================
2 KINGS : 21 - 22 Bible Study in Tamil & English
==================
2 இராஜாக்கள்: 21-22
💐💐💐💐💐💐
*யோசியா ராஜா கர்த்தரின் பார்வைக்குச் செம்மையானதைச் செய்து, தன் தகப்பனாகிய தாவீதின் வழியிலெல்லாம் வலது இடதுபுறம் விலகாமல் நடந்தான்*.
(2 இராஜா: 22:2)
▪️எட்டு வயதில் அரசனான *யோசியா* கர்த்தரை நேசித்து அவருக்குக் கீழ்ப்படிந்த அரசர்களில் சிறப்பான ஒருவர். சிறுவயதிலிருந்து கர்த்தரைப் பின்பற்றி நடந்து கொண்டிருந்த அவர் பெரியவன் ஆனதும் திட்டமிட்டு கர்த்தருக்கென்று பல செயல்களைச் செய்தார்.
▪️கர்த்தருடைய நியாயப்பிரமாணத்தை வாசிக்கக் கேட்டவுடன் தனது தவறையும் தனது நாட்டின் பாவங்களையும் அறிந்து கொண்ட யோசியா மிகுந்த வருத்தமடைந்தார்; ஜெபித்தார், தீர்க்கத்தரிசியிடம் ஆள் அனுப்பி விசாரித்தார். அதோடு நிற்காமல் கர்த்தருடைய வார்த்தைக்கேற்ப அநேக மாறுதல்களை நாட்டில் ஏற்படுத்தினார்.
▪️தேவனுடைய நியாயப்பிரமாண நூல் கண்டெடுக்கப்பட்டதும் அதைத் தெரிந்து கொள்வதற்கென முற்றிலும் வாசிக்கச்செய்தார்.
▪️கர்த்தருடைய வசனத்தின்படி தான் நடந்து கொண்டதுடன், தனது நாட்டு மக்களும் நடக்கும் படி செய்தார்.
▪️பிற்காலத்திலும் மக்கள் ஒழுங்காயிருப்பதற்காக யாவரையும் கர்த்தருடன் உடன்படிக்கை பண்ணும் படி செய்தார்.
▪️இன்று உலகில் அநேகர் வேதத்தை வாசிக்கின்றனர். ஆனால் அவர்கள் வாழ்க்கையில் மாறுதல் இல்லை.
▪️வேதத்தைத் தியானித்து அதில் கூறப்பட்டுள்ளவற்றைப் பின்பற்ற நம்மை ஒப்புக்கொடுப்போம்.
*ஆமென்*
✍️Tmt. Bhavani Jeeja Devaraj,
Nagercoil, Tamilnadu.
-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x
🌈 *We don’t need the book of the month; we need the Book of the ages.*
⛹️♂️ *Application* : II Ki.22:8- They had lost the Bible, and they had lost it in the church. But they found the Word of God and put it back into their lives. *The Word of God is the only thing we have as a weapon.* It is God’s Word that is alive, and powerful, and sharper than any two-edged sword (Heb. 4:12). *There is no short cut, no easy route, no new method to revival. We have a flood of books today on Christian experience. They present a method instead of presenting the Word of God. We don’t need so-and-so’s book; we need the Bible. We don’t need the book of the month; we need the Book of the ages.*
⛹️♂️ *Application* : II Ki.22:11- *An important step toward revival is repentance. The reading of the Word of God brought repentance.* When the king heard the Word of God, he tore his clothes as an expression of deep emotion. Why? Because the Word of God revealed their sin. Without the Word of God, they did not realize how far they had strayed from God’s law. A return to the Word of God brings revival.
💡II Ki.21:14-16- “They were sawn in two…” (Hebrews 11:37). Bible scholars believe this verse refers to Isaiah, who was sawn in half by Manasseh. *Fifteen years earlier, the Lord had said to Hezekiah, “It’s time to go home.” But Hezekiah cried. So, the Lord let him have his way. As a result, not only would the Babylonians have reason to invade Judah and carry God’s people into captivity, but also Manasseh, the worst king in Judah’s history, would be born.* Let us be careful, what we insist upon, for it could have disastrous results. *Unless we are in the center of God’s will, the desire of our heart could lead to leanness in our soul (Psalm 106:15). How much better it would have been had Hezekiah not tried to talk God into his plans, but just said, “Father, Thy will be done.”* We make so many mistakes by complaining and griping and murmuring about what God is doing in our lives. And sometimes the Father says, “If that’s what you want, have your way.” *Let us learn to go with the flow of what God is doing. Yes, let us offer our requests, but always in submission to the perfect will of God.*
Jaya Pradeep-Kodaikanal.
-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x
2.ராஜாக்கள்.22.
🌺🌺🌺🌺🌺🌺
" யோசியா ராஜா சட்ட புத்தகத்தைக் கண்டுபிடித்தார்."
🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺
யோசியா அரசன் எட்டு வயதில் அரியணைக்கு வந்தார்.
இதற்குக் காரணம் அவரது தந்தையின் படுகொலைதான்.
யோசியா இந்தப் புத்தகத்தின் நகலை இன்னும் பார்க்கவில்லை என்றால், மக்களின் மனங்களிலும் நினைவுகளிலும் அத்தகைய சட்டம் இருந்திருக்காது.
யோசியா கோவிலை மீண்டும் கட்ட உந்துதல் பெற்றார்.
கோவிலை பழுதுபார்த்து புனரமைக்கும் பணிக்கு அமைப்பும் நிதியும் தேவை என்பதை அவர் புரிந்து கொண்டார்.
கடவுளின் மக்களின் வரலாறு முழுவதும், கடவுளின் வார்த்தை மீட்கப்பட்டு பரவும்போது, ஆன்மீக மறுமலர்ச்சி பின்தொடர்கிறது.
🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺
மேபி சுந்தர். சென்னை.
-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x
✅ *நானும் உன் விண்ணப்பத்தைக் கேட்டேன்* ✅
🔺 *நான் இந்த ஸ்தலத்திற்கும் அதின் குடிகளுக்கும் விரோதமாக, அவர்கள் பாழும் சாபமுமாவார்கள் என்று சொன்னதை நீ கேட்டபோது, உன் இருதயம் இளகி, நீ கர்த்தருக்கு முன்பாக உன்னை தாழ்த்தி, உன் வஸ்திரங்களைக் கிழித்துக் கொண்டு, எனக்குமுன்பாக அழுதபடியினால் நானும் உன் விண்ணப்பத்தைக் கேட்டேன். ஆகையால், இதோ, நான் உன்னை உன் பிதாக்களண்டையிலே சேர்த்துக் கொள்ளுவேன்; நீ சமாதானத்தோடே உன் கல்லறையில் சேர்வாய்; நான் இந்த ஸ்தலத்தின்மேல் வரப்பண்ணும் சகல பொல்லாப்பையும் உன் கண்கள் காண்பதில்லை என்று கர்த்தர் சொல்லுகிறார் என்பதைச் சொல்லுங்கள் என்றாள்* (2 ராஜாக்கள் 22:19-20).
🔸 யோசியா யூதாவின் ராஜாவானபோது அவனுக்கு எட்டு வயதுதான். அவன் கர்த்தரின் பார்வைக்குச் செம்மையானதைச் செய்தான். ஆலயத்தைப் பழுதுபார்க்கும் மனதை தேவன் அவனுக்கு அருள்செய்தார். அப்பொழுது பிரதான ஆசாரியனாகிய இல்க்கியா கர்த்தருடைய ஆலயத்தில் *நியாயப்பிரமாணப் புத்தகத்தைக் கண்டுபிடித்தான்.* அது ராஜாவுக்கு முன்பாக வாசிக்கப்பட்டது.
🔸 ராஜா நியாயப்பிரமாண புத்தகத்தின் வார்த்தைகளைக் கேட்டதும், *தன் சொந்த பாவங்களுக்காகவும், தேசத்தின் பாவங்களுக்காகவும் குற்றஉணர்வடைந்தான்.* அவன் தனது வஸ்திரங்களைக் கிழித்துக்கொண்டு, *கர்த்தருடைய வழிகாட்டுதலைப் பெறும்படி* இல்க்கியாவுக்கும் மற்ற அதிகாரிகளுக்கும் கட்டளையிட்டான். அவர்கள் உல்தாள் என்ற தீர்க்கதரிசியானவளிடத்திற்கு சென்றார்கள். *அவர்கள் கீழ்ப்படியாமையினால் தேசத்திற்கும் அதன் மக்களுக்கும் பேரழிவுண்டாகும்* என்று கர்த்தர் அவள் மூலம் பேசினார். கர்த்தர் *யோசியாவின் இருதயம் இளகியதையும், அவன் தமக்கு முன்பாக தன்னை தாழ்த்தியதையும் கண்டு, அவனுடைய விண்ணப்பத்தைக் கேட்டதாக அறிவித்தார்.* என்ன ஒரு இரக்கமுள்ள தேவன்!
🔸 *மனுஷருள்ளத்திலிருப்பதை அவர் அறிந்திருக்கிறபடியால், மனுஷரைக் குறித்து ஒருவரும் அவருக்குச் சாட்சி கொடுக்கவேண்டியதில்லை* (யோவான் 2:25). *நொறுங்குண்டதும் நருங்குண்டதுமான இருதயத்தை தேவன் புறக்கணிக்க மாட்டார்* (சங்கீதம் 51:17). *தேவன் திக்கற்றவர்களுடைய ஜெபத்தை அலட்சியம்பண்ணாமல், அவர்கள் விண்ணப்பத்தை அங்கீகரிப்பார்* (சங்கீதம் 102:16). எனவே, அத்தகைய தேவன் தேசத்தின் மீது தாம் கொண்டு வரப்போகும் அனைத்து பேரழிவுகளையும் யோசியா காணவேண்டாம் என்று விரும்பியத்தில் ஆச்சரியமில்லை.
🔸 **தேவன் பெருமையுள்ளவர்களுக்கு எதிர்த்து நிற்கிறார், தாழ்மையுள்ளவர்களுக்கோ கிருபை அளிக்கிறார்* (யாக்கோபு 4:6). தேவன் நம் ஜெபங்களைக் கேட்க, நாம் மனத்தாழ்மையுடன் இருக்க வேண்டும். *வேதத்தைக் கேளாதபடி தன்செவியை விலக்குகிறவனுடைய ஜெபமும் அருவருப்பானது* (நீதிமொழிகள் 28:9).யோசியா *நியாயப்பிரமாணப் புத்தகத்தைக்* கனப்படுத்தியதால், தேவன் அவன் விண்ணப்பத்தைக் கேட்டு ஆசீர்வதித்தார். நம்முடைய விண்ணப்பங்களை தேவன் கேட்கும்படி நாம் அவருடைய வார்த்தைக்குக் கீழ்ப்படிவதில் கவனமாக இருக்க வேண்டும்.
🔹 *தேவன் நம்முடைய விண்ணப்பங்களைக் கேட்கும்படி நாம் நொறுங்குண்ட இருதயத்தோடு மனந்திரும்புகிறோமா?*
🔹 *தேவன் நம்முடைய விண்ணப்பங்களைக் கேட்கும்படி நாம் அவருடைய வார்த்தைக்குக் கீழ்ப்படிவதில் கவனமாக இருக்கிறோமா?*
✅ நாம் கற்றுக் கொள்ளும் *பாடங்கள்*:
1️⃣ *மனுஷருள்ளத்திலிருப்பதை தேவன் அறிந்திருக்கிறார்.*
2️⃣ *நொறுங்குண்டு மனந்திரும்புகிற இருதயத்தை தேவன் புறக்கணிக்க மாட்டார்.*
3️⃣ *வேதத்தைக் கேளாதபடி தன்செவியை விலக்குகிறவனுடைய ஜெபத்தை தேவன் அருவருக்கிறார்.*
Dr. எஸ். செல்வன்
சென்னை
-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x
BOOK OF 2 KINGS (CHAPTER 22)
JOSIAH INITIATES REFORMS.
2Kings 22:1-2;
Josiah was eight years old when he became king and he reigned thirty one years in Jerusalem.
His mother's name was Jedidah, the daughter of Adaiah from Bozkath.
And he did what was right in the sight of the Lord and walked in all the ways of his father David;
He did not turn aside to the right hand or to the left.
Josiah was eight years old, when he became king due to the assassination of his father Amon.
In his twenties, he was motivated to repair and rebuild the temple just as Joash had done many years earlier.
Josiah understood that the work of renovation needed funding and organization.
He entrusted these aspects to High Priest Hilkiah and delegated the work to him.
Hilkiah the High Priest found the Book of the Law in the temple and gave it to Shaphan, the scribe, who brought it to the king and read it before him.
The Book of the Law was with Israel, but had been neglected over a long period of time.
Deuteronomy chapters 17 and 31, explain clearly that the king needed to have a personal copy of the Law for his daily use.
The entire Law was also meant to be read out once every seven years at the Feast of Tabernacles while the Levites had the responsibility of teaching the Law to the people.
When King Josiah heard the words of the Book of the Law, it had an impact on him;
He was grieved that the words of the Law had not been obeyed in the land.
Hilkiah the High Priest, consulted Huldah the prophetess who sent the warning that Judah was ripe for judgment;
But it will not come during Josiah's days because of his tender heart and personal godliness.
Josiah is an astonishing example of goodness springing up under unfavorable circumstances.
Josiah's father Amon and grandfather Manasseh were well known for their idolatry and evil ways.
Josiah sought the Creator in the days of his youth and purged the land of Judah from idolatry.
He read out the Law to the people, made a covenant with them that they would keep the Law.
Josiah initiated reforms and revival.
He received an assurance from God, as we read in 2Kings22:19-20;
"Because your heart was tender and you humbled yourself before the Lord when you heard what I spoke against this place and against its inhabitants, that they would become a desolation and a curse, and you tore your clothes and wept before Me, I also have heard you," says the Lord.
"Surely therefore, I will gather you to your fathers, and you shall be gathered to your grave in peace;
And your eyes shall not see all the calamity which I will bring on this place"......
Compiled by Shanti Jayanth, Madurai.
-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x
📗 *சிறிய குறிப்பு* 📗
🍂 *மனாசே* 🍂
மனாசே *கர்த்தருடைய வார்த்தைக்கு முரணான* வாழ்க்கையை வாழ்ந்தான். *தேவனாகிய கர்த்தர் கடுமையாக வெறுத்த அனைத்தையும்* அவன் உறுதியாகச் செய்தான். அவனுடைய தகப்பன் அனைத்து சிலைகளையும் அகற்றினான், ஆனால் அவன் ஒவ்வொரு உருவ வழிபாட்டையும் கொண்டு வந்தான். மனாசே ஒரு படி மேலே சென்று *தேவனுடைய வீட்டிலேயே சிலைகளைக் கொண்டு வந்து வைத்தான்.* அவன் செய்த முதல் காரியம் மேடைகளை மீண்டும் கட்டுவதுதான்.
📖 *தன் தகப்பனாகிய எசேக்கியா இடித்துப்போட்ட மேடைகளைத் திரும்பவும் கட்டி, பாகாலுக்குப் பலிபீடங்களை எடுப்பித்து, இஸ்ரவேலின் ராஜாவாகிய ஆகாப் செய்ததுபோல விக்கிரகத்தோப்பை உண்டாக்கி, வானத்தின் சேனைகளையெல்லாம் பணிந்துகொண்டு அவைகளைச் சேவித்தான் (2 இரா 21:3).*
மனாசே தனக்கு முன்னிருந்த எல்லா எமோரியரை விடவும் *பொல்லாதவராக நடந்துகொண்டான்*. தன் மகனையே பலியிட்டான். அவன் ஏராளமான அப்பாவிகளின் இரத்தத்தை சிந்தினான். *தேவனுக்கு பயப்படும் தகப்பனுக்கு தீய மகன் பிறக்க முடியும் என்பதற்கு இவன் ஒரு உதாரணம்.* நம் பிள்ளைகளுக்காக நாம் எவ்வளவாக ஜெபிக்க வேண்டும்!
_திருமதி ஷீலா ஜெபக்குமார்_ ✍🏼
-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x
தன் தகப்பனாகிய தாவீதின் வழியிலெல்லாம், வலது இடது புறம் விலகாமல் நடந்தான்*
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
2 இராஜாக்கள் 22: 2.
1. எட்டு வயதில் ராஜாவான யோசியா *கர்த்தரின் பார்வைக்கு செம்மையானதை செய்தான். தன் தகப்பனாகிய தாவீதின் வழியிலெல்லாம் வலது இடது புறம் விலகாமல் நடந்தான்*.
ஆம், *உங்கள் தேவனாகிய கர்த்தர் உங்களுக்கு கற்பித்த படியே செய்ய சாவதனமாயிருங்கள். வலது புறம், இடது புறம் சாயாதிருப்பீர்களாக என மோசே மூலமாக கர்த்தர் கூறியிருந்தார்*. உபாகமம் 5: 32.
2. யோசியா ராஜா இந்த *நியாயப்பிமாணத்தை வாசிக்கும் போது, தன் வஸ்திரங்களை கிழித்துக் கொண்டான். அப்படியானால் கர்த்தருடைய வார்த்தைக்கு முன்பாக யோசியா எவ்வளவு தன்னை தாழ்த்துகிறான்* என்பதை நாம் அறியலாம். ஆம், கர்த்தருடைய வார்த்தைகளுக்கு முன்பாக நாம் நம்மை தாழ்த்துகிறோமா? அப்படியானால் நாம் கீழ்ப்படிகிறோமா? சிந்திப்போம்.
3. கர்த்தர் இதை யோசுவாவுக்கும் கூறினார்.நான் உனக்கு கற்பித்த நியாயப் பிரமாணங்களின் படியெல்லாம் செய்ய கவனமாயிருக்கும் படி, மிகவும் பலங்கொண்டு திடமனதாயிரு. *அதை விட்டு வலது, இடது புறம் விலகாதிருப்பாயாக* என்றார். யோசுவா 1: 7.
அன்று *ராஜா தன் வஸ்திரங்களை கிழித்து, தன்னை தாழ்த்தி அழுதபடியால் நான் உன் விண்ணப்பத்தை கேட்டேன்* என கர்த்தர் கூறினார். 2 இ ராஜாக்கள் 22: 19.
4. ஆனால் இன்று *நம் வஸ்திரங்களை அல்ல, நம் இருதயத்தை கிழித்து நம் தேவனாகிய கர்த்தரிடத்தில் நாம் திரும்ப வேண்டும்*. யோவேல் 2: 13.
ஆம், *கண்ணீரோடு, நம்மை தாழ்த்தி நாம் ஜெபிக்கும் போது, நிச்சயமாகவே கர்த்தர் நம் ஜெபத்தை கேட்பார். எனவே கர்த்தருக்கு முன்பாக நம்மை தாழ்த்துவோம். தாழ்மையுள்ளவர்களுக்கு அவர் கிருபை அளிக்கிறார். கிறிஸ்து மரணபரியந்தம் தன்னை தாழ்த்தினார்*. பிலிப்பியர் 2: 8. *கர்த்தருக்கு முன்பாக நம்மை தாழ்த்துவோம். அவர் நம்மை உயர்த்துவார். வலது புறம் இடது புறம் விலகாமல் அவர் வார்த்தைகளுக்கு கீழ்ப்படிவோம்.* ஆமென். அல்லேலூயா.
*Dr.Padmini Seĺvyn*
-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x
✝️ *WHEN THE SCRIPTURES FIND YOU* ✝️ 2 Kings 21,22🔷
When the king heard the words of the Book of the Law, he tore his robes. 2 Kings 22:11.
🔹When King Josiah heard the words of God given to Moses for their righteous living, he tore his royal robes. But beyond that, the Lord *saw* that his *heart was responsive* to what he heard. He *humbled* himself before the Lord and *wept in His Presence*. So the Lord *heard* him. 22: 19. God will not deny a humble and contrite heart. Walking about in a humble attire need not necessarily mean people are walking with a contrite or obedient heart. God saw that more than a torn robe which people could see outside, Josiah had a rended heart which only God could see.
🔹King Josiah was only eight years old when he became the king. He happened to hear from the book of the Law *all because he decided to repair the temple*. He gave instructions for it to the high priest and the high priest in turn ‘found the book of the Law’.
In a time when books were not available, finding the book of the Law was a game changer. Today, the Bible is available anywhere and everywhere to anyone who needs it, in most countries.
Shaphan the secretary wasted no time to read it out to Josiah. Now, for those who want the Bible to be read out to them, even that is available even if we don’t have a secretary!
🔹The question is, have we ‘found our scriptures’? Do we listen to it to rend our hearts? It is easy to cry out to God in our personal distress and need. That is why we love the psalms of David.
Instead, are we responsive enough to humble ourselves before the Lord and weep before Him with a broken and contrite heart like Josiah? *What do we do* when we understand His truths that set us free but then realise that we are not walking according to it?
🔷 *May we decide to repair our temple! May we be found by the scriptures*!
🔹🔸🔹🔸🔹🔸🔹🔸🔹
*God bless!*🙂
Dr. Sangeeta Thomas.
-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x
2 Kings 21 - 22*
*Be Marked By The Bible*
*2 Kings 22:8* -> Then Hilkiah the high priest said to Shaphan the scribe, _*I have found the Book of the Law* in the *house of the LORD*…_
It seems remarkable that the *Book of the Law* should be lost in the *Temple!* That would be like *losing the Bible* in a *Church* building and missing it for years *without any difference*.
A similar analogy would be the *Holy Spirit* going *back* to heaven and *no one noticing* it, because they were living life *independent* of Him, like the *Jews*, who no longer *depended* on the *Book of the Law* for worshipping and obeying GOD.
*22:11* -> _Now it happened, when the king *heard* the words of the Book of the Law, that he *tore his clothes*._
King Josiah *desired* to hear what the Book said, and when he heard it read, he *tore his clothes*. How people respond to *God’s Word* is a good indication of their spiritual appetite and their willingness to conform to God’s *holiness*.
Now, Christians have their own Bibles, but very few are *led by the Spirit* to study and *meditate* on it [Ps 1:2]. Some glance and maybe *mark* a few verses.
*Don’t just mark your Bibles, let your Bibles mark you*.
- Cherry Cherian, Kochi, India
-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x
*யோசியா*
யோசியா ராஜா ஆட்சிக்கு வந்த போது.. யூதா தேசம், ஓர் இருண்ட காலத்திலும்..
நம்பிக்கையற்ற சூழ்நிலையிலுமிருந்தது..
அவன் தகப்பனாகிய ஆமோனும்…அவன் தாத்தாவாகிய மனாசேயும்.. யூதாவிலே ஒருபோதும் இல்லாதவாறு, நீண்டகாலம்.... ( 57 ஆண்டுகள் )
மக்கள் மத்தியில்.. இரத்த ஆறு ஓடும் ஓர் ஆட்சியையே நடத்தியிருந்தனர்..
( 2 இரா. 21 : 16 )
அப்படிப்பட்ட சூழ்நிலையிலே, சிறுவனான யோசியா என்ன செய்யமுடியும்..?
ஆனால், வேதம் அவனைப் போலோத்த ராஜா.. அவனுக்கு முன் இருந்ததுமில்லை..
எழும்பினதுமில்லை..என்று சொல்கிறது.
( 2 இரா.23:25)
யோசியா ராஜாவாகிறபோது….. எட்டு வயதாயிருந்து ..
அவன் தாயின்பேர் எதிதாள்..என்று
வேதம் கூறுகிறது..
(2 இரா. 22 :1 )
எதிதாள் என்றால்.. தேவனுக்குப் பிரியமானவள் என்று பொருள் ..
யோசியா, சிறுவனாகயிருந்தாலும்..
அவனுக்கு, தேவபக்தியுள்ள ஒரு தாய் இருந்தாள்..
அவள், தன் மகனைத் தேவனுக்கேற்றவனாக உருவாக்கினாள்..
இதுவே அவனது தேவபக்தி மற்றும் நீதியான வாழ்வுக்கு அஸ்திபாரமாக மாறினது..
மோசேயின் தாய் யோகெபேத்..
தீமோத்தேயுவின் தாய் ஐனிக்கேயாள்..
ஜாண் வெஸ்லியின் தாய் சூசன்னா போன்ற அற்புதமான அன்னையர் இல்லையென்றால்..
கிறிஸ்தவ வரலாற்றில்.. மாபெரும் ஊழியர்கள் எழும்பியிருப்பது கடினமே..
*அமெரிக்க ஜனாதிபதி*,
*ஆபிரகாம் லிங்கன்*.. *தேவபக்தியுள்ள தாயைக்* *கொண்டிருக்கும் எவரும்*..
*ஏழை அல்ல என்று கூறினார்*..
*அன்னையரே.. இன்று உங்கள்* *பிள்ளைகள்.. உங்களைக்* *குறித்துக் கூறும் சாட்சி என்ன*..?
யூதாவிலே,நீண்ட காலமாக அலட்சியப்படுத்தப்பட்டு..
பாதுகாக்காமல் விடப்பட்டிருந்த..
எருசலேம் தேவாலயம்..
மீண்டும் பழுது பார்க்கப்பட்ட போது..
நியாயப்பிரமாணப் புஸ்தகம் கண்டெடுக்கப்பட்டது.
இராஜ சமுகத்தில் அது வாசிக்கப்பட்ட போது..
தேவனுடைய வார்த்தைகள்..
யோசியாவின் இதயத்தைத் தொட்டது..
அவனது ஆத்துமாவை உருவக் குத்தியது.
அவனுக்குள் ஒரு குற்ற உணர்வு ஏற்பட்டது.
நொறுங்குண்ட இதயத்தோடு
தேவனுக்கு முன் தன்னைத்
தாழ்த்தினான்..
( 2 நாளா. 34 : 27 )
அவன் கர்த்தரிடத்திற்குத் தன் முழு இருதயத்தோடும்..தன் முழு ஆத்துமாவோடும்..தன் முழு பெலத்தோடும்.. மோசேயின் நியாயப் பிரமாணத்திற்கு ஏற்றபடியெல்லாம் செய்ய மனதைச் சாய்த்தான்..
( 2 இரா. 23 : 25 )
தேசம் விக்கிரகங்களிலிருந்து
சுத்திகரிக்கப்பட்டது..
தேசம் முழுவதிலும் ஆவிக்குரிய
எழுப்புதல் உண்டானது..
இந்த எழுப்புதல்..யூதாவின் மீது
வரவிருந்த நியாயத்தீர்ப்பைச் சற்றுத் தாமதப்படுத்தியது..
*தேவனுடைய வார்த்தை*..
*யோசியாவின் வாழ்வை* *வல்லமையுள்ளதாக மாற்றியது*..
*கடினமான அந்தக் காலப்* *பகுதியில் ..அவனைத்* *தைரியமுள்ளவனாக* *எழுப்பிற்று*..
மட்டுமல்ல யோசியா..
கர்த்தரின் பார்வைக்குச் செம்மையானதைச் செய்து..
தன் தகப்பனாகிய தாவீதின் வழிகளில், வலது இடதுபுறமாக விலகாமல் நடந்தான்..
என்பதிலிருந்து..
( 2 நாளா.34 : 2 )
யோசியா,தேவனுக்கு முழுமையாகத் தன்னை அர்ப்பணித்து ..
அவருக்குக் கீழ்ப்படிந்து நடந்தான் என்பது தெரிகிறது..
*உள்ளான வாழ்வில் மாறுதல்* *இல்லாமல்*..
*வெளியரங்கமான* *கிரியைகளினால்* *பிரயோஜனமில்லை*..
*பலியைப்பார்க்கிலும்..* *கீழ்ப்படிதலே மேலானது*..
எரேமியா தீர்க்கன்..
யோசியாவைக் குறித்து..
அவன் சிறுமையும் எளிமையுமானவனுடைய நியாயத்தை விசாரித்தான்..
அப்பொழுது சுகமாய் வாழ்ந்தான்..அப்படிச் செய்வதல்லவோ என்னை அறிகிற அறிவு என்று கூறினான்..
( எரே.22 : 16 )
*நாமும் இந்த உலகத்திலே*
*நன்மை பெற ..நற்சாட்சிப்* *பெற்றவர்களாய் வாழ..தேவாதி* *தேவனையே சார்ந்திருப்போம்*..
*நொறுங்குண்ட இதயத்துடன்*
*அவரிடம் மன்றாடுவோம்*..
*அவருடைய வார்த்தைகளுக்கு*
*மிகுந்த பயத்துடனும்*.. *உண்மையுடனும்* *கீழ்ப்படிவோம்*..
*நீதி ஜனத்தை உயர்த்தும்*..
*பாவமோ எந்த ஜனத்துக்கும்* *இகழ்ச்சி*..( நீதி.14 : 34 )
மாலா டேவிட்
-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x
*2 இராஜாக்கள் 21 - 22*
*யோசியா ராஜாவாகிற போது , எட்டு வயதாயிருந்து , முப்பத்தொரு வருஷம் எருசலேமில் அரசாண்டான் ; ....... அவன் கர்த்தரின் பார்வைக்குச் செம்மையானதைச் செய்து , தன் தகப்பனாகிய தாவீதின் வழியிலெல்லாம் , வலது இடது புறம் விலகாமல் நடந்தான். 2 இரா 22 : 1 , 2*
எட்டு வயதில் ராஜாவாகிய யோசியா , கர்த்தரை நேசித்து , அவருக்குக் கீழ்படிந்து சிறப்பாக ஆட்சி செய்தார்.
அவர் சிறு வயதிலேயே கர்த்தருக்குக் கீழ்ப்படிந்து வாழ்ந்துவந்த படியினால் , பெரியவர் ஆனதும் பல நற்செயல்களைத் திட்டமிட்டுச் செய்தார்.
எனவே பிரியமானவர்களே , நாமும் நம் பிள்ளைகளை , கர்த்தருடைய வழியில் நடத்துவோமானால் , அவர்கள் பிற்காலத்தில் கர்த்தருக்கென்று சிறப்பான உழியங்களைச் செய்ய அது ஏதுவாயிருக்குமல்லவா ?
மேலும் யோசியா கர்த்தருடைய நியாயப்பிரமாண நூல் கண்டெடுக்கப் பட்டவுடன் , அதை வாசிக்கக் கேட்டு , தனது தவறையும் , தனது தேசத்தின் தவறுகளையும் உணர்ந்து , அவர் மிகுந்த வருத்தமடைந்தார். அதோடு மட்டுமல்லாமல் , அந்த வேதவார்த்தைகளுக்கேற்ப , அநேக மாறுதல்களைத் தனது வாழ்க்கையிலும் , தனது தேசத்திலும் ஏற்படுத்தினார்.
பிரியமானவர்களே , இன்றும் அநேகர் ஆலயத்திற்குத் தவறாமல் செல்கின்றனர் ; வேதத்தை வாசிக்கினறனர் ; ஆனால் வாழ்க்கையிலோ மாற்றமில்லை. வேதத்தை வாசிப்பது மட்டும் போதாது ; வாழ்க்கையில் மாற்றம் வேண்டும் , பிரியமானவர்களே.
யோசியா தனது நாடட்டிலிருந்த தீர்க்கதரிசிகளை மதித்து , அவர்கள் எச்சரிப்பின் வார்த்தைகளைக் கேட்டு , அவர் *இருதயம் இளகி , கர்த்தருக்கு முன்பாகத் தன்னைத் தாழ்த்தி , தனது வஸ்திரத்தைக் கிழித்துக்கொண்டு , கர்த்தருக்கு முன்பாக அழுகிறார் ; எனவே கர்த்தரும் இரங்கி அவர் விண்ணப்த்தைக் கேட்கிறார்.*
இதுதான் உண்மையான மனந்திரும்புதல் பிரியமானவர்களே. நாமும் கர்த்தருடைய எச்சரிப்பின் வார்த்தை , நமக்கு நேராக வரும்போது , நம்மைத் தாழ்த்தி , நமது வஸ்திரத்தை அல்ல ; நமது இருதயத்தைக் கிழித்துக் கொண்டு , அவரிடம் திரும்பும்போது , கர்த்தர் நொறுங்குண்ட இருதயத்தோடு ஜெபிக்கும் ஜெபத்தைத் தள்ளிவிட மாட்டார் ; என் வசனத்திற்கு நடுங்குகிறவனையே நோக்கிப் பார்ப்பேன் என்று கர்த்தர் சொல்லுகிறாரே. (ஏசா 66 : 2)
*ஆமென் ! அல்லேலூயா ! !*
Rajam Theogaraj , Palayamkottai .
-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x
*🗣️ துணிச்சலான தீர்க்கதரிசி🗣️*
2 இராஜாக்கள் 22
☄️ உல்தாள் ஒரு தீர்க்கதரிசி, தெய்வீக நுண்ணறிவும் ஞானமும் பெற்ற பெண்.
1️⃣ *ஆவிக்குறிய பெலனும் பக்தியும்*
🔹உல்தாள் தனது வாழ்க்கையை தேவனுக்கு சேவை செய்வதற்கும் அவருடைய செய்தியை மக்களுக்கு பரப்புவதற்கும் அர்ப்பணிக்கிறார்.
🔹அவளுடைய ஆவிக்குறிய பெலனும் அர்ப்பணிப்பும் அவளை சமூகத்தில் ஒரு மரியாதைக்குரிய நபராக ஆக்குகிறது.
2️⃣ *ஞானமும் நுண்ணறிவும்*
🔸உல்தாளின் மிகவும் குறிப்பிடத்தக்க குணங்களில் ஒன்று அவளது விதிவிலக்கான ஞானமும் நுண்ணறிவுமே.
🔸ஆலயத்தில் கண்டுபிடிக்கப்பட்ட நியாயப்பிரமாணப் புத்தகத்தைப் பற்றிய வழிகாட்டுதலை யோசியா ராஜா நாடும் போது, தெய்வீக விளக்கத்தை வழங்குவதற்காக தேர்ந்தெடுக்கப்பட்ட தீர்க்கதரிசி உல்தாள் ஆவார்.
🔸தேவனுடைய விருப்பத்தை பகுத்தறிந்து புரிந்து கொள்ளும் அவளது திறன் அவளை ராஜாவுக்கும் தேசத்திற்கும் விலைமதிப்பற்ற சொத்தாக ஆக்குகிறது.
3️⃣ *அச்சமற்ற மற்றும் தைரியமான*
▪️சவாலாக இருந்தாலும் உண்மையைப் பேசுவதில் உல்தாளின் அச்சமின்மை வெளிப்படுகிறது.
▪️அவள் தயக்கமின்றி தன் ஆலோசனையை நாடும் யோசியா ராஜாவிடம் தேவனுடைய செய்தியை அச்சமின்றி கூறுகிறாள்.
▪️உல்தாளின் தைரியம் மற்றவர்களுக்கு ஒரு உத்வேகமாக உதவுகிறது, சரியான மற்றும் நியாயமானவற்றிற்காக நிற்க அவர்களை ஊக்குவிக்கிறது.
4️⃣ செல்வாக்கும் தாக்கமும்
🔺அவளுடைய தீர்க்கதரிசனச் செய்தி யோசியா ராஜாவை வழிநடத்துவது மட்டுமல்லாமல் தேசத்தின் போக்கையும் வடிவமைக்கிறது.
🔺அவளுடைய வார்த்தைகள் ஒரு ஆவிக்குரிய எழுப்புதலைத் தூண்டி, பரவலான மனந்திரும்புதலுக்கும், தேவனுடைய உடன்படிக்கைக்கு புதுப்பிக்கப்பட்ட அர்ப்பணிப்புக்கும் வழிநடத்திச் செல்கின்றன.
5️⃣ மரபும் உத்வேகமும்
🔻உல்தாள் தைரியம், நம்பிக்கை மற்றும் ஞானம் ஆகியவற்றின் நீடித்த மரபை விட்டுச் செல்கிறார்.
🔻தேவனுடைய வழிகாட்டுதலைப் பெறுவதற்கும், அவருடைய உண்மையைத் தைரியமாகப் பிரகடனப்படுத்துவதற்கும் அவருடைய கதை, பெண்கள் மற்றும் ஆண்கள் இருவரையும் ஒரே மாதிரியாக ஊக்கப்படுத்துகிறது.
🔻சமூக எதிர்பார்ப்புகள் அல்லது பாலினப் பாத்திரங்களைப் பொருட்படுத்தாமல், தேவனுடைய குரலைக் கேட்பதன் முக்கியத்துவத்தை உல்தாளின் உதாரணம் நமக்குக் கற்பிக்கிறது.
♥️ *வாழ்க்கை பாடங்கள்*
💥தேவனுடைய ஞானம் பாலினம் அல்லது சமூக விதிமுறைகளால் வரையறுக்கப்படவில்லை என்பதை நினைவூட்டுவதாக உல்தாளின் கதை திகழ்கிறது, மேலும் அவரது மரபுநெறிப்பாடு வரவிருக்கும் தலைமுறைகளுக்கு தொடர்ந்து ஊக்கமளிக்கிறது.
*‼️நாம் உல்தாளைப் போல தைரியமாகவும் துணிவுள்ளவர்களாகவும் இருப்போம்‼️*
பிரின்சஸ் ஹட்சன்
தமிழாக்கம் இன்னிசை செல்வி மும்பை
-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x
*🍏சிப்பிக்குள் முத்து🍏*
*2 இராஜா : 21, 22*
*🍉முத்துச்சிதறல் : 117*
🍃🍃🍃🍃
*அவன் (யோசியா).....*
*அவன் கர்த்தரின் பார்வைக்கு செம்மையானதை செய்து, தன் தகப்பனாகிய தாவீதின் வழியிலெல்லாம் வலது இடதுபுறம் விலகாமல் நடந்தான்.*
(2 இராஜா - 22 : 2)
🍃🍃🍃🍃
*✍️இன்றைய எமது வாசிப்பு பகுதியில் 4 விதமான அரசர்களை சந்திக்கிறோம்.* அவர்கள் யாரெனில், *1.* எசேக்கியா,
*2.* மனாசே,
*3.* ஆமோன்,
மற்றும்
*4.* யோசியா.
*🎁அடிப்படை சீர்திருத்தங்களுக்கு வித்திட்டவர் எசேக்கியா மன்னன் என்று நேற்று கவனித்தோம்.*
அவருக்கு பின் அரியணையில் ஏறிய *மனாசே.....மிகவும் விக்கிரக வழிபாட்டினனாக இருந்தது மாத்திரமல்ல, கர்த்தரின் பார்வைக்கு பொல்லாப்பானதை செய்து.... கர்த்தருக்கு கோபமுண்டாக அவர் பார்வைக்கு பொல்லாப்பானதை "மிகுதியாய் செய்து"... யூதாவையும் பாவம் செய்ய பண்ணி.... குற்றமில்லாத இரத்தத்தை மிகுதியாக சிந்தினான்.*
(21:1-16)
அடுத்து வந்த அவர் குமாரன்
*ஆமோனும் கூட.... மனாசே செய்ததுப்போல.. கர்த்தரின் பார்வைக்கு பொல்லாப்பானதை செய்து... கர்த்தரின் வழியில் நடவாமல் தன் பிதாக்களின் தேவனாகிய கர்த்தரை விட்டு விட்டான்.*
(21:18-22)
அடுத்து இந்த ஆமோனின் குமாரன் *யோசியா அரசாட்சிக்கு வருகிறார்.*
அவரை குறித்து தான்,
*அவன் கர்த்தரின் பார்வைக்கு செம்மையானதை செய்து, தன் தகப்பனாகிய தாவீதின் வழியிலெல்லாம் வலது, இடது புறம் விலகாமல் நடந்தான்.*
(22:2)
என்று......பரிசுத்த வேதாகமத்தில் பதிவிடப்பட்டுள்ளது.
📌🪶📌🪶📌🪶
*இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தர் தாவீதுக்கு பின் எழுந்த எல்லா அரசர்களையும் இரு வகையினராக "பிரித்து பார்த்து" எமக்கு வேத ஏடுகளில் "அவர்களை குறித்த தமது சிந்தையை" வேதாகம எழுத்தாளர் மூலம் பதிவிட்டுள்ளார்.*
தாவீதுக்கு பின் அரியணை ஏறிய
ஒவ்வொரு அரசனும் *தன் தகப்பனாகிய "தாவீதின் வழிகளில் நடந்தான்"* என்றோ, இல்லை, *இஸ்ரவேலை பாவம் செய்யபண்ணின "யெரோபேயாமின் வழிகளில் நடந்தான்"* என்றோ தான் ஆண்டவர் சாட்சியிடுகிறார்.
*✍️தாவீதின் வழி என்பது -* கர்த்தருடைய இருதயத்திற்கு ஏற்ற விதமாக என்று அர்த்தம்.
தாவீதின் வாழ்க்கை வரலாற்றினை நாம் புரட்டி பார்த்தோமானால், ஓர் இடத்திலாகிலும்... 🥏அவர் மேடைகளில் பலியிட்டதாகவோ,
🥏விக்கிரக வணக்கம் செய்ததாகவோ,
🥏கர்த்தர் இஸ்ரவேல் தேசத்தில் இருந்து துரத்தி விட்ட ஜாதியாரின் எவ்வித பழக்க வழக்கங்களில ஈடு பட்டதாகவோ,
இல்லை,
🥏அந்நிய ஜாதியாரின் *"தொழுகை முறையோ"* அவரிடத்தில் சுத்தமாக நாம் காணவே இயலாது.
*கர்த்தரை கனப்படுத்தி வாழ்வதில்* தாவீதுக்கு நிகர் வேறெவரும் வந்தெட்டவே இயலாத வண்ணம், தாவீதுக்கும் மெய் தேவனுக்கும் ஓர் இணைப்பிரியா தொடர்பு நிலை சதா உண்டாகியே இருந்தது.
ஆனால்,
*யெரோபேயாம் காரியமோ இதற்க்கு நேர் மாறானது.*
1. *தன் மன விருப்பத்தின்படி* ஆளுகை செய்ய துணிவு கொண்டவன்.
*2.* கர்த்தரின் பார்வைக்கு *செம்மையானதை செய்ய* எந்தவிதமான *சிரத்தையும் எடுத்து கொள்ளாதவன்*.
*3.* விக்கிரக வழிபாட்டை *(கன்றுக்குட்டி வணக்கத்தை)* இஸ்ரவேலில் துணிகரமாக ஸ்தாபித்தவன்.
*4.* இராஜ்யபாரம் தாவீதின் வம்ச வசமாய் திரும்புவதை அவன் விரும்பவில்லை.
*5.* தன் மனதில் ஏற்பட்ட பயத்தை புறந்தள்ளுவதை விட்டு விட்டு பயத்திற்குறிய காரியத்திற்கு.....
*"அவுல் கொடுக்கும் வண்ணம்"*
அதை குறித்தே சிந்தித்துக்கொண்டு இருந்தவன்.
*6.* ஆழமாக சிந்தித்தவனுக்கு கர்த்தரின் யோசனைக்கு மாறாக ஒரு
*"சுய யோசனை"* உண்டாகியது.
*7.* தன் யோசனைக்கு நேரே மக்களை....
*வலை போட்டு அகபடுத்தி கொண்டான்.*
*8."மேடையாகிய ஒரு கோவில்"* இஸ்ரவேலில் உதயமாயிற்று.
*9.* லேவியின் புத்திரராய் இராதோரை,
*(ஜானத்தில் லாயக்கற்றோரை)* ஆசாரியராக்கி விட்டான்
*10.* தன் மனதிலே தானே நியமித்துக்கொண்ட பண்டிகைகளை ஆசரிக்க ஆரம்பித்தான்.
❌முழுக்க முழுக்க...
🧐இறை கற்பனைகள் ,
🧐கட்டளைகள்,
🧐பிரமாணங்கள்,
🧐விதிகள்,
🧐நியாயங்கள்,
🧐ஆணைகள்
*என....யாவும் யெரோபெயாமால் காற்றில் பறக்கவிடப்பட்டன.*
ஜனங்களும் அவனது சகல வழி நடத்துதலுக்கும் *ஒத்தூதிகளாகி நின்று, "கர்த்தரின் வழியினை மறந்து,* மாற்று தெய்வ வழிபாடுகளின் பின்னே சென்று சோரம்போகினர்.
*❌️இந்தகாரியம் பாவமாயிற்று.*
எந்த காரியம்❓️
*கர்த்தரை தொழுதுக்கொள்ள எருசலேமுக்கு செல்லாமல்.... ஜனங்கள் "கன்றுக்குட்டி வணக்கம் செலுத்த" தாண் மற்றும் பெத்தேல் வரை சென்றனராம்.*
மோசே மூலம் கர்த்தர் கொடுத்திருந்த அறிவுரை யாவையும் அறிந்தே மீறுதலுக்கு உட்பட்டிருந்தான் இந்த யெரோபெயாம்.
*முழுக்க முழுக்க சுயநல பேர்வழி இவன்*
(1 இராஜா - 12 : 25 - 33)
🔥🙋♀️🔥🙋♀️🔥🙋♀️
*ஆனால்,தாவீதோ அப்படியல்ல.*
அவர் என்றுமே ஒரு *பொதுநலவாதி.*
எப்பொழுதும் தன்னை தேவனுக்கு முன் நிறுத்தி கொண்டு....
🫧சொந்த வாழ்வையும்
🫧அரசாட்சி வாழ்வையும் நடத்தி கொண்டு சென்றவர்.
🛍️ஜனங்களை தனது ஆடுகளாகவும், தானோ அவைகளுக்கான *"உத்திரவாத மேய்ப்பனாகவும்"* எண்ணி செயல்பட்டவர்.
🦀💠🦀💠🦀💠
🍀இங்கு யோசியாவை குறித்து நல்ல சாட்சி எழுதப்பட்டு இருக்கிறது.
*அவன் கர்த்தரின் பார்வைக்கு செம்மையானதை செய்தான்* என்று கர்த்தர் சாட்சி கொடுத்துள்ளார்.
கர்த்தரின் ஆலயத்தை பழுது பார்க்கும்படி ஆட்களை நியமித்தார்.
*தனது தாத்தா மனாசே, மற்றும் தகப்பன் ஆமோனின் எந்த விதமான ஆன்மீகமும் தவறு என்பதை புரிந்து கொண்டார்.*
கர்த்தரின் ஆலயத்தில் நியாயப்பிரமாண புஸ்தகம் கண்டுபிடிக்கப்பட்டது எதை காண்பிக்கிறது என்றால்......
*அப்பாவும், தாத்தாவும், தங்களது நாட்களில் இந்த நியாயபிரமாண புஸ்தகத்தை ஆலயத்தில் ஒளித்து வைத்துவிட்டு, வாய்மொழியில் சுய கதைகளை அளந்து விட்டு* (சரடு விட்டு கொண்டு)
மக்களை கேடான பாதையில் நடத்தி இருந்தனர்.
*எசேக்கியாவின் நாட்களுக்கு பின் இந்த நியாயபிரமாண புஸ்தகம் எவர் கண்களிலும் படாமல் இருந்ததற்க்கு காரணம்,*
மக்கள் ஆலய தொழுகையை கைவிட்டு விட்டிருந்தனர். *இஸ்ரவேல் தேசத்தின் வீதியெங்கும் கல்லுச்சாமிகள் மயமாகி போனது.*
🥦🥦🥦
*இந்த நியாயபிரமாண புஸ்தகம் யாரோ ஒருவரால் ஒளித்து வைக்கப்பட்டு இருந்ததாகவும் ஒரு கருத்து உள்ளது.*
*கர்த்தரின் புஸ்தகம் இல்லாமலேயே..... அது கண்டு பிடிக்க படுவதற்கு முன்னமே யோசியா கர்த்தரின் பார்வைக்கு செம்மையானதை செய்தது மிக மிக ஆச்சர்யமான காரியமாக்கும்.*
அது தான் தூய ஆவியானவரின் செயல்.
மட்டுமல்ல..... அதினால் தான் யோசியா....தன் தகப்பனாகிய தாவீதின் வழியிலெல்லாம், வலது, இடது புறம் விலகாமல் நடக்க முடிந்தது.
ஆகிலும் கர்த்தரின் புஸ்தகத்தை கண்டுபிடித்தோர் அதனை யோசியா அரசனின் கரங்களில் சமர்ப்பித்த போது, அதை சத்தமாக வாசிக்கும்படி அரசன் உத்தரவிட்டு, அதில் எழுதப்பட்டிருந்த கட்டளைகளை காத்து நடவாவிட்டால், நடக்கும் தீங்குகளை குறித்து அறிந்து கொண்டவுடன் தன் வஸ்த்திரங்களை கிழித்து கொண்டார்.
*🍏கர்த்தருக்கு முன் மிகவும் தாழ்மையாய் நடந்து கொண்டார்.* அது தான் தெய்வ பயம்.
நமக்காக எழுதியிருக்கிற எல்லாவற்றின்படியெயும் செய்ய *நம்முடைய பிதாக்கள் ( தாத்தா மனாசே, தகப்பன் ஆமோன் ) இந்த புஸ்தகத்தின் வார்த்தைகளுக்கு செவி கொடாதபடியினால் நம்மேல பற்றி எறிந்த கர்த்தருடைய உக்கிரம் பெரியது என்றாராம் யோசியா அரசன்.* (22:13)
💊✅️💊✅️💊✅️💊
கர்த்தர் பால் அன்புள்ளம் கொண்ட மன்னர் யோசியாவுக்கு நற்செய்தி
*"ஒரு தீர்க்கதரிசியானவளிடம் இருந்து"* (உல்தாளிடம் இருந்து)
வருகிறது.
*செய்தி அவள் மூலம் கர்த்தர் சொல்லி அனுப்பியது :*
மன்னர் தப்புவார், ஆனால் மக்களின் பாவ வாழ்வோ தீர்ப்பு பெறும் என்பதே யோசியாவுக்கு வந்த தூது செய்தி.
*இந்த அபூர்வமான நிகழ்ச்சியில் மட்டுமே தேவன் ஒரு பெண் தீர்க்கதரிசினி வழியாக ஓர் நல்ல தெய்வ பயமுள்ள அரசனோடு பேசுகிறார்.*
🍧கர்த்தரின் பார்வைக்கு செம்மையானதை செய்வது மாத்திரமே *"தாவீதின் வழி"* எனப்படுகிறது.*
🍧சொந்த மனவிருப்பப்படி செய்வது அனைத்தும் *"யெரோபெயாமின் வழி"* எனப்படுகிறது.
*🍧தாவீதின் வழியில் வலது, இடது புறம் விலகாமல் நடந்த யோசியா அரசனை போல நாமும் வாழ தீர்மானித்து கொள்ளுவோமா❓️*
*Sis. Martha Lazar✍️*
NJC, KodaiRoad.
-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x
*MANASSEH, THE WICKED KING OF JUDAH* (2 Kings 21:1-18)
*யூதாவின் பொல்லாத ராஜாவாகிய மனாசே.*
(2 இராஜாக்கள் 21:1-18)
மனாசே ராஜாவானபோது அவனுக்கு 12 வயது, அவன் எருசலேமில் 55 ஆண்டுகள் ஆட்சி செய்தான். ( 2 இரா. 21:1. 697-642 கி மு)
அ. *மனாசேயின் பாவச் செயல்கள்.*
*அவன் கர்த்தரின் பார்வையில் பொல்லாப்பானதைச் செய்தான்*. (21:2)
*தன் தகப்பனாகிய எசேக்கியா இடித்துப்போட்ட மேடைகளைத் திரும்பவும் கட்டி, பாகாலுக்குப் பலிபீடங்களை எடுப்பித்து, இஸ்ரவேலின் ராஜாவாகிய ஆகாப் செய்ததுபோல விக்கிரகத்தோப்பை உண்டாக்கினான்..*( 21:3 அ)
*வானத்தின் சேனைகளையெல்லாம் பணிந்துகொண்டு அவைகளைச் சேவித்தான்*. (21:3 ஆ)
*தன் குமாரனைத் தீமிதிக்கப்பண்ணினான்*, *நாள்பார்க்கிறவனும் நிமித்தம் பார்க்கிறவனுமாயிருந்தான்.*
*அஞ்சனம் பார்க்கிறவர்களையும் குறிசொல்லுகிறவர்களையும் வைத்து, கர்த்தருக்குக் கோபமுண்டாக அவர் பார்வைக்குப் பொல்லாப்பானதை மிகுதியாய்ச் செய்தான்*.(21:6)
*அவன் எருசலேமை நாலு மூலைவரையும் இரத்தப்பழிகளால் நிரப்பத்தக்கதாய், குற்றமில்லாத இரத்தத்தையும் மிகுதியாகச் சிந்தினான்.*..(21:16)
.......... ....
ஆ. *மனாசேயைப் பற்றிய தேவனுடைய பதில்.*
*இதோ, கேட்கப்போகிற யாவருடைய இரண்டு காதுகளிலும் அது தொனித்துக்கொண்டிருக்கும்படியான பொல்லாப்பை நான் எருசலேமின்மேலும் யூதாவின்மேலும் வரப்பண்ணுவேன். ( 2 இராஜாக்கள் 21:12 )
* நான் எருசலேமை அழிப்பேன். (21:13 அ)
* என் சுதந்தரத்தில் எஞ்சியிருப்பதைக் கைவிட்டு, அவர்களை அவர்கள் எதிரிகளிடம் ஒப்படைப்பேன். (21:14 அ)
* அவர்கள் எல்லா எதிரிகளாலும் சூறையாடப்பட்டு கொள்ளையடிக்கப்படுவார்கள். (21:14ஆ)
2 இரா., அதிகாரங்கள் 18 முதல் 20 வரை, அவருடைய தந்தை எசேக்கியா ராஜாவைப் பற்றி வாசிக்கிறோம். "அவருக்கு முன்னும் பின்னும் யூதாவின் எல்லா ராஜாக்களிலும் அவனைப்போல் ஒருவரும் இருந்ததில்லை." (2 இராஜாக்கள் 18:5)
எசேக்கியா மிகவும் தெய்வீக குணங்களுள்ள ராஜாவாக இருந்தார், ஆனால் அவர் தனது மகனை தெய்வீக வழிகளில் வளர்க்கத் தவறிவிட்டார். இதன் விளைவாக, அவரது மகன் யூதாவின் மிகவும் பொல்லாத அரசர்களில் ஒருவரானார்.
*நம் பிள்ளைகளை தெய்வீக வழிகளில் வளர்ப்பதில் கவனமாக இருக்கிறோமா?*
*நாம் எல்லாவற்றிலும் கர்த்தருக்குக் கீழ்ப்படிகிறோமா?*
*இன்று நம்மைப் பற்றி கர்த்தருடைய எண்ணம் என்னவாக இருக்கும்?*
Rev.C.V.Abraham
தமிழாக்கம்
Princess Hudson
-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x
2 ராஜாக்கள் 22-22
👓👓👓👓👓👓
Sist. எஸ்தர் ராஜசேகரன்
💟💟💟💟💟💟
*துணிகரம் நீதியின் பாதையை மறைக்கும் :*
📝பிதாக்கள் நீதியாக வாழ்ந்து, கர்த்தரை பின் பற்றி , பரிசுத்ததுடனும், கர்த்தரை ஆராதித்து, கிறிஸ்துவ வாழ்க்கை வாழ்வதினால், கர்த்தர் அவர்கள் மேல் பிரியமாய் இருப்பதும், அவர்களை ஆசீர்வதிப்பதும் நாம் இந்த அதிகாரங்களில் வாசித்து வருகிறோம்.
ஆனாலும் அவர்களுடைய சந்ததி தேவனை பின்பற்றாமலும், விக்கிரக ஆராதனை செய்தும், பாகலுக்கு பலி பீடங்கள் கட்டி, தீ மிதித்து, நாளும், நிமித்தமும் பார்த்து கர்த்தருக்கு கோபமூட்டி, அவர் பார்வைக்கு மிகவும் மிகுதியாய் செய்து கொண்டிருந்தார் கள்..
*ஆகாஸ், எசேக்கியாவின் குமாரன்,* கர்த்தருடைய ஆலயத்தின் பிரகாரங்களிலே வானத்தின் சேனைகளுக்கு பலி பீடம் கட்டினான்.
எவ்வளவு
துணிகரமாக நடந்துள்ளான்.
📝நம் பிள்ளைகள் கூட நம் வார்த்தைகளை கேட்காமல், தங்கள் சுய வழியிலே நடக்கும் பொழுதும், தங்களுக்கு அறிவு வளரும் போது,தங்களுக்கு எல்லாமே தெரியும் என்ற பாவனையில் கீழ்படியாமல் போகும் பொழுதும் அது எத்துணை சாபங்களை அவர்களுக்கு கொண்டு வரும் என்று தெரிவதில்லை.
அவர்கள் யாருக்கு விரோதமாக எதிர்கிறார்கள் என்று அறியாமல், செயல் படுவதை பார்க்கும் பொழுது, நாம் ஜெபம் செய்வதை தவிர வேறு என்ன செய்ய முடியும்.
கர்த்தரிடம் முறையிட வேண்டியது தான்.. நம்மை மீறி நடக்கும் காரியங்களில் நாம் எதையும் செய்ய முடியாது
*கர்த்தர் தமக்கு சித்தமான காரியங்களை அவரே செய்வார்.*
ஆகாசை தொடர்ந்து அவன் மகன் ஆமோனும், கர்த்தரை பின்பற்றாமல், விக்கிரங்களை உண்டாக்கி சேவித்தான்.
ஏறக்குறைய 57 வருடங்கள் கழித்து யோசியா கர்த்தருடைய ஆலயத்தின் கதவுகளை திறந்து. பழுது பார்த்தான்.
*57 வருடங்களாக காணாமல் போன நியாய பிராமண புஸ்தகத்தை கண்டெடுத்து அதை வாசித்த பொழுது, ராஜா வாகிய* *யோசியா, தன் வஸ்திரங்களை கிழித்து கொண்டு, தாழ்மையுடன் நடந்து கர்த்தரை தேடினான்.*
அப்பொழுது தான் புரிந்தது ராஜாவிற்கு...
நமக்காக எழுதி இருக்கிற எல்லாவற்றின் படியும் செய்ய. நம் பிதாக்கள் இந்த புஸ்தகத்தின் வார்த்தைகளுக்கு செவி கொடாமல் போனதினால் தான் கோபம் நம்மேல் பற்றி எரிகிறது என்று புரிந்து கொண்டான்.
*இன்று எத்துணை பேர் வீட்டில் வேதாகமம் தூசு தட்டி எடுக்க வேண்டிய நிலை யில் உள்ளது?*
அல்லது தலை மாட்டில் தலையணையாக எத்துணை பேர் வைத்துள்ளனர்.
*வேதாகமம் நம் ஜீவ*
*அப்பம்*.
*அன்றாடம் உட்கொள்ள வேண்டிய அனுதின மன்னா.*
ஆம் யாருடைய இருதயம் கர்த்தருடைய வார்த்தை கேட்ட உடன், ஏற்று கொள்கிறதோ, கீழ் படிக்கிறதோ, அந்த ஆத்துமாவின் மேல் கர்த்தர் பிரியமாய் இருப்பார்.
எனவே, நாம் *ஆரம்பத்திலே கொண்ட நம்பிக்கையை முடிவு பரியந்தம், உறுதியாய் பற்றிக்கொண்டிருப்போமானால், கிறிஸ்தவினிடத்தில் பங்குள்ளவர்களாக இருப்போம்.*
📝மோசேயினால் எகிப்திலிருந்திது புறப்பட்ட யாவரும் அப்படியே கோபமுட்டினார்கள். அவர்கள் சவங்கள் வணந்திரத்தில் விழுந்து போயிற்று அல்லவா?
எனவே *இன்று அவருடைய சத்தத்தை கேட்பீர்களாகில், உங்கள் இருத்தயங்களை கடின படுத்தாதீர்கள்* என்று எபிரேயர் 3 ல் வாசிக்கிறோம்.
📝வார்த்தைகளை கேட்ட யோசியா எப்படி விசுவாசித்தார் அல்லவா?
எனவே அவிசுவாச முள்ள பொல்லாத இருதயம் நமக்கு இல்லாத படிக்கு எச்சரிக்கை யுடன் இருப்போமாக
👓👓👓👓👓👓
Thanks for using my website. Post your comments on this