Type Here to Get Search Results !

2 Kings 14,15 Bible Study in Tamil | RISE AND FALL OF KING AZARIAH | அசரியா ராஜாவின் எழுச்சி மற்றும் வீழ்ச்சி | 2 இராஜாக்கள் வேத ஆராய்ச்சி | Jesus Sam

====================
2 KINGS 14,15 Bible Study in Tamil & English
======================
It always dangerous for us to take on battles we’re not called to fight.*

⚠️II Ki.14:9-10-You had a victory”, Jehoash said to Amaziah. “Enjoy it. *Don’t start looking for battles you’re not called to fight”. Jehoash’s advice is still sound. It always dangerous for us to take on battles we’re not called to fight.*

⚠️II Ki.14:11-12- *One result of overconfidence is that there is disgrace to the nation.* Judah lost the battle. *Whenever we meddle, we will find ourself inevitably bringing disgrace to the people of God.* In 2 Samuel 12, when David had sinned, he was approached by Nathan the prophet. Upon David’s confession of sin, Nathan said, “The Lord has forgiven you. Nevertheless, you have caused the enemies of Jehovah to blaspheme.” When you and I succumb to sin, when we meddle where we don’t belong, we bring disgrace to the people of God. Let us be careful lest we disgrace others.

📖II KI.15:1-3- *In the Book of Chronicles, we’ll see that Uzziah was a truly great king.* He was a capable administrator, a valiant warrior, an inventor, and, above all, a lover of God.

💡II Ki.15:5- *Uzziah had a wonderful beginning but a tragic ending, and this is a warning to us that we be on guard and pray that the Lord will help us to end well.* A good beginning is no guarantee of a successful ending, and the sin of unholy ambition has ruined more than one servant of the Lord. He is a warning to all who nurture unholy ambitions to intrude into that which God hasn’t appointed for them. (Ps. 131.) Uzziah (Azariah) violated what had become a general principle in God’s dealing with Israel: that no king should also be a priest. It was God’s plan that the offices of prophet, priest, and king should not be combined in one man – until the Messiah, who fulfilled all three offices.
Jaya Pradeep-Kodaikanal.


-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x


*2 KINGS : 14 - 15*

*Jeroboam, who had made Israel sin* ‼️

Written 2️⃣0️⃣ times in Kings 1&2 ⁉️

What an introduction ‼️‼️‼️

Jesus said to his disciples: “Things that cause people to stumble are bound to come, but woe to anyone through whom they come *. It would be better for them to be thrown into the sea with a millstone tied around their neck than to cause one of these little ones to stumble* . (Luke 17:1-3)

So *watch yourselves* ‼️

Usha

-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x


(2 இராஜாக்கள்: 14-15)

💐💐💐💐💐💐💐💐

*அமத்சியா* யூதாவின் ராஜா. இவர் கர்த்தரைச் சார்ந்திருந்தபோது கர்த்தர் வெற்றி தந்தார்.

ஆனால் இவருக்கு *தற்பெருமை* ஏற்பட்ட போது என்ன நடந்தது என்று (2 இராஜா: 14: 7-14) ல் வாசிக்கிறோம்.

★ இந்த அமத்சியா இஸ்ரவேலின் ராஜாவான யோவாஸ் என்பவனிடம் ஸ்தானாதிபதிகளை அனுப்பி,

*நம்முடைய சாமர்த்தியத்தைப் பார்ப்போம் வா* என்று சொல்லச் சொன்னான் என்று படிக்கிறோம்.

*நீ ஏதோமியரை முறிய அடித்ததினால் உன் இருதயம் உன்னைக் கர்வம் கொள்ளப் பண்ணினது; நீ பெருமை பாராட்டிக் கொண்டு உன் வீட்டிலே இரு; நீயும் உன்னோடேகூட யூதாவும் விழும் படிக்கு , பொல்லாப்பைத் தேடிக்கொள்வானேன்*- இது யோவாஸ் அமத்சியாவுக்கு சொல்லி யனுப்பிய வார்த்தைகள்.

★அமத்சியா இதற்கு செவிகொடாததினால் முடிவிலே யுத்தம் நடந்து அமத்சியா படுதோல்வி யடைந்தான்.

பிரியமானவர்களே!

*தற்பெருமை அழிவைத்தரும்* என்பதற்கு இச்சம்பவம் ஒரு எடுத்துக்காட்டு.

★ வாழ்க்கையில் வெற்றிகள் வரும்போது பெருமை கொள்ளாமல் மனத்தாழ்மையோடு நடந்து கொள்ள வேண்டும்.

★ என் திறமையினால் இந்த வெற்றி கிடைத்தது என்று பெருமைப்பட்டு மமதையான பேச்சுக்களை அள்ளிவிட வேண்டாம்.

வெற்றி பெற உதவிசெய்த *கர்த்தரை இருதயத்தின் ஆழத்திலிருந்து துதித்து தாழ்மையோடு* இருக்கக் கற்றுக்கொள்வோமாக. ,

★ பெருமையினால் வந்த தேவையற்ற போரினால் அமத்சியாவுக்கும் யூதாவுக்கும் நேர்ந்த இழப்புகள் இதற்கு எடுத்துக்காட்டு.

*அழிவுக்கு முன்னானது அகந்தை; விழுதலுக்கு முன்னானது மனமேட்டிமை*.

(நீதிமொழிகள்: 16:18)

*ஆமென்*
✍️ Bhavani Jeeja Devaraj, Nagercoil


-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x


⚡ *அப்படியே ஆயிற்று* ⚡

❇️ *உன் குமாரர் நாலாம் தலைமுறைமட்டும் இஸ்ரவேலுடைய சிங்காசனத்தின் மேல் வீற்றிருப்பார்கள் என்று கர்த்தர் யெகூவோடே சொன்ன வார்த்தை இதுதான்; அப்படியே ஆயிற்று* (2 இராஜாக்கள் 15:12).

💥 ஆகாபின் குடும்பத்தாருக்கு விரோதமாக தேவனின் நியாயத்தீர்ப்பை நிறைவேற்றுவதில் யெகூ மிகவும் உறுதியுடன் செயல்பட்டதால், *அவனுடைய குமாரர் இஸ்ரவேலுடைய சிங்காசனத்தின்மேல் நாலு தலைமுறையாக வீற்றிருப்பார்கள்* என்று தேவன் அவனுக்கு வாக்குப் பண்ணினார் (2 இராஜாக்கள் 10:30). இஸ்ரவேலில் பாகாலின் வழிபாட்டை யெகூ ஒழித்தான். இருப்பினும், பெத்தேலிலும் தாணிலும் பொற்கன்றுக்குட்டிகளால், இஸ்ரவேலைப் பாவஞ்செய்யப்பண்ணின யெரொபெயாமின் பாவங்களைப் பின்பற்றுவதன் மூலம் தவறான ஆராதனையை அவன் ஊக்குவித்தான். ஆனால், *தேவன் தம்முடைய வாக்குத்தத்தை நிறைவேற்றுவதில் உண்மையாக இருந்தார்.* சகரியாவின் மரணத்துடன், யெகூவின் நான்காம் தலைமுறை ஆட்சி முடிவுக்கு வந்தது. *உண்மையற்ற யெகூவுக்குத் தந்த வாக்குத்தத்தை நிறைவேற்ற தேவன் கிருபையுள்ளவராக இருந்தால், தம்மிடம் விசுவாசமுள்ளவர்களுக்கு தாம் அருளிய வாக்குத்தத்தங்களை நிச்சயமாக நிறைவேற்றுவார்.*

💥 வேதம் கூறுகிறது: *“பொய் சொல்ல தேவன் ஒரு மனிதன் அல்ல; மனம்மாற அவர் ஒரு மனுபுத்திரனும் அல்ல; அவர் சொல்லியும் செய்யாதிருப்பாரா? அவர் வசனித்தும் நிறைவேற்றாதிருப்பாரா?”* (எண்கள் 23:19). தேவன் அருளும் ஒவ்வொரு வார்த்தையும் சத்தியம். *கடந்தகாலத்தில் அப்படியே ஆயிற்று; நிகழ்காலத்தில் அப்படியே ஆகிறது; வருங்காலத்தில் அப்படியே ஆகும்.* இயேசுவின் வார்த்தைகள்: *"வானமும் பூமியும் ஒழிந்துபோம், என் வார்த்தைகளோ ஒழிந்துபோவதில்லை."* (மத்தேயு 24:35).

💥 “இதோ, *ஒரு கன்னிகை கர்ப்பவதியாகி ஒரு குமாரனைப் பெறுவாள்.” என்று ஏசாயா தீர்க்கதரிசி மூலம் கர்த்தர் சொன்னது இயேசுவின் பிறப்பின் மூலம் நிறைவேறியது* (மத்தேயு 1:23). தாம் நியாயப்பிரமாணத்தையும் தீர்க்கதரிசனங்களையும் அழிக்கிறதற்கு அல்ல, *நிறைவேற்றுகிறதற்கே வந்ததாக இயேசு அறிவித்தார்* (மத்தேயு 5:17). *இயேசுவின் ஊழியங்கள் தீர்க்கதரிசனங்களின்படி* இருந்தன: "அஸ்தமனமானபோது, *பிசாசு பிடித்திருந்த அநேகரை அவரிடத்தில் கொண்டுவந்தார்கள்; அவர் அந்த ஆவிகளைத் தமது வார்த்தையினாலே துரத்தி, பிணியாளிகளெல்லாரையும் சொஸ்தமாக்கினார்: அவர் தாமே நம்முடைய பெலவீனங்களை ஏற்றுக்கொண்டு, நம்முடைய நோய்களைச் சுமந்தார் என்று, ஏசாயா தீர்க்கதரிசியினால் உரைக்கப்பட்டது நிறைவேறும்படி இப்படி நடந்தது."* (மத்தேயு 8:16-17).

அவர் உயிர்த்தெழுந்தபோது, ஒரு தேவதூதன், “அவர் இங்கே இல்லை; *தாம் சொன்னபடியே உயிர்த்தெழுந்தார்."* (மத்தேயு 28:6) என்று அறிவித்தான்.

💥 *பரிசுத்த ஆவியைப் பெறுவதைப் பற்றி* இயேசு நமக்கு வாக்குக் கொடுத்திருக்கிறார்: *“வேதவாக்கியம் சொல்லுகிறபடி* என்னிடத்தில் விசுவாசமாயிருக்கிறவனெவனோ அவன் உள்ளத்திலிருந்து ஜீவத்தண்ணீருள்ள நதிகள் ஓடும் என்றார். *தம்மை விசுவாசிக்கிறவர்கள் அடையப்போகிற ஆவியைக்குறித்து* இப்படிச் சொன்னார்." (யோவான் 7:38-39). இது இன்றுவரை நிறைவேற்றப்பட்டு வருகிறது. *பரிசுத்தாவியைப் பெற்ற ஒவ்வொரு விசுவாசியும் சாட்சி.*

💥 இயேசு தம் சீஷர்களுக்கு அளித்த வாக்குறுதி: *"இரண்டு பேராவது மூன்று பேராவது என் நாமத்தினாலே எங்கே கூடியிருக்கிறார்களோ, அங்கே அவர்கள் நடுவிலே இருக்கிறேன்."* (மத்தேயு 18:20). இன்றும் *நாம் கூடிவரும்போது நம் நடுவில் இயேசுவின் பிரசன்னத்தை* அனுபவித்து வருகிறோம்.

💥 இயேசு வாக்குறுதி அளித்தார்: *"இதோ, சீக்கிரமாய் வருகிறேன்; அவனவனுடைய கிரியைகளின்படி அவனவனுக்கு நான் அளிக்கும் பலன் என்னோடேகூட வருகிறது."* (வெளிப்படுத்தல் 22:12).

💥 *"இயேசுகிறிஸ்து நேற்றும் இன்றும் என்றும் மாறாதவராயிருக்கிறார்.”* (எபிரெயர் 13:8). இயேசு ஒருபோதும் மாறமாட்டார், அவர் சொன்னபடி நிச்சயமாக வருவார். *“மெய்யாகவே நான் சீக்கிரமாய் வருகிறேன்”* என்று இயேசு வாக்குறுதி அளிக்கிறார் (வெளிப்படுத்துதல் 22:20). அவர் அதைச் சொன்னார், *அது அப்படியே ஆகும்.* நாம், “ஆமென், *கர்த்தராகிய இயேசுவே, வாரும்.”* என்று அழைப்போம் (வெளிப்படுத்தல் 22:20).

🔹 *வேதத்தில் குறிப்பிடப்பட்டுள்ள எல்லா வாக்குறுதிகளையும் தேவன் நிச்சயமாக நிறைவேற்றுவார் என்று நம்புகிறோமா?*


✅ நாம் கற்றுக் கொள்ளும் *பாடங்கள்:*

1️⃣ *உண்மையற்ற யெகூவுக்குத் தந்த வாக்குத்தத்தை நிறைவேற்ற தேவன் கிருபையுள்ளவராக இருந்தால், தம்மிடம் விசுவாசமுள்ளவர்களுக்கு தாம் அருளிய வாக்குத்தத்தங்களை நிச்சயமாக நிறைவேற்றுவார்.*

2️⃣ *தேவன் அருளும் ஒவ்வொரு வார்த்தையும் சத்தியம். கடந்தகாலத்தில் அப்படியே ஆயிற்று; நிகழ்காலத்தில் அப்படியே ஆகிறது; வருங்காலத்தில் அப்படியே ஆகும்.*

3️⃣ *இரட்சிப்பு, பரிசுத்த ஆவியின் அபிஷேகம் மற்றும் நம்முடன் இயேசுவின் பிரசன்னம் அனைத்தும் வேதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளபடி நாம் இன்றும் அனுபவித்து வருகிறோம்.*

4️⃣ *இயேசு சீக்கிரம் வருகிறேன் என்று உறுதியளித்திருக்கிறார், அப்படியே ஆகும்; நாம் அவருடைய வருகைக்கு ஆயத்தமாவோம்.*

Dr. எஸ். செல்வன்
சென்னை

-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x


☘️☘️☘️☘️☘️☘️

அசரியா ஒரு கடினமான சகாப்தத்தில் அரியணைக்கு வந்தார்.

அவர் சகரியா தீர்க்கதரிசியின் ஊழியத்தின் போது ஆட்சி செய்தார்.

அவர் ஒரு வலிமையான அரசராக சர்வதேச அளவில் பிரபலமானார்.

மண்ணை உழுவதில் சிறப்பு கவனம் செலுத்தினார்.

எந்த அரசனும் ஆசாரியனக இருக்கக்கூடாது.

அவர் ஒரு நல்ல மற்றும் வலிமையான ராஜா, இஸ்ரவேலை பல இராணுவ வெற்றிகளுக்கு வழிநடத்தினார்.

அவர் ஆற்றல் மிக்கவர் கட்டிடம் கட்டுவது மற்றும் நன்கு திட்டமிடுபவர்.

அவருக்கு சோகமான முடிவு ஏற்பட்டது.

அரச குடும்பத்திற்கும் கடவுளின் வீட்டிற்கும் உள்ள தொடர்பை அசரியா தவறாகப் புரிந்துகொண்டு, ஆசாரிய அதிகாரத்தைக் பயன்படுத்தினார்.அது அவருக்கு தீமையை கொண்டு வந்தது.

☘️☘️☘️☘️☘️☘️☘️☘️☘️☘️

மேபிசுந்தர். சென்னை. இந்தியா. குழு எண்.2196.


-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x

📗 *சிறிய குறிப்பு* 📗

🍂 *மேடைகள்* 🍂

உயர்ந்த இடங்கள் அல்லது மேடைகள் மற்ற மத வழிபாட்டிற்கு சேவை செய்யும் உயர்த்தப்பட்ட பகுதிகளாகும். இவை பொதுவாக ஒரு மலை அல்லது மேடு. சில நேரங்களில் ஜனங்கள் இந்த நோக்கத்திற்காக உயர்ந்த மேடையை உருவாக்கினர்.

இந்த உயரமான இடங்களில் *சில வடிவ சிலைகள் அல்லது கம்பம்* இருந்தன. தேவாலயம் கட்டுவதற்கு முன், இஸ்ரவேல் ஜனங்கள் இந்த உயர்ந்த இடங்களில் தங்கள் பலிகளை செலுத்தினர். சாலொமோன் ஆலயத்தைக் கட்டிய பிறகு எல்லாம் மாறியது. *பன்னிரண்டு கோத்திரத்தாரும் தேவனாகிய கர்த்தரை தொழுது கொள்ள வந்த மைய இடமாக எருசலேம் ஆனது.*

ராஜாவாகிய அசரியா கர்த்தரின் பார்வைக்கு சரியானதைச் செய்தான். *மேடைகள் மாத்திரம் அகற்றப்படவில்லை; ஜனங்கள் இன்னும் மேடைகள்மேல் பலியிட்டுத் தூபங்காட்டிவந்தார்கள் (2 இரா 15:4).* நாமும் கூட கர்த்தரை நேசிக்கிறோம், அவருக்குக் கீழ்ப்படிகிறோம்.

ஆனால் நம் வாழ்வில் அப்படி ஏதோ ஒரு மேடை உண்டு. இதில் *தேவன் வெறுக்கும் ஒரு விஷயத்தை திருத்தவோ சரி செய்யவோ* தயங்குகிறோம். அது நம் இருதயத்தில் ரகசியமாக மறைத்து வைக்கப்பட்டு இருக்கிறது. நாம் மறைத்து வைத்திருக்கும் இந்தப் *பாவத்தை அறிக்கை செய்து தேவனுடைய மன்னிப்புக்காக கெஞ்சி இன்று மனந்திரும்பலாமா?*

_திருமதி ஷீலா ஜெபக்குமார்_ ✍🏼


-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x

இஸ்ரவேலின் உபத்திரவம் மிகவும் கொடிது என கர்த்தர் பார்த்தார்*
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

2 இராஜாக்கள் 14: 26.

1. ஆம், *இஸ்ரவேலின் உபத்திரவம் மிகவும் கொடியது* என்பதை கர்த்தர் பார்த்து கொண்டிருந்தார்.

ஆம், *கர்த்தர் நம்மை பார்க்கிறார், காண்கிறார் என்பதை நாம் அறிந்து கொள்ள வேண்டும்.* அடைபட்டவனுமில்லை, விடுபட்டவனுமில்லை, இஸ்ரவேலுக்கு ஒத்தாசை செய்பவர்களுமில்லை என அன்று கர்த்தர் பார்த்தார். அப்படியானால் *கர்த்தர் மனிதனுக்கு இரங்கும் படி நம்மை பார்க்கிறார் என்பதை நாம் அறிந்து கொள்ள வேண்டும்*.

2. நாம் *நம் தாயின் கருவில் உருவாகும் போதே, நம் கருவை, நம் எலும்புகளை கர்த்தர் பார்த்துக் கொண்டேயிருந்தார் . அப்படியானால் எவ்வளவாய் நம்மை அவர் நேசிக்கிறார் என்பதை நாம் அறிந்து கொள்ள வேண்டும்.*

*கர்த்தரை பற்றி உத்தம இருதயத்தோடிருக்கிறவர்களுக்கு தம்முடைய வல்லமையை விளங்கும் படி, கர்த்தருடைய கண்கள் பூமியெங்கும் உலாவுகிறது*. 2 நாளாகமம் 16: 9.

கர்த்தருடைய கண்கள் நம்மை நோக்கி கொண்டிருக்கிறது. *தம்முடைய கண்களை நம் மேல் வைத்து அவர் நமக்கு ஆலோசனை கூறுகிறார்*.

3. இன்று *அநேகர் என் உபத்திரவம் கொடிது, எனக்கு ஒத்தாசை செய்ய யாருமில்லை என சொல்லிக்கொண்டு இருக்கிறோம் அல்லவா? ஆம், நம்மை இரட்சிக்கும் படியாய் கர்த்தர் நம்மை, பார்த்து கொண்டிருக்கிறார் என்ற உண்மையை நாம் அறிந்துக் கொள்ள வேண்டும்*.

*நம்மை இரட்சிக்க, நம் பாவங்களை மன்னிக்க தம் சொந்த குமாரனையே இந்த உலகத்தில் பலியாக ஒப்புக் கொடுத்தார். இந்த இரட்சிப்பை நாம் பெற்று, கர்த்தருக்கு நன்றி கூறுவோம்*. ஆம், நம்முடைய உபத்திரவத்திலே நமக்கு உதவி செய்கிற, நம்மை இரட்சிக்கிற தேவன் நமக்காக இருக்கும் போது நாம் எதை குறித்தும் கலங்க தேவையில்லை.

ஆம், *நம் உபத்திரவத்தை பார்க்கிற, உதவி செய்கிற, விடுவிக்கிற தேவனை நாம் துதிப்போம். ஸ்தோத்தரிப்போம், மகிமைப் படுத்துவோம்*. ஆமென். அல்லேலூயா.

*Dr.Padmini Seĺvyn*

-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x

🙇‍♀️SEEK THE WILL OF GOD🙇*

2 Kings - Chapter 14

☄️Through Amaziah’s life, we learn about pride, the pursuit of power and glory, and the significance of trusting in God and His Word.

1️⃣ *THE DANGERS OF PRIDE*

🔹Amaziah began his reign with great potential.

🔹He followed the law of God and sought to obey His commands.

🔹As he experienced military success, pride began to creep into his heart.

🔹It led him to challenge Israel, a far more powerful nation, without seeking divine guidance.

🔹This prideful attitude ultimately led to his downfall.

🔹We must be cautious not to allow pride to cloud our judgment and lead us astray from God's will.

🔹Humility is the key to maintaining a heart aligned with God's purposes.

2️⃣ *THE CONSEQUENCES OF SEEKING POWER*
🔸Amaziah's desire for power and recognition caused him to seek alliances with neighboring nations.

🔸He placed his trust in human strength rather than relying on God's promises.

🔸This decision had severe consequences, resulting in his defeat and the plundering of Jerusalem.

🔸We are reminded that earthly power and glory are fleeting and can never compare to the eternal blessings that come from a deep relationship with God.

3️⃣ *THE IMPORTANCE OF TRUSTING GOD*

🔺Inspite of his failings, Amaziah experienced God's mercy and grace when he turned to Him in his distress.

🔺He was reminded of the importance of trusting in God and His Word.

🔺It is through faith and obedience that we find true strength and deliverance.

🔺In our own lives, we may face various challenges and temptations. However, we can take solace in the fact that God is faithful and His Word is unchanging.

🔺Let us place our trust in Him, seeking His guidance and wisdom in every aspect of our lives.

♥️ *LIFE LESSONS*

💥We should constantly seek God's guidance, acknowledging our dependence on Him.

💥We should prioritize our spiritual growth above all else.

💥Our focus should be on seeking His kingdom and righteousness, rather than pursuing worldly success.

*‼️LEAN NOT ON YOUR OWN UNDERSTANDING BUT SEEK GODS WILL‼️*

Princess Hudson


-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x


2 kings 15:34,35

*Do what is right in God's sight inall areas of your life*

Much good can be said of Jotham and his reign as king of Judah but he failed in the most important area.He didnot destroy the high place.So he violated the first commandment Ex 20 :3

Jotham was like his father uzziah rather than like David .Prosperity of Uzziah' s reign continued during his Son Jotham' s reign .Jotham constructed many judean sites.2 chron 27:3,4 He also conquered the Ammonites.He failed to centralize worship of Lord in Jerusalem,but allowed people to worship at high places.

Like Jotham ,we may lead basically good lives.and yet miss doing what God wants us to do

*A life of doing good is not enough if we make the mistake of not following God with all our heart* A true believer puts God first in all areas of life.

Cynthia Sathiaraj. Chennai

-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x


*2 இராஜாக்கள் 14,15*

“ *அமத்சியா* “

யூதாவின் இராஜாவாகிய அமத்சியா.. தனது ஆரம்ப நாட்களில், கர்த்தரின் பார்வைக்குச் செம்மையானதைச் செய்தான்..

( 2 இரா.14 : 3 )

ஆனாலும், அவன் தொடர்ந்து அவ்விதம் ஜீவிக்கவில்லை..

அமத்சியா, ஏதோமியர் மீது யுத்தம் செய்தான்.

அந்த யுத்தத்திலே வெற்றிபெற்றான்..

அதனால், அவனுக்குப் பெருமை உண்டாயிற்று..

( 2 இரா.14 : 7 )

அமத்சியாவின் நாட்களிலே.. இஸ்ரவேல் தேசத்தில், யோவாகாசின் குமாரனாகிய யோவாஸ் ராஜாவாயிருந்தான்.

அமத்சியா..இஸ்ரவேலின் ராஜாவினிடத்தில்..

ஸ்தானாபதிகளை அனுப்பி..

நம்முடைய சாமர்த்தியத்தைப் பார்ப்போம் வா என்று சொல்லச் சொன்னான்..

(2 இரா. 14: 8 )

*அழிவுக்கு முன்னானது* *அகந்தை*..

*பெருமைக்கு முன்னானது மன* *மேட்டிமை*..

யோவாஸ், அமத்சியாவின் பெருமையைக் கடிந்துகொண்டான்…அமத்சியா ,யத்தம்பண்ணாமல் அமைதியாயிருக்க..

ஒரு உவமையைச் சொன்னான்..

( 2 இரா.14 : 9,10 )

யூதாவின் ராஜாவாகிய அமத்சியா..லீபனோனிலுள்ள ஒரு முட்செடி என்றும்..

இஸ்ரவேலின் ராஜாவாகிய யோவாஸ்.. லீபனோனிலுள்ள ஒரு கேதுரு மரம் என்றும் கூறினான்..

கேதுரு மரம், கெம்பீரமாக வளரும்..அது எல்லோருக்கும் பிரயோஜனமுள்ளது..

முட்செடி, மதிப்பற்றது..

பயனற்றது..

முட்செடி எரியும்போது ஆரவாரத்தோடு எரியும்..

ஆனால் சீக்கிரம் கருகி

சாம்பலாகும்..

அமத்சியாவும் முட்செடியைப் போல.. ஆரவாரம்பண்ணுகிறான்..

ஆனால், அவனுடைய ஆரவாரம் நிலைத்திருக்காது என்றான்..

லீபனோனிலுள்ள ஒரு காட்டு மிருகம், முட்செடியை மிதித்துப் போட்டது என்பது..

யோவாஸின் ராணுவம், அமத்சியாவை மிதித்து, அழித்துப்போடும் என்பதாகும்..

*பெருமையும் பேராசையும்* *கொண்ட அமத்சியா*..

*யோவாஸின்* *புத்திமதிகளுக்கும்*...

*ஆலோசனைகளுக்கும்* *செவிகொடுக்க மறுத்தான்*..

அங்கே யுத்தம் நடந்தது..

அமத்சியா தோல்வியடைந்தான்..

எருசலேம் அலங்கம் இடிக்கப்பட்டது..

அரண்மனைப் பொக்கிஷங்களும்..

ஆலயத்திலுள்ள பொன்னும், வெள்ளியும்..பணிமுட்டுகள் யாவும்..சமாரியாவுக்குக் கொண்டு போகப்பட்டன..

அமத்சியாவுக்கு அவமானத்துடன்..

பேரிழப்பும் உண்டானது..

(2 இரா.14 : 12-14 )

*பெருமை சிறுமையை* *உண்டுபண்ணும் என்பது அங்கே* *உண்மையாயிற்று*..

இந்த உலகத்திலே.. கர்த்தர் வெறுக்கும் காரியங்களில் ஒன்று.. பெருமை..

அது ஆவிக்குரிய பெருமையாக இருந்தால்..அது இன்னமும் அதிக மோசமானது..

நமது ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து..

சிலுவையின் மரணபரியந்தமும் தம்மைத் தாழ்த்தினார்..

ஆதலால், தேவன் எல்லாவற்றிற்கும் மேலாக அவரை உயர்த்தினார்..

அது மட்டுமல்ல..எல்லா நாமத்திற்கும் மேலான நாமத்தை அவருக்குத் தந்தருளினார்..

(பிலி.2 :5-9 )

*கிறிஸ்து இயேசுவிலிருந்த*

*சிந்தையே ..நம்மிடமும்* *காணப்படவேண்டும்*…

ஒவ்வொரு நாளும்.. பல்வேறு பாரங்களும்..பாவங்களும் நம்மை நெருங்கி நிற்கும் சூழ்நிலைகளிலே..

தேவனே ..எங்களுக்கு என்ன செய்வதென்று தெரியவில்லை..

உம்மை மாத்திரம் நாங்கள் நம்பியிருக்கிறோம் என்று அவரையே அண்டிக்கொள்வோம்..

*தாழ்மையுள்ளவர்களுக்குத்* *தேவன் கிருபையளிக்கிறார்*…

*தேவனின் கிருபை, நம்மைக்* *கீழ்ப்படிதலுக்கு வழிநடத்தும்*..

*அது நம்மை வெற்றியைச்*

*சுதந்தரிக்கச் செய்யும்*..

*தாழ்மையே.. தேவனுடைய* *பிள்ளைகளின் பண்பாகும்*..

*நம்முடைய வாழ்வில் அது*

*வெளிப்படுகிறதா*..?


*கர்த்தருக்கு முன்பாகத்* *தாழ்மைப்படுங்கள்*..

*அப்பொழுது அவர் உங்களை* *உயர்த்துவார்*..

( யாக்.4 : 10 )


மாலா டேவிட்

-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x

2 இராஜாக்கள் 15* இல் இருக்கிறோம்

*RISE AND FALL OF KING AZARIAH*

*அசரியா ராஜாவின் எழுச்சி மற்றும் வீழ்ச்சி*

📝 யூதா தேசம் *தொடர்ந்து நடந்த மூன்று படுகொலைகளிலிருந்து* மீண்டு வருகிறது:

✅ *அகசியா* ( 9:27 )

✅ *யோவாஸ்* ( 12:20 )

✅ *அமத்சியா* ( 14:19 ) .


🙋‍♂️ *உசியா* என்றும் அழைக்கப்படும் *அசரியா* (2 நாளா 26:1; ஏசாயா 6:1 ) மக்களால் விரும்பப்பட்டு அரியணைக்கு வருகிறார் ( *2 நாளா 26:1* ), ஆனால் துரதிர்ஷ்டவசமாக அவர் குஷ்டரோகத்தால் பாதிக்கப்பட்டார் ( *2 இராஜா 15: 1 -6* ).

📍" *அசரியா* தன் தகப்பனாகிய அமத்சியா செய்தபடியெல்லாம் கர்த்தரின் பார்வைக்குச் செம்மையானதைச் செய்தான்" ( *வ. 3* ) என்று உரை வெளிப்படுத்துகிறது.

📍அவன், ( *"... கர்த்தருக்கு பயப்படும் பயத்தை அசரியாவுக்குப் போதித்த"* 2 நாளா 26: 5 ), சகரியாவால் புத்திசாலித்தனமாக வழிநடத்தப்பட்டான்.

🙋‍♂️ அசரியா எருசலேமில் *52 ஆண்டுகள்* ஆட்சி செய்தார் (வ. 2). இந்தக் காலக்கட்டத்தில் *6 ராஜாக்கள்* இஸ்ரவேலை ஆண்டதைக் கண்டார். இந்த 6 ராஜாக்களில், *4 ராஜாக்கள்* அவர்களின் வாரிசுகளால் அடுத்தடுத்து கொல்லப்பட்டனர்.

1) *யெரொபெயாம் II* வ 1

2) *சகரியா* வ 8-12

3) *சல்லூம்* வ 13-15

4) *மெனாகேம்* வ 17-22

5) *பெக்காகியா* வ 23-25

6) *பெக்கா* வ 27-31


🙋‍♂️ அசரியா தனது தெய்வீகப் பெற்றோரின் (அமத்சியா மற்றும் எக்கோலியாள்) கீழ் நன்றாகத் தொடங்கினார், பின்னர் சகரியாவால் *(அவன் சகரியாவின் நாட்களிலே கர்த்தரைத் தேட மனதிணங்கியிருந்தான்...* 2 நாளா 26:5 ) வழி நடத்தப்பட்டான்.

📍 *தேவன் அவனுக்கு வெற்றியைக் கொடுத்தார். ஆனால் அவனது முடிவு அபாயகரமாக இருந்தது;* பின்வரும் காரணிகள் நிமித்தம்:

~ *பெருமை* ( 2 நாளாக 26:16 )

~ *விசுவாசமின்மை* ( 2 நாளா 26:16 )

~ *ஆசாரியத்துவத்தை அவமரியாதை செய்தான்* (2 நாளா 26:16 ஆ)

~ *பிடிவாதம்* ( 2 நாளா 26:17-19 )

🙋‍♂️ அவனை பிதாக்களுடனே அல்ல, ராஜாக்களை அடக்கம் பண்ணுகிற இடத்திற்கு *அருகான* நிலத்தில் அடக்கம் பண்ணினார்கள். (2இராஜாக்கள் 15:7; 2நாளா 26:23)

💞 அன்பான திருச்சபையே, *பெருமை, விசுவாசமின்மை மற்றும் பிடிவாதம்*, இந்தக் காரணிகள் அனைத்தும் நமது ஆவிக்குரிய வாழ்க்கையின் வீழ்ச்சிக்கு இன்றும் மிகவும் பொருத்தமானவை.

தேவனுக்கே மகிமை 🙏

✍🏽 *மார்க் போஜே*

அருணாச்சல பிரதேசம், இந்தியா

தமிழாக்கம் ஜஸ்டஸ் ராஜேந்திரன்


-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x


SEEK THE WILL OF GOD🙇*

*🙇‍♀️தேவனுடைய சித்தத்தை தேடு🙇*

2 இராஜாக்கள் 14


☄️அமாசியாவின் வாழ்க்கையின் மூலம், பெருமை, அதிகாரம் மற்றும் மகிமையின் நாட்டம் மற்றும் தேவன் மற்றும் அவருடைய வார்த்தையின் மீது நம்பிக்கை வைப்பதன் முக்கியத்துவத்தைப் பற்றி அறிந்து கொள்கிறோம்.


1️⃣ *பெருமையின் ஆபத்துகள்*

🔹அமாசியா தனது ஆட்சியை பெரும் ஆற்றலுடன் தொடங்கினார்.

🔹அவர் தேவனுடைய பிரமாணங்களைப் பின்பற்றி, அவருடைய கட்டளைகளுக்குக் கீழ்ப்படிய முயன்றார்.

🔹இராணுவ வெற்றியை அவர் அனுபவித்தவுடன், அவரது இருதயத்தில் பெருமை படர ஆரம்பித்தது.

🔹தெய்வீக வழிகாட்டுதலை நாடாமல், மிகவும் சக்திவாய்ந்த தேசமான இஸ்ரவேலுக்கு சவால் விடுவதற்கு அது அவரை வழிநடத்தியது.

🔹இந்த பெருமித மனப்பான்மை இறுதியில் அவரது வீழ்ச்சிக்கு வழிவகுத்தது.

🔹பெருமை நம் தீர்மானிக்கும் திறனை மழுங்கடித்து, தேவனுடைய சித்தத்திலிருந்து நம்மை வழிதவற விடாமல் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.

🔹தேவனுடைய நோக்கங்களோடு இணைந்த இதயத்தைப் பேணுவதற்கு மனத்தாழ்மையே முக்கியமாகும்.


2️⃣ *அதிகாரத்தைத் தேடுவதன் விளைவுகள்*

🔸அமாசியாவின் அதிகாரம் மற்றும் அங்கீகாரத்திற்கான ஆசை அவரை அண்டை நாடுகளுடன் கூட்டணி வைக்கத் தூண்டியது.

🔸தேவனுடைய வாக்குறுதிகளை நம்புவதற்கு பதிலாக மனித பலத்தில் நம்பிக்கை வைத்தார்.

🔸இந்த முடிவு கடுமையான விளைவுகளை ஏற்படுத்தியது, இதன் விளைவாக அவர் தோல்வியடைந்தார் மற்றும் எருசலேம் கொள்ளையடிக்கப்பட்டது.

🔸பூமிக்குரிய வல்லமையும் மகிமையும் விரைவில் கடந்துபோகும் என்றும், அவற்றை தேவனுடனான ஆழமான உறவிலிருந்து வரும் நித்திய ஆசீர்வாதங்களுடன் ஒருபோதும் ஒப்பிட முடியாது என்பதையும் நினைவூட்டப்படுகிறோம்.


3️⃣ *தேவனை நம்புவதன் முக்கியத்துவம்*

🔺அமசியா தனது தோல்விகளின் மத்தியிலும், தனது துன்பத்தில் தேவனிடம் திரும்பியபோது தேவனுடைய இரக்கத்தையும் கிருபையையும் அனுபவித்தார்.

🔺தேவனிலும் அவருடைய வார்த்தையிலும் நம்பிக்கை வைப்பதன் முக்கியத்துவத்தை அவருக்கு நினைவூட்டபட்டது.

🔺நம்பிக்கை மற்றும் கீழ்ப்படிதல் மூலம் தான் உண்மையான பலத்தையும் விடுதலையையும் காண்கிறோம்.

🔺நம் சொந்த வாழ்க்கையில், நாம் பல்வேறு சவால்களையும் சோதனைகளையும் சந்திக்க நேரிடலாம். இருப்பினும், தேவன் உண்மையுள்ளவர் மற்றும் அவருடைய வார்த்தை மாறாதது என்பதில் நாம் ஆறுதல் அடையலாம்.

🔺நம் வாழ்வின் ஒவ்வொரு அம்சத்திலும் அவருடைய வழிகாட்டுதலையும் ஞானத்தையும் நாடி, அவர்மீது நம்பிக்கை வைப்போம்.


♥️ *வாழ்க்கை பாடங்கள்*

💥தேவன் மீது நாம் சார்ந்திருப்பதை ஏற்றுக்கொண்டு, அவருடைய வழிகாட்டுதலை நாம் தொடர்ந்து நாட வேண்டும்.

💥எல்லாவற்றுக்கும் மேலாக நமது ஆவிக்குறிய வளர்ச்சிக்கு முன்னுரிமை கொடுக்க வேண்டும்.

💥உலக வெற்றியைப் பின்தொடர்வதை விட, அவருடைய ராஜ்யத்தையும் நீதியையும் தேடுவதில் நமது கவனம் இருக்க வேண்டும்.


*‼️ உன் சுயபுத்தியின்மேல் சாயாமல், கர்த்தருடைய சித்தத்தை தேடு‼️*

பிரின்சஸ் ஹட்சன்
தமிழாக்கம் இன்னிசை செல்வி மும்பை

-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x

 Mrs Merin Gnanaraj

Covai

🎯தலைப்பு:

❤️தேவன் காண்பித்த இரக்கம்.

2 இராஜா 14:23 - 29.


🎯தியானம்:

🔸இஸ்ரவேல் ஜனங்களும் ராஜாக்களும் கர்த்தருக்குக் கீழ்படியாமல் ,

🔸விக்கிரகங்களுக்கு அடிமையாக வாழ்த்து கொண்டிருந்தனர்.

ஆனாலும்,

🔸இஸ்ரவேலின் உபத்திரவம் மிகவும் கொடிது என்றும்,

🔸அடைபட்டவனுமில்லை,

🔸விடுபட்டவனுமில்லை,

🔸அவனுக்கு ஒத்தாசை செய்ய ஒருவனுமில்லை

என்பதை கர்த்தர் பார்த்தார் (14:26)

🔸அவர்கள் பாவத்தினிமித்தம்

அவர்கள் பேரை வானத்தின் கீழிருந்து "தொலைத்துப் போடுவேன்" என்று சொல்லாமல்,

🔸யெரோபெயாமின் கையால்

அவர்களை" இரட்சித்தார்"


🎯இரண்டாம் யெரோபெயாம்:

🔸வடக்கு அரசின் புகழ் பெற்ற அரசரான உம்ரியை போலவே இரண்டாம் யெரோபெயாமும் புகழ் பெற்றவராயிருந்தார்.

🔸மிகவும் வலிமை மிக்கவர்

🔸அதிக வருடம் (41 வருடங்கள்) இஸ்ரவேலில் ராஜாவாக இருந்தவர்.( 14:23)

🔸இஸ்ரவேலின் எல்லைகளை திரும்ப சேர்த்தவர்.

📍அவரது காலத்தில் இஸ்ரவேல் செழிப்பு மிக்க, அரசியல் பலமிக்க நாடாக திகழ்ந்தது.

ஆனால்

📍வரலாற்றில் சிறப்பிடம் பெற்ற இவரைப் பற்றி வேதம் 7 வசனங்களில் நிறுத்திக் கொள்கிறது .

🎯ஏன் ❓

🔸இஸ்ரவேலிற்கு கர்த்தர் பண்ணின உடன்படிக்கையை நிறைவேற்றவும்

🔸இஸ்ரவேலின் மேல் காட்டிய இரக்கத்தினிமித்தமும் மட்டுமே அவனை தேவன் பயன்படுத்தினார்

🔸ஆனால் இவரோ முதலாம் யெரோபெயாமின் அடிச்சுவடுகளைப் பின்பற்றி பாவம் செய்தார்

📍வரலாற்றில் சிறப்பிடம் பெறுவது,

📍வேதத்தில் சிறப்பிடம் பெறும் தகுதி அல்ல.

🎈மனிதன் பார்க்கிற படி தேவன் பார்ப்பதில்லையே.

🎈தேவன் தன் ஜனங்களுக்கு இரக்கம் காட்டுவார்

🎈அவர்களுக்கான இரட்சகர்களை ஏற்படுத்துவார்.


❤️" ஒடுக்கப்படுகிறவர்களினிமித்தம் அவர்கள் கர்த்தரை நோக்கிக் கூப்பிடுவார்கள்.

அப்போது அவர்களுக்கு ஒரு இரட்சகனையும்

ஒரு பெலவானையும் அனுப்பி அவர்களை விடுவிப்பார்" ஏசா 19:20

ஆமென்.🙏


-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x


*🔥*சிப்பிக்குள் முத்து🔥*


இன்றைய வேத வாசிப்பு பகுதி -

*2 இராஜா : 14, 15*

*💠முத்துச்சிதறல் : 114*

🥏🦀🥏🦀🥏🦀

காத்தேப்பேர் ஊரானாகிய *"அமித்தாய் என்னும் தீர்க்கதரிசியின்"* குமாரன் யோனா என்னும் தம்முடைய ஊழியக்காரனை கொண்டு *இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தர் சொல்லியிருந்த வார்த்தையின்படியே,*

அவன்

*ஆமாத்தின் எல்லை முதற் கொண்டு சம பூமியின் கடல் மட்டுமுள்ள இஸ்ரவேலின் எல்லைகளை* திரும்ப சேர்த்து கொண்டான்.

*(2 இராஜா - 14 : 25)*

🦀🥏🦀🥏🦀🥏


*🔰இறைவனின் எல்லையற்ற ஆதரவு🔰*

🍧📌🍧📌🍧📌

இஸ்ரவேலின் வட இராஜ்யத்தை ஆளுகை செய்த அரசர்கள் பெரும்பாலும் யெரோபேயாமின் வழிகளில், விக்கிரக வழிபாட்டினராகவே இருந்தனர்.

*கர்த்தரோ முழு இஸ்ரவேலர் மீதும் அன்பு கூறுகின்ற கடவுளாகவே அவர்களோடு நடந்து கொண்டார்.*

மக்களை தம் பக்கம் திருப்ப வேண்டி அவர் தமது வாக்குரைஞர்களை அவர்கள் மத்தியில் அனுப்பி அவர்களை எச்சரித்து கொண்டே வழிநடத்தி வந்தார்.

இங்கு வட இராஜ்யத்தில் இப்பொழுது *இரண்டாம் யெரோபேயாம்* ஆட்சியில் அமர்கிறார்.

இவர் நேபாத்தின் குமாரன் யெரோபேயாம் (முதலாம் யெரோபேயாம்) ஆட்சி செய்து முடித்த பின் ஏறத்தாள.....

*150 வருடங்களுக்கு பின் அரியணை ஏறுகிறார்.*

💊🪂💊🪂💊🪂💊

*இவர் நாட்களில் ஓர் கடுமையான பூமி அதிர்ச்சி நிகழ்ந்ததாக ஆமோஸ் தீர்க்கதரிசி குறிப்பிடுகிறார்.*

(ஆமோஸ் - 1 : 1)

கர்த்தரின் ஜனங்களின் பொல்லாப்புகள், துன்மார்க்கத்தனங்கள் நிமித்தம் இந்த நியாயதீர்ப்பு வந்திருக்க வாய்ப்புகள் அதிகம்.

ஏன் என்றால்....

*இரண்டாம் யெரோபேயாமின் ஆட்சி காலத்தில் பயங்கர செழிப்பாக தேசம் இருந்துள்ளது.* செழிப்பு வரவும் ஆடம்பரங்கள், விக்கிரக வணக்கங்கள், ஊழல்கள், எளியோரை ஒடுக்குதல் போன்ற நிலைகள் உண்டாகி இருக்க வாய்ப்புகள் அதிகம்.

*அதினிமித்தம் கர்த்தர் இந்த இரண்டாம் யெரோபேயாமின் நாட்களில் பூமி அதிர்வை கட்டளையிடவும்....*

🎈தேசம் அதிர்ந்தது

(ஆமோஸ் - 8 : 8)

🎈பெரிய வீடுகளில் திறப்புகளும், சிறிய வீடுகளில் வெடிப்புகளும் உண்டாயின.

(ஆமோஸ் - 6 : 11)

🎈பெத்தேலின் பலிபீடங்களில் உள்ள கொம்புகள் வெட்டுண்டு (இடிந்து) தரையில் விழுந்தது.

(ஆமோஸ் - 3 : 14)

என...

*ஸ்டீவன் ஆஸ்டின்* என்பவர் குறிப்பிடுகிறார்.

🛍️🎊🛍️🎊🛍️🎊

அரசன்

*இரண்டாம் யெரோபேயாம்* பொல்லாதவனாக கர்த்தருக்கு பயப்படாதவனாக நடந்த போதிலும்.... கர்த்தர் கிருபையுள்ள தேவனாக தம் ஜனங்களிடம் தமது தாசர்களாகிய ஆமோஸ் மற்றும் யோனா போன்றோரை கொண்டு பேசி கொண்டு தான் இருந்தார்.

*இந்த இரண்டாம் யெரோபேயாமின் ஆட்சி காலகட்டத்தில் தான் யோனா உரைத்த வார்த்தை நிறைவேறும் காலமாக இருந்தமையால்....*

இவன் (இரண்டாம் யெரோபேயாம்) ஆமாத்தின் எல்லை முதற் கொண்டு சம பூமியின் கடல் மட்டுமுள்ள இஸ்ரவேலின் எல்லைகளை திரும்ப சேர்த்து கொள்ள கர்த்தர் இவனுக்கு துணை நின்றாராம்.

*வட எல்லை ஆமாத்தாக சாலாமோனின் ஆட்சி காலத்தில் இருந்தது.*

(1 இராஜா - 8 : 65), *தென் எல்லை சவ கடல் மட்டும் இருந்தது.*

(யோசு - 3 : 16 :, 12 : 3)

இவைகளை சீரியர்களும் ஆசீரியர்களும் கைப்பற்றி வைத்து இருந்தனர்.

*இவன் கடந்து சென்று கர்த்தர் இஸ்ரவேலுக்கு குறித்து இருந்த அந்த எல்லைகளை எதிரிகளிடம் யுத்தம் செய்து அவர்களை மேற்கொண்டு அவ்வற்றை மீண்டும் இஸ்ரவேல் எல்லைக்குள்ளாக்கி கொண்டான்.*

*இவை சுலபமான காரியம் அல்லவே.*

இந்த ஆமாத் என்பது கலிலேயா கடலில் இருந்து 160 மைல் தொலைவில் உள்ள ஒரோண்டஸ் நதி அருகே இருந்த ஓர் பட்டிணமாகும்.

இவன் தமஸ்குவையும் கூட தனது கட்டுப்பாட்டில் கொண்டு வந்தவன்.

ஆசீரியர்களின் படையெடுப்பினால் சீரியர்கள் துவண்டு நின்ற நேரமது.

அதே நேரம் ஆசீரியர்களும் தங்கள் வட எல்லைகளில் யுத்தங்களை மற்றும் மிரட்டல்களை சந்தித்து கொண்டு இருந்த நேரம்.

இவையாவும் இந்த இரண்டாம் யெரோபேயாம் வல்லமை மிக்கவனாக விளங்க வழி வகுத்து கொடுத்து விட்டதாக சரித்திரம் கூறுகிறது.

*இந்த இரண்டாம் யெரோபேயாம் யெகூ அரசனின் 3ம் தலைமுறை.*

*இஸ்ரவேலின் 13வது அரசனாக அறிய படுகிறான்.*

இஸ்ரவேலர் விக்கிரக வழிபாட்டினராக அவருக்கு கோபம் மூட்டி கொண்டிருந்த காலகட்டம், அதே வேளை யோனா உரைத்து இருந்த தீர்க்கதரிசனம் இவன் காலத்தில், இவன் ஆட்சியின் போது நிறைவேற வேண்டிய காலகட்டமாகவும் இருந்த மையால்...

*இந்த இரண்டாம் யெ ரோபேயாம் மூலம் கர்த்தர் இஸ்ரவேலுக்கு ஓர் இளைப்பாறுதலை கட்டளையிட்டார்.*

*கர்த்தர் அவனுக்கு சகாயமாக இப்படி துணை நிற்க காரணம் என்ன❓️*

*📌1.* யோனா மூலம் அவர் உரைத்து இருந்ததை நிறைவேற்ற

*📌2.* இஸ்ரவேல் சீரியரின் கடுமையான ஒடுக்குதலுக்குள் சென்று கொண்டு இருந்தது. இறைவன் ஒருவர் தவிர் வேறெவரும் அவர்களை விடுவிக்க இயலாத நிலை.

ஆகையால் இந்த பொல்லாதவனாய் இருந்த இரண்டாம் யெரோபேயாமை கர்த்தர் எடுத்து பயன்படுத்தி சீரியரை துரத்தி அடித்து இஸ்ரவேலின் எல்லையை மீண்டும் இஸ்ரவேலுக்கே வழங்கி விட்டார்.

✅️👍✅️👍✅️👍

ஆம்

*இறைவன் ஓர் பொல்லாத அரசனை கொண்டு கூட தம் காலத்தில் தம் வார்த்தையை நிறைவேற்ற வல்லவராக இருக்கிறார்.*

நல்லார் ஆட்சி காலம் என்றும், பொல்லார் ஆட்சி காலம் என்றும் எதுவாக இருப்பினும், அவர் ஏற்கனவே கூறியிருந்த *வார்த்தை நிறைவேற வேண்டிய காலத்தில் எவர் ஆட்சி செய்கிறாரோ அவரை கொண்டு தம் அநாதி சித்தத்தை இறைவன் நிறைவேற்றி கொள்ளுகிறார் என்பதை நாம் புரிந்து கொண்டு......*

யார் ஆட்சி செய்தாலும்....

அவர் வாக்கு நிறைவேறும் காலத்தில் நிறைவேறியே தீரும்.

நல்லவர்கள் ஆட்சி செய்தால் மாத்திரம் வாக்கு நிறைவேற முடியும் என்னும் தப்பான எண்ணங்களில் இருந்து வெளியே வந்து....

இஸ்ரவேலின் உபத்திரவம் மிகவும் கொடிது என்றும், அடைப்பட்டவனுமில்லை, விடுபட்டவனுமில்லை, இஸ்ரவேலுக்கு ஒத்தாசை செய்கிறவனும் இல்லை என்றும் கர்த்தர் பார்த்தாராம்.

*இஸ்ரவேலின் (செய்துள்ள அக்கிரமத்தினிமித்தம்) பேரை வானத்தின் கீழிருந்து குலைத்து போடுவேன் என்று கர்த்தர் சொல்லாமல்*

யோவாசின் குமாரன் யெரோபேயாமின் கையால் அவர்களை இரட்சித்தாராம்.

*(2 இராஜா - 14 : 26, 27)*

🍇கர்த்தருக்கு பிரியமில்லாமல் யெரோபேயாம் நடந்த மனிதராக இருப்பினும்.....

அவர் கையால் ஆண்டவர் இஸ்ரவேலை இரட்சித்தார், விடுதலையாக்கினார்

🍇இராஜ அரியணையை சமாதானத்துடன் சுவீகரித்து கொண்டவர் எண்ணப்படுகிறார்.

🍇வியாதியினாலோ, இல்லை வேறெவரும் இவரை கொல்லாமல், இயற்கை மரணம் எய்தினார்.

🍇கர்த்தரின் பார்வைக்கு பொல்லாப்பானதை செய்த அரசன் இவர்.

*ஆனால் இப்படி பட்டவர் காலத்தில் கர்த்தரின் தீர்க்கதரிசனம், யோனா மூலம் சொல்ல பட்ட வார்த்தைகள் யாவும் நிறைவேறியது.*

❣️💠❣️💠❣️💠❣️

ஆகையால் பொல்லாதோர் ஆட்சியில் இருந்தாலும்.... இறைவன் தமது ஏகாதிபத்திய வல்லமையை விளங்க செய்து பொல்லாதோர் மூலம் சுபீட்ச்சமும் உண்டாக்க வல்லவர் என்று விசுவாசிப்போமா❓️

*❣️Sis. Martha Lazar*

*NJC, KodaiRoad*

Tags

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.