*உங்களோடுகூட இருந்து உங்களை உயர்த்தும் தேவன்.*
*உபாகமம் 7:21*
*"அவர்களைப் பார்த்து பயப்பட வே ண்டாம்; உங்கள் தேவனாகிய கர்த் தர் உங்களுக்குள்ளே இருக்கிறார், அவர் வல்லமையும் பயங்கரமுமா ன தேவன்".*
*தேவபிள்ளையே! தேவன் தாம் தெ ரிந்துக்கொண்ட பிள்ளைகள் மேல் மிகவும் கரிசனையுள்ள தேவன்; அ தே நேரத்திலே மிகவும் வைராக்கி யம் பாராட்டுகிற தேவனும்கூட. தே வன் தாம் முன்குறித்த நேரம் வந்த போது, இஸ்ரவேல் ஜனங்களை பார்வோனின் அடிமைத்தனத்திலிருந்து விடுதலையாக்கி, பாலும்தேனும் ஓடுகிற கானான் தேசத்திற்கு வழி நடத்திக் கொண்டுபோன போது, அ ங்கே அவர்களுக்கு விரோதமாக எ ழும்பின ஏழு விதமான ஜாதிகளின் மேலே ஜெயத்தைத் தந்து, அவர்க ளுக்கு ஆலோசனைகளையும் கட்ட ளைகளையும் தந்துஅவர்களை உற் சாகப்படுத்தி, அந்த தேசத்திலே அ வர்களைப் பெருகப்பண்ணினார். இஸ்ரவேல் ஜனங்களை எதிர்த்து நிற்க யாராலும் முடியவில்லை. வ னாந்தரத்திலே மன்னாவைப் புசித் து, கன்மலையின் தண்ணீரை பரு கினஅவர்களுக்குள்ளே காண்டாமி ருகத்துக்கொத்த பெலன்இருந்தது. அவர்களில் பெலவீனப்பட்டவர்கள் ஒருவனும் இருக்கவில்லை.அவர்க ளைக் கண்டு, அந்த தேசத்திலிருந் த கானானியர், ஏத்தியர், எபூசியர், கிர்காசியர், எமோரியர், பெரிசியர், ஏவியர் போன்ற ஜாதிகளெல்லாம் இஸ்ரவேலர்களுக்குமுன்னால் நடு ங்கினார்கள். அவர்களுடைய இரு தயமெல்லாம் பயத்தினால் கரைந் து போனது. காரணம், இஸ்ரவேலர் கள் தேவனால் முன்குறிக்கப்பட்டவ ர்கள், தெரிந்துகொள்ளப்பட்டவர்க ள், அவருடைய சொந்தஜனங்கள்.*
*அன்பானவர்களே!புதியஏற்பாட்டின் காலத்திலே வாழ்ந்துக் கொண்டிரு க்கிற நம்மையும்கூட, தேவன் தமது விலையேறப்பெற்ற இரத்தத்தை சி ந்தி,நம்மை அவருக்காக முன்குறித் து,தெரிந்தெடுத்திருக்கிற ஆவிக்கு ரிய இஸ்ரவேலர்கள். இந்த நாளி லேயும் கர்த்தர் உங்களைப் பார்த்து சொல்கிறார்: “உங்கள் முன் ஒருவ ரும் எதிர்த்து நிற்பதில்லை; உங்க ள்தேவனாகியகர்த்தர் உங்களுக்கு சொன்னபடி, உங்களால் உண்டாகு ம் பயமும், கெடியும், நீங்கள் மிதிக் கும் பூமியின் மேலெல்லாம் வரப்ப ண்ணுவார்” (உபா.11:25). இஸ்ரவே லருக்கு விரோதமாக அமலேக்கிய ர் ரெவிதீமிலே யுத்தம்பண்ணும்படி யாக வந்தார்கள். “அமலேக்கு” என் ற வார்த்தைக்கு “மாம்சம், மனுஷ பு யபலம், சுய பெலன்” என்று அர்த்த ம். மோசே மலையுச்சியிலே ஏறி, த ன்கையிலிருந்த தேவனுடைய கோ லை வானத்துக்கு நேராக உயர்த்தி பிடித்துக் கொண்டிருந்த போது, இ ஸ்ரவேல் ஜனங்கள் அமலேக்கிய ரை மேற்கொண்டார்கள். யோசபாத் ராஜா கர்த்தரைப் பார்த்து சொல்கி றார்: “கர்த்தாவே, பரலோகத்திலிரு க்கிற நீர் அல்லவோ தேவன்; தேவரீ ர் ஜாதிகளுடையராஜ்யங்களையெ ல்லாம் ஆளுகிறவர்;உம்முடைய கர த்திலே வல்லமையும் பராக்கிரமும் இருக்கிறது;ஒருவரும் உம்மோடு எ திர்த்துநிற்கக்கூடாது"(2நாளா.20:6).*
*பிரியமானவர்களே! நீங்களும் கூட கர்த்தரை துதிப்பீர்களென்றால், நீ ங்கள்உயிரோடிருக்கும்நாளெல்லா ம்,ஒருவனும் உங்களை எதிர்த்து நி ற்கமுடியாது. “நான் உன்னைவிட்டு விலகுவதுமில்லை, உன்னைக் கை விடுவதுமில்லை” என்று கர்த்தர் வாக்களித்திருக்கிறார். எல்லா வா க்குத்தத்தங்களிலும் மிகச் சிறந்த தும்,மேன்மையானதும், இந்த வாக் குத்தத்தமே. இதன்படி தேவசமூகம், தேவபிரசன்னம், தேவகிருபை, தே வகாருண்யம், தேவதயவு எல்லாம் உங்களோடிருக்கிறது.கர்த்தரை வி ட்டு எந்த வல்லமையும் உங்களை பிரிக்கமுடியாது. கர்த்தர் யோசேப் போடு இருந்தார்; அவன் காரியசித் தியுள்ளவனானான். அவனை மெ ன்மேலும் உயர்த்தி ஆசீர்வதித்தார். நெகேமியாவோடுகூட கர்த்தர் இரு ந்தார்; அவன் செய்த காரியங்களெ ல்லாம் வாய்த்தது. தாவீதோடு கர்த் தர் இருந்தார்; அவன் வரவர பலத் தான். உலகத்தின் முடிவுபரியந்தம் கர்த்தர் உங்களோடுகூட தான் இரு க்கிறார். நிச்சயமாக அவருடைய க ரம் உங்களையும் வரவர விருத்திய டையச் செய்யும்;உங்கள் காரியங்க ளையெல்லாம் வாய்க்கச்செய்வார்; உங்களை காரிய சித்தியுள்ளவர்க ளாய் மாற்றி, உங்களை அதிகமாய் சமுதாயத்திலே உயர்த்தி ஆசீர்வதி ப்பார்.உங்கள் இருதயம் கலங்காதி ருப்பதாக! உங்களுக்காக ஜெபிக் கிறேன்.*
*மரியாளின் தாழ்மையும் விசுவாச மும் அவளை பாக்கியவதியாய் மாற்றினது.*
*லூக்கா 1:45.*
*"விசுவாசித்தவளே பாக்கியவதி, க ர்த்தராலே அவளுக்கு சொல்லப்பட் டவைகள் நிறைவேறும் என்றாள்".*
*தேவபிள்ளையே!வேதத்திலே அநே க இடங்களிலே “பாக்கியவான்கள்” என்றவார்த்தையை பார்க்கமுடியும். ஆனால் பாக்கியவதியை குறித்து, ஒன்றிரண்டு இடங்களிலே தான் வாசிக்கமுடியும்.பாக்கியவதி என்று சொன்னால் “ஆசீர்வதிக்கப்பட்டவ ள்” என்று அர்த்தம். ஸ்திரீகளுக்குள் ஆசீர்வதிக்கப்பட்டவள் (பாக்கியவ தி) மரியாள். அவள் சொல்கிறாள்:*
*“அவர்தம்முடைய அடிமையின் தாழ் மையை நோக்கிப்பார்த்தார்.இதோ, இதுமுதல் எல்லா சந்ததிகளும் என் னை பாக்கியவதி என்பார்கள்” (லூ க்.1:48). யாக்கோபின் மனைவி லே யாள், தன்னை பாக்கியவதி என்று அழைத்தாள்(ஆதி.30:13). குணசாலி யானஸ்திரீயை பாக்கியவதி என்கி றார்கள் (நீதி.31:28). மரியாளை பாக் கியவதி என்று அழைப்பதற்கு இர ண்டு மிக முக்கியமான காரணங்க ளுண்டு. 1.மரியாளின் தாழ்மை, 2. அவளுக்குள்ளிருந்த பரிசுத்தமான விசுவாசம். கர்த்தருக்கு முன்பாக த ன்னை மிகவும்தாழ்த்தி, “இதோ, நா ன் ஆண்டவருக்கு அடிமை, உம்மு டைய வார்த்தையின்படி எனக்கு ஆ கக்கடவது” (லூக்.1:38). அநேகர் இந் த தாழ்மையை தவறாக எண்ணுகி றார்கள். தாழ்மையாக இருந்தால், அவமானம்(அ)தன்மான இழுக்கு எ ன்று கருதுகிறார்கள். தாழ்மையுள் ளவர்களுக்கு கர்த்தர் கிருபையளி க்கிறார் (நீதி.3:34), தாழ்மைக்கும் க ர்த்தருக்கு பயப்படுதலுக்கும் வரும் பலன் ஐசுவரியமும் மகிமையும் ஜீவனுமாம் (நீதி.22:4) என்று வேதம் சொல்கிறது.*
*அன்பானவர்களே! மரியாளுடைய வாழ்க்கையிலே எந்தவொருஆவிக் குரிய பெருமையோ, மனமேட்டிமை யோ காணவே முடியாது. தான் “ஆ ண்டவரின் தாயர்” என்று மேன்மை யாய் அழைக்கப்படும் பெருமையை க்கூட, தன்னுடைய உள்ளத்தில் ஏற் றுக்கொள்ளவில்லை. தேவகுமார ன், மனுஷக் குமாரனாக தன் மூல மாய் உலகத்திற்குவெளிப்பட்ட போ திலும், அவர் உலகத்திலே ஏராளமா ன அற்புத அடையாளங்களை செய் த போதிலும், இயேசுவின் தாயாரா கிய மரியாளோ, தன்னை வெளிப்ப டுத்திக் கொள்ளாமல் அமைதியாய் அடக்கமாய்,கிறிஸ்துவுக்கு பணிவி டை செய்தாள். தேவ குமாரனாகிய கிறிஸ்துவை வைத்து, தனக்கு புக ழ் தேடவோ, விளம்பரப்படுத்தவோ, தம்பட்டமடிக்கவோ விரும்பாமல்,வா ழ்நாள் முழுவதும் கர்த்தருக்கு முன் பாகவும், மனுஷருக்கு முன்பாகவும் மிகுந்த மனத் தாழ்மையோடு கூட நடந்துக் கொண்டது, தேவனுடைய பார்வையிலே மிகவும்பிரியமான சு பாவங்களாக காணப்பட்டது. மரியா ள் எல்லாவற்றிலும் பூரணமாய் கர் த்தரை விசுவாசித்தாள். அந்த விசு வாசத்தைக் கண்டு, யோவான்ஸ் நானகனின் தாய் எலிசபெத்து, “வி சுவாசித்தவளே பாக்கியவதி” என் று மரியாளை வாழ்த்துகிறாள். மரி யாள் புருஷனை அறியாத சூழ்நி லையிலும், குழந்தை பிறப்பதற்கு வாய்ப்பேயில்லை என்ற நிலைமை யிலும், ஒருதுளி சந்தேகத்திற்கும் தன் இருதயத்திலே இடம் கொடுக் காதபடி, கர்த்தர் சொன்னதை அப் படியே விசுவாசித்தபடியால், அவள் பாக்கியவதியானாள்.*
*பிரியமானவர்களே! தாழ்மைக்கு மு ன் உதாரணம் நம்அருமை இரட்சகர் இயேசு. மனுக்குலத்தின் இரட்சிப்பு க்கான அடிப்படை வேர் தாழ்மை. இயேசுகிறிஸ்துவுக்கு வேதத்திலே கொடுக்கப்பட்ட ஒருபெயர் தாழ்மை யுள்ளவர்(சக.9:9). அவர் தம்மையே வெறுத்து, அடிமையின் ரூபமெடுத் து,மனுஷ சாயலானார். சிலுவையி ன் மரணபரியந்தமும் கீழ்ப்படிந்தவ ராகி, தம்மைத் தாமே தாழ்த்தினார்*
*(பிலி.2:8). கிறிஸ்துவின் தாழ்மை யே மனுக்குலத்திற்கு இரட்சிப்பை க்கொண்டுவந்தது.யாரெல்லாம் த ங்களை தேவனுக்கு முன் தாழ்த்து கிறார்களோ, அவர்கள் வாழ்க்கை யிலே மேன்மை/ கனம்/ ஐசுவரியம்*
*/மகிமை/ உயர்வு தானாய் தேடிவரு ம்(நீதி.18:12). தாவீது ஒரு ராஜாவா யிருந்தாலும், தேவனுக்கு முன்பாக தன்னை தாழ்த்தினபடியால், கர்த்த ர் தேசத்திலேஅவனை மேன்மையா ய் உயர்த்திவைத்தார். தாழ்மையோ டுகூட, தேவன்மேல் வைக்கிற விசு வாசமும்ஒருவனை இந்தபூமியிலே பாக்கியவானாய் உயர்த்துகிறது. ஆபிரகாம் தேவன்மேல் விசுவாசம் வைத்தான். அந்த விசுவாசமே தேச த்திலே மிகப்பெரிய ஒரு ஜனத்திர ட்சியை கொண்டுவந்தது. ஆபிரகா மை போல, நம்புவதற்கேதுவல்லா த சூழ்நிலையிலும், தேவனுடைய வார்த்தையை அப்படியே சந்தேகப் படாமல் விசுவாசிப்பீர்களென்றால், நிச்சயம் கர்த்தர்உங்களை தேசத்தி லே பாக்கியவான்களாக/பாக்கியவ திகளாக உயர்த்தி மேன்மைப்படுத் துவார் என்பதில் எந்த சந்தேகமும் கிடையாது. தாழ்மையிலே நிலைத் திருங்கள்! விசுவாசத்திலே பெரு குங்கள்! உங்களுக்காக ஜெபிக்கி றேன்.*
*தெய்வீக அறிவே கிறிஸ்துவுக்குள் உங்களை விழிப்போடும் ஜாக்கிர தையோடும் நடத்தும்.*
*சங்கீதம் 90:12.*
*"நாங்கள் ஞான இருதயமுள்ளவர்க ளாகும்படி, எங்கள் நாட்களை எண் ணும் அறிவை எங்களுக்குப் போ தித்தருளும்".*
*தேவபிள்ளையே! கொடுமையான இந்த கொள்ளைநோயின் நாட்களி லும் கர்த்தர் நம்மையும் குடும்பத் தையும் ஆச்சரியமாய் அதிசயமாய் நடத்தி, தேவைகளை சந்தித்து, நல் ல ஜீவன்,சுகம், பெலன், சமாதானம் தந்து பாதுகாத்து வருகிறபடியால் நன்றியோடு அவரை ஸ்தோத்தரிப் போம்.நாட்கள் ஒருபக்கம் ஓடிக்கொ ண்டிருந்தாலும், மற்றொரு பக்கத் திலே நம் மணவாளனாகிய இயேசு வை சந்திக்கும் நாட்கள் நெருங்கிக் கொண்டிருக்கிறதை நினைத்து சந் தோஷம். தேவ மனுஷனாகிய மோ சே, கண்ணீரோடு ஜெபித்த ஒரு சி றிய ஜெபத்தை தான் இன்றைக்கு நாம் சிந்திக்கப் போகிறோம். ஒரு விஞ்ஞான தொழில்நுட்பத் திறமை மிக்க காலங்களிலே நாம் வாழ்ந்து க்கொண்டிருக்கிறோம்.விஞ்ஞான/ பூகோள/ வானமண்டல/ மருத்துவ/ கம்பியூட்டர்/ தகவல் தொழில்நுட்ப அறிவிலே இன்றைக்கு மனுஷன் விருத்தியடைந்துக் கொண்டே போ கிறான்.ஆனால் அவனுக்கு இல்லா த ஒரே அறிவு, நாட்களை எண்ணும் அறிவு தான். பூமியிலே மனிதன் எ வ்வளவு நாட்கள் வாழ்ந்திருப்பான்? என்பதுயாரும்கண்டுபிடிக்கமுடியா த ஒரு ரகசியமே. இந்த உலகத்தின் முடிவும், இயேசுவின் 2-ம் வருகையு ம் எப்பொழுது இருக்கும்? என்பதை அறியும்அறிவுஒருவருக்குமில்லை. நாட்களை எண்ணும் அறிவு நமக்கு இருக்குமேயானால், ஒவ்வொரு வி னாடி நேரத்தையும் நாம் பயன்படுத் திக்கொள்ளலாம்.வேதம் சொல்கிற து:நாட்கள் பொல்லாதவைகளானப டியால்,காலத்தை பிரயோஜனப்படு த்திக் கொள்ளுங்கள்(எபே.5:16).*
*அன்பானவர்களே! ஆண்டவர் கிரு பையாக உங்களுக்குத் தந்திருக்கி ற இந்த வாழ்க்கையில் தான், உங்க ளை உருவாக்கினவரை/ தேடிவந்த வரை / உயிர்கொடுத்தவரை அறிந் துகொள்ளுகிற பாக்கியமும் சிலா க்கியமும் கிடைத்திருக்கிறது. நா ளைக்கு நடப்பது உங்களுக்குத் தெ ரியாதே. உங்கள் ஜீவன் எப்படிப்பட் டது? அநேகர் பிறந்த நாட்களை மிக வும் விமரிசையாகக் கொண்டாடுகி றார்கள். ஆனால், தங்களுடைய மர ண நாளைக் குறித்து நினைத்துப் பார்க்கவும் பயப்படுகிறார்கள். மனி தவாழ்க்கை நீர்குமிழிக்கு ஒப்பாயி ருக்கிறது. அழகாய் தோன்றுகிறது; பிரகாசமாய்ஜொலிக்கிறது; திடீரெ ன்று உடைந்து மறைந்துபோகிறது. காலையிலே பூத்து,மாலையிலே அ றுப்புண்டு உலர்ந்துபோகிறது(சங். 90:9).இந்த குறுகியகாலத்திலே, நா ம் செய்யவேண்டிய அதிமுக்கியமா ன கடமை, இரட்சிப்பை பெற்றுக் கொள்ளவேண்டும்; கிறிஸ்துவுக்கு உள்ளத்தில்இடங்கொடுத்து பரிசுத் தத்தை காத்துக்கொள்ளவேண்டும். அப்பொழுது நிச்சயம் இம்மைக்கும் மறுமைக்குமுள்ள ஆசீர்வாதங்க ளை பெற்றுக்கொள்வோம். "கிறிஸ் து எனக்கு ஜீவன்; சாவு எனக்கு ஆ தாயம்" என்று தைரியமாய் சொல்ல லாம்.*
*பிரியமானவர்களே! நித்தியத்தைக் குறித்த ஒருதெளிவான அறிவும் அ க்கறையும் இல்லாமல் வாழ்ந்துக் கொண்டிருக்கிறீர்களா? ஆத்துமா வைக் குறித்த ஒரு உத்தரவாதமில் லாமல் மனம்போல வாழ்ந்துக் கொ ண்டிருக்கிறீர்களா? இம்மைக்காக மாத்திரம் தேவனைத் தேடுகிறவர் களாக காணப்படுகிறீர்களா? லௌ கீக ஐசுவரியங்களும், செல்வ மயக் கங்களும் உங்கள் வாழ்க்கையை த டுமாறப்பண்ணுகிறதா? நாடின து றைமுகத்திற்கு போய்சேர்வேனோ? என்ற நிச்சயமில்லாமல் ஓடிக் கொ ண்டிருக்கிறீர்களா? மனம் கலங்கா திருங்கள்!இன்றைக்கே அருள்நாத ர் இயேசுவுக்கு உங்கள் இருதயத் தைத்திறந்து கொடுத்துவிடுங்கள். அவருடைய இரட்சிப்பின் பேழைக் குள் நீங்களும், உங்கள் குடும்பமும் ஓடிவந்துவிடுங்கள். அவர் கொடுக் கிற தெய்வீக சமாதானத்தையும் ம கிழ்ச்சியையும் பெற்றனுபவியுங்க ள். உலகம் கொடுக்கிற சகல இன்ப ங்களையும் வெறுத்துத் தள்ளுங்க ள்.ஆசைகாட்டி மோசம்செய்யும் இந் த பாழுலகை நம்பி ஏமாந்து விடாதி ருங்கள். பிசாசின் சகல தந்திரங்க ளையும் அறிந்து, அவைகளை மேற் கொள்ளவேண்டிய ஞானத்தையும், பெலனையும், கிருபையையும் ஆ ண்டவரிடத்திலிருந்துபெற்றுக்கொ ண்டு,ஒருவெற்றியுள்ள நித்தியவா ழ்விற்கு உங்களைஆயத்தப்படுத்தி க்கொள்ளுங்கள். அதிசீக்கிரமாய் இயேசு இந்த பூமிக்கு திரும்ப வரப் போகிறார். மத்திய ஆகாயத்திலே அவரை எதிர்கொண்டு, யுகாயுகமா ய் மோட்சலோகத்திலே கர்த்தரோடு மகிழ்ந்திருக்கிற பாக்கியத்தை பெ ற்றுக் கொள்ளுங்கள். உங்களுக் காக ஜெபிக்கிறேன். மாரநாதா!*
Pr. Y. Stephen
Aroma of Christ Ministry
Chennai - South India
GP/PP/Mob: +917667709977
Thanks for using my website. Post your comments on this