பந்தமின்றி வாழ்தல்
ஒரு நாட்டின் ராஜா ஒவ்வொரு நாள் இரவும் நகர்வலம் வருவான். அப்போது அவன் தினமும் ஒரு இளைஞன் மரத்தடியில் அசைவின்றி சிலைபோல அமர்ந்திருப்பதை பார்ப்பான்.
அரசனுக்கு அமைதியாக அந்த இளைஞன்
அமர்ந்திருப்பதை பார்க்க மிகவும் ஆச்சரியமாக இருக்கும்.
அவனால் தனது ஆர்வத்தை கட்டுப்படுத்திக் கொள்ள முடியவில்லை. அதனால் ஒருநாள் தனது குதிரையை நிறுத்தி
இறங்கி,
“இளைஞனே, உனது தியானத்தைக் கலைத்ததற்காக என்னை மன்னித்துக் கொள்.” என்றான்.
அந்த இளைஞன் தனது கண்களை திறந்து, இங்கே எந்த மன்னிப்புக்கும் இடமே இல்லை, நான் தியானம் செய்யவில்லை, இங்கே தியானம்தான் இருக்கிறது – யாரும் அதை தொந்தரவு செய்ய முடியாது. ஆனால் உனது ஆர்வம் எதுவோ அதை பூர்த்தி செய்துகொள். என்றான்.
அரசன், “நீங்கள் எனது அரண்மனைக்கு வர வேண்டும். நான் உங்களை கவனித்துக் கொள்வேன்.
இந்த மரத்தடியில் உட்கார்ந்து கொண்டிருக்க வேண்டிய அவசியம் இல்லை. உங்களது தவத்தினாலும், உங்களது பொலிவினாலும், அமைதியினாலும் நான் ஈர்க்கப்பட்டு விட்டேன்.அமைதியாக இந்த மரத்தடியில் நீங்கள் அமர்ந்திருப்பதை பார்த்தால் ஒரு புத்தரை பார்ப்பது போல இருக்கிறது.
நான்தான் இந்த நாட்டின் அரசன், நான் உங்களை எனது அரண்மனைக்கு அழைக்கிறேன்.” என்றான்.
இப்படித்தான் காட்டுமிராண்டிதனமான மனம் வேலை செய்கிறது.
அரசன் அந்த இளைஞனை தனது அரண்மனைக்கு வருமாறு அழைக்கிறான் – ஆனால் அவனது ஆழ் மனதில் இவர் தனது அழைப்பை ஏற்றுக் கொள்ளக் கூடாதென தோன்றுகிறது.
ஏனெனில் அப்போது அவர் அரண்மனையையும் ஆடம்பரத்தையும் விரும்புகிறார் என ஆகி விடுமென பயப்படுகிறான்.
ஆனால் அந்த இளைஞன் எழுந்து நின்று, “போகலாம்” எனக் கூறுகிறான்.
இப்போது உடனடியாக அந்த சூழ்நிலையே மாறுகிறது. அரசனின் மனம்,
“நான் இப்போது என்ன செய்வது? அரசனின் விருந்தாளியாக இருப்பதற்கு, அரண்மனையில் இருக்கும் சுகங்களைஅனுபவிப்பதற்கு இவர் ஆர்வமாக இருப்பது போல தோன்றுகிறதே, இவர் உண்மையான துறவியேஅல்ல.”
என நினைக்கிறது.
எந்த அளவு ஒருவர் தன்னை
துன்புறுத்திக் கொள்கிறாரோ அந்த அளவு அவர் ஒரு துறவி என்பது பழமையான ஒரு கருத்து.
வசதியின்றி இருப்பது மதம். நோய், பசி, என தன்னைத்தானே துன்புறுத்திக் கொள்ள ஆயிரம்வழிகள்…….. அப்போதுதான் அவன் ஒரு சிறப்பான துறவி.
அரசனின் மனதில் இந்த இளைஞன் தனது
துறவிதன்மையிலிருந்து கீழிறங்கி விட்டார். ஆனால் இப்போது ஒன்றும் செய்ய முடியாது.
தனது வார்த்தையிலிருந்து மாற முடியாது.
ஆனால் இந்த இளைஞன் எல்லாவற்றையும் பார்த்துக் கொண்டிருந்தான். ஆனால் எதுவும் பேசவில்லை. அரசன் அரண்மனையின் சிறப்பான இடத்தை கொடுத்து நல்ல வேலையாட்களை அமர்த்தி இளைஞனை கவனித்துக்கொள்ள இளம்பெண்களை ஏற்பாடு செய்தான்.
துறவி இது ஒவ்வொன்றையும் ஏற்றுக் கொள்ள கொள்ள அரசனின் மனதில் தனது துறவிதன்மையிலிருந்து கீழிறங்கி கொண்டே வந்தான். என்ன வகையான துறவி இவர்? அழகான மிகப் பெரிய படுக்கையை ஏற்றுக் கொண்டார். அரண்மனையின் சிறப்பான உணவு வகைகளை உண்டார்.
அரசன், “கடவுளே, மடையன் நான். இவன் என்னை ஏமாற்றிவிட்டான். இவன் வலை விரித்து பிடித்துவிட்டான். நான் ஒவ்வொரு நாள் இரவும் போகும் வழி அறிந்து அந்த இடத்தில் ஒரு புத்தரைப் போல அமர்ந்து என்னை ஏமாற்றும் வகை அறிந்து என்னை வீழ்த்தியிருக்கிறான்.
நானும் ஏமாந்து விட்டேன். இப்போது இவனை மெல்லவும் முடியாது, துப்பவும் முடியாது. அரண்மனைக்குள் வந்துவிட்டான். மிகவும் ஏமாற்றுக்காரன் இவன்.” என்று நினைத்தான்.
ஆனால் இப்படிப்பட்ட மனநிலையோடு எவ்வளவு நாள் தாக்கு பிடிக்கமுடியும்?
ஆறு மாதம் கழித்து ஒருநாள் அதிகாலையில் தோட்டத்தில் உலாவியபடி பேசிக் கொண்டிருக்கையில், அரசன்,
ஒரு விஷயம் உங்களிடம் கேட்க வேண்டும். அது என்னை துன்புறுத்திக் கொண்டிருக்கிறது. என்னால் அதிலிருந்து விடுபட முடியவில்லை. அதனால் ஆறு மாதங்களாக சரியாக தூங்கக் கூட முடியவில்லை. என்றான்.
இளைஞன், நீ எதை வேண்டுமானாலும் கேட்கலாம். என்று கூறினான்.
நான் இப்படி உங்களிடம் கேட்கக்கூடாது. ஆனாலும் உங்களுக்கும் எனக்கும் உள்ள வித்தியாசம் என்ன என்று எனக்கு தெரிய வேண்டும்.
நீங்களும் அரண்மனையில்தான் இருக்கிறீர்கள், எல்லா சுகங்களையும் அனுபவிக்கிறீர்கள், உங்களுக்கும் எனக்கும் உள்ள வேறுபாடு என்ன?
என்றாவது ஒருநாள் இந்த கேள்வி வரும் என்று எனக்குத் தெரியும். உண்மையில் நான் இங்கே வருவதற்காக மரத்தடியில்
எழுந்து நின்றபோதே அது உன்னுள் எழுந்து விட்டது.
நீ தைரியசாலி அல்ல. நீ இந்த கேள்வியை அப்போதே கேட்டிருக்க வேண்டும். ஆறு மாதங்கள் தேவையின்றி உனது தூக்கத்தை கெடுத்துக் கொண்டிருக்க வேண்டியதில்லை, ஆறு மாதங்களை வீணடித்திருத்த வேண்டியதில்லை.
நான் உனது கேள்விக்கு பதிலை இங்கு சொல்ல போவதில்லை. நீ என்னுடன் உனது எல்லையை தாண்டி வர வேண்டும். என்றான் இளைஞன்.
அந்த இடம் ஒன்றும் அதிக தூரம் இல்லை. சில மைல் தூரத்தில் உள்ள நதிகரைதான் அரசனின் எல்லை.
அரசன், அங்கே போக வேண்டிய தேவை என்ன? நீங்கள் எனக்கு இங்கேயே பதில் கூறுங்கள்.என்றார்.
இளைஞன், இல்லை, அவசியம் இருக்கிறது. என்றார்.
இருவரும் நதியை கடந்தனர். கரையை கடந்தவுடன் இளைஞன் நான் தொடர்ந்து போகப் போகிறேன். என்னுடன் வர நீங்கள் தயாரா இதுதான் என் பதில் என்றார்.
அரசன், “என்னால் எப்படி வர முடியும்? என்னுடைய அரண்மனை, என்னுடைய அரசாங்கம், என்னுடைய
மனைவி, என்னுடைய குழந்தைகள்……. ஆயிரக்கணக்கான கவலைகளும் பிரச்னைகளும் எனக்கு
உள்ளன. என்னால் எப்படி உங்களோடு வர முடியும்?” என்றான்.
இளைஞன்,
வித்தியாசத்தை பார்த்தாயா, நான் போகிறேன். எனக்கு அரண்மனை, குழந்தைகள், மனைவி, பிரச்னைகள் என எதுவும் இல்லை. நான் அரண்மனையில் எவ்வளவு மகிழ்வோடு இருந்தேனோ அதே மகிழ்வோடுமரத்தடியிலும் இருப்பேன் –
இம்மியளவும் கூடவும் குறைவும் இல்லாமல். நான் காட்டில்இருந்தாலும் சரி, அரண்மனையில் இருந்தாலும் சரி எனது விழிப்புணர்வு அதேதான். என்றார்.
தான் இவ்வளவு மோசமாக நினைத்ததை எண்ணி அரசன் மிக வருந்தினான். அவன் இளைஞனின் காலில் விழுந்து, இப்படி
நினைத்ததற்காக என்னை மன்னித்து விடுங்கள். என்னை நினைத்தால் எனக்கே கேவலமாக இருக்கிறது. என்றான்.
இளைஞன், அப்படி நினைக்காதே. நீ மன்னிப்பு கேட்டு கண்ணீர் விடுவதால் திரும்பி வருவதற்கு எனக்கு எந்தவிதமான தயக்கமும் இல்லை.
ஆனால் நீ திரும்பவும் கடவுளே, என்னை இவன் திரும்பவும் ஏமாற்றிவிட்டானோ என்று நினைக்க ஆரம்பித்துவிடுவாய். நான் திரும்பவும் வருவதில் எனக்கு எந்த வித கஷ்டமும் இல்லை.
ஆனால் உன் மீதுள்ள கருணையால் நான் வரப் போவதில்லை. என்னைபோகவிடு. இந்த முழு உலகமும் பரந்து விரிந்திருக்கிறது, எனக்கு எதுவும் பெரிதாகதேவையில்லை. ஒரு மரநிழல் மட்டுமே போதுமானது. எதுவாக இருந்தாலும் சரியே. என்றார்.
ஆனால் அரசன், இல்லை, இல்லை. நீங்கள் வராவிட்டால் நான் மிகவும் கவலைப்படுவேன், காயப்பட்டுப்போவேன், நான் என்ன செய்துவிட்டேன் என வருத்தப்பட்டுப் போவேன். என்று வலியுறுத்திச் சொன்னான்.
அந்த மனிதர், நீ இப்போது என்னை தர்மசங்கடத்தில் ஆழ்த்திவிட்டாய். நான் வருவதில் எனக்கு எந்த கஷ்டமும் இல்லை என நான் ஏற்கனவே சொல்லியிருக்கிறேன். ஆனால் நினைவில் வைத்துக் கொள், என்ன வித்தியாசம் என திரும்பவும் உனக்கு தோன்ற ஆரம்பித்துவிடும், என்றார்...
To Get Daily Story In What's App contact +917904957814
ஆம்! என் அன்பு வாசகரே,
இவ்வுலகத்தில் அனுபவிப்பது எல்லாமே வேஷங்கள் தான். உண்மை ஒன்று உண்டு நாம் நித்திய நித்திய காலமாக தேவனோடு ஜீவிக்க போகிறோம் என்பதை மனதில் கொண்டு வாழ வேண்டும். இந்த உலக வாழ்க்கை மட்டும்தான் வாழ்க்கையல்ல ..
இதைவிட
மேலானதொன்றுக்காக ஆயத்தப்படவே தேவன் மனு குலத்தை தம்மோடு சேர்த்துக் கொள்ள இயேசு என்ற பெயரில் மனுஉருக் கொண்டு உலகத்திற்கு வந்து சிலுவை மரணத்தை ஏற்றுக்கொண்டு பாடுகளினால் தம் இரத்தத்தை சிந்தி
அந்த இரத்தத்தின் வல்லமையும் காயத்தின் தழும்புகளின் வல்லமையும் நம்மை பாவங்களிலிருந்து இரட்சித்து நோய்களிலிருந்து குணமாக்கி ஐஸ்வா்யமாய், ஆசீா்வாதமாய் வாழ வைத்திருக்கிறது.
இதின் நோக்கமே நாம் அவரோடுகூட என்றென்றும் வாழ வேண்டும் என்பதற்காக தான்.
அவா்
வந்து நம்மை அழைத்து செல்லும்
நாளை எதிர்பார்த்து காத்திருக்கிறவா்களாய் இருக்க வேண்டும் என்ற மனநிலைநோடு கூட வாழவேண்டும் தவிர இந்த உலக சந்தோஷமே போதும் என்று எண்ணிவிடக்கூடாது இது கா்த்தா் தான் கொடுத்தாா் என்றாலும் பரலோகத்தை நினைத்து வாழுதலே உண்மையான கிறிஸ்தவ வாழ்க்கையாகும்
அந்த இளம்துறவியைப் போல..
எத்தகைய சூழலிலும் வாழ மனதை பக்குவப் படுத்தும் போது எந்தவிதமான உயா்வான நிலையும் நம்மை பெருமை கொள்ள செய்யாது. அனுபவிக்கிறோம் அவ்வளவுதான். ஆனால மனது மேலான பரலோக வாழ்க்கைக்கு ஆயத்தப்படுத்தபட்டிருக்கிறது.
பவுல் சொல்கிறாா்.
சகோதரரே, நான் சொல்லுகிறதென்னவெனில், இனிவரும் காலம் குறுகினதானபடியால், மனைவிகளுள்ளவர்கள் மனைவிகளில்லாதவர்கள் போலவும்,
அழுகிறவர்கள் அழாதவர்கள்போலவும், சந்தோஷப்படுகிறவர்கள் சந்தோஷப்படாதவர்கள்போலவும், கொள்ளுகிறவர்கள் கொள்ளாதவர்கள் போலவும்,
இவ்வுலகத்தை அனுபவிக்கிறவர்கள் அதைத் தகாதவிதமாய் அனுபவியாதவர்கள் போலவும் இருக்கவேண்டும். இவ்வுலகத்தின் வேஷம் கடந்துபோகிறதே. நீங்கள் கவலையற்றவர்க ளாயிருக்க விரும்புகிறேன்.
1 கொரிந்தியர் 7:29 -32
நீங்கள்ஆசீா்வதிக்கப்பட்டவர்கள் !!!
பெறாமையும் கோபமும்
ஓர் அரண்மனையில் பணி செய்த சலவைத் தொழிலாளி ஒருவர் கடுமையாக உழைத்து ஏராளமான பணம் சம்பாதித்து கொண்டிருந்தார்.
அங்கேயே
பணி செய்த மண்பாண்டபத் தொழிலாளி ஒருவர் குறைந்த அளவே பாடுபடுவார். வருமானம் குறைவாகவே இருந்தது.
சலவைத் தொழிலாளிக்கு இருக்கிற வருமானம் உமக்கு இல்லையே! நீர் சரியான வேலை செய்வதில்லை என மண்பாண்டத் தொழிலாளியின் மனைவி அடிக்கடி எரிந்து விழுவாள்
இதனால் சலவைத் தொழிலாளி மீது மண்பாண்டத் தொழிலாளுக்குக் கடுமையான கோபம், பொறாமை ஆகிய இரண்டு குணங்களும் தலைக்கேறியது. சலவைத் தொழிலாளியை ஒழித்து கட்ட திட்டமிட்டார்
ஒருமுறை
மண்பாண்டத் தொழிலாளி ராஜாவிடம் போய் மாமன்னரே! நமது யானைகள் கருப்பாய் இருக்கின்றன. துணிகளை வெளுப்பாகித் தரும் நமது சலவைத் தொழிலாளியிடம் அவற்றை ஒப்படைத்தால் அவற்றை வெள்ளையாக்கி தந்துவிடுவார். உலகத்திலேயே வெள்ளை யானைகள் உங்களிடம் மட்டும்தான் இருக்கும்.
உங்கள் புகழ் உலகெங்கும் பரவும் என்றார். அந்த ராஜா ஒரு புத்தி கெட்டவன புகழ் விரும்பி அவனும் அப்படியே செய்ய வேண்டும் என சலவைத் தொழிலாளிக்கு உத்தரவு போட்டுவிட்டான்.
சலவைத் தொழிலாளி மகா புத்திசாலி ராஜா என்னிடம் துணிகளை வெள்ளாவி வைக்கும் அளவு சிறிய பானைகள் மட்டுமே உள்ளன.
யானையை
வைக்க வேண்டுமானால் யானையைத் தாங்கும் அளவு பொிய பானைகளை மண்பாண்டத் தொழிலாளியை செய்து தரச் சொல்லுங்கள். உடனடியாக வெளுப்பாக்கி தருகிறேன் என்றார்.
ராஜா மிக சரியாய் சொன்னாய் என்று மண்பாண்டத் தொழிலாளியை வரவழைத்து
டேய்
யானையை சுமக்கும் அளவு பானையை செய்து கொடு என உத்தரவு போட்டு விட்டான். இப்போது மாட்டிக்கொண்டான் மண்பாண்டத் தொழிலாளி... ஒரு பானையை கூட செய்ய முடியவில்லை. தன் ஆணையை செயல்படுத்த தவறிய அவனை தூக்கிலிட உத்தரவிட்டான் ராஜா..
To Get Daily Story In What's App contact +917904957814
என் அன்பு வாசகரே,
வேதவசனங்கள் என்ன சொல்கிறது தெரியுமா??
கோபம் நீ்ர்மூடனை கொல்லும் பெறாமை புத்தியில்லாதவனை அதம்பண்ணும் யோபு 5-2
ஆம்!
கோபமும் , பொறாமையும் மனிதனை கொன்று விடும. இந்த மாம்சீக குணங்கள் மனதுக்குள் வந்து விட இடம் கொடுக்காதீா்கள். ஏனென்றால் அது நம் கிறிஸ்தவ வாழ்க்கையை முற்றிலும் அழித்து விடும். உங்களால் எவ்வளவு உழைத்து சம்பாதிக்க முடியுமோ அவ்வளவு சம்பாதிக்க தேவன் பெலன் தருவாா்.
அதை விட்டு
கடுமையாக உழைத்து சம்பாதிக்கிறவா்கள் அதிகமான பணத்தையும் செல்வத்தையும் வைத்திருப்பாா்கள்.
அதற்காக அவா்கள் மேல் கோபப்படுவதோ, பொறாமைபடுவதோ கூடாது. அது ஒரு ஈன செயல் .அந்த செயல் நமது கிறிஸ்தவத்தையே அழித்து விடும்.
அந்தளவுக்கு சாத்தான் கடுமையாக உழைக்கவிடாமல் கோபமும், பொறாமையும்பட வைத்து நம் கிறிஸ்தவத்தை வாழ்வை அழித்து விடுவான். என்ற தந்திரத்தை புாிந்துக்கொள்ளுங்கள்.
திருடன் திருடவும் கொல்லவும் அழிக்கவும் வருகிறானேயன்றி வேறொன்றுக்கும் வரான். நானோ அவைகளுக்கு ஜீவன் உண்டாயிருக்கவும், அது பரிபூரணப்படவும் வந்தேன்.
யோவான் 10:10
என் அன்புக்குாியவா்களே,
இந்த கதையிலிருந்து மிகபொிய பாடத்தை கற்றுக்கொள்கிறோம். எனக்கு அதிக படியான ஊழியத்தின் காரணத்தினால் காலையில் அனுப்ப இயலவில்லை.
உங்கள் அனைவருக்கும் இதயம் கனிந்த
இரவு வணக்கம். !!
நீங்கள்ஆசீர்வதிக்கப்பட்டவர்கள் !!!
மனைக்கு உாிய மனைவி
ஒருவர் எதற்கெடுத்தாலும்
மனைவியுடன் சண்டைப் போடுவார்..ஒருநாள் 'ஆபீஸ்' போய் வேலை செய்து பார்..
சம்பாதிப்பது எவ்வளவுக் கஷ்டம் என்று புரியும் என்று அடிக்கடி சவால் விடுவார்..
அவள் ஒருநாள் பொறுமை இழந்து, ஒருநாள் நீங்க வீட்ல இருந்து பசங்களை பார்த்துக்கோங்க. காலைல
குளிப்பாட்டி சாப்பிட வச்சு,வீட்டுப் பாடங்கள்
சொல்லிக்கொடுத்து சீருடை அணிவித்து பள்ளிக்கு அனுப்புங்க..
அதோடு சமைப்பது துவைப்பது எல்லாத்தையும்
செஞ்சுதான் பாருங்களேன்..என எதிர் சவால்விட்டாள்..
கணவனும் அதை ஏற்றுக் கொண்டான்..அவன் வீட்டில் இருக்க. சம்மதிக்க இவள் ஆபீஸ் போனாள்..
ஒரே குப்பை, கூளமாக கிடந்தது ஆபீஸ்..
முதலாளி மனைவி என்பதை மனதில் கொள்ளாமல் கூட்டிப் பெருக்கி சுத்தம் செய்தாள்..
வருகைப் பதிவேட்டை சரிபார்த்து தாமதமாய்
வருபவர்களை கண்டித்தாள்..அவன் புருஷன் செய்கிற அத்தனை வேலைகளையும்,அதற்கான கணக்கு வழக்குகளையும் பார்த்தாள்..
மாலை 5 மணி ஆனதும் வீட்டுக்குப் புறப்பட
நினைத்தபோது, ஓர் அலுவலரின் மகள் திருமண வரவேற்பு குறித்து உதவியாளர் சொல்ல, பரிசுப் பொருள் வாங்கிக்கொண்டு கல்யாண மண்டபத்திற்கு சென்றாள்..
கணவர் வராததற்கு பொய்யான காரணம்
ஒன்றை சொல்லிவிட்டு, மணமக்களின்
கட்டாயத்தால் சாப்பிட சென்றாள்..
பந்தியில்
உட்கார்ந்தவளுக்கு சிந்தனையெல்லாம்
வீட்டைப் பற்றியே..
இலையில் வைத்த ஜாங்கிரியை' மூத்தவனுக்கு பிடிக்கும் என்று கைப்பையில் எடுத்து வைத்தாள்..முறுக்கு கணவனுக்குப் பிடிக்குமே என்று அதையும் கைப்பைக்குள் வைத்துக் கொண்டாள்..
அவள் சாப்பிட்டதை விட, பிள்ளைகளுக்கும்
கணவனுக்கும் என பைக்குள்
பதுக்கியதே அதிகம்..
ஒரு வழியாய் வீடு வந்து இறங்கியவள்,
கணவன் கையில் பிரம்போடு கோபத்துடன் அங்கும் இங்குமாக நடந்து கொண்டிருந்ததைப் பார்த்தாள்..
இவளை பார்த்ததும்,
பிள்ளையா பெத்து வச்சிருக்க..?அத்தனையும் குரங்குகள்.. சொல்றதை கேட்க மாட்டேங்குது..
படின்னா படிக்க மாட்டேங்குது..
சாப்பிடுன்னா சாப்பிட மாட்டேங்குது..
அத்தனை பேரையும் அடிச்சு அந்த ரூம்ல
படுக்க வச்சிருக்கேன்..
பாசம் காட்டுறேன்னு பிள்ளைகள
கெடுத்து வச்சிருக்கே
என்று பாய..
அவளோ,
அய்யய்யோ பிள்ளைகளை அடிச்சீங்களா...
என்றவாறே
உள்ளே ஓடி கதவை திறந்து பார்த்தாள்..
உள்ளே ஒரே அழுகையும் பொருமலுமாய்
பிள்ளைகள்..
விளக்கை போட்டவள் அதிர்ச்சியுடன்,
‘ஏங்க.. இவனை ஏன் அடிச்சு படுக்க வச்சீங்க..?
இவன் எதிர்வீட்டு பையனாச்சே ‘ என்று அலற..
ஓஹோ , அதான் ஓடப் பார்த்தானா..! என கணவன் திகைத்து போய் நின்றான்.
அப்பப்பா ஆபீஸ் வேலையை விட கடுமையானது வீட்டு வேலையும் பராமரிப்பும் என்னால் சமாளிக்கவே முடியல என ஒத்துக் கொண்டான்.
மனைவியும் கூட எல்லாவிதமான ஆபீஸ் வேலைகளை செய்தாலும் நேரமாக நேரமாக வீட்டு நினைப்பில் மூழ்கி பிள்ளைகளைப் பற்றியும், கணவனைப் பற்றியும் நினைத்து விருந்து என்று கூட பார்க்காமல் பலகாரங்கள் எல்லாவற்றையும் பிள்ளைகளுக்காகவும், கணவனுக்காகவும் பதுக்குவதிலேயே கருத்தாயிருந்தாள்.
இந்த நிலையில் இருவருக்கும் ஒன்று புரிந்தது.. இல்லாள் என்றும் , மனைக்கு உரியவள் மனைவி என்றும் சங்க காலம் தொடங்கி நம் மூதாதையர்கள் சொல்வது சும்மா இல்லை...
இல்லத்தைப் பராமரிப்பதிலும் பிள்ளைகளுக்கு வளமான வாழ்க்கையை அமைத்துக் கொடுப்பதிலும் ஒரு பெண்ணின் பங்கு தலையாயது.. அதுபோல, பொருளீட்டி வரக்கூடிய ஆண்களின் பங்கும் அளப்பாியது..
To Get Daily Story In What's App Contact +917904957814
ஆனால் இருவரும் வேலைக்கு செல்லும் இந்த காலத்தில் இது ஆணுக்கு, இது பெண்ணுக்கு என்று குடும்பப் பொறுப்புகளை இனம்பிரிக்க
இயலாதபடி வாழ்க்கை சமத்துவம் ஆகிவிட்டது..
இந்த சூழ்நிலையில் ஒரு குடும்பம் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும் என்றால் கணவன் மீது மனைவியோ, மனைவி மீது கணவனோ ஆதிக்கம் செலுத்தாமல் அன்பால் சாதிக்கும் மனநிலையை கொண்டிருக்க வேண்டும்
பைபிள் செல்கிறது..
புருஷன் வேலைக்குப் போய் சம்பாதிக்க வேண்டும். மனுஷன் சாயங்காலமட்டும் தன் வேலைக்கும், தன் பண்ணைக்கும் புறப்படுகிறான்.(சங். 104:23)
வெளியில் உன் வேலையை எத்தனப்படுத்தி, வயலில் அதை ஒழுங்காக்கி, பின்பு உன் வீட்டைக் கட்டு. (நீதிமொழிகள் 24:27)
நான் பெரிய வேலைகளைச் செய்தேன், எனக்காக வீடுகளைக் கட்டினேன், திராட்சத்தோட்டங்களை நாட்டினேன். (பிர. 2:4)
மனைவி குடும்பத்தை பராமரிக்க வேண்டும்.
நிலம், வீடு போன்ற சொத்து வாங்க ஞானமாய் பணத்தை சேமிக்கவும், பிள்ளைகளை வளர்க்கவும் புருஷனின் உயர்வுக்குக் காரணமாகவும் வாழவேண்டும் இப்படிப்பட்ட மனைவியே குணசாலியான ஸ்திரி.
(நீதி. 31.10-27)
அப்போது, அவள் பிள்ளைகள் எழும்பி, அவளைப் பாக்கியவதி என்கிறார்கள்:
அவள் புருஷனும் அவளைப்பார்த்து:
அநேகம் பெண்கள் குணசாலிகளாயிருந்ததுண்டு: நீயோ அவர்கள் எல்லோருக்கும் மேற்பட்டவள் என்று அவளைப் புகழுகிறான்.
சௌந்தரியம் வஞ்சனையுள்ளது, அழகும் வீண், கர்த்தருக்கு பயப்படுகிற ஸ்திரீயே புகழப்படுவாள். அவள் கைகளின் பலனை அவளுக்குக் கொடுங்கள்: அவளுடைய செய்கைகள் வாசல்களில் அவளைப் புகழக்கடவது.( நீதிமொழிகள் 31:28-31)
புருஷனுக்காகவும், பிள்ளைகளுக்காகவும் தேவனால் விசேஷமாக படைக்கப்பட்டவரகள் தான் மனைவி என்று புரிந்து கொண்டால் தான் எல்லா வளமும் நலமும் பெற்று பல்லாண்டு வாழ முடியும்..
நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள் !!!
Thanks for using my website. Post your comments on this