==================
2 KINGS : 18 - 20 Bible Study in Tamil & English
====================
*A grateful person is a great, full person.*
⛹️♂️ *Application* : II Ki.19:1-19- *Let us turn our cares into prayers. Thanksgiving is so important. A grateful person is a great, full person* . Think of the people we know who are great. They’re not people who are negative and who complain. They’re people who have an attitude of continual thanksgiving. Paul said, “In everything give thanks for this is the will of God in Christ Jesus concerning you” (1 Thessalonians 5:18). *We wonder as to how to discover God’s will. Here it is: Give God thanks in everything. We will be large in stature in the things of God if we are simply grateful.*
💪🏼II Ki.19:30-34- God says through Isaiah that the Assyrian army will not besiege the city of Jerusalem and that they will not even shoot an arrow into the city! Let us think that over for a moment. There are 185,000 soldiers around the walls of Jerusalem. Out of that number one would certainly find some trigger-happy soldier with a bow and arrow who would shoot at least one arrow over the wall. If he does that, Isaiah is not a true prophet of God. *God says that not an arrow is going to fall in that city, and He says it by the mouth of Isaiah.* God says, “I’m going to save this city, and I will save it for two reasons.” For I will defend this city, to save it, for mine own sake, and for my servant David’s sake [2 Kings 19:34].
❓II Ki.20:20-21- *This may seem like an awful thing for us to say, but should Hezekiah have died when the time came for him to die (II Ki.20:1)?* Three things took place after God extended his life that were foolish acts: he showed his treasures to Babylon, which will cause great trouble in the future; he begat a son, Manasseh, who was the most wicked of any king; he revealed an arrogance, almost an impudence, in his later years. His heart became filled with pride. Second Chronicles 32:25 tells us, “But Hezekiah rendered not again according to the benefit done unto him; for his heart was lifted up: therefore, there was wrath upon him, and upon Judah and Jerusalem.” *Might it have been better if Hezekiah had died at God’s appointed time?*
Jaya Pradeep-Kodaikanal.
-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x
(2இராஜாக்கள் : 18-20)
💐💐💐💐💐💐💐
★ யூதாவின் ராஜாவாகிய எசேக்கியா வியாதிப்பட்டு மரணத்துக்கு ஏதுவாக இருந்த போது, தீர்க்கதரிசி ஏசாயா அவனிடத்தில் வந்து வீட்டுக்காரியத்தை ஒழுங்குபடுத்தும், நீர் பிழைக்க மாட்டீர், மரித்துப்போவீர் என்று கர்த்தர் சொல்கிறார் என்றான்.
★ அப்போது எசேக்கியா தன் முகத்தைச் சுவர்ப்புறமாக திருப்பிக்கொண்டு, கர்த்தரை நோக்கி:
"ஆ ,கர்த்தாவே, நான் உமக்கு முன்பாக உண்மையும் மன உத்தமுமாய் நடந்து, உமது பார்வைக்கு நலமானதைச் செய்தேன் என்பதை நினைத்தருளும்" என்று விண்ணப்பம் பண்ணினான். *எசேக்கியா மிகவும் அழுதான்*
என்று வாசிக்கிறோம்.
★எசேக்கியாவின் ஜெபத்தைக் கேட்டு அவரைக் குணமாக்கி, அவர் ஆயுசு நாட்களைப் பதினைந்து ஆண்டுகள் அதிகரித்து அவரது நாட்டை அதன் எதிரியினின்று கர்த்தர் தப்புவித்தார்.
★கர்த்தர் மீது உண்மையான விசுவாசம் உள்ளவர்களின் ஊக்கமான ஜெபத்திற்குக் கர்த்தர் நிச்சயம் நல்ல பதிலைக் கொடுப்பார்.
★தான் அளித்த தீர்க்கத்தரிசனத்தின் நிறைவேறுதலைப் பதினைந்து ஆண்டுகள் தள்ளிப் போடும் அளவிற்கு ஜெபத்திற்குப் பதில் அளித்தவர் நம் கர்த்தர்.
★மரணப்படுக்கையாகத் தோன்றும் பொழுதும் அற்புத சுகத்திற்காக ஜெபிக்கலாம் என்பதை வேதம் இப்பகுதியில் தெளிவுபடுத்துகிறது.
*விசுவாசமுள்ள ஜெபம் பிணியாளியை இரட்சிக்கும்*.
*அவர் ஜெபத்தைக் கேட்கிறவர்*.
★இத்தகைய கர்த்தரை தெய்வமாகக் கொண்ட நாம் பாக்கியவான்கள்.
*ஊக்கமான ஜெபம்*, *மனத்தாழ்மையின் ஜெபம்*,
*கண்ணீரின் ஜெபம்*---
இதற்கு எப்போதுமே நல்ல பதில் கிடைக்கும்.
*ஆமென்*.
💐💐💐💐💐💐💐
✍️ Bhavani Jeeja Devaraj, Nagercoil
-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x
2 Kings 18-20
*WHAT A GOD WE SERVE* ❗️
*I have heard your prayer* ‼️
Thus says the Lord God of Israel: ‘ *Because you have prayed to Me , I have heard* .’(19:20)
LIKE HEZEKIAH
💥 Do what is right in the sight of the Lord (18:3)
💥 Trust in the Lord (18:5)
💥 Hold fast to the Lord (18:6)
💥 Put your confidence in the Lord (18:19)
💥 *Run to His presence in any situation* (19:1)
💥 *Spread out all your problems before the Lord first* (19:14)
💥 *Pray, pray, pray .. No alternate for that* (19:20)
🙏🙏 "O Lord our God, I pray, save us from the hand of enemy , that all the kingdoms of the earth may know that You are the Lord God, You alone .”(19:19)
Usha
-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x
2.ராஜாக்கள்.20.
🌹🌹🌹🌹🌹🌹🌹
"கடவுள் எசேக்கியாவின் ஆயுளை நீட்டித்தார்."
🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹
எசேக்கியா எப்படி நோய்வாய்ப்பட்டார் என்று நமக்குச் சொல்லப்படவில்லை.
அது இறைவனால் அனுமதிக்கப்பட்டது.
கடவுள் எசேக்கியாவிடம் கருணை காட்டினார். அவருடைய மரணம் நெருங்கிவிட்டது என்று அவரிடம் சொன்னார்.
எசேக்கியா தனது ஜெபத்தில் ஊக்கமாக இருந்தார்.
அவர் தனது ஜெபத்தை தனிமையில் கடவுளிடம் ஏறெடுத்தார்.
எந்த மனிதனிடமும் அல்ல.
எசேக்கியாவின் ஜெபம் முக்கியமானது.
அவர் தெய்வ பக்தி நிறைந்தவர், வெற்றியாளர்.
அவர் குணமடைந்தார்.
அவர் ஒரு அதிசயத்தை அனுபவித்தார்.
அவருக்கு நீண்ட ஆயுளும் உறுதியளிக்கப்பட்டது.
இன்னும் பதினைந்து ஆண்டுகால வாழ்வு என்ற இந்த மாபெரும் இரக்கத்துக்குப் பிறகு அவர் பெரும் பாவம் செய்தார்.
🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹
மேபி சுந்தர். சென்னை. இந்தியா. குழு எண்2196
-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x
நான் உமது பார்வைக்கு நலமானதை செய்தேன்*
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
2 இராஜாக்கள் 20: 3.
1.ஆம், *மரணத்துக்கு ஏதுவாக வியாதிபட்டு இருக்கும் எசேக்கியாவைப் பார்த்து, கர்த்தர் ஏசாயா தீர்க்கதரிசியை அனுப்பி, "நீர் பிழைக்க மாட்டீர். மரித்து போவீர் . உம் வீட்டு காரியத்தை ஒழுங்குபடுத்தும்"* என்கிறார். ஆம், அப்படியானால் *கர்த்தர் நம் வீட்டு காரியங்களை குறித்தும் கருதுகிறவராயிருக்கிறார்* என்பதை நாம் அறிந்து கொள்ள வேண்டும்.
2.எசேக்கியாவோ *மிகவும் அழுது, ஆ கர்த்தாவே, நான் உமக்கு முன்பாக உண்மையும், மன உத்தமமுமாய் நடந்து, உமது பார்வைக்கு நலமானதை செய்தேன் என்பதை நினைத்தருளும்* என்று விண்ணப்பம் பண்ணினார்.
*இந்த ஜெபத்தை கர்த்தர் கேட்டார். அவன் கண்ணீரை கண்டார். அவனை குணமாக்கினார். அவன் நாட்களோடு பதினைந்து வருடங்களை கூட்டி கொடுத்தார்*. அப்படியானால் இந்த சிறு ஜெபத்தின் மேன்மை தான் என்ன?
3. *ஆ கர்த்தாவே*, என எசேக்கியா அன்போடு அழைக்கிறார். *நான் உமக்கு முன்பாக உண்மையும், மன உத்தமமாய் நடந்தேன்* என கர்த்தரிடத்தில் தைரியத்தோடு எசேக்கியா சாட்சி கூறுகிறார். நம்மால் இத்தகைய சாட்சியை கூற முடியுமா?
*உமக்கு முன்பாக* என்றால் அவர் நம் எல்லா காரியங்களையும் பார்த்துக் கொண்டிருக்கிறார்.
*உண்மையும் மன உத்தமுமாய் நடந்தேன்*. அப்படியானால் கர்த்தருடைய வார்த்தைக்கு உண்மையாய், உத்தமமாய் இந்த எசேக்கியா, கீழ்ப்படிந்திருக்கிறார் அல்லவா? நம்மால் இத்தகைய சாட்சியை சொல்ல முடியுமா? சிந்திப்போம்.
4. *உமது பார்வைக்கு நலமானதை செய்யும்* என இவ்வளவு தைரியத்தோடே நம்மால் கூற முடியுமா? என சிந்திப்போம். அதாவது கர்த்தருடைய பார்வைக்கு என்பதாகும். ஆம், *அப்படியானால் எவ்வளவு பரிசுத்தமாய் நாம் வாழ வேண்டும்* என்பதை நாம் அறிந்து கொள்ள வேண்டும்.?
5. நான் எப்படி உண்மையாய், உத்தமமாய்நடந்தேன் என்பதை *நினைத்தருளும்* என ஜெபித்தான் . ஆம், கர்த்தர் நம்மை, நம் கிரியைகளை எவ்வளவாய் நினைக்கிறார் என்பதை நாம் அறிந்து பயபக்தியோடு வாழ வேண்டும்.
6. ஏசாயா பாதி முற்றத்தை தான் கடந்தார். அதற்குள்ளாக, சில நிமிடங்களுக்குள்ளாகவே *கர்த்தர் ஜெபத்தை கேட்டார். கண்ணீரை கண்டார். எசேக்கியாவை குணமாக்கி, ஆயுசு நாட்களை 15 வருடங்கள் கூட்டினார்*. ஆம், *நம் தேவன் நம் விண்ணப்பத்தை கேட்பவர். நம் மேல் நினைவாயிருப்பவர். நம் கண்ணீருக்கு , உண்மைக்கு, உத்தமத்திற்கு பதில் தருகிறவர்*.
=ஆம், அவருக்கு, அவர் வார்த்தைகளுக்கு உண்மையாய், உத்தமமாய் கீழ்ப்படிந்து நடக்க நம்மை ஒப்புக்கொடுப்போம். ஆமென். அல்லேலூயா.
*Dr.Padmini Seĺvyn*
-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x
📗 *சிறிய குறிப்பு* 📗
🍂 *எசேக்கியா* 🍂
எசேக்கியாவின் சீர்திருத்தங்கள் *தேவனுடைய வார்த்தையின்* அடிப்படையிலானவை. வேத வசனம் இவ்வாறு கூறுகிறது: *அவர்களுடைய பலிபீடங்களை இடித்து, அவர்கள் சிலைகளைத் தகர்த்து, அவர்கள் தோப்புகளை வெட்டிப்போடுங்கள் (யாத் 34:13)*.
இதற்கு முன் எந்த அரசர்களும் இந்த உணர்வுப்பூர்வமான பிரச்சினைகளைத் தொட முயலவில்லை. ஆனால் எசேக்கியா *தேவனையும் அவருடைய கட்டளைகளையும்* குறித்து அதிக அக்கறை கொண்டிருந்தான். எனவே அவன் விரைவாக துணிச்சலான நடவடிக்கைகளை எடுத்தான்.
📖 *அவன் மேடைகளை அகற்றி, சிலைகளைத் தகர்த்து, விக்கிரகத்தோப்புகளை வெட்டி, மோசே பண்ணியிருந்த வெண்கலச் சர்ப்பத்தை உடைத்துப்போட்டான்; அந்நாட்கள்மட்டும் இஸ்ரவேல் புத்திரர் அதற்குத் தூபங்காட்டி வந்தார்கள்; அதற்கு நிகுஸ்தான் என்று பேரிட்டான் (2 இரா 18:4).*
எசேக்கியா *எல்லா விதமான உருவ வழிபாடுகளிலிருந்தும் தேசத்தைக் கிளறி, சுத்திகரித்து, சுத்தப்படுத்தினான்.* வனாந்தரத்தில் மோசே செய்த வெண்கலப் சர்ப்பத்தைக் கூட அவன் விட்டுவைக்கவில்லை. ஏனென்றால் பிற்காலத்தில் இஸ்ரவேல் ஜனங்கள் மத்தியில் அது உருவ வழிபாடாக மாறியது.
தேவனாகிய கர்த்தரை விட உயர்ந்த இடத்தைப் பிடிப்பதெல்லாம் நம் வாழ்வில் விக்கிரகம் தான். *பிள்ளைகளே, நீங்கள் விக்கிரகங்களுக்கு விலகி, உங்களைக் காத்துக்கொள்வீர்களாக. ஆமென் (1 யோவான் 5:21).*
_திருமதி ஷீலா ஜெபக்குமார்_ ✍🏼
-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x
✝️ *TO HOLD ONTO GOD OVER THE YEARS…* ✝️ 2 Kings 18-20✝️
🔸The bronze serpent Nehushtan had served its specific purpose for a specific cause for the specific time in the wilderness journey of the Israelites. God intended the bronze serpent to be used only for a short period of time. When we are *stuck in the past* with what was relevant centuries ago, it becomes a stronghold. We need to move with God’s times if we need to walk in faith.
People may have had many testimonies to share about Nehushtan and his associates all these years (Jer 44:17-19). It must have been the reason for them to throng the high places, sacred stones, Asherah poles etc. But it was not the popularity of these places and the testimonies of the people that ultimately mattered. These items took people away from giving glory to God. In fact they took all the attention, devotion and worship that was rightfully due to God. No man who has ever lived on earth is worthy of such an attention other than Jesus Christ. To God be the glory.
🔹When Hezekiah held fast to God to listen to Him, it was what God said about it that mattered to him. So he got rid of of all the abominations people were not willing to let go for hundreds of years. 18:4-6. There are modern day versions of all these idolatry listed here, which we need to get rid of from our daily life and our children’s fun and extra curricular activities.
🔸Somehow Hezekiah started to lose his focus on his God *as the years advanced*. By his fourteenth year when Sennacherib attacked all the fortified cities of Judah and captured them, Hezekiah did not turn to God for help. Instead he was ready to ‘pay his way out’ of the siege by giving silver and gold to the king of Assyria.
God is able to bring us back to Him, no matter how far we go away from Him in our *self- centeredness*. Indeed when Hezekiah finally understood that it was impossible for him or his riches or his army to save the nation, he cried out to God and God delivered the nation overnight.
🔹As the people lost their focus on God, Hezekiah also *slowly drifted away from God as time went by*. When the Babylonians visited, *he trusted in his treasures again*. It can happen to anyone. If we think we are standing firm, we should be even more careful that we don’t fall. 1 Cor 10:12. *This is our time to work out our salvation with fear and trembling*. Phil 2:12. May we understand our times and move with God.
🔹🔸🔹🔸🔹🔸🔹🔸🔹
*God bless!*🙂
Dr. Sangeeta Thomas.
-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x
BRB (2 Kings 19) **Such is the God’s ability to defend His people against the might of the world. This is why Jesus never had any fear. We need never live in any fear either.*
In Chapter 19, we read that after the king of Assyria had captured Israel, he came against the southern kingdom of Judah as well.
Hezekiah then cried out to the Lord for help (19:15). That night a single angel came and destroyed 185,000 Assyrian soldiers (verse 35).
Jesus told Peter in Gethsemane that He could call 72,000 angels to help Him, if He wanted. 72,000 angels could have destroyed 13 billion people (70,000 x 185,000) - more than twice the world's population today!!
Such is the God’s ability to defend His people against the might of the world. This is why Jesus never had any fear. We need never live in any fear either.
Posted by Rambabu
-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x
*ஷாலோம்* 🙏
ஆசீர்வதிக்கப்பட்ட மக்களுக்கு ஆசீர்வாதமாக இருப்பதற்காக ஆசீர்வதிக்கப்பட்டேன் 👨👨👧👦
*2ராஜாக்கள் 20:1-11*
*PUT YOUR HOUSE IN ORDER*
*உங்கள் வீட்டுக்காரியத்தை ஒழுங்குபடுத்துங்கள்*
📝 எசேக்கியாவின் 39வது வயதில், நோய்வாய்ப்பட்டு இறக்கும் கட்டத்தில் இருந்தார். அவரது வியாதி ஒருவித பிளவை அல்லது பருக்களைப் போன்றது. (வ. 7; *உபா. 28:35*)
🙋♂️ *மரணப் படுக்கையில் இருக்கும் ஒரு மனிதன் எதிர்பார்ப்பது:*
~ஆறுதலான வார்த்தைகள் 😘
~தேவ ஊழியரிடமிருந்து பிரார்த்தனை 🛐
🙋♂️ *ஏசாயா* தன்னைச் சந்திக்க வருவதை கண்டபோது எசேக்கியா நன்றாகவும் உற்சாகமாகவும் உணர்ந்திருக்க வேண்டும், ஆனால் ஏசாயா அவருக்கான கர்த்தருடைய செய்தியை அறிவித்தபோது மிகவும் அதிர்ச்சியடைந்தார் ( *வ 1b*) :
📍 *நீர் உமது வீட்டுக்காரியத்தை ஒழுங்குபடுத்தும்*
📍 *நீர் மரித்துப்போவீர்*
📍 *நீர் பிழைக்கமாட்டீர்*
*மரிக்கும் நிலையில் உள்ள மனிதனால் என்ன செய்ய முடியும்* ❓
*பதினோராவது மணி நேரத்தில் எப்படி அவர் தனது வீட்டை ஒழுங்கு படுத்த முடியும்* ❓
🙋♂️ "தனது வீட்டை ஒழுங்குபடுத்த" ஒரு *வாரிசு* சம்பந்தப்பட்டிருப்பதை எசேக்கியா அறிந்திருந்தார், அப்போது எசேக்கியாவுக்கு மகன் இல்லை. அவருக்கு ஒரு தேசப் பிரச்சனை இருந்தது: அசீரியாவின் ராஜாவான சனகெரிப் யூதாவுக்கு அச்சுறுத்தலாக இருந்தார்.
📍 அவனது துயரங்கள் பெருகின, ஆனால் *எசேக்கியா கர்த்தரிடம் ஊக்கமாக ஜெபித்தான்* 🛐 என்று உரை கூறுகிறது.
✔ முந்தைய இரண்டு ராஜாக்கள்: *யெரொபெயாம் மற்றும் அகசியா* தங்கள் வியாதின் போது தேவனுடைய தீர்க்கதரிசியிடம் விசாரித்தனர், ஆனால் அவர்கள் தங்கள் தீமைக்கு ஏற்ப எதிர்மறையான பதில்களைப் பெற்றனர் ( *1ராஜாக்கள் 14:1-17; 2ராஜாக்கள் 1* )
✅ கர்த்தர் எசேக்கியாவின் ஜெபத்தைக் கேட்டு அவருக்கு *ஆயுள் அளவீட்டில்* 15 வருஷங்களை கூட்டிக்கொடுத்தார் மற்றும் *வாழ்கை தரத்தில்* அவர் நிம்மதியாகவும் பாதுகாப்பாகவும் வாழ்வார் என்றார். (வ. 6).
📍 எசேக்கியாவுக்கு 42 வயது இருக்கும் போது மனாசே பிறந்தார் ( அதாவது மனாசே கிருபையின் காலத்தில் பிறந்தார்).
🙋♂️ 15 ஆண்டுகளாக சமாதானமும் பாதுகாப்பாகவும் *இருந்ததினால், எசேக்கியா, தனது வீட்டையும் தேசத்தையும் ஒழுங்குபடுத்த முடிந்தது*.
💞அன்பான திருச்சபையே, இன்று கர்த்தருடைய தூதன் வந்து அதே செய்தியை: *"உமது வீட்டுக் காரியத்தை ஒழுங்குபடுத்தும்; நீர் மரித்துப்போவீர்..."* என்று நம்மிடம் சொன்னால், நமது பதில் என்னவாக இருக்கும் ❓❓
🙋♂️ நம்மில் சிலர் வங்கி இருப்பை சரிபார்ப்போம் 💰
🙋♂️ நம்மில் சிலர் சிறந்த மருத்துவர்களை அணுக விரும்புவோம். 💉💊
🙋♂️ நம்மில் சிலர் சொத்துக்களை குழந்தைகளுக்கு பிரித்து கொடுப்போம். 🚘🏘
🙋♂️🙋♀️ ஜெபத்தின் மூலம் *தேவனுடைய சித்தம், பலம் மற்றும் வல்லமையைத்* தேடுபவர்கள் மிகச் சிலரே 🛐
📍 காலதாமதமாகும் முன் நம் வீட்டுக் காரியத்தை ஒழுங்குபடுத்த முயற்சிப்போம் .
📍 மரணம் என்ற வார்த்தை பயமுறுத்துவதாகவும் வேதனை அளிப்பதாகவும் இருந்தாலும், நாம் அனைவரும் ஒரு நாள் அதை எதிர்கொள்ள வேண்டும். ஆனால் தேவனுடைய பிள்ளைகளுக்கு பயப்பட ஒன்றுமில்லை, ஏனெனில் *சாவு நமக்கு ஆதாயம்*.
தேவனுக்கே மகிமை 🙏
✍🏽 *மார்க் போஜே*
அருணாச்சல பிரதேசம், இந்தியா
தமிழாக்கம் ஜஸ்டஸ் ராஜேந்திரன்
-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x
🌟 *நீர் ஒருவரே தேவனாகிய கர்த்தர்* 🌟
❇️ *"இப்போதும் எங்கள் தேவனாகிய கர்த்தாவே, நீர் ஒருவரே தேவனாகிய கர்த்தர் என்று பூமியின் ராஜ்யங்கள் எல்லாம் அறியும்படிக்கு, எங்களை அவன் கைக்கு நீங்கலாக்கி இரட்சியும் என்று விண்ணப்பம்பண்ணினான்."* (2 இராஜாக்கள் 19:19).
💥 எசேக்கியா இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தரை நம்பினான். கர்த்தரின்மேல் வைத்த நம்பிக்கையிலே, *அவனுக்குப் பின்னும் அவனுக்கு முன்னும் இருந்த யூதாவின் ராஜாக்களிலெல்லாம் அவனைப்போல் ஒருவனும் இருந்ததில்லை.* கர்த்தர் அவனோடிருந்ததால் அவன் போகிற இடம் எங்கும் அவனுக்கு அனுகூலமாயிற்று. இஸ்ரவேல் ஜனங்கள் கர்த்தருடைய சத்தத்திற்குச் செவிசாய்க்காததால், அசீரியா ராஜா அவர்களை அசீரியாவுக்குச் சிறைபிடித்துக்கொண்டு போனான். *தேவனுடைய சத்தத்திற்கு செவிகொடாவிட்டால் தோல்வியும் அழிவும் நிச்சயம் வரும்.* ஆனால் எசேக்கியா அரசாண்ட யூதா அசீரியா ராஜாவைச் சேவிக்கவில்லை.
💥 பிறகு அசீரியா ராஜாவான சனகெரிப் யூதாவிலிருக்கிற அரணான சகல பட்டணங்களுக்கும் விரோதமாய் வந்து அவைகளைப் பிடித்தான். எசேக்கியா கர்த்தர்மேல் இருந்த நம்பிக்கையை இழந்து, அசீரியா ராஜாவுக்குப் பயந்து அவன் கேட்டபடி எசேக்கியா அவனுக்கு *வெள்ளியையும் பொன்னையும் கொடுத்தான்.* இது கர்த்தர்மேல் மெய்யான நம்பிக்கை வைத்திருந்த ஒரு ராஜா *கர்த்தரின் உதவியை நாடாமல் எடுத்த அவசரமும் மதியீனமுமான முடிவு!* எசேக்கியாவிடமிருந்து வெள்ளியையும் பொன்னையும் பெற்ற பிறகும், சனகெரிப் தனது முக்கியமான பிரதானிகளில் மூவரை *பெரிய சேனையோடே எருசலேமை முற்றுகையிட அனுப்பினான்.*
💥 *எசேக்கியா* தன் வஸ்திரங்களைக் கிழித்து, இரட்டு உடுத்திக்கொண்டு, *கர்த்தருடைய ஆலயத்தில் பிரவேசித்தான்.* எசேக்கியா இப்போது *ஞானமுள்ளவனாய் மனத்தாழ்மையோடும் விசுவாசத்தோடும் கர்த்தரிடம் சென்றான்.* அவன் தனது பிரதானிகளை *ஏசாயா தீர்க்கதரிசியிடம் அனுப்பி,* நிலைமையின் தீவிரத்தை விளக்கி, *கர்த்தரிடம் ஜெபிக்கும்படி* வேண்டிக் கொண்டான். அசீரியா ராஜாவின் பிரதானிகள் நிந்தித்ததை *கர்த்தர் கேட்டிருக்கிறார்* என்றும், *இஸ்ரவேல் ஜனங்களைக் காப்பாற்றுவார்* என்றும், *அசீரியா ராஜாவுக்கு நியாயத்தீர்ப்பைக் கொண்டுவருவார்* என்றும் ஏசாயா வெளிப்படுத்தினான். ஏசாயாவின் வார்த்தைகள்: *"உம்மை உறுதியாய்ப் பற்றிக்கொண்ட மனதையுடையவன் உம்மையே நம்பியிருக்கிறபடியால், நீர் அவனைப் பூரண சமாதானத்துடன் காத்துக்கொள்வீர்."* (ஏசாயா 26:3).
💥 அசீரியா ராஜா சனகெரிப் *பயமுறுத்தியும், கர்த்தரை நிந்தித்தும் எசேக்கியாவுக்கு நிருபத்தை அனுப்பினான்.* எசேக்கியாவின் விசுவாசம் புத்துயிர் பெற்றது, அவன் பயப்படவில்லை; அவன் கர்த்தரின் ஆலயத்திற்குப் போய், அந்த நிருபத்தைக் கர்த்தருக்கு முன்பாக விரித்து, *விசுவாசம் நிறைந்த ஒரு அழகான ஜெபத்தை* ஏறெடுத்தான். *கர்த்தர் ஒருவரே தேவன் என்பதை பூமியிலுள்ள எல்லா ராஜ்யங்களும் அறியும்படி, சனகெரிப்பின் கைக்கு நீங்கலாக்கித் தங்களை இரட்சிக்கும்படி கர்த்தரை வேண்டிக்கொண்டான்.*
💥 ஏசாயாவின் மூலம் தேவன் எசேக்கியாவை ஊக்குவித்து எருசலேமை இரட்சிப்பேனென்று வாக்களித்தார். *தம் நிமித்தமும் தம் தாசனாகிய தாவீதின் நிமித்தமும் தாம் எருசலேமை இரட்சிக்கும்படிக்கு, அதற்கு ஆதரவாயிருப்பதாகவும்* உறுதியளித்தார். நூற்றுக்கணக்கான ஆண்டுகளுக்குப் பிறகும், தேவன் *தாவீதுக்கு அருளிய வாக்குத்தத்தத்தை* நினைவு கூர்ந்தார் (2 சாமுவேல் 7:10-16). *தேவனின் உண்மைத்தன்மை ஈடு இணையற்றது.*
💥 அன்று இராத்திரியில் *கர்த்தருடைய தூதன்* புறப்பட்டு, அசீரியரின் பாளயத்தில் *லட்சத்தெண்பத்தையாயிரம்பேரைச் சங்கரித்தான். இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தரே மெய்யான தேவன் என்பதை நிரூபித்திருந்தார்.* சனகெரிப் தன் தேவனாகிய *நிஸ்ரோகின் கோவிலிலே பணிந்துகொள்ளுகிறபோது, அவனுடைய இரண்டு குமாரரால் கொல்லப்பட்டான்.* சனகெரிபின் தேவன் தன்மீது மிகுந்த நம்பிக்கை கொண்டிருந்த ஒரு பெரிய ராஜாவைக் *காப்பாற்ற முடியாது* என்பதைக் கர்த்தர் நிரூபித்தார்.
💥 நாம் *உபத்திரவங்களை* எதிர்கொள்ளும் போதெல்லாம், *தேவனுடைய சமூகத்திற்குச்* சென்று, நம்முடைய *பாரத்தையெல்லாம்* அவருக்கு முன்பாக வைத்து, *விசுவாசத்துடன் காத்திருக்க* வேண்டும். பேதுரு கூறுகிறான்: *"அவர் உங்களை விசாரிக்கிறவரானபடியால், உங்கள் கவலைகளையெல்லாம் அவர்மேல் வைத்துவிடுங்கள்."* (1 பேதுரு 5:7). பவுல் கூறுகிறான்: *“நீங்கள் ஒன்றுக்குங்கவலைப்படாமல், எல்லாவற்றையுங்குறித்து உங்கள் விண்ணப்பங்களை ஸ்தோத்திரத்தோடே கூடிய ஜெபத்தினாலும் வேண்டுதலினாலும் தேவனுக்குத் தெரியப்படுத்துங்கள். அப்பொழுது, எல்லாப் புத்திக்கும் மேலான தேவசமாதானம் உங்கள் இருதயங்களையும் உங்கள் சிந்தைகளையும் கிறிஸ்து இயேசுவுக்குள்ளாகக் காத்துக்கொள்ளும்.”* (பிலிப்பியர் 4:6-7). இந்த வார்த்தைகளின்படி நாம் நடக்கும்போது, *எந்தச் சூழ்நிலையையும் நம்பிக்கையோடும் தைரியத்தோடும் எதிர்கொண்டு, நம் தேவன் எவ்வளவு பெரியவர்* என்பதைக் காணலாம்.
🔹 *எந்தவொரு சூழ்நிலையையும் துணிச்சலுடன் எதிர்கொண்டு, நம் தேவன் எவ்வளவு பெரியவர் என்பதைக் காட்டும் அளவுக்கு நம்முடைய விசுவாசம் வலுவாக உள்ளதா?*
✅ நாம் கற்றுக் கொள்ளும் *பாடங்கள்*:
1️⃣ *தேவனுடைய சத்தத்திற்கு செவிகொடாவிட்டால் தோல்வியும் அழிவும் நிச்சயம் வரும்.*
2️⃣ *தேவன் தம்மை உறுதியாய்ப் பற்றிக்கொண்ட மனதையுடையவன் தம்மையே நம்பியிருக்கிறபடியால், அவனைப் பூரண சமாதானத்துடன் காத்துக்கொள்வார்.*
3️⃣ *தேவனின் உண்மைத்தன்மை ஈடு இணையற்றது.*
4️⃣ *தேவன் உங்களை விசாரிக்கிறவரானபடியால், உங்கள் கவலைகளையெல்லாம் அவர்மேல் வைத்துவிடுங்கள்.*
Dr. எஸ். செல்வன். சென்னை
-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x
*2 இராஜாக்கள் 18-20*
*விசுவாசத்தில்*
*நிலைத்திருப்போம்*..
கர்த்தர், எசேக்கியா ராஜாவின் கண்ணீரின் ஜெபத்தைக் கேட்டார்.
அவனைச் சுகப்படுத்த..
இயற்கை முறையையும் ..( அத்திப் பழ அடை) இயற்கைக்கு அப்பாற்பட்ட காரியத்தையும்
செய்தார்..
( 2 இரா. 20 அதி. )
உன் நாட்களோடே,
15 வருடங்கள் கூட்டிக் கொடுப்பேன் என்ற கர்த்தரிடம்..
எசேக்கியா..தான் குணமாவதற்கும்.. மூன்றாம் நாளிலே ஆலயத்திற்குப் போவதற்கும், ஒரு அடையாளத்தை அவரிடம் கேட்டபோது..சூரிய கடிகாரம் 10 பாகை பின்னிட்டு திரும்பும் அற்புதத்தைத் தேவன் அவனுக்காகச் செய்தார்.
கர்த்தர்,ஒரு நாளிலே.. எசேக்கியாவின் தகப்பன் ஆகாஸிடம்.. ஒரு அடையாளத்தைக் கேள் என்றதற்கு.. 'நான் தேவனைப் பரீட்சை செய்யமாட்டேன் என்றான்".
( ஏசா. 7 : 12 ).
எசேக்கியாவுக்காக, தேவன் அங்கே இயற்கையின் செயல்பாட்டையே மாற்றினதினால்.. அவன் புகழ் உலகமெங்கும் பரவியது..
எசேக்கியா சுகம் பெற்றதை விசாரிக்க.. பாபிலோன் ராஜா, தனது ஆட்களை அனுப்பினான். அந்நாட்களில் பாபிலோனியர் ,
அசீரியருக்கு எதிராக யுத்தத்திற்கு ஆயத்தமாகிக் கொண்டிருந்தார்கள்..
அதனால்,பாபிலோனியரின் நட்பைப் பெரிதாக நினைத்த எசேக்கியா, மகிழ்ந்து ..
தன்னைப் பார்க்க வந்தவர்களுக்கு..தனது பொக்கிஷங்கள், இரகசியங்கள் அனைத்தையும் காட்டினான்.
கல்தேயாவிலிருந்து கடந்து வந்தவர்களுக்கு…
கர்த்தரே தேவன் என்பதை எசேக்கியா கூறியிருக்க வேண்டும்.
அவர்தான் சர்வத்தையும் சிருஷ்டித்தவர்..தன்னால் சிருஷ்டிக்கப்பட்ட அனைத்தையும் தாங்கி நடத்துபவர்.
எல்லாம் முடிந்துவிட்ட தனக்குப் புது ஜீவனைத் தந்தவர் என்பதைத் ..தன் வாழ்வின் மூலம் வெளிப்படுத்தியிருக்க வேண்டும்.
ஒரு நாளிலே.. சேபாவின் ராஜஸ்தீரி வந்தபோது.. சாலொமோன், தன் சுய மகிமைகளைக் காட்டினது போல.. இங்கே எசேக்கியாவும், தேவனுடைய வல்லமை.. இரக்கம் ஆகியவற்றுக்குச் சாட்சி பகர.. தனக்குக் கிடைத்த சந்தர்ப்பத்தை விட்டுவிட்டு..
தன் பெருமைகளை வெளிப்படுத்தினான்.
( 2 இரா. 20 : 13 )
*இப்பொழுது பாபிலோனியர்*..
*யூதாவின் நட்பை* *நாடினாலும்…பிற்காலத்தில்*
*யூதாவைப் பாழாக்கி*..
*ஜனங்களைச்* *சிறைப்பிடிப்பார்களென்று*
*அறியாதிருந்தான்*..
( 2 இரா. 20 : 17 )
*அவனது விசுவாசம்.. அங்கே* *பரீட்சிக்கப்பட்டது*.
*எசேக்கியா, அதிலே தோற்றுப்* *போனான்*.
*தாழ்மையோடு ஜெபித்து*.. *அற்புதத்தைப் பெற்றவன்*, *அற்புதத்தைக் கொடுத்தவரை* *மறந்து*..
*மனமேட்டிமையடைந்தான்*.
நாமும்,பிரச்சனைகள் ..
போராட்டங்கள் வரும்போது.. தேவனிடம் அழுகிறோம்..நீரே அடைக்கலம் என்று.. அவரிடம் நம்மை அர்ப்பணிக்கிறோம்..
ஆனால், வாழ்வில் எல்லாம் நன்றாக இருக்கும்போது.. ஆண்டவரை மறந்து..
நம்மை நாமே ஆளுகை செய்ய ஆரம்பித்துவிடுகிறோம். இதுதான் ..மண்ணான மனிதனின் மாறாத பண்பு. பெருமை நம்மை அணுகாதபடி காத்துக்கொள்வோம்.
*இந்த உலகம், முக்கியப்படுத்தும்* *காரியங்களுக்கு.. நாம்* *முக்கியத்துவம் கொடுக்காமல்*.. *வேதம், எதை* *முக்கியப்படுத்துகிறதோ..* *அதன்படியே வாழ்வோம்*. *எல்லாச் சூழ்நிலைகளிலும்..* *கர்த்தரையே நம்புவோம்..* *அவரையே சேவிப்போம்..*
*விசுவாசத்திலே* *நிலைத்திருப்போம்*..
*ஆமென்*.🙏
மாலா டேவிட்
-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x
🙌🙏பதிலளிக்கப்பட்ட பிரார்த்தனை 🙏🙌*
2 இராஜாக்கள் 18 -20
☄️2 இராஜாக்கள் அத்தியாயங்கள் 18 மற்றும் 19 இல், தேவனிடம் எசேக்கியாவின் விண்ணப்பத்துக்கு பதிலளிக்கும் வகையில், தெய்வீக தலையீட்டின் குறிப்பிடத்தக்க காட்சியை நாம் காண்கிறோம்.
1️⃣ *அசீரிய ராஜாவின் அச்சுறுத்தல்*
🔹எசேக்கியா யூதாவின் நீதியுள்ள ராஜாவாக இருந்தார், அவருடைய ஆட்சியின் போது, சனகெரிப் மன்னன் தலைமையிலான சக்திவாய்ந்த அசீரியப் பேரரசு, எருசலேமைக் கைப்பற்றி அழிக்க அச்சுறுத்தியது.
🔹இந்த இக்கட்டான சூழ்நிலையை எதிர்கொண்ட எசேக்கியா, தேவனுடைய உதவியையும் தலையீட்டையும் நாடி, அவரிடம் ஜெபத்தில் திரும்பினார்.
2️⃣ *எசேக்கியாவின் உருக்கமான விண்ணப்பம்*
🔸தேவனிடம் எசேக்கியாவின் விண்ணப்பம் இதயப்பூர்வமானது மற்றும் நேர்மையானது.
🔸அவர் சனகெரிப் மன்னரின் மிரட்டல் கடிதத்தை ஆலயத்தில் ஆண்டவர் முன்னிலையில் பரப்பி, தனது கவலைகளையும் அச்சங்களையும் கொட்டினார்.
🔸அசீரியர்கள் பல தேசங்களையும் அவர்களுடைய கடவுள்களையும் அழித்ததை உணர்ந்து, தேவனுடைய இறையாண்மையையும் வல்லமையையும் அவர் ஒப்புக்கொண்டார்.
🔸எசேக்கியா தம் மக்களைக் காப்பாற்றும்படி தேவனிடம் மன்றாடினார், தேவன் தம்முடைய கெளரவத்தைப் பாதுகாத்து, அவர் தேர்ந்தெடுத்த நகரமான எருசலேமைப் பாதுகாக்க வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தினார்.
3️⃣ *தெய்வீக தலையீடு*
🔺எசேக்கியாவின் வேண்டுகோளுக்கு பதிலளிக்கும் விதமாக, ராஜாவுக்கு உறுதியளிக்கவும் அவருடைய செய்தியை வழங்கவும் தேவன் ஏசாயா தீர்க்கதரிசியை அனுப்பினார்.
🔺அசீரிய ராஜா எருசலேமுக்குள் நுழைய மாட்டார், அம்பு எய்யமாட்டார் என்ற தேவனுடைய வாக்குறுதியை ஏசாயா தெரிவித்தார்.
🔺தனக்காகவும், தம்முடைய தாசனாகிய தாவீதுக்காகவும், தேவன் எருசலேமைப் பாதுகாப்பதாக எசேக்கியாவுக்கு உறுதியளித்தார்.
4️⃣ *கிருபையின் அற்புதம்*
▪️அவரது வார்த்தையின்படி, தேவன் ஒரு அதிசயமான வழியில் தலையிட்டார். அன்றிரவு, கர்த்தருடைய தூதன் வெளியே சென்று, 1,85,000 அசீரிய வீரர்களைக் கொன்று, அவர்களுடைய படைகளை அழித்தார்.
▪️அடுத்த நாள் காலை சனகெரிப் அரசர் விழித்தபோது, அவருடைய படைகள் செத்த பிரேதத்தைப் போல கிடப்பதைக் கண்டு வெட்கத்தால் பின்வாங்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.
♥️ *வாழ்க்கை பாடங்கள்*
💥தேவனிடம் எசேக்கியா செய்த வேண்டுகோள், கடவுள்மீது அவருக்கு இருந்த அசைக்க முடியாத நம்பிக்கையையும், அவருடைய பற்றாக்குறையை ஒப்புக்கொண்டதையும் வெளிப்படுத்தியது.
💥தாழ்மையுடன், அவர் தெய்வீக தலையீட்டை நாடி, உண்மையான சக்தி மற்றும் விடுதலையின் ஆதாரத்தை நோக்கி திரும்பினார்.
💥தேவன், தம்முடைய அளவற்ற ஞானத்தினாலும் கருபையினாலும், அவருடைய வேண்டுகோளுக்குப் பதிலளித்து, எருசலேமை அழிவிலிருந்து காப்பாற்றினார்.
💥உண்மையான இதயத்துடன் நாம் தேவனை கூப்பிடும்போது, அவர் நமக்குச் செவிசாய்க்கிறார், பெரும்பாலும் நம் எதிர்பார்ப்புகளை மீறும் வழிகளில் நமக்கு உதவ தயாராக இருக்கிறார் என்பதற்கு எசேக்கியாவின் கதை ஒரு சான்று.
*‼️தேவன் நமக்கு ஆபத்துக்காலத்தில் அநுகூலமுமான துணையானவர்‼️*
பிரின்சஸ் ஹட்சன்
தமிழாக்கம் இன்னிசை செல்வி மும்பை
-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x
*🪢சிப்பிக்குள் முத்து🪢*
இன்றைய வேத வாசிப்பு பகுதி -
*2 இராஜா - 18 - 20*
*💦முத்து சிதறல் : 116*
💠🥏💠🥏💠🥏
*எசேக்கியா - மோசே பண்ணியிருந்த வெண்கல சர்ப்பத்தை உடைத்து....*
அதற்கு *"நிகுஸ்தான்*
என்று பேரிட்டான்.
*(2 இராஜா - 18 : 4)*
🥏💠🥏💠🥏💠
*✍️ஒரு பொல்லாத தகப்பனுக்கு நல்ல பிள்ளை பிறக்க கூடுமா❓️*
*கூடும்*
என்பதே பதில்.
ஆம்,
*ஆகாஸ் என்னும் பொல்லாத அரசனுக்கு மகனாக பிறந்த "எசேக்கியா"* என்னும் யூதா அரசன் இராஜ பதவிக்கு வந்தவுடன் , இஸ்ரயேல் நாட்டில் புரையோடி கிடந்த விக்கிரக வழிபாட்டு முறைமைக்கு விரோதமாக....
*ஒரு நல்ல மறுமலர்ச்சியின் ஊற்றாக பிரவாகித்து எழுந்த, சிறந்த மறுமலர்ச்சியாளன்என்றால்,*
அது மிகை ஆகாது.
*சேற்றில் முளைத்த செந்தாமரை போன்று* தனித்துவமிக்கவராகதுணிவோடு செயல்பட்டு,
🍒மேடைகளை அகற்றி,
🍒விக்கிரக தோப்புக்களை வெட்டி,
🍒சிலைகளை தகர்த்து,
*"அடிப்படை சீர்திருத்தங்களுக்கு" வழிவகுத்து நின்ற மன்னன் இவர்.*
*இவருக்கு முன் எழுந்த யூதா அரசர்கள் பலரை குறித்து எமக்கு எழுதி கொடுக்கப்பட்ட குற்றச்சாட்டு நகல் என்னவெனில் :* 🌿"மேடைகளோ தகர்க்கப்படவில்லை, 🌿ஜனங்கள் இன்னும் மேடைகளில் தான் பலியிட்டு வந்தனர்" என்னும் தகவல் அறிக்கை.
*[இது சுத்தமாக இறை கட்டளைக்கு மாறான வழிபாட்டு முறைமையாகும்.]* (எண்ணா - 33 : 52) ( 1இராஜா - 3 : 2 :, 15 : 14 :, 22 : 43 :, 2 இராஜா - 12 : 3 :, 14 : 4 :, 15 : 4,35 :, 16 : 4 போன்ற வசனங்கள்)
*இந்த குறை சாலமன் காலத்திற்கு முன்பு இருந்தே ஆரம்பித்து, எசேக்கியா காலம் வரை கள்ளங் கபடமின்றி மக்கள் மத்தியில் செயல்பாட்டில் இருந்தது.*
ஒரு அரசன் செய்யவேண்டிய முக்கிய பணியினை அநேகர் செய்யாமல் விட்டு விட்டிருந்தனர். காரணம்.... வெகு திராளான ஜனங்கள் அதனை வழி வழியாக ஏற்று வாழ்ந்து வந்த நிலை, மற்றும் அதற்கு பண்பாடு என்னும் நாமகரணம் சூட்டி வாழ்ந்து வந்திருந்தனர். *இராஜாக்களால் அவ்வற்றை ஒன்றும் செய்ய இயலாமல், அவர்கள் இவ்விஷயத்தில் செயலற்று நின்றதுமல்லாமல் தாங்களும் போய் அதே மேடையில் தூபங்காட்டி, பலியிட்டு வந்தனர்.*
கர்த்தரும் அவர்களை அப்படியே விட்டுவிட்டார்.
*🍏எசேக்கியா இராஜ பதவி பெற்று, அரசன் ஆகியவுடன் முதலாவது "அடிப்படை சீர்திருத்த நிகழ்வுகளை" நிகழ்த்துகிறார்.* மேடைகள், விக்கிரக தோப்புகள், சிலைகள் யாவும் உடைத்து நொறுக்கப்பட்டு தேசத்தில் இருந்து..... இவரது தலைமைத்துவத்தின் கீழ் அகற்றப்படுகிறது.
*ஆவியானவரின் உள் வெளிப்பாடு இவருக்கு உண்டாகியது.* இவரது *"இதயத்தில் ஓர் உள்ளோளி பிரகாசித்தது"* எனலாம்.
ஆகையால் அடிப்படை சீர்திருத்தத்திற்காக எல்லா அந்நிய சமய வழக்க வழிபாட்டு முறைமைகளை தலை கீழாக கவிழ்த்து நின்றார்.
🍒இவர் செய்த இன்னொரு அதி முக்கிய செயல் என்னவெனில் , *மோசேயின் காலத்தில் உயர்த்தப்பட்ட வெண்கல சர்ப்பத்தை*, இஸ்ரயேல் மக்கள் நினைவு சின்னமாக பாது காத்து வந்திருந்தனர். *இஸ்ரயேலரின் வழிபாட்டு முறைமையில் / தொழுகையில்* இந்த *சர்ப்ப வணக்கம்* முக்கிய பங்கு ஆற்றி வந்தது. ஆகையால் *சர்ப்ப வணக்கத்திற்கு முற்று புள்ளி வைக்கும்படி, அந்த வெண்கல சர்ப்பத்தை, உடைத்து, தூள் தூளாக்கி போட்டு,* அதற்கு *நிகுஸ்தான்** என்னும் பெயரிட்டார் எசேக்கியா மன்னன்.
🔰🎈🔰🎈🔰🎈
*இந்த சர்ப்ப வணக்கம் தவறு என்னும் உள் வெளிப்பாடு / உள்ளோளி இந்த எசேக்கியாவுக்கு மட்டுமே உண்டாகியது.* நிகுஸ்தான் என்றால் இரண்டு அர்த்தங்கள் உண்டு.
*ஒன்று* வெண்கலம்,
மற்றொன்று
*பாம்பு.* அப்படியென்றால் *இந்த பாம்பு வெறும் வெண்கலம் அவ்வளவே என்றார் எசேக்கியா.* ஆனால் ஜனங்கள் மத்தியில், இவர் மோசேயையே அவமதிப்பு செய்ததாக பலர் உள்ளுக்குள்ளே புளங்காகிதம் அடைந்திருப்பர். எசேக்கியா அதனை ஒரு பொருட்டாகவே எண்ணாமல், உதாசீனபடுத்தி, மக்களை மெய் தேவ வழிபாட்டு முறைமைக்கு நேராக்கும் உத்தம பணியினை ஆற்றி நின்றார்.
🌹எசேக்கியாவின் இந்த சீர்திருத்த நடவடிக்கைகளை குறித்து குற்றம் பேசியது ஒரு *"ஆசீரிய நாவு".*
*ரப்சாக்கே என்னும் ஒருவன் மூலம் சாத்தான் பேசினான்.* இஸ்ரவேல் மக்களிடம் சாத்தான் இந்த அசீரிய அரசனின் தளபதி மூலம் பேசியது : *"எங்கள் தேவனாகிய கர்த்தரை நம்புகிறோம் என்று சொல்லுவீர்களானால், அவருடைய மேடைகளையும் அவருடைய பலிபீடங்களையும் அல்லவோ எசேக்கியா அகற்றி, யூதாவையும், எருசலேமையும் நோக்கி,"எருசலேமில் இருக்கிற இந்த பலிபீடத்திற்கு முன் பணியுங்கள் என்றானே!* ( 18 : 22 ) என்று சொல்லி தன் பக்கமாக மக்கள் கவனத்தை ஈர்க்க முயன்றான். *எவ்வளவு நயமான பேச்சு* என்பதை கவனிப்போம்.
எசேக்கியா என்ன கர்த்தரின் பலிபீடத்தையா அகற்றினார்❓️ இல்லவே, இல்லை. அவர் அகற்றியது எல்லாம் அந்நிய தெய்வ பழக்க வழக்கங்களுக்கு ஒத்து இருந்த நினைவு சின்னங்களைத்தான் என்பதை நாம் மறவாமல் ஏற்று கொள்ளவேண்டும்.
*உடைக்கப்பட்டவற்றில் மோசே காலத்தில் உண்டு பண்ணப்பட்டிருந்த வெண்கல சர்ப்ப உருவ சின்னமும் அடக்கம் என்பதை மறவாதிருப்போம்.*
*வசனத்திற்கு மாறான விதத்தில் நாம் வழி வழியாக பின் பற்றி வரும் பலவற்றை நாம் நமது வாழ்வினின்று நிக்கிரகம் பண்ணியே ஆக வேண்டும், அந்த சீர்திருத்த வாதி எசேக்கியாவைப்போல.* அடிப்படையான சீர்திதிருத்தத்திற்கு வித்திட்டு, அதனை பேணி பாதுகாத்து வந்த ஒரு விசுவாச வீரனோடு பாருங்கள் எதிரி படை தளபதியின் நாவின் மூலம் சாத்தான் நன்கு விளையாடி பார்த்தும் தோற்று தான் போனான். *எசேக்கியாவின் வைராக்கியம், மெய் தேவ பக்தியின் சாராம்சமாக திகழ்கிறது.*
எவறொருவர் வசன அடிப்படையிலான ஒரு மறுமலர்ச்சியை உண்டு பண்ணுகின்றாரோ , அப்படிப்பட்டோர் என்றுமே சாத்தானின் கையாட்களால் மனதளவில் துன்புருவர் என்பதினை இந்த 2 இராஜாக்கள் 18ம் அதிகாரம் எமக்கு போதிக்கிறது.
தங்களது பொல்லா நாவின் வாயிலாக எழும் சொர்க்கணை நபர்களை எம்மை கல்லெறிபவர்களை, அல்லது சொர்க்களால் எம்மை காயப்படுத்துபவர்களை எசேக்கியா கையாண்டது போலவே நாமும் கையாள கற்றுக்கொள்ளுவோம்.
*அப்படி பட்டோருக்கு பிரதி உத்திரம் சொல்லாமல் மவுனம் காப்பதே எமது முதிர்ச்சிக்கான அறிகுறி.*
( 18 : 36)
*🌈Sis. Martha Lazar*
NJC, KodaiRoad.
Thanks for using my website. Post your comments on this