கிறிஸ்தவரில் உண்மை கிறிஸ்தவர் அதிகமா? அல்லது போலி கிறிஸ்தவர்கள் அதிகமா?
✍️ இதை குறித்து ஆண்டவரும் அவருடைய அடியாரும் சொல்லுகிறதை பார்ப்போம்.
🫵 *இயேசுகிறிஸ்து சொன்னது!*
இடுக்கமான வாசல்வழியாய் உட்பிரவேசியுங்கள், கேட்டுக்குப் போகிற வாசல் விரிவும், வழி விசாலமுமாயிருக்கிறது, அதின் வழியாய்ப் பிரவேசிக்கிறவர்கள் அநேகர்.
மத்தேயு 7:13
*ஜீவனுக்குப் போகிற வாசல்* இடுக்கமும்,வழி நெருக்கமுமாயிருக்கிறது, *அதைக் கண்டுபிடிக்கிறவர்கள் சிலர்.*
மத்தேயு 7:14
ஜீவனுக்குப் போகிற வாசலை சிலர்தான் கண்டுபிடிக்கமுடியும் என்கிறார் ஆண்டவர்.
அப்படியானால், இன்று உலக மக்கள் தொகையில் பாதிக்கு மேற்பட்டோர் கிறிஸ்தவர்கள் என்று சொல்லிக்கொண்டாலும், அவர்களில் ஜீவனில் பிரவேசிக்கிறவர்கள் உண்மை கிறிஸ்தவரான சிறுகூட்டமே என்பதை அறியவேண்டும்.
ஒரே சபையில் இருக்கிற கிறிஸ்தவரில், சிலர் உண்மை கிறிஸ்தவர்களாகவும், பலர் போலி கிறிஸ்தவர்களாகவும் இருப்பார்கள்!
*அந்நாளில் அநேகர்* என்னை நோக்கி: கர்த்தாவே! கர்த்தாவே!உமது நாமத்தினாலே தீர்க்கதரிசனம் உரைத்தோம் அல்லவா? உமது நாமத்தினாலே பிசாசுகளைத் துரத்தினோம் அல்லவா? உமது நாமத்தினாலே அநேக அற்புதங்களைச் செய்தோம் அல்லவா? என்பார்கள்.
மத்தேயு 7:22
அப்பொழுது, நான் ஒருக்காலும் உங்களை அறியவில்லை, *அக்கிரமச் செய்கைக்காரரே,* என்னைவிட்டு அகன்றுபோங்கள் என்று அவர்களுக்குச் சொல்லுவேன்.
மத்தேயு 7:23
மேலே ஆண்டவரால் குறிப்பிடப்படுகிற அக்கிரமச் செய்கைக்காரர்
அனைவரும் ஊழியக்காரர் அல்ல. அவர்களில் விசுவாசிகளும் அடக்கம்.
ஏனெனில், இயேசுவின் நாமத்தினாலே விசுவாசிகளும் தீர்க்கதரிசனம் உரைக்கமுடியும், பிசாசுகளைத் துரத்தமுடியும், அற்புதங்களைச் செய்யமுடியும்! (மாற்கு 16:17,18; ரோமர் 12:6-8; 1கொரி.12:1-11; 14:1-31)
இப்படியிருக்க, கிறிஸ்தவரில் அநேகர் போலிகளாக இருப்பார்கள் என்பது புரிகிறதல்லவா?
பயப்படாதே *சிறுமந்தையே,* உங்களுக்கு ராஜ்யத்தைக் கொடுக்க உங்கள் பிதா பிரியமாயிருக்கிறார்.
லூக்கா 12:32
தேவனுடைய மந்தை சிறியது என்றும், சிறுமந்தைக்கே ராஜ்யத்தைக் கொடுக்க பரமபிதா பிரியமாயிருக்கிறார் என்றும் இயேசுகிறிஸ்து கூறுகிறதை கவனியுங்கள்.
தேவனுடைய மந்தை சிறியது என்றால், சிறுகூட்டத்திற்கே பிதா ராஜ்யத்தை அருளுவாரென்றால், உலகம் முழுவதிலுமுள்ள கிறிஸ்தவரில் பெருங்கூட்டம் போலிகள் என்பதை அறியவேண்டும்.
*"அழைக்கப்பட்டவர்கள் அநேகர், தெரிந்துகொள்ளப்பட்டவர்களோ சிலர்"* என்று ஆண்டவர் சொல்லுகிறது கவனிக்கத்தக்கது. (மத்தேயு 22:14)
🫵 *அப்போஸ்தலன் பவுல் சொன்னது!*
சகோதரரே, நீங்கள் என்னோடேகூடப் பின்பற்றுகிறவர்களாகி, நாங்கள் உங்களுக்கு வழிகாட்டுகிறபடி நடக்கிறவர்களை மாதிரியாக நோக்குங்கள்.
பிலிப்பி.3:17
ஏனெனில், *அநேகர் வேறுவிதமாய் நடக்கிறார்கள்.* அவர்கள் கிறிஸ்துவின் சிலுவைக்குப் பகைஞரென்று உங்களுக்கு அநேகந்தரம் சொன்னேன், இப்பொழுதும் கண்ணீரோடும் சொல்லுகிறேன்.
பிலிப்பி.3:18
அவர்கள் முடிவு அழிவு, அவர்களுடைய தேவன் வயிறு, அவர்களுடைய மகிமை அவர்களுடைய இலச்சையே, அவர்கள் பூமிக்கடுத்தவைகளைச் சிந்திக்கிறார்கள்.
பிலிப்பி.3:19
கிறிஸ்துவின் சிலுவை மரணத்திற்கு பகைவர்களாக, அதாவது, கிறிஸ்துவை விசுவாசிக்கிறோம் என்று சொல்லியும், சிலுவையில் மரித்த கிறிஸ்து பற்றிய போதனைகளை எதிர்ப்பதாகக் காட்டும் வகையில் பலர் செயல்படுவதாக பவுல் குறிப்பிடுகிறார்.
இவர்களின் வயிறுதான் இவர்களின் தேவன். அதாவது, இவர்களின் சரீரம் விரும்பும் விஷயங்கள் இவர்களுக்கு தேவனை போல இருக்கும் என்றும், இவர்கள் இவ்வுலகிற்குரியவற்றைப் பற்றி மட்டுமே சிந்திக்கிறார்கள். அதாவது, உலகத்தார் எப்படி சிந்திக்கிறார்களோ, அப்படியே இவர்களும் சிந்திக்கிறார்கள் என்கிறார் பவுல்.
உலகத்தாரைப்போலவே பரலோகத்தில் பற்றில்லாமல்: உலக ஆசீர்வாதம், உலக மேன்மை, உலகத்தில் ஐசுவரியம், உலகத்தில் செழிப்பு, சுகபோகமான வாழ்வு இவைகளுக்காகவே கிறிஸ்துவை தேடுகிற, அதாவது, இம்மைக்காக மாத்திரம் கிறிஸ்துவின்மேல் நம்பிக்கையுள்ளவர்களாயிருக்கிற (1 கொரி.15:19) போலி கிறிஸ்தவர்தானே இன்று கிறிஸ்தவரில் அதிகம்!
🫵 *அப்போஸ்தலன் பேதுரு சொன்னது!*
கள்ளத்தீர்கதரிசிகளும் ஜனங்களுக்குள்ளே இருந்தார்கள், *அப்படியே உங்களுக்குள்ளும் கள்ளப்போதகர்கள் இருப்பார்கள்.* அவர்கள் கேட்டுக்கேதுவான வேதப்புரட்டுகளைத் தந்திரமாய் நுழையப்பண்ணி, தங்களைக் கிரயத்துக்குக்கொண்ட ஆண்டவரை மறுதலித்து, தங்களுக்குத் தீவிரமான அழிவை வருவித்துக்கொள்ளுவார்கள்.
2 பேதுரு 2:1
அவர்களுடைய கெட்ட நடக்கைகளை *அநேகர் பின்பற்றுவார்கள்.* அவர்கள் நிமித்தம் சத்தியமார்க்கம் தூஷிக்கப்படும்.
2 பேதுரு 2:2
கள்ளப்போதகர்களின் கெட்ட நடக்கைகளை பின்பற்றுகிற போலி கிறிஸ்தவர்களே, கிறிஸ்தவ உலகில் அதிகம் இருப்பார்கள் என்று பேதுரு கூறுகிறார்.
அதாவது, கிறிஸ்தவரில் பலர் பொய்யான போதகர்களை நம்பி, அவர்களை நகல் எடுத்துக்கொள்வார்கள். அவர்கள் தவறான போதகர்களைப் போல மிகவும் தவறான செயல்களைச் செய்வார்கள். இதன் விளைவாக, "இப்படித்தான் வாழவேண்டும் என்று இவர்களின் தேவன் போதிக்கிறாரோ!" என்று உலகத்தார் தவறாகப் பேசுவார்கள் என்கிறார் பேதுரு.
அதாவது, தவறான விஷயங்களைக் கற்பிக்கும் கள்ளப்போதகர்களின் மிகவும் ஒழுக்கக்கேடான வாழ்க்கைமுறையைப் பின்பற்றி, பல கிறிஸ்தவர்கள் மிகவும் ஒழுக்கக்கேடான முறையில் நடந்துகொள்வார்கள். இதன் விளைவாக, அவிசுவாசிகள் தேவனுடைய உண்மையான செய்தியை இழிவுபடுத்துவார்கள் என்கிறார்.
இன்றைய கிறிஸ்தவ போதகர்களையும், கிறிஸ்தவர்களையும் சோதித்துப்பாருங்கள். உண்மையானவர்களா? போலிகளா? எவர்கள் அதிகம் என்பது தெரிந்துவிடும்!!
க. காட்சன் வின்சென்ட்
(Biblical Teaching Ministry)
கோயம்பத்தூர்.
8946050920
"எவரும் எவருடைய தவறையும் சுட்டிக்காட்டவேண்டிய அவசியமில்லை. அவரவருக்குள் இருக்கும் ஆவியானவரே அவர்களுக்கு போதிப்பார்" என்று சிலர் கூறுகிறார்களே?*
✍️ எவர் எக்கேடு கெட்டுப்போனால் எனக்கென்ன என்று இருக்கிறவர்களால் மட்டுமே இப்படி சொல்லமுடியும்.
பொதுவாக, தாங்கள் அடையாளம் காட்டப்படுவதில் அச்சம் கொள்ளுகிறவர்களே, "ஆவியானவர் பார்த்துக்கொள்வார்" என்று அடுத்தவர் வாயை அடைக்க முயற்சிப்பார்கள்.
🫵 *நாம் பெற்ற அபிஷேகம் நமக்கு எதை போதிக்கிறது?*
"நீங்கள் அவராலே பெற்ற அபிஷேகம் உங்களில் நிலைத்திருக்கிறது, *ஒருவரும் உங்களுக்குப் போதிக்கவேண்டுவதில்லை. அந்த அபிஷேகம் சகலத்தையுங்குறித்து உங்களுக்குப் போதிக்கிறது.* அது சத்தியமாயிருக்கிறது, பொய்யல்ல, அது உங்களுக்குப் போதித்தபடியே அவரில் நிலைத்திருப்பீர்களாக" (1யோவான் 2:27) என்று யோவான் என்ன சொல்லவருகிறார்?
1யோவான் 2:20 முதல் 26 வரை சரியாய் கவனிப்பீர்களானால், இயேசுவே கிறிஸ்து அல்லது இயேசுவே தேவகுமாரன் என்கிற நிச்சயத்தை அளிக்கிற அனைத்தையும் நாம் பெற்ற அபிஷேகமே நமக்கு போதிக்கும் என்கிறார் யோவான்.
"ஒருவரின் தவறுகளை ஆவியானவரே அவருக்கு சுட்டிக்காட்டுவார். எவரும் அவருக்கு சுட்டிக்காட்டத்தேவையில்லை" என்று யோவான் இங்கு சொல்லவில்லை.
🫵 *அடுத்தவருக்கு போதிக்கவேண்டிய அவசியம் நமக்கு இல்லையா?*
எவரும் எவருக்கும் போதிக்கவேண்டியதில்லை, ஆவியானவரே எல்லாவற்றையும் அவரவருக்கு போதித்துவிடுவார் என்றால், ஐந்துவிதமான ஊழியர்கள் சபைக்கு அவசியமே இல்லையே! (எபேசி.4:11-15)
ஐந்துவிதமான ஊழியர்கள் மூலமாக பேசுகிறவர் ஆவியானவரேயல்லாமல், வேறு யார்?
*"வேதவாக்கியங்களெல்லாம் தேவ ஆவியினால் அருளப்பட்டிருக்கிறது.* தேவனுடைய மனுஷன் தேறினவனாகவும், எந்த நற்கிரியையுஞ் செய்யத் தகுதியுள்ளவனாகவும் இருக்கும்படியாக, *அவைகள் உபதேசத்துக்கும், கடிந்துகொள்ளுதலுக்கும் சீர்திருத்தலுக்கும், நீதியைப் படிப்பிக்குதலுக்கும்* பிரயோஜனமுள்ளவைகளாயிருக்கிறது" என்கிறாரே பவுல்?* (2தீமோத்.3:16,17)
தேவ ஆவியினால் அருளப்பட்டிருக்கிற
வேதவாக்கியங்களைக்கொண்டு, உபதேசிப்பதும், கடிந்துகொள்ளுவதும், சீர்திருத்துவதும், நீதியைப் படிப்பிப்பதும் யார்?
யார் யாருக்கு உபதேசிப்பது? யாரை கடிந்துகொள்ளுவது? யாரை சீர்திருத்துவது? யாருக்கு நீதியைப் படிப்பிப்பது? மனுஷர் மனுஷருக்குத்தானே?
ஆவியானவரே அவரவருக்கு போதித்துவிடுவாரானால், அவர் வேதவாக்கியங்களை ஏன் நம்மிடம் கொடுக்கவேண்டும்?
சத்திய ஆவியானவராகிய தேவன் தமது தாசரையும் தமது பிள்ளைகளையும் கொண்டு, தம்முடையவர்களை உரைக்கப்பட்ட சத்தியத்தில் நடத்துகிறார் என்பதை நாம் அறியவேண்டும். (யோவான் 14:26; 16:13-15)
🫵 *அடுத்தவருக்கு அறிவுரை சொல்லத் தேவையில்லையா?*
அன்புக்கும் நற்கிரியைகளுக்கும் நாம் ஏவப்படும்படி *ஒருவரையொருவர் கவனித்து, ஒருவருக்கொருவர் புத்திசொல்ல* வேதம் நம்மை அனுமதிக்கிறது.
(எபிரே.10:24,25)
"சங்கீதங்களினாலும் ஞானப்பாட்டுகளினாலும் *ஒருவருக்கொருவர் போதித்துப் புத்திசொல்ல* எபேசு மற்றும் கொலோசெ சபையாருக்கு அறிவுறுத்துகிறார் பவுல். (எபேசி.5:19; கொலோ.3:16)
*"ஒழுங்கில்லாதவர்களுக்குப் புத்திசொல்லுங்கள்"* என்று தெசலோனிக்கே சபையாருக்கு அவர் போதிக்கிறார். (1தெச.5:14)
தாங்கள் நிருபத்தில் சொல்லிய வசனத்துக்கு ஒருவன் கீழ்படியாமற்போனால், அவனைக் குறித்துக்கொண்டு, அவன் வெட்கப்படும்படிக்கு அவனுடனே கலவாதிருக்கவும், ஆனாலும் அவனைச் சத்துருவாக எண்ணாமல் *சகோதரனாக எண்ணி, அவனுக்குப் புத்திசொல்லவும்* தெசலோனிக்கே சபையாருக்கு ஆலோசனை சொல்லுகிறார் பவுல். (2தெச.3:14,15)
தேவவசனம் தூஷிக்கப்படாதபடிக்குப் பாலிய ஸ்திரீகள் தங்கள் புருஷரிடத்திலும், தங்கள் பிள்ளைகளிடத்திலும் அன்புள்ளவர்களும், தெளிந்த புத்தியுள்ளவர்களும், கற்புள்ளவர்களும், வீட்டில் தரித்திருக்கிறவர்களும், நல்லவர்களும், தங்கள் புருஷருக்குக் கீழ்படிகிறவர்களுமாயிருக்கும்படி, *அவர்களுக்குப் படிப்பிக்கத்தக்க நற்காரியங்களைப் போதிக்கும் உரிமை* முதிர்வயதுள்ள ஸ்திரீகளுக்கு கொடுக்கப்பட்டுள்ளது. (தீத்து 2:4,5)
ரோமாபுரி சபையார் ஒருவருக்கொருவர் புத்திசொல்ல வல்லவர்களாக இருந்ததாகப் பார்க்கிறோம்!
(ரோமர் 15:14)
ஒழுங்கற்ற தன் ஆவிக்குரிய சகோதர சகோதரிகளுக்கு புத்திசொல்லும் உரிமையும் கடமையும் ஒவ்வொரு கிறிஸ்தவருக்கும் உண்டு.
*"எனக்கு புத்திசொல்ல நீ யார்?"* என்று கேட்கிறவன், புத்திசொல்ல உரிமையளித்த தேவனை எதிர்க்கிறான்!
தங்களில் ஒருவன் சத்தியத்தைவிட்டு விலகி மோசம் போகும்போது, *மற்றொருவன் அவனைத் திருப்பினால், தப்பிப்போன மார்க்கத்தினின்று பாவியைத் திருப்புகிறவன்* ஒரு ஆத்துமாவை மரணத்தினின்று இரட்சித்து, திரளான பாவங்களை மூடுகிறான் என்கிறார் யாக்கோபு. (யாக்.5:19,20)
சத்தியத்தைவிட்டு விலகி மோசம் போகும் தன்னை திருப்ப தன் ஆவிக்குரிய சகோதரனுக்கு இடங்கொடுக்கிறவன் பாக்கியவான்.
*"என்னை திருப்ப நீ யார்?"* என்று கேட்கிறவனுக்கு அழிவு நிச்சயம்!
"நீங்கள் பகுத்தறிவுள்ளவர்களாயிருந்து, *சிலருக்கு இரக்கம் பாராட்டி, சிலரை அக்கினியிலிருந்து இழுத்துவிட்டு, பயத்தோடே இரட்சியுங்கள்"* என்கிறார் யூதா. (யூதா 1:22)
கள்ளப்போதகர்களின் தவறான வேதாகம கோட்பாட்டை முழுமையாக நம்பிவிட்டவர்கள்மேல் பரிதாபங்கொண்டு, நெருப்பிலிருந்து பொருட்களைப் பறிப்பதன் மூலம் அவற்றைக் காப்பாற்றுவது போல, தவறானவற்றை கற்பிப்பவர்களின் செல்வாக்கிலிருந்து அவர்களைக் காப்பாற்றவேண்டும் என்பது இதற்கு பொருள்.
அதாவது, சத்தியமில்லாத போதகர்களால் தவறாக வழிநடத்தப்படுகிற கிறிஸ்தவர்களிடம் அன்பாக இருந்து, அவர்கள் சரியான சத்தியத்தை அறிந்துகொள்ள அவர்களுக்கு உதவவேண்டும் என்பது இதற்கு பொருள்.
சத்தியத் தெளிவில்லாத தன் ஆவிக்குரிய சகோதரருக்கு சத்தியத்தை சரியாக விளக்கிக்காண்பிப்பது ஒவ்வொரு கிறிஸ்தவரின் கடமையாகும்.
*வேதப்புரட்டனாயிருக்கிற ஒருவனுக்கு இரண்டொருதரம் புத்திசொல்ல* தன் உடன் ஊழியர் தீத்துவை அனுமதிக்கிறார் பவுல். (தீத்து 3:10)
"நான் சரியாக போதிக்கிறேன். அது எனக்கு போதும். வேதப்புரட்டன் எவனுக்கும் புத்திசொல்வது என் வேலையல்ல" என்பது சரியான அணுகுமுறையாகாது.
*ஆரோக்கியமான உபதேசத்தினாலே புத்திசொல்வதையும், எதிர்பேசுகிறவர்களை கண்டனம்பண்ண வல்லவனாயிருப்பதையும்,* சபை கண்காணியின் முக்கிய தகுதிகளின் பட்டியலில் சேர்க்கிறார் பவுல். (தீத்து 1:7-9)
இன்றைய சபை கண்காணிகள் இதை உணரவேண்டியது அவசியம்.
*"நாங்கள் ஆரோக்கியமான உபதேசத்தினாலே புத்திசொல்வும் மாட்டோம், எதிர்பேசுகிறவர்களை கண்டனம்பண்ணவும் மட்டோம்"* என்கிறவர்கள் தேவனுடைய சபையின் கண்காணிகளாயிருக்க சற்றும் தகுதியற்றவர்களாவர்!!
க. காட்சன் வின்சென்ட்
(Biblical Teaching Ministry)
கோயம்பத்தூர்.
8946050920
ஒரு மிஷனரி இயக்கத்தை உருவாக்கி, அதன்மூலம் பல சபைகளை நிறுவி, சபைகளை கண்காணித்தும் வருகிற அடியேன், என் பெயருக்கு முன்னால் 'பாஸ்டர்' என்று போட்டுக்கொள்வதை சில பாஸ்டர்கள் ஏற்றுக்கொள்ளுகிறதில்லை. இது சரியா?*.
.
✍️ நீங்கள் 'பாஸ்டர்' என்று போட்டுக்கொள்ளுகிறதை, பாஸ்டர்கள் ஏற்றுக்கொள்ளாதது சரிதான்.
உங்கள் பெயருக்கு முன்னால் 'அப்போஸ்தலர்' என்று போட்டுக்கொள்ளும் தகுதி உங்களுக்கிருக்கையில், 'பாஸ்டர்' என்று போட்டுக்கொண்டு, தங்கள் இடத்திற்கு இறங்கிவரவேண்டாம் என்று அவர்கள் நினைப்பது அவர்களுடைய நல்லெண்ணத்தை காண்பிக்கிறது.
சபைகளை நிறுவுகிற அப்போஸ்தலராகிய நீங்கள் தேவனுடைய சபையின் நிர்வாகத்தில் முதல் இடத்திலும், பாஸ்டர்களாகிய தாங்கள் நான்காவது இடத்திலும் இருக்கிறதை அவர்கள் 1கொரிந்தியர் 12:28ல் இருந்தும், எபேசியர் 4:13ல் இருந்தும் அறிந்திருக்கக்கூடும்.
இப்படியிருக்க, முதலிடத்திலிருக்கிற நீங்கள், தாங்கள் இருக்கிற நான்காவது இடத்திற்கு இறங்கிவரவேண்டாம் என்று அவர்கள் நினைப்பது தவறில்லையே!
ஆகவே, நீங்கள் நான்காவது இடத்திலிருந்து முதலிடத்திற்கு செல்வதுதான் சரியாகும். அதாவது, இனி நீங்கள் உங்கள் பெயருக்கு முன்னால் 'அப்போஸ்தலர்' அல்லது 'மிஷனரி' என்று போட்டுக்கொள்வதுதான் முறையாகும்.
நீங்கள் 'அப்போஸ்தலர்' அல்லது 'மிஷனரி' என்று போட்டுக்கொள்வதை பாஸ்டர்கள் தவறாக நினைப்பார்களானால், சத்திய வெளிச்சமில்லாத அவர்களைக்குறித்து நீங்கள் கவலைப்படவேண்டாம்.
ஒருவேளை தங்களுக்கும், தங்களுக்குப்பின் தங்கள் குடும்பத்துக்கும் சொந்தமாக ஒரு சபை இருப்பதுபோல, உங்களுக்கும் உங்கள் குடும்பத்தாருக்கும் மட்டுமே பாத்தியப்பட்ட ஒரு சபை உங்களுக்கு இல்லாததினால், நீங்கள் 'பாஸ்டர்' என்று போட்டுக்கொள்வதை பாஸ்டர்கள் எவராவது ஏளனம் செய்வார்களானால்: சபையானது பாஸ்டர் உட்பட ஐந்துவிதமான ஊழியரில் எவருக்கும் சொந்தமானதல்ல, அது தேவனுக்கும் தேவகுமாரனுக்கும் மட்டுமே சொந்தமானது (அப்.20:28; ரோமர் 16:16; 1கொரி.10:33; 11:22; 15:9; 2கொரி.1:1; கலா.1:13; எபேசி.1:23; 4:12; 5:24,29,32; கொலோ.1:18,24; 1தெச.2:14; 2தெச.1:1; 1தீமோ.3:5,15) என்கிற வேதவெளிச்சமில்லாத அவர்களை குறித்து, நீங்கள் அலட்டிக்கொள்ளவேண்டாம்!!
*- க. காட்சன் வின்சென்ட்*
(Biblical Teaching Ministry)
கோயம்பத்தூர்.
8946050920
Thanks for using my website. Post your comments on this