குட்டி message!
Dear friends,
கடவுள் தந்த இந்த *அழகான நாளுக்காக* நன்றி சொல்லுங்க!!!
தண்ணீரில் நீந்தும் *மீனுக்கு* தெரியாது,
தன்னிடம் வரும் இறையால்தான் தன் உயிர் போகும் என்று, இதற்குப் பெயர் தான் *அறியாமை!*
*மான்கள்* எவ்வளவு அழகாக இருந்தாலும், புலிகள் அதை ரசித்து பார்ப்பதில்லை, புசித்தே பார்க்கிறது இதற்குப் பெயர் தான் *ஆணவம்!*
*தவளைகள்* தான் போடும் சத்தத்தால் மாத்திரமே பாம்புகளுக்கு இறையாகிறது,
இதற்குப் பெயர்தான் *வாய்க்கொழுப்பு!*
கடித்தால் தன்னை கொன்று விடுவார்கள் என்று தெரிந்திருந்தும் *தேள்* கொட்டத் தான் செய்கிறது, இதற்குப் பெயர் தான் *அவசரம்!*
அறியாமை, ஆணவம் , வாய்க்கொழுப்பு, அவசரம் இவைகள் தான் *மனிதனுக்கு அழிவை தருகிறது,* இந்த அழிவு நமக்கு வராமல் இருக்க, நம்மை படைத்த கடவுள் சொன்ன நல்ல வழிகளில் நடக்கவேண்டும், அவர் நம்மை பார்த்துக்கொண்டு இருக்கிறார் என்ற *பயம்* எப்போதும் நமக்கு இருக்க வேண்டும்,
அதாவது நல்யோசனை உன்னைக் காப்பாற்றும், புத்தி உன்னைப் பாதுகாக்கும். அதினால் நீ துன்மார்க்கனுடைய வழிக்கும், மாறுபாடு பேசுகிற மனுஷனுக்கும்,
அந்தகார வழிகளில் நடக்க நீதி நெறிகளை விட்டு, தீமைசெய்ய மகிழ்ந்து, துன்மார்க்கருடைய மாறுபாடுகளில் களிகூருகிறவர்களுக்கும்,
மாறுபாடான பாதைகளிலும் கோணலான வழிகளிலும் நடக்கிறவர்களுக்கும் *நீ* *தப்புவிக்கப்படுவாய்* . 👍🙏
Follow gods word's ❤️
Discretion will watch over you, Understanding and discernment will guard you, To keep you from the way of evil and the evil man, From the man who speaks perverse things; From those who leave the paths of uprightness To walk in the ways of darkness; Who find joy in doing evil And delight in the perversity of evil, Whose paths are crooked, And who are devious in their ways;
Dennis. HJM
9884122369
ஒரு குட்டி message!
Dear friends,
கடவுள் தந்த இந்த *சந்தோஷமான நாளுக்காக* நன்றி சொல்லுங்க!!!🙏❤️
எப்ப பாத்தாலும் ஒரே கவல😰😰😰, குடும்பத்தை நினைச்சா கவலை, 😰பிள்ளைகளை நினைச்சா கவலை, 😰வேலைய நினைச்சா கவலை, 😰கடன் பிரச்சனையை நினைச்சா கவலை 😰இப்படி எதற்கெடுத்தாலும் கவலைதான் 😰😰😰 நான் ஒன்னு சொல்லட்டுமா.... 🤔 நம்ம வாழ்ற இந்த உலகத்துல கவலையே இல்லாத ஒரு மனுஷனை நாம பார்த்ததுண்டா,? அப்படிப் பார்த்திருந்தாலாவது நாம் கவலைப்படுவதில் ஒரு நியாயம் இருக்கு, 😲🤔அப்படித்தான் யாருமே இல்லையே,🤔🤔 எனக்கு 100 கவலை என்றால், பக்கத்து வீட்டுக்காரனுக்கு 200 கவலை, அப்படி பார்க்க போனால் நாம அதிர்ஷ்டசாலி தான் இல்லையா😄👏👏 ஒன்று மட்டும் புரிஞ்சுக்கோங்க🙏 நினைத்ததெல்லாம் நிறைவேறி, நிம்மதியா உயிரை விடும் பாக்கியம் இந்த பூமியில எவனுக்குமே கிடையாது, 😲 அதனால அட உங்கள தான் 🤓கவலைப்படுவதை நிறுத்துங்கள் 🤭 அதாவது வீணா கவலைப்படுவதினால் யாராலயும் நமக்கு இருக்கும் பிரச்சனையை ஒரு முழம் கூட்டவும் முடியாது, குறைக்கவும் முடியாது 🤔 so friends ஆகையால், என்னத்தை உண்போம், என்னத்தைக் குடிப்போம், என்னத்தை உடுப்போம் என்று, கவலைப்படாதிருங்கள். 🤓😄👏👏👍
Which of you by being anxious can add one cubit unto the measure of his life? Be not therefore anxious, saying, What shall we eat? or, What shall we drink? or, Wherewithal shall we be clothed? 👍👏👏😄🙏
Dennis. HJM
9884122369
ஒரு குட்டி message!
Dear friends,
கடவுள் தந்த இந்த *புதிய நாளுக்காக* நன்றி சொல்லுங்க!!!
*வானத்தையும் பூமியையும் படைத்த கடவுள் என்னோடு இருக்க நான் அசைக்கப்படுவதில்லை!* 👍
ஒவ்வொரு நாளும் காலையில் எழுந்தவுடன் இந்த வார்த்தையை சொல்லி பழகுங்க, அன்பான கடவுள் என்னோடு இருக்க நான் எதற்கு கவலைப்பட வேண்டும் என்று சொல்லுங்கள்,👍
கடவுளே என்னோடு இருக்க நான் எதற்கு பயப்பட வேண்டும் என்று சொல்லுங்கள்,👍
எல்லாவற்றையும் எதிர்த்து நின்று போராட, எல்லா சூழ்நிலைகளையும் சமாளிக்க, எல்லாவற்றையும் நேர்த்தியாய் செய்து முடிக்க கடவுள் என்னை பலப்படுத்துவார் என்று சொல்லுங்க,👍
நான் ஒரு பொழுதும், யாரு முன்னாடியும் வெட்கப்பட்டு போக மாட்டேன் என்று சொல்லுங்கள்,👍 yes friends என்ன இருந்தாலும் இல்லாவிட்டாலும், யார் நம்ம கூட இருந்தாலும் இல்லாவிட்டாலும் நம்மைப் படைத்த *கடவுள் நம் பட்சத்தில் இருக்க நிச்சயம் நாம் அசைக்கப்பட்டு போவதில்லை* 👍👏👏
I have set the Lord continually before me; Because He is at my right hand, I will not be shaken.👍
Dennis.
9884122369
ஒரு குட்டி message!*
Dear friends,
கடவுள் தந்த இந்த *சமாதானத்தின் நாளுக்காக* நன்றி சொல்லுங்க!!!
*ஏமாற்றமா?!❤️* 👍
நாம இந்த உலகத்துல சில பேர உயிரா நம்பி இருந்திருப்போம் , உலகமே அவங்க தான்னு நினைச்சு இருந்திருப்போம், அவங்க இல்லாம என்னால வாழ முடியாது அப்படின்னு சொல்ற சூழ்நிலையில் கூட இருந்திருப்போம், இப்படிப்பட்டவங்க, நாம உயிரா நேசிச்சவங்க நம்மை ஏமாற்றிவிட்டு, துரோகம் செய்துவிட்டு, நம்மை விட்டுப் பிரிந்து போய் இருக்கலாம்,😰 இல்ல ஏதாவது தாங்க முடியாத ஏமாற்றங்கள் நம் வாழ்க்கையில் நடந்திருக்கலாம்,😰 , யார் நம்மை துடிக்கத் துடிக்க விட்டு விட்டு பிரிந்து சென்றார்களோ, 😰எந்த மனநிலையில் நம்மை விட்டு பிரிந்தார்களோ, எப்படி நாம் ஏமாற்றப்பட்டோமோ, தயவுசெய்து அதே இடத்தில் *உங்களை* நீங்களே விட்டுவிட்டு வந்து விடாதீர்கள்,🤔 ஒரு நாளும் அதே இடத்தில் நின்று விடாதீர்கள், 🤔உங்கள பத்திரமா அந்த இடத்துல இருந்து கூட்டிட்டு வந்துடுங்க, 🙏அவங்க விட்டுட்டு போன அந்த இடத்திற்கு, நாம் ஏமாற்றப்பட்ட அந்த இடத்திற்கு மறுபடியும் ஒரு நாளும் திரும்பி போய் விடாதீர்கள், 🙏அதுதான் நாம நம்மமேல வைத்திருக்கிற அன்பு, மரியாதை, அக்கறை எல்லாம்..... 🙏நம்மை வேண்டும் என்று சொல்லுகிறவர்களுக்காகவும், நம் மீது பாசம் வைத்து நம்மை நேசிக்கிறவுக்காகவும் நாம் வாழ்வதில் ஒரு அர்த்தம் உண்டு, ❤️நம்மை வேண்டாம் என்று சொல்லுகிறவர்களுக்காக கவலைப்படுவதினாலையோ, வாழ்வதினாலையோ ஒரு பிரயோஜனமும் கிடையாது,... 😰 நிச்சயம் நம்மை படைத்த *கடவுள்* நம் கூட இருப்பார் 👍 அதாவது உங்கள் வெட்கத்துக்குப் பதிலாக இரண்டத்தனையாய்ப் பலன் நிச்சயம் தருவார், இலச்சைக்குப் பதிலாகத் தங்கள் பாகத்தில் சந்தோஷப்படுவீர்கள் , அதினிமித்தம் தங்கள் தேசத்தில் இரட்டிப்பான சுதந்தரம் அடைவீர்கள், நித்திய மகிழ்ச்சி நிச்சயம் நமக்கு உண்டாகும். 🙏❤️
Don't worry about anything, just believe our God ❤️👍 Instead of your shame ye shall have double; and instead of dishonor they shall rejoice in their portion: therefore in their land they shall possess double; everlasting joy shall be unto them.👍❤️
Dennis. HJM
9884122369
ஒரு குட்டி message!*
Dear friends,
கடவுள் தந்த இந்த *ஆச்சரியமான நாளுக்காக* நன்றி சொல்லுங்க!!!
*எத்தனை ஆச்சரியம்!!!* 😲
முடிவே இல்லாத அழகான வானத்தையும், பூமியையும் அதை சுற்றும் பெரிய பெரிய கோள்களையும், இருளை ஆளு சந்திரனையும் நட்சத்திரங்களையும், பகலை ஆள சூரியனையும், மிகவும் ஆச்சரியமான பூமியையும், அதில் உள்ள இயற்கை மரம், செடி, கொடி, எத்தனையோ வகைவகையான மிருகங்கள், பறவைகள், ஊரும் பிராணிகள், நாம் உண்ணுவதற்கு பழங்கள், நாம் கண்டு மகிழ விதவிதமான பல நிறங்களில் பூத்துக்குலுங்கும் பூக்கள், இது எல்லாவற்றையும் கடவுள் படைத்தது யாருக்காக? 🤔என்று நினைக்கிரிங்க? , உங்களுக்காகவும் எனக்காகவும் மாத்திரம் தான், 😲🤔நினைத்து பார்ப்பதற்கே எத்தனை ஆச்சரியம்!!!
இது எல்லாவற்றையும் பிரம்மாண்டமாய் படைத்த கடவுள் இது எல்லாவற்றையும் விட அற்ப மனிதர்களாகிய நம்மை தான் அதிகமாக *நேசிக்கிறாராம்* ❤️, அவ்ளோ பெரிய கடவுள், அற்ப மனுஷனை அவர் நினைக்கிறதற்கும், மனுஷகுமாரனை அவர் விசாரிக்கிறதற்கும் மனுஷர்களாகிய நாம் *எம்மாத்திரம்? *இல்ல!!🤔 இது எல்லாவற்றிற்கும் காரணம் அவர் நம்மேல் வைத்த *அன்பு* ,❤️
இப்புடி எல்லாவற்றையும் நமக்காகவே படைத்த கடவுள் எப்படிங்க நம்மை *கைவிடுவார்?,* எப்படிங்க நம்மை கண்டுக்காமல் *விட்டுடுவார்?,* நிச்சயமா ஒரு நாளும் நம்மை கைவிடமாட்டார் 👍தைரியமா சந்தோஷமா இருங்க, நமக்காக எல்லாவற்றையும் நிச்சயம் செய்து முடிப்பார்.👏👏👍❤️
When I see and consider Your heavens, the work of Your fingers, The moon and the stars, which You have established, What is man that You are mindful of him, And the son of [earthborn] man that You care for him?The only Reason is his *love* ❤️👍👏👏
Dennis
9884122369
ஒரு குட்டி message!*
Dear friends
கடவுள் தந்த இந்த *கிருபையின் நாளுக்காக* நன்றி சொல்லுங்க!!!🙏💐
*நம்மை யார் காப்பாற்ற கூடும்?*🤔
ஒரு மருந்து மாத்திரை ஒரு மனிதனை காப்பாற்ற கூடுமா? கூடும் என்றால்.... ஏன் சில மருத்துவர்களும் வியாதியினால் காப்பாற்ற முடியாமல் இளமையிலேயே மரணித்து விடுகிறார்கள்?🤔😲 ஒரு மனிதனை அவன் சேர்த்து வைத்த பணமும் செல்வமும் காப்பாற்ற கூடுமோ?🤔 கூடும் என்றால்... எத்தனையோ பெரிய பெரிய செல்வந்தர்கள் தங்கள் இளமையிலேயே ஏன் மறித்துப் போகிறார்கள்?🤔😲
கல்வியும் படிப்பும், பெரிய பெரிய பதவிகளும் ஒரு மனிதனை காப்பாற்ற கூடுமோ? மெத்த படித்த இளைஞர்கள், பெயர் புகழோடு வாழ்ந்த பிரபலங்கள் தங்கள் இளமையிலேயே மறிப்பது ஏன்? 🤔 மனிதனின் வாழ்க்கை அவன் கையில் கிடையாது,😰 மருத்துவமனைக்கு சென்று, நிறைய பணங்களை செலவழித்து பிரயோஜனம் இல்லாமல் மரித்தவர்களும் உண்டு, 😲மருத்துவமனைக்கு செல்லாமல் பிழைத்தவர்களும் உண்டு, 😲🤔 மருத்துவம், செல்வம், கல்வி, பதவி இவையெல்லாம் நாம் வாழ்வதற்கு தேவை என்றாலும் நம் வாழ்க்கை நம்மை உருவாக்கின நம்மை படைத்த கடவுளிடம் தான் உண்டு,🙏 ஏனென்றால் அவர் சொல்ல எல்லாமே ஆகும், அவர் கட்டளை இட எல்லாமே நிற்கும், 👏👏அவரே நம்முடைய பிறப்பையும் இறப்பையும் முடிவு செய்கிறவர், ❤️🙏ஒவ்வொரு நாளும் நாம் நிற்பதும் நிர்மூலமாகாமல் இருப்பதும் அவர் நம் மேல் வைத்த கிருபையே 🙏❤️அவரைப் பிடித்துக் கொள்ளுங்கள்👍 அவரே நம்மையும் நம் குடும்பத்தையும் காப்பாற்றுகிறவர்👍👏👏❤️🙏
My friend please believe and fear God because
For he spake, and it was done; He commanded, and it stood fast.🙏👍👏👏 ❤️
Dennis. HJM
9884122369
Thanks for using my website. Post your comments on this