Type Here to Get Search Results !

தீவில் சிக்கின இருவர் | அவசரம்! ஆபத்து!! | Intelligence and Physical Strength | ஞாயிறு பள்ளி குட்டி கதைகள் | Sunday School Story | Jesus Sam

ஓர் குட்டிக் கதை
தீவில் சிக்கின இருவர்

ஒரு உல்லாச கப்பல் கடலில் சென்ற போது அடித்த புயலினால் கப்பல் உடைந்தது. அதில் இருந்த இரு ஆண்கள் மட்டுமே தப்பி நீந்தி வந்து அருகில் உள்ள ஒரு சிறிய தீவை சென்று அடைந்தனர்.

அந்த இருவரும் அந்தஸ்த்தில் வேறுபட்டவர்கள். ஒரே நிறுவனத்தில் ஒரே இடத்தில் பணிபுரியும் சூழ்நிலையால் நண்பர்கள் ஆனவர்கள்.

அந்த தீவில் வெறும் புற்களும், புதர்களும் மட்டுமே இருந்தது. சாப்பிடவோ ஒதுங்க நிழலுக்கு மரம் கூட இல்லாதிருந்தது..!

அவர்களுக்கு என்ன செய்வது என்பதே தெரிய வில்லை. முடிவில் இருவரும் கடவுளை வேண்டிக் கொள்வது என்று முடிவு செய்தனர்.

அப்போது யாருடைய பிரார்த்தனைக்கு அதிக சக்தி இருக்கிறது பார்ப்போம் என்றும் முடிவு செய்தனர்.

அதன்படி அந்த தீவின் இருகரைகளிலும் தனி தனியாக தங்குவதற்கு உடன்பட்டனர். முதலில் இருவரும் உணவுக்காக பிரார்த்தனை செய்தனர். அவர்களின் பிரார்த்தனை படி வசதியானவன் இருந்த பகுதிக்கு சில பழங்கள் மிதந்து வந்தன. அதை அவன் சாப்பிட்டான். ஆனால் ஏழையோ சாப்பிட ஏதும் கிடைக்காமல் பசியோடு இருந்தான்.

பசியாறிய மனிதனுக்கோ போரடித்தது, தனக்கு அருகில் மனைவியாக ஒரு பெண் இருந்தால் நன்றாக இருக்குமே என்று வேண்டினான். ஆச்சர்யமாக அவன் வேண்டுதல் படியே அந்த தீவுக்கு அருகில் வந்த சிறிய கப்பல் உடைந்து அதில் இருந்த ஒரு அழகிய இளம் பெண் மட்டும் உயிர் தப்பி ஒரு உடைந்த பலகை உதவியுடன் அந்த தீவிற்கு வந்து சேர்ந்தாள்.

அவளைப் பார்த்ததும் அவள் அழகில் சொக்கி போய் அவளையே தெய்வ சாட்சியாக திருமணம் செய்து கொண்டான். தீவின் மற்றொரு பக்கம் இருந்தவன் இன்னும் பசியால் தனிமையில் இருந்தான்.

முதல் மனிதன் செய்த வேண்டுதல் படி நல்ல உணவுகள், துணிகள், எல்லாம் அவன் இருந்த பகுதிக்கு மட்டுமே மந்திரம் செய்தது போல கரை ஒதுங்கின. ஆனால் அவன் நண்பனுக்கோ ஒன்றும் கிடைக்கவில்லை. அவன் உருக்குலைந்து போனான்.

ஆனால், புது ஜோடிகளோ வந்த பழங்கள் உணவுகளுடன் இருவரும் ஒரு வாரகாலம் உல்லாசமாக களித்தனர். இப்படியாக ஒரு வாரம் கழிந்தது.....

இறுதியாக முதல் மனிதன் தன் புது மனைவியுடன் தன் சொந்த இடத்துக்கு போவதற்கு வேண்டி ஒரு படகுக்காக வேண்டினான். அதுவும் அதிசயம் போல அடுத்த நாளே கரை ஒதுங்கியது.

முதல் மனிதன் தனது பிரார்த்தனையின் சக்தி கண்டு மிகுந்த மகிழ்ச்சியில், துரதிஷ்டம் மிக்க தன் நண்பனை அழைக்காமல் தன் புது மனைவியுடன் அதில் ஏறி அந்த தீவை விட்டு செல்ல ஆயுத்தமானான். இது ஏதும் அறியாத அந்த இன்னுமொருவன் இன்னும் பசியாறாமல் வேதனையில் வாடினான்..?

எல்லாம் கிடைத்த நண்பன் நினைத்தான்,

தன் நண்பன் ஒன்றுக்கும் உதவாதவன். கடவுளின் ஆசீா்வாதம் கூட அவனுக்கு கிடைக்க வில்லை. ஒரு சிறு பிரார்த்தனையை கூட கடவுள் நிறைவேற்றி வைக்க வில்லை. ஏற்கனவே ஏழை வேறு.. அதனால், அவனை அழைத்து செல்ல இவனுக்கு இஷ்டமில்லை என்றான் சுயநலம் பிடித்த அந்த நண்பன்..!!

படிக்கும் நமக்கு கடவுள் மேல் கோபம் வருகிறது அல்லவா...!! அப்போது அந்த படகு கிளம்பத் தொடங்கியதும் வானத்தில் இருந்து ஒரு குரல் ஒலிக்க தொடங்கியது...!

ஏன் உன் நண்பனை தனியாக இந்த தீவில் விட்டு செல்கிறாய்..? என்று அந்த குரல் கேட்டது...!


அதற்கு அந்த மனிதன் சொன்னான்
நான் கடவுளிடம் பிரார்த்தனை செய்தேன். அவர் என்னை ஆசீா்வதித்து இது எல்லாம் எனக்கு மட்டும் கிடைக்க செய்தார். என் நண்பனின் பிரார்த்தனை ஒன்றுக்கும் கூட கடவுள் செவி சாய்க்கவில்லை. அவன் ஒன்று கூட பெற தகுதி இல்லாதவன் என்று சொன்னான்.

அந்த குரல் அவனிடம் மறுபடியும் பேசியது மகனே நீ நினைப்பது தவறு. நான் தான் கடவுள்...!!

உன்னை உயிராக நேசிக்கும் உன் நண்பன் பிராா்த்தனையில் ஒன்றே ஒன்று மட்டும் கேட்டான். நான் அந்த ஒரு பிரார்த்தனையை நிறைவேற்றி வைத்தேன். அது மட்டும் அவன் கேட்கவில்லை என்றால் உனக்கு எந்த வித ஆசீா்வாதமும் பலனும் கிடைத்து இருக்காது.

அந்த மனிதன் என்ன கேட்டான் பிரார்த்தனையில்? அவனுக்கு நான் ஏதாவது கடமை பட்டு இருக்கிறேனா என்றான்..?


அந்த குரல் மேலும்,

உன் நண்பன் பிரார்த்தனையில் என் நண்பன் மிகவும் வசதியானவன், நல்லவன்,

வாழ்க்கையில் சுகம் மட்டுமே அனுபவித்து பழகியவன், அவன் கஷ்டமே அறியாதவன். ஆகவே, என் பிரார்த்தனையெல்லாம் அவன் வேண்டுவதை மட்டும் நிறைவேற்றுங்கள்...

அது போதும், நான் ஏற்கனவே ஏழை தான், இதுமாதிரி சூழ்நிலைகள் எனக்கு புதியதல்ல....

ஆகவே எனக்கென்று கேட்க எதுவும் இல்லை என்று தான் வேண்டினான்.

அதை கேட்ட அந்த சுயநலம் பிடித்த நண்பன் வெட்கி, மனந் திருந்தி தன்னலமற்ற தன் நண்பனை தேடி ஓடினான்..!!

#என்_அன்புக்குாியவா்களே,

நம்முடைய பிரார்த்தனைகளால் மட்டுமே நமக்கு எல்லாம் கிடைத்து விடுவதில்லை. அதற்கு மற்றவர்களின் வேண்டுதல்களும் உதவி புாிகின்றன என்பதை மறந்து விட வேண்டாம்.

நம்மை நேசிப்பவர்கள் யாராக இருந்தாலும் ஓதுக்கி வைத்து விட வேண்டாம், சந்தேகப்பட வேண்டாம்...

* உறவையும் நட்பையும் * மதிக்க கற்று

* கொள்ளுங்கள்...!!!🙋🏻‍♂

பைபிள் சொல்கிறது..

என் சிநேகத்துக்குப் பதிலாக என்னை விரோதிக்கிறார்கள், நானோ ஜெபம் பண்ணிக் கொண்டிருக்கிறேன். (சங்கீதம் 109 :4)

நீங்கள் சொஸ்தமடையும்படிக்கு, (ஆசீா்வாதம் அடையும்படி) உங்கள் குற்றங்களை ஒருவருக்கொருவர் அறிக்கையிட்டு, ஒருவருக்காக ஒருவர் ஜெபம்பண்ணுங்கள். நீதிமான் செய்யும் ஊக்கமான வேண்டுதல் மிகவும் பெலனுள்ளதாயிருக்கிறது.(யாக். 5 :16)

இயேசு மலை பிரசங்கத்தில் சொல்கிறாா்.

உனக்கடுத்தவனைச் சிநேகித்து, உன் சத்துருவைப் பகைப்பாயாக என்று சொல்லப்பட்டதைக் கேள்விப்பட்டிருக்கிறீர்கள்.




To get daily story contact +918148663456




நான் உங்களுக்குச் சொல்லுகிறேன், உங்கள் சத்துருக்களைச் சிநேகியுங்கள், உங்களைச் சபிக்கிறவர்களைச் ஆசீர்வதியுங்கள், உங்களைப் பகைக்கிறவர்களுக்கு நன்மை செய்யுங்கள்,




உங்களை நிந்திக்கிறவர்களுக்காகவும் உங்களைத் துன்பப்படுத்துகிறவர்களுக்காகவும் ஜெபம்பண்ணுங்கள். (மத்தேயு 5:43,44)




இந்த வசனங்களின்படி மற்றவர்களுக்காக விசேஷமாக உங்களுக்கு விரோதம் செய்கிறவர்கள் நல்ல நிலை அடைய ஜெபம் பண்ணுங்கள். இதுவே . நீங்கள் கிறிஸ்தவா் - களாயிருப்பதின் உண்மையான நிலை.




நாம் நமக்காக வேண்டிக்கொள்ள வேண்டியதில்லை. நமக்கு இன்னது தேவை என்பதை தேவன் அறிந்து அதைத் தருவாா். அதற்கு விசுவாசித்தாலே போதுமானது.




நாம் மற்றவர்களின் ஆசீா்வாதத்திற்காகவும், தேசத்தின் இரட்சிப்புக்காகவும், ஊக்கமாகவும் உபவாசம் இருந்தும் ஆத்தும பாரத்தோடு ஒவ்வொரு நாளும் ஜெபிக்க வேண்டியது மிக மிக அவசியம்.




இன்று தனக்காக தன் தேவைகளுக்காகவே ஜெபிக்கிறாா்கள்.உபவாசமும் இருக்கிறார்கள். இவா்கள் கிறிஸ்துவத்தை சாியாகப் புாிந்து கொள்ளவில்லை.




தேவன்

உங்களுக்காக இரட்சிப்பு ஏற்படுத்தி உங்களை தேவனுடைய பிள்ளைகளாக்கியிருக்கிறாா். உங்கள் தேவைகள் தானாகவே (automatically )

சந்திக்கப்படும்.




பவுல் சொல்கிறாா்.

எந்தச் சமயத்திலும் சகல

விதமான வேண்டுதலோடும் விண்ணப்பத்தோடும் ஆவியினாலே ஜெபம்பண்ணி, அதன்பொருட்டு மிகுந்த மனஉறுதியோடும் சகல பரிசுத்தவான்- களுக்காகவும் பண்ணும் வேண்டுதலோடும் விழித்துக் கொண்டிருங்கள். (எபேசியர் 6:18)




நீங்கள் அடுத்தவா்களின் காாியங்களுக்காக ஜெபிக்கும் போதே நீங்கள் தேவ சித்தத்தை நிறைவேற்றுகிறீா்கள். அப்போது உங்கள் காாியங்கள் தானாகவே நடைபெறும்.

#நீங்கள்_ஆசீா்வதிக்கப்பட்டவர்கள் !!!


ஓர் குட்டிக் கதை 
அவசரம்! ஆபத்து!!
அவசர அவசரமாக எந்த காரியத்தை செய்தாலும் அதை எப்படியாவது துரிதமாய் செய்து முடிக்க வேண்டும் என்ற சிந்தனை மாத்திரம் இருப்பதினால் அந்த காரியம் சீக்கிரத்திலேயே முடியும் ஆனால் அவர்கள் எதிர்ப்பார்த்த படி முடிந்ததா என்று கேட்டால் இல்லை என்ற பதில் தான் வரும். காரணம் அவர்கள் சிந்தை அந்த காரியத்தை சீக்கிரம் முடிக்க வேண்டும் என்பதில் தான் இருந்ததே ஒழிய அதை சரியானபடி செய்து முடிக்கும் எண்ணம் இல்லை.

அவசரத்தில் தாங்கள் எடுத்த முடிவையும் அதனால் அவர்கள் பெற்றுக்கொண்ட பலனையும் இக்கதையின் மூலம் காண்போம்.







கோஸி நதிக்கரையிலிருந்த காடு ஒன்றில் விலங்குகள் எப்போதும் சண்டையிட்டுக் கொண்டே இருந்தன. ஒரு நாள் முயல், மான், கரடி மூன்றும் உரையாடிக் கொண்டிருந்தன.




“நம்மிடையே நாளுக்கு நாள் சண்டை வலுத்துக் கொணடே செல்கிறதே. இதைத் தீர்க்க ஓர் அரசன் இருந்தா நல்லா இருக்குமே!’ என்றது முயல். இதைக் கேட்ட மான் சொன்னது, “ஆமாமா அப்போதான் நம்ம சண்டை முடிவுக்கு வரும்.’




“ஆனா யார் காட்டுக்கு ராஜா ஆவது?’ – இது கரடி.




இதை வைத்தே ஒரு ரகளை ஆரம்பமானது பாருங்கள்.




“நான்தான் இந்தக் காட்டுக்கு ராஜா’ என்று உரக்கக் கூறியது முயல்.




கரடி அதைவிட குரலை உயர்த்திச் சொன்னது, “ஏய்… நீ இல்ல; நான்தான் மன்னன் ஆவேன்!’




இதைக் கேட்ட மான் சும்மா இருக்குமா? “இல்லவே இல்லை, நான்தான் அரசன்!’ என்றது.




சிறிது நாட்களுக்கு முன்தான் ஏதோ ஒரு காட்டிலிருந்து நோய்வாய்ப்பட்டிருந்த ஒரு கிழட்டுச் சிங்கம் இக்காட்டிற்கு வந்திருந்தது. அதன் தூக்கம் இந்த மூவரின் சண்டையால் கலைந்தது.




“என்ன ஒரே சத்தம்!’ என்றவாறே கரடி, மான், முயல் இருந்த இடத்திற்கு சிங்கம் வந்தது.




சிங்கத்தைப் பார்த்த முயல் சொன்னது.




“இந்த சிங்கத்தையே நம்ம ராஜா ஆக்கிட்டா என்ன?’




மான், “நீ சரியா சொன்னே…’ என்றது.




விலங்குகள் அனைத்தும் கூடின. “தங்களுக்குள் அடிக்கடி நிகழும் சண்டைப் பிரச்னையை சிங்கத்திடம் கூறி… நீங்கதான் எங்க ராஜாவா இருந்து ஆட்சி செய்யணும்..’ என வேண்டுகோள் விடுத்தன.

சிங்கத்தின் மகிழ்ச்சிக்கு கேட்கவா வேண்டும்!
“ஆஹா! என்னே அதிர்ஷ்டம். இப்படிகூட வீடு தேடிவருமா? உம்ம்ம்… என் கெட்ட நேரம் முடிஞ்சிடுச்சின்னு நினைக்கிறேன்…’ என மனதிற்குள் சொல்லிக் கொண்டது.

சிறிது நேரம் யோசிப்பது போன்று பாவனை செய்தது.

“சரி! அரசனாகிறதில எனக்கொன்னும் ஆட்சேபம் இல்லை. ஆனா விஷயம் (உங்களுக்குள் நடக்கும் சண்டை) ரொம்ப கடினமா இருந்தா மட்டும்தான் நான் மரண தண்டனை கொடுப்பேன். அதுவும் நல்லா விசாரிச்சுதான் முடிவு எடுப்பேன்’ என்றது சிங்கம்.

விலங்குகளுக்கோ ஒரே சந்தோஷம். “நமக்கு அரசன் வந்துட்டாரே…’ என்று குதூகலமிட்டன.

முயல், “கொடுமைன்னா எங்களுக்கும் பயம்தான். ஆனா மகாராஜா, குற்றம் செஞ்சா கண்டிப்பா நியாயமா தண்டனை கிடைக்கணும்…’

இதைக் கேட்ட சிங்கம் மனதுக்குள் எண்ணியது, “ஆமாம்… ஆமாம்… அடிக்கடி நானும் மரண தண்டனை கொடுக்க வேண்டிய அவசியம் வரும்தான்..’

அடுத்த நாளே வழக்கம் போல ஒரு முயலும் கெüதாரியும் ஒரு பொந்திற்காக சண்டையிட்டுக் கொண்டன.

முயல்: இந்த வீடு என்னோடது.

கெüதாரி: இல்லே என்னோடது. நான்தான் முதல்ல பார்த்தேன்.

முயல்: நீ வெறுமே பாக்கத்தான் செஞ்சே… இது என் அப்பா உருவாக்கினாரு..

கெüதாரி: ஆனா அவர் விட்டுட்டுப் போயிட்டாரே.. இப்ப இதில நான்தானே இருக்கேன்?’

இறுதியில் இரண்டும் சிங்க ராஜாவிடம் செல்ல முடிவெடுத்தன.

கெüதாரி சிங்கத்திடம் கூறியது.

“மன்னர் மன்னா! எங்களுக்கு நியாயம் வழங்குங்கள்…’

“ஏன்… என்னாச்சு?’ என்று கேட்டது சிங்கம்.

முயலும் கெüதாரியும் கூண்டுப் பிரச்னையைப் பற்றி சிங்கத்திடம் கூறின.

“இருங்க எனக்கு வயசாயிடுச்சி இல்லையா? நீங்க இரண்டு பேரும் என்ன சொன்னீங்கன்னு சரியா கேட்கலை. என் பக்கத்துல வாங்க. இங்க வந்து சொல்லுங்க. என்ன பிரச்னைன்னு…’ என்றது மிகவும் சாதுர்யமாக.

சிங்கத்தின் தந்திரம் அறியாத முயலும் கெüதாரியும் அதனருகில் சென்றன. உடனே இரண்டையும் அமுக்கிப் பிடித்துக் கொண்டது சிங்கம்.

“காப்பாத்துங்க… காப்பாத்துங்க…’ இருவரின் குரல் கேட்டு மற்ற விலங்குகள் அங்கு ஓடிவந்தன. சிங்கம் முயலையும் கெüதாரியையும் தன் இரையாக்கிக் கொண்டது. அதை நேரில் கண்ட மிருகங்கள் தமக்குள் பேசிக் கொண்டன…

“தன் கையே தனக்குதவின்னு நம்ம பிரச்னையை நாமே தீர்த்துக்கிட்டிருந்தா நம்மோட இரண்டு தோழர்களை நாம இழந்திருக்க மாட்டோம். அவசரப்பட்டுட்டோமே….’ என்று தம்மைத்தாமே நொந்து கொண்டன.

To get daily story and prayer requests contact +918148663456

என் அன்பு வாசகர்களே,

வேதத்தில் இஸ்ரவேல் ஜனங்கள் தங்களை நியாயந்தீர்க்க நியாதிபதிகள் இருந்த காலகட்டத்தில் அவர்களோ தங்களை நியாயந்தீர்க்க ஒரு ராஜா வேண்டும் என்று மிகவும் தேவனை வருந்தி கேட்டுக்கொண்டபடியால் தேவன் அவர்களுக்கு சவுலை ராஜாவாய் அபிஷேகம் பண்ணி இஸ்ரவேலரை நியாயம் விசாரிக்க ஏற்படுத்தினார்.

ஆனாலும் சவுலால் அநேக நாட்கள் ராஜ்யபாரம் பண்ண முடியவில்லை. அல்லாமலும் சவுலுடைய இறப்பு யாரும் எதிர்பாராத மிகவும் கவலைக்கிடமான நிலையில் இருந்தது நாம் அறிந்ததே.

எனவே எல்லா காரியத்திலும் நிதானமாய் யோசித்து நன்றாய் ஆராய்ந்து செய்வோம் மேலான ஆசீர்வாதத்தை பெற்றுக் கொள்வோம்.

31 நம்மை நாமே நிதானித்து அறிந்தா ஐக்ல் நாம் நியாயந்தீர்க்கப்படோம்.
1 கொரிந்தியர் 11:31

நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்!!!!!



ஓர் குட்டிக் கதை
அறிவுத்திறனும், உடல் பலமும்

ஒரு முதலாளி, தனக்குச் சொந்தமான பரந்த இடம் முழுதிலும் தென்னங்கன்றுகளை நட வேண்டும் என்று முடிவு செய்தார். மரக் கன்றுகள் நடுவதற்குப் பள்ளம் வெட்ட வேண்டிய வேலையை ரங்கன் என்பவனிடம் ஒப்படைத்தார்.

இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக்கொண்டு, நன்றாக உழைத்து நிறையச் சம்பாதித்துவிட வேண்டும் என்று நினைத்தான் ரங்கன். ஏனென்றால், அவன் தன் மகளின் திருமணத்திற்குக் கொஞ்சம் கொஞ்சமாகக் காசு சேர்த்து வருகிறான். இன்னும் போதுமான அளவு பணம் சேரவில்லை.

ரங்கன், முதல் நாளில் இருபது மரக் கன்றுகளை நடுவதற்குப் பள்ளம் தோண்டினான். அவன் உழைப்பைக் கண்டு முதலாளி அவனை மிகவும் பாராட்டினார். பிறகு, ஒவ்வொரு நாளும் அவன் தோண்டுகிற பள்ளத்தின் எண்ணிக்கை குறைந்து வரத் தொடங்கியது. நாற்பதாம் நாளில் அவன், காலையிலிருந்து மாலை வரை எவ்வளவோ முயன்றும் இரண்டு பள்ளங்கள்தான் தோண்ட முடிந்தது. ரங்கன் மிகவும் ஏமாற்றமடைந்தான். தான் என்ன தவறு செய்கிறேன் என்று பலமுறை யூகித்து பார்த்தும் அவனால் கண்டுபிடிக்க முடியவில்லை.

"முதல் நாளின்போது இருபது பள்ளங்கள் தோண்டியவன் நாற்பதாம் நாளில் இரண்டு பள்ளம் தோண்டுகிறானே, இவனுக்கு என்ன ஆயிற்று?" என்று முதலாளியும் குழம்பினார். அவனிடம் விசாரித்தால் ஏதாகிலும் பதில் கிடைக்கும் என்ற நோக்கில் ரங்கனை அழைத்து விசாரித்தார். அவனே "ஐயா, நான் என்னால் முடிந்த அளவு முயன்றுவிட்டேன் ஆனால் முதல் நாளை போல என்னால் பள்ளம் தோண்ட முடியவில்லை. என்னிடத்தில் எந்த சோம்பலோ, அசதியோ இல்லை ஆனாலும் முடியவில்லை என்றான். உடனே அவர் உன் மண்வெட்டி எங்கே??? முதலாவது அதை கொண்டு வா பார்க்கலாம் என்றதும் ரங்கன் தன் மண்வெட்டியை முதலாளியிடம் கொடுத்தான். ரங்கனின் மண்வெட்டியை வாங்கிப் பரிசோதித்துப் பார்த்தார் முதலாளி மண்வெட்டியின் முனை கூர் மழுங்கியிருந்தது தெரிந்தது. அவர் ரங்கனிடம் கேட்டார்:

"நீ உன் பணி ஆயுதத்தைக் கூர்தீட்டி நன்றாக வைத்துக் கொண்டால் என்ன?'' அதற்கு ரங்கன் சொன்னான்: "இதற்கெல்லாம் எனக்குக் கொஞ்சம்கூட நேரமே இல்லை அய்யா! நான், நாள் முழுதும் சிறிதும் ஓய்வெடுக்காமல் உழைத்துக் கொண்டிருக்கிறேன். நிறைய வேலை செய்து நிறையப் பணம் சம்பாதிக்க வேண்டுமே!''

முதலாளி சொன்னார்: "ரங்கா, இந்த மண்வெட்டியைப் போலத்தான் நாமும். நம் அறிவுத்திறனும், உடல் பலமும் மழுங்கிவிட்டால் நம்மால் எதுவுமே செய்யமுடியாது. நமக்கு எவ்வளவோ கடமைகள் இருக்கலாம். நிறைய உழைக்க வேண்டி வரலாம். ஆயினும் நம் உடலையும், மனதையும், அறிவையும் எப்போதும் பேணிக் கூர்மையாக வைத்துக்கொள்ள வேண்டும். அப்போதுதான் நம்மால் நிறையச் சாதிக்க முடியும். நம் இலக்கை விரைவில் அடைய முடியும்!'' என்றார்.

இதை கேட்ட ரங்கன் தான் செய்த தவற்றை உணர்ந்து தன் பணி ஆயுதங்கள் அனைத்தையும் கூர்தீட்டினான். அன்று முதல் பழையதை போலவே ஒவ்வொரு நாளும் நாற்பது பள்ளம் தோண்டி நிறைய சம்பாதித்து தான் நினைத்தது போலவே தன் மகளின் திருமணத்தை சீரும் சிறப்புமாய் நிகழ்த்தினான்.

என் அன்பு வாசகர்களே,
இக்கதையில் வரும் ரங்கனைப்போல நன்றாக உழைத்து நிறைய சம்பாதிக்க வேண்டும் என்ற எண்ணம் எல்லாருக்கும் உண்டு. ஆனால் அவனைப்போல தான் மண்வெட்டியை கூர்மையாக்காமல் கடினமாக உழைத்து எந்த பிரயோஜனமும் இல்லை.

எதை கூர்மையாக்க வேண்டும்??? நம் உடல், மனம், புத்தி ஆகியவற்றை தான்‌. இவற்றை கூர்மையாக்குவதால் என்ன பயன்???. உடலை கூர்மையாக்குவதால் நல்ல சுகத்தோடும், ஆரோக்கியத்தோடும் இருப்போம். மனதை கூர்மையாக்கும்போது தேவையற்றதை சிந்தியாமல், தேவனோடு உறவாட வகை செய்கிறது. புத்தியை கூர்மையாக்கும்போது தொழிலில், வேலை ஸ்தலங்களில், ஊழியத்தில் முன்னேற வழிவகுக்கும்.


To get daily story in whats app contact +917904957814

இவை அனைத்தும் ஒருங்கே பெற்ற தாவீது தன் மாமனாகிய சவுல் ராஜா அவனை கொலை செய்ய எத்தனித்த போதும் அவன் கைகளில் சிக்காத வண்ணம் தன்னை பாதுகாத்துக்கொண்டான். வேதம் இவ்வாறு கூறுகிறது,


15 இதோ, போரடிக்கிறதற்கு நான் உன்னைப் புதிதும் கூர்மையுமான பற்களுள்ள யந்தரமாக்குகிறேன், நீ மலைகளை மிதித்து நொறுக்கி, குன்றுகளைப் பதருக்கு ஒப்பாக்கிவிடுவாய்.

ஏசாயா 41:15

நமது உடல், மனம், புத்தி ஆகிய இவற்றில் ஏதாகிலும் ஒன்றை மாத்திரம் கூர்மையாக்குவதால் எந்த பிரயோஜனமும் இல்லை. ஏனெனில் உடல் ஆரோக்கியத்தோடு இருந்து மனம் சோர்ந்து போனால் என்ன பயன்??. எனவே மூன்றையும் கூர்மையாக்குவோம் அப்பொழுது மேற்கூறிய வசன பிரகாரம் எந்த பிரச்சினை வந்தாலும் நாம் நம்மை கூர்மையாக்கும்போது அவற்றை எதிர்த்து நின்று மிதித்து, நொறுக்கி தவிடு பொடியாய் மாற்ற முடியும்.

எனவே பரிசுத்த ஆவியினால் நம்மை கூர்மையாக்குகிற தேவனிடத்தில் நம்மை நாமே சமர்ப்பிப்போம் எதிரியாகிய பிசாசை நொறுக்குவோம்....

#நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்!!!!

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.