Type Here to Get Search Results !

2 KINGS 4-5 Bible Study | பானையிலே சாவு | THE UNSUNG HEROINE | Tamil Christian Bible Message | Jesus Sam

===============
2 KINGS : 04 - 05
==============
There are countless, wonderful Christian folk, today, who have a room where preachers and missionaries are entertained and feel at home.*

⛹️‍♂️ *Application* : II Ki.4:9-10- *Since the time of this wealthy woman of Shunem, there have been many believers who have in their homes what they call the “prophet’s chamber.” There are countless, wonderful Christian folk, today, who have a room where preachers and missionaries are entertained and feel at home.* Many of God’s servants are so blessed by such hospitality.

📖II Ki.4:14-17- Years later when her son was a grown child, he died. Elisha restored him to life, using the same method that Elijah had used (1 Kings 17); that is, personal contact with the dead child which brought life. *The great principle here is that when we are dead in trespasses and sins, personal contact with Jesus Christ brings life. In Him we have life. He is life.*

💡II Ki.5:1- Leprosy in Scripture is a type of sin. One reason is that it was incurable by human means. Only God can cure sin and save a sinner. *Naaman had many fine points, but he was a sinner. He tried to cover up his leprosy, but he could not cure it. Many people today whitewash sin. What they need is to be washed white, and only Christ can do that.

💡II Ki.5:12-14- *Here we see a vivid illustration of the work of salvation… First, leprosy is a picture of sin. Second, the message of hope was given to a little girl. Paul tells us that the Lord loves to use the weak things of the world to confound the strong* (1 Corinthians 1:27). If you feel weak, if you don’t consider yourself to be very knowledgeable in the things of God, you are an ideal candidate for God to use because you won’t take any glory. *Third, the message was more important than the messenger.* Naaman thought Elisha would do something spectacular. Instead, he gave a simple word. Why was Naaman to dip in the Jordan River? *The word Jordan means “judgment.” The number seven speaks of completion. Thus, Naaman was to immerse himself completely in the river of judgment. How are we to be cleansed of our leprosy, of our sin? By immersing ourselves fully in the judgment that Jesus bore for us on the Cross of Calvary.*

Jaya Pradeep-Kodaikanal.


x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-xx-

*2இராஜாக்கள்: 4-5*

*அவன் ஊழியக்காரர் சமீபத்தில் வந்து நாகமானை நோக்கி, தகப்பனே, அந்தத் தீர்க்கதரிசி ஒரு பெரிய காரியத்தைச் செய்ய உமக்கு சொல்லியிருந்தால் அதை நீர் செய்வீர் அல்லவா? ஸ்நானம் பண்ணும், அப்பொழுது சுகமாவீர் என்று அவர் உம்மோடே சொல்லும் போது அதைச் செய்ய வேண்டியது எத்தனை அதிகம் என்று சொன்னார்கள்*.

(2இராஜா: 5:13)

▪️ தவமிருப்பது, நன்மை செய்வது, அன்னதானம் போன்ற காரியங்கள் செய்வது, கோயில் குளங்களுக்கு செல்வது, புண்ணிய தலங்கள் பயணம் செய்வது, இத்தனை நாள் உபவாசம் இருப்பது இது போன்ற காரியங்களை செய்வதினால் பிற்காலத்தில் தனக்கும் தன் குடும்பத்தினருக்கும் நல்லது நடக்கும் என்பதற்காகவே பலர் நல்ல காரியங்களைச் செய்கின்றனர்.

▪️ நற்செயல்கள் செய்வது நல்லது தான். ஆனால் அவைகளினால் நமக்கு நற்கதி கிடைக்காது. நாம் செய்த பாவங்களுக்கு அவை பரிகாரம் தராது. பாவங்களின் விளைவு தண்டனை தான். அந்த தண்டனையை தம்மீது ஏற்றுக்கொண்டு நமக்காகப் பலியான இயேசுவை நமது சொந்த இரட்சகராக ஏற்றுக் கொண்டு மன்னிப்பு பெறுவது மட்டுமே ஒரே வழி.

▪️ இது மிகவும் எளிய வழி தான். அநேகருக்கு இத்தகைய எளிய வழிமுறையை ஏற்றுக் கொள்ள மனமில்லை. பெரிய பெரிய காரியங்களை செய்ய தயாராக இருப்பவர்கள், சிலுவை நாதரின் காலடியில் வருவதற்கு தயக்கம். இதைத்தான் நாகமானின் ஊழியர்கள் அவனிடம் கூறினர். நாகமான் இதற்கு கீழ்ப்படிந்த போது விடுதலை கிடைத்தது.

அன்பானவர்களே,

*எந்தப் பாவியாயினும் தள்ளமாட்டேன் என்கிறார்*. *துரோகம் செய்த போதிலும் நோக்கிப்பார் இரட்சிப்பார்*.

*ஆமென்*

✍️பவானி ஜீஜா தேவராஜ்,

நாகர்கோவில்




x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-xx-



2 Kings 4,5

*WHAT A GOD WE SERVE* ❗️

*God who does miracles in every area of our life* ‼️ (2 Kings 4)

💥 Miracle of *CLEARING THE DEBTS* (4:1-7)

💥 Miracle of *THE WOMB* (4:16,17)

💥 Miracle of *THE LIFE* (4:34-36)

💥 Miracle of *HEALING* (4:39-41)

💥 Miracle of *MULTIPLICATION* (4:42-44)

*Which area do you need a miracle this morning❓Bring it all to the Lord. Nothing is impossible for our Lord❗️ He is the same yesterday, today and forever. He will do a miracle for you.*

Usha


x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-xx-


*IS THIS THE TIME TO TAKE MONEY,OR TO ACCEPT CLOTHES, OLIVE GROVES, VINEYARDS, FLOCKS, HERDS, OR MENSERVANTS AND MAIDSERVANTS?*

(2 Kings.5.16)

An Israeli young girl was taken as captive to Aram and she was a slave girl to Naaman's wife. Naaman was the commander in the army of the Aramean king Ben-Hadad.Though he was a mighty warrior, he had leprosy. This Israeli slave girl witnessed to her mistress that there is a prophet in Israel who can heal her master's leprosy.

When Naaman informed this to the king, he sent Naaman with gifts and a letter to Joram, king of Israel.(see 2 Kings 3:1) The gift was *ten talents of silver, 6000 shekels of gold and ten sets of clothing.*(2 Kings 5:5) (That is about 340 Kilogramme of silver and about 70 Kilogramme of gold. This was a huge amount. In 1 Kings.16:24, we read King Omri bought the hill of Samaria for 2 talents of silver and built the city of Samaria there.)

King Joram got scared about it as he thought, Aramean King was looking for a reason for a fight. Prophet Elisha when heard about it, asked the King to send Naaman to him. ( 2 Kings 5:8)

Though Naaman went as a commander with horses and chariots, the prophet did not went out to see him. He just sent a messenger asking Naaman to go and wash himself 7 times in river Jordan for healing. Naaman was upset that Elisha did not came out to him and healed him as he expected. Finally listened to the plea of his servants and did just as Elisha told him. Immediately he got healed.

Naaman went back to Elisha and declared his new faith and placed a request before him *Now I know that there is no God in all the world except in Israel. Please accept a gift from your servant.* (2 Kings.5:15) Though Naaman pleaded, Elisha's reply was *"As surely as the LORD lives, whom I serve, I will not accept a thing."* (5:16). Naaman went back to Aram as a transformed person.

Today what is happening around us? How many people are exploiting all opportunities to earn money , name and fame?

*Gehazi*, the servant of Elisha thought- what a foolish thing his master did by turning down all precious gifts. He went after Naaman, told some lies and got 2 talents of silver (about 68 Kilogrammes) and 2 sets of clothing for himself.

Afterwards Elisha asked him *"Is this the time to take money, or to accept clothes, olive groves, vineyards, flocks, herds or menservants and maidservants?"*( 2 Kings.5:26). Gehazi had a desire to earn all those things with the silver he got. Elisha added that *Naamans leprosy will cling to you and to your descendents forever*.(5:27) Gehazi desired to get wealth for himself and for his descendants but instead he got leprosy for himself and for his descendants.

Naaman pleaded with Elisha to receive huge gifts but he refused to accept anything for what God did.

*What could have been our response if we were in Elisha's place?*

*Do we have the spirit of Gehazi in us?*

*Am I like an ELISHA or a GEHAZI in my attitude to worldly wealth?*

Rev.C.V.Abraham.


x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-xx-

🌟 *இஸ்ரவேலிலிருக்கிற தேவனைத்தவிர பூமியெங்கும் வேறே தேவன் இல்லை* 🌟

❇️ *அப்பொழுது அவன் தன் கூட்டத்தோடெல்லாம் தேவனுடைய மனுஷனிடத்துக்குத் திரும்பிவந்து, அவனுக்கு முன்பாக நின்று: இதோ, இஸ்ரவேலிலிருக்கிற தேவனைத்தவிர பூமியெங்கும் வேறே தேவன் இல்லை என்பதை அறிந்தேன்; இப்போதும் உமது அடியேன் கையில் ஒரு காணிக்கை வாங்கிக்கொள்ள வேண்டும் என்றான்* (2 இராஜாக்கள் 5:15).

💥 சீரிய ராஜாவின் படைத்தலைவனாகிய *நாகமான்* மகா பராக்கிரமசாலி; ஆனால் அவன் *குஷ்டரோகியாயிருந்தான்.* இஸ்ரவேல் தேசத்திலிருந்து சிறைபிடித்துக் கொண்டுவரப்பட்ட *ஒரு சிறு பெண்,* நாகமானின் மனைவிக்குப் பணிவிடை செய்துகொண்டிருந்தாள். *எலிசா தீர்க்கதரிசியால் நாகமானின் குஷ்டரோகத்தை நீக்கிவிட முடியும்* என்று அவள் எஜமானியிடம் சொன்னாள். இந்த சிறு பெண்ணின் செயலில் இருந்து, *தேவன் எப்படி விசித்திரமான வழிகளில் செயல்பட முடியும் என்பதை நாம் புரிந்து கொள்ளலாம்.* தேவன் தனது *சாட்சியாக* ஒரு நல்ல பணியை நிறைவேற்றுவதற்காக அவளது *சிறையிருப்பை பயன்படுத்தினார்.*

💥 நாகமான் சீரியாவின் ராஜாவிடமிருந்து இஸ்ரவேலின் ராஜாவுக்கு ஒரு நிருபத்தை வாங்கிக்கொண்டு, எலிசாவைப் பார்க்க பொன், வெள்ளி மற்றும் வஸ்திரங்களைக் காணிக்கையாக எடுத்துக்கொண்டு சென்றான். *இஸ்ரவேலிலே தீர்க்கதரிசி உண்டென்பதை அறிந்துகொள்ள* நாகமானை தன்னிடம் அனுப்பும்படி இஸ்ரவேலின் ராஜாவை எலிசா கேட்டுக்கொண்டான். நாகமான் தன் குதிரைகளோடும் தன் இரதத்தோடும் வந்து எலிசாவின் வாசற்படியிலே நின்றான். எலிசா அவனிடத்தில் ஆள் அனுப்பி, *யோர்தானில் ஏழுதரம் ஸ்நானம்பண்ணும்படிக்* கேட்டுக்கொண்டான். இதைக் கேட்ட நாகமான் எரிச்சலுற்றவனாய்க் கோபத்துடன் அங்கிருந்து சென்றுவிட்டான். இந்தச் செயல் அற்பமானதாகத் தோன்றினாலும், *தீர்க்கதரிசியின் ஆலோசனையைப் பின்பற்றும்படி* அவனுடைய ஊழியக்காரர் அவனை வருந்திக் கேட்டுக் கொண்டனர்.

💥 நாகமான் *தனது ஊழியர்களின் ஆலோசனைகளை* எப்போதும் ஏற்றுக்கொள் வதைப் பார்க்கிறோம். முதலில், எலிசாவை அணுகும்படி சொன்ன சிறு பெண்ணின் ஆலோசனைக்கு அவன் உடன்பட்டான். இப்போது, எலிசாவின் அறிவுரையைப் பின்பற்றும்படி கூறிய தன் ஊழியரின் ஆலோசனையை அவன் ஒப்புக்கொண்டான். அவனது செயல்கள் ஆரம்பத்தில் பெருமையுள்ளதாகத் தோன்றினாலும், *ஊழியரின் ஆலோசனைக்கு அவன் செவிகொடுத்தது அவனது தாழ்மையைக் காட்டுகிறது.* எனவே, *தாழ்மையுள்ளவர்களுக்குக் கிருபையருளும்* தேவன் நிச்சயமாக அவனை ஆசீர்வதிப்பார்.


💥 நாகமான் தேவனுடைய மனுஷனின் வார்த்தையின்படியே யோர்தானில் ஏழுதரம் முழுகினான். அவனுடைய விசுவாசக் கிரியை அவனுடைய குஷ்டரோகத்திலிருந்து அவனை சுத்தப்படுத்தியது. அவன் மாம்சம் *ஒரு சிறுபிள்ளையின் மாம்சத்தைப்போல மாறி,* அவன் சுத்தமானான். உடனே அவன் இஸ்ரவேலின் தேவனைத் தவிர வேறு தேவன் இல்லை என்பதை ஏற்றுக்கொண்டான். பிறர் பெற்ற அற்புதங்களைக் கண்டு அல்ல, தனது சொந்த அனுபவத்தின் மூலம் பெற்ற அற்புதமே, இந்த அறிவிப்பைச் செய்ய அவனுக்கு உதவியது. *சொந்தமாக அனுபவித்தவர்களால் மட்டுமே தாங்கள் பெற்ற தேவகிருபையைக் குறித்து வல்லமையாக சாட்சிபகர முடியும்.*

💥 நாம் ஒரு காலத்தில் *ஆவிக்குரிய குஷ்டரோகிகளாக* பாவத்தில் வாழ்ந்தோம். *குஷ்டரோகம் ஒருவரை சரீரப்பிரகாரமாக கெடுக்கிறது போல பாவம் ஒருவரை ஆவிக்குரியப்பிரகாரமாக கெடுக்கிறது. " அக்கிரமங்களினாலும் பாவங்களினாலும் மரித்தவர்களாயிருந்தோம்."* (எபேசியர் 2:1). இயேசுவின் இரத்தத்தினால் உண்டாகும் சுத்திகரிப்பின் வல்லமையின் மேலுள்ள விசுவாசம் நம்மைப் பாவங்களைக் கழுவுகிறது. *"இயேசுகிறிஸ்துவின் இரத்தம் சகல பாவங்களையும் நீக்கி, நம்மைச் சுத்திகரிக்கும்."* (1 யோவான் 1:7). நாம் இயேசுவில் புதிய சிருஷ்டியாக மாறியுள்ளோம். *“ஒருவன் கிறிஸ்துவுக்குள்ளிருந்தால் புதுச்சிருஷ்டியாயிருக்கிறான்; பழையவைகள் ஒழிந்துபோயின, எல்லாம் புதிதாயின.”* (2 கொரிந்தியர் 5:17).

💥 நன்றியுள்ள நாகமான் இஸ்ரவேலின் தேவன் ஒருவரே மெய்யான தேவன் என்று அறிவித்தான். கிறிஸ்துவின் உயிர்த்தெழுந்த வல்லமையினால் புது சிருஷ்டியாக்கப்பட்டிருக்கும் நாமும் நன்றியுள்ள சாட்சிகளாக இருக்க வேண்டும். *"நீங்களும் எனக்குச் சாட்சிகளாயிருப்பீர்கள்."* (யோவான் 15:27).

💥 சிறைபிடித்துக் கொண்டுவரப்பட்ட அந்த சிறு பெண் உண்மையான சாட்சிக்கு ஒரு சிறந்த முன்மாதிரியாக இருந்தாள். *கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவை விசுவாசிக்கிற நாமும், இயேசுவின் கிருபையினால் உண்டாகும் இரட்சிப்பின் நற்செய்தியை* அவரைத் தேவைப்படுகிற அனைவருக்கும் தெரிவிக்க வேண்டும்.

🔹 *இயேசுவின் கிருபையினால் உண்டாகும் இரட்சிப்பின் நற்செய்தியை அவரைத் தேவைப்படுகிற அனைவருக்கும் தெரிவிப்பதில் நாம் ஆர்வமாக உள்ளோமா?*

✅ நாம் கற்றுக் கொள்ளும் *பாடங்கள்*:

1️⃣ *தன் ஊழியர்களின் ஆலோசனைக்கு சம்மதித்ததன் மூலம், நாகமான் தன் மனத்தாழ்மையை வெளிப்படுத்தினான்; அவனுடைய விசுவாசக் கிரியை தேவனால் அங்கீகரிக்கப்பட்டு முழுமையான மற்றும் அற்புதமான சுகத்தை பலனாக அவனுக்குப் பெற்றுத்தந்தது.*

2️⃣ *சொந்தமாக அனுபவித்தவர்களால் மட்டுமே தாங்கள் பெற்ற தேவகிருபையைக் குறித்து வல்லமையாக சாட்சிபகர முடியும்.*

3️⃣ *ஒருவன் கிறிஸ்துவுக்குள்ளிருந்தால் புதுச்சிருஷ்டியாயிருக்கிறான்; பழையவைகள் ஒழிந்துபோயின, எல்லாம் புதிதாயின.*

4️⃣ *கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவை விசுவாசிக்கிற நாம், இயேசுவின் கிருபையினால் உண்டாகும் இரட்சிப்பின் நற்செய்தியை கிறிஸ்து தேவைப்படுகிற அனைவருக்கும் தெரிவிக்க வேண்டும்.*

Dr. எஸ். செல்வன்
சென்னை


x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-xx-


நாகமான் பராக்கிரமசாலியாக இருந்தான்.

அவனுக்கு ஒரு பயங்கரமான, குணப்படுத்த முடியாத நோய் இருந்தது.

இஸ்ரவேல் தேசத்திலிருந்து சிறைபிடிக்கப்பட்ட ஒரு இளம் பெண்ணை தன் வீட்டு வேலைக்காரியாக கொண்டு வந்திருந்தான்.

கடவுள் செயல்படும் அற்புதமான வழிகளை அவள் விளக்குகிறாள்.

எலிசா அவனை குணமாக்குவார் என்று அவள் சொன்னாள்.

கடவுள் அவனது நம்பிக்கைக்கு முழுமையான மற்றும் அற்புதமான குணப்படுத்துதலுடன் பதிலளித்தார்.

எலிசா அத்தகைய செல்வந்தன்,மற்றும் செல்வாக்கு மிகுந்த பெரிய மனிதனிடமிருந்து எதையும் பெற மறுத்துவிட்டார்.

கேயாசி வேண்டுமென்றே எலிசாவிடம் வெகுமதியை மறைத்தான்.

நம்பிக்கையின் செயலால் ஒரு அவிசுவாசி தொழுநோயிலிருந்து குணப்படுத்தப்படுவதையும், ஒரு இஸ்ரவேலன் அவமதிப்புச் செயலால் சபிக்கப்படுவதையும் இங்கே காண்கிறோம்.

மேபி சுந்தர். சென்னை. இந்தியா. குழு எண்.2196


x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-xx-


பானையிலே சாவு
2 இராஜாக்கள் 4: 38 -41.

1. இங்கு *தேசத்திலே பஞ்சம். ஆனால் தீர்க்கதரிசிகளின் புத்திரரோ எலிசாவுக்கு முன்பாக உட்கார்ந்திருந்தார்கள்*. எதற்காக? எலிசா கர்த்தருடைய வார்த்தைகளை அவர்களுக்கு போதித்துக் கொண்டிருந்திருக்கலாம். இன்று நாமும் கர்த்தருடைய பாதத்தில் உட்கார்ந்து இருக்கும் போது, பஞ்ச காலத்திலும் அவர் நம் ஆத்துமாவையும், சரீரத்தையும் போஷிப்பார்.

2.எலிசா தன் வேலைகாரனை நோக்கி, *நீ பெரிய பானையை அடுப்பிலே வைத்து, தீர்க்கதரிசிகளின் புத்திரருக்கு கூழ் காய்ச்சு* என்றார்.

*இந்த பெரிய பானை நாம் தான். தங்கத்துக்கு ஒப்பான சீயோன் குமாரர் குயவனுடைய கையின் மண்பாண்டங்களாய் எண்ணப்படுகிறார்களே*. புலம்பல் 4: 2. ஆம், *பரம குயவனாம் இயேசுவின் கரத்தில் மண்பாண்டங்களாக இருக்கும் நமக்குள் அவருடைய மகிமையின் ஒளியாகிய வசனத்தை, பரிசுத்த ஆவியை பொக்கிஷத்தை வைத்திருக்கிறார்*. 2 கொரிந்தியர் 4: 6, 7. எவ்வளவு பெரிய ஆசீர்வாதம் பாருங்கள்!

*கூழ் என்பது அடுப்பிலே, தீயிலே காய்ச்சி எடுக்கும் ஒருஆகாரம். நாமும் கூட கர்த்தருடைய வசனத்தை பரிசுத்த ஆவியானவராகிய அக்கினியிலே, தியானித்து அந்த ஆகாரத்தினால் நம் சரீரத்தையும், ஆத்துமாவையும் போஷிக்க அவருக்கு முன்பாக உட்கார்ந்து இருக்க வேண்டும்*

2. *ஒருவன் கீரைகளை பறிக்க வெளியே போகிறான். அங்கு பேய் கொம்மட்டிக்காய்களை கண்டு, மடி நிறைய அறுத்து வந்து, அவைகளை அரிந்து கூழ்பானையில் போட்டான். அது என்ன என்று அவர்களுக்கு தெரியவில்லை. அந்த கூழை சாப்பிட வார்த்தார்கள் . ஆனால் அது சாப்பிடகூடாமல் இருந்தது. உடனே அவர்கள் தேவனுடைய மனுஷனே! பானையில் சாவு இருக்கிறது என சத்தமிட்டார்கள்* .

ஆம், இதை போலவே *இன்று ஆவிக்குரிய உலகில் கள்ள போதகர்கள், கள்ள தீர்க்க தரிசிகளின் பேய் கொம்மட்டிகளாகிய அவர்கள் பேய்த்தனத்திற்குரிய போதனைகளை நம்முடைய பானைகளில் போட்டு விடுகிறார்கள்*. அதை அநேகர் *கேட்டு கூழ் காய்ச்சுகிறார்கள். இதை உண்ணும் போது அவர்கள் ஆத்துமா சாகும் என்பதை அறியாமலே கூழ் காய்த்துக் குடித்து கொண்டிருக்கிறார்கள்.*

ஆம், *சத்தான கீரைகளை போன்ற கர்த்தருடைய வார்த்தைகளை தியானிக்க வேண்டிய நாம், பேய்தனத்திற்குரிய தவறான, பொய்யான போதனைகளை ஏற்று, ஏமாந்து ஆத்துமா சாகாத படி நம்மை காத்துக்கொள்ள வேண்டும். அவர்களுடைய கனிகளாலே அவர்களை அறிவீர்கள்*. ஆம் கனி எத்தகையது? சரிவர ஆராய்ந்து கூழ் காய்ச்ச வேண்டும்.

3. இன்று *கள்ள போதகர்களால் பிடிபட்டு , சாகும் தருவாயில், கசப்புடன் நம் ஆத்துமா காணப்படுகிறதா? இவர்கள் செய்தது என்ன? *தேவனுடைய மனுஷனே! என எலிசாவை கூப்பிட்டார்கள்.பானையில் என் வாழ்க்கையில் சாவு இருக்கிறது என்று சத்தமிட்டார்கள்*. இன்று நாமும் கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவை நோக்கி கூப்பிடுவோம். *இயேசுவிடம் அவர்கள் கனிகள் , சாட்சியின் ஜீவியம், போதனைகள் சரிதானா என கேட்போம். அவர்கள் தீர்க்கதரிசனங்கள் நிறைவேறினதா? அல்லது பொய்யா? அவர்கள் ஆட்டு தோல் போர்த்த ஓநாய்களா? ஒரு ஆத்துமாவில், குடும்பங்களில், சபையில் சமாதானத்தை உண்டு பண்ணுகிறார்களா? அல்லது பிரிவினைகளை உண்டு பண்ணுகிறார்களா? இவர்கள் தியாகத்தோடு, ஆத்தும பாரத்தோடு ஊழியம் செய்கிறார்களா? அல்லது பணத்திற்காக, புகழுக்காக ஊழியம் செய்கிறார்களா? ஆம், சத்தான கீரை கூழா? பேய் கொம்மட்டி காய் கூழா? நம் தேவனை நோக்கி கூப்பிடுவோம்.*

4.பானையில் சாவு இருக்கிறது என எலிசாவிடம் கூறின போது, அவர் *அந்த கூழிலே, பானையிலே மாவை போட சொல்லி, அதை அவர்களுக்கு வார்க்க கூறினார். அப்போது பானையிலே தோஷம் இல்லாமல் போயிற்று.* என்ன ஆச்சரியம்!

இன்று *நாமும் கர்த்தரை நோக்கி கூப்பிடும் போது, மாவாகிய கிறிஸ்துவை, அவருடைய ஜீவனுள்ள போதனையை, நம்முடைய பானையில், ஆத்துமாவில் ஏற்றுக் கொள்ளும் போது, கீழ்ப்படியும் போது, நம்முடைய பாவ தோஷம் நீங்கும். ஆத்தும பசி நீங்கும்.*

ஆம், *அவர் நம் ஆத்துமாவை பஞ்ச காலத்தில் போஷித்து, மரணத்திற்கு விலக்கி காத்து, உயிரோடே காப்பார்.* சங்கீதம் 33: 18, 19. ஆமென், அல்லேலூயா.

*Dr.Padmini Seĺvyn*


x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-xx-


📗 *சிறிய குறிப்பு* 📗

🍂 *கதவை மூடு* 🍂

மூடிய கதவுகளுக்குப் பின்னால் நிறைய அற்புதங்கள் நடக்கும் என்பது உங்களுக்குத் தெரியுமா? அவளுடைய அற்புதத்திற்காக ஒரு விதவை அவளுக்குப் பின்னால் *கதவை மூட* வேண்டியிருந்தது. எலிசா அவளிடம் *கதவை அடைத்து* ஒவ்வொரு பாத்திரத்திலும் எண்ணெயை ஊற்றும்படி அறிவுறுத்தினார் (2 இரா 4:1-7).

*மூடப்பட்ட கதவுகளுக்குப் பின்னால்* மட்டுமே அதிசயம் நடக்கும். இது ஒரு பொதுக் காட்சியாக இருக்கக்கூடாது. உங்கள் அதிசயத்திற்காக *உங்கள் வாழ்க்கையில் என்ன கதவு மூடப்பட வேண்டும்?* உங்கள் அற்புதத்திற்காக உங்கள் வாயின் கதவை மூட நினைவில் கொள்ளுங்கள். *தேவையற்ற, புத்தியினமான வார்த்தைகளை பேசாதீர்கள்.*

சூனேமியப் பெண் தன் இறந்த மகனின் உடலைக் தேவ மனிதனின் படுக்கையில் வைத்து *கதவை மூடினாள்* (2 இரா 4:21, 22). உங்கள் பிரச்சனைகளை தேவையில்லாமல் மற்றவர்களிடம் சொல்லாமல் மூடிய கதவுகளுக்குள் வைத்திருப்பது நல்லது. பின்னர் அவள் எலிசாவை உதவிக்கு அழைக்கச் சென்றாள்.

*மேலும் உள்ளே போய்த் தங்கள் இருவருக்கும் பின்னாக அவன் கதவைப்பூட்டி, கர்த்தரை நோக்கி வேண்டுதல்செய்து, ( இரா 4:33).* எலிசா *கதவை மூடிய பிறகு* ஜெபம் செய்தார். இதை இயேசு கிறிஸ்து மலை பிரசங்கத்தில் கற்பித்தார் (மத் 6:6). எனவே உங்கள் அறையின் கதவை மூடிவிட்டு ஜெபிக்க ஆரம்பியுங்கள்.

_திருமதி ஷீலா ஜெபக்குமார்_ ✍🏼


x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-xx-

Ch 5 we read of Naaman's healing.

Verses 5: 15-19 we read that Naaman returns to Elisha after the healing and says, " *now I know that there are no God in all the worlds except in Israel*

He wanted forgiveness for his future actions... accompanying his Syrian king to his temple and bowing down along with the king...

Elisha's answer is interesting. *go in peace* !


x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-xx-


*ஏற்ற சமயத்தில் சொன்ன*

*வார்த்தைகள்*..

கர்த்தரிடத்தில் பட்சபாதம் இல்லை..அவர் எல்லோருக்கும் நன்மை செய்கிறவர்..கர்த்தர் தம்மிடத்தில் வருகிற புறஜாதியாரையும் ஏற்றுக்

கொள்கிறார் என்னும் சத்தியத்தை தெளிவுபடுத்தும்

வண்ணமாக ..எலிசா தீர்க்கதரிசி.. சீரியா தேசத்து..நாகமானைக் குணப்படுத்தினார்.

( 2 இரா. 5 அதி)

நாகமான் ஒரு பராக்கிரமசாலி..

ஆனால் அவன் ஒரு குஷ்டரோகி..

அவன் யுத்தத்திலே எதிரிகளை

வென்றான்..சீரியா தேசத்திலே.. ராஜாவுக்கு அடுத்த நிலையிலிருந்தான்..

ராஜாவின் அன்பையும்..

நன்மதிப்பையும் பெற்றிருந்தான்..

ஆனால் அவனால் அவனது குஷ்டரோகத்தை மேற்கொள்ளமுடியவில்லை..

*அந்த நோய் நாளுக்குநாள்*.. *அவனது சரீரத்தை*

*அழித்துக்கொண்டிருந்தது*..

*அதனால் அவனது* *நம்பிக்கையும்*.. *குறைந்துகொண்டேயிருந்தது*..

நாகமானின் மனைவிக்கு.. இஸ்ரவேல் தேசத்தைச் சேர்ந்த

ஓர் அடிமைப் பெண்

பணிவிடை செய்தாள்..

தன் தாய் நாட்டைவிட்டு..

தன் உறவுகளை விட்டு ..

தனிமைப்படுத்தப்பட்ட அவளது வேதனை..துக்கம்.. மகா கொடிது..

ஆனால் அந்தச் சிறு பெண்..தனது நிலைமையைக் குறித்து…முறுமுறுக்கவில்லை..

தன்னைச் சிறைப்பிடித்து வந்த

மனிதனுக்குத் தேவன் கொடுத்த

தண்டனை என்றும் அவள் நினைக்கவுமில்லை..

* தான் அடிமையாக இருந்தாலும்..தன் தேவன் மீது அசைவில்லாத* *நம்பிக்கைகொண்ட அந்தச் சிறு* *பெண்*..

*தனது எஜமானின்*

*நிலைமையைக் குறித்துக்* *கரிசனைகொண்டாள்*..

*நம்பிக்கையிழந்த* *நாகமானுக்கு*..

*ஏற்றவேளையிலே அந்தச் சிறு*

*பெண் சொன்ன செய்தி*..

*அற்புதத்திற்கு நேராக* *வழிநடத்தியது*..

எலிசா தீர்க்கதரிசி நாகமானை..யோர்தானிலே..

ஏழுதரம் ஸ்நானம்பண்ணச்

சொன்னார்..

நாகமானின் “ நான்” என்ற பெருமை..யெகோவா தேவனின்

சுகமளிக்கும் வழிமுறைகளைக் குறித்த அறியாமை..

அவனைக் கோபம் கொள்ளச்

செய்தது..சுகம் பெறாமலேயே.. தன் நாட்டுக்குத் திரும்பும் நிலையிலிருந்தான்..

*ஆனால் அவன்* *ஊழியக்காரர்களில் ஒருவன்*.. *ஏற்றவேளையில் கூறின* *வார்த்தைகள்* ..

*நாகமானுக்கு சரீர சுகத்துடன்*

*ஆன்மீக விடுதலையையும்* *கொடுத்தது*..

ஒரு வேளை ..நாகமான் யோர்தானுக்குச் சென்று ஸ்நானம்பண்ணாமல்.. திரும்பிச் சென்றிருந்தால்..

அவனது கோபம்..”நான்” என்ற ஆணவம் ..ஆகியவற்றால் ..

அந்த அடிமைப் பெண்ணின் நிலைமை என்னவாகியிருக்கும்..?

தங்களுடைய எஜமானிடம் சகஜமாகப் பேசப் பயப்படும் ஒரு சாதாரண ஊழியக்காரன்,

தன் எஜமானிடம் ஏற்ற வேளையில்

சொன்ன, ஏற்ற வார்த்தை..

தொலை தூரத்திலிருந்த.. ஒரு அடிமைப் பெண்ணையும்

பாதுகாத்தது..

*கர்த்தர் தம்மை நம்பின* *பிள்ளைகளை.. நிச்சயம்* *பாதுகாப்பார் என்பதை, இது*

*வெளிப்படுத்துகிறது*..

பிரியமானவர்களே..

ஒவ்வொரு நாளும், கர்த்தரிடம்..

ஏற்ற நேரத்தில்..ஏற்ற வார்த்தைகளைப் பேசும்

ஞானத்தைக் கேட்டு

ஜெபியுங்கள்..

*இந்தச் சமுதாயத்திலே*..

*உடைந்த இதயத்தோடு*..

*நம்பிக்கையிழந்த மனதோடு* *வாழும் எத்தனையோ* *நாகமான்கள் உண்டு*..

*ஏற்ற சமயத்திலே..நீங்கள்*

*சொல்லும் ஏற்ற வார்த்தைகள்*..

*அவர்களுடைய தவறான* *முடிவுகளை மாற்றச்* *செய்யலாம்*..

*அவர்களுடைய வாழ்விலே* *அற்புதத்தை நிகழ்த்தலாம்*..

*அவர்கள் துக்கம் நீங்கலாம்*..

கர்த்தர் நம்மை முன் குறித்து

அழைத்ததற்கு ஒரு நோக்கம்

உண்டு..நாம் கர்த்தருடைய

ஆசீர்வாதத்தின் வாய்க்கால்களாக செயல்படவேண்டும்..

*ஆண்டவர் கொடுத்த* *ஞானத்தோடு பேசுங்கள்*..

*ஏற்ற சமயத்தில் சொன்ன* *வார்த்தை வெள்ளித்தட்டில்* *வைக்கப்பட்ட* *பொற்பழங்களுக்குச் சமானம்*..

( நீதி. 25 : 11 )

மாலா டேவிட்


x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-xx-

நாகமான் பராக்கிரமசாலியாக இருந்தான்.

அவனுக்கு ஒரு பயங்கரமான, குணப்படுத்த முடியாத நோய் இருந்தது.

இஸ்ரவேல் தேசத்திலிருந்து சிறைபிடிக்கப்பட்ட ஒரு இளம் பெண்ணை தன் வீட்டு வேலைக்காரியாக கொண்டு வந்திருந்தான்.

கடவுள் செயல்படும் அற்புதமான வழிகளை அவள் விளக்குகிறாள்.

எலிசா அவனை குணமாக்குவார் என்று அவள் சொன்னாள்.

கடவுள் அவனது நம்பிக்கைக்கு முழுமையான மற்றும் அற்புதமான குணப்படுத்துதலுடன் பதிலளித்தார்.

எலிசா அத்தகைய செல்வந்தன்,மற்றும் செல்வாக்கு மிகுந்த பெரிய மனிதனிடமிருந்து எதையும் பெற மறுத்துவிட்டார்.

கேயாசி வேண்டுமென்றே எலிசாவிடம் வெகுமதியை மறைத்தான்.

நம்பிக்கையின் செயலால் ஒரு அவிசுவாசி தொழுநோயிலிருந்து குணப்படுத்தப்படுவதையும், ஒரு இஸ்ரவேலன் அவமதிப்புச் செயலால் சபிக்கப்படுவதையும் இங்கே காண்கிறோம்.


மேபி சுந்தர்.சென்னை.இந்தியா.குழு எண்.2196


x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-xx-

*2 இராஜாக்கள் 4 - 5*

*அவள் தன் நாச்சியாரைப் பார்த்து , என் ஆண்டவன் சமாரியாவிலிருக்கிற தீர்க்கதரிசியினிடத்தில் போவாரானால் நலமாயிருக்கும் ; அவர் இவருடைய குஷ்டரோகத்தை நீக்கி விடுவார் என்றாள். 2 இரா 5 : 3*

இந்த வார்த்தையைக் கூறியது , இஸ்ரவேல் தேசத்திலிருந்து அடிமையாக சிறைப் பிடித்துக்கொண்டு வரப்பட்ட ஒரு சிறு பெண்ணாகும் ; அவள் தன் தாய் தந்தையை விட்டு பிரிந்து வந்துள்ளோமே , இந்த அந்திய நாட்டுப் படைத்தலைவனைப்பற்றி நாம் ஏன் கவலைப்பட வேண்டும் என்று எண்ணவில்லை , பிரியமானவர்களே .

மாறாக தனது எஜமாட்டியின் கணவர் எப்படியாவது , இந்த குஷ்டரோக வியாதியிலிருந்து சுகம்பெற வேண்டும் என்ற கரிசனையோடு , *தனது இஸ்ரவேல் தேசத்திலுள்ள எலிசா என்ற தீர்க்கதரிசியிடம் சென்றால் சுகம் பெறுவார்* என்ற நற்செய்தியை அறிவிக்கிறாள். அந்த அடிமை பெண்ணுக்கு இருந்த ஆத்தும பாரத்தை பார்த்தீர்களா ? பிரியமானவர்களே.

அதன் விளைவாக , படைத்தலைவனாகிய நாகமானும் , தான் எலியாவிடம் சென்றால் , தான் சுகம் பெற்றுக்கொள்வோம் என்ற விசுவாசத்துடன் இஸ்ரவேல் தேசத்திற்குச் சென்று , முதலில் சற்று தயங்கினாலும் , இறுதியில் எலிசா தீர்க்கதரிசியின் வார்த்தையின்படியே , யோர்தானில் ஏழுதரம் முழுகின போது , முற்றிலும் சுகம் பெற்றார். அவருடைய மாமிசம் ஒரு சிறு பிள்ளையின் மாம்சத்தைப் போல மாறி , அவர் சுத்தமானார் என்று பார்க்கிறோம்.

அடிமையாயிருந்த அந்த சிறு பெண்ணிற்கு இருந்த விசுவாசம் , ஆத்தும பாரம் நமக்கிருக்கிறதா ? சிந்துத்துப் பார்ப்போம் , பிரியமானவர்களே.

எனவே நாமும் நமக்கு அருகாமையில் இருப்போர் , நாம் அன்றாடம் சந்திக்கும் நபர்கள் , யாராகயிருப்பினும் அவர்களிடம் , நமது ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து , நம்முடைய பாவங்களுக்காக மரித்தார் என்ற நற்செய்தியையும் , இன்னும் அவருடைய தழும்புகளால் நாம் தெய்வீகசுகம் பெற்றுக் கொள்கிறோம் என்பதையும் தவறாமல் அறிவிப்போமாக. அதனால் அவர்கள் ஆசீர்வாதத்தைப் பெறுவதோடு , நாமும் ஆசீர்வாதத்தைப் பெற்றுக் கொள்வோம். *சமயம் வாய்த்தாலும் வாய்க்காவிட்டாலும் , ஜாக்கிரதையாய்த் திருவசனத்தைப் பிரசங்கம் பண்ண (வேண்டும்). 2 தீமோ 4 : 2*

*ஆமென் ! அல்லேலூயா ! !*
Rajam Theogaraj , Palayamkottai.

x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-xx-

*🥁சிப்பிக்குள் முத்து🥁*

இன்றைய வேத வாசிப்பு பகுதி -

*1 இராஜா : 4, 5*

*🌈முத்துச்சிதறல் : 110*

*✍️கொல்லவும் உயிர்ப்பிக்கவும் நான் தேவனா❓️(5:7)*

🍧🫧🍧🫧🍧🫧🍧

*🍀சீரியர் போய் யுத்தம் செய்து, இஸ்ரவேல் தேசத்தில் இருந்து சிறை பிடித்துக்கொண்டு வரப்பட்டிருந்த ஒரு சிறு பெண் மூலம் சீரியரின் படைத்தளபதி நாகமானுக்கு அவன் மனைவி எலிசா தீர்க்கதரிசியை குறித்து கூறிய செய்தி அவர் மனதில் விசுவாசம் துளிர்விட காரணமாய் இருந்தது.*

சிறு பெண் கூறியபடியே, தன் ஆண்டவனாகிய சீரிய அரசனிடம் அனுமதி பெற்று, ஒரு கடிதத்தினையும் சுமந்துக்கொண்டு, தேவனுடைய மனுஷனாகிய எலிசாவை சந்திக்க வெகுமானங்களோடு, தன் வேலைக்காரரையும் கூட்டிக்கொண்டு பயணித்து சென்று, இஸ்ரவேல் அரசனிடம் அக்கடித்ததினை சமர்ப்பித்தார் நாகமான் என்னும் *"மகா பராக்கிரமசாலியாகிய குஷ்டரோகி"*.

அந்த கடிதத்தில்,...

*நீர் அவன் குஷ்டரோகத்தை நீக்கிவிட அவனை உம்மிடத்தில் அனுப்புகிறேன்"* என்று சீரியா நாட்டு அரசன் கேட்டு கொள்வதாக எழுதப்பட்டு இருந்தது.

சிறு பெண் கொடுத்த தகவல் :

*என் ஆண்டவன்,* (எஜமான், நாகமான்) *சமாரியாவில் இருக்கிற தீர்க்கதரிசியினிடத்தில்* (எலிசாவிடம்) *போவாரானால் நலமாயிருக்கும்*, அவர் இவருடைய குஷ்டரோகத்தை நீக்கிவிடுவார்.

ஆனால் இங்கு இந்த இஸ்ரவேலின் அரசனுக்கு சீரியரின் இராஜா தெரிவித்தது முற்றிலும் மாறானது.

*🍇இஸ்ரவேலில் இருக்கும் தீர்க்கதரிசியிடம் இவரை அனுப்பி விடும்*,என்னும் தெளிவான வலிக்காட்டல் அந்த கடிதத்தில் இல்லை. அதற்கு மாறாக,

*நீர்*

(இஸ்ரவேலின் அரசன்)

*அவன் குஷ்டரோகத்தை நீக்கிவிடும்* என்று எழுதப்பட்டிருந்து.

✒️ *சீறி எழுந்தான், இஸ்ரவேலின் அரசன்.*

கொல்லவும், உயிர்ப்பிக்கவும், நான் என்ன தேவனா❓️என்று சொல்லிக்கொண்டே தன் வஸ்திரங்களை கிழித்துக்கொண்டான்.

*🌿தான் யார் என்பதை நன்றாக இந்த இஸ்ரவேலரின் அரசன் தன்னை குறித்து அறிந்து வைத்திருந்தான்.* தான் வெறும் நியமிக்கப்பட்டிருக்கும் ஆட்சியாளன் அவ்வளவே. மற்றபடி பிறரின் நோய்களை *(ஆன்மீக நோய்களையோ , இல்லை சரீர நோய்களையோ)* அவர்களை விட்டு அகற்ற தான் தகுதி அற்றவன் என்பதை வெளிப்படையாய் அறிக்கையிட்டு, *"நான் தேவனல்ல"* என்று உறுதியாக, ஆணித்தரமாக கூறினான்.

*🍃நான் தேவனா❓️ என்னும் இந்த வாக்கியத்தை,* இப்படிப்பட்ட கேள்வி கணையை யார் வெளிப்படையாய் தெரிவிப்பர்கள் என்றால், கொஞ்சமாகிலும் இறைவனின் வல்லமையை குறித்து, அவர் ஒருவரால் மாத்திரமே *(இறைவன் ஒருவரால் மாத்திரமே)*

நோய்களை நீக்கம் செய்ய இயலும் என்னும் நம்பிக்கை உள்ளவர், மற்றும் *"நானெல்லாம் ஒன்றுமில்லை, எல்லாம் அந்த பரமனால் மட்டுமே இது ஆகிறது, அவராலன்றி ஒரு அணுவும் அசையாது, அல்லது எல்லாம் வல்ல இறைவனால் மட்டுமே ஆகும்"* என்னும் மனப்பான்மை கொஞ்சமாகிலும் உடையோர் மாத்திரம் தான் இப்படி கூறி நிற்க இயலும்.

*🍏தன்னிடம் பிள்ளை கொடுக்கும்படி கேட்டு சண்டை கோழியாய் நின்ற தனது காதல் மனைவி ராகேலிடம் யாக்கோபும் இவவிதமே கோபத்தோடு கேட்கிறார்.* "தேவனல்லவோ உன் கர்ப்பத்தை அடைத்திருக்கிறார், *"நான் தேவனா❓️"* என்று கேட்டார்.

(ஆதி - 30 : 1, 2)

*🍏இதோ நாங்கள் உமக்கு அடிமைகள் என, யோசேப்புக்கு முன் எதிர்கால பயத்தினால் பீடிக்கப்பட்டு தாழ விழுந்து சொன்ன தன் சகோதரர்களிடம் :* பயப்படாதிருங்கள், *"நான் தேவனா"❓️* என்று சொல்லி யோசேப்பு அவர்களை தேற்றியதை....

*ஆதி - 50 : 15 - 21 ல்* நாம் வாசித்து அறியலாம்.


*நான் தேவனா ??
என்று தங்களை குறித்து அறிவித்த மனிதர்கள் எல்லாம் உணர்ந்துக்கொண்ட ஒரே ஒரு விஷயம் என்னவென்றால் :

*நாங்களும் உங்களைப்போல* (பாடுள்ள) *மனுஷர்கள் தான்*

ஏதோ எங்களை தேவன் தமது மகிமைக்கென்று ஒரு பொறுப்பில், அல்லது குடும்ப தலைவனாக உயர்த்தி வைத்துள்ளார் அவ்வளவே.

எங்களை குறித்து நீங்கள் இறைவனை காட்டிலும் மேலானோராக, உயர்வாக எண்ணாதீர் என்பதாம்.

(அப்போ - 14 : 8 - 17)
ஆம்,

*அப்போஸ்தலர்கள் மூலம் பலத்த அற்புத அடையாளங்கள் கர்த்தரால் நடப்பிக்கப்பட்டது.* அவர்கள் தங்களை உயர்த்தி கொள்ளவே இல்லை. எல்லா துதி கன மகிமையை ஜனங்கள், ஜீவனுள்ள தேவனுக்கு மாத்திரம் செலுத்தும்படி அவர்களை தேவன் பக்கமாக திருப்பி, அவர்களுக்கு இறைவனை குறித்து சொல்லிக்கொடுத்து, அறிவித்து வழிநடத்தினார்கள்.


*🪔நாகமானின் குஷ்டம் நீங்குவதற்கான வழிக்காட்டல் முறைமைகள் எலிசா மூலம் தேவனால் அவருக்கு அறிவிக்கப்பட்டது.*

சொல்லப்பட்ட வழி காட்டலுக்கு கீழ்படிந்ததினால் *(யோர்தானில் 7 முறை மூழ்கி எழுந்ததால் )* நாகமானின் குஷ்டரோகம் அவரை விட்டு முற்றிலும் நீங்கியது.

அதுவும் அவர் 7 முறை மூழ்கி எழ அறிவுறுத்த பட்டார் என்பது, முக்கியத்துவம் பெறுகிறது.

*நாகமான் 6 முறை மூழ்கியும் குணமாகவில்லை.*

ஏழாவது முறை மூழ்கி எழுந்த போதே விடுதலை உண்டாயிற்று.


*உடனடி அற்புதம் என்றாலும்,*

*🌻படிப்படியான கீழ்படிதலால்,* மற்றும்

*🌻எதிர்ப்பார்ப்போடுள்ள விசுவாசத்தால்* மாத்திரமே அவர் பரிபூரணமான விடுதலையை பெற்றுக்கொண்டார்.

🎁தேவ மனுஷனின் ஆலோசனைக்கு கீழ்படிய முடியாதபடி சொந்த பூமிக்குறிய நதிகளை குறித்த பெருமை கொண்ட நாட்டு பற்றும், அகம்பாவமும், *தகர்ந்து நின்ற எதிர் பார்ப்புகளும் தடை கற்கள் போல காணப்பட்டது.*

ஆகிலும் அவர் கூடவே, அவரோடு கூட அவரது சுகதிற்க்கான அக்கறை கொண்டு பயணித்த *வேலைக்காரர்களின் கனிவான, மற்றும் சமயோசித அறிவுறுத்தல்கள்* அவர் செவிகளுக்கு தேனாகவும், ஆத்துமாவிற்கு அரு மருந்தாகவும் திகழ்ந்தது.

*பணிவின் மேன்மையை குறித்து புரிந்து கொண்டு, மனப்பபூர்வமாக "தேவ மனுஷன் கூறியது தேவ வார்த்தை" என்று நம்பி அணைத்து, ஏற்று கொண்டு கீழ்படிந்தார். ஆத்தும சுகமும் சரீர சுகமும் கிட்டியது.*

🔰🎈🔰🎈🔰🎈🔰
🍁நம்மில் எவருமே தேவனுடைய ஸ்தானத்தை எமக்கென்று உரிமை கொண்டாடாமல்,

*நானல்ல என் தேவன்*......

*நான் அல்ல என் தேவன் தான்*....

*என்னால் முடியாது.... ஆனால் தேவானால் கூடும்*

என்று கூறி... கூறி....

*நம்மை பின்னுக்கு தள்ளி..... தேவனை முன்னிறுத்துவோமானால்❓️*....

அப்பொழுது...

*ஜனங்களின் இதயங்களில் அவர்*

( இறைவன் / தேவன் / கர்த்தர் / கடவுள் ) *பெருகுவார்...... நாம் சிறுகுவோம்....*

*✍️யாதோரு காரியத்திற்க்காக எவரேனும் ஜெப விண்ணப்பம், அல்லது ஏதேனும் உதவி, அல்லது ஆலோசனை கேட்பாராகில், அவர்களை சத்தியத்திற்கு நேரே*

[ இயேசுவே சத்தியம் (யோ - 14 : 6) ஆகையால் அவருக்கு நேரே ]

*ஜனங்களை திருப்பி விட்டு நடத்துவோம்.* நமக்கு நேரே அல்ல.....அல்ல....

*அல்லவே அல்ல.... என்பதை உணர்ந்து செயல்படுவோமா ❓️*

*எலிசா செய்தது எல்லாம் அதுதான்.*

சுகத்திற்கான ஆலோசனை சொல்லி வழி நடத்தினார்,

அவ்வளவே.

*இனி நீ ஜீவனுள்ள தேவனை பின்பற்றி, அவர் ஒருவரையே வழிபட்டு,*

அவருக்கு மாத்திரம் உண்மையாய் கீழ்படிவது உன் பொறுப்பு...

*அது உன் தலை மேல் விழுந்த கடமை என்று வழி காட்டி நின்றார்.*

*🍒சுவிசேஷ ஊழியம் செய்யும் போது இதையே கடைபிடித்து, அற்புதங்கள் நிகழ்ந்த பின், அவர்கள் ஜீவனுள்ள தேவனுக்கு மாத்திரம் ஆன்மீக தொழுகை ஏறெடுக்க வழி காட்டுவோம்.*

*💠எவரும் கட்டாயமாயல்ல, மாறாக மனப்பபூர்வமாக கர்த்தரை, தங்களது இரட்சகரை பின்பற்ற உதவியாக தோழமை கரம் கொடுப்போம்.🤝*

*🪶Sis. Martha Lazar*

NJC, KodaiRoad



x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-xx-

💆‍♀️THE UNSUNG HEROINE💆‍♀️*

*💆‍♀️பிரபலமாகாத கதாநாயகி💆‍♀️*
 2 இராஜாக்கள் 4

☄️ _பின்பு ஒருநாள் எலிசா சூனேமுக்குப் போயிருக்கும்போது, அங்கேயிருந்த கனம்பொருந்திய ஒரு ஸ்திரீ அவனை போஜனம்பண்ண வருந்திக் கேட்டுக்கொண்டாள்; அப்படியே அவன் பயணப்பட்டு வருகிறபோதெல்லாம் போஜனம்பண்ணும்படி அங்கே வந்து தங்குவான்._

2 இராஜாக்கள் 4:8

☄️சூனேமிய ஸ்திரீயின் குணங்கள்

1️⃣ *தேவ பக்தி*
🔹சூனேமியப் பெண் தேவனுக்கு அர்ப்பணிக்கப்பட்டவள். அவளும் அவளுடைய கணவனும் பணக்கார நில உரிமையாளர்கள், மேலும் எலிசா அவர்கள் நகரத்திற்குச் சென்றபோதெல்லாம் அவர் தங்குவதற்கு ஒரு கூடுதல் அறையைக் கட்ட அவர்கள் தங்கள் செல்வத்தைப் பயன்படுத்தினர்.

🔹இந்த பெருந்தன்மையான செயல், தேவனுடைய பணிக்கான அத்தம்பதியரின் அர்ப்பணிப்பைக் காட்டியது.


2️⃣ *தைரியம்
🔸சூனேமியப் பெண் துன்பங்களை எதிர்கொள்வதிலும் மிகுந்த தைரியத்தைக் காட்டினாள்.

🔸தன் மகன் நோய்வாய்ப்பட்டு இறந்தபோதும் அவள் நம்பிக்கையை கைவிடவில்லை. அவள் எலிசாவிடம் தனக்கு உதவி செய்யும்படி கெஞ்சினாள். அவன் மறுத்தபோது, ​​அவள் விடாப்பிடியாக முயற்சித்து அவனை தன் மகனிடம் வரச் செய்தாள்.

🔸மரண சூழலின் மத்தியில் அதை எதிர்கொள்ளும் அவளது தைரியமும் விடாமுயற்சியும் அவளுடைய குணத்திற்கு ஒரு சான்று.


3️⃣ *இரக்கம்*
▪️சூனேமியப் பெண் மற்றவர்களிடமும் மிகுந்த இரக்கம் பாராட்டினாள்.

▪️அவளுடைய மகன் இறந்தபோது, ​​அவள் எலிசாவை ஆறுதல் வார்த்தைகளால் ஆறுதல்படுத்தினாள்.

▪️ஏழைகள் மற்றும் தேவையுள்ளவர்கள் மீது கருணை காட்டினாள், அவர்களுக்குத் தேவைப்படும்போது உணவும் தங்குமிடமும் வழங்கினாள்.

♥️ *வாழ்க்கை பாடங்கள்*

💥தேவபக்தி, தைரியம், இரக்கம் மற்றும் அன்பு போன்ற பல போற்றத்தக்க குணங்களுக்கு சூனேமியப் பெண் எடுத்துக்காட்டாக இருக்கிறாள்.

💥 அவளது கதை நம் அனைவருக்கும் உத்வேகம் அளிப்பதாகவும், நம்மைச் சுற்றியுள்ளவர்களின் வாழ்க்கையில் ஒரு மாற்றத்தை ஏற்படுத்த நம்மால் முடியும் என்பதையும் நினைவூட்டுகிறது.

*‼️நம்முடைய கர்த்தருக்கு விசுவாசமான அன்பை வளர்த்துக்கொள்வோம்‼️*

பிரின்சஸ் ஹட்சன
தமிழாக்கம் இன்னிசை செல்வி மும்பை


x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-xx-


ஷாலோம் 🙏

ஆசீர்வதிக்கப்பட்ட மக்களுக்கு ஆசீர்வாதமாக இருப்பதற்காக ஆசீர்வதிக்கப்பட்டேன் 👨‍👩‍👦‍👦

🙋‍♂️🙋‍♀️ படித்து தியானம் செய்யலாம்

*2 இராஜாக்கள் 4 : 1- 7*

*WHAT DO YOU HAVE ❓*

*உன்னிடம் என்ன இருக்கிறது* ❓

📝 "தீர்க்கதரிசிகளின் புத்திரர்" என்ற சொற்றொடர் தீர்க்கதரிசிகள் சமூகமாக ஒன்றாக வாழ்ந்தார்கள் (2 இராஜாக்கள் 38-41); ஒன்றாக வேலை செய்தார்கள் (2 இராஜாக்கள் 6:1-7) மற்றும் ஒரே மாதிரியான ஆடைகளை அணிந்திருக்கலாம் அல்லது ஒரு சிறப்பியல்பு முடி வெட்டைக் கொண்டிருக்கலாம் (2ராஜாக்கள் 2:23) என்பவற்றைக் குறிக்கிறது.

📍 அவர்கள் ஒரு தலைவர் அல்லது ஒரு வழிகாட்டியால் மேற்பார்வையிடப்பட்டனர். அந்தக் காலத்தில் *எலிசா அவர்களின் தலைவராக* இருந்தார்.

📝 இன்றைய வாசகப் பகுதியில் தீர்க்கதரிசியின் விதவை ஒருத்தியின் கதையும் அவளது கடனும், இஸ்ரவேலின் வரலாற்றில் அதிர்ச்சியளிக்கும் ஒன்றாகும்.

🙋‍♀️ அவளது கணவர் *கடன் கொடுத்தவருக்கு திரும்ப செலுத்தப்படாத கடனை* விட்டுவிட்டு இறந்துவிட்டார்.

🙋‍♀️ விதவையிடம் திருப்பிச் செலுத்த போதுமான பணமோ அல்லது வேறு வழிகளோ இல்லை.

🙋‍♂️ *கடன் கொடுத்தவர்* (அநேகமாக ஒரு இஸ்ரவேலர்) *அவரது இரண்டு மகன்களையும் அடிமைகளாக அழைத்துச் செல்ல வருவார்*.

📝 லேவியராகமத்தின் படி, ஒரு இஸ்ரவேலர் இஸ்ரவேலர் அல்லாதவர்களை அடிமைப்படுத்த முடியும் ( *25:44-46* ) ஆனால் அவர்களது சக நாட்டு மக்களை அடிமைப்படுத்த தடை விதிக்கப்பட்டது ( *25:39-43* )

இருப்பினும், இந்த விதிமுறைகள் பெரும்பாலும் புறக்கணிக்கப்பட்டன.

🙋‍♀️ *இதனால், ஏழை விதவை நீதி மன்றங்களில் முறையிடவில்லை, ஆனால் தீர்க்கதரிசி எலிசாவிடம்* முறையிட்டாள். (வ 1-2a) .

🙋‍♂️ *எலிசாவின் பதில் நடைமுறைக்குரியது*. அவர் சட்டவிரோத நடைமுறையை எதிர்க்கொள்ள முயற்சிக்கவில்லை. *ஆனால்* விதவைக்கு முதலாவது முக்கிய விஷயமாக பயன்படுத்த என்ன வழிகள் உள்ளன என்பதை அவர் ஆராய்கிறார்:

📍எலிசா விதவையிடம் கேட்டார்: *"... வீட்டில் உன்னிடத்தில் என்ன இருக்கிறது "* ?

📍விதவை பதிலளித்தாள்: *"..ஒன்றும் இல்லை "*

📍 பின்னர் அவள் பதிலளித்தாள்: *"... அவளிடம் ஒரு குடம் எண்ணெய் உள்ளது "*

🙋‍♂️ எலிசா, *"நீ போய், அயல்வீட்டுக்காரர் எல்லாரிடத்திலும் அநேகம் வெறும் பாத்திரங்களை கேட்டு வாங்கு...."* என்று கூறினார்.

📍 *" சிலவற்றை மட்டும் கேட்காதே"*

📍 *"வெறும் பாத்திரங்கள் எல்லாவற்றிலும் எண்ணையை ஊற்றவும்"*

🙋‍♂️🙋‍♀️ அனைத்து பாத்திரங்களும் நிரப்பப்பட்டன, விதவை எண்ணெய் விற்று கடனைச் செலுத்துவதுடன் கதை முடிகிறது; மற்றும் அவளுடைய மகன்களை விற்க வேண்டிய அவசியமில்லை. ( *வ 7*)

📍 *கர்த்தராகிய ஆண்டவரே போஷிப்பவர்*

💕 அன்பான திருச்சபையே, இன்றைய வாசகப் பத்தியில், அண்டை வீட்டாரிடமிருந்து எத்தனை பாத்திரங்கள் சேகரிக்கப்பட்டன என்று நமக்குச் சொல்லப்படவில்லை, ஆனால் விதவையின் மகன்கள், *" வேறே பாத்திரம் இல்லை"* (வ 6 பி. ) என்றார்கள்.

🙋‍♂️🙋‍♀️ *உங்களிடம் என்ன இருக்கிறது* ? என்பது கிறிஸ்தவமண்டலத்தில் ஒரு உண்மையான கேள்வி.

📍 மோசே கர்த்தரை எதிர்கொண்டபோது அவனுடைய கைகளில் ஒரு கோல் இருந்தது, அந்தக் கோலைக் கொண்டு கர்த்தர் வல்லமையான காரியங்களைச் செய்தார்.

📍 சிறு பாலகனிடம் ஐந்து அப்பங்களும் இரண்டு மீன்களும் அடங்கிய ஒரு கூடை இருந்தது, அதைக் கொண்டு இயேசு 5000 பேரை போஷித்தார்.

📍 இன்றைய பத்தியில், விதவையிடம் ஒரு குடம் எண்ணெய் இருந்தது. அனைத்து பாத்திரங்களிலும் எண்ணெய் நிரப்பப்பட்டது மற்றும் விதவை எண்ணெய்யை விற்று தனது கடனை அடைக்க முடிந்தது.

*நமது* கோல், கூடை *மற்றும்* குடம் ஆகியவற்றை *கர்த்தரிடம் கொண்டு வருவோம். அதை நிரப்பவும் பயன்படுத்தவும் அவரை அனுமதிப்போம்*.

🌈 இயேசு சொன்னார், *"... அமுக்கிக் குலுக்கிச் சரிந்து விழும்படி நன்றாய் அளந்து, உங்கள் மடியிலே போடுவார்கள்.. "* 📕 லூக்கா 6:38

தேவனுக்கே மகிமை 🙌

✍🏻 *மார்க் போஜே*

அருணாச்சல பிரதேசம், இந்தியா 🇮🇳
தமிழாக்கம் ஜஸ்டஸ் ராஜேந்திரன்


Tags

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.