Type Here to Get Search Results !

2 KINGS 1-3 Bible Study | THE MANTLE OF ELIJAH | இது கர்த்தரின் பார்வைக்கு அற்பகாரியம் | Tamil Christian Bible Study in Tamil | Jesus Sam

===================
2 KINGS 1-3 Bible Study in Tamil & English
===================
The compromise of the church and its leaders has not caused the world to listen to the church. The world will not listen until the church declares the Word of God.*

⚠️II Ki.1:9-10- *There is much talk today about the fact that we should learn to communicate and learn to get along with everybody. May we be reminded, that this is not God’s method.* The compromise of the church and its leaders has not caused the world to listen to the church. As a matter of fact, the world is not listening at all. They pass the church right by. Why? *The world will not listen until the church declares the Word of God. If the church preached God’s Word, there would be communication.*

📖 *I and II Kings in contrast.*

1. Begins with King David. Ends with King of Babylon.

2. Opens with Solomon’s glory. Closes with Jehoiachin’s shame.

3. Begins with the blessings of obedience. Ends with the curse of disobedience.

4. Opens with the building of the temple. Closes with the burning of the temple.

5. Traces the progress of apostasy. Describes the consequences of apostasy.

6. How kings failed to rule God’s people. Consequences of that failure.

7. Prophet Elijah introduced. Prophet Elisha presented.

8. The long-suffering of the Lord. The Lord’s sure punishment of sin.

9.Nine different dynasties are described for the northern kingdom of Israel. But, as promised to David, there is only one dynasty in Judah.

💪🏼II Ki.2:6-8- *The Lord had parted the River Jordan for Joshua and the people of Israel at least five hundred years before this; now He repeats the miracle for Elijah and Elisha.*

⛹️‍♂️ *Application* :II Ki.2:12-14- This man Elisha is taking Elijah’s place, and he demonstrates his faith. He takes Elijah’s robe and smites the waters just as Elijah had done. *The power is not in the robe nor in Elijah; the power is in God, and Elisha knows that.* Elisha had the faith Elijah had, and it is faith in the God of Elijah. *He asks the question, “Where is the LORD God of Elijah?” This is the important question today. Instead of looking to men or women, methods, or some nostrum for help, as many people do, why not look to the Lord God of Israel?* He is the living God; He is the God and Father of the Lord Jesus Christ.

Jaya Pradeep-Kodaikanal.


-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x

*2இராஜாக்கள்: 1-3*

*எலிசா பெத்தேலுக்குப் போனான்; அவன் வழிநடந்து போகையில் பிள்ளைகள் பட்டணத்திலிருந்து வந்து, அவனைப் பார்த்து, மொட்டைத் தலையா ஏறிப்போ, மொட்டை தலையா ஏறிப்போ என்று சொல்லி நிந்தித்தார்கள்*.

*அப்பொழுது அவன் திரும்பி அவர்களைப் பார்த்து, கர்த்தரின் நாமத்திலே அவர்களைச் சபித்தான். உடனே காட்டிலிருந்து இரண்டு கரடிகள் புறப்பட்டு வந்து, அவர்களில் நாற்பத்திரெண்டு பிள்ளைகளைப் பீறிப்போட்டது*.

(2 இராஜா: 2: 23-24)

▪️ இந்த சம்பவத்தை கவனியுங்கள். எலிசாவை பிள்ளைகள் இகழ்ந்து பரிகாசம் செய்தபோது எலிசா சபித்தார். கரடிகளை அவர் வரவழைக்கவில்லை. கர்த்தர் கரடிகள் மூலம் தண்டனை கொடுத்தார்.

▪️ கர்த்தருடைய ஊழியர்களை அவதூறாக பேசாதீர்கள். ஊழியரிடம் குறை இருப்பதாக தோன்றினால் அவருக்காக ஜெபிக்க வேண்டும். கர்த்தர் ஏவினால் ஊழியருக்குத் தவறை தெரியப்படுத்தலாம்.

▪️ஊழியக்காரரை அவதூறாகப் பேசி குற்றப்படுத்துவது சாத்தானும் அவனுடைய தூதர்களும் செய்யும் காரியம். கர்த்தருடைய பிள்ளைகள் அதைச் செய்ய வேண்டாம். அத்தகைய ஊழியக்காரருக்காக ஊக்கமாக ஜெபம் பண்ணினால் கர்த்தர் அந்த ஊழியக்காரரையும் உம்மையும் ஆசீர்வதிப்பார்.

*ஆமென்*
✍️ Bhavani Jeeja Devaraj

Nagercoil


-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x

*2 இராஜாக்கள் 1-3*


*எலியா பரலோகத்திற்கு*

*ஏறிப்போனான்*..


தீர்க்கதரிசியாகிய எலியாவைப் பிடிக்க,அகசியா ராஜா.. முதல்

இரண்டு முறை அனுப்பின

சேவகர்கள் மற்றும் அவர்கள்

தலைவர்களை.. வானத்திலிருந்து..அக்கினி இறங்கி..அவர்களைப்

பட்சிக்கக்கடவது என்று எலியா சொன்னான்..அவ்விதமே அங்கே நிறைவேறினதைப் பார்க்கிறோம்..

( 2 இரா.1 : 10 -12 )

இயேசு கிறிஸ்துவின் சீஷர்கள்..

இயேசுவினிடத்தில் இதைப் போன்ற அற்புதத்தைத்தான் எதிர்பார்த்தார்கள்..

ஆனால் இயேசு.. அவர்களைத் திரும்பிப் பார்த்து..

நீங்கள் இன்ன ஆவியுள்ளவர்களென்று

அறியீர்கள் என்று அதட்டினதை

லூக்.9 : 53 -56ல் நாம் பார்க்கிறோம்..

புதிய ஏற்பாட்டுக் கால ஊழியர்களுக்கு..*மனுஷரை*

*அழிக்கும் ஊழியம் கொடுக்கப்*

*படவில்லை*..*மனுஷரை* *இரட்சிப்புக்கு நேராக* *வழிநடத்தும் ஊழியமே* *கொடுக்கப்பட்டிருக்கிறது*..

காரணம்.. நாம் வாழும் காலம்.. கிருபையின் காலமாகும்..

அன்று எலியாவினிடத்தில்,

தேவன் மீது..பரிசுத்தமான பக்திவைராக்கியம் இருந்தது..

இன்று..விசுவாசிகளாகிய நம்மிடத்தில்..தேவபக்தியுடன்..

கிருபையும்..இரக்கமும்..

மனதுருக்கமும் காணப்பட

வேண்டும்..

எலியா ,கர்த்தருடைய மகிமைக்காகவே..அதாவது

எக்ரோனின் தேவனல்ல..

இஸ்ரவேலின் தேவனே

மெய்யான தேவன் என்பதை

அகசியா ராஜாவுக்கு காண்பிக்கவே..

வானத்திலிருந்து அக்கினியை

வரப்பண்ணினான்..

இயேசு கிறிஸ்துவின் சீஷர்களோ..

தங்களுடைய மகிமைக்காக..

வானத்திலிருந்து அக்கினி

வரவேண்டுமென்று

எதிர்பார்த்தார்கள்..

எலியா வானத்திலிருந்து அக்கினியை வரவழைத்து விரோதிகளைக்

கொன்றவன் ....

மரித்த விதவையின் மகனை

உயிரோடு எழுப்பினவன்…

எனவே விரோதிகளோ ...

வியாதிகளோ அவனை மேற்கொள்ள முடியாது … *எலியா அசாதாரண வாழ்வு* *வாழ்ந்தவன்*.. *தேவன்* *அவனுக்கு அசாதாரண*

*முடிவைக் கொடுத்துவிட்டார்* …*எலியா ,சுழற்காற்றிலே* *பரலோகத்திற்கு*

*ஏறிப்போனான்*.

( 2 இரா.2 : 11 )

எலியா ,ஏனோக்கைப் போல மரணத்தைக் காணாதபடி..

எடுத்துக் கொள்ளப்பட்டான்..

எலியா ,பரலோகத்திற்கு

ஏறிப்போனது..இயேசு கிறிஸ்து

பரமேறிப் போனதற்கு அடையாளமாயிருக்கிறது..

*நாம் இந்த* *உலகத்திலிருந்தாலும்*..

*இந்த* *உலகத்திற்குரியவர்களல்ல*

*என்ற சிந்தனையுடன்*..

*எலியாவைப்போல*..*நமது* *விசுவாசத்திலும்..ஜெபத்திலும்*..

*பரலோகத்தின் தேவனோடு ..நாம்* *நெருங்கிய* *ஐக்கியத்திலிருந்தால்*..

*நமக்கும் பரலோகம்* *திறந்திருக்கும்*..

இந்த நாட்களிலே நம்முடைய விசுவாசத்தினிமித்தம்.. நாம் பல்வேறு வகையான உபத்திரவங்கள்.. பாடுகளின் வழியாக..கடந்து செல்லலாம்..

என்னைக் கனம்பண்ணுகிறவர்களை..

நான் கனம்பண்ணுவேன்

என்ற வசனத்தின்படி..

*இயேசு கிறிஸ்துவின் இரண்டாம்* *வருகையின்போது*..

*நமக்கும் பரலோகத்திற்கு*..

“*💥வெற்றிப் பிரவேசம்💥*”

*கிடைக்கும்*..

அந்த மகிமையின் வாழ்வை நினைத்து..

மகிழ்ச்சியோடு இந்த உலகத்தின் பாடுகளைக் கடந்துசெல்வோம்..

“*இக்காலத்துப் பாடுகள் இனி* *நம்மிடத்தில் வெளிப்படும்* *மகிமைக்கு ஒப்பிடத்* *தக்கவைகள் அல்ல*..”

( ரோமர் 8 : 18 )


மாலா டேவிட்


-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x


▶️ *இது கர்த்தரின் பார்வைக்கு அற்பகாரியம்* ◀️

🔹 *அவன்: கர்த்தர் உரைக்கிறது என்னவென்றால், இந்தப் பள்ளத்தாக்கிலே எங்கும் வாய்க்கால்களை வெட்டுங்கள். நீங்கள் காற்றையும் காணமாட்டீர்கள், மழையையும் காணமாட்டீர்கள்; ஆனாலும் நீங்களும் உங்கள் ஆடு மாடுகளும் உங்கள் மிருகஜீவன்களும் குடிக்கும்படிக்கு, இந்தப் பள்ளத்தாக்கு தண்ணீரால் நிரப்பப்படும் என்று கர்த்தர் சொல்லுகிறார். இது கர்த்தரின் பார்வைக்கு அற்பகாரியம்; மோவாபியரையும் உங்கள் கையிலே ஒப்புக்கொடுப்பார்.* (2 இராஜாக்கள் 3:16-18).

🔸 மோவாபின் ராஜாவாகிய மேசா இஸ்ரவேலின் ராஜாவாகிய யோராமுக்கு விரோதமாய்க் கலகம் பண்ணினான். யோராம் மோவாபின் ராஜாவுக்கு எதிராகப் போரிட, யூதாவின் ராஜா யோசபாத் மற்றும் ஏதோமின் ராஜா ஆகியோரின் உதவியை நாடினான். *இஸ்ரவேல், யூதா, ஏதோம் தேசத்து இராணுவங்கள்* ஏழு நாட்கள் சுற்றித்திரிந்து, *தண்ணீரின்றி பாலைவனத்தில் தவித்தனர்.* இந்த பேரிடருக்குக் கரணம் தேவனுடைய செயலே என்று யோராம் புலம்பினான். தேவபக்தியுள்ள *யோசபாத்* தங்கள் சார்பாக கர்த்தரிடம் விசாரிக்க அந்த இடத்தில் *கர்த்தருடைய தீர்க்கதரிசி* யாராவது இருக்கிறார்களா என்று கேட்டான். இஸ்ரவேல் ராஜாவின் ஊழியக்காரரில் ஒருவன் எலிசாவைப் பற்றி அவர்களுக்குத் தெரிவித்தான். அதனால், மூன்று ராஜாக்களும் *தீர்க்கதரிசியாகிய எலிசாவினிடத்தில் போனார்கள்.* சூழ்நிலையின் தீவிரம் காரணமாக, தீர்க்கதரிசியை தங்களிடம் வருமாறு கோருவதற்குப் பதிலாக, தங்களைத் தாழ்த்தி அவர்களே அவனிடம் போனார்கள்.

🔸 எலிசா, இஸ்ரவேலின் ராஜாவாகிய யோராமிடம், மற்ற தெய்வங்களைப் பின்பற்றிய அவனுடைய தகப்பனின் தீர்க்கதரிசிகளிடத்திலும், தாயாரின் தீர்க்கதரிசிகளிடத்திலும் போகும்படி சொன்னான். தேவபக்தியுள்ள யூதாவின் ராஜாவான யோசபாத்துக்கு எலிசா மிகுந்த மரியாதை காட்டினான். *யோசபாத்தின் நிமித்தம் மட்டுமே,* அவர்கள் அனைவருக்காகவும் கர்த்தரிடம் விசாரிக்கப்போவதாக அந்த ராஜாக்களிடம் எலிசா சொன்னான். *தேவபக்தியுள்ளவர்களுடன் கொள்ளும் தேவபக்தியற்றவர்களின் ஐக்கியம்* அவர்களுக்கு பல ஆசீர்வாதங்களைக் கொண்டுவரும்.

🔸 கர்த்தரின் வார்த்தையின்படி, *அந்தப் பள்ளத்தாக்கிலே எங்கும் வாய்க்கால்களை வெட்டும்படி* எலிசா அவர்களிடம் சொன்னான். *அவர்கள் காற்றையும் மழையையும் காணமாட்டார்கள்; ஆனால் பள்ளத்தாக்கு தண்ணீரால் நிரப்பப்படும்* என்றும் அறிவித்தான்.

🔸 தேவன் அளிக்கும் தண்ணீரைப் பெற அவர்கள் வாய்க்கால்களை வெட்ட வேண்டும் என்று அவர் விரும்பினார். அவர்கள் கண்ணுக்குத் தெரியாத தண்ணீருக்காக, வாய்க்கால்களை விசுவாசத்தோடு வெட்ட வேண்டியிருந்தது. அவர்களால் *செய்யக்கூடிய செயலாகிய* வாய்க்கால்களை வெட்டும் வேலையை செய்யும்படி தேவன் அவர்களிடம் கேட்டார். அவர்களால் செய்ய முடிந்ததைவிட அதிகமாக ஏதாவது செய்ய வேண்டும் என்று தேவன் எதிர்பார்க்கவில்லை. *தேவன் நமக்குக் கொண்டுவர விரும்பும் ஆசீர்வாதத்தைப் பெற நாம் ஆயத்ததோடு இருக்க வேண்டும்* என்று அவர் எதிர்பார்க்கிறார்.

🔸 காற்றும் மழையும் இல்லாமல் தண்ணீர் கொடுப்பதாக தேவன் வாக்குறுதி அளித்தார். தேவனால் மட்டுமே அப்படிச் செய்ய முடியும். எரேமியா தீர்க்கதரிசியின் வார்த்தை: *"ஆ, கர்த்தராகிய ஆண்டவரே, இதோ, தேவரீர் உம்முடைய மகாபலத்தினாலும், நீட்டப்பட்ட உம்முடைய புயத்தினாலும், வானத்தையும் பூமியையும் உண்டாக்கினீர்; உம்மாலே செய்யக் கூடாத அதிசயமான காரியம் ஒன்றுமில்லை.”* (எரேமியா 32:17). எரேமியா தீர்க்கதரிசி தேவனுடைய வல்லமையை அனுபவித்திருந்தான். சங்கீதக்காரன் கூறுகிறான்: *“அவர் சொல்ல ஆகும், அவர் கட்டளையிட நிற்கும்.”* (சங்கீதம் 33:9). தேவன் எல்லாவற்றையும் ஒன்றுமில்லாமையிலிருந்து படைத்தார். அவருடைய வார்த்தையால் எல்லாவற்றையும் சிருஷ்டித்தார். எனவே, அவர் எல்லாவற்றின் மீதும் முழுமையான அதிகாரம் கொண்டிருக்கிறார்.

🔸 ராஜாக்கள் எலிசாவிடம் தண்ணீரைப் பற்றி விசாரிக்க வந்தார்கள். தேவன் அவர்களுக்கு உடனடித் தேவையான *தண்ணீரைக் காட்டிலும் அதிகமாக கொடுக்க விரும்பினார்.* மோவாபியருக்கு எதிராக *அவர்களுக்கு முழுமையான வெற்றியை* கொடுக்க விரும்பினார். தேவன் அவர்களை தண்ணீர் இல்லாமையால் அழிந்து போகாதபடி காப்பாற்றுவதோடு மட்டுமல்லாமல், அவர்களை வெற்றியுடன் திரும்பிச் செல்லவும் விரும்பினார். அப்போஸ்தலனாகிய பவுல் ஒரு ஆவிக்குரிய உண்மையைப் பற்றி எழுதுகிறார்: *"நாம் வேண்டிக்கொள்ளுகிறதற்கும் நினைக்கிறதற்கும் மிகவும் அதிகமாய் நமக்குள்ளே கிரியைசெய்கிற வல்லமையின்படியே, நமக்குச் செய்ய தேவன் வல்லவர்.”* (எபேசியர் 3:20). பல சமயங்களில், நாம் கேட்காமலேயே அல்லது நாம் கேட்டதை விட அதிகமாகவும் தேவனிடமிருந்து பல ஆசீர்வாதங்களைப் பெற்றுள்ளோம். தேவன் நமக்கு தேவையான சகலவித நன்மைகளையும் அருளுகிறார். தேவன்மேல் நம்பிக்கை வைத்து அவருக்கு முழுமையாகக் கீழ்ப்படிந்தால் நாம் *சகலவித ஆசீர்வாதங்களையும் பூரணமாகப் பெறுவோம்.*

🔹 *தேவனாலே செய்யக் கூடாத அதிசயமான காரியம் ஒன்றுமில்லை என்று நாம் உண்மையில் நம்புகிறோமா?*


✅ நாம் கற்றுக் கொள்ளும் *பாடங்கள்*:

1️⃣ *தேவபக்தியுள்ளவர்களுடன் தேவபக்தியற்றவர்கள் ஐக்கியம் கொணடால், அது அவர்களுக்குப் பல ஆசீர்வாதங்களைக் கொண்டுவரும்.*

2️⃣ *தேவன் நமக்குக் கொண்டுவர விரும்பும் ஆசீர்வாதத்தைப் பெற நாம் ஆயத்ததோடு இருக்க வேண்டும் என்று அவர் எதிர்பார்க்கிறார்.*

3️⃣ *தேவனாலே செய்யக் கூடாத அதிசயமான காரியம் ஒன்றுமில்லை.*

4️⃣ *தேவன் நாம் வேண்டிக்கொள்ளுகிறதற்கும் நினைக்கிறதற்கும் மிகவும் அதிகமாய், சகலவித நன்மைகளையும் நமக்குச் சம்பூரணமாய்க் கொடுக்கிறார்.*

Dr. எஸ். செல்வன்
சென்னை


-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x

*நான் உம்மை விடுகிறதில்லை*
~~~~~~~~~~~~~~~~~~~~~~
2 இராஜாக்கள் 2: 6 - 12.

1. எலியா தீர்க்கதரிசி எடுத்துக்கொள்ளப் படுவதற்கு முன், கில்காலிலிருந்து புறப்பட்டு, பெத்தேலுக்கும், எரிகோவுக்கும் வந்தார். *அவரை பின்பற்றின, அவர் கைகளுக்கு தண்ணீர் வார்த்த எலிசாவோ அவரை பின்பற்றி வருகிறார்*. எலிசாவை நீ திரும்பி போ என்ற போதும் எலிசா போகாமல் எலியாவை பின் தொடர்ந்தார். மட்டுமல்ல, மூன்றாவது முறை கூறிய போது, *நான் உம்மை விடுகிறதில்லை* என்று சொல்லி, எலியாவோடு யோர்தானையும் கடக்கிறார். இதிலிருந்து நாம் கற்றுக்கொள்வதென்ன?

1. தன்னை அபிஷேகித்த, வழிநடத்தின எலியா தீர்க்கதரிசியை எலிசா *எவ்வளவாய் நேசித்தார், உண்மையாய் பின்பற்றினார்* என்பதை நாம் அறியலாம்.

2. *எலியாவை கர்த்தர் எடுத்து கொள்ள போகிறார். அதை நான் பார்க்க வேண்டும். கடைசி வரை அவரோடிருக்க வேண்டும் என்ற உறுதியான தீர்மானம் எலிசாவிடம் இருந்தது.*

ஆம், நம்மை அபிஷேகித்து, தாயின் கர்ப்பத்திலிருந்து வழிநடத்துகிற நம் இயேசுவை நாம் இவ்வித அன்பினால், உறுதியாக பின்பற்றுகிறோமா?

2. *நான் உம்மை விடுகிறதில்லை என கர்த்தருடைய ஜீவனையும், உம்முடைய ஜீவனையும் கொண்டு சொல்லுகிறேன்* என்ற எலிசாவை பார்த்து, நான் உன்னை விட்டு எடுத்து கொள்ளப்படுவதற்கு முன், *நான் உனக்கு என்ன செய்ய வேண்டும்* என எலியா கேட்கிறார்.

ஆம், கர்த்தரை உத்தமமாய் பின்பற்றுகிறவர்களிடம், கூப்பிடுகிறவர்களிடம் *நான் உனக்கு என்ன செய்ய வேண்டும் என கேட்கிற மனதுருக்கமுள்ள தேவன் தான் நம் இயேசு.* தீர்க்கதரிசிகளின் புத்திரர் 50 பேர் எலியா எடுத்து கொள்ளப்பட போகிறார் என அறிந்தவுடன் அங்கேயே நின்று விட்டார்கள்.

நாம், இந்த தீர்க்கதரிசிகளின் புத்திரரை போல அல்ல, *எலிசாவை போல நம் இயேசுவை இறுதி வரை பின்பற்றுவோம்.*

3. *என்ன வேண்டும்* என கேட்டதும் எலிசா, *உம்மிடத்திலுள்ள ஆவியின் வரம் இரட்டிப்பாய் வேண்டும்* என்கிறார். எலிசாவின் ஊழிய வாஞ்சையை பாருங்கள்!

இன்று கர்த்தர் இந்த கேள்வியை நம்மிடத்தில் கேட்டால் நம்முடைய பதில் என்னவாயிருந்திருக்கும்? நம் பிரச்சனைகள் மாறணும், நம் தேவைகள் சந்திக்கப்பட வேண்டும் என்று தானே கேட்டிருப்போம்! ஆவிக்குரிய ஆசீர்வாதங்களுக்காக, இரட்டிப்பான வரங்களுக்காக நாம் ஜெபிக்கிறோமா?

ஆம், *இரட்டிப்பான நன்மையை இன்றே தருவேன்* என கர்த்தர் நமக்கு வாக்குபண்ணியிருக்கிறாரே! சகரியா 9: 12.

*என்னை விசுவாசிக்கிறவன் நான் செய்கிற கிரியைகளை பார்க்கிலும், பெரிய கிரியைகளை செய்வான்* என இயேசு வாக்கு பண்ணியிருக்கிறாரே! யோவான்14:12.

4. *நான் எடுத்துக் கொள்ளபடுகையில் என்னை நீ கண்டால்* இந்த இரட்டிப்பான வரம் கிடைக்கும் என எலியா கூறினார். அப்படியானால் அவ்வளவு கவனமாக எலியாவை நோக்கி கொண்டே, அவர் அடிசுவடுகளை பின்பற்றி அவரோடு எலிசா நடந்திருப்பார் !

ஆம், அதுபோலவே *நம் கண்கள் அவர் மேல், அவர் வார்த்தையின் மேல் இருக்குமானால் மட்டுமே இந்த இரட்டிப்பான வரத்தை நாம் பெற்றுக் கொள்ள முடியும்.*

5. ஆம், *அக்கினி ரதமும், அக்கினி குதிரைகளுமாகிய ஆவியானவரின் பிரசன்னம் இறங்கின போது, எலியாவையும், எலிசாவையும் பிரித்தது. எலியா சுழல் காற்றிலே பரலோகத்திற்கு ஏறி போனார். கீழே விழுந்த எலியாவின் சால்வையை எலிசா பெற்றுக்கொண்டார்*. இரட்டிப்பான வரங்களோடு ஊழியம் செய்தார்.

ஆம், *யாக்கோபு கூட என்னை ஆசீர்வதித்தாலொழிய நான் உம்மை விடுவதில்லை* என இரவெல்லாம் போராடி ஆசீர்வாதத்தை பெற்றுக்கொண்டார். கர்த்தர் தம்முடைய பிள்ளைகளுக்கு வைத்திருக்கிற இரட்டிப்பான வரங்களை நாம் *அறிந்து, வாஞ்சித்து, கேட்டு பெற்றுக்கொள்ள வேண்டும்*

இதுவே நம் வாழ்க்கையின் நோக்கமாயிருக்கட்டும். *எலிசாவை போல வரங்களோடு கர்த்தருக்கு ஊழியம் செய்ய, ஆத்தும ஆதாயம் செய்ய ஆவியானவர் தாமே நம்மை வழி நடத்துவாராக.* ஆமென். அல்லேலூயா.

*Dr.Padmini Seĺvyn*



-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x

 2.இராஜாக்கள்.3:16,17.

"இந்தப் பள்ளத்தாக்கை அகழிகளால் நிரம்பச் செய், நீ காற்றைப் பார்க்கமாட்டாய், மழையைப் பார்க்கமாட்டாய். ஆனாலும் நீங்களும் உங்கள் கால்நடைகளும் உங்கள் மிருகங்களும் குடிக்கும்படி அந்தப் பள்ளத்தாக்கு தண்ணீரால் நிறைந்திருக்கும்" என்று கர்த்தர் கூறுகிறார்.

🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹 மூன்று அரசர்களின் படைகளும் தண்ணீரின்றி தவித்தனர்.

கடவுள் அதை அனுப்பவிருந்தார்.

இந்த வார்த்தைகளில், தீர்க்கதரிசி வரவிருக்கும் ஆசீர்வாதத்தை அறிவித்தார்.

இங்கே மனித உதவியற்ற நிலை இருந்தது.

எல்லா மனிதர்களாலும் வானத்திலிருந்து வாங்கவோ அல்லது பூமியின் கிணறுகளில் ஒரு சொட்டு தண்ணீரைக் கண்டுபிடிக்கவோ முடியவில்லை.

இவ்வாறு அடிக்கடி நாம் இந்த நிலையில் இருக்கிறோம்.

எங்கு நமது உதவி கிடைக்கும்.

தெய்வீக ஆசீர்வாதத்திற்காக நாம் தயாராக இருக்கிறோம்.

விலைமதிப்பற்ற திரவம் வைக்கப்படும் அகழிகளை நாம் தோண்ட வேண்டும்.

இறைவன் தனது சொந்த இறையாண்மையான செயல் முறைகளைக் கொண்டுள்ளார்.

நாம் அவரிடமிருந்து நன்றியுடன் பெற வேண்டும்.

இந்த நற்செய்தி ஆசீர்வாதத்தில் உள்ளது, ஜெபத்தின் தெய்வீக சக்தியால் நமது தேவைகள் அனைத்தும் பூர்த்தி செய்யப்படும்.

எல்லாவற்றிற்கும் மேலாக, இந்த வெற்றி நமக்கு விரைவில் வழங்கப்படும்.

இயேசுவுக்காக நாம் என்ன செய்கிறோம்?

எந்த அகழிகளை தோண்டுகிறோம்?


மேபி சுந்தர். சென்னை இந்தியா குழு எண்.2196.


-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x


📗 *சிறிய குறிப்பு* 📗

🍂 *யோர்தான் கரையோரம்* 🍂

தேவனாகிய கர்த்தரால் பல ஆயிரம் பேருக்கும், ஒரு நபருக்காகவும் நீர்நிலைகளை பிரிக்க முடியும். பல ஆண்டுகளுக்கு முன்பு *கர்த்தர் செங்கடலைப் பிரித்து* இஸ்ரவேலர்களுக்கு வழி செய்தார். பிறகு இஸ்ரவேலர்கள் வாக்குப்பண்ணப்பட்ட தேசத்திற்குள் நுழைவதற்கு *தேவன் யோர்தான் நதியை* பிரித்தார். நதிநீர் பிரிவதை மீண்டும் ஒருமுறை பார்க்கிறோம். இந்த முறை கர்த்தர் எலியாவுக்கு நதியைப் பிரித்தார்.

📖 *அப்பொழுது எலியா, தன் சால்வையை எடுத்து முறுக்கித் தண்ணீரை அடித்தான்; அது இருபக்கமாகப் பிரிந்தது; அவர்கள் இருவரும் உலர்ந்த தரைவழியாய் அக்கரைக்குப் போனார்கள் (2 இரா 2:8).*

பிரிந்த நதி நீரை கடந்த பிறகு, எலியா ஒரு சுழல்காற்றால் வானத்திற்கு எடுத்துக்கொள்ளப்பட்டார். *பூமியில் அவருடைய ஊழியம் முடிவுக்கு வந்தது*. அதிர்ச்சியடைந்த எலிசா மீண்டும் எலியாவின் சால்வையை எடுத்து முறுக்கி யோர்தான் நதியின் தண்ணீரை அடித்தான். *நதி தண்ணீர் மீண்டும் பிரிந்தது, எலிசா கடந்து சென்றார். இவ்வாறு அவருடைய வல்லமையான ஊழியம் தொடங்கியது* (2 இரா 2:12-15).

தனி மனிதனுக்காக தேவனாகிய கர்த்தர் தண்ணீரைப் பிரித்ததைப் பார்ப்பது ஆச்சரியமாக இருக்கிறது. இப்போது நீங்கள் எதிர்கொள்ளும் பெரிய நதி எது? *யோர்தானின் தண்ணீரை எலியாவுக்கும் எலிசாவுக்கும் பிரித்து கொடுத்த தேவன் உங்களுக்காக எல்லா தடைகளையும் உடைப்பார்.*

_திருமதி ஷீலா ஜெபக்குமார்_ ✍🏼


-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x


BRB (2 Kings 1) *But Jesus rebuked them saying, “you don’t realize what spirit you have. I have come to save men’s lives, not to destroy them” (Luke 9:55, 56).*

Chapter 1: Ahaziah was the new king of Israel and he was very angry with Elijah for rebuking him for his idolatry. So he sent 50 soldiers to capture him. Elijah told the captain of the army, "If I am a man of God, let fire come down from heaven and consume you and your 50 soldiers (1 : 12).

Fire came down immediately from heaven and killed all of them. This happened a second time with another group of 50. The third captain begged Elijah to be merciful to him and then Elijah went with him to the king and told the king that he would die for his idolatry.

It was these incidents that James and John referred to, when Jesus came to this same place - Samaria - and the Samaritans did not receive him. They wanted to call down fire from heaven like Elijah did.

But Jesus rebuked them saying, “you don’t realize what spirit you have. I have come to save men’s lives, not to destroy them” (Luke 9:55, 56).

There we see the difference between the new covenant spirit of Christ and the spirit of the old covenant prophets.

Posted by Rambabu


-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x

THE MANTLE OF ELIJAH* 🥋

[DAY - 108] 2 Kings - Chapter 2

☄️2 Kings Chapter 2 provides a significant account of the transition of leadership from the prophet Elijah to his apprentice, Elisha.

1️⃣ *THE DEPARTURE OF ELIJAH*

🔹Elijah he ascends to heaven in a whirlwind.

🔹This miraculous event highlights the power and authority of God, emphasizing that He alone has control over life and death.

🔹Through Elijah's departure, we see a clear example of God's faithfulness to His faithful servant, as well as His ability to accomplish extraordinary things.

2️⃣ *ELISHA’S REQUEST FOR A DOUBLE PORTION*

🔸Elisha's request for a double portion of Elijah's spirit signifies his desire for a greater anointing and authority.

🔸This demonstrates the importance of spiritual hunger after God's guidance and power.

🔸Elisha's bold request serves as a reminder for believers today to pursue a deeper relationship with God and seek His empowerment in their lives.


3️⃣ *ELISHA’S MIRACLES*

▪️As Elisha takes on his new role as a prophet, he performs various miracles that testify to his anointing.

▪️These miracles include parting the waters of the Jordan River, healing water sources, and cursing disrespectful youths.

▪️These acts reveal the authority and power that God bestows upon those who faithfully serve Him.

▪️They also illustrate the importance of obedience and trust in God's ability to work through His chosen servants.


4️⃣ *THE IMPORTANCE OF SPIRITUAL MENTORSHIP*

▫️Elijah serves as a mentor to Elisha.

▫️Elisha refuses to leave Elijah's side, demonstrating his commitment to learn and receive wisdom from his mentor.

▫️This highlights the significance of mentorship and the passing down of knowledge and spiritual authority and the importance of having godly mentors in our lives who can guide and equip us for our own spiritual journeys.


5️⃣ *THE MANTLE PASSED ON*

🔺Elijah leaves behind his mantle, a symbol of his prophetic authority.

🔺Elisha picks up the mantle and begins his ministry, signifying a transfer of responsibility and anointing.


♥️ *LIFE LESSONS*
💥The passing of the mantle illustrates the continuation of God's work through His chosen vessels.

💥It emphasizes the importance of recognizing and accepting the callings and assignments God places upon us.

💥We shoul be inspired to pursue a deeper relationship with God, seek His empowerment.

*‼️LET US EMBRACE THE CALLINGS GOD PLACES UPON OUR LIVES‼️*


Princess Hudson


-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x

*THE MANTLE OF ELIJAH* 🥋

🥋 *எலியாவின் சால்வை*

☄️2 இராஜாக்கள் 2, எலியா தீர்க்கதரிசியிலிருந்து அவரது பயிற்சியாளரான எலிசாவுக்கு தலைமைத்துவம் மாறியதற்கான குறிப்பிடத்தக்க விவரத்தை வழங்குகிறது

1️⃣ *எலியாவின் புறப்பா

🔹எலியா ஒரு சூறாவளியில் பரலோகத்திற்கு ஏறுகிறார்

🔹இந்த அதிச

நிகழ்வு தேவனுடைய வல்லமையையும் அதிகாரத்தையும் எடுத்துக்காட்டி, வாழ்விலும் மரணத்திலும் அவருக்கு மட்டுமே கட்டுப்பாடு உள்ளது என்பதை வலியுறுத்துகிறது

🔹எலியாவின் புறப்பாட்டின் மூலம், தேவன் தம்முடைய உண்மையுள்ள ஊழியருக்கு உண்மையுள்ளவர் என்பதற்கும், அசாதாரணமான காரியங்களைச் சாதிக்கும் திறனுக்கும் தெளிவான உதாரணத்தைக் காண்கிறோம்

2️⃣ *எலிசாவின் இரட்டிப்பான வரத்திற்கான கோரிக்கை

🔸எலியாவின் ஆவியின் இருமடங்கு பங்கை எலிசா கேட்டது, ஒரு பெரிய அபிஷேகம் மற்றும் அதிகாரத்திற்கான அவரது விருப்பத்தை குறிக்கிற

🔸தேவனுடைய வழிகாட்டுதல் மற்றும் வல்லமைக்கான ஆன்மீகப் பசியின் முக்கியத்துவத்தை இது நிரூபிக்கிறது

🔸எலிசாவின் தைரியமான வேண்டுகோள் இன்று விசுவாசிகளுடைய வாழ்வில், தேவனுடன் ஒரு ஆழமான உறவைத் தொடரவும், அவருடைய அதிகாரமளித்தலை நாடவும் நினைவூட்டுகிறது


3️⃣ *எலிசாவின் அற்புதங்கள்

▪️எலிசா ஒரு தீர்க்கதரிசியாக தனது புதிய பாத்திரத்தை ஏற்கும்போது, ​​அவர் அபிஷேகத்திற்கு சாட்சியமளிக்கும் பல்வேறு அற்புதங்களைச் செய்கிறா

▪️இந்த அற்புதங்களில் சில யோர்தான் நதியின் தண்ணீரைப் பிரிப்பது, நீர் ஆதாரங்களை ஆரோக்கியமாக்குவது மற்றும் மரியாதையற்ற இளைஞர்களை சபிப்பது ஆகியவை அடங்கும்

▪️இந்தச் செயல்கள், தேவன் தம்மை உண்மையுடன் சேவிப்பவர்களுக்கு அளிக்கும் அதிகாரத்தையும் சக்தியையும் வெளிப்படுத்துகிறது

▪️தேவன் தேர்ந்தெடுத்த ஊழியர்களின் மூலம் அவர் கிரியை செய்ய, கீழ்ப்படிதல் மற்றும் நம்பிக்கையின் முக்கியத்துவத்தையும் அவை விளக்குகின்றன


4️⃣ *ஆன்மீக வழிகாட்டுதலின் முக்கியத்துவம்

▫️எலியா எலிசாவுக்கு வழிகாட்டியாக செயல்படுகிறா

▫️எலிசா எலியாவின் பக்கத்தை விட்டு அகல மறுப்பது, தனது வழிகாட்டியிடம்  இருந்து ஞானத்தைக் கற்றுக் கொள்வதற்கும் பெறுவதற்கும் தனது அர்ப்பணிப்பைக் காட்டுகிறார்

▫️இது வழிகாட்டுதலின் முக்கியத்துவத்தையும், அறிவு மற்றும் ஆன்மீக அதிகாரத்தை தனக்குப்பின் வருபவருக்கு அளித்து செல்வதையும், நமது சொந்த ஆவிக்குறிய பயணங்களில் நம்மை வழிநடத்தி, நம்மை ஆயத்தப்படுத்தக்கூடிய தெய்வீக வழிகாட்டிகளை நம் வாழ்வில் கொண்டிருப்பதன் முக்கியத்துவத்தையும் எடுத்துக்காட்டுகிறது

5️⃣ *பொறுப்பு கொடுக்கப்பட்டது
🔺எலியா தனது தீர்க்கதரிசன அதிகாரத்தின் அடையாளமான தனது சால்வையை விட்டுச் செல்கிறா

🔺எலிசா சால்வையை எடுத்துக்கொண்டு தனது ஊழியத்தைத் தொடங்குகிறார், இது பொறுப்பு மாற்றத்தையும் அபிஷேகத்தையும் குறிக்கிறது

♥️ *வாழ்க்கை பாடங்கள்

💥சால்வையை கொடுத்துச் செல்வது, தேவன் தேர்ந்தெடுத்த பாத்திரங்கள் மூலம் அவருடைய பணியின் தொடர்ச்சியை விளக்குகிற

💥தேவன் நம்மீது வைக்கும் அழைப்புகளையும் பணிகளையும் அங்கீகரித்து ஏற்றுக்கொள்வதன் முக்கியத்துவத்தை இது வலியுறுத்துகிறது

💥தேவனுடன் ஆழமான உறவைத் தொடரவும், அவருடைய அதிகாரமளித்தலைத் தேடவும் நாம் தூண்டப்பட வேண்டும்

*‼️தேவன் நம் வாழ்வில் வைக்கும் அழைப்புகளை ஏற்றுக்கொள்வோம்‼️

பிரின்சஸ் ஹட்


தமிழாக்கம் இன்னிசை செல்வி மும்


-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x


2 ராஜாக்கள் 1-
Sist. எஸ்தர் ராஜசேகர

*வாழ்கையின் பயன் :

அகசியா தன் தகப்பன் ஆகாப்பை போலவே, பாகலை சேவித்து கர்த்தருக்கு கோபமுண்டாக் கினான்

அவன் வியாதிபட்டு படுக்கையில் விழுந்த பொழுது, இந்த வியாதி நீங்கி பிழைப்பேனா என்று விசாரிக்க தன் ஆட்களை பாகால்சேபு விடம் அனுப்பினான்


இதை கண்ட கர்த்தர் கடும் கோபம் கொண்டா

இஸ்ரேவேலில் தேவன் இல்லை என்றா நீ பாகாலிடம் விசாரிக்க அனுப்பினாய் என்று, வழியில் இடைப்பட்டு எலியாவின் ஆட்கள், அவன் அனுப்பின ஆட்களை கேட்டார்கள்

இதை அறிந்த அகசியா எலியாவை கொண்டு வர உத்தரவிட்டான்

கர்த்தரை அறிந்த ஜனம் கர்த்தரை விட்டு விலகி உயிரற்ற அந்நிய தெய்வங்களிடம்,போவது எவ்வளவு ஆபத்தானது என்று அறியாத படி தங்கள் ஜீவனுக்கே கேடுண்டாக்கி கொள்கிறார்க

எரேமியா 2:

எந்த ஜாதியாவது தேவர்களல்லாத தங்கள் தேவர்களை மாற்றினது உண்டோ என்றும் பாருங்கள்; என் ஜனங்களோ வீணானவைகளுக்காகத் தங்கள் மகிமையை மாற்றினார்கள்

என்று எழுத பட்ட படியாயிற்று

அகசியா இஸ்ரேவேலின் தேவனிடம் விசாரித்திருந்தால் கூட, கர்த்தர் ஒரு கிருபை, இரக்கம், சகாயம் கட்டளை யிட்டிருக்க கூடும்

ஆனால். அந்நிய தேவனிடம் சாய்ந்து போனாதினால் தன் கிருபையை இழந்து மறித்தே போனான்

யோனா

பொய்யான மாயையைப் பற்றிக்கொள்ளுகிறவர்கள் தங்களுக்கு வரும் கிருபையைப் போக்கடிக்கிறார்கள்

வியாதி வரும் பொழுது, நாம் என்ன செய்ய வேண்டும்

கர்த்தரிடம் அடைக்கலமாக செல்ல வேண்டும்

தாழ விழுந்து கர்த்தரிடம் தன்னை ஒப்புவிக்க வேண்டும்இந்த வியாதி படுக்கையின் காரணம் என்ன என்றும் கர்த்தர் எதற்க்காக அனுமதித்தார் என்றும் அறிந்து ஜெபத்தில் அறிய வேண்டு

வியாதி, துக்கம், கவலை, சோர்வு எல்லா நேரங்களிலும் அவர் பாதத்தையே பிடித்து கொள்ள வேண்டும்

அதை விட்டு, நாம் வேறேங்கு ஓடினாலும் ஒரு பிரேயோஜனமும் இல்லை

நம் பெல வீணங்களில் அவரே நம்மை பெலபடுத்த முடியும்

கர்த்தர் ஒருவரே ஆளுகையில் இருக்கிறவர்

அவர் அறியாமல் நமக்கு எதுவும் வருவதில்லை. அவர் சித்தம் இல்லாமல் நம் தலை மயிரும் கூட விழுவதில்லை

நம் வாழ்கை யின் ராஜாவாக அவரே இருக்கும் பொழுது அவர் நம்மை ஆள விட்டு கொடுக்க வேண்டும்

சங்கீதம்

நீங்கள் கோபங்கொண்டாலும், பாவஞ்செய்யாதிருங்கள்; உங்கள் படுக்கையிலே உங்கள் இருதயத்தில் பேசிக்கொண்டு அமர்ந்திருங்கள்

நம் சூழ்நிலை என்னவாக இருந்தாலும் கர்த்தரிடமே பேசி கொண்டு இருப்போம்

ஆனால் கர்த்தரை விட்டு விலகி போகும் எண்ணத்திற்கு, எதிராளிக்கு இடம் கொடாமல் இருப்போம்


நம் குடும்ப சூழ்நிலைகளில் கூட, மற்ற, அறியாத, புற ஜாதி மக்கள் மத்தியில் நம் பிள்ளைகளையோ, நம் பெற்றோர்

ளையோ, கணவரையோ மனைவியியோ விட்டு கொடுக்காமல், பேசி, வாதாடி கொண்டிருப்போம் அல்லவா

என்ன இருந்தாலும் அவர்கள் என் பிள்ளைகள், என் குடும்பம் என்ற எண்ணம். அவர்களுடைய மதிப்பை இழந்து போகாத படி நாம் பார்த்து கொள்வோ

அப்படியானால்,இந்த தேவன், நம் பரம தகப்பன், ஆத்தும மனாள ன், நம்மை உண்டாகிய பரம சிறுஷ்டிகர்... எவ்வளவு அதிகமாய் மற்ற புற ஜாதி மத்தியில் அவரை உயர்த்தி பிடிக்க வேண்டும்!!!!!

சங்கீதம் 76

யூதாவில் தேவன் அறியப்பட்டவர்; இஸ்ரவேலில் அவருடைய நாமம் பெரியது..என்று வாசிக்கிறோம்

எனவே நாம் அவரை கோபமூட்டி நமக்கு நாமே ஆக்கினை தீர்ப்பை அடையா திருப்போமா

நாம் ஆவியின் பெலன் பரி பூரணம் அடைய விளைவோம்

எலிசா எலியாவிடம், உமது ஆவியின் வரம் இரட்டிப்பாக கிடைக்க வேண்டும் என்று வேண்டி கொண்டான். 2.

அதுவே ஞானமுள்ள விண்ணப்பம்

கர்த்தர் அவன் கேட்டு கொண்டது போலவே ஆசீர்வதித்தார்

எலியாவிற்கு பிறகு எலிசா கார்த்தருடைய வார்த்தைகளை அறிவித்து வந்தான்.3:1

வாசிக்கிறோம்

கார்த்தருக்கு பிரியமானது இன்னது என்று ஆராய்ந்து பார்த்து, அவருக்கே பிரியமுண்டாக வாழ்வோமாக!!


-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x

Mrs.Merin Gnanar

🎯தலைப்பு

🎈எலியாவின் சால்வையும் எலிசாவும்

2 இராஜா 2


🎯தியானம்

🎈எலிசா யார்

🔸எலிசா = கடவுள் இரட்சிப்பாய் இருக்கிறார்

🔸ஊர் - ஆபேல் மேகொலா (1 இராஜா 19:16

🔸அப்பா - சாப்பாத்

🔸மிகுந்த ஆஸ்தி உள்ளவன்

🔸அக்கால இஸ்ரேலரில் , தகப்பனின் விவசாயத்தை, பிள்ளைகள் வேலை செய்து கொண்டே கவனிப்ப

🔸அதே போல், எலிசாவும்

தன் பண்ணையாட்கள் 11 பேரை முன்னால் ஏர் ஓட்ட விட்டு

🔸தான் 12வது ஏரை ஓட்டினான்.(1 இரா 19:1

🎈அப்படியானால், பொறுப்பான மகன்

🎈மேலும் பாசமான மக

(எலியாவை பின்பற்றும் முன் தன் தாயையும் தகப்பனையும் முத்தமிட்டான்.) 1 இராஜா 19:20

🎯எலியாவின் சால்வை

🎈இது எலிசாவிற்கு 2 முறை கிடைத்த

🎯முதல் முறை

🔸எலிசா ஏர் ஓட்டும் போது

எலியா ,எலிசா இருக்கும் இடம் வரை சென்று, (எதுவும் சொல்லாமல்) அவன் மேல் சால்வையை போட்டார்

🔸அதன் பின் எலியாவை பின்பற்றி அவருக்கு ஊழியம் செய்தார். (1 இராஜா 19:

🔸எலியாவின் கைகளுக்கு தண்ணீர் வார்த்தார்.

2 இராஜா 3:1

அப்படியென்றால்

🔸அவன் எலியாவின் பணிவிடைக்காரராக இருந்தார்

🎯2வது முறை

🔸யோர்தானுக்கு அக்கறையில் எலியா சுழல் காற்றில் எடுத்துக்கொள்ளப்படு

🔸பெத்தேல், எரிகோ தீர்க்கதரிசிகளின் மாணவர்களைப் போல தூரமாய் நின்று பார்க்காமல்

🔸அடம் பிடித்து எலியாவோடு இறுதிவரை கூடவே இருந்ததால் சால்வையை பெற்றுக் கொண்டார்

🔸இதுவரை எலியாவுடன் இருந்து அவரது ஊழியத்தை பார்த்து கொண்டிருந்தவ

🔸இப்போது, தேவனுக்காக ஊழியம் செய்யத் தொடங்கினார்

🎯சிந்தனைக்கு

🎈எலிசா, எலியாவை விடாமல் பற்றியது போ

நாமும் தேவனை விடாமல் பற்றிக் கொள்வோம்

🎈வேதவசனங்க

தூரமாய் நின்று தரிசித்த தீர்க்கதரிசிகளைப் போலில்லாமல்

எலியாவைப் போல் ஆழமாய் ஆராய்வோம்

🎈தேவ ஆசீர்வாதங்களை பெற்றுக் கொள்வோம்
ஆமென்



-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x

*ஷாலோம்*

ஆசீர்வதிக்கப்பட்ட மக்களுக்கு ஆசீர்வாதமாக இருப்பதற்காக ஆசீர்வதிக்கப்பட்டேன் 👨‍👩‍👦‍👦

🙋‍♂️🙋‍♀️ நாம் *2 இராஜாக்கள் 2* இல் இருக்கிறோ


*எலிசா எலியாவின் ஆசீர்வாதத்தைப் பெறுகிறா

📝 எலியாவும் எலிசாவும் *கில்கால் > பெத்தேல் > எரிகோ > யோர்தான்* ஆகிய இடங்களை கடந்து சென்ற பிறகு, 50 தீர்க்கதரிசிகளின் புத்திரருக்கு முன்பாக (வ. 1-12) *"எலியா சுழல்காற்றிலே பரலோகத்திற்கு எடுத்துக்கொள்ளப்பட்டார் "* என்ற சொற்றொடர் தொடங்குகிறது

*எலியா தனது இறுதிப் பயணத்தில் புறப்பட்டுச் செல்லும்போது, எலிசாவை விட்டுச்செல்ல ஏன் பிடிவாதமாகப் இருக்கிறான்* (வ. 2,4,6

✅ எலிசா தீர்க்கதரிசியாக பதவியேற்ற நேரத்தில் என்ன நடந்தது என்பதுடன் தொடர்புடைய பதிலாக இருக்கலாம்: எலியா எலிசாவின் மேல் தனது சால்வையை போட்டு அவனைத் தேர்தெடுத்தான். அப்பொழுது அவன் மாடுகளை விட்டு, *எலியாவின் பிறகே ஓடினான்.* (1இராஜாக்கள் 19:19-20

✅ எலியா இப்போது அந்த இலவச தேர்வை எலிசாவுக்கு நீட்டுகிறார். மூன்று முறை - மீண்டும் மீண்டும் எலியாவைப் பின்பற்றுவதை நிறுத்துவதற்கான அறிவுறுத்தல்கள் *எலிசாவின் எஜமானருடன் இறுதிவரை தங்குவதற்கான உறுதியை சோதிக்கிறது

🙋‍♂️ எலியா எலிசாவிடம் , *".. நான் உன்னை விட்டு எடுத்துக் கொள்ளப்படுமுன்னே நான் உனக்கு செய்ய வேண்டியது என்ன "?* என்று கேட்டான்

🗣️ எலிசா பதிலளித்தார், *"உம்மிடத்திலுள்ள ஆவியின் வரம் எனக்கு இரட்டிப்பாய்க் கிடைக்கும்படி வேண்டுகிறேன்.

🙋‍♂️ எலியா ஒரு நிபந்தனையை முன்வைத்தார்: *".. உன்னைவிட்டு நான் எடுத்துக் கொள்ளப்படுகையில் என்னை நீ கண்டால் உனக்குக் கிடைக்கும், இல்லாவிட்டால் கிடையாது என்றான். "*

🙋‍♂️🙋‍♀️ இது ஒரு நியாயமான சோதனை மற்றும் எலிசா தேர்ச்சி பெற்றார். *சுழற்காற்று அல்லது அக்கினி* எலிசாவின் நிலையான பார்வையை உடைக்கவில்லை: *எலிசா அவனைக் காணும் வரை பார்த்தான்

🙋‍♂️🙋‍♀️ எலிசா வேண்டிக்கொண்ட வரத்தைப் பெற்றாரா என்பது *சோதனை செய்யப்பட வேண்டும்

*இப்போது அவர் தனியாக திரும்பவும் யோர்தானைக் கடக்க வேண்டும்* : யோர்தான் > எரிகோ > பெத்தேல் > கில்கால்

🗣️ எலிசா சோதனையை *"எலியாவின் தேவனாகிய கர்த்தர் எங்கே "* என்ற சொற்றொடருடன் தொடங்குகிறார்

📍அவன் எலியாவின் சால்வையை எடுத்து அதன் மூலம் தண்ணீரை அடித்தான்.. *தண்ணீர் பிரிந்தது

📍இந்த அத்தியாயத்தில் யோர்தான் - பிரிந்து செல்லும் அற்புதங்கள் மற்றொரு தீர்க்கதரிசியின் வழிமுறையுரிமையின் கதையான *மோசே மற்றும் யோசுவா* பற்றிய நினைவுகளை மீண்டும் கொண்டு வருகின்றன. மோசே செங்கடலைப் பிரித்தார்; யோர்தான் நதியை யோசுவா பிரித்தார்

📍 *எலியா மோசேயை அடையாளப்படுத்தினால், எலிசா தன்னை ஒரு புதிய யோசுவாவாக நிரூபித்தார்*


🙋‍♂️🙋‍♀️ எலிசா தனது ஆசீர்வாதங்களைக் காட்டினா

1️⃣ *யோர்தானில்* எலிசா தண்ணீரைப் பிரித்தார் (வ. 13-14

2️⃣ *எரிகோவில்* அவர் தண்ணீரைக் ஆரோக்கியமாக்கினார் மற்றும் தரிசு நிலத்தை பலனளிக்கச் செய்தார் (வ. 19-22

3️⃣ *பெத்தேலில்* 42 பிள்ளைகள் தேவனின் தீர்க்கதரிசியை நிந்தித்ததால் கொல்லப்பட்டனர் (வ. 23-24

4️⃣ *கில்காலில்* அவர் பஞ்சத்தின் போதும் மேலும் 100 பசியுள்ள மனிதர்களுக்கும் உணவுகளை வழங்கினார், (வ. 42-44

📍 *50 ஆண்டுகளுக்கும் மேலாக, எலிசா உண்மையாக ஊழியம் செய்தார்

💕 அன்பான திருச்சபையே , கிறிஸ்துவை ஏற்றுக்கொள்வது ஆரம்பம் ஆனால் அவரில் தொடர்வது அவரில் நிலைத்திருப்பது ( *வேரூன்றி கட்டப்படுவது*) நமது உறுதிப்பாட்டின் அள

🙋‍♂️🙋‍♀️ *எலியாவின் தேவன் உண்மையில் எலிசாவுடன் இருந்தார், அவர் இன்னும் நம்முடனும் இருக்கிறார்

தேவனுக்கே மகிமை

✍🏾 *மார்க் போஜே

அருணாச்சல பிரதேசம், இந்தியா 🇮🇳
தமிழாக்கம் ஜஸ்டஸ் ராஜேந்தி

-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x

*2 இராஜாக்கள்* 1-

2 இராஜாக்கள் 2:2:- "நான் உம்மை விடுகிறதில்லை என்று கர்த்தரின் ஜீவனையும், உம்முடைய ஜீவனையும் கொண்டு சொல்லுகிறேன்."-

தீர்க்கதரிசி எலியாவுக்கும் அவருடைய பக்தியுள்ள சீடரான எலிசாவுக்கும் இடையே உள்ள உறவின் மனதைத் தொடும் மற்றும் ஊக்கமளிக்கும் பதிவை இங்கே காணலாம்

எலியாவுக்கு முடிவு வந்துவிட்டது என்பதை அறிந்திருந்தார், எலிசா தனது எஜமானர் விரைவில் எடுத்துக்கொள்ளப் போகிறார் என்பதை அறிந்திருந்தார், எலிசா நித்திய வாழ்வுக்குக் கடக்கும்போது எலிசா கில்காலில் தங்க வேண்டும் என்று எலியா விரும்பினார், ஆனால் எலிசா மறுத்துவிட்டார். பின்னர் எலியா எலிசாவை தேவனின் வீடாகிய பெத்தேலில் தங்கும்படி கேட்கிறார், எலிசா மீண்டும் மறுத்துவிட்டார். பின்னர் எலியா எலிசாவை எரிகோவில் தங்கும்படி கேட்டுக்கொள்கிறார், அவர் மட்டும் சுவரைக் கடந்து நித்தியத்திற்கு போகிறார், எலிசா மூன்றாவது முறையாக மறுக்கிறார்

மேற்கூறிய வசனத்தில், அவர் இந்த வாக்குறுதியை அளிக்கும் போது, ​​எலியா எலிசாவுடனான தனது பிணைப்பு மனித பாசத்தை அடிப்படையாகக் கொண்டது அல்ல, மாறாக தேவனின் பிரசன்னம் மற்றும் இறையாண்மையின் அசைக்க முடியாத அடித்தளத்தை அடிப்படையாகக் கொண்டது என்று அறிவித்தார்

*கிறிஸ்துவின் சரீரத்திற்குள் வழிகாட்டுதல் மற்றும் சீஷத்துவத்தின் முக்கியத்துவத்தை நாம் இங்கு கற்றுக்கொள்ள வேண்டும்

முதிர்ந்த விசுவாசிகளாக, *இளைய விசுவாசிகளை அவர்களின் விசுவாசப் பயணத்தில் வழிநடத்துவதும் ஊக்குவிப்பதும் நமது பொறுப்பு. எலிசா எலியாவை மனத்தாழ்மையுடன் பின்பற்றியது போலவே, நாமும் தேவனுடைய உண்மைத்தன்மையை அதிகமாக அனுபவித்தவர்களின் ஞானத்தைக் கேட்கவும், கற்றுக்கொள்ளவும், பிரயோகிக்கவும் தயாராக இருக்க வேண்டும்

*நம்மை விட்டு விலகாமலும் கைவிடாதவருமான கிறிஸ்துவுடன் நமது உறவுகளை கட்டியெழுப்ப முயற்சிப்போம்

*நம்பிக்கைப் பயணத்தில் அவருடன் நடப்போம், நம்மைச் சுற்றியுள்ளவர்களுக்கு நம்பிக்கையும் ஊக்கமும் அளிப்பவர்களாக இருப்போம்.

ஜூலி மேத்யூ இசட்

தமிழாக்கம் ஜஸ்டஸ் ராஜேந்திர


-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x



2 இராஜாக்கள் 2:9

*"உம்மிடத்திலுள்ள ஆவியின் வரம் எனக்கு இரட்டிப்பாய்க் கிடைக்கும்படி வேண்டுகிறேன்" என்று எலிசா பதிலளித்தார்.

எலியா தீர்க்கதரிசி எலிசாவை தனக்குப் பின் வாரிசாக அபிஷேகம் செய்தார். எலியா பரலோகத்திற்கு எடுத்துச் செல்லப்படும் நேரம் வந்தது. இளைய தீர்க்கதரிசி, எலிசா எலியாவிடம் மிகவும் விசுவாசமாக இருந்தார், அவரை விட்டு விலக மறுத்தார். எலியா எலிசாவின் விசுவாசத்தைக் கண்டு நெகிழ்ந்து, அவனுக்காக என்ன செய்ய முடியும் என்று கேட்டான். எலியாவின் மூலம் தேவனுடைய ஆவி செயல்படுவதை எலிசா கண்டு, அந்த வலிமைமிக்க ஆவியின் இருமடங்கு பங்கைக் கேட்டார்

எலிசா தனது வாழ்க்கையில் தேவனுடைய நோக்கத்தை நிறைவேற்ற, எலியாவின் வலிமைமிக்க ஆவியை விரும்பினார், அதைத் தவிர வேறு எதையும் விரும்ப வில்லை. எலியாவின் வலிமைமிக்க ஆவி எலிசா மீது தங்கியிருந்தது, அவர் எலியாவை விட இரண்டு மடங்கு அற்புதங்களைச் செய்தார்

எலிசா உலக இன்பங்களைத் துறந்து, தேவனுடைய மனிதனைப் பின்தொடர்ந்து, அவருடைய சால்வையைப் பெற்று, அவருடைய ஆவியின் இரட்டிப்பானதைப் பெற்றார். ஒப்பீட்டளவில், இயேசு கிறிஸ்துவின் சீடர்கள் அவரைப் பின்பற்றியபோது அவருடைய ஆவியைப் பெற்றனர்

இயேசு கிறிஸ்துவைப் பின்பற்றி, அவருடைய சால்வையைப் சுதந்தரித்து, வலிமைமிக்க ஆவி மற்றும் இரட்டிப்பான ஆசீர்வாதத்தைப் பெறுவோம்

*லிசி ஜான், இந்தியா - 2010R


தமிழாக்கம் ஜஸ்டஸ் ராஜேந்திரன்*....**ன்🌷*.**..*... 39 ரன்*🙏*.வு.*))))ர்..*.. *.*.."*.*.)) ?.ர்*ம்🙏.🙏..,ளை,.ல்,.ர்.,வதை :.,1 21)., :து.:,ன்,9),ர்.). ❓ :3,.:.9iaj!.7....9.க..:1!!ம்.?க...4:4.......ம்.?.2:8....11ள்...ர்...* 💟ன்33பைசன் ..து.*.ர்.*..ர்.*...ர்.*..து.*..ய .டு*. 🥋

Tags

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.