Type Here to Get Search Results !

வரங்களுக்குமுன் நாடவேண்டியது? | Gospel Sermon Notes | Godson Vincent Message | கிறிஸ்தவ தின தியான குறிப்புகள் | Jesus Sam

வரங்களுக்குமுன் நாடவேண்டியது?

அன்பை நாடுங்கள். ஞானவரங்களையும் விரும்புங்கள். விஷேசமாய்த் தீர்க்கதரிசனவரத்தை விரும்புங்கள்.
1கொரி.14:1

ஞானவரங்களை, விஷேசமாய்த் தீர்க்கதரிசன வரத்தை விரும்புவதற்கு முன்பு, அன்பை நாடும்படி கொரிந்து சபையாருக்கு அறிவுறுத்துகிறார் பவுல்.

இயேசுகிறிஸ்துவுக்குள்ளாய் எல்லா உபதேசத்திலும் எல்லா அறிவிலும், மற்றெல்லாவற்றிலும் சம்பூரணமுள்ளவர்களாக்கப்பட்டு (1கொரி.1:5), யாதொரு வரத்திலும் குறைவில்லாதவர்களாய், நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்து வெளிப்படுவதற்குக் காத்திருந்த கொரிந்து சபையார் (1கொரி.1:7), அன்பில் குறைவுபட்டிருந்தார்கள்.

எத்தனை வரம் இருந்தும் அன்பில்லாதவர்கள் ஒன்றுமில்லை, அவர்களுக்கு தேவனிடத்தில் ஒன்றுமில்லை என்று அவர்களை எச்சரித்தார் பவுல். (1கொரி.13:1-3)

பொதுவாக, ஆவியின் வரங்களில் கிறிஸ்தவர்களுக்கு இருக்கிற நாட்டம், ஆவியின் கனிகளில் இல்லை என்பதுதான் உண்மை!

பரிசுத்தவான்களுடைய குறைவில் அவர்களுக்கு உதவிசெய்யவும், அந்நியரை உபசரிக்கவும்

(ரோமர் 12:13); தங்களுக்குக் கிடைக்கும் சமயத்திற்குத்தக்கதாக, யாவருக்கும், விசேஷமாக விசுவாச குடும்பத்தார்களுக்கும் நன்மைசெய்யவும் (கலா.6:10); திக்கற்ற பிள்ளைகளும் விதவைகளும் படுகிற உபத்திரவத்திலே அவர்களை விசாரிக்கவும் (யாக்.1:27); வஸ்திரமில்லாமலும் அநுதின ஆகாரமில்லாமலும் இருக்கும் சகோதர சகோதரிக்கு வஸ்திரம் மற்றும் ஆகாரம் கொடுக்கவும்

(யாக்.2:15,16); குறைச்சலுள்ள தன் சகோதரனுக்கு உதவவும் (1யோவான் 3:17,18) மனதில்லாத அநேகக் கிறிஸ்தவர்கள், வரங்களில் அதீத ஆர்வம் கொள்ளுகிறதை இந்நாட்களில் காணமுடிகிறது.




அந்நாளில் ஆண்டவரை நோக்கி: "கர்த்தாவே! கர்த்தாவே! உமது நாமத்தினாலே தீர்க்கதரிசனம் உரைத்தோம் அல்லவா? உமது நாமத்தினாலே பிசாசுகளைத் துரத்தினோம் அல்லவா? உமது நாமத்தினாலே அநேக அற்புதங்களைச் செய்தோம் அல்லவா?" என்று சொல்லப்போகிற வரம் பெற்ற அநேகரைப் பார்த்து: "நான் ஒருக்காலும் உங்களை அறியவில்லை, அக்கிரமச் செய்கைக்காரரே, என்னைவிட்டு அகன்றுபோங்கள்" என்று அவர் சொல்லப்போகிறார். (மத்.7:22,23)




ஆவியின் வரங்களால் அருபெரும் காரியங்கள் செய்தும், அன்பினால் கிரியை செய்யாதவர்களின் நித்தியம் நரகம் என்பதை நாம் அறியவேன்டும்.




இப்படியிருக்க, ஆவியின் வரங்களை நாடுவோர், முதலாவது அன்புள்ளவர்களாய் இருக்க நாடவேண்டியது அவசியம்!!

க. காட்சன் வின்சென்ட்*
(Biblical Teaching Ministry)
கோயம்பத்தூர்.
8946050920


"ஏசாயா 5:26 மற்றும் 7:18ல் தேவனே பயில்காட்டி (விசிலடித்து) அழைக்கிறதாக இருக்கையில், ஆராதனை செய்யும்போது மகிழ்சியை வெளிப்படுத்த நாம் விசில் அடிக்கிறதும்; 2சாமுவேல் 6:14ல் கர்த்தருக்கு முன்பாக தாவீது நடனம்பண்ணினதாக இருக்கையில், டான்ஸ் ஆட தெரிந்தவர்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்த சபைக்குள் நடனமாடுவதும் தப்பே இல்லை" என்று ஒரு போதகர் சொல்லுகிறார். இது சரியா? தவறா?


✍️ ஆராதனையில் விசிலடிப்பது உட்பட, நடை, உடை, பாவணை, பாடல், இசை, நடனம் இவைகளில் சினிமாக்காரர்களைப் பின்பற்றும் போலி ஊழியர்கள் (2கொரி.12:12-15), தாங்கள் செய்கிறது சரியென்று சாதிக்க சற்றும் பொருந்தாத வசனங்களை அதற்கு ஆதாரமாகக் காண்பிக்கத் துணிந்திருக்கிறார்கள்!




🫵 *தேவன் ஏன் பயில்காட்டுகிறார் (விசிலடிக்கிறார்)?*




அவர் தூரத்திலுள்ள ஜாதியாருக்கு ஒரு கொடியை ஏற்றி, *அவர்களைப் பூமியின் கடையாந்தரங்களிலிருந்து பயில்காட்டி அழைப்பார்,* அப்பொழுது அவர்கள் தீவிரமும் வேகமுமாய் வருவார்கள்.

ஏசாயா 5:26




பலமுறை வாய்ப்புகள் கொடுக்கப்பட்டும் மனந்திரும்பாமற்போன யூதாவை தண்டிக்க பாபிலோனியரை தேவன் பயில்காட்டி (விசிலடித்து) அழைப்பார் என்று ஏசாயா அறிவிக்கிறார்.




விசில் சத்தம் சமிக்ஞையாகப் பயன்படுத்தப்படுகிறது.




ஒருவர் தூரத்திலிருக்கிறவரின் கவனத்தை திருப்பவோ, அல்லது அவரை அருகில் அழைக்கவோ விசில் சத்தம் எழுப்புவதுண்டு.




பெரிய நிறுவனங்களில் காவல் பணியில் இருக்கிறவர்கள், ஒருவருக்கொருவர் தகவல் பரிமாற, ஒருவரையொருவர் எச்சரிக்க, அருகில் வரவழைக்க விசில் சத்தம் எழுப்புவதுண்டு.




பேருந்தை நடத்துகிறர் அதை நிறுத்தவும், புறப்படப்பண்ணவும் விசில் சத்தம் எழுப்புவதுண்டு.




விளையாட்டு போட்டிகளின் நடுவர்கள் விளையாட்டு வீரர்களை நடத்த விசில் சத்தம் எழுப்புகிறதுண்டு.




இதை சமூகம் நல்லவிதமாக பார்க்கிறது. ஆனால், ஆட்டம் பாட்டம் கொண்டாட்டம் என்று கேளிக்கைகளில் ஈடுபடுவோர் எழுப்பும் விசில் சத்தத்தை பண்பட்ட சமூகம் அங்கீகரிப்பதில்லை.




தேவன் அந்நிய தேசத்தாரை வரவழைக்க விசில் சத்தம் எழுப்புகிறதை அருவருப்பாகப் பார்க்கமுடியாது. மேலும், பாபிலோனியரை வரவழைக்க தேவன் நிஜத்தில் விசிலடிக்கவில்லை. அவர் பாபிலோனியரை யூதாவுக்கு எதிராக வரவழைப்பதை அவர்களுக்கு புரியும் மொழியில் சொல்லுகிறார் ஏசாயா.




அந்நாட்களிலே, கர்த்தர் எகிப்து நதிகளின் கடையாந்தரத்திலுள்ள ஈயையும், அசீரியாதேசத்திலிருக்கும் தேனீயையும் *பயில்காட்டி அழைப்பார்.*

ஏசாயா 7:18




யூதாவை பூச்சிகளைப் போல மூடி, அதை வெறுமையாகவும் பலனற்றதாகவும் விட்டுவிடும்படி அதின்மீது படையெடுக்க, தேவன் எகிப்து மற்றும் அசீரியாவின் இராணுவங்களுக்கு சமிக்ஞை

கொடுப்பார் என்கிறார் ஏசாயா. (ஏசாயா 7:17-20)




மேலும், அசீரியரை வரவழைக்க தேவன் நிஜத்தில் விசிலடிக்கவில்லை. தேவன் அவர்களை யூதாவுக்கு எதிராக வரவழைப்பதை யூதர்களுக்கு புரியும் மொழியில் சொல்லுகிறார் ஏசாயா.




தேவன் பாட்டுப்பாடி, ஆட்டம் ஆடி, விசில் அடிப்பார் என்று ஏசாயா எங்கும் கூறவில்லை.




🫵 *ஆராதனையில் தாவீதைப்போல நடனம்பண்ணலாமா?*




தாவீது யாருக்கு முன்பாக நடனம்பண்ணினார்?




தாவீது சணல்நூல் ஏபோத்தைத் தரித்துக்கொண்டு, *தன் முழுப்பலத்தோடும் கர்த்தருக்கு முன்பாக நடனம் பண்ணினான்.*

2சாமு.6:14




இன்று ஆராதனையில் நடனமாடுகிறவர்கள் தங்கள் முழுப்பலத்தோடு கர்த்தருக்கு முன்பாக நடனம் பண்ணுகிறார்களா? அல்லது மனுஷர் தங்களை ரசிக்க மனுஷர் முன்பாக நடனமாடுகிறார்களா என்பதை யோசித்துப்பாருங்கள்!




*தாவீது எப்படி நடனம்பண்ணினார்?*




தாவீது தன் வீட்டாரை ஆசீர்வதிக்கிறதற்குத் திரும்பும்போது, சவுலின் குமாரத்தியாகிய மீகாள் தாவீதுக்கு எதிர்கொண்டுவந்து, *"அற்பமனுஷரில் ஒருவன் தன் வஸ்திரங்களைக் கழற்றிப்போடுகிறதுபோல, இன்று தம்முடைய ஊழியக்காரருடைய பெண்களின் கண்களுக்கு முன்பாகத் தம்முடைய வஸ்திரங்களை உரிந்துபோட்டிருந்த இஸ்ரவேலின் ராஜா* இன்று எத்தனை மகிமைப்பட்டிருந்தார்" என்றாள். (2சாமு.6:20)




தாவீது இஸ்ரவேலின் ராஜாவாயிருந்தும், அற்பமனுஷரில் ஒருவன் தன் வஸ்திரங்களைக் கழற்றிப்போடுகிறதுபோல, தன் ராஜவஸ்திரங்களை உரிந்துபோட்டு, கோவணத்தோடு நடனமாடியிருக்கிறார்.




தாவீதை பின்பற்றி இன்று ஆராதனையில் நடனம்பண்ண விரும்புகிறவர்கள், தங்கள் அலங்காரமான உயர்ந்த ஆடைகளை கழற்றிப்போட்டுவிட்டு, வெறும் கோவணத்தோடு நடனம்பண்ணவேண்டும்.




இவர்களோ சாதாரண வஸ்திரங்களை உரிந்துபோட்டு இராஜாக்களைப்போல, மகாராணிகளைப் போல உயர்ந்த, கவர்ச்சியான வஸ்திரங்களை அணிந்துகொண்டு, சினிமா நடிகர்களுக்கிணையாக தங்களை அலங்கரித்துக்கொண்டு, தாங்கள் தாவீதைப்போல நடனம்பண்ணுவதாகக் கூறுகிறார்கள்!




*தாவீது ஏன் நடனம்பண்ணினார்?*




அதற்குத் தாவீது மீகாளைப் பார்த்து: *உன் தகப்பனைப் பார்க்கிலும் அவருடைய எல்லா வீட்டாரைப் பார்க்கிலும், என்னை இஸ்ரவேலாகிய கர்த்தருடைய ஜனத்தின்மேல் தலைவனாகக் கட்டளையிடும்படிக்குத் தெரிந்து கொண்ட* கர்த்தருடைய சமுகத்திற்கு முன்பாக ஆடிப்பாடினேன்.

2சாமு.6:21

*இதைப்பார்க்கிலும் இன்னும் நான் நீசனும் என் பார்வைக்கு அற்பனுமாவேன்.* அப்படியே நீ சென்ன பெண்களுக்குங்கூட மகிமையாய் விளங்குவேன் என்றான்.

2சாமு.6:22




தன்னை உயர்த்தின கர்த்தருக்கு தன் நன்றியுணர்ச்சியை வெளிப்படுத்தும்படிக்கு, தான் ஒரு ராஜா என்பதை மறந்து, ஓர் அற்பமனுஷனைப்போல கர்த்தருடைய சமுகத்திற்கு முன்பாக ஆடிப்பாடினார் தாவீது. தன் தேவனுக்கு முன்பாக இன்னும் தான் நீசனும் தன் பார்வைக்கு அற்பனுமாக அவர் ஆயத்தமாயிருந்தார்.




தாங்கள் தாவீதைபோல நடனம்பண்ணுகிறதாக சொல்லுகிற இன்றைய ஆராதனை வீரர்களிடம், தாவீதின் நன்றியுணர்ச்சியையும், உடையில் எளிமையையும், உள்ளத்தில் தாழ்மையையும் காணமுடிகிறதா?




ஒருகாலத்தில், காசுபணம் இல்லாம, முகவரி இல்லாம, தனிமையில் அழுதவர்களெல்லாம், இன்று சினிமா ஹீரோக்களைப்போலவும் ஹிரோயின்களைப்போலவும் அல்லவா கவர்ச்சியான மற்றும் ஆடம்பரமான ஆடையணிகலன்களுடன் நடனம்பண்ணுகிறார்கள்!




இவர்களின் ஆடல் பாடல்களில் இவர்களல்லவா மகிமைப்படுகிறார்கள்! இவர்களல்லவா மகிழ்ச்சியடைகிறார்கள்! இவர்களுடைய ஆராதனைக்கும் தேவனுக்கும் தேவவசனங்களுக்கும் தொடர்பில்லையே!



*"கடைசிக்காலத்திலே தங்கள் துன்மார்க்கமான இச்சைகளின்படி நடக்கிற பரியாசக்காரர் தோன்றுவார்கள்"* என்று வேதம் எச்சரிக்கிறது. (யூதா 1:18)




இவர்கள் பிரிந்துபோகிறவர்களும், ஜென்மசுபாவத்தாரும், ஆவியில்லாதவர்களுமாமே. (யூதா 1:19)




"அசைவில்லாத ராஜ்யத்தைப் பெறுகிறவர்களாகிய நாம் *பயத்தோடும் பக்தியோடும் தேவனுக்குப் பிரியமாய் ஆராதனை செய்யும்படி* கிருபையைப் பற்றிக்கொள்ளக்கடவோம்" என்று எச்சரிக்கிறார் ஓர் தேவமனிதன்.

(எபிரே.12:28)




கிருபையைப் பற்றிக்கொண்டவர்களால் மட்டுமே பயத்தோடும் பக்தியோடும் தேவனுக்குப் பிரியமான ஆராதனை செய்யமுடியும். இவர்கள் மட்டுமே

அசைவில்லாத ராஜ்யத்தைப் பெறமுடியும்!!




சபையை திரையரங்குகளாக்கி, சினிமா பாணியிலான ஆட்டம் பாட்டம் கொண்டாட்டம், விசில் சத்தம் என்று அலங்கோலப்படுத்தும் பக்தியற்றவர்கள் கிருபையை பற்றிக்கொள்ளாதவர்கள். இவர்கள் நரக அக்கினியில் பங்கடைவார்கள்!




நம்முடைய தேவன் பட்சிக்கிற அக்கினியாயிருக்கிறாரே!!

(எபிரே.12:29)


க. காட்சன் வின்சென்ட்*
(Biblical Teaching Ministry)
கோயம்பத்தூர்.
8946050920



"ஏசாயா 5:26 மற்றும் 7:18ல் தேவனே பயில்காட்டி (விசிலடித்து) அழைக்கிறதாக இருக்கையில், ஆராதனை செய்யும்போது மகிழ்சியை வெளிப்படுத்த நாம் விசில் அடிக்கிறதும்; 2சாமுவேல் 6:14ல் கர்த்தருக்கு முன்பாக தாவீது நடனம்பண்ணினதாக இருக்கையில், டான்ஸ் ஆட தெரிந்தவர்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்த சபைக்குள் நடனமாடுவதும் தப்பே இல்லை" என்று ஒரு போதகர் சொல்லுகிறார். இது சரியா? தவறா?

✍️ ஆராதனையில் விசிலடிப்பது உட்பட, நடை, உடை, பாவணை, பாடல், இசை, நடனம் இவைகளில் சினிமாக்காரர்களைப் பின்பற்றும் போலி ஊழியர்கள் (2கொரி.12:12-15), தாங்கள் செய்கிறது சரியென்று சாதிக்க சற்றும் பொருந்தாத வசனங்களை அதற்கு ஆதாரமாகக் காண்பிக்கத் துணிந்திருக்கிறார்கள்!




🫵 *தேவன் ஏன் பயில்காட்டுகிறார் (விசில் ஊதுகிறார்)?*




அவர் தூரத்திலுள்ள ஜாதியாருக்கு ஒரு கொடியை ஏற்றி, *அவர்களைப் பூமியின் கடையாந்தரங்களிலிருந்து பயில்காட்டி அழைப்பார்,* அப்பொழுது அவர்கள் தீவிரமும் வேகமுமாய் வருவார்கள்.

ஏசாயா 5:26




பலமுறை வாய்ப்புகள் கொடுக்கப்பட்டும் மனந்திரும்பாமற்போன யூதாவை தண்டிக்க பாபிலோனியரை தேவன் பயில்காட்டி அழைப்பார் என்று ஏசாயா அறிவிக்கிறார்.




"பயில்காட்டி அழைப்பார்" என்பதற்கு KJVயில் *"shall hiss unto them"* (அவர்களுக்கு சீறொலி எழுப்புவார்) என்றும், ISVயில் *"whistling for them"* (அவர்களுக்கு விசில் ஊதுவார்) என்றும், RSVயில் *"whistle for it"* (அதற்கு விசில் ஊதுவார்) என்றும், T4Tயில் *"it is as though he will whistle"* (அவர் விசில் ஊதுவார் போல் இருக்கிறது) என்றும், EasyEnglishல் *"he will use his whistle"* (அவர் தமது விசிலை பயன்படுத்துவார்) என்றும் கொடுக்கப்பட்டுள்ளது.




இப்பயிருக்க, "பயில்காட்டி அழைப்பார்" என்பதை

சீறொலி எழுப்பி அல்லது விசில் ஊதி அல்லது விசில் ஊதுவதுபோல் அழைப்பார் என்று பொருள் கொள்ளலாம்.




விசில் சத்தம் சமிக்ஞையாகப் பயன்படுத்தப்படுகிறது. ஒருவர் தூரத்திலிருக்கிறவரின் கவனத்தை திருப்பவோ, அல்லது அவரை அருகில் அழைக்கவோ விசில் ஊதுவதுண்டு.




பெரிய நிறுவனங்களில் காவல் பணியில் இருக்கிறவர்கள், ஒருவருக்கொருவர் தகவல் பரிமாற, ஒருவரையொருவர் எச்சரிக்க, அருகில் வரவழைக்க விசில் ஊதுவதுண்டு.




பேருந்தை நடத்துகிறர் அதை நிறுத்தவும், புறப்படப்பண்ணவும் விசில் ஊதுவதுண்டு.




விளையாட்டு போட்டிகளின் நடுவர்கள் விளையாட்டு வீரர்களை நடத்த விசில் ஊதுவதுண்டு.




இதை சமூகம் நல்லவிதமாக பார்க்கிறது. அங்கீகரிக்கிறது. ஆனால், ஆனால், ஆட்டம் பாட்டம் கொண்டாட்டம் என்று கேளிக்கைகளில் ஈடுபடுவோர் எழுப்பும் விசில் சத்தத்தை பண்பட்ட சமூகம் அங்கீகரிப்பதில்லை.




விசில் ஊதுவதற்கும் விசில் அடிப்பதற்கும் வித்தியாசம் உண்டு. விசில் ஊதும்போது விசில் என்கிற கருவியை பயன்படுத்துகிறோம். விசில் அடிக்கும்போது விரலை உதட்டில் வைத்து நாக்கை குவித்து அடிக்கின்றனர்.




தொலைவில் இருக்கும் ஒருவரை திரும்பிப்பார்க்க வைக்க விசில் அடிப்பதை எவரும் தவறாக நினைப்பதில்லை. ஆனால், ஆட்டம் பாட்டம் கொண்டாட்டம் போன்ற களியாட்டுகளில் விசில் அடிப்பதை எல்லாரும் நல்லவிதமாக எடுத்துக்கொள்வதில்லை.




தேவன் அந்நிய தேசத்தாரை வரவழைக்க விசில் சத்தம் எழுப்புகிறதை அருவருப்பாகப் பார்க்கமுடியாது. மேலும், பாபிலோனியரை வரவழைக்க தேவன் நிஜத்தில் விசிலடிக்கவில்லை. அவர் பாபிலோனியரை யூதாவுக்கு எதிராக வரவழைப்பதை அவர்களுக்கு புரியும் மொழியில் சொல்லுகிறார் ஏசாயா.




அந்நாட்களிலே, கர்த்தர் எகிப்து நதிகளின் கடையாந்தரத்திலுள்ள ஈயையும், அசீரியாதேசத்திலிருக்கும் தேனீயையும் *பயில்காட்டி அழைப்பார்.*

ஏசாயா 7:18




யூதாவை பூச்சிகளைப் போல மூடி, அதை வெறுமையாகவும் பலனற்றதாகவும் விட்டுவிடும்படி அதின்மீது படையெடுக்க, தேவன் எகிப்து மற்றும் அசீரியாவின் இராணுவங்களை பயில்காட்டி (சமிக்ஞை

கொடுத்து) அழைப்பார். என்கிறார் ஏசாயா. (ஏசாயா 7:17-20)




கர்த்தர் பயில்காட்டி அழைப்பார் என்பதற்கு BBE என்கிற ஆங்கில மொழிபெயர்ப்பில் *"the Lord will make a piping sound"* (கர்த்தர் ஒரு குழாய் ஒலி எழுப்புவார்) என்று கொடுக்கப்பட்டுள்ளது.




மேலும், எகிப்து மற்றும் அசீரியரை வரவழைக்க தேவன் நிஜத்தில் குழாய் ஒலியை எழுப்பினதாகவோ, விசில் ஊதினதாகவோ காணப்படவில்லை. தேவன் அவர்களை யூதாவுக்கு எதிராக வரவழைப்பதை யூதர்களுக்கு புரியும் மொழியில் சொல்லுகிறார் ஏசாயா.




மேலும், தேவன் பாட்டுப்பாடி, ஆட்டம் ஆடி, களியாட்டுக்காரர்களைப்போல விசில் அடிப்பார் என்று ஏசாயா எங்கும் கூறவில்லை.




🫵 *ஆராதனையில் தாவீதைப்போல நடனம்பண்ணலாமா?*




தாவீது யாருக்கு முன்பாக நடனம்பண்ணினார்?




தாவீது சணல்நூல் ஏபோத்தைத் தரித்துக்கொண்டு, *தன் முழுப்பலத்தோடும் கர்த்தருக்கு முன்பாக நடனம் பண்ணினான்.*

2சாமு.6:14




இன்று ஆராதனையில் நடனமாடுகிறவர்கள் தங்கள் முழுப்பலத்தோடு கர்த்தருக்கு முன்பாக நடனம் பண்ணுகிறார்களா? அல்லது மனுஷர் தங்களை ரசிக்க மனுஷர் முன்பாக நடனமாடுகிறார்களா என்பதை யோசித்துப்பாருங்கள்!




*தாவீது எப்படி நடனம்பண்ணினார்?*




தாவீது தன் வீட்டாரை ஆசீர்வதிக்கிறதற்குத் திரும்பும்போது, சவுலின் குமாரத்தியாகிய மீகாள் தாவீதுக்கு எதிர்கொண்டுவந்து, *"அற்பமனுஷரில் ஒருவன் தன் வஸ்திரங்களைக் கழற்றிப்போடுகிறதுபோல, இன்று தம்முடைய ஊழியக்காரருடைய பெண்களின் கண்களுக்கு முன்பாகத் தம்முடைய வஸ்திரங்களை உரிந்துபோட்டிருந்த இஸ்ரவேலின் ராஜா* இன்று எத்தனை மகிமைப்பட்டிருந்தார்" என்றாள். (2சாமு.6:20)




தாவீது இஸ்ரவேலின் ராஜாவாயிருந்தும், அற்பமனுஷரில் ஒருவன் தன் வஸ்திரங்களைக் கழற்றிப்போடுகிறதுபோல, தன் ராஜவஸ்திரங்களை உரிந்துபோட்டு, கர்த்தருக்கு ஊழியம் செய்த ஆசாரியரும் லேவியரும் அணியும் சணல்நூல் ஏபோத்தைத் தரித்துக்கொண்டு நடனம் பண்ணினார். (2சாமு.6:14)




"நாங்கள் தாவீதை பின்பற்றி ஆராதனையில் நடனம்பண்ணுகிறோம்" என்கிறவர்கள், தங்கள் அலங்காரமான உயர்ந்த ஆடைகளை கழற்றிப்போட்டுவிட்டு, தேவனுடைய ஊழியர்களுக்கேற்ப எளிய மற்றும் தகுதியான வஸ்திரங்களை உடுத்திக்கொண்டு (1தீமோ.2:9,10) நடனம்பண்ணவேண்டும்.




இவர்களோ எளிய மற்றும் தகுதியான வஸ்திரங்களை உரிந்துபோட்டு இராஜாக்களைப்போலவும், மகாராணிகளைப் போலவும் உயர்ந்த மற்றும் கவர்ச்சியான வஸ்திரங்களை அணிந்துகொண்டு, சினிமா நடிகர்களுக்கிணையாக தங்களை அலங்கரித்துக்கொண்டு, தாங்கள் தாவீதைப்போல நடனம்பண்ணுவதாகக் கூறுகிறார்கள்!




*தாவீது ஏன் நடனம்பண்ணினார்?*




அதற்குத் தாவீது மீகாளைப் பார்த்து: *உன் தகப்பனைப் பார்க்கிலும் அவருடைய எல்லா வீட்டாரைப் பார்க்கிலும், என்னை இஸ்ரவேலாகிய கர்த்தருடைய ஜனத்தின்மேல் தலைவனாகக் கட்டளையிடும்படிக்குத் தெரிந்து கொண்ட* கர்த்தருடைய சமுகத்திற்கு முன்பாக ஆடிப்பாடினேன்.

2சாமு.6:21

*இதைப்பார்க்கிலும் இன்னும் நான் நீசனும் என் பார்வைக்கு அற்பனுமாவேன்.* அப்படியே நீ சென்ன பெண்களுக்குங்கூட மகிமையாய் விளங்குவேன் என்றான்.

2சாமு.6:22




தன்னை உயர்த்தின கர்த்தருக்கு தன் நன்றியுணர்ச்சியை வெளிப்படுத்தும்படிக்கு, தான் ஒரு ராஜா என்பதை மறந்து, ஓர் அற்பமனுஷனைப்போல கர்த்தருடைய சமுகத்திற்கு முன்பாக ஆடிப்பாடினார் தாவீது. தன் தேவனுக்கு முன்பாக இன்னும் தான் நீசனும் தன் பார்வைக்கு அற்பனுமாக அவர் ஆயத்தமாயிருந்தார்.




தாங்கள் தாவீதைபோல நடனம்பண்ணுகிறதாக சொல்லுகிற இன்றைய ஆராதனை வீரர்களிடம், தாவீதின் நன்றியுணர்ச்சியையும், உடையில் எளிமையையும், உள்ளத்தில் தாழ்மையையும் காணமுடிகிறதா?




ஒருகாலத்தில், காசுபணம் இல்லாம, முகவரி இல்லாம, தனிமையில் அழுதவர்களெல்லாம், இன்று சினிமா ஹீரோக்களைப்போலவும் ஹிரோயின்களைப்போலவும் அல்லவா கவர்ச்சியான மற்றும் ஆடம்பரமான ஆடையணிகலன்களுடன் நடனம்பண்ணுகிறார்கள்!




இவர்களின் ஆடல் பாடல்களில் இவர்களல்லவா மகிமைப்படுகிறார்கள்! இவர்களல்லவா மகிழ்ச்சியடைகிறார்கள்! இவர்களுடைய ஆராதனைக்கும் தேவனுக்கும் தேவவசனங்களுக்கும் தொடர்பில்லையே!



*"கடைசிக்காலத்திலே தங்கள் துன்மார்க்கமான இச்சைகளின்படி நடக்கிற பரியாசக்காரர் தோன்றுவார்கள்"* என்று வேதம் எச்சரிக்கிறது. (யூதா 1:18)




இவர்கள் பிரிந்துபோகிறவர்களும், ஜென்மசுபாவத்தாரும், ஆவியில்லாதவர்களுமாமே. (யூதா 1:19)




"அசைவில்லாத ராஜ்யத்தைப் பெறுகிறவர்களாகிய நாம் *பயத்தோடும் பக்தியோடும் தேவனுக்குப் பிரியமாய் ஆராதனை செய்யும்படி* கிருபையைப் பற்றிக்கொள்ளக்கடவோம்" என்று எச்சரிக்கிறார் ஓர் தேவமனிதன்.

(எபிரே.12:28)




கிருபையைப் பற்றிக்கொண்டவர்களால் மட்டுமே பயத்தோடும் பக்தியோடும் தேவனுக்குப் பிரியமான ஆராதனை செய்யமுடியும். இவர்கள் மட்டுமே

அசைவில்லாத ராஜ்யத்தைப் பெறமுடியும்!!




சபையை திரையரங்குகளாக்கி, சினிமா பாணியிலான ஆட்டம் பாட்டம் கொண்டாட்டம், விசில் சத்தம் என்று அலங்கோலப்படுத்தும் பக்தியற்றவர்கள் கிருபையை பற்றிக்கொள்ளாதவர்கள். இவர்கள் நரக அக்கினியில் பங்கடைவார்கள்!

நம்முடைய தேவன் பட்சிக்கிற அக்கினியாயிருக்கிறாரே!!
(எபிரே.12:29)

க. காட்சன் வின்சென்ட்
(Biblical Teaching Ministry)
கோயம்பத்தூர்.
8946050920



"குடும்ப வாழ்க்கையில் தோல்வியடைந்து பிரிந்துவிட்ட கிறிஸ்தவர்கள் (ஊழியர் உட்பட) பரிசுத்தமாய் வாழ வாய்ப்பே இல்லை" என்று ஒரு தீர்க்கதரிசி சொல்லுகிறார். அதற்கு அவர் சிம்சோனை உதாரணமாகக் காண்பிக்கிறார். இது சரியா?

✍️ கிறிஸ்தவத் தம்பதிகளுக்குள் பிரிவினை வராதபடிக்கு ஜாக்கிரதையாய் இருக்கவேண்டும் என்று எச்சரிப்பதற்காக அந்த தீர்க்கதரிசி அவ்வாறு சொல்லியிருக்கலாம்.




ஆகிலும், ஒரு காரியத்தை அழுத்தமாய் சொல்லவேண்டும் என்பற்காக மிகையாக சொல்லுகிறதை எவரும் தவிர்க்கவேண்டும்.




சேர்ந்து வாழ்கிற தம்பதிகள் அனைவரும் பரிசுத்தமாய் ஜீவிக்கிறார்கள் என்றும், மணமுறிவு ஏற்படுகிற தம்பதியர் அனைவரும் பாவம் செய்கிறார்கள் என்றும் கற்பனைசெய்கிறது ஏற்கத்தக்கதல்ல.




மணமுறிவு ஏற்பட்ட சிம்சோன் சில பெண்களுடன் தவறான உறவில் இருந்ததுபோல (நியா.14:1-15:2; 16:1-4),

மணமுறிவு ஏற்பட்ட சில கிறிஸ்தவ சகோதர சகோதரிகள் இருக்கக்கூடும். ஆகிலும் மணமுறிவடைந்த அனைவரும் பாவம் செய்வார்கள் என்பது சரியல்ல.




அப்படியே, திருமண உறவில் நிலைத்திருக்கிற அனைத்து தம்பதியினரும் பரிசுத்தமாக இருப்பார்கள் என்று எண்ணுகிறதும் தவறாகும்.




சிம்சோன்மேல் எப்போதாவது ஆவியானவர் வந்து இறங்குவார். (நியா.13:25; 14:5,6,19; 15:14) ஆனால், கர்த்தருடைய ஆவியை தன்னில் நிரந்தரமாய் கொண்டிருந்த தாவீது (1சாமு.16:13; சங்.51:11), பிறன் மனைவியை பலவந்தமாய் கடத்திவரப்பண்ணி, அவளுடன் வேசித்தனம்பண்ணினான். (2சாமு.11:1-4)




பரிசுத்த ஆவியைப் பெற்றிருக்கிறோம் என்று சொல்லியும், இப்படிப்பட்ட அருவருப்பானக் காரியத்தை செய்கிற கூடிவாழும் தம்பதியர் சிலர் கிறிஸ்தவ உலகத்தில் இருக்கிறதை மறுக்கமுடியாது. ஆகிலும், கூடிவாழும் தம்பதியர் அனைவரும் இப்படி பாவம் செய்கிறார்கள் என்று சொல்லக்கூடாது. திருமண உடன்படிக்கையில் சொன்னபடி இறுதிவரை பிறர்முகம் பாராத உத்தம தம்பதியர் அநேகர் இருக்கிறார்கள்.




*கூடிவாழ்கிற அல்லது தன் இணையரைப் பிரிந்திருக்கிற கிறிஸ்தவ சகோதர சகோதரிகள் பரிசுத்தமாய் வாழ்கிறது அவர்கள் ஆண்டவரை எவ்வளவு நேசிக்கிறார்கள் என்பதை பொறுத்திருக்கிறது. (யோவான் 14:21,23)*




திருமண உறவில் நிலைத்திருக்கிற ஊழியர் மற்றும் கிறிஸ்தவத் தம்பதிகள் சிலர் திருமணத்திற்கு மீறிய தவறான உறவில் ஈடுபடுகிறது, அவர்கள் ஆண்டவரில் ஆழமான அன்பற்றவர்கள் என்பதைக் காண்பிக்கிறது.




விவாக முறிவு ஏற்பட்டுவிட்டவரில் சிலர் தங்களை சுத்தமாய் காத்துக்கொள்வது அவர்கள் ஆண்டவரில் கொண்டுள்ள ஆழமான அன்பை காண்பிக்கிறது.




[ஆகிலும், ஆண்டவரில் அன்புகூருகிற இவர்கள் எப்படி அவருடைய வார்த்தையை (மத்.19:6) மீறி விவாகரத்து செய்துகொள்கிறார்கள் என்பது ஆச்சரியமாயிருக்கிறது]




தன் மனைவியை விவாகரத்து செய்துவிட்ட ஒரு கிறிஸ்தவரும், தன் கணவரை விவாகரத்துசெய்துவிட்ட ஒரு கிறிஸ்தவ சகோதரியும் திருமணம் செய்துகொண்டு வாழ்கிறதை பரிசுத்தமாகவும்; தன் மனைவியை விவாகரத்து செய்துவிட்ட ஒரு கிறிஸ்தவர் திருமணம் செய்துகொள்ளாமல் ஒரு ஸ்திரீயுடனும், தன் கணவரை விவாகரத்துசெய்துவிட்ட ஒரு கிறிஸ்தவ சகோதரி திருமணம் செய்துகொள்ளாமல்

ஓர் ஆணுடனும் தொடர்புவைத்துக்கொள்வதை பாவமாகவும் பார்க்கிறவர் கிறிஸ்தவ உலகத்தில் உண்டு.




விபச்சார முகாந்திரத்தினாலன்றி வேறு காரணங்களுக்காக தள்ளிவிடப்பட்ட ஆண் அல்லது பெண்ணை திருமணம் செய்துகொள்கிற பெண் அல்லது ஆண் விபச்சாரம் செய்வதாகவே ஆண்டவர் சொல்லுகிறார்.

(மத்.5:32)




விபச்சார முகாந்திரத்தினாலன்றி தன் மனைவி அல்லது புருஷனை தள்ளி, அவர்கள் வேறு ஆணை அல்லது பெண்ணை விவாகம் செய்யக் காரணமாகிற கிறிஸ்தவ சகோதர சகோதரிகள், அவர்களை விபச்சாரம் செய்யப்பண்ணுகிறார்கள் என்கிறார் ஆண்டவர்.




ஆண்டவரில் அன்புள்ளவர் இவ்வாறு செய்யவேமாட்டார்.




தங்கள் இணையரை தள்ளிவிட்டு, அவர்களை விபச்சாரம் செய்யப்பண்ணுகிறவர்களும்; தள்ளிவிடப்பட்டப் பின்பு வேறு இணையரை தேடிக்கொண்டு விபச்சாரம் செய்கிறவர்களும் கிறிஸ்தவ உலகத்தில் இருக்கிறதை மறுக்கமுடியாது.




விபச்சார முகாந்தரமின்றி வேறு காரணங்களுக்காக தன் மனைவி அல்லது கணவனைவிட்டு பிரிந்துசென்று, அவர்கள் வேறு திருமணம் செய்து விபச்சாரராவதற்கு காரணமாகிற கிறிஸ்தவர்களும் இருக்கிறார்கள்.




விபச்சார முகாந்தரமின்றி வேறு காரணங்களுக்காக தன் மனைவி அல்லது கணவனை விட்டு பிரிந்துசென்று, வேறு திருமணம் செய்துகொண்டு விபச்சாரராகிற கிறிஸ்தவர்களும் இருக்கிறார்கள்.




ஏதோ காரணங்களுக்காக விவாகரத்து பெற்ற கிறிஸ்தவ சகோதர சகோதரிகள் மறுமணம் செய்துகொள்வதை சட்டம் அனுமதித்தாலும், அதை வேதம் அனுமதிக்கவில்லை.




"விவாகம்பண்ணிக்கொண்டவர்களுக்கு நானல்ல, *கர்த்தரே கட்டளையிடுகிறதாவது:* மனைவியானவள் தன் புருஷனை விட்டுப் பிரிந்துபோகக்கூடாது. *பிரிந்துபோனால் அவள் விவாகமில்லாதிருக்கக்கடவள், அல்லது புருஷனோடே ஒப்புரவாகக்கடவள்.* புருஷனும் தன் மனைவியைத் தள்ளிவிடக்கூடாது" என்கிறார் பவுல். (1கொரி.7:10,11)




மனைவியானவள் தன் புருஷனை விட்டுப் பிரிந்துபோகக்கூடாது என்பது கர்த்தரின் கட்டளை. பிரிந்துபோனால் அவள் விவாகம்பண்ணக்கூடாது. விவாகம்பண்ணும் சோதனை வருமானால், அவள் தன் புருஷனோடே சேர்ந்து வாழவேண்டும். வேறு ஆணை அவள் திருமணம் செய்துகொண்டால் அவள் விபச்சாரி என்னப்படுவாள். இது புருஷனுக்கும் பொருந்தும்.




தன் மனைவி அல்லது கணவன் விபச்சாரம் செய்த காரணத்திற்காக அவர்களை விட்டு பிரிந்துபோய், வேறு திருமணம் செய்கிற சகோதர சகோதரி விபச்சாரம் செய்கிறவர்களாகவே கருதப்படுவர். காரணம், தங்கள் இணையர் செய்த அதே காரியத்தை இப்போது அவர்கள் வேறு பெண் அல்லது ஆணுடன் 'விவாகம்' என்கிற பெயரில் செய்கின்றனர்.




இவ்வாறு விபச்சாரம் செய்கிற சிலரும் கிறிஸ்தவ உலகில் இருக்கிறதைக் காணமுடிகிறது.




பவுல் சொல்லும் கீழ்காணும் காரியங்கள் இங்கு கவனிக்கத்தக்கது.




மற்றவர்களைக்குறித்துக் *கர்த்தர் அல்ல, நானே சொல்லுகிறதாவது:* சகோதரனொருவனுடைய மனைவி அவிசுவாசியாயிருந்தும், *அவனுடனே வாசமாயிருக்க அவளுக்குச் சம்மதமிருந்தால்,* அவன் அவளைத் தள்ளிவிடாதிருக்கக்கடவன்.

1கொரிந்.7:12

அப்படியே ஒரு ஸ்திரியினுடைய புருஷன் அவிசுவாசியாயிருந்தும், *அவளுடனே வாசமாயிருக்க அவனுக்கச் சம்மதமிருந்தால்,* அவள் அவனைத் தள்ளிவிடாதிருக்கக்கடவள்.

1கொரிந்.7:13

என்னத்தினாலெனில், *அவிசுவாசியான புருஷன் தன் மனைவியால் பரிசுத்தமாக்கப்படுகிறான். அவிசுவாசியான மனைவியும் தன் புருஷனால் பரிசுத்தமாக்கப்படுகிறாள்.* இல்லாவிட்டால் உங்கள் பிள்ளைகள் அசுத்தமாயிருக்குமே. இப்பொழுதோ அவைகள் சுத்தமாயிருக்கின்றன.

1கொரிந்.7:14

ஆகிலும் *அவிசுவாசி பிரிந்துபோனால் பிரிந்துபோகட்டும், இப்படிப்பட்ட விஷயத்தில், சகோதரனாவது சகோதரியாவது அடிமைப்பட்டவர்களல்ல.* சமாதானமாயிருக்கும்படிக்கே தேவன் நம்மை அழைத்திருக்கிறார்.

1கொரிந்.7:15




அவிசுவாசியான கணவன் அல்லது மனைவி விசுவாசியான தன் மனைவி அல்லது கணவனோடு சேர்ந்துவாழ தடையில்லை.




தான் விசுவாசியாயிருப்பதினிமித்தம் தன்னைவிட்டு பிரிந்துபோகிற அவிசுவாசியான தன் மனைவியை அல்லது கணவனை கிறிஸ்தவ கணவன் அல்லது மனைவி தடைசெய்யவேண்டியதில்லை. ஆகிலும், விசுவாசியான கணவன் அல்லது மனைவி வேறு திருமணம் செய்ய அனுமதியில்லை.




அவிசுவாசியான தன் மனைவி அல்லது கணவன் தன்னைவிட்டு பிரிந்துபோனப்பின்பு வேறு விவாகம் செய்யாமலும், வேறு பெண் அல்லது ஆண் தொடர்பில்லாமலும் வாழ்கிற விசுவாசியான சகோதர சகோதரி உண்டு. வேறு விவாகம் செய்துகொண்டு அல்லது வேறு விவாகம் செய்யாமலேயே, வேறு பெண் அல்லது ஆணுடன் தொடர்பில் இருந்து தங்களை பரிசுத்தக் குலைச்சலாக்கிக்கொள்ளும் விசுவாசிகளான சகோதர சகோதரிகள் உண்டு.




விபச்சாரமுகாந்தரமின்றி தள்ளப்பட்டு வேறு திருமணம் செய்யாமல் பரிசுத்தமாய் வாழ்கிற விசுவாசியான சகோதர சகோதரிகள் உண்டு. வேறு மணம் புரிந்துகொண்டு அல்லது வேறு பெண் அல்லது ஆணுடன் தொடர்பு வைத்துக்கொண்டு, பரிசுத்தகுலைச்சலாகும் கிறிஸ்தவரும் உண்டு.




விபச்சார முகாந்திரத்தினால் தன் மனைவி அல்லது கணவனை தள்ளிவிட்டு: வேறு திருமணம் செய்யாமலும், வேறு பெண் அல்லது ஆணுடன் தொடர்பு வைத்துக்கொள்ளாமல் வாழ்கிற கிறிஸ்தவ சகோதர சகோதரிகள் உண்டு. வேறு திருமணம் செய்துகொள்ளும், அல்லது வேறு பெண் அல்லது ஆணுடன் தொடர்பிலிருக்கும் கிறிஸ்தவ சகோதர சகோதரிகளும் உண்டு.




விபச்சாரம் செய்த தன் மனைவியை அல்லது கணவனை மன்னித்து, அவர்கள் மனந்திரும்பிய பட்சத்தில் அவர்களுடன் உத்தமமாய் ஜீவிக்கிற கிறிஸ்தவர் உண்டு. தன் மனைவி அல்லது கணவன் விபச்சாரத்திலிருந்து மனந்திரும்பாதபோதும் அவர்களுடன் தொடர்ந்து உண்மையாய் வாழ்கிற கிறிஸ்தவரும் உண்டு.




பலமுறை மன்னிக்கப்பட்டும், கண்டிக்கப்பட்டும், விபச்சாரப் பாவத்தில் தொடர்ந்து துணிகரமாய் ஈடுபடுகிற மனைவியை அல்லது கணவனை கிறிஸ்தவ சகோதர சகோதரிகள் தள்ளிவிடுகிறது நல்லது.




*வேசியோடு இசைந்திருக்கிறவன் அவளுடனே ஒரே சரீரமாயிருக்கிறானென்று அறியீர்களா? இருவரும் ஒரே மாம்சமாயிருப்பார்கள் என்று சொல்லியிருக்கிறதே"* என்று கேட்கிறார் பவுல். (1கொரி.6:16)




தன் மனைவியல்லாத, பணத்துக்காக பல ஆண்களுடன் வேசித்தனம்பண்ணுகிற பெண்களுடன் தொடர்புவைத்துக்கொள்கிறவனும் வேசித்தனம்பண்ணுகிறான் என்கிறார் பவுல். அதாவது, கிறிஸ்துவின் அவயவமாயிருக்கிற தன் சரீரத்தை அவன் வேசியின் அவயவமாக்குகிறான் என்கிறார்.

(1கொரிந்.6:15)




பணத்துக்காக அல்லாமல், தன் இச்சையினால் பிற ஆண் அல்லது பெண்ணுடன் தொடர்புவைத்துக்கொள்ளுகிற கிறிஸ்தவ சகோதரனும் சகோதரியும் வேசிக்கள்ளனாகவும் வேசியாகவும் இருக்கிறார்கள்.




மனந்திரும்பாமல் தொடர்ந்து வேசித்தனம்பண்ணுவதினால் வேசிக்கள்ளன் அல்லது வேசியான இவர்களுடன் இசைந்திருக்கிற இவர்களுடைய மனைவி அல்லது கணவன் அவர்களுடனே ஒரே சரீரமாயிருக்கிறார்கள். அதாவது, தன் கணவன் அல்லது மனைவியின் வேசித்தனத்தை நன்கு அறிந்திருந்தும், அவர்களுடன் மனப்பூர்வமாய் வாழ்கிற கிறிஸ்தவர்கள், அவர்கள் மூலமாக கறைப்படுகிறார்கள். இந்தக் காரணத்துக்காகவே ஆண்டவர் வேசித்தனம்பண்ணுகிற மனைவியை அல்லது கணவனை தள்ளிவிட அனுமதித்திருக்கலாம்.




விவாகம் யாவருக்கும் கனமுள்ளதாயும், விவாகமஞ்சம் அசுசிப்படாததாயுமிருப்பதாக. வேசிக்கள்ளரையும் விபசாரக்காரரையும் தேவன் நியாயந்தீர்ப்பார் என்று எச்சரிக்கிறது வேதம். (எபிரே.13:4)




தன் மனைவி அல்லது கணவன் தொடர்ந்து பிற ஆண் அல்லது பெண் தொடர்பில் இருந்தும், தான் உத்தமமாய் ஜீவிக்கும் கிறிஸ்தவரும் உண்டு.

வேசித்தனம்பண்ணுகிற தன் கணவனை அல்லது மனைவியை கண்டித்து திருத்தாத, அல்லது கண்டித்தும் திருந்தாத பட்சத்தில் அவர்களை தள்ளிவிடாதவர்கள், அவர்களுடைய வேசித்தனப் பாவத்திற்கு மறைமுகமாகத் துணைபோகிறார்கள். பாவத்தை கண்டுகொள்ளாமல், இசைந்துப்போகிறதே பாவமாகும்.




[சிலர் பிள்ளைகளின் எதிர்காலத்துக்காக சகித்துக்கொண்டு வாழ்கிறார்கள்]




தன் மனைவி அல்லது கணவன் பிற ஆண் அல்லது பெண் தொடர்பில் இருக்கிறபடியே, தானும் பிற பெண் அல்லது ஆண் தொடர்பில் இருக்கிற கிறிஸ்தவரும் உண்டு. தன் மனைவி அல்லது கணவனுக்கு தெரியாமல் பிற ஆண் அல்லது பெண் தொடர்பில் இருக்கிற கிறிஸ்தவரும் உண்டு.




கிறிஸ்தவ உலகில் இப்படி பலவிதமான கிறிஸ்தவர்கள் இருக்கிறபடியால், எல்லாரையும் ஒரேவிதமாகப் பார்க்கமுடியாது.




*சிலநேரம் நாம் உத்தமர்களை பாவியாகவும், பாவிகளை உத்தமராகவும் பார்க்கக்கூடும்!*




ஆனால், தேவனுடைய பார்வைக்கு மறைவான சிருஷ்டி ஒன்றுமில்லை. சகலமும் அவருடைய கண்களுக்குமுன்பாக நிர்வாணமும் வெளியரங்கமுமாயிருக்கிறது, அவருக்கே நாம் கணக்கு ஒப்புவிக்கவேண்டும். (எபிரே.4:13)




"ஆனதால், கர்த்தர் வருமளவும் *நீங்கள் காலத்துக்குமுன்னே யாதொன்றைக்குறித்தும் தீர்ப்புச்சொல்லாதிருங்கள். இருளில் மறைந்திருக்கிறவைகளை அவர் வெளியரங்கமாக்கி, இருதயங்களின் யோசனைகளையும் வெளிப்படுத்துவார்.* அப்பொழுது அவனவனுக்குரிய புகழ்ச்சி தேவனால் உண்டாகும்" என்கிறார் பவுல்.

(1கொரி.4:5)




இப்படியிருக்க, இவர்கள் அனைவரும் இப்படித்தான் இருப்பார்கள் என்று எவரையும் தீர்ப்புசெய்கிறதை எவரும் தவிர்க்கவேண்டும்!




விவாகரத்து செய்கிறவர்கள் அல்லது பெறுகிறவர்கள் பாவம் செய்வதற்கு ஏதுவாக சோதிக்கப்பட வாய்ப்பிருக்கிறதை மறுக்கமுடியாது. ஆகிலும், விவாகரத்து செய்கிறவர்கள் அல்லது பெறுகிறவர்கள் அனைவரும் நிச்சயம் பாவம் செய்வார்கள் என்று எவர் சொன்னாலும் ஏற்கமுடியாது!!

க. காட்சன் வின்சென்ட்
(Biblical Teaching Ministry)
கோயம்பத்தூர்.
8946050920

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.