Type Here to Get Search Results !

Job 38-40 | துன்மார்க்கரின் ஒளி அவர்களை விட்டு எடுபடும் | Tamil Bible Study | Bible Reading Challenge | Gospel Sermons | Jesus Sam

யோபு 38 - 40

❎ *துன்மார்க்கரின் ஒளி அவர்களை விட்டு எடுபடும்* ❎




☄️ *"துன்மார்க்கரின் ஒளி அவர்களை விட்டு எடுபடும்; மேட்டிமையான புயம் முறிக்கப்படும்."* (யோபு 38:15).




⚡ யோபு தனது நீதியை உறுதிப்படுத்தவும், தனது எல்லா துன்பங்களுக்கும் காரணத்தைக் காட்டவும் வேண்டுமென்று தேவனிடம் ஜெபம் பண்ணினான். யோபுவின் நண்பர்களோ, தேவன் தங்களை யே சரியென நிரூபிப்பார் என்றும், யோபுவின் தவறை அவனுக்குப் புரிய வைப்பார் என்றும் விரும்பினர். யோபின் நண்பர்களுக்குத் தேவன் உடனடியாகப் பதில் சொல்லவில்லை; ஆனால் தேவன் யோபுக்குப் பதிலளித்தார். தம்மைக் கேள்வி கேட்பதன் மதியீனத்தை யோபு உணர்ந்துகொள்ள வேண்டுமென்றும், தம்மீது பொய்யான குற்றச்சாட்டுகளைச் சுமத்தியதற்காக அவன் மனந்திரும்ப வேண்டுமென்றும் தேவன் விரும்பினார். எனவே, தேவன் யோபிடம், *தேவனுடைய நித்தியதையும் அவனுடைய குறுகிய ஆயுளையும், தேவனுடைய எல்லையற்ற ஞானத்தையும் அவனுடைய அறியாமையையும், தேவனுடைய சர்வ வல்லமையையையும் அவனுடைய பலவீனத்தையும் ஒப்பிடும்படி* அறிவுறுத்தினார்.




⚡ துன்மார்க்கரின் ஒளி அவர்களை விட்டு எடுபடும்* என்றும், *உயர்த்தப்பட்ட கரம் முறிக்கப்படும்* என்றும் தேவன் யோபுக்குக் கற்பித்தார். *துன்மார்க்கரின் ஒளி அவர்களை விட்டு எடுபடுமேயானால், அவர்கள் *தங்கள் பாதுகாப்பையும், தன்னம்பிக்கையையும், சுதந்திரத்தையும், தங்கள் உயிரையும் கூட இழக்க நேரிடும்.*




⚡ ஞானிகளின் வார்த்தைகள்: *"நீதிமான்களின் வெளிச்சம் சந்தோஷிப்பிக்கும்; துன்மார்க்கரின் தீபமோ அணைந்துபோகும்."* (நீதிமொழிகள் 13:9). ஒரு நீதிமான் பிரகாசமாக எரிகிற விளக்கைப்போன்றவன். துன்மார்க்கனோ இருண்டு போகிற விளக்கைப்போன்றவன். தேவன் எப்போதும் நீதிமான்களையே ஆதரிப்பார். *நாம் கிறிஸ்துக்குள் தேவனுடைய நீதியாகிவிட்டோம்* (2 கொரிந்தியர் 5:21). எனவே, நமது ஒளி *பிரகாசிக்கும்.* அதாவது, பிரகாசமான எதிர்காலத்தை நாம் எதிர்நோக்கலாம்.




⚡ இயேசு ஜனங்களை நோக்கி: *"நான் உலகத்திற்கு ஒளியாயிருக்கிறேன், என்னைப் பின்பற்றுகிறவன் இருளிலே நடவாமல் ஜீவஒளியை அடைந்திருப்பான்"* என்றார் (யோவான் 8:12). இயேசு தம் சீடர்களுக்கு ஒளியில் நடக்கக் கற்றுக் கொடுத்தார். பவுலும் எழுதியுள்ளான்: *“வெளிச்சத்தின் பிள்ளைகளாய் நடந்துகொள்ளுங்கள்.”* (எபேசியர் 5:8). நாம் எப்படி வெளிச்சத்தில் நடக்க முடியும்? தேவனுடைய வார்த்தையால் மட்டுமே இது சாத்தியமாகும். வேதம் கூறுகிறது: *"உம்முடைய வசனம் என் கால்களுக்குத் தீபமும், என் பாதைக்கு வெளிச்சமுமாயிருக்கிறது."* (சங்கீதம் 119:105).




⚡ ஒரு நபரின் கை முறிக்கப்பட்டால், அவன் தன் பலத்தை அதிகமாக இழக்கிறான். தேவன் துன்மார்க்கரின் பலத்தை நீக்கிவிட்டால், அவர்களால் *பாதுகாப்பற்றவர்களைத் தொடர்ந்து துன்புறுத்த முடியாது.*




⚡ தாவீது தேவனிடம் ஜெபித்த ஜெபம்: *"துன்மார்க்கனும் பொல்லாதவனுமாயிருக்கிறவனுடைய புயத்தை முறித்துவிடும்."* (சங்கீதம் 10:15). தேவன் தன் ஜெபத்தைக் கேட்பார் என்று தாவீதுக்கு உறுதியாகத் தெரியும். எனவே, தாவீது அறிவித்தான்: *"துன்மார்க்கருடைய புயங்கள் முறியும்; நீதிமான்களையோ கர்த்தர் தாங்குகிறார்."* (சங்கீதம் 37:17). தாவீது சாட்சியமளித்தான்: *"உமது வலதுகரம் என்னைத் தாங்குகிறது."* (சங்கீதம் 63:8). தேவன் தம்முடைய வலது கரத்தால், அதாவது, தம்முடைய வல்லமையால், அவருடைய பிள்ளைகளைத் தங்குகிறார்.


🔹 *தேவனுடைய வார்த்தையை நம் கால்களுக்கு தீபமாகவும், நம் பாதைக்கு வெளிச்சமாகவும் வைத்திருக்கிறோமா?*




✅ நாம் கற்றுக் கொள்ளும் *பாடங்கள்*:




1️⃣ *துன்மார்க்கரின் ஒளி அவர்களை விட்டு எடுபடும், நீதிமான்களின் வெளிச்சம் சந்தோஷிப்பிக்கும்.*

2️⃣ *நாம் கிறிஸ்துக்குள் தேவனுடைய நீதியாகிவிட்டோம். எனவே, நமது ஒளி பிரகாசிக்கும்; அதாவது, பிரகாசமான எதிர்காலத்தை நாம் எதிர்நோக்கலாம்.*

3️⃣ *தேவனுடைய வசனம் நம் கால்களுக்குத் தீபமும், நம் பாதைக்கு வெளிச்சமுமாயிருக்கிறது.*

4️⃣ *துன்மார்க்கருடைய புயங்கள் முறியும்; ஆனால் கர்த்தர் நீதிமான்களைத் தமது வலதுகரத்தினால் தாங்குகிறார்.*
Dr எஸ் செல்வன்

சென்னை


யோபு : 38-40

💐💐💐💐💐💐💐💐💐

*கர்த்தர் பெருங்காற்றிலிருந்து யோபுடன் பேசினார்* என்று வாசிக்கிறோம்.

★யோபின் சந்தேகங்களுக்கும் கேள்விகளுக்கும் கர்த்தர் பதில் தரவில்லை. மாறாக யோபிடம் கர்த்தர் பல கேள்விகளை கேட்டதை யோபு: 38-ம் அதிகாரத்தில் வாசிக்கிறோம்.

★தனது கேள்விகளுக்கு யோபு பதில் தர வேண்டும் என்று கர்த்தர் எதிர்பார்க்கவில்லை.

★உலகின் பல காரியங்கள் மனிதனுக்குத் தெரியாது என்பதை யோபு உணரும்படி செய்து அதன் மூலம் வாழ்க்கையில் வரும் சில கேள்விகளுக்கேற்ற பதில் மனிதனுக்குத் தெரியாது, அறிந்து கொள்ள முடியாது என்பதைப் புரிந்து கொள்ளச் செய்தார்.

*ஏன்* என்று கர்த்தரைக் கேள்வி கேட்க மனிதனுக்கு அருகதை இல்லை.

எதையும் ஏற்றுக்கொண்டு கர்த்தர் அவரது ஞானத்தினாலும் அன்பினாலும் நம்மீது உள்ள மிகுந்த கரிசனையினாலும் யாவற்றையும் செய்கிறார் என்று நம்பி, அவருக்குக் கீழ்ப்படிந்து, அவரைத் துதித்து வாழ்வதே சிறந்தது என்பதை உணர்த்தினார்.

*கர்த்தர் கனவில் பேசுவார், அமர்ந்த மெல்லிய சத்தத்தில் பேசுவார், உள்ளத்தின் ஆழத்தில் பேசுவார், மற்றவர்களின் மூலம் பேசுவார்; ஆனால் அடிக்கடி தமது வேதத்தின் மூலம் பேசுகிறார்*.

*அனுதினமும் அவருடைய வேதத்தைத் தியானித்து அவரின் சத்தத்தைக் கேட்டு அதன்படி நடக்க கவனமாயிருப்போமாக*.

*ஆமென்*


✍️ Bhavani Jeeja Devaraj, Chennai


கன்மலையிலும், கன்மலையின் சிகரத்திலும் வாசம் பண்ணும் கழுகு*

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~




யோபு 39: 28, 29.




1. இங்கு கர்த்தர் யோபுவை பார்த்து, *கழுகு கன்மலையிலும், கன்மலையின் சிகரத்திலும், அரணான ஸ்தலத்திலும் தங்கி வாசம் பண்ணும்* என்கிறார். கர்த்தர் நம் வாழ்க்கையின் பல பகுதிகளை கழுகின் வாழ்க்கையோடு ஓப்பிட்டு கூறுகிறார். இதிலிருந்து நாம் கற்றுக் கொள்ள வேண்டியவை என்ன?




இங்கு கழுகு வாசம் பண்ணுவதை போல,




*நாமும் கன்மலையிலும், அதாவது கன்மலையாகிய கிறிஸ்துவிலும்,*




*கன்மலையின் சிகரத்திலும் அதாவது அவருடைய வார்த்தையிலும், வசனத்திலும், தேவ பிரசன்னத்திலும்,*



*அரணான ஸ்தலத்திலும், அதாவது அரண்களால், கர்த்தரால் , வசனத்தால் பாதுகாக்கப்பட்ட ஸ்தலத்திலும் தங்க வேண்டும். வாசம் பண்ண வேண்டும்*.




இன்று நாம் எங்கு தங்கி, வாசம் பண்ணுகிறோம்? *கன்மலையின் சிகரமாகிய அவருடைய பரிசுத்த பர்வதத்தில் தங்கி, அவரோடு வாசம் பண்ணும் ஆசீர்வாதத்தை நாம் இவ்வுலக வாழ்க்கையில் நம் சரீரத்தில், குடும்பத்தில், வீட்டில், சபையில் பெற்றுக் கொள்ள வேண்டும்.*




2. *அங்கேயிருந்து இந்த கழுகு இரையை நோக்கும். அதின் கண்கள் தூரத்திலிருந்து அதை பார்க்கும்*




ஆம், இந்த *கழுகின் பார்வை மிக கூர்மையானது. கன்மலையின் சிகரத்தில் இருக்கும் கழுகின் கண்களுக்கு தூரத்திலே, தரையிலே இருக்கும் இரை மிக துல்லியமாக தெரியும்*. இப்படியே *கர்த்தருடைய பிள்ளைகளாகிய நமக்கு பிரகாசமுள்ள மன கண்கள் தேவை. நம் ஆத்துமாவிற்கு தேவையான ஆகாரம், அதாவது வசனத்தில் மறைந்திருக்கிற ஆவிக்குரிய ஆகாரம் அப்பொழுது நம் கண்களுக்கு தெரியும்.* அதை நாம் புசிக்க முடியும்.




3. மட்டுமல்ல, *கர்த்தருக்கு காத்திருக்கிறார்கள் புதுபெலனடைந்து கழுகுகளை போல செட்டைகளை அடித்து எழும்புவார்கள். அதாவது அவருடைய பிரசன்னத்தில் எழும்புவார்கள். அவர்கள் ஓடினாலும் இளைப்படையார்கள். நடந்தாலும் சோர்ந்து போகார்கள்*. ஏசாயா 40: 31.




நாமும் கழுகை போல, *இந்த புதிய பெலனை பெற, இளைப்படையாதபடி ஓட, சோர்ந்து போகாமல் நடக்க கர்த்தர் சமூகத்தில் ஜெபிப்பதிலும், வசனத்தை தியானிப்பதிலும் காத்திருப்போம்.*




4.*கழுகு தன் கூட்டை கலைத்து, தன் குஞ்சுகள் மேல் அசைவாடி, தன் செட்டைகளை விரித்து, அவைகளை செட்டைகளின் மேல் சுமந்து கொண்டு போவது போல கர்த்தர் நம்மை சுமந்து, ஆவிக்குரிய வாழ்க்கையில் உன்னதத்திற்கு நேராக பறக்க கற்று தருகிறார்.* உபாகமம் 32: 11.




5. *கழுகுக்கு சமானமாய் நம் வயது திரும்ப வால வயது போலாகிறது* சங்கீதம் 103: 5. நம் அக்கிரமங்கள் மன்னிக்கப்பட்டு, இரட்சிக்கப்படும் போது, கர்த்தர் நம் வயதை வால வயது போலாக்குகிறார். அப்படியானால் *நல்ல சுகத்தை, பெலத்தை தந்து நம்மை ஆசீர்வதிக்கிறார்.*




ஆம், *கர்த்தர் தாமே நம் ஒவ்வொருவரையும், கழுகை போல கன்மலையிலும், கன்மலையின் சிகரத்திலும், அரணான ஸ்தலத்திலும் தங்கி, வாசம் பண்ண உதவி செய்வாராக*. ஆமென், அல்லேலூயா.
*Dr.Padmini Seĺvyn*



*யோபு 38-40*

*அனுதினமும் தேவ உறவில்*

*வளருவோம்*..




இந்த உலகில் நல்லவர்கள் துன்பப்படும்போது, தீயவர்கள் செழித்து வாழ்கின்றனரே, அப்படிப்பட்ட சூழ்நிலையில் கர்த்தர் என்ன செய்து கொண்டு இருக்கிறார் ?

என்பதுதான் யோபுவின்

முக்கியமான கேள்வியாகும்.




இந்தக் கேள்வியில் மறைந்திருந்த சத்தியம்.. இந்த உலகை எப்படி நடத்திச்செல்ல வேண்டுமென்ற ஆலோசனையை.. யோபு தேவனுக்கு மறைமுகமாகக் கொடுத்தது போலிருந்தது.




அதனால் கர்த்தர் யோபுவிடம் கேட்ட முதல் கேள்வி, " நான் பூமியை அஸ்திபாரப் படுத்தினபோது.. நீ எங்கிருந்தாய் ?

அதின் கோடிக்கல்லை வைத்தவர் யார்?

(யோபு 38 : 4-6 )




இந்தக் கேள்வியின் வழியே.. கர்த்தர் யோபுவிடம்..

யோபுவே..இந்த உலகை நான் படைத்தபோது, மனிதர்களின் உதவியை நான் நாடவில்லை,

" நான் படைத்த மனிதனாகிய நீ , நான் இந்த உலகத்தை , எவ்விதம் வழி நடத்திச்செல்ல வேண்டுமென்பதை

எனக்குச் சொல்லித்தர முயற்சி செய்கின்றாயே" என்று கூற விரும்பினார்.




கர்த்தர், யோபு தன்னுடைய உண்மையான நிலைமையைப் புரிந்துகொள்ள வேண்டும்..

அவன் தேவனுக்கு முன்பாகத் தன்னை உயர்த்தாமல்..

தன்னைத் தாழ்த்தவேண்டும் என்று.. அவன் ஆச்சரியப்படும்படியான இன்னும் ஏராளமான கேள்விகளை ..

சமுத்திரத்தின் அடித்தளங்கள்.. மரணத்தின் வாசல்கள்.. பூமியின் விசாலங்கள்.. வெளிச்சமும் இருளும்.. உறைந்த மழை..

கல் மழை ..போன்றவற்றைப் பற்றிக் கேள்விகள் கேட்டார்..

( யோபு 38 அதி.)




யோபுவால் கர்த்தருடைய கேள்விகளில் ஒன்றுக்கும் பதில் சொல்ல முடியவில்லை

யோபு கர்த்தருக்கு முன்பாகத் தன்னைத் தாழ்த்தி..

“இதோ நான் நீசன்..நான் உமக்கு என்ன மறுஉத்தரவு

சொல்லுவேன்..என் கையினால் என் வாயைப் பொத்திக்கொள்கிறேன்” என்று

தன்னை ஒப்புக்கொடுத்தான்..

(யோபு 40 : 4 )




*யோபு, இதுவரை தேவனைப்* *பற்றிக் கேட்டறிந்த* *உண்மைகளையும்*..

*அவன் வாழ்வில் நிகழ்ந்த* *வேதனையின்* *அனுபவங்களையும்*..

*இணைக்கமுடியாமல்*

*துன்பப்பட்டான்*.

*இப்பொழுதோ தேவனை* *நேருக்கு நேர் சந்தித்தான்*.

*அவரது மகா வல்லமையை*.. *அவரது வழிகளை* *அறிந்துகொண்டான்*..

*தேவதரிசனம்,யோபுவின்* *அனைத்துக்*

*கேள்விகளுக்கும் பதிலாக* *இருந்தது*.. *அதற்கு அப்பால்*

*எந்தவொரு விளக்கமும்*

*யோபுவுக்குத் தேவையில்லை*..

*அவன் வாழ்வு மாறினது*.*அவன்* *பெருமை நீங்கி*.. *தாழ்மை* *வெளிப்பட்டது*.




*நம் வாழ்விலும் எல்லாம் சரியாக* *நிகழும்போது*.. *நாம்* *கற்றுக்கொண்ட அறிவு* *பயனுள்ளதாக இருக்கும்*. *ஆனால்,நம் வாழ்வு தடம்புரண்டு*.. *நாம் கஷ்டங்களில் சிக்கித்* *தவிக்கும்போது*.. *ஆண்டவரைப்* *பற்றின கேள்வி அறிவு ..நமக்குப்* *பயன்தராது.. தேவனோடுள்ள* *நெருங்கிய உறவும்..அவரது* *அன்புமே..அத்தகைய* *கடினமான நேரங்களில்*..

*நம்மைத் துக்கத்தில் அமிழ்ந்து*

*விடாதபடி நமக்குத் துணை* *நிற்கும்*..

*நம்மைச் சோர்விலிருந்து தூக்கி* *எடுக்கும்*..




*அனுதினமும் தேவஉறவில்*

*வளர*… *வேத தியானத்திற்கு*

*முக்கியத்துவம் கொடுப்போம்*..

*தேவனுடைய வார்த்தைகளைப்*

*புரிந்துகொள்ளத்* *தொடங்கியவர்களுக்கு*..

*வாழ்வில் எதையும்* *புரிந்துகொள்வது கடினமாக*

*இருக்காது*..ஆமென்.🙏




மாலா டேவிட்


ஆசீர்வதிக்கப்பட்ட மக்களுக்கு ஆசீர்வாதமாக இருப்பதற்காக ஆசீர்வதிக்கப்பட்டேன் 👨‍👩‍👦‍👦




🙋‍♂️🙋‍♀️ நாம் *யோபு 38,39 & 40* இல் இருக்கிறோம்




*THE LORD SPOKE OUT OF THE STORM*




*கர்த்தர் பெருங்காற்றிலிருந்து உத்தரவு அருளினார்*




📝 யோபு 38:1-41:34 ல், கர்த்தர் பிரதியுத்தரமாக யோபுவிடம் *66* கேள்விகளைக் கேட்கிறார், ஆனால் யோபுவிடம் அவற்றிற்கு பதில் இல்லை.

📍 *எலிகூ*, முந்தைய அத்தியாயத்தில், *நெருங்கி வரும் பெருங்காற்று*(37:2, 5a) பற்றிப் பேசியுள்ளார்.

📍இப்போது எலிகூ நிறுத்திய இடத்திலிருந்து கர்த்தர் எடுத்துக்கொள்வார், எனவே கர்த்தர் தம்முடைய நீதியுள்ள வேலைக்காரன் யோபுக்கு ( *38:1; 40:6*) பதிலளிப்பதற்காக தானே *பெருங்காற்றிலிருந்து* உத்தரவு அருளினார். மேலும் அவர் யோபுவிடம் " ஒரு புருஷனைப் போல் இடைக்கட்டிக் கொள்; நான் உன்னைக் கேட்பேன்; நீ எனக்கு உத்தரவு செல்லு, படைப்பு மற்றும் பிரபஞ்சத்தின் இயக்கம் பற்றிய தொடர் கேள்விகளுக்குப் பதிலளிக்கவும்" என்றார்( *38:3; 40:7*)




1️⃣ *படைப்பின் தேவன்* : முழு பிரபஞ்சத்தையும் உருவாக்கி பராமரிப்பவர் மற்றும் ஒவ்வொரு மனிதனின் நீதிபதியும் அவர் தான் என்பதை கர்த்தர் யோபுவுக்கு நினைவூட்டுகிறார். படைப்பைக் கட்டுப்படுத்துபவர் அவரே என்று அவர் யோபுவிடம் கூறுகிறார்:

📍 பூமியை அஸ்திபாரப்படுத்துதல் ( *38:4-7* )

📍 சமுத்திரம் மற்றும் மேகங்களைப் பிரித்தல் ( *38:8-11* )

📍 பூமியின் சுழற்சி மற்றும் காலை மற்றும் இரவைப் பிரித்தல் ( *38:12-15*)

📍 நட்சத்திரங்கள் மற்றும் பிற வான்கோள்கள் ( *38:31-38*)




2️⃣ *காட்டு விலங்குகளின் தேவன்* ( *38:39-39:30*)

📍 வனவிலங்குகளைக் கண்காணித்து, அவற்றுக்கு உணவு அளித்து, ஞானம் அளிப்பவர் அவரே *(38:39-41* )

📍 தேவன் பல்வேறு விலங்குகள் மற்றும் பறவைகளின் பெயர்களைப் பட்டியலிட்டார் (மலை ஆடுகள், கழுதை, காட்டுக் கழுதை, காட்டு எருது, தீக்கோழி, குதிரை கழுகு போன்றவை) மற்றும் சிங்கங்களை வேட்டையாட முடியுமா என்று யோபுவிடம் கேட்டார்; காக்கைகளுக்கு தேவன் உணவு வழங்குகிறார் (38:39-41); காட்டுக் கழுதையையும் காண்டாமிருகத்தையும் அடக்குகிறார். (39:5-12); மற்ற விலங்குகளை உருவாக்குகிறார் (39:13-25) மற்றும் கழுகுகளைப் போல கன்மலையின் மீது கூடு கட்டும் கலையை அறியாயோ என்றார் (39:26-30)

📍யோபு மௌனமாக இருந்தாலும் தேவனுக்கு பயந்தான்.




3️⃣ *நீதியின் தேவன்* (40:8-14) : யோபுவின் ஞானத்தில் உள்ள குறைபாடுகளை சுட்டிக்காட்டி, கர்த்தர் யோபுவை பதில் சொல்லும்படி செய்தார் ( *வ. 1-2* ).

📍 யோபுவின் பதில் அவனது தகுதியின்மையின் வாக்குமூலம் ( *வ 4* )

📍 அவர் புத்திசாலித்தனமாக தேவனுக்கு முன்பாக அமைதியாக இருப்பதைத் தேர்ந்தெடுத்தார், மேலும் கீழ்ப்படிதலுடன் தனது கையினால் வாயைப் பொத்திக் கொள்கிறார் ( *வ. 3-5*)




🌈 பெருங்காற்றிலிருந்து, கர்த்தர் யோபுவிடம் கேள்வி எழுப்புகிறார் ( *வ 8-14* ). இந்த கேள்விகள் இன்றும் பொருத்தமானவை, ஏனெனில், நாமும் ஆழ்ந்த நெருக்கடியில் இருக்கும்போது இத்தகையக் கேள்விகளையே கேட்கிறோம்:

✅ தேவன் நியாயமற்றவர் என்று யோபு உண்மையில் சொல்ல விரும்புகிறாரா ?

✅ தமது சொந்த நீதியை நிலைநாட்டுவதற்காக, அவருக்கு இவ்வளவு செய்த தேவனை, யோபு எவ்வாறு கண்டனம் செய்ய முடியும்? ( *வ. 8*)

✅ யோபுவின் புயமும் சத்தமும் தேவனின் புயம் போல் சக்தி வாய்ந்ததா?

4️⃣ *வல்லமையுள்ள மிருகங்களின் தேவன்* ( 40:15- 41:1 ) : கர்த்தர் யோபுவிடம் கர்த்தர் உருவாக்கிய இரண்டு பெரிய மற்றும் மிகவும் பயங்கரமான மிருகங்களை பரிசீலிக்க அழைக்கிறார்.

📍 பிகெமோத் ( *வ 15* )

📍 லிவியாதான் ( *41:1* )

✅ யோபு உட்பட எந்த மனிதனும் அதைப் பிடிக்கவோ அல்லது சிக்க வைக்கவோ முடியாது என்று கர்த்தர் கூறுகிறார் ( *வ. 24* )




🙋‍♂️🙋‍♀️ இந்த தொடர் கேள்விகளின் நோக்கம், *யோபு தேவனுடைய சிருஷ்டிப்பின் ஒரு மிகச் சிறிய பகுதி தான் என்பதை அவனுக்குக் கற்பிப்பதாகும். அவனைச் சிருஷ்டித்தவரிடம் எதையும் கோருவதற்கு அவனுக்கு உரிமை இல்லை*.

🙋‍♂️🙋‍♀️ யோபுவிற்கு கர்த்தரின் மீதான பயமே உண்மையில் ஞானத்தின் ஆரம்பமாகும், ஏனென்றால் அது அவருக்கு பெரிய வெளிப்பாட்டைக் கொண்டுவருகிறது.

🙋‍♂️🙋‍♀️ *கர்த்தராகிய தேவன் சர்வ சிருஷ்டிப்பின் மீதும் இறையாண்மை கொண்டவர், எனவே அவருடைய நோக்கங்களை நம்மால் புரிந்துகொள்ள முடியாவிட்டாலும் சரி, சரியானதையும் சிறந்ததையும் செய்வதற்கான சுதந்திரம் அவருக்கு உண்டு*.




தேவனுக்கே மகிமை 🙌

✍️ மார்க் போஜே

அருணாச்சல பிரதேசம்,
தமிழாக்கம் ஜஸ்டஸ் ராஜேந்திரன்


*_துன்பப்படுவதா வேண்டாமா என்பது ஒரு தேர்வு_*




*_யோபு : 38_*




❇️ _*யோபு* *புத்திசாலி* மற்றும் *புரிந்துகொள்ளுதலுள்ள மனிதராக* இருந்தபோதிலும், சரமாரியான கேள்விகளுடன் அவரை எதிர்கொண்ட போது *தேவனுக்கு* அவரால் பதிலளிக்க முடியவில்லை._




❇️ _தான் செய்த காரியங்களினிமித்தம் *யோபு* தான் *நீதிமான்* என்று நினைத்தபோது, ​​அவர் ஞானியாக இருக்கவில்லை. அவரது துன்பங்கள் அவரது சரியாக சிந்திக்கும் திறனை சிதைத்துவிட்டன, மேலும் அவர் தன்னைப் போன்ற ஒரு *நீதிமானான* மனிதனைக் கையாள்வதில் தேவன் நியாயமாக இல்லை என்று *தேவனை* குற்றம் சாட்டத் தொடங்கினார்._




❇️ _யோபுவின் *நியாயமற்ற வேதனை* மற்றும் துக்கங்களுக்காக நாம் அவர்மீது *அனுதாபப்படலாம்*. ஆனால் அவைகள் மூலம் *பாடுகளைக்* குறித்த புதிய கண்ணோட்டத்தைக் கற்கிறோம்._







கீழ்க்கண்ட காரணங்களுக்காக தேவன் நீதிமானின் வாழ்வில் பாடுகளை அனுமதிக்கலாம்:

▪️ _தேவனுடைய நோக்கத்தை நம்மில் நிறைவேற்றுவதற்காக (ரோமர்.8:28 & 29)_




▪️ _நம்மை ஆன்மீக ரீதியில் கட்டியெழுப்ப (யாம்.1:3 & 4)_




▪️ _நம்முடைய விசுவாசத்தை நிரூபிக்க (1Pet.1:6 & 7)_




▪️ _தேவன் மீது நம் நம்பிக்கையை அதிகரிக்க (2 கொரி.12:9)_



▪️ _நீதிமான்களை அதிகமாக ஆசீர்வதிக்க (யோபு 42:10)_




▪️ _நமது துன்பங்களில் பெற்ற ஆறுதலால் துன்பப்படுபவர்களுக்கு ஆறுதல் அளிக்க (2கொரி 1:4)_



❇️ _சில துன்பங்கள் ஒரு *மர்மம்* மற்றும் நித்தியத்தின் இக்கறையில் அவற்றை முழுமையாகப் புரிந்து கொள்ளவே முடியாது. *தேவனுடைய நியமங்களின்படி வாழ்பவர்களுக்குத் துன்பங்கள் தவிர்க்க முடியாதவை. பிரச்சனைகளை எதிர்கொள்வது கட்டாயம் என்றாலும், துன்பப்படுவது அவசியமல்ல.*_




❇️ _துன்பம் நம்மை *கசப்பாகவோ* அல்லது *சிறப்பாகவோ* ஆக்கலாம். நாம் கசப்பாக இருக்கும்போது, ​​ *முறுமுறுத்தல், குற்றம் சாட்டுதல், புகார் செய்தல் மற்றும் தேவனுக்கும் மக்களுக்கும் எதிராக செயல்படுதல்* போன்ற மனப்பான்மைகளைக் வெளிப்படுத்தலாம். *நம்பிக்கை, துணிவு, விசுவாசம் மற்றும் உள்ளான அமைதி* போன்ற மனப்பான்மைகளை நாம் வெளிப்படுத்தும் போது, ​​நமது துன்பங்களின் மூலம் நாம் *சிறப்பானவர்களாக* மாறி இருக்கிறோம் என்று அறியலாம்._




_*துன்பத்தில் எவ்வாறு பதிலளிப்பது*_




▪️ _உதவிக்காக தேவனிடம் மன்றாடு (சங்.18:6)_




▪️ _தேவன் மீது விசுவாசம் (யோவா. 14:1)_




▪️ _கர்த்தருக்காக நம்பிக்கையோடு காத்திருங்கள் (சங்.33:20)_




▪️ _கர்த்தருக்கு முன்பாக அமைதியாக இருங்கள், அவர் செயல்படும் வரை பொறுமையுடன் காத்திருங்கள் (சங்.37:7)_



▪️ _நன்மை செய்வதற்காக துன்பங்களைச் சகித்துக்கொள்ளுங்கள் (1 பேதுரு 2:20)_




▪️ _துன்பம் சகிப்பதை ஒரு ஒழுக்கமாக எடுத்துக்கொள்ளுங்கள் (எபி.12:7)_




▪️ _கிறிஸ்துவுக்காக துன்பங்கள் மற்றும் துன்புறுத்தல்களில் மகிழ்ந்திருங்கள் (2 கொரி. 12:10)_




▪️ _துன்பங்களில் மகிழுங்கள் (ரோமர்.5:3)_




▪️ _தீமையை விட்டுத் திரும்பு (சங்.37:27)_




*_துன்பத்தில் எப்படி பதிலளிக்கக்கூடாது_*




▪️ _முறையிடாதிருங்கள் (எண்.11:1) 🤬_




▪️ _முறுமுறுக்காதிருங்கள் (சங்.106:25) 😖_




▪️ _உங்கள் தைரியத்தை விட்டுவிடாதிருங்கள் (எபி.10:35)😔_




▪️ _கோபம் கொள்ளாதிருங்கள் (சங்.37:8)😡_




▪️ _ஒரு கிறிஸ்தவராக துன்பப்படுவதற்கு வெட்கப்படாதீர்கள் (1 பேதுரு 4:16)_




▪️ _நம்முடைய துன்பங்களினால் தேவனை புறக்கணிக்காதிருங்கள் (2 தீமோ. 2:12)_






✅ *_கற்றறிந்த நுண்ணறிவு_:*




▪️ _இந்த வீழ்ந்த உலகில் பிரச்சனைகள் தவிர்க்க முடியாதவை, அதனால் துன்பப்படுவதா இல்லையா என்பது ஒரு தேர்வு_




▪️ _தேவன் நமக்கு துன்பங்களைச் சமாளிக்கும் ஞானத்தையோ அல்லது அதனுடன் வாழ்வதற்கான கிருபையையோ கொடுக்க வல்லவர் (யோவா.16:33)_




▪️ _அவர் நம்மை எவைகளிலிருந்து பாதுகாக்கவில்லையோ அவைகள் மூலம் அவர் நம்மை முழுமைப்படுத்துகிறார்_

தமிழாக்கம் இன்னிசை செல்வி மும்பை


✍️தலைப்பு:

🩸பாடுகள் பற்றிய பார்வை.

யோபு 38.




🎯தியானம்:




🩸இந்த உலகில் நாம் ஒவ்வொருவரும் வெவ்வேறு விதமான பாடுகளை தினம் தினம் சந்தித்து கொண்டிருக்குறோம்.




❗நம் பாடுகளை,

‼️மற்றவர்களின் பாடுகளை

நாம் வெவ்வேறு கண்ணோட்டத்தில் பார்ப்போம்.




‼️அதே போல யோபுவின் பாடுகளும் வெவ்வேறு நபர்களின் பார்வையில் எப்படி இருந்தது❓

என்று பார்ப்போம்.




1. சாத்தானின் பார்வையில் :



🩸 பாடுகளானது மக்களை,

தேவனை விட்டு விலகச் செய்யும் ஆயுதம்..




2. மூன்று நண்பர்களின் பார்வையில்:




🩸பாடுகள்,

பாவத்திற்கான சிட்சைகள்.




3.எலிகூவின் பார்வையில் :




🩸பாடுகள்,

கற்பிக்கவும்

ஒழுங்குபடுத்தவும்

உருவாக்கவும்

உதவுபவை.




4. தேவனின் பார்வையில் :




🩸பாடுகள்,

மக்கள் தம்மிடம் சாயவும்

தமது ஞானத்தின் ஆழங்களை புரிந்துகொள்ளவும் உதவும்.




🎯சிந்தனைக்கு,




🩸நம் பார்வையில்

நம் பாடுகளும்

மற்றவர்களின் பாடுகளும்

எப்படியிருக்கிறது❓




👉பாடுகள்,

👉தேவனிடம் நாம் இன்னும் நெருங்கவும்.

👉அவரை இன்னும் புரிந்து கொள்ளவும் உதவுபவையாக

இருக்க வேண்டும்.




ஆமென்🙏.



*🍏சிப்பிக்குள் முத்து🍏*




இன்றைய வேத வாசிப்பு பகுதி -

*யோபு : 38 - 40*




*🍒முத்துச்சிதறல் : 160*




🥏🥏🦀🥏🥏

இப்போதும் *பிகெமோத்தை கவனித்து பார்:,* உன்னை உண்டாக்கினது போல அதையும் உண்டாக்கினேன் :,... *அது தேவனுடைய கிரியைகளில் பிரதானமான ஒரு கிரியை,*

(யோபு - 40 : 15, 19 மு)

🦀🦀🥏🦀🦀




*🦏பிகெமோத்🦏*




*✍️யோபு என்னும் சன்மார்க்க புருஷனுக்கு ஏற்பட்ட சோதனைகள், மற்றும் பாடுகள் எண்ணிலடங்கா.*

ஆகையால்... தனக்கு ஏற்பட்ட சோதனைகளுக்குரிய காரணா காரியத்தை அறிய முற்பட்டார். *யோபு தன் பார்வையில் அவர் நீதிமான்.*

இறைவன் பார்வையிலும் அவர் அவ்விதமே.

*ஆகிலும் யோபுவின் சுய நீதியை* இறைவன் கேள்வி கேட்க ஆரம்பிக்கிறார்.

*(யோபு : 38 - 41 அதிகாரங்கள்)*




🫛தன்னையே தான் நீதிமானாக்கி கொண்டாலும்...........அவரை நேரடியாக சந்திக்கும் நாளிலே தன் வாயே தன்னை குற்றவாளியாக்கும் என்றும், தான் எவ்வளவு தான் உத்தமனாக திகழ்ந்தாலும் தன் வாயே தன்னை மாறுபாடானவன் என தீர்க்கும் என்பதை யோபு அறிந்து தான் இருந்தார். தான் உத்தமன் என்றாலும் தன் உள்ளத்தை தான் அறிய முடியவில்லை என்று கூட சொன்னார்.

*(9 : 20, 21)*




*🛍️யோபுவின் 4 தோழர்கள் அவரவர் இறைவனை குறித்து அறிந்து இருந்ததை சாம்பாஷித்து கொண்ட பின்....*

கர்த்தர் பெரும்காற்றில் இருந்து யோபுவிடம் கேள்வி கேட்க ஆரம்பித்தார்.




*அப்படி ஆண்டவர் கேள்வி கேட்கையில்....*

பூமி மற்றும் அதோடு சம்பந்தப்பட்ட சமுத்திரம், காற்று, வனாந்திரம், வானத்தின் நியமனங்கள், வனத்தில் வாழும் மிருகங்கள், ஆகாயத்து பறவைகள் போன்றவைகளை குறித்த காரியங்களை குறித்து யோபுவிடம் கேள்வி கேட்கிறார்.

அப்பொழுது யோபு கர்த்தருக்கு மறுமொழி கொடுக்க இயலாததினால்.....

தன் கையினால் தன் வாயை பொத்தி கொள்வதாக ஆண்டவரிடம் சரணடைந்து விடுவது மட்டுமல்ல, இனி ஒரு வார்த்தையும் தான் பேச போவதில்லை என்று கூறி விட்டார்.

*(40 : 3 - 5)*




*❣️இரண்டாம் விசை ஆண்டவர் யோபுவிடம் :*

தம்மை யோபு எதிர்க்க இயலுமா❓என்று கேள்வி எழுப்பி விட்ட பின்....

தமது படைப்புகளில் விசித்திரமான ஓர் படைப்பாகிய *"பிகெமோத்" எனும் ஓர் மிருகத்தை / பிராணியை கவனித்து பார்க்க சொன்னார்.*

(40 : 15 மு)




🌿🌿🌻🌿🌿




இந்த பூமி படைக்கப்பட்டு ஏறத்தாள 6,000 ஆண்டுகள் ஆகி இருப்பதாக நம்ப பட்டு வருகிறது. *அப்பொழுது இந்த பிகெமோத் இறைவனால் படைக்கப்பட்ட ஓர் படைப்பு.*

ஆண்டவர் மனுஷனை உண்டாக்கினது போல தான் இந்த பிராணியையும் உண்டாக்கினாராம்.

அதாவது மண்ணினால் இதை உருவாக்கி உள்ளார்

*(ஆதி - 2 : 19 :, யோபு - 40 : 15)*

என்று புரிந்து கொள்ளுகிறோம்.




*பிகெமோத்* என்பதற்கான எபிரேய வார்த்தை - *பெ'ஹமா* என்று சொல்ல படுகிறது.

*பெ'ஹமா* என்றால்...

*மிருகம் / பிராணி, முரடன் / விரும்ப தகாத மனிதன்* என்றெல்லாம் அர்த்தம் உள்ளது.

ஆகிலும் இதை குறித்த வருணனையை நாம் கவனித்தால்.... இது ஒரு பிராணி / மிருகம் தான் என்பது உறுதி ஆகிறது.

*(40 : 15 - 24)*

ஆகையால் இந்த *பிகெமோத்தை.....மிக பெரிய, பிரமாண்டமான மிருகம் / பிராணி* என்று வேத அறிஞர்கள் கூறுகிறார்கள்.




🧐எபிரேயத்தில் இந்த பிகெமோத் என்ற சொல்லுக்கான நேரடி அர்த்தம் -

*4 கால் பிராணி* என்பதாம்.




சிலர் இதை

*யானை🐘* என்றும், சிலர் இதை *நீர்யானை🦛* என்றும், சிலர் இதை *காண்டாமிருகம்🦏* என்றும் கூறுகிறார்கள்.




*🍒ஆனால் மனிதன் இந்த பிகெமோத்தை அடக்கி ஆள இயலாதாம்.*




*📌கடந்த 1910ம் ஆண்டு...*

ஒரு ப்ரிடிஷ் விஞ்ஞானி....

அநேகம் எலும்புகூடுகளை கண்டு பிடித்துள்ளார். *அவை பெரிய மிருகங்களுடையதாக இருந்துள்ளது.*

ஈரான் நாட்டிலுள்ள *பலுச்சிஸ்தான் என்னும் இடத்தில்* இவை கண்டு பிடிக்க பட்டதால்....

மிக மிக பெரிய அளவிளான அந்த எலும்புகளை *பலுச்சித்தேரியம்* என்று பெயரிட்டார்.

அதற்கு..... *பலுச்சிஸ்த்தானின் மிருகம் / பிராணி* என்று அர்த்தமாம்.




இவை......

🍀அழிந்து போன....

🍀மிக பிரமாண்டமான,

🍀கொம்புகள் இல்லாத....

*பெரிய காண்டாமிருகம் என்றார்.*




*பின்பு...* *2013ல்...*

அதே போல குவியல் குவியலாக எலும்புகள் கண்டு பிடிக்க பட்டுள்ளன.

அதை அவர்கள் அளவை செய்த போது....

அந்த பிராணிகளின்...

*🌻தலை - 1.5 மீட்டர் நீளமும்*

*🌻அகண்ட வாய் கொண்ட வைகளா கவும்*

*🌻அதன் தோள்பட்டை - 5.5 மீட்டர் உயரமும்*

*🌻அதன் கழுத்தோடு சேர்த்து அளந்த போது....8 மீட்டர் உயரமும்*

*🌻மொத்தத்தில் 9 மீட்டர் உயரம் கொண்ட பிராணியாக கணக்கிட்டுள்ளனர்.*




மேற்கண்ட அளவையை.....

*ஏற்கனவே பதிவு செய்யப்பட்டிருந்த மிக பெரிய யானையோடு ஒப்பிட்டு பார்த்த போது...*

அந்த *பலுச்சிடெரியம்* எனும் பிராணியின் எலும்புடைய நீளம் மற்றும் அளவு...

ஏற்கனவே பதிவிடப்பட்டிருந்த

*பெரிய யானை - 4 மீட்டர்*.

*உயரமான ஒட்டகசிவிங்கி - 6 மீட்டர்*...

காட்டிலும் மிக பெரிதாக இருந்துள்ளது.

மட்டுமல்ல...

*அந்த எலும்பின் எடை 20 டன் ஆக இருந்துள்ளது.*

இது 3 ஆப்பிரிக்க யானைகளின் எடையாக்கும்.

அந்தளவு எடை கொண்ட பெரிய மிருகம் என.....

*ஆம்ஸ்ட்ராங் வேதாகம தொல்லாய்வு ஸ்தாபனம்*

(Armstrong Institue of Biblical Archeology)

தன் வலைதளத்தில் செய்தி வெளியிட்டுள்ளது.




🎈🎈🪶🎈🎈




இந்த கடல் பிராணியும், அதி வல்லமை வாய்ந்ததுமான *பிகெமோத் மூலம்* ஆண்டவர் யோபுவின் சுய நீதியை நசுக்கி விடுகிறார்.




சோதனை, பாடுகள் மற்றும் பிரச்சனையின் போது....

*மனிதன் இறைவனுக்கு முன் தன்னை தாழ்மை படுத்தி கொண்டு.....* தாழ்மையுடன் நடந்து கொள்ள வேண்டும் என்பதை அறிவுறுத்தல் செய்தார்.

ஏன் என்றால்....

இந்த *பிகெமோத்* தேவனுடைய கிரியைகளில் பிரதான ஒரு கிரியை.

இந்த விசித்திர பிராணி / மிருகத்தை கவனித்து பார்த்து......

அதிசயமாகவும், மனிதனால் அடக்க கூடாததுமாக விளங்கிய அதன் தன்மை அதை சிருஷ்டித்தவரின் பொறுப்பில் இருப்பது போலவே, மனிதனும் கர்த்தரின் பொறுப்பில் இருக்கிறான். *அவனுக்கு இவ்வுலகில் ஏற்படும் காரியங்களை அவனால் முழுமையாக புரிந்து கொள்ள இயலாததாகையால்.......*

இறைவன் முன் தன் ஸ்தானத்தை குறித்து மனிதன் புரிந்து..... *பாடுகளின்போது சிந்திக்கும் சிந்தனைகள், மற்றும் உதிர்க்கும் வார்த்தைகளை குறித்து ஜாக்கிரதை காக்க ஆண்டவர் யோபுக்கு அறிவூட்டினார்.*




🍧🍧🍎🍧🍧




*நீதி* என்பது....

மனித பார்வையில்.... *சரியானது*

அல்லது

*உரிமை கொண்டாடும் ஓர் நிலை.*

ஆனால்....

*இறை பார்வையில் நீதி என்பது....*

*இறைவனது ஏகாதிபத்தியம்.*




ஆகையால்....

தீமை, பாடுகள் யாவும் சில காலங்கள் நம்மை வாட்டி வதைத்தாலும்...

கர்த்தரே நம் வாழ்வில் ஆளுகையில் / ஆளுநராக இருக்கிறார் என்கிற உண்மையை நம்பி அணைத்து கொள்ளுவோம்.

*அவரது ஒவ்வொரு சிருஷ்டியும் அவரது ஆளுகையின் கீழ் இருப்பதால்....*

நாம் மனரம்மியமாக இருக்கலாம்.




யோபுவின் பிரச்சனைகளை அவரே (இறைவனே) ஆளுகை செய்து முடித்துவைக்க போவதால்....

இறைவன் அநீதியுள்ளவர் என்பதாக எண்ணி விடாமல்....

*அவரது முழுமையான ஆளுகைக்கு தன்னை / தனது எதிர் காலத்தை யோபு விட்டு கொடுத்தாலே....* அங்கு தீர்வு ஏற்பட்டு விடும் என்பதை யோபுக்கு இறைவன் சொல்லாமல் சொல்லிவிட்டதாக அறிய முடிகிறது.

ஏன் என்றால்......

நதி புரண்டு வந்தாலும் சரி *பிகெமோத்* பயப்படாது.

அது போல யோர்தான் நதி அத்தனை வெள்ளம் பிகெமோத் முகத்தில் மோதினாலும்

*அது ஆசையாமல் இருக்கும் தன்மை கொண்ட பிராணி.*

(யோபு - 40 : 23)




💊பாடுகள், பிரச்சனைகள் சோதனைகளின் போது நாமும் *பிகெமோத் போல....*

*இறைவன் மீதுள்ள நமது பற்றுறுதியில் அசையாமல் இருக்க கற்று கொள்வோமா❓*




*🛍️நீதிமானுடைய வேரோ ஆசையாது.*

அவரில் (கிறிஸ்துவில்) வேர் கொண்டோராகிய நாம் அசையாமல்.....

அவர்மேல் கட்டப்பட்டவர்களாகவும், அவருக்குள் நடந்து கொண்டு, விசுவாசத்தில் உறுதி பட்டு, ஸ்த்தோத்திரத்தோடே அதில் பெருகுவோம்.

*(கொலோ - 2 : 6, 7)*




*பிகெமோத்தை படைத்தவர் தானே நம்மையும் படைத்துள்ளார்❓*

அப்படியிருக்க.....

எது நடந்தாலும் ஆடாமல், ஆசையாமல் பிகெமோத்தால் இருக்க முடிகிறது என்றால் 🤔....*நம்மாலும் பாடுகளின் போது....கர்த்தரில் உறுதியாக நிற்க முடியும் தானே !*

*🔰Sis. Martha Lazar*

*NJC, KodaiRoad*

Tags

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.