Type Here to Get Search Results !

வரங்களிலும் மேன்மையானது எது? | எது பெரியது? | Bro Godson Vincent Bible Study | ஆசீர்வாத தின தியான குறிப்புகள் | Jesus Sam

உன்னதப்பாட்டு 2:1ல் சொல்லப்பட்டுள்ள சாரோனின் ரோஜா யார்?* என்று நாம் எழுப்பிய கேள்விக்கு ஊழியர்கள் அளித்த பதில்கள்


பிதாவாகிய தேவன்


சாலமோன்


உன்னதபாட்டு கவியில் காட்டப்படும் கதை நாயகன் அல்லது மேய்ப்பன்.


மணவாட்டி (சபை )


கர்த்தராகிய இயேசுகிறிஸ்து


The young woman (Manamagal)


சூலமித்தியாள்


Saruva Vallamai Ulla KARTHAR..


👆 இதில் *சூலமித்தியாள்* என்கிற பதிலே சரியானது.


இந்த சூலமத்தியாள் சபைக்கு உருவகமாக பயன்படுத்தப்பட்டுள்ளதாக வேதவியாக்கியானிகள் கூறுகின்றனர்.


உன்னதப்பாட்டு 1:16லிருந்து 2:1 வரை பல ஆங்கில மொழிப்பெயர்ப்புகளில் பார்ப்பதோடு, ஆங்கில விளக்கவுரைகளை வாசித்தால் மேலே காணப்படும் பதில் சரியானது என்பதை அறியலாம்.


தமிழ் வேதாகமத்தை சரியாய் பகுத்துப்பார்த்தாலே இதை அறிந்துகொள்ளலாம்.

க. காட்சன் வின்சென்ட்*
(Biblical Teaching Ministry)
கோயம்பத்தூர்.
8946050920


எது பெரியது?
இப்பொழுது விசுவாசம், நம்பிக்கை, அன்பு இம்மூன்றும் நிலைத்திருக்கிறது. *இவைகளில் அன்பே பெரியது.*
1கொரிந்.13:13


நாம் தொடர்ந்து செய்யவேண்டிய மூன்று காரியங்கள் உள்ளன:


1. தேவன் உண்டென்று விசுவாசிப்பது....


2. அவர் நமக்கு பலன் அளிக்கிறவரென்று நம்புவது....


3. மற்றவரில் அன்புகூருவது....


அந்த மூன்று காரியங்களில் பிறரை நேசிப்பதே பெரியது!


*நாம் தம்மை விசுவாசிப்பதிலும், நமது நன்மைகளில் நம்பிக்கை வைப்பதிலும், தமது அன்பை வெளிப்படுத்துகிறவர்களாக இருப்பதையே தேவன் அதிகம் விரும்புகிறார்.*


பிறரில் அன்புகூருகிற கிறிஸ்தவர் தேவன்மேல் உள்ள தனது விசுவாசத்தை விளங்கப்பண்ணுவதோடு, தேவனுடைய நன்மைகளுக்கு தான் பாத்திரமானவர் என்பதை நிச்சயப்படுத்துகிறார்!


பிரியமானவர்களே, ஒருவரிலொருவர் அன்பாயிருக்கக்கடவோம். ஏனெனில் அன்பு தேவனால் உண்டாயிருக்கிறது. *அன்புள்ள எவனும் தேவனால் பிறந்து, அவரை அறிந்திருக்கிறான்.*
1யோவான் 4:7

க. காட்சன் வின்சென்ட்*
(Biblical Teaching Ministry)
கோயம்பத்தூர்.
8946050920


வரங்களிலும் மேன்மையானது எது❓
இப்படியிருக்க, முக்கியமான வரங்களை நாடுங்கள். *இன்னும் அதிக மேன்மையான வழியை* உங்களுக்குக் காண்பிக்கிறேன்.
1கொரி.12:31


கொரிந்து சபையாரை முக்கியமான வரங்களை நாடும்படி ஆலோசனை சொல்லுகிற பவுல்: *இன்னும் அதிக மேன்மையான வழியை* அவர்களுக்குக் காண்பிக்கிறதாக சொல்லுகிறார்.


🫵 *அதிக மேன்மையான வழி எது?*


முக்கியமான வரங்களிலும் பவுல் காண்பிக்கிற அதிக மேன்மையான வழி எது?


நான் மனுஷர் பாஷைகளையும் தூதர் பாஷைகளையும் பேசினாலும், *அன்பு எனக்கிராவிட்டால்,* சத்தமிடுகிற வெண்கலம் போலவும் ஓசையிடுகிற கைத்தாளம் போலவும் இருப்பேன்.
1கொரி.13:1
நான் தீர்க்கதரிசன வரத்தை உடையவனாயிருந்து, சகல இரகசியங்களையும், சகல அறிவையும் அறிந்தாலும், மலைகளைப் பேர்க்கத்தக்கதாக சகல விசுவாசமுள்ளவனாயிருந்தாலும், *அன்பு எனக்கிராவிட்டால்,* நான் ஒன்றுமில்லை.
1கொரி.13:2
எனக்கு உண்டான யாவற்றையும் நான் அன்னதானம்பண்ணினாலும், என் சரீரத்தைச் சுட்டெரிக்கப்படுவதற்குக் கொடுத்தாலும், *அன்பு எனக்கிராவிட்டால்,* எனக்குப் பிரயோஐனம் ஒன்றுமில்லை.
1கொரி.13:3


மனுஷர் பாஷைகளையும் தூதர் பாஷைகளையும் பேசுகிறவர்களும், தீர்க்கதரிசன வரத்தை உடையவராயிருந்து, சகல இரகசியங்களையும், சகல அறிவையும் அறிகிறவர்களும், மலைகளைப் பேர்க்கத்தக்கதாக சகல விசுவாசமுள்ளவர்களும்,
தங்களுக்கு உண்டான யாவற்றையும் அன்னதானம்பண்ணுகிறவர்களும், தங்கள் சரீரத்தைச் சுட்டெரிக்கப்படுவதற்குக் கொடுக்கிறவர்களும், கிறிஸ்தவ உலகத்தில் மதிப்புமிக்கவர்களாகப் பார்க்கப்படக்கூடும்.


ஆகிலும், பிறரில் அன்புகூராமல், மனுஷர் பாஷைகளையும் தூதர் பாஷைகளையும் பேசுகிறவர்களையும், தீர்க்கதரிசன வரத்தை உடையவராயிருந்து, சகல இரகசியங்களையும், சகல அறிவையும் அறிகிறவர்களையும், மலைகளைப் பேர்க்கத்தக்கதாக சகல விசுவாசமுள்ளவர்களையும், தங்களுக்கு உண்டான யாவற்றையும் அன்னதானம்பண்ணுகிறவர்களையும், தங்கள் சரீரத்தைச் சுட்டெரிக்கப்படுவதற்குக் கொடுக்கிறவர்களையும் தேவன் ஒரு பொருட்டாகப் பார்க்கிறதில்லை, அவர்கள் தேவனிடத்திலிருந்து ஒன்றையும் பெறுவதுமில்லை என்கிறார் பவுல்.


வரங்களை உடையவர்களாக, வல்லமையுள்ளவர்களாக, பெரிய தியாகிகளாக இருப்பதிலும்:
நீடிய சாந்தமும் தயவுமுள்ள, பொறாமையில்லாத. தன்னைப் புகழாத, இறுமாப்பாயிராத. அயோக்கியமானதைச் செய்யாத, தற்பொழிவை நாடாத, சினமடையாத, தீங்கு நினையாத.
அநியாயத்தில் சந்தோஷப்படாமல், சத்தியத்தில் சந்தோஷப்படுகிற, சகலத்தையும் தாங்குகிற, சகலத்தையும் விசுவாசிக்கிற, சகலத்தையும் நம்புகிற, சகலத்தையும் சகிக்கிற, ஒருக்காலும் ஒழியாத கிறிஸ்துவின் அன்பை உடையவர்களாக இருப்பதே அதிக மேன்யைான வழியாகும்!
(1கொரி.13:4-8)


வரங்களில் அதீத ஆர்வம் கொள்ளுகிற, "ஆவியில் நிறைந்து எல்லாரும் அந்நியபாஷையில் பேசுங்கள்" என்று ஏவிவிடுகிறவர்கள்: கிறிஸ்துவின் அன்பை வெளிப்படுத்துகிறவர்களாகவும், கிறிஸ்துவின் அன்பை உடையவர்களாக மற்றவரை மாற்றுகிறவர்களாகவும் இருப்பதே அதிக மேன்மையானக் காரியமாகும்!


கனியற்ற வரங்கள் பெரிய காரியம் அல்ல. கனியுடன் கூடிய வரங்களே தேவனுடைய கணக்கில் இருக்கக்கூடியவை!!

க. காட்சன் வின்சென்ட்
(Biblical Teaching Ministry)
கோயம்பத்தூர்.
8946050920

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.