யோபு 41 - சங்கீதம் 3*
*கர்த்தருடைய வேதத்தில்*
*பிரியமாயிருப்போம்*..
இந்த உலகம்.. உயர்ந்த பதவியில் இருக்கிறவனை.. பெரும் ஆஸ்திக்குச் சொந்தக்காரனை..
சிறந்த கல்வி கற்றவனை.. பாக்கியவான் அல்லது பேறுபெற்றவன் என்று சொல்கிறது..
ஆனால் கர்த்தருடைய வேதத்தை நேசித்து, இரவும் பகலும் அதை தியானிக்கும் எந்த ஒரு மனிதனும் பாக்கியவானாகலாம் என்று..
1 ஆம் சங்கீதம் சொல்லுகிறது..
இயேசு கிறிஸ்துவும்.. தமது மலைப் பிரசங்கத்தில், யார் பாக்கியவான் என்று கூறியிருக்கிறார்..
கர்த்தருடைய வார்த்தைகள் ஜீவன் உள்ளது.. கர்த்தர் தம்முடைய வல்லமையுள்ள வார்த்தையாலேயே சர்வத்தையும் சிருஷ்டித்தார்..
கர்த்தருடைய
வார்த்தைகளை நேசிக்கிறவர்களை..
கர்த்தரும் நேசிக்கிறார்..
அதனால்தான் டிஎல் மூடி என்ற தேவ மனிதன்.. நீங்கள் வாலிப வயதில் வேதத்தைத் தூக்கிச் சுமந்தால்.. வயதான நாட்களிலே, வேதம் உங்களைத் தூக்கிச் சுமக்கும் என்றார்..
கர்த்தருடைய வேதத்தை நேசித்து..அதைத் தியானிக்கிறவர்கள்..
கர்த்தருடைய வார்த்தைகளை மையமாகக் கொண்டு.. தங்கள் வாழ்வை அமைத்துக் கொள்ளுவார்கள்..
சாத்தானின் துன்மார்க்கமான ஆலோசனையைக் கேட்ட ஏவாளைப் போலல்லாமல்..
தேவனுடைய வார்த்தைகளையே தங்கள் ஆலோசகராகக் கொண்டு நடப்பார்கள்..( சங் .119 :24 )
தேவன் காட்டும் வழியிலே..
அது அநேகர் விரும்பாத..
பயணிக்காத வழியாக இருந்தாலும்.. அது இடுக்கமான வழியாக இருந்தாலும்.. அதிலே நடப்பார்கள்..
(மத்தேயு 7 : 13 )
பெத்தானியாவின் மரியாளைப் போல.. ஆண்டவரின் பாதத்தில்
உட்கார்ந்து..
அவரிடமிருந்து கற்றுக்
கொள்ளுவார்கள்..
(லூக்.10 : 38-42)
அவர்கள் ஒரு காட்டு மரமல்ல..கர்த்தரால் நாட்டப்பட்டவர்கள்..
ஆவியானவரிடமிருந்து மெய்யான ஜீவ ஊற்றைப் பெற்றவர்கள்..
தவறாமல் கனி கொடுப்பவர்கள்..
எப்பொழுதும் சாட்சியான வாழ்வு வாழ்பவர்கள்..
(இலையுதிர்வதில்லை )
கர்த்தர் அவர்களை அறிந்திருக்கிறார்..
அவர்களும் கர்த்தரை அறிந்திருக்கிறார்கள்..
அவர்கள் செய்வதெல்லாம் வாய்க்கும்..
*இந்தச் சங்கீதத்தை*.. *இஸ்ரவேலர்.. கூடாரப்பண்டிகை* *நாட்களில்*.. *அதிகமாக* *வாசிப்பார்களாம்*. *அநித்தியமான உலகில் வாழும்* *நாமும்*.. *நித்திய நித்தியமாக* *பரலோகத்திலே தேவனோடு* *வாழ*.. *அனுதினமும்* *ஆண்டவருடைய* *வார்த்தைகளை*..
*நமது ஆகாரத்தைக்காட்டிலும்* *அதிகமாகக்* *காத்துக்கொள்வோம்*.
*வேதம் நம் வாழ்வாக மாற*..
*கருத்தோடு வேதத்தைத்*
*தியானம் செய்வோம்*..
*வேதம் உங்களைப்* *பாவத்திற்குத்*
*தூரப்படுத்தும்*..
*பாவம் உங்களை வேதத்திற்குத்*
*தூரப்படுத்தும்*..
D.L. Moody
மாலா டேவிட்
*யோபு 41, 42*& *சங்கீதம் 1 - 3*
சங்கீதம் : 1-3
💐💐💐💐💐💐
*தாவீது தன் குமாரன் அப்சலோமுக்குத் தப்பி ஓடிப் போகையில் பாடின சங்கீதம்*.
சங்கீதம் : 3
*கர்த்தாவே என் சத்துருக்கள் எவ்வளவாய்ப் பெருகியிருக்கிறார்கள்; எனக்கு விரோதமாக எழும்புகிறவர்கள் அநேகர்*.
*ஆனாலும் கர்த்தாவே நீர் என் கேடகமும் என் மகிமையும் என் தலையை உயர்த்துகிறவருமா யிருக்கிறீர்*.
(சங்கீதம் 3: 1,3)
★ தன் மகனும் தன் மக்களில் அநேகரும் தனக்கு எதிராக சதி செய்ததால் உயிர் தப்ப ஓடும் போது தாவீது கர்த்தரை முழுவதுமாக நம்பினார்.
★ சொந்த மகனே தகப்பனுக்கு எதிராக கிளர்ச்சி செய்வது, இதனால் மகனுக்கு பயந்து தந்தை உயிர் தப்பிக்க ஓடுவது எத்தனை வேதனையான காரியம்....
★ இத்தகைய வேதனையான தருணத்தில் தாவீது குறைகூறாமல், *கர்த்தரை தனது கேடகமாக முற்றிலும் நம்பி* அவரைச் சார்ந்து கொண்டார்.
★ வாழ்க்கைப் பாதையில் யாவும் நமக்கு எதிராக இருந்தாலும், நாம் நேசித்த உறவுகளே நம்மை வேதனைப்படுத்தினாலும் கவலைப்பட்டு சோர்ந்து போகாமல், கர்த்தரை முற்றிலும் நம்பி வாழ்ந்த தாவீதின் மாதிரியைப் பின்பற்றி கர்த்தருக்குள் நிலைத்திருப்போமாக.
*ஆனாலும் கர்த்தாவே, நீர் என் கேடகமும், என் மகிமையும், என் தலையை உயர்த்துகிறவருமா யிருக்கிறீர்*.
(சங்கீதம்: 3:3)
*ஆமென்*
💐💐💐💐💐💐
✍️ Bhavani Jeeja Devaraj, Chennai, Tamilnadu.
ஆசீர்வதிக்கப்பட்ட மக்களுக்கு ஆசீர்வாதமாக இருப்பதற்காக ஆசீர்வதிக்கப்பட்டேன் 👨👩👦👦
🙋♂️🙋♀️ படித்து தியானம் செய்யலாம்
*யோபு 41:11*
*NOTHING BELONGS TO US*
*எதுவும் நமக்கு சொந்தமானதல்ல*
📝 இன்றைய பத்தியில், கர்த்தர் *லிவியாதானின் தன்மையை* விவரிக்கிறார்:
📍 லிவியாதான், நீர் அரக்கன், ஒரு சிறந்த கடல் உயிரினம்.
📍 அதன் தோலையோ தலையையோ யாரும் துளைக்க முடியாது ( *வ 7-9* )
📍 அது யாருக்கும் பயப்படுவதில்லை, அதை எழுப்பத்தக்க தைரியம் யாருக்கும் இல்லை. ( *வ 10* )
📍 அதின் பற்கள் பயங்கரமானவைகள். ( *வ 12-14* )
📍 இது பூமியில் உள்ள வலிமையான உயிரினம் ( *வ 33*)
📝 இவ்வாறு, கர்த்தர் யோபுவிடம் லிவியாதான் பற்றி பல சொல்லாட்சிக் கேள்விகளைக் கேட்கிறார்:
📍 தூண்டிலினால் மீனைப் போல் பிடிக்கக்கூடுமோ? ( *வ 1-2*)
📍 கனிவான வார்த்தைகளால் இரக்கத்திற்காக கெஞ்சி, வாழ்நாள் முழுவதும் யோபுவின் அடிமையாக இருக்க ஒப்புக்கொள்ளுமா? ( *வ 3-4*)
📍 அவர் தனது மகள்களுக்கு அதை செல்லப் பிராணியாக உருவாக்குவாரா ( *வ 5* )
📍 அவர் அதை வணிக நோக்கங்களுக்காக பயன்படுத்தலாமா? ( *வ 6*)
🙋♂️🙋♀️ மேலே உள்ள விளக்கங்களின் நோக்கம், யோபுக்கு அதைக் கற்பிப்பதாகும்.
📍 *இந்த பூமிக்குரிய உயிரினத்தை யாராலும் எதிர்கொள்ள முடியாவிட்டால், கர்த்தருக்கு எதிராக யார் நிற்க முடியும்* ?
📍 *யோபு ஒரு லிவியாதானைக் கைப்பற்றி கட்டுப்படுத்த முடியாவிட்டால், வானத்தின் கீழுள்ள அனைத்தையும் கட்டுப்படுத்தும் தேவனுக்கு எதிராக அவர் எவ்வாறு உரிமை கோர முடியும்* ? ( *வ 11*)
🙋♂️🙋♀️ கர்த்தர் நமக்குக் கடன்பட்டிருக்கவில்லை என்பதை நாம் ஒப்புக்கொள்ள வேண்டும். அவர் கொடுத்தாலும் அல்லது எடுத்தாலும் ( *யோபு 1:21*) அல்லது நம் உடலையோ மனதையோ வலியால் சிதைக்க அனுமதித்தாலும், நாம் ஒரு நொறுங்கிய இருதயத்துடன் அவருடைய முன்னிலையில் வர வேண்டும்.
📍 எதுவும் நமக்குச் சொந்தமானது இல்லை. நமது தனிப்பட்ட உணர்வுகள் மற்றும் எண்ணங்கள் கூட நமக்கு சொந்தமானதல்ல.
🎼🎶 .....
*இயேசுவுக்காய் யாவற்றையும் ஒப்புவிக்கிறேன்* இப்போ,
நேசித்தவர் சமூகத்தில்
ஜீவிப்பேன் நம்பி என்றும்
..... 🎶 🎼
தேவனுக்கே மகிமை 🙌
✍️ *மார்க் போஜே*
அருணாச்சல பிரதேசம், இந்தியா 🇮🇳
தமிழாக்கம் ஜஸ்டஸ் ராஜேந்திரன்
இப்பொழுதோ என் கண் உம்மை காண்கிறது.*
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
யோபு 42: 5.
1. *என் காதினால் உம்மை குறித்து கேள்விப்பட்டேன். இப்பொழுதோ என் கண் உம்மை காண்கிறது*.
*ஆகையால் நான் என்னை அருவருத்து, தூளிலும், சாம்பலிலும் இருந்து மனஸ்தாப படுகிறேன்* என யோபு கர்த்தரை நோக்கி கூறுகிறார்.
அது மட்டுமல்ல, *அவரை குறித்து நாங்கள் கேட்டது எவ்வளவு கொஞ்சம்* என்கிறார்.. யோபு 26: 14
ஆம், கர்த்தரை குறித்து நாம் எவ்வளவோ கேட்கிறோம். ஆனாலும் நம்முடைய வாழ்க்கையில் மாற்றமில்லாமல் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். ஆகவே தான் *நம் கண்கள் அவரை காண வேண்டும். இன்று நம் சரீர கண்கள் திறந்திருக்கலாம். ஆனால் நம் மன கண்கள், ஆவிக்குரிய கண்கள் திறக்கப்பட வேண்டும்*
2. *நம் மன கண்கள் திறக்கப்படும் போது தான் நம்மை தாழ்த்த முடியும். ஒரு மனஸ்தாபம் நம்மில் உண்டாகும். ஆகவே, கர்த்தாவே என் மன கண்களை திறந்தருளும்* என ஜெபிப்போம்.
3. தன் பிள்ளை சாகிறதை நான் பார்க்க மாட்டேன் என அழுது கொண்டிருந்த *ஆகாரின் கண்களை கர்த்தர் திறந்தார். அப்பொழுது அவள் ஒரு துரவை கண்டாள்.* ஆதியாகமம் 21: 19.
*பிலேயாமின் கண்களை கர்த்தர் திறந்த போது, அவன் உருவின பட்டயத்தோடு நிற்கும் தேவ தூதனை கண்டான்* எண்ணாகமம் 22: 31.
4. *சத்துரு கண்களை குருடாக்கி விடுகிறான். சிம்சோனின் கண்களை பிடுங்கி விடுகிறான். ஆனால் மனதுருக்கமுள்ள இயேசுவோ பிறவி குருடனின் கண்களை கூட திறக்கிறார்.* ஆம், இன்று கர்த்தாவே என் மன கண்களை திறந்தருளும். அப்பொழுது நான் உம்மை, உம் அன்பை, அறிந்து கொள்வேன். உம் வேத வசனங்களின் ஆழங்களை, அதிசயங்களைஅறிந்து கொள்வேன். ஜீவ தண்ணீரூற்றை என் கண்கள் காணும் என ஜெபிப்போம்.
மட்டுமல்ல, *கர்த்தர் நம் கண்களை திறக்கும் போது, அவை நம் ராஜாவாகிய கிறிஸ்துவை மகிமை பொருந்தினவராய் காணும்.தூரத்திலுள்ள தேசத்தை, பரலோக இராஜ்யத்தை காணும்.* ஏசாயா 33: 17.
ஆம், *கர்த்தாவே என் கண்களை திறந்தருளும் என ஜெபிப்போம். அப்போது நாம் யார் என நம்மை குறித்தும் வெளிப்படுத்துவார். நம்மை மனந்திரும்பவும் செய்வார். உன்னதத்தின் ஆசீர்வாதங்களையும், வேத வசனங்களின் மறைவான மன்னாவையும், நீரூற்றுகளையும் காண உதவி செய்வார். யோபுவை போல, நாம் கர்த்தரை குறித்து, கேட்பது போதாது, என் கண்கள் திறக்கப்பட வேண்டும்.* என ஜெபிப்போம். ஆமென். அல்லேலூயா.
*Dr.Padmini Seĺvyn*
💠 *இரண்டத்தனையாய்க் கர்த்தர் அவனுக்குத் தந்தருளினார்* 💠
☄️ *யோபு தன் சிநேகிதருக்காக வேண்டுதல் செய்தபோது, கர்த்தர் அவன் சிறையிருப்பை மாற்றினார். யோபுக்கு முன் இருந்த எல்லாவற்றைப் பார்க்கிலும் இரண்டத்தனையாய்க் கர்த்தர் அவனுக்குத் தந்தருளினார்* (யோபு 42:10).
💥 தேவன் யோபிடம் பேசிய பிறகு, தேவனைப் பற்றிய ஒரு அற்புதமான வெளிப்பாடு யோபுக்குக் கிடைத்தது. தேவனை நன்றாகப் புரிந்துகொண்ட யோபு, *தேவன் சகலத்தையும் செய்ய வல்லவர்; அவர் செய்ய நினைத்தது தடைபடாது* என்பதைத் தான் அறிந்திருப்பதாகக் கூறினான். தேவனைக் குறித்துக் கேள்விப்பட்டிருந்த யோபால் இப்போது *தன் சொந்தக் கண்களாலேயே அவரைப் பார்க்க முடிந்தது.* என்ன ஒரு பாக்கியம்! அவனுடைய எல்லாத் துன்பங்களையும், இந்த அற்புதமான காரியத்துடன் ஒப்பிடவே முடியாது. *அவனுடைய நீடிய பொறுமைக்கு மெய்யாகவே நல்லதொரு பலன் கிடைத்தது.* யோபு, கடைசி நாளில் தனது மீட்பரைத் தன் கண்களால் காண்பேன் என்று உறுதியாக நம்பி அறிவித்திருந்தான் (யோபு 19:25-27). ஆனால், அவனால் தான் மரிப்பதற்கு முன்பே தேவனைக் காண முடிந்தது. அவரைக் கண்ட யோபு தன்னை அருவருத்து, தூளிலும் சாம்பலிலும் இருந்து மனஸ்தாபப்படுவதாக தேவனிடம் சரணடைந்தான். தாழ்மையானவர்களை தேவன் எப்போதுமே அங்கீகரிக்கிறார்.
💥 யோபின் நண்பர்கள் தங்களை ஞானிகளென்றெண்ணி பல பொதுவானக் கருத்துக்களை பெரிதளவில் பேசினார்கள். அவர்களுடைய ஞானக் கோட்பாடுகள் யோபின் நிலைமைக்கு ஏற்றதாக இருக்கவில்லை. அவர்கள் தேவனை தவறாகக் காட்டி, அவரை *கடுங்கோபமுள்ளவராகவும், யோபுக்கு எதிராக நியாயந்தீர்ப்பவராகவும் சித்தரித்தார்கள்.* தேவன் இதனால் கோபமடைந்தார். எலிப்பாசுக்கும் அவனுடைய இரண்டு நண்பர்களுக்கும் ஏழு காளைகளையும் ஏழு ஆட்டுக்கடாக்களையும் எடுத்துக்கொண்டு, யோபினிடத்தில் போய், தங்களுக்காக தகனபலி செலுத்தும்படி கட்டளையிட்டார். *அவர்களுக்காக யோபு ஜெபம் செய்வான்* என்றும் தேவன் சொன்னார்.
💥 கர்த்தர் கட்டளையிட்டபடியே யோபின் நண்பர்கள் செய்தார்கள், கர்த்தர் யோபின் ஜெபத்தைக் கேட்டார். வேதம் போதிக்கிறது: *"நீதிமான் செய்யும் ஊக்கமான வேண்டுதல் மிகவும் பெலனுள்ளதாயிருக்கிறது."* (யாக்கோபு 5:16).
💥 *நம்முடைய கடுமையான விவாதங்களைத் தேவன் விரும்புவதில்லை. அதற்குப் பதிலாக, நம்முடைய உருக்கமான ஜெபங்களால் தேவன் மகிழ்ச்சியடைகிறார்.* இயேசு கற்பித்தார்: *"உங்களை நிந்திக்கிறவர்களுக்காகவும் உங்களைத் துன்பப்படுத்துகிறவர்களுக்காகவும் ஜெபம்பண்ணுங்கள்."* (மத்தேயு 5:44). யோபு தன்னைக் காயப்படுத்திய தன் நண்பர்களுக்காக ஜெபித்தபோது, தேவன் அதிகமாக மகிழ்ந்தார். எனவே, கர்த்தர் அவன் சிறையிருப்பை மாற்றினார். *கர்த்தர் யோபுக்கு முன்பிருந்ததைக் காட்டிலும் இரண்டு மடங்காக எல்லாவற்றையும் கொடுத்தார்.* அவர் நீதியுள்ள தேவன்.
💥 தேவன் ஏசாயா மூலம் பேசினார்: *"உங்கள் வெட்கத்துக்குப் பதிலாக இரண்டத்தனையாய்ப் பலன் வரும்."* (ஏசாயா 61:7). மேசியாவின் ஊழியத்தைப் பற்றி ஏசாயா மூலம் தேவன் வெளிப்படுத்தினார். மேசியாவின் ஊழியம் மற்றும் ஆவியின் அபிஷேகத்தின் கீழ், இனி அவமானம் இருக்காது, அவருடைய பிள்ளைகள் இரண்டத்தனையாய்ப் பலன்களை அனுபவிப்பார்கள். *கிறிஸ்து மீது நாம் வைத்திருக்கும் விசுவாசம் பாவத்தினால் ஏற்படும் அவமானத்திலிருந்து நம்மை விடுவித்து, இரண்டத்தனையாய்ப் பலன்களைத் தரும்.*
💥 தேவன் சகரியா மூலம் பேசினார்: *“நம்பிக்கையுடைய சிறைகளே, அரணுக்குத் திரும்புங்கள்; இரட்டிப்பான நன்மையைத் தருவேன், இன்றைக்கே தருவேன்.”* (சகரியா 9:12). இஸ்ரவேலர் தேவனுக்குக் கீழ்ப்படியாதபோது, அவர்கள் அவரால் கைவிடப்பட்டனர். இருப்பினும், இஸ்ரவேலர் தேவனிடம் திரும்பியபோது, அவர் அவர்களிடம் திரும்பி அவர்களை இரட்சித்தார். அவர்களுக்கு இரட்டிப்பான நன்மையைத் தருவதாக தேவன் வாக்குறுதி அளித்தார். இதுவே அவருடைய உன்னத அன்பின் தன்மை. *பாவத்தால் சிறைபிடிக்கப்பட்ட எவனும் மனந்திரும்பி கர்த்தரிடம் திரும்பினால் இரட்டிப்பான நன்மைகளைப் பெறுவான்.*
🔹 *நாம் உண்மையிலேயே மனந்திரும்பி, பாவத்தின் சிறையிலிருந்து விடுபட்டு, கர்த்தரிடம் உண்மையாகத் திரும்பியிருக்கிறோமா?*
🔹 *இரட்டிப்பான ஆசீர்வாதங்களைப் பெற பொறுமையுடன் கர்த்தருக்குக் காத்திருக்கிறோமா?*
✅ நாம் கற்றுக் கொள்ளும் *பாடங்கள்*:
1️⃣ *நீதிமான் செய்யும் ஊக்கமான வேண்டுதல் மிகவும் பெலனுள்ளதாயிருக்கிறது.*
2️⃣ *நம்முடைய கடுமையான விவாதங்களைத் தேவன் விரும்புவதில்லை; ஆனால், நம்முடைய உருக்கமான ஜெபங்களால் தேவன் மகிழ்ச்சியடைகிறார்.*
3️⃣ *கிறிஸ்து மீது நாம் வைத்திருக்கும் விசுவாசம் பாவத்தினால் ஏற்படும் அவமானத்திலிருந்து நம்மை விடுவித்து, இரண்டத்தனையாய்ப் பலன்களைத் தரும்.*
4️⃣ *பாவத்தால் சிறைபிடிக்கப்பட்ட எவனும் மனந்திரும்பி கர்த்தரிடம் திரும்பினால் இரட்டிப்பான நன்மைகளைப் பெறுவான்.*
Dr. எஸ் செல்வன்
சென்னை
📗 *சிறிய குறிப்பு* 📗
🍂 * அவனைக் காணவில்லை* 🍂
எல்லாம் நன்மையாகவே மற்றும் நன்றாகவே முடிகிறது யோபுவின் கதை. ஆனால் கடைசி அத்தியாயத்தில் *அனைத்து துன்பங்களுக்கும் காரணமானவனை பார்க்க முடியவில்லை.* யோபுவின் எந்த விஷயத்திலும் அவன் மீண்டும் தேவனுக்கு முன் வரத் துணியவில்லை.
ஒருவேளை அவன் யோபு தேவனை விட்டு பின்வாங்குவதைப் பற்றி உறுதியாக இருந்திருக்கலாம். ஆனால் அவனது எதிர்பார்ப்பு வீண். *பரிசுத்த வேதாகமம் தெளிவாகக் குறிப்பிடுகிறது, இங்கு அவன் நேரம் குறைவாக இருப்பதை அவன் அறிவான்.* ஆகவே, ஜனங்களை தேவனை விட்டு விலக்கி வைக்க அவன் தனது அதிகபட்ச முயற்சியை மேற்கொள்கிறான்.
நமக்கு சர்வாயுதவர்க்கம் கொடுக்கப்பட்டுள்ளது. எனவே *சர்வாயுதவர்க்கத்தை அணிந்துகொண்டு, தேவனுடைய வசனத்தில் உறுதியாக நின்று, நாம் தேவனுக்குக் கீழ்ப்படிந்து அவனை எதிர்த்து நிற்க வேண்டும்.* அப்பொழுது அவன் நம்மைவிட்டு ஓடிப்போவான். *ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் வெற்றி நிச்சயம்.*
_திருமதி ஷீலா ஜெபக்குமார்_ ✍🏻
ஆசீர்வதிக்கப்பட்ட மக்களுக்கு ஆசீர்வாதமாக இருப்பதற்காக ஆசீர்வதிக்கப்பட்டேன் 👨👩👦👦
🙋♂️🙋♀️ நாம் *சங்கீதம் 1* இல் இருக்கிறோம்
*WALK, STAND & SIT WITH PSALMIST*
*சங்கீதக்காரனுடன் நடக்கவும், நிற்கவும் மற்றும் உட்காரவும்*
📝 சங்கீத புத்தகம் ஐந்து புத்தகங்களாக பிரிக்கப்பட்டுள்ளது
I : *சங்கீதம் 1-41*
II : *சங்கீதம் 42-72*
III : *சங்கீதம் 73-89*
IV : *சங்கீதம் 90-106*
V : *சங்கீதம் 107-150*
📝 ஒவ்வொரு புத்தகமும் பொருத்தமான *நிறைவு பாடலுடன்* முடிவடைகிறது. (சங் 41:13; 72:18-19; 89:52; 106:48; 150:1-6)
📝 சங்கீத புத்தகம் பல வருடங்களாக பல்வேறு ஆசிரியர்களால் எழுதப்பட்டது.
📝 *துதி மற்றும் கவிதை* புத்தகமாக, நம் திருப்தியின் இறுதி ஆதாரமாக கர்த்தரை மட்டுமே தேட வேண்டும் என்று சங்கீதக்காரன் நமக்குக் கற்பிக்கிறார் ( *42* ).
நம்மிடம் உள்ளதைக் கொண்டு தேவனை துதிக்க அழைக்கப்பட்டுள்ளோம் ( *150* )
📝 நாம் சங்கீதங்களின் முதல் புத்தகத்தை ( *1-41*) படிக்கிறோம். நாம் அனைவரும் பொல்லாத மக்களால் சூழப்பட்ட, வீழ்ந்த உலகில் இருக்கிறோம். நாம் நமது எஜமானரைப் பிரியப்படுத்த விரும்பினால், நாம் மூன்று பகுதிகளில் நன்கு ஆயத்தப்பட்டிருக்க வேண்டும்:
1️⃣ *துன்மார்க்கரின் ஆலோசனையில் நடக்காமல் இருப்போம்*
2️⃣ *பாவிகளின் வழியில் நிற்காமல் இருப்போம்*
3️⃣ *பரியாசக்காரன் உட்காரும் இடத்தில் உட்காராமல் இருப்போம்*
🙋♂️🙋♀️ அன்பிற்குரிய திருச்சபையே, நமது ஆவிக்குரிய யாத்திரையில் நடப்பது, நிற்பது, உட்காருவது, பேசுவது மற்றும் நடத்துவது போன்றவற்றைச் சிந்திப்போம்.
📍 மக்கள் நம்மைப் பார்க்கும்போது, அவர்கள் *இயேசுவை பிரதிபலிக்கும் - அவருடைய விழுமியங்கள் மற்றும் போதனைகளை கைக்கொள்ளும்* - ஒருவரைப் பார்ப்பார்களா அல்லது *பொல்லாதவர்களின் ஆலோசனையில் நடக்கும் நடந்துக்கொள்ளும்* ஒருவரைப் பார்ப்பார்களா?
தேவனுக்கே மகிமை 🙌
✍🏻 *மார்க் போஜே*
அருணாச்சல பிரதேசம், இந்தியா 🇮🇳
தமிழாக்கம் ஜஸ்டஸ் ராஜேந்திரன்
A HAPPY ENDING🎉👍*
*👍🎉ஒரு மகிழ்ச்சியான முடிவு🎉👍*
[நாள் - 161] யோபு - 41-42
☄️தேவனை விசுவாசிக்கும்போது, துன்பங்கள் வந்தாலும், எல்லாமே நலமாக இருக்க முடியும்.
1️⃣ *தேவனின் சக்திவாய்ந்த பிரசன்னம் மற்றும் மறுசீரமைப்பு* (யோபு 40-41)
🔹தேவனுடைய கம்பீரமான பிரசன்னத்தை எதிர்கொண்ட யோபு, தன்னைத் தாழ்த்தி, தனது புரிதலின் வரம்புகளை ஒப்புக்கொள்கிறார்.
🔹தேவன், பிகெமோத் மற்றும் லிவியாதான் ஆகியவைகளின் எடுத்துக்காட்டுகள் மூலம், அவருடைய வல்லமையையும் ஞானத்தையும் உறுதிப்படுத்துகிறார்.
🔹இந்த உவமைகள் மூலம், தேவன் தனது தெய்வீக இறையாண்மையை மேலும் வலியுறுத்தும் வகையில், அனைத்து படைப்புகளின் மீதும் தனது ஆளுமையை உறுதிப்படுத்துகிறார்.
🔹யோபு, தேவனுடைய அதிகாரத்திற்குச் சரணடைந்ததால், தேவன் அவரை ஏராளமாக ஆசீர்வதிக்கிறார்; யோபு மறுசீரமைப்பை அனுபவிக்கிறார்.
2️⃣ *யோபுவின் மாற்றமும் தெய்வீக வெளிப்பாடும்* (யோபு 42)
🔸யோபுவின் குணாதிசயத்தில் ஒரு ஆழமான மாற்றத்தை அவர் பணிவாக அறிக்கையிட்டு மனந்திரும்புவதில் காண்கிறோம்.
🔸யோபு தனது குறைந்த அறிவையும் புரிதலையும் ஒப்புக்கொள்கிறார், கடவுளின் வழிகளைக் கேள்வி கேட்பதன் பயனற்ற தன்மையை அங்கீகரிக்கிறார்.
🔸அவரது மனந்திரும்புதல், கண்ணோட்டத்தில் ஆழமான மாற்றத்தை பிரதிபலிக்கிறது, ஏனெனில் அவர் தேவனுடைய மேலாதிக்கத்தையும் ஞானத்தையும் ஒப்புக்கொள்கிறார்.
🔸பதிலுக்கு, யோபுவின் நண்பர்களின் தவறான மதிப்பீடுகளுக்காக தேவன் அவர்களைக் கண்டிக்கிறார் மற்றும் யோபுவின் உண்மைத்தன்மையையும் நேர்மையையும் பாராட்டுகிறார்.
🔸யோபு, தேவனுடன் சமரசம் செய்யும் நிலையை அடைந்து, தனது நண்பர்களுக்காக பரிந்து பேசுகிறார், இது தேவனுடைய மறுசீரமைப்பு மற்றும் யோபுவின் ஆசீர்வாதங்களை பெருக்க வழிவகுத்தது.
♥️ *வாழ்க்கை பாடங்கள்*
💥யோபுவின் கதை துன்பம், விசுவாசம் மற்றும் தேவனுடைய இறையாண்மை பற்றிய ஆழமான பாடமாக விளங்குகிறது.
💥சோதனைகளின் மத்தியிலும், தேவனுடைய ஞானத்திற்குச் சரணடைவதன் மூலமும், அவருடைய இறுதித் திட்டத்தில் நம்பிக்கை வைப்பதன் மூலமும் நாம் ஆறுதலையும் வலிமையையும் காணலாம் என்பதை இது நமக்குக் கற்பிக்கிறது.
💥விரக்தியிலிருந்து மறுசீரமைப்பை நோக்கிய யோபின் பயணம் நம்பிக்கையையும் ஊக்கத்தையும் அளிக்கிறது, சர்வவல்லமையுள்ளவர் மீது நாம் நம்பிக்கை வைக்கும்போது எல்லாம் நலமாக இருக்கமுடியும் என்பதை நினைவூட்டுகிறது.
*‼️தேவனிடத்தில் அன்புகூருகிறவர்களுக்கு சகலமும் நன்மைக்கு ஏதுவாக நடக்கிறது‼️*
பிரின்சஸ் ஹட்சன்
தமிழாக்கம் இன்னிசை செல்வி மும்பை
[22/09, 17:44] +91 99431 72360: 22.09.2023
*🎊சிப்பிக்குள் முத்து🎊*
இன்றைய வேத
வாசிப்பு பகுதி - *யோபு : 41, 42*
&
*சங் : 1, 2*
*💐முத்துச்சிதறல் : 161*
🍄🍄🍄
*.... கர்த்தர் அவன் ( யோபுவின் ) சிறையிருப்பை மாற்றினார்.*
[42:10]
🍄🍄🍄
*🍇யோபு என்ற இறை பற்றுதியாளனின்* பிள்ளைகள், ஆஸ்தி, மற்றும் ஆரோக்கியத்தினை பறித்துக் கொள்ளும்படி ஆண்டவர் சாத்தானுக்கு அனுமதி வழங்கியபின், *யோபுவின் நண்பர்கள் அவரை சந்தித்தனர்.*
*பல இறையியல் சொற்பொழிவுகளெல்லாம் அரங்கேரியன.*
ஏதோ பாவம் செய்ததின் விளைவு தான் யோபுவுக்கு இப்படியொரு நிலைமை என அவர்கள் கருதினர். யோபுவும் ஆண்டவரை குறைப்பட்டுக் கொண்டு, கர்த்தரை பல கேள்விகள் கேட்டிடினும், ஒரு போதும் அவரை குறித்து நிதானமின்றி பேசவோ, இல்லை சிந்திக்கவோ, தனது நாவுக்கோ, இல்லை மூளைக்கோ கூட தீனி போடாமல் இருந்துக் கொண்டார்.
*யோபு நூலின் அந்திய அத்தியாயத்தில் இறைவன் நேரடியாக யோபுவின் 3 நண்பர்களான.....* 🫛தேமானியனான எலிப்பாஸ்,
🫛சூகியனான பில்தாத்,
🫛நாகமாத்தியான சோப்பார் ஆகியோர்....
*தம்மை பற்றி நிதானமாக பேசாத பாவத்துக்காக பலியிடும்படி கூறுகிறார்.* யோபுவும் தன் சிநேகிதருக்காக வேண்டுதல் செய்தப்போது, *"கர்த்தர் யோபுவின் சிறையிருப்பை மாற்றிவிட்டார்."* முன்பு இருந்த கால்நடைகள் யாவும் இரட்டிப்பாயின.
முன் இருந்தது போலவே 7குமாரர்,
3 குமாரத்திகள், அவருக்கு பிறந்தனர்.
நாலு தலைமுறைகளை கண்டு, நெடு நாளிருந்து,பூரண வயதுள்ளவராய், நிம்மதியாக, நிரந்திரமாக,
*"சாட்சி நிறைந்த வாழ்வின் எடுத்து காட்டாக"* இவ்வுலகில் தன் கண்களை மூடிக்கொண்டார் யோபு பக்தன்.
( 42 : 7 - 17)
*💥தனது படைப்பான மனிதன்.....*
📌தன்னை நம்புவதும்,
📌தனக்கு கீழ்படிவதும்,
📌தன் மீது இம்மைக்கான இன்பங்களுக்காக மாத்திரம் பற்றுறுதி கொள்ளாமல்....
📌மறுமை வாழ்வுக்கான நோக்கோடு அவரில் அன்பு கூறுவதும்,
📌எச்சூழலிலும் அவரை மறுதலியாமல் *(அவரை தூஷியாமல், அதாவது நம் வாழ்வு மூலம் அவருக்கு அவமதிப்பு, அவர் பெயருக்கு அவமரியாதை, அவகீர்த்தத்தி உண்டாக்காமல் )* நடந்துக் கொள்ள வேண்டும் என்பதே இறைவன் மனிதர்களிடம் எதிர்பார்க்கும் எதிர்பார்ப்பாகும்.
*இந்த விஷயத்தில் ஆதி மனிதர்களாகிய ஆதாம், ஏவாள் தோல்வியை தழுவினர்.* இரண்டாம் ஆதாமாகிய இயேசு கிறிஸ்து தனது தந்தையின் எதிர்பார்ப்பை நிறைவேற்றி நின்றார். *சோதனைகளும், பாடுகளும் ஏற்பட்டப்போதும் இயேசு எல்லாவற்றையும் மேற்கொண்டு ஜெயவீரனாக எம் முன் காட்சியளிக்கிறார்.* அப்படியே இந்த யோபுவும்,
*"என்னை குறித்து நிதானமாக பேசினான்"* என்பதாய் *இறைவனால் ஒரு நற்சான்றிதழை* முடிவில் பெற்றதாக யோபு நூலின் கடைசி அத்தியாயம் விவரிக்கிறது.
🍧🍧🥏🍧🍧
*கர்த்தர் யோபுவின் சிறையிருப்பை மாற்றினார்.*
(42:10)
*"சாத்தானுக்கு கொடுக்கப்பட்டிருந்த அனுமதி நாட்களை கர்த்தர் வாபஸ் வாங்கி கொண்டார்"* என்பதே இதன் அர்த்தம்.
ஏன் என்றால்.....
*🎈யோபு சோதனையை சகித்துக்கொண்டவர்.*
*🎈அதிகமான பொறுமை காத்த உத்தம புருஷன்.* *🎈இறைவன் தன்னை ஏன் இவ்வித நிலைக்குள்ளாக வைத்துள்ளார் என்பதின் பதிலை மாத்திரமே அறியும்படி அவர் கடுமையாக போராடினாலும், கடைசிவரை தான் ஏன் இவ்விதம் துன்புருத்தலுக்குள்ளாக்கப்பட்டோம் என்பதின் பதிலை..... யோபு எந்தவொரு ❣️வெளிப்பாட்டின் வாயிலாகவோ, ❣️ஞானோதயத்தின் வாயிலாகவோ, ❣️அறிவுப்பெருத்த அறிஞர்கள் எவர் வாயிலாகவோ அறியக்கூடாதபடி இறைவன் அதை மறைத்து வைத்துக் கொண்டார்.* யோபுவை குறித்து இறைவன் சாத்தானிடம் கூறிய சாட்சியின்படி யோபு வாழ்ந்துக் காட்டியவர்.
*கர்த்தர் சாட்சி கொடுத்தாலும், யோபு சாட்சியாய் வாழாதபட்சத்தில் அது இறைவனுக்கு தலைக்குனிவை தான் ஏற்படுத்தியிருக்கும்.*
*"யோபு உத்தமன் தான்"* என்பதை..... அவரது வாழ்வுமுறை எமக்கு சரியாக பாடம் புகட்டுகிறது. அவர் உத்தமன் என்று விளங்கியது, இறைவன் கூறிய சாட்சியில் இருந்து தான் நாம் நிதானிக்க இயலுகிறது. சோதனையை சகித்ததினாலும், உத்தமன் என்று நற்சான்றிதழை பெற்றதினாலும் நிச்சயம் அவர்
*"ஜீவ கிரீடத்தை பெருவார்"* என்று நாம் உறுதியாக நம்பலாம்.
*(யாக் - 1:12)*
🍉🍉🌳🍉🍉
*எமது சிறையிருப்பு திரும்ப வேண்டுமா❓*
யோபுவை போல பொறுமை காத்தால் மட்டுமே அது இயலும். (யாக் - 5:11)
அதுவும்......
*கர்த்தர் பார்த்து நமது சிறையிருப்பை திருப்பினாலன்றி எவரும் எமது சிறையிருப்பை திருப்ப இயலாது.* தேவன் என்றுமே இரக்கமும், மன உருக்கமும் உள்ளவராக இருக்கிறவர்.
*இறைவனை குறித்த நல்லெண்ணெங்கள் எம்மை சிறை வாழ்வினின்று விடுபட வழிவகுக்குமேயன்றி, அவரை குறித்து குராய்ந்துக் கொண்டு இருப்போர் யாவரும் தோல்வியுற்றோராகவே கருதப்படுவார்.*
🌻🌻🌿🌻🌻
*யோவுவின் சிறையிருப்பு ஏன் திருப்ப பட்டது என்று என்றாவது யோசித்தது உண்டா ❓🤔🤔*
இதோ கீழே 👇👇 சிலவற்றை உங்கள் முன் நிறுத்துகிறோம். ஒவ்வொன்றையும் நன்றாக கவனித்து, தீர யோசித்து, யோபுவின் சிறையிருப்பு கீழ்கண்ட எந்த காரணத்தினால் ஆண்டவரால் மாற்றப்பட்டது என்பதை குறித்து நீங்களே ஒரு முடிவுக்கு வரும்படி அது உங்கள் கைகளிலேயே விடப்படுகிறது.
*🎀1. அவர் மனந்திரும்பினார்.*
*🎀2. அவர் தனது நண்பர்களை மன்னித்தார்.*
*🎀3. அவர் தனது நண்பர்களுக்காக ஒரு பரிந்து மன்றாடும் நபராக திறப்பில் நின்று செயல்பட்டார்.*
*🎀4. இறைவனது சுத்த கிருபை.*
*🎀5. அவர் நீதிமான், உத்தமன், சன்மார்க்கன்.*
*🎀6. இறை திட்டம் அவரில், அவரது தன்மைக்கேர்ப்ப செயல்பட்டது.*
💠💠🍏💠💠
*கர்த்தர் நம்மை எங்கணம் ஆசீர்வதித்துள்ளார் என்பதை நாம் சரியான ஆவிக்குரிய கண்ணோட்டத்தில் யோசித்தோமானால்......*
வீழ்ச்சி நிலை ஏற்படா வண்ணம் ஆவிக்குரிய யாத்திரையில் சந்தோஷமாக பயணிக்க இயலும்.
*🍃எமக்கு கிடைத்துள்ள ஆத்தும மீட்பு.*
*💐நல்ல ஆவிக்குரிய, மாசற்ற நட்புறவுகள்.*
*☘️நல் ஆரோக்கியம்.*
*🌹நல்ல குடும்பம்.*
*🌵நல்ல ஆவிக்குரிய வளர்ப்பு முறை.*
*போன்றவற்றால் உண்டாகும் சமாதான வாழ்வுக்காக ஆண்டவருக்கு நன்றி உணர்வுடன் இருப்போம்.*
*சிறையிருப்புகள் யாவும் சீராக திருப்படட்டும்.*
*🍉எமது முன்னிலைமையை காட்டிலும் பின்னிலைமை நன்றாக ஆசீர்வாதமாக இருக்க....*
✅தேவ பக்தியும்,
✅பொறுமையும்,
✅நிதான எண்ணங்கள் மற்றும்
✅நிதான பேச்சுமே கைக்கொடுக்க வாய்ப்புகள் அதிகம். *யோசித்து செயல்பட ஆண்டவர் எமக்கு அருள் புரிவாராக. ஆமென்.*
*🍒Sis. Martha Lazar*
*NJC, Kodairoad*
[22/09, 18:16] +91 99431 72360: 22.09.2023
*🥮சிப்பிக்குள் முத்து🥮*
இன்றைய வேத
வாசிப்பு பகுதி - *யோபு : 41, 42* &
*சங் : 1, 2*
*💥முத்துச்சிதறல் : 161 பி*
🍏🍇🫐🍏🍇🫐🍏
கர்த்தருடைய வேதத்தில் *பிரியமாயிருந்து,* இரவும் பகலும், *அவருடைய வேதத்தில்* தியானமாயிருக்கிற மனுஷன் *பாக்கியவான்.* (சங்கீ - 1 : 2)
🫐🍏🍇🫐🍏🍇🫐
*✍️கர்த்தருடைய வேதம் ஆத்துமாவை உயிர்பிக்கின்ற ஒரு வல்லமை வாய்ந்த ஆயுதமாக இருக்கிறது.*
அது நமது மனதை பட்டை தீட்டி,
*நம்மை அவர் பணிக்கென்று பக்குவப்படுத்துவதோடல்லாமல், அவர் பணிக்கென்று எம்மை பயனுள்ள பாத்திரமாகவும் வனைந்து மாற்றும் கருவியாக திகழ்கின்றது.* இங்கு சங்கீதக்காரர் நாம் அவருடைய வேதத்தில் அதாவது இறைவனது கற்பனை, கட்டளைகளில் பிரியமாய் இருக்கவும், சதா அதில் தியானமாயிருக்கவும் வலியுறுத்துகிறார். அவர்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்களாம். அவர்கள் சந்தோஷமாக, சமாதானமாக இருப்பார்களாம்.
*🍉தியானம் செய்தலை குறித்து பல கருத்துக்கள் இருப்பினும்,*
வேத வாக்கியங்களை தியானம் செய்தல் என்பது, வெறும் மனப்பயிற்சி என்று எண்ணப்படாமல், *"வெளியுலக கவன திருப்பம் ஏதுமின்றி"*
ஒரு வசனத்தையாகிலும் அமைதியாக திரும்ப திரும்ப தனக்குள்ளாகவே சொல்லிக்கொள்ளுவதை குறிக்கும் ஒரு நிலையாகும்.
அப்படியென்றால் மீண்டும், மீண்டும் நினைவில் நிறுத்திக்கொள்ளும் ஒரு செய்யற்பாட்டையும் இது வலியுறுத்துவதாக இருக்கிறது.
கர்த்தருடைய வேதம் என்று சொல்லப்படுவது அக்காலத்தில் தாவீதரசர் அறிந்திருந்த மோசேயின் ஆகமத்தை தான் அவர் குறிப்பிடுகிறார். ஆனால் தற்காலத்தில் வாழும் எமக்கு, இறைவனால் அருளப்பட்டுள்ள முழு பரிசுத்த வேதாகமத்தை மட்டுமே கர்த்தருடைய வேதம் என்று நாம் ஏற்று வாழ்வதால்,
*இந்த முழு வேதாகமத்தில் உள்ள 66 புஸ்தகங்களையும் நாம் முடிந்தவரை தியானித்து,* அறிந்துக்கொண்டு, புரிந்து, அதற்கு ஏற்றவாரு நம்மை சீர்திருத்தம் செய்துக் கொண்டே இருந்தோமானால், நாம் தான் உலகிலேயே பக்கியசாலிகளாக திகழலாம்.
💠💠🍧💠💠
*சில நூல்களை நாம் ருசி பார்க்கலாம்.*
பார்க்க தான் வேண்டும்.
*சில நூல்களை அப்படியே விழுங்க நேரிடலாம்.*
ஆனால் சில நூல்களையோ மெதுவாக மென்று, சுவைத்து, ஜீரணிக்க வேண்டும் என்று கூறியுள்ளார், *ப்ரான்சிஸ் பேகன் என்ற அறிஞர்.*
*எமது வேதாகமம் மேற்கண்ட கூற்றின்படி கடைசி பிரிவை சார்ந்தது.* அதை தியானிப்பது... அதாவது, மெதுவாக சுவைத்து, ஜீரணிப்பது என்பதை குறித்து, பலர் பலவிதங்களில் அறிவுரை வழங்கி இருப்பினும், இங்கு ஒரு சிலவற்றை அறிய முற்படுவோம்.
*🍃ஒவ்வொரு முறை வேதாகமத்தை....*
📌அதில் உள்ள ஒரு வசனத்தையோ,
📌ஒரு முழு அதிகாரத்தையோ, இல்லை
📌மொத்தமாக சில பல அதிகாரங்களையோ, இல்லை
📌வாழ்க்கை சரிதைகளையோ, இல்லை,
📌நடந்தேறிய சரித்திர நிகழ்வுகள், 📌இயேசுவின் உபதேசங்கள்,
📌அப்போஸ்தலர்களின் சுவிசேஷ பணியாற்றுதல் போன்ற எவ்வகையினையும் கூட நாம் வாசிக்கும்போது சில கேள்விகள் நாமே கேட்டு.....நாமே அதற்கான பதிலை கண்டறிந்துக் கொண்டு....
*பின்பு படித்த கல்விமான்களின் ஏடுகளில் அவர்களது விளக்கங்கள், கருத்துரைகளை அறிந்துக்கொண்டு,* நாமே அமர்ந்து, ஆழ்ந்து யோசித்து பின்பே ஒரு முடிவுக்கு வரவேண்டும்.
🪶🪶🔰🪶🪶
*பரிசுத்த வேதாகமத்தை தியானிக்க விரும்புவோறுக்கு சில வழிக்காட்டல்கள் :*
*🍂வேதாகமத்தை தியானிக்கும் முன்பாக நம்மை தாழ்த்தி, ஜெபித்து, ஆவியானவரின் வழிக்காட்டலை நாடி, பின்பே நாம் வாசிக்க ஆரம்பிக்க வேண்டும்.*
👍நினைவில் கொள்ளுவோம்,
வேத வாசிப்பு என்பது வேறு,
*வேத தியானம் என்பது முற்றிலும் வேறு.*
*🍂வாசித்த வசனம், அல்லது பகுதிக்கு நாமே ஒரு தலைப்பை போட்டுக் கொள்ள பழகினோமானால், நாம் வாசித்தது நம் நினைவில் நீண்ட நாள் நிற்கும்.*
சிலர் அப்படி செய்யாமல் இருப்பதால் தான் வாசித்ததை நாம் சீக்கிரத்திலேயே மறந்து போய் விடுகிறோம்.
*🍂கேள்வி பதில் போன்று நாமே அமைக்க பழக வேண்டும்.*
🌷1. எந்த சூழ்நிலையில் இந்த பகுதி அமைய பெற்றுள்ளது ??
🌷2. இதை யார் எழுதியது ??
யாருக்காக இதை எழுதினார் ?? இது எனக்கு பொருந்துமா, பொருந்தாதா ?? இப்பொழுது வாழும் எனக்கு இது எவ்வகையில் பொருந்தும் ?? அல்லது பொருந்தாது என்பதற்கான விளக்கத்தினை ஒரு ஏட்டில் நாம் எழுதிக்கொண்டே வர வேண்டும்.
🌷3. எனது விசுவாச வளர்ச்சிக்கு இது எவ்வகையில் பயனுள்ளது ??
🌷4. இதன் கருத்து எனக்கு என்னவாக புரிகிறது ?? அது சரிதானா ?? என்று எனது மேய்ப்பனிடம் நான் கேட்டு தெளிவு பெறலாம் அல்லவா ??
🌷5. நான் வாசிக்கும் இந்த பகுதி எனக்கு,
🍀இறைவனை குறித்து,
🍀இயேசுவை குறித்து,
🍀தூய ஆவியானவரை குறித்து,
🍀மனிதர்களை குறித்து,
🍀சாத்தானை குறித்து,
🍀ஆவிகளை குறித்து,
🍀உலகத்தை குறித்து,
🍀பரலோகத்தை குறித்து,
🍀தேவனுடைய இராஜ்ஜியத்தை குறித்து,
🍀இனி வரப்போகும் உலகை குறித்து,
🍀இந்த சமூகத்தை குறித்து,
இன்னும் மற்ற *என்னத்தை குறித்து எனக்கு என்ன சொல்லிக்கொடுக்கிறது ??*
🌷6. இதில் நான் நம்பி அணைத்துக் கொள்ளுவதற்கேதுவான இறை வாக்குறுதிகள், கட்டளைகள் என்று ஏதேனும் உண்டா ??
🌷7. இந்த பகுதி மூலம் நான் இன்னும் இறைவனில் அன்பு கூற இயலுமா ?? பாவத்தை குறித்து இந்த பகுதி கண்டித்து என்னை உணர்த்துகிறதா, உணர்த்திய காரியம் எது ??
🌷8. எனது ஏதாவது நற்குண நலனில் தோய்வு கண்டுள்ளது என்று இப்பகுதி ஏதேனும் எனக்கு அறிவுறுத்துகிறதா ??
🌷9. இப்பகுதி தனிப்பட்ட விதமாக எனக்கு சொல்ல வருவது என்ன ??
🌷10. இப்பகுதிக்கு ஒத்ததான மற்ற வேத பகுதிகள் வேறு எங்கெல்லாம் இருக்கிறது ??
👆போன்று சிந்தனைக்கு உரமேற்ற கற்றுக் கொடுத்துள்ளார் *மறைந்த முனைவர். திரு.ஆல்பிரட் தேவதாசன் அவர்கள்.*
🔥🔥🌳🔥🔥
*தாவீதரசர் ஓயாமல் இறைவனது வாக்கியங்களை தியானிப்பதும், பாடல்களை இயற்றுவதும் தான் தனது தலையாய தொழில் போல செய்து வந்தவர்.* ஆகையால் தான் கர்த்தருடைய வேதத்தில் அத்தனை பிரியம் காண்பித்து, ஓயாமல் அவர் வசனங்களையே அசைப்போட்டுக் கொண்டு வாழலானார். *ஆகையால் இறைவனது இதயத்தை சரியாக புரிந்துக் கொண்ட புருஷனாக, என் இதயத்துக்கு ஏற்றவன் என்ற நற்சான்றினை இறைவனிடம் இருந்து பெற்றுக் கொண்டவராக எமக்கு முன்னோடியாக வாழ்ந்து காட்டி சென்றுள்ளார்.*
நாமும் அவ்விதமே... *🎊தினந்தோறும் நாம் வாசிக்கும் ஒரு வசனத்தையாகிலும் தியானிக்க முன் வருவோம்.* இறைவனது நற்சான்றினை அவரிடம் இருந்து பெற்றுக்கொள்ளுவோம்.
*🍁Sis. Martha Lazar*
*NJC, KodaiRoad*
Thanks for using my website. Post your comments on this