==================
ஓர் குட்டிக் கதை
அப்பாவின் அன்பு
====================
என்னுடைய கைபேசி அலறியது. அழைப்பது என் அக்கா என்பதை உணர்ந்து, எடுத்து
"ஹலோ அக்கா..." என்றேன்.
"ஹாய் டி அமுதா... இன்னைக்கு அப்பாட பர்த் டே. அப்பாக்கு விஷ் பண்ணுன்னு ஞாபகம் படுத்த தான் கால் செய்தேன்... நான் கிளினிக் கிளம்பனும் அப்புறம் பேசுறேன்..."
எப்போதும் போல் தந்தி பாஷையில் பேசி விட்டு அழைப்பை கட் செய்து வைத்தாள் என் அக்கா.
இன்று தந்தையின் பிறந்ததினம் என்பது எனக்கு நினைவே இல்லை தான். அப்பாவை போனில் அழைத்து வாழ்த்த வேண்டும். அப்பாவின் நினைவு வந்த உடன், மனதில் தானாக ஒரு வித சந்தோஷம் தோன்றியது...
என்னுடைய அப்பாவின் பெயர் கண்ணன். என் பெற்றோரின் சொந்த ஊர் திருநெல்வேலி. ஆனால் நானும் என் அக்காவும், பிறந்தது வளர்ந்தது எல்லாம் சென்னையில் தான். என் அப்பாவிற்கு நிலையான அரசு உத்தியோகம் தான்.
என்னுடைய அப்பா முகத்தில் எப்போதும் சிறிது கடுமை இருக்கும். அவர் சிரித்து பேசி நான் பார்த்ததே இல்லை. அவரின் நினைவு வந்தாலே எப்போதும் அதனுடன் நினைவு வரும் அவருடைய அறிவுரை, "நல்லா படி..." என்பது தான்.
எங்கள் வீட்டில் பொதுவாக எல்லா முடிவுகளையும் எடுப்பது என் தந்தை தான். மற்றவர்களுக்கு அதை கேட்கும் உரிமை மட்டும் உண்டு
ஆனால் மறுத்து பேசும் உரிமையோ, கேள்வி கேட்கும் உரிமையோ இல்லை. யாருடன் விளையாடுவது என்பதில் தொடங்கி என்ன விளையாடுவது என்பது வரை என் தந்தையின் தலையீடல் இருக்கும்.
ஆனால் எங்கள் வீட்டின் செல்ல பிள்ளையான என்னால் மற்ற இருவரையும் போல் கேள்வி கேட்காது இருக்க முடியாது. பல முறை அப்படி கேள்வி கேட்டும், மறுத்து பேசியும் வாங்கி கட்டிக் கொண்டிருக்கிறேன். அப்படி திட்டு வாங்கி நான் அழும் போதெல்லாம், என் அம்மா என்னை சமாதான படுத்துவது,
"அப்பா உன் நல்லதுக்கு தானே சொல்றார்... சும்மா கேட்டால் என்ன?" என்பது தான்.
என்னால் அதை ஏற்றுக் கொள்ள முடியவில்லை. அது எப்படி எனக்காக அவர் முடிவு செய்வது என என் மனம் சண்டி தனம் செய்யும். என்னுடைய அக்கா என்னை போல் இல்லை.
அவள் எதற்கும் அடம் பிடித்தோ அழுதோ நான் பார்த்ததில்லை. பள்ளி சுற்றுலாக்களுக்கு செல்ல வேண்டும் என்று கூட எனக்கு தெரிந்து அவள் கேட்டது இல்லை. அவளுடைய கவனம், ஆர்வம் எல்லாம் படிப்பில் தான் இருந்தது.
அவளுக்கும் என் அப்பாவின் விருப்பம் போல் படித்து மருத்துவராக வேண்டும் என்ற ஆசை. ஒவ்வொரு வருடமும் லட்சக் கணக்கில் கட்டணம் செலுத்தி படிப்பது என்பதெல்லாம் நடக்க கூடிய விஷயம் இல்லை என்பதால் எப்படியாவது தன் கல்வி தகுதியை கொண்டே மருத்துவ கல்லூரியில் சேர்ந்து விட வேண்டும் என்பது அவளின் ஆசை, அது தான் என் அப்பாவின் கனவும் கூட....
ஆனால் நான் அவளுக்கு நேர் எதிர்...... ஐந்தாவது படிக்கும் போது, தீபாவளிக்கு அறுநூறு ரூபாய்க்கு கடையில் வைத்திருந்த உடை தான் வேண்டும் என்று நான் அழுது ஆர்பாட்டம் செய்தது இன்னும் நினைவிருக்கிறது!
அன்றைய காலக் கட்டத்தில், ஒருவர் சம்பாத்தியத்தில் ஓடும் நடுத்தர குடும்பத்தில் அறுநூறு ரூபாய்க்கு துணி எடுத்து தீபாவளி கொண்டாடுவது என்பது ரொம்பவே அளவுக்கு மீறிய ஆசை என்பது எனக்கு அப்போது விளங்க வில்லை.
ஏன் திடீரென மாத இறுதி நேரத்தில் பள்ளியில் ஏற்பாடு செய்திருக்கும் சுற்றுலாவிற்கு சென்றே தீருவேன் என்று நான் அடம் பிடித்து அழும் போது, என் அப்பாவின் முகத்தில் தோன்றும் அந்த திகைப்பை புரிந்துக் கொள்ளும் அறிவும் எனக்கு இருந்ததில்லை...
இப்படியாக நாட்கள் செல்ல, என்னுடைய அக்கா பன்னிரெண்டாம் வகுப்பு தேர்வில் 90% மதிப்பெண் பெற்றாள். நுழைவு தேர்வு முடிவுகளும் வந்து மருத்துவ படிப்புக்கான கட்-ஆப் பட்டியல் வெளியானது.
எங்கள் எல்லோருக்கும் அதிர்ச்சி தரும் விதமாக என் அக்காவிற்கு அரசு மருத்துவ கல்லூரியில் இடம் கிடைக்கவில்லை. காத்திருப்போர் பட்டியலில் இரண்டாவதாக இருந்த அவளுக்கு 2 மதிப்பெண் வித்தியாசத்தில் இடம் கிடைக்க வில்லை. மனதிற்கு வருத்தமாகவே இருந்தது.
பத்தாம் வகுப்பு தேர்வெழுதி, முடிவுகளுக்காக காத்திருந்த நான், அன்று அதி காலையில் ஏதோ பேச்சு சத்தம் கேட்டு கண் விழித்தேன். என் அப்பா தான் என் அக்காவிடம் பேசிக் கொண்டிருந்தார்.
"... பணம் கொடுத்து எல்லாம் டாக்டர் சீட் வாங்குற நிலைமையில் நாம இல்லை... என்னம்மா செய்றது... பி.டி.எஸ் சீட் கட்டாயம் கிடைக்கும் அதையே பார்ப்போமா?" மெலிதாக ஒலித்த என் அப்பாவின் குரலில் நான் திடுக்கிட்டு போனேன்.
எப்போதும் கம்பீரமாக ஒலிக்கும் அந்த குரலில் இருந்த மாற்றம் மட்டும் அல்லாது, அதில் இழையோடிய வருத்தம் முதல் முறையாக என் தந்தையை என்னை புதிய பரிமாணத்தில் பார்க்க வைத்தது.
விஷயம்
அறிந்த என் இரண்டு பெரியப்பாக்களும், "அவங்க ரெண்டு பேரோட கல்யாணத்திற்கு காசு பணம் சேர்த்து வைக்காமல், ஏன்டா இப்படி படிப்புக்குன்னு செலவு செய்ற?" என்று ஒரே கோரஸில் சொல்லவும்,
எங்கே என் தந்தை அவர்களின் பேச்சை கேட்டு அக்காவை கலங்க வைத்து விடுவாரோ என்று ஒரு வினாடி கலங்கினேன். ஆனால் என் தந்தை,
கல்யாணத்துக்கு இன்னும் காலம் இருக்கே... இப்போ படிக்கட்டும்..." என்று சுருக்கமாக முடிக்கவும் தான், எனக்கு நிம்மதி வந்தது.
என் அக்கா பல் மருத்துவ கல்லூரியில் சேர்ந்து படித்தாள். மற்றபடி எங்கள் வீட்டில் பெரிய மாற்றம் ஏதுமில்லை. எப்போதும் கண்டிப்பாக இருக்கும் என் தந்தையின் பேச்சு எனக்கு எப்போதும் போல் அலுப்பாக தான் இருந்தது.
இந்த வீட்டில் இருக்கவே எனக்கு பிடிக்க வில்லை... எல்லோருக்கும் எவ்வளவு அன்பா பேசுற அப்பா இருக்காங்க...ச்சே.... எவ்வளவு சீக்கிரம் முடியுமோ அவ்வளவு சீக்கிரம் நான் இந்த வீட்டை விட்டு போக போறேன்...
அப்போ தான் எனக்கு நிம்மதி...." இது அவ்வப்போது என் அப்பாவிடம் எதற்காவது திட்டு வாங்கி கொண்டு நான் சொல்லும் என்னுடைய வழக்கமான வசனம்.
நாட்கள் ஓடின, நானும் என் பள்ளி படிப்பை முடித்து பொறியியல் கல்லூரியில் சேர்ந்தேன். தனியார் கல்லூரி என்ற போதும், அரசின் ப்ரீ சீட் எனப்படும் திட்டத்தில் எனக்கு இடம் கிடைத்திருந்தது.
தினமும் வீட்டில் இருந்து காலையிலும் மாலையிலும் இரண்டு மணி நேர பேருந்து பயணம்.
இரண்டு பேர் ஒரே நேரத்தில் தொழில் வல்லுநர் படிப்பு பயிலும் போது, செலவு அதிகமாவது இயல்பு தான். என் அக்காவின் படிப்பிற்கு புத்தகம் மட்டும் அல்லாது, பயிற்சிக்கு மருத்துவ கருவிகளும் வாங்க வேண்டி இருந்தது.
என்னுடைய புத்தகத்தின் விலையும் யானை விலை தான்! ஆனால் என் தந்தை மனம் கலங்க வில்லை எப்படியோ பாடுபட்டு பணம் புரட்டி எங்களுக்கு வேண்டிய பொருட்கள் உரிய நேரத்தில் கிடைக்குமாறு பார்த்துக் கொண்டார்.
இந்த நேரத்தில் என் தந்தையை பார்த்து பல முறை பிரமித்திருக்கிறேன்...
அவர் சற்று கடுமையும் கண்டிப்புமாக நடந்துக் கொண்டாலும் கூட, நாங்கள் கேட்டு எதையும் இல்லை என்றே சொன்னதில்லை... சிறு வயதில் நான் கேட்ட ஆறு நூறு ரூபாய் உடையையும் சேர்த்து தான்... எனக்கு தெரிந்து
எந்த ஒரு பண்டிகைக்கும் எங்கள் மூவருக்கும் ஆடைகள் வாங்குவாரே தவிர அவருக்கென்று அவர் எதுவும் வாங்கியதாக கூட எனக்கு நினைவு இல்லை...
அவரின் கண்டிப்பை மட்டும் பார்த்த நான், அவர் எங்களுக்காக செய்திருக்கும் எத்தனையோ விஷயங்களை அது வரை கவனிக்கவில்லை என்பது புரிந்தது... கடுமையும் கண்டிப்புமாக நடந்த போதும் அவர் ஒருமுறை கூட எதற்கும் கையை ஓங்கியது கூட இல்லை என்பது நினைவில் வந்தது...
என் தந்தையின் மீது எனக்கிருந்த தவறான எண்ணங்களை நினைத்து வருந்தினேன்... முடிந்த அளவில் வட்டிக்கு கடன் வாங்காது, சீட்டு கட்டியோ, அலுவலக லோன் மூலமோ அவர் எங்களின் படிப்பு செலவை சமாளிப்பதை பார்த்து பெருமை பட்டேன்...
அன்று எங்கள் வீட்டின் அருகில் இருந்த செல்வியின் அம்மா வந்திருந்தார்கள்... செல்வி என்னை விட ஒரு வருடம் மூத்தவள்.. செல்வியின் அம்மாவும் என்னுடைய அம்மாவும் சிநேகிதிகள்... அவ்வப்போது நேரம் கிடைக்கும் போது இருவரும் சந்தித்து ஊர் கதைகள் பேசுவார்கள்...
அவர்கள் பேசும் ஊர் கதையை தெரிந்துக் கொள்ள எனக்கும் ஆர்வம் உண்டு... அன்றும் ஏதோ செய்த படி அவர்கள் பேசுவதை கேட்டுக் கொண்டிருந்தேன்...
நல்லா படிக்குற பொண்ணு தானே... கொஞ்சம் செலவு செய்தாலும் அவளுக்கு பிடிச்ச படிப்பை படிக்க வைக்க வேண்டியது தானேன்னு சொன்னால்,
அவங்க சொல்றாங்க, வேற வீட்டுக்கு போய் சம்பாதிச்சு கொடுக்க போற பொண்ணுக்கு போய் நாம ஏன் இவ்வளவு செலவு செய்யனும்னு... எப்படி எல்லாம் இருக்காங்க பார்...."
நான் கேட்ட விஷயம் என்னை திகைக்க வைத்தது. அவர்கள் பேசும் குடும்பத்தை எனக்கும் தெரியும். எங்களை விட வசதி படைத்தவர்கள் தான்.
இப்படியும் கூட பெற்றோர் இன்னமும் இருக்கீறார்களா என்ன? என்னுடைய பெற்றோர் போல் எல்லோருக்கும் இல்லையே என்று வருத்தப் பட்டேன்... எனக்கு நல்ல பெற்றோரை கொடுத்த ஆண்டவா் இயேசுவுக்கு நன்றி சொல்லி கொண்டேன்...
என் தந்தை எப்போதும் சொல்வது போல் பாடத்தின் மீது கவனம் செலுத்த ஆரம்பித்தேன்.. கல்லூரி படிப்பு முடித்த போது, என் துறையில் முதல் மதிப்பெண் பெற்றதற்காக எனக்கு தங்க பதக்கம் வழங்கினார்கள்...
அது புகைப்படமாக நாளிதழ்களிலும் வந்தது... என் தந்தையின் முகத்தில் இருந்த பெருமிதம் கலந்த மகிழ்ச்சியை கண்டு நான் உள்ளம் மகிழ்ந்தேன்...
ஒரு நாளுக்கு நான்கு மணி நேரம் பயணம் செய்யும் உன்னால் எப்படி பாடத்தில் கவனம் செலுத்த முடிந்தது என்று கேட்ட என் தோழிகளிடம்,"
எல்லாம் என்னுடைய அப்பாவால்... என்று பெருமையோடு பதில் சொன்னேன்.
மாதம் கைநிறைய சம்பளம் கிடைக்கும் பணியில் நான் சேர்ந்த பின், முதல் சம்பளத்தில், என் பெற்றோருக்கு விலை உயர்ந்த ஆடைகள் வாங்கி தந்தேன்...
என் அம்மாவிற்கு மிக்க மகிழ்ச்சி என்றால் என் தந்தை முகத்தில் எந்த மாற்றமும் இல்லை... எப்போதும் போல் கடுமையாகவே இருந்தது...
இந்த மாதிரி எல்லாம் தேவை இல்லாமல் வாங்கி பணத்தை செலவு செய்யாதே.... என்றார் வழக்கமான கண்டிக்கும் குரலில்.
சுள்ளென்று தைத்தன அவரின் வார்த்தைகள். மனதில் வருத்தம் தோன்றியது. இரண்டு நாட்கள் கழித்து என் தந்தையின் சிநேகிதரை வழியில் பார்த்த போது,
"என்னம்மா அமுதா... உங்க அம்மா அப்பாவுக்கு டிரஸ் எல்லாம் வாங்கி கொடுத்த போல இருக்கு... கண்ணன் சொல்லி ரொம்ப சந்தோஷப் பட்டான்....
. நீ வாங்கி கொடுத்ததுன்னு சொல்லும் போது அவன் முகத்தில பெருமைய பார்க்கனுமே....." என்று அவர் சொன்னபோது, சட்டென்று எனக்கு ஒரு உண்மை விளங்கியது...
என் தந்தை
ஒன்றும் ஆசை இல்லாத கல் இல்லை... அவருக்கும் மனதில் ஆசைகள் இருக்கின்றன... ஆனால் எங்களுக்காக....
அவருடைய பிள்ளைகளுக்காக அவர் அதை எல்லாம் விட்டு விலகி வாழ்கிறார்.... அவருக்கு தன் அன்பை வெளியில் காட்ட தெரியவில்லை.. என் மனதில் அப்பாவின் மீதிருந்த பாசம் பன்மடங்காக பெருகியது!
நானும் என் அக்காவுமாக சேர்ந்து என் பெற்றோருக்கு பிடித்த மாருதி கார் வாங்கி தந்தோம்...
வழக்கம் போல் என் தந்தையின் கண்டிப்பான பேச்சு என்னை இந்த முறை வருத்தவில்லை.
பின்னர் என்ன? நாட்கள் ஓடின... அக்காவிற்கு திருமணம் ஆனது... அப்பா கட்டியிருந்த சீட்டு பணத்தின் மூலம் பெரிய பிரச்சனை ஏதும் இல்லாது அவளின் திருமணம் நடந்தது...
பின் எனக்கும் திருமணம் ஆனது...
என் கணவரின் அனுமதியோடு மாதம் ஒரு சிறு தொகையை அப்பாவின் வங்கி கணக்கில் போடுவதை வழக்கம் ஆக்கி கொண்டேன்...
கையில் கொடுத்தால் அவர் வாங்க மாட்டார் என்பது எனக்கு தெரியும்.
என் மகளின் முதல் பிறந்த நாள் விழாவின் போது, அப்பா என் கையில் ஒரு அட்டையை வைத்தார், என்ன என்று வியப்புடன் பார்த்த என்னிடம்
,"நீ ஒவ்வொரு மாசமும் போடுற பணத்துல உன் மகள் பேர்ல போஸ்ட் ஆபிசில ரெக்கரிங் டெபாசிட் ஒன்னு கட்டிட்டு இருக்கேன்... இந்த கார்டு உன்கிட்ட இருக்கட்டும்...." என்றார்.
பிரமித்து போனேன்...
இவரால் எப்படி எப்போதும் பிள்ளைகளுக்காகவே வாழ முடிகிறது?
அவர் எங்களுடன் என் அம்மாவை போல் சிரித்து பேசாது இருக்கலாம்... ஒரு நண்பனாக பழகாமல் இருக்கலாம்...
ஆனால், ஒரு பேச்சுக்கு கூட பெண் என்றோ மகள் தானே என்றோ பாகுபாடு சிறிதும் பாராது, வியர்வை சிந்த உழைத்து,
எங்கள்
இருவரையும் சொந்த காலில் நிற்க வைக்கும் கல்வி தந்து, ஒரு நல்ல வாழ்வும் அமைத்து தந்து... இப்படி எங்களுக்கு எல்லாம் செய்த அவருக்கு நாங்கள் இருவரும் என்ன கைமாறு செய்ய முடியும்? இந்த ஜென்மத்தில் செய்யக் கூடியது எதுவும் இல்லை.....
மனதில் சொல்லிக் கொண்டேன்...
"My daddy is the best ....
"My daddy is a HARD WORKING family man.. in one word...my daddy is a second God..
மனதை அழுத்திய சிந்தனையில் இருந்து விடு பட்டு, கையில் இருந்த கைபேசியை எடுத்து தட்டினேன், என் அப்பாவை அழைத்து பிறந்த தின வாழ்த்து தெரிவிக்க.......
என் அன்புக்குாியவா்களே,
இந்த கதையில் வரும் தந்தை தான் பெற்றெடுத்த பிள்ளைகளின் வாழ்வில் பெரிய நட்சத்திரமாகவும் இரண்டாவது கடவுளாகவும் இருக்கிறாா். அதற்காகத் தான் குடும்பத்திற்கு அவரை தலையாக தேவன் வைத்திருக்கிறார்.
பிள்ளைகளுக்குச் சம்பாதிதது அவர்களுக்குப் படிப்பு, எதிர்கால வாழ்க்கைக் கொடுக்கும்படி ஒவ்வொரு தந்தைக்குள்ளும் திறமையையும், சம்பாதிக்கும் பெலனையும், சமாா்த்தியத்தையும் பாிபூரணமாய் வைத்திருக்கிறாா். (உபா 8:17,18)
பல தந்தைகள்
இதைத் புாிந்து கொண்டு தனக்குள் தேவன் வைத்துள்ள திறமை, சமாா்த்தியம், ஆகியவை வெளிப்படும்படி தனக்கு தலையாக இருக்கும் இயேசுவை மையமாக வைத்து கடனில்லாத வாழ்க்கை நடத்தி தன் மனைவி பிள்ளைகளை பராமாிக்கிறாா்கள்.
பிள்ளைகளுக்கு
படிப்பு, வாழ்க்கை மற்றும் வசதிகள் அனைத்தும் செய்து கொடுக்கிறாா்கள். மட்டுமல்ல பேரப் பிள்ளைகளுக்கும் சொத்து சோ்த்து வைக்கும் அளவுக்கு ஞானமாய் செயல்படுகிறார்கள். மொத்ததில் குடும்பத்திற்காகவே தன்னை அர்ப்பணித்துக் கொள்கின்றனா்.
பைபிள் சொல்கிறது...
நல்லவன்
தன் பிள்ளைகளின் பிள்ளைகளுக்குச் சுதந்திரம் வைத்துப்போகிறான்: பாவியின் ஆஸ்தியோ நீதிமானுக்காகச் சேர்த்துவைக்கப்படும்.
(நீதிமொழி. 13 :22)
வீடும் ஆஸ்தியும் பிதாக்கள் வைக்கும சுதந்திரம்: புத்தியுள்ள மனைவியோ கர்த்தர் அருளும் ஈவு. (நீதிமொழி. 19 :14)
...உன் தேவனாகிய கர்த்தர் உன்னுடைய எல்லாக் கிரியைகளிலும், நீ கையிட்டுச் செய்யும் எல்லாக் காரியங்களிலும் உன்னை ஆசீர்வதிப்பார். (உபாகமம் 15:10)
கர்த்தர் உன் களஞ்சியங்களிலும், நீ கையிடும் எல்லா வேலையிலும் உனக்கு ஆசீர்வாதம் கட்டளையிடுவார், உன் தேவனாகிய கர்த்தர் உனக்குக் கொடுக்கும் தேசத்திலே உன்னை ஆசீர்வதிப்பார்.
வேலை, தொழில், வியாபாரம், விவசாயம், தேவனுக்குச் செய்யும் ஊழியம்,பிள்ளைகளின் வாழ்வு ஆகிய உன் சகலவற்றிலும் உனக்குப் பரிபூரண நன்மை உண்டாகக் கட்டளையிடுவார்.
ஏற்றகாலத்தில் உன் தேசத்திலே மழை பெய்யவும், நீ கையிட்டுச்செய்யும் வேலைகளையெல்லாம் ஆசீர்வதிக்கவும், கர்த்தர் உனக்குத் தமது நல்ல பொக்கிஷசாலையாகிய வானத்தைத் திறப்பார்,
நீ அநேகம் ஜாதிகளுக்குக் கடன்கொடுப்பாய், நீயோ கடன் வாங்காதிருப்பாய். கர்த்தர் உன்னை வாலாக்காமல் தலையாக்குவார், நீ கீழாகாமல் மேலாவாய். (உபாகமம் 28: 8-14)
உன் கைகளின் பிரயாசத்தை நீ சாப்பிடுவாய், உனக்குப் பாக்கியமும் நன்மையும் உண்டாயிருக்கும்.
இதுபோல தினம் ஒரு குட்டிக்கதை வேண்டும் என்றால் தொடர்புக்கு +917904957814
உன் மனைவி உன் வீட்டோரங்களில் கனிதரும் திராட்சக்கொடியைப்போல் இருப்பாள்,
உன் பிள்ளைகள் உன் பந்தியைச் சுற்றிலும் ஒலிவமரக் கன்றுகளைப்போல் இருப்பார்கள்.
இதோ, கர்த்தருக்குப் பயப்படுகிற மனுஷன் இவ்விதமாய் ஆசீர்வதிக்கப்படுவான்.
கர்த்தர் சீயோனிலிருந்து உன்னை ஆசீர்வதிப்பார், நீ ஜீவனுள்ள நாளெல்லாம் எருசலேமின் வாழ்வைக் காண்பாய்.
சங்கீதம் 128:2-5
இந்த வசனங்களில்
உள்ள அனைத்து ஆசீா்வாதங்களை நீங்கள் பெற்றுக் கொண்டு உங்கள் குடும்பத்தையும், விசேஷமாக உங்கள் பிள்ளைகளைக்கு மேன்மையும்,உயா்வையும், எதிர்கால வாழ்வையும் அமைத்துக் கொடுங்கள்.
கா்த்தா் பார்த்துக் கொள்வாா் என்று ஜெபித்துக் கொண்டிராமல் தேவனை விசுவாசித்து செயல்படுங்கள்.நீங்கள் செயல்படுகிறீா்கள் என்பதை தேவன் பாா்க்கும் போது உங்கள் பிள்ளைகளுக்காக ஆயத்தம் பண்ணினதை வாய்க்க செய்வார். உங்களைத் தேடி வரச் செய்வாா்.
பாரம்பாியமாய ஊழியம் செய்கிற அநேக ஊழியா்கள் விசுவாசிகளுக்கு ஊழியம் செய்வாா்கள். ஆனால் பிள்ளைகளைப் குறித்து கா்த்தா் பார்த்துக் கொள்வாா் என்று சொல்லி ஜெபித்தே காலம் கடத்துவாா்கள்.
விசுவாசித்து செயல்பமாட்டாா்கள். ஏனென்றால் அடுத்தவர்களுக்கு பிரசங்கம் தயாாிப்பதிலும், பிரசங்கம் செய்வதிலும் தங்கள் நாட்களை கடத்திக் கொண்டிருக்கின்றனா்.
அதினதின் காலத்தில் எல்லாவற்றையும் தேவன் நோ்த்தியாய் செய்திருக்கிறார். அதாவது நோ்த்தியாய் செய்து முடித்து வைத்திருக்கிறாா்.( பிர. 3:11)
அதை விசுவாசித்து பெற்றுக் கொண்டு பிள்ளைகளை மேன்மைக்குள் கொண்டு வாருங்கள் தநதைகளே!
சில ஊதாாியான தந்தைகள் சம்பாதிக்கும் பணத்தை சாராயம் குடித்தும், பல மோசமான வழிகளில் சென்று மனைவி, பிள்ளைகளை பட்டினி போடுகிறாா்கள்.மனைவி பிள்ளைகளை அடிக்கிறாா்கள். தந்தை என்ற சொல்லுக்கே அா்த்தமில்லாதவா்களாயிருக்கிறாா்கள்.
அதனால் அவன்
மனைவி தன்னால் முடிந்த வேலைக்குச் சென்று பிள்ளைகளுக்கு உணவு, உடை, படிப்பு கஷ்டப்பட்டுக் கொடுக்கிறாா்கள். அநேக பிள்ளைகள் படிக்க போகாமல் சிறு வயதிலேயே வேலைக்குச் சென்று விடுகின்றனர்.
இவன் தந்தையாவதற்கு முன்னே தன் வாலிப காலத்தில் ஊதாாியாக, பொறுப்பற்றவனாகவே வளர்ந்தவன். இவனுக்கு கல்யாணம் பண்ணி விட்டால் சாியாகிவிடுவான். என்று கோமாளி களைப் போலிருக்கிற பல பொியவா்களின் வாா்த்தை இன்று பல குடும்பங்கள் மோசமாய் போவதற்கு காரணமாய் அமைகிறது.
ஒருவன் கல்யாணம் பண்ணுவதற்குத் தகுதி என்னவானாலும் இருக்கலாம் அல்லது இல்லாமல் கூட இருக்கலாம்.
ஆனால்
சுவிசேஷத்தின் மூலமாக தேவனுடைய பிள்ளையாக, இயேசுவின் இரட்சிப்பைப் பெற்ற ஒருவனுக்குள் தான் தேவன் தகுதியில்லாத அவனை எல்லாவற்றிலும் கிருபையைக் கொண்டு
நல்ல தந்தைக்குாிய சகல திறமைகளையும் சமாா்த்தியத்தையும். வைத்து அவனை குடும்பத்திற்கு நல்ல தலைவனாக்குகிறாா்.
தந்தை சொல்மிக்க மந்திரம் இல்லை.
தாயற் சிறந்த கோயிலும் இல்லை. என்ற நம் தமிழ்செய்யுள் போல பெற்றோா்களை தேவன் இரண்டாவது கடவுளாகவே பிள்ளைகளுக்கு தேவன் வைத்திருககிறாா்.
பிள்ளைகள் பெற்றோருக்குத் தெரியாமல் என்ன செய்தாலும் முதல் கடவுளான நம் தேவன் அதை வாய்க்க செய்யமாட்டாா்.
பிள்ளைகளே,
பெற்றோரை விடநீங்கள் எல்லாவற்றிலும் மேன்மையாய் உயா்ந்ததற்குக் காரணம் என்ன தெரியுமா உங்கள் தந்தை தான்.
அதை தேவன் தான் உங்களுக்காக ஏற்படுத்தி வைத்து இருக்கிறாா் என்பதை மறந்து போகாதிருங்கள். உங்கள் எதிர்கால வாழ்வை உங்கள் தநதையின் மூலமாக தேவன் அற்புதமாக அமைத்து தருவாா் என்பது நிச்சயம்!!
நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள் !!!
==============
ஓர் குட்டிக் கதை
பணஆசை
===============
ஒரு ஊரில் ராமசாமி என்ற சுயநலமிக்க செல்வந்தர் ஒருவர் வாழ்ந்து வந்தார். அவர் ஊருக்கு சென்று திரும்பும் வழியில் 30 தங்க நாணயங்கள் இருந்த பையை தொலைத்துவிட்டார்.
இதனால் வருத்தமடைந்த செல்வந்தர் தனது நண்பர் குருவிடம் நடந்ததை கூறி புலம்பினார்.
சில நாட்கள் கழித்து குரு ஊரிலிருந்து திரும்பும்போது வழியில் ஒரு பையில் தங்க நாணயங்கள் இருப்பதை கண்டார். அந்த பை ராமசாமியுடையது என தெரிந்துகொண்ட குரு அதை அவரிடம் கொடுத்தார்.
குருவிடமிருந்து தங்க நாணயங்களை பெற்றுக்கொண்ட ராமசாமி, இதை வைத்து ஒரு திட்டம் தீட்ட நினைத்தான்.
அவன் குருவிடம்,
நான் இந்த பையில் 40 தங்க நாணயங்களை வைத்திருந்தேன். இந்த பையில் இப்போது 30 தங்க நாணயங்களே உள்ளன, அதனால் மீதமிருக்கும் 10 நாணயங்களை திருப்பி தரவேண்டுமென குருவிடம் கூறினார்.
குருவோ
மிகவும் நல்லவர். பிறரின் பொருட்களுக்கு ஆசைப்படாத அவரது குணத்தை பற்றி அனைவருக்கும் தெரியும்.
இதனால்
இந்த குழப்பத்திற்கு முடிவுகட்ட நண்பர்கள் இருவரும் ஊர் தலைவரிடம் சென்றனர். விவரத்தை கேட்ட ஊர் தலைவர், ராமசாமியிடம், நீ எவ்வளவு தங்க நாணயங்களை தொலைத்தாய் என கேட்டார்.
அதற்கு அவர் 40 தங்க நாணயங்கள் என பொய் கூறினான். இப்போது ஊர் தலைவர் குருவை பார்த்து நீ எவ்வளவு தங்க நாணயங்களை கண்டுபிடித்தை என்றார் அதற்கு அவர் 30 தங்க நாணயங்கள் என்றார்.
இருவரின் பதிலையும் கேட்ட ஊர்த்தலைவர் ராமசாமியை பார்த்து, குரு கண்டறிந்திருப்பது வெறும் 30 தங்க நாணயங்கள்,
நீ தொலைதிருப்பதோ 40 தங்க நாணயங்கள் எனவே இது உன்னுடையதாக இருக்க முடியாது. இனி யாராவது 40 தங்க நாணயங்களை கொண்டுவந்தால் உனக்கு சொல்லி அனுப்புகிறேன், இப்போது நீ கிளம்பலாம் என்றார்.
இப்போது குருவைப்
பார்த்த தலைவர் நீ கண்டுபிடித்திருப்பது ராமசாமியின் தங்க நாணயங்கள் கிடையாது, எனவே இதை நீயே வைத்துகொள்ளலாம் என்றார்.
திருடனுக்கு
தேள் கொட்டிய கதை போல, ஊர்த்தலைவரின் தீர்ப்பை கேட்ட ராமசாமிக்கு என்ன செய்வதென்று புரியவில்லை.தான் கூறிய பொய்யால் தனக்கு நேர்ந்த சங்கடத்தை எண்ணி வருத்தபட்டார்.
தனது
தவறை உணர்ந்த அவர், இனி சுயமில்லாத நேர்மையான மனிதராக வாழவேண்டும் என முடிவுசெய்தார்
என் அன்பு வாசகரே,
பொருளாசை நேர்மையற்ற நிலையை உண்டுபண்ணும். பொருளாசையை வெறுத்து விடுங்கள்.
30 நாணயங்களுக்கு பதிலாக 40 நாணயங்கள் என்று சொல்கிற இவா் 30 நாணயங்கள் தன்னை விட்டு போய்விடும் என்று நினைத்திருந்தால் 10 நாணயங்களை சோ்தது
சொல்லியிருக்கமாட்டாா்.
பண ஆசையும்,பொருளாசையும் வறுமையை தான் உண்டுபண்ணும் என்று அறியாமல் இருக்கிறாா்கள்.
பைபிள் சொல்கிறது....
நீங்கள் பணஆசையில்லாதவர்களாய் நடந்து, உங்களுக்கு இருக்கிறவைகள் போதுமென்று எண்ணங்கள். நான் உன்னைவிட்டு விலகுவதுமில்லை, உன்னைக் கைவிடுவதுமில்லை என்று அவர் சொல்லியிருக்கிறாரே. (எபிரேயர் 13 :5)
இருக்கிறவைகள் போதுமென்ற எண்ணம் இருந்தாலே பற்றாக்குறையை அவர் கூட இருந்து பார்த்துக் கொள்வாா். அவா் தேவையோடு கூட இருக்கும் போது கைவிடுகிற தேவனில்லை என்பதை மறந்து போகாதிருங்கள்.
தம்முடைய சொந்தக்குமாரனென்றும் பாராமல் நம்மெல்லாருக்காகவும் இயேசுவையே ஒப்புக்கொடுத்தவர்அவரோடேகூட உங்களுக்குத் தேவையான எல்லாவற்றையும் உங்களுக்கு அருளாதிருப்பதெப்படி? (ரோமர் 8:32)
தேவன் தான் என் தகப்பன் நான் தேவனுடைய பிள்ளையாயிருக்கிறேன். என்று உங்களை நீங்கள நினைத்தாலே உங்களுடைய எண்ணம் பணஆசைக்கோ, பொருளாசைக்கோ சென்று விடாது. மனம் குறுக்கு வழிக்கு செல்லாது. அடுத்தவர்கள் எல்லையிலுள்ள இடத்தை நீங்கள சோ்த்து விட மாட்டார்கள்.
நீதிமொழிகளில் வாசிக்கிறோம்.
என் மகனே,
பாவிகள் உனக்கு நயங்காட்டினாலும் நீ சம்மதியாதே. எங்களோடவா, இரத்தஞ்சிந்தும் நாம் பதிவிருந்து, குற்றமற்றிருக்கிறவர்ளை முகாந்தரமின்றிப் பிடிக்கும்படி ஒளித்திருப்போம்,
பாதாளம் விழுங்குவதுபோல் நாம் அவர்களை உயிரோடு விழுங்குவோம், குழியில் இறங்குகிறவர்கள் விழுங்கப்படுவதுபோல் அவர்களை முழுமையும் விழுங்குவோம்,
விலையுயர்ந்த சகலவிதப் பொருள்களையும் கண்டடைவோம்: கொள்ளைப் பொருளினால் நம்முடைய வீடுகளை நிரப்புவோம்.
To Get Daily Story In What's App Contact +917904957814
எங்களோடே பங்காளியாயிரு, நம்மெல்லாருக்கும் ஒரே பை இருக்கும் என்று அவர்கள் சொல்வார்களாகில்,
என் மகனே, நீ அவர்களோடே வழி நடவாமல், உன் காலை அவர்கள் பாதைக்கு விலக்குவாயாக. அவர்கள் கால்கள் தீங்குசெய்ய ஓடி, இரத்தஞ்சிந்தத் தீவிரிக்கிறது.
எவ்வகையான பட்சியானாலும் சரி, அதின் கண்களுக்கு முன்பாக வலையை விரிப்பது விருதா. இவர்களோ தங்கள் இரத்தத்திற்கே பதிவிருக்கிறார்கள், தங்கள் பிராணனுக்கே ஒளிவைத்திருக்கிறார்கள்.
பொருளாசையுள்ள எல்லாருடைய வழியும் இதுவே: இது தன்னையுடையவர்களின் உயிரை வாங்கும். (நீதிமொழிகள் 1:10-19)
அடுத்தவர்களின் குண்டூசிக்கூட நம் வீட்டில் இருக்கூடாது என்று நினையுங்கள். தேவன் நமக்கு போதுமானவராயிருக்கிறாா். போதுமானவா்மட்டுமல்ல. போதுமானவாிலும் மிகவும் அதிகமாய் இருக்கிறாா்.
நீங்கள் எப்போதும் தேவனுடைய பிள்ளைகளாய் இருக்கிறீா்கள் என்ற சிந்தனையை ஆவியானவா் உங்களுக்கு தந்தருள்வாா்.
நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள் !!!
Thanks for using my website. Post your comments on this