===============
ஓர் குட்டிக் கதை
இலவசம்
=================
பெரம்பலூர் என்கிற இடத்தில் கடந்த இரண்டு மாதங்களாக பொருட்காட்சி துவங்கி, முடியும் நாட்களாகி விட்டது என்றாலும் வரும் மக்களின் எண்ணிக்கையோ குறையும் இல்லை.
ஒரு பக்கம் வண்ண வண்ண விளக்குகள் ஜொலிக்க விதவிதமான ராட்டினங்கள் மறுபக்கம் சுழன்றுகொண்டிருந்தது!
சிறுவர்களின் உற்சாகமும், சத்தமும் அந்த பகுதில் குறையவேயில்லை.
வரிசை வரிசையாக போடப்பட்டிருந்த கடைகளில் அழகு சாதனப் பொருள்களும் சிறுவர்களை கவரும் விளையாட்டுச் சாமான்களும் பொம்மைகளும் குவிக்கப்பட்டிருந்து.
ஆனால் ஒரு கடையில் மட்டும் வித்தியாசமான விளக்குகள் அலங்கரிக்க, அந்த வழியாக நடந்து செல்வோர் ஈர்க்கும் விதத்தில் மேஜையின் மேல் அழகான ஆப்பிள்கள் அடுக்கி வைக்கப்பட்டு இருந்தன.
தூரத்திலிருந்து பார்க்கும்போதே அது என்ன வகை ஆப்பிளாக இருக்கும் என்று யோசித்தபடி அநேகர் வந்தனர் .கடையின் அருகே வரும்போது தான் ஆப்பிளின் அருகே "இலவசம்" என்ற போா்டு வைக்கப்பட்டிருந்ததும் தெரிந்தது.
பொருட்காட்சிக்கு வந்த தாவரவியல் நிபுணர் தன் நண்பரிடம், 'வாவ்' இந்த ஆப்பிள் எவ்வளவு அழகாக இருக்கிறது.
புதுமையான இவ்வகை ஆப்பிள் இந்தியாவில் கிடைக்காது அதிலும் "இலவசம்" என்று போட்டு இருக்கு பாரு என்றபடி ஆர்வமும் வியப்பும் சந்தோசமும் கலந்த உணர்வோடு கடையின் முன் நின்று கொண்டிருந்தார்.
தாவரவியல் நிபுணர் உடன் வந்திருந்த நண்பர் ஒரு வியாபாரி என்பதால் இப்படி ஒரு ஆப்பிளை நான் பார்த்ததே இல்லையே. வெளிநாட்டு பழம் என்று வேறு சொல்கிறாய்.
அப்படியானால் அதன் ருசி பிரமாதமாக இருக்குமே. இந்த பழங்களை வாங்கி நல்ல விலைக்கு விற்றால் அதிக லாபம் கிடைக்குமே என்ற ஆதாய நோக்கத்தோடு....
அப்பகுதியில் பார்வையிட்ட ஓவிய கலைஞர் ஒருவர், அந்த ஆப்பிளின் அழகை வைத்த கண் வாங்காமல் ரசித்து பாா்த்ததோடு தன் கரத்தில் இருந்த டைரியில் அந்த அந்த ஆப்பிளை தத்ரூபமாக வரையவும் தொடங்கினார்.
"சூப்பராக ஆப்பிளா இருக்கு.... அதிலும் பார்க்காத, கிடைக்காத அரிய வகை ஆப்பிளா இருக்கிறதே... இவ்வளவு கூட்டம் கூடுகிற இடத்தில இலவசம் என்று எப்படி சொல்றாங்க...?
எப்படி எல்லாருக்கும் சும்மா கொடுக்க முடியும்? அவங்க வீட்டுல காசு கொட்டிக்கிடக்குது என்ற ஆராய்ச்சியில் இறங்கி இருந்தது தூர நின்று வேடிக்கை பார்த்த மற்றொரு கூட்டம்.
ஆனால் இவர்கள் எல்லாரும் கடையின் முன் வேடிக்கை நின்று பாா்த்து கொண்டிருந்த போது அங்கு ஒரு குழந்தையை கையில் பிடித்தபடி பெற்றோர் வந்தனர்.
அவர்கள் அந்த ஆப்பிள்ளை பார்த்துக் கொண்டிருந்தபோதே அந்த குழந்தை ஆப்பிள் அடுக்கி வைக்கப்பட்டு இருந்த மேசையை நோக்கி ஓடியது....
To Get Daily Story In What's App Contact +917904957814
எல்லோரும் அந்த குழந்தையை என்ன செய்யப்போகிறது என்று நினைக்கும்போதே ஆப்பிளை எடுத்து கடித்து சாப்பிட ஆரம்பித்தது.
எல்லோரும் ஆச்சாியப்பட்டு, வியந்தனா்...
என் அன்புக்குாியவா்களே,
இதைப்போல தான் நமக்கும் தேவையான நன்மை, ஆசீர்வாதம், சந்தோஷம், சமாதானம், தெய்வீக சுகம், ஐஸ்வாியம் போன்ற எல்லாம் வேத வசனங்களில் அடங்கி இருக்கிறது.
இலவசம் என்ற போா்ட் வைத்தும் அவர்கள் ஒருவரும் எடுத்து சாப்பிடவில்லை. அதைக் குறித்து உண்மையானதா என்ற சந்தேகம், சாப்பிட்டா ஏதாவது ஆகிவிடுமோ என்ற பயம்,
அது எப்படிங்க வெளிநாட்டு ஆப்பிளை சும்மா கொடுப்பாங்க சாப்பிட்டபின் இருக்கிற ரூவாய பிடுங்கிடுவாங்க என்ற கற்பனை இதெல்லாம் சாப்பிடவே கூடாதென்ற மனநிலையை உண்டு
பணணிவிட்டது.
வேதம் சொல்கிறது.
எல்லாரும் பாவஞ்செய்து, தேவமகிமை அற்றவர்களாகி, இலவசமாய் அவருடைய கிருபையினாலே கிறிஸ்து இயேசுவிலுள்ள மீட்பைக்கொண்டு நீதிமான்களாக்கப் படுகிறார்கள், (ரோமர் 3:23,24)
பவுல் சொல்கிறாா்
நீங்கள் உயர்த்தப்படும்படி நான் என்னைத்தானே தாழ்த்தி, தேவனுடைய சுவிசேஷத்தை இலவசமாய் உங்களுக்குப் பிரசங்கித்ததினாலே ....(2 கொரிந்தியர் 11:7)
இயேசு சொல்கிறாா்.
நான் அல்பாவும் ஓமெகாவும், ஆதியும் அந்தமுமாயிருக்கிறேன். தாகமாயிருக்கிற வனுக்கு நான் ஜீவத்தண்ணீரூற்றில் இலவசமாய்க் கொடுப்பேன்.
(வெளிப்படுத்தின விசேஷம் 21:6)
தாகமாயிருக்கிறவன் வரக்கடவன், விருப்பமுள்ளவன் ஜீவத்தண்ணீரை இலவசமாய் வாங்கிக்கொள்ளக்கடவன்.
(வெளிப்படுத்தின விசேஷம் 22:17)
இயேசு
ஊழியக்காரகளுக்கு சொல்லியிருக்கிறாா்.
நீங்கள் ஊழியத்திற்கு போகையில், பரலோகராஜ்யம் சமீபித்திருக்கிறது என்று பிரசங்கியுங்கள். வியாதியுள்ளவர்களைச் சொஸ்தமாக்குங்கள், குஷ்டரோகிகளைச் சுத்தம்பண்ணுங்கள், மரித்தோரை எழுப்புங்கள், பிசாசுகளைத் துரத்துங்கள், இலவசமாய்ப் பெற்றீர்கள், இலவசமாய்க் கொடுங்கள். என்றாா். (மத்தேயு 10:7,8)
இயேசு சிலுவை மரணத்தினால் பாவம் சாபம் வியாதி, தாித்திரம் ஆகியவைகளை அதை நிவா்த்தி செய்து விட்டாா்.
அவருடைய
நீதி, ஆசீா்வாதங்கள்,ஐஸ்வா்யம்,தெய்வீக சுகம், ஆரோக்கியம் ஆகியவைகளை அவரை விசுவாசித்து தெய்வமாய் ஏற்றுகொண்டிருக்கிற அத்தனை பேருக்கும் இலவசமாய் கொடுத்திருக்கிறாா்
நீங்கள்
விசுவாசியுங்கள் உடனே பெற்றுக் கொள்வீா்கள்.
நீங்கள் இவைகளை அனுபவிக்க தான் இயேசு சிலுவை மரணத்தினால் இலவசமாய் கொடுத்திருக்கிறாா். ஆனால் அந்த இலவசத்தை குறித்து பேசவும் ஆராய்வோ ஆச்சரியப்படவோ செய்கிறீா்களேத் தவிர அதை அனுபவிக்கிற மனநிலையில் இதுவரை இல்லாமல் இருந்தீர்கள்.
ஆசீர்வாதங்கள் பொதிந்த வசனங்களை நீங்கள் வாசித்து தியானித்து உங்கள் வாழ்வில் அந்த சிறு குழந்தை போல ஆசையாய் தெய்வீக சுகம், ஐஸ்வாியம், ஆகியவைகளை அனுபவியுங்கள்.
எனவே தான் வேதம் கூறுகிறது
நாம் அனுபவிக்கிறதற்குச் சகலவித நன்மைகளையும் நமக்குச் சம்பூரணமாய்க் கொடுக்கிற ஜீவனுள்ள தேவன்மேல் நம்பிக்கை வையுங்கள். அனுபவியுங்கள்.
(1 தீமோத்தேயு 6 -17)
நீங்கள் ஆசீா்வதிக்கப்பட்டவா்கள்!!!
==============
ஓர் குட்டிக் கதை
இரண்டு சீடர்கள்
=============
ஒரு காட்டில் கருணைவேந்தன் என்ற முனிவர் ஆசிரமத்தை அமைத்து தம் சீடர்களுக்குக் கல்வி புகட்டி வந்தார். அவரது சீடர்களில் எல்லாச் சீடர்களையும் விட முன்னதாக விளங்கினர் மகிமைதாசன், சந்துரு என்பவர்கள்.
ஒரு நாள் கருணைவேந்தன் அந்த இரு சீடர்களையும் அழைத்து, “”நீங்கள் இருவரும் என் சீடர்களில் சிறந்தவர்களாக விளங்குகிறீர்கள். நீங்கள் என்னிடம் கற்க வேண்டியது எல்லாம் கற்றாகி விட்டது. இனி உங்கள் இருப்பிடங்களுக்கு செல்லலாம்,” என்றார்.
அவர்கள் பிரதியுத்திரமாக , ”குரு சிரேஷ்டரே! எங்களுக்கு இப்போது அபூர்வ சக்திகள் கிடைத்துள்ளன. எங்கள் சக்தி கண்டு மற்ற மனிதர்கள் எங்களைச் சீண்டி துன்புறுத்தினால் நாங்கள் கோபம் அடைந்து அவர்களைச் சபித்தாலும் சபித்து விடுவோம். எங்களுக்குச் சாபம் கொடுக்கத்தான் தெரியும். கொடுத்த சாபத்தை விலக்கும் முறை தெரியாது. எனவே, அதையும் நீங்கள் எங்களுக்குக் கற்பித்தால் எல்லாருக்கும் நன்மை உண்டாகுமே!” என்றனர்.
அப்படியானால் தன் ஆசிரமத்தில் மேலும் ஒரு மாதம் தங்கும் படிக் கூறினார். இரண்டு வாரங்களுக்குப் பின், “”சாபத்தை விலக்கும் முறையை அறிய கடும் உபாசனை மேற்கொள்ள வேண்டும். அது எல்லாராலும் முடியாது. உனக்கு அதனைக் கூறுகிறேன்,” என்றார்.
சந்துரு மிகவும் மகிழ்ந்து போனான். அவன் தன் குரு கூறியபடி உபாசனையை செய்யலானான். அதே சமயம் கருணைவேந்தன் மகிமைதாசனை அழைத்து, “”நீ இனியும் இங்கே இருப்பது வீணே. உன்னால் சாபத்தை விலக்கும் முறையைக் கற்க முடியாது என்று எனக்குத் தெரிந்து போயிற்று. அதனால் மிகுந்த எச்சரிக்கையுடன் நடந்து கொள்,” என்று கூறி அவனுக்கு விடை கொடுத்து அனுப்பிவிட்டார்.
சந்துரு தன் உபசானையை முடித்துக் கொண்டு குருவிடம் விடை பெற்று தன் ஊருக்குப் போய்ச் சேர்ந்தான். இதற்குப் பின் ஐந்தாறு ஆண்டுகள் சென்றன.
ஒரு நாள் அந்நாட்டு மன்னன் மாரவர்மன், கருணைவேந்தனை தன் தர்பாருக்கு வரும்படி ஆட்களை அனுப்பினான். மன்னன் அனுப்பிய ரதத்தில் அமர்ந்து அரண்மனையை அடைந்தார் குரு.
“”நான் என் தர்பாரில் தகுதியும் திறமையும் பெற்ற ராஜகுரு ஒருவரை நியமனம் செய்ய விரும்புகிறேன். அப்பதவிக்கு ஏற்றவர்கள் தங்களது சீடர்களான மகிமைதாசனையும், சந்துருவையும் எல்லாரும் பரிந்துரைக்கின்றனர்.
“”சந்துரு நாடெங்கிலும் பயணம் செய்து மிகவும் சக்தி வாய்ந்தவன் எனப் பெயர் பெற்றிருக்கிறான். அவனைக் கண்டு கொடியவர்கள் நடுங்கி தம்மைத் திருத்திக் கொண்டு நல்லவர்களாக ஆகிவிடுகின்றனர்.
“”அவனுக்குப் பல சீடர்கள் கூட இருக்கின்றனர். அவர்கள் தம்மை “தாச சேனை’ எனக் கூறிக் கொண்டு கொடியவர்களைத் தேடிப் பிடித்து தம் குருவின் முன் கொண்டு போய் நிறுத்துகின்றனர். அக்கொடியவர்கள் எங்கே சந்துரு தங்களை சபித்து விடுவானோ எனப் பயந்து திருந்தி விடுகின்றனர்,” என்றார்.
“”அப்படியா? சரி! மகிமைதாசனைப் பற்றி என்ன தெரிந்து கொண்டீர்கள்?” என்று கேட்டார்.
“”அவனுக்கு சந்துருவைப் போல அவ்வளவு புகழ் இல்லை. அவனுக்குச் சீடர்களும் மிகக் குறைவே. அவன் அவ்வப்போது மக்களை நல்வழிப்படுத்த சொற்பொழிவுகள் ஆற்றி அறிவுரை கூறுகிறான்.”
“”அவனது பேச்சைக் கேட்க ஆவலுடன் மக்கள் கூடுகின்றனர். அவனது அறிவுரைக் கேட்டு பலர் திருந்தியும் உள்ளனர். அவனுக்கு மக்களிடையே உயரிய மதிப்பு உள்ளது. ஆனால், அவனிடம் அரிய சக்திகள் உள்ளனவா என்று யாருக்கும் தெரியாது,” என்றான்.
“”எனக்கு இருவரில் மகிமைதாசனையே பிடிக்கும். அவனே இந்த ராஜகுருப் பதவிக்கு ஏற்றவன்,” என்றார். மன்னனும் குருவின் யோசனையை ஏற்று மகிமைதாசனையே ராஜகுருவாக அமர்த்தி கொண்டான்.
சந்துருவுக்கு தான் சாபத்தை விலக்கும் முறையைக் கற்பித்தார். மகிமைதாசனால் கற்க முடியாது என்று கூறி ஊருக்கு அனுப்பி விட்டார். ஆனால், ராஜகுருவை நியமிக்கும் விஷயத்தில் மகிமைதாசனையே அப்பதவியில் அமர்த்தும் படிக் கூறினார்.
இதன் காரணம் என்ன என்று சொல்லுங்கள் பார்ப்போம்.
“”உலகில் சிலர் புகழ்பெற விரும்புகின்றனர். வேறு சிலர் அடக்கமாக இருக்கின்றனர். சந்துரு முதல் ரகத்தைச் சேர்ந்தவன். மகிமைதாசன் அடக்கமாக இருந்து தன் சக்தியை வெளிச்சம் போட்டுக் காட்டாமல் இருந்தான். சந்துருவைக் கண்டு மக்கள் பயப்பட்டனர். மகிமைதாசனை விரும்பி அவன் சொல்வதைக் கேட்கக் கூடினர்.
“”ஒருவன் கோபம் கொண்டாலே சாபம் கொடுப்பான். பிறகு அதை விலக்குவான். இதனால் கோபம் கொள்பவன் சந்துரு. சாபம் விலக்கத் தெரியாததால் மகிமைதாசன் கோபமே கொள்ளாமல் அமைதியுடன் வாழ்ந்தான். இவற்றை எல்லாம் சீர்துõக்கிப் பார்த்தே அவர் மகிமைதாசனை அப்பதவியில் அமர்த்தும்படிக் கூறினார். அவரது போக்கிலும் முரண்பாடு இல்லை.
சந்துருவுக்கு சாபத்தை விலக்கும் முறையைச் சொல்லிக் கொடுத்தது அவனால் பிறருக்குக் கெடுதல் ஏற்பட்டாலும் அதை விலக்கி நன்மை புரிய வேண்டும் என்பதற்காகத்தான். மகிமைதாசனால் அவ்வித ஆபத்து ஏற்படாது என உணர்ந்தே அவர் அவனுக்கு அந்த முறையைக் கற்பிக்கவில்லை,” எனக் கூறினார்.
To Get Daily Story In What's App contact +917904957814
என் அன்பு வாசகரே,
அநேகருடைய வாழ்க்கை இக்கதையில் வரும் சந்துரு போலத்தான் வேலை இடத்திலும் சரி (சம்பள உயர்வு, பதவி உயர்வு), ஊழியத்திலும் சரி (வரங்கள், கிருபைகள், தீர்க்கதரிசன வரம்) என தேவையானது எல்லாவற்றையும் கேட்டு கேட்டு பெற்றுக்கொள்வார்கள். எல்லாம் பெற்றுக்கொண்ட பிறகு கர்வம் அவர்கள் தலைக்கேறி விடுகிறது எனவே அவர்கள் சொற்படி அனைவரும் கீழ்ப்படிந்து நடக்க வேண்டும் என்று விரும்பி தங்களுக்கு கிடைத்த விஷேசித்த கிருபைகளை பயன்படுத்துகின்றனர். அதன் மூலம் அநேகரை பயமுறுத்தி தங்கள் வசப்படுத்திக் கொள்கின்றனர்.
இன்றைய கதையில் பாதி படித்ததும் மகிமை தாசன் அந்த வித்தையை கற்க தகுதியற்றவன் என்று நிர்ணயித்துவிட்டீர்கள் ஆனால் மீதி பாதியிலோ அவனே மிக உயரிய பதவியை அடைந்தான்.
வேதத்தில் இயேசுவும் தம்முடைய சீஷர்கள் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு கிருபையை கொடுத்தார். அவர்களில் விஷேசித்தவர்கள் பேதுருவும், யோவானும். இயேசுவுக்கு பிரியமானவன் யோவான் அதனால் தான் தன்னுடைய சிலுவை மரணத்தின் போது தன்னுடைய தாயாகிய மரியாளை அவன் வசம் ஒப்படைத்தார். ஆனால் பேதுருவோ சிலுவை மரணத்தின் போது இயேசுவை மறுதலித்தான். எனவே மற்ற சீஷர்களும் ஜனங்களும் யோவானைக் கொண்டு பலத்த அற்புதம் அதிசயம் நடக்கும் என எதிர்ப்பார்த்தனர். ஆனால் இயேசு எடுத்துக்கொள்ளப்பட்ட பிறகோ யோவானைப் பற்றி ஒருசில இடங்களில் மட்டுமே பார்க்க முடியும் ஆனால் பேதுருவைக் கொண்டு ஆவியானவர் செய்த செய்கைகள் பலத்த செய்கைகள் அவை அனைத்தும் நாம் அறிந்ததே.
தேவனிடம் முந்தி சேர்வது முக்கியமல்ல எப்பொழுதும் தேவனுக்கென்று முந்துகிறவர்களாய் வாழ வேண்டும் என்பதை வேதம் இவ்வாறு கூறுகிறது,
ஆகிலும் முந்தினோர் அநேகர் பிந்தினோராயும், பிந்தினோர் அநேகர் முந்தினோராயும் இருப்பார்கள் என்றார்.
மாற்கு 10:31
எனவே கிறிஸ்துவின் வருகையை எதிர்நோக்கி இருக்கிற நாம் நிதானத்தோடும், பொறுமையோடும் முந்துகிறவர்களாய் நமக்கு நியமித்திருக்கிற ஓட்டத்தை ஓடுவோம். அப்படி நாம் ஓடும் போது
நல்ல போராட்டத்தைப் போராடினேன், ஓட்டத்தை முடித்தேன், விசுவாசத்தைக் காத்துக்கொண்டேன்.
இதுமுதல் நீதியின் கிரீடம் எனக்காக வைக்கப்பட்டிருக்கிறது, நீதியுள்ள நியாயாதிபதியாக கர்த்தர் அந்நாளிலே அதை எனக்குத் தந்தருளுவார். எனக்கு மாத்திரமல்ல, அவர் பிரசன்னமாகுதலை விரும்பும் யாவருக்கும் அதைத் தந்தருளுவார்.
2 தீமோத்தேயு 4:7, 8
என்று கூறின பவுலைப்போல நாமும் நம்முடைய ஓட்டத்தை ஓடி முடிப்போம் நீதியின் கிரீடத்தை பெற்றுக்கொள்வோம்.
நீங்கள் ஆசிர்வதிக்கப்பட்டவர்கள்!!!!!!
========================
ஓர் குட்டிக் கதை
மெத்தப் படிப்பும்....உருகிய வெண்ணையும்
=====================
ஒரு ஊர்ல அண்ணன் தம்பி ரெண்டு பேர்.
அண்ணனுக்கு படிப்பு வரலை.அதனால அவன் ஆடு மாடுகளை வயலுக்கு அழைத்துச் சென்று மேய்க்கத் தொடங்கினான்.
தம்பி கெட்டிக்காரன்.அவன் பள்ளிக்கூடம் சென்று படித்து வந்தான்.வகுப்பிலும் அவன் தான் முதலிடம்.
அவர்களுடைய அம்மா பெரிய மகன் அலைந்து திரிந்து மாடுகளை மேய்க்கிறான் என்பதற்காக அவனுக்கு நல்ல சாப்பாடு,முட்டை, பால் எல்லாம் கொடுப்பார்.
தம்பி பாடம்தானே படிக்கிறான் அவனுக்கு அதிக உழைப்பு இல்லை என்பதால் அண்ணனுக்குக் கொடுப்பதை விட குறைவாகவே கொடுப்பார்.
ஒரு நாள் அவங்க வீட்டுக்கு ஒரு உறவுக்கார பாட்டி வந்தாங்க.
அம்மா செய்வதைப் பார்த்து ஏன் இப்படி செய்கிறாய் என்று கேட்க அம்மா கடினமான உழைப்பு மாடு மேய்ப்பவனுக்குத்தானே படிப்பவனுக்கு அவ்வளவு சக்தி விரையமாகாது என்றாள்.
பாட்டி சொன்னாங்க பெரியவன் மாடுகளை வயலில் அவிழ்த்து விட்டு விட்டு நன்றாக மரத்தடியில் படுத்துத் தூங்குகிறான். அவனுக்கு எந்த கவலையும் இல்லை.
ஆனால் படிப்பவனுக்குத்தான் அதிக உழைப்பு தேவைப்படும்.பாடங்களைப் படிக்கவும், எழுதவும் ,மனனம் செய்யவும் ,பரீட்சைக்குத் தயாராகவும் என இவனுக்கு வேலை இருந்து கொண்டேயிருக்கும்.
மேலும் பள்ளியில் பல போட்டிகளில் கலந்து கொள்ளவும் செய்கிறான்.
இப்படி படிக்க விளையாட என அதிக சக்தி தேவைப் படும். படிப்பது என்பது சுலபமல்ல என்று கூறினாள்.
இதைச் சோதித்துப் பார்க்க அம்மாவுக்கு ஒரு உபாயமும் சொன்னாள்.
இரவு தூங்கும் போது இருவரின் தொண்டைக்குழியிலும் ஒரு உருண்டை வெண்ணையை வைக்கச் சொன்னாள்.
மறுநாள் காலையில் எழுந்து பார்த்த போது மாடு மேய்க்கும் பெரியவனின் தொண்டைக் குழியில் வெண்ணெய் அப்படியே இருந்தது.
படிக்கும் சின்னவனின் தொண்டைக் குழியில் வெண்ணை உருகி விட்டிருந்தது.
To Get Daily Story In What's App Contact +917904957814
பாட்டி சொன்னாள் ‘படிப்பவனுக்கு எந்த நேரமும் அதே சிந்தனை,கவலை ,பயம்.அதனால் உடல் சூடாகி வெண்ணை உருகி விட்டது.
ஆனால் மாடு வீட்டுக்கு வந்த பிறகு மறு நாள் வரை பெரியவன் கவலைப் படுவதில்லை.
எனவே அவன் உடல் குளிர்ச்சியாக இருக்கிறது.எனவேதான் வெண்ணை உருகவில்லை.
அம்மா புரிந்து கொண்டு படிக்கும் சின்ன மகனுக்கும் நல்ல உணவு,பால்,பழம் எல்லாம் தரத் தொடங்கினாள்.
எனதருமை வாசகரே,
குழந்தைகள் படிப்பதாலும், விளையாடுவதாலும் வீணாகும் சக்திக்கு ஈடு செய்ய நல்ல சத்துள்ள உணவு வகைகளை சாப்பிட பழக்குவியுங்கள். காய்கறிகள், கீரைவகைகள்,பழங்கள் பால் எல்லாம் சாப்பிடனும். இன்றுள்ள பிள்ளைகள், பிள்ளைகள் மட்டுமல்ல பெரியவர்களும் கூட காலை உணவை அறவே தவிர்த்து வருகின்றனர் காரணம் "நேரம் இல்லை". காலை உணவே மிகவும் முக்கியம் வாய்ந்தது. காலை உணவு உட்கொள்வதால் நம் மூளை, சரீரம் என அனைத்தும் சிறப்பாக இயங்கும். நாம் செய்கிற காரியங்களை நிதானத்தோடும், பொறுமையோடும் செய்ய உதவும்.
நம் பிள்ளைகளுக்கு எதை எதையோ கற்றுக்கொடுக்கிறோம் நம்மால் கற்று கொடுக்க முடியாததை மற்றவர்கள் மூலம் கற்றுக்கொள்ள வசதி செய்து கொடுக்கிறோம் நல்லது தான் ஆனால் பிள்ளைகளுக்கு தேவையான உணவு பழக்க நெறிமுறைகளை மட்டுமல்ல வாழ்க்கைக்குத் தேவையான எல்லவற்றையும் கற்றுக்கொடுக்க வேண்டியது ஒவ்வொரு பெற்றோரின் கடைமையாகும்.
சாலெமோன் ஞானி இவ்வாறாக கூறுகிறார்,
பிள்ளையானவன் நடக்கவேண்டிய வழியிலே அவனை நடத்து: அவன் முதிர்வயதிலும் அதை விடாதிருப்பான்.
நீதிமொழிகள் 22:6
எனவே பெற்றோராயிருக்கிற நாம் ஒவ்வொருவரும் நம்முடைய பிள்ளைகளை நல்வழியில் நடத்துவோம் அவர்களும் அவர்கள் பிள்ளைகளை நல்வழியில் நடத்துவார்கள். நாம் ஒருமித்து தேவ ராஜ்யத்தை சுதந்தரிப்போம்.
#நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்!!!!!
Thanks for using my website. Post your comments on this