Tamil translation of the testimony of Bro. Daniel Zachariah, Chennai.*
**சாட்சி*
💐💐💐💐💐💐
தேவனுக்கே துதி உண்டாவதாக!!!* பல 365 வேதவாசிப்பு வாட்ஸ்அப் குழுக்களில் உள்ள அங்கத்தினரில் நானும் ஒருவன். நான் இந்த ஆண்டு வேத வாசிப்பு திட்டத்தில் வேதம் வாசிக்கத் தொடங்கினேன், ஆரம்பத்தில் நான் மற்ற வாட்ஸ்அப் குழுவைப் போலவே குழுவில் சேர்ந்தேன். ஆனால் இப்போது அதை முதலில் எனக்கு அறிமுகப்படுத்திய எனது உறவினருக்கு நான் மிகவும் நன்றியுள்ளவனாக இருக்கிறேன், மேலும் என் வாழ்நாள் முழுவதும் அவளுடைய கருணை செயலுக்கு நான் எப்போதும் கடமைப்பட்டிருக்கிறேன்.
இது தொடங்கியதிலிருந்து, எல்லாத் தொழிலில் வல்லுனர்களும் இதுபோன்ற விரிவான விவிலியப் படிப்பை தொடர்வதை நான் பார்க்கிறேன், மேலும் குழுவில் வரும் ஒவ்வொரு செய்தியினாலும் நான் உண்மையிலேயே ஆசீர்வதிக்கப்படுகிறேன். ஆனால் நான் எதிர்கொள்ளும் சவால் என்னவென்றால், ஒவ்வொரு செய்தியையும் என்னால் படிக்க முடியவில்லை. ஆனால், குழுவில் பதிவிடப்படும் செய்திகளை நாம் சொந்தமாக ஆய்வு செய்ய வேண்டும், அதன் விளைவாக நாம் பயனடையலாம் என்று எண்ணுகிறேன். மற்றும் நாட்கள் செல்ல செல்ல கிறிஸ்துவில் மேலும் மேலும் வளர இது உதவலாம். *II தீமோத்தேயு 3:16-17 16 வேதவாக்கியங்களெல்லாம் தேவஆவியினால் அருளப்பட்டிருக்கிறது; தேவனுடைய மனுஷன் தேறினவனாகவும், எந்த நற்கிரியையுஞ் செய்யத் தகுதியுள்ளவனாகவும் இருக்கும்படி, அவைகள் உபதேசத்துக்கும், கடிந்துகொள்ளுதலுக்கும் சீர்திருத்தலுக்கும், நீதியைப் படிப்பிக்குதலுக்கும் பிரயோஜனமுள்ளவைகளாயிருக்கிறது.* குழுவின் குறிக்கோள் என்னவென்றால், நாம் *பிரார்த்தனை செய்ய வேண்டும், படிக்க வேண்டும், கற்றுக் கொள்ள வேண்டும் மற்றும் பகிர்ந்து கொள்ள வேண்டும்* அதாவது தொடர்ச்சியான வளர்ச்சியின் மூலம் ஒவ்வொரு உறுப்பினரும் தேவனுடைய ராஜ்யத்தில் ஒரு பயனுள்ள பாத்திரமாக மாற வேண்டும். மற்றும் எதிர்காலத்தில் நமக்கு சாத்தியமான வழிகளில் இந்தப் பணியைத் தொடர வேண்டும்.…
நான் இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறேன், ஒவ்வொருவரும் தங்கள் பொன்னான நேரத்தை எடுத்துக்கொண்டு இப்படிப்பட்ட அற்புதமான வாழ்க்கையை மாற்றும் செய்தியை எழுதுவதன் மூலம் எப்படிப்பட்ட வித்தியாசத்தை ஏற்படுத்துகிறார்கள் என்பதற்காக அனைவருக்கும் கர்த்தருடைய பெயரால் நன்றி தெரிவிக்க விரும்புகிறேன். பலரைப் போலவே நானும் தற்போது செய்திகளைப் பெறுபவனாக இருக்கிறேன்.
*மேலும், கர்த்தர் நம் அனைவரையும் பலப்படுத்தி, எதிர்காலத்தில் நம் வாழ்வின் ஒவ்வொரு நடையிலும் தேவ இராஜ்ஜியத்தைக் கட்டியெழுப்ப நம்மை மேலும் மேலும் பயன்படுத்த வேண்டும் என்பதே எனது தினசரி பிரார்த்தனை. ஆமென்!!!*
*டேனியல் சகரியா, சென்னை, இந்தியா
*யோபு : 31-33*
*என் கண்களோடே உடன்படிக்கை பண்ணின நான் ஒரு கன்னிகையின் மேல் நினைப்பாயிருப்ப தெப்படி*?
(யோபு 31:1)
*என் மனம் யாதொரு ஸ்திரீயின் மேல் மயங்கி அயலானுடைய வாசலை நான் எட்டிப் பார்த்ததுண்டானால்*,
*அப்பொழுது என் மனைவி வேறொருவனுக்கு மாவரைப்பாளாக; வேற்று மனிதர் அவள் மேல் சாய்வார்களாக*.
( யோபு: 31:9,10)
யோபுவின் இந்த வார்த்தைகள் எத்தனை அருமையான வார்த்தைகள்!
★ விபசாரம் என்ற பெரிய பாவத்தில் யோபு விழாதது மட்டுமல்ல, அதற்கான முதல்படியான கெட்ட எண்ணமும் அவரிடம் இல்லாதிருந்தது.
★ராஜாக்களும் பெரிய மனிதர்களும் பல மனைவியரை வைத்திருந்தனர் என்று வாசிக்கிறோம். ஆனால் யோபுவின் இந்த குணம் எத்தனை மேலானது பார்த்தீர்களா..?
★இன்று சமுதாயத்தில் இத்தகைய ஒழுக்கமான ஆண்கள் எத்தனை பேர் இருக்கிறார்கள்..? ஒரு பெண்ணை இச்சையோடு பார்த்தாலே அது பாவம்.
★ ஆண்கள் மட்டுமல்ல, பெண்களும் எப்படி நடந்து கொள்கிறார்கள்..?
திருமணம் ஆனவர்கள் தங்கள் மனைவிக்கு, கணவருக்கு துரோகம் செய்யாமல் வாழ்கிறார்களா..?
"அயலானுடைய வாசலை நான் எட்டிப் பார்த்ததுண்டானால் என் மனைவி வேறோருவனுக்கு மாவரைப்பாளாக". யோபுவைப்போல எத்தனை கணவன்மார்கள் இத்தகைய உறுதியோடு சொல்ல முடியும்..?
எந்தக் கணவனாவது இப்படி தன் மனைவியை வேறோருவனுக்கு மாவரைக்கத்தான் அனுப்புவானா..?
யோபு தன் கண்களினால் பாவம் செய்யாதவாறு தன்னை காத்துக் கொண்டார்.
*விபசாரம் செய்யாதிருப்பாயாக* என்பது ஆண்டவர் நமக்குத் தந்த பத்து கட்டளைகளில் ஒன்று.
★ நம் சிந்தனை செயல்பாடுகள் எவ்வாறு இருக்கின்றன என்று சிந்தித்துப் பார்ப்போமாக.
★ கடந்த கால பாவங்களை ஆண்டவரிடம் அறிக்கை
யிட்டு பாவமன்னிப்பின் நிச்சயத்தைப் பெற்று ஆண்டவருக்கு பிரியமான பரிசுத்த வாழ்க்கை வாழ்வோமாக.
*நம்முடைய நினைவுகள், வார்த்தைகள், செய்கைகள் இவற்றில் எப்போதும் பரிசுத்தம் காணப்படட்டும்*.
*ஆமென்*
✍️ Mrs. Bhavani Jeeja Devaraj, Chennai, Tamilnadu.
*யோபு 31 - 33*
✅ *நான் ஆதாமைப்போல என்மீறுதல்களை மூடி வைத்தேனோ* ✅
☄️ *"நான் ஆதாமைப்போல என்மீறுதல்களை மூடி, என் அக்கிரமத்தை என் மடியிலே வைத்துவைத்தேனோ?”* (யோபு 31:33).
💥 யோபின் அனைத்து துன்பங்களுக்கும் முக்கிய காரணமாக இருக்கக்கூடிய ஒரு கொடுமையான பாவத்தை யோபு மறைப்பதாக யோபின் நண்பர்கள் அவன்மீது குற்றம் சாட்டினர். ஆதாமும் மற்றவர்களும் செய்தது போல் *தன் குற்றத்தை தனக்குள்ளேயே வைத்துக்கொண்டு, தன் பாவத்தை மறைக்கவில்லை* என்று யோபு வலியுறுத்தினான்.
💥 தான் எந்த படைப்பையும் வணங்கவில்லை என்றும், தேவையுள்ளவர்களுக்கு தான் உதவி செய்ததாகவும், தன்னுடைய எதிரிகளையும் நேசித்ததாகவும், தேவனுக்கு முன்பாகவும், மனிதர்களுக்கு முன்பாகவும் தான் வெளிப்படையாகவும் நேர்மையாகவும் இருந்ததாகவும் யோபு தனக்காக மறுஉத்தரவு சொன்னான். *தான் எந்தவித காரணமுமின்றி, துன்பங்களை அனுபவிப்பதாக* யோபு உறுதியாக நம்பினான்.
💥 *ஏவாள் மீது பலியைச் சுமத்தி, தண்டனையிலிருந்து தப்பித்துக்கொள்ள முயன்ற ஆதாமைப் போல் தான் தன் தவறுகளை மறைக்கவில்லை* என்று யோபு வாதிட்டான். தேவன் அவனை விசாரித்தபோது, ஆதாம் அளித்த பதில்: *“என்னுடனே இருக்கும்படி தேவரீர் தந்த ஸ்திரீயானவள் அவ்விருட்சத்தின் கனியை எனக்குக் கொடுத்தாள், நான் புசித்தேன்.”* (ஆதியாகமம் 3:12). ஆதாம் தன் பாவத்தை ஒப்புக்கொண்டு, தேவனிடம் மன்னிப்பு கேட்டிருக்க வேண்டும். அப்போது மனித வரலாற்றின் போக்கு முற்றிலும் மாறுபட்டதாக இருந்திருக்கலாம்.
💠 யோபின் வார்த்தைகளிலிருந்து நாம் *சில ஆவிக்குரிய உண்மைகளைக் கற்றுக்கொள்ளலாம்.*
🔸 பரிசேயன் மற்றும் ஆயக்காரன் பற்றிய உவமையில் (லூக்கா 18:9-14), *தன்னுடைய அக்கிரமத்தை மறைக்காமல் ஒப்புக்கொண்டுத் தன்னைத் தாழ்த்திய ஆயக்காரனை இயேசு பாராட்டினார்.* ஆயக்காரன் தேவனிடம், *"தேவனே! பாவியாகிய என்மேல் கிருபையாயிரும்."* என்று ஜெபம் பண்ணினான் (லூக்கா 18:13). *தன்னை நியாயப்படுத்திய பரிசேயனைப் பார்க்கிலும், தன்னைத் தாழ்த்திய ஆயக்காரன் நீதிமானாக்கப்பட்டவனாய்த் தன் வீட்டுக்குத் திரும்பிப்போனான்* என்று இயேசு சொன்னார்.
🔸 தாவீது, பத்சேபாளுடன் செய்த பாவத்திற்காக மனம் வருந்தியபோது, தேவனிடம் மன்றாடினான்: *"என் அக்கிரமம் நீங்க என்னை முற்றிலும் கழுவி, என் பாவமற என்னைச் சுத்திகரியும்."* (சங்கீதம் 51:2). தேவன் தாவீதை தம்முடைய *இருதயத்திற்கு ஏற்ற மனுஷனாக* ஏற்றுக்கொண்டார்.
🔸 ஞானியின் வார்த்தைகள்: *"தன் பாவங்களை மறைக்கிறவன் வாழ்வடையமாட்டான்; அவைகளை அறிக்கை செய்து விட்டுவிடுகிறவனோ இரக்கம் பெறுவான்."* (நீதிமொழிகள் 28:13). இதுவே தேவனிடமிருந்து இரக்கம் பெறுவதற்காக நாம் செய்ய வேண்டிய ஆவிக்குரிய செயலாகும்
🔸 ஒரு மனிதன் செய்யக்கூடிய மிக மோசமான தவறு என்னவென்றால், *பாவத்தையும் மீறுதலையும் நியாயப்படுத்த முயற்சிப்பதாகும்.* மனிதர்கள் தங்களுடைய தவறான உணர்வுகளையும் செயல்களையும் ஒப்புக்கொள்ளாமல் தொடர்ந்து மறைப்பதைப் பார்க்கிறோம். தன் பாவத்தினால் உண்டாகும் *நியாயமான விளைவுகளிலிருந்து* தப்பிக்கும் முயற்சியில், ஒரு பாவி தன் அக்கிரமத்தை மறைக்க முயற்சி செய்யலாம். ஆனால், *தன்னை நியாயப்படுத்துகிறவன் இறுதியில் நியாயந்தீர்க்கப்படுவான்* என்று தேவனுடைய வார்த்தை தெளிவாகக் கூறுகிறது.
🔸 வெறும் பாவ அறிக்கை மட்டும் போதாது. யோவான் ஸ்நானன் கூறும் அறிவுரை: *"மனந்திரும்புதலுக்கு ஏற்ற கனிகளைக் கொடுங்கள்."* (லூக்கா 3:8). *தவறான செயல்கள் மற்றும் வார்த்தைகள் மீண்டும் மீண்டும் வராதபடி,* மனந்திரும்புதலை செயலில் காட்ட வேண்டும்.
🔹 *நம்முடைய பாவங்களை மறைக்காமல், அவற்றை அறிக்கை செய்து விட்டுவிடுவதில் கவனமாக இருக்கிறோமா?*
✅ நாம் கற்றுக் கொள்ளும் *பாடங்கள்*:
1️⃣ *தன் பாவங்களை அறிக்கை செய்து விட்டுவிடுகிறவன் இரக்கம் பெறுவான்.*
2️⃣ *ஒரு மனிதன் செய்யக்கூடிய மிக மோசமான தவறு என்னவென்றால், பாவத்தையும் மீறுதலையும் நியாயப்படுத்த முயற்சிப்பதாகும். தன்னை நியாயப்படுத்துகிறவன் இறுதியில் நியாயந்தீர்க்கப்படுவான்*
3️⃣ *தவறான செயல்கள் மற்றும் வார்த்தைகள் மீண்டும் மீண்டும் வராதபடி, மனந்திரும்புதலை செயலில் காட்ட வேண்டும்.*
Dr. எஸ். செல்வன். சென்னை
*யோபு 31- 33*
*இயேசு கிறிஸ்துவோடு*
*உடன்படிக்கைபண்ணுவோம்*..
யோபு, தன்னைப் பாவி என்று குற்றஞ்சாட்டின தனது நண்பர்களுக்குத் தான்
தேவ பக்தியுள்ள..குற்றமற்ற மனிதன் என்பதை விவரமாகக் கூறுவதை..யோபு 31ம் அதிகாரத்தில் பார்க்கிறோம்..
யோபுவின் வாழ்வு..இயேசு கிறிஸ்து தமது மலைப் பிரசங்கத்தில் கூறின சத்தியங்களுக்கு ஒத்திருந்தது..
( மத்தேயு 5 - 7 )
யோபு ,கண்கள் மற்றும் இருதயத்தின் இச்சையினால் உண்டாகும் பாவங்களுக்கு உடன்படவில்லை..
( யோபு 31 : 1, 9-13 )
தன்னைப் போலவே
அயலாரையும் நேசித்தான்..
( யோபு 31 : 13-15 )
வேலைக்காரர்களிடம் இரக்கத்துடன்..மற்றவர்கள் மீதும் தன்னலமற்ற அக்கறை காட்டினான்..
(யோபு 31: 16-22).
தன் செல்வத்தையல்ல.. தேவனையே நம்பினான்..
( யோபு 31: 24 - 28 )
அந்நியரை ஏற்றுக்கொண்டான்..
(யோபு 31: 32).
பகைவருக்கும் நன்மை செய்தான்.
(யோபு 31 : 29)
யோபு, நியாயப்பிரமாண காலத்திற்கு முன்பு வாழ்ந்தவன். அவனுக்குக் கற்பனைகளும்.. கட்டளைகளும் எதுவும் தெரியாது..
ஆனால் அவன், சமுதாய வாழ்வில் மட்டுமல்ல..
தனது தனிப்பட்ட, அந்தரங்க வாழ்விலும்..நீதிமானாக.. குற்றமற்றவனாக இருந்தான்..
இன்று புது உடன்படிக்கையின் மக்களாகிய நம்முடைய வாழ்வு.. இயேசு கிறிஸ்துவின் மலைப்பிரசங்கத்தினடிப்படையில் இருக்கிறதா..?
இச்சைகளைத் தவிர்க்க, அன்று யோபு தன் கண்களோடு
உடன்படிக்கை செய்திருந்தான்..
இன்று நாம் பாவங்கள் பெருகியிருக்கிற காலத்தில் வாழ்ந்துகொண்டிருக்கிறோம்..
நாம் பாவஞ்செய்ய எங்கும் போகவேண்டியதில்லை..
நம் கையிலிருக்கும் மொபைல் போன் ஒன்றே போதும்..
*நாம் நமது இரட்சகராகிய* *இயேசுவோடு*
*உடன்படிக்கை செய்வோம்*..
*நமது வாழ்வின் அஸ்திபாரமாக ..*
*இயேசு* *இருக்கும்போது*..
*கண்களின் இச்சை* ..
*மாம்சத்தின் இச்சை..ஜீவனத்தின்* *பெருமை எதுவும் நம்மை* *மேற்கொள்ளாது*..
*தேவையான காட்சிகளை மட்டும்,* *நம் கண்கள் காணும்*..
*நன்மையான செய்திகளை* *மட்டும் ,நம் செவிகள் கேட்கும்..*
*உண்மையான காரியங்களை* *மட்டும், நம் நாவு பேசும்*..
*உலக சிநேகத்தைத்* *தவிர்க்கும்*..
*மாம்ச இச்சைகளை* *வெறுக்கும்*..
*கிறிஸ்துவின் சிந்தை நம்மை*
*நிரப்பும்*..
*நாம் எங்கிருந்தாலும்*..
*எப்படிப்பட்ட* *சூழ்நிலையிலிருந்தாலும்*..
*இயேசுவோடு வாழ்வோம்*..
*இயேசுவுக்காய் வாழ்வோம்*..
*இயேசுவைப் போல வாழ்வோம்..இயேசுவின் *
*உயிருள்ள சாட்சியாக*
*விளங்குவோம்*..
ஆமென்.🙏
மாலா டேவிட்
பார்க்கிறார், எண்ணுகிறார்*
~~~~~~~~~~~~~~~~~~~
யோபு 31: 4- 6.
1. ஆம், நம்மை சிருஷ்டித்த சர்வவல்லமையுள்ள கர்த்தர், இந்த உலக வாழ்க்கையிலே *நம் வழிகளை பார்த்துக் கொண்டேயிருக்கிறார். நம் நடை களை எண்ணிக்கொண்டேயிருக்கிறார்.* மட்டுமல்ல, *சுமுத்திரையான தராசிலே நம்மை நிறுத்து நம் உத்தமத்தை அறிகிறார்*. *மனுஷனுடைய வழிகள் எல்லாவற்றையும் சீர் தூக்கி பார்க்கிறார்*. நீதிமொழிகள் 5: 21 ஆச்சரியமாயிருக்கிறதல்லவா?
2. அப்படியானால் நாம் எவ்வளவு பயத்தோடும், பக்தியோடும் நம் வழிகளையும், நடை களையும் காக்க வேண்டும்! *ஜீவனுக்கு போகிற வழி நெருக்கமாயிருக்கிறது. அதை கண்டு பிடிக்கிறார்கள் சிலர்.* மத்தேயு 7: 14.
*மனுஷனுடைய வழியெல்லாம் அவன் பார்வைக்கு செம்மையாய் தோன்றும். கர்த்தரோ இருதயங்களை நிறுத்து பார்க்கிறார்*. நீதிமொழிகள் 21: 2.
ஆகவே இன்று நாம் எந்த வழியிலே நடக்கிறோம் என்பதை சிந்தித்து பார்ப்போம். *தேவனுடைய வழி உத்தமமானது. நான் மாயையிலே நடக்கவில்லை. என் கால் கபடு செய்ய தீவிரிக்கவில்லை. ஆகவே தேவன் சுமுத்திரையான தராசில் என்னை நிறுத்து, என் உத்தமத்தை அறிவாராக* என யோபு கூறுகிறார்.
3. *நாம் நடக்க வேண்டிய வழியை போதித்து, கண்ணை வைத்து ஆலோசனை சொல்லுகிறவர் நம் கர்த்தர்.* சங்கீதம் 32: 8. ஆகவே தான் *உம்முடைய கண்களில் எனக்கு கிருபை கிடைத்ததானால், நான் உம்மை அறிவதற்கும், உம்முடைய கண்களில் எனக்கு கிருபை கிடைப்பதற்கும், உம் வழியை எனக்கு போதியும்* என மோசே விண்ணப்பிக்கிறார். யாத்திராகமம் 33: 13.
நாமும் இவ்விதமாய் நம்மை தாழ்த்தி, நாம் நடக்க வேண்டிய வழியை, பாதையை ஆவியானவர் அவருடைய வசனங்கள் முலம் காட்டும் படி, போதித்து, நடத்தும் படி ஜெபிப்போம்.*எப்பிராயீமை கையை பிடித்து நடத்தினேன்* என்ற கர்த்தர் நம்மையும் கையை பிடித்து, பரிசுத்த பாதையில் நடத்தி, பரலோக இராஜ்யத்தில் கொண்டு சேர்ப்பாராக. ஆமென். அல்லேலூயா.
*Dr.Padmini Seĺvyn*
[19/09, 10:10] +91 99431 72360: Mrs.merin Gnanaraj.
Covai.
Day : 158
Date: 19.9.23
🎯தலைப்பு:
✍️யோபு ஆகமத்தின் நோக்கம்.
1️⃣நீதிமானுக்கு ஏற்படும் துன்பம், கேடு பற்றி இந்நூல் விசாரணை செய்கிறது.
2️⃣ இதனால் ஏற்படும் பயம், சந்தேகம், உண்மை பற்றி சொல்கிறது.
3️⃣ அதிகமான துன்பத்தை நீதிமான் சகிப்பது நியாயாமா என்ற சந்தேகத்தைக் தீர்ப்பதே இந்த நூலில் நோக்கம்.
4️⃣கர்த்தர் நீதிமானின் துன்பத்தை நீக்க பிரயாசபடாமல் ,
தன்னுடைய படைப்பின் அற்புதங்களை காட்டி
🎈தேவ சித்தத்தை யாராலும் அறிய முடியாது
என்பதை நமக்கு புரியவைக்கிறது இந்நூல்.
5️⃣ கர்த்தருடைய திருச்சித்தமே சிறந்தது
என அவர்கள் நம்ப வேண்டும் என கற்பிக்கிறது இந்நூல்
6️⃣ துன்பத்திற்கு காரணம் தெரியாவிட்டாலும்
🎈தகுந்த காரணம் இல்லாமல் துன்புறுத்த மாட்டார் என புரியவைக்க முயல்கிறது இந் நூல்.
7️⃣ சிட்சையின் மூலம் பக்தி விருத்தியடைய செய்கிறார் என்பதை நமக்கு கற்பிக்கிறது.
8️⃣ மரணத்திற்கு பிற்பாடு மனிதர்கள் அடைய வேண்டிய நிலை மற்றும் பாதாளத்தை பற்றியும் சொல்கிறது.
✍️முடிவு :
நமக்கு வரும் சோதனைகள் ஏன்❓எதனால்❓
என்பதற்கு பதில் தரும் நூலாக தமக்கு தரப்பட்டுள்ளது.
🙏ஜெபம்:
கர்த்தாவே என்னை சோதியும்,
பின் நான் பொன்னாக விளங்குவேன்.
யோபு 23:10
ஆமென்🙏
[19/09, 10:10] +91 99431 72360: *Tamil translation of Dr. Shobana Daniel’s Testimony*
*என் சாட்சி*
கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவை தங்கள் சொந்த இரட்சகராக ஏற்றுக்கொண்ட பிராமண பெற்றோருக்கு நான் பிறந்தேன். நான் தற்போது சென்னையில் உள்ள நிகர்நிலைப் பல்கலைக்கழகத்தில் இணைப் பேராசிரியராகப் பணிபுரிகிறேன்.
என் வாழ்நாள் முழுவதும் பலமுறை பைபிளைப் படிக்க முயற்சித்தேன். ஆனால் ஒருபோதும் நிறைவேற்றப்படவில்லை. நான் இந்த தேவ வார்த்தைகளைப் படித்திருந்தேன், ஆனால் இத்தகைய உற்சாகத்தை நான் அனுபவிக்கவில்லை.
330 நாட்கள் பைபிள் வாசிப்பு திட்டத்தில் நான் ஒரு வாசகியாக சேர்ந்தேன். ஒவ்வொரு நாளும் வேத பாகங்களை வாசிப்பதில் நான் மிகவும் ஆர்வமாக இருந்தேன். நான் ஒரு நாள் தவறவிட்டால் கூட, நான் அதை உணர்ந்தேன்! பைபிளை முதல் அட்டை முதல் கடைசி அட்டை வரை படிப்பதில் பெரும் நன்மைகள் இருப்பதாக நான் நினைக்கிறேன்... அவ்வாறு செய்யும்போது பைபிள் ஒரு உண்மைக்கதை என்பதை உணர்ந்தேன். மேலும் இது ஒரு குறிப்பிடத்தக்க காலகட்டத்தில் நடக்கும் உண்மைக்கதை. தேவன் யார், நாம் யார், தேவன் நம்மை அவருடன் சமரசம் செய்ய நீண்ட காலமாக என்ன செய்து வருகிறார் என்பது பற்றிய குறிப்பிடத்தக்க ஒன்றை இது வெளிப்படுத்துகிறது. அது என்னை தேவனுடன் நெருங்கி நடக்க அழைத்தது. பைபிளைப் பற்றிய பரந்த கண்ணோட்டத்தைப் பெறுவேன் என்று நினைத்தேன், அதைவிட நான் அதிகம் எதிர்பார்க்கவில்லை. ஆனால், நான் கருதியது தவறு! ஒவ்வொரு நாளும் கர்த்தர் நான் இதுவரை கவனிக்காத விஷயங்களை வெளிப்படுத்தினார். இந்த படிப்புக்கு என்னை வழிநடத்தியதற்காகவும், அதன் விளைவாக நான் பெற்ற ஆன்மீக வளர்ச்சிக்காகவும் ஆசீர்வாதத்திற்காகவும் நான் கர்த்தரைப் போற்றுகிறேன்.
தேவ கிருபையால், தேவன் என்னை 365 நாட்கள் பைபிள் வாசிப்புத் திட்டத்தின் ஒரு பகுதியாக ஆக்கியுள்ளார், இங்கு நான் 100 குழுக்களை சுமார் 1000 நபர்களுடன் ஒருங்கிணைத்து, ஒவ்வொரு நாளும் பைபிளைப் படிக்க ஒருவரையொருவர் ஊக்குவித்து வருகிறேன்.
எல்லா புகழ்ச்சியும் தேவனுக்கே உண்டாவதாக!
டாக்டர் ஷோபனா டேனியல்
சென்னை, இந்தியா.
[19/09, 10:10] +91 99431 72360: 📖 *365 நாட்களில் வேதாகமம்*📖
📗 *சிறிய குறிப்பு* 📗
🍂 *கண்கள்* 🍂
யோபு மீது பல குற்றங்கள் சுமத்தப்பட்டன. முதலாவது தேவைப்படுபவர்களை நோக்கி அவர் தனது நிலைப்பாட்டை விளக்க முயன்றார். பின்னர் மெதுவாக யோபு தனது *தனிப்பட்ட பரிசுத்தத்தின்* நிலைப்பாட்டை தெளிவுபடுத்தினார். அவருடைய *நேர்மையும் பரிசுத்தமும் தேவனுக்கு முன்பாக* திறந்த புத்தகமாக இருந்தது.
*யோபின் பரிசுத்தத்தின் தரம் கர்த்தர் கொடுத்த கட்டளைக்கு இணையாக இருந்தது.* அவரது பரிசுத்தமானது * உள்ளிருந்து* தொடங்கியது. யோபு பரிசுத்தமாய் வாழ முக்கியம் கொடுத்தார். இச்சையான யாவற்றையும் தேவன் வெறுக்கிறார் என்பதை அவர் அறிந்திருந்தார். எனவே அவர் தனது கண்களுடன் ஒரு உடன்படிக்கை செய்தார்.
📖 *“என் கண்களோடே உடன்படிக்கைபண்ணின நான் ஒரு கன்னிகையின்மேல் நினைப்பாயிருப்பதெப்படி?” (யோபு 31:1)*
கண்கள் தான் சரீரத்தின் விளக்கு. *ஆரோக்கியமான கண்கள் பரிசுத்தத்திற்கு வழி வகுக்கிறது.* இப்போது நம் கண்கள் நன்றாக இருக்கிறதா? *கர்த்தர் அருவருப்பதைப் பார்க்காமல், நம் கண்களோடு எப்போதாவது உடன்படிக்கை செய்திருக்கிறோமா?*
_திருமதி ஷீலா ஜெபக்குமார்_ ✍🏻
_செப்டம்பர் 19, 2023_
[19/09, 10:10] +91 99431 72360: *Tamil translation of Mrs. Lydia Benjamin’s Testimony*
எனது சாட்சி--
நான் கடந்த ஐந்து ஆண்டுகளாக இந்த பைபிள் வாசிப்பு திட்டத்தின் ஒரு பகுதியாக இருந்து வருகிறேன். இந்த திட்டம் கோடிக்கணக்கான மக்களை ஒன்றிணைத்து தேவனுடைய வல்லமையான திட்டத்தை நிறைவேற்றியுள்ளது. கர்த்தர் அவர்களைத் தம்முடைய வார்த்தையின் அறிவில் வளரச் செய்து, அவர்களின் வாழ்க்கையில் முழுமையான மாற்றத்தைக் கொண்டுவருகிறார்.
என்னை அவர்களில் ஒருவராக மாற்றியதற்காக நான் கர்த்தரைப் பாராட்டுகிறேன், நன்றி கூறுகிறேன். கர்த்தருடைய வார்த்தையைத் தவறாமல் வாசிப்பது எனது தகுதியற்ற தன்மையைக் குறித்து என்னைத் திட்டவட்டமாக உணர்த்துகிறது மற்றும் அவருடைய பார்வையில் ஏற்றுக்கொள்ள முடியாத அனைத்தையும் தூக்கி எறியும்படி செய்கிறது. இது என் வாழ்க்கையில் ஒரு தொடர்ச்சியான செயல்முறையாகிவிட்டது.
தேவ வார்த்தையை உலகம் முழுவதும் பரப்புவதில் அயராது மற்றும் தேவ வல்லமையோடு சேவை செய்த எங்கள் அன்பான ரெவ். சி.வி. ஆபிரகாம் அவர்களுக்காக நான் உண்மையிலேயே கர்த்தரைப் போற்றுகிறேன், நன்றி கூறுகிறேன். ஐந்து வருடங்களுக்கு முன் என் சகோதரி பிரின்ஸஸ் ஹட்சன் என்னை இந்த திட்டத்தில் இணையச்செய்தார்கள். அவர்கள் இந்த நிகழ்ச்சிக்கு பெரும் ஆசீர்வாதமாக இருக்கிறார்கள். இந்த ஊழியம் தொடர்பான பல வேலைகளில் ஈடுபட்டு, நுண்ணறிவுகளை எழுதும் அனைவருக்காகவும் நான் கர்த்தருக்கு நன்றி கூறுகிறேன்.
அவருடைய நாமம் மட்டுமே நமக்குள்ளும், நம் மூலமும் மகிமைப்படட்டும்.ஆமென்.
லிடியா பெஞ்சமின், கோயம்புத்தூர், சி.இந்தியா.
[19/09, 14:01] +91 99431 72360: *💫தேவனின் புரிந்துகொள்ள முடியாத ஞானம்💫*
[நாள் - 157] யோபு - 31-33
☄️நீதிக்கான யோபுவின் இறுதி வேண்டுகோள், எலிஹுவின் வருகை மற்றும் யோபுவின் புலம்பல்களுக்கு அவர் அளித்த பதில், தேவனுடைய அசாத்திய ஞானம் மற்றும் மனத்தாழ்மையின் மாற்றும் சக்தி பற்றிய விலையேறப்பெற்ற நுண்ணறிவுகளை அளிக்கிறது.
1️⃣ *நீதிக்கான யோபுவின் இறுதி விண்ணப்பம்*
🔹யோபு தேவனுக்கு முன்பாக தனது வழக்கை ஆவேசமாக வாதிடுகிறார், உணர்ச்சியுடன் தான் குற்றமற்றவர் என்பதை உறுதிப்படுத்தி, தனது துன்பத்திற்கு விளக்கம் கோருகிறார்.
🔹அவரது நண்பர்களின் குற்றச்சாட்டுகள் இருந்தபோதிலும், யோபு தனது நேர்மையைப் பேணுகிறார், அவருடைய நீதியான செயல்களைப் பட்டியலிட்டு, நீதி மற்றும் பிறரை நியாயமாக நடத்துவதில் தனது அர்ப்பணிப்பை வலியுறுத்துகிறார்.
🔹யோபுவின இறுதி வேண்டுகோள், நீதிக்கான மனித விருப்பத்தையும், துன்ப காலங்களில் கேட்கப்படவும் புரிந்து கொள்ளப்படவும் நாடுவதை வலியுறுத்தும் ஒரு சக்திவாய்ந்த நினைவூட்டலாக செயல்படுகிறது.
2️⃣ *எலிஹுவின் வருகை*
🔸எலிஹு, யோபுக்கும் அவனது நண்பர்களுக்கும் இடையே நடக்கும் உக்கிரமான வாக்குவாதத்தை மௌனமாகக் கவனித்துக் கொண்டிருக்கும் ஒரு இளைஞன், யோபுவை கண்டிக்கவோ அல்லது அவனது துன்பத்திற்குப் பாவம் காரணம் என்று சொல்வதையோ தவிர்க்கிறான்.
🔸அதற்குப் பதிலாக, தேவனுடைய வழிகளைப் புரிந்துகொள்வதில் ஞானத்தின் முக்கியத்துவத்தை வலியுறுத்தும் புதிய கண்ணோட்டத்தை அவர் வழங்குகிறார். 🔸எலிஹுவின் வருகை, கதையில் ஒரு திருப்புமுனையைக் குறிக்கிறது, ஏனெனில் அவர் தேவனுடைய ஞானம் மற்றும் மனத்தாழ்மையின் முக்கியத்துவத்தைப் பற்றிய யோபின் ஆழமான புரிதலுக்கு ஒரு ஊக்கியாக மாறுகிறார்.
3️⃣ *யோபுவின் புலம்பல்களுக்கு எலிஹுவின் பதில்*
🔺எலிஹு யோபுவின் புலம்பலுக்குப் பதிலளிக்கிறார், அவருடைய வலியையும் துன்பத்தையும் ஒப்புக்கொள்கிறார்.
🔺அவர் துன்பத்தின் நோக்கத்தை, திருத்தம் மற்றும் வழிகாட்டுதலுக்கான ஒரு வழிமுறையாக உயர்த்திக் காட்டுகிறார், யோபுவின் துன்பங்களைப் பற்றிய கண்ணோட்டத்தை சவால் செய்கிறார்.
🔺அவர் தேவனுடைய குரலுக்கு இதயத்தைத் திறக்கும்படி யோபுவை ஊக்குவிக்கிறார், மற்றும் துன்பத்தின் மத்தியிலும் கடவுள் பல்வேறு வழிகளில் பேசுகிறார் என்பதை நினைவூட்டுகிறார்.
🔺எலிஹுவின் பதில், யோபின் சிந்தனைக்கு ஒரு புதிய பரிமாணத்தை அறிமுகப்படுத்துகிறது, இது மனத்தாழ்மை மற்றும் தேவனுடைய ஞானத்திற்கு சரணடைதல் ஆகியவற்றின் மாற்றும் சக்தியை வலியுறுத்துகிறது.
♥️ *வாழ்க்கை பாடங்கள்*
💥துன்பம் எப்போதும் பாவத்தின் விளைவு அல்ல என்று யோபு கூறுகிறார்.
💥தேவனுடைய ஞானம் மற்றும் மனத்தாழ்மையின் மாற்றும் சக்தி பற்றிய புதிய கண்ணோட்டத்தை அவர் அறிமுகப்படுத்தியதால், எலிஹுவின் வருகை கதையில் ஒரு திருப்புமுனையைக் குறிக்கிறது.
💥தேவனுடைய வழிகளின் புரிந்துகொள்ள முடியாத தன்மையையும், துன்பங்களை எதிர்கொள்ளும் நம்பிக்கை மற்றும் அர்ப்பணிப்பின் முக்கியத்துவத்தையும் நமக்கு நினைவுபடுத்துகிறது.
*‼️துன்பத்தின் மத்தியிலும் ஞானத்தையும் புரிதலையும் தேடுவோம்‼️*
பிரின்சஸ் ஹட்சன்
தமிழாக்கம் இன்னிசை செல்வி மும்பை
WORLDWIDE MEMBERSHIP CAMPAIGN.*
*DEAR FRIENDS,*
Thanking GOD for each member in our 365 days Bible Reading Programme.( around 220 million from around 110 countries in around 40 languages) GOD is transforming the lives of millions of people through God's Word. A small spark of fire is able to produce a wildfire. Revival has started in the lives of all those who are seriously studying God's Word and applying that in their personal lives. Revival has started in many churches through them in different parts of the world. Let us pray for a worldwide transformation and revival through God's Word.
*We are about to start the reading and study of the Book of Psalms*. Almost all the Christians enjoy reading Psalms and many have memorized many chapters. They will be very happy to get an opportunity to study each chapter. *They can join as members to learn more about the prayers of David and others.*
*Let us contact all our dear ones in different parts of the world and add them to the programme.* If they want a language which is different from yours, please give their names and numbers to any leader in the programme and they will do the needed.
*Please inform them that it will take only around 12 minutes to read the Bible portion for a day.* They can spend more time to study the portion according to their convenience. *They will be getting lots of meaningful insights in the group from different parts of the world.* All those who are interested can share their insights in their groups.
*Please inform them that after a week, if the programme is not beneficial, they can leave the group. If it is helpful and beneficial for them, they can continue in the programme.* We can encourage them also to add more people. We can add more active people as fellow admins in the group.
It may be good to post the introduction about the programme in the group, afterwards along with the purpose and guidelines of the programme. We request all the admins to post the self joining link of the group in the group and encourage all the members to forward that to all their dear ones and to encourage them to join by just clicking on the link.
*Our small efforts can contribute in transforming the lives of hundreds of people and that can result in reviving many dying churches.* That can result in reaching billions of unreached people with the Good News. *Please encourage and motivate one another to add big number of people to our programme.* Interested people can join as admin in new WhatsApp groups to add hundreds of new people. You can even serve as Group Coordinators by encouraging many people to serve as admins in new WhatsApp groups and by coordinating those groups.
*Let us see the world and the people around through the eyes of Jesus and do all what we can to bring them closer to the LORD.*
Rev.C.V.Abraham
**PLEASE forward this message to all the groups in our Bible reading programme.*
Tamil translation of Rev. C.V.Abraham’s message*
WORLDWIDE MEMBERSHIP CAMPAIGN
*உலகளாவிய உறுப்பினர் பிரச்சாரம்.*
*அன்பிற்குரிய நண்பர்களே,*
நமது 365 நாட்கள் பைபிள் வாசிப்பு திட்டத்தில் உள்ள ஒவ்வொரு (சுமார் 110 நாடுகளில் இருந்து சுமார் 40 மொழிகளில் சுமார் 220 மில்லியன்) உறுப்பினருக்காகவும் கர்த்தருக்கு நன்றி கூறுகிறோம். கர்த்தருடைய வார்த்தையின் மூலம் கர்த்தர் மில்லியன் கணக்கான மக்களின் வாழ்க்கையை மாற்றுகிறார். ஒரு சிறிய தீப்பொறி ஒரு காட்டுத்தீயை உருவாக்க முடியும். கர்த்தருடைய வார்த்தையைத் தீவிரமாகப் படித்து, அதைத் தங்கள் தனிப்பட்ட வாழ்க்கையில் பயன்படுத்துகிற அனைவரின் வாழ்விலும் மறுமலர்ச்சி தொடங்கிவிட்டது. உலகின் பல்வேறு பகுதிகளிலும் அவர்கள் மூலம் பல திருச்சபைகளில் மறுமலர்ச்சி தொடங்கியுள்ளது. கர்த்தருடைய வார்த்தையின் மூலம் உலகளாவிய மாற்றம் மற்றும் மறுமலர்ச்சிக்காக ஜெபிப்போம்.
*சங்கீதப் புத்தகத்தின் வாசிப்பையும் படிப்பையும் தொடங்க உள்ளோம்*. ஏறக்குறைய அனைத்து கிறிஸ்தவர்களும் சங்கீதங்களை வாசிப்பதில் மகிழ்ச்சி அடைகிறார்கள் மற்றும் பலர் பல அத்தியாயங்களை மனப்பாடம் செய்திருக்கிறார்கள். ஒவ்வொரு அத்தியாயத்தையும் படிக்கும் வாய்ப்பு கிடைத்தால் மிகவும் மகிழ்ச்சியாக இருப்பார்கள். *தாவீது மற்றும் பிறரின் ஜெபங்களைப் பற்றி மேலும் அறிய அவர்கள் உறுப்பினர்களாக சேரலாம்.*
*உலகின் பல்வேறு பகுதிகளில் உள்ள நமது அன்பானவர்கள் அனைவரையும் தொடர்பு கொண்டு அவர்களை திட்டத்தில் சேர்ப்போம்.* அவர்கள் உங்கள் மொழியிலிருந்து வேறுபட்ட மொழி விரும்பினால், அவர்களின் பெயர் மற்றும் எண்களை எந்த தலைவரிடம் கொடுங்கள், அவர்கள் தேவையானதைச் செய்வார்கள்.
*ஒரு நாளைக்கு பைபிள் பகுதியைப் படிக்க சுமார் 12 நிமிடங்கள் மட்டுமே ஆகும் என்பதை அவர்களுக்குத் தெரிவிக்கவும்.* அவர்கள் தங்கள் வசதிக்கேற்ப அந்தப் பகுதியைப் படிக்க அதிக நேரம் செலவிடலாம். *உலகின் பல்வேறு பகுதிகளில் இருந்து குழுவில் பல அர்த்தமுள்ள நுண்ணறிவுகளை அவர்கள் பெறுவார்கள்.* ஆர்வமுள்ள அனைவரும் தங்கள் நுண்ணறிவுகளை தங்கள் குழுக்களில் பகிர்ந்து கொள்ளலாம்.
ஒரு வாரத்திற்குப் பிறகு, திட்டம் பயனளிக்கவில்லை என்றால், அவர்கள் குழுவிலிருந்து வெளியேறலாம் என்பதைத் தெரிவிக்கவும். இது அவர்களுக்கு பயனுள்ளதாகவும் பிரயோஜனமுள்ளதாகவும் இருந்தால், அவர்கள் திட்டத்தில் தொடரலாம்.* மேலும் பலரை சேர்க்க அவர்களை ஊக்குவிக்கலாம். குழுவில் அதிக செயற்பாட்டில
உள்ளவர்களை சக நிர்வாகிகளாக சேர்க்கலாம்.
குழுவில் நிரல் பற்றிய முன்னுரையை, பின்னர் திட்டத்தின் நோக்கம் மற்றும் வழிகாட்டுதல்களுடன் இடுகையிடுவது நல்லது. அனைத்து நிர்வாகிகளும் குழுமத்தின் சுய சேரும் இணைப்பை குழுவில் இடுகையிடுமாறு கேட்டுக்கொள்கிறோம், மேலும் அனைத்து உறுப்பினர்களும் அதை தங்கள் அன்பான அனைவருக்கும் அனுப்பவும், இணைப்பைக் கிளிக் செய்வதன் மூலம் அவர்களை சேர ஊக்குவிக்கவும்.
*நம்முடைய சிறிய முயற்சிகள் நூற்றுக்கணக்கான மக்களின் வாழ்க்கையை மாற்றியமைப்பதில் பங்களிக்கக்கூடும், மேலும் அது ஆத்துமத்தில் மரித்துக்கொண்டிருக்கும் பல திருச்சபைகளை மீண்டும் உயிர்ப்பிப்பதில் விளைவடையலாம்.* இது நற்செய்தியுடன் எட்டப்படாத பில்லியன் கணக்கான மக்களைச் சென்றடையச் செய்யும். *நமது திட்டத்தில் அதிக எண்ணிக்கையிலான நபர்களைச் சேர்க்க ஒருவரையொருவர் ஊக்குவித்து ஊக்கப்படுத்துங்கள்.* ஆர்வமுள்ளவர்கள் நூற்றுக்கணக்கான புதிய நபர்களைச் சேர்க்க புதிய வாட்ஸ்அப் குழுக்களில் நிர்வாகியாக சேரலாம். புதிய வாட்ஸ்அப் குழுக்களில் நிர்வாகிகளாக பணியாற்ற பலரை ஊக்குவிப்பதன் மூலமும் அந்த குழுக்களை ஒருங்கிணைப்பதன் மூலமும் நீங்கள் குழு ஒருங்கிணைப்பாளர்களாகவும் பணியாற்றலாம்.
*இயேசுவின் கண்களால் உலகத்தையும் சுற்றியுள்ள மக்களையும் பார்த்து, அவர்களை கர்த்தரிடம் நெருங்கி வரச்செய்ய நம்மால் முடிந்த அனைத்தையும் செய்வோம்.*
Rev.C.V.Abraham
*🌹சிப்பிக்குள் முத்து🌹*
வாசிப்பு பகுதி - *யோபு : 31 - 33*
*🌵முத்துச்சிதறல் : 158*
🍂🍂🍃🍃🍂🍂
*நான் இச்சகம்*
(பார பட்சமாய்)
*பேச அறியேன் :* (32:23)
🍃🍃🍂🍂🍃🍃
*👍எலிகூ என்னும் இளம் உபதேசியார்👍*
📌📌🥏📌📌
*யோபுவுக்கு ஏற்பட்ட நிகழ்வுகளை கேள்வியுற்ற அவரது 3 தோழர்கள், அவரை சந்தித்து, அவருக்கு ஆறுதல் கூறி, அவரை திடப்படுத்தும் நோக்கில் அவர் இடம் மட்டும் வருகையில்.... தூரத்தில் இருந்து தானே யோபுவை கண்டப்போது..... "அவரை உருதெரியாமல்", சத்தமிட்டு அழுதனர்.*
தங்கள் சால்வையை கூட கிழித்து நின்றனர்.
வானத்தை பார்த்து, தங்கள் தலையின் மேல் புழுதியை தூற்றிக்கொண்டு, அவர் அருகாமை மட்டும் வந்து, யோபுவின் துக்கம் மகா கொடிய துக்கம் என்று கண்டு, அவரோடு ஒரு வார்த்தையும் பேசாமல், இரவு, பகல் என 7 நாட்கள், அவரோடுக்கூட தரையில் உட்கார்ந்து இருந்தனர்.
*(2:11-13)*
அந்தளவு பாடுகளினூடே பயணித்துக் கொண்டிருந்தார் யோபு.
பின்பு பார்த்தால்.... *இந்த 3 நட்புறவுகளுமே யோபுவை குற்றவாளி கூண்டில் நிறுத்தி நோக்கி,*
தங்களது அறிவுரைகளை அவருக்கு எடுத்தியம்பி நின்றனர்.
*பதிலுக்கு யோபுவும் தான் எவ்விதத்திலும் குற்றம் செய்யாதவன், தான் ஒரு நீதிமான், ஆனால் இறைவன் தன்னிடம் குற்றங் கண்டுபிடிப்பதாக அங்கலாய்த்து நின்றார்.*
(33 : 9 -11)
*🎀இந்த சம்பாஷைனைகள் எத்தனை நாட்கள் நடந்தேறியது என்பது, எமது புலன்களால் யாம் கணிக்க இயலாது.* அதே வேளை இந்த 3 நட்புறவுகளோடுக்கூட *"இன்னொரு வாலிபரும்"* இவர்களது இந்த சம்பாஷைனைகளை கேட்டுக் கொண்டு இருந்திருக்கிறார் அவர் பெயர்... *"எலிகூ".*
முதியோர் பேசி முடிக்கட்டும் என்று பொறுமை காத்து அமைதியாக இருந்த அருஙகுணத்தை இவரிடம் நாம் காண்கிறோம்.
இந்த எலிகூ என்றுமே இச்சகம் பேசாதவர். *(அதாவது, ஒருவரின் முகத்தை பார்த்து விட்டு, அவரது அந்தஸ்த்தை மனதில் வைத்து கொண்டு.... பேசக்கூடியதை கூட பேசாமல் முழுங்கிக் கொண்டு நிற்பவர் அல்ல இவர் என்பதே இதன் அர்த்தம்)*
என்று தன்னை அறிமுகப்படுத்தி கொண்டு, தாம் கேட்கும் கேள்விகளுக்கு யோபு பதிலளிக்கும் படி கூறி தமது *"அபிப்பிராயத்தை"மாத்திரம்*
(32 : 10, 17)
கூறப் போவதாக, அதாவது.....
*"தனக்கு தெரிந்ததை மாத்திரம்"* வெளிப்படுத்த போவதாக கூறி, தனது நியாயங்களை கேட்கும்படி *(கவனித்து புரிந்துக் கொள்ளும்படி)*
யோபுவின் மனதை ஆயத்தப்படுத்தி விட்டு, பின்பே தனது உரையை நிகழ்த்துகிறார்.
*இவர் மற்ற அனைவரை*
(யோபு மற்றும் அவரது நண்பர்களை ) காட்டிலும்....
*வயதில் இளையவர்தான்.* ஆகிலும் இறைவனை குறித்தும், மனிதனை குறித்தும் தான் அறிந்துக் கொண்டதை..... *"வெறும் அபிப்பிராயமாக, கருத்துரையாக கூறி"*
மனித ஆவியை உணர்வைடைய செய்யும் செய்தியினை மற்ற அனைத்து ஞானிகளுக்கும்கூட ஆழ்ந்த உள்ளுணர்வோடு அவர்களது தவறை நேரடியாகவே, சுட்டி காண்பித்து நின்றவர்.
💠💠🌿💠💠
*😃எவரையும் காயப்படுத்தாமல் பேச வேண்டும் என்னும் கொள்கைக்கு இந்த எலிகூ ஒருபோதும் உட்படாதவர்.* உண்மையை உண்மையாக, அவரவர் முகத்திற்கு நேரே கூறிவிடுவதே *இவர் பார்வையில் இவருக்கான நற்பண்பு.*
முழுங்கி, முழுங்கி பேசி நில்லாமல், நான் கேட்கும் கேள்விக்கு நீர் பதில் கொடும் என யோபுவையே சவாலிட்டு, அவரை யோசிக்க வைத்தவர். அதாவது யோபுவை கூட.... *"உணர்வைடைய செய்த கல்விமான்"* என இவருக்கு நாம் புகழாரம் சூட்டலாம்.
☘️தேவ நீதி என்றால் என்ன❓ அதன் மகத்துவம், முக்கியத்துவம் எத்தகையது❓ சுயநீதியின் பின்னே ஒளிந்திருக்கும் அநீதம் இன்னதென்பதை யோபுவுக்கு சுட்டி காட்ட இந்த
*"எலிகூ என்னும் இளம் பிரசங்கியார்" தயங்கவே இல்லை.*
*இறைவன் அநீதியுள்ளவரல்ல என்பதை நாம் அறிந்திருக்கிறோம்.
*அதற்காக அவர் எவரது கேள்விகளுக்கும் விடை கொடுத்துக் கொண்டிருக்க வேண்டிய அவசியம் ஏதும் அவருக்கு இல்லை.*
என்றுமே இறைவன் தான் உண்டாக்கிய விசேஷித்த படைப்பாகிய இந்த மனுமக்களை வெவ்வேறு விதமாக நேசிப்பராகவும், கருணை கண்ணனாகவுமே செயல்படுகிறார், போன்ற நல்லெண்ணங்கள் மாத்திரமே நாம் கொள்ள வேண்டும் என்பதே எலிகூவின் முழு உரையின் சாராம்சமாக இருக்கிறது.
*🍏என்றுமே மனிதர்கள் அவரவர் தம் தம் பார்வையில் ஞானிகளும், நீதிமான்களுமாகவே எண்ணங் கொண்டு வாழ்கிறோம்.* ஆனால் அதினால் நாம் நீதிமான் என்று உறுதிப்பட கூற இயலாது.
👍அப்.பவுலடியார் கூட,....
*"என்னிடத்தில் நான் யாதோறு குற்றத்தையும் அறியேன், ஆகிலும் அதினாலே நான் நீதிமானாகிறதில்லை, என்னை நியாயம் விசாரிக்கிறவர் கர்த்தரே !*
என்று கூறியது போலவே
*(1கொரி - 4:4)*
இங்கு எலிகூ யோபுவை நோக்கி, "நான் மீறுதல் இல்லாத சுத்தன், நான் குற்றமற்றவன், என்னில் அக்கிரமம் இல்லை என்று நீர் எப்படி சொல்லலாம்❓ இதிலே நீர் நீதியுள்ளவர் அல்லவென்று உமக்கு சொல்லுகிறேன் என தைரியமாக, முகத்துக்கு முகம் பார்த்து, இடியாய் முழங்கினார்.
*(33 : 9 -12)*
இவை எல்லாம் தேவ ஆவியானவரின் உணர்வூட்டலால் எலிகூ பேசியதாக நாம் ஒத்து கொண்டுதான் ஆக வேண்டும்.
*நாம் கேட்கிறதற்கு ஆயத்தயமாயிருந்தோமானால், அதாவது பாடுகளின் போது இறை சத்தத்தை கேட்க தீவிரப்படுவோமானால், அங்கு தான் நமக்கு பதில் கிடைக்குமே தவிர, பிறரது ஆற்றுப்படுத்தல் வார்த்தைகள் எல்லாம் சொற்ப காலத்திற்கு மாத்திரம் எம்மில் தங்கி பின்பு அழிந்து போய்விடும் என்பதே எலிகூ இறைவனை குறித்து சொல்ல வந்த காரியம்.*
தேவனை நோக்கி அவரவர் விண்ணப்பம் செய்தால் மட்டுமே, அவர் அவன் மேல் பிரியமாகி, அவனுக்குரிய நீதியின் பலனை கொடுப்பார். மனுஷனுடையை ஆத்துமாவை படுக்குழிக்கு விலக்குவதற்கும், அவனை ஜீவனுள்ளோரின் வெளிச்சத்தினாலே பிரகாசிப்பிக்கிறதற்கும் தான் அவனுக்கு துன்பங்களையும், பாடுகளையும் அவன் வாழ்விலே அனுமதிக்கிறார். ஆகையால் சுய நீதியை சார்ந்து நிற்போர் தான் இறைவனை கேள்வி கேட்போராகவும், அவர் இவர்களது கேள்விகளுக்கெல்லாம் விளக்கம் கொடுக்க கடன் பட்டிருப்பது போன்ற எண்ண அலைகளினால் அலைக்கழிக்கப்பட்டு, இப்படி இறைவனை கேள்வி கேட்பதும், பிறரை துன்மார்க்கன் என பழிச்சாட்டவும்... *தான் ஒருவனே யோக்கியஸ்தர், நீதிமான் என கருவங்க் கொண்டு திரிபவராகவும் இருப்பார்.* ஆகையால் *"மவுனமாயிரும்,"* நான் உமக்கு ஞானத்தை உபதேசிப்பேன் என்கிறார்,
*"எலிகூ என்னும் இளம் உபதேசியார்".* (33:31-33)
🌻🌻🫛🌻🌻
*தான் ஒருபோதும் இச்சகம் பேச அறியாத படியால், நேரடியாக சொல்லவேண்டியதை நேரடியாகவே அந்த இடிமுழக்க பிரசங்கியார் யோவான் ஸ்நானகனை போல இந்த எலிகூ என்னும் வாலிபன் தேவ ஆவியால் நிறைந்து இருந்த படியால், இறை செய்தியை, தான் அறிந்திருந்த பிரகாரமே கலப்படம் ஏதுமின்றி, யோபு போன்ற இறை பக்தருக்கும் கூட கூறும் அளவுக்கு தேவ ஞானத்தால் தனக்கு கொடுக்கப்பட்டிருந்த செய்தியை, இவர் பெரியவர், இவர் சின்னவர் என முகம் பார்த்து பாராபட்சம் பாராமல், தான் கண்டறிந்த உண்மையை, குறித்த அபிப்பிராயத்தை,சொல்லவேண்டியதை, ஒரு தீர்க்கதரிசியை போல சொல்லி நின்றார்.*
*🌵எல்லா வாலிபரும் இவ்விதம் இறை செய்தியினை இறைவனை தாங்கள் கண்டறிந்துக் கொண்டதை பிறருக்கு எடுத்துரைக்கும் அளவுக்கு தெய்வ தொடர்புடையோராக அவர்களை உருவாக்கும் பணி அதி தீவிரமாக செயல்படுத்த பட்டதேயானால், கிறிஸ்துவினால் மட்டுமே உண்டாகும் தேவநீதியை விசுவாசியாமல், தங்களை தாங்களே நீதிமான்கள் என மார்தட்டும் மக்களில் ஒரு சிலரையாகிலும் தேவன் பக்கமாய் திருப்பிவிடும் பெரும் பணியாற்றி நிற்பார்களல்லவா❓ தங்கள் வாழ்வில் இறைவனை தனிப்பட்ட விதமாக அறிந்து, புரிந்து இருந்த எலிகூ போன்ற எண்ணற்ற வாலிபர் இனியாகிலும் உருவாக ஆசித்து ஜெபிப்போம்.* அவர்கள் இச்சகம் பேசாதோராக (பாரபட்ச பேச்சு பேசாதோராக) எழும்பி நிற்க வேண்டும்.
முதியோற்கும் இளையவர்களால் போதனை கிடைக்கும் பட்சத்தில்....அங்கு தான் மெய் ஞானம் தன் பங்கை ஆற்றி நிற்கிறது என்பது உறுதிபடுவதாக இருக்கிறது.
இச்சக பேச்சை தவிர்த்து,...
*நேர்பட பேச கற்று கொள்வோமா❓*
*Sis. Martha Lazar*
NJC, KodaiRoad
Thanks for using my website. Post your comments on this