சங்கீதம் 4 - 9
*கர்த்தர்* *நீதியுள்ள*
*நியாயாதிபதி*...
பென்யமீனியனான கூஷ்..தாவீதைத் தன்னுடைய
சத்துருவாகப் பாவித்து..
அவன்மீது ஆதாரமில்லாத குற்றச்சாட்டுகளைச் சொன்னான்..சவுலுக்கும்..
தாவீதிற்கும் இடையே பகை
உண்டாக்கினான்..
தாவீது, தன் மீது அநியாயமாய்க் குற்றஞ்சாட்டினவனைக் குறித்து,
ஏழாம் சங்கீதத்தைப்
பாடியிருக்கலாம் என்று நம்பப்படுகிறது.
(1 சாமுவேல் 24:9-11)
"சிகாயோன்” என்றால் ‘
'சத்தமாக அழுதல்’ என்றும் பொருள்.
தான் செய்யாத தவற்றிற்காகக் குற்றஞ்சாட்டப்பட்ட பொழுது,
தாவீதும் அழுதிருப்பான்.
ஆனால் அப்படிப்பட்ட சூழ்நிலையிலும் அவன் , தேவனை நம்பினான் ... காரணம்,
அவன் தேவனை அறிந்திருந்தான் ..
அதனால் தேவனை நோக்கி ஜெபித்தான் ...
தன் உத்தமமான இருதயத்தைத் தேவனுக்கு வெளிப்படுத்தினான் ...
முடிவில் கர்த்தர் தனக்கு நியாயஞ்செய்வார் என்று நம்பி.. தன்னுடைய இசைக் கருவியை பயன்படுத்தி..கர்த்தரைத் துதித்துப் பாடினான்..
( சங்.7 : 17 )
இன்று நீங்களும் அநியாயமாகக் குற்றஞ்சாட்டப்பட்டிருக்கலாம் ... அழுதிருக்கலாம் ...
ஆனால் இப்படிப்பட்ட சூழ்நிலையிலே.. தேவன் உங்கள் சார்பிலே செயல்படுவார் என்பதை நீங்களும் நம்பவேண்டும்...
அந்த நம்பிக்கையிலே
நீங்கள் அமர்ந்திருக்கவேண்டும்...
தேவனைத் துதித்துப்
பாடவேண்டும்..
எந்த ஒரு பிரச்சனையையும்.. உங்கள் கையில் நீங்கள் எடுக்கும்போது.. விசுவாசத்தின் பாதையை விட்டு.. நீங்கள்
விலகுகிறவர்களாக இருப்பீர்கள்...
கர்த்தரிடம் உங்கள் பிரச்சினையை விட்டுவிட்டு..
கர்த்தாவே..நீரே நடத்தும் என்று நீங்கள் காத்திருக்க வேண்டும் ...
அற்பமான காரியங்களுக்காக நீங்கள் பேசுவதோ.. வாதிடுவதோ தேவையற்றது ....
காரணம் இந்த உலகம் தேவனுடைய ஆளுகையின் கீழ் இருக்கிறது ....
அவர் தமது சிங்காசனத்தில் நீதியுள்ள நியாயாதிபதியாய் வீற்றிருக்கிறார்.
அவர் பாவத்தைக் கண்டும் காணாதவர் போல
இருப்பவரல்ல...
அவர் நாள்தோறும் பாவியின்மேல் சினங்கொள்ளுகிற தேவன்..
( சங்.7 : 11)
தாவீதைப்போல நம்பிக்கையோடு ஜெபியுங்கள் ...
உங்கள் நம்பிக்கையின் ஜெபம்..
தேவனை உங்கள்
பிரச்சனைகளில் தலையிடச் செய்யும் ...
நீதியை வெளிப்படுத்தும் ...
அது உங்களை வெற்றிக்கு நேராக வழிநடத்தும்.
*தாவீதிற்கு இத்தகைய* *நம்பிக்கை உண்டாவதற்குக்* *காரணம்*.. *அவனுடைய* *உத்தமமான இருதயம்* ...
*நீதியான வாழ்வு*..( சங்.7 : 8-10)
*அதனால் தன்னை விரோதித்த*
*சவுலை அவன் விரோதிக்காமல்*
“*ராஜாவாகிய என் ஆண்டவனே*” *என்று கனம்பண்ணினான்*.
*இன்று உங்கள்* *
*இருதயத்தில் பிறருக்கு* *விரோதமாக*.. *பகை ,கசப்பு* , *விரோதம் இருந்தால் ..அதை* *இன்றே ஒழித்துவிட்டு*,
*உங்கள் இருதயத்தை*..
*தேவ வசனத்தினால்* *நிரப்புங்கள்*.
*தேவ அன்பினால் நிரப்புங்கள்*.
*தேவன் செயல்பட* *இடங்கொடுங்கள்*....
*அன்று தாவீதிற்காகச்* *செயல்பட்ட தேவன்..*
*இன்று உங்களுக்காகவும்* *செயல்படுவார்*...
*உங்களை அதிசயங்களைக்* *காணச்செய்வார்*...ஆமென்.🙏
மாலா டேவிட்
🌟 *கர்த்தர் என் ஜெபத்தை ஏற்றுக்கொள்வார்* 🌟
☄️ *“அக்கிரமக்காரரே, நீங்கள் எல்லாரும் என்னைவிட்டு அகன்றுபோங்கள்; கர்த்தர் என் அழுகையின் சத்தத்தைக் கேட்டார். கர்த்தர் என் விண்ணப்பத்தைக் கேட்டார்; கர்த்தர் என் ஜெபத்தை ஏற்றுக்கொள்ளுவார்.”* (சங்கீதம் 6:8-9).
🔸 6-ஆம் சங்கீதம், *மனந்திரும்புதலைப் பற்றிய ஏழு சங்கீதங்களில்* (சங்கீதம் 6,32, 38,51,102,130,143). முதலாவதாகும். இந்த சங்கீதங்கள் *மனந்திரும்புதலையும் தேவனிடத்தில் அடிபணிதலையும்* பற்றிய பாடல்களாகும்.
🔸 தாவீது இந்த சங்கீதத்தை *புலம்பல்களுடன் தொடங்கி மகிழ்ச்சியுடன் முடிக்கிறான்.* 1-7 வசனங்களில், தாவீது தன் பரிதாபமான நிலைமையைக் குறித்து புலம்புகிறான், பிறகு 8-10 வசனங்களில், தேவன் தனது ஜெபத்தைக் கேட்டதாக தனது நம்பிக்கையை வெளிப்படுத்துகிறான்.
🔸 *தன் பாவத்திற்காக தேவனால் கடிந்துகொள்ளப்பட்டபோது,* தாவீது இந்த சங்கீதத்தை எழுதியிருக்க வேண்டும். எனவே, தமது கோபத்திலே தேவன் தன்னைக் கடிந்துகொள்ளாமலும் தண்டியாமலும் இருக்க வேண்டுமென்று தாவீது விண்ணப்பிக்கிறான். *தேவனுடைய சிட்சை அவருடைய கோபத்தை பிரதிபலிப்பதில்லை என்பதையும், மாறாக அது புத்திர சுவிகாரத்தின் அடையாளம் என்பதையும் நாம் அறிவோம்.* மோசே, *"ஒருவன் தன் புத்திரனைச் சிட்சிக்கிறதுபோல உன் தேவனாகிய கர்த்தர் உன்னைச் சிட்சிக்கிறார் என்று நீ உன் இருதயத்தில் அறிந்துகொள்வாயாக."* என்று இஸ்ரவேலர்களுக்குப் போதித்தான் (உபாகமம் 8:5). நாம் அவருடைய பிள்ளைகளாக இருப்பதால், தேவனுடைய சிட்சையை சகித்துக்கொள்ள வேதம் நமக்குக் கற்பிக்கிறது. *"நீங்கள் சிட்சையைச் சகிக்கிறவர்களாயிருந்தால் தேவன் உங்களைப் புத்திரராக எண்ணி நடத்துகிறார்; தகப்பன் சிட்சியாத புத்திரனுண்டோ?”* (எபிரெயர் 12:7).
🔸 தாவீது *தன்னுடைய நீதியினிமித்தமல்ல, தேவனுடைய கிருபையினிமித்தம்* தனது வேதனையிலிருந்து விடுவிக்கப்பட வேண்டுமென்று மன்றாடுகிறான்.* தாவீது, தேவன் *தன் அழுகையின் சத்தத்தையும் விண்ணப்பத்தையும் கேட்டார் என்று மிகுந்த நம்பிக்கையுடனும் உறுதியுடனும் அறிவிக்கிறான்.
🔸 தாவீதின் எதிரிகள் அவனைத் துன்புறுத்துவதற்கு உறுதியுடன் இருந்தனர். தன்னுடைய விடுதலைக்காக தான் ஏறெடுத்த ஜெபத்தை கர்த்தர் கேட்டாரென்று அறிந்ததால், தாவீது *தன் எதிரிகளை தன்னைவிட்டு அகன்றுபோகும்படி கட்டளையிடுகிறான்.* மேலும், தன்னுடைய ஜெபம் ஏற்றுக்கொள்ளப்பட்டது என்பதை அவன் அறிந்திருப்பதால், *சரியான நேரத்தில் அதற்கு தகுந்த பதில் கிடைக்கும்* என்றும் அவன் நம்புகிறான்.
🔸 இயேசுவே தம் சீடர்களுக்குக் கற்பித்தார்: *"உலகத்தில் உங்களுக்கு உபத்திரவம் உண்டு."* (யோவான் 16:33). துன்பத்தை எதிர்கொள்ளும்போது நாம் என்ன செய்ய வேண்டும்? வேதம் நமக்குக் கூறும் அறிவுரை: *“உங்களில் ஒருவன் துன்பப்பட்டால் ஜெபம்பண்ணக்கடவன்.”* (யாக்கோபு 5:13). தாவீதும் மற்ற தேவ மனிதர்களும் இதைத்தான் செய்தார்கள். தேவனுடைய பிள்ளைகளுக்கு ஜெபம் எவ்வாறு விடுதலையைக் கொண்டு வந்தது என்பதைப் பற்றிய பல பதிவுகள் வேதத்தில் உள்ளன.
🔸 யோவான், *“நாம் எதையாகிலும் அவருடைய சித்தத்தின்படி கேட்டால், அவர் நமக்குச் செவிகொடுக்கிறாரென்பதே அவரைப் பற்றி நாம் கொண்டிருக்கிற தைரியம். நாம் எதைக் கேட்டாலும், அவர் நமக்குச் செவிகொடுக்கிறாரென்று நாம் அறிந்திருந்தோமானால், அவரிடத்தில் நாம் கேட்டவைகளைப் பெற்றுக்கொண்டோமென்றும் அறிந்திருக்கிறோம்.”* என்று நம்மை உற்சாகப்படுத்துகிறான் (1 யோவான் 5:14-15). நாம் ஜெபத்தின் மூலம் பெற்றுக்கொண்ட விடுதலையைப் பற்றி, நம்மிடம் பல சாட்சியங்கள் நிச்சயமாக இருக்கும். அவற்றை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்வது நமக்குக் கிடைத்த பெரும் பாக்கியம்.*
🔹 *தேவன் நம்மை விடுவிப்பார் என்ற முழு விசுவாசத்துடன் அவரிடம் நம்முடைய கஷ்டங்களை வெளிப்படுத்துகிறோமா?*
✅ நாம் கற்றுக் கொள்ளும் *பாடங்கள்*:
1️⃣ *சரீர பலவீனத்தையோ, மன வியாகுலத்தையோ நாம் சந்திக்கும் போதெல்லாம், நம் குறைகளை தேவனிடம் தெரிவிக்க வேண்டும்.*
2️⃣ *நம்முடைய தவறுகளினால் தேவனைத் துக்கப்படுத்துகிறபோதெல்லாம், மனந்திரும்பி தேவனுக்கு அடிபணிய நாம் ஆயத்தமாக இருக்க வேண்டும்.*
3️⃣ *நாம் தேவனுடைய பிள்ளைகளாக இருப்பதால், அவருடைய சிட்சையை சகித்துக்கொள்ள வேதம் நமக்குக் கற்பிக்கிறது.*
4️⃣ *ஜெபத்தின் மூலம் நாம் பெற்ற விடுதலையைப் பற்றிய நமது சாட்சியங்களை மற்றவர்களுடன் பகிர்ந்துகொள்வது நமக்குக் கிடைத்த பெரும் பாக்கியமாகும்.*
Dr எஸ் செல்வன்
சென்னை
என் எலும்புகள் நடுங்குகிறது
~~~~~~~~~~~~~~~~~~~~
சங்கீதம் 6: 2. *கர்த்தாவே நான் பெலனற்று போனேன். என்னை குணமாக்கும். என் எலும்புகள் நடுங்குகிறது* என தாவீது ஜெபிக்கிறார்.
1. ஆம், எலும்புகள் நம் சரீரத்திற்கு அமைப்பையும், பெலனையும் கொடுக்கிறது. *நாம் தாயின் கருவில் உருவாகும் போதே நம் எலும்புகளை கர்த்தருடைய கண்கள் கண்டது*. சங்கீதம் 139: 15.
*நம்முடைய கர்த்தராகிய இயேசு கிறிஸ்து நமக்காக மரித்து, உயிர்த்த படியால், நாம் அவருடைய மாம்சத்திற்கும், எலும்புகளுக்கும் உரியவர்களாயிருக்கிறோம்.* எபேசியர் 5: 30.
2. இந்த எலும்புகளை சத்துருவாகிய பிசாசும் பாதித்து கொண்டிருக்கிறான். இன்று அநேகர் எலும்பு தேய்வினால் முதுகு வலி, கால் வலி, முட்டு வலி என கர்த்தருக்காக நடக்க, ஓட, கிரியை செய்ய முடியாதவர்களாய் காணப்படுகிறோம்.
*கர்த்தரோ நம் எலும்புகளை நிணமுள்ளதாய் மாற்றுகிறார்*. ஏசாயா 58: 11
*கர்த்தருக்கு பயப்படுவது நம் எலும்புகளுக்கு ஊன்*. (marrow) நீதிமொழிகள் 3:8.
*இனிய சொற்கள் எலும்புகளுக்கு ஔஷதம்.* ( மருந்து )நீதிமொழிகள் 16: 24. இன்று நம்முடைய வார்த்தைகள் இனிமையானவைகளாயிருக்கின்றனவா?
*கர்த்தருடைய வார்த்தை நம் எலும்புகளில் அடைபட்டு, எரிகிற அக்கினியை போல இருதயத்தில் இருந்தது.* எரேமியா 20: 9. ஆம், நம்முடைய எலும்புகளில் வசனம் அடைபட்டிருக்க வேண்டும்.
3. ஆனால் *நம்முடைய பாவம் நம் எலும்புகளிலே நிறைந்து மண்ணிலே படுத்து கொள்ளுமாம்*. யோபு 20:11.
*சாபம் எண்ணெயை போல எலும்புகளில் பாயுமாம்* சங்கீதம் 109: 18. எதற்காக ? நியாயதீர்ப்பிற்காக அல்லவா?
*பொறாமையோ நம் எலும்புகளை உருக்குமாம்*. நீதிமொழிகள் 14: 30.
ஆனால் *எலிசாவின் எலூம்புகளின் மேல் பட்ட மரித்து போனவனின் சரீரமோ உயிரடைந்தது. காலூன்றி நின்றது, எழுந்து நின்றான்*. 2 இராஜாக்கள் 13: 21.
அது மட்டுமா? *பள்ளதாக்கில் சிதறி கிடந்த எலும்புகள் கூட ஆவியானவராகிய காற்று வீசிய போது அவைகள் உயிரடைந்து, ஒன்று சேர்ந்து, பெரிய சேனையாய் நின்றது.* எவ்வளவு ஆச்சரியம் !
4. ஆதி பக்தர்கள் இந்த எலும்புகளை குறித்து அறிந்திருந்தார்கள். ஆகவே தான் யோசேப்பு இஸ்ரவேலரிடம் தன் எலும்புகளை எகிப்திலிருந்து, கானான் தேசத்திற்கு கொண்டு செல்லும்படி கூறினார்.
ஆம், நம் எலும்புகளில் பெலனை நாம் பெற்றுக்கொள்ள வேண்டும். வசனத்தை வாசித்து, தியானித்து, கைக்கொள்ளும் போது, கர்த்தருடைய வார்த்தை நம் எலும்புகளில் அடைபட்டு பெலனை தரும். பரிசுத்த ஆவியானவர் நமக்குள்ளே அசைவாடும் போது நம் எலும்புகள் உயிர் பெறும். ஆம், கர்த்தருக்கு பயப்படும் போது, இனிமையாய் பேசும் போது நம் எலும்புகள் குணமாகும். இந்த தெய்வீக சுகத்தை நம் எலும்புகளில் பெற கர்த்தர் தாமே நம் ஒவ்வொருவருக்கும் உதவி செய்வாராக. *கர்த்தாவே என் எலும்புகள் நடுங்குகிறது. என்னை குணமாக்கும் என ஜெபிப்போமாக*. ஆமென். அல்லேலூயா.
*Dr.Padmini Seĺvyn*
📗 *சிறிய குறிப்பு* 📗
🍂 *விண்மீன் மண்டலம்* 🍂
அற்புதமான விண்மீன் மண்டலத்தைக் காண நாம் கோளரங்கத்திற்குச் (planetarium) செல்ல வேண்டும். அங்கு ஒளிபரப்பாகும் வீடியோவைப் பார்க்கும்போது, நமது *சூரியக் குடும்பம்* (solar system) நம்மை வியக்க வைக்கின்றது. பார்ப்பதற்கு அது அவ்வளவு அற்புதமான காட்சி. மேலும் *இன்னமும் அது ஆராய்ந்து தீர்க்கப்பட வேண்டிய மர்மம்*. தொலைநோக்கி (telescope) மூலம் நட்சத்திரங்களைப் பார்க்காத தாவீது தனது சங்கீதத்தில் இவ்வாறு எழுதினான்.
📖 *“உமது விரல்களின் கிரியையாகிய உம்முடைய வானங்களையும், நீர் ஸ்தாபித்த சந்திரனையும் நட்சத்திரங்களையும் நான் பார்க்கும்போது,” (சங் 8:3)*
பரிசுத்த வேதாகமம் வானங்கள் தேவனுடைய கைகளின் கிரியை எனக் கூறுகிறது. *அவரது கைகள் வானத்தை நெய்து பின்னி பின்னர் நட்சத்திரங்களையும் சந்திரனையும் அவைகளுக்கு ஒதுக்கப்பட்ட இடங்களில் வைத்து அலங்கரித்தன.* அவருடைய படைப்புகள் மிகவும் பிரமாண்டமானவை என்றால், இந்த *பிரபஞ்சத்தைப் படைத்தவர் எவ்வளவு மகிமையும் அற்புதமாகவும்* இருப்பார். மேலும் இப்படிப்பட்ட அற்புதமான தேவனுடைய கரங்களில் நீங்களும் நானும் பொறிக்கப்பட்டுள்ளோம். அல்லேலூயா.
_திருமதி ஷீலா ஜெபக்குமார்_ ✍🏻
*☘️சிப்பிக்குள் முத்து☘️*
இன்றைய வேத
வாசிப்பு பகுதி - *சங்கீதம் : 3 - 9*
*🌹முத்துச்சிதறல் : 162*
🌵🌵🌵
தேவனை மறக்கிற எல்லா ஜாதிகளும், *"நரகத்திலே தள்ளப்படுவார்கள்".* ( 9 : 17 )
🌵🌵🌵
*✍️"நரகம்" என்னும் வார்த்தையினை நாம் தற்காலத்தில் கேள்விப்படுவது மிகவும் அரிதாகிப் போனது.* வேதாகமத்தில், *"நரகம்"* என்னும் சொல்ல்லுக்கு இரண்டு விதமான அர்த்தங்கள் இருப்பதாக தெரிகிறது.
*ஒன்று*
தக தக வென அக்கினி சதா எரிந்துக் கொண்டிருக்கும் ஓர் வேதனை நிறைந்த இடம்.
*(மாற்கு - 9 : 43 - 48)*
*மற்றொன்று* "இருள் நிறைந்த, புறம்பான ஓர் ஸ்தலம்".
*(மத் - 8 : 12)*
*முந்தின இடத்தில்* புழுக்கள் உயிரோடு இருக்கும் என்றும், அக்கினி என்றுமே அவியாமல் இருக்கும் என்றும் அறிகிறோம்.
*பிந்தின இடத்தில்* அழுகையும், பற்கடிப்பும் காரிருளும் இருக்கும் என்று மேற்கண்ட வசனங்கள் வாயிலாக அறிகிறோம்.
ஆக,
*தேவனை விட்டு நிரந்திரமாக பிரிக்கப்பட்டு போய் சேரும் இடத்தின் பெயர் தான்* "நரகம்".
🎊🎊🍀🎊🎊
*தேவனை மறக்கிறவர்கள் எவருமே இந்த நரகத்தில் தான் தள்ளப்படுவார்கள் என்று தாவீதரசர் தீர்க்கதரிசனமாக கூறியுள்ளார்.*
(9:17)
*அதை இயேசுவும் உறுதி படுத்தியுள்ளார்.* தேவன் இல்லை என்று மதிகேடர் *(ஞானமற்றோர்)* தங்கள் இதயத்தில் பேசிக்கொள்ளுவார்களாம்.
*(சங்கீ - 14 : 1)*
*சிலர்* பாருங்கள்... கடவுளாவது, கத்திரிக்காயாவது, நீ பிறரை நேசித்து நன்மை செய்துக் கொண்டு போயிட்டே இரு....என்று தவறாக போதிப்பார்கள்.
*வேறு சிலர்....* இது பழைய ஏற்பாட்டு காலத்தில் எழுதப்பட்டது என்பர்.
இயேசு இதை குறித்து சொல்லி இருக்கிறார் என்று கூறினால், இயேசு மரித்தபோது *"பாதாளத்தில் இருந்தோறுக்கு சுவிசேஷம் அறிவித்து"* அவர்களை விடுதலை ஆக்கிவிட்டார்.
*(1 பேது - 3: 18- 20)* ஆகையால்....
*இனி நரகம் என்ற பேச்சுக்கே இடமில்லை என்பார்கள்.*
சரி அப்படியென்றால், *"உலகத்தின் முடிவிலே"* நடைபெற போகும் சம்பவத்தினை இயேசுவே கூறும்போது, அக்கிரமம் செய்கிறவர்களை,.... தனது இராஜ்யமாகிய திருச்சபையில் இடறல்களை உண்டாக்கும் நபர்களை,
*"அக்கினி சூளையிலே"* போடுவார்கள் என்றும்....*அங்கே அழுகையும், பற்க்கடிப்பும் உண்டாயிருக்கும்* என்று கூறியிருக்கிறார் அல்லவா❓என்று கேட்டால்...... அவர்களிடம் பதில் இராது.
*பதில் கூறவும் இயலாது.*
🍀🍀🍉🍀🍀
இன்னொரு விதத்தில் பார்த்தால் இந்த
*நரகம் என்பது,*
ஒரு *"அக்கினி கடலாகும்."*
இது சாத்தானுக்காகவும், அவனது தூதர்களுக்காகவுமான *(அவனது சொற்படி வாழ்வோர், செய்வோருக்கான)* ஒரு நிரந்திரமான, முடிவான ஸ்தலமாக்கும்.
*(மத் - 25 : 41)*
ஆம்,
*தாவீதரசர்*
மூலம் இறைவன் பேசியுள்ளது என்னவென்றால், *"தேவனை மறக்கிறவர்கள்", அதாவது தங்களது சிந்தைகளில் கடவுள் எண்ணமே வராமல் இருக்கும் கூட்டத்தார் அல்லது, கடவுள் அவர் பாட்டுக்கு இருக்கட்டுமே, அவரை ஏன் நாம் தொந்தரவு செய்யவேண்டும்❓ என்ற தப்பான எண்ணமுடியோர், சரியாக சாத்தானின் பின்னே சென்று இந்த நரக ஆக்கினியில் போய் விழுவார்கள்.* இதிலே ஒரு முறை விழுந்தவர்கள் மீண்டும் அங்கிருந்து எழுந்து வர இயலாது.
💠ஆகையால் சதா இறைவனின் நினைவுகளால், அவரது கற்பனைகளை காத்து நடக்க ஆண்டவரிடம் பெலனை கேட்டு பெற்றுக் கொண்டு, ஜெயமுள்ள வாழ்வு இவ்வுலகில் வாழ வேண்டியுள்ளது.
*🍉"தேவனை மறத்தல்" என்பது* உலக கவலைகளினால் பாரங் கொண்டு தவித்து நின்று,
📌இறைவனை தேடாமல்,
📌அவரை நோக்கி பார்த்து ஜெபிக்காமல்,
📌இறைவனை சார்ந்துக்கொள்ளாமல்,
📌மனிதர்களை சார்ந்துக்கொள்ளுதல்,
மற்றும்.....
📌தங்கள் வாழ்வில் தேவனது அதிசயம், அற்புதங்களை சீக்கிரத்தில் மறந்து போய்,
📌கஷ்ட காலங்களில் அவரை குராய்ந்து கொள்ளுவது, போன்ற நிலைகளை குறிப்பிடுகிறது.
ஆகையால் தான் இயேசு மூலம் எமக்கு அருளப்படும் *பெரிய இரட்சிப்பாகிய "பாவ மன்னிப்பை",* அவரது சிலுவை மரணத்தின் வாயிலாக எமக்கு ஈவாக அருளி சென்றுள்ளார்.
*யார் யார் இயேசுவை விசுவாசித்து, மனந்திருந்தி, தேவனால் மறுபடியும் பிறந்துள்ளதற்கு அடையாளமாக பாவமன்னிப்புக்கென்று....மூழ்கி ஞானஸ்நானம் பெற்று, ஆவி என்னும் அச்சாரத்தினை பெற்று கொள்ளுகின்றனரோ, அவர்கள் அனைவரும் இந்த "இரண்டாம் மரணம்" என்று அழைக்கப்படும் நரகத்தினின்று விடுவிக்கப்பட்டு, மோட்ச லோக வாசிகளாக இறைவனோடு என்றென்றும் வாழுவார்கள் என எமது பரிசுத்த வேதாகமம் போதனை செய்கிறது.*
(வெளி - 20 : 11- 15)
🔥எளியோராக நாம் இருப்பினும்,
🔥சிறு பான்மைமிக்க மக்களினமாக நாம் இருப்பினும்,
🔥இறை சிந்தையும், பக்தியும் மிக்கோராக இயேசுவை ஏற்று,
🔥அவரது வார்த்தைகளுக்கு அடிப்பணிந்து வாழ ஒப்புவித்து,
🔥அவர் நிமித்தம் வரும் துன்பத்தினை, *"சிலுவை" யை சகித்து கொண்டோமானால்,*
இம்மையிலும், மறுமையிலும் தேவனோடு இருக்கும் சிலாக்கியத்தினை பெற்றிருப்போம்.
*🍇தேவனை அவ்வப்பொழுது எமது நினைவலைகளில் கொண்டு வந்து நிறுத்தி நோக்குவோம். பரலோக பாக்கியம் பெறுவோம்.*
*🎈தேவனை மறவாமல் நினைத்து கொண்டே வாழ பழகி கொள்ளுவோம், நரகத்திற்கு விலக்க பட்டவர்களாக நம்மை உறுதி படுத்தி கொள்ளுவோம்.*
*Sis. Martha Lazar ✍️*
*NJC, Kodairoad*
Thanks for using my website. Post your comments on this