=====================
முன்னோடி மிஷனெரிகளின் வாழ்க்கை சரிதை
அலெக்ஸாண்டர் டஃப் (1806-1878)
====================
அலெக்ஸாண்டர் டஃப் அவர்கள் ஸ்காட்லாந்து தேசத்தில் 1806 ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 26 ம் நாள் பக்திமிக்க மற்றும் செல்வந்த பெற்றோர்களாகிய ஜேம்ஸ் டஃப் தம்பதியருக்கு மகனாக பிறந்தார். இளமையிலே கல்வி அறிவில் சிறந்து விளங்கினார். ஆகவே கல்லூரி படிப்பிற்காக ஸ்காட்லாந்தில் புகழ்பெற்ற ஆண்ட்ரூஸ் பல்கழைகளகத்தில் சேர்ந்து (St. Andrew University) அறிவியல் படிப்பில் சிறந்தவராய் முனைவர் பட்டம் பெற்றார்.
இந்நிலையில் 1820 ம் ஆண்டுகளில் ஸ்காட்லாந்து திருச்சபையில் எழுப்புதல் உண்டாயிற்று. இது தேசமெங்கும் தீ போல் பரவி ஒவ்வொருவருக்கும் உயிர் மீட்சியும், மிஷனெரி தரிசனமும் அடைந்தார்கள். இதனால் நற்செய்திபணி செய்ய அநேகர் முன்வந்தார்கள்.
இந்நிலையில் ஆண்டவர் அலெக்ஸாண்டர் டஃப் அவர்களை நற்செய்திபணி செய்ய அழைத்தார். இதை உணர்ந்துகொண்டு ஸ்காட்லாந்து தேசத்தில் உள்ள வேதாக கல்லூரியில் சேர்ந்து எபிரேயம், கிரேக்கு, இலத்தீன் மொழிகளில் வேதாகமத்தை கற்றும் மற்றும் இறையியல் கல்வி பயின்று சிறந்த வேதபண்டிதராக 1829 ம் ஆண்டு வெளிவந்தார்.
இந்நிலையில் 1929 ம் இண்டு ஸ்காட்லாந்து தேசத்தில் நடைபெற்ற மிஷனெரி தரிசன கூடுகையில் பங்குபெற்றார்.
அப்போது மிஷனெரி தரிசன பொறுப்பாளர் இந்தியாவில் நற்செய்திபணி பெரும்பாலும் தாழ்ந்த ஜாதி மக்களிடமே செய்யப்பட்டு கொண்டு இருக்கிறது. ஆனால் இந்தியாவில் உள்ள இந்துமத பிராமணர்கள், பணக்கார பொரி முஸ்லிம் சமுதாயத்தார், உயர்ந்த ஜாதி மக்கள் மற்றும் செல்வந்தர்களிடம் நற்செய்திபணியை செய்வதற்கு சரியான வழிமுறைகள் இல்லாமல் இருந்ததினால் அவர்களிடம் நற்செய்திபணி எடுபடவில்லை. என்பதை கூறி இந்தியாவில் நற்செய்தி பணிக்காக மிஷனெரி அறைகூவல் விடுத்தார்கள்.
இதை ஏற்றுக்கொண்ட அலெக்ஸாண்டர் டஃப் தன்னை இந்தியாவிற்கு கடல் கடந்து சென்று நற்செய்திபணி அறிவிக்க அற்பணித்தார். பின்னர் Church of Schotland Mission Society ல் வெளிநாட்டு ஊழிய தலைவராக நியமிக்கப்பட்டார். இவர்தான் சர்ச் ஆப் ஸ்காட்லாந்து திருச்சபையின் (Church of Scotland) கடல் கடந்து சென்று நற்செய்திபணி அறிவிக்கும் முதல் மிஷனெரி ஆவார். ஆகவே 1829 ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் 12 ம் நாள் St. George Church, Edinburgh ல் குருவானவராக அருட்பொளிவு செய்யப்பட்டார்.
அலெக்ஸாண்டர் டஃப் அவர்கள் இந்தியாவில் உள்ள உயர்ஜாதி மக்களுக்கு எப்படியும் நற்செய்திபணியை அறிவிக்க, புதிய தரிசனத்தோடு அறிவிக்க, தன் மனைவி அனி ஸ்காட் அவர்களோடு 1830 ம் ஆண்டு ஜனவரி மாதம் 20 ம் நாள் ஸ்காட்லாந்திலிருந்து இந்தியாவிற்கு கடற்பயணத்தின் மூலம் வந்து கொண்டிருந்தபோது இறுமுறை கப்பற்சேதங்களை கடந்து வந்தார். இதில் இவருடைய 800 புத்தகங்களும், உடைமைகளையும், கல்வி சான்றிதழ்களையும் இழக்க கொடுத்தார். ஆயினும் மனம் தளராமல் இந்தியாவில் கல்விபணி மற்றும் நற்செய்திபணி அறிவிக்க 1830 ம் ஆண்டு மே மாதம் 27 ம் நாள் கல்கத்தா வந்து இறங்கினார்.
கல்கத்தா வந்து இறங்கிய அலெக்ஸாண்டர் டஃப் உயர்ஜாதி மாணவர்களுக்கு புதிய தரிசனமான கலை மற்றும் அறிவியல் பாடங்களை ஆங்கிலத்தில் கற்றுகொடுத்து அதன் மூலம் வேதாகமத்தையும் போதித்து இதனால் அவர்கள் மூடநம்பிக்கைகளை ஒழித்து, அவர்களது அறிவு கண்களை திறந்து இயேசுவே இரட்சகர் என்பதை ஏற்றுக்கொள்ள தன்னை ஆயத்தம் செய்தார். இதன் மூலம் இந்தியாவில் கிறிஸ்தவத்தை மேல்ஜாதி மக்களுக்கும் அறிவித்து அநேக ஆத்தும ஆதாயம் செய்யமுடியும் என்பது இவருடைய அசையாத நம்பிக்கை.
ஆகவே அலெக்சாண்டர் டஃப் உயர்ஜாதி இந்துக்களையும் முஸ்லிம்களையும் மெதுவாக கிறிஸ்துவை ஏற்றுக்கொள்ள செய்ய மேற்கத்திய கல்வி முறையை பயன்படுத்துவதற்கான கொள்கைகளை வகுத்தார். வேதாக படிப்புகளையும் இயற்பியல் அறிவியலையும் கற்பிப்பதன் மூலம் மாணவர்களை தர்க்க ரீதியாக இந்து மதத்தின் முரன்பாடுகளையும் நடைமுறைக்கு மாறான தன்மையையும் உணர்ந்து கிறிஸ்தவத்தின் உண்மையை முழுமனதுடன் ஏற்றுக்கொள்வார்கள் என்று நம்பினார். இந்தியா இயேசுவுக்கு சொந்தமாக வேண்டும் என்றால் கல்வி அறிவும் வேதாகம அறிவும் முக்கியம் என்பதை உறுதியாய் நம்பினார்.
அலெக்ஸாண்டர் டஃப் அவர்கள் 1830 ம் ஆண்டு ஜூலை மாதம் 13 ம் நாள் கல்கத்தாவில் இந்தியாவில் முதன்முறையாக ஒரு ஆங்கில பள்ளியை 5 பெங்காலி உயர்ஜாதி மாணவர்களுடன் ஆரம்பித்து, ஒரு வாரம் முடிவதற்குள் பெங்காளி மொழி பேசும் 300 உயர்ஜாதி மாணவர்கள் சேர்ந்துவிட்டனர். தினமும் ஆறு மணி நேரம் இவர்களுக்கு ஆங்கில மொழியை கற்றுக்கொடுத்து, அப்படியே வேதாகமத்தை ஆங்கிலத்தில் படிக்க வைத்தார். இது இன்று கல்கத்தாவில் Scottish Church College என்று அழைக்கப்படுகின்றது.
அலெக்ஸாண்டர் டஃப் அவர்கள் மேற்கத்திய தத்துவம், சரித்திரம், கணிதம், உயிரியல் மற்றும் அறிவியல் பாடங்களை ஆங்கிலத்தில் சொல்லிக்கொடுத்தாலும் கிறிஸ்துவின் போதனைகளுக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்தார். இவரால் ஆரம்பிக்கப்பட்ட பாடசாலையில் மூன்று ஆண்டுகளுக்குள் 3000 த்திற்கும் அதிகமான மாணவர்கள் ஆங்கில முறை கல்வி கற்றார்கள். மேலும் இந்தியாவில் முதன்முறையாக உயர் ஜாதி பெண்களுக்கு என்று 1940 ம் ஆண்டு தனி பாடசாலையும் ஆங்கில கல்விமுறையில் ஏற்படுத்தினார்.
அலெக்ஸாண்டர் டஃப் அவர்கள் ஆங்கிலத்தில் கிறிஸ்தவ நற்செய்தி கூட்டங்களை ஒழுங்கு செய்து அநேகரை கிறிஸ்துவின் போதனையில் வளரச்செய்தார். இடைவிடாத கல்விப்பணி மற்றும் நற்செய்திபணியினால் அநேக மேல்ஜாதி இளைஞர்கள் கிறிஸ்துவை ஏற்றுக்கொண்டு அவரை பின்பற்ற ஆரம்பித்தார்கள். இவர்களில் பெரும்பாலோனோர் சமுதாயத்தில் மூடநப்பிக்கைக்கு எதிராக பெரிய தாக்கத்தை ஏற்படுத்தினார்கள். இதில் பலர் நற்செய்திபணி மற்றும் போதக ஊழியத்தில் ஆர்வர் காட்டினார்கள். அநேக மேல்ஜாதி இளைஞர்கள் இயேசுவை ஏற்றுக்கொண்டார்கள். இதில் குறிப்பிடதக்கவர்கள் கிறிஷ்ண மோகன் பாணர்ஜி, லால் பெகாரி டே, மகேந்திர லால், கைலாஷ் சந்திர முக்கர்ஜியா, உமேஷ் சந்திர சர்க்கார் போன்றவர்கள் ஆவர். இவர்களுக்காக The Episcopal Church ஒன்றை ஆரம்பித்தார். இதனால் வங்காளத்தில் புது யுகம் தோன்றியது.
இதையெல்லாம் உண்ணிப்பாக கவனித்துக்கொண்டிருந்த இந்துமத பூசாரிகள் அலெக்ஸாண்டர் டஃப் அவர்களின் ஆங்கில வழி மேற்கத்திய கல்வி முறையை ஏற்றுக்கொண்டாலும் இவரின் நற்செய்திபணியை கடுமையாக எதிர்த்தார்கள். ஆகவே 1847 ம் ஆண்டு பிரம்ம சமாஜ் என்ற இந்து மிஷனெரி ஸ்தாபனத்தை நிறுவி கிறிஸ்தவர்களாக மாறிய மேல்ஜாதி மக்களை தாய் மதம் திரும்பு வற்புறுத்தினார்கள். ஆயினும் அவர்களுக்கு பலன் கிட்டவில்லை.
அலெக்ஸாண்டர் டஃப் அவர்களின் ஆங்கில முறை கல்வியோடு நற்செய்திபணியும் சிறந்து விளங்கியதை கண்ட இந்தியாவின் நற்செய்தி பணியின் தந்தை என்று அழைக்கப்பட்ட வில்லியம் கேரியும், இந்து மதத்தில் நன்கு படித்தவரும் பரந்த மனப்பான்மை கொண்ட இந்திய சமுதாய சீர்திருத்தவாதியான இராஜா ராம் மோகன் ராயும் அதிக ஆதரவு கொடுத்தார்கள்.
அலெக்ஸாண்டர் டஃப் அவர்களின் சிறந்த கல்விமுறையினால் உயர்ஜாதி மக்கள் மத்தியில் பெரிய விழிப்புணர்வு ஏற்பட்டு இந்தியாவில் சமூக மூடநம்பிக்கையான சதி அல்லது உடன்கட்டை ஏறுதல், குழந்தை திருமணம், குழந்தை நரபலி, பெண் சிசு கொலை மற்றும் தேவதாசி முறைமைகளுக்கு எதிராக போராட ஒரு கூட்ட மேல்தட்டு வர்க்க மக்கள் எழும்பியது. இது அலெக்ஸாண்டர் டஃப் அவர்களின் ஆங்கில வழி கல்விக்குபணி மற்றும் நற்செய்திபணிக்கு கிடைத்த வெற்றியாகும்.
அலெக்ஸாண்டர் டஃப் அவர்கள் 25 க்கும் அதிகமான புத்தகங்களை எழுதி வெளியிட்டார். அவைகளில் சிறந்தது இந்தியாவில் ஆங்கில மொழி மற்றும் இலக்கியத்தின் புதிய சகாப்தம் (1837), கர்த்தராகிய இயேசு கிறிஜ்துவின் தலைமை (1844), மிஷனெரிகள் முகவரிகள் (1850), ஆகிவை ஆகும். மேலும் கல்கத்தா வில் ஒரு மருத்துவமனையும், கல்கத்தா பல்கழைக்களகமும் இவருடைய கடுமையான முயற்ச்சியினால் ஏற்படுத்தப்பட்டது.
அலெக்ஸாண்டர் டஃப் அவர்கள் ஒரு மிகச்சிறந்த கல்விப்பணியாளராகவும் சொல்வன்மை நிறைந்த நற்செய்தி பணியாளராகவும் சிறந்து விளங்கினார். இவர் மிஷனெரி பணி நிமித்தமாக இங்கிலாந்து, அயர்லாந்து, ஸ்காட்லாந்து, வேல்ஸ் மற்றும் அமெரிக்கா போன்ற நாடுகளுக்கு பிரயாணம் செய்து அங்குள்ள திருச்சபைகளில் போதித்து, வாலிபர்களையும் யுவதிகளையும் சந்தித்து அவர்களுக்கு மிஷனெரி தரிசனத்தை கொடுத்ததினால் நூற்றுக்கணக்கான வாலிபர்கள் மற்றும் யுவதிகள் வெளிநாடுகளுக்கு நற்செய்திபணி செய்ய கடந்து சென்றார்கள்.
அலெக்ஸாண்டர் டப்ஃ அவர்களின் ஆங்கில முறை கல்விப்பணி மற்றும் நற்செய்திபணி அறிவிக்கும் முறையை மற்ற மிஷனெரி ஸ்தாபனங்களும் உலகம் முழுவதிலும் பின்பற்ற ஆரம்பித்தார்கள். இந்தியாவில் பல இடங்களில் ஆங்கில கல்வி முறை அறிமுகம் செய்யப்பட்டது. ஜான் வில்சன் என்ற ஸ்காட்லாந்து மிஷனெரி மும்பை கிர்காவில் 1836 ம் ஆண்டு ஆங்கில கல்வியை அறிமுகம் செய்தார். இதைப்போல சென்னையில் ஜான் ஆண்டர்சன் என்ற ஸ்காட்லாந்து மிஷனெரி 1837 ம் ஆண்டு Madras Christian College ஒன்று நிறுவி ஆங்கில முறை கல்வியை அறிமுகம் செய்தார். இதனால் உயர்ஜாதி மக்கள் மற்றும் செல்வந்தர்களின் பிள்ளைகள் ஆங்கிலம் கற்றுக்கொண்டார்கள். அப்படியே அநேகர் கிறிஸ்துவையும் ஏற்றுக்கொண்டார்கள். இதில் சென்னையை சேர்ந்த A.J. அப்பாசாமி, சஞ்சையா, சக்கரையா ஆவார்கள்.
அலெக்ஸாண்டர் டஃப் அவர்களின் இடைவிடாத உழைப்பினால் அவருடைய சரீரம் மிகவும் பலவீனம் அடைந்தது. ஆகவே 1863 ம் ஆண்டு அவருடைய சொந்த தேசமான ஸ்காட்லாந்து தேசத்திற்கு திரும்பினார். பின்னர் அவருடைய சரீரம் முன்னேற்றம் அடைந்தபோது அங்குள்ள வேதாக கல்லூரியில் ஆசிரியராக பணிசெய்து அநேக வேதாகம கல்லூரி மாணவர்களை கிறிஸ்துவுக்குள் ஊன்ற கட்டினார். இந்நிலையில் 1865 ம் ஆண்டு இவருடைய மனைவி அனி ஸ்காட் அம்மையார் மரித்து விட்டார். ஆயினும் தொடர்ந்து 1867 ம் ஆண்டு எடின்பரோ வில் வேதாக கல்லூரியின் பேராசிரியராக பணி செய்து வந்த அலெக்ஸாண்டர் டப்ஃ அவர்கள் தன்னுடைய 72 ம் வயதில் 1878 ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 12 ம் நாள் நித்திய இளைப்பாறுதலுக்குள் கடந்து சென்றார்.
அலெக்ஸாண்டர் டப்ஃ அவர்கள் கல்விப்பணியிலும் நற்செய்திபணியிலும் பல சிகரத்தை தொட்டவர். இவருடைய நினைவாக கல்கத்தாவில் 1910 ம் ஆண்டு டஃப் சர்ச் (Duff Church) ஒன்று கட்டப்பட்டது. இவருடைய கல்விப்பணியை இந்தியர்கள் எவரும் மறக்க முடியாது. ஏனெனில் இன்றைக்கு நாமும், நம்முடைய பிள்ளைகளும் ஆங்கிலத்தில் பேசுவதற்கு காரணம் இவர் அறிமுகம் செய்த ஆங்கில கல்வி ஆகும்.
இன்றைக்கு நம்முடைய பிள்ளைகளுக்கு கல்வியில் அதிக முக்கியத்துவம் கொடுக்கும் நாம், ஆண்டவர் நம் பிள்ளைகளை அலெக்ஸாண்டர் டஃப் போல நற்செய்திபணிக்கு அழைப்பாரானால் அவர்களை அற்பணிப்பீர்களா? அன்பரே அறியாமை என்னும் இருளை அகற்ற உங்களைப்போல அற்பணிப்புள்ளோர் தேவை அல்லவா? யாரை நான் அனுப்புவேன், யார் நமது காரியமாய் போவான் என்று உரைக்கிற ஆண்டவருடைய சத்தத்திற்கு, இதோ அடியேன் இருக்கிறேன்; என்னை அனுப்பும் என்று முன் வாருங்கள். நன்றி இருக்கின்றது.
இதை வாசிக்கின்ற அன்பு தம்பி மற்றும் தங்கையே இன்று நீ கல்வியிலும், சமுதாய அந்தஸ்திலும் உயர்ந்து இருப்பதற்கு, உனக்காக மற்றும் உன்னுடைய வாழ்க்கை தரத்தை உயர்த்துவதற்காக, நம்முடைய ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் அழைப்பை ஏற்று, தன்னுடைய வாழ்க்கை, குடும்ப உறவுகள், சொத்து சுகங்கள் யாவற்றையும் ஒதுக்கி வைத்துவிட்டு, உன்னுடைய கிராமத்திற்கு வந்து, நற்செய்திபணியையும், சமுதாய நற்பணிகளையும் செய்த பல மிஷனெரிகளை அனுப்பி வைத்த அந்த ஆண்டவருக்கு நீ என்ன செய்ய போகின்றாய்?...நீ வா...நாம் எல்லோரும் சேர்ந்து நம்முடைய தலைமுறையில் இந்திய தேசத்தை ஆண்டவருக்கு சொந்தமாக்குவோம்.
இந்த மிஷனெரி சரித்திரத்தை வாசிக்கின்ற அன்பு தாய்மார்களே! தகப்பன்மார்களே! உங்கள் பிள்ளைகளை நம்முடைய ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் இராஜ்யத்தை கட்டும் இந்த கனமான ஊழியத்தை செய்ய ஒரு கல்வி மிஷனெரியாக, சமுதாய முன்னேற்ற மிஷனெரியாக, மருத்துவ மிஷனெரியாக, சுவிசேஷ மிஷனெரியாக இயேசு கிறிஸ்துவுக்கு சேவை செய்ய அற்பணிப்பீர்களா? ஊக்கப்படுத்துவீர்களா? தேவ இராஜ்யம் உங்கள் மூலமாய் தேவை நிறைந்த இந்திய தேசத்தில் கட்டப்படுவதாக. ஆமென்.
கிறிஸ்துவவில் அன்பானவர்களே!...இந்த மிஷனெரிகள் சரித்திர குழுவின் இனைப்பை உங்கள் உற்றார், உறவினர்கள், நண்பர்கள் யாவருக்கும் அனுப்பு வைக்கும்போது, அவர்களும் உங்களைப்போல மிஷனெரி தரிசனத்தை பெற்றுக்கொள்வார்கள். நன்றி.
==================
The Gospel Pioneers
Alexander Duff (1806-1878)
======================
Alexander Duff was born in the heart of Scotland. After receiving his initial schooling at a local country school, he made preparations to become an educational missionary that leads to him to study Science, Arts and Theology at the University of St. Andrews in Scotland and he was ordained in August 1829. The Scottish Church decided to send a missionary to India on an educational mission; Duff accepted the offer and become their first missionary to India.
In 1829, at the age of 23, he left for India with his new bride Anne Scott. After an adventurous voyage, their ship wrecked two times. All survived the disaster, but the cargo was lost. Duff had taken with him a library of 800 books, his journals, notes, memoranda and essays, of which 40 books were washed up in very poor state -only his Bible and Psalter surviving in reasonable condition. Finally,Duffs and other passengers reached safety in Calcutta on 27 May 1830.
When he arrived in Calcutta, Christian missions in India had been successful only in converting a few low-caste groups from a poor socio-economic background by giving them monetary benefits. The upper caste Hindu and Muslim communities had been practically untouched. Duff’s first task was to visit every missionary and mission station in and around the city and what he saw and heard caused him to formulate' a completely new plan for evangelizing of India through Christian education.
Duff devised the policy of using western system of education to slowly convert Hindus and Muslims to Christianity. Duff hoped that through a western education in a time of enlightenment, Indians would be able to see the flaws in their religion and be compelled to convert to Christianity. Duff was firmly convinced that education was the key to responsible missionary work and nation building.
Alexander Duff on July 13, 1830 marked the beginning of a new approach to learning, namely, English-language education in Calcutta. Although he had no building, he opened school with five pupils under a Banyan tree. While religious instruction was of special significance, he aimed to teach every branch of useful knowledge - elementary forms at first, advancing to the highest levels of study in history, literature, logic, mental and moral philosophy, mathematics, biology, physics and other sciences. By week's end, he had three hundred applicants.
Duff, with the assistance of a young untrained Eurasian spent six hours a day teaching 300 Bengali youths the English alphabet. These students were enriched with vocabulary and spiritual ideas derived from English literature. His mighty vision compelled him to produce a series of text books.
The use of the English language in his school was a great innovation, and brought down on him much unfavorable criticism, where he opened an English language school for Hindus and Muslims, combining Bible studies with aspects of Western science that challenged local religious beliefs.
He said that the future of India was dependent upon the future of the English language in India. He encountered much opposition to the system he was proposing, especially the idea of teaching in English. The operations of the mission were greatly enlarged. Branch schools, too, were formed in several villages in the neighborhood of Calcutta. Within two years; he had over a thousand students and the school soon began to expand into a missionary college. Duff attempted to civilize Indians during the period of British Governor-General William Bentick and Lord Wellesley. They were in open alliance with Christian missions for introducing English education.
The school, while giving an excellent Western education, was seeing conversions and producing a deeply committed and intellectually grounded Christian leadership. It was a leading feature of his plan from among the converts of the mission to train up native preachers of the gospel, it being his decided conviction that only through native teachers and preachers could India become Christian. Also as a result of his work, a number of Protestant colleges were founded in India.
Duff also concerned himself with the education of women and girls. He was responsible for, raising a considerable sum of money for missions, and establishing Madras Christian College. Duff had published Hindustani-English Dictionary. The success and influence of Duff’s college led to the founding of the Calcutta Medical College. This new idea allowed higher caste Indians to pursue medical professions, therefore advancing healthcare in India.
Duff’s active interest and involvement in the lives of the students brought several to Christ.. Most notably, Rev. Lal Behari Dey, Umesh Chandra, Krishna Mohan Banerjee and others. Duff had the support of the best-known early Indian reformer, Raja Ram Mohan Roy. They fought together for the eradication of social evils like Sathi, Child Marriage, Child Sacrifice, Devadasi etc.
Duff’s health compelled him to return to Scotland in 1863,. After returning to Scotland, Duff continued to work out "a grand strategy of the Kingdom of God." Unfortunately his wife Anne Scott died on Feb 12, 1865. He called for the establishment of chairs of missions in theological schools and in 1867 became the first professor of missions in a Protestant institution in Edinburgh. He also planned a training institute for missionaries and a scientific journal for dealing with all aspects of the Christian world task. Rev. Dr. Alexander Duff D.D, LLD died on Feb. 12, 1878, having won wide acclaim for his work. He was buried with his wife, Ann Scott in the Grange Cemetery in Edinburgh.
The Scottish missionary Alexander Duff was a pioneer of Christian education in India. He was a man who understood the importance of Jesus Christ and proclaiming his name in all the nations. The contributions he made to Indian education and missions are innumerable. He reminds us of his valuable contribution in Western English education in India in its early stages. India will forever be indebted to the Scottish missionary Alexander Duff for his zealous pursuit of educational advancement in English.
Dear brothers and sisters, today you have received good education, health and better life styles, it is because of many Christian missionaries who sacrificed their life for you in the past. Have you ever thought of the guiding hands behind it? Yes, it is none other than God himself who prepared missionaries and send to your village and gave the burden to uplift your life. In return, what shall you offer to God as thanksgiving? Think about it.
My dear parents will you encourage and dedicate your children to do God's work as educational missionary or medical missionary or Cross Cultural missionary for our Nation?
The Gospel came to India 2000 years back but still we are 2.8% of Indian population. The harvest is plenty but the labourers are few. So come...let's together build the Kingdom of God in our Nation and let's evangelize our Nation in Christ in our Generation.
Dear friends kindly introduce this group link to your friends, relatives and your Church members. May God bless you and use you for the extensions. With love and prayer...Rev. D. David Paramanantham, B.Sc., M.A. B.D. Gamaliel Bible College, Mumbai, India
Thanks for using my website. Post your comments on this