Type Here to Get Search Results !

உங்கள் துக்கம் சந்தோஷமாய் மாறும் | Daily Shor Bible Message in Tamil | Stephen Bible Study | தின தியான குறிப்புகள் | Jesus Sam

*தேவனால் நினைக்கப்படுகிறவர்களை இந்த உலகம்நிச்சயம்மறக்கும்.*

*சங்கீதம் 40:17.*
*"நான் சிறுமையும் எளிமையுமான வன். கர்த்தரோ என்மேல் நினைவா ய் இருக்கிறார்".*

*தேவபிள்ளையே!இந்த உலகம் உன் னை மறக்கவேண்டிய நேரங்களில் நினைக்கும். நினைக்க வேண்டிய நேரங்களிலே உன்னை மறக்கும். ஆனால், உன்னை தாயின் கர்ப்பத் திலே தெரிந்துக் கொண்ட அருமை இரட்சகர்இயேசு,எப்பொழுதும் உன் னை நினைத்துக் கொண்டே இருக் கிறவர். பணம், பட்டம், பதவி, வசதி, புகழ், அந்தஸ்து உடையவர்களுக்கு இந்தஉலகம் உதவிசெய்யும்; ஆனா ல், உனக்காக தன் கடைசி சொட்டு இரத்தத்தையும்ஊற்றிக்கொடுத்து, விலைக்கிரயம் செலுத்தி வாங்கப் பட்ட உனக்கோ, உன் தேவன் எந்த சூழ்நிலையிலும் உதவி செய்ய வ ல்லவராயிருக்கிறார். நினைப்பது வேறு; நினைவாய் இருப்பது வேறு. நினைப்பது என்பது எப்போதாகிலு ம் ஒரு முறை ஞாபகத்திற்கு வருவ து. நினைவாய் இருப்பது என்பது தொடர்ச்சியாய், இடைவிடாமல் சிந் தித்துக் கொண்டே, எண்ணிக் கொ ண்டே, நினைத்துக் கொண்டே இரு ப்பது.உன்னை சிருஷ்டித்த தேவனு ம்கூட உன் மேல் நினைவாயிருக்கி றார். இந்த உலகத்திலே நீ மனிதர்க ளால், சூழ்நிலைகளால் மறக்கப்பட் டிருக்கலாம்;உன் பட்டம் பதவி உனக் கு உதவக் கூடாமலிருக்கலாம்; உன் னுடைய பெலவீனத்தினிமித்தம்,வி யாதியினிமித்தம் உன்னைஒதுக்கி வைத்திருக்கலாம். வீடுகட்டும் போ து சில கல்லை வெட்டி தள்ளிப் போ ட்டு விடுவார்கள். பிறகு தேவைப்ப டும்போது தூக்கி எறியப்பட்ட அந்த கல்லை கொண்டுவந்து,சில முக்கி யமான இடங்களில் அதை பயன்ப டுத்துவார்கள். அதுபோல,நீயும் உல கத்தால் அற்பமாய் எண்ணப்பட்ட க ல்லாய் காணப்படுகிறாயா? உன் இ ருதயம் கலங்கவேண்டாம். கர்த்தரு டைய சிந்தையிலே நீ விலையேறப் பெற்றவனா(ளா)ய் நினைக்கப்பட் டுக்கொண்டே இருக்கிறாய் என்ப தை மறந்துவிடாதீர்கள்.*

*அன்பானவர்களே!தாவீதுபக்தனை பாருங்கள். அவன் குடும்பத்திலே எ ல்லாருக்கும் முன்பாக மிகவும் அற் பமாய் எண்ணப்பட்டு தள்ளப்பட்டவ ன். தகுதியுள்ளவர்களெல்லாரையு ம் சாமுவேல்தீர்க்கதரிசிக்கு முன்பா க கொண்டுவந்துநிறுத்தி,ராஜாவா க அபிஷேகம்பண்ண சொன்னார்க ள்;ஆனால்தகுதியில்லாத தாவீதை யோ அவர்கள் மறந்து போனார்கள். அற்பமாய் எண்ணப்பட்ட, மனிதர்க ளால் மறக்கப்பட்ட, தள்ளப்பட்ட கல் லாய் இருந்த தாவீதைத் தான் கர்த் தர் இஸ்ரவேலின் ராஜாவாக அபி ஷேகம்பண்ணுகிறார். உன்னைக் குறித்த இந்த உலகத்தின் நினைவு ம்,கர்த்தருடைய நினைவும் நேர் எதி ரானவைகள்.உன்னைக்குறித்த தே வனுடைய வழியை உன்னால் புரிந் துக்கொள்ள முடியாது. உன் வாழ்க் கையின் சூழ்நிலைகளோ, உன் பட் டம் பதவியோ, வருமானமோ, அந்த ஸ்தோ உன் எதிர்காலத்தை நிர்ண யிக்க முடியாது. ஏற்கெனவே உன் எதிர்காலம் தேவனால் முன்குறிக்க ப்பட்டு, அழகாக நேர்த்தியாக அவர் வடிவமைத்து விட்டார். இனிமேல் உ னக்காக அவர் செய்ய வேண்டியது ஒன்றுமேயில்லை. உன் எதிர்கால த்தின் சிகரத்தை நோக்கி வழிநடத் திச் செல்வதுதான் அவருடைய வே லை. அதிலே உன்னுடைய கவனம் சிதறிவிடக் கூடாது என்பதற்காகத் தான்,எப்பொழுதும் கர்த்தர் உன்மே ல் நினைவாயிருந்துக் கொண்டே இருக்கிறார்.*

*பிரியமானவர்களே! ஒருவேளை சி றுமையின் பாதையிலே நீ கடந்து செல்லலாம்.யாருமே உன்இருதயத் தைப் புரிந்துக் கொள்ளாமலிருக்க லாம். மற்றவர்களுக்கு முன்பாக நி ந்தையும் பரிகாசமும் ஏளனமுமாய் நீ காணப்படலாம்.வேதத்திலே அன் னாளும் இந்தப் பாதையிலே தான் கடந்துபோனாள். ஆனால் ஆண்ட வர் அவளை களிகூரப்பண்ண ஒரு நேரத்தை வைத்திருந்தார். அவளு டைய மனக்கிளேசமும், துக்கமும் நிரந்தரமாய் அவளை ஆட்கொள்ள முடியவில்லை. காரணம்,தேவன் அ வளை நினைத்திருந்தார்.அழகான ஒரு தீர்க்கதரிசி மகனையும்,சந்ததி களையும் கொடுத்து அவளை சந் தோஷப்படுத்தி,அவள்கொம்மை உ யரப்பண்ணினார். அதே தேவனை த்தான் நீயும் ஆராதிக்கிறாய். அவர் ஒருநாளும் பட்சபாதமுள்ள தேவன ல்ல.உனக்கும்அதிசீக்கிரத்திலே நி யாயம் செய்வார். மனம் கலங்காதி ருங்கள்! ஆண்டவருக்காக நீ காண் பித்த அன்பின் பிரயாசங்களை மற ந்துவிடுகிறதற்கு அவர் அநீதியுள் ள தேவனல்ல. கட்டாயம் உன்னை அவர் நினைத்தருள்வார்.உன் வாழ் க்கையின் எந்தெந்தப் பகுதியிலே நீ பெருகமுடியாதபடி தடைகள் கா ணப்படுகிறதோ, சீக்கிரத்திலே அந் தப் பகுதியிலே உன்னை மகிழப்ப ண்ணப் போகிறார். சிறுமைப்பட்ட அதே இடத்திலே உன்பேரை பெரு மைப்படுத்துவார். பயப்படாதிருங் கள்! உங்களுக்காக ஜெபிக்கிறேன்.*


*பரலோகத்தையும் தேவபிள்ளைக ளையும் இந்த உலகத்திலே பிரிக்க வே முடியாது.*

*லூக்கா 21:36.*
*"ஆகையால் இனி சம்பவிக்கப் போ கிறஇவைகளுக்கெல்லாம் நீங்கள் தப்பி மனுஷகுமாரனுக்கு முன்பாக நிற்கப் பாத்திரவான்களாக எண் ணப்படுவதற்கு, எப்பொழுதும் ஜெ பம்பண்ணி விழித்திருங்கள்".*

*தேவபிள்ளையே! இந்த உலகத்தி லே தேவன் நம்மை தெரிந்தெடுத்த தின் நோக்கமே, அவருக்கு முன்பா க நம்மை உத்தமமாய், மாசற்றவர்க ளாய் நிறுத்தும்படிக்கே. அருள்நா தர் இயேசு, “நான் இருக்கிற இடத்தி லே நீங்களும் இருக்கும்படி, நான் ம றுபடியும்வந்து உங்களை என்னிடத் தில் சேர்த்துக் கொள்ளுவேன்” என் று சொல்லிப் போயிருக்கிறார். அப் படியானால்,அவர் திரும்பவரும்போ து,நாம் அவரோடுகூடஎடுத்துக்கொ ள்ளப்படுவதற்கு நாம்தகுதியுள்ளவ ர்களாக நம்மை இந்த உலகத்திலே காத்துக்கொள்ள வேண்டியது மிக அவசியமாயிருக்கிறது. அதற்கான இரண்டு பிரதான வழிகளையும் இ யேசு நமக்கு கற்றுக் கொடுத்திருக் கிறார். 1.எப்பொழுதும் ஜெபிக்கவே ண்டும்; 2.விழித்திருக்க வேண்டும். ஒருவேளை இந்தக் காரியங்கள் மா ம்சத்திலே மிக எளிதான காரியமா யிருந்தாலும், எதிராளியான பிசா சானவன் இந்த இரண்டு காரியங்க ளைத் தான்,நம்வாழ்க்கையிலே செ யல்படுத்தவிடாதபடி நமக்கு விரோ தமாக பல வழிகளிலே போராடிக் கொண்டிருக்கிறான். காரணம்,அவ னது குறிக்கோளெல்லாம் நித்திய ஜீவனைவிட்டு நம்மைப் பிரித்து, அ வனது ராஜ்யத்திற்கு (நரகம்) சொந் தக்காரர்களாய் மாற்றுவது தான். இயேசுவின் வருகைக்கு முன்பாக, அவரை பின்பற்றுகிற ஒருகூட்ட ஜ னங்கள் விசுவாசத்திலிருந்து வழு வி, நீதிக்கு அபாத்திரவான்களாய் மாறுவதற்கான பலகாரியங்கள் இ ந்த பூமியிலே சம்பவிக்கப் போகிற து.இவ்வகையான அழிவின் காரிய ங்களுக்கு நாம் தப்பிப் பிழைக்கும் படியாகவே,இந்த கிருபையின் நாட் களை தேவன் நமக்குத் தந்திருக்கி றார்.*

*அன்பானவர்களே! கொடுக்கப்பட்ட இந்த கிருபையின் நாட்களில், உங் கள் முயற்சிகள்,பிரயாசங்கள், பாடு களெல்லாம், எதிர்காலத்தின் நன் மைக்காகவோ,சந்ததிகளின் மேன் மைக்காகவோ (அ) சொத்து சுகங்க ளைசேர்ப்பதற்காகவோ இருக்கலா ம்,நல்லது தான். ஆனால்,அதன் மத் தியில் உங்கள்விலையேறப்பெற்ற ஆத்துமாவின் நலனையும் காத்துக் கொள்ள வேண்டியது அதிக முக்கி யமான கடமையாயிருக்கிறது. உங் களுக்குள் இருக்கிற ஆவி ஆத்து மாவைக் குறித்த காரியங்கள் தான் இந்த உலகத்தின் அழிவுக்கு உங்க ளை தப்பப்பண்ணும்; தேவனுக்கு முன்பாக உங்களை கொண்டு போ ய் நிலைநிறுத்தும். இந்த உலகத்தி லே சம்பாதிக்கிறயாவற்றையும்(ஆ த்துமாக்களைத் தவிர) இந்த பூமியி லேயே விட்டுவிட்டுத் தான் போகப் போகிறோம். ஆண்டவருக்காக,ஆத் துமாக்களுக்காக, பரிசுத்தத்திற்கா க, விசுவாச ஜீவியத்திற்காக நீங்க ள் காண்பிக்கிற பிரயாசங்கள் மட் டுமே உங்களோடுகூட வரும்.*

*பிரியமானவர்களே! அந்த ஒளிமய மான தேசமே உங்களுடைய கண்க ளுக்கு முன்பாக எப்பொழுதும் இரு க்கட்டும். அதுவே நீங்கள் நித்திய நித்தியமாக வாழப்போகிற தேசம்.* *“நம்முடைய குடியிருப்போ பரலோக த்திலிருக்கிறது”(பிலி.3:20). ஆகவே இந்த மகிமையான தேசத்தை சுதந் தரிக்க, இந்த பூமியிலே/வாழ்க்கை யிலே தடையாயிருக்கிற எந்தவொ ரு காரியத்தையும் துச்சமாய் எண் ணி, தூசியைப்போல உதறிவிடுங் கள். அற்பமான ஆசை இச்சைகளு க்காக, மாம்சத்தின் பெருமைக்காக, அநித்தியமான மேன்மைகளுக்கா க, விலையேறப்பெற்ற இரட்சிப்பி ன் அனுபவங்களை, அபிஷேகத்தி ன் ஜீவியத்தை,விசுவாச ஓட்டத்தை விற்றுப்போட்டு விடாதிருங்கள். உ ங்கள் வாழ்க்கையில் வருகிற பாடு உபத்திரவங்களோ, நிந்தை அவமா னங்களோ, தோல்விகளோ, பசி பட் டினியோ ஒருநாளும் தேவன் உங்க ளுக்கென்று வைத்திருக்கிற மகா மேன்மையான பரலோக பாக்கியங் களை தடைபண்ணவே முடியாது. இக்காலத்துப் பாடுகள் இனி வரப் போகும் மகிமைக்கு ஒப்பிடத்தக்க வைகள் அல்லவேஅல்ல; கொஞ்சக் காலம் பாடனுபவிக்கிற உங்களை சீர்ப்படுத்தி, ஸ்திரப்படுத்தி, பெலப் படுத்தி, மகிமையிலே உங்களைக் கொண்டுபோய் நிலைநிறுத்துவார் என்பதிலே எந்தவித சந்தேகமுமில் லை. ஆண்டவர் மேல் வைத்த விசு வாசத்தையும், அன்பையும், உத்தம த்தையும், வைராக்கியத்தையும் கி றிஸ்துவின் வருகை வரைக்கும் கா த்துக்கொள்ளுங்கள். அன்பர் இயே சுவோடுகூட யுகாயுகமாய் ஆளு கை செய்வீர்கள். உங்கள் இருதயம் கலங்காதிருப்பதாக! உங்களுக்கா க ஜெபிக்கிறேன்.*


*உங்கள் துக்கம் சந்தோஷமாய் மா றும். வனாந்திர வாழ்க்கை புஷ்பத் தைப் போல செழிக்கும்.*

*யோவான் 16:22.*
*“…உங்கள் இருதயம் சந்தோஷப்படு ம்,உங்கள் சந்தோஷத்தை ஒருவனு ம் உங்களிடத்திலிருந்து எடுத்துப் போடமாட்டான்.”*

*தேவபிள்ளையே! தேவனுடைய ரா ஜ்ஜியம் புசிப்பும் குடிப்புமல்ல; அது பரிசுத்த ஆவியினால் உண்டாகும் சந்தோஷமுமாயிருக்கிறது (ரோம. 14:17).நம்முடைய ஆவிக்குரிய வாழ் க்கையின் ஆரம்பமே சந்தோஷத்தி ல்(இரட்சண்ய சந்தோஷம்) தான் ஆ ரம்பிக்கிறது. இன்றைக்கு அநேக கிறிஸ்தவர்களுடைய முகத்திலே ஒருசந்தோஷத்தை பார்க்கமுடிவதி ல்லை. அகத்தின் அழகு முகத்திலே தெரியும் என்று பழமொழி சொல்கி றது. அவர்களுடைய உள்ளத்தின் வேதனையை, வாழ்க்கையின் சோ கத்தை தங்கள் முகத்திலே காண்பி க்கிறார்கள். இது தேவன் விரும்பா த ஒருகாரியம். அருள்நாதர் இயேசு சொன்னார்:“என்னுடைய சந்தோஷ ம் உங்களில் நிலைத்திருக்கும்படி க்கும்,உங்கள்சந்தோஷம் நிறைவா யிருக்கும்படிக்கும் இவைகளை உ ங்களுக்கு சொன்னேன்” (யோவா.*
*15:11).தேவபிள்ளைகள் எப்பொழுது ம்,எல்லா சூழ்நிலையிலும் கர்த்தரு க்குள் சந்தோஷமாயிருக்க கற்றுக் கொள்ள வேண்டும். ஆகாய மண்ட லத்தில் சூரியனுக்கும், சந்திரனுக் கும்,நட்சத்திரங்களுக்கும் அதிகமா ன பிரகாசத்தை கொடுக்கிற தேவ ன்,தமக்குள் எவ்வளவுபிரகாசத்தை வைத்திருப்பார் என்பதை சற்று சி ந்தித்து பாருங்கள்.அவ்வளவாய் பி ரகாசமுள்ள தேவனை பின்பற்றுகி ற நாம், நம்முடைய முகத்திலேயும் தெய்வீகபிரகாசத்தை மற்றவர்களு க்கு காண்பிக்க வேண்டும். பிரகாச ம் என்பது தெய்வீக மகிழ்ச்சியையு ம் சந்தோஷத்தையும் குறிக்கிறது.*

*அன்பானவர்களே! மோசே பக்தன், எப்பொழுதெல்லாம் தேவசமூகத்தி லிருந்து இறங்கிவருகிறாரோ, அப் பொழுதெல்லாம் அவருடைய முகம் சூரியனைப்போல பிரகாசமாயிருந் தபடியால் ஜனங்கள் அவனித்தில் சேர பயந்தார்கள். எனவேதான், “கர் த்தர் தம்முடையமுகத்தை உன்மேல் பிரகாசிக்கப்பண்ணி, உன் மேல் கிருபையாயிருக்கக் கடவர் என்று சொல்லி ஜனங்களை ஆசீர்வதிக்க வேண்டும்” என்று மோசேயினிடத் தில் கட்டளையிட்டார். நீங்கள் கர்த் தருடைய ஆசீர்வாதத்திலே திருப்தி யாய் மனநிறைவோடு வாழ்கிறீர்க ள் என்பதை உங்கள் முகத்தில் கா ணப்படுகிற தெய்வீகப் பிரகாசமே அதை காட்டிக் கொடுத்துவிடும்.*

*பிரியமானவர்களே! சத்துருவானவ ன் உங்கள் வாழ்க்கையிலே பாடுக ளை,துக்கங்களை,வேதனைகளை, சஞ்சலங்களை, தவிப்பை, சோகத் தை விதைத்து, ஆண்டவர் கொடுத் த மகிழ்ச்சியையும் சந்தோஷத்தை யும் உங்கள் இருதயங்களிலிருந்து எடுத்துப் போட்டிருக்கலாம். அருள் நாதர் இயேசு சொன்னார்: “நீங்கள் அழுது புலம்பவீர்கள்...துக்கப்படுவீ ர்கள்.ஆனாலும்,உங்கள் துக்கம் சந் தோஷமாய் மாறும்” (யோவா.16:20). உங்கள் வாழ்க்கையிலே அழுகை யின் சூழ்நிலைகள், துக்கத்தின் பா தையிலே நடக்கும் அனுபவங்கள், அவமானங்கள், தோல்விகள் நிச்ச யம் வரும்.ஆனால் அவைகள் உங்க ள் வாழ்க்கையின் நிரந்தரமான அ னுபவமாய் மாறிவிடாது. உங்கள் துக்கம் சந்தோஷமாய் மாறும். கார ணம் கர்த்தரே உங்களுக்கு நித்திய வெளிச்சமாய், மகிழ்ச்சியாய் மாறி விடப் போகிறார். உங்கள் துக்கத்தி ன், துயரத்தின் நாட்களுக்கு ஒரு மு டிவை நீங்கள் பார்க்கப் போகிறீர்க ள். ஒருவேளை சத்துருக்களினால் நீங்கள் ஒடுக்கப்பட்டு, அசட்டைப்ப ண்ணப்பட்டு, வியாதி பெலவீனத்தி னால் ஆத்துமாவிலே இளைப்படை ந்தவர்களாய், பிரகாசமான வாழ்க் கைக்கு காத்திருந்தநீங்கள்,இருளி ன் பாதையிலே கடந்துபோகவேண் டிய சூழ்நிலையில் காணப்படலாம். மனம் கலங்காதிருங்கள்! இன்றை க்கு ஆவியானவர் தீர்க்கதரிசனமா ய் உங்களைப் பார்த்து சொல்லுகி றார்: “உங்கள்இருதயம் சந்தோஷப் படும், உங்கள் சந்தோஷத்தை ஒரு வனும் உங்களிடத்திலிருந்து எடுத் துப் போட முடியாது. உங்கள் ஆத்து மாவின் கசப்பை மாற்றி,மதுரமான ஒரு வாழ்க்கைக்கு நேராய் நான் உ ங்களை நடத்துவேன். உன்னுடைய வறண்டவாழ்க்கையைமகிழ்ச்சியா கவும்,பாலைவனம் போன்ற வனாந் தரமான வாழ்க்கையை களிப்பான*

*/செழிப்பான வாழ்க்கையாகவும் நா ன் மாற்றுவேன்”. என் அன்பு கர்த்த ருடைய பிள்ளைகளே! இயேசு சொ ன்னதையே உங்களுக்கு திரும்பவு ம் நியாபகப்படுத்துகிறேன். “கேளு ங்கள், அப்பொழுது உங்கள் சந்தோ ஷம் நிறைவாயிருக்கும்படி பெற்று க்கொள்வீர்கள்”. ஆகவே,இன்றைக் கு உங்கள் தேவையை நம்பிக்கை யோடு ஆண்டவரிடத்தில் கேளுங்க ள்.நிச்சயம்உங்கள்வாழ்க்கையிலே எதிர்பார்க்கிற ஆசீர்வாதங்களை கொடுத்து, உங்களை ஆண்டவர் ம கிழ்ச்சியாக்குவார்.சோர்ந்துபோகா திருங்கள்! கர்த்தருக்குள் எப்பொழு தும் மகிழ்ச்சியாயிருங்கள். உங்க ளுக்காக ஜெபிக்கிறேன்.*


*விலையேறப்பெற்ற தெய்வீக அழைப்பை நிறைவேற்ற ஜாக்கிர தையாயிருங்கள்.*

*2 பேதுரு 1:10.*
*"உங்கள் அழைப்பையும், தெரிந்து கொள்ளுதலையும் உறுதியாக்கும் படி ஜாக்கிரதையாயிருங்கள்; இ வைகளை செய்தால் நீங்கள் ஒருக் காலும் இடறிவிழுவதில்லை".*

*தேவபிள்ளையே! தேவனை அதி உ த்தமமாய் பின்பற்றுகிற முதிர்ந்த விசுவாசிகளுக்கும், ஊழியர்களுக் கும் அப்.பவுல் புத்திமதியாக கூறு கிற சில ஆலோசனைகளை தான் இங்கு வாசிக்கிறோம். உங்களை அழைத்தவரும், தெரிந்துக்கொண் டவரும் தேவனே.அதிலே எந்தவொ ரு சந்தேகமுமில்லை. ஆனால், இந் த அழைப்பையும் தெரிந்துகொள் ளுதலையும் உறுதியாக்கிக் கொள் வது நீங்களும்நானும் தான். அதை நாம் உறுதியாக்காவிட்டால் நிச்சய மாய் நாம் இடறிவிழுவோம்.தேவன் நம்மை உன்னதமான நோக்கத்தோ டும், மகா மேன்மையோடும், விலை யேறப்பெற்ற ஒரு தரிசனத்தோடும் அழைத்திருக்கிறபடியால்,அந்த அ ழைப்புக்கு பாத்திரவான்களாய் நட ந்துக்கொள்ள வேண்டும் (எபே.4:1); இந்தஅழைப்பிலே நாம்இடறிப்போ காதபடிக்கு கடைசிவரையும் இதை காத்துக்கொள்ளவேண்டும்.தேவன் நம்மை அழைத்த அழைப்பும்,அவரு டைய கிருபைவரங்களும் எந்நாளு ம் மாறாதவைகள்(ரோம.11:29).தேவ ன் ஒரு குழுவாகவோ (அ)சபையாக வோ நம்மை அழைக்கவில்லை. நம் ஒவ்வொருவரையும் தனித்தனியே பெயர்சொல்லி அழைத்திருக்கிறா ர்.ஆகவே உங்களுடையஅழைப்பை உறுதிப்படுத்துவதும், அதற்கு உத்த ரவாதம் செலுத்துவதும் நீங்கள் தா ன்.அந்த அழைப்பின் விசேஷத்தை அப்.பவுல் விளக்கும் போது, “நீங்க ள் அழைக்கப்பட்ட அழைப்பைப் பா ருங்கள்; ஞானிகளையும், பலமுள் ளவைகளையும் வெட்கப்படுத்தும்ப டி, இந்த உலகத்திலே பைத்தியங்க ளாய், பலவீனர்களாய், இழிவானவ ர்களாய், அற்பமாய் எண்ணப்பட்டவ ர்களாய் இருந்த நம்மை தெரிந்துக் கொண்டாராம்”(1கொரி.1:26,27). தம க்கு முன்பாக பரிசுத்தமுள்ளவர்க ளும், குற்றமில்லாதவர்களுமாயிரு ப்பதற்கு உலகத் தோற்றத்திற்கு மு ன்பே உங்களைத் தெரிந்துகொண் டிருக்கிறார்.*

*அன்பானவர்களே! ஒரு பெரிய ராட் சதனாகிய கோலியாத்தை வீழ்த்து வதற்கு, அவனுக்கொப்பான ஒரு ப லவானைத் தேடினார்கள். அபிஷே கம் பெற்ற சவுல் கூட முடியாது என் று உட்கார்ந்துவிட்டான். தேவனுக்கு பலி செலுத்தின, கர்த்தருடைய வா க்குத்தத்தங்களையும் அபிஷேகத் தைப்பெற்ற, தேவன் எங்களோடிரு க்கிறார் என்று மார்தட்டி ஆர்ப்பரித் த இஸ்ரவேல் ஜனங்களெல்லாம் சோர்ந்துபோய் உட்கார்ந்துவிட்டார் கள். காரணம், கோலியாத்தின் பெ லத்திற்கு ஈடுகொடுத்து போரிட பெ லவான்களே இல்லை. ஆனால், ஆ ண்டவரோ அந்தபெலவானை வீழ்த் த ஒருபெலவானைத் தேடவில்லை. ஒரு அற்பமாய் எண்ணப்பட்ட, குடு ம்பத்தினரால் மறக்கப்பட்ட, ஒதுக்க ப்பட்ட தாவீதை தேவன் தெரிந்துக் கொண்டு,கோலியாத் முன்பு நிற்க வைத்தார்.கோலியாத்தோஅவனை அலட்சியம்பண்ணி அற்பமாய்பேசி னான்; ஏளனமாய் சிரித்தான்; சபித் தான்; தனது ராணுவ பலத்தோடும், யுத்த நுனுக்கங்களோடும் அனுபவ த்தோடும், போர்க்கவசங்களோடும் ஆயுதங்களோடும் தாவீதோடு யுத்த ம்பண்ண நின்றான். ஆனால், தாவீ தோ சேனைகளின் தேவனாகிய கர் த்தருடைய நாமத்தைக் கொண்டு யுத்தம்பண்ணினான்.ஜெயித்ததோ தாவீது; வீழ்ந்ததோ ராட்சதனாகிய கோலியாத்.அந்த தாவீதின் தேவன் தான் நம்முடைய தேவன். நம்முடை ய தேவனுக்கு வல்லவர்கள், படித்த வர்கள்,ஐசுவரியவான்கள், ராணுவ பெலசாலிகள் தேவையில்லை.தன் னுடைய அழைப்பையும் தெரிந்துக் கொள்ளுதலையும் உண்மையாய் அறிந்துக் கொண்ட ஒருவன் தான் தேவனுக்குத் தேவை.*

*பிரியமானவர்களே! தேவன் இஸ்ர வேல் ஜனங்களுக்கு வேண்டிய அ னைத்து தேவைகளையும், வளங்க ளையும் வனாந்தரத்திலேஆயத்தம் பண்ணிவிட்டு தான் அவர்களை எ கிப்திலிருந்து வெளியே அழைத்து க்கொண்டு வந்தார். ஆனால் எதற் காக தேவன் பாலும்தேனும்ஓடுகிற கானான்தேசத்திற்கு அழைத்தார் எ ன்ற ஒரு தூரப்பார்வையும், தரிசன மும் அவர்களுக்கு இல்லாமற் போ யிற்று. ஆகவே, வனாந்தரத்திலே அழிக்கப்பட்டார்கள். அழைக்கப்பட்ட தேவபிள்ளையே, இந்த வனாந்தர யாத்திரையிலே உங்களுக்குத் தே வையான சகல சம்பூரணத்தையும் தேவன் உங்களுக்கு ஆயத்தப்படுத் திவிட்டு தான், உங்களை அழைத்தி ருக்கிறார் என்பதை மறந்துபோகா திருங்கள்(லூக்.14:17).இந்த அழைப் பின் மேன்மையை புறக்கணித்தவ ர்களெல்லாம் தேவனுக்கு முன்பாக அபாத்திரராய் போனார்கள் (மத்.22: 8).இஸ்ரவேலர்கள் தங்களது வயிற் றுக்கும், சாப்பாட்டுக்கும், தங்களது இச்சைகளை நிறைவேற்றுவதிலே யே அவர்களது சிந்தையையும், எ ண்ணங்களையும் வைத்திருந்தபடி யால், மகிமையான கானானின் அ ழைப்பை முறுமுறுத்தார்கள்; அசட் டைப்பண்ணினார்கள். ஆகவே,அவ ர்களால் அதைஅனுபவிக்கமுடியவி ல்லை. தேவன் அவர்களுக்கு ஆயத் தம்பண்ணினவைகளை கண் கா ணவுமில்லை; காது கேட்கவுமில் லை; இருதயத்திலே தோன்றவுமில் லை;ஆனால் நமக்கோ அவைகளை தமது ஆவியினால் வெளிப்படுத்தி னார் (1கொரி.2:9). ஆகவே, பூமிக்கு ரியவைகளையல்ல,மேலானவைக ளையே நாடித்தேடி, கிறிஸ்துவுக்கு ள் உங்கள் அழைப்பையும் தெரிந்து கொள்ளுதலையும் உறுதிப்படுத்தி க்கொண்டு, தேவன் அழைத்த பரம அழைப்பின் பந்தயப் பொருளுக்கா க இலக்கைநோக்கி நம்பிக்கையோ டு வாழ்க்கையில் முன்னேறி செல் லுங்கள். பரிசுத்த ஆவியானவர் உங்களை பெலப்படுத்துவாராக! உங்களுக்காக ஜெபிக்கிறேன்.*


*பூரண விசுவாசமே ஆவிக்குரிய ஓட்டத்தை ஜெயமாய் ஓடி முடிக்க உதவும்.*

*2 தீமோத்தேயு 4:7.*
*"நல்ல போராட்டத்தைப் போராடினே ன், ஓட்டத்தை முடித்தேன், விசுவாச த்தைக் காத்துக் கொண்டேன்".*


*தேவபிள்ளையே! அப்.பவுல் ஆவிக் குரியவாழ்க்கையை மல்யுத்தத்திற் கும்,ஓட்டப்பந்தயத்திற்கும், போராட் டத்திற்கும் ஒப்பிடுகிறார்.என்றைக் கு ஒருவன் தன்வாழ்க்கையை கிறி ஸ்துவுக்கு அர்ப்பணிக்கிறானோ, அந்த நாளிலிருந்து ஒரு யுத்தக்கள த்தில் இறங்குகிறான். விசுவாச து ரோகம்நிரம்பியஒருநாட்களிலே நா ம் வாழ்ந்துக் கொண்டிருக்கிறோம். இப்படிப்பட்ட சூழ்நிலையில் அனுதி னமும் நம்முடைய விசுவாசத்தைக் காத்துக்கொள்ள வேண்டும். அப் பொழுது தான் நம்முடைய வாழ்க் கையின் இறுதி நாட்களிலும், அப். பவுல் சொன்னதைப் போல, “நல்ல போராட்டத்தை போராடினேன், ஓட்ட த்தை முடித்தேன், விசுவாசத்தைக் காத்துக்கொண்டேன்” என்று சொல் லமுடியும். அப்.பவுல், தன்வாழ்க்கை யில்வந்த பலவிதமான மரணப்போ ராட்டங்களில் சோதனைகளில், நிந் தை அவமானங்களில்,பசிப்பட்டினி யில், இந்த மகா மேன்மையான வி சுவாசத்தைக் காத்துக் கொண்டார். தேவன் கொடுத்த இந்த விலையே றப்பெற்ற விசுவாசத்தைக் காத்துக் கொள்ள, இவ்வுலக வாழ்க்கையில் அவருக்கு லாபமான அநேக காரிய ங்களை கிறிஸ்துவுக்காக தியாகம் பண்ண நேர்ந்தது. “நம்முடைய விசு வாசத்தைத் துவக்குகிறவர், முடிக் கிறவர்” என்று இயேசுகிறிஸ்துவுக் கு ஒரு அழகான பெயரை அப்.பவுல் வைக்கிறார். அந்த இயேசுவையே நோக்கி நமக்கு நியமித்திருக்கிற ஓட்டத்திலேபொறுமையோடே ஓடக் கடவோம் என்று ஆலோசனையும் சொல்லுகிறார் (எபி.12:1).*

*அன்பானவர்களே! நீங்களும் கூட ஒரு ஆவிக்குரிய ஓட்டத்தை ஓடிக் கொண்டிருக்கிறீர்கள். இந்த ஓட்டத் தைஉங்களுக்குள் ஆரம்பித்து வை த்தவர் இயேசு. இந்த ஓட்டம் உங்கள் வாழ்க்கையின் கடைசிமூச்சு இருக் கிற வரையிலும் ஓடிக்கொண்டேயி ருக்க வேண்டும்.யாரெல்லாம் இந்த ஓட்டத்தை ஒரு நல்ல போராட்டமாக எடுத்துக் கொண்டு ஓடுகிறார்க ளோ, அவர்கள் மாத்திரமே வெற்றி யோடு இந்த ஓட்டத்தை முடித்து பரி சுப் பொருளை பெற்றுக்கொள்ள மு டியும். விசுவாசத்தை காத்துக் கொ ள்ளவும் முடியும். அது சாதாரணமா ன பரிசல்ல; அது நீதியின் ஜீவகிரீட ம். நீங்கள் ஓட ஆரம்பிக்கும்போது, மனஉறுதியோடும், விசுவாசத்தோ டும்,குறிக்கோளோடும் ஓடவேண்டு ம்.மனதிலே உறுதியான தீர்மானமு ம், பிரதிஷ்டையுமிருந்தால் மாத்திர மே வெற்றியின் இலக்கை நோக்கி ஓட முடியும். இல்லாவிடில், உங்கள் தீர்மானத்தையும்,பிரதிஷ்டையையு ம்,இந்தஉலகப்பிரச்சனைகள் திசை திருப்பி விடக்கூடும். ஆக, ஆவிக்கு ரிய விசுவாச ஓட்டத்திற்கு எதிராய் வருகிற எல்லாத்தடைகளையும் தா ண்டி, இயேசு கிறிஸ்துவின் மேல் நம் கண்களைப் பதித்தவர்களாய், நீதியின் ஜீவகிரீடத்தின்மேல் நம் சி ந்தைகளை வைத்து ஓடவேண்டும்.*

*பிரியமானவர்களே! நல்ல போராட் டத்தை போராட முடியாதபடிக்கு உங் கள் வாழ்க்கையிலே வீசுகிற சுழற் காற்று, சூறாவளிக் காற்றினால் அ லசடிப்பட்டு, ஆண்டவரே! எனக்கு ஒ துங்க ஒரு இடம் கிடைக்காதா என் று அங்கலாய்க்கிறீர்களா? மோதிய டிக்கிற வாழ்க்கை பிரச்சனையின் பெருவெள்ளத்தை உங்களால் தாக் குபிடிக்க முடியவில்லையா? வாழ் க்கையின் ஜீவியம் வறண்டுபோய், ஆத்துமா விடாய்த்துப்போனநிலை யில் வாழ்கிறீர்களா? மனம் கலங் காதிருங்கள்! பெருவெள்ளமே வந் து அடித்துக் கொண்டு போனாலும், விசுவாசமாகிய அந்த கொப்பை (இ யேசுவை)மாத்திரம் இறுகப் பற்றிக் கொள்ளுங்கள். எந்த சூழ்நிலையி லும் மகா பலனுக்கேதுவான உங்க ள் விலையேறப் பெற்ற விசுவாசத் தை விட்டுவிடாதிருங்கள். அந்த வி சுவாசமே உங்களை அக்கரை கொ ண்டுபோய் சேர்க்கும். உன் வாழ்க் கைப் படகின் சுக்கான் இயேசுவின் கரத்திலிருக்கிறது. அவருக்குள் நீ ங்கள் நங்கூரம்பாய்ச்சப்பட்டிருக்கி றீர்கள். அவரே உங்கள் வாழ்க்கைப் படகின் மாலுமி. நிச்சயமாக உங்க ளையும் உங்கள் குடும்பத்தையும் ஆச்சரியமாக கரைசேர்ப்பார். பத றாதிருங்கள்! தடுமாறாதிருங்கள்! உங்கள் ஓட்டம் கிறிஸ்துவுக்குள் ஜெயமாய் முடியும். உங்களுக்காக ஜெபிக்கிறேன்.*

Pr. Y. Stephen
Aroma of Christ Ministry
Chennai - South India*
GP/PP/Mob: +917667709977

Tags

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.