Type Here to Get Search Results !

யார் ஏழை? | Daily Kutty Message in Tamil | தினம் ஒரு சிந்தனைத் துளி | Jesus Sam

ஒரு குட்டி message!

Dear friends,
கடவுள் தந்த இந்த *நன்மையான நாளுக்காக* நன்றி சொல்லுங்க!!!

நாம் செய்யும் நன்மையை யாரும் ரசிக்கவில்லை, அதை யாரும் புரிந்துகொள்ளவில்லை என்பதற்காக அதை செய்யாமல் இருந்துவிடாதிர்கள்,
கடவுள் நமக்கு கொடுத்த சூரியன், சந்திரன், மரம் செடி கொடி எல்லா இயற்கையும் தன்னை யார் ரசித்தாலும் ரசிக்காவிட்டாலும் அது தன் தன் வேலையை தவறாமல் செய்துகொண்டே தான் இருக்கிறது, ஒருநாள்கூட தன் நன்மையை செய்ய
தவறியதே இல்லை, அது போல யார் என்ன சொன்னலும், சொல்லாவிட்டாலும், யார் அதை ஏற்றுக்கொண்டலும், ஏற்றுக்கொல்லாமல் போனாலும்
நம்மால் முடித்த நன்மையான காரியங்களை செய்துகொண்டே இருப்போம்,❤️
அதாவது நன்மைசெய்யும்படி உனக்குத் திராணியிருக்கும்போது, அதை செய்யத்தக்கவர்களுக்குச் செய்யாமல் இராதே., 🙏அப்படி நன்மை செய்ய நமக்கு வாய்ப்பு இருந்தும், சந்தர்ப்பம் இருந்தும் அதை மற்றவர்களுக்கு செய்யாமல் இருந்தால் அதுவும் நாம் கடவுளுக்கு முன்பாக செய்யும் மிக பெரிய *பாவம்*😰 🙏

Do not withhold good from those to whom it is due [its rightful recipients], When it is in your power to do it.❤️🙏
Dennis
9884122369


ஒரு குட்டி message!
Dear friends,
கடவுள் தந்த *அருமையான நாளுக்காக* நன்றி சொல்லுங்க!!!🙏❤️

என்னதான் அறிவியலும், விஞ்ஞானமும் இந்த உலகத்தில் வளர்ந்து இருந்தாலும், கடவுள் நமக்கு கொடுத்த இயற்கையை வெள்ள யாராலும் முடியாது, 👍🙏அதற்கு எதிராய் போனால் அழிவு நிச்சயமே, 😲அதாவது மனுஷனுடைய இருதயத்தின் எண்ணங்கள் அநேகம்: 🤔ஆனாலும் நம்மை படைத்த கடவுளுடைய யோசனையே நிலைநிற்கும். 🙏👍 yes friends சற்று யோசித்துப் பாருங்கள்🤔, வெள்ளைச் சக்கரை இல்லாத காலத்தில் யாருக்கும் சக்கரை நோய்க்கு வந்ததில்லை 😲 ஷாம்பூ இல்லாத காலத்தில் யாருக்கும் தலைமுடி இள வயதிலேயே கொட்டியதில்லை, 😲 மினரல் வாட்டர் இல்லாத காலத்தில் யாருக்கும் சிறுநீரில் கல்லடைப்பு வந்ததில்லை😲 பிளாஸ்டிக் கவர் பயன்படுத்தாத காலத்தில் யாருக்கும் கேன்சர், புற்றுநோய் வந்ததில்லை 😲 தூள் உப்பு, அயோடின் உப்பு பயன்படுத்தாத காலத்தில் யாருக்கும் தைராய்டு நோய் வந்ததில்லை 😲 ரீபைண்ட் ஆயில், பாமாயில் இல்லாத காலத்தில் யாருக்கும் மாரடைப்பு வந்ததில்லை😲 பாய்லர் கோழி கறி இல்லாத காலத்தில் யாருக்கும் சத்து குறைபாடு இருந்தது இல்லை 😲 மிக்ஸி, கிரைண்டர், வாஷிங் மெஷின் இல்லாத காலத்தில் யாருக்கும் சிசேரியன் செய்து குழந்தை பிறக்கவில்லை 😲 பல் துலக்க பேஸ்ட் இல்லாத காலத்தில் யாருக்கும் பல் சம்பந்தமான நோய் வந்ததில்லை 😲 நாப்கின் வருவதற்கு முன் யாருக்கும் கர்ப்பப்பை சம்பந்தப்பட்ட நோய் வந்ததில்லை 😲 குளிக்க சோப்பு பயன்படுத்தாத காலத்தில் தோல் வியாதி யாருக்கும் வந்ததில்லை 😲 ஆங்கில மருந்துகள் வருவதற்கு முன் கண்ட கண்ட நோய்கள் வந்ததில்லை 😲 பள்ளியில் தாய்மொழி மூலம் கல்வி கற்கும் வரை சிந்தனை திறன் பிள்ளைகளுக்கு குறையவில்லை, 😲 சற்று சிந்தித்து பாருங்கள், 🤔

There are many devices in a man’s heart; But the counsel of God , that shall stand. 😲🤔
Dennis. HJM
9884122369

ஒரு குட்டி message!*
Dear friends,
கடவுள் தந்த இந்த *அன்பான நாளுக்காக* நன்றி சொல்லுங்க!!!❤️🙏

ஒரு குருவிக் கூட்டில் இறந்து கிடக்கும் குஞ்சுப் பறவைகள்தான் இவைகள்!!!!!!😰😰 தீனி வரும் வரும் என்று எதிர்பார்த்து இருந்திருக்கலாம். ஆனால் தீனி தேடிச் சென்ற தாய்க் குருவி ஏதாவது ஒரு தீய சக்தியால் சாகடிக்கப்பட்டிருக்கலாம்!😰
ஞாபகம் வைத்துக் கொள்ளுங்கள்!🤔 நீங்கள் ஒருவரின் சம்பளத்தை, பணத்தை வழங்காமல் இருக்கும் போதெல்லாம் அவரது குடுபத்தவர்களையும் பசியில் போடுகிறீர்கள். 😰 நீங்கள் ஒருவரின் உரிமையை அபகரிக்கும் போதெல்லாம் அவர் குடும்பத்தின் உரிமையையும் அபகரிக்கிறீர்கள்.😰
நீங்கள் ஒருவரை மானபங்கப்படுத்தும் போதெல்லாம் அவரது மொத்த குடும்ப உறுப்பினர்களையும் மானபங்கப்படுத்தி, பிள்ளைகளின் எதிர்காலத்தை நாசமாக்கி விடுகிறீர்கள். 😰
வாழும் போது நம்மை சூழவுள்ள மனிதர்களுக்கும், மற்ற உயிருள்ள ஜீவன்களுக்கும் தொந்தரவுகள் கொடுக்காமல் வாழப் பழகுங்கள்! ❤️🙏அதாவது ஒருவரோடொருவர் ஏகசிந்தையுள்ளவர்களாயிருங்கள், மேட்டிமையானவைகளைச் சிந்தியாமல், தாழ்மையானவர்களுக்கு இணங்குங்கள், உங்களையே புத்திமான்களென்று எண்ணாதிருங்கள். 🙏❤️
Dennis
988412236


ஒரு குட்டி message!*
Dear friends,
கடவுள் தந்த இந்த *நல்ல நாளுக்காக* நன்றி சொல்லுங்க!!!❤️🙏

*யார் ஏழை?*
பணம், காசு, பொருள், வீடு நிலம், சொத்து சுகம் இது எல்லாம் இல்லாதவனா ஏழை?🤔
இல்லைங்க 😲 பெயரு , புகழ், பதவி, சொத்து, சுகம் வீடு நிலம், கோடி கோடியாய் பணம் இது எல்லாம் இருந்தும், எவன் ஒருவனுக்கு அந்த ஆண்டவனுடைய அருள் இல்லையோ அவனே ஏழை! 😲 இது எதுவுமே இல்லாமல் இருந்தும் யார் இடத்தில் அந்த ஆண்டவனுடைய அருள் இருக்கிறதோ அவனே இந்த உலகத்தில் *மிகப்பெரிய பணக்காரன்!* 😎👍 இன்றைக்கு நிறைய பேர் என்ன நினைத்துக் கொண்டு இருக்கிறார்கள் என்றால், ஏழைகளைக் கொன்றால், அவர்களை ஏமாற்றினால், அவர்களுக்கு அநியாயம் செய்தால் யாரும் கேட்க மாட்டார்கள், அவர்களுக்கு நீதி கிடைக்காது, அவர்களுடைய நியாயம் எடுபடாது அவர்களுக்காக யாரும் இல்லை என்று நினைத்துக் கொண்டு இருக்கிறார்கள்,🤔 அதாவது உங்களுக்கு ஒன்று தெரியுமா?
ஏழையைப் பரியாசம் பண்ணுகிறவன் அவனை உண்டாக்கினவரை நிந்திக்கிறான்; ஆபத்தைக்குறித்துக் களிக்கிறவன் தண்டனைக்குத் தப்பான்.😲 ஏழைகளுக்காக குரல் கொடுக்க, அரசாங்கம் வருகிறதோ இல்லையோ, 😰மனிதர்கள் வருகிறார்களோ இல்லையோ கண்டிப்பாக அவர்களைப் படைத்த இறைவன் நிச்சயம் வருவார் நீதி செய்வார், நியாயம் விசாரிப்பார், 🙏 அநியாயம் செய்தவர்கள் ஒருவரும் அவர் பார்வையில் இருந்து தப்பிக்க முடியாது 🙏❤️

Whoso mocketh the poor reproacheth his Maker; And he that is glad at calamity shall not be unpunished.❤️🙏
Dennis
9884122369


ஒரு குட்டி message!
Dear friends,
கடவுள் தந்த இந்த *அன்பான நாளுக்காக* நன்றி சொல்லுங்க!!!❤️🙏

அம்மா பேச்சை கேட்டு பொண்டாட்டியை திட்டறது, 😰 பொண்டாட்டி பேச்சைக் கேட்டு அம்மாவை திட்றது 😰 இப்படி பண்றது ஒரு ஆணுக்கு அழகு இல்ல 😰 அப்படின்னா 🤔 ஒரு அம்மாவுக்கும் மனைவிக்கும் நடுவுல மாட்டிட்டு இருக்கிற ஒரு ஆம்பளையை மெண்டல் டார்ச்சர் செய்து நிம்மதியே இல்லாமல் பண்றது மட்டும் நியாயமா 🤔 இந்தப் பக்கம் பார்த்தா தன்னையே நம்பி வந்த மனைவி 😰 அந்தப் பக்கம் பார்த்தா பத்து மாசம் சுமந்து எடுத்து அன்பையும் பாசத்தையும் கொட்டி வளர்த்த அம்மா 😰 இவர்கள் இருவருக்கும் நடுவில் யாருக்கு சப்போர்ட் பண்ண வேண்டும் என்று தெரியாமல் தினம் தினம் தவித்துப் போகும் ஆண்கள் எத்தனை பேர் இருக்காங்கன்னு தெரியுமா 😰🤔 ஒவ்வொரு ஆணும் தினம் தன் இருதயத்தில் எதிர்பார்க்கிறது தன்னுடைய அம்மாவும் மனைவியும் ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்து போக மாட்டார்களா?, 😰 கொஞ்சம் ஒருவரை ஒருவர் புரிந்து அனுசரித்து நடந்தக்க மாட்டாங்களா? 😰 இந்த வாழ்க்கையை என்னால சந்தோஷமா வாழ முடியாதா?😰 என்று எதிர்பார்த்துக் ஏங்கிக் கொண்டிருக்கிற ஆண்கள் எத்தனை பேர் தெரியுமா 😰 பெண்கள் மட்டும் கொஞ்சம் விட்டுக்கொடுத்து குடும்பத்தை நடத்தினால் எத்தனை ஆனந்தமாக இருக்கும், 😰தயவுசெய்து உங்களைக் குறை சொல்வதாக நினைத்து விடாதீர்கள்🙏 மனைவிகளே, உங்களைப் படைத்த கடவுளுக்கு கீழ்ப்படிகிறதுபோல, உங்கள் சொந்தப் புருஷருக்குங் கீழ்ப்படியுங்கள், சந்தோஷமா வாழுங்க 🙏. அதாவது நீங்களும் சந்தோசமாய் வாழுங்கள், மற்றவர்களையும் வாழ விடுங்கள் ❤️🙏

Wives, be in subjection unto your own husbands, as unto the God❤️🙏

Dennis
9884122369

Tags

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.