Type Here to Get Search Results !

நம்மைக்குறித்து நன்மையானவைகளையே நினைக்கிற தேவன் | Stphen Bible Message Tamil | தின தியான குறிப்புகள் | Gospel Sermon | Jesus Sam

*இருதயத்தை வேலியடைத்து காத் துக்கொள்; வாழ்க்கை எப்போதும் பாதுகாப்பாய் இருக்கும்.*

*நீதிமொழிகள் 4:23*

*"எல்லாக் காவலோடும் உன் இருத யத்தைக் காத்துக்கொள், அதனிடத் தினின்று ஜீவஊற்று புறப்படும்".*

*தேவபிள்ளையே! நம்முடைய சரீரத் திலிருக்கிற பாகங்களில் மிக மிக முக்கியமானது இருதயம். வேதத்தி லே இருதயம், உள்ளம் என்பது ஆத் துமாவைக் குறிக்கிறது. ஆத்துமா தேவன் தந்த பொக்கிஷம். இந்த ஆ த்துமா கர்த்தருடைய பார்வையிலே மிகவும் விலையேறப்பெற்றது.ஆக வேதான்,ஆதிமனிதனை தேவன் உ ருவாக்கி, அவனுக்கு ஜீவஆத்துமா என்று பேரிட்டார். தேவன் அவனை மாம்ச மனிதனாகவோ(அ) ஜீவமனி தனாகவோ பார்க்கவில்லை. கார ணம், அவனுக்குள் இருக்கிற மாம்ச மோ, மனிதனோ ஒருநாள் அழிந்து போகும். நித்தியமாக வாழப் போவ து அவனுக்குள் இருக்கிற ஆத்துமா வே.அந்த ஆத்துமா அழியாதது, நித் தியமானது, விலையேறப்பெற்றது. எனவே,இந்த ஆத்துமாவை மிகவும் ஜாக்கிரதையோடும், எச்சரிப்போடு ம், சகல காவலோடும் காத்துக்கொ ள்ள வேண்டியது அவசியமாயிருக் கிறது. இந்த இருதயத்திலே தான் தேவன் வாசம்பண்ணுகிறார். தேவ ன் வாசம்பண்ணுகிற, உலாவுகிற இந்த ஸ்தலம் எப்போதும் பரிசுத்த மாய் காணப்படவேண்டும். ஆகவே, அந்த இருதயத்தின் மீது நாம் விசே ஷகவனம் செலுத்தவேண்டியது மி கமிக அவசியம்.தூய்மையான இரு தயத்தோடிருக்கிறவர்கள் தான் தே வனை தரிசிக்கமுடியும்(மத்.5:8). ஆ ண்டவர் கொடுக்கிற விலையேறப் பெற்ற இரட்சிப்பை பெற்றுக்கொள் வதில், இந்த இருதயம் மிக முக்கிய பங்கு வகிக்கிறது (ரோம.10:9). மாத் திரமல்ல, அவர் கொடுக்கிற விசு வாசத்தை நம்வாழ்க்கையில் அப்பி யாசப்படுத்துவதற்கும் இந்த இருத யம் தான் காரணமாயிருக்கிறது. வேதம் சொல்கிறது: கர்த்தராகிய இயேசுவை நீ உன் வாயினாலே அ றிக்கையிட்டு, தேவன் அவரை மரி த்தோரிலிருந்து எழுப்பினாரென்று உன் இருதயத்திலே விசவாசித்தா ல் இரட்சிக்கப்படுவாய் (ரோம.10:9).*

*அன்பானவர்களே! தாவீது பக்தன் சொல்கிறார்: “என் இருதயத்திலே அக்கிரம சிந்தை கொண்டிருந்தே னானால், ஆண்டவர் எனக்கு செவி கொடார்”(சங்.66:20). ஆகவே, பரிசுத் த சிந்தையோடும், விசுவாசத்தோடு ம் இருதயத்திலிருந்து ஏறெடுக்கிற விண்ணப்பங்களுக்கு தேவன் நிச் சயமாய் செவிகொடுக்கிறார்.இந்த இருதயமானது, நாவைக்கொண்டு விசுவாச வார்த்தைகளையும் பேசு ம்;அவிசுவாசமான வார்த்தைகளை யும் பேசும். சிந்தையின் மூலமாக நேர்மறையான எண்ணங்களையு ம் சிந்திக்கவைக்கும்;எதிர்மறையா ன எண்ணங்களையும் சிந்திக்க வைக்கும். செவிகளைக் கொண்டு ஆரோக்கியமான வார்த்தைகளை கேட்கவும், வாழ்க்கையை சீரழிக்கி ற வார்த்தைகளை கேட்கவும் பண் ணும். கண்களைக் கொண்டு நல்ல காரியங்களை பார்க்கவும், இச்சை யைத் தூண்டுகிற காரியங்களையு ம் பார்க்கவைக்கும். இப்படியாக தே வன் நம் வாழ்க்கையிலே செய்யும் காரியங்கள் அனைத்திற்கும் நம் இ ருதயத்தையே அவர் நோக்கிப் பார் க்கிறபடியால், சாத்தானும் நம் இரு தயத்தையே எப்போதும் குறிவைத் துகாத்திருக்கிறான்.தேவன் சிங்கா சனம்அமைத்து வீற்றிருக்கிற அந்த அரியணையை(இருதயத்தை) அவ ன் பிடித்துவிட வேண்டும் என்று வி டாபிடியாய் போராடுகிறான். யூதா ஸ், அனனியா, சப்பீராள் தங்கள் இ ருதயங்களிலே பண ஆசை என்ற சாத்தானுக்கு இடங்கொடுத்து விட் டார்கள்; அழிந்துபோனார்கள். இதே சோதனையை மாயவித்தைக் கார னாகிய சீமோன்மூலமாக சாத்தான் பேதுருவுக்கும் கொண்டுவந்தான்; ஆனால் பேதுருவோ பண ஆசைக் கு எதிர்த்துநின்றான். கர்த்தரால் ஜெயம்பெற்றான்.*

*பிரியமானவர்களே! எந்த இருதய த்தை தேவன் தம்மோடு இசைவாய் வைத்துக்கொள்ளவிரும்புகிறாரோ அந்த இருதயத்தைத் தான் பிசாசு குறிவைத்து தேவனைவிட்டு தூர மாய் கொண்டு போய்விடுகிறான். ஆகவே தான், “எல்லாக் காவலோடு ம் உன் இருதயத்தை காத்துக்கொ ள்” என்று வேதம் சொல்கிறது. “இந் த ஜனங்கள் வாயினால் என்னிடத் தில் சேர்ந்து, தங்கள் உதடுகளினா ல் என்னை கனம்பண்ணுகிறார்க ள்;அவர்கள்இருதயமோ எனக்கு தூ ரமாய் இருக்கிறது” (ஏசா.29:13) என் று கர்த்தர் துக்கத்தோடுசொல்கிறா ர்.இருதயத்தைகாத்துக்கொள்வதெ ன்றால், இருதயம் ஒவ்வொருநாளு ம் இயேசுவின் இரத்தத்தினால் கழு வி சுத்திகரிக்கப்பட வேண்டும். நீங் களும்கூட, “தேவனே, சுத்த இருதய த்தை என்னிலே சிருஷ்டியும்; வேத னையுண்டாக்கும் வழிகள் என் இரு தயத்திலே உண்டோ என்று சோதி த்து ஆராய்ந்து, நித்திய வழியிலே என்னை நடத்தும்” என்று கர்த்தரை நோக்கி கேளுங்கள். நிச்சயமாக உ ங்கள் உள்ளத்தை கர்த்தர் தூய்மை யாக்குவார். அவர் உங்கள் இருதய த்திலே உலாவி,உங்கள்தேவனாயி ருப்பார்;நீங்கள்அவருடைய ஜனமா யிருப்பீர்கள். உங்கள்இருதயம் ஒரு வேலி அடைக்கப்பட்ட தோட்டமாய், மறைவுகட்டப்பட்ட நீரூற்றாய், முத்த ரிக்கப்பட்ட கிணறாய் காணப்படும். பிசாசானவன் எந்தவிதத்திலும் உ ங்கள் இருதயத்தை ஆளுகை செய் யமுடியாது. காரணம்,தேவன் உங்க ள் வீட்டிலே(இருதயத்திலே) நிரந்தர மாய் தங்கிவிடுவார்.அவருடைய இ னிமையான பிரசன்னத்திலே எப் போதும் மகிழ்ந்து களிகூருவீர்கள்; உங்கள் இருதயம் தெய்வீக சமாதா னத்தையும்,பேரின்பத்தையும் அனு பவிக்கும்போது, அங்கு பாடு உபத் திரவங்களுக்கும், வியாதி பெலவீ னங்களுக்கும் இடமேஇருக்காது. உ ங்கள்இருதயத்தை எப்போதும் கிறி ஸ்துஇயேசுவுக்குள் காத்துக்கொள் ளுங்கள்! கர்த்தர் தாமே உங்களுக் கு உதவிச் செய்வாராக! உங்களுக் காக ஜெபிக்கிறேன்.*


*உலகத்தின் ஆக்கினைக்கு தப்புவ தற்கான ஒரே வழி இயேசுவுக்குள் மறைந்து வாழ்வதே.*

*ரோமர் 8:1.*

*"ஆனபடியால் கிறிஸ்து இயேசுவுக் குட்பட்டவர்களாயிருந்து, மாம்சத்தி ன்படி நடவாமல் ஆவியின்படியே நடக்கிறவர்களுக்கு ஆக்கினைத் தீர்ப்பில்லை".*

*தேவபிள்ளையே! நம் அருள்நாதர் இயேசு இந்த உலகத்தை விட்டு பர லோகத்திற்கு எடுத்துக்கொள்ளும் நேரம் வந்தபோது, அநேகக் காரிய ங்களைசீஷர்களுக்கு ஆலோசனை யாக, எச்சரிப்பாக, ஆறுதலாக சொ ன்னார். “நான் உங்களுடனே கூட எ ன்றென்றைக்கும் இருக்கும்படிக்கு சத்தியஆவியாகிய வேறொரு தேற் றரவாளனை உங்களிடத்திற்கு அ னுப்புவேன்; பரிசுத்த ஆவியாகிய தேற்றரவாளனேஎல்லாவற்றையும் உங்களுக்குப்போதித்து, நினைப்பூ ட்டுவார்;அவர் வந்து பாவத்தைக் கு றித்தும், நீதியைக் குறித்தும், நியா யத்தீர்ப்பைக் குறித்தும் கண்டித்து உணர்த்துவார்; சகல சத்தியத்திற் குள்ளும் நடத்துவார்; வரப்போகிற காரியங்களை உங்களுக்கு அறிவி ப்பார்; நீங்கள் துக்கப்படுவீர்கள், ஆ னாலும் உங்கள் துக்கம் சந்தோஷ மாய் மாறும்” என்பதை மிகப் பிரதா னமாக சொல்லிப் போனார். அப்படி யானால்,அழிந்துபோகிற இந்தஉல கத்தின் ஆக்கினைக்கு தம்முடைய பிள்ளைகளைதப்பப்பண்ணுவதில் அவர் எவ்வளவு கரிசனையுள்ளவ ராய் இந்தவார்த்தைகளைசொல்லி யிருந்திருப்பார் என்று சற்று சிந்தி த்து பாருங்கள். ஒரு மனுஷன் தன் தாயின் கர்ப்பத்திலே பிறப்பது இந் த உலகத்தில் வாழ்வதற்காகவும், அதே சமயத்தில் பரலோகத்தில் நி த்திய நித்தியகாலமாய் வாழ்வதற் கு ஆவியினால் பிறக்க வேண்டும் என்பதும் தேவனுடைய கட்டளை.*

*அன்பானவர்களே! இந்த உலகத்தி லே 2 ஆவிகள் ஒன்றுக்கொன்று எ திர்மாறாய் செயல்பட்டுக் கொண்டி ருக்கின்றன. அவைகள் பரிசுத்த(உ ன்னத) ஆவி மற்றும் மாம்ச (உலக) ஆவி.எகிப்தின் அடிமைத்தனத்திலி ருந்து கர்த்தர் ஜனங்களை விடுத லையாக்கி, அவர்களை பாலும் தே னும் ஓடுகிற கானான் தேசத்திற்கு வழிநடத்திக் கொண்டு செல்ல மோ சேயை கர்த்தர் தெரிந்து கொண்டா ர். தங்கள் மனம்போல வனாந்தரத் தில் பிரயாணம்பண்ண தேவன் அ வர்களை அனுமதிக்கவேயில்லை. ஒரு பிள்ளையை நடத்த பெற்றோர் தேவை. ஒரு மாணவனை நடத்த ஆ சிரியர் தேவை. அலுவலகத்தை நட த்த ஒரு பொறுப்பானவர் தேவை. அதுபோல, ஆவிக்குரிய ஜீவியத்தி ல் நம்மை வழிநடத்த ஒரு பரிசுத்த ஆவியானவர் தேவை. இல்லாவிட் டால், பிசாசு நம்மை மிக எளிதில் வ ஞ்சித்துப் போடுவான். நாமும் வேசி ப்பிள்ளைகளாய் மாறியிருப்போம். இயேசு இந்த உலகத்தில் வாழ்ந்த போது, அவருக்கே பரிசுத்தஆவியா னவரின் நிறைவும், வழிநடத்துதலு ம் தேவையாயிருந்ததேயானால், உ ங்களுக்கும் எனக்கும் எவ்வளவு அ திகமாய் தேவை என்பதை சிந்தித் துப்பாருங்கள்.*

*பிரியமானவர்களே! இந்த உலகத்தி ற்கு அதிசீக்கிரத்திலே ஒரு ஆக்கி னைத்தீர்ப்பு காத்துக் கொண்டிருக் கிறது. இதன் முடிவு மிகக் கொடிய பரிதாபம். ஆனால், இந்த பரிதாப மு டிவிலிருந்து தப்பிக் கொள்வதற்கா ன ஒரேவழியைத்தான் இந்த வசன ம் தெளிவாக சொல்லுகிறது. 1.கிறி ஸ்து இயேசுவுக்குள் வாழ வேண்டு ம். 2.மாம்சத்தின்படி நடக்கக்கூடாது. 3.ஆவியினால் நடத்தப்பட வேண்டு ம்.ஆக இந்த 3காரியங்களும் ஒரு ம னிதனை இந்த கொடிய ஆக்கினை யிலிருந்து தப்புவித்து பாதுகாக்கி றது. மாம்சத்தின் வழி நரகத்திற்கு நேராகவும்,ஆவிக்குரியவழிபரலோ கத்திற்கு நேராகவும் நடத்துகிறது. இந்த நாளிலே நீங்கள் எந்த ஆவி யினால் நடத்தப்படுகிறீர்கள் என்ப தை சற்று சோதித்துப் பாருங்கள். ஒருவேளை நீங்கள் தேவ ஆவியி னால் நடத்தப்பட்டால், நீங்கள் பர லோக தேவனுடைய பிள்ளைகளா யிருக்கிறீர்கள். தேவபிள்ளையாகி ய உங்களை பிசாசு எந்தவிதத்திலு ம் நெருங்கமுடியாது; உங்களுக்கெ ன்று தேவன் இந்தபூமியிலே வைத் திருக்கிற நன்மைகளை ஒருபோது ம் சத்துரு வஞ்சிக்க முடியாது; சூழ் நிலைகள் உங்களைசோர்வடையப் பண்ணினாலும், உங்களுக்குள் இ ருக்கிற ஆவியானவர் உங்களைப் பெலப்படுத்தி, சகல சத்தியத்திற்கு ள் உங்களை வழிநடத்தி, ஆண்டவ ருக்காக பரிசுத்தத்தில் முன்னேறிப் போக உதவிசெய்வார். உங்களைக் கொண்டு, அநேகரை பரிசுத்தஆவி யின் நிறைவிற்குள் வழிநடத்துவா ர்.பரிசுத்தஆவிக்குள் எப்பொழுதும் விடுதலை,ஜெயம், சமாதானம், பரி சுத்தம், சம்பூரணம் உண்டு. இவைக ளுக்கெல்லாம் நீங்கள் சுதந்தரவா ளிகளாய் மாறிவிடுகிறீர்கள். உங்க ளைப் போல ஒரு பாக்கியம் பெற்ற வர் இந்த பூமியிலே யாருமே இருக் கமுடியாது. ஆகவே உங்கள் இருத யம் எப்பொழுதும் உன்னதத்திற்கு ரிய ஆசீர்வாதங்களினால் நிறைந் திருக்கட்டும். பூமிக்குரிய ஆசீர்வா தம் தானாய் உங்கள் காலடியிலே வந்துவிழும். கர்த்தர் தாமே உங்க ளுக்கு உதவிச்செய்வாராக! உங்க ளுக்காக ஜெபிக்கிறேன்.*


*ஆசீர்வாதங்களை இழந்துபோக அல்ல; அதிலே உன்னைப் பெருகப் பண்ணவே விரும்புகிற தேவன்.*

எபிரெயர் 6:14
நிச்சயமாக நான்(கர்த்தர்) உன்னை ஆசீர்வதிக்கவே ஆசீர்வதித்து, உன் னைப் பெருகவே பெருகப்பண்ணு வேன்.”*

*தேவபிள்ளையே! நம் அருமை ஆ ண்டவருடைய இயல்பான குணமே நம்மை ஆசீர்வதிக்கவேண்டும் என் பது தான்.அதற்கான எத்தனையோ ஆதாரங்களை நாம் வேதத்திலே காணமுடியும். நான் உன்னைப் பெ ரிய ஜாதியாக்கி, உன்னை ஆசீர்வ தித்து, உன் பேரைப் பெருமைப்படு த்துவேன்; நீ ஆசீர்வாதமாய் இருப் பாய் (ஆதி.12:2); இஸ்ரவேலை ஆசீ ர்வதிப்பதே கர்த்தருக்குப் பிரியம் (*

*எண்.24:1); கர்த்தர் நம்மை நினைத் திருக்கிறார், அவர் ஆசீர்வதிப்பார்*

*(சங்.115:12). கர்த்தர் உயர வானத்தி லிருந்து உண்டாகும் ஆசீர்வாதங்க ளினாலும், கீழே ஆழத்தில் உண்டா கும் ஆசீர்வாதங்களினாலும் உன் னை ஆசீர்வதிப்பார் (ஆதி.49:25) எ ன்றுசொல்லிக்கொண்டே போகலா ம். கர்த்தர் நம்மை ஆசீர்வதிக்கிற தேவன் மட்டுமல்ல,அந்த ஆசீர்வாத த்திலே நாம் பெருக வேண்டுமென் று விரும்புகிறவர். இன்றைக்கு அ நேகருக்கு ஆசீர்வாதம் வருகிறது, ஆனால் அதிலே ஒருபெருக்கத்தை காணமுடிவதில்லை; அப்படியே ஒ ரு தேக்க நிலைமையிலோ(அ) குன் றிப்போகிற நிலைமையிலோ தான் காணப்படுகிறார்கள். “ஆசீர்வாதம்” என்றசொல் எத்தனை இனிமையா னது! ஆசீர்வாதத்திற்காக மனிதர்க ள் அங்குமிங்கும் ஓடி அலைகிறார் கள். பெரியவர்களைப் பார்க்கும் போது ஆசீர்வாதம்பண்ணுங்கள் எ ன்று கேட்கிறார்கள். ஆசீர்வாதத்தி ற்காகஜெபிக்கும்படி ஊழியர்களிட த்திலே கேட்கிறார்கள். அநேகர் தங் கள்பிள்ளைகளுக்கு “ஆசீர்”, “தேவா சீர்வாதம்”, “பிளசிங்” என்றெல்லாம் பெயர்சூட்டுகிறார்கள். தங்கள் குடு ம்பம் ஆசீர்வாதமாயிருக்க வேண்டு மென்பதற்காகவே பிள்ளைகளை நல்ல மேற்படிப்புகளுக்கு அனுப்பு கிறார்கள். ஆனால், உண்மையான ஆசீர்வாதம் என்ன? ஆசீர்வாதத்தி ன்ஊற்றுக்காரணராகிய கர்த்தரை நம்முடைய வாழ்க்கையில் உரிமை யோடு சுதந்தரித்துக் கொள்வதே மாபெரும்ஆசீர்வாதம். அப்பொழுது இரட்சிப்பின் சந்தோஷம்,தெய்வீக சமாதானம், நித்தியஜீவன், பரிசுத் த ஆவியின் அபிஷேகம், விசுவாச ம் ஆகியவைகள் எல்லாம் தானாக வே நம்மைத் தேடிவரும்.*

*அன்பானவர்களே! இந்த உலகத்தி லே 3 விதமான ஆசீர்வாதங்கள் உ ண்டு. மனிதர்களிடமிருந்து வரும் ஆசீர்வாதங்கள்; சாத்தானிடமிருந் து வரும் ஆசீர்வாதங்கள்; கர்த்தரிட த்திலிருந்து வரும் ஆசீர்வாதங்கள். சாத்தானின் ஆசீர்வாதங்கள் ஆரம் பத்தில் மகிழ்ச்சியாய் இருக்கும். ஆ னால் பின்போ எட்டிக்காயை விட க சப்பாகிவிடும். 30 வெள்ளிக்காசுக ள் யூதாசை ஆறுதல்படுத்தவில் லை; நாகமானிடமிருந்து பெற்ற ப ணம் கேயாசிக்கு குஷ்டரோகத்தை யே கொண்டுவந்தது.கர்த்தருடைய ஆசீர்வாதம்ஐசுவரியத்தையும்,சமா தானத்தையும், இளைப்பாறுதலை யும்,மனநிறைவையும்தரக்கூடியது; அதிலே வேதனையிருக்காது, கண் ணீர் கவலையிருக்காது, மகிழ்ச்சி யோடு அதை அனுபவிக்க முடியும். அநேகருடைய வாழ்க்கையிலே ஆ சீர்வாதங்களை பார்க்கமுடிகிறது, ஆனால் அதிலே அவர்களுக்கு சமா தானமில்லை; சஞ்சலத்தோடும் வே தனையோடும் கண்ணீரோடும் வா ழ்ந்து வருகிறார்கள். கர்த்தருடைய ஆசீர்வாதமோ உன் வாழ்க்கையிலி ருக்கிற சாபங்கள், துக்கங்கள், வே தனைகள்,தோல்விகள்,அவமானங் கள், வியாதிகள், கண்ணீர் கவலை களை மாற்றி,நித்திய மகிழ்ச்சியை யும், ஜீவனையும், சமாதானத்தையு ம்,ஐசுவரியத்தையும் உனக்கு கொ ண்டுவரும். அதிலே அனுதினமும் ஒரு பெருக்கத்தையும் காணமுடியு ம்.இப்படிப்பட்டஆசீர்வாதங்களை யெல்லாம் உன் வாழ்க்கையிலே அ னுபவிக்கிறதற்கு, ஆண்டவர் விதி க்கிற ஒரே நிபந்தனை, கர்த்தருடை ய சத்தத்திற்கு கீழ்ப்படிந்து, அவர் க ட்டளைகளின்படியெல்லாம் செய்ய நீ கவனமாயிருக்க வேண்டும்(உபா. 28:1).*

*பிரியமானவர்களே! ஒரு நாளிலே ஆசீர்வாதத்தின் உச்சத்திலே நீ வா ழ்ந்திருக்கலாம்;ஆனால் இப்பொழு தோ எல்லாவற்றையும் இழந்து நீ நொறுக்கப்பட்டிருக்கலாம்(அ) ஆசீர் வாதத்தின் உச்சத்திற்கும் நீ வாழ்கி ற வாழ்க்கைக்கும் சம்பந்தமேயில் லாமலிருக்கலாம். கவலைப்படாதி ருங்கள்! இன்றைக்கு கர்த்தருடைய வார்த்தை தீர்க்கதரிசனமாய் உனக் கு நேராய் வருகிறது. “கடந்த நாட்க ளிலே கர்த்தருடைய ஆசீர்வாதத்தி ற்காக ஏங்கித் தவித்து, எவ்வளவுக் கெவ்வளவு துயரங்களையும் வேத னைகளையும்அனுபவித்தாயோ அ வ்வளவுக்கவ்வளவு நான் உன்னை ஆசீர்வதித்து, மற்றவர்களுக்கும் உ ன்னை ஆசீர்வாதமாக்குவேன்; உன் னைசிறுமைப்படுத்தின நாட்களுக் கும், துன்பத்தைக் கண்ட வருஷங் களுக்கும் சரியாய் நான் உன்னை மகிழ்ச்சியாக்குவேன்; உன்னை அ லட்சியமாய் பார்க்கிறவர்களுக்கு முன்பாக உன்னை கீர்த்தியும் புகழ் ச்சியுமாய் வைப்பேன்; சரீர பெலவீ னங்கள், கடன்பாரங்கள், லௌகீக க்கண்ணிகள் உன் எதிர்காலத்தின் நம்பிக்கையை சீர்குலைக்கிறதா? மனம் கலங்காதிரு! நிச்சயமாகவே உன்மேன்மையை பெருகப்பண்ணி சத்துருக்களுக்கு முன்பாக உன் த லையை உயர்த்தி,உன்வாழ்க்கையி லிருக்கிற கன்மலையை தண்ணீர் தடாகமாகவும்,கற்பாறைகளை நீரூ ற்றுகளாகவும் மாற்றி, கசந்த மாரா வின் அனுபவத்தை மாற்றி, ஒரு க ளிப்பின்/மதுரமான வாழ்க்கையை த்தந்து உன்னைசந்தோஷப்படுத்து வேன்.என் கட்டளைகளுக்கு நேராய் உன் ஜீவியத்தை அர்ப்பணித்து வி டு.ஆதிஅன்பிற்குள் கடந்துவந்துவி டு. உன் வழிகளை என்னிடத்திலே ஒப்புவித்துவிட்டு நம்பிக்கையோடு விசுவாசவாழ்க்கையில் முன்னேறி ச்செல். நானே தடைகளை உடைத் து, அந்தகாரத்திலும், ஒளிப்பிடத்தி லும்இருக்கிற பொக்கிஷத்தையும், நிறைவையும் உனக்கு கொடுப்பே ன்”. உங்கள் இருதயம் கலங்காதிரு ப்பதாக! உங்களுக்காக ஜெபிக்கி றேன்.*


*தேவன் பெரியவர் - அவர் செய்யும் அற்புத அதிசயங்கள் மகா பெரிய வைகள்.*

*யோபு 37:5.*
*"நாம் கிரகிக்கக்கூடாத பெரிய காரி யங்களை அவர் (கர்த்தர்) செய்கி றார்".*


*தேவபிள்ளையே! நம்முடைய ஆண் டவர் ஒருசாதாரண கடவுளல்ல; இந் த பூமியிலே முப்பத்தி முக்கோடி தே வர்கள் இருந்தாலும், அண்டசராசர ங்களையும் தம்முடைய கரத்தின் வ ல்லமைக்குள் வைத்து ஆளுகைசெ ய்கிற நம்முடைய தேவாதி தேவனு க்குள் எவ்வளவு ஒரு வல்லமையை வைத்திருப்பார் என்று சற்று சிந்தி த்துப்பார்த்தால் நம்கண்களுக்கு ஆ ச்சரியமாயிருக்கும். வானத்திலும் பூமியிலும் சகல அதிகாரமும் உடை யவர். கர்த்தருடைய நாமம் பரிசுத்த மும் பயங்கரமுமானது (சங்.111:9); பூமியின் மீதெங்கும் மகத்துவமான ராஜாவுமாயிருக்கிறார்(சங்.47:2); அ வர் தேவாதிதேவனும், கர்த்தாதி கர் த்தரும், மகத்துவமும் வல்லமையும் பயங்கரமுமான தேவன்(உபா.10:17); அவர் ஆராய்ந்துமுடியாத பெரியகா ரியங்களையும், எண்ணிமுடியாத அதிசங்களையும் செய்கிறவர்(யோ பு 9:10); அவர் ஆலோசனையில் ஆச் சரியமானவர், செயலில் மகத்துவ மானவர் (ஏசா.28:29) என்றெல்லாம் வேதத்திலே நாம் பார்க்கலாம். ஆ காயவிமானம் எவ்வளவு பெரியது என்று ஒரு தகப்பன் தன் சிறு குழந் தையை பார்த்து கேட்டார். அதற்கு அந்த குழந்தை, மிகவும் சிறியது எ ன்று பதில் சொன்னது. ஒருநாள் அ ந்த குழந்தையை கூட்டிக்கொண்டு, விமான நிலையத்திற்கு சென்று, விமானத்திற்கு அருகே கொண்டு போய், இப்பொழுது விமானம் எவ்வ ளவு பெரியது என்று கேட்டார். அந்த குழந்தை அப்படியே மலைத்துப்போ ய் நின்றது. இவ்வளவு பெரிய விமா னமா,வானத்தில் பறக்கும்போது மி கவும்சிறியதாக இருக்கிறது என்று வியப்போடு கேட்டதாம். அதுபோல தான் நம் ஆண்டவரும், எவ்வளவுக் கெவ்வளவு நாம் அவரோடுகூட நெ ருக்கமாக வாழ்கிறமோ, அவ்வள வாக அவர் நமக்கு மிகப்பெரிய ஒரு தேவனாக இருக்கிறார். தேவனை விட்டு தூரமாய் வாழ்பவர்கள் வாழ் க்கையிலே அவர் பெரியவராக வி ளங்கமுடியாது. நமக்கும் தேவனுக் கும் உள்ள இடைவெளி தூரத்தைப் பொருத்தே,அவருடைய மகாபெரிய அற்புதமும் அதிசயமும் நம் வாழ்க் கையில் கிரியைசெய்ய முடியும்.*

*அன்பானவர்களே! தேவன் எகிப்தி லே பார்வோனுக்குமுன்பாக செய்த பலவிதமான வாதைகளால் எகிப்தி ன்ஜனங்கள் அழிக்கப்பட்டாலும், அ தே எகிப்து தேசத்திலே வாழ்ந்த இ ஸ்ரவேல் ஜனங்களையோ அந்த வாதைகள் தொடவேயில்லை. இஸ் ரவேல்ஜனங்களை விடுதலையாக் கின பிறகும் கூட, அவர்களை சமா தானமாய் அனுப்ப பார்வோனுக்கு மனமில்லாமல் அவர்களைஅழிக்கு ம்படிக்கு தன்னுடைய யுத்தப்படைக ளோடு துரத்திக்கொண்டுவந்தபோ து,ஒரு பெரிய செங்கடலையே பிள ந்து, தமது ஜனங்களை தப்புவித்தா ர்.எந்த கடலைப் பிளந்து, தமது ஜன ங்களுக்கு பாதையை உண்டாக்கி னாரோ, அதே கடலிலே தானே, அவ ர்களை துரத்தி வந்த பார்வோனின் படைகளை மூழ்கடித்தார். எந்த யோ ர்தான்நதி அவர்களை கானானுக்கு ள் போகவிடாமல் தடுத்ததோ, அதே யோர்தானை தம்முடைய பிள்ளைக ளுக்காக குவியலாய்நிற்கவைத்தா ர். தடையாக நின்ற பெரிய எரிகோ மதிலை துதி ஆராவாரத்தினால் அ ப்படியே இடிந்துவிழப்பண்ணினார். யுத்த அனுபவமில்லாத தம்முடைய ஜனங்களுக்குஎதிராய் புறப்பட்டு வ ந்த சத்துருக்களான எமோரியரையு ம்,அமலேக்கியரையும், கானானிய ரையும் தமது வல்லமையினால் அ ழித்துப்போட்டார். மனித மூளையி னால் கிரகிக்கக்கூடாத இவ்வளவு பெரியஅதிசயங்களை செய்த தேவ னுக்கு முன்பாக உங்கள் பிரச்சனை கள் எம்மாத்திரம்?*

*பிரியமானவர்களே!உங்கள் இருத யம் கலங்காதிருப்பதாக!ஆண்டவர் உங்களையும் ஒரு நோக்கத்தோடு தான் தம்முடைய பரம கானானை சு தந்தரிப்பதற்காக இந்த வனாந்தரப் பாதையிலே நடத்திக்கொண்டுவரு கிறார். வாழ்க்கைப் பிரயாணத்தி லே நீங்கள் முன்னேறக்கூடாதபடிக் கு தடைகள்வரலாம்; சத்துருக்கள் எ ழும்பலாம்; சில நேரங்களிலே தேவ னுடைய வழிநடத்துதலை உங்களா ல் உணரக்கூட முடியாமலிருக்கலா ம்.தனிமை, தோல்வி, மன உளைச்ச ல், கடன்தொல்லைகள், சமாதானக் குறைவுகள், குடும்ப ஒற்றுமையை கெடுக்கும் காரியங்கள்,பொல்லாத மனிதர்களின் சூழ்ச்சிகள், காரண மில்லாத குற்றச்சாட்டுகள், கொடு மையான வியாதி பெலவீனங்கள் போன்ற காரியங்கள் ஆண்டவர் மே ல் நீங்கள் வைத்திருக்கிற விசுவாச த்தை சுக்குநூறாக உடைத்துப்போட லாம்.இந்த சூழ்நிலையில் உங்களு க்காக பெரியகாரியங்களை செய்யு ம் தேவன் உங்களோடு தான் இருக் கிறார். பயப்படாதிருங்கள்! வனாந் திரத்திலே இஸ்ரவேல் ஜனங்களை வழிநடத்தின கரம், நிச்சயமாய் உங் களையும் ஜெயமாய் நடத்திக் கொ ண்டு செல்லும். நீங்கள் அமர்ந்திரு ந்து கர்த்தர் உங்களுக்காக செய்யப் போகும்அதிசயமானகாரியங்களை உங்கள் மாம்சக் கண்கள் காணும். இந்த உலகத்தில் இருக்கிறவனிலு ம் உங்களுக்குள் இருக்கிறவர் மகா பெரியவர்;அவர் உங்களுக்காக யுத் தம்பண்ணுவார்; உங்கள் காரியங் கள் மனுஷர்களுக்கு முன்பாக தோ ற்றுப்போகலாம்;ஆனால் நீதியுள்ள தேவன் உங்கள்பட்சத்திலே நின்று, உங்களுக்காக வழக்காடி ஜெயத் தைத்தருவார்.மனம்கலங்காதிருங் கள்!உங்களுக்காக ஜெபிக்கிறேன்.*



*நீங்கள் அடிமைத்தனஆவியைப்பெ றாமல், அப்பா பிதாவே, என்று கூப் பிடப்பண்ணுகிறபுத்திரசுவீகாரத்தி ன் ஆவியைப் பெற்றீருக்கிறீர்கள்*

*ரோமர் 7:24*
*"நிர்ப்பந்தமான மனுஷன் நான்! இந்த மரண சரீரத்தினின்று யார் என்னை விடுதலையாக்குவார்?"*

*தேவபிள்ளையே! இந்த நாள் நம்மு டைய இந்தியதாய்நாட்டின் சுதந்திர தினம். 76 ஆண்டுகளுக்கு முன்பு இ ந்ததேசமானது ஆங்கிலேயர்களின் அடிமைத்தனத்திலே, ஆளுகையி லே, அதிகாரத்திலே இருந்தது. இந் தியர்களின் சுயாதீனமானது சிறை பட்டுக் கிடந்தது; இந்தியர்களின் உரிமைகள் பறிக்கப்பட்டது; சுதந்தர மாகவாழமுடியாத ஒருசூழ்நிலையி ல் தான் நம்முடைய தேசத் தலைவர் கள்(மகாத்மா காந்தி, ஜவஹர்லால் நேரு, வீரபாண்டிய கட்டபொம்மன், பகத்சிங், இன்னும் பலர்....) ஒன்று சேர்ந்து தேசத்தின் சுயாட்சிக்காக போராடி உயிரைப்பணயம்வைத்து, சுதந்தரத்தை வாங்கிக்கொடுத்தார் கள். இது ஒரு உலகப் பிரகாரமான விடுதலையாயிருந்தாலும், மெய் யான ஆவிக்குரிய வாழ்க்கையின் விடுதலைக்காகஒவ்வொருநாளும் நாம் போராடிக் கொண்டிருக்கிறோ ம்.இந்த ஆவிக்குரிய விடுதலைக்கு விரோதமாக உலகத்தின்/மாம்சத்தி ன்/ பிசாசின் கிரியைகள் போராடி, ஆவிக்குரிய மனிதனை சுயாதீன மாய்/ஜெயமாய் வாழவிடாதபடி எப் போதும் போராடுகிறது (கலா.5:17). இவைகளை மேற்கொள்வதற்காக த்தான் அப்.பவுல், தன்னுடைய ஜீவி யத்தின் நிலைமையை உணர்ந்து, ரோமாபுரியாருக்குஎழுதின நிருபத் திலே தனது சரீரத்திற்கான ஒரு வி டுதலையை வாஞ்சித்து இந்த வார் த்தைகளை எழுதுகிறார். மண்ணி னால் உருவாக்கப்பட்ட இந்த சரீரமா னது மண்ணுக்கே திரும்பினாலும், இந்த சரீரமாகிய மண்பாண்டத்திற் குள் தேவன் தம்முடைய விலையே றப்பெற்ற ஆவிக்குரிய பொக்கிஷ ங்களை(ஆவி,ஆத்துமா, இரட்சிப்பு, அபிஷேகம், விசுவாசம்) வைத்திரு க்கிறார்.*

*அன்பானவர்களே!இந்த பொக்கிஷ ங்களெல்லாம் எதற்காக ஒரு மனி தனுக்குள் கொடுக்கப்பட்டிருக்கிற தென்றால்,மரணத்தின்அதிகாரியா கிய பிசாசானவன், தனது அதிகார த்தினால் ஒருமனிதனை மரணத்தி ற்குள் அடிமைப்படுத்தி விடாதபடிக் கு, அருள்நாதர் இயேசு தாமே தமது மரணத்தினாலே அந்த பிசாசை அ ழித்துப் போட்டதுமன்றி, ஜீவகால மெல்லாம் மரணபயத்தினாலே அடி மைத்தனத்திற்குள்ளானவர்கள் யா வரையும் விடுதலைபண்ணும்படி, அவர்தாமே நமக்காகமரணத்தை ரு சிபார்த்து (எபி.2:14-15), மரணத்தின் மேல் ஜெயத்தை நமது ஆவி,ஆத்து மாவிலே தந்திருக்கிறார். ஆகவே, பொல்லாத மரணத்திற்கோ, பாதா ளத்திற்கோ, பாவ சாபங்களுக்கோ, எந்தவொரு துஷ்டசாத்தானின் கிரி யைகளுக்கோ நீங்கள் அடிமைகள ல்ல. குமாரன் (இயேசுகிறிஸ்து) உங்களை விடுதலையாக்கினால், நீங்கள் மெய்யாகவே விடுதலையா வீர்கள்; சத்தியத்தை அறிவீர்கள், ச த்தியம் உங்களைவிடுதலையாக்கு ம்(யோவா.8:32,36). நீங்கள் கிறிஸ்து வினுடையவர்களானால், ஆபிரகா மின் சந்ததியாராயும்,வாக்குத்தத்த த்தின்படியே சுதந்தரராயும் இருக்கி றீர்கள் (கலா.3:29). ஆகவே, தேவன் நமக்கு சம்பாதித்துக் கொடுத்திருக் கிற இந்த விலையேறப்பெற்ற விடு தலையின் வாழ்க்கையிலே/ஆவிக் குரிய சுதந்தரத்திலே கடைசி வரை நாம் நிலைத்திருக்கவேண்டும் என் றும் தேவன் விரும்புகிறார். நீங்கள் மறுபடியும் அடிமைத்தனத்தின் நுக த்திற்குட்படாமல், கிறிஸ்து நமக்கு உண்டாக்கின சுயாதீன நிலைமை யிலேநிலைகொண்டிருங்கள்(கலா 5:1)என்றும் அப்.பவுல்நமக்குஆலோ சனையாகஎழுதிவைத்திருக்கிறார்.*

*பிரியமானவர்களே! இன்றைக்கு பி சாசானவன் பலவிதமான வியாதி யின்கட்டுகளிலே,பில்லிசூனிய மா ந்திரீகக் கட்டுகளிலே, கடன் தொல் லை/குடிப்பழக்கம்/ லாகிரிவஸ்துக் கள்/ டி.வி. சினிமாக்கள்/ சமூக வ லை தளங்கள், பலவிதமான மாம்ச இச்சைகளிலே அநேகரை,குறிப்பா க வாலிபப் பிள்ளைகளை அடிமைப் படுத்தி,கிறிஸ்துவுக்காக அவர்கள் எழும்பிப்பிரகாசிக்கமுடியாமல் அவ ர்களை சிறைபிடித்துவைத்திருக்கி றான்.இதனுடையஉச்சக்கட்ட தாக்க மானது பலரை தற்கொலைக்கு நே ராக கொண்டுபோய்விடுகிறது.இந் த சுதந்தர தினத்திலே, பரிசுத்த ஆ வியானவர் அப்படிப்பட்டவர்கள் மே லே பலமாய் இறங்கிவந்து, அவர்க ள் கட்டுகளை அறுத்து,பாவஅடிமை த்தன நுகங்களை முறித்து,சாபக்கி ரியைகளின்மேல் ஒருஜெயத்தையு ம்,நிரந்தரமான ஒரு விடுதலையை யும் தந்து,அவர்கள்வாழ்க்கையிலே ஒரு திருப்புமுனையை கொண்டுவ ந்து, எதிர்காலத்தை பிரகாசிக்கப்ப ண்ணவிரும்புகிறார்.எப்பேர்பட்ட நி ர்பந்தமான மனுஷர்களாயிருந்தா லும் சரி, இந்த உண்மையான விடு தலையை தங்கள் வாழ்க்கையிலே பெற்றுக்கொள்ளவாஞ்சிக்கிற ஒவ் வொருவருக்கும் தேவன் தம்முடை ய விசேஷித்த கிருபையையும்,வல் லமையையும், அபிஷேகத்தின் நி றைவையும் தந்து, அவர்களை ஒரு ஜெயம்பெற்றவர்களாய், கிறிஸ்து வுக்காக ஒரு சாதனையாளர்களாக, தேசத்தின் தலைவிதியை தலை கீழாக மாற்றுகிறவர்களாய் கர்த்தர் இன்றைக்கு மாற்றப்போகிறார். நீ ங்கள் விசுவாசிப்பீர்களேயானால், நிச்சயம் தேவனுடைய மகிமை உங் கள் வாழ்க்கையிலே விளங்கப்போ வதை உங்கள் மாம்சக் கண்கள் கா ணப்போகிறது. விசுவாசத்தோடு அ வருக்கு நன்றிசெலுத்துங்கள்! உங் களுக்காக ஜெபிக்கிறேன்.*


*நம்மைக்குறித்து நன்மையானவைகளையே நினைக்கிற தேவன்.*

*எரேமியா 29:11.*

*"நீங்கள் எதிர்பார்த்திருக்கும் முடி வை உங்களுக்குக் கொடுக்கும்படி க்கு நான் உங்கள்பேரில் நினைத்தி ருக்கிற நினைவுகளை அறிவேன் என்று கர்த்தர் சொல்கிறார்; அவை கள் தீமைக்கல்ல, சமாதானத்துக் கேதுவான நினைவுகளே".*

*தேவபிள்ளையே! ஆண்டவர் நம்மு டையமனவிருப்பங்களை நிறைவே ற்றுகிறவர்;தம்முடைய தயவுள்ள சி த்தத்தின்படியே நமக்குள்ளாக விரு ப்பத்தையும் செய்கையையும் உண் டாக்குகிறவர் (பிலி.2:13). தேவன் ந மக்கு எதைத் தந்தாலும் மிகச் சிறந் ததை, நன்மையானவைகளை, சமா தானத்திற்கேதுவானவைகளையே தருகிறவர். நம்முடைய நினைவுக ளையெல்லாம் தூரத்திலிருந்து அ றிகிறவர்(சங்.139:2). நமது எதிர்பார் ப்புகளையெல்லாம் நன்மையாக முடியப்பண்ணுகிறவர்;இருதயத்து நினைவுகளின்தோற்றங்களையெ ல்லாம் அளவுகோலால் அளக்கிறவ ர். ஒரு தகப்பன், தன் பிள்ளைக்கு எ ந்தப்பொருளை,எந்த வயதில், எந்த சூழ்நிலையில் கொடுக்க வேண்டு ம் என்று நன்குத் தெரியும். பிள்ளை கேட்கிற எல்லாவற்றையும் கொடுத் துவிடமாட்டான். எந்தப் பொருளை எந்த நேரத்திலே கொடுத்தால், பிள் ளைக்கு பிரயோஜனமாயிருக்கும், சமாதானமாயிருக்கும் என்று அறி ந்து, அந்தந்த வயதில் அவைகளை வாங்கிக் கொடுப்பான். அதுபோல, நம் பரமதகப்பனும், நாம் எதிர்பார்த் து,வாஞ்சித்து, விரும்பிக் கொண்டி ருக்கிற காரியங்களையெல்லாம், அவருடையசிந்தனையிலே நினை த்துக் கொண்டே தான் இருக்கிறார். உங்களுடைய அத்தியாவசியமான சகல தேவைகளையும் அவர் அறிந் திருக்கிறார்.*

*அன்பானவர்களே! ஒவ்வொரு மனி தனுக்கும் ஒவ்வொரு கால கட்டத்தி லே குறிப்பிட்ட எதிர்பார்ப்புகள் நிச் சயம் உண்டு. படிக்கிற பிள்ளைகள் தேர்விலே நல்லமதிப்பெண்கள் வா ங்கவேண்டும்; படித்து முடித்தவுடன் நல்ல சம்பளத்துடன் கூடிய வேலை வாய்ப்பு; வேலை கிடைத்தவுடன் ந ல்ல திருமண வாழ்க்கைத் துணை; திருமணமானவுடன் அழகான ஒரு குழந்தை...இப்படி பலவிதமான எதி ர்பார்ப்புகள் வாழ்க்கையிலே உண் டு.இவைகளெல்லாம்நிறைவேறுவ தற்கு தேவன் ஒரு குறிப்பிட்ட நேரத் தையும் சமயத்தையும் வைத்திருக் கிறார். சில ஆசீர்வாதங்களை பெற் றுக்கொள்வதற்கு, சில கால கட்டங் களை நாம் கடந்துவர வேண்டும். ந ம்முடைய சகல எதிர்பார்ப்புகளும் தேவனால்நிறைவேற்றப்படுமேயா னால்,நிச்சயமாக அதிலேவேதனை யோ,கண்ணீரோ, கவலையோ இரு க்கவே இருக்காது. அநேக நேரங்க ளில் நம்முடைய விருப்பங்கள்,எதிர் பார்ப்புகள் காலங்களுக்கும் சூழ்நி லைகளுக்கும் எதிர்மாறாகவே இரு க்கும். ஆகவே, அவைகள் நிறைவே ற காலதாமதம் ஆகிறது. சிலநேரங் களில்கிடைக்காமலேயும்போகிறது.*

*பிரியமானவர்களே! உங்கள் வாழ்க் கையில் நீங்கள்எதிர்பார்த்த அநேக காரியங்கள் தோல்வியில் முடிந்தி ருக்கலாம். நன்மைக்கு காத்திருந்த உங்களுக்கு தீமை வந்திருக்கலாம். சமாதானத்திற்கு காத்திருந்தஉங்க ளுக்கு மகா கசப்பு வந்திருக்கலாம். வெளிச்சத்திற்கு காத்திருந்த உங்க ளுக்கு இருள் வந்திருக்கலாம். நி னைத்தது ஒன்று, நடந்தது ஒன்றா யிருக்கலாம். மனம் கலங்காதிருங் கள்! உங்கள் எதிர்பார்ப்பை தேவன் தீமையாகவோ, தோல்வியாகவோ அல்ல; நன்மையாகவும், சமாதான மாகவும்முடியப்பண்ணவே அவர் நி னைத்திருக்கிறார். நீண்ட நாட்கள் காத்திருந்த உங்கள் ஏக்கத்திற்கு, காத்திருக்குதலுக்கு அதிசீக்கிரத்தி லே ஒரு முற்றுப்புள்ளியை வைப்பா ர். உங்கள் காரியங்களை சமாதான மாய், ஆசீர்வாதமாய் முடியக்கூடாத படி, சத்துருவும் பலவிதங்களில் த டைகளையும்சோர்வுகளையும் கொ ண்டுவரலாம். இன்றைக்கு கர்த்தர் சகல தடைகளையும் உடைத்து, உங் கள் பேரில் அவர் நினைத்திருக்கிற நினைவை சமாதானமாக முடியப்ப ண்ணுவார்.அவருடைய குறித்த நே ரத்திற்காக காத்திருங்கள். கர்த்தரு க்கு காத்திருக்கும்போது, நிச்சயமா கவே உங்கள் இருதயங்களை ஸ்தி ரப்படுத்துவார். பூரணசமாதானம் உ ங்கள் இருதயத்தை நிரப்பும். நிச்ச யமாகவே உங்கள் காரியங்களைக் கர்த்தர் மாறுதலாய்முடியப்பண்ணு வார். உங்கள் சத்துருக்களையோ தலைகுனியப் பண்ணுவார். கர்த்த ரை நம்பி திடமனதாயிருங்கள்! உங் களுக்காக ஜெபிக்கிறேன்.*

Pr. Y. Stephen
Aroma of Christ Ministry
Chennai - South India
GP/PP/Mob: +917667709977.
Tags

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.