Type Here to Get Search Results !

திட்டமிட்டஉழைப்பு | கோபப்படாதே | Christian Kutty Story | Message Short Stories | பிரசங்க குட்டி கதைகள் | Jesus Sam

திட்டமிட்டஉழைப்பு
ஒரு ஊரில் , ஒரு ராஜா !
ஒரு நகரத்திற்கு ஒரு சட்டமிருந்தது. அதன்படி யார் வேண்டுமென்றாலும் அந்த நகரத்திற்கு ராஜாவாக வரமுடியும். ஆனால், அந்தப் பதவி ஐந்தாண்டுகள் மட்டுமே! ஐந்தாண்டு முடிந்த அடுத்த நாளே மன்னனை ஆற்றின் கரைக்கு மறுபுறம் உள்ள காட்டில் விட்டுவிடுவார்கள்.


அந்தக் காட்டில் மனிதர்கள் கிடையாது. வெறும் கொடிய விலங்குகள் மட்டுமே! மன்னன் காட்டிற்குள் நுழைந்தால் போதும்; வனவிலங்குகள் கொன்று தீர்த்துவிடும்.


இந்த சட்டத்தை யாராலும் மாற்ற இயலாது. இந்த நிபந்தனைகளுக்கு ஒப்புக் கொண்டவன் மட்டுமே அரியணையில் அமரப் பொருத்தமானவன்.


ஆக, மன்னனாக முடிசூட்டிக் கொண்டவனின் தலையெழுத்து, ஐந்தாண்டுகளுக்குப் பின் கட்டாய மரணம்.


இந்தக் கடுமையான சட்டத்துக்கு பயந்தே யாரும் அந்தப் பதவிக்கு ஆசைபடாமலிருந்ததால் அந்த அரியணை பெரும்பாலும் காலியாகவே இருந்தது. இருப்பினும் ஒரு


சிலர்'எப்படியிருந்தாலும் சாகத்தானே போகிறோம்; மன்னனாகவே மடியலாமே!' என்று பதவி ஏற்பதுண்டு. அதிலும் பாதி மன்னர்கள் இடையிலேயே மாரடைப்பால் மரணமடைவதுமுண்டு.


இப்படி ஒரு மன்னனுக்கு ஐந்து ஆண்டு ஆட்சிக்காலம் முடிந்தது. அன்று ஆற்றின் கரையைக் கடந்து காட்டிற்குச் செல்ல வேண்டும். அவனை வழியனுப்ப நாடே திரண்டிருந்தது.


மன்னன் வந்தான், அவனுடைய சிறப்பான ஆடைகளையும் நகைகளையும் அணிந்து, முடிசூடி, தங்க வாளேந்தி வைரங்கள் மின்ன மக்கள் முன் நின்றான். மக்கள் வாயைப் பிளந்தனர் ''இன்னும் அரை மணிநேரத்தில் சாகப் போகிறான்; அதற்கு இவ்வளவு அலங்காரமா!''


தான் செல்லவிருந்த படகைப் பார்த்துவிட்டு சினத்துடன் கூறினான், ''மன்னன் செல்லும் படகா இது! பெரிய படகைக் கொண்டு வாருங்கள்! நான் நின்றுகொண்டா செல்வது! சிம்மாசனத்தைக் கொண்டு வாருங்கள்!''


கட்டளைகள் பறந்தன; காரியங்கள் நடந்தன! சற்று நேரத்தில் அலங்கரிக்கப்பட்ட அழகான படகு ஆற்று நீரைத் கிழித்துக் கொண்டு மறுகரை நோக்கிப் பயணித்தது.


மக்கள் திகைத்து நிற்க, மன்னன் கையசைக்க பயணம் தொடர்ந்தது.


மிகவும் அதிர்ச்சியடைந்தவன் படகோட்டியே! காரணம், இதுவரை அவன் மறுகரைக்கு அழைத்துச் சென்ற எந்த மன்னனும் மகிழ்ச்சியாக சென்றதில்லை. அழுது புலம்பி,புரண்டு, வெம்பிச் செல்வார்கள். இவனோ, மகிழ்ச்சிக் களிப்பில் பொங்கி வழிகிறான்.


படகோட்டி பொறுத்துக்கொள்ள முடியாமல் கேட்டான் ''மன்னா! எங்கே செல்கிறீர்கள் தெரியுமா?''


''தெரியும் மறுகரைக்குச் செல்கிறேன்!''


''அங்கே சென்றவர்கள் திரும்ப இந்த நகரத்திற்கு வந்ததில்லை தெரியுமா?''


''தெரியும். நானும் திரும்ப இந்த நகரத்திற்கு வரப் போவதில்லை!''


''பின்னே எப்படி உங்களால் இவ்வளவு மகிழ்ச்சியாக இருக்க முடிகிறது?''


''அதுவா! நான் என்ன செய்தேன் தெரியுமா? ஆட்சிக்கு வந்த ஓராண்டு முடிவில் ஆயிரம் வேட்டைக்காரர்களைக் காட்டிற்கு அனுப்பினேன்; அவர்கள் கொடிய விலங்குகளை வேட்டையாடிக் கொன்று விட்டார்கள்!


இரண்டாமாண்டு முடிவில் ஆயிரம் விவசாயிகள் சென்றார்கள்; காட்டைத் திருத்தி உழுதார்கள்; இன்று ஏராளமான தானியங்கள் காய்கறிகள்.


மூன்றாமாண்டு முடிவில் ஆயிரம் கட்டடக்கலை வல்லுநர்கள், தொழிலாளர்கள் சென்றனர். இன்று வீடு, வாசல், அரண்மனை, அந்தப்புரம், சாலைகள் எல்லாம் தயார்!


நான்காம் ஆண்டு முடிவில் ஆயிரம் அரசு அதிகாரிகள் சென்றனர். நிர்வாகம் சீரடைந்தது. இந்த 4000 பேரும் தங்கள் மனைவி, குழந்தைகளுடன் சென்று அங்கே வாழ்கின்றனர்.


இப்போது நான் காட்டிற்குப் போகவில்லை; என்னுடைய நாட்டிற்குப் போகின்றேன்! சாகப் போகவில்லையப்பா, வாழப் போகின்றேன்! அதுவும் மன்னனாக ஆளப்போகிறேன்! உனக்கு ஒருவேளை அரண்மனைப் படகோட்டி வேலை வேண்டுமென்றால், இந்தப் படகோடு இப்படியே வேலைக்கு சேர்ந்து விடு!'' என்றான் மன்னன்.


என் அன்பு வாசகரே,


இக்கதையில் ஒரே ஒரு கேள்வியை மட்டும் எடுத்துக் கொள்ளலாம்.


மன்னனின் வெற்றிக்குக் காரணங்கள் யாவை?
பல காரணங்கள் இருந்தாலும் குறிப்பாக இரண்டினைக் கூறலாம்.


ஒன்று :
ஐந்து ஆண்டுகளுக்குப் பின் உயிர் வாழவேண்டும்; அதுவும் மன்னனாகவே வாழவேண்டும் என்று முடிவு எடுத்தது.


இரண்டு :
அந்த முடிவினை அடைவதற்காக திட்டமிட்டு உழைத்தது!


அந்த மன்னனுடைய வெற்றிக்கு மட்டுமல்ல; நாம் அனைவருமே வெற்றி பெறவேண்டுமென்றால் நமக்குத்தேவை ஒரு இலக்கை நிர்ணயித்தலும் அதற்காக திட்டமிடுதலும்,திட்டமிட்ட பின் வெற்றி பெறும்வரை கடுமையாகவும் புத்திசாலித்தனமாக உழைப்பதுமே !


இயேசுவை
விசுவாசிக்கிற உங்களுக்கு விசுவாசத்தோடு தைரியம் அவசியம் எல்லா சீஷா்களுக்கும் விசுவாசம் இருந்தது. ஆனால் பேதுருவுக்கோ விசுவாசத்துடன் தைரியமும் இருந்தது. அதளால் சாதிக்கிறவனாயிருந்தான்.


கடல் தண்ணீாில் நடந்து வந்தது. ஏரோதின் சிறைசாலை யிலிருந்து விடுவிக்கப்பட்டது. சபையை திறமையாக நடத்தினது. பேதுரு நிழல்பட்டு பலா் குணமானது. தனது நிலையங்களில் யாருக்குமே வெளிப்படுத்தாமல் அநேக காாியங்களை ஆவியானவா் மூலமாக எழுதினது. . இரத்த சாட்சியாக மாிக்கும்போது சிலுவையில் தலை கீழாக அறையப்பட்டது.




To Get Daily Story In What's App Contact +917904957814




போன்ற அரிய பெரிய காாியங்களை செய்ததே விசுவாசத்துடன் கூடிய தைரியமும் கடுமையான உழைப்புமே.


என்ன வந்தாலும் சாதிக்கும் எண்ணத்துடன் எதிர்காலத்தை திட்டமிடுங்கள். உங்கள் திட்டத்தை நிறைவேற்ற தேவன் வல்லவராயிருக்கிறாா். பணமில்லை. வாய்பில்லை, பலவிதமான தடைகள், யாரும் என்னை உற்சாகப்படுத்தவில்லை எல்லாம் எனக்கு எதிராயிருக்கிறது என்றெல்லாம் சொல்லாதிருங்கள்.


உங்களோடு
பிதாவாகிய தேவன்
காத்தராகிய இயேசுகிறிஸது,
கா்த்தருடைய பாிசுத்தஆவியானவா்,
வேதவசனங்கள், தேவ கிருபை.
விசுவாசம், சபை, உங்கள் சபை மேய்ப்பனாகிய
ஊழியன் இவ்வளவு இருக்கிறதென்பதை நினைப்பீா்களைென்றால் உங்களால் எதிர்காலத்தை திட்டமிடாமலோ சாதிக்காமலோ இருக்க முடியாது, இருக்கவும் மாட்டீர்கள். .


பைபிள் சொல்கிறது.
உராய்ஞ்சுகிற ஒரு பட்சியைக்கிழக்கிலிருந்தும், என் ஆலோசனையை நிறைவேற்றும் மனுஷனைத் தூரதேசத்திலிருந்தும் வரவழைக்கிறவராயிருக்கிறேன், அதைச் சொன்னேன், அதை நிறைவேற்றுவேன், அதைத் திட்டம்பண்ணினேன், அதைச் செய்து முடிப்பேன். ஏசாயா 46:11


நான் நினைத்திருக்கிறபடியே நடக்கும், நான் நிர்ணயித்தபடியே நிலைநிற்கும் என்று சேனைகளின் கர்த்தர் ஆணையிட்டுச் சொன்னார். ஏசாயா 14:24


பவுலின் சாதனையின் தீர்மானம்..


நான் அடைந்தாயிற்று, அல்லது முற்றும் தேறினவனானேன் என்று எண்ணாமல், கிறிஸ்து இயேசுவினால் நான் எதற்காகப் பிடிக்கப்பட்டேனோ அதை நான் பிடித்துக்கொள்ளும்படி ஆசையாய்த் தொடர்கிறேன்.


சகோதரரே, அதைப் பிடித்துக்கொண்டேனென்று நான் எண்ணுகிறதில்லை. ஒன்று செய்கிறேன், பின்னானவைகளை மறந்து, முன்னானவைகளை நாடி, கிறிஸ்து இயேசுவுக்குள் தேவன் அழைத்த பரம அழைப்பின் பந்தயப்பொருளுக்காக இலக்கை நோக்கித் தொடருகிறேன்.
(பிலிப்பியர் 3:12 -1)4


என் அன்புக்குாியவா்களே,
எதிா்காலத்தை திட்டமிடுங்கள். உங்களைக் குறித்த தேவதிட்டத்தையே உங்களுக்கு வெளிப்படுத்துவாா். அவைகளை உங்கள் வாழ்க்கையில் நிறைவேற்றவும் செய்வாா்.


அப்புறம் பாருங்கள் .
இக்கதையில் வரும் ராஜாவைவிட நீங்கள் நன்கு ராஜாவாய் வாழ்வீா்கள் !!!

நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள் !!!


கோபப்படாதே
ஒரு இளைஞனுக்கு அதிகமாக கோபம் வந்து கொண்டே இருந்தது. கோபம் வரும்போது அவன் கத்தி தீர்த்து விடுவான்


மேலும் அவன் இயல்பு தன்மைக்கு மாறாக நடந்து கொள்கிறான்.
ஒரு நாள் அவன் அப்பா அவனிடம் சுத்தியலும் நிறைய ஆணிகளையும் கொடுத்தார்.


”இனிமேல் கோபம் வரும் போது எல்லாம் வீட்டின் பின் சுவரில் ஆணி அடிக்குமாறு கூறினார்”.


முதல்நாள் 10 ஆணி,மறுநாள் 7,பின்பு 5,2 என படிப்படியாக ஆணி அடிக்க கோபம் குறைந்தது.
ஒரு நாள் ஒரே ஒரு ஆணி அடித்தான், மொத்தமாக 45 ஆணிகள் அடித்து உள்ளேன்.
இனி கோபம் வராது என அவன் அப்பாவிடம் கூறினான்.


இனிமேல் கோபம் வராத நாளில் ஒவ்வொரு ஆணியாகப் பிடுங்கி விடு என்றார்.
45 நாளில் அடித்த ஆணிகள் பிடுங்கப்பட்டு விட்டன என பெருமையுடன் அப்பாவை அழைத்து காட்டினான்.


உடனே அப்பா சொன்னார் ஆணிகளை பிடுங்கிவிட்டாய்,சுவற்றில் உள்ள ஒட்டைகளை என்ன செய்வாய்?


உன் கோபம் இது போல பலரை காயப்படுத்தி இருக்கும் அல்லவா? அந்த இளைஞன் வெட்கித் தலை குனிந்தான்.


என் அன்பு வாசகரே,
பிறரை காயப்படுத்துவதை நிறுத்தினால் வாழ்க்கை புதிய அத்தியாயம் பெறும்.
யாகாவாராயினும் நா காக்க.. என்று கூற்றுக்கு இணங்க..


கோபத்தை விட்டுவிட வேண்டும். கோபம் அடுத்தவா்களின் மனதை குத்தி கிழித்து காயப்படுத்தி ரணமாக்கிவிடும். என்பதை அறிந்தால் கோபப்பட மாட்டார்கள்.


பைபிள் சொல்கிறது
உன் மனதில் சீக்கிரமாய்க் கோபங்கொள்ளாதே, மூடரின் நெஞ்சிலே கோபம் குடிகொள்ளும்.
பிரசங்கி 7 :9


மூடனுடைய கோபம் சீக்கிரத்தில் வெளிப்படும், இலச்சையை மூடுகிறவனோ விவேகி.
நீதிமொழிகள் 12 :16


மனுஷருடைய கோபம் தேவனுடைய நீதியை நடப்பிக்கமாட்டாதே. யாக்கோபு 1:20


To Get Daily Story In What's App Contact +917904957814


எனவே கோபத்தையும் விட்டுவிட ஆவியானவாின் உதவியை நாடி உங்களை அவா் கரத்தில் அா்பணியுங்கள். மாம்சத்தின் கிாியைகளில் ஒன்றான கோபத்தையும், அதன் செயல்களான வைராக்கியம், சண்டை, எாிச்சல் ஆகிய அனைத்தையும் அகற்றி


நல்ல குணங்களால் நிரப்புவாா். எப்போ்ப்பட்ட மனிதனையும் மாற்ற இயேசுவால் முடியும். என்பதை அறிந்து நீங்கள் கொண்டாலே உங்கள் வாழ்க்கைகான அனைத்து விஷயங்களுக்கும் அவரே பதிலாயிருப்பாா். வேறு யாரும், வேறு எதுவும் தேவையில்லை.


பவுல் சொல்கிறாா்..
எந்த மனுஷனையும் கிறிஸ்து இயேசுவுக்குள் தேறினவனாக நிறத்தும்படிக்கு, அவரையே நாங்கள் அறிவித்து, எந்த மனுஷனுக்கும் புத்திசொல்லி, எந்த மனுஷனுக்கும் எல்லா ஞானத்தோடும் உபதேசம்பண்ணுகிறோம்.
கொலோசெயர் 1:28

நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள் !

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.