Type Here to Get Search Results !

Psalm 10-16 Vile & Wicked Take Center Stage | எதுவரைக்கும், கர்த்தாவே? | சங்கீதம் 10-16 | Tamil Gospel Sermon Points | Jesus Sam

சங்கீதம் 10 - 16

*சங்கீதம் 13:1-6*

*HOW LONG, O LORD ❓*

*எதுவரைக்கும், கர்த்தாவே* ❓

📝 வசனம் 1 & 2ல் உள்ள *"எதுவரைக்கும்"* என்ற வார்த்தை நான்கு முறை திரும்பத் திரும்பச் சொல்வது, சங்கீதக்காரன் விரக்திக்கும் நம்பிக்கைக்கும் இடையே பதற்றத்தில் வாழ்கிறார் என்பதைக் குறிக்கிறது. அவர் தனிமையில் இருப்பதாகத் தோன்றி, கர்த்தரிடம் *"அவருடைய துன்பம் எதுவரைக்கும் தொடரும்"* என்று கேட்கிறார்.

📍கர்த்தர் அவரது வேண்டுகோளுக்கு பதிலளிக்காததால் அவர் குழப்பமடைந்தார் ( *வ 1* )

📍கர்த்தர் தன்னை என்றென்றும் மறந்துவிட்டாரா என்று கூட அவர் ஆச்சரியப்படுகிறார் ( *வ 1* )

📍கர்த்தர் அவரை மறந்திருந்தால், அவர் இறந்துவிடுவார், அவருடைய எதிரிகள் மகிழ்ச்சியடைவார்கள். தாங்கள் அவரைத் தோற்கடித்துவிட்டதாகவும், அவருடைய தேவனால் அவரைக் காப்பாற்ற முடியவில்லை அல்லது காப்பாற்ற

மாட்டார் என்றும் அவர்கள் நினைப்பார்கள் ( *வ. 2-4*)




🙋‍♂️🙋‍♀️ அன்பான திருச்சபையே, இக்கட்டான சூழ்நிலையில் ஆலோசனை, ஜெப உதவி மற்றும் நம்பிக்கையை அளிக்க திருச்சபை முன்வர வேண்டும் என்பது ஒரு கூக்குரல்.

📍 கர்த்தரின் மீதும் அவருடைய மாறாத அன்பு மீதும் நம்பிக்கை கொண்ட ஒரு நல்ல விசுவாசியும் கூட சில சமயங்களில் விடுதலை வெகு தொலைவில் இருக்கும் போது இருண்ட நாட்களை சகித்துக் கொள்வான்.




📝 தனது வேண்டுகோளை வெளிப்படுத்திய பிறகு, சங்கீதக்காரன், என்ன நடந்தாலும் அல்லது எவ்வளவு நேரம் கர்த்தர் பதிலளிக்க நேரம் எடுத்தாலும், உம்முடைய கிருபையின் மேல் நம்பிக்கையாயிருக்கிறேன் என்று கூறினார் *(வ 5a*)

📍 அவருடைய இரட்சிப்பின் நம்பிக்கையானது, கர்த்தர் தம்முடைய மக்களுக்கு அளித்த அர்ப்பணிப்பை அடிப்படையாகக் கொண்டது ( *வ 5b* )

📍 கர்த்தர் அவருக்கு நன்மை செய்தபடியால் அவர் பாடுவார் ( *வ 6* )




🙋‍♂️🙋‍♀️ அன்பான திருச்சபையே, தேவன் நமது குணாதிசயங்களைச் சோதித்து வடிவமைக்க "துன்பத்தை" பயன்படுத்துகிறார். இந்த வீழ்ந்த உலகில் நமக்கு எளிதான வாழ்க்கை இருக்காது.

📍 அவர் நம்மை நேசிக்கிறார் என்ற தேவனுடைய வாக்குறுதியை நாம் பற்றிக்கொண்டு, அவர் நம்முடைய துன்பங்களை நம்முடைய நன்மைக்காகவும் அவருடைய மகிமைக்காகவும் எவ்வாறு செயல்படுத்துவார் என்பதைப் பார்க்க வேண்டும்.

தேவனுக்கே மகிமை 🙌

✍️ *மார்க் போஜே*

அருணாச்சல பிரதேசம், இந்தியா 🇮🇳

தமிழாக்கம் ஜஸ்டஸ் ராஜேந்திரன்


❇️ *கர்த்தரை எப்பொழுதும் எனக்கு முன்பாக வைத்திருக்கிறேன்* ❇️




☄️ *“கர்த்தரை எப்பொழுதும் எனக்கு முன்பாக வைத்திருக்கிறேன்; அவர் என் வலதுபாரிசத்தில் இருக்கிறபடியால் நான் அசைக்கப்படுவதில்லை. ஆகையால் என் இருதயம் பூரித்தது, என் மகிமை களிகூர்ந்தது; என் மாம்சமும் நம்பிக்கையோடே தங்கியிருக்கும்.”* (சங்கீதம் 16:8-9).




⚡ பதினாறாவது சங்கீதத்தின் தலைப்பு *'தாவீது எழுதின மிக்தாம் என்னும் சங்கீதம்.'* சிலர் மிக்தாம் என்ற வார்த்தையை *‘பொன்’* (தங்கம்) என்று மொழிபெயர்க்கிறார்கள். இந்த சங்கீதம் *கிறிஸ்துவையும் அவருடைய உயிர்த்தெழுதலையும்* எவ்வளவு தெளிவாக விவரிக்கிறது என்பதைப் பார்க்கும்போது, இது *சுத்தப்பொன்னை விட மிக உயர்ந்ததாக கருதப்பட வேண்டும்.* சிலர் மிக்தாம் என்ற வார்த்தையை ‘மூடுதல்’ என்று மொழிபெயர்க்கிறார்கள். 56-60 சங்கீதங்களின் தலைப்பும் “மிக்தாம் என்னும் சங்கீதம்“ என்றே குறிப்பிடப்பட்டுள்ளன. இந்த எல்லா சங்கீதங்களும்

சங்கீதக்காரன் பாதுகாப்பற்ற ஆபத்தான நிலையில் துயரத்துடன் இருப்பதைப் பற்றிய பாடல்களாகும். எனவே இவை “உதடுகள் மூடப்பட்ட நிலையில்“ தாவீது மௌனமாகப் பாடிய படல்களாகக் கருதப்படுகிறது.




⚡ இந்த அற்புதமான பாடல், *இக்கட்டான சூழ்நிலைகள் இருந்தபோதிலும் மகத்தான மகிழ்ச்சி மற்றும் நிறைவுக்கான திறவுகோலை தாவீது எவ்வாறு கண்டுபிடித்தான்* என்பதை விவரிக்கிறது. இது இயேசுவையும் அவர் மனுகுலத்துக்காக என்ன செய்யப்போகிறார் என்பதையும் துல்லியமாக முன்னறிவிக்கிறது. இந்த சங்கீதத்தில் தாவீதைப்பற்றியும் சொல்லப்பட்டிருக்கிறது. அதே வேளையில், தாவீதைவிட இயேசுகிறிஸ்துவைப்பற்றியும் அதிகமாய்ச் சொல்லப்பட்டிருக்கிறது. இந்த சங்கீதத்தின் முடிவில் உயிர்த்தெழுதலின் (அழிவைக் காணவொட்டீர்) நிச்சயத்தைப்பற்றிச் சொல்லப்பட்டிருக்கிறது. *உயிர்த்தெழுதலின் செய்தி, தாவீதைக் குறிக்காமல் இயேசுகிறிஸ்துவையே குறிக்கிறது.*




⚡ (சங்கீதம் 16:8-11) வசனங்களை, பேதுரு, *பெந்தெகொஸ்தே நாளில்* தேவன் பரிசுத்தாவியை பொழிந்தருளியபின், தனது *முதல் பிரசங்கத்தில்* மேற்கோள் காட்டி பேசினான் (அப்போஸ்தலர் 2:25-28). இந்த வசனங்களில், தாவீது கிறிஸ்துவையும் குறிப்பாக அவருடைய உயிர்த்தெழுதலையும் குறிப்பிடுகிறான் என்பதை பேதுரு வலியுறுத்துகிறான்.




⚡ தாவீது கர்த்தரை *தன் வழிகாட்டி* (சங்கீதம் 16:7) என்று அடையாளப்படுத்துகிறான், மேலும் அவன் கர்த்தரை *தன் பாதுகாவலராகவும்* (சங்கீதம் 16:8) அடையாளப்படுத்துகிறான். தாவீது *கர்த்தரை எப்பொழுதும் தனக்கு முன்பாக வைத்திருப்பதாக* அறிவிக்கிறான். இது தாவீது தனது வாழ்க்கையில் தேவனையே மையமாக வைத்துக்கொண்டிருக்கிறான் என்பதை வெளிப்படுத்துகிறது. *தேவன் தனது வலது பாரிசத்தில் இருப்பதால், தனக்கு சேதம் வராது* என்று தாவீது மேலும் கூறுகிறான். கர்த்தருடைய பாதுகாப்பினால் தாவீது பயமின்றியும் நம்பிக்கையுடனும் இருக்க முடிகிறது. எதுவும் அவனை பாதிக்கவோ அசைக்கவோ முடியாது. தன் இரட்சகர் தனக்குப் பாதுகாப்பாய் இருப்பார் என்பதால், அவன் அசைக்கப்பட மாட்டான் என்பதை தாவீது தெளிவாக அறிந்திருக்கிறான். தாவீதின் வார்த்தை: *“அவரே என் கன்மலையும், என் இரட்சிப்பும், என் உயர்ந்த அடைக்கலமுமானவர்; நான் அசைக்கப்படுவதில்லை.”* (சங்கீதம் 62:6).




⚡ கர்த்தர் தனக்குக் கொடுத்த எல்லா ஆசீர்வாதங்களாலும், தாவீது பாதுகாப்பாக இருப்பதாக உணர்கிறான். *“நான் மரண இருளின் பள்ளத்தாக்கிலே நடந்தாலும் பொல்லாப்புக்குப் பயப்படேன்; ஏனெனில் தேவரீர் என்னோடேகூட இருக்கிறீர்; உமது கோலும் உமது தடியும் என்னைத் தேற்றும்.”* (சங்கீதம் 23:4).




⚡ தேவனோடு இருப்பது அவனை ஆனந்தத்தால் நிரப்பும் என்றும், அவருடைய வலது பாரிசத்தில் அவன் என்றென்றும் பேரின்பம் காண்பான் என்றும் தாவீது சாட்சியமளிக்கிறான். *மெய்யான இன்பம், இம்மையிலும் மறுமையிலும் அவருடைய வலது பாரிசத்தில்தான் இருக்கிறது* என்பதே உண்மை.




🔹 *நாம் கர்த்தருடைய பிரசன்னத்தில் வாழ்வதற்காக அவரை எப்போதும் நமக்கு முன்பாக வைத்திருக்கிறோமா?*

🔹 *நாம் கர்த்தருடைய பிரசன்னத்தில் இருக்கும்போது உண்மையிலேயே ஆனந்தத்தால் நிறைந்திருக்கிறோமா?*




✅ நாம் கற்றுக் கொள்ளும் *பாடங்கள்*:




1️⃣ *தாவீது கர்த்தரை தனக்கு வழிகாட்டியாகவும் பாதுகாவலராகவும் அடையாளப்படுத்துகிறான்.*

2️⃣ *கர்த்தரை எப்பொழுதும் நமக்கு முன்பாக வைத்திருந்தால், அவரே நமக்குப் பாதுகாப்பாக இருப்பார்; எனவே, நாம் அசைக்கப்பட மாட்டோம் என்பது உறுதி.*

3️⃣ *மெய்யான இன்பம், இம்மையிலும் மறுமையிலும் அவருடைய வலது பாரிசத்தில்தான் இருக்கிறது.*

Dr எஸ் செல்வன்

சென்னை


நேர்த்தியான பங்கு, சிறப்பான சுதந்திரம்
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~




சங்கீதம் 16: 5 - 11.




ஆம், *கர்த்தர் நமக்கு நேர்த்தியான பங்கும், சிறப்பான சுதந்தரமுமாயிருக்கிறார்.* அப்படியானால், நாம் எவ்வளவு ஆசீர்வதிக்கப்பட்டவர்கள் என்பதை தியானிப்போம்.




1. *நேர்த்தியான பங்கு*




தாவீது கர்த்தர் *என் பாத்திரத்தின் பங்கு* என்கிறார். ஆனால் *கர்த்தருடைய ஜனமே அவருடைய பங்கு* என மோசே கூறுகிறார். உபா கமம் 32: 9. இது கர்த்தரும் நாமும் எவ்வளவு இணைந்து ஒன்றாய் வாழ வேண்டிய அன்பின் ஐக்கியத்தை வெளிப்படுத்துகிறது. நம் ஆத்தும நேசரோடு இணைந்து, மணவாளனாகிய இயேசுவோடு ஒன்றாய் இணைந்த மணவாட்டியாய் நாம் வாழ வேண்டிய ஆசீர்வதிக்கப்பட்ட வாழ்க்கையை தெரிவிக்கிறது.




எனவே தான் *நீர் என்னிலேயும், நான் உம்மிலேயும் இருக்கிறது போல, இவர்களெல்லாரும் நம்மில் ஒன்றாயிருக்க வேண்டி கொள்கிறேன்* என இயேசு ஜெபித்தார். அப்படியானால் கர்த்தர் நம் பாத்திரத்தின் பங்காயிருப்பார். நாம் அவரோடு சஞ்சரிக்கும் அந்த ஆசீர்வதிக்கப்பட்ட வாழ்க்கை நாம் வாழ முடியும். அதாவது,




*நாம் பரம அழைப்பிற்கு பங்குள்ளவர்கள்*. எபிரேயர் 3: 1




*அவருடைய பரிசுத்தத்திற்கு நாம் பங்குள்ளவர்களாவோம்*. எபிரேயர் 12:10.




*அவருடைய திவ்விய சுபாவத்திற்கு நாம் பங்குள்ளவர்களாய் மாறுவோம்*. 2பேதுரு 1: 4.




அப்படியானால், கர்த்தர் நம் பாத்திரத்தின் பங்காயிருக்கிறாரா? என்பதை ஆராய்ந்து பார்ப்போம்.




2 . *கர்த்தர் என் சிறப்பான சுதந்திரம்.*




*நாம் கர்த்தருடைய சுதந்தரமாய், பிள்ளைகளாய், அவர் சிலுவையிலே சம்பாதித்த அத்தனை ஆசீர்வாதங்களுக்கும், அவருடைய வாக்குதத்தங்களுக்கும் சுதந்தரமுமாய் இருப்பது மட்டுமல்ல, கர்த்தர் நம்முடைய சுதந்தரமுமாயும் கூட இருக்கிறார்*. அப்படியானால் இது நம் ஒன்றான, இணைந்த அன்பின் வாழ்க்கையையே அறிவிக்கிறது அல்லவா?




*கானான் தேசத்தை ஆபிரகாமுக்கு நித்திய சுதந்தரமாய் வாக்களித்த தேவன், பரம கானானாகிய பரலோக இராஜ்யத்தை நமக்கு சுதந்தரமாய் வாக்களித்திருக்கிறார்.*

*கிறிஸ்துவினுடையவர்கள் வாக்குதத்தத்தின் படி சுதந்தரராயிருக்கிறீர்கள்.* கலாத்தியர் 3: 29.

*ஆவியானவர் நம் சுதந்தரத்தின் அச்சாரமாயிருக்கிறார்*. எபேசியர் 1: 14.

ஆம். *கர்த்தர் நம் சிறப்பான சுதந்தரமாயிருக்கிறார்.*




3. கர்த்தர் நம் சுதந்தரமும், பாத்திரத்தின் பங்குமாயிருக்கும் போது,




1. *நேர்த்தியான பங்கும், சிறப்பான சுதந்திரமும் நமக்கு உண்டு.*




2. *கர்த்தர் நமக்கு ஆலோசனை தந்து, நம்மை நடத்துவார். இராக்காலத்தில் நம் உள்ளிந்திரியங்கள் மூலம் உணர்த்துவார்.*




3.நாம் மனிதனால், சத்துருவாகிய பிசாசினால் *அசைக்கப்படுவதில்லை*.




4. *இருதயத்தில் பூரிப்பு, நம் மகிமை களிகூரும், நம்பிக்கையோடு இளைப்பாறுவோம். நம் ஆத்துமா வாழும்.*




5. *ஜீவ மார்க்கத்தை நமக்கு போதிப்பார். அவர் நம் பாத்திரத்தின் பங்காயிருக்கும் போது, பரிபூரண ஆனந்தமும் , நித்திய பேரின்பமும் நமக்கு

உண்டாயிருக்கும்*. எத்தனை பெரிய ஆசீர்வாதம்!

ஆம், கர்த்தர் தாமே நம் வாழ்க்கையில் சுதந்தரமும், பாத்திரத்தின் பங்குமாயும் இருப்பாராக. ஆமென். அல்லேலூயா.

*Dr.Padmini Seĺvyn*


*_Vile & wicked take center stage_*

*_கொடூரமானவனும் பொல்லாதவர்களும் மையத்தில் இருக்கிறார்கள்_*




*_சங்கீதம்: 12_*




❇️ _ *மனுபுத்திரரில் சண்டாளர் உயர்ந்திருக்கும்போது, துன்மார்க்கர் எங்கும் சுற்றித்திரிவார்கள். (வ8).




❇️ _இந்த உலகில், *இழிவான* (தார்மீக ரீதியில் கீழ்த்தரமான) நபர்கள் *மகிமைப்படுத்தப்பட்டு* ஜனங்களுடைய நடத்தையை *ஆளவும் கட்டுப்படுத்தவும் வல்லமை கொடுத்திருப்பதை* காண்கிறோம்.




❇️ _அது நிகழும்போது, ​​அது *துன்மார்க்கரை* பெருகவும், முக்கிய இடத்தைப் பிடிக்கவும் ஊக்குவிக்கும் என்று தேவனுடைய வார்த்தை கூறுகிறது. பல நாடுகளில் இது உண்மைதான் *தவறானவர்கள்* ஆட்சிக்கு வந்து, *பிளவு செய்யும் அரசியலை* விளையாடி, தீயவர்களை கட்டளையிட ஊக்குவிப்பதன் மூலம் *அராஜகத்தை* உருவாக்குகிறார்கள்._




❇️ _தேவனுடைய இந்த வார்த்தையின் விளைவாக, தேவபக்தியுள்ள மனிதர்களும் உண்மையுள்ளவர்களும் மனிதர்கள் நடுவிலிருந்து மறைந்து விடுகிறார்கள் என்று கூறுகிறது (வ1) இது உண்மையில் *ரகசிய வருகையின்* நேரத்தில் நிகழலாம்._




❇️ _சண்டாளர்களை அவர்களின் *ஆடம்பர வாழ்க்கை*, *விளம்பரத்திற்காக கூச்சலிடுதல்*, *ஏழைகள் மற்றும் ஒதுக்கப்பட்டவர்களின்* அவலத்திற்கு அவர்களின் *உணர்வின்மை* ஆகியவற்றிலிருந்து அடையாளம் கண்டு கொள்ளலாம்._




❇️ _சண்டாளர்களை உயர்த்தி, உலகையே துன்மார்க்கரிடம் ஒப்படைக்கும் தீயவனின் இந்த திட்டம் *வாழ்க்கையின் எல்லாத் துறைகளிலும்* அதிகமாகக் காணப்படுகிறது. பிசாசு இவ்வுலகைக் கட்டுப்படுத்துவதற்கும், இறுதியில் *எருசலேமில் உள்ள தேவனுடைய ஆலயத்தைக்* கைப்பற்றுவதற்கும் இது ஒரு *முன்னோடி* (தானி.11:31)._




❇️ _இதையும் மீறி தேவனுடைய ஜனங்கள் பிசாசை உறுதியாக எதிர்ப்பார்கள் (தானி.11:32). வெளிப்படுத்தப்பட்டபடி இவைகள் இவ்வுலகில் நிகழும் என்றாலும், தேவனுடைய மக்களாகிய நாம் நமது *விசுவாசத்தால்* *உலகத்தை வெல்ல* அழைக்கப்பட்டிருக்கிறோம் (1யோவா. 5:4-5)._




❇️ _தினந்தோறும் *தேவனுடைய வார்த்தையைப் வாசிப்பதன் மூலமும், கேட்பதன் மூலமும், செழுமையின்* மத்தியில் அல்லாமல், *துன்பங்களின்* மத்தியில் அப்பியாசப்படுத்துவதன் மூலமும் மட்டுமே நமது நம்பிக்கையை வளர்க்க முடியும்._




✅ *_கற்றறிந்த நுண்ணறிவு_*:




▪️ _சண்டாளர்கள் உலகில் உயர்த்தப் படுகிறார்கள்_




▪️ _துன்மார்க்கர் மைய நிலையை பெறுகிறார்கள்_




▪️ _கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவில் விசுவாசம் மட்டுமே உலகத்தை மேற்க்கொள்ளும்._

தமிழாக்கம் இன்னிசை செல்வி மும்பை


Tamil translation of Rev. C.V.Abraham’s insight*

*CHARACTERISTICS OF A GODLY PERSON* (Psalm 15)

*ஒரு தேவ மனிதனின் குணநலன்கள்*( சங்கீதம்.15).




இது தாவீதின் சங்கீதம்.




வசனம் 1 என்பது ஒரு கேள்வி.

*"கர்த்தாவே, யார் உம்முடைய கூடாரத்தில் தங்குவான்? யார் உம்முடைய பரிசுத்த பர்வதத்தில் வாசம்பண்ணுவான்?"*




வச. 2 -5அ பதில். வச. 5ஆ. என்பது முடிவு.




1. அவரது *நடை* *உத்தமமானது* ( நேர்மையான வாழ்க்கை, குற்றமற்ற வாழ்க்கை)




2. அவர் *நீதியானதை* செய்கிறார் (நீதியான வாழ்க்கை, எப்போதும் சரியானதைச் செய்கிறார்)




3.அவன் *சத்தியத்தை* தன் இதயத்திலிருந்து பேசுகிறான்.(உண்மையாக பேசுகிறான்- பொய் சொல்லாதே) சங்.15:2.




4. *அவருடைய *நாக்கில்* *அவதூறுகள் இல்லை*.(மற்றவர்களின் நற்பெயரை ஒருக்காலும் அழிக்காதே)




5. தன் *அண்டை வீட்டாருக்கு * எந்தத் தவறும் செய்ய மாட்டார்* (மற்றவர்களுக்கு நன்மை மட்டுமே செய்கிறார்).சங்.15:3.




6. அவர் *தன் அயலான்மேல் சொல்லப்படும் நிந்தையான பேச்சை எடுக்காமலும் இருக்கிறான்.*.(மற்றவர்களின் நற்பெயருக்கு அக்கறை)




7. அவர் *ஒரு *இழிவான* மனிதனை *வெறுக்கிறார்.( துன்மார்க்கத்தையும் பொல்லாத மக்களையும் வெறுக்கிறார்).




8. கர்த்தருக்குப் பயப்படுகிறவர்களை அவர் *கனம் பண்ணுகிறார்*. ( *தேவனுடைய மக்களைக் கனம்பண்ணுகிறார்*.)சங்.15:4.




9. துன்பம் ஏற்பட்டாலும் அவர் *ஆணையிட்டதில் தனக்கு நஷ்டம் வந்தாலும் தவறாதிருக்கிறான்.*.




10. அவர் *தனது பணத்தை வட்டிக்குக் கொடுக்க மாட்டான்* கடன் கொடுக்கிறார். (வட்டி இல்லாமல் தேவைப்படுபவர்களுக்கு கடன் கொடுக்கிறது)




11.அவர் *லஞ்சம் வாங்குவதில்லை.*(நீதிக்காக நிற்கிறார், லஞ்சம் வாங்கமாட்டார்).

சங்.15:5அ. (ஒரு தெய்வீக நபர் எந்த சூழ்நிலையிலும் லஞ்சம் கொடுக்கவோ அல்லது வாங்கவோ கூடாது).







*இவைகளைச் செய்கிறவன் அசைக்கப்படுவதில்லை.* (சங்.15:5.)




கர்த்தரை சரியாக அறிந்த ஒருவரிடம் மேற்கண்ட தெய்வீக குணங்கள் இருக்க வேண்டும்.




நமது பொது வாழ்க்கை நமது உள்ளார்ந்த (ஆன்மீக) வாழ்க்கையை பிரதிபலிக்க வேண்டும்.

*மின்சாரம்* ஒரு விளக்கில் ஒளியை உருவாக்கும், அது *ஒரு அறையில் இருளை நீக்கும்*

*இயேசு நம் வாழ்க்கையை மாற்றுவார்.*( 2 கொரி.5:17) இயேசுவை நம் ஆண்டவராகவும் இரட்சகராகவும் அழைப்பதன் மூலம் நாம் *கிறிஸ்தவ/புதிய படைப்பாக* இருக்க முடியும். தெய்வீக வாழ்க்கையை நடத்த இது நமக்கு உதவும்.

*நான் ஒரு தெய்வீக மனிதனா / உலக மனிதனா?*

*எனது செயல்கள், வார்த்தைகள், அணுகுமுறைகள் மற்றும் உறவுகள் எப்படி இருக்கின்றன?*




*நான் பொல்லாதவர்களை வெறுக்கிறேனா, கர்த்தருடைய மக்களை மதிக்கிறேனா?*




*நான் பெருந்தன்மையுள்ளவனா? என் பணத்தை ஏழை மக்களுக்கு உதவ, கர்த்தர் பயன்படுத்த அனுமதிப்பேனா?*

Rev.C.V.Abraham

தமிழாக்கம்

Princess Hudson


📗 *சிறிய குறிப்பு* 📗

🍂 *அவதூறு என்ற பாவம்* 🍂

ஒருவன் தேவப்பிரசன்னத்தில் வாழ்வதற்குத் தேவையான நற்பண்புகளை சங்கீதக்காரன் பட்டியலிட்டுள்ளான். அவதூறு (slander) என்ற பாவம் தேவன் வெறுக்கும் ஒன்று. *“அவன் தன் நாவினால் புறங்கூறாமலும், தன் தோழனுக்குத் தீங்குசெய்யாமலும், தன் அயலான்மேல் சொல்லப்படும் நிந்தையான பேச்சை எடுக்காமலும் இருக்கிறான்.” (சங்கீதம்‬ ‭15‬:‭3‬)* புறங்கூறுதல் என்பது விரோத நோக்கங்களுக்காக பரப்பப்படும் பொய்யான குற்றச்சாட்டு. புறங்கூறுதல் ஒருவனுடைய நல்ல பெயரை இழிவுபடுத்துகிறது. அவதூறு (slander) நுட்பமானது ஆனால் அதன் விளைவுகள் தீவிரமானவை.

*ஒருவரின் நற்பெயரைக் கெடுக்கும் நோக்கத்துடன் அவதூறு செய்யப்படுகிறது.* இது முதுகுக்குப் பின்னால் அல்லது அவர்கள் இல்லாத நிலையில் செய்யப்படுகிறது. *ஒருமுறை செய்யப் பட்ட அவதூறு திரும்பப்பெற முடியாது*. அதன் விளைவுகள் தீங்கு விளைவிக்கும். இழைக்கப்பட்ட தீமைக்கு பிறகு உண்மையை சொன்னால் யாரும் உங்களை நம்ப மாட்டார்கள். அவதூறுகளின் விளைவுகள் ஆழமானவை மற்றும் கசப்பானவை.

*அவதூறு என்ற விஷத்தை உமிழ்ந்தால், அதை மாற்றுவதற்கு எதுவும் செய்ய முடியாது.* எனவே, பாதிக்கப்பட்டவர்கள் தேவனிடம் உங்களை அர்ப்பணித்து, அவதூறு செய்தவர்களை விட்டு விலகிச் செல்வதே சிறந்த பதில். *அவதூறு செய்பவர்களுடன் சண்டையிட்டு நேரத்தை வீணடிப்பதில் பயனில்லை*. அவதூறுகளால் (slander) பாதிக்கப்பட்டவர்களுக்கு தேவனாகிய கர்த்தரிடம் ஒரு சிறப்பு இழப்பீடு உள்ளது.

_திருமதி ஷீலா ஜெபக்குமார்

Tags

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.