ஓர் குட்டிக் கதை
===========
ஒற்றுமை
=============
ஒரு சமயம், மிகச்சிறந்த பேச்சாளர் ஒருவரின் உரையை கேட்க மக்கள் மிகுந்த ஆவலுடன் அவரின் அவைக்கு வருகை தந்துகொண்டிருந்தனர்.
அன்று அவ்வாறு வந்துகொண்டிருந்தவர்கள் அனைவருக்கும் ஒரு காற்றுப்பை கொடுக்கப்பட்டுக்கொண்டிருந்தது.
மக்களும் ஒன்றும் புரியாது சிரித்திக்கொண்டே ஆளுக்கொன்ராய் பெற்றுக்கொண்டு அவைக்குள் நுழைந்தனர்.
நேரம் நெருங்கியதும் அவை முழுவதும் கூட்டம் கூடியது, பேச்சை சுவாரசியமாக துவங்கினர் பேச்சாளர்.
பேச்சின் நடுவே, மக்களிடம் "காற்றுப்பை ஏன் கொடுக்கப்பட்டது?" என்று கேட்டார்.
மக்கள் புரியாது விழித்தனர்.
உடனே அனைவரின் கைகளில் இருக்கும் காற்றுப்பையை ஊதி காற்று நிறப்பி பின் அவர்களை பெயரை அதில் எழுத்தச்சொன்னர். அவ்வாரே எல்லோரும் செய்ய பின் அனைத்து காற்றுப்பைகளையும் ஒரு அறையில் போட்டு நிறப்பச்சொன்னர்.
சிரிப்பொலி சிதற மக்கள் ஆரவாரத்துடம் அவ்வாறே செய்தனர்.
...அமைதி நிலவ மீண்டும் சென்று தத்தம் காற்றுப்பைகளை கண்டெடுக்கச்சொன்னர். கூட்டம் கூட்டமாக மக்கள் தேடியும் ஒரு சிலரே தன் பெயர் கொண்ட காற்றுப்பையை எடுக்க முடிந்தது!
பேச்சாளர் பின் அனைவரையும் ஆளுக்கொன்று எடுத்து அப்பெயர் கொண்டவரிடம் ஒப்படைக்கச்சொன்னர்.
அனைவருக்கும் தத்தம் பெயர்கொண்ட காற்றுப்பை உடனே கிடைக்கப்பெற்றது!
பின் தன் பேச்சை துவங்கிவர் கூறினார்....
இது போல்தான் உங்கள் மகிழ்ச்சியும்...நீங்கள் உங்கள் மகிழ்ச்சியை தேடி பிடிக்க முடிவதை விட உங்களுக்கு மற்றவர்களால் எளிதில் கண்டு பிடித்து தரமுடியும்.
எனவே
ஒருவருக்கொருவர் உதவியாய் இருப்பதன் மூலம் வெற்றியை மிக எளிமையாய் பெற்று வாழ்வில் முன்னேறலாம்" என்று கூறி தன் உரையை தொடர்ந்தார்...
என் அன்புக்குாியவா்களே,
To Get Daily Story In What's App Contact +917904957814
ஒற்றுமையாய் வாழ்வதாலேயே நன்மையை எளிதில் பெற்றுக் கொள்ள முடியும். என்பதை இந்த நிகழ்ச்சியின் மூலம் அறிந்து கொள்கிறோம்.
பைபிள் சொல்கிறது.
சகோதரர் ஒருமித்து வாசம்பண்ணுகிறது எத்தனை நன்மையும் எத்தனை இன்பமுமானது?
அது ஆரோனுடைய சிரசின்மேல் ஊற்றப்பட்டு, அவனுடைய தாடியிலே வடிகிறதும், அவனுடைய அங்கிகளின்மேல் இறங்குகிறதுமான நல்ல தைலத்துக்கும், எர்மோன்மேலும், சீயோன் பர்வதங்கள்மேலும் இறங்கும் பனிக்கும் ஒப்பாயிருக்கிறது, அங்கே கர்த்தர் என்றென்றைக்கும் ஆசீர்வாதத்தையும் ஜீவனையும் கட்டளையிடுகிறார். (சங் 133:1 -3)
உங்கள் குடும்பத்திலுள்ள புருஷன், மனைவி, பிள்ளைகள், தகப்பன், தாய் ஆகியோருடனும், அக்கம் பக்கத்தினரோடும், உறவினரோடும்,
சபைமக்களோடும் நல்லுறவு வைத்துக் கொள்ளுங்கள்
அதனால் உங்களுக்கு
1. நன்மை (சங் 31: 19)
2. இன்பம் (துதி ஆராதனை) (சங். 147:1,35:3)
3. எண்ணெயின் அபிஷேகம்.. (சங். 92:10)
4. பனியாகிய வசனம்.. (உபா . 32:2)
5. ஆசீா்வாதம் (கலா. 3 :14)
6, ஜீவன் (2 தீமோ. 1:10)
ஆகியவைகள் உங்களிடத்தில் வந்து பெருகும். ஒற்றுமையாய், சமாதானமாயிருங்கள். விட்டுக் கொடுத்து அநுசரணையாய் இருங்கள். செய்த தவறுக்கு மன்னிப்புக் கேட்க தவறாதீா்கள். இயேசுவை நம் குணங்களாலே மட்டும் தான் வெளிப்படுத்த முடியும்.
நான்
உன்னோடிருந்து உன்னை ஆசீா்வதிப்பேன். என்று ஈசாக்குக்கு சொன்ன வார்த்தையை உங்களுக்கு நிறைவேற்றுவாா்.
நீங்கள் ஆசீா்வதிக்கப்பட்டவர்கள் !!!
ஓர் குட்டிக் கதை
ஏழைகளுக்குகொடு
வாழைப்பழம் விலை எவ்வளவுங்க,"
அந்த பெண் கேட்டாள்.
"ஒரு வாழைப்பழம் ஐந்து ரூபாய்ம்மா?"
என்றார் அக்கிழவர்.
"சரி, ஆறு வாழைப்பழங்கள் ₹25/- க்கு கொடுப்பீங்களா?" என கேட்டாள்.
"சரிம்மா, நீ கேட்ட விலைக்கே வாங்கிக்க. காலையிலிருந்து நீதான் போணி செய்கிறே.
கடவுள் உன்ன நல்லா வைக்கட்டும்," என்றார் அக்கிழவர்.
தான் கேட்ட விலைக்கு கிடைத்துவிட்டது என்ற சந்தோஷத்துடன் அப்பெண் வாழைப்பழங்களை வாங்கிக் கொண்டாள்.
பிறகு தன் அழகான காரில் தன் தோழியை அழைத்துக் கொண்டு ஒரு ஹோட்டலுக்கு சென்றாள்.
To Get Daily Story In What's App Contact +917904957814
அவர்கள் இருவரும் ஹோட்டலில் அமர்ந்து பேசிக் கொண்டே தாங்கள் விரும்பியது வாங்கி சாப்பிட்டனர்.
சாப்பிட்டது குறைவு, மீதம் விட்டது அதிகம்ا
பில் தொகை ₹1200/-, அவள் ₹1300/- ஐ ஹோட்டல் நிர்வாகியிடம் கொடுத்து மீதி சில்லறையை நீங்களே வைத்துக் கொள்ளுங்கள்," என்றாள்.
*என்_அன்புக்குாியவா்களே,*
ஹோட்டல் உரிமையாளருக்கு இது மிகச் சாதாரணம் விஷயம். ஆனால் வாழைப்பழம் விற்ற கிழவருக்கு வலி மிகுந்த விஷயம்ر
“இதில் உற்றுநோக்க வேண்டியது”
உதவி தேவைப்படும் ஏழைகளிடத்தில் ஏதேனும்
வாங்கும்போது நீங்கள் பலத்தை காட்டுகிறீா்கள் பணக்காரர்களிடமும், தேவைகளே இல்லாதவா்களிடமும் நீங்கள் தாராள குணத்தை காட்டுகிறீா்கள்.
நீங்கள் மாற வேண்டும்..நல்ல மாற்றத்தினை உருவாக்கவேண்டும்... .
பைபிள் சொல்கிறது..
*குணசாலியான ஸ்திரி...
சிறுமையானவர்களுக்குத் தன் கையைத் திறந்து, ஏழைகளுக்குத் தன் கரங்களை நீட்டுகிறாள். - நீதி. 31:20*
*ஏழையின் கூக்குரலுக்குத் தன் செவியை அடைத்துக்கொள்ளுகிறவன், தானும் சத்தமிட்டுக் கூப்பிடும்போது கேட்கப்படமாட்டான். - நீதி. 21:13*
*ஏழையாயிக்கிறான் என்று ஏழையைக் கொள்ளையிடாதே! சிறுமையானவனை நியாயஸ்தலத்தில் உபத்திரவப்படுத்தாதே.
கர்த்தர் அவர்களுக்காக வழக்காடி, அவர்களைக் கொள்ளையிடுகிறவர்களுடைய பிராணனைக் கொள்ளையிடுவார். - நீதி. 22:22,23*
*ஏழைகளை ஒடுக்குகிற தரித்திரன் ஆகாரம் விளையாதபடி வெள்ளமாய் அடித்துக்கொண்டுபோகிற மழையைப்போலிருக்கிறான். ஏழை ஜனங்களை ஆளும் துஷ்ட அதிகாரி கர்ச்சிக்கும் சிங்கத்திற்கும் அலைந்துதிரிகிற கரடிக்கும் ஒப்பாயிருக்கிறான்.*
*தரித்திரருக்குக் கொடுப்பவன் தாழ்ச்சியடை யான்: தன் கண்களை ஏழைக்கு விலக்குகிறவ னுக்கோ அநேக சாபங்கள் வரும்.- நீதி.28:3,15,27*
*ஏழைகளுடைய நியாயத்தை உண்மையாய் விசாரிக்கிற ராஜாவின் சிங்காசனம் என்றும் நிலைபெற்றிருக்கும். - நீதி. 29:14*
*ஏழைக்கு இரங்குகிறவன் கர்த்தருக்குக் கடன்கொடுக்கிறான்; அவன் கொடுத்ததை அவர் திரும்பக் கொடுப்பார். - நீதி. 19:17*
இப்படிப்பட்ட வசனங்கள் நமக்கு இருக்கிறபடியால் ஏழைகளுக்கு ஆதரவு கரம் நீட்டுவோம். நீங்கள் வசிக்கும் பகுதியில் உள்ள ஏழைகளை மனதில் கொண்டு அவர்களுக்கு மனமிரங்கி ஏதாவது உதவி செய்யுங்கள்.
அப்போது பரலோகத்திலும், இவ்வுலகத்திலும் மிகுந்த பலனை அடைவீா்கள். இயேசுவின் சிலுவை மரணத்தின் இரட்சிப்பு அவர்களுக்கு கிடைக்க சுவிஷேசம் சொல்லுங்கள்.அப்போது அவர்களையும் தேவன் ஐஸ்வா்யம் உள்ளவா்களாய் மாற்றுவாா்.
இப்படி ஒவ்வொருவரும் உலகத்தில் செய்தால் உலகத்திலுள்ள சாபமான தரித்திரம், வறுமை ஒழித்து விடலாம். மனிதனை மாற்றக் கூடியது இயேசுவின் சிலுவை மரணம் மட்டுமே.
பாவத்தின் விளைவு தான் வறுமை தரித்திரம் இது சாபம். இதை பூமியிலிருந்து ஒழிக்கவே தேவன் இயேசுவாக உலகத்திற்கு வந்தாா்.
நீங்கள் இரட்சிக்கப்பட்டு நீதிமானாய் நிலைத்திருந்தால் உலகத்திலுள்ள பாவம், சாபம் தரித்திரம், வியாதி ஆகிய அனைத்தையும் ஒழித்து விடலாம். ஏழைகளுக்காக ஜெபியுங்கள். வசனத்தை வாசித்து தியானித்து கா்த்தா் சித்தம் செய்யுங்கள். உலகத்கை இயேசுவை கொண்டு நீங்கள் மாற்றுவீர்கள்.
*நீங்கள்_ஆசீா்வதிக்கப்பட்டவா்கள் !!!
ஓர் குட்டிக் கதை
எதிர்பார்த்த முடிவு
=================
விஜயபுரியில் ரத்னாகரன் என்ற பணக்கார வியாபாரிக்கு மூன்று புதல்வர்கள் இருந்தனர். முதல் இரண்டு பிள்ளைகளும் திருமணம் செய்து கொண்டு தங்கள் தந்தையுடன் கூட இருந்து அவருடைய வியாபாரத்தில் உதவி செய்து வந்தனர். ஆனால் அவருடைய மூன்றாவது பிள்ளையான ராமுவிற்கு மட்டும் வியாபாரத்தில் நாட்டமேயில்லை. இயற்கையிலேயே மிகவும் தயாள குணம் படைத்த ராமு அவனை நாடி யார் எந்த உதவி கேட்டாலும் உடனே செய்து விடுவான். ராமுவின் போக்கு அவன் பெற்றோருக்குக் கவலையளித்தது.
ஒருநாள் ராமுவைப் பற்றி ரத்னாகரன் கவலையுடன் தன் நெருங்கிய நண்பரிடம் பேசிக் கொண்டிருக்கையில், அவருடைய நண்பர், “எனக்கு ராமுவைப் பற்றி நன்றகாத் தெரியும். மிகவும் தயாள குணம் படைத்தவன். என்னுடைய பெண் மனோரமா மிகவும் புத்திசாலி. அவளை ராமுவிற்குத் திருமணம் செய்து கொடுத்தால், அவள் அவனைத் திருத்தி விடுவாள்” என்றார். நண்பருடைய யோசனை சரியென்று தோன்றவே, ரத்னாகரன் அதற்கு சம்மதிக்க விரைவிலேயே ராமுவின் திருமணம் மனோரமாவுடன் இனிதே நடைபெற்றது.
ஒருநாள் மனோரமா ராமுவிடம், “உங்களை உதவி செய்ய வேண்டாம் என்று தடுக்கவில்லை. ஆனால் நீங்கள் செய்யும் உதவியினால் ஏதாவது பயன் இருக்கிறதா என்று நீங்கள் யாருக்கெல்லாம் தானம் கொடுத்தீர்களோ அவர்களிடம் சென்று ஆராய்ச்சி செய்யுங்கள். அவர்கள் உங்கள் உதவியினால் சரியானபடி பயன் அடைந்தார்கள் என்று தோன்றினால், நீங்கள் தானம் செய்து கொண்டேயிருங்கள். இல்லையேல் உங்கள் சுபாவத்தை மாற்றிக் கொள்ளுங்கள்” என்றாள்.
அதை ஒப்புக் கொண்ட ராமு, முதலில் சமீபத்தில் தான் பண உதவி செய்திருந்த சங்கரன் வீட்டிற்குச் சென்றான். அங்கு சங்கரன் கவலையுடன் உட்கார்ந்து இருப்பதைப் பார்த்தான். ராமுவைப் பார்த்து அவன், “நீ தந்த பணத்தில் விருந்து தயாரித்து உண்டதில், என் பிள்ளைக்கும், தந்தைக்கும் உடல் நலம் கெட்டு விட்டது. பணமெல்லாம் விருந்தில் கரைத்து விட்டோம். இப்போது மருத்துவருக்கு வேறு தண்டச் செலவு” என்றான்.
இதுபோல் இன்னும் சிலர் வீடுகளுக்குச் சென்றான். ஆனால் ஒருவர் கூட ராமு கொடுத்தப் பணத்தை உருப்படியாகப் பயன்படுத்தவில்லையென்று தெரிந்தது. ராமு ஏமாற்றத்துடன் வீடு திரும்பினான்.
தன் மனைவியிடம் தான் கண்டறிந்ததைப் பற்றி விளக்கிக் கூறிவிட்டு, “நீ சொன்னபடியே தான் நடந்திருக்கிறது. இனிமேலும், நான் மற்றவர்களுக்கு உதவி செய்வதையே விரும்புகிறேன். அது அவர்களுக்குப் பயன்படும்படி எந்த முறையில் உதவி செய்யலாம்?” என்று கேட்டான் ராமு. அதற்கு அவள், “மனிதர்களுக்கு மிக முக்கியமானது உடல் நலம்! மருத்துவத் தொழில் மூலம் மற்றவர்களுக்கு உதவி செய்யலாமே!” என்றாள்.
“மருத்துவத் தொழிலா? அதை நான் கற்றுக் கொள்ளவே பல ஆண்டுகள் பிடிக்குமே?” என்று கவலையுடன் சொன்னான் ராமு. “வேதாரண்யத்தில் வைத்தியானந்தா என்ற யோகி இருக்கிறார். அவரிடம் கற்றுக் கொண்டால் ஒரே ஆண்டில் நீங்கள் நல்ல மருத்துவர் ஆக முடியும்” என்றாள் மனோரமா.
ராமு உடனே வேதாரண்யம் சென்று வைத்தியானந்தாவிடம் சீடனானான். மனோரமா கூறியதுபோல், ஒரே ஆண்டில் மருத்துவத்தை அவனுக்குக் கற்பித்த யோகி, ஆண்டு முடிவில் அவனிடம், “நீ மிகச் சிறந்த சீடனாக விளங்கினாய். எனக்குத் தெரிந்த அனைத்தையும் உனக்கு சொல்லிக் கொடுத்து விட்டேன். மந்திரங்கள் அடங்கிய ஓலைச்சுவடிகள் என்னிடம் உள்ளன. அதை இப்போது உனக்குத் தர மாட்டேன்.
நீ சுயநலநோக்கமே இல்லாமல், நேர்மையான மருத்துவனாகத் திகழ்கிறாய் என்பது நிரூபணம் ஆன பின்னரே, அதை உனக்குத் தருவேன். சென்று வா!” என்று கூறி அவர் அவனை ஆசீர்வதித்து அனுப்பினார்.
விஜயபுரி திரும்பிய ராமு தன் மனைவியிடம் நடந்ததையெல்லாம் விளக்கிக் கூறினான். அதற்கு அவள் அவனை நேர்மையாக மருத்துவத் தொழிலைச் செய்யுமாறு கூறினாள். அதன்படியே, ராமு தன் மருத்துவத் தொழிலை புனிதத் தொண்டாகக் கருதி செய்யலானான்.ஓராண்டிற்குப் பிறகு, ஒருநாள் ஒரு சன்னியாசி அவன் வீட்டிற்கு வந்தார்.
வீட்டின் வரவேற்பறையை அவன் மருத்துவ சாலையாகப் பயன்படுத்தி வந்தான். வாயிலிலே நின்று, சன்னியாசி உள்ளே நடப்பதை கூர்ந்து கவனித்தார். ராமு ஓர் ஏழை நோயாளியை சோதித்துக் கொண்டிருக்கையில், தடல்புடலாக வந்துஇறங்கிய ஒரு பணக்கார ஆசாமி, “வைத்தியரே! முதலில் என்னை கவனியுங்கள். எத்தனை பணம் வேண்டுமானாலும் தருகிறேன்!” என்றார்.
அவரை ஒருமுறை கூர்ந்து பார்த்த ராமு, “ஐயா! இப்போது என்னை இந்த நோயாளியை சோதிக்க அனுமதியுங்கள். உங்களுடைய முறை வரும்போது உங்களைக் கூப்பிடுகிறேன்” என்றான்.தற்செயலாக வாயிலில் காத்துக் கொண்டிருந்த சன்னியாசியை நோக்கிய ராமு, “சுவாமி! நீங்கள் சிகிச்சைக்காக வரவில்லை என்று நினைக்கிறேன். தயவு செய்து என்னுடன் அமர்ந்து சாப்பிட்டு விட்டுச் செல்லுங்கள்” என்றான்.
அதற்கு சன்னியாசி, “அவசரம் இல்லையப்பா! நீ எல்லா நோயாளிகளையும் கவனித்து விட்டு வரும் வரை நான் காத்திருக்கிறேன்!” என்றார். அதன்படியே, ராமு எல்லா நோயாளிகளையும் கவனிக்கும் வரை பொறுமையாகக் காத்திருந்த சன்னியாசி, பிறகு அவனுடன் போஜனம் செய்ய அமர்ந்தார். உண்டு முடித்த பிறகு அவர் ராமுவை நோக்கி, “மகனே! நீ சிகிச்சை செய்யும் முறையை ஆரம்பத்திலிருந்தே கூர்ந்து கவனித்தேன். சுயநல நோக்கு சிறிதுமின்றி, நீ தொழில் புரிந்த விதம் என்னை மிகவும் கவர்ந்து விட்டது. மந்திரங்கள் அடங்கிய ஓலைச்சுவடிகளைப் பெறத் தகுதியானவன்தான் நீ! உடனே, நீ வேதாரண்யம் சென்று அவற்றைப் பெற்றுக் கொள்!” என்றார்.
அவர் தன் குருநாதர் வைத்தியானந்தா அனுப்பி வைத்தவர் என்று ராமு புரிந்து கொண்டான். வேதாரண்யம் செல்வதைப் பற்றித் தன் மனைவியுடன் கலந்தாலோசித்து விட்டு வந்தவன். சன்னியாசியிடம், “சுவாமி! என்னைத் தேடி தினமும் இங்கு நோயாளிகள் வந்த வண்ணம் இருக்கின்றனர். நான் இல்லாமற்போனால் அவர்கள் கஷ்டப்படுவார்கள். என்றைய தினம் நோயாளிகள் யாரும் வரவில்லையோ, அன்று வேதாரண்யம் செல்வேன்!” என்றான் ராமு.
இதற்கிடையில் மன்னரின் தாயார் நோய்வாய்ப்பட, அரண்மனையிலிருந்து ஆட்கள் அவனை அழைத்துச் செல்ல வந்தனர். அவர்களிடம், “நான் விஜயபுரியை விட்டுச் சென்று அரண்மனையில் தங்கி மன்னரின் தாய்க்கு வைத்தியம் செய்தால், என்னை நம்பியுள்ள நோயாளிகள் திண்டாடிப் போவார்கள். அதனால், மன்னரின் தாயை இங்கு அனுப்பி வையுங்கள்” என்று சொல்லி அவர்களை அனுப்பி விட்டான்.
அதையறிந்த சன்னியாசி மீண்டும் ராமுவிடம் வந்து, “மன்னரின் தாய் என்று அறிந்தும், அவருடைய அதிகாரத்திற்குத் தலை வணங்காமல் நீ உன்னுடைய நோயாளிகளின் நிலைமையே மிகவும் முக்கியமாகக் கருதினாய். நீ தலை சிறந்த மருத்துவனாக மாறத் தகுதியானவன். ஆகவே, நீ உடனே சென்று உன் குருவை சந்தித்து ஓலைச்சுவடிகளைப் பெறுவாய்!” என்றார். அப்போதும் ராமு மறுத்து விட்டான்.
ராமுவின் மனைவி மனோரமா நாளாவட்டத்தில் கவலையுற்றாள். நோயாளிகள் ராமுவை நாடி வராத நாள்களே இல்லை. இப்படியே சென்றால், ராமு எப்போதுதான் தன் குருவிடம் சென்று ஓலைச்சுவடிகளைப் பெறுவார்? மந்திர சிகிச்சையும் தன் கணவன் கற்றுக் கொண்டால், இன்னும் பல நோயாளிகள் பலம் அடைவார்கள் எனத் தோன்றியது. ராமுவை வேதாரண்யம் செல்லுமாறு பலமுறை கூறத் தொடங்கினாள். ஆனால் ராமு மறுத்து விட்டான்.
மனோரமா சன்னியாசியை அழைத்து ராமுவை எவ்வாறு வேதாரண்யத்திற்கு அனுப்புவது என்று ஆலோசிக்க, அவருடைய யோசனைப்படி தான் நோய்வாய்ப் பட்டது போல் பாசாங்கு செய்தாள். ராமு தனக்குத் தெரிந்த எல்லா மருந்துகளை அளித்தும், அவள் குணமாகாதது போல் நடித்தாள். சன்னியாசி ராமுவை அழைத்து, “உன் மனைவியின் நோய் மருந்தினால் தீராது மந்திரத்தினால்தான் தீரும்! இப்போதாவது நீ உடனே உன் குருவிடம் சென்று ஓலைச்சுவடிகளைப் பெற்று வா!” என்றார். ராமுவும் உடனே வேதாரண்யம் சென்று தன் குருவிடமிருந்து ஓலைச்சுவடிகளை வாங்கி வந்தான்.
அவற்றைக் கற்றுத் தேர்ந்து, தன் மனைவியின் நோய்க்கு மந்திரம் ஓத, அவளும் குணமானதுபோல் நடித்தாள். அன்றுமுதல் ராமு மருந்தினால் தீராத நோய்களையும் மந்திரத்தினால் தீர்த்து வைத்து, அந்தப் பகுதியில் தலைசிறந்த வைத்தியனாகத் திகழ்ந்தான்.
To get daily story and prayer requests contact +918148663456
என் அன்பு வாசகர்களே,
இந்த ராமுவின் சுயநலத்தை என்னவென்று சொல்வது? பலமுறை சன்னியாசி குருவிடம் சென்று ஓலைச்சுவடிகளைப் பெற்றுக் கொள்ளச் சொல்லியும் போகாதவன், தன் மனைவியின் பொருட்டு தனது கொள்கையைக் காற்றில் பறக்க விட்டு விட்டான். சுயநல நோக்கம் இன்றி நேர்மையாக மருத்துவத் தொழில் செய்தால் மட்டுமே ஒலைச் சுவடிகளைத் தருவேன் என்று சொல்லிய அவன் குரு அவனுக்கு அவற்றை எப்படித் தந்தார்?
“ராமுவை சுயநலக்காரன் என்று சொல்வது முற்றிலும் தவறு. தன் நோயாளிகளை பரிதவிக்க விட்டுவிட்டு குருவிடம் செல்ல மறுத்தது அவன் தன் நோயாளிகளின் மீது கொண்டிருந்த அக்கறையைக் காட்டுகிறது. ஆனால் மனைவிக்கே தீராத நோய் எனும் போது எந்தக் கணவனால் சும்மா இருக்க முடியும்? மேலும் தன் மனைவி ஒரு நோயாளி அவளை மருந்தினால் குணப்படுத்த முடியவில்லை. எனவே தான் குருவிடம் சென்று ஓலைச்சுவடிகளை கேட்க அவரும் எந்த தயக்கமுமின்றி அதை அவனுக்கு கொடுத்தார்.
இன்றைய கதையில் நாம் புரிந்துகொண்ட கருத்து என்ன??
ஏதாகிலும் ஒரு காரியமோ?? அல்லது வேலையோ நாம் செய்கிறோம் என்றால் அதை செய்து முடிக்கும் மட்டும் அதிலிருந்து பின்வாங்க கூடாது. அதில் எத்தனை தான் கஷ்டங்கள், நஷ்டங்கள் வந்தாலும் எடுத்த காரியத்தில் வெற்றி பெறும்வரை அயராது உழைக்க வேண்டும்.
வேதாகமத்தில் நெகேமியா எருசலேமின் மதில்களை திரும்ப கட்ட தீர்மானித்து அதற்கான முயற்சியில் ஈடுபட்டார். பல சோதனைகள், பல அரசாணைகள் என ஒவ்வொரு முறையும் தடைகள் வரும்போது தேவ பெலத்தினால் ஒவ்வொன்றாய் ஞானமாய் அந்த தடைகளை உடைத்து சன்பல்லாத், தொபியா ஆகியோரின் ஆலோசனைகளையும் அபத்தமாக்கி இறுதியில் எருசலேமின் மதிலை கட்டினார்.
நெடுநாட்களாய் எருசலேமின் மதில்களை கட்ட காத்திருந்து அது கட்டித் தீரும்போது அளவில்லாத மகிழ்ச்சி அடைந்தார். அதுபோலவே நெடுநாட்களாய் ஏதாகிலும் காரியம் நடக்கவில்லையே என்று கவலைப்படுகிறீர்களா??? கவலை வேண்டாம் தேவ கிருபை அனைவரோடும் இருப்பதால் நீங்கள் மேற்கொள்ள வேண்டிய காரியத்தை முடிவுக்கு கொண்டு வர பிரயாசப்படுங்கள். நீங்கள் முயற்சி செய்தால் தான் தேவ கிருபை உங்கள் மூலமாய் கிரியை செய்யும்.
அதைவிடுத்து தேவ கிருபை என்னோடு இருப்பதால் தேவன் எல்லாவற்றையும் பார்த்துக்கொள்வார் என்று அசதியாய் இருக்க வேண்டாம். நாம் காரியத்தில் இறங்கி முயற்சி செய்தால்தான் தேவன் நம்மோடு இருந்து காரியத்தை வாய்க்கச்செய்வார். விரைவில் நீங்கள் எதிர்பார்த்த நன்மைகளை அனுபவிப்பீர்கள்.
11 நீங்கள் எதிர்பார்த்திருக்கும் முடிவை உங்களுக்குக் கொடுக்கும்படிக்கு நான் உங்கள்பேரில் நினைத்திருக்கிற நினைவுகளை அறிவேன் என்று கர்த்தர் சொல்லுகிறார், அவைகள் தீமைக்கல்ல, சமாதானத்துக்கேதுவான நினைவுகளே.
எரேமியா 29:11
##நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்!!!
Thanks for using my website. Post your comments on this