Type Here to Get Search Results !

2 KINGS 9-10 Bible Study | யெகூவின் சீர்திருத்தங்கள் | Jehu Executes the LORD's judgement | 2 இராஜாக்கள் வேத ஆராய்ச்சிக் கட்டுரை | Jesus Sam

=================
2 KINGS 9-10 Bible Study in Tamil & Englihs
================
God expects total obedience from His followers and an exclusive relationship with those who call Him Lord.

⛹️‍♂️ Application:II Ki.10:29-36- *Jehu wiped out Baal, but he allowed the continuation of calf worship in the nation.* It was a political necessity, he thought. After all, if he took away the golden calves, people would have to worship in Jerusalem, and he would lose control over them. Jehu had a chance to bring about real revival and true reformation, but because he was politically minded and didn’t walk in the ways of the law of the Lord, the nation of Israel began at this point to become diminished. This is the beginning of an irrevocable turn of events that will lead to their destruction by the hand of the Assyrians. *God expects total obedience from His followers and an exclusive relationship with those who call Him Lord.*

⚠️II Ki.9:35-37-When Jehu sent servants out to bury Jezebel, the dogs had already devoured her. The dogs had a big gourmet meal. *The horrible death of Jezebel illustrates again the truth of Galatians 6:7: “Be not deceived; God is not mocked: for whatsoever a man soweth, that shall he also reap.”*

⚠️II Ki.10:16-Jehu is showing the early signs of his downfall. Why? *He’s boasting about his zeal for the Lord and he wants his service for the Lord to be noticed. Those are always 2 dangers to anyone who serves the Lord.*
Jaya Pradeep-Kodaikanal.

-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x

*2 KINGS : 09 - 10*

"யெகூவின் சீர்திருத்தங்கள்".

🌹🌹🌹🌹🌹🌹🌹

யெஹுவின் கடிதமும், யோராம் மற்றும் அகசியாவுக்கு எதிரான அவரது முந்தைய துணிச்சலான நடவடிக்கையும், யெகூவின் சார்பாக ஆகாபின் மகன்களை தூக்கிலிட இஸ்ரவேலின் தலைவர்களை வலுவாக வற்புறுத்தியது.

. ஆகாப் யெஸ்ரேலிலுள்ள நாபோத்தின் திராட்சைத் தோட்டத்திலிருந்து திராட்சைக் கூடைகளை அனுப்பியிருந்தான், இப்போது மகன்களின் தலைகள் கூடைகளில் கொண்டுவரப்படுகின்றன.

ஆகாபின் 70 வம்சத்தாரின் தலைகளைக் கண்டு மக்கள் பயந்தார்கள்.

.யோனதாப் இஸ்ரவேலில் மிகவும் கௌரவமான மனிதர்.

ஆகாப் தன் மனைவி யேசபேலுக்கு ஆலயம் கட்டினான்.

யெகூ அதை உடைத்துப் போட்டார்.

யெகூ ஒரு குறிப்பிட்ட கட்டம் வரை கடவுளுக்குக் கீழ்ப்படிந்தார்.

யெகூ கடவுளுடைய சித்தத்தை நிறைவேற்றினார், ஆனால் அவர் அதை தனிப்பட்ட பெருமைக்காக செய்தார்.

யெகூவும் தெளிவாகக் கீழ்ப்படிதலில்லாதவராக இருந்தார், மேலும் கடவுளுக்குக் கீழ்ப்படியவில்லை அல்லது முழு இருதயத்தோடும் ஊழியம் செய்யவில்லை.

🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹

மேபி சுந்தர். சென்னை. இந்தியா

-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x

2இராஜாக்கள்:9-10

💐💐💐💐💐💐💐

*யெகூ யெஸ்ரயேலுக்கு வந்தான்; அதை யேசபேல் கேட்டபோது, தன் கண்களுக்கு மையிட்டு, தன் தலையை சிங்காரித்துக் கொண்டு, ஜன்னல் வழியாய் எட்டிப்பார்த்து*,

*யெகூ ஒலிமுக வாசலில் வந்த போது, அவள்: தன் ஆண்டவனைக் கொன்ற சிம்ரி ஷேமம் அடைந்தானா என்றாள்*.

(2 இராஜா: 9:30-31)

▪️சாகும்போதும் தான் இளவரசி, அரசி, அரசரின் தாய் என்ற அகம்பாவத்தோடு தன்னை அலங்கரித்தாள் இந்த *யேசபேல்*.

▪️யேசபேலின் வல்லமை, செல்வம், அதிகாரம், அழகு, அரசபோகம், அரச குடும்பம் என்ற பெருமை, உடல் யாவும் அழிந்தன. அவளின் தலை ஓடும் கைகளும் கால்களும் மிஞ்சின. அவள் சரீரத்தின் பெரும் பகுதியை நாய்கள் தின்றன. அவளை அடக்கம் பண்ண நினைத்தார்கள், முடியவில்லை.

▪️யேசபேலின் குமாரன் யோராம் செத்த போது அவனை அடக்கம் பண்ணாமல் நாபோத்தின் வயல்நிலத்தில் எறிந்து போட்டார்கள் என்று வாசிக்கிறோம். இந்த சம்பவத்திற்குப் பிறகும் யேசபேல் மனத்தாழ்மையோடு நடந்து கொள்ளாமல் பெருமை, ஆணவம் கொண்டவளாகவே இருந்தாள்.

▪️ஒரு மனிதன் மரணமடைந்ததும் செல்வம், குடும்பம், அதிகாரம், செல்வாக்கு யாவும் பலனற்றதாகிவிடும். இவற்றின் மீது உங்கள் நம்பிக்கையை வைக்காதீர்கள்.

கர்த்தரைச் சார்ந்து மனத்தாழ்மையை தரித்தவர்களாய் வாழ்க்கையை நடத்துவோமாக.

*ஆமென்*

💐💐💐💐💐💐💐

✍️ Bhavani Jeeja Devaraj,Nagercoil

-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x

🌟 *கர்த்தர் தம்முடைய ஊழியக்காரனாகிய எலியாவைக்கொண்டு சொன்னதைச் செய்தார்* 🌟

❇️ *ஆதலால் கர்த்தர் ஆகாபின் குடும்பத்தாருக்கு விரோதமாகச் சொன்ன கர்த்தருடைய வார்த்தைகளில் ஒன்றும் தரையிலே விழவில்லை என்பதை அறிந்து கொள்ளுங்கள்; கர்த்தர் தம்முடைய ஊழியக்காரனாகிய எலியாவைக்கொண்டு சொன்னதைச் செய்தார் என்றான்* (2 ராஜாக்கள் 10:10).

💥 கர்த்தர் தம்முடைய தீர்க்கதரிசி மூலம் கட்டளையிட்டதை நிறைவேற்றுவதன் மூலம் யெகூ கர்த்தருக்காகத் தன்னுடைய பக்திவைராக்கியத்தைக் காட்டினான். யெஸ்ரயேலின் பிரபுக்கள் மூலம் ஆகாபின் எழுபது குமாரர்களையும் கொன்றான். யெஸ்ரயேலிலும் ஆகாபின் குடும்பத்தாரில் மீதியான யாவரையும், அவனுக்கு இருந்த எல்லா மந்திரிகளையும், அவனைச்சேர்ந்த மனுஷரையும், அவனுடைய ஆசாரியர்களையும், அவனுக்கு ஒருவரையும் மீதியாக வைக்காதபடிக்கு யெகூ கொன்றுபோட்டான். *இவ்வாறு, கர்த்தர் தம்முடைய ஊழியக்காரன் எலியா மூலம் சொன்னதைச் செய்தார்* (1 இராஜாக்கள் 19:15-17).

💥 பழைய ஏற்பாட்டு காலத்திலும், கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் பிறப்பு, வாழ்க்கை, இறப்பு மற்றும் உயிர்த்தெழுதல் ஆகியவற்றிலும், கர்த்தர் தம் தீர்க்கதரிசிகள் மூலம் சொன்ன அனைத்தும் நிறைவேறின. *"நியாயப்பிரமாணத்தையானாலும் தீர்க்கதரிசனங்களையானாலும் அழிக்கிறதற்கு வந்தேன் என்று எண்ணிக்கொள்ளாதேயுங்கள்; அழிக்கிறதற்கு அல்ல, நிறைவேற்றுகிறதற்கே வந்தேன்."* (மத்தேயு 5:17) என்று இயேசு அறிவித்தார்.

💥 தம்முடைய தீர்க்கதரிசிகள் மூலம் முன்னறிவித்ததை கிறிஸ்துவின் பாடுகள் மூலம் தேவன் நிறைவேற்றினார். இதுவே நமக்கு இரட்சிப்பைக் கொண்டுவந்தது. *"கிறிஸ்து பாடுபடவேண்டுமென்று தேவன் தம்முடைய தீர்க்கதரிசிகளெல்லாருடைய வாக்கிலும் முன்னறிவித்தவைகளை இவ்விதமாய் நிறைவேற்றினார்."* (அப்போஸ்தலர் 3:18).

💥 *"உலகத்தோற்றமுதல் தேவன் தம்முடைய பரிசுத்த தீர்க்கதரிசிகளெல்லாருடைய வாக்கிலும் உரைத்தவைகளெல்லாம் நிறைவேறித் தீருங்காலங்கள் வருமளவும் பரலோகம் அவரை ஏற்றுக்கொள்ளவேண்டும்."* (அப்போஸ்தலர் 3:21) என்று வேதம் கூறுகிறது. இயேசு உயிர்த்தெழுதலுக்குப் பிறகு பரலோகத்தில் ஏற்றுக்கொள்ளப்பட்டார் (அப் 1:9). அவருடைய தீர்க்கதரிசிகள் மூலம் அவர் வாக்குறுதியளித்த அனைத்தும் நிறைவேறிய பிறகு, எல்லாவற்றையும் மீட்டெடுக்க இயேசு திரும்பி வருவார்.

💥 *"தீர்க்கதரிசனமானது ஒருகாலத்திலும் மனுஷருடைய சித்தத்தினாலே உண்டாகவில்லை; தேவனுடைய பரிசுத்த மனுஷர்கள் பரிசுத்த ஆவியினாலே ஏவப்பட்டுப் பேசினார்கள்."* (2 பேதுரு 1:21) எனவே, தேவனுடைய தீர்க்கதரிசிகள் என்ன பேசினார்களோ அவையெல்லாம் நிறைவேறும். தேவனைப் பிரியப்படுத்தவும் அவரால் ஆசீர்வதிக்கப்படவும் வேதத்தில் எழுதப்பட்ட அனைத்தையும் நம்பிக் கீழ்ப்படிவோம்.

🔹 *வேதத்தில் எழுதப்பட்டுள்ளவை அனைத்தும் குறிப்பிட்ட காலங்களில் நிறைவேறும் என்று நாம் உண்மையில் நம்புகிறோமா?*

✅ நாம் கற்றுக் கொள்ளும் *பாடங்கள்*:
1️⃣ *தீர்க்கதரிசிகள் கூறிய அனைத்தையும் நிறைவேற்றவே இயேசு வந்தார்.*

2️⃣ *கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் பிறப்பு, வாழ்வு, இறப்பு, உயிர்த்தெழுதல் ஆகிய அனைத்தும் தீர்க்கதரிசிகளால் முன்னறிவிக்கப்பட்டது.*

3️⃣ *தேவனைப் பிரியப்படுத்தவும் அவரால் ஆசீர்வதிக்கப்படவும் வேதத்தில் எழுதப்பட்ட அனைத்தையும் நம்பிக் கீழ்ப்படிவோமாக.*

Dr. எஸ். செல்வன். சென்னை

-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x

கர்த்தருக்காக எனக்கிருக்கிற பக்தி வைராக்கியத்தை பார்*
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

2 இராஜாக்கள் 10: 16.

1. இங்கு யெகூ ரேகாபின் மகன் யோனதாபை பார்த்து,*கர்த்தருக்காக எனக்கிருக்கிற பக்தி வைராக்கியத்தை பார்* என்றான்.
பக்தி வைராக்கியம் என்றால் *கர்த்தருடைய வார்த்தைக்கு அப்படியே கீழ்ப்படிய வேண்டும் என்கிற பற்றி எரிகிற வைராக்கியமான ஆசையாகும்*.

2. யெகூவின் பக்தி வைராக்கியம் என்பது, *கர்த்தர் எலியா தீர்க்கதரிசி மூலம் சொன்ன படி, ஆகாபின் சந்ததியை முழுமையாய் அழித்து விட வேண்டுவதாகும்*. இதை யெகூ அப்படியே செய்தான்.

ஆம், இன்று *கர்த்தருடைய வார்த்தைகளுக்கு நாம் அப்படியே கீழ்ப்படிய வேண்டும் என்கிற பக்திவைராக்கியம நம் வாழ்க்கையில் இருக்கிறதா* ? சிந்திப்போம்.

3. *உம்முடைய வீட்டைப்பற்றிய பக்திவைராக்கியம் என்னை பட்சித்தது* என தாவீது கூறுகிறார். சங்கீதம் 69: 9.

ஆம், *கர்த்தருடைய வீடாகிய நம் சரீரம், அதாவது ஆலயம் பரிசுத்தமாயிருக்க நாம் பக்தி வைராக்கியம் உடையவர்களாயிருக்க வேண்டும்.*

4. *என் சத்துருக்கள் வசனங்களை மறந்த படியால், என் பக்தி வைராக்கியம். என்னை பட்சித்தது* 119: 139. என கூறப்பட்டுள்ளது.

ஆம், வசனத்திற்கு நாம் பக்தி வைராக்கியம் உடையவர்களாய் வாழுகிறோமா?

அப்படியானால் *வசனத்திற்கு நாம் காத்திருந்து, வாசித்து , தியானித்து, கீழ்ப்படிந்து அவர் மேல் பக்தி வைராக்கியத்தோடே வாழுகிறோமா*? சிந்திப்போம்.

5. *தேவனுக்கேற்ற துக்கம் பக்தி வைராக்கியத்தை உண்டாக்கிற்று.*
2 கொரிந்தியர் 7: 11.

6. மட்டுமல்ல, *கிறிஸ்து நம்மை நற்கிரியைகளிலே பக்தி வைராக்கியம் உடையவர்களாக சுத்திகரிக்கும் படி, நமக்காக தம்மை தாமே ஒப்புக் கொடுத்தார்.* தீர்த்து 2: 14. இந்த அன்பிற்காக அவரை துதிப்போம். ஸ்தோத்தரிப்போம்.

வேதத்திலே பினெகாஸ், எலியா, யெகூ, தாவீது, பவுல் ஆகியோர் கர்த்தருக்காக பக்தி வைராக்கியமாக வாழ்ந்தார்கள் என பார்க்கிறோம். நாமும் கூட, நமக்காக ஜீவனையே தந்து, நம்மை இரட்சித்து, நம்மோடு மரண பரியந்தம் கூட இருக்கிற நம் இயேசுவுக்காக பக்தி வைராக்கியத்தோடு வாழ, ஆவியானவர் தாமே நமக்கு உதவி செய்வாராக. ஆமென்.அல்லேலூயா.

*Dr.Padmini Seĺvyn*
-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x

📗 *சிறிய குறிப்பு* 📗

🍂 *கன்று குட்டிகள்* 🍂

இறுதியில் *வனாந்தரத்தில்* இஸ்ரவேலர்களைத் தொடர்ந்து வந்த பொன் கன்று, *தாண் மற்றும் பெத்தேல்* பட்டணத்தில் வந்தது. முன்பு *ஆரோன்* இஸ்ரவேல் ஜனங்களின் வற்புறுத்துதலின் பேரில் இந்தத் தங்கக் கன்றுக்குட்டியை உருவாக்கினான்.

ஆனால் *யெரொபெயாம்* தந்திரமாக இரண்டு பொன் கன்று குட்டிகளை உருவாக்கி, ஒன்றை பெத்தேலிலும், ஒன்றை தாணிலும் வைத்தான். இவ்வாறு *இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தரை ஆராதிக்க எருசலேமுக்கு ஜனங்கள் செல்வதை தடுத்தான்*. யெரொபெயாம் தந்திரமாக ஜனங்களை உருவ வழிபாட்டிற்கு அழைத்துச் சென்றான்.

யெகூ கர்த்தருக்காக வைராக்கியமுள்ளவன், பாகால் வழிபாட்டாளர்களையும் ஆகாபின் குடும்பத்தையும் அழித்தான். *ஆனால் அவன் வேண்டுமென்றே யெரொபெயாமின் பாவங்களை நீக்க தவறிவிட்டான்*. இவ்வாறு அவன் கர்த்தருக்கு முழுமையாக செவிசாய்க்கவில்லை.

முழு மனதுடன் கர்த்தரை தொழுது கொள்ளுவதைத் தடுக்கும் *பாவம் நிறைந்த பகுதிகள்* நம் வாழ்க்கையில் இருக்கலாம். *அந்த பாவத்தை நாம் விடாத வரையில் நாம் கர்த்தரை மெய்யாக பின்பற்ற முடியாது*. தேவனிடமிருந்து நம்மைப் பிரிப்பது எது? அதை அறிக்கை செய்து நம் வாழ்வில் இருந்து முழுமையாக அகற்ற வேண்டும்.

_திருமதி ஷீலா ஜெபக்குமார்_ ✍🏼

-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x

2 Kings 9-10
🔆 *Jehu Executes the LORD's judgement*

🌿 In 1 Kings 19:15-18, God gave Elijah 3 instructions: _"anoint Hazael as king over Syria, anoint Jehu as king over Israel, and anoint Elisha as prophet in your place."_

🌿 Elijah carried out only the 3rd instruction. The responsibility fell on Elisha, who took the place of Elijah, to fulfill the first 2 instructions and set the LORD's agenda in motion. In 2 Kings 8:7-15, Elisha announced that Hazael would become king; and now here in 9:1-3, Elisha anoints Jehu as king over Israel through one of the sons of the prophets.

🌿 God declared His intent to use Jehu to execute judgement on the house of Ahab and on Jezebel. The word of the Lord came to pass exactly as God had spoken: Jehu executed Jehoram (Joram) - son of Ahab and king of Israel. Jehu also executed Ahaziah King of Judah who had gone along with Jehoram King of Israel to war against king of Syria (2 Ki 8:28). Then Jehu executed Jezebel; and the dogs ate the body of Jezebel by the walls of Jezreel, exactly as the LORD announced through Elijah (1 Kings 21:23)

🎯 *Lessons*

🪶 Ahab and Jezebel sinned greatly, and God's judgement upon them was severe. Our LORD is a God who brings every work into judgement (Eccl 12:14). His mercy is steadfast to those who turn away from sin and towards God (e.g. King David). His judgement is certain towards those who turn away from God and towards sin, though the long rope of mercy God extends to the wicked may make it appear (for a season) that the wicked can sin against God and get away with it.

🪶 The judgement of God was against the house of Ahab (King of Israel), so how did Ahaziah (King of Judah) fall under this judgement? 2 Kings 8:26-27 provides the answer. Ahaziah's father Jehoram had married Athaliah, daughter of Ahab. Ahaziah was the son of this ungodly alliance. The word of God states in 8:27, _"Ahaziah walked in the way of the house of Ahab, and he did evil in the sight of the LORD like the house of Ahab, for he was the son-in-law of the house of Ahab."_ He became part of the house of Ahab through marriage association, and so when the LORD's judgement fell upon the house of Ahab, it fell upon Ahaziah too. This serves as a *huge warning* to every born again believer about entering into marriage covenant with unbelievers. The believer must be uncompromising in their commitment to not get unequally yoked with unbelievers in marriage, no matter how advantageous it may appear.

*David Chellappa* ✍🏽

-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x

💫⚖️DIVINE JUSTICE தெய்வீக நீதி ⚖️💫*

2 இராஜாக்கள் 9 & 10

☄️2 ராஜாக்களின் 9 மற்றும் 10 அத்தியாயங்களில் உள்ள ஆகாப் மற்றும் யேசபேலின் அறிக்கை, அவர்களுடைய ஆட்சியின் பரிதாபகரமான முடிவையும் தெய்வீக நீதியின் நிறைவேற்றத்தையும் சித்தரிக்கிறது.

☄️ஆகாபின் அக்கிரமமும் யேசபேலின் கொடுமையும் நியாயமான மற்றும் பொருத்தமான முடிவை சந்தித்தன.

1️⃣ *ஆகாபின் மறைவு*

🔹ஆகாபின் மரணம் பற்றிய தீர்க்கதரிசனம், நாபோத்தின் திராட்சைத் தோட்டத்தில் யெகூ அவனது இரதத்தில் அவனை எதிர்கொண்டபோது நிறைவேறுகிறது.

🔹திராட்சைத் தோட்டத்தைப் பெறுவதற்காக நாபோத்தின் அநியாய மரணதண்டனையை அவன் திட்டமிட்ட இடத்திலேயே ஆகாபின் இரத்தம் சிந்தப்பட்டது.

🔹அவனது துன்மார்க்கத்திற்கு தகுந்த பழியெதிர்ச்செயலாகவும், தேவனுடைய நீதியையும் குறிக்கும் ஒரு கடுமையான தருணமாகும்.

2️⃣ *யேசபேலின் வீழ்ச்சி*
🔸கொடுமை மற்றும் விக்ரக வழிபாட்டிற்குப் புகழ் பெற்ற யேசபேல், அவளது அக்கிரமத்திற்குத் தகுந்தாற்போல் தன் மரணத்தை சந்தித்தாள்.

🔸யெகூ யெஸ்ரயேலை நெருங்கியதும், யேசபேல் தன்னை அலங்கரித்துக்கொண்டு ஜன்னலில் இருந்து ஏளனமாக வரவேற்றாள்.

🔸பதிலுக்கு யெகூ, அவளைத ஜன்னலுக்கு வெளியே தூக்கி எறியும்படி அவளுடைய பிரதானிகளுக்கு அழைப்பு விடுத்தான்.

🔸யேசபேல் கீழே விழுந்து, அவளுடைய உடல் நாய்களால் விழுங்கப்பட்டது, அவள் இருந்ததற்கான எந்த தடயமும் இல்லை.

🔸இந்த கொடூரமான விதி அவளுடைய பாவங்களின் தீவிரத்தை அடிக்கோடிட்டுக் காட்டியது மற்றும் எதிர்கால சந்ததியினருக்கு ஒரு தெளிவான எச்சரிக்கையாக இருந்தது.

3️⃣ *பாகால் வழிபாட்டை ஒழித்தல்*
▪️ஆகாப் மற்றும் யேசபேலின் மரணத்தைத் தொடர்ந்து, இஸ்ரவேல் தேசத்தை பாகாலின் வழிபாட்டிலிருந்து விடுவிப்பதற்கான பணியை யெகூ தொடங்கினார்.

▪️பாகாலின் அனைத்து தீர்க்கதரிசிகள், ஆசாரியர்கள் மற்றும் பணிவிடைகாரர்களை அழித்தொழிக்க ஒரு பெரிய சதித்திட்டத்தை அவர் தீட்டினார்.

▪️விக்கிரக ஆராதனையிலிருந்து தேசத்தைச் சுத்திகரிப்பதில் யெகூவின் வைராக்கியம், பாகால் கோவில்கள் அழிக்கப்பட்டு தேவனுடைய உண்மையான ஆராதனையை நிறுவுவதற்கு வழிவகுத்தது.

4️⃣ *தெய்வீக நீதி நிலவும்*
🔺ஆகாப் மற்றும் யேசபேலின் மரணங்களும், பாகால் வழிபாட்டின் ஒழிப்பும், தெய்வீக நீதியின் வெற்றியைக் காட்டுகின்றன.

🔺தேவனுடைய பொறுமையும் எச்சரிப்புகளும் தீர்ந்துபோய், பொல்லாத ஆட்சியாளர்கள் மீது நியாயமான தீர்ப்பை நிறைவேற்ற வழிவகுத்தது.

🔺அவர்களின் கொடூரமான செயல்கள், விக்கிரக வழிபாடு மற்றும் தேவனுடைய சட்டங்களை அலட்சியம் செய்வது, இனி தண்டிக்கப்படாமல் இருக்க முடியாது.

♥️ *வாழ்க்கை பாடங்கள்*
💥ஆகாப் மற்றும் யேசபேலின் மரணம், தெய்வீக நீதி நிலவும் என்பதை நினைவூட்டுகிறது.

💥நாபோத்தின் திராட்சைத் தோட்டத்தில் ஆகாபின் மரணமும், யேசபேலின் கொடூரமான முடிவும் அவர்களின் அக்கிரமம் மற்றும் கொடுமையின் விளைவுகளைக் குறிக்கிறது.

💥பாகால் வழிபாட்டை யெகூ ஒழித்தது, உண்மையான ஆராதனை மற்றும் நீதியின் வெற்றியை மேலும் வலியுறுத்துகிறது.

*‼️தேவனுடைய நீதி தாமதமாகலாம், ஆனால் அது இறுதியில் மேலோங்கும்‼️*

பிரின்சஸ் ஹட்சன்
தமிழாக்கம் இன்னிசை செல்வி மும்பை

-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x

Ida Selvakumar*

*BRP*

*2 Kings Ch 9- 10*

Ch 10: 18-36 - *Jehu - A Successful Failure*

1.*Partial obedience has its rewards and its losses.*

Jehu destroyed the images of Baal but not the images of the golden calves. Jehu was used by God to remove the worship of Baal that was going on in the northern kingdom of Israel. Yet he was not a godly king. This was *partial obedience.*

Jehu destroyed Baal from Israel. However, Jehu did not turn away from the sins of Jeroboam…who had made Israel sin…But Jehu took no heed to walk in the law of the Lord God of Israel with all his heart…” 2 Kings 10:28-29, 31

“The Lord said to Jehu, ‘Because you have done well in doing what is right in My sight, and have done to the house of Ahab all that was in My heart, you shall be rewarded.” 2 Kings 10:30

2. We are told to keep ourselves from idols (1 John 5:21). It is possible that we destroy the “images of Baal,” the obvious idols in our lives, but we continue to tolerate the *golden calves, those things that are less obvious but are not pleasing to God.* God was not please with Jehu because he was not careful to walk in the law of the Lord with all of his heart.

-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x

🌟 *கர்த்தர் தம்முடைய ஊழியக்காரனாகிய எலியாவைக்கொண்டு சொன்னதைச் செய்தார்* 🌟

❇️ *ஆதலால் கர்த்தர் ஆகாபின் குடும்பத்தாருக்கு விரோதமாகச் சொன்ன கர்த்தருடைய வார்த்தைகளில் ஒன்றும் தரையிலே விழவில்லை என்பதை அறிந்து கொள்ளுங்கள்; கர்த்தர் தம்முடைய ஊழியக்காரனாகிய எலியாவைக்கொண்டு சொன்னதைச் செய்தார் என்றான்* (2 ராஜாக்கள் 10:10).

💥 கர்த்தர் தம்முடைய தீர்க்கதரிசி மூலம் கட்டளையிட்டதை நிறைவேற்றுவதன் மூலம் யெகூ கர்த்தருக்காகத் தன்னுடைய பக்திவைராக்கியத்தைக் காட்டினான். யெஸ்ரயேலின் பிரபுக்கள் மூலம் ஆகாபின் எழுபது குமாரர்களையும் கொன்றான். யெஸ்ரயேலிலும் ஆகாபின் குடும்பத்தாரில் மீதியான யாவரையும், அவனுக்கு இருந்த எல்லா மந்திரிகளையும், அவனைச்சேர்ந்த மனுஷரையும், அவனுடைய ஆசாரியர்களையும், அவனுக்கு ஒருவரையும் மீதியாக வைக்காதபடிக்கு யெகூ கொன்றுபோட்டான். *இவ்வாறு, கர்த்தர் தம்முடைய ஊழியக்காரன் எலியா மூலம் சொன்னதைச் செய்தார்* (1 இராஜாக்கள் 19:15-17).

💥 பழைய ஏற்பாட்டு காலத்திலும், கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் பிறப்பு, வாழ்க்கை, இறப்பு மற்றும் உயிர்த்தெழுதல் ஆகியவற்றிலும், கர்த்தர் தம் தீர்க்கதரிசிகள் மூலம் சொன்ன அனைத்தும் நிறைவேறின. *"நியாயப்பிரமாணத்தையானாலும் தீர்க்கதரிசனங்களையானாலும் அழிக்கிறதற்கு வந்தேன் என்று எண்ணிக்கொள்ளாதேயுங்கள்; அழிக்கிறதற்கு அல்ல, நிறைவேற்றுகிறதற்கே வந்தேன்."* (மத்தேயு 5:17) என்று இயேசு அறிவித்தார்.

💥 தம்முடைய தீர்க்கதரிசிகள் மூலம் முன்னறிவித்ததை கிறிஸ்துவின் பாடுகள் மூலம் தேவன் நிறைவேற்றினார். இதுவே நமக்கு இரட்சிப்பைக் கொண்டுவந்தது. *"கிறிஸ்து பாடுபடவேண்டுமென்று தேவன் தம்முடைய தீர்க்கதரிசிகளெல்லாருடைய வாக்கிலும் முன்னறிவித்தவைகளை இவ்விதமாய் நிறைவேற்றினார்."* (அப்போஸ்தலர் 3:18).

💥 *"உலகத்தோற்றமுதல் தேவன் தம்முடைய பரிசுத்த தீர்க்கதரிசிகளெல்லாருடைய வாக்கிலும் உரைத்தவைகளெல்லாம் நிறைவேறித் தீருங்காலங்கள் வருமளவும் பரலோகம் அவரை ஏற்றுக்கொள்ளவேண்டும்."* (அப்போஸ்தலர் 3:21) என்று வேதம் கூறுகிறது. இயேசு உயிர்த்தெழுதலுக்குப் பிறகு பரலோகத்தில் ஏற்றுக்கொள்ளப்பட்டார் (அப் 1:9). அவருடைய தீர்க்கதரிசிகள் மூலம் அவர் வாக்குறுதியளித்த அனைத்தும் நிறைவேறிய பிறகு, எல்லாவற்றையும் மீட்டெடுக்க இயேசு திரும்பி வருவார்.

💥 *"தீர்க்கதரிசனமானது ஒருகாலத்திலும் மனுஷருடைய சித்தத்தினாலே உண்டாகவில்லை; தேவனுடைய பரிசுத்த மனுஷர்கள் பரிசுத்த ஆவியினாலே ஏவப்பட்டுப் பேசினார்கள்."* (2 பேதுரு 1:21) எனவே, தேவனுடைய தீர்க்கதரிசிகள் என்ன பேசினார்களோ அவையெல்லாம் நிறைவேறும். தேவனைப் பிரியப்படுத்தவும் அவரால் ஆசீர்வதிக்கப்படவும் வேதத்தில் எழுதப்பட்ட அனைத்தையும் நம்பிக் கீழ்ப்படிவோம்.

🔹 *வேதத்தில் எழுதப்பட்டுள்ளவை அனைத்தும் குறிப்பிட்ட காலங்களில் நிறைவேறும் என்று நாம் உண்மையில் நம்புகிறோமா?*

✅ நாம் கற்றுக் கொள்ளும் *பாடங்கள்*:

1️⃣ *தீர்க்கதரிசிகள் கூறிய அனைத்தையும் நிறைவேற்றவே இயேசு வந்தார்.*

2️⃣ *கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் பிறப்பு, வாழ்வு, இறப்பு, உயிர்த்தெழுதல் ஆகிய அனைத்தும் தீர்க்கதரிசிகளால் முன்னறிவிக்கப்பட்டது.*

3️⃣ *தேவனைப் பிரியப்படுத்தவும் அவரால் ஆசீர்வதிக்கப்படவும் வேதத்தில் எழுதப்பட்ட அனைத்தையும் நம்பிக் கீழ்ப்படிவோமாக.*

Dr. எஸ். செல்வன். சென்னை

-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x

*2 இராஜாக்கள் 9 - 10*

“ *யெகூ* “

யெகூ ,ஆகாப் ராஜாவின் சேனாபதியாயிருந்தான். ஆகாப், தனக்கு முன்னிருந்த எல்லாரைப் பார்க்கிலும்.. கர்த்தரின் பார்வைக்குப் பொல்லாப்பானதைச் செய்தான்.

(1 இராஜா .16 :30).

கர்த்தர், ஆகாபின் குடும்பத்துடன்..

அவனுடைய மனைவியாகிய யேசபேல் ..இஸ்ரவேலுக்குக் கொண்டுவந்த பாகால் வணக்கத்தை.. முற்றிலும் அழித்துப் போட .. யெகூவைத் தெரிந்துகொண்டார்.

அவனை இஸ்ரவேலின் மேல் ராஜாவாக அபிஷேகம் செய்தார்.

(2 இராஜா. 9 : 4-9 )

யெகூ ,கர்த்தரின் வார்த்தையின்படி.. ஆகாப் வம்சத்தாரை முற்றிலும் அழித்தான்.

ஆனால், யூதாவின் ராஜாவாகிய அகசியாவின் சகோதரரையும் அவன் கொன்றுபோட்டான்.

அவர்கள் தாவீதின் வம்சத்தார்.

(2 இராஜா. 10:1-14)

*யெகூ,நிறைவேற்றினது*..

*நீதியான நியாயத்தீர்ப்பாக* *இருந்தாலும்..அவன் தன்* *எல்லையை மீறி…கொடூரமாகச்* *செயல்பட்டான்*.

யெகூ,தேவபக்தியுள்ள யோனதாப், தன்னோடு இருக்கிறானென்று இஸ்ரவேலர் அறிந்தால்.. தனக்கு அடங்குவார்கள் என்று நினைத்து ,அவனைத் தன் இரதத்தில் ஏற்றி.. வீதி வழியாகப் போனான்.

பாகால் வணக்கத்தை இஸ்ரவேலிலிருந்து முற்றிலும் ஒழிக்க ..அவன் பின்பற்றின பொய்யும்..வஞ்சகமும் நல்லதல்ல.

( 2 இராஜா. 10 : 15-28 )

*நல்ல முடிவை அடைய..தவறான* *வழியில் செல்வது தவறு.அது* *கர்த்தருக்குப் பிரியமானதல்ல*.

*இந்த அவசர உலகத்தில்*.. *எந்த ஒரு வேலையையும் எளிதாய்* *முடிக்க.. லஞ்சம் கொடுப்பது* *சகஜமாகிவிட்டது அல்லவா*!

யெகூ, பக்தி வைராக்கியம் உள்ளவனாக.. பாகால் வழிபாட்டை அழித்துப் போட்டாலும்,

தனது அரசியல்

ஆதாயத்திற்காக ..

இஸ்ரவேலர்.. பொன் கன்றுக்குட்டிகளை வணங்குவதை அனுமதித்தான்.

( 2 இராஜா. 10 : 31 )

யெகூவிடம் ,அதிகார வெறி இருந்தது.

தான் உயர்வடைய வேண்டும் என்ற சிந்தனையே இருந்தது.

*உலக வெற்றி, நம்மைப் பெருமை* *கொள்ள வழிநடத்தும்*.

*அது தேவனுடைய* *மகிமையைவிட*,

*சுயமகிமையைத் தேடச்* *செய்யும்*..

*தேவனுக்காக வெளியரங்கமாக* *அநேக காரியங்களைச் செய்வது* *நல்லதுதான்*..

*ஆனால்,உள்ளான வாழ்வில்* *தேவனோடுள்ள உறவும்*.. *அவருடைய வழிகளில்* *நடப்பதும்தான் ..தேவனுக்குப்* *பிரியம்*.

தேவன் எதிர்பார்த்த ஆவிக்குரிய பெரிய எழுப்புதல்.. இஸ்ரவேலிலே உண்டாகவில்லை.

இன்றும், மாபெரும் எழுப்புதலும், சீர்திருத்தங்களும் நடைபெறாமல் போவதற்குக் காரணம்.. தேவனுடைய சித்தத்திற்கு மேலாக..

தேவ ஊழியர்கள்..

தங்களின் சுயமேன்மையையும், தங்களின் சுயஆதாயத்தையும் நாடுவதினாலேயே.

யெகூ ,கர்த்தரின் பார்வைக்குச் செம்மையானதைச் செய்தபடியால்.. அவன் சந்ததியார் நான்கு தலைமுறைகளாக சிங்காசனத்தில் வீற்றிருப்பார்கள் என்ற ஆசீர்வாதத்தைப் பெற்றான். ஆனாலும் ,அவன் பொன் கன்றுக்குட்டிகளை ஆராதித்ததால்.. கர்த்தர் இஸ்ரவேலைக் குறைந்து போகப்பண்ணினார்..

சீரியாவின் ராஜாவின் கையில் ஒப்புக்கொடுத்தார்.

(2 இராஜா.10:30,32 )

*இவன் வாழ்வு ..ஒரு வெற்றிகரமான* *தோல்விதான். நாம் முடிவுபரியந்தம்..கர்த்தரிலே*..

*நிலைத்திருப்போம்*..

*இரண்டு எஜமான்களுக்கு* *ஒருவராலும் ஊழியஞ்செய்ய* *முடியாது*.

*யோசுவா சொன்னதுபோல*.. *யாரைச் சேவிப்பது என்பதை*, *நாம்தான் தெரிந்துகொள்ள* *வேண்டும்*.

*இன்று.. உங்கள் இதய* *சிம்மாசனத்தில் வீற்றிருந்து..* *உங்களை ஆளுகை செய்வது* "*நான்*”…”*எனது*”..*என்ற குட்டி* *தேவதைகளா*?

*சிலுவையில் அறையப்பட்ட* *கிறிஸ்துவா*?
மாலா டேவிட்

-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x

2.ராஜாக்கள்.10.
🌹🌹🌹🌹🌹🌹

"யெகூவின் சீர்திருத்தங்கள்".

🌹🌹🌹🌹🌹🌹🌹

யெஹுவின் கடிதமும், யோராம் மற்றும் அகசியாவுக்கு எதிரான அவரது முந்தைய துணிச்சலான நடவடிக்கையும், யெகூவின் சார்பாக ஆகாபின் மகன்களை தூக்கிலிட இஸ்ரவேலின் தலைவர்களை வலுவாக வற்புறுத்தியது.

. ஆகாப் யெஸ்ரேலிலுள்ள நாபோத்தின் திராட்சைத் தோட்டத்திலிருந்து திராட்சைக் கூடைகளை அனுப்பியிருந்தான், இப்போது மகன்களின் தலைகள் கூடைகளில் கொண்டுவரப்படுகின்றன.

ஆகாபின் 70 வம்சத்தாரின் தலைகளைக் கண்டு மக்கள் பயந்தார்கள்.

.யோனதாப் இஸ்ரவேலில் மிகவும் கௌரவமான மனிதர்.

ஆகாப் தன் மனைவி யேசபேலுக்கு ஆலயம் கட்டினான்.

யெகூ அதை உடைத்துப் போட்டார்.

யெகூ ஒரு குறிப்பிட்ட கட்டம் வரை கடவுளுக்குக் கீழ்ப்படிந்தார்.

யெகூ கடவுளுடைய சித்தத்தை நிறைவேற்றினார், ஆனால் அவர் அதை தனிப்பட்ட பெருமைக்காக செய்தார்.

யெகூவும் தெளிவாகக் கீழ்ப்படிதலில்லாதவராக இருந்தார், மேலும் கடவுளுக்குக் கீழ்ப்படியவில்லை அல்லது முழு இருதயத்தோடும் ஊழியம் செய்யவில்லை.

🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹

மேபி சுந்தர்.சென்னை.இந்தியா

-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x

ஷாலோம் 🙏

ஆசீர்வதிக்கப்பட்ட மக்களுக்கு ஆசீர்வாதமாக இருப்பதற்காக ஆசீர்வதிக்கப்பட்டேன் 👨‍👨‍👧‍👦

🙋‍♂️🙋‍♀️ நாம் *2 இராஜாக்கள் 9 & 10* இல் இருக்கிறோம்

*THE RISE AND FALL OF JEHU*

*யெகூவின் எழுச்சியும் வீழ்ச்சியும்*

📝 "தீர்க்கதரிசிகளின் புத்திரரிலிருந்து" ஒரு வாலிப தீர்க்கதரிசி யெகூவை இஸ்ரவேலின் ராஜாவாக அபிஷேகம் செய்வதற்காக புறப்பட்டார். இது எலிசாவின் வழிகாட்டுதலின்படி செய்யப்பட்டது.

📍 ஆகாபின் வீட்டை அழிக்கும்படி யெகூவுக்குக் கட்டளையிடப்பட்டது ( *9 : 6-8* )

📍 யோராம் ராஜா மற்றும் அகசியா ராஜாவின் மரணங்களில் யெகூ தனிப்பட்ட முறையில் பங்குகொண்டார் ( *9:14-27* )

📍 ராணி யேசபேலின் மரணத்தில் அவர் தனிப்பட்ட முறையில் பங்கேற்றார் ( *9:30-37* )

📍 ஆகாபின் 70 மகன்களைக் கொல்ல அவர் தனிப்பட்ட முறையில் ஏற்பாடு செய்திருந்தார் ( *10:6-8* )

📍 அகசியா ராஜாவின் உறவினர்கள் 42 பேரைக் கொல்ல ஆணையிட்டான்.

📍 அவர் பாகாலின் பணிவிடைக்காரர்களை படுகொலை செய்ய கட்டளையிட்டார் மற்றும் அதில் பங்கேற்றார் ( *10:20-27* )

🙋‍♂️ *யெகூ தனது அழைப்பை மிகுந்த ஆற்றலுடனும் உறுதியுடனும் வெளிப்படுத்தினார். அவர் அவரது இலக்குகளில் இடைவிடாத நாட்டமும் வைராக்கியமும் கொண்டிருந்தார்*.

🙋‍♂️🙋‍♀️ *யெகூவின் வீழ்ச்சி* : யெகூ *ஆலோசனையை நாடாமல், பெருமையாய், ஆணவத்தோடு, சுயநலத்தோடு* செயல்பட்டதாக பதிவுகள் கூறுகின்றன.

🙋‍♂️ இவ்வாறு, போர்வீரனாகிய யெகூ தனது சுயபெருமை மற்றும் தீவிர லட்சியத்தின் கைதியாகிவிட்டான்.

📍 ஒரு குறிப்பிடத்தக்க வாழ்க்கையின் முடிவில் குறிப்பிடப்பட்ட முடிவுரை அறிக்கை:

1️⃣ *இஸ்ரவேலை பாவஞ்செய்யப்பண்ணின நேபாத்தின் குமாரனாகிய யெரொபெயாமின் பாவங்களை யெகூ விட்டு விலகவில்லை* (10:29, 31)

*2️⃣"..... யெகூ இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தரின் நியாயப்பிரமாணத்தின்படி தன் முழு இருதயத்தோடும் நடக்கக் கவலைப்படவில்லை..."*

🙋‍♂️🙋‍♀️ நாம் (யெகூவைப் போல)

📍 *வஞ்சனையில் ஈடுபட்டு, பெருமை, ஆணவம், சுயநீதி ஆகியவற்றில் செயல்பட்டால்*;

📍 *விக்கிரக வழிபாட்டை தொடர்ந்தால்*,

ஆபத்தான மண்டலத்தில் இருக்கிறோம்.

🙏 மனந்திரும்பி, உடைந்த இருதயம் /ஆத்துமாவோடு கர்த்தருடைய சந்நிதிக்கு வருவோம்.

*" நொறுங்குண்ட இருதயமுள்ளவர்களுக்கு கர்த்தர் சமீபமாயிருந்து, நருங்குண்ட ஆவியுள்ளவர்களை இரட்சிக்கிறார்"* சங் 34:18

தேவனுக்கே மகிமை 🙌

✍️ *மார்க் போஜே*
அருணாச்சல பிரதேசம், இந்தியா
தமிழாக்கம் ஜஸ்டஸ் ராஜேந்திரன்

-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x

💫⚖️DIVINE JUSTICE தெய்வீக நீதி ⚖️💫*

2 இராஜாக்கள் 9 & 10

☄️2 ராஜாக்களின் 9 மற்றும் 10 அத்தியாயங்களில் உள்ள ஆகாப் மற்றும் யேசபேலின் அறிக்கை, அவர்களுடைய ஆட்சியின் பரிதாபகரமான முடிவையும் தெய்வீக நீதியின் நிறைவேற்றத்தையும் சித்தரிக்கிறது.

☄️ஆகாபின் அக்கிரமமும் யேசபேலின் கொடுமையும் நியாயமான மற்றும் பொருத்தமான முடிவை சந்தித்தன.

1️⃣ *ஆகாபின் மறைவு*

🔹ஆகாபின் மரணம் பற்றிய தீர்க்கதரிசனம், நாபோத்தின் திராட்சைத் தோட்டத்தில் யெகூ அவனது இரதத்தில் அவனை எதிர்கொண்டபோது நிறைவேறுகிறது.

🔹திராட்சைத் தோட்டத்தைப் பெறுவதற்காக நாபோத்தின் அநியாய மரணதண்டனையை அவன் திட்டமிட்ட இடத்திலேயே ஆகாபின் இரத்தம் சிந்தப்பட்டது.

🔹அவனது துன்மார்க்கத்திற்கு தகுந்த பழியெதிர்ச்செயலாகவும், தேவனுடைய நீதியையும் குறிக்கும் ஒரு கடுமையான தருணமாகும்.

2️⃣ *யேசபேலின் வீழ்ச்சி*
🔸கொடுமை மற்றும் விக்ரக வழிபாட்டிற்குப் புகழ் பெற்ற யேசபேல், அவளது அக்கிரமத்திற்குத் தகுந்தாற்போல் தன் மரணத்தை சந்தித்தாள்.

🔸யெகூ யெஸ்ரயேலை நெருங்கியதும், யேசபேல் தன்னை அலங்கரித்துக்கொண்டு ஜன்னலில் இருந்து ஏளனமாக வரவேற்றாள்.

🔸பதிலுக்கு யெகூ, அவளைத ஜன்னலுக்கு வெளியே தூக்கி எறியும்படி அவளுடைய பிரதானிகளுக்கு அழைப்பு விடுத்தான்.

🔸யேசபேல் கீழே விழுந்து, அவளுடைய உடல் நாய்களால் விழுங்கப்பட்டது, அவள் இருந்ததற்கான எந்த தடயமும் இல்லை.

🔸இந்த கொடூரமான விதி அவளுடைய பாவங்களின் தீவிரத்தை அடிக்கோடிட்டுக் காட்டியது மற்றும் எதிர்கால சந்ததியினருக்கு ஒரு தெளிவான எச்சரிக்கையாக இருந்தது.

3️⃣ *பாகால் வழிபாட்டை ஒழித்தல்*
▪️ஆகாப் மற்றும் யேசபேலின் மரணத்தைத் தொடர்ந்து, இஸ்ரவேல் தேசத்தை பாகாலின் வழிபாட்டிலிருந்து விடுவிப்பதற்கான பணியை யெகூ தொடங்கினார்.

▪️பாகாலின் அனைத்து தீர்க்கதரிசிகள், ஆசாரியர்கள் மற்றும் பணிவிடைகாரர்களை அழித்தொழிக்க ஒரு பெரிய சதித்திட்டத்தை அவர் தீட்டினார்.

▪️விக்கிரக ஆராதனையிலிருந்து தேசத்தைச் சுத்திகரிப்பதில் யெகூவின் வைராக்கியம், பாகால் கோவில்கள் அழிக்கப்பட்டு தேவனுடைய உண்மையான ஆராதனையை நிறுவுவதற்கு வழிவகுத்தது.

4️⃣ *தெய்வீக நீதி நிலவும்*

🔺ஆகாப் மற்றும் யேசபேலின் மரணங்களும், பாகால் வழிபாட்டின் ஒழிப்பும், தெய்வீக நீதியின் வெற்றியைக் காட்டுகின்றன.

🔺தேவனுடைய பொறுமையும் எச்சரிப்புகளும் தீர்ந்துபோய், பொல்லாத ஆட்சியாளர்கள் மீது நியாயமான தீர்ப்பை நிறைவேற்ற வழிவகுத்தது.

🔺அவர்களின் கொடூரமான செயல்கள், விக்கிரக வழிபாடு மற்றும் தேவனுடைய சட்டங்களை அலட்சியம் செய்வது, இனி தண்டிக்கப்படாமல் இருக்க முடியாது.

♥️ *வாழ்க்கை பாடங்கள்*

💥ஆகாப் மற்றும் யேசபேலின் மரணம், தெய்வீக நீதி நிலவும் என்பதை நினைவூட்டுகிறது.

💥நாபோத்தின் திராட்சைத் தோட்டத்தில் ஆகாபின் மரணமும், யேசபேலின் கொடூரமான முடிவும் அவர்களின் அக்கிரமம் மற்றும் கொடுமையின் விளைவுகளைக் குறிக்கிறது.

💥பாகால் வழிபாட்டை யெகூ ஒழித்தது, உண்மையான ஆராதனை மற்றும் நீதியின் வெற்றியை மேலும் வலியுறுத்துகிறது.

*‼️தேவனுடைய நீதி தாமதமாகலாம், ஆனால் அது இறுதியில் மேலோங்கும்‼️*

பிரின்சஸ் ஹட்சன்
தமிழாக்கம் இன்னிசை செல்வி மும்பை

-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x

கர்த்தருக்காக எனக்கிருக்கிற பக்தி வைராக்கியத்தை பார்*
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

2 இராஜாக்கள் 10: 16.

1. இங்கு யெகூ ரேகாபின் மகன் யோனதாபை பார்த்து,*கர்த்தருக்காக எனக்கிருக்கிற பக்தி வைராக்கியத்தை பார்* என்றான்.

பக்தி வைராக்கியம் என்றால் *கர்த்தருடைய வார்த்தைக்கு அப்படியே கீழ்ப்படிய வேண்டும் என்கிற பற்றி எரிகிற வைராக்கியமான ஆசையாகும்*.

2. யெகூவின் பக்தி வைராக்கியம் என்பது, *கர்த்தர் எலியா தீர்க்கதரிசி மூலம் சொன்ன படி, ஆகாபின் சந்ததியை முழுமையாய் அழித்து விட வேண்டுவதாகும்*. இதை யெகூ அப்படியே செய்தான்.

ஆம், இன்று *கர்த்தருடைய வார்த்தைகளுக்கு நாம் அப்படியே கீழ்ப்படிய வேண்டும் என்கிற பக்திவைராக்கியம நம் வாழ்க்கையில் இருக்கிறதா* ? சிந்திப்போம்.

3. *உம்முடைய வீட்டைப்பற்றிய பக்திவைராக்கியம் என்னை பட்சித்தது* என தாவீது கூறுகிறார். சங்கீதம் 69: 9.

ஆம், *கர்த்தருடைய வீடாகிய நம் சரீரம், அதாவது ஆலயம் பரிசுத்தமாயிருக்க நாம் பக்தி வைராக்கியம் உடையவர்களாயிருக்க வேண்டும்.*

4. *என் சத்துருக்கள் வசனங்களை மறந்த படியால், என் பக்தி வைராக்கியம். என்னை பட்சித்தது* 119: 139. என கூறப்பட்டுள்ளது.

ஆம், வசனத்திற்கு நாம் பக்தி வைராக்கியம் உடையவர்களாய் வாழுகிறோமா?

அப்படியானால் *வசனத்திற்கு நாம் காத்திருந்து, வாசித்து , தியானித்து, கீழ்ப்படிந்து அவர் மேல் பக்தி வைராக்கியத்தோடே வாழுகிறோமா*? சிந்திப்போம்.

5. *தேவனுக்கேற்ற துக்கம் பக்தி வைராக்கியத்தை உண்டாக்கிற்று.*

2 கொரிந்தியர் 7: 11.

6. மட்டுமல்ல, *கிறிஸ்து நம்மை நற்கிரியைகளிலே பக்தி வைராக்கியம் உடையவர்களாக சுத்திகரிக்கும் படி, நமக்காக தம்மை தாமே ஒப்புக் கொடுத்தார்.* தீர்த்து 2: 14. இந்த அன்பிற்காக அவரை துதிப்போம். ஸ்தோத்தரிப்போம்.

வேதத்திலே பினெகாஸ், எலியா, யெகூ, தாவீது, பவுல் ஆகியோர் கர்த்தருக்காக பக்தி வைராக்கியமாக வாழ்ந்தார்கள் என பார்க்கிறோம். நாமும் கூட, நமக்காக ஜீவனையே தந்து, நம்மை இரட்சித்து, நம்மோடு மரண பரியந்தம் கூட இருக்கிற நம் இயேசுவுக்காக பக்தி வைராக்கியத்தோடு வாழ, ஆவியானவர் தாமே நமக்கு உதவி செய்வாராக. ஆமென்.அல்லேலூயா.
*Dr.Padmini Seĺvyn*

-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x

2 இராஜா 6:5-7

🌳5 ஒருவன் ஒரு உத்திரத்தை🪵 வெட்டி வீழுத்துகையில்

கோடரி🪓 தண்ணீரில் விழுந்தது. அவன் ஐயோ என் ஆண்டவனே அது இரவலாக வாங்கப்பட்டதே என்று கூவினான்.

🌳6 தேவனுடைய மனுஷன் அது எங்கே விழுந்தது

என்று கேட்டான். அவன் காண்பித்த போது ஒரு கொம்பை வெட்டி அதை அங்கே எறிந்து அந்த இரும்பை மிதக்கப் பண்ணி,

🌳7 அதை எடுத்துக் கொள் என்றான். அப்படியே அவன் தன் கையை நீட்டி அதை எடுத்துக் கொண்டான்.🪓

🚹 உழைப்பாளியாக

இருந்தான்.

ஊழியக்காரருடன் இருக்கிறேன் என்று சோம்பலாக இருக்கவில்லை🚼

📓நீதி 10:4

சுறுசுறுப் புள்ளவன்

💪கையோ செல்வத்தை உண்டாக்கும்.

2 உறுதியாக இருந்தான்.🚹 கோடரி சரியில்லை என்று காரணம் கூறாமல்

உத்திரத்தை வெட்டி வீழ்த்தினான்.💯

📓ஏசாயா 26:3

உம்மை🛐 உறுதியாய் பற்றிக் கொண்ட மனதையுடை யவன் உம்மையே

நம்பியருக்கிற படியால் நீர்🧚‍♂️ அவனை பூரண

சமாதானத்துடன்

காத்துக் கொள்வீர்

3 உக்கிராணத்துவம் காணப்பட்டது. இரவலாக வாங்கப்பட்டாலும் உரியவரிடம் கொண்டு சேர்க்க வேண்டும் என்பதில்

கருத்தாக இருந்தான்.

📓1கொரி 4:2

✝️உக்கிராணக் காரன் உண்மை யுள்ளவன்னென்று

காணப்படுவது அவசியமாம்

🛐4 உதவி கேட்க வேண்டிய இடத்தை சரியாக அறிந்திருந்தான்.

சோர்ந்து🤦‍♂️ போகாமல் அடுத்து என்ன செய்வது என்று கவனம் செலுத்தினான்.

📓யோபு 42:2

தேவரீர் சகலத்தையும் செய்ய வல்லவர்.

🤦‍♂️🤦‍♀️உடைந்து போய் இருக்கிறீர்களா?

🤦‍♂️🤦‍♀️இழந்து போன சூழ்நிலை உ‌ள்ளதா ?

🤦‍♂️🤦‍♀️சமாதானம் தொலைந்த நிலை காணப்படுகிறதா?

🧏‍♂️🧏 தவறு❌ ❓எங்கே நடந்தது ❓எப்படி நடந்தது ❓என்ன நடந்தது என்று ஆராய்ந்து

⏰காலங்களைக்

கடத்தாமல்

🛐உன்னதரின் பாதத்தில்

உள்ளபடியே

அர்ப்பணிப்போம்

🛐உடைந்த

பாத்திரமாம் நம்மை உலகிற்கு

🛐உபயோகமான

கருவியாக மாற்றுவார்🙏

📓1கொரி 10:13

🤷‍♂️🤷‍♀️உங்கள் திராணிக்கு

மேலாக சோதிக்கப்படுகிறதற்கு அவர் இடங்

கொடாமல் - - - - - - - தப்பித்துக் கொள்ளும் படியான போக்கையும் உண்டாக்குவார்🙋‍♂️

God bless you 🙏

-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x

🎯தலைப்பு:
✍️கர்த்தர் இஸ்ரவேலை குறைந்துபோகப் பண்ணினார்.

2 இராஜா 10:32.

🎈தியானம்:

👉1 இராஜா 10:30ல்

♦️யெகூ ,

🔻கர்த்தரின் பார்வைக்கு செம்மையானதை நன்மையாய் செய்ததாலும்

📍(பாகால் கோயிலை அழித்தது)

🔺கர்த்தரின் இருதயத்தில் இருந்தபடியெல்லாம் செய்ததாலும்

📍(ஆகாப் குடும்பத்தை அழித்ததது)

♦️அவனது 4தலைமுறை ஆட்சி செய்வார்கள் என்று

ஆசீர்வதித்தார்.

👉அது நடந்தது.

🎈4 தலைமுறை ஆட்சி:

யெகூ

1. யோவாகாஸ்.

2.யோவாஸ்

3. யெரோபெயாம்

4.சக்கரியா.

👉ஆனால் 2 இராஜா 10:32 ல்

🔻ராஜாங்கத்தை கொடுத்த கர்த்தர்

ராஜ்யத்தின் மக்களை (இஸ்ரவேலை) குறைந்துபோகப்பண்ணினார்

🔺அதன் எல்லைகளை ஆசகேலிடமும் அவன் மகன் பெனாதாத்திடமும் ஒப்புக் கொடுத்தார்.

10:32, 13:3.

📍(இந்த ஒப்புக் கொடுத்தலை

இஸ்ரவேலின் அழிவை

எலிசா தீர்க்கதரிசி

ஏற்கெனவே அழுது கொண்டே

ஆசகேலிடம் சொல்லியிருப்பார்)

2 இராஜா8: 11, 12.

♦️இதுவும் நடந்தது.

🎯ஏன் நடந்தது❓

👉யெகூ

🔻நியாயபிரமாணத்தின்படி முழு இருதயத்தோடும் நடக்கக் கவலை படவில்லை

🔺யெரோ பெயாமின் பாவங்களை விட்டு பின் வாங்கவில்லை.

🎯சிந்தனைக்கு,

🎈ராஜாக்களுக்கு பெருமை,

ஜனங்களின் திரட்சி

🎈ஆனால் அதை யெகூவின் பாவத்தினால் அதை

குறைய பண்ணினார்.
🔻நம்மால் கர்த்தரின் ராஜ்யம் விரிவாக வேண்டும்

🔺ஏனெனில் நம்மை ராஜாக்களாய் தெரிந்துகொண்டார்.

♦️நம் பாவத்தினிமித்தம்

அவரது ராஜாங்கம் குறைந்து போகாதபடி

ஜாக்கிரதையாயிருப்போம்.
ஆமென்.🙏

-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x

📗 *சிறிய குறிப்பு* 📗

🍂 *கன்று குட்டிகள்* 🍂

இறுதியில் *வனாந்தரத்தில்* இஸ்ரவேலர்களைத் தொடர்ந்து வந்த பொன் கன்று, *தாண் மற்றும் பெத்தேல்* பட்டணத்தில் வந்தது. முன்பு *ஆரோன்* இஸ்ரவேல் ஜனங்களின் வற்புறுத்துதலின் பேரில் இந்தத் தங்கக் கன்றுக்குட்டியை உருவாக்கினான்.

ஆனால் *யெரொபெயாம்* தந்திரமாக இரண்டு பொன் கன்று குட்டிகளை உருவாக்கி, ஒன்றை பெத்தேலிலும், ஒன்றை தாணிலும் வைத்தான். இவ்வாறு *இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தரை ஆராதிக்க எருசலேமுக்கு ஜனங்கள் செல்வதை தடுத்தான்*. யெரொபெயாம் தந்திரமாக ஜனங்களை உருவ வழிபாட்டிற்கு அழைத்துச் சென்றான்.

யெகூ கர்த்தருக்காக வைராக்கியமுள்ளவன், பாகால் வழிபாட்டாளர்களையும் ஆகாபின் குடும்பத்தையும் அழித்தான். *ஆனால் அவன் வேண்டுமென்றே யெரொபெயாமின் பாவங்களை நீக்க தவறிவிட்டான்*. இவ்வாறு அவன் கர்த்தருக்கு முழுமையாக செவிசாய்க்கவில்லை.

முழு மனதுடன் கர்த்தரை தொழுது கொள்ளுவதைத் தடுக்கும் *பாவம் நிறைந்த பகுதிகள்* நம் வாழ்க்கையில் இருக்கலாம். *அந்த பாவத்தை நாம் விடாத வரையில் நாம் கர்த்தரை மெய்யாக பின்பற்ற முடியாது*. தேவனிடமிருந்து நம்மைப் பிரிப்பது எது? அதை அறிக்கை செய்து நம் வாழ்வில் இருந்து முழுமையாக அகற்ற வேண்டும்.

_திருமதி ஷீலா ஜெபக்குமார்_ ✍🏼

-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x

*2 இராஜாக்கள் 9, 10*

*🤺யெகூவின் அத்துமீறிய படுகொலைகள்:* (2 ராஜா 10:11-14)

கர்த்தர் யெகூவை இஸ்ரவேலின் ராஜாவாக அபிஷேகம் பண்ணுவித்ததின் நோக்கம், அவர் தம் ஊழியக்காரரின் இரத்தப்பழியைகளையெல்லாம் யேசபேலின் கையில் வாங்குவது. எனவே அவர் *"ஆகாபின் குடும்பத்தை முற்றிலும் அழித்து விடவேண்டும்"* என்று யெகூவுக்குக் கட்டளை கொடுத்தார். *யெகூ அதை பூரணமாக நிறைவேற்றினான். கர்த்தர் அதற்காக அவனைப் பாராட்டி, "உன் குமாரர் இஸ்ரவேலுடைய சிங்காசனத்தின்மேல் நான்கு தலைமுறையாக வீற்றிருப்பார்கள்" என்றார்.*

🤺ஆனால் அவன் அதோடு விடவில்லை. இஸ்ரவேலை சுத்திகரிப்பதற்காகக் கர்த்தர் அவனைத் தெரிந்து கொண்டபோதிலும், அவர் கட்டளையிட்டதைவிட மிக அதிகமான தேவையற்ற கொலைகளை செய்து, இஸ்ரவேலில் ஏராளமாக இரத்தஞ்சிந்தினான். *யூதாவின் ராஜாவாகிய அகசியாவின் சகோதரர்கள் நாற்பத்திரண்டு பேரைக் கொன்றது,* அவனுக்கு பயங்கரமான பின்விளைவுகளை ஏற்படுத்தியது. கர்த்தர் தாமே அதைக் கண்டித்து, *"யெகூவின் வம்சத்தாரிடத்தில் யெஸ்ரயேலின் இரத்தப்பழியை விசாரித்து, இஸ்ரவேல் வம்சத்தாரின் ராஜ்யபாரத்தை ஒழியப்பண்ணுவேன்" என்றார்.* (ஓசியா 1:4-5).

🤺அநேக நேரங்களில் யெகூவைப்போலவே, நாம் கர்த்தருக்காக வைராக்கியமாக காரியங்களைச் செய்வதாக நினைத்துக்கொண்டு, *நம் சுய இலட்சியம் நிறைவேறவும், நம் திறமைகளை மற்றவர்களுக்கு நிரூபிக்கவும் அல்லது கொடூரமான காரியங்களைச் செய்து நம் அதிகாரத்தை வெளிக்காட்டவும், கர்த்தருடைய அனுமதியோ அல்லது ஆசீர்வாதமோ இல்லாமல் செய்கிறோம்‌.* கர்த்தரையோ, வேதாகமத்தையோ, அடக்குமுறையை எதிர்க்கும்படி பயன்படுத்துவதை தேவன் விரும்புவதில்லை. *கிறிஸ்தவர்களுக்கு எதிராக கொடுமைகள் நடப்பதை எதிர்த்துப் போராடுகிறவர்கள் அநேகர், தங்கள் சுய நலத்துக்காக, அரசியல் இலாபத்திற்காக செய்கிறதை இன்றும் பார்க்கிறோம்.* அவர்களுக்கும் இயேசு கிறிஸ்துவுக்கும் எந்த சம்பந்தமும் கிடையாது. கர்த்தர் அப்படிப்பட்டவர்களை இன்று எச்சரிக்கிறார். *நாம் கிறிஸ்துவின் மாதிரியையும், அவருடைய போதனைகளையும் மட்டுமே பின்பற்ற அழைக்கப்பட்டிருக்கிறோம்.*
பிரேமா ராஜசிங்

-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x

*🍀சிப்பிக்குள் முத்து🍀*

இன்றைய வேத வாசிப்பு பகுதி -

*2 இராஜா : 9, 10*

*🍃முத்து சிதறல் : 112*

🍎🍎🍏🍎🍎 *யெகூ ஒலிமுக வாசலில் வந்தப்போது அவள், (யேசபேல்) தன் ஆண்டவனை கொன்ற சிம்ரி ஷேமம் அடைந்தானா❓️ என்றாள்.*

(2 இராஜா - 9 : 31)

🍏🍏🍎🍏🍏

*💊நமக்கு சொல்ல பட்ட வேலை என்னமோ, அதை மாத்திரம் செய்வோம். 💊*

💦💦💦💦💦

*ஆகாபின் அட்டூழியங்களையும், யேசபேலின் வேசித்தனங்களையும் (விக்கிரக வழிபாட்டு முறைமைகளை) அழிக்கும்படி தேவனால் ஏற்படுத்தப்பட்ட மூன்று பேரில் இந்த யெகூவும் ஒருவர்.* (1 இராஜா - 19 : 17) *அந்த மூன்று பேர் ஆசகேல், எலிசா, யெகூ என்பவர்கள்.*

இப்பொழுது யெகூ யேசபேலை கொன்று அழிக்கும்படி யெஸ்ரயேலுக்கு வருகிறார். ஆனால் யேசபேலோ யெகூவுக்கு முன் பயமுறுத்தும் வார்த்தைகளை கக்குகிறாள்.

*🪢சிம்ரி என்பவன் ஏலா என்ற இஸ்ரவேல் அரசனின் படைக்கு தளபதி.*

( 1இராஜா - 16 : 8, 9) ஒருநாள் இவன் ஏலாவின் வீட்டினுள் அத்துமீறி நுழைந்து, அவன் குடித்து வெறி கொண்டிருக்கையில் அவனை வெட்டி கொன்று போட்டு இஸ்ரவேலின் மேல் தானாகவே இராஜாவானவன். *(1இராஜா - 16 : 10)* பின் அவன் வீட்டாரையெல்லாம் வெட்டி கொன்று போட்டவன்.

*(1 இராஜா - 16 : 11)*

*🍁ஆனால் இந்த சிம்ரி திர்சாவில் வெறும் ஏழு நாள் மட்டுமே இராஜாவாக அரசாள இயன்றது.* (1 இராஜா - 16 : 15)

*உமரி என்பவனை ஜனங்கள் அரசனாக ஏற்றுக்கொண்டு, அவனை தங்களுக்கென்று இராஜாவாக்கியதை கண்ட இந்த சிம்ரி தான் தங்கி இருந்த இராஜ அரமனையை தீக்கொளுத்தி அதில் மாண்டு போனவன்.*

( 1 இராஜா - 16 : 18)

*🍅சரித்திரத்தை எடுத்து பேசி, சிம்ரி எப்படி மாண்டு போனானோ, அப்படியே நீயும் உன் ஆண்டவன் வீட்டாரை கொல்ல பார்த்தால் மாழ்வது உறுதி/ சாவாய் போன்ற, பயமுறுத்தல் வார்த்தைகளை அவிழ்த்து விட்டாள் யெகூவை பார்த்த மட்டில் இந்த யேசபேல்.*

ஆனால் யெகூ இந்த வார்த்தைகளை கேட்டு நடுங்கவில்லை.

ஏன் என்றால், அவர் கர்த்தரின் சித்தபடி அபிஷேகிக்கப் பட்டிருந்த அரசன்.

*🍉கர்த்தரின் ஊழியத்தில் இருப்போருக்கும் இப்படிப்பட்ட பயமுறுத்தல்கள் வருவது சர்வ சாதாரணம், ஆனால் நாம் இறைவனால் மெய்யான அபிஷேகம் பெற்றோராக திகழ்ந்து தைரியமாக சில பல வேளைகளில், ஆவியானவரின் உந்துதலுக்கிணங்க செயல்பட வேண்டியது அவசியப்படுகிறது. கர்த்தர் ஒரு முறை ஒரு விதமாகவும், மறுமுறையோ அதற்கு நேர் மாறுபட்ட விதமாகவோ கூட எம்மை வழிநடத்தலாம்.*

*🪶இங்கு யெகூ தான் யேசபேலுக்கு சாவு மணியடிக்க நியமிக்க பட்டிருந்த அரசன் என்பது நிரூபணம் ஆக வேண்டியது.* ஆகையால் அன்றே அவள், யெகூ போட்ட கட்டளையின்படி தன் சொந்த காவல் பிரதானிகள் மூலம் ஜன்னலில் இருந்து கீழே தள்ளிவிடப்பட்டு உடல் சிதறி மாண்டு போனவள்.

*🎁சிம்ரி என்பவன் சுய சித்தத்தை, சுய நல நோக்கோடு அரசாட்சியை பிடித்து ஆள பார்த்தவன்.* ஆனால் யெகூ அப்படியல்ல.

தேவன் கொடுத்த / பொழிந்தருளிய அபிஷேகம் யெகூவில் நிலைத்தோங்கியது. ஆகாபின் குமாரன் யோராமை கொன்றான். இப்பொழுது ஆகாபின் மனைவி யேசபேலை, யோராமின் தாயை கொல்ல வருகையில் தான் இந்த பூச்சாண்டி பயமுறுத்தல் சமாச்சாரத்தை யெகூ சந்தித்தார்.

*🍏தேவ சித்தம் செய்ய அபிஷேகிக்க பட்ட எவரும் எந்த விதமான ஆவிகளின் பயமுறுத்தல்களுக்கும் அஞ்சார்கள். அகில உலகமே இவர்களை எதிர்த்தாலும் அப்படிப்பட்டோர் அஞ்சா நெஞ்சர்களாக காரியத்தில் மாத்திரம் கண் பதித்தோராய் இருப்பார்கள்.*

இந்த யேசபேல் பயமுறுத்தியதுபோல யெகூ அந்த சிம்ரி ஆண்டது போல வெறும் ஏழு நாள் மட்டுமல்ல, மாறாக, இஸ்ரவேலின்மேல் 28 ஆண்டுகள் அரசாட்சி செய்யலானார்.

*(2 இராஜா - 10 : 36)*

🍒🌻🍒🌻🍒🌻🍒

*🎀தேவ சித்தம் செய்யும்படி நியமிக்கப்பட்டோர், தங்களுக்குள், மற்றும் தங்கள் வம்சத்திற்குள் மிகுந்த சமாதானத்தோடு வாழுவார்கள்.* யேசபேல் போல சரித்திரம் பேசி எம்மை எவரும் பயமுறுத்த நாம் இனி இடமளிக்க வேண்டியதில்லை. *எமக்கு கட்டளையிட பட்டது என்னவோ அதற்க்கு நேரே மாத்திரம் அந்த யெகூவைபோல மன தைரியத்தோடு பயணிக்க அறிந்திருக்க வேண்டும்.*

யேசபேலின் ஆவி உலகில் உலா வந்து கொண்டு இருப்பதை பலர் அறிந்தாரில்லை. பலரது ஊழியங்களுக்கு பல்வேறு விதங்களில் இடையூரு செய்வது யேசபேலின் ஆவியின் கிரியை யாகும்.

🎈🛍️🎈🛍️🎈🛍️🎈

*👿யேசபேலின் ஆவி போராடும் விதங்களை நாம் சற்றேனும் அறிந்திருக்க வேண்டியது இக்காலத்திற்கு ஊழியத்திற்கு உபயோகமாக இருக்கும், சந்தேகமே இல்லை. அவையாவன :*
*❗1. பெருமையின் ஆவி.*

*இது தன்னை குறித்து எண்ண வேண்டியதற்கு மிஞ்சி எண்ணி செயல்பட எம்மை தூண்டி விடும்.*

( 1 இராஜா - 21 : 7) நான் என்னும் அகம்பாவமே இதன் மூலம் / *வேர்.*

இந்த வேர் நம் எல்லோரிலும் இருந்து பிடுங்கி எறியப்படாவிட்டால், பிற்காலத்தில் ஆபத்து நமக்கு தான்.

*❗2. தாறுமாறுகளின் ஆவி.*

*அதாவது ஒழிங்கின்மை.* ஊழியத்தில் ஒழுங்கு முக்கியம். ஊழியமோ, பிள்ளை வளர்ப்போ, சபை ஆராதனையோ, சமூக வாழ்வோ, உண்பதோ, பருகுவதோ, யாவற்றிலும் ஒழுங்கு கடை பிடிப்போர் மாத்திரமே கட்டுப்பாடு உடையோர். யேசபேலின் *ஆவியுடையோருக்கு ஒழுங்கு என்கிற வார்த்தையே அலர்ஜி, கசப்பு.* தாறுமாறாக ஓடவும், நடக்கவும் தான் பழகி இருப்பார்கள். இவர்களை எவரும் கட்டுப்படுத்த இயலாது.

*❗3. எரிச்சலின் ஆவி.*

*இவர்கள் பழி வாங்க மட்டும் துடித்துக்கொண்டே இருப்பார்கள்.* பொறாமையும் இவர்களை தொற்றி கொண்டு இவர்களை வால் பிடித்து கொண்டு சுற்றுவதால், இவர்கள் அந்த முதல் கொலை காரன் காயீனையேக்கூட விலை பேசி வாங்கி விடுமளவு செயல்படுவார்கள். *செய்வதையெல்லாம் செய்துவிட்டு ஒன்றும் அறியா அப்பிராணி குஞ்சுகள் போலவே இருப்பார்கள்.* பச்சோந்தியை போல நேரத்திற்கு நேரம் மாறிக்கொண்டே இருப்பார்கள். *நிலைவரமான நிலை இவர்களில் இராது.* சவுலைப்போல நேரடியாக பார்க்கையில் தோத்திரம்,

*பிறகு ஆத்திரம் தான் இவர்களது சூத்திரம்.*

*❗4. விக்கிரகத்தின் ஆவி.*

*🥏இந்த யேசபேல் மூலம் இஸ்ரவேலில் பயங்கரமாக பாகால்,மற்றும் விக்கிரக வணக்கம் கொடி கட்டி பறந்தது.*

இரண்டு நினைவுகளால் மக்கள் குந்தி குந்தி நடக்க இவளே காரணம்.

ஆகாப் - யேசபேல் முன் வரும்போது மக்கள் விக்கிரக வணக்கத்தை செலுத்துவது,

*மெய் தேவ ஊழியரான எலியா போன்றோரை கண்டால் "கர்த்தரே தேவன், கர்த்தரே தேவன்" என கூச்சலிடுவது இந்த ஆவியின் செய்கை.*

அது இன்றும் கிரியையில் இருக்கிறது. *முழுமையாக ஜீவனுள்ள தேவனிடம் திரும்பாமல் இருப்போர் பின்னே இந்த யேசபேலின் ஆவி கிரியையில் உள்ளதை நாம் புரிந்துக்கொண்டு செயல்பட வேண்டும்.*

*🌈 யேசபேல் யெகூவை பயமுறுத்தினாள்.* ஆனால் யெகூவோ கீழே விழ தள்ளப்பட்ட அவள் மேல் குதிரையில் அமர்ந்தவராக, அவளை மிதித்து கொண்டு அவள் மேலோடி ஏறி போனான். *ஊழியத்தில் நாம் செயல் இழந்து நிற்கத்தக்தாக, பயமுறுத்தல்களை கொடுப்போர் அனைவரும் யேசபேலின் ஆவியால் நடத்தப்படுபவர்கள் என்பதை மறவாமல்,*

அதே வேளை எம்மை ஆட் கொண்டு வழிநடத்தும் தேவனின் நடத்திப்புக்கு ஏற்ற விதமாகவும் அபிஷேகத்தில் நிலைத்திருப்போம் / அபிஷேகத்தில் நிறைந்திருந்து செயல்படுவோம்.

*யெகூ கர்த்தர் தனக்கு கட்டளை யிட்டு இருந்த வரையறைகளை தாண்டி பலரை சங்காரம் செய்த பாவத்தை*

(2 இரா - 10 : 11) *கர்த்தர் பின் நாளில் யெகூவின் வம்சத்தாரை நியாயந்தீர்த்தார்.*

(ஓசி - 1 : 4)

பிதாக்கள் அக்கிரமம் செய்தால் சந்ததிகள் கண்டிப்பாக பலா பலன்களை சுமக்க தான் நேரிடும்.

🍀🍇🍀🍇🍀🍇🍀

*யெகூ பாகால் வணக்கத்தை இஸ்ரவேல் தேசத்தில் இருந்து ஒழிய பண்ணினாலும்....*

யெரோபேயாமின் பாவத்தை அவன் விடவில்லை. அதாவது வட இராஜ்யத்தில் கொடி கட்டி வந்த கன்று குட்டி வணக்கத்தை அவன் தடை செய்யாமல்....அதற்கு ஆதரவாக நடந்து கொண்டது மட்டுமல்ல, இவனும் அந்த வணக்கத்தை செய்து வந்தவன் போல தோன்றுகிறது.

*(2இராஜா - 10 : 29)*

அதினால் யுத்த காலங்களில் இஸ்ரவேலர் தோல்வியுற்று, எண்ணிக்கையில் குறைந்து போக நேர்ந்தது.

*கர்த்தர் சொன்னதை மாத்திரம் செய்ய வேண்டுமே தவிர* பக்தி வைராக்கியம் என்னும் போர்வையில் அடாவடி வேலைகளை செய்தால் கர்த்தர் விட மாட்டார்.

*நீதியாய் நியாயந்தீர்ப்பார்.*

நமக்கான அழைப்பு என்னவோ, அதிலே மாத்திரம் கவனம் செலுத்தி, எமது ஊழியங்களை செய்து, ஆண்டவரிடம் வெகுமதிகளை பெற ஜாக்கிரதை காப்போமா❓️

*🍧Sis. Martha Lazar*

NJC, KodaiRoad.

Tags

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.