==========
ஓர் குட்டிக் கதை
தியானம்
==========
அடைகாக்கும் கோழி தன் முட்டைகள் மீது உட்கார்ந்து கொண்டிருக்கிறது. எதையும் செய்யாமல் முட்டைகளின் மீது வெறுமனே உட்கார்ந்து கொண்டிருக்கிறது.
ஆனால் எதையும் செய்யாமல் உட்கார்ந்திருந்தாலும், அப்படி உட்காரவில்லை என்றால், நீண்ட நேரம் உட்காரவில்லை என்றால், அடிக்கடி உட்காரவில்லை என்றால் குஞ்சுகள் பொாிக்கப் போவதில்லை.
கோழி தான் விரும்பினாலும் சரி, விரும்பாவிட்டாலும் சாி அதன் மேல் உட்கார்ந்து அனுபவத்தை சூடு உண்டாக்கினால் போதும் குஞ்சு பொாித்துவிடும். முட்டைகள் மீது உட்காரவில்லை என்றால் குஞ்சு பொாிக்கப் போவதில்லை.
முட்டைக்குள் என்ன நடக்கிறது என்று தொியவில்லை யென்றாலும் கோழி உட்கார்ந்திருப்பதால் தான் குஞ்சு பொாிக்கிறது என்பதில் நமக்கு ஐயமேதும் இல்லை.
என் அன்புக்குாியவா்களே ,
வேதபுத்தகத்தை ஓரிடத்தில் அமைதியாக உட்காா்ந்து தியானம் செய்வதால் இப்படித்தான் ஆசீா்வதிக்கப்படுகிறோம். எதை தியானம் செய்தீா்களோ அதுவே உங்கள் வாழ்வில் நிறைவேறும்.
To Get Daily Story In What's App Contact +917904957814
ஒவ்வொரு நாளும் நீண்டநேரம் தியானம் செய்த பின்பும் ஆசீா்வாதம் பெறுவதில் முன்னேற்றம் இல்லாதது போல் தோன்றினால் வருத்தப்பட வேண்டாம். தினமும் தியானம் செய்வதால் நல்ல காரணிகளை உருவாக்குகின்றீர்கள். அதற்கேற்ற விளைவுகள் வருவது உறுதி.
கோழி தன் முட்டையின் மீது உட்கார்ந்தால் குஞ்சு செவ்வனே பொரிக்கட்டும்' என்று விரும்ப வேண்டிய தில்லை. கோழி விரும்பினாலும் விரும்பா விட்டாலும் குஞ்சு பொரிப்பது உறுதி.
பைபிள் சொல்கிறது,
*என் தாசனாகிய மோசே உனக்குக் கற்பித்த நியாயப்பிரமாணத்தின்படியெல்லாம் செய்யக் கவனமாயிருக்கமாத்திரம் மிகவும் பலங்கொண்டு திடமனதாயிரு. நீ போகும் இடமெல்லாம் புத்திமானாய் நடந்துகொள்ளும்படிக்கு, அதை விட்டு வலது இடதுபுறம் விலகாதிருப்பாயாக.*
*இந்த நியாயப்பிரமாண புஸ்தகம் உன் வாயைவிட்டுப் பிரியாதிருப்பதாக. இதில் எழுதியிருக்கிறவைகளின்படியெல்லாம் நீ செய்யக் கவனமாயிருக்கும்படி, இரவும் பகலும் அதைத் தியானித்துக்கொண்டிருப்பாயாக*.
*அப்பொழுது நீ உன் வழியை வாய்க்கப்பண்ணுவாய், அப்பொழுது புத்திமானாயும் நடந்து கொள்ளுவாய்*. (யோசுவா 1:7,8)
(for then thou shalt make thy way prosperous, and then thou shalt have good success.)
நீங்கள் தியானிக்குபோது செழிப்பானதும், வெற்றியுள்ளதுமான வாழ்க்கையை பெற்றுகொள்வீா்கள். என்பதை இங்கிலீஷ் பைபிள் சொல்கிறது.
நீங்கள் நியாயபிரமாண புத்தகத்தை தியானிக்க வேண்டியதில்லை. நியாயபிரமாணத்தை இயேசு நிறைவேற்றி முடித்தாா்.
எபேசியா 2 :15 சொல்கிறது
*சட்டதிட்டங்களாகிய நியாயப்பிரமாணத்தைத் தம்முடைய மாம்சத்தினாலே ஒழித்து, இருதிறத்தாரையும் தமக்குள்ளாக ஒரே புதிய மனுஷனாகச் சிருஷ்டித்து, இப்படிச் சமாதானம்பண்ணினாா்.*
எனவே சிலுவையில் அறையப்பட்ட இயேசுவையும் அவருடைய பாடுகள் மரணம் அவற்றால் உண்டான ஆசீா்வாதங்கள், பழைய ஏற்பாட்டில் அவரைக் குறித்த தீா்க்கத் தாிசனங்கள், ஆகியவைகளை தியானியங்கள்.
நீங்கள் தியானிக்கும்போது பாிசுத்தாவியின் அக்கினி மூளும்.அப்போது ஆவியானவா் உங்களை விசுவாசமாய் ஜெபிக்க வைப்பாா். அவ்வாறு நீங்கள் ஆவியானவாின் திட்டத்தின்படி ஜெபிக்கும் போது நீங்கள் சகலவற்றிலும் ஆசீா்வதிக்கப்படுவீா்கள்.
*என் இருதயம் எனக்குள்ளே அனல்கொண்டது, நான் தியானிக்கையில் அக்கினி மூண்டது, அப்பொழுது என் நாவினால் விண்ணப்பம் செய்தேன்*. (சங்கீதம் 39:3)
நீங்கள் தியானிப்பதினால்
பொறுமை, தாழ்மை, மனதுருக்கம்,விட்டுக் கொடுக்கும் குணம் சகிப்புதன்மை, ஆதாிக்கும் குணம், அன்பு ஆகிய நற்பண்புகளை நீங்கள் பெற்றுப் கொள் வீா்கள்.
அதுமட்டுமல்லாமல் ஞானம், அறிவு, ஆகிய பொக்கிஷங்களையுடையவா்களாய் வாழ்வீா்கள். நீங்கள் 1-ம் சங்கீதத்தின் ஆசீா்வாதங்களையும் பெற்றுக் கொள்வீா்கள்.
*துன்மார்க்கருடைய ஆலோசனையில் நடவாமலும், பாவிகளுடைய வழியில் நில்லாமலும், பரியாசக்காரர் உட்காரும் இடத்தில் உட்காராமலும்,*
*கர்த்தருடைய வேதத்தில் பிரியமாயிருந்து, இரவும் பகலும் அவருடைய வேதத்தில் தியானமாயிருக்கிற மனுஷன் பாக்கியவான்.*
*அவன் நீர்க்கால்களின் ஓரமாய் நடப்பட்டு, தன் காலத்தில் தன் கனியைத் தந்து, இலையுதிராது இருக்கிற மரத்தைப்போலிருப்பான், அவன் செய்வதெல்லாம் வாய்க்கும்.* (சங்.1:1 -3 )
என் அன்புக்குாியவா்களே,
வேதபுத்தகத்தை தியானியங்கள்.அதனால் சகல நன்மைகளையும் பெற்றுக்கொள்வீா்கள்.
*நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள் !!!*
==============
ஓர் குட்டிக் கதை
==============
ஒவ்வொருவரும் தனக்குக் கொடுக்கப்பட்ட வேலையை சரியாகவும் உற்சாகமாகவும் செய் யும் போது வேலை செய்யும் கம்பேனி மட்டுமல்ல நீங்களும் வளாச்சியும் செழிப்பும்அடைய முடி யும் என்பதைக் குறித்த கதையும் வேத வசனங் களையும் இன்று படியுங்கள் அதன்படிநடந்து
மேன்மையைப் பெற்றுக்கொள்ளுங்கள்.
வளர்ச்சிக்குத்_தடை
=================
ஒருநாள் ஆபிசில் வேலை செய்யும் பணியாட்கள் அனைவரும் வேலைக்கு சரியான நேரத்தில் வந்து சேர்ந்தனர். நோட்டீஸ் போர்டில் ஏதோ எழுதி இருக்கிறதே என்று அனைவரும் பார்க்க சென்றனர்.
.
அதில் ” உங்கள் வளர்ச்சிக்கும் நம் கம்பெனி வளச்சிக்கும் இடையூராக இருந்த நபர் நேற்று காலமானார்,
அடுத்த கட்டிடத்தில் அவர் உடல் வைக்கப்பட்டுள்ளது. அனைவரும் தவறாமல் கலந்து கொள்ளவும்” என்று எழுதி இருந்தது.
இதை படித்தவுடன் அவா்கள் எல்லாருக்கும் நம்முடன் வேலை செய்த ஒருவர் இறந்து விட்டாரே என்று வருத்தமாக இருந்தது,
பிறகு நம் வளர்ச்சிக்கு தடையாக இருந்த நபர் யாராக இருக்கும் என்று அவர்களுக்கு ஆர்வம் ஏற்பட்டது.
அனைவரும் அடுத்த கட்டிடத்திற்கு சென்றனர். சவப்பெட்டி வைத்திருக்கும் இடத்தை நோக்கி ஒருவர் பின் ஒருவராக செல்ல ஆரம்பித்தனர்.
சவப்பெட்டியை நெருங்க நெருங்க நம் வளர்ச்சி க்கு தடையாக இருந்தவன் யாராக இருக்கும், நல்ல வேளை அவன் இறந்துவிட்டான் என்று நினைத்தபடியே முன்னோக்கி சென்றனர்.
சவப் பெட்டியினுள் எட்டி பார்த்தவர்களுக்கு தூக்கி வாரிப் போட்டது.அதில் ஒரு முகம் பார்க் கும் கண்ணாடி மட்டுமே இருந்தது. சவப் பெட்டி யுள் யார் எல்லாம் பார்க்கிறார்களோ அவர்கள் முகமே அதில் தெரிந்தது.
கண்ணாடி அருகில் ஒரு வாசகம் எழுதி இருந் தது ...
”உங்கள் வளர்ச்சிக்கு நீங்கள் மட்டுமே காரணம், நீங்கள் வளர வேண்டும் என்றால் அது உங்கள் கையில் மட்டுமே உள்ளது ,உங்கள் வளர்ச்சியை உங்களை தவிர வேறு யாராலும் தடுத்து நிறுத்த முடியாது” என்றிருந்தது.
#என் அன்புக்குாியவா்களே,
உங்கள் வாழ்கையை உங்கள் முதலாளியால் மாற்ற முடியாது,உங்கள் நண்பர்களால் மாற்ற முடியாது,நீ நினைத்தால் மட்டுமே உன் வாழ்வை மாற்ற முடியும்.
.
வேலைக்குப் போகும் அநேகர் பணம் சம்பாதிப்ப தற்காக மட்டும் தான் வேலை செய்கிறார்கள். ஆனால் நீங்கள் வேலை செய்யும் எந்த டிப்பாா்ட்மென்டாய் இருந்தாலும் அதில் உற்சாகமாயும் உண்மையாயும் வேலை செய்யும் போது ..
கா்த்தா் அதைப் பாா்த்து பின்வரும் வசனங்களின்படி உங்களை ஆசீாவதிப்பாா்.
#ஆசீா்வாதமும்_செழிப்பும்
உங்கள்
கைகளின் பிரயாசத்தை நீங்கள் சாப்பிடுவீா்கள். உங்களுக்குப் பாக்கியமும் நன்மையும் உண்டா யிருக்கும். - சங். 128:2
அதாவது நீங்கள் எவ்வளவு தூரம் பிரயாசப்பட்டு உண்மையாய் வேலை செய்தீா்களோ அதில் அதற்கேற்ற பலனை நீங்களே தான் பெற்றுக் கொள்வீா்கள்.
வேறு யாரும் தொடவோ சாப்பிடவோ முடியாது அதுமட்டுமல்ல,கா்த்தா் தந்த வேலையின்றி கஷ்டத்தைப் பாா்க்காமல் நீங்கள் உண்மையாய் வேலை செய்வதன் பலனே தான்
#பாக்கியமும்்நன்மையும். ..
பாக்கியமும் நன்மையுமே
உங்களின் நல்ல வளா்ச்சியாகும். ஆங்கிலத்தில் இவ்வாறு வாசிக்கிறோம்.
You will eat the fruit of your labor; blessings and prosperity will be yours.
ஆசீா்வாதமும் செழிப்பும் உண்டாயிருக்கும் (automatically) தானாகவே உண்டாகும். இது தேவன தந்த உண்மைக்கான பாிசாகும்.
கா்த்தருக்கும் கா்த்தாின் ஆலயததுக்கும்
மனபூா்வமாய் முதற்பலனையும் ,தசம பாகத்தை யும் கொடுக்க முன் வரவேண்டும்.
உன் பொருளாலும், உன் எல்லா விளைவின் முதற்பலனாலும் கர்த்தரைக் கனம்பண்ணு.
நீதிமொழிகள் 3:9
அவனவன் விசனமாயுமல்ல, கட்டாயமாயுமல்ல, தன் மனதில் நியமித்தபடியே கொடுக்கக்கடவன் உற்சாகமாய்க் கொடுக்கிறவனிடத்தில் தேவன் பிரியமாயிருக்கிறார். - 2 கொ. 9:7
மனுஷன் தேவனை வஞ்சிக்கலாமா? நீங்களோ என்னை வஞ்சிக்கிறீர்கள். எதிலே உம்மை வஞ்சித்தோம் என்கிறீர்கள்? தசமபாகத்திலும் காணிக்கையிலுந்தானே.
என் ஆலயத்தில் ஆகாரம் உண்டாயிருக்கும் படி தசமபாகங்களையெல்லாம் பண்டசாலையிலே கொண்டு வாருங்கள். மங்கிய 3:8-10
அதுமாத்திமல்ல.
உங்களுக்குாிய சம்பாத்தியத்தில் மனபூா்வமாய்
குறைச்சலுள்ளவனுக்கு கொஞ்சம் கொடுங்கள். என்றே வேதம் பின்வருமாறு சொல்கிறது.
குறைச்சலுள்ளவனுக்குக் கொடுக்கத்தக்கதாகத் தனக்கு உண்டாயிருக்கும்படி, தன் கைகளினால் நலமான வேலைசெய்து, பிரயாசப்படக்கடவன்.
எபே. 4:28
தேவன் உங்களைக் கொண்டு உலக மக்களில் ஏழை எளிய மக்களையும் ஆசீாவதிக்கவும் ஊழியங்கள் ஆசீா்வதிக்கப்படவும் வேண்டும் என்றுதான் உங்கள் வேலையில் ஆசீா்வாதங் களையும் செழிப்பையும் உங்களுக்குத் தந்திருக்கிறாா் என்பதை உணருங்கள். அதை மறவாதிருங்கள்.
இதை செய்ய வில்லை யென்றால் கீழ்வரும் ஆசீா்வாதங்களை ப் பெற்றுக் கொள்ள முடியாது.
அப்படி கொடுக்கும் போது என்ன நடக்கும்???
நீங்கள் எல்லாவற்றிலும் எப்பொழுதும் சம்பூரண முடையவர்களாயும், சகலவித நற்கிரியைகளி லும் பெருகுகிறவர்களாயுமிருக்கும்படியாக, தேவன் உங்களிடத்தில் சகலவித கிருபையை யும் பெருகச்செய்ய வல்லவராயிருக்கிறார்.
வாரியிறைத்தான், ஏழைகளுக்குக் கொடுத் தான், அவனுடைய நீதி என்றென்றைக்கும் நிற்கும் என்று எழுதியிருக்கிறபடியாகும்.
To get daily message in whats app Contact +917904957814
விதைக்கிறவனுக்கு விதையையும், புசிக்கிறதற்கு ஆகாரத்தையும் அளிக்கிறவர் உங்களுக்கு விதையை அளித்து,
அதைப் பெருகப்பண்ணி, உங்கள் நீதியின் விளைச்சலை வர்த்திக்கச்செய்வார்.
2 கொரிந்தியர் 9:10
அப்பொழுது நான் வானத்தின் பலகணிகளைத் திறந்து, இடங்கொள்ளாமற் போகுமட்டும் உங்கள்மேல் ஆசீர்வாதத்தை வருஷிக்க மாட்டே னோவென்று அதினால் என்னைச் சோதித்துப் பாருங்கள் என்று சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறார். மல்கியா 3:10
அப்பொழுது உன் களஞ்கியங்கள் பூரணமாய் நிரம்பும்: உன் ஆலைகளில் திராட்சைரசம் புரண்டோடும். - நீதி. 3:8 -10
வேலைக்கு சாதாரணமாய் போகிறான் என்று நீங்கள் நினைக்கிறீர்கள் ஆனால் வேலையினி மித்தம் உண்டாகும் ஆசீா்வாதங்களை உணரு வீா்களென்றால் வேலையை சாதாரணமாய் நினைக்க மாட்டீா்கள்.
கா்த்தா் என்னை மேன்மைப்படுத்தவே இந்த வேலையை கொடுத்துள்ளார் என்றே நினைத்து உண்மையும் உத்தமுமாய் வேலை செய்வீா்கள்.
ஒவ்வொருவரும் இப்படி நினைத்தால் நம் நாடு, தேசம் எவ்வளவாய் உலக நாடுகளின் மத்தியில் மேன்மையடையும்.
இன்றே சிந்தித்து செயல்படுங்கள்.
#நீங்கள் ஆசீா்வதிக்கப்பட்டவா்கள் !!!
Thanks for using my website. Post your comments on this