Type Here to Get Search Results !

2 KINGS 11-13 Bible Study | ஆலயத்தை பழுது பாராதே போனதென்ன? | யோசேபாள் | Jesus Sam

======================
2 KINGS : 11 - 13 Bible Study in Tamil & English
======================
*WHAT A GOD WE SERVE* ❗️

*God who stirs His children to repair the damages of the Temple* ‼️(12:5)

💥 Do you not know that you are the temple of God and that the Spirit of God dwells in you? (1 Cori 3:6)

💥 If anyone defiles the temple of God, God will destroy him. For the temple of God is holy, which temple you are. (1Cori 3:17)

⁉️ *Why have you not repaired the damages of the temple?* (2 Kings 12:7)

💥 *REMOVE* that defiles (SIN)

💥 *REPAIR* the Altar (WORSHIP, PRAYER)

💥 *REBUILD* the broken (TESTIMONY)

💥 *RESTORE* back (WITNESS / WORD)

🙏🙏 *Lord, will You not REVIVE us again?* (Ps 85:6) Please Lord❗️

Usha


-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x

2 இராஜாக்கள்:11-13
💐💐💐💐💐💐💐
*மேடைகளை மாத்திரம் அகற்றவில்லை; ஜனங்கள் இன்னும் மேடைகளின் மேல் பலியிட்டுத் தூபம் காட்டி வந்தார்கள்*.
(2இராஜாக்கள்:12:3)
*அன்பானவர்களே*!
▪️மேடைகள் மட்டும் அகற்றப்படாமல் இருந்தன என்பதைப் பல தடவை வாசிக்கிறோம் அல்லவா?
▪️பல இராஜாக்கள் கர்த்தரின் பார்வைக்குச் செம்மையானவைகளைச் செய்து ஆட்சி செய்தார்கள்; ஆனால் மேடைகள் மட்டும் அகற்றப்படவில்லை.
▪️முழுமனதோடு என்ன வந்தாலும் வரட்டும் என்று துணிச்சலோடு மேடைகளை நொறுக்கிப்போட அநேகர் முன்வரவில்லை.
▪️இன்று நம்முடைய வாழ்க்கையில் மேடைகள் இடிக்கப்படாமல் உள்ளதா?
வேறு எதையாகிலும் யாரையாகிலும் அதிகமாக நேசிக்கிறவராகளாக இருக்கிறோமா?
*உலக சிநேகம் தேவனுக்கு விரோதமான பகை*
என்று அறியீர்களா?
▪️உலகப்பிரகாரமான அழிந்து போகக்கூடிய அற்பமான பொருட்களை விக்கிரகங்கள் போல் அதிகமாக நேசித்து ஆராதனை செய்து மேடைகள் போல உள்ளத்தில் உயர்த்தி வைத்துக் கொண்டிருக்கிறோமா?
இந்த உள்ளத்தின் மேடைகளை இன்றே இடித்துப்போட்டு, கர்த்தர் ஒருவருக்கு மட்டும் முக்கியத்துவம் கொடுத்து வாழ்வோமாக.
*உலகத்திலும் உலகத்திலுள்ளவைகளிலும் அன்பு கூராதிருங்கள்: ஒருவன் உலகத்தில் அன்புகூர்ந்தால் அவனிடத்தில் பிதாவின் அன்பு இல்லை*.(1 யோவான் 2:15)
*உலகப்பிரகாரமாக எவைகளை மேடைகள் போல உள்ளத்தில் வைத்து ஆராதிக்கிறோமோ, அவைகள் எவை என்பதை ஆண்டவரின் பாதத்தில் அமர்ந்து தற்பரிசோதனை செய்து, அறிந்து, அந்த மேடைகளை இடித்துப் போட்டு, கர்த்தரோடு ஒவ்வொரு நாளும் நெருங்கி உறவாடி வாழும் உன்னத வாழ்க்கைக்கு நேராக திரும்புவோமாக*.
*ஆமென்*
✍️ Tmt. Bhavani Jeeja Devaraj,
Nagercoil.


-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x

Deliverance is available to us and yet the Lord won’t do it apart from our partnering with Him, joining ourself to Him.*

⛹️‍♂️ *Application* : II Ki.13:14-19- *This story is a classic example of the importance of fervency and the danger of lethargy. The attack of Satan manifests itself in three primary ways: through sin, through sickness, and through self. God not only desires to bring deliverance to us, but also to work deliverance through us in such a way that others who are hurting may be delivered as well.* Deliverance is available to us and yet the Lord won’t do it apart from our partnering with Him, joining ourself to Him. *He will place His hands upon ours but we must grab the arrow, open the window, and say, “I need You.” What do those arrows speak of? They speak of the arsenal we have been given by the Lord to bring about the deliverance* He intends for us to experience daily…

*1️⃣The most important arrow in our arsenal is prayer.* We can do more than pray, but we can’t do anything until we first pray.

*2️⃣A second arrow in our quiver is the Word of God.* When Jesus was doing battle against Satan in Matthew 4, every time Satan came at Him, Jesus repelled Him by quoting Scripture.

*3️⃣Another arrow in our quiver is the word of faith.* Jesus said, “Say to the mountain be removed and it shall be removed” (see Matthew 17:20).

*4️⃣There is power in praise!* If we put on the garment of praise for the spirit of heaviness, we will find the spirit of heaviness fleeing from us quickly.

*5️⃣There is much more power in the Lord’s Table than we can even imagine.* When we eat of the bread and drink of the cup of Jesus Christ, in a sense, we are being born again—and again. And we need that.
The Lord’s Table, the power of praise, the spoken word of faith, the written Word of God, passionate prayer, whichever arrow we grab, let us grab it energetically and beat it expectantly, for without faith, it is impossible to please Him (Hebrews 11:6).

💡II Ki.12:1- II Ki.12:1-Joash (or Jehoash) began his reign as a child of seven and continued until he was forty-seven years old. His mother was Zibiah of Beer-sheba. *The mother’s names are often given because mothers have a tremendous influence on their sons.*

Jaya Pradeep-Kodaikanal.


-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x

☀️ *கர்த்தருடைய ஆலயத்தைப் பழுதுபார்த்தார்கள்* ☀️
❇️ *“கர்த்தருடைய ஆலயத்தைப் பழுது பார்க்கும்படிக்கு வேலைசெய்கிறவர்களுக்கே அதைக் கொடுத்தார்கள். வேலை செய்கிறவர்களுக்குக் கொடுக்கும்படிக்கு, பணத்தை வரப்பற்றிக் கொண்ட மனுஷர் கையிலே கணக்குக் கேளாதிருந்தார்கள்; அவர்கள் உண்மையாய் அதை நடப்பித்தார்கள்.”* (2 இராஜாக்கள் 12:14-15).

🔸 யோவாஸ் ராஜா ஆசாரியரை நோக்கி: கர்த்தருடைய ஆலயத்துக்குக் கொண்டுவரப்படுகிற எல்லாப் பணங்களையும் வாங்கி கொண்டு, ஆலயத்தில் எங்கெங்கே பழுது காண்கிறதோ, அங்கேயெல்லாம் ஆலயத்தைப் பழுதுபார்க்கவேண்டும் என்றான். ஆனாலும் ராஜாவாகிய யோவாசின் இருபத்துமூன்றாம் வருஷமட்டும் *ஆசாரியர்கள் ஆலயத்தைப் பழுதுபார்க்கவில்லை.* எனவே யோவாஸ் ராஜா ஆசாரியனாகிய யோய்தாவையும் மற்ற ஆசாரியர்களையும் வரவழைத்து, ஜனங்களிடம் இனி பணம் எதுவும் வாங்க வேண்டாம் என்று கூறினான். யோய்தாவின் திட்டத்தின்படி, பலிபீடத்தண்டையிலே வைக்கப்பட்டிருந்த ஒரு பெட்டியில் ஜனங்களிடமிருந்து நேரடியாக பணங்கள் சேகரிக்கப்பட்டன. ஜனங்கள் மகிழ்ச்சியுடன் மிகுந்த பணங்களைக் கொடுத்தார்கள். *"உற்சாகமாய்க் கொடுக்கிறவனிடத்தில் தேவன் பிரியமாயிருக்கிறார்."* (2 கொரிந்தியர் 9:7) என்பது தேவனுடைய வார்த்தை. அவர்கள் அந்த பணத்தை *மரங்களையும் வெட்டின கற்களையும் வாங்குகிறதற்கும், கர்த்தருடைய ஆலயத்தைப் பழுது பார்க்கும்படிக்கு வேலைசெய்கிறவர்களுக் கொடுப்பதற்கும்* பயன்படுத்தினார்கள்.

🔸 வேலை செய்கிறவர்கள் உண்மையாய் நடந்துகொண்டதால், பணத்தைக் குறித்து அவர்கள் கையிலே *கணக்குக் கேளாதிருந்தார்கள். தேவனுடைய ஊழியங்களில் பணத்தைக் கையாளும் தேவனுடைய பிள்ளைகள் அனைவரும் மிகவும் நேர்மையானவர்களாக இருக்க வேண்டும்.* கொரிந்திய கிறிஸ்தவர்களின் பொருளுதவியை எருசலேம் கிறிஸ்தவர்களுக்கு பவுல் எடுத்துச் சென்றபோது, எந்த விமர்சனமும் இருக்கக்கூடாது என்பதற்காக, பரிவர்த்தனைகளில் மிகவும் நேர்மையாக இருக்க வேண்டுமென்பதில் அவன் மிகவும் கவனம் செலுத்தினான். பவுலின் வார்த்தைகள்: *"எங்கள் ஊழியத்தினாலே சேர்க்கப்படும் இந்த மிகுதியான தர்மப்பணத்தைக்குறித்து ஒருவனும் எங்களைக் குற்றப்படுத்தாதபடிக்கு நாங்கள் எச்சரிக்கையாயிருந்து, கர்த்தருக்கு முன்பாகமாத்திரமல்ல, மனுஷருக்கு முன்பாகவும் யோக்கியமானவைகளைச் செய்ய நாடுகிறோம்.”* (2 கொரிந்தியர் 8:20-21).

🔸 இன்று ஆலயம் எங்கே? இன்று எருசலேமில் கர்த்தருடைய ஆலயம் இல்லையே.
தேவன் ஒரு சிறந்த ஆலயத்தை, *இயேசு கிறிஸ்து மூலமாக ஜீவனுள்ள ஆலயத்தை* உருவாக்கியுள்ளார். இன்று ஆலயம் என்பது *திருச்சபையே.* சபை என்பது ஒரு கட்டிடமல்ல, சபையில் உள்ள ஜனங்களே. பவுலின் மூலம் பரிசுத்தாவியானவர் திருவுளம் பற்றுகிறார்: *"அவர்மேல் மாளிகை முழுவதும் இசைவாய் இணைக்கப்பட்டு, கர்த்தருக்குள் பரிசுத்த ஆலயமாக எழும்புகிறது; அவர்மேல் நீங்களும் ஆவியினாலே தேவனுடைய வாசஸ்தலமாகக் கூட்டிக்கட்டப்பட்டுவருகிறீர்கள்.”* (எபேசியர் 2:21-22).

🔸 நமது சரீரங்கள் தேவனுடைய ஆலயம். பேதுருவின் வார்த்தைகள்: *"ஜீவனுள்ள கற்களைப்போல ஆவிக்கேற்ற மாளிகையாகவும், இயேசுகிறிஸ்து மூலமாய் தேவனுக்குப் பிரியமான ஆவிக்கேற்ற பலிகளைச் செலுத்தும்படிக்குப் பரிசுத்த ஆசாரியக்கூட்டமாகவும் கட்டப்பட்டுவருகிறீர்கள்."* (1 பேதுரு 2:5). பரிசுத்த ஆவியானவர் பவுல் மூலம் வெளிப்படுத்துகிறார்: *"உங்கள் சரீரமானது நீங்கள் தேவனாலே பெற்றும் உங்களில் தங்கியும் இருக்கிற பரிசுத்த ஆவியினுடைய ஆலயமாயிருக்கிறதென்றும், நீங்கள் உங்களுடையவர்களல்லவென்றும் அறியீர்களா?"* (1 கொரிந்தியர் 6:19).

🔸 *ஆலயமாகிய நம் சரீரங்கள் ஆவிக்குரிய பிரகாரமாக பழுதுபார்க்க வேண்டிய நிலையில் இருக்கலாம்.* பாவம் நம் சரீரத்தைக் கெடுக்கிறது, பாவத்தினால் நம் ஆத்துமா பாதிப்படைகிறது. *பாவம், சோதனை மற்றும் தீய ஆசைகள்* எல்லோரையும் தாக்குகின்றன. நம்முடைய பெற்றோரின் பாவமும் நம்மைப் பாதிக்கும். இப்போது, பாதிப்புகளை எவ்வாறு சீர்செய்வது? நம்மால் முடியாது, ஆனால் *இயேசுவால் முடியும்.* இயேசுவை நாம் நோக்கிப்பார்க்கலாம், அவரை நம்பலாம், ஏனென்றால் இயேசு சிலுவையில் சிந்திய இரத்தத்தின் மூலம் எல்லாவற்றிக்கும் கிரயம் செலுத்தி விட்டார். *அவருடைய சிலுவை மரணத்தினால்,* நம்முடைய பாவங்கள் அனைத்தும் மன்னிக்கப்படுகின்றன. அவருடைய *பரிசுத்த ஆவியானவர் நமக்குள் வந்து வாசம் பண்ணும்போது* நம்முடைய குற்றங்களும் பாவங்களும் துடைக்கப்படுகின்றன. *பரிசுத்த ஆவியானவர் நம்மில் வாசம் பண்ண வரும்போது, பழுதுபார்ப்பு ஆரம்பமாகிறது.* நாம் நமது ஆதி நிலைக்குத் திரும்பும் நாள் வரை, நித்திய ஜீவன் பெறும்வரை இந்த கிரியை தொடரும். *இயேசுவின் மீது விசுவாசமுள்ள அனைவரும், சீர்செய்யப்பட்டு, ஆதிநிலைக்குத் திருப்பப்பட்டு, நித்திய ஜீவன்வரைப் புதுப்பிக்கப்பட முடியும்.*

🔹 *நம் ஆவிக்குரிய வாழ்வில் ஏற்படும் சேதங்களை, பரிசுத்த ஆவியின் உதவியுடன், உடனடியாக பழுதுபார்ப்பதில் கவனமாக இருக்கிறோமா?*

✅ நாம் கற்றுக் கொள்ளும் *பாடங்கள்*:
1️⃣ *தம் ஊழியங்களுக்காக உற்சாகமாய்க் கொடுக்கிறவனிடத்தில் தேவன் பிரியமாயிருக்கிறார்.*

2️⃣ *தேவனுடைய ஊழியங்களில் பணத்தைக் கையாளும் தேவனுடைய பிள்ளைகள் அனைவரும் மிகவும் நேர்மையானவர்களாக இருக்க வேண்டும்.*

3️⃣ *நமது சரீரங்கள் தேவனுடைய ஆலயம்.*

4️⃣ *இயேசுவின் மீது விசுவாசமுள்ள அனைவரும், சீர்செய்யப்பட்டு, ஆதிநிலைக்குத் திருப்பப்பட்டு, நித்திய ஜீவன்வரைப் புதுப்பிக்கப்பட முடியும்.*
Dr. எஸ். செல்வன். சென்னை

-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x

 2.ராஜாக்கள்.13.
🌺🌺🌺🌺🌺🌺🌺
யோவாஸ் ஒரு தேவபக்தியற்ற மனிதன்.

ஆனாலும் தேவன் அவருடைய மிகுந்த இரக்கத்தினாலும், இஸ்ரவேலரை பற்றிய அக்கறையினாலும்
அவர்களுடைய ஜெபத்தைக் கேட்கிறார்.
எதிரிகளின் கீழ் இஸ்ரவேலைத் தாழ்த்த கடவுள் அனுமதித்தார். அவர்கள் கர்த்தரை நோக்கிக் கூப்பிட்டார்கள். பின்னர் அவர் ஓரு இரட்சகரை அனுப்பினார், இதனால் இஸ்ரவேலர் சிரியர்களின் கையிலிருந்து தப்பினார்கள்.
விடுவித்தவரின் பெயர் நமக்குத் தெரியாது. ஆனால் அவர் பரலோகத்தில் நன்கு அறியப்பட்டவர்.
கர்த்தருக்குப் பணியைச் செய்வதற்குப் பெயர் தேவையில்லை.
கடவுள் அவர்களுடைய ஜெபத்திற்குப் பதிலளித்து ஒரு மீட்பரை அனுப்பிய போதிலும், இஸ்ரவேலர்கள் உண்மைக் கடவுளின் தவறான வழிபாட்டை தொடர்ந்தனர்.
இஸ்ரவேலின் மனந்திரும்புதல் முழுமனதாக இருக்கவில்லை.
அவர்கள் துன்பப்பட்டதால் மட்டும் மனந்திரும்பினார்கள்
🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺
மேபி சுந்தர். சென்னை. இந்தியா

-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x

ஆலயத்தை பழுது பாராதே போனதென்ன?
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

2 இராஜாக்கள் 12: 5 - 7.
1. *ராஜாவாகிய யோவாஸ் ஆசாரியர்களை பார்த்து ஆலயத்தில் எங்கெங்கே பழுதுபட்டிருக்கிறதோ, அங்கேயெல்லாம் அதை பழுது பார்க்க வேண்டும்* என்றான். ஆனால் அவர்களோ ஆலயத்தை பழுதுபார்க்கவில்லை. ஆகவே யோவாஸ் ஆசாரியனான யோய்தாவையும், மற்ற ஆசாரியர்களையும் அழைத்து, *நீங்கள் ஆலயத்தை பழுது பாராதே போனதென்ன?* என்றான்.

2. ஆம், *நாமே தேவனுடைய ஆலயமாயிருக்கிறோம். பரிசுத்த தேவன் வாசமாயிருக்கும் தேவனுடைய ஆலயம் பரிசுத்தமாயிருக்கப்பட வேண்டும்.*

இன்று நம்முடைய ஆலயமாகிய நம் சரீரம் பரிசுத்தமாயிருக்கிறதா? நம்மை நாமே ஆராய்வோம்.
3. *ஆலயத்தை பழுதுபாராதே போனதென்ன?* நம்முடைய அனுதின வாழ்க்கையில் நம் வார்த்தையில், சிந்தனையில், செயலில் பாவம் வந்து விட்டால், நாம் அனுதினமும் அதை அறிக்கை பண்ணி இயேசு கிறிஸ்துவின் இரத்தத்தால் கழுவப்பட்டு சுத்திகரிக்கப் பட வேண்டும்.

அநேகர் நான் கிறிஸ்தவர் என்று கூறின போதும் *சாட்சியின் ஜீவியம் இல்லை. வாழ்க்கையில் கசப்பு, வைராக்கியம், மன்னியாமை, பொய், புறங்கூறுதல், கவலை, பயம், அவிசுவாசம், இச்சை என்னும் பல பல பாவங்களால் நம் ஆலயங்கள் பழுது பட்டு கிடக்கிறது.*

*ஒருவன் தேவனுடைய ஆலயத்தை கெடுத்தால், அவனை தேவன் கெடுப்பார்*. 1 கொரிந்தியர் 3: 17 தேவனுடைய ஆலயம் பரிசுத்தமானது. ஆகவே இந்த கடைசி காலத்தில் நாம் *அனுதினமும் இயேசுவின் இரத்தத்தால் கழுவப்பட்டு, பரிசுத்தமாய் வாழ்வது நம் வாழ்க்கையின் இலக்காக இருக்க வேண்டும். நம்மால் விட முடியாத பாவங்களை விட ஆவியானவரின் உதவியை கேட்டு ஜெபிப்போம். கர்த்தர் வெறுக்கிற பாவங்களை அறிந்து கொள்ள வேதத்தை வாசித்து, தியானித்து, வசனத்திற்கு கீழ்ப்படிவோம்*.

*ஆவியின் கனிகளாகிய அன்பு, சந்தோஷம், சமாதானம், பொறுமை, சாந்தம், இச்சையடக்கம் ஆகிய கனிகளால், சாட்சியின் வாழ்க்கையோடு வாழுவோம்.* ஆம், *நீங்கள் ஆலயத்தை பழுது பாராமல் போனதென்ன?* என்று கர்த்தர் நம்மிடம் கேட்கிறார்? பதில் கூற ஆயத்தமாயிருப்போம். ஆமென். அல்லேலூயா.
*Dr.Padmini Seĺvyn*


-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x

📗 *சிறிய குறிப்பு* 📗

🍂 *யோசேபாள்* 🍂

ஆகாப் மற்றும் யேசபேலின் மகள் அத்தாலியா தன் மகன் இறந்தபோது தாவீதின் வம்சத்தில் இருந்த அரச வாரிசுகள் அனைவரையும் கொல்ல ஆரம்பித்தாள் (2 இரா 11:1). *ஆனால் இந்த வம்ச வழியாகத்தான் மேசியா வருவார்*. ஆகவே அரச குலத்தைப் பாதுகாக்க தேவனாகிய கர்த்தர் ஒரு தைரியமான பெண்ணை எழுப்பினார்.

அவள் *அகாசியா ராஜாவின் ஒன்றுவிட்ட சகோதரி யோசேபாள்.* அவள் தன் சகோதரனின் மகனான யோவாசை அவனுடைய தாதியுடன் அழைத்துச் சென்று பள்ளி அறையில் ஒளித்துவைத்தாள். பின்னர் அவள் அவர்களை *பத்திரமாக கர்த்தருடைய வீட்டிலே* பாதுகாப்பாக ஒளித்து வைத்தாள்.

📖 *இவளோடேகூட அவன் ஆறுவருஷம் கர்த்தருடைய ஆலயத்தில் ஒளித்து வைக்கப்பட்டிருந்தான்; அத்தாலியாள் தேசத்தின்மேல் ராஜ்யபாரம்பண்ணினாள் (2 இரா 11:3).*

ஆறு வருடங்களாக ஒரு சின்னக்குழந்தையை எப்படி மறைத்து வைத்தாள் என்று ஆச்சரியமாக உள்ளது! *பிரதான ஆசாரியனை மணந்த ஒரே இளவரசி யோசேபாள் மட்டுமே.* குழந்தை கர்த்தருடைய வீட்டில் இருந்ததால் *ஆசாரியர்களைத் தவிர வேறு யாரும் உள் அறைகளுக்குள் நுழைய முடியாது.*

வருங்கால ராஜாவை பாதுகாப்பான இடத்தில் மறைத்து வைக்கும் ஞானம் யோசேபாளுக்கு இருந்தது. *தேவ நோக்கத்தைத் துணிச்சலுடன்* நிறைவேற்றத் தயாராக இருக்கும் யோசேபாள் போன்ற பெண்களை ஆண்டவர் இன்றும் எழுப்புகிறார். *நீங்கள் தேவனால் பயன் படுத்தப்பட விரும்புகிறீர்களா?*
_திருமதி ஷீலா ஜெபக்குமார்_ ✍🏼

-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x

Dangers of sin* 2 kings 13

The kings of the northern Kingdom were condemned for their godless ways and the people willingly followed them They followed false gods God repeatedly warned the people through his prophets and punished them through foreign invaders Nothing moved their hearts .

The people of Judah were not free of sin Many of the kings were guilty of gross sin and practised evil practices Despite God's acts of kindness and warnings through His prophets,the people persisted in sin God's judgement fell on them

Choosing sin rather than faithfulness to the only true God invite disaster however if there is genuine forgiveness,God will forgive His people *If we live faithful to the only true God ,He will give us good success .God's people should give God ,the first place in their lives and let God's word guide them*
Cynthia Sathiaraj
Chenna8
-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x

BRB (2 Kings 13) *God had some purpose in allowing Elisha to die of his sickness, even as when He gave Paul a thorn in his flesh.*

In Chapter 13:14, we read that Elisha was sick and died of that sickness.
Why didn't Elisha claim Exodus 15:26 ("I the Lord am your Healer”), as many preachers today would have asked him to do.

A man like Elisha had enough faith to raise the dead. So if he was not healed, it was certainly not due to lack of faith!

God had some purpose in allowing Elisha to die of his sickness, even as when He gave Paul a thorn in his flesh.

God could have taken Elisha to heaven in a chariot of fire as with Elijah. But He took Elisha to heaven in a more humiliating way.

We must submit to God’s dealings with us and never compare our lot with that of others.

But the amazing sequel to this story is that when the Moabites were later burying a man in that very same grave, as soon as the dead man came in contact with Elisha's bones, he arose from the dead (13:20,21).

So Elisha had more anointing in his dead bones than many preachers have today when they are alive!! There was certainly no lack of faith in his case.

Posted by Rambabu


-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x


☀️ *கர்த்தருடைய ஆலயத்தைப் பழுதுபார்த்தார்கள்* ☀️

❇️ *“கர்த்தருடைய ஆலயத்தைப் பழுது பார்க்கும்படிக்கு வேலைசெய்கிறவர்களுக்கே அதைக் கொடுத்தார்கள். வேலை செய்கிறவர்களுக்குக் கொடுக்கும்படிக்கு, பணத்தை வரப்பற்றிக் கொண்ட மனுஷர் கையிலே கணக்குக் கேளாதிருந்தார்கள்; அவர்கள் உண்மையாய் அதை நடப்பித்தார்கள்.”* (2 இராஜாக்கள் 12:14-15).

🔸 யோவாஸ் ராஜா ஆசாரியரை நோக்கி: கர்த்தருடைய ஆலயத்துக்குக் கொண்டுவரப்படுகிற எல்லாப் பணங்களையும் வாங்கி கொண்டு, ஆலயத்தில் எங்கெங்கே பழுது காண்கிறதோ, அங்கேயெல்லாம் ஆலயத்தைப் பழுதுபார்க்கவேண்டும் என்றான். ஆனாலும் ராஜாவாகிய யோவாசின் இருபத்துமூன்றாம் வருஷமட்டும் *ஆசாரியர்கள் ஆலயத்தைப் பழுதுபார்க்கவில்லை.* எனவே யோவாஸ் ராஜா ஆசாரியனாகிய யோய்தாவையும் மற்ற ஆசாரியர்களையும் வரவழைத்து, ஜனங்களிடம் இனி பணம் எதுவும் வாங்க வேண்டாம் என்று கூறினான். யோய்தாவின் திட்டத்தின்படி, பலிபீடத்தண்டையிலே வைக்கப்பட்டிருந்த ஒரு பெட்டியில் ஜனங்களிடமிருந்து நேரடியாக பணங்கள் சேகரிக்கப்பட்டன. ஜனங்கள் மகிழ்ச்சியுடன் மிகுந்த பணங்களைக் கொடுத்தார்கள். *"உற்சாகமாய்க் கொடுக்கிறவனிடத்தில் தேவன் பிரியமாயிருக்கிறார்."* (2 கொரிந்தியர் 9:7) என்பது தேவனுடைய வார்த்தை. அவர்கள் அந்த பணத்தை *மரங்களையும் வெட்டின கற்களையும் வாங்குகிறதற்கும், கர்த்தருடைய ஆலயத்தைப் பழுது பார்க்கும்படிக்கு வேலைசெய்கிறவர்களுக் கொடுப்பதற்கும்* பயன்படுத்தினார்கள்.

🔸 வேலை செய்கிறவர்கள் உண்மையாய் நடந்துகொண்டதால், பணத்தைக் குறித்து அவர்கள் கையிலே *கணக்குக் கேளாதிருந்தார்கள். தேவனுடைய ஊழியங்களில் பணத்தைக் கையாளும் தேவனுடைய பிள்ளைகள் அனைவரும் மிகவும் நேர்மையானவர்களாக இருக்க வேண்டும்.* கொரிந்திய கிறிஸ்தவர்களின் பொருளுதவியை எருசலேம் கிறிஸ்தவர்களுக்கு பவுல் எடுத்துச் சென்றபோது, எந்த விமர்சனமும் இருக்கக்கூடாது என்பதற்காக, பரிவர்த்தனைகளில் மிகவும் நேர்மையாக இருக்க வேண்டுமென்பதில் அவன் மிகவும் கவனம் செலுத்தினான். பவுலின் வார்த்தைகள்: *"எங்கள் ஊழியத்தினாலே சேர்க்கப்படும் இந்த மிகுதியான தர்மப்பணத்தைக்குறித்து ஒருவனும் எங்களைக் குற்றப்படுத்தாதபடிக்கு நாங்கள் எச்சரிக்கையாயிருந்து, கர்த்தருக்கு முன்பாகமாத்திரமல்ல, மனுஷருக்கு முன்பாகவும் யோக்கியமானவைகளைச் செய்ய நாடுகிறோம்.”* (2 கொரிந்தியர் 8:20-21).

🔸 இன்று ஆலயம் எங்கே? இன்று எருசலேமில் கர்த்தருடைய ஆலயம் இல்லையே.
தேவன் ஒரு சிறந்த ஆலயத்தை, *இயேசு கிறிஸ்து மூலமாக ஜீவனுள்ள ஆலயத்தை* உருவாக்கியுள்ளார். இன்று ஆலயம் என்பது *திருச்சபையே.* சபை என்பது ஒரு கட்டிடமல்ல, சபையில் உள்ள ஜனங்களே. பவுலின் மூலம் பரிசுத்தாவியானவர் திருவுளம் பற்றுகிறார்: *"அவர்மேல் மாளிகை முழுவதும் இசைவாய் இணைக்கப்பட்டு, கர்த்தருக்குள் பரிசுத்த ஆலயமாக எழும்புகிறது; அவர்மேல் நீங்களும் ஆவியினாலே தேவனுடைய வாசஸ்தலமாகக் கூட்டிக்கட்டப்பட்டுவருகிறீர்கள்.”* (எபேசியர் 2:21-22).

🔸 நமது சரீரங்கள் தேவனுடைய ஆலயம். பேதுருவின் வார்த்தைகள்: *"ஜீவனுள்ள கற்களைப்போல ஆவிக்கேற்ற மாளிகையாகவும், இயேசுகிறிஸ்து மூலமாய் தேவனுக்குப் பிரியமான ஆவிக்கேற்ற பலிகளைச் செலுத்தும்படிக்குப் பரிசுத்த ஆசாரியக்கூட்டமாகவும் கட்டப்பட்டுவருகிறீர்கள்."* (1 பேதுரு 2:5). பரிசுத்த ஆவியானவர் பவுல் மூலம் வெளிப்படுத்துகிறார்: *"உங்கள் சரீரமானது நீங்கள் தேவனாலே பெற்றும் உங்களில் தங்கியும் இருக்கிற பரிசுத்த ஆவியினுடைய ஆலயமாயிருக்கிறதென்றும், நீங்கள் உங்களுடையவர்களல்லவென்றும் அறியீர்களா?"* (1 கொரிந்தியர் 6:19).

🔸 *ஆலயமாகிய நம் சரீரங்கள் ஆவிக்குரிய பிரகாரமாக பழுதுபார்க்க வேண்டிய நிலையில் இருக்கலாம்.* பாவம் நம் சரீரத்தைக் கெடுக்கிறது, பாவத்தினால் நம் ஆத்துமா பாதிப்படைகிறது. *பாவம், சோதனை மற்றும் தீய ஆசைகள்* எல்லோரையும் தாக்குகின்றன. நம்முடைய பெற்றோரின் பாவமும் நம்மைப் பாதிக்கும். இப்போது, பாதிப்புகளை எவ்வாறு சீர்செய்வது? நம்மால் முடியாது, ஆனால் *இயேசுவால் முடியும்.* இயேசுவை நாம் நோக்கிப்பார்க்கலாம், அவரை நம்பலாம், ஏனென்றால் இயேசு சிலுவையில் சிந்திய இரத்தத்தின் மூலம் எல்லாவற்றிக்கும் கிரயம் செலுத்தி விட்டார். *அவருடைய சிலுவை மரணத்தினால்,* நம்முடைய பாவங்கள் அனைத்தும் மன்னிக்கப்படுகின்றன. அவருடைய *பரிசுத்த ஆவியானவர் நமக்குள் வந்து வாசம் பண்ணும்போது* நம்முடைய குற்றங்களும் பாவங்களும் துடைக்கப்படுகின்றன. *பரிசுத்த ஆவியானவர் நம்மில் வாசம் பண்ண வரும்போது, பழுதுபார்ப்பு ஆரம்பமாகிறது.* நாம் நமது ஆதி நிலைக்குத் திரும்பும் நாள் வரை, நித்திய ஜீவன் பெறும்வரை இந்த கிரியை தொடரும். *இயேசுவின் மீது விசுவாசமுள்ள அனைவரும், சீர்செய்யப்பட்டு, ஆதிநிலைக்குத் திருப்பப்பட்டு, நித்திய ஜீவன்வரைப் புதுப்பிக்கப்பட முடியும்.*

🔹 *நம் ஆவிக்குரிய வாழ்வில் ஏற்படும் சேதங்களை, பரிசுத்த ஆவியின் உதவியுடன், உடனடியாக பழுதுபார்ப்பதில் கவனமாக இருக்கிறோமா?*

✅ நாம் கற்றுக் கொள்ளும் *பாடங்கள்*:
1️⃣ *தம் ஊழியங்களுக்காக உற்சாகமாய்க் கொடுக்கிறவனிடத்தில் தேவன் பிரியமாயிருக்கிறார்.*
2️⃣ *தேவனுடைய ஊழியங்களில் பணத்தைக் கையாளும் தேவனுடைய பிள்ளைகள் அனைவரும் மிகவும் நேர்மையானவர்களாக இருக்க வேண்டும்.*
3️⃣ *நமது சரீரங்கள் தேவனுடைய ஆலயம்.*
4️⃣ *இயேசுவின் மீது விசுவாசமுள்ள அனைவரும், சீர்செய்யப்பட்டு, ஆதிநிலைக்குத் திருப்பப்பட்டு, நித்திய ஜீவன்வரைப் புதுப்பிக்கப்பட முடியும்.*

Dr. எஸ். செல்வன்.சென்னை

-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x

*2 இராஜாக்கள் 11 -13*
“ *யோசேபாள்* “
யோசேபாள் அதிகம் அறியப்படாத பெண். இவளைக்குறித்து வேதத்தில் இரண்டு வசனங்களில் தான் பார்க்கிறோம்.
( 2 இரா.11 : 2 ; 2 நாளா.22 :11)
ஆனால் இந்தப் பெண் தேவனுடைய தெய்வீகத் திட்டத்தில்..முக்கியமான இடத்தைப் பெற்றாள்.
யோசேபாள்.. யூதாவின் ராஜாவாகிய யோராமின் மகள்..
அகசியா ராஜாவின் சகோதரி..
ஆசாரியனாகிய யோய்தாவின் மனைவி.

அகசியா.. ராஜாவாக இருந்தாலும், அவன் தாய் அத்தாலியாளே தேசத்தை ஆட்சி செய்தாள்.
இந்த அத்தாலியாள்.. ஆகாப், யேசபேலின் குமாரத்தி. யேசபேல் ஒரு சபிக்கப்பட்ட ஸ்திரீ..
தாயைப் போல பிள்ளை என்பதுபோல..அத்தாலியாளும் தன் தாயைப் போலவே செயல்பட்டாள்.

அகசியா ராஜா மரித்துப் போனான்.
அத்தாலியாளின் அதிகார வெறி, அவள் ராஜவம்சத்தார் யாவரையும் சங்காரம் பண்ணினாள்.
( 2 இரா. 11 : 1 )

கர்த்தர் ஆகாபின் குடும்பத்தாரை அழித்துப் போட்டதினால்.. அத்தாலியாள் தாவீதின் குடும்பத்தாரை அழித்துப் போடவேண்டுமென்று
செயல்பட்டாள்.

அப்பொழுது யோசேபாள்... அகசியா ராஜாவின் ஒரு வயது குமாரனாகிய யோவாசைக் களைவாய் எடுத்து..
அவனை ஆலயத்தின் பள்ளி அறையிலே ஒளித்து வைத்தாள். அவளது இந்தக் காரியம் கண்டுபிடிக்கப்பட்டால்.. அதற்கான கிரையம் செலுத்தப்பட வேண்டும் என்று அவள் அறிந்திருந்தும்...
அவள் கர்த்தரை நம்பி இவ்விதம் செயல்பட்டாள்.
( 2 இரா. 11 : 2)

*இவளது செயல் ,எகிப்திலே* *மோசேயைக் காப்பாற்றிய* *மிரியாமின் துணிச்சலையும்*, *தனது மக்களுக்காகத் தன்* *உயிரைப் பணயம் வைத்த* *எஸ்தரையும் நமக்கு* *நினைப்பூட்டுகிறது*.

யோசேபாள், துணிச்சலுடன்..
ஞானமும், அறிவும் மிகுந்தவள். ஆலயத்தின் பள்ளியறை ஆசாரியருக்குரியது. அத்தாலியாள் அங்கு வர மாட்டாள் என்பதை அறிந்து அவள் அவ்விதம் செயல்பட்டாள்.

“தீங்கு நாளில் அவர் என்னைத் தம்முடைய கூடாரத்தில் மறைத்து, என்னைத் தமது கூடார மறைவிலே ஒளித்து வைத்து ,என்னைக் கன்மலையின் மேலே உயர்த்துவார்..என்ற தாவீதின் வசனம் அங்கே நிறைவேறியது.. (சங் .27: 5)

*யோவாஸ்,சாமுவேலைப்போல* *ஆலயத்திலே வளர்ந்தான்*.

ஆலயம் கர்த்தருடையது,
அது பழுதடைந்த நிலையில்
இருக்கக்கூடாது. கர்த்தருடைய சித்தத்தின் பிரகாரமே ..யோவாஸ் கர்த்தருடைய ஆலயத்தில் ஒளித்து வைக்கப்பட்டிருந்தான்.

கர்த்தர் தம்முடைய தெய்வீக சித்தத்தின்படி.. அங்கே ஒவ்வொரு காரியத்தையும் நடைபெறச் செய்தார்..அதன் மூலம் ..தனது திட்டத்தையும் அங்கே நிறைவேற்றினார்

*யோசேபாள் ,மேசியா வரவிருந்த* *தாவீதின் சந்ததியைப்* *பாதுகாத்தாள்*.. *ஆறு ஆண்டு* *இருண்டகாலத்திற்குப் பின்*.. *யோவாஸ் யூதாவின்* *சிங்காசனத்தில் வீற்றிருந்தான்*.
*அவன் கர்த்தருடைய* *ஆலயத்தைப் பழுது பார்க்க* *வழிசெய்தான்*..
*அத்தாலியாளிடமிருந்து தேசம்*
*மீட்கப்பட்டதால்*..
*யோசேபாள்,எதிர்கால* *சந்ததியினருக்கு*..
*ஒரு நம்பிக்கை* *நட்சத்திரமானாள்*..

இன்று அநேக கிறிஸ்தவர்களின் சாட்சியற்ற வாழ்வு..அநேக
இடங்களில் சுவிசேஷ ஒளி
பரவுவதற்குத் தடையாக இருக்கிறது..
இந்த உலகத்திற்கு நம்பிக்கையின்
ஒளியாக வாழ நாம் அழைக்கப்பட்டிருக்கிறோம்..
நாம் இருக்கும் இடங்களில்
நம் எதிர்கால சந்ததியினரைப்
பாதுகாக்க..நம்மால் இயன்ற
காரியங்களைச் செய்வோமா..?
மாலா டேவிட்

-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x

ஆலயத்தை பழுது பாராதே போனதென்ன?*
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
2 இராஜாக்கள் 12: 5 - 7.

1. *ராஜாவாகிய யோவாஸ் ஆசாரியர்களை பார்த்து ஆலயத்தில் எங்கெங்கே பழுதுபட்டிருக்கிறதோ, அங்கேயெல்லாம் அதை பழுது பார்க்க வேண்டும்* என்றான். ஆனால் அவர்களோ ஆலயத்தை பழுதுபார்க்கவில்லை. ஆகவே யோவாஸ் ஆசாரியனான யோய்தாவையும், மற்ற ஆசாரியர்களையும் அழைத்து, *நீங்கள் ஆலயத்தை பழுது பாராதே போனதென்ன?* என்றான்.

2. ஆம், *நாமே தேவனுடைய ஆலயமாயிருக்கிறோம். பரிசுத்த தேவன் வாசமாயிருக்கும் தேவனுடைய ஆலயம் பரிசுத்தமாயிருக்கப்பட வேண்டும்.*

இன்று நம்முடைய ஆலயமாகிய நம் சரீரம் பரிசுத்தமாயிருக்கிறதா? நம்மை நாமே ஆராய்வோம்.

3. *ஆலயத்தை பழுதுபாராதே போனதென்ன?* நம்முடைய அனுதின வாழ்க்கையில் நம் வார்த்தையில், சிந்தனையில், செயலில் பாவம் வந்து விட்டால், நாம் அனுதினமும் அதை அறிக்கை பண்ணி இயேசு கிறிஸ்துவின் இரத்தத்தால் கழுவப்பட்டு சுத்திகரிக்கப் பட வேண்டும்.

அநேகர் நான் கிறிஸ்தவர் என்று கூறின போதும் *சாட்சியின் ஜீவியம் இல்லை. வாழ்க்கையில் கசப்பு, வைராக்கியம், மன்னியாமை, பொய், புறங்கூறுதல், கவலை, பயம், அவிசுவாசம், இச்சை என்னும் பல பல பாவங்களால் நம் ஆலயங்கள் பழுது பட்டு கிடக்கிறது.*

*ஒருவன் தேவனுடைய ஆலயத்தை கெடுத்தால், அவனை தேவன் கெடுப்பார்*. 1 கொரிந்தியர் 3: 17 தேவனுடைய ஆலயம் பரிசுத்தமானது. ஆகவே இந்த கடைசி காலத்தில் நாம் *அனுதினமும் இயேசுவின் இரத்தத்தால் கழுவப்பட்டு, பரிசுத்தமாய் வாழ்வது நம் வாழ்க்கையின் இலக்காக இருக்க வேண்டும். நம்மால் விட முடியாத பாவங்களை விட ஆவியானவரின் உதவியை கேட்டு ஜெபிப்போம். கர்த்தர் வெறுக்கிற பாவங்களை அறிந்து கொள்ள வேதத்தை வாசித்து, தியானித்து, வசனத்திற்கு கீழ்ப்படிவோம்*.

*ஆவியின் கனிகளாகிய அன்பு, சந்தோஷம், சமாதானம், பொறுமை, சாந்தம், இச்சையடக்கம் ஆகிய கனிகளால், சாட்சியின் வாழ்க்கையோடு வாழுவோம்.* ஆம், *நீங்கள் ஆலயத்தை பழுது பாராமல் போனதென்ன?* என்று கர்த்தர் நம்மிடம் கேட்கிறார்? பதில் கூற ஆயத்தமாயிருப்போம். ஆமென். அல்லேலூயா.

*Dr.Padmini Seĺvyn*

-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x

*2 இராஜாக்கள் 11 - 13*

*அகசியாவின் தாயாகிய அத்தாலியாள் தன் குமாரன் இறந்துபோனதைக் கண்ட போது , எழும்பி ராஜவம்சத்தர் யாவரையும் சங்காரம் பண்ணினாள். யோராம் என்னும் ராஜாவின் குமாரத்தியும் அகசியாவின் சகோதரியுமாகிய யோசேபாள் , கொலையுண்ணபடுகிற ராஜகுமாரரின் நடுவிலிருக்கிற , அகசியாவின் குமாரனாகிய யோவாசைக் களவாய் எடுத்தாள் ; அவன் கொல்லப்படாதபடி அவனையும் அவன் தாதியையும் அத்தாலியாளுக்குத் தெரியாமல் பள்ளி அறையில் ஒளித்து வைத்தாள். 2 இரா 11 : 1 , 2*
ஆகாபின் மனைவியாகிய யேசபேல் , இஸ்ரவேலில் பாகால் வணக்கத்தைக் கொண்டு வந்து , இஸ்ரவேல் ஜனங்களைப் பின்மாற்றம் அடையச் செய்தாள் ; ஆகாப் ராஜாவையும் கைப்பொம்மையாக்கி , இஸ்ரவேல் தேசம் சீர்கெட்டுப் போகக் காரணமாயிருந்தவள், இந்த யேசபேல்.
யேசபேலின் மகளாகிய அத்தாலியாளும் , தாயைப் போன்றே , யூதா தேசத்தைச் சீரழிக்கிறாள். இந்த அத்தாலியாள் யோசபாத்தின் மகனாகிய யோராமின் மனைவி ; அகசியா , யோசேபாள் ஆகிய இவர்களின் தாய்.
அத்தாலியாள் தனது மகன் அகசியா மரணமடைந்தவுடன் எழும்பி , சற்றும் ஈவு இரக்கமின்றி ராஜவம்சத்தையே அழிக்கத் துணிந்தாள் ; அதில் அவளுடைய பேரன் , யோவாசும் அடங்குவார் ; அவர் தான் அடுத்தபடியாக , அகசியா ராஜாவுக்குப் பின்பு ராஜாவாக முடிசூடப்பட வேண்டியவர். இதையறிந்த அத்தாலியாளின் மகளும் , அகசியாவின் சகோதரியுமாகிய யோசேபாள் , தனது மருமகனாகிய யோவாசைக் களவாய் எடுத்துச் சென்று , பள்ளியறையில் ஒளித்துவைத்துக் காப்பாற்றுகிறாள். இப்படிச் செய்ததால் யூத குலம் அழிந்து போகாமல் பாதுகாக்கப் பட்டது.
அவளுடைய கணவரும் , பிரதான ஆசாரியருமாகிய யோய்தா , இந்த யோவாசை ஏழு வயதில் ராஜாவாக முடி சூடும் படிக்கு , உதவிச் செய்கிறார்.
இங்கு மேசியாவின் வம்சமாகிய யூதகுலம் அழிந்துப் போகாமல் யோசேபாள் பாதுகாக்கிறாள் ; ஆனால் அவள் தாயாகிய அத்தாலியாளோ , யூத சந்ததியினரையே அழித்துப்போட , சாத்தானின் கையில் , ஒரு ஆயுதமாகப் பயன்பட்டாள் ; ஆனால் யோசேபாள் அவள் தாயைப் போலல்லாது , யூத வம்சம் அழிந்துபோகாமல் பாதுகாத்து , அகசியாவிற்குப் பின் யோவாஸ் ராஜாவாக முடிசூடப்படக் காரணமாயிருந்தாள். *ஆவதும் பெண்ணாலே , அழிவதும் பெண்ணாலே* என்ற பழமொழிக்கேற்ப , கர்த்தரின் திட்டம் நிறைவேற உறுதுணையாய் இருந்தவள் , இந்த யோசேபாள். *புத்தியுள்ள ஸ்திரீ தன் வீட்டைக் (தேசத்தையேக்) கட்டுகிறாள்* (நீதி 14 : 1) அன்றோ ?
*ஆமென் ! அல்லேலூயா ! !*
Rajam Theogaraj , Palayamkottai .
🌸🌸🌸🌸🌸🌸🌸🌸


-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x

ஷாலோம் 🙏
ஆசீர்வதிக்கப்பட்ட மக்களுக்கு ஆசீர்வாதமாக இருப்பதற்காக ஆசீர்வதிக்கப்பட்டேன் 👨‍👩‍👦‍👦

*2ராஜாக்கள் 13:14-20*
*TAKE BOW & ARROWS FOR WARFARE*

*போரிடுவதற்கு வில்லையும் அம்புகளையும் எடு*

📝 இன்றைய வாசகப் பகுதி இரண்டு நோய்வாய்ப்பட்ட மனிதர்களின் கதையை உள்ளடக்கியது - *எலிசா மற்றும் இஸ்ரவேலின் ராஜா யோவாஸ்*.

🙋‍♂️ எலிசா மரணத்துக்கு ஏதுவான வியாதியாய் கிடந்தான். ( *வ 14a* ) யோவாஸ் ராஜா தன் சொந்த பாவத்தாலும், உள்ளான ஒழுக்கக்கேட்டினாலும் பாதிக்கப்பட்டிருந்தான் ( *" அவன் கர்த்தரின் பார்வைக்குப் பொல்லாப்பானதைச் செய்தான்.."* வ 11 ), மேலும் சீரியாவின் ராஜாவான *ஆசேலின்* கீழ் இஸ்ரவேலர் அவமானப்படுத்தப்பட்டதைக் கண்டு வெட்கப்பட்டான். சீரியாவின் ராஜாவான ஆசகேல் அவர்கள் அனைவரையும் அழித்துவிட்டதால், அவருக்கு மட்டுப்படுத்தப்பட்ட வீரர்கள், குதிரைகள் மற்றும் இரதங்கள் இருந்தன. *(வ. 7*)

🙋‍♂️ *அந்நாட்கள் முதல் கர்த்தர் இஸ்ரவேலைக் குறைந்துபோகப் பண்ணினார்.* (2இராஜாக்கள் 10:32) யெகூவின் வீட்டில் தீர்ப்புகள் விழுவதை எலிசா பல ஆண்டுகளாக அமைதியாகப் பார்த்துக் கொண்டிருந்தார்.

📝 கடைசியில் மரணப் படுக்கையில் இருக்கும் அவருக்கு *வெற்றி எப்படி கிடைக்கும்* என்று பாடம் கற்பிக்கும் வாய்ப்பு வருகிறது.
📌 யோவாஸ் ராஜா தீர்க்கதரிசியின் அறைக்குள் நுழைந்து, *"என் தகப்பனே! ... இஸ்ரவேலுக்கு இரதமும குதிரை வீரருமாயிருந்தவரே "* என்றான். வ 14b
📌 எலிசா யோவாசிடம், *"வில்லையும் அம்புகளையும் பிடியும்;... ஜன்னலை திறவும்.. . எய்யும்"* என்று அறிவுறுத்தினார்.

📝 வில் மற்றும் அம்புகள் கொண்ட இந்த பொருள் பாடத்தில், எளிய *வெற்றி விதிகளை* கண்டறியலாம்.


1️⃣ *வில் மற்றும் அம்புகளை எடுத்துக் கொள்ளுங்கள்* வ 15 (போரிடுவதற்கான உங்கள் நோக்கத்தை வெளிப்படுத்துங்கள்)
🙋‍♂️ தோற்கடிக்கப்பட்ட ராஜாவின் இருதயத்தில் வெற்றிக்காகப் போராடும் உறுதியை எலிசா விதைக்க விரும்பினார்.
📍 *வெற்றிக்கான முதல் படி, போராடுவோம் என்ற உறுதியுடன் நாமே ஆயுதங்களை கையில் எடுப்பதுதான்*.
பவுல் எழுதுகிறார், "நீங்கள் பிசாசின் தந்திரங்களோடு எதிர்த்து நிற்கத் திராணியுள்ளவர்களாகும்படி, தேவனுடைய சர்வாயுதவர்க்கத்தையும் தரித்துக்கொள்ளுங்கள்." ( *எபே 6:11*)

2️⃣ *உன் கைகளில் வில்லை எடு*... மேலும் *எலிசா யோவாசின் கைகளின்மேல் தன் கைகளை வைத்தான்* வ 16 (தெய்வீக விசுவாசத்தைக் கணக்கிடுகிறது)
📍 *வெற்றிக்கான விதி ஆயுதத்தின் மீது நம் கைகளும், நம் கைகள்மீது கர்த்தரின் கைகளும்*. இதன் மூலம் *"போர் நமக்குரியது அல்ல, கர்த்தருடையது"* என்று அறிவிக்கிறோம்.

3️⃣ *ஜன்னலை கிழக்கு நோக்கி திற* வ 17 ( தோல்வியின் இடத்தை வெளிப்படுத்து)
📍உங்கள் இருதயத்தில் கர்வமுள்ள எதிரி தனது வெற்றிகளைப் பெருமைப்படுத்தும் இடத்தை எதிர்கொள்ளுங்கள்.
📍 *விதி என்னவெனில், அம்புகளை மூடிய ஜன்னல்கள் வழியாக எய்ய முடியாது.*
📍நாம் வெற்றிபெற வேண்டுமானால், கர்த்தர் விரும்பியபடி வாழ்வதற்கான நமது முயற்சிகளைத் தோற்கடிக்கும் ஒவ்வொரு குறிப்பிட்ட விஷயத்திலும் உள்ள ஜன்னல்கள், ஆயுதத்தின் மீது நம்மைக் கட்டுப்படுத்தும் கைகளுக்கு தோல்விகளை வெளிப்படுத்த திறக்கப்பட வேண்டும்

*4️⃣எய்யும் என்றான் இவன் எய்தான்* வ 17b (உங்கள் விசுவாசத்தை செயல்படுத்துங்கள்)
📍 நம்மைத் துன்புறுத்தும் குறிப்பிட்ட எதிரியைச் சமாளிப்பதற்கு அம்பு தன்னளவில் பயனற்றதாகத் தோன்றலாம் ஆனால் தேவன் அதை அவருடையது என்று கூறுகிறார்.
📍 *வெற்றிக்கான விதி: "செயல்படுத்தும் விசுவாசம் எதிரியை முழங்காலிட வைக்கும்"*.

5️⃣ *அம்புகளை எடுத்து .. மற்றும் தரையில் அடியும்* வ 18 (வெற்றியை அளவிடும் கோப்பையை எடுத்து நிரப்பவும்)
📍 *கீழ்ப்படிதல் என்பது விசுவாசத்தின் ஆற்றலின் வெளிப்பாடு*. "அதை மூன்று முறை அடித்து நிறுத்தினான்" என்பதற்காக ராஜா கீழ்ப்படிதலை மட்டுப்படுத்தினான்.
📍 *நம்முடைய தோல்விகளின் மீதான வெற்றி விசுவாசத்தின் கீழ்ப்படிதலின் சரியான விகிதத்தில் உள்ளது*.
✅ யோவாஸ் ராஜா சீரியர்களை மூன்று முறை தோற்கடித்ததாக பதிவு கூறுகிறது (வ. 25).

💞 அன்பான திருச்சபையே, யோவாசிடம் இருந்து கற்றுக்கொள்வோம். அவர் பொறுமை இழந்தார்; அவர் தனது கீழ்ப்படிதலை மட்டுப்படுத்தினார், அதன் விளைவாக அவர் மட்டாக ஆசீர்வாதத்தைப் பெற்றார். நாம் அனைவரும் கண்ணுக்கு தெரியாத எதிரியுடன் போரிடுகிறோம். *யுத்தம் கர்த்தருடையது* என்பதால் கர்த்தருடைய கைகளை நம் கைகள் மேல் வைக்க அனுமதிப்போம்.

🙏 *கர்த்தாவே, நான் இப்போது போராடும் போராட்டம், உமது குமாரனாகிய இயேசு கிறிஸ்துவின் விசுவாசத்தில் போராடுகிறேன்* ✝️

தேவனுக்கே மகிமை 🙌
✍🏻 *மார்க் போஜே*
அருணாச்சல பிரதேசம், இந்தியா
தமிழாக்கம் ஜஸ்டஸ் ராஜேந்திரன்


-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x

எழுப்புதலுக்கான தடைகள்🔥*

2 இராஜாக்கள் 12

☄️2 இராஜாக்கள், அத்தியாயம் 12 எழுப்புதலை தடுக்கக்கூடிய காரணிகளைப் பற்றிய மதிப்புமிக்க நுண்ணறிவுகளை வழங்குகிறது, இது ஆவிக்குரிய விழிப்புணர்வு மற்றும் புதுப்பித்தல்.

1️⃣ *ஆவிக்குரிய மெத்தனம் மற்றும் அக்கறையின்மை*
🔹யோவாஸ் ஆசாரியனாகிய யோய்தாவின் எல்லா நாட்களிலும் கர்த்தரின் பார்வைக்குச் செம்மையானதைச் செய்தார், ஆனால் யோய்தாவின் மரணத்திற்குப் பிறகு, அவருடைய அர்ப்பணிப்பு குறைந்து போனது.
🔹அவரது ஆவிக்குரிய ஆர்வத்தில் ஏற்பட்ட இந்த சரிவு, அவர் விக்கிரக வழிபாட்டை சகித்துக் கொள்ளவும், ஆலயத்தின் திருப்பணியை புறக்கணிக்கவும் வழிவகுத்தது.

2️⃣ *பொறுப்பு மற்றும் தலைமைத்துவம் இல்லாமை*
🔸யோய்தாவின் விலகலுடன், அவரை வழிநடத்தி திருத்தக்கூடிய வலுவான ஆவிக்குரிய வழிகாட்டி யோவாஸுக்கு இல்லாமல் போனது.
🔸இந்த தெய்வீக ஆலோசனை இல்லாததால், யோவாஸ் ஊழல் நிறைந்த ஆலோசகர்களாலும் ஆசாரியர்களாலும் அதிகாரம் செலுத்தப்பட்டு, அவரை வழிதவறச் செய்தது.

3️⃣ *தவறான முன்னுரிமைகளும் தேவனுடைய வீட்டின் புறக்கணிப்பும்*
▪️ஆலயத்திறகு கொண்டுவரப்பட்ட பணத்தை அதன் சேதங்களைச் சரிசெய்வதற்குப் பயன்படுத்துமாறு ஆசாரியர்களுக்கு யோவாஸ் அறிவுறுத்தினார்.
▪️பணம் இந்த நோக்கத்திற்காக பயன்படுத்தப்படவில்லை என்பது தெளிவாகிறது.
▪️ஆசாரியர்கள் பணத்தை தனிப்பட்ட செலவுகளுக்கு செலவழித்தனர், இது தவறான முன்னுரிமை மற்றும் தேவனுடைய வீட்டை புறக்கணித்தது.
▪️ஆலயத்தின் புனிதத்தன்மையை அலட்சியம் செய்ததால் ஏற்பட்டிருக்கக்கூடிய எழுப்புதலை தடையாக இருந்தது.

4️⃣ *உக்கிராணத்துவத்தில் உண்மையின்மை*

🔺தவறாகப் பயன்படுத்தப்பட்ட நிதி விவகாரம், உக்கிராணத்துவத்தில் உண்மை இல்லாததைக் குறிக்கிறது, இது எழுப்புதலை மேலும் தடுக்கிறது.
🔺ஆலயத்தை மீட்டெடுப்பதற்கான வளங்களை யோவாஸ் மற்றும் ஆசாரியர்களிடம் கர்த்தர் ஒப்படைத்தார், ஆனால் அந்த வளங்களைப் பயன்படுத்துவதில் அவர்களது உண்மையின்மை கர்த்தர் விரும்பிய புதுப்பித்தலுக்கு இடையூறாக இருந்தது.
🔺எழுப்புதலுக்கு, நிதி விஷயங்களில் மட்டுமல்ல, நம்முடைய நேரம், திறமைகள் மற்றும் வளங்களை கர்த்தரின் நோக்கங்களுக்காகப் பயன்படுத்தும் உக்கிராணத்துவத்திலும் உண்மை தேவை என்பதை நினைவூட்டுகிறது.

5️⃣ *திருத்தம் மற்றும் மனந்திரும்புதலுக்கான எதிர்ப்பு*

▫️தீர்க்கதரிசி யோய்தாவின் மகன் யோவாஸ் மற்றும் ஆசாரியர்களின் அலட்சியத்தை எதிர்கொண்டபோது, ​​அவர்கள் மனத்தாழ்மை மற்றும் மனந்திரும்புதலுடன் பதிலளிக்கவில்லை.
▫️மாறாக, அவர்கள் தங்களை தற்காத்துக் கொண்டனர் மற்றும் திருத்திக்கொள்ளும் நடவடிக்கை எடுக்கவில்லை.
▫️அவர்களின் தவறுகளை ஒப்புக்கொள்ள இந்த விருப்பமின்மை எழுப்பதல் தூண்டப்பட தடையாக இருந்தது.

♥️ *வாழ்க்கை பாடங்கள்*
💥ஆவிக்குரிய ரீதியில் விழிப்புடன் இருப்பது, தெய்வீகத் தலைவர்களுடன் நம்மைச் சூழ்ந்துகொள்வது, தேவனுடைய வீட்டிற்கு முன்னுரிமை அளிப்பது, உண்மையுள்ள காரியதரிசிகளாக இருப்பது, திருத்தம் மற்றும் மனந்திரும்புதல் ஆகியவற்றின் முக்கியத்துவத்தை இந்தப் பாடங்கள் நமக்கு நினைவூட்டுகின்றன.

💥தேவனுடைய மறுரூபமாக்கும் வல்லமையை நமக்குள் செயல்பட அனுமதிப்பதன் மூலம், எழுப்புதலுக்கு உகந்த சூழலை உருவாக்குகிறோம்.

*‼️எழுப்புதல் பெற நாம் பாவங்களிலிருந்து மனந்திரும்ப வேண்டும்‼️*
பிரின்சஸ் ஹட்சன்
தமிழாக்கம் ஜஸ்டஸ் ராஜேந்திரன்



-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x

2 இராஜா 11&12

🎯தியானம்:

🔸யோய்தா = யெகோவா அறிகிறார்.
🔸ஒரு ஆசாரியன்
🔸அத்தாலியாளிடமிருந்து யோவாஸ் ராஜாவைக் காப்பாற்றி ஒளித்து வைத்து பாதுகாத்த யோசேபாத்தின் கணவன்(2 நாளா 22:11)

🎯தாவீதின் வம்சம் அழிந்துபோகாமல் காத்தவர்

🔸யோவாஸ், தனது 7 வயதில் ராஜாவாகும் வரை
காவலர்களை நியமித்து ராஜாவை காவல் காத்தவர்.

🔸 காவலுக்காக ஆலயத்திலிருந்த தாவீதின் ஈட்டிகளையும் கேடகங்களையும் கொடுத்தவர் (11:10)

🔸அத்தாலியாளை கொன்றவர்..

🎯தனக்கு கொடுக்கப் பட்ட ஆசாரிய ஊழியத்தை செம்மையாக செய்தவர்:

🔸ராஜகுமாரனாகிய யோவாஸை வெளியே கொண்டுவந்து

🔸கிரீடத்தை வைத்து

🔸சாட்சியின் ஆகமத்தை அவன் கையில் கொடுத்து

🔸ராஜாவாக அபிஷேகம்பண்ணினார்

🎯 ஜனங்கள் மேலும் கரிசனை உள்ளவராயிருந்தார்
🔸ஜனங்கள் கர்த்தருடைய ஜனங்களாயிருக்கும்படி

🔸ஜனங்களுக்கும் கர்த்தருக்கும் & ஜனங்களுக்கும் ராஜாவுக்கும்

🔸உடன்படிக்கை பண்ண செய்தார்.

🎯அந்நிய தெய்வங்களை அழித்தார். : (11:18)
🔸பாகாலின் கோயில்கள்

🔸பலிபீடங்கள்

🔸விக்கிரகங்களை உடைத்தார்.

🔸பாகாலின் பூஜாரியாகிய மாத்தானை பலி பீடத்திற்கு முன் கொன்று போட்டார்.

🎯ஆலயத்தின் மேல் அக்கறையோடிருந்தார்:
🔸ஆலயத்தை விசாரிக்க உத்தியோகஸ்தர்களை ஏற்படுத்தினார்

🔸முதல் முதலில் காணிக்கை பெட்டியை உருவாக்கி
பலிபீடத்தண்டையில் வைத்து

🔸 அதில் வரும் காணிக்கைகளை வைத்து
ஆலயத்தை பழுதுபார்த்தார்.

🎯ராஜாவை வழிநடத்தினார்:

🔸சிறுவயதில் ராஜாவாக்கியதோடு தன் பணி முடிந்தது என்றில்லாமல்

🔸அவர் கர்த்தரின் பார்வைக்கு செம்மையானதை செய்யும்படி போதகம்பண்ணி வழிநடத்தினால

🎯சிந்தனைக்கு,
🔸யோய்தா ஒரு ஆசாரியன் என்றாலும்
தனது ஆசாரிய ஊழியத்தை சரியாக செய்தார்

🔸அதோடு தாவீது வம்சம் அழிந்துபோகாமல் காத்தார்.

🔸ஆலோசனை பண்ணி வழிநடத்தினார்

🔸ஆலயத்தை பழுதுபார்த்தார்.

🔸இவரை போல நம்மையும் கர்த்தர் தமக்கு ஆசாரியர்களாக தெரிந்துகொண்டுள்ளார்.

🔸நாமும் நமக்குக் கொடுக்கப்பட்ட ஊழியத்தை செம்மையாய் செய்வோம்.

ஆமென்🙏.

-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x

*2 இராஜாக்கள் 11-13*

*ஆகிலும்.... பாவங்களை அவர்கள் விட்டு விலகாமல் அதிலே நடந்தார்கள்.* (13:6).

🤺இஸ்ரவேலின் ராஜாக்களும், இஸ்ரவேல் புத்திரரும், கர்த்தரின் பார்வைக்குப் பொல்லாப்பானதைத் தொடர்ந்து செய்து வந்தார்கள். கர்த்தர் அவர்கள்மேல் கோபங்கொண்டு சீரியாவின் ராஜாவாகிய பெனாதாத்தின் கையில் ஒப்புக்கொடுத்தார். அவர்கள் ஒடுக்கப்பட்ட போது, *யோவாகாஸ் ராஜா கர்த்தருடைய சமுகத்தை நோக்கிப் பிரார்த்தித்தான்.* அவர்கள் ஒடுங்கிப் போகிறதைப் பார்த்து, *கர்த்தர் அவனுக்குச் செவிகொடுத்தார்.* ஒரு இரட்சகனைக் கொடுத்தார். *ஆதலால் ஜனங்கள் முன்போல் தங்கள் கூடாரங்களில் குடியிருந்தார்கள். ஆகிலும் .....*

*❓ஏன் இஸ்ரவேல் புத்திரர் கர்த்தரிடத்தில் திரும்பாமல், விக்கிரகங்களிடத்தில் திரும்பினார்கள்?*

*⚠️கர்த்தரைத் தொட்டுணர முடியாது. அவருக்கு ஒரு உடல் வடிவம் (physical form) கிடையாது.* இயற்கைக்கு அப்பாற்பட்டவர். எனவே அவரைத் தொழுதுகொள்ளுகிறவர்கள்‌ *ஆவியோடும் உண்மையோடும் தொழுது கொள்ள வேண்டும்.* (யோவான் 4:23). மாறாக, விக்கிரகங்கள், உலோகம், மரம், அல்லது கற்களினால் செய்யப்பட்டவை. அதற்கு உருவம் உண்டு. எனவே அதைத் தொழுது கொள்வது எளிதாக இருந்தது.

*⚠️கர்த்தர் பரிசுத்தர், ஆகையால் அவரைத் தொழுது கொள்ளுகிறவர்களும் பரிசுத்தராயிருக்க வேண்டும்.* (1 பேதுரு 1:15-16). விக்கிரகங்கள் மனித உணர்வுகளைத் தூண்டும்படி வடிவமைக்கப் பட்டவைகள். அவைகளைத் தொழுது கொள்ளுகிறவர்களுக்கு எந்தக் கட்டுப்பாடும் கிடையாது.

*⚠️கர்த்தருடைய ஞானம் அளவிட முடியாதது. அவருக்கு முற்றிலும் கீழ்ப்படிய வேண்டும்.* ஆனால் விக்கிரகங்களை பணத்தினாலோ, உணவினாலோ, பலிகளினாலோ சமாதானப்படுத்த முடியும்.

⚠️பல வருஷங்களாக விக்கிரங்களை ஆராதித்து, சுய விருப்பம்போல் நடந்த இஸ்ரவேல் புத்திரருக்கு, *கர்த்தரின் கட்டளைகளுக்குக் கீழ்ப்படிந்து, பரிசுத்தமாய் வாழ்வது கடினமாக இருந்தது.* பழைய பாவத்துக்கே ஓடினார்கள்.

*🔥அர்ப்பணிப்பில்லாமல், நம்முடைய சௌகரியத்திற்காக கிறிஸ்தவராக இருக்க முடியாது. ஜாக்கிரதை!!*
பிரேமா ராஜசிங்
Group Coordinator


-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x

*🍃சிப்பிக்குள் முத்து🍃*

இன்றைய வேத வாசிப்பு பகுதி -
*2 இராஜா : 11 - 13*

*🍅முத்துச்சிதறல் : 113*

*யோசேபாள்,* கொலையுண்ணப்படுகிற இராஜ குமாரரின் நடுவில் இருக்கிற அகசியாவின் மகனாகிய *யோவாசை களவாய் எடுத்தாள்...*
( 2 இராஜா - 11: 2 )

*🍒கனிவிரக்கங் கொண்ட அத்தை🍒* (யோசேபாள்)

🍀🌿🍀🌿🍀🌿🍀🌿

*🎀இஸ்ரவேலில் அடிக்கடிக்கு உள்நாட்டு போர் மேகங்கள் சூழ்ந்து, போர் தாக்குதல்கள் நடைபெற்றமையால், அவைகளால் மக்கள் பெரிதும் அல்லோல பட்டு வந்தனர்.*

🌻இராஜ்யம் இரண்டாக பிரிந்த நிலை ஒரு புறம்,

🌻பதவி வெறிகளால் உந்தப்பட்டு சொந்த பிள்ளைகள், பேரப்பிள்ளைகள், சகோதர சகோதரிகள் என்றும் பாராமல் நிக்கிரகம் செய்யும் கொடுமை மறுபுறம் என,

🌻நாடே இரத்தக்களரியாகி நின்ற காலகட்டத்தில் தான்.......
*ஒரு வம்சம் முழுவதும் ஒரு பொல்லாத ஸ்திரியாகிய அத்தாலியாள் மூலம் சங்கரிக்கபடும் போது, அந்த குடும்பத்தில் / வம்சத்தில் உள்ள ஒரு குழந்தை மற்றொரு ஸ்திரியால்*
(அந்த குழந்தையின் அத்தை முறை பெண்ணால்) *அதிசயமாக காப்பாற்றப்படுகிறது.*

ஆச்சர்யமாக இருக்கிறதல்லவா❓️ *ஆம் அது தான் இறை செயல் என்கிறோம்.*
இந்த செய்கையை நிகழ்த்தி வெற்றியடைந்த....

*அந்த பெண் ஒரு ஆசாரியனின் மனைவி என்பது எமக்கு கூடுதல் உற்சாகத்தை கொடுக்கிறது.*

💦💦
*🍉யோசேபாள் மற்றும் அத்தாலியாள் வெவ்வேறு குண இயல்புகளை கொண்ட பெண்டீர் களாக இந்த வாசிப்பு பகுதி மூலம் நாம் அறிய முடிகிறது.*
💦💦

*🎈அத்தாளியாள் என்பவள் யேசபேலின் மகள்*

*🥏யோசேபாள் என்பவள் அகசியாவின் சகோதிரி*

*🎈அத்தாலியாள் ஆகாபின் குமாரத்தி / இராஜ குமாரத்தி*

*🥏யோசேபியாளும் இராஜ குமாரத்தி, இவள் அரசனாகிய யோராமின் மகள்.*

🎈அத்தாளியாள் என்பதற்க்கு அர்த்தம் :
*கர்த்தர் மேன்மை அடைந்தார்.*

🥏யோசேபாள் என்பதற்கு அர்த்தம் :
*கர்த்தரின் ஆணை*

*🍧ஒருவேளை இந்த யோசேயாள் , அத்தாளியாளின் குமாரத்தியோ என்று எண்ண தோன்றுகிறது.*
ஆனால், அப்படியல்ல (11:1,2)
அவள் அகசியாவின் ஒன்று விட்ட சகோதரி.
யோராம் அரசனின் குமாரத்தி இவள்.
அப்படி இல்லையென்றால், இவள் யோராமின் மற்றொரு மனைவியின் மகளாக இருக்கலாம்.

📌🎊📌🎊📌🎊📌

🌈இங்கு பாருங்கள், பொல்லாத தாய் / மாற்றாந்தாய் செய்த பொல்லாத கிரியையின்போது.... *ஒரு சரியான தீர்மானத்தோடு இந்த யோசேபாள் செயல்படும்படி கர்த்தரால் நடத்தப்பட்டார்.*
ஆம், கொலையுண்ணப்படுகிற இராஜ குமாரரில், *"யோவாஸ் என்னும் சிறு குழந்தையை",* (ஒருவேளை பிறந்து சிறிது மாதங்களே ஆகி இருக்கலாம், அந்த சின்னஞ்சிரு பாலகனை)
*இவள் "களவாய் எடுத்து, அதை ஒளித்து வைத்து, யாருக்கும் தெரியாமல்"* அதையும் அதன் வளர்ப்பு தாதியையும் பள்ளியறையில் வைத்து பராமரிக்கும் பொறுப்பினை தன் மீது ஏற்று வாழலானாள்.
*இவள் கணவன் யோய்தா தேவாலயத்தில் ஆசாரியனாக இருந்தபடியால், அக்காலத்தில் தேவாலயம் பராமரிப்பு ஏதுமற்று, ஆராதனைகள் ஏதுமின்றி, கவனிப்பாரற்று கிடந்த காலமாகையால், இந்த குழந்தை தேவாலயத்தில் தானே ஒளித்து வைக்கப்பட்டது மாத்திரமல்ல, நீ ஒரு இராஜ குமாரன், நீ தான் அடுத்த இராஜா என்று சொல்லி சொல்லி வளர்த்தார்களாம், இந்த தம்பதியர்.*
மேலும் தேவாலயத்தில் ஆசாரியர் தவிர் வேறெவரும் உள்ளே செல்ல இயலாத காலகட்டத்தில் *யோய்தாவும், யோசேபாளும்* இந்த யோவாசை வளர்ப்பு மகனாக தத்தெடுத்து..... அடுத்த அரச அரியணையில் அமர தக்க விதமாக பாதுகாத்தும் வந்தனர்.

❣️🥎❣️🥎❣️🥎❣️

🍁அத்தாலியாள் தன் தாய் யேசபேல் போல கொடுமையாய் நடந்தாலும்.....
*இந்த அத்தாலியாளின் குமாரத்தி போன்ற ஸ்தானத்தில் இருந்த யோசேபாள் தன் ஒன்று விட்ட தாயை போலல்லாமல்,* அரச பரம்பரை பிள்ளை ஒன்றினையாவது *காப்பாற்றி பாதுகாத்து வளர்க்கும் கனிவுள்ளம் கொண்ட தாயாக செயல்பட்டாள்.*

🥥பதவி வெறி பிடித்து பேயாய் நின்ற அத்தாளியாள் முன்,
*இந்த யோசேபாள் பரிவோடு நடந்து கொண்ட உத்தமியாகும்.* மட்டுமல்ல, *இப்படியொரு இராஜ குமாரன் காப்பாற்றப்பட்டு இரகசியமாக வளர்த்து விக்கப்படுகிறான் என்ற எந்த சமாச்சாரமும் வெளியே கசிந்து விடாதபடி இவள்*

*👍நாவடக்கமுடையளாக,*
*👍இரகசியம் காப்பவளாக,*
*👍கருமமே கண்ணாக செயல்பட்டுக் கொண்டிருந்த,*
*👍வீர மங்கையாக திகள்கிறாள்.*

ஒரு *வருங்கால அரசனை* கட்டி காத்து, பராமரித்து வளர்த்தாள். தாவீதின் வம்சம் பாதுகாக்கப்பட்டத்தில்...
*இவள் துணை நின்று செயல்பட்ட செயல் வீராங்கனை.*

ஒரு பொல்லாத ஸ்திரி கொலை வெறி தாக்குதலோடு செயல்பட்டபோது, *8ஒரு பக்தியுள்ள ஸ்திரி எதிர்கால சிந்தையோடு, எதிர்க்கால நாட்டு நலனை மனதில் கொண்டு ஒரு பிள்ளையை, தன் கணவன் துணையோடு, அவர் வlழி்காட்டலில் பாதுகாப்பாய் வளர்த்தாள்.*

அவள் *(யோசேபியாள்)*
அத்தாலியாளின் சகல சூழ்ச்சிகளையும் அழித்து, அதை தலை கீழாக கவிழ்த்தும் போட்டு நின்றாள் எனலாம்.

🍏🫧🍏🫧🍏🫧🍏

*💐இரு வெவ்வேறு பெண்களை நாம் இங்கு சந்திக்கிறோம்.* ஒருத்தி கொல்லுகிறவள். மற்றொருவர் காப்பாறுகிறவர்.

*🍒பெண் என்பவளைக்கொண்டு இறைவன் சரித்திரத்தில் செயலாற்றியுள்ள நிகழ்வுகள் ஏராளம், ஏராளம்.*

அன்று ஒரு *யோகேபெத்* தன் சின்னஞ்சிரு மூன்று மாத பாலகனை காப்பாற்ற துடித்து, அவனை நாணற்பெட்டியில் வைத்து நதியில் உள்ள நாணற்களுக்கிடையில் வைத்தாள்.
*இங்கு ஒரு பெண் ஒரு இராஜ குமாரணை காப்பாற்றி கொடுத்து, பிற்காலத்தில் தேசத்தில் ஷேமம் ஏற்பட உழைத்து நின்ற சம்பவத்தை காண்கிறோம்.*

☔️🔥☔️🔥☔️🔥☔️

*🍏கடவுளின் திட்டத்தில் நமது பங்களிப்பு என்ன❓️என்பதை என்றாவது யோசித்திருக்கிறோமா❓️*

நாம் எவரையாவது பிற்கால தலைமுறையினரின் நலனுக்காக காப்பாற்றுகிறோமா❓️
இல்லை,
பதவி மோகங் கொண்டு பிறரை தூற்றி திரிந்து அன்னாரை, ஆன்மீக ரீதியில் கொல்லுகிறோமா❓️ அல்லது,
அவர் சீர் திருந்த ஜெபித்தோடு காத்திருந்து,
காப்பாற்றும் பணியில் ஈடுபடுகிறோமா❓️

*🪔காப்பாற்றும் பணியினை செய்கிறோமென்றால் நாம் ஒரு யோசேபாள் .*
*தூற்றி திரியும், அல்லது கல்லெறி வேலை*
(கொலை வெறி, அதாவது சிறுவரை கண்டுக்காமல் விட்டு விடும் ) *பணியினை செய்கிறோமென்றால் நாம் ஒரு அத்தாலியாள் என்பதை மறவாமல், சிறுவர்களை காப்பாற்றி, நல்வழி படுத்தி, பிற்காலத்தில் அவர்கள் எழுந்து பெருந்தலைவர்களாகி / தலைவிகளாகி நிற்க தக்க குடும்பத்தில் / திருச்சபையில் மற்றும் ஒரு வேளை சமூகத்தில் கூட பெண்களாகிய எமது பங்களிப்பு என்னவாக இருந்தது ❓️/ இருக்கிறது ❓️/ இருக்க போகிறது❓️ என்பதை இதை வாசிக்கும் ஒவ்வொரு ஞாயிறு பள்ளி ஆசிரியைகளும், ஒவ்வொரு தாய்மாரும்* (அத்தைமாரும் கூட )
*உணர்ந்தோராக...... இனியாவது செயல்படுவோம்.*

*🔥 எமது ஒவ்வொரு நற் கிரியைகளுக்கும் பலன் உண்டு.* (2நாளா - 15 : 7)
*அது நன்மையானாலும், தீமையானாலும், தேவன் அதனை நியாயத்தில் கொண்டு வந்து நிறுத்துவார்.*
(பிர - 12 : 14) *அத்தாலியாள் தன் பொல்லா கிரியைகளுக்கேற்ற பலனை அடைந்தாள்.*

*யோசேபாள் அமரிக்கையான எதிர்க்கால வாழ்வில் சுகித்து நின்றாள்.*

நாம் எதிர் காலத்தில் சுகித்து இருக்க வேண்டுமானால்.... இன்று எப்படி, என்ன கிரியை செய்து கொண்டு இருக்கிறோம் என்பதற்கான உணர்வோடு, நல்ல பல கிரியைகளில் இன்றே முனைப்பாக செயல்படுவோமா❓️
*Sis. Martha Lazar ✒️*
NJC, KodaiRoad
Tags

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.