குடும்பமாய் தேவராஜ்யத்திற்கு நம் மை ஆயத்தப்படுத்துகிற தேவன்
*யோசுவா 24:15*
"நானும் என் வீட்டாருமோவென்றா ல், கர்த்தரையே சேவிப்போம்".*
*தேவபிள்ளையே! நம்முடைய ஆண் டவர் நம்மை பலுகிப் பெருகச் செய் கிறவர்;அதற்கு குடும்பங்களை தே வன் பயன்படுத்துகிறார். மனுஷன்*
*/மனுஷி தனிமையாய் வாழக்கூடா து என்பது தேவனுடைய விருப்பம்/ கட்டளை. தாம் சிருஷ்டித்த அனைத் து சிருஷ்டிப்புகளையும் நல்லது எ ன்று கண்ட தேவன், ஆதாமின் தனி மையை மாத்திரம் நல்லதல்ல என் று கண்டு, அவனுக்கு ஏற்ற துணை யாக ஏவாளை உருவாக்கி, இரண்டு பேரையும் ஒரே மாம்சமாய் இணை த்தார். இந்த உலகத்திலே பிறந்த ஒ வ்வொருவருக்கும், தேவன் ஏற்ற து ணையை சிருஷ்டித்திருக்கிறார். கு டும்பத்தை ஏற்படுத்துகிறவர் கர்த்த ர்.உங்களுக்கு ஏற்ற வாழ்க்கைத் து ணையை அமைத்துத் தந்திருக்கிற வரும்/தரப்போகிறவரும் அவரே. இ வைகளையெல்லாம் உங்களுடை ய சாமார்த்தியத்தினால் பெற்றுக் கொள்ளமுடியாது. ஏசாயா தீர்க்கத ரிசி சொல்கிறார்: “நானும் கர்த்தர் எனக்குக் கொடுத்த பிள்ளைகளும்*
*(குடும்பமும்), கர்த்தராலே இஸ்ரவே லில் (நாம் வாழ்கிற இடங்களில்) அடையாளங்களாகவும், அற்புதங்க ளாகவும் இருக்கிறோம்” (ஏசா.8:18). சாலமோன் சொல்கிறார்: “கர்த்தர் வீட்டைக்(குடும்பத்தை)கட்டாராகில், அதைக் கட்டுகிறவர்களின் பிரயாச ம் விருதா”(சங்.127:1). அப்படியானா ல், கிறிஸ்து விரும்புகிற ஒரு இல்ல ற வாழ்க்கையை கட்டியெழுப்புவதி ல் தேவனே பெரும்பங்குவகிக்கிறா ர். தேவன் ஒரு மனுஷனுக்கு/ மனு ஷிக்கு ஏற்றதொரு வாழ்க்கைத் து ணையை பெரும் பிரயாசமெடுத்து உருவாக்கித்தரும்போது, அவருடை ய பிரயாசத்திற்கும், சித்தத்திற்கும், வேளைக்கும் நாம் இசைந்து,அர்ப்ப ணித்து, காத்திருக்கவேண்டும். வே தம் சொல்கிறது: கர்த்தருக்கு சித்த மானது அவர் கையினால் வாய்க்கு ம் (ஏசா.53:10).*
*அன்பானவர்களே!தேவன் ஒரு குடு ம்பத்தை உருவாக்குவதன் நோக்க ம், 1.நம்முடைய சரீரத்தை வேசித்த னத்திற்கு விற்றுப்போட்டு, வேசிப் பிள்ளைகளாக போகாதபடிக்கு நம் மை காத்துக் கொள்ள (1 கொரி.7:2), 2.தேவபக்தியுள்ள சந்ததிகளை இந் தபூமியிலே உருவாக்கும்படியாக(ம ல்.2:15). இதற்கான அநேக குடும்ப ஆலோசனைகளை அப்.பவுல் தன் னுடைய நிருபங்களிலே எழுதியிரு க்கிறார். தேவனுடைய நியமத்தின் படி தங்களுடைய குடும்பவாழ்க்கை யை ஆரம்பித்தவர்கள், ஒருநாளும் தன் குடும்பத்திற்கு துரோகம்பண் ணாதபடி எச்சரிக்கையாயிருக்க வேண்டும். யோசுவா குடும்பமாய் கர்த்தரைத் தேட/ஆராதிக்க/சேவிக் க/கானானுக்கு பிரவேசிக்க கர்த்த ருக்குள் தீர்மானம்பண்ணினார். ஒ ரு குடும்பத் தலைவனாக/ தலைவி யாகஉங்களுடையஎண்ணங்களை ஆள, நீங்கள் அறிந்திருக்க வேண் டும்;இச்சையடக்கத்தோடு உங்களு டையசரீரத்தை ஆளத்தெரியவேண் டும்; மிகுந்த பொறுப்போடும், தேவ பயத்தோடும், சாட்சியுள்ள வாழ்க் கையோடு கூடிய ஒரு ஆசீர்வாதமா ன குடும்பத்தை நடத்தவும்/ஆளவு ம் அறிந்திருக்க வேண்டும். எல்லா வற்றிற்கும்மேலாக குடும்பமாய் பர மகானானுக்குள் பிரவேசிக்க தீர்மா னித்துக் கொள்ளுங்கள். உங்களுக் குக் கொடுக்கப்பட்ட பிள்ளைகளை சரியான இரட்சிப்பிற்குள் வழிநடத் துகிறீர்களா? அவர்கள் வேதம் வாசி க்கிறார்களா? ஆலயத்திற்கு ஒழுங் காக செல்லுகிறார்களா? பரிசுத்த ஜீவியம்செய்கிறார்களா? என்பதை யெல்லாம் நீங்கள்கவனிக்கவேண் டும். சிறுபிள்ளைகளாக இருக்கும் போதே, அவர்களை திருத்தி, நல்வ ழிக்குள்கொண்டுவந்து விடுங்கள்.*
*பிரியமானவர்களே! கர்த்தருடைய வாக்குத்தத்தம் என்ன? நீங்கள் குடு ம்பமாய் உங்கள்கைகளின் பிரயாச த்தை அனுபவிக்கவேண்டும்; நீங்க ள்பாக்கியமும்நன்மையும்நிரம்பியி ருக்கும்படிவாழவேண்டும்;மனைவி வீட்டோரங்களில் கனிதரும் திராட் சைச் செடி; பிள்ளைகள் பந்தியைச் சுற்றிலும் இருக்கிற ஒலிவமரக் க ன்றுகள்; பிள்ளைகளின் பிள்ளைக ளை காண்கிற அனுபவம்; ஜீவனுள் ள நாளெல்லாம் சமாதானமான வா ழ்வை அனுபவிப்பது போன்ற ஆசீர் வாதங்களெல்லாம் பரலோகத்திலி ருந்து உங்களுக்கு கிடைக்கிறது. இந்த ஆசீர்வாதங்களெல்லாம் யா ருக்கு கிடைக்கிறது என்றால், கர்த் தருக்கும்,அவருடைய வசனத்திற்கு ம் பயப்படுகிறவர்களுக்கு மட்டுமே. நீங்களும், கர்த்தர் உங்களுக்குக் கொடுத்த பிள்ளைகளும் இந்த உல கத்தின் ஓட்டத்தைமுடித்து, கர்த்தரு டையராஜ்யத்தில் காணப்படவேண் டும். நீங்கள் மாத்திரம் பரலோகத்தி ற்குப்போய் உங்களுடைய பிள்ளை கள்/கணவர்/மனைவி அங்கு வரா விட்டால்,அதுஉங்களுக்குஎத்தனை வேதனையாயிருக்கும்? ஆகவே,தே வனால் உருவாக்கப்பட்ட விலையே றப்பெற்ற உங்கள் குடும்பம், இந்த பூமியிலேயும் ஆசீர்வதிக்கப்பட்டிரு க்கவேண்டும்; பரலோகத்திலேயும் கடந்துவந்து நித்தியஜீவனை சுதந் தரிக்க வேண்டும். விசுவாசத்தினா லே நோவா தேவ எச்சரிப்பைப் பெ ற்று, பயபக்தியுள்ளவனாகி, தன் மு ழு குடும்பத்தை இரட்சிப்பதற்கு பே ழையை உண்டுபண்ணினார். இந் த உலக ஆக்கினையிலே தன் குடு ம்பம் அழிந்து போகக்கூடாது என்ற ஒரு வைராக்கியத்தை கொண்டிரு ந்தார். நீங்கள் வாழ்கிற இந்த உல கமும் அக்கினிக்கு இரையாக வை க்கப்பட்டிருக்கிறது (2பேது.3:7). இத ற்குத் தப்பும்படி இன்றைக்கு நீங்க ள் குடும்பமாக கர்த்தருடைய இரட் சிப்பின்/அடைக்கலப் பேழைக்குள் வந்துவிடுங்கள்;அவரை குடும்பமா ய் தேடவும், ஆராதிக்கவும், சேவிக்க வும் அவரோடுகூட குடும்பமாய் சஞ் சரிக்கவும் கர்த்தர் உங்களுக்கு உத விசெய்வாராக! உங்களுக்காக ஜெ பிக்கிறேன்.*
*இப்பிரபஞ்சத்தின் ஆசையும்,மோக மும் தெய்வீக மகிழ்ச்சியையும் பேரி ன்பத்தையும் இழக்க வைக்கும்.*
*சங்கீதம் 16:11*
*"உம்முடைய சமூகத்தில் பரிபூரண ஆனந்தமும், உம்முடைய வலதுபாரி சத்தில்நித்தியபேரின்பமும்உண்டு"*
*தேவபிள்ளையே!தேவசமூகத்திலே நமக்கு ஏராளமான ஆசீர்வாதங்கள்*
*/நன்மைகள்/ விடுதலை/ சமாதான ம்/ அபிஷேகம் போன்ற உலகப் பிர காரமான, ஆவிக்குரிய ஆசீர்வாதங் கள்உண்டு.தாவீதுபக்தன் தேவசமூ கத்திலே, தான் அனுபவித்த மகிழ்ச் சியையும், பேரின்பத்தையும் இந்த வசனத்திலேவெளிப்படுத்துகிறார். ஒரு தகப்பனுடைய சமூகத்திலே பி ள்ளைகள் களிகூர்ந்து மகிழுவதை ப்போல, நம்முடைய அப்பாவின் பிர சன்னத்தில் நாம் மகிழ்ந்து களிகூ றுகிறோம். தேவசமூகத்தில் அனுப விக்கமுடியாத ஒரு சந்தோஷத்தை, பேரின்பத்தை இந்த உலகத்திலே வேறு எங்குபோனாலும் அனுபவிக் கமுடியாது. இந்த உலகம் கொடுக்கி ற மகிழ்ச் சியும், இன்பமும் ஒரு எல் லைக்குட்பட்டது; ஒரு குறிப்பிட்ட கா ல அளவிற்குட்பட்டது. அது ஒரு சிற் றின்பமே; இந்த சிற்றின்ப மயக்கம் நம்மை பாதாளத்திற்கு நேராக வழி நடத்தக்கூடியது. ஆனால்,நம் ஆண் டவர் கொடுக்கிற ஆனந்தம் பரிபூர ணமானது; நித்தியமானது; அவரு டையபேரின்பம் இருதயத்தை தெய் வீக களிப்பினாலும்,பூரிப்பினாலும் நிரப்புகிறது;மாத்திரமல்ல,யாரெல் லாம் அவருடையபேரின்பத்தை வா ஞ்சிக்கிறார்களோ, அவர்களை நித் திய பரலோகத்திற்கு நேராக வழிந டத்திச் செல்லுகிறது. இந்த உலக இன்பங்களும், களியாட்டும் மாயை யே; அவைகள் மிகவும் கவர்ச்சிகர மானது,தந்திரமாய் நம்முடையஜீவி யத்தை வஞ்சித்து, தேவபிரசன்னத் தைஅனுபவிக்கவிடாமல் பிசாசுநம் கண்களை மயக்கிவிடுவான். சினி மாவின் மோகமும், சிற்றின்பக் கவ ர்ச்சியும், சீர்கேடான போதைப் பொ ருட்களும் விலையேறப்பெற்ற உங் கள் மகிமையையும், நீங்கள் அனுப விக்க வேண்டிய பேரின்பத்தையும் அழித்துவிடும்.*
*அன்பானவர்களே! வேதத்திலே கெ ட்ட குமாரன் இந்த உலகத்தின் இன் பமும், ஆடம்பரமும், களியாட்டுகளு மே நித்திய பேரின்பமானது என்று நினைத்து,தன்தகப்பனுடைய ஆஸ் தியையெல்லாம் வாங்கிக் கொண் டு,தகப்பனுடைய சமூகத்தை உதறி தள்ளிவிட்டு, தனது மதிமயக்கத்தா ல் மிகுந்தசந்தோஷத்தோடு கடந்து போனான். ஆனால், அந்த இன்பங் களெல்லாம் அவனை நிரந்தரமாய் திருப்திபடுத்த முடியவில்லை; ஒரு குறிப்பிட்ட நேரம் வந்தபோது, இந்த உலக சிற்றின்பங்களெல்லாம் அவ னை கைவிட்டது; நண்பர்கள் அவ னைஉதறிவிட்டார்கள்;அவனுடைய மகிமையும்,பேரும் புகழும் மங்க ஆ ரம்பித்தது. உலக இன்பமும் களியா ட்டும் அவனது ஆஸ்திகளையெல் லாம் பறித்துக்கொண்டது; பசியின் கொடுமை அவனைவாட்டினது; பன் றியின் தவிடுகூட அவனுக்கு கிடை க்கவில்லை. அப்பொழுதுதான் அவ னுக்கு புத்தியிலே தெளிவுஏற்பட்டு, தன் தகப்பனுடைய சமூகத்திலே, தான் அனுபவித்த அந்த பேரின்பத் தையெல்லாம் நினைக்க ஆரம்பித் தான். ஒரு வேலைக்காரனாக தன் தகப்பனிடத்திற்கு திரும்ப நினைத் தான்;தகப்பனோ அவனை கட்டிப் பி டித்து, அன்போடு அரவணைத்து மு த்தமிட்டு தன் மகனாகவே அவனை ஏற்றுக்கொண்டார்.புதிய வஸ்திரங் கள்,புதிய அணிகலன்கள்,புதிய பா தரட்சைகளோடுகூட அங்கே நடனக் களிப்பும் உண்டானது. ஆம்,மனம்தி ரும்புகிற ஒரேபாவியினிமித்தம் பர லோகத்திலே மிகுந்தசந்தோஷம் உ ண்டாயிருக்கும்; தேவதூதர்கள் மத் தியிலும் அந்த சந்தோஷம் இருக்கு ம்(லூக்.15:7,10).*
*பிரியமானவர்களே! ஆவிக்குரிய வாழ்க்கையின் பின்மாற்றஅனுபவ ங்களினால், சோர்ந்துபோய், ஆசீர் வாதங்களை இழந்து, தேவ சமூகத் தை அனுபவிக்க முடியாதபடி உங்க ள்ஜீவியம் வறண்டு காணப்படுகிற தா? உலக சிற்றின்பங்களினால் ஈர் க்கப்பட்டு, தேவ பிரசன்னத்தை விட் டு தூரமாய் போய்விட்டீர்களா? கிறி ஸ்துவின் மேல் வைத்திருந்த அந்த ஆதி அன்பை இழந்து காணப்படுகி றீர்களா?கர்த்தருடைய பரிபூரண ஆ னந்தத்திற்காக,அவருடைய பேரின் பத்திற்காக ஏங்கிநிற்கிறீர்களா? கு ற்ற மனச்சாட்சி தேவ சமூகத்திற்கு ள் உங்களைவரவிடாதபடி தடுக்கிற தா? மனம் கலங்காதிருங்கள்! ஒரு உலகத் தகப்பன்,ஒரு தீர்மானத்தோ டுவந்த தன்மகனை ஏற்றுக்கொண் டது உண்மையானால், பரலோகத் தகப்பன் உங்களையும் அன்போடு கூட நேசித்து, அரவணைத்து உங்க ளை ஏற்றுக்கொள்வதுஉறுதி.நம்பி க்கையோடு அவருடைய சமூகத்தி ற்குநேராய் ஓடிவாருங்கள். சிம்சோ னைவிட்டு ஒருநாள் தேவ சமூகம் விலகிப்போனது.அவன் அதை அறி யாமல் எப்பொழுதும்போல, புறப்பட் டுப் போவேன் என்று எழுந்து பெலி ஸ்தியர்களின் கைகளில் விழுந்தா ன். அவனுடைய நிலைமை எவ்வள வு பரிதாபம்! தேவ பிரசன்னத்தை இழந்த சவுல்ராஜாவின் முடிவு எத்த னை பயங்கரம்! ஆகவே ஒருபோது ம்உங்களுக்கும்கர்த்தருக்கும் இடை யே பாவம்குறுக்கிடவிடாதிருங்கள். இப்பிரபஞ்சத்தின் ஆசையும் மோக மும் தேவ பிரசன்னத்திலிருந்து உ ங்களை பிரித்துவிடும். ஆகவே, தே வ பிரசன்னத்திலும் சந்தோஷத்தி லும் உறுதியாய் நிலைத்திருங்கள். ஒவ்வொருநாளும் அதிகாலை வே ளையிலே தேவபிரசன்னமும்,சமூக மும் உங்கள் வாழ்க்கைப் பாதையி லே முன்செல்லும்படி கர்த்தரிடத்தி லே மன்றாடுங்கள். தேவஆவியான வர் உங்களை நடத்தவேண்டிய வழி யிலே நடத்தி, முடிவிலே உங்களை மகிமையிலேஏற்றுக்கொள்ளுவார். சோர்ந்துபோகாதிருங்கள்!உங்களு க்காக ஜெபிக்கிறேன்.*.
*ஏசாயா 55:6*
*"கர்த்தரைக் கண்டடையத்தக்க சம யத்தில் அவரைத் தேடுங்கள். அவர் சமீபமாயிருக்கையில் அவரை நோ க்கிக் கூப்பிடுங்கள்".*
*தேவபிள்ளையே! ஆவிக்குரிய வா ழ்க்கையிலே தேவனை அணுகுகி ற 2 முக்கியமான அனுபவம், 1.தேவ னை தேடவேண்டும்; 2.அவரை நோ க்கிக் கூப்பிடவேண்டும். ஆண்டவர் நம்மை சிருஷ்டித்தவர், நாம் அவரு டையகரத்தின் சிருஷ்டிப்புகள். சிரு ஷ்டிக் கர்த்தரின் அனுக்கிரகம் இல் லாமல், சிருஷ்டிகளாகிய நாம் இந் தபூமியிலே வாழமுடியாது. இயேசு சொன்னார்: “என்னையல்லாமல் உ ங்களால் ஒன்றும் செய்யக் கூடாது”*
*(யோவா.15:5). செருபாபேலைப் பார் த்து: “பலத்தினாலும் அல்ல,பராக்கி ரமத்தினாலும் அல்ல, என்னுடைய ஆவியினாலேயே ஆகும்”(சக.4:6) எ ன்று கர்த்தர் சொன்னார். ஆபத்துக் காலத்தில் என்னை நோக்கி கூப்பி டு; நான் உன்னை விடுவிப்பேன் (ச ங்.50:15) என்று நமக்கு வாக்குக்கொ டுத்திருக்கிறார்.இந்தவனாந்தரயா த்திரையில் ஆபத்து/பெலவீன/துக் க/ துயர/ தனிமை நேரங்கள், வறட் சியான/கைவிடப்பட்ட சூழ்நிலைக ள்,சத்துருவின்போராட்டங்கள், பொ றாமையின் ஆவிகள் எதிர்பாராமல் திடீர்திடீரென்று நம்மை தாக்குகிற து;மரணத்தின்/அழுகையின் பள்ள த்தாக்கு,வனாந்தர அனுபவம், காரி ருளின் நேரங்கள் நம்மை சூழ்ந்துக் கொள்ளுகிறது. இப்படிப்பட்ட நேர ங்களிலெல்லாம் ஒரு கனம் நாம் தி கைத்து கலங்கிப்போகிறோம்;செய் வதறியாது திகைக்கிறோம்; திசை தெரியாமல் தடுமாறுகிறோம்; மனி த ஒத்தாசையைத் தேடி, அது கிடை க்காத பட்சத்திலே மிகவும் சோர்ந்து பெலவீனப்பட்டுவிடுகிறோம். பிசா சு எவனை(கர்த்தருடைய பிள்ளைக ளை) விழுங்கலாமோ என்று வகை தேடி சுற்றித் திரிகிறான். இவைக ளின் மத்தியில் கர்த்தர் சொல்கிறா ர்: “ஆபத்தில் நானே அவனோடிருந் து, அவனைத் தப்புவித்து, அவனை கனப்படுத்துவேன்;நீடித்தநாட்களா ல் அவனை திருப்தியாக்கி, என் இர ட்சிப்பை அவனுக்குக் காண்பிப்பே ன்”(சங்.91:15-16).*
*அன்பானவர்களே! கர்த்தருடைய ஒ த்தாசையின் கரம் நமக்கு நேராய் நீ ட்டப்பட வேண்டுமேயானால், சரியா ன விதத்திலே/ நேரத்திலே அவரை த்தேடவேண்டும்; அவரை நோக்கிக் கூப்பிட வேண்டும். கர்த்தரும் சில வேளைகளில் நமக்குசமீபமாய் வரு கிறார். நம் அருகிலே கடந்துவரும் பொழுது நாம் அவரை விட்டுவிடக் கூடாது.ஒருநாள் பர்திமேயுஎன்ற கு ருடன், தன் அருகிலே இயேசு வருகி றதைக் கேள்விபட்டான். அவர் சமீப மாய் வந்த அந்த சமயத்தை அவன் விட்டுவிடவில்லை. எத்தனை பேர் அதட்டினாலும் பொருட்படுத்தாமல், “தாவீதின் குமாரனே, எனக்கு இரங் கும்”என்று சத்தமிட்டுக்கூப்பிட்டான் இயேசுவும் உடனே அவனுக்கு அற்பு தம் செய்தார். அவனும் பார்வைய டைந்தான். எப்பொழுது கர்த்தர் நம க்கு சமீபமாய் இருப்பார்? எப்பொழு து அவரைத் தேடவேண்டும்? நாம் அ வரை தொழுதுகொள்ளும் பொழு தெல்லாம் அவர்நமக்குசமீபமாயிரு க்கிறார் (உபா.4:7). உண்மையாய் த ம்மை நோக்கிக்கூப்பிடுகிற யாவரு க்கும் கர்த்தர்சமீபமாயிருக்கிறார்(ச ங்.145:18). நொருங்குண்ட இருதயம் உள்ளவர்களுக்கு கர்த்தர் சமீபமா யிருக்கிறார்(சங்.34:18). ஏசாயா ஒரு நாள் கர்த்தரைத் தொழுதுகொள்ள, அவரை நோக்கிக் கூப்பிட தேவால யத்திற்கு கடந்துசென்றார். கர்த்தரு ம் அவருக்கு சமீபமாய் கடந்துவந்தா ர். உயரமும் உன்னதமுமான சிங்கா சனத்திலே வீற்றிருக்கிற தரிசனத் தைக்கொடுத்தார்.கர்த்தர் சமீபமாய் வருகிற தருணத்தை ஏசாயா பயன் படுத்திக் கொண்டார். கர்த்தரைத் தேடி, பாவஅறிக்கை செய்து மாபெ ரும் தீர்க்கதரிசியாய் மாறினார்.*
*பிரியமானவர்களே! தாவீதின் அனு பவத்தைப் பாருங்கள். “நான் கர்த்த ரைத்தேடினேன்,அவர் எனக்குசெவி கொடுத்து என்னுடைய எல்லா பய த்திற்கும் என்னை நீங்கலாக்கிவிட் டார் (சங்.34:4); என் ஆபத்து நாளில் ஆண்டவரைத் தேடினேன்; இரவிலு ம் என் கைத் தளராமல் விரிக்கப்பட் டிருக்கிறது (சங்.77:2)” என்று சொல் கிறார். ஒருவிசை கரடியும் சிங்கமு ம் வந்தபோது அவர் கர்த்தரைத் தே டினார்; அவைகளை அடித்துக் கொ ன்றுபோட்டார்.கோலியாத்இஸ்ரவே லுக்கு விரோதமாய் வந்தபோது தா வீது கர்த்தரைத் தேடினார்; அந்த ரா ட்சதனை ஒரேகல்லினால்கொன்று போட்டார். அமலேக்கியர்கள் வந்து தனக்குண்டான சகலவற்றையும் கொள்ளையடித்துக் கொண்டு போ னபோது,கர்த்தரை நோக்கிக் கூப்பி ட்டார். எல்லாவற்றையும் ஒன்றுவி டாமல் திருப்பிக் கொண்டார். அதே தேவன் இன்றைக்கும் உயிரோடிரு க்கிறார். உங்கள் வாழ்க்கையிலும் கூட அநேகபாடுஉபத்திரவங்களின் வழியாய், கண்ணீரின் பள்ளத்தாக் கிலே நீங்கள் கடந்துபோகலாம்; தா ங்கொண்ணா பிரச்சனைகள் உங்க ளை எழும்ப முடியாமல் முடக்கி வை த்திருக்கலாம்;உங்களுக்கு விரோத மாக சத்துருவின்கரங்கள் ஓங்கி நி ற்கலாம்; அநியாயமாய் உங்கள் ஆ சீர்வாதங்களை இழக்கக்கொடுத்தி ருக்கலாம்; சரியான வருமானமின் றி, பொருளாதார நெருக்கடியில் சி க்கித் தவித்துக் கொண்டிருக்கலா ம். மனம்கலங்காதிருங்கள்! தாவீது கர்த்தரைத் தேடினபோது, அவனுக் கு இரங்கி அற்புதம்செய்தவர், நிச்ச யம் உங்களுக்கும் ஒருஅற்புதத்தை செய்து, உங்களை கனப்படுத்துவா ர். அவர் பட்சபாதமுள்ள தேவன் அல் ல. அவரை கருத்தாய் உங்கள் வாழ் க்கையில் தேடுங்கள்; அவரை நோ க்கிக் கூப்பிட்டுப் பாருங்கள். கர்த்த ரைத் தேடுகிறவர்களை அவர் கை விடுவதேயில்லை(சங்.9:10); அவர்க ளுக்கு ஒரு நன்மையும் குறைவுபடு வதில்லை (சங்.34:10); சகல இடுக்க ண்களுக்கெல்லாம் அவர்களைநீங் கலாக்கி இரட்சிக்கிறார்; அவர்களு டைய முகங்களை தேவன் வெட்கப் படவிடவே மாட்டார் (சங்.34:5,6). ஆக வே, உங்கள் இருதயம் கலங்காதிரு ப்பதாக! உங்களுக்காக ஜெபிக்கி றேன்.*
*சத்துருக்களுக்கு முன்பாக தம்மு டைய பிள்ளைகளின் தலையை உயர்த்தி வைக்கும் தேவன்.*
*எசேக்கியல் 36:7*
*"கர்த்தராகிய ஆண்டவராயிருக்கிற நான் என் கரத்தை உயர்த்துவேன், உங்களை சுற்றிலும் இருக்கிற புற ஜாதிகள் தங்களுடைய அவமானத் தை நிச்சயமாய் சுமப்பார்கள் என் று சொல்லுகிறேன்".*
*தேவபிள்ளையே! இந்த உலகத்தி லே இருக்கும்வரைக்கும் உபத்திரவ ங்கள் உண்டு.ஆனாலும் திடன்கொ ள்ளுங்கள்; நான் உலகத்தை ஜெயி த்தேன் என்று நம் அருள்நாதர்இயே சு சொல்லிப்போனார். அவர் சொன் னபடியே,இன்றைக்கு நமக்குவிரோ தமாக சத்துருக்கள் பலவிதங்களி ல் எழும்பி,நம்மை அழிக்கப் பார்க்கி றார்கள். காரணம், நாம் ஆண்டவரு டைய விலையேறப்பெற்ற சொத்து க்கள்.நாம் ஒரு ராஜரீகமான ஆசாரி யக் கூட்டத்தை சேர்ந்தவர்கள். நித் தியஜீவனுக்கென்று அவரால் தெரி ந்துகொள்ளப்பட்ட விசேஷித்த சந் ததிகள். அனுதின ஆவிக்குரிய ஜீ வியத்தில் பிசாசு பலவழிகளில் நம் மைத் தாக்க முயற்சிக்கிறான். கட ன், வியாதி, சண்டை, வாக்குவாதம், பிரிவினை, பொருளாதார நெருக்க டி,பொறாமை, எரிச்சலின் ஆவிகள், தோல்வி, தனிமை, தடைகள், ஒரும னமின்மை,ஆபத்துவிபத்துகள்போ ன்ற பலரூபங்களில் நம்மைத் தாக் கி விழத்தள்ள பார்க்கிறான். ஆனா ல், இவைகள் எல்லாவற்றின் மத்தி யிலும், கர்த்தர் நம்மோடுகூட தான் இருக்கிறார் என்பதை நாம் மறந்து போகக் கூடாது.*
*அன்பானவர்களே! உங்கள் வாழ்க் கையிலே/குடும்பத்திலே/தொழிலி லே/வேலைஸ்தலத்திலே/ஊழியத் திலே பொல்லாத மனிதர்கள் உங்க ளுக்கு விரோதமாக காரணமில்லா மல் எழும்பி உங்களை பகைக்கலா ம்.உங்களை அழித்துவிடும்படியாக பலவிதங்களில்கண்ணிகளைவை க்கலாம். ஒன்றை நீங்கள் அறிந்து கொள்ளவேண்டும். நீங்கள் சர்வ வல்லவருடைய கரத்திலே இருக்கி ற விலையேறப்பெற்ற அவருடைய சொத்துக்கள். உங்களுக்காக யுத்த ம்பண்ணுகிறவர் மகா பயங்கரமா ன பராக்கிரமசாலி. பிசாசு அவ்வள வுஎளிதாக உங்களை நெருங்கவோ*
*(அ)தொடவோ முடியாது. நீங்கள் அ வருடைய கண்ணின் மணிகளாய் இருக்கிறீர்கள். உங்களைத் தொடு கிறவன்அவருடைய கண்மணியை தொடுகிறான் (சக.2:8). அருள்நாதர் இயேசுவை பிசாசு சோதிக்கும்படி, மலையின் உச்சியிலே கொண்டு போய், இந்த உலகத்தின் ஐசுவரிய த்தை காண்பித்து,தன்னுடைய கா லின்கீழ் அவரை கொண்டுவர நி னைத்தான். ஆனால், இயேசுவோ தம்முடைய வசனத்தைக் கொண்டு, சாத்தானை அவரது காலின்கீழ் வி ழவைத்தார். இன்றைக்கும் பிசாசு இவ்வுலகத்தின் ஆசாபாசங்களை யும்,ஐசுவரியத்தையும்,லௌகீக இ ச்சைகளையும் காண்பித்து, கர்த்த ருடைய பிள்ளைகளை மதிமயக்கி, தன்னுடைய மாயவலையில் விழ வைக்க அதிகமாய் பிரயாசப்படுகி றான். ஆகவே நாம் விழிப்புள்ளவர் களாக இருக்கவேண்டும்.*
*பிரியமானவர்களே! உங்கள் வாழ்க் கையிலும் சத்துருவினால் நெருக் கப்பட்டு, பாதுகாப்பற்ற நிலையில், ஜீவன்தப்ப அலைந்துக்கொண்டிரு க்கிறீர்களா? தேவகிருபையில் நிற் கமுடியாதபடி,வாழ்க்கையில்தடுமா றுகிற சூழ்நிலையா? உபத்திரவத் தின்மேல்உபத்திரவம் உங்களை வி ழத்தள்ளுகிறதா? உங்கள்இருதயம் கலங்காதிருப்பதாக!நீங்கள் ஒருநா ளும் விழுந்துபோவதில்லை. உங்க ளோடுகூட போராடினவர்களை நீங் கள் தேடியும் காணாதிருப்பீர்கள். உ ங்களை அவமானப்படுத்த நினைத் தவர்கள் அவமானப்பட்டு போவார்க ள். எவன் உங்களுக்கு விரோதமாக படுகுழியை வெட்டுகிறானோ, அ தேகுழியில் கர்த்தர் அவனை விழப் பண்ணுவார்.உங்கள் சத்துருக்களு க்கு வெட்கத்தை உடுத்துவார். உங் கள் மீதிலோ தேவன் தம்முடைய ம கிழ்ச்சியின் கிரீடத்தை தரிப்பிப்பா ர்.கர்த்தருடைய வைராக்கியத்தின் கரம் உங்கள்மேல் இறங்கிவரும். த ம்முடைய ஜனங்களுக்காக செங்க டலைப் பிளந்து, எரிகோவின் மதி லை இடிந்துவிழப்பண்ணின அதே கரம்,உங்கள் வாழ்க்கையிலும் இரு க்கிற எல்லா சத்துருவின் தடைக ளையும் முறியடித்து, ஜெயத்தின் பாதையிலே உங்களை நடத்துவார். மனம் கலங்காதிருங்கள்! உங்களு க்காக ஜெபிக்கிறேன்.*
*மனித ஒத்தாசைகள் தடைபடும், தேவ ஒத்தாசையோ எப்போதும் உண்டு.*
*சங்கீதம் 34:10.*
"சிங்கக்குட்டிகள் தாழ்ச்சியடைந்து பட்டினியாயிருக்கும்; கர்த்தரைத் தேடுகிறவர்களுக்கோ ஒருநன்மை யும் குறைவுபடாது".*
*தேவபிள்ளையே! நம்முடைய ஆண் டவர் நன்மைகளின் தேவன். குறை வுகளை நிறைவாக்குகிறவர். இல் லாதவைகளை இருக்கிறவைகள் போல அழைக்கிற ஆண்டவர்.ஐசுவ ரிய சம்பன்னர். நாம் விரும்புவதற் கும் வேண்டிக் கொள்வதற்கும் அதி கமாய் தருகிறவர்.எல்லாவற்றிலும் எப்பொழுதும் சம்பூரணமுடையவர் களாய் இருக்கவேண்டும் என்று வி ரும்புகிறவர். நாம் எப்படி ஒரு தே வை நேரத்தில் ஆண்டவர் அற்புதம் செய்யவேண்டும் என்று எதிர்பார்க் கிறோமோ,அப்படியே தேவனும் தம் முடையபிள்ளைகளாகிய நாம்உண் மையும் உத்தமுமாய் தம்மைத் தேட வேண்டும் என்று எதிர்பார்க்கிறார். வேதம்சொல்கிறது:கர்த்தர் நன்மை யானதைத் தருவார் (சங்.85:12); உத் தமமாய் நடக்கிறவர்களுக்கு கர்த்த ர் நன்மையை வழங்காமல் இருக்க வேமாட்டார் (சங்.84:11); நம்முடைய ஆயுசுநாட்களின் ஒவ்வொருவருஷ த்தையும் நன்மையினால்முடிசூட்டு கிறவர் (சங்.65:11). நீங்களும் நானு ம் சகல பாக்கியங்களோடும், சுபிக் ஷத்தோடும் வாழவேண்டும்என்பத ற்காகவே, அருள்நாதர் இயேசு கோ ரசிலுவையிலேஅந்தக்கேடடைந்து, பாடுகளையும் வேதனைகளையும் சுமந்தார். நம்மை ஐசுவரியவான்க ளாய் மாற்றவே,தம்முடைய ஐசுவரி யத்தைத் துறந்து, நமக்காக தரித்தி ரரானார்(2கொரி.8:9). நம்மைக் குறி த்ததான இவ்வளவுவிருப்பங்களை யும், தியாகத்தையும் கொண்டிருக் கிற நம்முடைய அருள்நாதர்இயேசு, அவ்வளவு எளிதாக தரித்திரத்திற் கும், வறுமைக்கும், பற்றாக்குறைக் கும், ஏழ்மைக்கும் உங்களை விட்டு விடுவாரா?*
*அன்பானவர்களே! அநேக அத்தியா வசியத் தேவைகள் உங்கள் இருத யத்தை கசக்கிப் பிழிந்துக் கொண் டிருக்கலாம்; மலைபோல இருக்கிற இவ்வளவு பெரிய தேவையை நான் எப்படி சமாளிக்கப் போகிறேன் என் று விழிபிதுங்கிப்போய் நிற்கலாம்; அன்றன்றைக்கு உள்ள பிழைப்பிற் கே தடுமாறிக் கொண்டிருக்கிற நா ன்,எப்படி என் பிள்ளைகளை மேற்ப டிப்பு படிக்க வைக்கப் போகிறேன்? எப்படி திருமணம் செய்து வைக்கப் போகிறேன்?இதுவரை வந்துக்கொ ண்டிருந்த வருமானம் திடீரென்று நின்றுவிட்டதே, குடும்பத்தை எப்படி நடத்தப்போகிறேன்? தொழிலில் எ திர்பார்த்த வருமானம் கிடைக்கவி ல்லையேஎன்று ஏக்கத்தோடும் அங் கலாய்ப்போடும் வாழ்ந்துக்கொண் டிருக்கிற என் அருமை சகோதர, ச கோதரிகளே! உங்களுக்காகவே இ ந்த வார்த்தைகளை தீர்க்கதரிசன மாக கர்த்தர் தருகிறார். உங்கள் தே வைகள் எப்படிப்பட்டதாக இருந்தா லும் ஆண்டவருக்கு கவலையில் லை; அவருடைய பார்வையிலே சி ன்ன/பெரிய/மலைபோன்ற தேவை கள் என்ற வித்தியாசமே கிடையா து.உங்கள்தேவைகள் எதுவானாலு ம்,அதை சம்பூரணமாய் சந்தித்து, மீ தமெடுக்க வைக்கிறவர். பரலோக த்தின் பலகணிகள் எப்பொழுதும் உங்களுக்கு திறந்தே இருக்கிறது. ஆனால், ஒரே ஒரு நிபந்தனை: கர் த்தரை உண்மையாய் முழு இருதய த்தோடு தேடுங்கள்; விசுவாசத்தோ டு உன் தேவைகளை அவரிடத்தில் சொல்லுங்கள்; நம்பிககையோடு அவருடைய கிருபாசனத்தை தட்டிக் கொண்டேயிருங்கள்; அதிசீக்கிரத் தில் நீங்கள் எதிர்பார்த்துக்கொண் டிருக்கிற நன்மைகள், எதிர்பாராத திசையிலிருந்து, எதிர்பாராத நபர் மூலமாக கர்த்தர் உங்களுக்கு அனு ப்பித் தருவார். இயேசுவின் நாமத் தில் சொல்கிறேன்: உங்கள் தேவை கள் ஆச்சரியமாய் சந்திக்கப்படும்.*
*பிரியமானவர்களே! தேசமே பஞ்ச த்தில் வாடிக்கொண்டிருந்த போது, யாக்கோபின் சந்ததிகளை மட்டும் கர்த்தர் சம்பூரணமாய் போஷிக்க வில்லையா? பசியின் கொடுமையி னால்,ஒருவயிற்று சாப்பாட்டிற்காக நெற்கதிர்களைப் பொறுக்கிக் கொ ண்டிருந்த ரூத்தை கர்த்தர் ராஜமே ன்மைக்கு உயர்த்தவில்லையா? இ ருந்த ஒருபிடி மாவிலே ஒரு அடை யை மாத்திரம்செய்து சாப்பிட்டு, சா கநினைத்த சாறிபாத் ஊர் விதவை யின் வீட்டில் மாவு செலவழியாமலு ம்,எண்ணெய் குறையாமலும் செய் து ஆச்சரியப்படுத்தவில்லையா? நீங்கள் ஆராதிக்கிற அதே தேவன் இன்றைக்கும் ஜீவிக்கிறார். அதே அற்புதம் இன்றைக்கும் உங்கள் வா ழ்க்கையில்செய்ய அவர் வல்லமை யுள்ளவர். அவரால் செய்யக் கூடாத அற்புதம் ஒன்றுமேயில்லை. மனம் கலங்காதிருங்கள்! நீங்கள் எந்தெ ந்த காரியங்களை எந்தெந்த நேரத் தில்செய்ய திட்டமிட்டிருந்தீர்களோ, அந்தந்த காரியங்களெல்லாம் அந் தந்த நேரத்தில் நிச்சயம் நடக்கும். ஒருவனும் அதைத்தடுக்கமுடியாது. நீங்கள் விசுவாசித்தால் தேவனு டைய மகிமையை காண்பீர்கள்; உ ங்களுக்காக ஜெபிக்கிறேன்*
Pr. Y. Stephen
Aroma of Christ Ministry
Chennai - South India
GP/PP/Mob: +917667709977
Thanks for using my website. Post your comments on this