான் செய்த ஊழியம் போதுமானது. நீர் என்னை இதுவரைக்கும் பயன்படுத்தினிரே, இதுவரை நான் உம்முடைய சித்தம் செய்தேனே, இது போதும் என்று கூறினான். உடனே தேவனும், உன்னுடைய ஸ்தானத்திலே எலிசாவையும், ஆசகேலையும், யெகூவையும் அபிஷேகம்பண்ணு என்று கூறி, அவன் செய்த வேலையை இந்த மூன்று பேருக்கும் பிரித்துக் கொடுத்தார். எலியாவின் ஊழியம் அத்தோடு முடிந்துபோயிற்று.*




*மோசேயும் இவ்விதமாகவே தேவனிடம் கூறுகிறான். இது எனக்கு மிஞ்சின பாரம், என்னால் இதைத் தாங்க முடியவில்லை. எனவே, இப்பொழுதே என்னைக் கொன்று போடும் என்று வேண்டிக்கொண்டான். உடனே கர்த்தர் வேறு எழுபதுபேரை தெரிந்தெடுக்கும்படிச் செய்து, மோசேயின் மேலிருந்து ஆவியை எடுத்து, எழுபது பேருக்குப் பிரித்துக் கொடுத்தார். மோசே இவ்விதமாய்த் தன்னுடைய தனித்துவத்தை இழந்து போனான்.*




*இவர்கள் என்ன செய்திருக்க வேண்டும்? என்னால் தாங்க முடியவில்லை, எனக்குப் பெலன் தாரும், கிருபை தாரும் என்று கேட்டிருந்தால், தேவன் அவர்களை பெலப்படுத்தியிருப்பார். அவர்கள் தங்களுடைய ஆயுசுநாட்கள் முழுவதும் சந்தோஷமாக ஊழியங்களை நிறைவேற்றி முடித்திருக்கலாம். நாமும் இவர்களைப் போல பேசிவிடக்கூடாது. பிரச்சனைகள் நெருக்கங்கள் வரும்போது போதும் என்று கூறாமல், அவைகளைத் தாங்குவதற்கு தேவையான பெலனையும் கிருபையும் தேவனிடம் கேட்டுப் பெற்றுக்கொள்ள வேண்டும். அப்பொழுது தேவனுடைய சித்தம் பரிபூரணமாக நிறைவேறும் நாமும் ஆசீர்வாதமாயிருப்போம்.*

*" என்னைப் பெலப்படுத்துகிற கிறிஸ்துவினாலே எல்லாவற்றையுஞ்செய்ய எனக்குப் பெலனுண்டு " - பிலி 4:13*

🤔 *சிந்தனைக்கு* 🤔
*! தேவனைத் தேடாதவர்கள் தேடினாலும் காணப்படமாட்டார்கள் !*


*Today’s Bible Reading: Numbers 11:1-35*

*TOO HEAVY*

*“I cannot carry all these people by myself; the burden is too heavy for me.” - Numbers 11:14*




*God's saints have often done some foolish things. A little bit of calm thinking and action can certainly avoid many problems. Blessings may not be lost. Elijah, the man of God, said, "Enough, Lord," because of the trouble that came upon him. That is, the ministry I have done so far is enough. You have used me so far. So far I have done your will, he said, "This is enough." Immediately God said, "Anoint Elisha, Ezekiel, and Jehu in your place," and divided the work he had done among these three men. Elijah's ministry ended with that.*




*Moses also tells God in this way. This is too much for me. "I can't bear this. So kill me right now," he prayed. Then the Lord chose seven others, took the spirit from Moses, and divided it among the seventy. Moses thus lost his individuality.*




*What should they have done? I could not bear it, God would have strengthened them if they had asked him to give them grace and mercy. They may fulfill and complete their duties happily throughout their life days. We should not talk like them. When problems and crises come, we should not say that it is enough, but ask God for the necessary strength and grace to bear them. Then God's will will be perfectly fulfilled and we will be blessed. Hallelujah!*




*“I can do all this through Christ who gives me strength.” - Phil.4:13*




🤔 *For Thought* 🤔




*THOSE WHO DO NOT SEEK GOD WILL NOT BE FOUND EVEN IF THEY SEEK.*


Brother J. Daniel
Yesuveh Aatharam Ministries
1/1711, 1st Floor, T.H. Road,
Gandhi Nagar, Red Hills,
Chennai – 600 052*
Mobile: +919940018988
Email id: jesusthefoundation@gmail.com
You tube : Yesuveh Aatharam

Tags

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.