=================
2 KINGS : 06 - 08
================
The strength, and the value of any school is the character and the ability of those who teach. It is not the methods but the men that are important….*
💡II Ki.6:1- This reveals something of the popularity of Elisha. He taught in a theological seminary, the school of the prophets. The school grew, and they needed larger quarters. This was due to the presence and the popularity of Elisha. *The strength, and the value of any school is the character and the ability of those who teach. It is not the methods but the men that are important, especially in a Christian school.*
📖II Ki. Ch.6: In chapter 6 we will see two more thrilling experiences that Elisha had. *Elisha was an outstanding prophet, although he was different from Elijah. Elijah’s ministry was public; Elisha’s ministry was more private (we have just seen how he dealt with Naaman, the captain of the Syrian host). Elijah was spectacular—he brought down fire and rain from heaven. Elisha was a quiet man; he shunned the spotlight. However, both prophets were God’s men at God’s time.*
⛹️♂️ *Application* : II Ki.7:9- *There is a great spiritual lesson for us here. At this moment you and I are enjoying the Word of God. Today is a day of good tidings, and we sit here and enjoy it. What about getting the Word out to others?* What are we doing to share the Word of God with those who are starving spiritually? We ought to be busy getting the Word of God out to needy hearts. *God expects each of us to use the talents He has given us to publish the good tidings which are the Word of God.* We must not hold our peace in this desperate hour!
⛹️♂️ *Application* : II Ki.6:7- *As the axe head floated to the surface, Elisha said, “I’ve shown it to you. Now it’s your responsibility to reach down and grab hold of it.” That’s always the way it is in the things of God. He causes a truth or understanding to surface, and then He says, “Reach out and grab it.”* We think of Noah. He released a dove to see if there was dry land, and Genesis 8:9 says that he reached out and brought the dove unto him. The dove is a type of the Holy Spirit and Noah reached out, grabbed hold, and brought it in. May we do the same.
Jaya Pradeep-Kodaikanal.
-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x
2இராஜாக்கள்: 6-8
💐💐💐💐💐💐💐
*அப்பொழுது எலிசா: கர்த்தருடைய வார்த்தையைக் கேளுங்கள்; நாளை இந்நேரத்தில் சமாரியாவின் வாசலிலே ஒரு மரக்கால் கோதுமை மாவு ஒரு சேக்கலுக்கும், இரண்டு மரக்கால் வாற்கோதுமை ஒரு சேக்கலுக்கும் விற்கப்படும் என்று கர்த்தர் சொல்லுகிறார் என்றான்*.
*அப்போழுது ராஜாவுக்குக் கைலாகு கொடுக்கிற பிரதானி ஒருவன் தேவனுடைய மனுஷனுக்குப் பிரதியுத்தரமாக: இதோ கர்த்தர் வானத்திலே மதகுகளை உண்டாக்கினாலும் இப்படி நடக்குமா என்றான்; அதற்கு அவன்: உன்னுடைய கண்களினாலே அதைக் காண்பாய்; ஆனாலும் அதைச் சாப்பிட மாட்டாய் என்றான்*.
(2இராஜாக்கள்: 7:1-2)
★ "கர்த்தர் வானத்திலே மதகுகளைத் திறந்தாலும் இவ்விதம் நடக்குமா?" என்று சந்தேகப்படாதீர்கள்.
*வானத்திலே மதகுகளைத் திறக்காமலே அவ்விதம் செய்ய கர்த்தர் வல்லவர் என்பதை விசுவாசிக்க வேண்டும்*.
★அற்புதத்தைச் செய்வதற்கு அவருக்கு எண்ணிறந்த வழிகள் உண்டு.
★அவிசுவாசியான மனிதன் அற்புதத்தைக் கண்டும் அனுபவிக்க முடியாமல் செத்தான்.
★ இனியும் தாங்க முடியாது என்ற நிலை வரும்போது சூழ்நிலைகளை நொடிப்பொழுதில் மாற்ற வல்லவரான கர்த்தரை முற்றிலும் நம்புவோமாக.
★மேலும் நமது வாயின் வார்த்தைகளைக் குறித்து கவனமாயிருப்போமாக.
*மரணமும் ஜீவனும் வாயின் வார்த்தை*.
★மனிதனால் இயற்கையால் நடக்காது என்று பேசுவதைவிட தேவனால் முடியும் என்று பேசுவது சிறந்தது.
*மனுஷனுக்குத் தன் வாய்மொழியினால் மகிழ்ச்சி உண்டாகும்*. (நீதி: 15:23)
*மனுஷன் தன் வாயின் பலனால் நன்மையை புசிப்பான். எனவே விசுவாசமான சொற்களையே எப்போதும் பேசிப்பழகுவோமாக*.
*ஆமென்*.
💐💐💐💐💐💐💐💐💐
✍️Mrs. Bhavani Jeeja Devaraj, Nagercoil
-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x
2 Kings 6-8
*WHAT A GOD WE SERVE* ❗️
*God who reveals secrets to His children* ‼️
💥 Elisha, the prophet who is in Israel, tells the king of Israel the words that you speak in your bedroom (2 Kings 6:12)
💥 The Lord said, “Shall I hide from Abraham what I am doing (Gen 18:17)
💥 The secret of the Lord is with those who fear Him (Ps 25:14)
💥 His secret counsel is with the upright (Pro 3:32)
💯 *Surely the Lord God does nothing, unless He reveals His secret to His servants the prophets.* (Amos 3:7)
Usha
-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x
⚡ *இந்நாள் நற்செய்தி அறிவிக்கும் நாள்* ⚡
🔹 பின்பு அவர்கள் ஒருவரை ஒருவர் நோக்கி: *நாம் செய்கிறது நியாயமல்ல, இந்நாள் நற்செய்தி அறிவிக்கும் நாள்; நாம் மவுனமாயிருந்து, பொழுது விடியுமட்டும் காத்திருந்தால் குற்றம் நம்மேல் சுமரும்; இப்போதும் நாம் போய் ராஜாவின் அரமனையாருக்கு இதை அறிவிப்போம் வாருங்கள்* என்றார்கள். (2 இராஜாக்கள் 7:9).
🔸 சீரியாவின் ராஜாவாகிய பெனாதாத் தன் இராணுவத்தையெல்லாம் கூட்டிக்கொண்டுவந்து சமாரியாவை முற்றிக்கைபோட்டான். அதினால் சமாரியாவிலே கொடிய பஞ்சமுண்டாயிற்று. ஒருநாள் இரக்கமுள்ள தேவன், மறுநாள் சமாரியாவின் பஞ்ச நிலைமை சீர்ப்படுத்தப்படும் என்று எலிசா மூலம் அறிவித்தார். பற்றாக்குறைக்கு பதிலாக, நகரத்தில் *அளவுக்கதிகமான ஆகாரம்* கிடைக்கும் என்று எலிசா அறிவித்தான். ராஜாவின் பிரதானி ஒருவன் இந்த *தீர்க்கதரிசன வார்த்தைகளை நம்பவில்லை. கர்த்தரால் கூடாத காரியம் ஒன்றும் இல்லை* என்ற சத்தியத்தை அவன் மறந்துவிட்டான். எலிசா மூலம் தேவன் வெளிப்படுத்திய பல காரியங்கள் நடந்தன என்பதை அவன் அறிந்திருக்க வேண்டும். அந்த பிரதானி எலிசாவின் மூலம் தேவன் வெளிப்படுத்திய வார்த்தைகள் *நிறைவேறுவதைக் காண்பான், ஆனால் அதன் பலனை அனுபவிக்கமாட்டான்* என்று ஒரு கடுமையான தீர்ப்பை எலிசா மூலம் தேவன் அறிவித்தார். *வேதத்தில் கர்த்தர் சொல்லியிருப்பதை நாம் விசுவாசிக்கவில்லை என்றால், நிச்சயமாக அந்த ஆசீர்வாதங்களை இழக்க நேரிடும்.*
🔸 நான்கு குஷ்டரோகிகள் பட்டினியால் சாவதைவிட சீரியருடைய இராணுவத்திடம் சரணடைய விரும்பினர். அவர்கள் இருட்டோடே எழுந்திருந்து, சீரியருடைய பாளயத்தின் முன்னணியில் வந்தபோது *அங்கே ஒருவருமில்லை.*
🔸 முற்றுகையிட்ட சீரியரின் இராணுவத்தை தோற்கடிக்க முடியாமல் இஸ்ரவேலர் வல்லமையற்றவர்களாக இருந்தனர். ஆனால், இஸ்ரவேலின் தேவன் மிகவும் வல்லமையுள்ளவர். அவர் சீரியரின் இராணுவத்திற்கு ஒரு மகா இராணுவத்தின் இரைச்சலைக் கேட்கப் பண்ணினதினால் அவர்கள் ஓடிப்போனார்கள். வேதம் கூறுகிறது: *"தேவன் இல்லாதவைகளை இருக்கிறவைகளைப்போல் அழைக்கிறவருமாயிருக்கிறார்."* (ரோமர் 4:17). சீரியர் தங்கள் கூடாரங்களையும் தங்கள் குதிரைகளையும் தங்கள் கழுதைகளையும் தங்கள் பாளயத்தையும் அவைகள் இருந்த பிரகாரமாக விட்டு, *தங்கள் பிராணன்மாத்திரம் தப்பும்படி* ஓடிப்போனார்கள்.
🔸 குஷ்டரோகிகள் கூடாரங்களுக்குள் பிரவேசித்து புசித்துக் குடித்து, அதிலிருந்து வெள்ளியையும் பொன்னையும் வஸ்திரங்களையும் எடுத்துக் கொண்டு போய் ஒளித்துவைத்தார்கள். இந்நாள் *நற்செய்தி அறிவிக்கும் நாள்; மவுனமாயிருந்து, சுயநலத்துடன் அனைத்தையும் அனுபவிப்பது பாவம்* என்பதை அவர்கள் உணர்ந்து தங்கள்மேல் குற்றம் சுமராதபடி போய் ராஜாவின் அரமனையாருக்கு அறிவித்தார்கள்.
🔸 *இயேசு பிறந்தபோது,* கர்த்தருடைய தூதன் மேய்ப்பர்களுக்குத் தோன்றி, எல்லா ஜனத்துக்கும் மிகுந்த சந்தோஷத்தை உண்டாக்கும் *நற்செய்தியை* அவர்களுக்கு அறிவித்தான். அவர்கள் விரைந்து சென்று, மரியாளையும், யோசேப்பையும், முன்னணையிலே கிடத்தியிருக்கிற பிள்ளையையும் கண்டார்கள். அவர்கள் *கண்டு, அந்தப் பிள்ளையைக் குறித்துத் தங்களுக்குச் சொல்லப்பட்ட சங்கதியைப் பிரசித்தம்பண்ணினார்கள்.* (லூக்கா 2:8-18). மேய்ப்பர்கள் முறையாய் செய்தார்கள். *முதலில் தங்களுக்குச் சொல்லப்பட்டதைக் கண்டறிந்து, பின்னர் மற்றவர்களுக்குத் தாங்கள் கண்டதையும் கேட்டதையும் பிரசித்தம்பண்ணினார்கள்.*
🔸 இயேசு பரலோகத்திற்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது, அவர் தம் சீஷர்களை நோக்கிக் கூறினார்: *"நீங்கள் உலகமெங்கும் போய், சர்வ சிருஷ்டிக்கும் சுவிசேஷத்தைப் பிரசங்கியுங்கள்."* (மாற்கு 16:15). அவருடைய கிருபையால் இரட்சிக்கப்பட்ட நாம் *மௌனம் காக்காமல், அனைவருக்கும் நற்செய்தியைப் பரப்ப வேண்டும்* என்பது அவருடைய கட்டளை. நிச்சயமாக, நாம் நமக்காக மாத்திரம் வாழ்வதற்காக இயேசு நம்மை இரட்சிக்க வரவில்லை. *சுயநலத்திலிருந்து நம்மை இரட்சிக்கவும், அவரிடமிருந்து பெற்றுக்கொள்வதை நாம் பிறருடன் பகிர்ந்துகொள்ளக் கற்பிக்கவும்* அவர் வந்தார்.
🔸 பவுலின் வார்த்தைகள்: *"சுவிசேஷத்தை நான் பிரசங்கித்துவந்தும், மேன்மைபாராட்ட எனக்கு இடமில்லை; அது என்மேல் விழுந்த கடமையாயிருக்கிறது; சுவிசேஷத்தை நான் பிரசங்கியாதிருந்தால், எனக்கு ஐயோ!”* (1 கொரிந்தியர் 9:16). கிறிஸ்தவர்களைப் பொறுத்தவரை, இயேசுவின் நற்செய்தியைப் பகிர்ந்து கொள்வது அவர்களின் கடமை; அவர்கள் நற்செய்தியைப் பகிர்ந்து கொள்ளாவிட்டால், அவர்களுக்கு ஐயோ!
🔹 *வேதத்தில் எழுதப்பட்டுள்ள அனைத்தையும் நாம் நம்புகிறோமா?*
🔹 *இயேசுவின் நற்செய்தியை மற்றவர்களுக்குப் பகிர நாம் உண்மையாகவே முயற்சி செய்கிறோமா?*
✅ நாம் கற்றுக் கொள்ளும் *பாடங்கள்*:
1️⃣ *வேதத்தில் கர்த்தர் சொல்லியிருப்பதை நாம் விசுவாசிக்கவில்லை என்றால், நிச்சயமாக அந்த ஆசீர்வாதங்களை இழக்க நேரிடும்.*
2️⃣ *தேவன் இல்லாதவைகளை இருக்கிறவைகளைப்போல் அழைக்கிறார்.*
3️⃣ *இயேசு சுயநலத்திலிருந்து நம்மை இரட்சிக்கவும், அவரிடமிருந்து பெற்றுக்கொள்வதை நாம் பிறருடன் பகிர்ந்துகொள்ளக் கற்பிக்கவும் வந்தார்.*
Dr. எஸ். செல்வன்
சென்னை
-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x
☘️☘️☘️☘️☘️
"இரும்பு நீந்தியது".
☘️☘️☘️☘️☘️☘️☘️
கோடாரி-தலை பாகம் தொலைந்து போனதாகவும் ,கடன் வாங்கியதாகவும் கூறப்பட்டுள்ளது.
எல்லா எதிர்பார்ப்புகளுக்கும் மாறாக, நீரோடையின் ஆழத்திலிருந்து இரும்பு கோடரி மிதந்து வந்தது.
ஏனெனில் மனிதனால் முடியாதவைகள் கடவுளால் கூடும்.
கடவுள் நம் நம்பிக்கையை மதிக்கிறார்.
இரும்பு நீந்தியது.
நமது அவநம்பிக்கையான வழக்கு என்ன.?
தீர்க்கதரிசிகளின் கர்த்தர் தனது பரிசுத்தவான்களுக்கு உதவுவதற்காக இருக்கிறார் மற்றும் கண்ணோக்குகிறார்.
எந்த ஒரு நல்ல காரியத்தையும் அவர் நமக்குக் குறைவுபடுத்த மாட்டார்.
சேனைகளின் ஆண்டவரை நம்புவோம்.
இயேசுவின் பெயரைக் கூறி அவரை அணுகுவோம். இரும்பு மிதந்து வரும்.
தேவனுடைய விரல் தம்முடைய ஜனங்களுக்காக அற்புதங்களைச் செய்வதை நாமும் காண்போம்.
☘️☘️☘️☘️☘️☘️☘️☘️☘️☘️
மேபி சுந்தர். சென்னை. இந்தியா
-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x
இஸ்ரவேலுக்கு உளவாயிருக்கிறவன் யார்?*
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
2 இராஜாக்கள் 6: 8 - 12.
1. சீரியா ராஜா இ ஸ்ரவேலுக்கு விரோதமாக யுத்தம் பண்ணும் போது இன்ன இடத்தில் பாளயம் இறங்க வேண்டும் என அவன் ஊழியக்காரரோடு ஆலோசனை பண்ணுகிறான் . ஆனால் *தேவனுடைய மனுஷனாகிய எலிசாவோ ராஜாவுக்கு ஆள் அனுப்பி, இந்த இடத்திற்கு போக வேண்டாம் என எ ச்சரிக்கிறார். ஆகவே இஸ்ரவேலர் அந்த இடத்திற்கு போகாத படி எச்சரிக்கையாயிருந்தார்கள். இப்படி அநேகமுறை ராஜா தன்னை காத்துக் கொண்டான்.*
ஆம், அன்று இஸ்ரவேலருக்கு சீரியர்கள் எந்த இடத்தில் தாக்கப் போகிறார்கள் என்பதை தேவ மனிதனாகிய எலிசா மூலம் கர்த்தர் எச்சரித்தார் . ஆனால் *இன்று நமக்கோ எப்போதும் நம்மை எச்சரிக்க, சத்துருவாகிய பிசாசு என்னென்ன வகைகளில், பாதைகளில் எப்படியெல்லாம் நம்மை தாக்குவான் என பரிசுத்த ஆவியானவர் நம்மை எச்சரித்து ஆலோசனைகளை வேதத்தில் எழுதி வைத்திருக்கிறார்*.
அதுமட்டுமல்ல, *இன்று நமக்குள் வசிக்கும் பரிசுத்த ஆவியானவர் நம்முடைய ஒவ்வொரு காரியங்களிலும் இந்த வழியில் செல்லாதே , இதை செய்யாதே, இந்த மனிதனோடு தொடர்பு கொள்ளாதே என்றெல்லாம் நம்மேல் கண்ணை வைத்து ஆலோசனை சொல்கிறார்*. சங்கீதம் 32: 8. ஆம், அவர் நாமம் *ஆலோசனை கர்த்தர்*. அப்படியானால் இந்த ஆலோசனையை பெற, நாம் *நம்முடைய வாழ்க்கையின் ஒவ்வொரு பகுதிகளிலும் கர்த்தரிடம் கேட்க வேண்டும். அதாவது அவரோடு சஞ்சரிக்கிறவர்களாய் வாழ வேண்டும். இந்த வாழ்க்கை மிகவும் ஆச்சரியமானது! அதிசயிக்க தக்கது, பாதுகாப்பானது.*
2. சீரியர் அங்கு இறங்குவார்கள் என *எலிசா எச்சரித்தார். ஆகவே ராஜா எச்சரிக்கையாயிருந்து, அநேகம் முறை தன்னை காத்துக் கொண்டான்*
ஆம், இன்று நம் ஆவி, ஆத்துமா, குடும்பம், ஆசீர்வாதங்கள் காக்கப்பட வேண்டுமானால் *நாமும் கர்த்தருடைய எச்சரிப்பிற்கு கீழ்ப்படிய வேண்டும்.*
3. இவ்விதமாக *சீரியரின் தந்திரமான ஆலோசனையிலிருந்து கர்த்தர் எலிசா தீர்க்கதரிசியின் வார்த்தைக்கு, ஆலோசனைக்கு கீழ்ப்படிந்து, ராஜா தன்னை காத்துக் கொள்கிறான்*. ஆனால் சீரிய ராஜாவின் இருதயமோ குழம்புகிறது. *நம்முடையவர்களில் யார் இவர்களுக்கு உளவாளிகள்?* எனக்கு கூறுங்கள் என சீரிய ராஜா கூறுகிறான்.
ஆம், *கர்த்தர் நமக்கு ஆலோசனை தரும் போது, அவர் ரகசியங்களை நமக்கு வெளிப்படுத்துகிறார் . சத்துருவின் திட்டங்களை வெளிப்படுத்தி சத்துருவை குழம்ப பண்ணுகிறார். எப்படி இவர்கள் நம் திட்டங்களை அறிந்து செயல்பட்டு தங்களை காத்துக் கொள்கிறார்கள் என அவனை குழம்ப பண்ணுகிறார்.*
ஆம், *இன்றும் அநேக கர்த்தருடைய பிள்ளைகளுக்கு பரிசுத்த ஆவியானவர் சொப்பனங்கள் மூலமாக, தரிசனங்கள் மூலமாக, சூழ்நிலைகள் மூலமாக, வசனம் மூலமாக நடக்க போகிற ஆபத்துகளை, காரியங்களை, வெளிப்படுத்துகிறார்*. எவ்வளவு நல்ல தேவன் நம் தகப்பனாக இருக்கிறார் பாருங்கள். *தம்முடைய பிள்ளைகளுக்கு உதவி செய்யும் படி கர்த்தருடைய கண்கள் பூமியெங்கும் உலாவுகிறது. ஆனால் சத்துருவாகிய பிசாசோ எவனை விழுங்கலாம் என சுற்றி திரிகிறான்*. இவனுடைய தந்திரங்களுக்கு எச்சரிக்கையாக வாழ்வோம்.
4.ராஜா அறியாத ரகசியத்தை, அவன் ஊழியக்காரன் அவனுக்கு தெரியப்படுத்துகிறான். அதாவது *உம்முடைய பள்ளி அறையில் நீர் பேசுவதையும், இஸ்ரவேலின் தீர்க்கதரிசியாக எலிசா அதை அவர்களுக்கு அறிவிப்பான்* என்கிறான். அப்படியானால் *எந்த ஒரு சிறிய காரியத்தையும் கர்த்தர் தம் பிள்ளைகளுக்கு வெளிப்படுத்துகிறார். நான் செய்ய போகிறதை ஆபிரகாமுக்கு மறைப்பேனோ என கர்த்தர் கேட்டார் அல்லவா?*
நாமும் கூட *எலிசா தீர்க்கதரிசியை போல கர்த்தரோடு சஞ்சரிப்போம் . கர்த்தர் நம் வாழ்க்கையில் ஒவ்வொரு சிறிய, பெரிய காரியங்களுக்கும் ஆலோசனை தந்து நம்மை நடத்துவார், காப்பாற்றுவார்*. ஆமென். அல்லேலூயா.
*Dr.Padmini Seĺvyn*
-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x
📗 *சிறிய குறிப்பு* 📗
🍂 *பஞ்சம்* 🍂
சூனேமில் இருக்கும் இந்தப் பெண்ணை *கனம் பொருந்தின ஸ்திரீ* (2 இரா 4:2) என்று பரிசுத்த வேதாகமம் விவரிக்கிறது. அவள் எப்போதும் எலிசாவுக்கு உணவும் தங்கும் இடமும் கொடுத்தாள். *தேவனாகிய கர்த்தர் அவளது உபசரிப்பை நினைவுகூர்ந்தார்.*
📖 *எலிசா தான் உயிர்ப்பித்த பிள்ளையின் தாயாகிய ஸ்திரீயை நோக்கி: நீ உன் வீட்டாரோடுங்கூட எழுந்து புறப்பட்டுப்போய் எங்கேயாகிலும் சஞ்சரி; கர்த்தர் பஞ்சத்தை வருவிப்பார்; அது ஏழு வருஷம் தேசத்தில் இருக்கும் என்று சொல்லியிருந்தான் (2 இரா 8:1).*
யோசேப்பின் காலத்தில் எகிப்தில் ஏற்பட்ட பஞ்சம் போல், இந்தப் பஞ்சம் ஏழு வருடங்கள் நீடிக்கும். சூனேம் ஸ்திரீ தன் தேசத்தில் *வசதியாக இருந்தபோதிலும், அவள் எலிசாவின் ஆலோசனைக்கு செவிசாய்த்தாள்.* அதனால் அவளும், அவளுடைய முழு வீட்டாரும் *ஏழு வருடங்கள் தற்காலிகமாக பெலிஸ்தியர் தேசத்திற்கு குடிபெயர்ந்தார்கள்*.
பஞ்சம் வாழ்க்கையில் தவிர்க்க முடியாதது. ஆனால் *ஆண்டவர் பஞ்ச காலங்களிலும் நடத்துகிறார்*. சில சமயங்களில் கர்த்தர் நம்மை *அமைதியாக அதே இடத்தில் இருக்க வைத்து, நம் தேவைகளை வழங்குகிறார்*. பஞ்சத்தில் இருந்து தப்பிக்க *கர்த்தர் புலம்பெயர்வதற்கு* வழிகாட்டும் நேரங்களும் உண்டு. பஞ்சத்தைத் தவிர்க்க அவசர முடிவுகளை எடுக்காதீர்கள். *சரியான முடிவை எடுக்க தேவனின் வழி காட்டுதலுக்காக ஜெபியுங்கள்.*
_திருமதி ஷீலா ஜெபக்குமார்_ ✍🏼
-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x
2 Kings 6-8
🔆 *The Miracle of the Axe head*
🌿 In 6:1-7, we see how an axe head that was borrowed by one of the sons of the prophets fell into the water.
🌿 Compared to the problems we saw earlier where Elisha intervened to do a miracle (e.g. raising the son who was dead, healing Naaman from his leprosy), this problem of borrowed axe head falling into the water appears relatively trivial. But for the man who lost the axe head it was a problem.
🌿 The fact that Elisha performed a miracle to cause the axe head to float is an encouraging indicator that God cares about all problems great and small!!
🌿 We also see how God's answer to the cry of the man involved both the supernatural (what only God can do) and the natural (what we must do). Through the power of God, Elisha caused iron to defy the laws of nature and float. This is the supernatural part. But once it floated, Elisha told the man _"pick it up for yourself"_ 2 Kings 6:7. This is the part that was left to the man to do. The answer to his cry was completed when _"he reached out his hand and took it."_ 2 Kings 6:7
🔆 *The Horror of Sin*
⚡ Duet 28:52-53 states one of the consequences (curses) that will befall the people of God if they turn their back to God to follow after idols. _"they shall besiege you at all your gates throughout all your land which the LORD your God has given you. You shall eat the fruit of your own body, the flesh of your sons and your daughters whom the LORD your God has given you, in the siege and desperate straits in which your enemy shall distress you"_ Deuteronomy 28:52-53
⚡ We see the fulfilment of this horrific curse when Ben-Hadad king of Syria besieged Samaria. The people of Israel were in such unimaginable distress that the mothers did the unthinkable: they boiled their own son and ate him!!
⚡ Ah! how horrific sin is!!!
⚡ Yet, we see God's mercy coming through in Ch 7. God supernaturally intervened and provided food.
🎯 *Lessons*
🪶 In 2 Kings 7:9-10, we see that the lepers came to a profound recognition: _"We are not doing right. This day is a day of good news, and we remain silent...So they went and called to the gatekeepers of the city, and told them."_ May the LORD help all born again believers to come to this same recognition: that we are not doing right if we remain silent. As the lepers did, may we share the good news of the gospel with others who are lost!!
*David Chellappa* ✍🏽
-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x
2 Kings 8:1-6*
There was a well-to-do woman in Shunem. Her family served Prophet Elisha. The Lord had decreed a famine and so Elisha told her to leave the land for a while. When she came back she was given everything she owned by the king including the income from the land from the day she was gone.
The Shunammite woman and her family blindly believed God's word through Elisha. It was because of that she and her family got back everything.
*In Deuteronomy 30:2&3, it is written that, "When you and your children return to the Lord your God and obey him with all your heart and with all your soul according to everything I command you today, then the Lord your God will restore your fortunes and have compassion on you and gather you again from all the nations where he scattered you."*
Our God is a God of restoration and compassion. He will restore and repay everything we lost. Amen.
*Licy John, India - 2010R*
-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x
⚡ *இந்நாள் நற்செய்தி அறிவிக்கும் நாள்* ⚡
🔹 பின்பு அவர்கள் ஒருவரை ஒருவர் நோக்கி: *நாம் செய்கிறது நியாயமல்ல, இந்நாள் நற்செய்தி அறிவிக்கும் நாள்; நாம் மவுனமாயிருந்து, பொழுது விடியுமட்டும் காத்திருந்தால் குற்றம் நம்மேல் சுமரும்; இப்போதும் நாம் போய் ராஜாவின் அரமனையாருக்கு இதை அறிவிப்போம் வாருங்கள்* என்றார்கள். (2 இராஜாக்கள் 7:9).
🔸 சீரியாவின் ராஜாவாகிய பெனாதாத் தன் இராணுவத்தையெல்லாம் கூட்டிக்கொண்டுவந்து சமாரியாவை முற்றிக்கைபோட்டான். அதினால் சமாரியாவிலே கொடிய பஞ்சமுண்டாயிற்று. ஒருநாள் இரக்கமுள்ள தேவன், மறுநாள் சமாரியாவின் பஞ்ச நிலைமை சீர்ப்படுத்தப்படும் என்று எலிசா மூலம் அறிவித்தார். பற்றாக்குறைக்கு பதிலாக, நகரத்தில் *அளவுக்கதிகமான ஆகாரம்* கிடைக்கும் என்று எலிசா அறிவித்தான். ராஜாவின் பிரதானி ஒருவன் இந்த *தீர்க்கதரிசன வார்த்தைகளை நம்பவில்லை. கர்த்தரால் கூடாத காரியம் ஒன்றும் இல்லை* என்ற சத்தியத்தை அவன் மறந்துவிட்டான். எலிசா மூலம் தேவன் வெளிப்படுத்திய பல காரியங்கள் நடந்தன என்பதை அவன் அறிந்திருக்க வேண்டும். அந்த பிரதானி எலிசாவின் மூலம் தேவன் வெளிப்படுத்திய வார்த்தைகள் *நிறைவேறுவதைக் காண்பான், ஆனால் அதன் பலனை அனுபவிக்கமாட்டான்* என்று ஒரு கடுமையான தீர்ப்பை எலிசா மூலம் தேவன் அறிவித்தார். *வேதத்தில் கர்த்தர் சொல்லியிருப்பதை நாம் விசுவாசிக்கவில்லை என்றால், நிச்சயமாக அந்த ஆசீர்வாதங்களை இழக்க நேரிடும்.*
🔸 நான்கு குஷ்டரோகிகள் பட்டினியால் சாவதைவிட சீரியருடைய இராணுவத்திடம் சரணடைய விரும்பினர். அவர்கள் இருட்டோடே எழுந்திருந்து, சீரியருடைய பாளயத்தின் முன்னணியில் வந்தபோது *அங்கே ஒருவருமில்லை.*
🔸 முற்றுகையிட்ட சீரியரின் இராணுவத்தை தோற்கடிக்க முடியாமல் இஸ்ரவேலர் வல்லமையற்றவர்களாக இருந்தனர். ஆனால், இஸ்ரவேலின் தேவன் மிகவும் வல்லமையுள்ளவர். அவர் சீரியரின் இராணுவத்திற்கு ஒரு மகா இராணுவத்தின் இரைச்சலைக் கேட்கப் பண்ணினதினால் அவர்கள் ஓடிப்போனார்கள். வேதம் கூறுகிறது: *"தேவன் இல்லாதவைகளை இருக்கிறவைகளைப்போல் அழைக்கிறவருமாயிருக்கிறார்."* (ரோமர் 4:17). சீரியர் தங்கள் கூடாரங்களையும் தங்கள் குதிரைகளையும் தங்கள் கழுதைகளையும் தங்கள் பாளயத்தையும் அவைகள் இருந்த பிரகாரமாக விட்டு, *தங்கள் பிராணன்மாத்திரம் தப்பும்படி* ஓடிப்போனார்கள்.
🔸 குஷ்டரோகிகள் கூடாரங்களுக்குள் பிரவேசித்து புசித்துக் குடித்து, அதிலிருந்து வெள்ளியையும் பொன்னையும் வஸ்திரங்களையும் எடுத்துக் கொண்டு போய் ஒளித்துவைத்தார்கள். இந்நாள் *நற்செய்தி அறிவிக்கும் நாள்; மவுனமாயிருந்து, சுயநலத்துடன் அனைத்தையும் அனுபவிப்பது பாவம்* என்பதை அவர்கள் உணர்ந்து தங்கள்மேல் குற்றம் சுமராதபடி போய் ராஜாவின் அரமனையாருக்கு அறிவித்தார்கள்.
🔸 *இயேசு பிறந்தபோது,* கர்த்தருடைய தூதன் மேய்ப்பர்களுக்குத் தோன்றி, எல்லா ஜனத்துக்கும் மிகுந்த சந்தோஷத்தை உண்டாக்கும் *நற்செய்தியை* அவர்களுக்கு அறிவித்தான். அவர்கள் விரைந்து சென்று, மரியாளையும், யோசேப்பையும், முன்னணையிலே கிடத்தியிருக்கிற பிள்ளையையும் கண்டார்கள். அவர்கள் *கண்டு, அந்தப் பிள்ளையைக் குறித்துத் தங்களுக்குச் சொல்லப்பட்ட சங்கதியைப் பிரசித்தம்பண்ணினார்கள்.* (லூக்கா 2:8-18). மேய்ப்பர்கள் முறையாய் செய்தார்கள். *முதலில் தங்களுக்குச் சொல்லப்பட்டதைக் கண்டறிந்து, பின்னர் மற்றவர்களுக்குத் தாங்கள் கண்டதையும் கேட்டதையும் பிரசித்தம்பண்ணினார்கள்.*
🔸 இயேசு பரலோகத்திற்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது, அவர் தம் சீஷர்களை நோக்கிக் கூறினார்: *"நீங்கள் உலகமெங்கும் போய், சர்வ சிருஷ்டிக்கும் சுவிசேஷத்தைப் பிரசங்கியுங்கள்."* (மாற்கு 16:15). அவருடைய கிருபையால் இரட்சிக்கப்பட்ட நாம் *மௌனம் காக்காமல், அனைவருக்கும் நற்செய்தியைப் பரப்ப வேண்டும்* என்பது அவருடைய கட்டளை. நிச்சயமாக, நாம் நமக்காக மாத்திரம் வாழ்வதற்காக இயேசு நம்மை இரட்சிக்க வரவில்லை. *சுயநலத்திலிருந்து நம்மை இரட்சிக்கவும், அவரிடமிருந்து பெற்றுக்கொள்வதை நாம் பிறருடன் பகிர்ந்துகொள்ளக் கற்பிக்கவும்* அவர் வந்தார்.
🔸 பவுலின் வார்த்தைகள்: *"சுவிசேஷத்தை நான் பிரசங்கித்துவந்தும், மேன்மைபாராட்ட எனக்கு இடமில்லை; அது என்மேல் விழுந்த கடமையாயிருக்கிறது; சுவிசேஷத்தை நான் பிரசங்கியாதிருந்தால், எனக்கு ஐயோ!”* (1 கொரிந்தியர் 9:16). கிறிஸ்தவர்களைப் பொறுத்தவரை, இயேசுவின் நற்செய்தியைப் பகிர்ந்து கொள்வது அவர்களின் கடமை; அவர்கள் நற்செய்தியைப் பகிர்ந்து கொள்ளாவிட்டால், அவர்களுக்கு ஐயோ!
🔹 *வேதத்தில் எழுதப்பட்டுள்ள அனைத்தையும் நாம் நம்புகிறோமா?*
🔹 *இயேசுவின் நற்செய்தியை மற்றவர்களுக்குப் பகிர நாம் உண்மையாகவே முயற்சி செய்கிறோமா?*
✅ நாம் கற்றுக் கொள்ளும் *பாடங்கள்*:
1️⃣ *வேதத்தில் கர்த்தர் சொல்லியிருப்பதை நாம் விசுவாசிக்கவில்லை என்றால், நிச்சயமாக அந்த ஆசீர்வாதங்களை இழக்க நேரிடும்.*
2️⃣ *தேவன் இல்லாதவைகளை இருக்கிறவைகளைப்போல் அழைக்கிறார்.*
3️⃣ *இயேசு சுயநலத்திலிருந்து நம்மை இரட்சிக்கவும், அவரிடமிருந்து பெற்றுக்கொள்வதை நாம் பிறருடன் பகிர்ந்துகொள்ளக் கற்பிக்கவும் வந்தார்.*
Dr. எஸ். செல்வன்
சென்னை
-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x
*2 இராஜாக்கள் 6-8*
*பிரகாசமான மனக்கண்கள்* *வேண்டும்*..
சீரியரின் ராஜா.. எலிசாவுக்கு விரோதமாகத் தன் சேனையை அனுப்பினான்..
அவர்கள் இராக்காலத்திலே வந்து பட்டணத்தை வளைந்துகொண்டார்கள்..
அதிகாலையில் எழுந்த எலிசாவின் வேலைக்காரன்.. இராணுவமும்..குதிரைகளும், இரதங்களும்.. பட்டணத்தைச் சூழ்ந்திருக்கக் கண்டு பயந்தான்..
”ஐயோ, என் ஆண்டவனே, என்ன செய்வோம்” என்றான்.
அதற்கு எலிசா, பயப்படாதே.. அவர்களோடிருக்கிறவர்களைப் பார்க்கிலும், நம்மோடிருக்கிறவர்கள் அதிகம்…என்றான்.
அந்த இக்கட்டான சூழ்நிலையிலே..எலிசா தைரியமாயிருந்தான் ..
காரணம் எலிசாவின் கண்களுக்கு..
சீரியரின் இராணுவமும் தெரிந்தது..கர்த்தருடைய சேனையும் தெரிந்தது..
*சீரியரின் இராணுவத்தைவிட*, *கர்த்தருடைய சேனையில்*.. *அதிகமான தூதர்கள் இருந்ததும்* *தெரிந்தது*..
அதனால் எலிசா கலக்கமும்.. பயமும் இல்லாமல்இருந்தான்..
அவ்வேளையில் எலிசா ,தன் வேலைக்காரனுக்காக ஜெபம்பண்ணி..கர்த்தாவே, இவன் பார்க்கும்படி.. இவன் கண்களைத் திறந்தருளும் என்றான்..கர்த்தர் அவன் கண்களைத் திறந்தருளினார்..
எலிசாவைச் சுற்றிலும்..
சாதாரண குதிரைகளாலும்..
இரதங்களாலுமல்ல..அக்கினி மயமான குதிரைகளாலும்..
இரதங்களாலும் அந்த மலை நிறைந்திருக்கிறதை.. வேலைக்காரன் கண்டான்..
( 2 இரா. 6 : 14 -17 )
எலிசாவின் வேலைக்காரன்.. உலகக் காரியங்களைக் கூர்மையாகப் பார்த்தான்..
ஆனால்,ஆவிக்குரிய மேலான காரியங்களைக் காணக்கூடாத குருடனாயிருந்தான்..
எலிசா ஜெபித்தபோது.. அந்தப் பார்வை அவனுக்குக் கிடைத்தது..
நாமும் அழிந்துபோகிற உலகக் காரியங்களைப் பார்க்கிறது போல..அழியாத நித்திய காரியங்களைப் பார்க்கிறதில்லை..
*தேவபிரசன்னம்*..
*தேவஅன்பு..தேவபெலன்*..
*தேவசேனை..நம்மைச்* *சூழ்ந்திருப்பதை*
*நாம் உணருவதில்லை*..
*நமக்கும்,ஆவிக்குரிய பார்வை*
*தேவை*..
நம்முடைய விசுவாசக் கண்கள் திறக்கப்படும்போது..
கர்த்தர் நம்மோடிருப்பதையும்..
அவருடைய தூதர் கூட்டம் நம்மோடிருப்பதையும்..
நமக்கு விரோதமாக யுத்தம்பண்ணுகிறவர்கள்..நாம்
ஆராதிக்கிற கர்த்தருக்கு விரோதமாக யுத்தம் பண்ணுகிறார்கள்..என்பதையும்
கண்டுகொள்வோம்..
தாவீதிடம்..ஆவிக்குரிய பார்வையிருந்தது..
அதனால்தான் ..சங்கீதம் 139ல்..தேவனே உமது ஆவிக்கு மறைவாக எங்கே போவேன்..
உமது சமுகத்தைவிட்டு.. எங்கே ஓடுவேன்..நான் எங்கெங்கு போனாலும்.. அங்கே நீர் இருக்கிறீர் என்றான்..
நாம் எங்கிருந்தாலும், கர்த்தர் நம்மோடிருக்கிறார் ..
நம் சிந்தனைகளை, அவர் அறிந்திருக்கிறார்..
நம் பேச்சை,அவர் கேட்கிறார் என்பதை நாம் அறிந்திருந்தால்..
பயம் நமக்கிருக்காது..
பாவம் நம்மை அண்டாது..
ஆனால், இன்று மறைவான பாவங்கள்.. அந்தரங்க பாவங்கள்..துணிகரமான பாவங்கள்..பெருகி வருகின்றன..
இந்தப் பாவங்களுக்குக் காரணம்…
இந்தப் பிரபஞ்சத்தின் தேவனானவன்..அவர்கள் மனதைக் குருடாக்கினான்..
என்று பவுல் அப்போஸ்தலனும்..
(2 கொரி. 4 : 4 )
இருளானது அவர்கள் கண்களைக் குருடாக்கினது..
என்று யோவான் அப்போஸ்தலனும் கூறுகிறார்கள்..
( 1 யோவான் 2 :11 )
எம்மாவு என்னும் கிராமத்துக்குப் போன இரண்டு பேர்.. அவர்களுடைய துக்கம்..அவநம்பிக்கை..
வேதனை போன்றவற்றால்..
உயிர்த்தெழுந்த இயேசு தங்களோடு நடந்துவந்தபோதும் ..அவரை அறியாதபடிக்கு.. அவர்கள் கண்கள் மறைக்கப்பட்டிருந்தது
என்று லூக்.24 : 13-15ல்
பார்க்கிறோம்..
*பல்வேறு சூழ்நிலைகளைக்* *கடந்து வரும் நாம் ..ஒவ்வொரு* *நாளும் ,கர்த்தரிடம்..தகப்பனே*..
*எங்களைச் சூழ்ந்திருக்கும்* *ஆவிக்குரிய காரியங்களைக்* *காண பிரகாசமான* *மனக்கண்களை எங்களுக்குத்* *தாரும்*..
*உமது வேதத்திலுள்ள*
*அதிசயங்களைப்* *பார்க்கும்படிக்கு எங்கள்* *கண்களைத்*
*திறந்தருளும் என்று* *ஜெபிக்கவேண்டும்*..
*கேட்கிற எவனும் பெற்றுக்* *கொள்வான் என்ற* *வாக்குத்தத்தின்படி*..
*கர்த்தர் நமக்கு இரங்குவார்*..
*ஆவிக்குரிய உன்னத* *ஆசீர்வாதங்களால் நம்மை* *நிரப்புவார்*..
*சாத்தானை மேற்கொள்ள*..
*சாட்சியுள்ள வாழ்வு வாழ*..
*துணைசெய்வார்*..*ஆமென்*.🙏
மாலா டேவிட்
-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x
*🥎சிப்பிக்குள் முத்து🥎*
இன்றைய வேத வாசிப்பு பகுதி -
*2 இராஜா : 6 - 8*
*☔️முத்துச்சிதறல் : 111*
❣️🥏❣️🥏❣️
*எலிசா கர்த்தரை நோக்கி விண்ணப்பம் பண்ணி :*
(2 இராஜா - 6 : 17, 18, 20)
🥏❣️🥏❣️🥏
*🙇♂️🧎♂️எலிசாவின் 3 விதமான விண்ணப்பங்கள்🧎♂️🙇♂️*
🔥🔥🔥🌈🔥🔥🔥
*✍️ஓர் நீதிமானின் ஊக்கமான விண்ணப்பம் என்னவெல்லாம் செய்ய வல்லது என்பதை எலிசா தீர்க்கனின் ஜெப வாழ்வு முறை எமக்கு கற்று தரும் பாடமாக உள்ளது.*
தாங்கள் போடும் எந்த திட்டங்களும் தவிடு பொடியாகுவதற்கு காரணம் எலிசா என்னும் ஓர் மனிதன் என்பதை சீரியா நாட்டு அரசன் தன் ஊழியக்காரன் ஒருவன் மூலம் அறிகிறான்.
(2இராஜா - 6 : 12)
தான் வெற்றி பெற இயலாமல் போவதற்கு இந்த எலிசா தான் காரணமா❓️
சரி, அவன் எங்கே இருக்கிறான்❓️என்று கண்டுபிடித்து, அவனை உடனடியாக என்னிடம் கொண்டு வாருங்கள் என்று முட்டாள்தனமாக உத்தரவு போட்டு விட்டான் சீரியா அரசன்.
🌻எலிசா அந்த காலகட்டத்தில் *தோத்தான்* என்னும் இடத்தில் தங்கி இருந்தார்.
இது சமாரியா பட்டிணத்தில் இருந்து 10 - 15 மைல் தூரமான ஓர் பட்டிணம். நடந்து செல்லவேண்டுமாகில் இதை சென்றடையை கிட்டத்திட்ட 3 மணி நேரம் ஆகுமாம்.
*எலிசா "தோத்தானில்" இருப்பதை அறிந்து கொண்ட சீரியா அரசன் தன் படைகளை அனுப்ப... அவர்கள் இரவில் அந்த தோத்தானை வளைந்து கொண்டார்கள்.
(சீரிய படைகள்)
*அதிகாலையில் எலிசாவின் வேலைக்காரனுக்கு இதை கண்டு திகைப்பு.*
ஆனால் எலிசாவோ மிக அமைதியாக சாமாதானமாக இருக்கிறார்.
*வேலைக்காரன் தன் புற கண்களால் கண்டதை வைத்து பயந்து நின்றான்.*
ஆனால் எலிசாவோ தன் அக கண்களால் கர்த்தரின் பாதுகாப்பு தனக்கு இருப்பதை அறிந்து இருந்தார்.
அதனை அந்த வேலைக்காரனும் காணத்தக்கதாக....
*கர்த்தாவே இவன் பார்க்க தக்கதாக இவன் கண்களை திறந்தருளும்* என்று விண்ணப்பம் செய்தார்.
*என்னே ஆச்சர்யம் !*
*உடனே கர்த்தர் அந்த வேலைக்காரன் கண்களை திறந்தார்.*
இங்கு கண்களை திறந்தார் என்பது...
புற கண்களால் காண இயலாததை, ஆன்மீக கண்களை கொண்டு காண்பது என்று பொருள் படுகிறது.
*தன்னோடு இருந்த தன் வேலைக்காரன் தான் காண்பது போலவே, தனக்கு வெளிப்பட்டது தன் பணியாளனுக்கும்வெளிப்படையா தெரியணும் என எலிசா வேண்டினார்.*
வேலைக்காரனை *பயப்படாதே !* என்று சொல்லி தேற்றியது மாத்திரமல்ல, அவன் பயம் நீங்க வேண்டுமானால்... அவன் உண்மை நிலையை.....
*அதாவது... அவர்களோடு (சீரியர்களோடு) இருக்கிறவர்களை பார்க்கிலும் தங்களோடு இருக்கிறவர்கள் (பரலோக பாது காப்பு படையினர்) அதிகம் என்பதை* கண்டாகிலும் தன் பணிவிடைக்காரன் விசுவாசிக்க வழி வகுத்து கொடுத்தார் எனலாம்.
*ஆம்,*
சத்துருக்களின் மறைமுக செயல் திட்டங்களை கண்டுணர தக்க ஓர் கிருபை ஜெபத்தின் வாயிலாக, தேவனோடுள்ள நல்லுறவின் வாயிலாக நிதமும் அறிந்து கொண்டவர் இந்த எலிசா தீர்க்கதரிசி.
🌻🍒🌻🍒🌻🍒🌻
*எலிசா விண்ணப்பம் பண்ணினார்* என்பது.... இங்கு
அதிசயம் அற்புதம் நடந்து...
ஓர் வழியாய் வந்தோர் ஏழு வழியாய் ஓட வேண்டும் என்றல்லாமல்......
தன் வேலையாள் *இன்னொரு கோணத்திலும் காணும் கண்களுக்காக* வேண்டுதல் செய்தார்.
*காண கூடாதவைகளை காணும் பாக்கியம் உண்டாகுவது.....*
வல்லமையான ஜெப வாழ்வுக்கு ஓர் அச்சடையாளமாகும்.
அடுத்த நிகழ்வில்.....
*இந்த ஜனங்களுக்கு கண் மயக்கம் உண்டாகும்படி செய்யும்* என்று சீரியா நாட்டு படையினருக்காக விண்ணப்பிக்கிறார்.
அது அப்படியே ஆகிறது.
இவர் தான் எலிசா என்பதை அவர்கள் கண்டு கொள்ள இயலாதபடி...
*ஓர் தெளிவற்ற புத்தி பிசகு* அவர்களுக்கு உண்டாகி....
எலிசா பின்னால்....
*தாங்கள் எலிசாவை தேடி போவதாக எண்ணி கொண்டு....* கிட்டத்திட்ட 3 மணி நேரம் நடந்தே சமாரியா வரை வந்து விட்டார்கள்.
இஸ்ரவேல் அரசனின் எதிரி படையான சீரியா படை இப்பொழுது இஸ்ரவேல் அரசன் முன் வந்து நின்ற பின்....
*எலிசா மீண்டும் ஜெபிக்கிறார் :*
கர்த்தாவே, இவர்கள் பார்க்கும் படி இவர்கள் கண்களை திறந்தருளும், என்றார்.
உடனே, கர்த்தர் அவர்கள் கண்களை திறந்து விடுகிறார். அதாவது, *தெளிவை கொடுக்கிறார்*
அவர்கள் தாங்கள் தங்களது எதிராளியின் முன்னே நிற்கிறதை காண்கிறார்கள்.
எப்படி இருந்திருக்கும் அந்த படைக்கு❓️
🍇🫛🍇🫛🍇🫛🍇
*அக்கால தேவ மனிதர்களின் ஜெப வாழ்வை இங்கு நாம் காண்கிறோம்.*
🌿சுருக்கமான ஜெபம்.
🌿நோக்கத்தோடு செய்யப்படும் ஜெபம்.
🌿உடனடி பதில் வரத்தக்கதான ஜெபம்.
🌿தவிர்க்க வேண்டியவைகளை தவிர்த்து விடும் ஜெபம்.
🌿விசுவாசத்தோடு, ஊக்கமான ஜெபம்.
🌿இறைவன் மீது மாத்திரம் நம்பிக்கை கொண்ட ஜெபம்.
*இப்பொழுதும் அதே இறைவன் உயிரோடு தான் இருக்கிறார்.*
கர்த்தர் நம் (கிறிஸ்தவர்களின்/ தேவ பிள்ளைகளின் )
பட்சத்தில் இருந்தால்..
நமக்கு விரோதமாக இருப்பவன் யார்❓️
*(ரோ - 8 : 31)*
*🍀நம் விசுவாசம் இன்னதென்பதை நம் ஜெப வாழ்வு தான் சான்றளிக்க கூடியதாக இருக்கிறது.*
*ஆவிக்குரிய தலைவர்கள் / தலைவிகள் ஜெபிக்கவும் செய்வார்கள், வேதாகம ரீதியில் வாழ்க்கை பாடங்களை.... செய்ய வேண்டியவைகளை சரியாக போதிக்கவும் செய்வார்கள்.*
அதை தான் எலிசா இங்கு இஸ்ரவேலின் அரசனிடம் கூறினார்.
*தன் சத்துருக்களை வெட்டி போடலாமா❓️என்பதே இஸ்ரவேல் அரசனின் கேள்வியாக இருந்தது.*
ஆனால் ஆவிக்குரிய மனுஷன், கர்த்தரின் வாயாக இருந்து பேச கூடிய எலிசாவோ அப்பொழுது கூறிய கர்த்தரின் வார்த்தை :
*உமது எதிரிகள் / சத்துருக்களுக்கு ஓர் பெரிய விருந்து செய்து....அவர்கள் முன் அப்பமும், தண்ணீரும் வையும் என்றார்.*
ஆம், *சத்துருக்களை கர்த்தர் நம்மிடம் ஒப்படைக்கையில்*
அப்பொழுது நமக்கு சொல்ல படும் இறை வார்த்தை என்ன❓️ என்பதே காரியம்.
*கூடுனானவரை யாவரோடும் சமாதானத்தோடு இருக்கவும், அவர்களுக்காக நல் விண்ணப்பம் எறெடுக்கவும், அவர்களை ஆசீர்வதிக்கவும், நேசிக்கவும், கைதூக்கி விடவும் மாத்திரமே நம்மை ஆண்டவர் எதிர் பார்க்கிறார்.
*(ரோ - 12 : 14,17-21)*
*சத்துருவை சிநேகி என்பது பழைய ஏற்பாட்டு காலத்திலேயும் சொல்ல பட்டு இருந்த உபதேசம் தான்.*
அது ஒன்றும் புதிய உபதேசம் அல்ல....
ஆனால்.... சில வேளைகளில் கர்த்தரின் வார்த்தையை நாம் கூர்ந்து கவனித்து செயல் படவும் வேண்டி இருக்கிறது.
*எந்த சத்துருவுக்கு இரக்கம், மன்னிப்பு, தயவு என்பதையும், எந்த சத்துருவிடம் இருந்து முற்றிலும் நாம் விலகியே இருக்க வேண்டும் என்கிற தெளிவை பரிசுத்த ஆவியானவர் அந்நேரத்தில் நம்மை நடத்தும் விதத்தில் நாம் நடந்து கொள்வதே எமது வாழ்வுக்கு பாதுகாப்பு என்பதையும் மறவாதிருப்போம்.*
(1சாமு - 15 : 2, 3 :, 2 இராஜா - 9 : 7 :, யூதா -16, 18, 19)
*பிறர் கண்கள் கர்த்தரை கண்டிட, திறக்கப்பட ஜெபிப்போம்.*
*நம் கண்கள் வேதத்தில் உள்ள மகத்துவங்களை காண ஜெபிப்போம்.*
மனிதர்களாகிய எம் புற கண்களுக்கு தென்படாதவைகள், எமது அக கண்களுக்கு தென் பட ஜெபிப்போம்.
எலிசாவின் விண்ணப்ப வாழ்வில் இருந்து பாடம் கற்று கொள்வோம்.
*🍧Sis. Martha Lazar*
NJC, KodaiRoad
-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x
*📣நற்செய்தியின் நாள் 📣*
2 இராஜாக்கள் 7
☄️இந்த அத்தியாயத்தின் தொடக்கத்தில், தேவனுடைய தீர்க்கதரிசியான எலிசா, சமாரியாவில் நிலவியுள்ள கடுமையான பஞ்சம், 24 மணி நேரத்திற்குள் முடிவுக்கு வரும் என்று உறுதியளிக்கிறார்.
1️⃣ *சந்தேகம் மற்றும் நம்பிக்கையின்மை* (வ 1, 2)
🔹ராஜாவுக்கு உதவி செய்யும் பிரதானி எலிசாவின் தீர்க்கதரிசனத்தில் சந்தேகத்தை தெரிவித்தார்.
🔹பதிலுக்கு, எலிசா, அந்த அதிகாரி மிகுதியாக இருப்பதைக் காண்பார், ஆனால் அவருடைய அவநம்பிக்கையின் விளைவாக, அதில் பங்குகொள்ளமாட்டார் என்று தீர்க்கதரிசனம் கூறினார்.
🔹கடக்க முடியாததாகத் தோன்றும் சூழ்நிலைகளில் கூட, தேவனுடைய வார்த்தையை விசுவாசிப்பதின் முக்கியத்துவத்தை, இந்த நிகழ்ச்சி உரையானது அடிக்கோடிட்டுக் காட்டுகிறது.
2️⃣ *குஷ்டரோகிகளும் அவர்களின் கண்டுபிடிப்பும்* (வச. 3-8)
🔸நகர வாசலில் நான்கு தொழுநோயாளிகள், தங்களின் கடும் பசியின் காரணமாக சீரிய இராணுவத்திடம் சரணடைய முடிவு செய்தனர்.
🔸ஆச்சரியவிதமாக, எதிரி முகாம் வெறிச்சோடி கிடப்பதை அவர்கள் கண்டார்கள். அவர்கள் விட்டுச் சென்ற உணவையும் செல்வத்தையும் அனுபவித்தனர், ஆனால் பின்னர் அவர்கள் நகரத்தில் உள்ள மற்றவர்களுடன் இந்த நற்செய்தியைப் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்பதை உணர்ந்தனர்.
3️⃣ *நற்செய்திகளைப் பகிர்தல்* (வ. 9-13)
▪️தொழுநோயாளிகள் நகரத்திற்குத் திரும்பி வந்து, தாங்கள் கண்டுபிடித்ததை வாயில் காவலர்களிடம் அறிவித்தனர்.
▪️இந்தச் செய்தி ராஜாவுக்குத் தெரிவிக்கப்பட்டது, அவர் முதலில் இது ஒரு பொறி என்று சந்தேகித்தார்.
▪️மேலும் விசாரணைக்குப் பிறகு, அது உண்மை என்பதை உணர்ந்தனர், தீர்க்கதரிசனம் நிறைவேறியது. எலிசா முன்னறிவித்தபடியே மக்கள் சீரிய முகாமைக் கொள்ளையடிக்க முடிந்தது, மேலும் பஞ்சம் முடிவுக்கு வந்தது.
▪️ அவருடைய இரட்சிப்பின் கிருபையை அனுபவித்த நாம், நம்மைச் சுற்றியிருக்கும் அனைவரிடமும் சென்று, இரட்சிப்பின் மகிழ்ச்சியை அனுபவிக்க அவர்களுக்கு உதவ வேண்டும் என்று நமது இறைவன் விரும்புகிறார்!
4️⃣ *சந்தேகப்பட்ப அதிகாரியின் விதி* (வ 17-20)
🔺எலிசாவின் தீர்க்கதரிசனத்தை சந்தேகப்பட்ட அந்த அதிகாரி தன் கண்களால் மிகுதியைப் பார்த்தார், ஆனால் அதில் பங்கேற்க முடியவில்லை.
🔺கொள்ளைக்குச் செல்லும் ஆட்களின் அவசரத்தில் அவர் மிதித்துக் கொல்லப்பட்டார், இதனால் அவரைப் பற்றிய எலிசாவின் தீர்க்கதரிசனம் நிறைவேறியது.
♥️ *வாழ்க்கை பாடங்கள்*
💥"இது நற்செய்தியின் நாள்", குறுகிய காலத்திற்குள் கற்பனை செய்ய முடியாத மாற்றத்தை கொண்டுவரும் தேவனுடைய வல்லமையைப் பற்றி பேசுகிறது.
💥தொழுநோயாளிகள் செய்தது போல், மற்றவர்களுடன் நற்செய்தியைப் பகிர்ந்துகொள்ளும் பொறுப்பையும் இது எடுத்துக்காட்டுகிறது.
💥சந்தேகம் மற்றும் அவநம்பிக்கையின் துயரமான விளைவுகளைப் பற்றிய எச்சரிக்கையாக இது செயல்படுகிறது.
*‼️அழிந்து கொண்டிருக்கும் உலகத்திற்கு இரட்சிப்பின் நற்செய்தியைப் பகிர்ந்து கொள்வோம்‼️*
பிரின்சஸ் ஹட்சன்
தமிழாக்கம் இன்னிசை செல்வி மும்பை
[03/08, 18:27] +91 99431 72360: A Testimony
கர்த்தரைப் போற்றுவோம்!
கடந்த மூன்று ஆண்டுகளாக இந்த பைபிள் வாசிப்பு மற்றும் ஆய்வு திட்டத்தில் நான் இணைந்திருக்கிறேன். பைபிளில் உள்ள வார்த்தைகளைப் புரிந்துகொள்ள இந்த பைபிள் படிப்பு எனக்கு நிறைய உதவியிருக்கிறது. இந்த பைபிள் வாசிப்பு குழுவுடன் இணைந்திருக்க இந்த வாய்ப்பைப் பெற்றதற்கு எல்லாம் வல்ல தேவனுக்கு நன்றி கூறுகிறேன். திருத்தந்தை சி.வி. ஆபிரகாம் இந்தக் குழுவைத் தொடங்கினபடியால் அவர்களுக்கும் நன்றி.. பைபிளைப் வாசிப்பதிலும் படிப்பதிலும் தொடர்ந்து நிலைத்திருக்க உங்கள் அனைவரையும் ஊக்குவிக்க விரும்புகிறேன். இந்த நிரல் நான் பைபிளைப் படித்தது, கர்த்தரை இன்னும் ஆழமாக அறிந்துகொள்ள எனக்கு உதவியது.
நாம் அனைவரும் தேவனுடைய வார்த்தையில் அதிக நேரத்தை செலவிடுவோம்! குழுவில் இணைந்த அனைவருக்கும் நன்றி. பைபிள் படிப்பின் மூலம் தேவன் நம் அனைவரையும் நிறைவாக ஆசீர்வதிப்பாராக!
ஆராதனா, ஹிமாச்சல பிரதேசம், இந்தியா.

Thanks for using my website. Post your comments on this