========================
முன்னோடி மிஷனெரிகளின் வாழ்க்கை சரிதை
கான்ஸ்டன்டைன் ஜோசப் பெஸ்கி (1680-1747)
=========================
கான்ஸ்டன்டைன் ஜோசப் பெஸ்கி அவர்கள் இத்தாலி தேசத்தில் வெனிஸ் மாநிலத்தில் காஸ்திக்கிளியோனே என்ற இடத்தில் 1680 ம் ஆண்டு நவம்பர் மாதம் 8 ம் நாள் பிறந்தார். இவர் 1698 ம் ஆண்டு தன்னுடைய பதினெட்டாம் வயதில் இயேசுவை சொந்த இரட்சகராக ஏற்றுக்கொண்டு நற்செய்திபணி செய்ய தன்னை அற்பணித்து துறவு பூண்டார். இதற்காக ஆங்கிலம், போர்த்துகீசியம் மற்றும் பிரெஞ்சு மொழிகளை கற்றுக்கொண்டார்.
பின்னர் ஜோசப் பெஸ்கி தன்னை யேசு சபை அல்லது Society of Jesus என்ற ரோமன் கத்தோலிக்க மிஷனெரி ஸ்தாபனத்தில் இணைத்துக்கொண்டார். ஆகவே வேதாக கல்லூரியில் சேர்ந்து இலத்தீன், எபிரேயம், கிரேக்கு மொழிகளில் வேதாகமத்தையும் இறையியலையும் நன்கு கற்று 1709 ம் ஆண்டு செப்டம்பர் மாதம் ரோமன் கத்தோலிக்க குரு பட்டம் பெற்றார்.
பின்னர் இந்தியாவில் குறிப்பாக தமிழ்நாட்டில் இராபட் நொபிலி ஆரம்பித்த மதுரை மிஷன் மூலமாக நற்செய்திபணி செய்யும்படி தன்னுடைய 30 ம் வயதில் இத்தாலியில் உள்ள லிஸ்பன் நகரிலிருந்து இருந்து புறப்பட்டு இந்தியாவில் 1710 ம் ஆண்டு அக்டோபர் மாதம் கோவா வந்து சேர்ந்தார். பின்னர் அங்கிருந்து கொச்சி வந்து கால்நடையாக அம்பலக்காடு வந்து பின்னர் 1711 ம் ஆண்டு மதுரை க்கு அருகே காமநாயக்கன்பட்டி வந்து சேர்ந்தார்.
ஜோசப் பெஸ்கி அவர்கள் மதுரையில் சங்கம் வைத்து தமிழ் வளர்த்த புலவர் சுப்ரதீபக் கவிராயரிடம் தமிழ் இலக்கணம், மற்றும் தமிழ் இலக்கியம் ஐந்து ஆண்டுகள் கற்று புலமை அடைந்தார். மேலும் தமிழ் மொழியொடு சமஸ்கிருதம், தெலுங்கு, கன்னடம், இந்துஸ்தானி, மலையாளம் போன்ற மொழிகளையும் சிறப்பாக கற்றுத்தேர்ந்தார்.
ஜோசப் பெஸ்கி அவர்கள் முதல் ஆறு ஆண்டுகளில் திருவையாருக்கு அருகிலுள்ள எலக்குறிச்சி, கோட்டப்பாளையம், வடுக்கர்பேட்டை போன்ற இடங்களில் நற்செய்திபணி செய்து அநேகரை ஆத்தும ஆதாயம் செய்தார். ஆகவே அங்கு சிறிய ஆலயங்கள் கட்டப்பட்டன.
ஜோசப் பெஸ்கி அவர்கள் உயர் குலத்தை சேர்ந்த பிராமணர்களுக்கும் நற்செய்திபணி அறிவித்து அவர்களை கிறிஸ்துவுக்குள்ளாக வழிநடத்த தீர்மானம் செய்து தன்னை ஒரு சன்னியாசியாக கான்பித்து, துறவு வாழ்க்கை மேற்கொண்டார். மேலும் இந்து மத பிராமணர்களைப்போல நெற்றியில் சந்தனம்பூசி, காதில் முத்துக்கடுக்கன் அணிந்து, காவி உடையை அணிந்துகொண்டு, புலித்தோல் பதிக்காப்பட்ட இருக்கையில் அமர்ந்து, மரக்கறி உணவை மாத்திரம் உட்கொண்டு பிராமணர்களின் கலாச்சாரத்தின்படி நற்செய்திபணி அறிவித்தார்.
மேலும் ஜோசப் பெஸ்கி அவர்கள் இந்துமத பிராமணர்களை விவாதத்திற்கு அழைத்து இந்து சமய நூல்களில் இருந்தே இயேசுவைப்பற்றி கூறப்பட்டுள்ளதை மேற்கோள்காட்டி கிறிஸ்துவை பிரசங்கித்தார். இதனால் நூற்றுக்கணக்கான இந்துமத பிராமணர்கள் கிறிஸ்துவை ஏற்றுக்கொண்டார்கள்.
இதைக்கண்ட இந்துமத பூசாரிகள் வெகுண்டு எழுந்து மன்னரிடம் பல தவறான தகவல்களை கூறினார்கள். ஆகவே இந்துமத பூசாரிகளின் தூண்டுதல் பேரில் 1714 ம் ஆண்டு மதுரையை ஆண்ட மன்னர், ஜோசப் பெஸ்கியை கைது செய்து, பாரபட்சம் கான்பித்து ஜோசப் பெஸ்கி அவர்களுக்கு மரண தண்டனை விதித்தார். ஆயினும் பெஸ்கி அவர்கள் பல சித்ரவதைகள் மற்றும் துன்புறுத்தல்களை சந்தித்து 1715 ம் ஆண்டு மரண தன்டனையிலிருந்து விடுதலை செய்யப்பட்டார். உள்ளுர் மன்னர்களின் விரோதத்தினால் அங்கிருந்த கிறிஸ்தவர்களை சந்திக்க அனுமதி மறுக்கப்பட்டது. ஆகவே ஜோசப் பெஸ்கி அவர்கள் கடலூர், இராமநாதபுரம் மற்றும் தஞ்சாவூர் பகுதிகளுக்கு நற்செய்திபணி அறிவிக்க கடந்து சென்றார்.
ஜோசப் பெஸ்கி அவர்கள் தமிழரோடு தமிழராய் வாழ்ந்தார். உணவிலும், உடையிலும், பழக்கத்திலும், வேறுபாடின்றி நற்செய்திபணி செய்தார். மேலும் இவர் ஒரு தொலைநோக்கு பார்வையாளராக இருந்தார். எல்லாவற்றிற்கும் மேலாக அவர் இந்துக்களுக்கு கிறிஸ்துவின் அன்பை கற்பிக்க வறுமை மற்றும் தமிழ் கலாச்சாரத்தை ஏற்றுக்கொண்டார்.
ஜோசப் பெஸ்கி அவர்கள் 1725 ம் ஆண்டு தமிழ்மொழியின் மீது கொண்ட பற்றின் காரணமாக தனது பெயரை தைரியநாத சாமி என்று மாற்றிக்கொண்டார். ஆனால் இந்த பெயர் வடமொழி என்பதால் தனது பெயரை செந்தமிழில் வீரமா முனிவர் என்று மாற்றிக்கொண்டார். இவர் தமிழ் மொழி மீது பற்று கொண்டு பல இடங்களுக்குச் சென்று தமிழ் இலக்கிய சுவடிகளை தேடி அலைந்தமையால் சுவடு தேடும் சாமியார் என்று அழைக்கப்பட்டார்.
ஜோசப் பெஸ்கி அவர்கள் நற்செய்தி பணியினால் அநேகர் கிறிஸ்துவை ஏற்றுக்கொண்டார்கள். தஞ்சாவூருக்கு அருகே பூண்டியில் பூண்டி மாதா பேராலயமும், தஞ்சாவூரில் வியாகுல மாதா தேவாலயம், பெரியநாயகி மாதா சன்னதி ஆலயம், எலக்குரிச்சியில் அடைக்கல மாதா ஆலயம், கோனான் குப்பத்தில் ஆரோக்ய மாதா தேவாலயம் என்று பல ஆலயங்களை கட்டினார். 1738 ஆண்டுவரை ஜோசப் பெஸ்கி அவர்கள் தஞ்சாவூர் பகுதியில் நற்செய்திபணி செய்தார்.
வீரமா முனிவர் ஐரோப்பிய நற்செய்தி பணியாளர்கள் தமிழ் மொழியை கற்றுக்கொள்ளவும், தமிழர்கள் ஐரோப்பிய மொழியை கற்றுக்கொள்ளவும் ஏதுவாக தமிழ்-இலத்தீன் அகராதியையும் பின்னர் தமிழ்-போர்த்துக்கீசிய அகராதியையும் உறுவாக்கினார். ஜோசப் பெஸ்கி என்ற வீரமா முனிவர் திருக்குறளை இலத்தீன் மொழியில் மொழிபெயர்த்தார்.
மேலும் ஜோசப் பெஸ்கி அவர்கள் தமிழ் மொழிக்கு மாபெரும் அருட்கொடைகளை வளங்கினார். தமிழ் உரைநடையில் வேத விளக்கம், வேதியல் ஒழுக்கம், ஞானக் கண்ணாடி, செத்தமிழ் இலக்கணம், பரமார்த்த குருவின் கதைகள் போன்ற நூல்களை இயற்றினார்.
வீரமா முனிவர் என்று அழைக்கப்பட்ட ஜோசப் பெஸ்கி அவர்கள் தமிழின் சிறப்பை ஐரோப்பியர்கள் அறிந்துகொள்ள திருக்குரள், தேவாரம், திருப்புகழ், நன்னூல், ஆத்திச்சூடி போள்ற பிற நூல்களையும் ஐரோப்பிய மொழியில் வெளியிட்டார்.
ஜோசப் பெஸ்கி அவர்கள் இந்துமதத்தின் மீது நேர்மறையான எண்ணம் கொண்டுருந்தார். ஆகவே திருக்காவலூர் கலம்பகம், அடைக்கல மாலை, அன்னை அழுங்கள், அந்தாதி, கித்தேரி அம்மாள் அம்மானை, கருணாம்பரப் பதிகம், லுத்தே இனத்து இயல்பு, போன்ற சிற்றிலக்கியங்களையும் சதுரகராதி என்னும் அகராதியையும், தொன்னூல் விளக்கம் என்ற இலக்கண நூலையும் வெளியிட்டார். இவையாவும் கிறிஸ்துவின் போதனையை இந்துமத புராண கதை பாத்திரங்கள் மூலமாக பாமர மக்களும் புரிந்து கொள்ளும் படி எழுதினார். இது அநேகரை சென்றடைந்தது.
ஜோசப் பெஸ்கி என்ற வீரமா முனிவர் தமிழ் இலக்கிய படைப்புகளால் மிகவும் அரிதாக கருதப்படும் தேம்பாவணி என்று அழைக்கப்படும் இயேசு காவியத்தில், கிறிஸ்துவின் அன்பை எளிமையாகவும், இனிமையாகவும் போதிக்க இயேசு கிறிஸ்துவின் வாழ்க்கை வரலாறு தொடர்பான நிகழ்ச்சிகளையும், பரிசுத்த வேதாகம செய்திகளையும், இயேசுவின் தந்தை யோசேப்பின் வாழ்க்கை வரலாறையும், வேதாகமத்தின் பழைய ஏற்பாடு மற்றும் புதிய ஏற்பாடு கதைகளையும் மூன்று கண்டங்களாக பிரித்து அதை 36 படலங்களாக கொண்டு மொத்தமாக 3615 வரிகளை பயன்படுத்தி கோனான்குப்பம் என்னும் இடத்தில் தேம்பாவணி காவியத்தை எழுதிமுடித்து வெளியிட்டார். இந்த தேம்பாவணி பெருங்காவியம் ஜோசப் பெஸ்கி அவர்களின் தமிழ் புலமைக்கு இன்றும் சான்றாக விளங்குகிறது.
1742 ம் ஆண்டு ஜோசப் பெஸ்கி என்னும் வீரமா முனிவர் மதுரை மிஷன் பணித்தளத்தை விட்டு திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள குருக்கள்பட்டி, ஏலாக்குறிச்சி, மணப்பாடு மற்றும் கோணார்குப்பம் போன்ற பகுதிகளில் நற்செய்திபணி செய்து அநேகரை கிறிஸ்துவின் சீஷராக்கினார். ஆகவே ஆங்காங்கு சிறிய ஆலயங்கள் கட்டப்பட்டது.
1745 ம் ஆண்டு திருநெல்வேலி மாவட்டத்தில் ஏற்பட்ட கடுமையான பஞ்சத்திலிருந்தும் கிறிஸ்தவர்களுக்கு எதிரான இந்துமத பூசாரிகளின் எதிர்ப்பிலும் பாதுகாத்து, அடைக்கலம் கொடுத்து காப்பாற்றினார். இதனால் அநேகர் திருநெல்வேலி பகுதியில் ரோமன் கத்தோலிக்க கிறிஸ்தவர்கள் ஆனார்கள்.
பின்னர் 1746 ம் ஆண்டு ஜோசப் பெஸ்கி அவர்கள் நற்செய்திபணியாளர்களை உறுவாக்க கேரள நாட்டிலுள்ள அம்பலக்காடு என்னும் இடத்தில் அமைந்திருந்த ரோமன் கத்தோலிங்க குருமடத்திற்கு அனுப்பப்பட்டார்.
ஜோசப் பெஸ்கி அவர்கள் அனேகரை குருத்துவ பணிக்கு ஆயத்தப்படுத்தி அவர்களை தமிழ்நாடு மற்றும் கேரளா பகுதிகளுக்கு கிறிஸ்துவின் நற்செய்திபணி செய்ய அனுப்பினார். இதனால் ரோமன் கத்தோலிக்க கிறிஸ்தவர்கள் தமிழ்நாட்டிலும் கேரளாவிலும் அதிகமானார்கள்.
பின்னர் 1747 ம் ஆண்டு திருநெல்வேலி மாவட்டத்தில் மணப்பாடு என்ற இடத்தில் நடைபெற இருந்த ரோமன் கத்தோலிக மிஷனெரிகளின் வருடாந்திர கூடுகையில் பேசுவதற்கு வந்த நேரத்தில் சுகவீனத்தினிமித்தமாக ஜோசப் பெஸ்கி அவர்கள் தன்னுடைய 67 ம் வயதில் 1747 ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 4 ம் நாளில் நித்திய இளைப்பாறுதலுக்ககு கடந்து சென்றார். பின்னர் அவருடைய சரீரம் கேரள மாநிலத்தில் திருச்சூரில் உள்ள அம்பலக்காடு என்ற இடத்தில் அடக்கம் செய்யப்பட்டது. இவருடைய 37 ஆண்டுகால நற்செய்திபணியினால் 12,000 த்திற்கும் அதிகமானோர் கிறிஸ்துவின் மந்தையில் சேர்க்கப்பட்டார்கள்.
ஜோசப் பெஸ்கி என்ற வீரமா முனிவர் அவர்களின் புகழ்பெற்ற வாக்கியம் பொன்னை மாதரைப் பூமியை நாடிடேன், என்னை நாடிய என்னருள் நாதனே என்பதாகும். இவர் ஆண்டவரை துதிக்கும்படியாக எழுதிய ஜகனாதா குரு பரநாதா என்னும் 10 சரணங்களை கொண்ட இனிமையான இரண்டு பாடல்கள் இன்றும் கிறிஸ்தவ கீர்த்தனையில் இடம்பெற்று நம்முடைய திருச்சபைகளில் பாடப்பட்டு வருகிறது. எவ்வளவு இனிமையான, கருத்து செரிந்த உன்னதமான பாடல்கள் ஆகும்.
இத்தாலி நாட்டிலிருந்து தமிழ்நாடு வந்து தமிழ் மொழியை கற்றுக்கொண்டு, தமிழ்நாட்டை தாய் நாடாக போற்றி, தமிழ் மக்களை தன் மக்களாக பாராட்டி, திருமறைச் செல்வராக, செந்தமிழ் அறிஞராக, பன்மொழி புலவராக, ஓவியக் கலைஞராக, இசை ஆர்வம் மிகுந்தவராக, கலையறியும் குண நலமும் பொருந்தியவராக கிறிஸ்துவின் சேவையை வாழ்நாள் இறுதிவரை உற்சாகமாய் செய்து முடித்தார்.
வீரமா முனிவர் என்று அழைக்கப்பட்ட ஜோசப் பெஸ்கி அவர்கள் தமிழில் 23 நூல்கள் எழுதியமையால் அவரை கௌரவிக்கும்படி தமிழ்நாடு அரசு 1968 ம் ஆண்டு சென்னையிலுள்ள மெரினா கடற்கரையில் இவருடைய சிலையை நிறுவி பெருமை செய்தது. பதினெட்டாம் நூற்றாண்டில் தமிழ்நாட்டில் நன்கு அறியப்பட்ட ஜேசுட் மிஷனெரிகளில் சிறந்தவர் ஆவார். இவருடைய நற்செய்திபணியும் தமிழ்பணியும் இன்றுவரை தமிழ் ஆர்வலர்களுக்கும் நற்செய்தி பணியாளர்களுக்கும் சிறந்த முன்னுதாரமாக இருக்கின்றது. ஜோசப் பெஸ்கி போன்ற பல நற்செய்திபணியாளர்கள் நம்மிடையே தோன்றி இறைப்பணியையும், தமிழ் இலக்கிய புலமையும் பெற்று சிறந்துவிளங்கி, தேவ இராஜ்யத்தை தமிழ்நாட்டில் மட்டுமல்லாமல் அகில உலகமெங்கும் பறைசாற்றவேண்டும். இதை வாசிக்கும் அன்பரே...இந்த உன்னதமான பணிக்கு உங்களை அற்பணிப்பீர்களா?
இதை வாசிக்கின்ற அன்பு தம்பி மற்றும் தங்கையே இன்று நீ கல்வியிலும், சமுதாய அந்தஸ்திலும் உயர்ந்து இருப்பதற்கு, உனக்காக மற்றும் உன்னுடைய வாழ்க்கை தரத்தை உயர்த்துவதற்காக, நம்முடைய ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் அழைப்பை ஏற்று, தன்னுடைய வாழ்க்கை, குடும்ப உறவுகள், சொத்து சுகங்கள் யாவற்றையும் ஒதுக்கி வைத்துவிட்டு, உன்னுடைய கிராமத்திற்கு வந்து, நற்செய்திபணியையும், சமுதாய நற்பணிகளையும் செய்த பல மிஷனெரிகளை அனுப்பி வைத்த அந்த ஆண்டவருக்கு நீ என்ன செய்ய போகின்றாய்?...நீ வா...நாம் எல்லோரும் சேர்ந்து நம்முடைய தலைமுறையில் இந்திய தேசத்தை ஆண்டவருக்கு சொந்தமாக்குவோம்.
இந்த மிஷனெரி சரித்திரத்தை வாசிக்கின்ற அன்பு தாய்மார்களே! தகப்பன்மார்களே! உங்கள் பிள்ளைகளை நம்முடைய ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் இராஜ்யத்தை கட்டும் இந்த கனமான ஊழியத்தை செய்ய ஒரு கல்வி மிஷனெரியாக, சமுதாய முன்னேற்ற மிஷனெரியாக, மருத்துவ மிஷனெரியாக, சுவிசேஷ மிஷனெரியாக இயேசு கிறிஸ்துவுக்கு சேவை செய்ய அற்பணிப்பீர்களா? ஊக்கப்படுத்துவீர்களா? தேவ இராஜ்யம் உங்கள் மூலமாய் தேவை நிறைந்த இந்திய தேசத்தில் கட்டப்படுவதாக. ஆமென்.
கிறிஸ்துவவில் அன்பானவர்களே!...இந்த மிஷனெரிகள் சரித்திர குழுவின் இனைப்பை உங்கள் உற்றார், உறவினர்கள், நண்பர்கள் யாவருக்கும் அனுப்பு வைக்கும்போது, அவர்களும் உங்களைப்போல மிஷனெரி தரிசனத்தை பெற்றுக்கொள்வார்கள். நன்றி.
=======================
The Gospel Pioneers
Constantine Joseph Beschi (1680-1747)
======================
Constantine Joseph Beschi , was born in 1680 and got his secondary education in the Jesuits' High School of Italy. He dedicated his life for Christ at the age of 24 and became a Jesuit missionary in 1698. He was sent to the Jesuit Mission at Madurai in May 1711. No sooner had he arrived in India than he began the study of Sanskrit, Telugu, and especially of Tamil.
During the first six years, he worked as a missionary in Tiruvaiyaru a small town on the banks of the river Cauvery and its surroundings. He also undertook dialogue with Hindus and Muslims. Then he served as parish priest in Kamanayakkanpatti, one of the oldest Madurai mission centers in Tamil Nadu.
Beschi gave himself to studying and writing in Tamil.
He visited several important centers such as Tirunelveli, Ramanathapuram, Tiruchirapalli, Thanjavur and, of course, Madurai to learn the Tamil language and mastered it with great proficiency. It was considered a great feat on the part of a foreigner to have mastered so difficult a language like the Dravidian language -Tamil. Once he barely escaped suffering death for the Christian religion.
He met with persecution in 1714–15 and escaped a death sentence from local rulers, that, he won the heart of the natives by leading a simple, and unassuming social works, had saved him from trouble. So, Joseph Constantine Beschi came to Vadugarpet in the year 1717 and served as the parish priest till 1720.
To spread the Christian gospel among the Brahmins and the high caste of Madurai area, Beschi adopted the native Tamilians' lifestyle of living and became an ascetic in principles and by wearing saffron colored dress to teach the Gospel and carry out missionary work.
Constantine Joseph Beschi called himself by Tamil name Veeramaa-Munivar to pretend he was a great lover of Tamil and wrote many epic poems in Tamil, teaching the Christian religion also religious polemical works. He composed a grammar of High Tamil, and was the first to write a grammar of Low Tamil (the common dialect) which still remains the foundation of scientific Tamil philology.
Veeramaa-Munivar(Beschi) compiled the first Tamil lexicon of Tamil-Latin Dictionary and Latin-Tamil- Portuguese dictionary. Besides composing literary Tamil Grammar work, he also wrote a grammar for the common use of Tamil, which at times led to him being referred to as the 'Father of Tamil Prose'.
He also compiled the comprehensive Chaturakarati .
He also wrote a prabandham called Kaavalur Kalambagam, a grammatical treatise called Thonnool , a guide book for catechists with the title Vedhiyar Ozukkam , and Paramarthaguruvin Kadhai., a satirical piece on a naive religious teacher and his equally obtuse disciples. Besides the classical epic, Beschi composed popular religious hymns like Kittheri Ammal Ammanei and Tirukavalur Kalambagam, drawing from the rich resources of Tamil poetry. He wrote several ascetical books in Tamil, especially doctrinal instructions for the use of the native catechists.
He also translated into European languages several other important Tamil literary works such as Devaaram,, Thiruppugazh, Nannool and Aaththichoodi . This Latin work was an eye opener for European intellectuals, enabling them to discover truth and beauty in Tamil literature.
Veerama-munivar(Beschi) is acclaimed for his literary contributions in Tamil Bhakti literature. His expertise in the Tamil literature of devotion, along with his incarnation of the Christian religious message into Tamil culture and language, helped him to bring about a renaissance of the Tamil Bhakti movement and paved the way for Christianity to be inculturated and deeply rooted in Tamil soil.
His biggest poetical work is the Thembavani (The Unfading Garland - an ornament of poems as sweet as honey), which is one of the Tamil classics based on the Gospels of Christ, that narrative presents the whole history of salvation, the old and new Testaments, and the life of Saint Joseph (Father of Jesus Christ). It is a poem which for richness and beauty of language.
He worked in the Madurai Mission till 1742 and appointed as rector of the mission of Manpardu in Tirunelveli district. Later, he settled in 1746 on the Coramandel Coast of Ambalakadu in Kerala where he remained till the end of his life. While in Kerala, when he came to Manapardu to attend the Tamil conference in 1747, where he died and later buried at Samplaloor in Kerala, where his tomb can be seen.
Veerama-Muniver @ Beschi is, however, best known as a Tamil poet. Till his death he was held in great esteem by the locals and even now Tamil scholars follow his most valuable works on Tamil grammar, etc. In 1968, the State of Tamil Nadu erected a statue for Beschi on the Marina beach in the city of Madras as recognition for his contribution to Tamil language and literature. His memory lives to this day in Tamil Nadu.
Dear brothers and sisters, today you have received good education, health and better life styles, it is because of many Christian missionaries who sacrificed their life for you in the past. Have you ever thought of the guiding hands behind it? Yes, it is none other than God himself who prepared missionaries and send to your village and gave the burden to uplift your life. In return, what shall you offer to God as thanksgiving? Think about it.
My dear parents will you encourage and dedicate your children to do God's work as educational missionary or medical missionary or Cross Cultural missionary for our Nation?
The Gospel came to India 2000 years back but still we are 2.8% of Indian population. The harvest is plenty but the labourers are few. So come...let's together build the Kingdom of God in our Nation and let's evangelize our Nation in Christ in our Generation.
Dear friends kindly introduce this group link to your friends, relatives and your Church members. May God bless you and use you for the extensions. With love and prayer...Rev. D. David Paramanantham, B.Sc., M.A. B.D. Gamaliel Bible College, Mumbai, India
Thanks for using my website. Post your comments on this