=====================
1 KINGS : 21 - 22 Bible Study in Tamil & English
===================
🌈 *When you marry a child of the devil, your father-in-law sees to it that you have trouble.*
⚠️I Ki.22:1-2-What has happened that would cause a good king like Jehoshaphat to make an alliance with a king as wicked as Ahab? Why would he fraternize with his natural enemy? It’s an abnormal alliance, an unnatural confederacy. *At this point it seems strange, but we will find out later that Jehoram, the son of Jehoshaphat, had married Athaliah, the daughter of Ahab and Jezebel. This was a case of the “sons of God marrying the daughters of men”; that is, a boy with a godly heritage married a girl with a very wicked one. And the wicked influence prevailed.* *When the believer and the unbeliever get married, we can always be sure that the believer is going to have trouble. When you marry a child of the devil, your father-in-law sees to it that you have trouble.*
❓I Ki.22:14-Micaiah’s answer was not only dramatic, it was humorous. *He said, “Whatever the Lord tells me to say, that is what I am going to say. I will tell it like it is.”* Then Micaiah came in and sized up the situation. He saw the two kings on their thrones and all of the false prophets of Baal running around the room. They were all saying nice things to Ahab. They had all read the book, How to Win Friends and Influence People. Micaiah had not read that book. Neither had he read The Power of Positive Thinking. *In fact, he was pretty negative. There is a lot of power in negative thinking. We need more of it today.*
📖I Ki.22:39-40- *There is no remaining record of the ivory house or the cities Ahab built. What does remain is the account of his life here in 1 Kings that shows him to be a wicked king who God nonetheless pursued.*
💪🏼I Ki.22:41-45- *The antithesis of Ahab, Jehoshaphat is one of the greatest kings in Judah’s history, as seen in 2 Chronicles.*
Jaya Pradeep-Kodaikanal.
-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x
1 இராஜாக்கள் 21 -22*
*பாவத்திற்கான விளைவுகள்* *உண்டு*…
இஸ்ரவேலின் சரித்திரத்திலே..
ஆகாபைப் போல துன்மார்க்கமான ராஜா எழும்பினதில்லை..
ஆகாப் இராஜாவால் விலைக்கு வாங்கமுடியாத நாபோத்தின் திராட்சத் தோட்டத்தை..
அவன் மனைவி..யேசபேல் வஞ்சனையால்.. அவனுக்கு வாங்கித் தந்தாள்..
( 1 இரா.21 அதி.)
ஆகாப், தன் மனைவியாகிய யேசபேல் தூண்டிவிட்டபடியே..
கர்த்தரின் பார்வைக்குப் பொல்லாப்புச் செய்ய தன்னை
விற்றுப்போட்டான் என்று வேதம் அவனைக் குறித்துச் சொல்கிறது..
( 1 இரா. 21 : 25 )
ஏதேன் தோட்டத்திலும்....
ஆதாம் தன் மனைவியின்
வார்த்தைக்குச் செவிகொடுத்தான்..
தேவனுடைய கட்டளையை
மீறினான்..
அதினால் ..பாவமும் ,மரணமும் இந்த உலகிலே பிரவேசித்தது..(ஆதி.3 :17 )
*கர்த்தர், குடும்பத்தைக் கட்டும்* *பணியை*..
*பெண்கள் கரத்தில்தான்*
*கொடுத்திருக்கிறார்*..
*தேவபக்தியுடன்*..
*தேவஞானத்தோடு*..
*பொறுமை ..தாழ்மையுடன்*
*பெண்கள் குடும்பத்தைக்* *கட்டவேண்டும்*..(நீதி.14 : 1 )
*இன்று அநேக குடும்பங்கள்*..
*பெண்களின் புத்தியற்ற* *செயல்களினால்* *உடைந்து போவதை நாம்* *பார்க்கிறோம்*..
யேசபேல்..மாய்மாலமான உபவாசத்தைப் பிரசித்தப்படுத்தி..நாபோத்தைக்
கொலை செய்யும்படி..ஒரு நிருபத்தை எழுதினாள்..
தாவீதும்.. போர்முகத்திலே..
உரியாவைக் கொலை செய்யும்படி.. ஒரு நிருபம்
எழுதினதை இது நமக்கு நினைவுபடுத்துகிறது..
( 2 சாமு.11 :14,15 )
*கர்த்தர் கிருபையாக நமக்குக்* *கொடுத்திருக்கும் அதிகாரங்களை*..
*நம்முடைய சுயநலனுக்காக*..
*நாம் பயன்படுத்தக்கூடாது*..
*மற்றவர்களுக்காக.. குறிப்பாக*
*ஏழைகள் ,திக்கற்றவர்கள்*..
*ஒடுக்கப்பட்டவர்களுக்காக*
*அதை பயன்படுத்தவேண்டும்*..
*அதன் மூலம் தேவனுக்கு*
*மகிமை உண்டாகவேண்டும்*..
ஆகாப் ,தேவ பயமற்ற.. ஒரு ராஜா..தனக்குள்ளவைகளில்
திருப்தியற்றவன்..
அதினால் நாபோத்தின் திராட்சத் தோட்டத்தை இச்சித்தான்..
கொலை செய்தான் ..
நியாயப்பிரமாணத்தை
மீறினான்..
நாபோத்.. ஒரு சாதாரண மனிதன் ..ஒருவேளை அவன் ஏழையாக இருந்திருக்கக் கூடும்..
ஆனால் தேவ பயமுள்ளவன்..
பணத்திற்காக.. தேசத்தின் அரசன் கேட்டபோதும்..
பிதாக்களின் சுதந்தரத்தைக் கொடுக்க விரும்பாதவன்..
நியாயப்பிரமாணத்தின்படி
நடந்தவன்..
*மனிதர்களாகிய நமக்கு, ஒரு* *பொருளின்மீது ஆசை வருவது* *தவறல்ல*..
*ஆனால் ,அது இச்சையாக* *மாறக்கூடாது..அந்த இச்சைப்* *பாவத்தைப் பிறப்பிக்கும்*..
*பின்னர் அது மரணத்தைப்* *பிறப்பிக்கும்*..
( யாக். 1 : 14,15 )
எலியா..ஆகாபைச் சந்தித்து..கர்த்தருடைய நியாயத்தீர்ப்பைக் கூறினான்..
அந்த நியாயத்தீர்ப்பின் கடுமையை உணர்ந்த ஆகாப்..
மனந்திரும்பினான்..ஆனால்
அது மெய்யான மனந்திரும்புதல்
அல்ல..
தேவன் இரக்கமுள்ளவர் …
கிருபை உள்ளவர் …
ஆனால் அவர் நீதியுள்ளவர் …
மனிதன் மனந்திரும்பும்போது அவன் பாவங்களை மன்னிக்கிறார்.
ஆனால், மனிதன் தன் பாவத்திற்கான விளைவுகளை
ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டும்.
அங்கே ஆகாபின் வம்சம் அழிந்துபோனது..
எல்லாரும் கொடுமையான ..
அகால மரணம் அடைந்தார்கள்.
யேசபேலின் கணக்கும் முடிக்கப்பட்டது..
அன்று ஆபிரகாம்.. சாராள் செய்த தவறு …
ஆகார் மூலமாக இஸ்மவேல் பிறந்தான் …
ஆகாரையும், இஸ்மவேலையும்.. ஆபிரகாம் தன் வாழ்விலிருந்து அகற்றிவிட்டான்.
ஆனால் 4000 ஆண்டுகளுக்குப் பிறகும் ..அதன் விளைவுகளை.. இன்றும், இந்த உலகம் அனுபவித்துக் கொண்டிருப்பதை..நாம் பார்க்கிறோம்..
( ஆதி.16:12)
*பிரியமானவர்களே*..
*பாவமும் அக்கிரமமும் பெருகிக்*
*கொண்டிருக்கும் இந்த* *உலகத்திலே.. பாவத்திலிருந்து*
*விலகி வாழுவதென்பது.. மிகப்*
*பெரிய சவாலே*..
*கர்த்தருடன் நாம் சரியான*
*உறவிலிருக்கும் போது*..
*அவருடைய வார்த்தைகளை*
*நம் இருதயத்தில் வைத்து*
*வைக்கும்போது*..
*பரிசுத்த ஆவியானவர் நம்மை* *எச்சரிப்பார்*..
*நம்மைக் கண்டித்து*
*உணர்த்துவார்*.. *நீதியான* *பாதையில் நித்தமும் நம்மை* *நடத்துவார்*..
*ஒவ்வொரு நாளும்* *கர்த்தருடைய* *கிருபைக்காகக் கெஞ்சுவோம்*..
*நம் சரீரங்களை ஜீவபலியாக*
*அவருக்கு அர்ப்பணிப்போம்*..
*ஆமென்*.🙏
மாலா டேவிட்
-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x
1 Kings 21,22
*WHAT A GOD WE SERVE*
*God who relents when we humble ourselves before Him* ‼️
💥 “See how Ahab has humbled himself before Me? Because he has humbled himself before Me, I will not bring the calamity in his days. In the days of his son I will bring the calamity on his house.” (1 Kings 21:29)
💥 God saw their works, that they turned from their evil way; and God relented from the disaster that He had said He would bring upon them, and He did not do it.(Jonah 3:10)
*If the Lord relents when Ahab humbles himself before Him, how much more when His children purchased by the blood of Jesus Christ humble themselves before the Lord* ⁉️
🙏 🙏 If My people who are called by My name will humble themselves, and pray and seek My face, and turn from their wicked ways, then I will hear from heaven, and will forgive their sin and heal their land.(2 Chro 7:14)
*Humility touches the heart ❤️ of our Lord*
Usha
-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x
⬇️ *ஆகாப் எனக்கு முன்பாக தன்னைத் தாழ்த்தினான்* ⬇️
❇️ *“ஆகாப் எனக்கு முன்பாகத் தன்னைத் தாழ்த்தினதைக் கண்டாயா? அவன் எனக்கு முன்பாகத் தன்னைத் தாழ்த்துகிறபடியினால், நான் அவன் நாட்களில் அந்தப் பொல்லப்பை வரப்பண்ணாமல், அவன் குமாரன் நாட்களில் அதை அவன் வீட்டின்மேல் வரப்பண்ணுவேன் என்றார்.”* (1 இராஜாக்கள் 21:29).
💥 நாபோத்தின் திராட்சைத் தோட்டத்தை ஆகாப் கைப்பற்றுவதற்காக யேசபேல் நாபோத்தை தந்திரமாக கொன்றாள். ஆகாப் மீது தீர்ப்பு வழங்க தேவன் எலியாவை அனுப்பினார். ஆகாப் தேவனுடைய வார்த்தைகளைக் கேட்டபோது, தன் வஸ்திரங்களைக் கிழித்து, தன் சரீரத்தின்மேல் இரட்டைப்போர்த்துக்கொண்டு, உபவாசம்பண்ணி, இரட்டிலே படுத்துத் தாழ்மையாய் நடந்துகொண்டான். அவன் தேவனுக்கு முன்பாகத் தன்னைத் தாழ்த்தியபடியினால், அவன் நாட்களில் அந்தப் பொல்லப்பை வரப்பண்ணாமல், அவன் குமாரன் நாட்களில் அதை வரப்பண்ண வேண்டுமென்று தேவன் முடிவு செய்தார். ஆகாபின் தாழ்மை வெளிப்புறமாகவும் மேலோட்டமாகவும் மட்டுமே இருந்தபோதும் *இரக்கமுள்ள தேவன் ஆகாப் தன்னை தாழ்த்திய செயலை அங்கீகரித்தார்.* இது ஜெபம் மற்றும் பணிவான மனந்திரும்புதலின் வல்லமையைக் காட்டுகிறது. *மனந்திரும்பும் இருதயம் எப்போதும் தேவனிடமிருந்து இரக்கத்தைப் பெறுகிறது.*
💥 சங்கீதக்காரன் கூறுகிறான்: *"சிறுமைப்பட்டவர்களுடைய வேண்டுதலைக் கேட்டிருக்கிறீர்."* (சங்கீதம் 10:17). தேவன் ஏற்கனவே தனது ஜெபத்தைக் கேட்டிருக்கிறார் என்று சங்கீதக்காரன் மனத்தாழ்மையுடன்கூடிய உறுதியுடன் அறிவிக்கிறான். தேவன் தனது ஜெபத்தைக்கேட்பார் என்பதில் உறுதியாக இருக்கிறான். தங்கள் வாழ்க்கையில் தேவனுடைய சித்தத்திற்கு ஒப்புக்கொடுத்துத் தங்களைத் தாழ்த்துகிறவர்களின் ஜெபத்திற்கு தேவன் நிச்சயம் பதிலளிப்பிப்பார் என்பதில் சந்தேகமில்லை.
💥 *"கர்த்தருக்கு முன்பாகத் தாழ்மைப்படுங்கள், அப்பொழுது அவர் உங்களை உயர்த்துவார்."* (யாக்கோபு 4:10). நாம் ஆவியில் எளிமையுள்ளவர்களாய் சுயசித்தத்தை விட்டுவிட்டவர்களாய் ஜீவிக்க ஒப்புக்கொடுக்க வேண்டும். தேவனுடைய வல்லமையான கரத்தின்கீழ் நம்மைத் தாழ்த்தினால், அவர் தக்க சமயத்தில் நம்மை உயர்த்துவார்.
💥 *"பெருமையுள்ளவர்களுக்குத் தேவன் எதிர்த்து நிற்கிறார், தாழ்மையுள்ளவர்களுக்கோ கிருபை அளிக்கிறார்."* (1 பேதுரு 5:5). கர்த்தர் ஆணவமுள்ள மனிஷர்களையும், சுயத்தை முக்கியப்படுத்துகிறவர்களையும் எதிர்க்கிறார்; ஆனால் அவர் சாந்தகுணமுள்ளவர்களுக்கும், தாழ்மையான இருதயமுள்ளவர்களுக்கும் அவருடைய ஏராளமான கிருபைகளை அளிக்கிறார்.
💥 தாழ்மையுள்ளவர்களுக்கு சிறந்த எடுத்துக்காட்டாய் வேதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளவர்களில் ஒருவர் மோசே. அவனுடன் தேவன் முகமுகமாகப் பேசினார். தேவன் மோசேயைப் பற்றி அளிக்கும் சாட்சி: *"மோசேயானவன் பூமியிலுள்ள சகல மனிதரிலும் மிகுந்த சாந்தகுணமுள்ளவனாயிருந்தான்."* (எண்ணாகமம் 12:3). எனவே, தேவனால் மிகவும் வல்லமையாய் பயன்படுத்தப்படும் பாக்கியம் அவனுக்கு கிடைத்தது.
💥 தாழ்மையுள்ளவர்களுக்கு சிறந்த எடுத்துக்காட்டான மற்றொருவர் நம்முடைய கர்த்தராகிய இயேசு கிறிஸ்து. வேதாகமம் கூறுகிறது: *"அவர் மனுஷரூபமாய்க் காணப்பட்டு, மரணபரியந்தம், அதாவது சிலுவையின் மரணபரியந்தமும் கீழ்ப்படிந்தவராகி, தம்மைத்தாமே தாழ்த்தினார்."* (பிலிப்பியர் 2:8). இயேசு ஒரு பணிவான ஊழியராக மனித உருவில் பூமிக்கு வந்தார். அவருடைய பிறப்பிலும் இறப்பிலும் மிகுந்த தாழ்மை வெளிப்பட்டது. பாவிகளுக்கான பலியாக, சிலுவையில் அவமானகரமான மரணத்திற்குத் தம்மைத் தாழ்த்தினார்.
💥 அவரிடம் சாந்தத்தையும் மனத்தாழ்மையையும் கற்றுக்கொள்ளும்படி இயேசு நம்மை அழைக்கிறார்: *“நான் சாந்தமும் மனத்தாழ்மையுமாயிருக்கிறேன்; என் நுகத்தை உங்கள்மேல் ஏற்றுக்கொண்டு, என்னிடத்தில் கற்றுக்கொள்ளுங்கள். அப்பொழுது, உங்கள் ஆத்துமாக்களுக்கு இளைப்பாறுதல் கிடைக்கும்.”* (மத்தேயு 11:29). இந்த பூமியில் அவரது முழு வாழ்க்கையும் முழுக்க முழுக்க பிதாவாகிய தேவனையே சார்ந்திருந்தது. அதுபோலவே, நாம் அவருடைய நுகத்தை நம்மீது ஏற்று, தொடர்ந்து அவரைச் சார்ந்து வாழக் கற்றுக்கொள்ள வேண்டும்.
🔹 *நம்முடைய நுகத்தை நம்மேல் ஏற்றுக்கொண்டு, சாந்தத்தையும் மனத்தாழ்மையையும் இயேசுவிடமிருந்து கற்றுக்கொள்கிறோமா?*
✅ நாம் கற்றுக் கொள்ளும் *பாடங்கள்*:
1️⃣ *மனந்திரும்பும் இருதயம் எப்போதும் தேவனிடமிருந்து இரக்கத்தைப் பெறுகிறது.*
2️⃣ *தங்கள் வாழ்க்கையில் தேவனுடைய சித்தத்திற்கு ஒப்புக்கொடுத்துத் தங்களைத் தாழ்த்துகிறவர்களின் ஜெபத்திற்கு தேவன் நிச்சயம் பதிலளிப்பிப்பார் என்பதில் சந்தேகமில்லை.*
3️⃣ *தேவனுடைய வல்லமையான கரத்தின்கீழ் நம்மைத் தாழ்த்தினால், அவர் தக்க சமயத்தில் நம்மை உயர்த்துவார்.*
4️⃣ *பெருமையுள்ளவர்களுக்குத் தேவன் எதிர்த்து நிற்கிறார், தாழ்மையுள்ளவர்களுக்கோ கிருபை அளிக்கிறார்.*
5️⃣ *நம்முடைய கர்த்தராகிய இயேசுவிடமிருந்து நாம் சாந்தத்தையும் மனத்தாழ்மையையும் கற்றுக்கொள்ள வேண்டும்.*
Dr. எஸ். செல்வன்
சென்னை
-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x
பிதாக்களின் சுதந்திரத்தை உமக்கு கொடேன்*
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
1 இ ராஜாக்கள் 21 : 1 -4.
1. ஆகாப் ராஜாவின் அரண்மனைக்கு அருகில் இருந்த நாபோத்தின் திராட்சை தோட்டத்தை ஆகாப் ராஜா தனக்கு வேண்டும் என கேட்கிறான். ஏன் கேட்கிறான்?
1.அவன் வீட்டிற்கு அடுத்திருப்பதால்.
2.திராட்சை தோட்டத்தை, கீரை தோட்டமாக மாற்ற.
இப்படி நாம் பிறருடைய கனிதரும் திராட்சை தோட்டத்தை இச்சிக்கிறோமா? *பிறனுக்குரிய யாதொன்றையும் இச்சியாதிருப்பாயாக* என்ற கற்பனையை கைக்கொள்ள எச்சரிக்கையாக இருப்போமாக.
மட்டுமல்ல, ஆகாப் திராட்சை தோட்டத்தை கீரை தோட்டமாக மாற்ற தீர்மானித்தான். ஆம் இன்று கர்த்தர் கனி கொடுக்கும் திராட்சை தோட்ட மாக நம்மை உண்டாக்கியிருக்கிறார். ஆனால் *பிசாசோ கனியற்ற கீரைகொல்லையாக நம்மை மாற்ற முயற்சிக்கிறான்*. ஆகவே அவனுடைய திட்டங்களுக்கு உடன் படாத படி நம்மை காத்துக் கொள்ள வேண்டும்.
2. ஆகாப் இந்த திராட்சை தோட்டத்திற்காக நாபோத்திடம் பேரம் பேசுகிறான்.
1. *அதை பார்க்கிலும் நல்ல திராட்சை தோட்டத்தை தருவேன்* என்றான்.
2.*வேண்டுமானால் விலை கிரயமான பணத்தை தருவேன்* என்றான். இப்படித்தான் இந்த உலகத்தின் அதிபதியாகிய பிசாசும் நாம் கனி கொடாதபடி நம் தோட்டத்தை அழிக்க முயற்சி செய்வான்.
3. ஆனால் நாபோத்தோ *என் பிதாக்களின் சுதந்திரத்தை உமக்கு கொடேன்* என கூறி விட்டான். ராஜாவிடம் இவ்வளவு தைரியமாய் கூறிவிட்டான். ஆம், பிதாக்களின் சுதந்திரத்திற்கு நாபோத் இவ்வளவு முக்கியத்தை கொடுத்திருக்கிறான் என்பதை நாம் அறிந்து கொள்ள முடிகிறது அல்லவா? .
4. இன்று நம்முடைய பரம பிதா நமக்கு வைத்திருக்கிற சுதந்திரத்தை நாம் அறிந்திருக்கிறோமா? நம்மை நாமே ஆராய்வோமாக.
கர்த்தரே நம் சுதந்திரமாயிருக்கிறார். சங்கீதம் 16: 5
பிள்ளைகள் கர்த்தரால் வரும் சுதந்திரம். சங்கீதம் 127: 4.
நாம் பிள்ளைகளானால் சுதந்தரராமே! ரோமர் 8: 17.
அவருடைய வாக்குதத்தங்களுக்கு நாம் சுதந்தரர். எபிரேயர் 11:9.
பரலோக இராஜ்யத்திற்கு சுதந்தரர். நித்திய ஜீவனுக்கு சுதந்தரர். இரட்சிப்பிற்கு சுதந்தரர். ஆசீர்வாதத்திற்கு சுதந்தரர். அப்படியானால் நம்முடைய சுதந்தரத்தை பறிக்க பிசாசு ஆகாபை போல பலவிதங்களில் பிரயாசப்படுவான். நாமோ நம்முடைய சுதந்திரத்தை சத்துரு நம்மை விட்டு பறித்துவிடாதபடி எச்சரிக்கையோடு வாழ வேண்டும்.
நாபோத்தை போல, மரணமே நேர்ந்தாலும் நம் சுதந்திரத்தை பிசாசிற்கு விட்டு கொடுக்க கூடாது. ஆம், நம் பிதாக்களின் சுதந்திரத்தை பிசாசுக்கு விட்டு விடாதபடி எச்சரிக்கையாக வாழ கர்த்தர் தாமே நமக்கு உதவி செய்வாராக. ஆமென். அல்லேலூயா.
*Dr. Padmini Selvyn*
-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x
📗 *சிறிய குறிப்பு*📗
🍂 *ஒப்பீடு* 🍂
பல வழிகளில் ஆகாபை தாவீதுடன் ஒப்பிடலாம். தாவீது தன் அரண்மனையிலிருந்து பத்சேபாளைப் பார்த்தான். ஆகாப் தன் அரண்மனைக்கு அருகில் இருந்த நாபோத்தின் திராட்சைத் தோட்டத்தைப் பார்த்தான். *இருவரும் தங்களுக்குச் சொந்தமில்லாத ஒன்றுக்காக ஆசைப்பட்டார்கள்.*
தாவீதும் ஆகாபும் அப்பாவி நபரான *உரியாவையும் நாபோத்தையும்* கொல்லும்படி கடிதம் அனுப்பினார்கள். பிறகு அவர்கள் விரும்பியதை எடுத்துக் கொண்டனர். இரண்டு சந்தர்ப்பங்களிலும் கர்த்தர் ஒரு தீர்க்கதரிசியை அனுப்பினார். *தாவீதும் ஆகாபும் மனந்திரும்பி தங்களைத் தாழ்த்தினார்கள்.*
தாவீதும் ஆகாபும் தங்கள் பாவத்தின் விளைவுகளைச் சந்திக்க வேண்டியிருந்தது. தாவீது மீண்டும் பாவம் செய்யாமல் கவனமாக இருந்தான். *அது அவர் வாழ்வில் நடந்த அபூர்வ சம்பவம்.* அதேசமயம் பாவம் செய்வது ஆகாபின் வழக்கமாக இருந்தது.
தாவீது கர்த்தருடைய இரக்கத்திற்காகவும், சுத்திகரிப்புக்காக மன்றாடினான். மனந்திரும்பிய பின்னும் ஆகாப், *கர்த்தருடைய பார்வையில்* தீமை செய்யத் தன்னை விற்றுப் போட்டான். *பிறனுடையதை இச்சியாதிருப்பாயாக* என்ற கட்டளையைப் புறக்கணிப்பது எவ்வளவு ஆபத்தானது!
_திருமதி ஷீலா ஜெபக்குமார்_ ✍🏼
-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x
"யோசபாத் தர்ஷீசின் கப்பல்களை ஓபீருக்குப் பொன்னுக்காகப் போகச் செய்தார்; ஆனால் அவைகள் போய் சேரவில்லை; கப்பல்கள் எசியோன்-கேபேரில் உடைக்கப்பட்டன."
சாலொமோனின் கப்பல்கள் பாதுகாப்பாக திரும்பின.
ஆனால் யோசபாத்தின் கப்பல்கள் தங்க தேசத்தை அடையவே இல்லை.
கர்த்தர் ஒருவரைச் செழுமையாக வைக்கிறார் மற்றும் அதே வியாபாரத்தில் அதே இடத்தில் மற்றொருவரின் ஆசையை நிராசைப்படுத்துகிறார்.
.இன்று நமக்கு கிருபை இருக்கிறது.
நாம் மிகவும் வெற்றிகரமானவர்கள் மீது பொறாமை கொள்ள வேண்டாம், அல்லது நாம் சிறப்பாக முயற்சித்தவைகளை இழந்தது பற்றி முணுமுணுக்க வேண்டாம்.
யோசபாத்தைப் போலவே, நம்முடைய திட்டங்கள் ஏமாற்றத்தில் முடிவடைந்தாலும், கர்த்தரின் பார்வையில் நாம் மதிப்புமிக்கவர்களாக இருக்கிறோம்.
கர்த்தருடைய மக்கள் பாவிகளுடன் ஐக்கியம் கொள்வதால் மிகவும் துன்பப்படுகிறார்கள்.
☘️☘️☘️☘️☘️☘️☘️☘️☘️☘️
மேபி சுந்தர். சென்னை. இந்தியா. குழு எண்.2196.
-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x
How we humans use the laws to our advantage! How we interpret and bend the laws!! Chapter 21: 10...plant 2 scoundrels to falsely testify against Naboth that he cursed both God and the king and stone him to death!!!
And, who is doing this evil? Ahab was an evil king of Israel who didn't honour the Lord or Moses's teachings. Chapter 16:17 says he considered it trivial to sin! His wife Jezebel, a Sidonian king's daughter never bothered for the Lord or the laws.
But to their advantage, for personal gain, they take up an old law and falsely accuse and murder Naboth. There were the elders and nobles of the city to join hands in this evil plot. No one really cared for God. But used God's name to get their desires. How sad!
-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x
BRB (1 Kings 22) *We also see in this book the tremendous effect that a single prophet Elijah can have on a nation. God needs prophets today in the church. They alone can arrest the downward trend among the people of God.*
In Chapter 22, we read about the foolishness of Judah's king, Jehoshaphat. Ahab asked him to join him in a battle against king of Aram. Jehoshaphat agreed immediately and then decided to seek God's will about it, after agreeing (22:4,5).
Ahab immediately rounded up 400 false prophets who readily "prophesied" that the Lord would give them the victory (22:6). It is amazing to see so soon after God's fire fell, false prophets arising again in Israel!
It has been like that throughout the ages. False prophets and preachers have abounded everywhere in every generation to lead people astray.
But Jehoshaphat had enough discernment to recognise that none of these 400 were genuine prophets.
Ahab said that there was one more Prophet Micaiah-but Ahab hated him because Micaiah always Prophesied judgement against Ahab.
Micaiah was called, and he predicted the defeat of Israel's army. Ahab was so angry with him that he locked him up in prison.
Jehoshaphat foolishly still joined Ahab, even though God had spoken. He almost lost his life, because the enemy thought he was the king of Israel.
Ahab disguised himself to avoid being killed. But he could not escape God's judgement for a stray arrow that was fired came and killed him - and the dogs licked his blood, as God had said (21:19; 22:38).
This book began with David ruling a united Israel and ends with the nation divided into two, and in a backslidden condition - with a wicked Ahab ruling one part and a compromising Jehoshaphat ruling the other.
We also see in this book the tremendous effect that a single prophet Elijah can have on a nation. God needs prophets today in the church. They alone can arrest the downward trend among the people of God.
Posted by Rambabu
Thanks for using my website. Post your comments on this