==============================
2 KINGS : 16 - 17 Bible Study in Tamil & English
==============================
These are the reasons God permitted Israel to go into captivity:*
*1. Disobeyed God. 2. Doubted God. 3. Defied God.*
⚠️II Ki.Ch.17- *We come now to a sobering and sad section of Scripture, for in chapter 17, we see the nation of Israel—the ten northern tribes—carried away into captivity… These are the reasons God permitted Israel to go into captivity:*
1️⃣ *Disobeyed God* (v. 13)—“Yet the LORD testified against Israel, and against Judah, by all the prophets, and by all the seers, saying, Turn ye from your evil ways, and keep my commandments and my statutes, according to all the law which I commanded your fathers, and which I sent to you by my servants the prophets.”
*2️⃣Doubted God* (v. 14, see also 2 Chron. 36:15–16)—“Notwithstanding they would not hear, but hardened their necks, like to the neck of their fathers, that did not believe in the LORD their God.”
*3️⃣ Defied God* (v. 15) in that they refused to observe the sabbatic year for 490 years—“To fulfil the word of the LORD by the mouth of Jeremiah, until the land had enjoyed her sabbaths: for as long as she lay desolate she kept sabbath, to fulfil threescore and ten years” (2 Chron. 36:21).
*The story of this nation is the story of every individual.*
📖II Ki.16:6- *In this verse the word Jew is used for the first time in the Bible.* There are those who hold that Jew applies only to those of the tribe of Judah. However, we notice that here it refers to folk in the northern kingdom of Israel—in fact, up on the border of Syria. As we see, all twelve tribes were given that name.
💪🏼II Ki.16:16-20- Chapter 16 concludes with the death of Ahaz and the record of the fact that his son Hezekiah reigned after him. *It is an amazing thing that a godless man like Ahaz would have a son like Hezekiah. Although he came from an ungodly father, Hezekiah would be a godly king.* Hezekiah would do as much to restore the temple as his father did to destroy it. *And thus, God’s work would continue in spite of the wickedness of man.*
Jaya Pradeep-Kodaikanal.
-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x
2 Kings 16,17
*WHAT A GOD WE SERVE* ❗️
*God does not want His children to have fellowship with unbelievers* ‼️
Ahaz sent messengers to king of Assyria, saying, “I am your servant and your son. Come up and save me from the hand of the king of Syria and Israel"(2 Kings 16:7)
💥 Do not be unequally yoked together with unbelievers. (2 Cori 6:14-16)
💥 What fellowship has righteousness with lawlessness❓
💥 What communion has light with darkness❓
💥 What part has a believer with an unbeliever❓
🙏🙏 Even if you have to stand alone, do not have fellowship with that of the world. *Lord will stand for you if you take a stand for the Lord.*
Usha
-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x
*2 இராஜாக்கள்: 16-17*
💐💐💐💐💐💐💐💐
*நீங்கள் உங்கள் பொல்லாத வழிகளை விட்டுத்திரும்பி நான் உங்கள் பிதாக்களுக்குக் கட்டளையிட்டதும், என் ஊழியக்காரராகிய தீர்க்கத்தரிசியைக் கொண்டு உங்களுக்குச் சொல்லி யனுப்பினதுமான நியாயப்பிரமாணத்தின் படியெல்லாம் என் கற்பனைகளையும் என் கட்டளைகளையும் கைக்கொள்ளுங்கள் என்று கர்த்தர் எச்சரித்துக்கொண்டிருந்தும்*
*அவர்கள் செவிகொடாமல், தங்கள் தேவனாகிய கர்த்தர் மேல் விசுவாசியாமற்போன கடினக் கழுத்துள்ள தங்கள் பிதாக்களைப்போல், தங்கள் கழுத்தைக் கடினப்படுத்தி*,
*ஆகையால் கர்த்தர் இஸ்ரவேலின் மேல் மிகவும் கோபமடைந்து, அவர்களைத் தம்முடைய முகத்தை விட்டு அகற்றினார்*.
(2 இராஜா: 17: 13,14,18)
★கர்த்தர் மிகுந்த பொறுமையோடு பலமுறை பலவிதங்களில் எச்சரித்தும் மக்கள் கேட்கவில்லை. எனவே அவர்களின் பாவங்களுக்கேற்ற பலனை அனுபவிக்கும்படி விட்டு விட்டார்.
★கர்த்தர் ஏதாவது ஒன்றைக் குறித்து எச்சரித்தால் உடனடியாக அவருக்குக் கீழ்ப்படியவேண்டும்.
இன்று நாம் வாழும் சூழ்நிலை எப்படியிருக்கிறது ?
★பாவ அசுத்தத்தில் உழன்று கொண்டு, எதைப்பற்றியும் கவலை கொள்ளாமல் துணிகரமாக துன்மார்க்க ஜீவியம் செய்பவர்கள் உண்டு அல்லவா?
★நியாயப் பிரமாணங்களைக் கடைபிடித்தால் மட்டும் போதாது; ஆவியின் கனிகளும் நம் வாழ்க்கையில் காணப்படவேண்டும்.
*அடிக்கடி கடிந்து கொள்ளப்பட்டும் தன் பிடரியைக் கடினப்படுத்துகிறவன் சகாயமின்றி சடிதியில் நாசமடைவான்*.
(நீதி: 29:1)
✍️ Bhavani Jeeja Devaraj,
Nagercoil
-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x
BRB (2 இராஜாக்கள் 17) *அசீரியர்கள் வந்து, சமாரியாவைப் கைப்பற்றி இஸ்ரவேலர்களை சிறையாகக் கொண்டு சென்றனர்.*
அத்தியாயம் 17 இல், கிறிஸ்துவுக்கு சுமார் 730 ஆண்டுகளுக்கு முன்பு, இஸ்ரவேல் சிறைப்பிடிக்கப்பட்டதைப் பற்றி வாசிக்கிறோம். அசீரியர்கள் வந்து, சமாரியாவைக் கைப்பற்றி இஸ்ரவேலர்களை சிறையாகக் கொண்டு சென்றனர்.
இந்த அசீரியர்களைப் பற்றி 17:33 இல் எழுதப்பட்டுள்ளதாவது: அவர்கள் கர்த்தருக்குப் பயந்தும், மற்றும் தங்கள் சொந்த தெய்வங்களைச் சேவித்தும் வந்தார்கள். "இந்த போலியான" கர்த்தருடைய பயம்தான் இன்று கிறிஸ்தவ மண்டலத்தின் பெரும்பகுதியிலும் காணப்படுகிறது.
இன்று பெரும்பாலான கிறிஸ்தவர்கள் தேவனிடம் ஒரு குறிப்பிட்ட மரியாதை வைத்திருக்கிறார்கள், ஆனால் உண்மையில் தங்கள் சொந்த பணம், அவர்களின் வேலை, அவர்களின் சொந்த மரியாதை, பூமிக்குரிய அந்தஸ்து, தேவாலயத்தில் அவர்கள் வகிக்கும் பதவி போன்ற கடவுள்களுக்கு சேவை செய்கிறார்கள்.
ராம்பாபு
தமிழாக்கம் இன்னிசை செல்வி மும்பை
-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x
❎ *கர்த்தருக்குப் பயந்தும், தங்கள் விக்கிரகங்களைச் சேவித்தும் வந்தார்கள்* ❎
♦️ *அப்படியே அந்த ஜாதிகள் கர்த்தருக்குப் பயந்தும், தங்கள் விக்கிரகங்களைச் சேவித்தும் வந்தார்கள்; அவர்கள் பிள்ளைகளும் அவர்கள் பிள்ளைகளின் பிள்ளைகளும் தங்கள் பிதாக்கள் செய்தபடியே இந்நாள்வரைக்கும் செய்துவருகிறார்கள்* (2 ராஜாக்கள் 17:41).
🔸 இஸ்ரவேல் ஜனங்கள் கர்த்தர் தங்களுக்கு முன்பாக துரத்தின ஜாதிகளின் வழிகளில் நடந்தார்கள். அவர்கள் கர்த்தருக்கு விரோதமாக இரகசியமான காரியங்களைச் செய்தார்கள். *எல்லாவற்றையும் காண்கிற தேவனுக்கு* (ஆதியாகமம் 16:13) விரோதமாக இரகசியமாக பாவம் செய்யலாம் என்று நினைத்தார்கள் . அவர்கள் பொய்யான தெய்வங்களை வணங்கினர். கர்த்தர் தம்முடைய அன்பினால், அவர்களுடைய தீய வழிகளை விட்டுத் திரும்பும்படி அவர்களை எச்சரிக்க தீர்க்கதரிசிகளை அனுப்பினார். ஆனால் அவர்கள் கேட்கவில்லை. எனவே, இஸ்ரவேல் ஜனங்கள் தங்கள் சொந்த தேசத்திலிருந்து அசீரியாவுக்குக் கொண்டு செல்லப்பட்டனர். *"அடிக்கடி கடிந்துகொள்ளப்பட்டும் தன் பிடரியைக் கடினப்படுத்துகிறவன் சகாயமின்றிச் சடிதியில் நாசமடைவான்."* (நீதிமொழிகள் 29:1) என்று வேதம் போதிக்கிறது.
🔸 அசீரியா ராஜா பாபிலோனிலிருந்தும் மற்ற நாடுகளிலிருந்தும் ஜனங்களைக் கொண்டு வந்து இஸ்ரவேலர்களுக்குப் பதிலாக சமாரியாவின் பட்டணங்களில் குடியேற்றினான். முதலில், இந்த ஜனங்கள் கர்த்தரை ஆராதிக்கவில்லை. கர்த்தர் அவர்கள் நடுவில் சிங்கங்களை அனுப்பினார், அது அவர்களில் சிலரைக் கொன்றது. *இஸ்ரவேல் தேசத்தில் வாழும் ஜனங்கள், மற்ற தேசங்களிலிருந்து வந்திருந்தாலும், தமக்குப் பயப்பட வேண்டும் என்று தேவன் விரும்பினார்.* இஸ்ரவேல் ஜனங்கள் மட்டுமல்ல, இஸ்ரவேல் தேசமும் கர்த்தருக்காக பரிசுத்தமாக்கப்பட வேண்டும்.
🔸 அசீரியா ராஜா சமாரியாவிலிருந்து கொண்டு செல்லப்பட்ட ஆசாரியர்களில் ஒருவனைக் கொண்டு வந்து, கர்த்தரைக் கனம்பண்ணுவது எப்படி என்பதை ஜனங்களுக்குக் கற்பித்தான். ஆனால் ஒவ்வொரு ஜாதியும் தங்கள் சொந்த தெய்வங்களை உருவாக்கி, அவர்கள் வாழ்ந்த நகரங்களில் வைத்து, சேவித்தனர். இவ்வாறு, *இந்த ஜனங்கள் கர்த்தருக்குப் பயந்தும், தங்கள் விக்கிரகங்களைச் சேவித்தும், இரட்டை வாழ்க்கை வாழ்ந்தார்கள்.* இது தலைமுறை தலைமுறையாகக் கடைப்பிடிக்கப்பட்டு வந்தது.
🔸 இன்றைய நாட்களில், ஜனங்கள் தேவாலயத்திற்கு வந்து தங்கள் வாழ்க்கையை தேவனுக்கு அர்ப்பணிக்கிறார்கள். அவர்கள் வீட்டிற்குத் திரும்பியதும், சிலர் தங்கள் வாழ்க்கையை மற்ற விஷயங்களுக்கு அர்ப்பணிக்க அல்லது சில வகையான பாவச் செயல்களில் ஈடுபடத் திரும்புகிறார்கள். அவர்கள் பாவத்தையும் இந்த உலகத்தின் பொருட்களையும் தங்கள் உண்மையான எஜமானர்களாக இருக்க அனுமதிக்கிறார்கள். *தேவனுக்காக வாழ்வதாகக் கூறியும், அவர்கள் தங்கள் முந்தைய வாழ்க்கை முறைக்குத் திரும்புகிறார்கள். இது இரட்டை வாழ்க்கை முறை அல்லவா?*
🔸 *"இரண்டு எஜமான்களுக்கு ஊழியஞ்செய்ய ஒருவனாலும் கூடாது; ஒருவனைப் பகைத்து, மற்றவனைச் சிநேகிப்பான்; அல்லது ஒருவனைப் பற்றிக்கொண்டு, மற்றவனை அசட்டைபண்ணுவான்; தேவனுக்கும் உலகப்பொருளுக்கும் ஊழியஞ்செய்ய உங்களால் கூடாது."* (மத்தேயு 6:24) என்று இயேசு அறிவித்தார். நாம் ஒரே நேரத்தில் தேவனுக்கும் உலகத்துக்கும் சேவை செய்ய முடியாது. ஏதாவதொன்று தேர்ந்தெடுக்கப்பட வேண்டும். விசுவாசிகளாகவும் பாவிகளாகவும் இரட்டை வாழ்க்கையைத் தொடர்ந்து நடத்துவதை நிறுத்த வேண்டும்.
🔸 *"ஒருவன் கிறிஸ்துவுக்குள்ளிருந்தால் புதுசிருஷ்டியாயிருக்கிறான்; பழையவைகள் ஒழிந்து போயின, எல்லாம் புதிதாயின."* (2 கொரிந்தியர் 5:17) என்று வேதம் போதிக்கிறது. நாம் இயேசுவில் புதிய புதுசிருஷ்டியாயிருக்கிறோம். எனவே நாம் பழைய வாழ்க்கை முறையை விட்டு விலகி, அதில் தொடராமல் இருக்க வேண்டும்.
🔹 *விசுவாசியாகவும் பாவியாகவும் இரட்டை வாழ்க்கை வாழாமல் கவனமாக இருக்கிறோமா?*
🔹 *தேவனுக்கு மட்டுமே ஊழியம் செய்யும் ஒரு புதுசிருஷ்டியாக நம்மை உருவாக்க ஆண்டவர் இயேசுவை அனுமதிக்கிறோமா?*
✅ நாம் கற்றுக் கொள்ளும் *பாடங்கள்*:
1️⃣ *எச்சரிக்கப்படும்போது, நாம் நம் இருதயத்தைக் கடினப்படுத்தாமல், உடனடியாக மனந்திரும்ப வேண்டும்.*
2️⃣ *விசுவாசிகளாகவும் பாவிகளாகவும் இரட்டை வாழ்க்கை நடத்துவதை நாம் நிறுத்த வேண்டும்.*
3️⃣ *தேவனுக்கு மட்டுமே ஊழியம் செய்யும் ஒரு புதுசிருஷ்டியாக நம்மை உருவாக்க ஆண்டவர் இயேசுவிடம் நம்மை அர்ப்பணிக்க வேண்டும்.*
Dr. எஸ். செல்வன். சென்னை
-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x
இஸ்ரவேல் புத்திரர் இரகசியத்தில் செய்த கர்த்தருக்கு விரோதமான பாவங்கள்.
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
2 இராஜாக்கள் 17: 9. *செய்ய தகாத காரியங்களை இஸ்ரவேல் புத்திரர் தங்கள் தேவனாகிய கர்த்தருக்கு விரோதமாக இரகசியத்தில் செய்தார்கள்.*
1. ஆம், இஸ்ரவேல் புத்திரர் இரகசியமாய் எதை செய்தார்கள் ?
*கர்த்தருக்கு விரோதமாக, செய்ய தகாத காரியங்களை செய்தார்கள். அதாவது பாவம் செய்தார்கள.*
2. *இஸ்ரவேல் ஜனங்கள் எகிப்தின் அடிமைதனத்திலிருந்து விடுவிக்கப்பட்டவர்கள் தான். ஆனால் இவர்களிடம் கர்த்தருக்கு விரோதமான, செய்ய தகாத இரகசிய பாவங்கள் இருந்தது. இன்று நாமும் கூட இரட்சிக்கப் பட்டவர்களாயிருக்கலாம். ஆனால் நமக்குள் இந்த இரகசிய பாவங்கள் காணப்படுகிறதா?* நம்மை நாமே ஆராய்ந்து பார்ப்போம்.
3. *பிறனை இரகசியமாய் அவதூறு செய்கிறவனை சங்கரிப்பேன்* என கர்த்தரே கூறுகிறார். சங்கீதம் 101: 5. ஆம், *பிறரை இரகசியமாய் அவதூறு செய்யும், பிறரை அற்பமாய் எண்ணும் பாவம்* ஆகியவைகள் நம்மிலிருக்கிறதா?
*புறங்கூறுதல், கோபம், எரிச்சல், வைராக்கியம், கசப்பு, மன்னியாமை, பொறாமை, பெருமை, கபடு, விக்கிரக ஆராதனையாகிய பொருளாசை, பலவித இச்சைகள்* யாவும் நம் இருதயத்தில் இரகசியமாய் செய்யும் பாவங்களே. மட்டுமல்ல, *ஒரு ஸ்தீரியை இச்சையோடு பார்த்தாலே, அவளோடு விபசாரம் செய்தாயிற்று* என இயேசு சொன்னார் அல்லவா?
*கவலை, பயம், சந்தேகம், அ விசுவாசம்* ஆகியவைகள் கூட நம் இருதயத்தில் இரகசியமாய் மறைந்திருக்கிற செய்ய தகாத பாவங்களே.
4. ஆகவே *நம்மை நாமே ஆராய்ந்து பார்த்து, இத்தகைய இரகசியமாய் இருதயத்தில் மறைந்திருக்கிற செய்ய தகாத பாவங்களை அறிக்கையிட்டு, நம் இருதயத்தை இயேசுவின் இர த்தத்தால் பாவமற கழுவி சுத்திகரிப்போம். இயேசுவே இருதயத்தில் இரகசியமாய் மறைந்திருக்கிற பாவங்களை என்னை விட்டு அகற்றும். தேவனே சுத்த இருதயத்தை என்னிலே சிருஷ்டியும் என ஒவ்வொரு நாளும் விண்ணப்பித்து, பரிசுத்தமாய் வாழ கர்த்தர் தாமே நமக்கு உதவி செய்வாராக*.
அப்போது தான் *இயேசுகிறிஸ்து நம் இருதயத்தில் வாசமாயிருப்பார். ஆவியானவர் நமக்குள்ளே உலாவுவார்*. ஆமென். அல்லேலூயா.
*Dr.Padmini Seĺvyn*
-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x
📗 *சிறிய குறிப்பு* 📗
🍂 *சமாரியாவில் நடந்த பெரிய கலவை* 🍂
இஸ்ரவேலர்கள் தேவனுடைய கட்டளைகளைக் கடைப்பிடிக்காததால் ஆண்டவர் கோபமடைந்தார். எனவே எதிரிகளின் கைகளில் அவர்களை ஒப்புக்கொடுத்தார். *இஸ்ரவேலர்கள் தங்கள் தேசத்திலிருந்து அசீரியாவுக்குக் கொண்டு செல்லப்பட்டனர்*.
அசீரியாவின் ராஜா சமாரியாவின் நகரங்களை *பாபிலோன், கூத்தா, ஆபா, ஆமாத் மற்றும் செப்பவார்வாயிம்* மக்களைக் கொண்டு நிரப்பினான். ஆரம்பத்தில் இவர்கள் தேவனுக்கு அஞ்சவில்லை. எனவே *கர்த்தர் அவர்களிடையே சிங்கங்களை அனுப்பினார்.* அவர்களில் சிலர் சிங்கங்களினால் கொல்லப்பட்டனர்.
இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தருடைய வழிகளையும் கற்பனைகளையும் கற்பிப்பதற்காக அசீரியாவின் ராஜா சமாரியாவில் ஒரு ஆசாரியனைக் குடியமர்த்தினான். ஆனால் எதிர்பாராத ஒன்று நடந்தது. *சமாரியாவின் குடிகள் கர்த்தருக்குப் பயந்தார்கள், ஆனால் தங்கள் சொந்த தெய்வங்களையும் சேவித்தார்கள்* (2 இரா 17:33).
சிங்கங்கள் அவர்களை இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தருக்குப் பயப்பட வைத்தது. ஆனால் தங்களுடைய மற்ற தெய்வங்களையும் அவர்கள் சேவை செய்தார்கள். *"என்னைத் தவிர வேறு தெய்வங்கள் உங்களுக்கு இருக்கக்கூடாது (யாத். 20:3).* என்ற தேவனுடைய கட்டளையே இஸ்ரவேலர்களும் சமாரியாவின் புதிய குடியிருப்பாளர்களும் இவ்வாறு மீறினர். இந்த விஷயத்தில் எந்த சமரசமும் இல்லை. நமக்கும் இது பொருந்தும் மற்றும் மிக முக்கியமானது.
_திருமதி ஷீலா ஜெபக்குமார்_ ✍🏼
-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x
2 இராஜாக்கள் 16 - 17*
*Where Are You Going?*
*எங்கே போகிறாய்?*
*2 இராஜாக்கள் 17:18* -> _ஆகையால் கர்த்தர் இஸ்ரவேலின்மேல் *மிகவும் கோபமடைந்து, அவர்களைத் தம்முடைய முகத்தைவிட்டு அகற்றினார்;* யூதாகோத்திரமாத்திரமே மீதியாயிற்று._
ஒரு ஆங்கில பழமொழி கூறுகிறது, _*நீங்கள் யார், நீங்கள் எங்கிருந்து வந்தீர்கள், என்ன செய்கிறீர்கள், எங்கு செல்கிறீர்கள் என்பதை நன்கு சிந்தித்துப் பாருங்கள்*._
*முதல் இரண்டு* பரிசீலனைகளுக்கும் *இஸ்ரவேல்* மற்றும் *யூதா* இருவராலும் எளிதில் பதில் அளிக்கப்பட்டிருக்கும், ஏனென்றால் இரு தேசங்களும், _*நாங்கள் தேவனால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஜனங்கள், நாங்கள் ஆபிரகாமிடமிருந்து வந்தவர்கள்*._ என்று கூறியிருப்பார்கள்.
*மூன்றாவது* கேள்வியைப் பொறுத்தவரை, இருவரும் ஒப்புக்கொள்ள வேண்டியிருக்கும், _*எங்கள் பொல்லாத முன்னோர்கள் செய்ததை நாங்கள் செய்கிறோம்*._
*_எங்கே போகிறாய்?_* என்ற *நான்காவது* கேள்விக்கு, தேவனுடைய பதில் தெளிவாக இருந்தது: _*நீங்கள் நியாயத்தீர்ப்பு மற்றும் அழிவை நோக்கி வேகமாக அமிழ்ந்துக்கொண்டிருக்கிறீர்கள்*._
யூதர்களிடம் *உண்மையான தேவன்* இருந்தார், ஆனால் *அவருக்குப் பதிலாக விக்கிரகங்களை* வைத்தார்கள். இப்போது, அவர்களின் வளமான நிலம் எதிரி நாடுகளால் அபகரிக்கப்பட்டு, மக்கள் சிறைபிடிக்கப்பட்டனர்.
ஆனால் *_எந்தவொரு மனிதனையும் பிரகாசிப்பிக்கிற அந்த மெய்யான ஒளி_* [யோவான் 1:9], நம் உலகத்தில் வரும்படி தேவன் உண்மையுள்ள மீந்திருக்கிறவர்களைக் காப்பாற்றினார்.
இப்போது, அவரை விசுவாசிக்கிறவர்கள், *_அவர் எங்கே இருக்கிறாரோ, அங்கே நான் போகிறேன்_* [யோவான் 14:3] என்று நம்பிக்கையுடன் சொல்லலாம்.
- செர்ரி செரியன், கொச்சி, இந்தியா
தமிழாக்கம் இன்னிசை செல்வி மும்பை
-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x
⚠️ DANGERS OF COMPROMISE ⚠️*
*⚠️சமரசஇணக்கத்தின் ஆபத்துகள்⚠️*
2 இராஜாக்கள் 16
☄️2 இராஜாக்கள் அத்தியாயம் 16, விக்கிரக வழிபாட்டின் ஆபத்துகளையும் ஒருவரின் நம்பிக்கையை சமரசம் செய்வதால் ஏற்படும் விளைவுகளையும் எடுத்துக்காட்டுகிறது.
1️⃣ *ஆகாஸ் விக்கிரக வழிபாட்டில் இறங்குதல்*
🔹யூதாவின் ராஜா ஆகாஸ், அண்டை நாடுகளின் அரசியல் அழுத்தங்களையும் அச்சுறுத்தல்களையும் எதிர்கொண்டான்.
🔹தேவனுடைய வழிகாட்டுதலையும் பாதுகாப்பையும் தேடுவதற்குப் பதிலாக, அவர் அசீரியர்களின் விக்கிரகங்களிடம் திரும்பி, அவர்களுடைய கடவுள்களையும் சடங்குகளையும் ஏற்றுக்கொண்டார்.
🔹ஆகாஸ் எருசலேம் முழுவதும் அந்நிய தெய்வங்களுக்கு பலிபீடங்களைக் கட்டினான்.
🔹யெகோவாவின் உண்மையான ஆராதனையை கைவிட்டுவிட்டு, அவர் இந்த பலிபீடங்களில் பலிகளைக் கூட செலுத்தினார்.
2️⃣ *ஆகாஸின் விக்கிரக வழிபாட்டின் விளைவுகள்*
🔸ஆகாஸின் விக்கிரக வழிபாடு, யூதா ராஜ்ஜியத்தின் ஆவிக்குறிய அடித்தளத்தை பலவீனப்படுத்தியது.
🔸மக்கள் தங்கள் மன்னரின் முன்மாதிரியைப் பின்பற்றி, புறமத வழிபாட்டில் ஈடுபட்டு, ஒரே உண்மையான தேவன் மீதான பக்தியைக் கைவிட்டனர்.
🔸இதன் விளைவாக, தேசம் மேலும் தாக்குதல்களுக்கும் கஷ்டங்களுக்கும் ஆளானது.
🔸கர்த்தர் தம்முடைய தெய்வீக பாதுகாப்பை விலக்கிக் கொண்டார்; அசீரியர்களும் மற்ற எதிரிகளும் யூதாவை ஆக்கிரமித்து ஒடுக்குவதற்கு அனுமதித்தார்.
3️⃣ *ஆகாஸின் விக்கிரக வழிபாடு*
▪️ஆஹாஸின் கதை நம் நம்பிக்கையை சமரசம் செய்வதால் ஏற்படும் ஆபத்துகளை நமக்கு நினைவூட்டுகிறது.
▪️சமூக அழுத்தங்களுக்கு நாம் அடிபணியும்போது அல்லது தேவனுடைய சித்தத்திற்குப் புறம்பாக தீர்வுகளைத் தேடும்போது, அவருடைய தயவை இழந்து, நமது ஆவிக்குறிய நல்வாழ்வுக்கு ஆபத்தை விளைவிக்கும் அபாயம் உள்ளது.
▪️ஆகாஸின் விக்கிரக வழிபாடு தேவனை முழு மனதுடன் நம்புவதன் முக்கியத்துவத்தை நிரூபிக்கிறது.
▪️பொய்க் கடவுள்களிடம் திரும்புவதற்குப் பதிலாக, நாம் தேவனுடைய ஞானத்தையும், வழிகாட்டுதலையும், பாதுகாப்பையும் நாட வேண்டும்.
▪️ஆகாஸ் ஆராதனையில் உண்மையாக இருக்கத் தவறியது, உண்மையான ஆராதனையின் முக்கியத்துவத்தை நினைவூட்டுகிறது.
▪️நமது ஆராதனை முறைகளை நீர்த்துப்போகச் செய்யும் அல்லது சிதைக்கும் சோதனையிலிருந்து நாம் பாதுகாத்துக் கொள்ள வேண்டும்; நமது பக்தியை கர்த்தருக்கு மட்டுமே அர்ப்பணிக்கிறோம் என்பதை நாம் உறுதிபடுத்திக் கொள்ள வேண்டும்.
♥️ *வாழ்க்கை பாடங்கள்*
💥ஒருவரின் நம்பிக்கையை சமரசம் செய்துகொள்வது மற்றும் விக்ரக வழிபாட்டின் வலையில் விழுவது போன்ற ஆபத்துகளைப் பற்றி நாம் கற்றுக்கொள்கிறோம்.
💥சமூக அழுத்தங்களுக்கு அடிபணிந்து, தேவனுடைய சித்தத்திற்குப் புறம்பாக தீர்வுகளைத் தேடுவதற்கும், நமது ஆராதனையை நீர்த்துப்போகச் செய்வதற்கும் எதிராக நாம் எச்சரிக்கப்படுகிறோம்.
*‼️நம் பக்தியில் உறுதியாய் நிலைத்திருப்போம், நம் ஆண்டவர் மீது நம்பிக்கை வைப்போம்‼️*
பிரின்சஸ் ஹட்சன்
தமிழாக்கம் இன்னிசை செல்வி மும்பை
-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x
2 Kings 16 - 17
🌿THE COMPROMISE OF AHAZ🌿
2 Kings 16
*Judah’s Worst King and the Church in the 21st Century*
1. He did not do what was right in the sight of the LORD: This briefly describes the reign of perhaps the worst king of Judah. Whereas many previous kings fell short in some area or another (typically, allowing sacrifices on the high places), of Ahaz it is simply said that he did not do what was right in the sight of the LORD.
2. (3-4) The idolatry of Ahaz:
Ahaz not only rejected the godly heritage of David, he embraced the ungodly ways of the kings of the Northern Kingdom of Israel. The Southern Kingdom of Judah had a mixture of godly and ungodly kings; the Northern Kingdom of Israel had onlyungodly kings, and Ahaz followed their pattern.
3. Indeed, he made his son pass through the fire: This describes Ahaz’s participation in the worship of Molech. The pagan god (or demon, more accurately) Molech was worshipped by heating a metal statue representing the god until it was red hot, then placing a living infant on the outstretched hands of the statue, while beating drums drowned out the screams of the child until it burned to death.
One of the great crimes of the northern tribes of Israel was their worship of Molech, leading to the Assyrian captivity (2 Kings 17:17).
4. The Canaanite nations that occupied Canaan before the time of Joshua also practiced this terrible form of human and child sacrifice. God would bring judgment upon Judah for their continued practice of these sins.
5. (7-9) Ahaz trusts in Assyria: Ahaz surrendered to one enemy in order to defeat another. He refused to trust in the God of Israel and instead submitted himself and his kingdom to an enemy of Israel.
6. Ahaz took the silver and gold that was found in the house of the LORD, and in the treasuries of the king’s house, and sent it as a present to the king of Assyria.
7. Ahaz perverts worship at the temple: Ahaz served as a priest at the altar of his own design. Since he created his own place of worship, it also made sense that he would disregard God’s command that a king must not serve as a priest (Numbers 18:7).
During these changes, Ahaz shut down the operation of the temple and established small pagan altars all around Judah (2 Chronicles 28:24-25).
The key was that Ahaz had no relationship with God.
Corrupt political leaders have almost always been able to find corrupt religious leaders to help them.
Compiled by Dr H. A. Pradeep Kumar
Bidar / Hyderabad
India 🇮🇳
🌿🌿🌿🌿🌿🌿🌿
-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x
*2 இராஜாக்கள் 16-17*
“ *ஆகாஸ்* “
ஆகாஸ் ராஜாவின் காலம்.. யூதா தேசத்தின் இருண்ட காலம்..
இவன்..ஜீவனுள்ள தேவனைக் குறித்தோ..அவருடைய ஆலயத்தைக் குறித்தோ..எந்த மதிப்பும் மரியாதையும் இல்லாதவன்..
( 2 இரா. 16 அதி. )
ஆகாஸ், கர்த்தர் வெறுத்துத் துரத்தின ஜாதிகளுடைய
வழிபாடுகளுக்கு…தன்னை முழுவதுமாக அர்ப்பணித்துவிட்டான்..
தன் குமாரனைத் தீக்கடக்கப்பண்ணினான்..
மேடைகளில் பலியிட்டுத் தூபங்காட்டினான்..
சாலொமோன் வைத்த பலிபீடத்தை…சன்னதம் கேட்க வைத்துக்கொண்டு, தமஸ்குவிலே தான் பார்த்த மாதிரியின்படி.. பலிபீடம் செய்து, அதிலே பலியிட்டான்.
அசீரிய ராஜாவின் விருப்பப்படி. ஆலய மண்டபத்தை இடித்தான்.
ஆலயத்தின் கதவுகளைப் பூட்டிப்போட்டு, எருசலேமில்.. மூலைக்கு மூலை, விக்கிரக பலிபீடங்களை நிறுவினான்.
(2 நாளா. 28: 24).
யூதா தேசம் ..”அநீதி” என்ற இருளுக்குள்ளாகக் கடந்துசென்றது..
ஆகாஸின் இத்தனைப் பெரிய பின் வாங்குதலுக்கு அவன் மட்டும்தான் காரணமா ?
அவனுக்கு முன்னிருந்த நாலு தலைமுறை ராஜாக்களும்.. தேவ பக்தி நிறைந்தவர்களே..
ஆனால் அவர்கள் கண்டுகொள்ளாமல் சகித்துக் கொண்ட ஒரு பாவம்..
அங்கே மேடைகள் அகற்றப்படவில்லை என்பதே..
ஜனங்கள், அதிலேயே பலியிட்டுத் தூபம் காட்டி வந்தார்கள்.
யோவாஸ்.. (2இரா. 12: 3)
அமத்சியா..(2 இரா.14:4)
அசரியா(உசியா) (2 இரா.15: 4) யோதாம்..(2 இரா.15 : 35 )
*தேவனுக்குப் பிரியமில்லாத* *காரியம் ..பெரியதோ அல்லது* *சிறியதோ ..அதைச் சகித்துக்* *கொண்டு, அதோடு நாம் வழி* *நடந்து செல்லும்போது*..
*ஒரு நாளிலே.. அது நம்மைப்* *படுகுழிக்குள் வீழ்த்திவிடும்*.
ஏசாயா தீர்க்கன்.. ஆகாஸின் காலமெல்லாம்..அவன் யெகோவா தேவனை நம்பும்படி, அவருக்குக் கீழ்ப்படியும்படி.. அவனைத் திருப்ப மிகவும் பிரயாசப்பட்டான்.
அவனுக்கு அதிகமான ஆபத்தும், துன்பமும் ஏற்பட்டபோதும்.. அவனது விக்கிரக பக்தி, அவனைவிட்டு நீங்கவில்லை. அவன் மீண்டும் தேவனண்டை வருவது கடினம் என்பதையுணர்ந்த ஏசாயா.. வரவிருந்த இம்மானுவேலின் ராஜ்யத்தைக் குறித்தும்.. அக்காலத்தில் விக்கிரகங்கள் ஒழிந்து போகும் என்பதைக் குறித்தும் அதிகமதிகமாக..
தீர்க்கதரிசனம் சொல்லத் தொடங்கினான்.
(ஏசாயா 9: 1-7 ; 10-12 அதி.).
"*இன்றைய கிறிஸ்தவம்*.. *ஆலயங்கள்,மக்களால்* *நிரப்பப்படுவதில்..கவனம்* *செலுத்துகிறது*..
*உண்மையான சுவிசேஷம்* *என்பது..மக்கள் தேவனால்* *நிரப்பப்படுவதே*".
*என்று ஒரு தேவமனிதன்* *கூறியுள்ளார்*..
இது முற்றிலும் உண்மை..
இன்றைய தலைமுறையினரிடம்,
தேவபக்தி குறைந்து வருகிறது.
வேதத்தின்படி நடக்கிற கிறிஸ்தவர்கள்.. இன்றைய நாட்களில் குறைந்து வருகிறார்கள். சடங்காச்சாரங்கள் இருக்கின்றன ..
சாட்சிகள் இல்லை.
காலப்போக்கில்.. கிறிஸ்து இல்லாத கிறிஸ்தவம்தான் இருக்கப்போகிறது.
*அன்று ஏசாயா தீர்க்கன்,* *தேசத்திலே மாற்றங்கள் வராததினால்*.. *இம்மானுவேலரின்* *ஆளுகையைக் குறித்துக் கூற* *ஆரம்பித்ததுபோல*..
*நாமும்.. இயேசுகிறிஸ்துவின்* *வருகையைக் குறித்துப்* *பேசுவோம்*.
மாலா டேவிட்
-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x
*2 இராஜாக்கள் 16 - 17*
*அவர்கள் தங்கள் குமாரரையும் தங்கள் குமாரத்திகளையும் தீக்கடக்கப்பண்ணி , குறிகேட்டு நிமித்தங்கள் பார்த்து , பொல்லாப் பானதைச் செய்கிறதற்குத் தங்களை விற்றுப் போட்டார்கள். ....... கர்த்தர் தீர்க்கதரிசிகளாகிய தம்முடைய ஊழியக்காரர் எல்லாரையும் கொண்டு சொல்லியிருந்தபடி, அவர்களைத் தமது சமூகத்தை விட்டு அகற்றுகிறவரைக்கும் , அவைகளை விட்டு விலகாதிருந்தார்கள் ; இப்படியே இஸ்ரவேலர் தங்கள் தேசத்தினின்று அசீரியாவுக்குக் கொண்டுபோகப்பட்டு , இந்நாள் வரைக்கும் இருக்கிறார்கள். (2 இரா 17 : 17 - 23)*
இஸ்ரவேலர் அழைக்கப்பட்ட அழைப்புக்குப் பாத்திரவான்களாய் நடவாமல் , எவ்வளவு விபரிதமாக நடக்க , தங்களை விற்றுப் போட்டார்கள் என்பதை மேலே கூறப்பட்ட வேதவசனங்கள் நமக்குத் தெளிவாகத் தெரிவிக்கின்றன அல்லவா ?
இவர்கள் அந்நிய தேவர்களுக்குப் பயந்து , அவைகளுக்கு பலியிட்டதோடு , விக்கிரகங்களையும் வழிப்பட்டனர்.
கர்த்தருடைய நியாயபிரமாணங்களையும் கற்பனைகளையும் கைக்கொள்ளாதேப்போய் கர்த்தரைக் கோபமூட்டினார்கள். மேலும் தங்களை எச்சரித்தத் தீர்க்கதரிசிகளின் வார்த்தைகளுக்கும் , செவி கொடுக்கவில்லை.
இவர்கள் தங்கள் பிள்ளைகளை மோளேகு என்னும் வெண்கல தேவனுக்கு (விக்கிரகத்திற்கு ) , நரபலியாகச் செலுத்தினர்.
தேவனுக்கு எதிரான , மந்திரவாதச் செயல்கள் , பில்லிசூனியம் போன்ற அனைத்து சாத்தானின் செயல்களுக்கும் கையாட்களானார்கள்.
எல்லாவற்றிற்கும் மேலாக , இஸ்ரவேலின் அடையாளங்களான விருத்தசேதனம் செய்தல் , ஓய்வு நாளைக் கைக்கொள்ளுதல் போன்ற , கர்த்தரின் கட்டளைகளைக் கைக்கொள்ளாமல் விட்டு விட்டதால் , இவர்கள் மற்ற மக்களோடு கலந்து , இஸ்ரவேலர் அடையாளம் தெரியாமல் போய்விட்டனர். இதனால் இவர்களை மற்ற ஜனங்களிலிருந்து , இனம் கண்டு கொள்ள முடியாமல் , தொலைந்துபோன பத்துக் கோத்திரத்தார் என்று கூறுவதுண்டு.
வானத்தையும் பூமியையும் படைத்த இவ்வளவு பெரிய தேவனால் , தமக்குச் சொந்த ஜனமாகத் தெரிந்து கொள்ளப்பட்டு , அவரால் போஷிக்கப்பட்டு , பாதுகாக்கப்பட்டு , வழிநடத்தப்பட்டு வந்தவர்கள் , இவர்கள் இப்படிப் பட்டப் பரிதாப நிலைக்குத் தள்ளப்பட்டனர் என்றால் , கடைசி காலங்களில் வாழுகின்ற புற ஜாதிகளான நாம் , நமது ஆவிக்குரிய வாழ்ககையையும் இரட்சிப்பையும் , பரிசுத்த வாழ்வையும் காத்துக்கொள்ளுவதற்கு , எவ்வளவு ஜாக்கிரதையுடன் காணப்பட வேண்டும் , பிரியமானவர்ளே. சிந்திப்போம். ஒவ்வொரு நாளும் குறைந்தது இரண்டு மணி நேரமாவது ஆண்டவருடைய சமூகத்தில் ஜெபித்து , தேவனோடு இணைந்து வாழ்வோம். கர்த்தர் நம்மை ஆசிர்வதித்து , நமது தேசத்தில் நாம் எழுப்புதலைக் காண உதவி செய்வார்.
*ஆமென் ! அல்லேலூயா ! !*
Rajam Theogaraj , Palayamkottai.
🌸🌸🌸🌸🌸🌸🌸🌸
-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x
இஸ்ரவேல் புத்திரர் இரகசியத்தில் செய்த கர்த்தருக்கு விரோதமான பாவங்கள்.*
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
2 இராஜாக்கள் 17: 9. *செய்ய தகாத காரியங்களை இஸ்ரவேல் புத்திரர் தங்கள் தேவனாகிய கர்த்தருக்கு விரோதமாக இரகசியத்தில் செய்தார்கள்.*
1. ஆம், இஸ்ரவேல் புத்திரர் இரகசியமாய் எதை செய்தார்கள் ?
*கர்த்தருக்கு விரோதமாக, செய்ய தகாத காரியங்களை செய்தார்கள். அதாவது பாவம் செய்தார்கள.*
2. *இஸ்ரவேல் ஜனங்கள் எகிப்தின் அடிமைதனத்திலிருந்து விடுவிக்கப்பட்டவர்கள் தான். ஆனால் இவர்களிடம் கர்த்தருக்கு விரோதமான, செய்ய தகாத இரகசிய பாவங்கள் இருந்தது. இன்று நாமும் கூட இரட்சிக்கப் பட்டவர்களாயிருக்கலாம். ஆனால் நமக்குள் இந்த இரகசிய பாவங்கள் காணப்படுகிறதா?* நம்மை நாமே ஆராய்ந்து பார்ப்போம்.
3. *பிறனை இரகசியமாய் அவதூறு செய்கிறவனை சங்கரிப்பேன்* என கர்த்தரே கூறுகிறார். சங்கீதம் 101: 5. ஆம், *பிறரை இரகசியமாய் அவதூறு செய்யும், பிறரை அற்பமாய் எண்ணும் பாவம்* ஆகியவைகள் நம்மிலிருக்கிறதா?
*புறங்கூறுதல், கோபம், எரிச்சல், வைராக்கியம், கசப்பு, மன்னியாமை, பொறாமை, பெருமை, கபடு, விக்கிரக ஆராதனையாகிய பொருளாசை, பலவித இச்சைகள்* யாவும் நம் இருதயத்தில் இரகசியமாய் செய்யும் பாவங்களே. மட்டுமல்ல, *ஒரு ஸ்தீரியை இச்சையோடு பார்த்தாலே, அவளோடு விபசாரம் செய்தாயிற்று* என இயேசு சொன்னார் அல்லவா?
*கவலை, பயம், சந்தேகம், அ விசுவாசம்* ஆகியவைகள் கூட நம் இருதயத்தில் இரகசியமாய் மறைந்திருக்கிற செய்ய தகாத பாவங்களே.
4. ஆகவே *நம்மை நாமே ஆராய்ந்து பார்த்து, இத்தகைய இரகசியமாய் இருதயத்தில் மறைந்திருக்கிற செய்ய தகாத பாவங்களை அறிக்கையிட்டு, நம் இருதயத்தை இயேசுவின் இர த்தத்தால் பாவமற கழுவி சுத்திகரிப்போம். இயேசுவே இருதயத்தில் இரகசியமாய் மறைந்திருக்கிற பாவங்களை என்னை விட்டு அகற்றும். தேவனே சுத்த இருதயத்தை என்னிலே சிருஷ்டியும் என ஒவ்வொரு நாளும் விண்ணப்பித்து, பரிசுத்தமாய் வாழ கர்த்தர் தாமே நமக்கு உதவி செய்வாராக*.
அப்போது தான் *இயேசுகிறிஸ்து நம் இருதயத்தில் வாசமாயிருப்பார். ஆவியானவர் நமக்குள்ளே உலாவுவார்*. ஆமென். அல்லேலூயா.
*Dr.Padmini Seĺvyn*
-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x
Tamil translation of Rev. C. V. Abraham’s insight.*
*DOING EVIL IN THE EYES OF THE LORD* (2 Kings 27)
*கர்த்தருடைய பார்வையில் பொல்லாப்பானதைச் செய்தல்.*(2 இராஜாக்கள் 17)
சுமார் *கிமு 1400* இல் வாக்குத்தத்தம் பண்ணப்பட்ட தேசத்திற்குள் இஸ்ரவேலர்கள் நுழைந்தனர்.
*கிமு 1000 வாக்கில்*, தாவீது ராஜா எருசலேமைக் கைப்பற்றினார்.
சுமார் *கிமு 920 இல்* இஸ்ரவேல் இரண்டு இராஜ்யங்களாகப் பிரிக்கப்படது.
*கிமு 720 இல்* 10 வடக்கு கோத்திரத்தினர் அசீரியாவுக்கு சிறைபிடிக்கப்பட்டனர்.
200 ஆண்டுகளில் மற்றும் சாலமோனின் (ஒன்றுபட்ட இஸ்ரவேலின் கடைசி மன்னர்) காலத்திற்குப் பிறகு வந்த 19 இராஜாக்களின் காலத்திற்குப்பின் இஸ்ரவேலின் வடக்கு இராச்சியம் வீழ்ந்தது.
*அசீரியா ராஜா சமாரியாவைப் பிடித்து, இஸ்ரவேலை அசீரியாவுக்குச் சிறையாகக் கொண்டுபோய், அவர்களைக் கோசான் நதி ஓரமான ஆலாகிலும் ஆபோரிலும் மேதியரின் பட்டணங்களிலும் குடியேற்றினான்.* (2 இராஜாக்கள் 17:6)
*இஸ்ரவேலர்கள் தங்கள் தேவனாகிய கர்த்தருக்கு விரோதமாகப் பாவஞ்செய்ததால் இவையெல்லாம் நடந்தன.* (2 இராஜாக்கள் 17:7)
அவர்கள் * அந்நிய தேவர்களை* வணங்கி, அவர்களுடைய தேசங்களின் பழக்கவழக்கங்களைப் பின்பற்றினார்கள்.(2 இராஜாக்கள் 17:8)
காவல்காக்கிற கோபுரங்கள் தொடங்கி *அரணான பட்டணங்கள் மட்டுமுள்ள தங்கள் ஊர்களிலெல்லாம் தங்களுக்கு மேடைகளையும் கட்டி,* தூபங்காட்டினார்கள். (2 இராஜாக்கள் 17:9,11)
உயரமான சகல மேட்டின்மேலும் பச்சையான சகல மரத்தின்கீழும் *தங்களுக்குச் சிலைகளையும் விக்கிரகத் தோப்புகளையும் நிறுத்தி* வைத்தார்கள்.(2 இராஜாக்கள் 17:10)
அவர்கள் பொல்லாத செயல்களைச் செய்து, கர்த்தருக்குக் கோபமூட்டினர். (2 இராஜாக்கள்.17:11)
அவர்கள் *விக்கிரகங்களை வணங்கி* மதிப்பில்லாத சிலைகளைப் பின்பற்றினார்கள்.( 2 இராஜாக்கள்.17:12,15)
அவர்கள் *இரண்டு கன்றுக்குட்டிகளாகிய வார்ப்பித்த விக்கிரகங்களைத் தங்களுக்கு உண்டாக்கி, விக்கிரகத் தோப்புகளை நாட்டி, வானத்தின் சேனைகளையெல்லாம் பணிந்துகொண்டு, பாகாலைச் சேவித்தார்கள்.* (2 இராஜாக்கள் 17:16)
அவர்கள் *தங்கள் குமாரரையும் தங்கள் குமாரத்திகளையும் தீக்கடக்கப்பண்ணி, பலியிட்டார்கள்* (2 இராஜாக்கள்.17:17)
*ஆதலால் கர்த்தர் இஸ்ரவேலின்மேல் மிகவும் கோபங்கொண்டு, அவர்களைத் தம்முடைய சமுகத்திலிருந்து நீக்கிவிட்டார்.*(2 இராஜாக்கள் 17:18)
தேவன் இஸ்ரவேலை எகிப்து தேசத்திலிருந்து வெளியே கொண்டுவந்தார், ஆனாலும் அவர்கள் இதை நினைவில் கொள்ளவில்லை. அவர்கள் தங்களைச் சுற்றியிருந்த தேவனற்ற தேசங்களுக்கு ஒத்துப்போனார்கள். தொடர்ச்சியான எச்சரிக்கைகளை அவர்கள் நிராகரித்தார்கள். கர்த்தர் பல்வேறு தீர்க்கதரிசிகளை அவருடைய மக்களுக்கு அனுப்பினார், ஆனால் அவர்கள் தங்கள் தீய வழிகளை மாற்ற மறுத்துவிட்டனர்.
*இவன் கர்த்தரின் பார்வையில் பொல்லாப்பானதைச் செய்தான்* இது எத்தனை முறை திரும்பத் திரும்ப வருகிறது?
*நம்மைச் சுற்றியுள்ள மக்களின் பழக்கவழக்கங்கள் மற்றும் நம்பிக்கைகளுடன் நாம் சமரசம் செய்த பகுதிகள் அல்லது பின்பற்றும் பகுதிகள் யாவை?*
*இன்னும் நாம் தொடர்ந்து செய்து கொண்டிருக்கும் சில தவறுகள் அல்லது பாவங்கள் உள்ளதா?*
*கர்த்தரின் பார்வையில் நாம் செய்வது நன்மையா, தீமையா?*
Rev.C.V.Abraham.
தமிழாக்கம்
Princess Hudson
-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x
*2 இராஜாக்கள் 16, 17*
*...ஆகாஸ் தன் குமாரனை முதலாய்த் தீக்கடக்கப் பண்ணினான்.* (2 ராஜா 16:3).
இஸ்ரவேல்-யூதாவின் வரலாற்றில், ஆகாஸ் மிக முக்கியமான இடத்தைப் பெற்றிருக்கிறான். *இவன் கர்த்தரின் பார்வைக்குப் பொல்லாப்பானதைச் செய்த யூதாவின் ராஜாக்களில் மிக மோசமானவன்.* இவன் எடுத்த ஒவ்வொரு தீர்மானமும், *கர்த்தருடைய ஜனங்கள் சிறைப்பிடிக்கப்பட்டுப் போகுங்காலத்தை நெருங்கி வரச் செய்தது.*
❌கர்த்தர் தேசத்தைவிட்டுத் துரத்தின *கானானியரின் அருவருப்புகளின்படி, தன் குமாரனை நரபலியிட்டான்.*(16:3)
❌அசீரியருக்கு எதிராக இஸ்ரவேலும் சீரியாவும் இணைந்து நிற்கும் சூழ்நிலையில், *தான் பலப்படும்படி,* அசீரியாவின் இராணுவ பலத்தை நாடினான். *இது, அசீரியா சீரியாவையும், அதைத் தொடர்ந்து இஸ்ரவேலையும், அழிப்பதற்கு ஏதுவாயிற்று.* (16:5-9).
*❌ கர்த்தருடைய ஆலயத்தின் மாதிரியும், பலிபீடத்தின் மாதிரியும் கர்த்தருடைய கரத்தினால் தாவீதுக்கு எழுதிக்கொடுக்கப்பட்டது.* (1 நாளா 28:11-19). ஆனால் ஆகாஸ், கர்த்தருடைய ஆலயத்திலிருந்த *வெண்கலப் பலிபீடத்தை இடம் மாற்றி,* அசீரியர்களின் தெய்வத்துக்கான பலிபீடத்தின் மாதிரியில் வேறு பலிபீடத்தைச் செய்து, அந்த இடத்தில் வைத்தான்.
*❌அசீரியா ராஜாவுக்கு தன் விசுவாசத்தையும் நன்றியணர்வையும் காட்டும்படி*, இன்னும் அநேக மாற்றங்களை ஆலயத்தில் செய்தான்.(16:17-18).
*❌ஆனாலும் அசீரியா ராஜா, ஆகாசை நெருக்கினானேயன்றி அவனைப் பலப்படுத்தவில்லை.* கடைசியில், தன் செயலுக்காக வருந்தினபோதிலும், *அவன் செய்த காரியங்கள் யாவும், அவனும் இஸ்ரவேல் அனைத்தும் நாசமாகிறதற்கு ஏதுவாயிற்று.* (2 நாளா 28:19-23).
❓நாம் ஒருவேளை ஆகாசின் செயல்களைக் குற்றம் என்று தீர்த்தாலும், *கர்த்தருடைய வார்த்தைகளை நம் சுய இலாபத்திற்காக அல்லது மற்றவர்களை வசீகரிப்பதற்காக, திரித்துப் பேசவும் செய்யவும் முற்பட்டால்,* நாமும் அதே குற்றத்தைக் தான் செய்கிறோம். *கர்த்தருடைய வசனங்களோடு எதையாகிலும் கூட்டவோ, குறைக்கவோ முயற்சிக்க வேண்டாம்.* (வெளி 22:18-19).
பிரேமா ராஜசிங்
Group Coordinator
-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x
*🌈சிப்பிக்குள் முத்து🌈*
*2 இராஜா : 16, 17*
*🍒முத்து சிதறல் : 115*
📌🌿📌🌿📌🌿
*ஆசாரியனாகிய உரியா அப்படிக்கொத்த பலிபீடத்தை கட்டி.....*
( 2 இராஜா - 16 : 11)
🌿📌🌿📌🌿🌿
*✍️தன் மனைவியாகிய யேசபேல் தூண்டி விட்டபடியே கர்த்தரின் பார்வைக்கு பொல்லாப்பானதை செய்ய தன்னை விற்று போட்ட ஆகாப் அரசனைப்போலவே*
(1இராஜா - 21 : 25) *இங்கு "ஒரு ஆசாரியன் கர்த்தருக்கென்று பணியாளனாக செயல்படுவதை விட்டு விட்டு", சாதாரண ஒரு அரசனை சேவித்த பிரதான ஆசாரியனாக தன்னை நிலை நிறுத்திக்கொண்டதை கண்கூடாக காண்கிறோம்.* அந்த ஆசாரியன் பெயர் *உரியா.*
*🌹அரசன் சொல்லும் ஒரு வேலை கர்த்தரின் நோக்கத்திற்கும், மாதிரிக்கும் ஏற்ற விதமானது தானாவென்று பரிசோதித்து பார்த்தலோ,/ இல்லை சரியில்லாததை செய்யாமல் இருந்துக்கொள்ளுதலோ/ அல்லது எதிர்த்தலோ / அல்லது இராஜாவுக்கு அறிவுறுத்தல கூட கொடுப்பது ஆசாரியரின் பணியில் ஒன்று.* ஆனால் இங்கு இந்த *உரியா என்னும் ஆசாரியனோ,* இந்த ஆகாஸ் அரசனின் கைப்பாவையாக, சொன்னதை மாத்திரம் செய்யும் சாமர்த்தியசாலியாக திகழ்ந்தார்.
*இது மகா பெரிய தவறாக்கும்.*
ஓர் அரசனை நல்வழிக்கு நேரே திருப்பாமல்....
அவன் சென்ற வழியின் பிறகே சென்ற ஆசாரியனாக இந்த உரியா அறியப்படுகிறார்.
*🔥மோசேயின் காலத்திற்கு பின், எவறொருவர் முக்கிய பொறுப்பில் இருந்தாலும் அவர் அக்கால ஆசாரியனுக்கு முன் பணிவாக, ஆசாரியன் சொல் படி நடக்கிரவனாக இருக்க வேண்டும்.*
🌻ஆசாரியன் அந்த பொறுப்பாளருக்கு உத்திரவாதிப்போல, கர்த்தரிடம் கேட்க வேண்டிய காரியத்தை கேட்டு அரசருக்கோ, இல்லை ஆட்சியாளருக்கோ தெரிய படுத்த வேண்டியது ஆசாரியனின் கடமையாகும். லேவியரான ஆசாரியர் வசம் தான் நியாயபிரமாண நூல் இருக்கும். அதை பார்த்து ஆட்சியாளர்கள் தங்களுக்கென்று ஒரு பிரதியை எழுதி, தங்களிடத்தில் வைத்துக்கொள்ள வேண்டும் என்பது இறை கட்டளையாய் இருந்தது.
*(உபா - 17 : 19, 20)*
*🍉மலையில் காண்பிக்கப்பட்ட மாதிரியின்படி தான் மோசே ஆசரிப்பு கூடாரம், மற்றும் அதன் சகல பணி மூட்டுகளை பெசலயேல் மற்றும் அகோலியாப் போன்றோர் மூலம் பண்ணுவித்தார்.* ( யாத்தி - 25 : 40 )
*🎊கர்த்தருக்கான பிரமாண்டமான தேவாலயத்தின் மாதிரி தோற்றம் தாவீதரசனுக்கு ஆண்டவர் வரைபடம் மூலம் எழுதி கொடுத்து இருந்தார்.*
( 1 நாளா - 28 : 11, 12, 18, 19 )
அதன்படியே அது சாலமோனால் கட்டப்பட்டது.
ஆனால்,
🍒பிற்காலத்தில் இஸ்ரயேல் மக்கள் (ரூபன் புத்திரர், காத் புத்திரர், மனாசேயின் பாதி கோத்திரதார் ) இஸ்ரவேலில் இருந்த பலிபீடத்திற்கு சமானமான வேறொரு விதமான பீடம் கட்டியப்போது *ஓர் உள் நாட்டு போர் எழுவதற்கான கரு மேகம் சூழ்ந்தது.*
பின்பு முறைப்படி விசாரிக்கப்பட்டு, உண்மை நோக்கம் அறிந்த பின் மேகம் கலைந்தது.
*( யோசு - 22 : 10 - 34)*
*💠மாதிரி பீடத்திற்கு கூட அனுமதி இல்லைத்தான்.*
🔰🫛🔰🫛🔰🫛🔰
*🍅 ஆனால் இங்கோ இந்த ஆகாஸ் சீரியாவுக்கு சென்று இருக்கையில், தமஸ்குவில் உள்ள ஒரு விக்கிரக பலிபீடத்தை கண்ணோக்கி.... அதேபோல இஸ்ரவேலில் உண்டாக்கி, அதில் தன் சொந்த பலிகளை ஏறெடுத்து கொள்ளவும், கர்த்தரின் பலிபீடத்தையோ ஓரங் கட்டவும் விழைந்து செயல்பட்டான்.*
*அதற்கு இந்த ஆசாரியனான உரியா துணைப்போனான்.*
பின்மாற்ற மனநிலையின் அறிகுறி இது.
🍧❣️🍧❣️🍧❣️🍧
*🍀இன்றும் புதிய கவர்ச்சியான பலிபீடங்கள் உண்டாக்கபடுவதும், பல் சமய உரையாடல்கள், பக்தி நெறி போதனைகள் போன்றவற்றை.... "புளித்த மாவினைப்போல" மக்கள் மனதில் புகுத்தி, அடக்கி வைக்க முயலுவதுமாக வலம் வரும் பலரில் ஒருவராக நாம் ஆகி விடக்கூடாது.* வேதாகமத்தில் கொடுக்கப்பட்டுள்ள மாதிரிகளை மாத்திரமே நடைமுறைப்படுத்த நாம் உறு துணையாளர்களாக இருப்போமானால், சகலமும் நன்மையாக இருக்கும்.
*🥏இறைவனின் சேவகர்களாக மாத்திரம் செயல்படும் போது அது யாவருக்கும் நன்மை பயக்கும் என்பதை மறவாதிருப்போம்.*
*🥥புதிய பலிபீடம் எதன் மாதிரி தோற்றத்தினை பிரதிபலிக்கிறது❓️ என்பதை கவனிப்போம்.*
🍀இங்கு ஆகாஸ் உண்டு பண்ணியது சீரியர்களாகிய,/ இஸ்ரவேலர் அல்லாத பிற இனத்தவர்களின் மாதிரி பலிபீட தோற்றமாகும்.
🍀சீரியரும் இஸ்ராயேலரும் ஒன்றானவார்கள் தான், யாதோறு வித்தியாசமும் இல்லை, என்னும் எண்ணம் தலைமுறையினராகிய , ஆசீரிய மக்களிடமும், இஸ்ரயேல் மக்களிடமும் உண்டாகியது.
💠🦀💠🦀💠🦀
🍀எமக்கோ புதிய பலிபீடமாக கிறிஸ்துவே இருப்பதால், மாற்று பலிபீடத்தில் ஏதேனும் இல்லை என்பதை உணர்ந்து கொள்ளுவோம்.
🍀மீட்கபடாமல் இருக்கும் எந்த ஆத்துமாவின் இதயமும் மாற்று பலிபீடத்தின் மாதிரி தோற்றத்தை ஏற்று வாழும் :,
ஆனால் மீட்கப்பட்டுள்ள எந்த இதயமும் இறைவனுக்கு பலி செலுத்தும் படி மெய்யான பலிபீடத்தை மாத்திரம் சேரும்.
*💊பொய்யான பலிபீடம் / மற்றொன்றை போன்ற போலி எமக்கு தேவையே இல்லை.*
*☔️நான் ஒரு உரியாவா❓️*
என்று, நமக்கு நாமே கேள்வி கேட்டு கொண்டு எம்மை சீர்தூக்கி பார்த்து....எம் இதயமகிய பலிபீடத்தினை வசனத்தின் படி சரி செய்து கொள்வோம்.
*🛍️மாய தோற்ற பலிபீடத்திலிருந்து செலுத்த படுவதை கர்த்தர் அங்கீகரிப்பாரோ❓️என ஓர் கணம் யோசித்து பார்ப்போமே !*
*Sis. Martha Lazar✍️*
NJC, KodaiRoad
Thanks for using my website. Post your comments on this